தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, August 11, 2018

மூக்கு - மலையாளச் சிறுகதை (வைக்கம் முகமது பஷீர்) தமிழாக்கம் :ரா. ராதாகிருஷ்ணன் ::: உள்ளம் ஈழ சிற்றிதழ்

உள்ளம் 1989.08-09 - நூலகம்

www.noolaham.org/wiki/index.php?title=உள்ளம்...08...


திகைப்படையச் செய்யும் செய்தி. அறிவுடை மக்களிடையே பெரிய சர்ச்சைக்கு க் காரணமாயிருக்கிறது அந்த மூக்கு.

அந்த மூக்கின் உண்மைக் கதையை இங்கு எழுதப் போகிறேன்.

உலகப்பிரசித்தி பெற்ற அந்த மூக்கின் சரிதை அவனுடைய இருபத்து நான்கு வயது பூர்த்தியான சமயத்தில் ஆரம்பமாகிறது. அது வரையில் அவனை யாரும் அறிந்தாரில்லை . இந்த இருபத்தி நான்கு வயதுக்கு ஏதாவது விசேஷம் உண்டோ என்னவோ? ஒன்று மட்டும் உண்மை . உலக சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், அநேக மகான்களின் இருபத்து நான்காவது வயதுக்குச் சில விசேஷங்கள் காணலாம். சரித்திர மாணவர்களிடம் இதை எடுத்து ரைக்க அவசியமில்லை .

நமது கதாநாயகன் ஒரு சமையல்காரனாக இருந்தான். சொல்லத்தக்க அறிவு ஒன்றும் அவனுக்கு இருக்கவில்லை , எழுதவும் படிக்கவும் தெரியாது. சமையலறையே அவனுடைய உலகம். அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதவன். எதற்காகக் கவலைப்படவேண்டும்? நன்றாகச் சாப்பிடவேண்டும்; சுகமாக மூக்குப் பொடி போடவேண்டும் உறங்க வேண்டும்; மீண்டும் எழுந்திருக்க வேண்டும் வேலை செய்ய வேண்டும்; இவை தான் அவனுடைய தினக்கடன்.

மாதங்களின் பெயர் அவனுக்குத் தெரியாது. சம்பளம் வாங்க வேண்டிய சமயம் வந்தால் அவனுடைய தாயார் வந்து சம்பளம் வாங்கிக் கொண்டு போவாள். மூக்குப் பொடி வேண்டுமென்றால் அந்தம்மாளே வாங்கிக் கொடுப்பாள். இப்படி மனநிறைவுடன் வாழும் அவனுக்கு இருபத்து நான்கு வயது பூர்த்தியாகிறது. அதோடு அதிசயம் நடக்கிறது!

வேறு விசேஷமொன்று மில்லை. மூக்கு கொஞ்சம் நீளம் வந்திருக்கிறது; வாயைத் தாண்டித் தாடி வரை நீண்டு நிற்கிறது!

அப்படி அந்த மூக்கு நாள் தோறும் வளர ஆரம்பித்தது. மறைத்து  வைக்க முடியுமோ? ஒரு மாதத்துக்குள் அது பொக்கிள் வரை நீண்டு விட்டது. ஆனால் , ஏதாவது அசுகம் இருந்ததா? ஒன்றுமில்லை! சுவாசம் செய்யலாம். பொடி போடலாம். வாசனைகளை நுகர்ந்தறியலாம். சொல்லத்தக்க ஓர் அசெளகரிய மும் இல்லை .

ஆனால் மூக்கு காரணமாக அந்த ஏழைச் சமையல்காரன் வேலையிலிருந்து விலக்கப்பட்டான்

காரணம் என்ன?

"விலக்கப்பட்டவனைத் திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று கூறிப் போராட்டம் நடத்த ஒரு சங்கமும் முன் வரவில்லை . இந்தக் கொடும் அநீதிக்கு முன் அரசியல் கட்சிக்காரர்களெல்லாம் கண் மூடிவிட்டார்கள். :

அவரை எதற்காக விலக்கினார்கள்? மனிதாபிமானிகள் என்று கூறும் யாரும் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை.

பாவம், சமையல்காரன்! வேலை இழந்ததற்குக் காரணம் என்ன என்று யாரும் அவனுக்குச் சொல்லத் தேவைப்படவில்லை.

வேலைக்கு வைத்திருந்த வீட்டுக்காரருக்கு நிம்மதி இல்லாமல் போனதுதான் காரணம். மூக்கனைப் பார்ப்பதற்கு இராப்பகல் ஜனங்கள் வந்தார்கள். புகைப்படம் எடுப்பவர்கள் தொந்தரவு செய்தார்கள். பத்திரிகையாளர்கள் தொல்லை கொடுத்தார்கள்.

அந்த வீட்டிலிருந்து பல சாமான்கள் திருட்டுப் போயின.

இப்படி வேலையிழந்த அந்தச் சமையல்காரன் தனது ஏழைக் குடிசையில் பட்டினி கிடக்கும் போது ஒரு விஷயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அவனும் அவனுடைய மூக்கும் மிகவும் பிரபலமடைந்திருக்கின்றன!

அயல் நாடுகளிலிருந்து அவனைப் பார்க்க ஆட்கள் வருகிறார்கள். நீண்டு போன மூக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டு நிற்கிறார்கள். சிலர் தொட்டுப் பார்க்கவும் செய்கிறார்கள். ஆனால், யாரும் .... எவரும், 'நீங்கள் சாப்பிடவில்லையா? ......... ஏன் இவ்வளவு பலவீனம்?'' என்று கேட்கவில்லை . ஒரு சிமிட்டிப் பொடி வாங்கக்கூட அந்த வீட்டில் பணமில்லை. பட்டினி போடப்பட்ட காட்சி மிருகமா அவன்? மடையனானாலும் அவன் மனிதன். அவன் தன் வயதான தாயாரைக் கூப்பிட் டு ரகசியமாகச் சொன்னான்:

''இந்தச் சனியன்களை விரட்டி வெளியேற்றிக் கதவடையுங்கள்!''

அன்று முதல் அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது! அந்தம்மாளுக்கு லஞ்சம் கொடுத்துச் சிலர் மகனுடைய மூக்கைப் பார்க்க ஆரம்பித்தனர்! இந்த லஞ்ச ஊழலுக்கு எதிராகச் சில நியாயவாதிகள் குரல் எழுப்பினர் ஆனால், அரசாங்கம் இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில் லை. அரசாங்கத்தின் உதாசீனத்தைக் கண்டித்து எதிர்ப்பாளர்கள் பலரும் அரசாங்கத்தின் எதிரிகளான பல உதி ரி க் கட்சிகளில் சேர்ந்தார்கள்!

மூக்கனுடைய வருவாய் : நாள்தோறும் பெருகியது. மிகைப்படுத்த வே ண்டியதில்லை! எழுத்தறிவில்லாத அந்தச் சமையல்காரன் ஆறு வருடங்களில் லட்சப் பிரபுவானான்!

அவன் மூன்று தடவை சினிமாவில் நடித்தான். 'தி ஹ்யூமன் ஸப்மெரைன் என்ற டெக்னிக் கலர் படம் எவ்வளவு கோடி ரசிகர்களைக் கவர்ந்தது! ஆறு கவிஞர்கள் மூக்கனுடைய அருங்குணங்களைப் புகழ்ந்து போற்றி மகாகாவியங்கள் இயற்றினர். ஒன்பது எழுத்தாளர்கள் மூக்கனுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிச் செல்வமும் புகழும் பெற்றனர்.

அவனுடைய இருப்பிடம் ஏழைகளின் அடைக்கலமாகியது. எவருக்கும் அங்கு எப்போதும் உணவுண்டு: ஒரு சிமிட்டி மூக்குப் பொடியும் கூட.

அந்தக் காலத்தில் அவனுக்கு இரண்டு காரியதரிசிகள் இருந்தார்கள். இரண்டு அழகிகள்; படித்தவர்கள். இருவரும் மூக்கனைக் காதலிக்கிறார்கள். இருவரும் மூக்கனை மதிக்கிறார்கள்.

இரு அழகிகள் ஒரு மனிதனை ஏக காலத்தில் காதலிக்கும் போது சில்லறைத் தகராறுகள் ஏற்படலாம் அல்லவா? மூக்கனுடைய வாழ்க்கையிலும் அவ்வாறே ஏற்பட்டன.

அந்த இரு யுவதிகளைப் போல் பொது மக்கள் யாவரும் மூக்கனை விரும்புகிறார்கள். பொக்கிள் வரை நீண்டு கிடக்கும் அந்த மூக்கு புகழின் சின்ன மாகத் திகழ்ந்தது.

உலகில் நடக்கும் முக் கிய சம்பவங்களைப் பற்றி மூக்கன் கருத்து அறிவிப்பான். பத்திரிகையாளர் அதை பிரசித்தப் படுத்துவர்.

ஒரு மணி நேரத்தில் 10,000 மைல் வேகமுள்ள விமானம் செய்யப்பட்டிருக்கிறது! அதைப்பற்றி மூக்கன் கீழ்க்கண்டவாறு அபிப்ராயம் தெரிவித்தார் ...)

''இறந்த மனிதனை டாக்டர் புந்து ரோஸ் புராசி புரோஸ் உயிர்ப்பித்தார்.

அதைப்பற்றி மூக்கன் கீழ் கண்டவாறு அபிப்பிராயம் தெரிவித்தார்.... !

உலகத்திலேயே உயர் அந்த சிகரத்தில் சிலர் ஏறினர் என்று அறிந்த போது *மக்கள் கேட்டார்கள்.

"அதுபற்றி மூக்கன் என்ன சொன்னார்?'

மூக்கன் ஒன்றும் சொல்லவில்லையென்றால் ... பூ அந்தச் சம்பவம் முக்கியமில்லை . இப்படி ஓவியம். கடிகார வியாபாரம். மெஸ்மரிசம், போட்டோகிராபி. ஆன்மா, புத்தக வெளியீடு, நாவல் எழுதுவது. சாவுக்குப்பின் வாழ்வு, பத்திரிகை நடத்துவது, வேட்டையாடுதல் என்று எல்லா விஷயங்களைப் பற்றியும் மூக்கன் கருத்துச் சொல்ல வேண்டும்!

இந்தச் சமயத்தில் தான் மூக்கனைக் கைப்பற்றப் பெரிய சதி வேலைகள் நடக்கின்றன. ' கைப்பற்றுதல் என்பது புதிய திட்டமொன்றுமல்ல. உலக சரித்திரத்தின் முக்கிய பகுதிகளெல்லாம் கைப்பற்றுதலின் கதையே,

கைப்பற்றுதல் என்பது தான் என்ன?

நீங்கள் தரிசு நிலத்தில் தென்னம் பயிர் நடுகிறீர்கள், தண்ணீர் பாய்ச்சுகிறீர்கள்' உரம் போடுகிறீர்கள். வேலி கட்டுகிறீர்கள். எதிர்பார்த்த வருஷங்கள் முடிந்து தென்னை மரங்கள் காய்க்கின்றன. குலைகுலையாத் தேங்காய்கள் நன்றாகத் தொங்குகின்றன . அப்போது உங்களிடமிருந்து அந்த இடத்தைக் கைப்பற்ற எவருக்கும் ஆசை பிறக்கும்!

முதன்முதலாக மூக்கனைக் கைப்பற்ற முயற்சி எடுத்தது அரசாங்கமே. அதொரு யுக்தியாக இருந்தது ''நாசிகப் பிரமுகன்' என்ற பட்டத்தோடு அரசாங்கம்

மூக்கனுக்கு ஒரு பதக்கத்தையும் கொடுத்து ஜனாதிபதியே அந்த வைரம் கட்டிய தங்கப்பதக்கத்தை மூக்கனுடைய கழுத்தில் அணிவித்தார். பிறகு கை குலுக்குவதற்குப் பதிலாக மூக்கனுடைய மூக்கின் நுனியைப் பிடித்து ஜனாதிபதி குலுக்கினார். இதன் செய்திப்படம் நாடெங்கும் சினிமாக் கொட்டகைகளில் வெளியிடப்பட்டது.

இதற்குள் அரசியல் கட்சிகள் உஷாரக முன்வந்தன. மக்களுடைய புரட்சிக்குத் தோழர் மூக்கன் தலைமை தாங்க வேண்டும்! தோழர் மூக்கனா! எவருடைய தோழர்! எதற்காகத் தோழர்? கடவுளே? பாவம் மூக்கன்!. மூக்கன் நம் கட்சி யி ல், சேர வேண்டும்!

நம் கட்சி என்றால் எந்தக் கட்சியில்? கட்சிகள் பல உண்டு. எல்லாவற்றிலும் ஒரே சமயத்தில் மூக்கன்

எப்படிச் சேர முடியும்? மூக்கன் சொன்னான்

நான் எதற்காகக் கட்சியில் சேர வேண்டும்? என்னால் அது முடியாது!''

இப்படி இருக் கும் போது, காரியதரிசிகளில் ஒருத்தி கூறினாள், “என்னிடம் விருப்பம் இருந்தால் தோழர் மூக்கன் என் கட்சியில் சேர வேண்டும்!''

மூக்கன் பேசவில்லை .

'' நான் ஏதாவது கட் சியில் சேர வேண்டுமா!''

மூக்கன் மற்றொரு காரியதரிசியிடம் கேட்டான். அவளுக்கு விஷயம் புரிந்து விட் டது. அவள் கூறினாள். ''எதற்காக?''

இதற்குள் ஒரு கட்சிக் காரர்கள் கோஷம் போட்டு வந்தனர்.

நம்முடைய கட்சி மூக்கனுடைய கட்சி! மூக்கனுடைய கட்சி மக்களின் கட்சி !!

இதைக் கேட்டு இதர கட்சிக்காரர்களுக்கு க் கோபம் பொங்கியது. அவர்கள் மூக்கனுடைய ஒரு காரியதரிசியின் மூலம் மூக்கனுக்கு எதிராக ஒரு திடுக்கிடும் அறிக்கையை வெளி யிட்டனர்:

''மூக்கன் மக்களை ஏமாற்றி விட்டான்! இவ்வளவு காலம் மூக்கன் மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான். இந்தக் கொடிய வஞ்சனையில் என்னையும் ஒரு பங்காளியாக்கினான். நான் மக்களிடம் உண்மை கூறுகிறேன்; மூக்கனுடைய மூக்கு ரப்பர் மூக்கே!''

ஆ! இந்தச் செய்தி உலகமெங்கும் பத்திரிகை சுளில் பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டது. மூக்கனுடைய மூக்கு ரப்பர் மூக்கு!

போன் கால்

இதைக் கேட்டால் மக்கள் வியப்படையாமல் இருப்பரோ? எழுச்சி கொள்ளாமல் இருப்பரோ? உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் தந்திகள், போன்கள், கடிதங்கள்! ஜனாதிபதிக்கு இருப்புக் கொள்ள வில்லை ,

- 'மக்களை ஏமாற்றிய ரப்பர் மூக்கன் ஒழிக! ரப்பர் மூக்கனின் கட்சி ஒழிக. புரட்சி ஓங்குக'' என்ற கோஷங்களை மூக்கனுடைய எதிர்க்கட்சிகள் எழுப்பின போது அவன் கட்சிக்காரர்கள் மற்றொரு காரியதரிசி மூலம் வேறோர் அறிக்கையை வெளியிட்டனர்.

அன்புமிக்க மக்களே! அவள் கூறியது முற்றும் பொய். அவளைத் தோழர் மூக்கன் காதலிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட பொறாமையே. தோழர் மூக்கனுடைய செல்வத்தையும் புகழையும், கைப்பற்றவே அவள் முயன்றாள். அவளுடைய தம்பிகளில் ஒருவன் எதிர்க்கட்சியில் இருக்கிறான். அந்தத் திருட்டுக் கட்சியின் உண்மை உருவத்தைக் காண்பிக்க நான் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்கிறேன். நான் தோழர் மூக்கனுடைய அந்தரங்கக் காரியதரிசி. எனக்கு நேர்முகமாகத் தெரியும். தோழருடைய மூக்கு ரப்பரல்ல. என்னுடை ய இதயம் போல் உண்மையானது. பிரதிபலன் எதிர்பாராமல் இந்த இக்கட்டான நிலையில் தோழர் மூக்கனுடைய பின்னால் அணிவகுத்து நிற்கும் ம க்கள் முன்னேற்றக் கட்சி ஜிந்தாபாத்! தோழர்" மூக்கன் ஜிந்தாபாத்! தோழர்

மூக்கனுடைய கட்சி - மக்களின் முன்னேற்றக்கட்சி! புரட்சி ஓங்குக!''

என்ன செய்வது? மக்க ளுக்கெல்லாம் ஒரே குழப்பம். இதனிடையில் மூக்கனுடைய கட்சியின் எதிர்க் கட்சிக்காரர்கள் அரசாங்கத்தையும் ஜனாதிபதியை யும் திட்டத் தொடங்கி னார்கள்!

''மதியில்லா அரசாங்கம்; மக்களை வஞ்சித்த ரப்பர் மூக்குக்காரனுக்கு ''நாசிகப் பிரமுகன் '' என்று பட்டம் சூட்டிற்று வைரம் கட்டிய தங்கப்பதக்கம் கொடுத்தது. இப்படி மக்களை வஞ்சித்ததில் ஜனாதிபதிக்கும் பங்கு உண்டு. இந்தப் பெரிய சதி வேலையில் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. ஜனாதிபதி ராஜிநாமா செய்யவேண்டும்! மந்திரி சபை ராஜி தாமா செய்ய வேண்டும். ரப்பர் மூக்கனைக் கொல்ல வேண்டும்!''

இதைக் கேட்டு ஜனாதிபதி கோபமுற்றார். ஒரு நாள் காலையில் பட்டாளமும் டாங்கிகளும் மூக்கனுடைய வீட்டை முற்றுகையிட்டன. மூக்கனைக் கைது செய்து கொண்டு போனார் கள்.

பிறகு அநேக நாட்களுக்கு மூக்கனைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை. மக்கள் மூக்கனை மறந்தனர். ஆனால், திடீரென்று வந்தது அணுகுண்டு! என்னவா? மக்கள் மறந்து விட்டபோது, ஜனாதிபதியின் ஒரு சிறிய அறிவிப்பு வந்தது!

"மார்ச் 9ம் தேதி 'நாசிகப் பிரமுகர்' பற்றிப் பகிரங்க விசாரணை நடக்கும். 48 நாடுகளின் பிரதிநிதிகளா கவரும் கைதேர்ந்த டாக்டர்கள் மூக்கனைப் பரிசோதிப்பார்கள். உலகின் எல்லாப் பத்திரிகைகளின் பிரதிநிதிகளும் இருப் பார்கள். இந்த விசாரணை யை எல்லா மக்களும் செய்திப்படமாகக் காணமுடியும். மக்கள் அமைதியாக வருக''

ஜனங்களா - அவர்கள் அமைதியாக வரவில்லை . அவர்கள் த ைல நகரில் திரண்டு கூடினர். ஹோட்டல்களைத் தாக்கினர். வண்டிகளைத் தகர்த்தனர். பொலீஸ் ஸ்டேஷன்களுக்குத் தீ வைத்தனர். அரசாங்கக் கட்டடங்கள் நாசமாக்கப்பட்டன, அநேக மதக் கலவரங்கள் நடந்தன. ஏகப்பட்ட பேர் இந்த மூக்கன் போராட்டத்தில் தியாகிகளானார்கள்.

மார்ச் 9 - ப தினொரு மணியளவில் ஜனாதிபதியின் மாளிகைக்கு எதிரில் ஒரு மக்கள் சமுத்திரமே குழுமியிருந்தது. அப்போது ஒலிபரப்பிகள் முழங்கின.

மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் பரிசோதனை ஆரம்பித்து விட் டது!''

ஜனாதிபதிக்கும். அநேக அமைச்சர்களுக்கும் முன்னிலையில், டாக்டர்கள் மூக்கனைச் சுற்றி நின்றனர் ஒரு டாக்டர் மூக்கனுடைய மூக்கின் வாயை அடைத்தார். அப்போது மூக்கன் வாயைத் திறந்தான். இன்னொரு டாக்டர் மூக்கனின் மூக்கின் நுனியில் குத்தினார். அப்போது, அதிசயம் என்று தான் கூறவேண்டும். மூக்கனின் மூக்கின் நுனியிலிருந்து ஒரு துளி ரத்தம் கசிந் தது.

''மூக்கு ரப்பரல்ல இயற்கை' டாக்டர்கள் ஏகமனதாகத் தீர்ப்பு கூறினர். மூக்கனின் காரியதரிசிப் பெண் மூக்கனின் மூக்கின் நுனியை முத்தம் கொடுத் தாள்.

''தோழர் மூக்கன் ஜிந்தாபாத்! நாசிகப் பிரமுகன் ஜிந்தாபாத்! தோழர் மூக்கனின் மக்கள் முன்னேற்றக் கட்சி ஜிந்தாபாத்!''

இந்த ஆர்ப்பாட்டம் அடங்கியவுடன், ஜனாதிபதி இன்னொரு யுக்தி செய்தார்! மூக்கனைப் பார்லிமெண்டுக்கு நியமனம் செய்தார். இது இப்படி முடிந்தாலும், மூக்கன் கிடைக்காத கட்சிக்காரர்கள் ஒரு ஐக்கிய முன்னணியாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்:

''மந்திரிசபை ராஜிநாமா செய்ய வேண்டும்! மக்களை ஏமாற்ற சதி! ரப்பர் மூக்கு!'' பொய்யின் போக்கைப் பார்த்தீர்களா? குழப்பம் ஏற்படாமல் இருக்குமா? பாமர மக்கள் என்ன செய்வார்கள்?

தமிழாக்கம் :ரா. ராதாகிருஷ்ணன்

நன்றி: கல்கி

No comments:

Post a Comment