தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, August 22, 2018

வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்துத் தோழி (பால்ய கால சகி) மொ.பெ - குமாரி சி. எஸ். விஜயம்

revised
AUTOMATED GOOGLE-OCR

https://ia600309.us.archive.org/31/items/PathummavudaiyaAadumIlamparuvathuKozhiyumBasheer/Pathummavudaiya-Aadum-Ilamparuvathu-Kozhiyum-Basheer.pdf

சுஹ்ராவும் மஜீதும் சிறுவயது முதலே நண்பர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அவர்களது நட்புப் பிணைப்பில் ஒரு அசாதாரண விஷயம், அவர்களுக்கிடையே பரிச்சயம் ஆகுமுன்னால் இருவரும் பரஸ்பரம் பரம வைரிகளாக இருந்தார்கள் என்பதுதான். இத்தகைய விரோதத்துக்கு என்ன காரணம்? அவர்கள் அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தார்கள். இந்த இரு குடும்பத்தாரும் நட்புடனேயே இருந்து வந்தார்கள் ; ஆனால் சுஹ்ராவும் மஜீதும் மட்டும் பரஸ்பரம் பகைவர்களாகவே இருந்தார்கள். சுஹ்ராவுக்கு வயது ஏழு. மஜீதுக்கு ஒன்பது. ஒருவருக்கொருவர் வாயினால் அழகு காட்டிக் கொள்வதும், பரஸ்பரம் பயமுறுத்த முயற்சி செய்வதுமே அவர்களது தினசரி வழக்கமாக இருந்து வந்தது.

இப்படியிருக்கையில் மாம்பழக் காலம் ஆரம்பித்தது. சுஹ்ராவின் வீட்டுக்கு அருகேயுள்ள சிறிய மாமரத்தில் மாங்காய் பழுத்து விழத் தொடங்கியது. ஆனால் இதுவரை ஒரே ஒரு மாம்பழம்கூட அவளுக்குக் கிடைத்தபாடில்லை! மாம்பழம்  பொத்'தென்று விழுந்த ஓசை கேட்டதோ இல்லையோ அவள் ஆவலோடு ஓடி வருவாள் .... ஆனால் அவள் காண்பது என்ன? மஜீத் அதை எடுத்துச் சுவைத்துத் தின்றுகொண்டிருப்பான்! அவளுக்குக் கொடுப்பது என்ற பேச்சே அவனிடம் கிடையாது. எப்போதாவது கொடுப்பதுபோல் பாவனை செய்தாலும், அவன் கடித்துத் தின்ற பழத்தின் பாக்கியாகத்தான் இருக்கும். சுஹ்ரா மறந்துபோய் கை நீட்டிவிட்டால் போதும்!* இந்தா இந்த முட்டியைக் கடிச்சுக்க * என்று கூறி அவன் தனது முழங்கையை அவளது முகத்துக்கு நேரே காட்டுவான். பின்னர், அவளைப் பார்க்கும்போதெல்லாம் கண்களை உருட்டி முறைத்தும் நாக்கை நீட்டி மடக்கியும் அவளைப் பயமுறுத்தப் பார்ப்பான். இதற்கெல்லாம் சுஹராவா பயப்படுவாள்? உஹம், துளியும் அஞ்ச மாட்டாள் என்பதோடு அவளும் பதிலுக்கு இதேபோல அவனைப் பயமுறுத்துவாள். ஆயினும் இந்த மாம்பழ விஷயத்தில் மட்டும் சுஹ்ராவுக்குத் தோல்வியே கிடைத்து வந்தது. |

மாம்பழம் அவருக்கு மட்டும் ஏன் கிடைக்கவே மாட்டேன் என்கிறது? காற்றடித்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, சுஹ்ரா சதா அந்த மரத்தினடியிலேயே நின்றுகொண்டிருப்பாள். எதுவுமே விழாது. பெயருக்கு ஒரு இலையாவது விழாதோ? ஊஹம் ! நன்றாகப் பழுத்த மாங்காய் மரத்தில் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். விழவில்லை என்றால் ஏறித்தான் பறிக்க வேண்டும். ஆனால் மரத்தில் சிவப்பு எறும்பு நிறைய இருக்கிறதே! ஐயோ, அது கடித்துத் தொலைத்துவிடும்! கடித்துக் கொல்லும் அந்தப் பெரிய எறும்புகள் இல்லையென்றாலும்கூட, மாமரத்தில் ஏறுவது என்பது அவளால் செய்யக்கூடிய காரியமா என்ன ?அவள் பெண்ணல்லவா!

நாக்கில் நீர் ஊறிவர வழக்கம்போல் ஒரு நாள் அவள் நின்று கொண்டிருக்கையில், கிளைகளில் முட்டி மோதிக்கொண்டு படீரென ஏதோ கீழே விழுந்தது.

ஐயோ! சுஹ்ரா அது வீழ்ந்த திசையில் ஓடினாள். மகிழ்ச்சியோடு அதனைக் குனிந்து எடுக்க எண்ணினாள் ; ஆனால், அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. அது அவள் நினைத்ததுபோல் மாம்பழமாக இல்லாமல் தென்னம் குரும்பையாக இருந்தது ! அவளது குழப்பத்துக்துக் காரணம் யாரேனும் தான் ஏமாந்ததைப் பார்த்துவிட்டிருப்பார்களோ என்பதுதான், இல்லை, யாரும் பார்க்கவில்லை. ஆயினும் மாமரத்திலிருந்து எப்படி குரும்பை விழுந்தது? அவள் சுற்றுமுற்றும் கண்களை ஓடவிட்டபோது அவனைப் பார்த்துவிட்டாள், போக்கிரி! அவள் உடலெல்லாம் பற்றி எரிந்தது.

வெற்றிப் பெருமிதத்தில் மஜீத் அர்த்தமில்லாமல் ஓசை ஒன்றை எழுப்பினான். 'ஜக்கு ஜூகு! ஜக்கு ஜூகு!' பிறகு மாமரத்தினடிக்குச் சென்றான். அதோடு கண்களைப் பயங்கரமாக உருட்டி முறைத்தான். நாக்கை எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டிக் காட்டினான்! கோரமான ஒரு உருவம் !அந்தக் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் எல்லோரும் இந்த உருவத்தைக் கண்டால் பயந்து நடுங்கிய வண்ணம் ' ஐயோ அம்மா !' என்று அலறிக்கொண்டு ஓடுவார்கள் ; பலதடவை அவ்விதம் ஓடியுமிருக்கிறார்கள். ஆனால் சுஹ்ரா மட்டும் ஓட மாட்டாள். அது மட்டுமா? தலையைச் சாய்த்து நாக்கை நீட்டி கண்களை உருட்டி முறைத்துக் கொண்டு அவளும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறாள் !

மஜீதுக்குக் கோபம் கோபமாக வந்தது. எவ்வளவு பெரிய ஆண் நான், என்னை, ஒரு சுண்டைக்காய்ப் போக்கிரிப் பெண் பயப்படுத்தப் பார்ப்பதாவது! அவன் இன்னும் கொஞ்சம் அருகே வந்தான், அவனுடைய கண்கள், உருட்டி முறைத்தன, புருவங்கள் விரிந்து உயர்ந்தன. மூக்கின் இரண்டு துவாரங்களும் அகலமாக விரிந்தன. இடிபோல முழக்கமிட்டவாறு “ சூ " என்றொரு பயங்கர ஓசையை எழுப்பினான். ஆனால் அவள் பயந்து ஓடவேயில்லை. புருவங்களை உயர்த்தி, கண்களை உருட்டி மூக்கை விரித்து அவளும் * சூ ' என்றாள்.

மஜீத் நிலைக்குத்தி நின்றுவிட்டான். ஒரு சுண்டக்காய்ப் பொண்ணு ! கேவலம் ஒரு பாக்கு வியாபாரியின் மகள், மர வியாபாரியின் மகனைப் பார்த்து அவள் ஏன் பயப்படுவதில்லை ? பெண் ஆனவள் எந்த ஒரு நிலையிலும் ஆணைக் கண்டு பயப்பட வேண்டு மல்லவா ? மஜீத் அவளருகே மேலும் நெருங்கிப் போனான், ஊஹும் ! அவள் மயிரிழைகூட நகராமல் நின்ற இடத்திலேயே இருந்தாள். மஜீதின் தன்மானம் புகைந்தது ; அவனுக்கு அடக்க முடியாத அள வுக்கு சினம் பொங்கியது. அடி ஆத்தே !

பிறகு அவன் அவளது கையை எட்டிப் பிடித்தவாறே அதட்டிக் I (கேட்டான் :

"உன் பேரென்னடீ ?" தெரிந்து கொள்வதற்காக அல்ல, அது அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஆனாலும் ஏதாவது கேட்கவேண்டுமே? அவன் ஆணல்லவா ? அதனால் கேட்டான்,

இந்த “ வினாடியிலேயே உன்னை ஒழித்து விடுவேனாக்கும்,' என்னும் பாவனையில் அவன் இப்படிச் செய்தான், அவளது அரிசிப் பற்களும் கூர்மையான பத்து நகங்களும் துருதுருத்தன, மேற்கொண்டு என்ன செய்வது என்பதுபற்றி ஒரு நிமிடகாலத்துக்கு அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. கையைக் கடித்துத் துண்டாக்குவதா? அல்லது நகங்களால் கீறிக் காயப்படுத்துவதா? உன் பேரென்ன "டி'யாமே! அவளுடைய வாப்பாவோ உம்மாவோ யாருமே அவளை நீ என்றோ அடியென்றே கூப்பிட்டதே கிடையாது. அப்படி பிருக்கும்போது, கோணங்கிச் சேட்டை காட்டுகிறவனும் மாம்பழம் தராமல் இருப்ப வனும் முழங்கையைக் கடித்துத் தின்னுமாறு சொல்லுபவனுமான இந்த அசிங்கம் பிடித்த சிறுவன், அப்படிக் கூப்பிடக் காரணம்? அவள் சினத்தோடு முன்னெட்டி, அவனருகே போனாள் ; இடது கையில் கூராக உள்ள நகங்களால், அவனது வலது கையில் பலத்தோடு அழுத்திப் பிராண்டினாள் !

தீயில் காய்ச்சப்பட்ட துருவியினால் பிராண்டிவிட்டது போல, மஜீத் துடித்துப் போனான். தனது கையை விடுவித்துக் கொண்டு 'ஐயோ அம்மா ! ' என்றலறிக் கூப்பாடு போட்டான்... அவன் இதை எதிர்பார்க்கவே இல்லை. பதிலுக்கு அவனும் அவளை நகத்தால் கீறிவிட எண்ணினான். ஆனால் அவனிடம் நகமே இல்லை. நகங்களை யெல்லாம் அவன் முன்பே கடித்துத் தீர்த்திருந்தான். வேறு என்ன செய்யலாம்? அடி கொடுக்கலாம் அல்லது கடிக்கலாம். ஆனால் அவளும் பதிலுக்கு அதையே திருப்பிச் செய்வாளே என்றும் தோன்றியது.

எப்படியிருந்தாலும் ஒரு பெண் கீறிவிட்டாள். மேலும் அவள் அடித்தும் விட்டாள் என்று உலகத்துக்குத் தெரிந்துவிட்டால், வெட்கக்கேடு! அவன் எதுவுமே செய்யாமல் தோல்வி கண்ட இளிச்சவாயனாக அப்படியே நின்று கொண்டிருந்தான்.

சுஹ்ரா பற்களைக் காட்டி அவனுக்கு * வெவ்வே' என்று அழகு காட்டி னாள் . மஜீத் அசையவில்லை. அவள் கோணங்கிச் சேட்டை களைச் செய்தவாறு மஜீதைக் கேலி செய்தாள் :

"ஐயோ அம்மா !"

அதற்கும் மஜீத் மூச்சுக் காட்டவில்லை. தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்க, உடனடியாக ஏதேனும் சொல்ல வேண்டு மென்றும் அதில் சுஹ்ரா தோற்றுப்போக வேண்டும் என்றும் அவன் நினைத்தான். ஆணல்லவா ? .... .... இருந்தாலும் என்னத்தைச் சொல்வது? நன்கு உறைக்கக் கூடியதாக இருக்கணும்...ஆனால் ஒன்றுமே தோன்றவில்லை! அவன் பதறிக்கொண்டே நாற்புறமும் பார்த்தான், வாழை மரங்களுக்கு இடையே வைக்கோல் வேய்ந்த கூரையுடனும் களிமண் பூசிய சுவர்களுடனும் கூடிய சுஹ்ராவின் வீட்டையும், தென்னை மரங்களுக்கிடையே ஓடு போட்டதும் சுண்ணாம்பு பூசியதுமான தனது வீட்டையும் பார்த்தபோது அவனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. சுஹ்ரா அவமானத்தால் குன்றிப்போகும் வண்ணம் அவன் சொன்னான்: -

"என் வீட்டுக்கு ஓடு போட்டிருக்காங்களே!" இதிலே பெருமையடித்துக் கொள்ளும்படியாக என்ன இருக்குது? அவளுடைய வீடு களிமண் பூசியதும் வைக்கோல் வேய்ந்ததும்தான். ஆனால், இதிலே வெட்கப்படுவதற்கு என்ன இருக்குது?" அவள் மறுபடியும் அழகு காட்டிக்கொண்டு அவனைக் கேலி செய்தாள்,

"ஐயோ அம்மா !" உடனே மஜீத் வேறொரு விஷயத்தைச் சொன்னான் : "" உன் வாப்பா தம்படிக்குதவாத பாக்கு வியாபாரி தானே ? என் வாப்பா யார் தெரியுமா ? பெரிய மர வியாபாரியாக்கும்!!! இதிலும் கர்வ மடித்துக் கொள்ளும்படியாக சுஹ்ரா எதையும் காணவில்லை. மஜீத் என்னும் புழு தன் அருகாமையிலேயே இருக்கிறது என்ற எண்ணமே இல்லாதது போல, அவள் மாமரத்தின் உயரே நோட்டமிட்டவாறு நின்றாள்.

மஜீதுக்கு அழுகை வரும்போல் தோன்றியது. அவமானம்! தோல்வி! எல்லாமாகச் சேர்ந்து அவனைத் தலைகுனியச் செய்தன. கழுதைபோல "ம்பா ” என்று உரத்த குரலில் அழவேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. அப்படி அழுதால் மனதுக்குக் கொஞ்சம் அமைதி ஏற்படும்! ஆனால் அடுத்த நிமிடத்திலேயே அவனுக்குப் பளிச்சென ஞானோதயம் ஏற்பட்டது. வேறு எவராலும் செய்ய இயலாத ஒரு வித்தை அவனிடம் இருக்கிறது என்றும், அந்த வித்தையை உபயோகித்து இதோ சுஹ்ராவை தோற்கடித்து விடுவேன் என்றும் பாவனை செய்தபடி, ஆகாயத்தையும் பூமியையும் பார்த்தவாறு கம்பீரமாக அவன் சொன்னான். "எனக்கு மாமரத்திலே ஏறத் தெரியுமே !" சுஹ்ராவின் கண்கள் சலனமற்று நின்றுவிட்டன. மாமரத்தில் ஏற முடியும் ! அது ஒரு உயர்ந்த அறிவல்லவா? அவள் பிரமித்துப் போனாள். அவன் மரத்தில் ஏறினான் என்றால் மாம்பழம் எனக்குத் தருவானோ? இல்லையென்றால்.. எதற்கும் முதலிலேயே தனக்குள்ள உரிமையை தெளிவாக்கிவிடுவது என அவள் தீர்மானித்தாள். கையெட்டும் தூரத்தில் இருந்த இரண்டு பழுத்த மாங்காய்களைச் சுட்டிக் காட்டியவாறு சுஹ்ரா கம்பீரமாகச் சொன்னாள் :

" ஏ பையா, அந்த முதிர்ந்த இரண்டு பழங்களையும் நான்தான் முதன்முதலாகப் பார்த்தேனாக்கும் ! "மஜீத் ஒன்றும் பேசவே இல்லை. அவன் ஏன் பதில் சொல்லவில்லை ? ஓ! எறும்புகளைக் கண்டு பயந்துட்டான் போலேயிருக்குது ! அவள் சொன்னாள் !

சிகப்பு எறும்பு கடிச்சிடும் இல்லே ? ** அவளுடைய குரல், அதில் தொனித்த பாவம் எதுவுமே மஜீதுக்குப் பிடிக்கவில்லை, அவனுக்குக் கோபம் வந்தது. சிகப்பு எறும்பு! சிகப்புக் கட்டெறும்பில்லே, தேள் நிறைந்திருந்தாலும் அவன் ஏறுவான் ! பெரிய பழங்கள் இரண்டும்

அவள் பார்த்தது அல்லவா ?... ரொம்ப சரி...

மஜீத் வேட்டியை மடித்து கட்டினான் ; மரத்தின்மீது மடமடவென்று ஏற ஆரம்பித்தான், மரத்தில் உராய்ந்து மார்புத் தோல் உரிந்துவிட்டது என்றாலும், சிகப்புக் கட்டெறும்புகள் உடம்பு முழுவதும் கடித்து குதறிவிட்டன என்றாலும் சுஹ்ரா பார்த்திருந்த இரண்டு மாம்பழங்களையும் பறித்துக்கொண்டு வெற்றிவாகை சூடிய வீரனாய் அவன் கீழே இறங்கி வந்தான்.

சுஹ்ரா அவனிடம் ஓடிப் போனாள்... ஆவல்! பிரமிப்பு! அவள் கைநீட்டிச் சொன்னாள் :

"பையா, இங்கே கொடு! ** மஜீத் பேசவில்லை, வாயை இருபுறமாகக் கோணிவிட்டு உதடு களைச் சேர்த்து குவித்துக்கொண்டு அவன் நின்றான்,

" எங்கிட்டே கொடு பையா, நான் பாத்தது இல்லே ? " மஜீத் அவளைக் கேலி பொங்கப் பார்த்தான். ** ஹஹ்ஹா ! நாக்கிலே தண்ணி ஊறுதா கண்ணு?" என்று கூறிக்கொண்டே, மாம்பழங்களை முகர்ந்து பார்த்தவண்ணம் திரும்பி நடக்க ஆரம்பித் தான், பிறகு தனக்குத் தானே கூறிக்கொண்டான் : ""ஆஹா என்ன வாசனை ! என்ன வாசனே ! **

சுஹ்ராவுக்குக் கோபம் பொங்கியது. அவள் ஆத்திரத்தோடு குமுறினாள். அவள் மனம்... ஓ... அவள் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிய ஆரம்பித்தது. அவள் கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.

அவன் திரும்பி வந்தான். தனது முக்கியத்துவத்தை நிரூபிக்க, அவனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அல்லவா ? அவன் மாம்பழங்களை அவளிடம் நீட்டினான். வாங்க விருப்பம்தான் என்றாலும் அவள் கை நீட்டவில்லை. மஜீத் இரண்டு மாம்பழங்களையும் அவள் முன்னால் கீழே வைத்தான். ஊஹும் ! அவள் எடுத்துக் கொள்ளவில்லை, அவளுக்குத் தன் கண்களை நம்பவே முடியவில்லை, இவ்வளவு பெரிய" தியாகியா அவன் ! ஏனோ அவளுக்கு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறதே? கைகளிரண்டையும் பின்னால் சேர்த்துக் கட்டியவாறு, கன்னத்தில் நீர் வழிய அவள் அப்படியே மரமாக நின்றாள். மஜீத் பெருமையோடு சொன்னான் : " இன்னும் வேணுமானா நான் பறிச்சுத் தறேன் என்ன ?"

சுஹ்ராவின் மனம் பாகாய் உருகிவிட்டது. அவளுக்கு இன்னம் வேணுமானாப் பறிச்சுத் தரானாமே! தியாகி! வீரன்! த்தெஸத்கிஸா! எவ்வளவு நல்ல பையன்! அவனைப்போய் நகங்களாலே பிருண்டினேனே சரியா? அவள் மிகவும் அடக்க ஒடுக்கத்தோடு தானும் தியாகம் செய்யத் தயாரான நிலையில் மெதுவாகச் சொன்னான் :

" எனக்கு, ஒண்ணு போதும். "

அந்தத் தியாகசீலன் பரவாயில்லை என்கிற மாதிரி சொன்னான் ; " பொண்ணு, எல்லாத்தையும் நீயே எடுத்துக்க. ” " எனக்கு ஒண்ணே ஒண்ணு போதும்.. ” அவள் ஒன்றை எடுத்து மஜீத்திடம் நீட்டினாள். அவன் வேண்டாம் என்று மறுத்தான், அவள் அவனை நிர்ப்பந்தப்படுத்தினாள்-" இத பாரு, நீ வாங்கிக் கலைன்னா நான் அழ ஆரம்பிச்சுடுவேன் ! ”

மஜீத் வாங்கிக் கொண்டான். மாம்பழத்தைக் கடித்துத் தின்னத் தொடங்கினான். பழச்சாறு மார்பினூடே ஒழுகிக்கொண்டிருக்கையில் மஜீத்தின் உடல் பூராவிலும் சிவப்புக் கட்டெறும்புகள் ஒட்டிக் கொண்டு கடித்துவிட்டிருப்பதை சுஹ்ரா பார்த்தாள். அவளுக்கு மிகவும் வேதனையுண்டாயிற்று. அவள் அவனுடைய உடலோடு ஒட்டி நின்றவண்ணம், எறும்புகளை ஒவ்வொன்றாகக் கிள்ளி எறிந்தாள். அவளுடைய நகங்கள் மஜீத்தின் உடலில் பட்டவுடன் அவனுக்கு மீண்டும் பயமேற்பட்டது,

அன்றைய தினம் அவள் மஜீத்தைப் பிறகு பிறாண்டவில்லை யென்றாலும், எதிர்காலத்தில் பலமுறை அவள் அவனைப் பிராண்டியும் கிள்ளியுமிருக்கிறாள். '' நான் பிறாண்டுவேன் " என்று அவள் சொன்னால் போதும், மஜீத் பயந்து விறைத்துப் போய்விடுவான். ஒரு நாள் அவன், அவளது மிகவும் கூர்மை வாய்ந்த ஆயுதங்களான அந்த நகங்களைத் தந்திரமாக வெட்டி எரிந்தான் , ஆனால் அவளுக்குத் தெரிந்தே, அவளுடைய சம்மதத்துடனேயே அவன் அதைச் சாதித்து முடித்தான்.மஜீத்தின் வீட்டிலுள்ள முற்றத்தில் ஒரு பூந்தோட்டம் போடுவதற்காக, ஒருநாள் காலை சுஹ்ராவும் மஜீதும் அண்டை அயல் வீடுகளி விருந்து செடிகளின் கிளைகளைச் சேகரித்தவாறு வந்துகொண்டிருந் தார்கள். மஜீத் பெருமிதத்தோடு முன்னால் நடந்து செல்ல, பின்னால் கிளைகளைச் சுமந்து வந்தது சுஹ்ரா தான், அவன் ஆணல்லவா ?

அதனால்தான் அப்படி !

அவன் கையில் விரித்த ஒரு கத்தி இருந்தது. வருங்காலத்தில், தான் செய்யவிருக்கும் அரும்பெரும் சாதனைகள் பற்றி மஜீத் சொல்லிக்கொண்டே வந்தான். அவற்றையெல்லாம் 'உம்' கொட்டிக்கொண்டே கேட்டு மகிழவும் வியப்படையவும்தான் சுஹ்ராவினால் முடிந்தது. மஜீத்தின் கற்பனைகளுக்கு ஈடு இணையே கிடையாது. பொன்னிறத்தில் மூழ்கிய ஒரு அழகிய உலகம். அதன் ஏகசக்கிராதிபதி மஜீத்தான் என்றாலும் அதில் பட்ட மகிஷி சுஹ்ரா தான். அதை யாருமே மறுக்கக் கூடாது! மறுத்தால் அவளுக்கு அழுகை வந்துவிடும். அவளுடைய நகங்கள் நீண்டுவிடும். பிறகு என்ன? மஜீத்தின் உடம்பெல்லாம் ஒரே ரணம் ; எரிச்சல்! அந்த அனுபவத்தைத் தவிர்ப்பதற்காக, மஜீத் சற்று எச்சரிக்கையாகவே எதையும் சொல்லுவான். இருந்தும் சில சமயங்களில் அதை அவன் மறந்து விடுவதும் உண்டு,

கற்பனைகளின் அடிமை மஜீத். எதிர்காலத்தில், அதி உன்னதமான ஒரு மணிமாளிகையை அவன் கட்டுவிப்பான், அதன் சுவர்களெல்லாம் தங்கத்தாலானவை. அந்த மாளிகையின் திண்ணை முழுவதும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்படும். அதன் கூரை எப்படி இருக்கும்..? சே, * இது என்ன கற்பனைக் குதிரை மேலே ஓட மாட்டேங்குது ? சரிதான் ! சுஹ்ரா "உம்" கொட்டவில்லை ! தேவைப் படும்போது அவள் ' உம் " கொட்டுவாளே ? அவள் 'உம்' போட்டிருந்தால் வினாடிக்குள் அவனுக்கு ஏதாவது உதித்திருக்குமே!

" சுஸ்ரா !!'' " என்ன மஜீத் ?" “ ஆமாம், நீ ஏன் “ உம் ' கொட்டலே?" - நான் ' உம் உம்'னு சொல்லிக்கிட்டுத்தானே இருக்கறேன், அது சரி, நீ எதுக்காக என்னே “ நீ " ன்னு கூப்பிடறே?" அவள் கோபத்தோடு அவனை நோக்கி முன்னேறினாள், பிறாண்டலுக்கு இலக்கான மஜீத் துடித்துப் போனான், அவன் கத்தியும் கையுமாகத்திரும்பினான்.... அவளோ நகங்களை நீட்டிக் காட்டி கண்களை உருட்டி முறைத்து அவனைப் பயமுறுத்தினாள், " நான் இன்னும் பிறாண்டுவேன் " என்று. முந்தைய பிராண்டல்கள், கிள்ளுகள் ஆகியவற்றின் நினைவானது மஜீதின் ரத்தத்தை உறைய வைத்தது. ... நகங்களையுடைய சுஹரா ஒரு பயங்கரியாக இருக்கிறாள். அவளுக்கு அந்த நகங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால்? ஆனால் அவளுக்குத்தான் முன்பிருந்தே நகங்கள் இருக்கின்றனவே! அதோடு அவற்றைப் பயன்படுத்த அவள் தயங்குவதும் கிடையாது, அப்படி ஒரு நிலைமைக்கு அவள் ஆளாகும்படி அவளைச் சினப் படுத்துவது சரியா? சுஹ்ரா அகாரணமாகத்தான் பிறாண்டினாள் என்னும் பாவனையில் ஏதுமறியா அப்பாவியைப் போல் மஜீத் கேட்டான் :

"ஓ சுஹ்ரா, என்னை ஏன் பிறாண்டினே ?" " உக்கும், நீ மட்டும் என்னை “ நீ 'ன்னு கூப்பிடலாமோ ? மஜீத் வியப்படைவது போல நடித்தான். “' எப்போ கூப்பிட்டேன் * நீ'ன்னு? நான் அப்படிக் கூப்பிடவே இல்லை. சுஹ்ரா ஒருவேளை கனவு கண்டியோ என்னமோ ? **

மஜீதின் நிலையையும், அப்பாவித் தனத்தையும் கண்டபோது சுஹ்ராவின் மனம் உருகிவிட்டது. உண்மையிலேயே மஜீத் என்னை * நீன்னு கூப்பிட்டானா? இல்லே, ஒருவேளை எனக்குத்தான் அப்படித் தோன்றியதோ ? அப்படியென்றால் மஜீதைப் பிராண்டியது பெரும் தவறு, 10ன்னிக்கமுடியாத தவறு !....... சிவந்து தடித்த நான்கு தழும்புகள் ! இது அவளுடைய கடினமான இதயத்தின்

அடையாளமல்லவா ?

அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. மஜீத் அதைக் கண்டும் காணாதது போல், வெண்மணல் பரப்பப்பட்ட கிராம வீதி வழியே

நடந்தவண்ணம் தனக்குத் தானே கூறிக்கொண்டான் !

" நான் ஒரு குத்தமும் செய்யாம இருந்தாக்கூட, என் வாப்பாவும் உம்மாவும் சும்மாவானும் என்னை அடிக்கவாவது திட்டவாவது செய்வாங்க. இன்னும் சில பேரு நிமிண்டவோ பிறாண்டவோ செய் வாங்க. இதிலே அவங்களுக்கு என்னவோ ஒரு ஆனந்தம் கிடைக்குது. உம்! நான் செத்துப் போனப்பறம் அவங்க எல்லாம் என்னெப் பத்தி ஒரு வேகா இப்படிச் சொல்லிக்குவாங்க! அந்த அப்பாவி மஜீது இப்ப உயிரோடு இருந்திருந்தா ஒரு நிமிண்டாவது நிமிண்டியிருக்கலாமே!......."எல்லாம் முடிந்த பிறகு, மஜீத் தந்திரமாகத் திரும்பிப் பார்த்தான் பேஷ்! சுஹ்ராவின் கன்னங்களினூடே இரண்டு நீரோடைகள் !

அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அவனுடைய மகிழ்ச்சியில் தானும் பங்கு கொள்ள விழைவது போல், இளங்கதிரவன் குன்றின் உச்சியில் தோன்றி மந்தகாசத் துடன், அடிவாரத்தில் உள்ள கிராமத்தைத் தனது பொன்னிற ஒளியில் மூழ்க்குவித்துக் கொண்டிருந்தான், குன்றின் பின்பக்கத்தி லிருந்து இரண்டாகப் பிரிந்துவந்து, குன்றையும் கிராமத்தையும் உள் எடக்கியவாறு ஓடி, தொலைவில் சென்ற பிறகு மீண்டும் ஒன்றிணைந்து நடைபோடும் நதி உருகிய தங்கம் போலக் காட்சி தந்தது. கிராமத் தின் மோனத்துக்கு ஊறு விளைவிக்கும் பறவைகளின் சப்த ஜாலங்களில் மஜீத் கேட்பது, விவரிக்கவொண்ணா ஆனந்தத்தின் மாற்று ஒலியே!

ஆனால் சுஹ்ராவுடைய இதயத்தில் மட்டும் மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை. அவள் மன்னிக்கமுடியாத மாபெரும் தவறிழைத் திருக்கிறாள் ! காரணம் ஏதும் இல்லாமல்தானே அவள் மஜீதைப் பிறாண்டினாள் ? நினைக்க நினைக்க துயர் பெருக்கெடுக்கவே செய்கிறது...,., சிவந்து தடித்த நான்கு தழும்புகள், மஜீதின் முதுகில்! அவளுடைய தவறை எப்படி அழிப்பது ?

மஜீத் விவரித்து வந்த மாளிகையை மனதில் நினைவுபடுத்தியவாறு, எதுவுமே நடக்காத விதத்தில் சுஹ்ரா மெள்ளக் கேட்டாள் :

"பையா, அப்புறம் அந்த மாளிகை ? ' மஜீத் பேசவில்லை. சற்று நேரம் கழித்து அவன் கேட்டான் :

" சுஹ்ரா நீ, உம் கொட்டிக்கிட்டிருக்கறயா ? **

அவள் துயரம் தொண்டையை அடைக்கச் சொன்னாள் ; " கொட்டிக்கிட்டிருக்கறேன் '' பிறகு அதை நிரூபிப்பது போல “ உம் உம் உம் " என்று மும்முறை கூறவும் செய்தாள்,

" அப்புறம்," அவன் தொடர்ந்தான். அந்த மாளிகை குன்றின் மேல்தான் இருக்கும்.......அப்படி இருந்தால் கிராமம் முழுவதையுமே பார்க்கலாம். அதோடு இரண்டு ஆறுகள் சேர்ந்து ஒரு பெரிய நதியாக ஓடும் காட்சியையும் வெகு தூரம் வரை கண்டு ரசிக்கலாம். சுஹ்ராவும் மஜீதும் மற்ற கிராமத்துக் குழந்தைகளும் குன்றின் மேல் ஏறிப் பலமுறை கண்டு வியந்த காட்சியல்லவா அது ? அங்கு மஜீத் சமைக்கவிருக்கும் மாளிகை அற்புதமானதாக இருக்கும்.

" அப்புறம்," அவள் உற்சாகத்துடன் கேட்டாள் : "அந்த மாளிகை எத்தனை உயரம்?" உயரத்துக்கு எல்லைக்கோடு உண்டா என்ன ? மஜீத் சொன்னான் : " நிறைய.”

* நிறைய' என்றால் எதுவரை என்று சுஹராவுக்குத் தெளிவாக விளங்கவில்லை. அவள் கேட்டாள் : " வாழை மரமத்தனையா ?"

வாழை மரமத்தனையா ? அவனுக்கு அது பிடிக்கவில்லை, வாழை மரமளவு உயரமுள்ள மாளிகை ! “ ப்பூ' என்று சொல்லிவிட்டு, அவன் சுஹ்ராவைப் பார்த்தான்.

அவள் கேட்டாள் : "" தென்னை மரமத்தனையா ?" அதையும் மஜீத் கேலி செய்ததை அடுத்து சுஹ்ரா ஆகாயத்தை நோக்கி முகத்தை உயர்த்தியவாறு சந்தேகத்தோடு கேட்டாள் :

" மானம் வரைக்குமா ? ** "ஆமாம்" மஜீத் ஒப்புக்கொண்டான், "மானம் வரை இருக்கும். 

அவளுக்கு மறுபடியும் ஒரு சந்தேகம் : "* அதில் பையன் மட்டும் தனியாகவா இருப்பான் ? ''

" இல்லை " மஜீத் அரபுக் கதைகளை நினைவுபடுத்திக் கொண்டே சொன்னான் : " நானும் ஒரு அரசகுமாரியும்." அரசகுமாரி ? அப்படி ஒருத்தி இந்த ஊரிலேயே கிடையாதே! இருந்தாலும்....... " அந்தப் பொண்ணு யாரு ? "

அது ஒரு ரகசியம் என்பது போல மஜீத் சொன்னான்: "அதெல்லாம் ஒருத்தி இருக்கரு."

அதைக் கேட்டதும் சுஹ்ராவின் முகம் ஒளி இழந்து குன்றியது. அவளுக்குக் கோபமும் விசனமும் ஏற்பட்டன. அவள் செடிக் கிளைகளைக் கீழே எறிந்தாள். அவளுடைய கண்கள் நிறைந்து வழிந்தன ; அவள் சொன்னாள் : " அந்த அரசகுமாரியை இதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு.""

மஜீத் உத்தரவிட்டான்: " சரிதான். எடுத்திட்டு வா பொண்ணு!''* சுஹ்ரா உரக்க அழத் தொடங்கினாள். '' பையன் கூட வரமாட்டேன். அரசகுமாரியே எடுத்துகிட்டு வர்ச்சொல்லு போ."

அந்த நிலை, மஜீதின் மனதை நெகிழ வைத்துவிட்டது. அவன் அவளருகே சென்று அவளுக்கு முன்னால் நின்றான் : " சுஹ்ராதான் என்னுடைய,........." " ?......................."  அ.ர.ச.கு.மா...ரி ! "

அவளுடைய முகம் தெளிவடைந்தது.  போ பையா, "

"உம்மா ஆணயா, "*

அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. மஜீதும் சுப்ராவும் சேர்ந்து அந்த மாளிகையில் வசிக்கலாம். எவ்வளவு குஷியாக இருக்கும்! அவள் கண்ணீருடனும் முறுவல் பூத்தவாறும் அப்படியே நின்றாள். மஜீத் அவளுடைய நகங்களை வெட்ட முயற்சி செய்தான்,

" விடு பையா, "* மழைத் தூறல்களுக்கிடையே முழுமதி ஒளி வீசுவதைப் போல் கண்ணீரினூடே சுஹ்ரா முறுவலித்தாள் :

" இருந்தாலும் என் நகத்தை வெட்டவேணும் !" அவள் உதடுகளைக் குவித்தவண்ணம் சொன்னாள்  "அப்பறம் பையன் ஏதாவது சொன்னா, எனக்கு அவனைப் பிறாண்டணுமே ! **

* சுஹ்ரா என்னைப் பிராண்டுவாயா?" “ஆமாம். பிறாண்டுவேன். எப்போதும் பிராண்டுவேன் ! "அவள் பல்லைக் கடித்துக் கொண்டு புருவங்களை உயர்த்தியவாறு பிறாண்டத் தயாரானாள்,

மஜீத் நடுங்கியபடி எழுந்தான். ஏதோ ஒரு பயங்கரமான தவறை நினைவுபடுத்துவது போல அவன் சொன்னான் :

" அரச குமாரி பிறாண்டக் கூடாது ! "

அரச குமாரி பிறாண்டினால் அது கொடிய பாவம்போலும் ! சுஹ்ரா சந்தேகத்தோடு கேட்டாள் : "" உம்மா மீது ஆணையா ! "* மஜீத் சத்தியம் செய்தான் : " உம்மா ஆணையா பிறாண்டக் கூடாது !"

அவள் மலைத்துப்போய் நின்றாள், அரசகுமாரி பிறாண்டக் கூடாது; கிள்ளக் கூடாது என்றால் பின் நகங்கள் இருந்து பயன் என்ன? ஒரு பெரும் தியாகம் செய்வது போல இரண்டு கைகளையும் முன்னே நீட்டி அவள் சம்மதம் கொடுத்தாள் : " அப்படியானா, வெட்டிப் போட்டுடு."

மகிழ்ச்சியோடு மஜீத் சுஹராவின் முன் அமர்ந்தான். ஈட்டிபோல் நீண்டு கூர்மையாகவிருந்த நகங்கள் பத்தையும் மஜீத் வெட்டி எறிந்தான், பிறகு மஜீத் எழ, இருவருமாகப் போய்த் தோட்டம் போட்டார்கள், மஜீதின் வீட்டில் உள்ள விசாலமான முற்றத்தின் முன்று ஓரங்களிலும் அவர்கள் சிறு குழிகளைத் தோண்டினார்கள். அவற்றில் சுஹ்ரா ஒவ்வொரு கிளையாக நட்டு, மண்ணை அள்ளிக் குழிகளை மூடித் தண்ணீரும் ஊற்றினாள். "ஒரு பிரியன் * ஒரு மஞ்சள், ஒரு கோழிவாலன் “ என்று எல்லாக் குழிகளும் நிரப்பப் *சுருள் சுருளாக இல்கள் கொண்ட செடி. tகோழியாப் போல பல கொண்ட செடி.பட்டன. மூலையில் குழிதோண்டி வைத்தது ஒரு செம்பருத்திக் கிளையாகும். சுஹரா அதை நடுகையில் அதில் வாடத் தொடங்கிய ஒரு சிவந்த பூ இருந்தது.

சுஹ்ரா தினசரி காலை மஜீதின் இல்லம் சென்று செடிகளுக்குத் தண்ணீர் பற்றுவாள்,

ஒரு முறை சுஹ்ராவின் உம்மா வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே அவளிடம் கேட்டாள் : " சுஹ்ரா, எதுக்காக இன்னொருத்தரோட செடிக்கு நீ தண்ணி ஊத்தறே ?

சுஹ்ரா சொன்னாள் : * இன்னொருத்தரோடது இல்லையே! "

அன்று மாலை சுஹ்ராவும் மஜீதும் முற்றத்தில் நின்று கொண்டிருந்தார்கள். துளிர்விட்டுத் தழைத்திருந்த செடிகளைச் சுட்டிக்காட்டி மஜித் உரத்த குரலில் கேட்டான்: " இதெல்லாம் சுஹராவுடையதா?"

இல்லாம சின்ன பையனுடையதோ * * * மஜீத் கேலியாகச் சொன்னான் : 1 பெண்ணுக்கு ஆசை கொஞ்ச நஞ்சமில்லே ! !

அவளுக்குக் கோபம் வராமல் இருக்குமா ? அவள் பிராண்டினாள். நகங்கள் போதுமான அளவு இல்லையாதலால் மஜீத் சொன்னான்! இன்னும் பிருண்டு! ரொம்ப சொகம்பமா இருக்குது ! "

சுஸ்ரா தன் நகங்களைப் பார்த்துவிட்டு பீறிட்டு அழுதாள். "அப்படியானா நான் கடிப்பேன், '' அவள் மஜீதின் கையைக் கடிக்கத் தயாரானாள். வேறு வழி ஏதும் காணாமல் மஜீத் குரானை எடுத்து வைத்துக் கொண்டு ஆணையிட்டான் : " முப்பது ஜூஸோள்ள மூஸா மீது ஆணை ! அரசகுமாரி கடிக்கக் கூடாது ! ”

சுஹ்ரா கண்ணீரொழுகக் கேட்டாள் : "" யாரையும் ? "* மஜீத் புன்முறுவலுடன் கூறினான் : “ யாரையும் ! !

சுஹ்ரா கணக்கில் புலியாக இருந்தாள், ஆசிரியர் அவளைப் புகழ்வதும் மஜீதை அடிப்பதுமே வழக்கமாக இருந்து வந்தது. கணக்குகளைப் பொறுத்தமட்டில் மஜீதுக்கு எப்போதும் ஒரே குழப்பம்தான், என்ன தான் அவன் சிரமப்படட்டுமே! ஊஹும், அது சரியாக வரவே வராது.

"" முட்டாள் மன்னா" என்றுதான் ஆசிரியர் மஜீதைக் கூப்பிடுவார். அட்டண்டென்ஸ் எடுக்கும்போதுகூட, அவர் அவனை அப்படியேதான் அழைப்பார், அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபமும் இருக்கவில்லை ; மஜீத் முட்டாள் தான். அவன் மாணவர்களின் மத்தியில் அமர்ந்து கொண்டே உரக்கக் கத்துவான், * ஆஜே .ர் !'

" ஒன்றும் ஒன்றும் எத்தனைடா ?'' என்று குரு ஒருநாள் சிஷ்யனிடம் கேட்டார். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது உலகறிந்த விஷயம். ஆனால் அதற்கு மஜீத் கூறிய அற்புதமான விடையைக் கேட்டதும் ஆசிரியர் உரக்கச் சிரித்துவிட்டார். வகுப்பு முழுவதுமே, அவருடன் சேர்ந்து சிரித்தது. மஜீத் கூறிய விடையே, பின்னர் அவனது கேலிப் பெயராகவும் நிலைத்து விட்டது. அந்த பதிலைச் சொல்லுமுன் மஜீத் நன்கு யோசித்தான். இரண்டு சிறு நதிகள் ஒன்றாகச் சேரும்போது, சற்றே பருமனான பெரிய நதியாக உருவெடுக்கிறது. அதேபோல் இரண்டு  ஒன்றுகள்  சேர்ந்தால் சற்றே பெரிய ஒன்று  ஆகும் என்று மதிப்பிட்ட மஜீத், சற்று பெருமையுடனே பதில் கூறினான் :- " கொஞ்சம் பெரிய ஒன்று!  கணக்கு இயலில் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்தமைக்கென, மஜீத், அன்று முழுவதும் பெஞ்சு மேல் நிற்க வைக்கப்பட்டான் !

எல்லோரும் அவனைப் பார்த்துக் " கொஞ்சம் பெரிய ஒன்று " என்று கூறிச் சிரித்தார்கள். இருந்தும் மஜீத் ஒப்புக்கொள்ளவேயில்லை, 'ஒன்றும் ஒன்றும் இரண்டு தான் என்பதை. அதனால் ஆசிரியர் மஜீதின் உள்ளங்கையில் சுடச் சுட ஆறு அடிகளைக் கொடுத்துவிட்டு, எல்லாவற்றையுமாக சேர்த்துக் கூட்டி, சிறிதளவே வேற்றுமையுள்ள பெரியதொரு அடியாக நினைத்துக் கொள்ளுமாறு அவர் மஜீதீடம் கூறவும் செய்தார். இதன் பிறகு கூடப் படிப்பவர்கள் அவனைப் பார்க்கும்போதெல்லாம் "கொஞ்சம் பெரிய ஒன்று" என்று தங்களுக்கிடையே பரஸ்பரம் கூறிக்கொள்வர். அந்தக் கிண்டலும் அதற்கு மூலகாரணமான சம்பவமும், மஜீதை மிகவும் வேதனைக்குள்ளாக்கின, அவன் சொன்னது என்னவோ சரியான - விடை. ஆனால் யாருமே அதை நம்பமாட்டேன் என்கிறார்களே ஏன்? உம் ! ஒரு வேளை தவறாகவும் இருக்கலாம், தான் முட்டாளாகவும் இருக்கலாம் அல்லவா? தாங்கவொண்ணா துயரத்தோடு, மஜீத் தன் உம்மாவிடம் சென்று புகார் செய்தான். மனத் துயரங்களையெல்லாம் ஆண்டவனிடம் எடுத்துச் சொல்லும்படி அவள் அவனுக்கு உபதேசம் செய்தாள். " ரப்பு உல் ஆல்மீன், யாருடைய வேண்டுகோளையும் தள்ளிவிட மாட்டார் மகனே ! 1*

அதன்படியே அந்தப் பிஞ்சு உள்ளம் சகத்ரட்சகனிடம் மனப்பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொண்டது : "*என்னைப் படைத்தவனே! என்னுடைய கணக்குகளையெல்லாம் சரியானதாகச் செய்! " அதுதான் மஜீதின் முதல் பிரார்த்தனையாக இருந்தது. இரவும் பகலும் மஜித், இந்த வேண்டுகோளே ஆண்டவனிடம் விடுத்து வந்தான். இப்படிச் செய்தும், கணக்குகள் யாவும் தப்பும் தவறுமாகவே வந்தன. மஜீத் நிரம்ப அடிகளும் வாங்கினான், உள்ளங்கை எப்போதும் வீங்கி வந்தது. அவனால் இதையெல்லாம் சகிக்கவே முடியவில்லை. எல்லா விஷயத்தையும் மஜித் சுஹ்ராவிடம் கூறினான். அதுகூடப் பல நாள் ஊடல்களுக்குப் பிறகுதான். " கொஞ்சம் பெரிய ஒன்று " சம்பவத்துக்குப் பிறகு மஜீத் யாரோடும் பேசாமல் இருந்து வந்தான். அடுத்த பெஞ்சியில் இருந்தவாறே சுஹ்ரா அவனேப் பார்ப்பாள். ஆனால் மஜீதோ முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டுவிடுவான், இறுதியில் மஜீத் பேசினான், சுஹரா சிரித்தாள். அவள் தன் இருக்கையைப் பற்றிக் கொண்டாள். மஜீத்துக்கு அருகிலேயே அம்ரத் தொடங்கினாள். அவளுடைய இடம் பெஞ்சின் கோடியில் இருந்தது. அது முதல் மஜீத் அடி வாங்குவதே கிடையாது. அவன் போடும் கணக்குகள் அனைத்துமே சரியாக இருந்தன. அடேடே ! ஆசிரியர் வியந்து போனார் : " நான் நினைச்ச மாதிரி உன் தலைக்குள்ளே முழுவதும் களிமண் இல்லே !''

இப்படியாகத்தானே குருநாதரின் புகழ்ச்சி உரைகள், மஜீத்தின் கேலிப் பெயரையே அழித்துவிட்டன. குழந்தைகள் பொறாமையோடு சொல்ல ஆரம்பித்தனர் : " மஜீதுதான் வகுப்பிலே முதல் ! "

இதைக் கேட்கையில் சுஹ்ராவின் முகத்தில் புன்சிரிப்பு தவழும். அதன் பொருள் என்ன என்பது மற்றவர்களுக்கு விளங்காமலே இருந்தது. மஜீத்தின் கணக்குகள் சரியாக இருந்ததன் மர்மம், அவளுடைய முறுவலில் ஒளிந்து கொண்டிருந்தது ! கணக்குகளைப் போடுவதற்காகக் குழந்தைகள் எல்லாரும் எழுந்து முகத்தோடு முகம் நோக்கி எதிர் எதிராக நிற்கும்போது, மஜீத்தின் இடது கண் சுஹ்ராவின் ஸ்லேட்டில் பதிந்திருக்கும். அவளுடைய விடைகளை அவன் அப்படியே காப்பியடித்துக் கொள்வான். கணக்குகளைப்போட்டு முடித்தாலும் அவள், இருக்கையில் அமர மாட்டாள். முதலில் மஜீத் உட்கார வேண்டும்!

பள்ளிக்கூடத்திலிருந்து அவர்கள் ஒன்றாக வீடு திரும்புகையில், வேறு யாருக்கும் கேட்காதவாறு மஜீத்தைச் சுஹரா சீண்டுவாள் ; கேலியும் செய்வாள். பல சம்பவங்களை நினைத்து நினைத்து அவள் முறுவலிப்பாள் ; "கொஞ்சம் பெரிய ஒன்று" என்று முணுமுணுப்பாள், அப்போதெல்லாம் மஜீத் தன்னுடைய கோபம் முழுவதையும் ஒரே வார்த்தையில் அடக்கியவாறு சொல்லுவான் : " அரசகுமாரி!

அதுகேட்டு வெள்ளி மணிகளின் கிண்கிணி நாதம்போல் சோகமதுர பாவத்தோடு சுஹரா சிரித்துக்கொண்டே தன் விரல்களைப் பார்ப்பாள். அந்த நகங்கள் யாவும் இப்போது அழகாக வெட்டப் பட்டுள்ளன, ஒழுங்குக்கும் சுத்தத்துக்கும் அந்தப் பள்ளியிலேயே சுஹ்ரா ஓர் உதாரணமாகத் திகழ்ந்தாள். மஜீத்தின் உடைகளில் எப்போதும் மசிக்கறையும் அழுக்கும் காணப்படும்.

அவன் அந்த ஊரில் இருந்த மாமரங்களில் எல்லாம் தொத்தி ஏறுவான். அவற்றின் உச்சாணிக் கிளைகளைப் பற்றியவண்னாம், விரிந்து அடர்ந்த இலைகளின் இடை வழியாக, இப்பரந்த உலகைப் பார்த்து ரசிப்பதில் அவனுக்கு ஒரு அலாதி இன்பம், மேல் உலகங்களைக் காணுவதில் அவனுக்கு அபரிமிதமான ஆசை. கற்பனையில் மூழ்கித் திளைத்தவாறு, அவன் மரத்தின் உச்சியில் நிற்கையில், தரையிலிருந்து சுஹ்ரா அவனிடம் கேட்பாள் :

"பையா, மெக்கா தெரியுதா?" மஜீத் அதற்கு ஒரு பதிலாக, உயரே வானில் ஓடும் மேகங்களுக்கு இணையாகப் பறக்கும் பருந்துகளின் கீதமோ என்று தோன்றும் பாட்டின் வரிகளை மதுரமான இசையோடு திரும்பத் திரும்பப் பாடுவான் :

"மெக்காவைப் பார்க்கலாம்! மதீனாவின் பள்ளி வாசலும் பார்க்கலாம்!" சுஹ்ராவின் காது குத்தும் விழாவில் மஜீத் கலந்துகொண்டது, தாங்கவொண்ணா வேதனையோடும் ஒளிந்துகொண்டுமாகும்.

மஜீத் *சுன்னத்* சடங்கை அடுத்து படுக்கையில் இருந்தான், அப்போது பள்ளிக்கூட விடுமுறைக் காலம். அவனது இந்தச் * சுன்னத் கல்யாணம் * கிராமத்தையே தடபுடல் படுத்திற்று. வாண வேடிக்கைகளும் விருந்தும் இருந்தன. பாண்டு வாத்திய கோஷ்டியினர் இசைக்க, பெட்ரோமாக்ஸ் விளக்குகள் உடன் வர, யானை மீதமர்ந்தவாறு மஜீத் ஊர்வலம் வந்தான், அதன் பிறகுதான் விருந்து. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருந்தில் கலந்து கொண்டார்கள். விருந்துக்கு முன்புதான் " சுன்னத் சடங்கு ' நடைபெற்றது.

அன்று முழுவதும் மஜீத்துக்குப் பயமாக இருந்தது, எதையோ துண்டிப்பார்களாமே? என்ன அது? இறந்து விடுவோமோ? மொத்தத்தில் அவன் பயந்து செத்தான், அன்று அந்திவரை உயிரோடு இருப்போம் என்றே அவனுக்குத் தோன்றவில்லை, தனக்கு என்ன ஏற்படும் என்றே அவனுக்குத் தெரியவில்லை. எல்லா முஸ்லிம் ஆண்களுக்கும் இந்த "சுன்னத் சடங்கு" நடந்திருக்கிறது. சுன்னத் செய்து கொள்ளாத ஆணே இல்லை. இருந்தாலும் இதை எவ்வாறு செய்வது ? மஜீத் சுஹ்ராவிடம் கேட்டான். அவளுக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. .

" எதுவானாலும் செத்துப்பூட மாட்டே '' என்று மட்டுமே அவளால் கூற முடிந்தது. இருந்தாலும் மஜீத்துக்கு ஒரே பிரமிப்பாக இருந்தது. 'அல்லாஹு அக்பர் ' என்னும் கம்பீரமான "தக்பீர்" பந்தலில் முழங்கியது. அதை அடுத்து மஜீத்தின் வாப்பா அவனைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ஒரு சிறிய அறையினுள் விட்டுவிட்டுப் போனார்.

அங்கு கவிழ்க்கப்பட்ட, வெள்ளைத் துணி விரித்த உரலின் முன்னால், பதினோரு திரியிட்ட குத்து விளக்கு எரிந்துகொண் டிருந்தது. அந்த அறையில் நாவிதனான “ ஒஸ்ஸா”வும், இன்னும் பத்துப் பன்னிரண்டு பேரும் இருந்தார்கள், அவர்கள் மஜீத்தின் ஷர்ட்டைக் கழட்டினார்கள். இடுப்புத் துணியையும் அவிழ்த்தார்கள். பிறந்தபடி அவனை உரலின்மீது அமர்த்தினார்கள், அற்புதம் !

அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் ? "தக்பீர்"-ஆண்டவனை வாழ்த்தும் ஒலி.மஜீத்தின் கண்ணைப் பொத்தினார்கள். கைகளையும் கால்களையும் தலையையும் ஆட்கள் பிடித்துக் கொண்டார்கள். அவனுக்கு அசையவே முடியாமல் இருந்தது. * அல்லா ஹூ" அக்பர்' என்ற ஓசையைத் தவிர, வேறெதுவும் கேட்கவில்லை, மஜீத்துக்கு வேர்த்துக் கொட்டியது. இந்த அமர்க்களங்களுக்கிடையே, அவனுடைய இரு தொடைகளும் ஒன்று சேரும் இடத்தில் கொஞ்சம் வலி. உலர்ந்த பாளையை முறிப்பது போன்ற ஒரு உணர்வு. ஒரே நிமிடம் மட்டும் தான், உடனே எல்லாம் முடிந்ததற்கடையாளமாகத் தண்ணீர் தெளித்தல். ஒரு எரிச்சல்-காந்தல்,

மஜீத்தைப் படுக்க வைத்தார்கள். தலைக்கும் காலுக்கும் தலையணைகள் இருந்தன. இந்த அமர்க்களத்தில் மஜீத் ஒன்றைப் பார்த்தான் ... கைவிரலைச் சிவந்த மசியுள்ள பாட்டிலுக்குள் முக்கியது போல் அன்றி, மசியில் முங்காமல் பாட்டிலின் வாயைத் தொட்டு நிற்கும் விரலின் மேற்புறத்தைச் சுற்றிச் சிவந்த மை ஒட்டிக்கொண்டிருப்பதுபோல, அந்த இடத்தில் இரத்தம் பொட்டுப் பொட்டாகக் காணப்பட்டது அவ்வளவுதான்...

சுஹராவிடம் அடுத்த நாள் அவன் இந்த விவரங்களைச் சொன்னான். அவள் சன்னலுக்கு வெளியே நின்ற வண்ணம் கேட்டாள் : " மஜீத், பயந்திட்டியா ?"

"நானா?" மஜீத் அந்தப் படுக்கையில் கிடந்தவாறே பெருமையடித்துக்கொண்டான் : "சே, சே, அதெல்லாம் நான் கொஞ்சம் கூடப் பயப்படவே இல்லை, ''

அந்தச் சமயத்தில் சுஹ்ரா அவளுடைய காது குத்தும் விஷயத்தைத் தெரிவித்தாள். பத்து அல்லது பன்னிரண்டு நாட்களுக்குள் அவளுடைய காது குத்தப்பட்டுவிடும்.

"மஜீதுக்கு வர முடியாது இல்லையா?" மஜீத் சொன்னான் : ''நான் வருவேன்.''

ஆனால் அந்தக் குறிப்பிட்ட தினத்தன்று, மஜீதால் அசையக்கூட இயலாமல் இருந்தது. முதலில் சுஹ்ராவுடைய அம்மாவும் பிறகு சுஹ்ராவும் வந்து, தன் வீட்டவரை அழைப்பது அவனுக்குக் கேட்டது. சற்றுப் பொறுத்து சுஹ்ராவையே சன்னலுக்கருகே பார்க்கவும் செய்தான். அவளுடைய வெள்ளை முகம், மேலும் வெளுத்திருந்தது. ஆயினும் கண்கள் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

“ இன்னிக்கு எனக்குக் காது குத்தப்போறாங்க." மஜீத் ஏதும் பேசாமல் முறுவலித்தான்,இதற்குள் மஜீதைத் தேடியவண்ணம் அவன் வீட்டு ஆட்கள் அங்கு வந்தார்கள். இரண்டு பேராகத் தாங்கியவண்ணம், அவனை வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போய்ப் படுக்கையில் கிடத்தினார்கள்,

இந்த விஷயம் மஜிதின் வீட்டில் பெரும் இரைச்சலுக்குக் காரணமாயிற்று. வாப்பா மஜீதைத் திட்டினார். மஜீதின் உம்மாவையும் கோபித்துக் கொண்டார். இப்படி அது முடிந்தது,

முதலில் உடல்நிலை குணமானது மஜீதுக்குத்தான், அன்று மஜிதைக் குளிப்பாட்டி புதிய ஆடைகள் அணிவித்து செண்ட் பூசிப் பள்ளிக்கு அழைத்துப் போனார்கள். அந்த ஊர்வலம் ஆடம்பரமாக இருந்தது. அது பற்றிச் சொல்லி சொல்லி அவள் அவனைக் கேலி செய்வாள் : " ஓ! பையனுடைய ஷோக்கைப் பாரு ! ஏதோ பொண்ணுகட்டப் போறாப்பலே ! ”

சுஹ்ராவும் மஜீதும் அந்த ஆண்டு பரீட்சையில் தேறினார்கள், கிராமத்துப் பள்ளிக்கூடத்தின் இறுதி வகுப்பிலிருந்து, அடுத்த வகுப்பில் சேர அவர்கள் தகுதி பெற்றார்கள். நகரத்துப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து மேலே தொடர்ந்து படிக்கவேண்டும் என்று சுஹ்ரா கொண்டிருந்த ஆவல், தகர்ந்துபோகும்படி ஒரு சம்பவம் நடந்தது. மஜீத் முதன் முதலாக மரணத்தைப் பார்த்தான், சுஹ்ரா தந்தையை இழந்துவிட்டாள். இதனால் அவளும் அவளுடைய இரண்டு இளைய சகோதரிகளும் உம்மாவும் அனாதைகளானார்கள். எல்லாமாகச் சேர்ந்து அவர்களுக்கு இருந்த ஆஸ்தியெல்லாம் ஒரு சிறு தோப்பும், ஒரு சின்னஞ்சிறு வீடும்தான், பாக்கு வியாபாரத்தின் வாயிலாகக் கிடைத்து வந்த லாபத்தைக் கொண்டு தான் அவளுடைய வாப்பா அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

வெள்ளைக் குல்லாயையும், செம்மண் புழுதி படிந்து, அழுக்கேறிய வேட்டியையும் அதே நிறத்தில் ஒரு மேல் துண்டையும் தாம் அவர் அணிந்திருப்பார், கறுப்புத் தாடியுடன் கூடிய வெளுப்பான வட்ட முகத்தில், கறுப்பு விழிகள் எப்போதும் முறுவலைத் தவழ விட்டுக்கொண்டிருக்கும். முன்னால் சற்றே நீண்டு வளைந்த, மடித்த கோணிகளைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் நடப்பார். அந்த ஊரிலிருந்த வீடுகளிலிருந்து, பாக்கை வாங்கிக் கோணியில் நிறைத்துக் கட்டித் தானே தலையில் சுமந்தவாறு நகரத்துக்கு நடந்து சென்று விற்று வருவார். பெரும் பேச்சுப் பிரியர், தாம் சென்ற இடங்களில் பார்த்தவை, கேட்டறிந்த விசேஷங்கள், ஆகியவற்றை யெல்லாம் மஜீதிடம் சொல்லுவார்.

"வெளியிலேதான் உண்மையான முஸல்மான்கள் இருக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் மூட நம்பிக்கை கொண்டவர்கள், கடின இதயம் படைத்தவர்கள். நல்லவர்களைப் பார்க்க வேண்டுமானால் வெளியேதான் செல்ல வேண்டும். இங்குள்ளவர்கள், நாம் தான் உண்மையான மூஸல்மான்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அறிவில்லாமைதான் இதற்குக் காரணம். ஆண்டவனின் அருளினால் நீங்களெல்லோரும் படித்துப் பெரியவர்களாகும்போது இந்த நிலைமை மாறிவிடும் " என்று அவர் சொல்லுவார்.

சுஹ்ராவைப் பெரிய பெரிய பரீட்சைகளில் எல்லாம் தேற வைக்க வேண்டும் என்பது, அவர் தமது வாழ்நாளில் கொண்டிருந்த மிகப் பெரும் இலட்சியமாகும்.

"அப்புறம் "-அவர் சொல்வார் : "அவள் பெரிய உத்தியோகம் பார்க்கும் போது, நம்மையெல்லாம் மறந்து விடுவாள்.  இது என் வாப்பா " என்று சொல்லிக் கொள்ளக்கூட, அவளுக்கு வெட்கமாக இருக்கும்."

“அது என்னமோ உண்மை தான், ''மஜீத் உட்புறம் பார்த்துக் கண்களைச் சிமிட்டியவாறே கூறுவான் : " சுஹ்ரா அந்தஸ்து பார்ப்பவள் தான். "

அப்போது சுஹ்ரா கதவின் மறைவில் நின்றுகொண்டு, கண்களை முறைத்து, பற்களை நெறித்து கொஞ்சம் பயங்கர உருவம் காட்டி விட்டு, வெளியில் கேட்காதபடி முணுமுணுப்பாள் : " கொஞ்சம் பெரிய ஒன்று "

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மஜீத் அவளைத் தண்டிப்பான், அது விசேஷ முறையில் இருக்கும், அவன் தன்னிடம் எப்போதும் வைத்திருக்கும் ரப்பர் உண்டி வில்லில், மடியிலிருந்து ஒரு சிறிய உருண்டைக் கல்லை எடுத்து வைத்து, சுஹ்ராவின் கணுக்காலை நோக்கி குறி பார்த்து, மெதுவே இழுத்து விடுவான். அவனுடைய குறி என்றுமே பிசகியது இல்லை, கணுக்காலில் அது பட்டதும்அவன் சொல்லுவான்: "அந்தக் கதவில் ஒட்டிக்கொண்டிருந்த சுண்ணாம்பைத்தான் நான் குறிவைத்து அடித்தேன்."

சுஹ்ரா இடத்தைவிட்டு அசையமாட்டாள். அவளுடைய கண்களிலிருந்து ஓரிரண்டு நீர்த் துளிகள் உருண்டோடும் ; அவ்வளவு தான். இதொன்றையும் அறியாத சுஹ்ராவின் உம்மா, மஜீதிடம் சொல்லுவாள் : "மஜீத், நீ குறிபாத்து குறிபாத்து, எங்க சட்டிப் பானைங்க எல்லாத்தையும் உடைக்கப்போறே. அவ்வளவுதான், உங்களைப்போல எங்ககிட்டே காசு பணம் கூடக் கிடையாதே, வேறே வாங்க ! "

"அப்படியான இனிமேல் நான் குறிபாத்து அடிக்கறதுக்காக இங்கே வரமாட்டேன். நான் இந்தக் கிராமத்தை விட்டே போகப் போறேன்! "

" எங்கே ? " " ஆறுமாசப் பயணத்துக்கும் மேலே தொலைவுள்ள ஒரு இடத்துக்கு . "

" அப்புறம் ''-சுஹ்ரா சொல்லுவாள் : “'சாயாங்காலமா வீட்டுக்குத் திரும்பிடுவாரு. "

இது தான் மஜீதைப்பற்றிச் சுஹ்ரா கொண்டுள்ள கருத்தாகும், ஆனால் சுஹ்ராவைப்பற்றி மஜீத் கொண்டிருந்த கருத்து வேறுபட்ட தாகும் 

"அப்புறம் நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புவேன். அப்ப, சுஹ்ரா ரொம்பப் பெரிய பதவியிலே இருப்பா. என்னே, இந்த ஸ்ரீமதி அப்பப் பாக்கும்போது, பார்த்த மாதிரியாவே காட்டிக்கிடமாட்டா."

மகிழ்ச்சி நிரம்பியதும், தொலைவில் உள்ள துமான எதிர்காலத்தைப் பார்த்துவிட்டது போன்று, லேசான முறுவல் ஒன்று அவளுடைய முகத்தில் தோன்றும்.

நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு அவள் சொல்லுவாள் : " பையன் தான் படிச்சுப் பெரிய உத்தியோகம் பாக்கப்போறாரு, எங்கிட்டத்தான் பணம் காசு ஏதும் கிடையாதே ? "

சுஹ்ராவுடைய வாப்பா சொல்லுவார் : " பணமெல்லாம் படைச் சவன் தருவான். நாம்ப மூணு பேரும் சேர்ந்தே பட்டணத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகலாம் என்ன? நான் தினமும் பாக்கு வித்த பிறவு, பள்ளிக்கூடத்து வாசல்லே வந்து காத்துக்கிட்டு இருப்பேன் ! மூணு பேருமாப் பேசிக்கிட்டே வீட்டுக்கு வரலாம் !ஆனால்... அந்த ஆசை நிறைவேறவில்லை. அவர் மழையில் நனைந்துவிட்டு வந்து, இரண்டு மூன்று நாட்கள் சுரம் என்று படுத்தவர்தாம். பிறகு எழுந்திருக்கவேயில்லை. மூன்றாவது நாள் அந்தி வேளையில் அவர் இறந்து போனார், மரணத்தின் போது மஜீதும் படுக்கையின் அருகே இருந்தான். கெட்டுப்போன விளக்கின் புகை பிடித்த கறுத்த சிம்னிபோல அந்த விழிகள் இரண்டும்,... ஒளியும் உஷ்ணமும் அகன்று அசைவு இல்லாத அந்த உடல் !

அடுத்த நாள் தான் உடலை அடக்கம் செய்தார்கள், அன்று அந்தச் சமயத்தில் சுஹ்ராவை எதிர்பார்த்து வழக்கம் போல மஜீத் மாமரத்தின் கீழே நின்றுகொண்டிருந்தான், அவள் துயரச் சுமையுடன் மெதுவாக மஜீதின் அருகே வந்தாள். மஜீத் அந்த முகத்தை உற்றுப் பார்த்ததும், அவளால் அழுகையை அடக்க இயலாமல் போயிற்று. கேவிக் கேவி அவள் அழுதாள். அவளை என்ன சொல்லித் தேற்றுவது என்றே அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய கண்ணீர்த் துளிகள் அவளுடைய உச்சியிலும், அவளுடைய கண்ணீர் அவனுடைய விரிந்த மார்பிலும் வீழ்ந்து ஓடிக்கொண்டிருந்தன.

அந்த நேரத்தில், அந்தகாரத்தில் மூழ்க்கடிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு மேலே அம்புலியின் கீற்று ஒன்று மின்னிக் கொண்டிருந்தது.

சுஹ்ரா தன்னுடைய வீட்டு வாயிலில் நின்றுகொண்டு, மஜீதை அவளுடைய வாப்பா பட்டணத்திலே பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காகக் கூட்டிக்கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், இருவரின் கைகளிலும் குடை இருந்தது. ஆனால் மஜீதின் குடை புதியது. கிராம வீதி வழியாகச் சென்று தொலைவில் மறையும் வரை, அவள் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்....

அன்று மாலை பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்த மஜீத் அந்தி நேரத்தில் மாமரத்தின் கீழ் ஆஜரானான். புத்தம் புதுப் பாடப்புத்தகம் அவன் கையில் இருந்தது. உத்சாகத்துடன் ஓடிவந்த சுஹ்ராவிடம், அவன் புத்தகத்தைப் பெருமையோடு காட்டினான் :

"படம் நிறைய இருக்குது." அவள் அதை அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டு, பக்கங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். மஜீத், அங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள பட்டணத்தில், தான் கண்ட அற்புதக் காட்சிகளை விவரித்தான் ; இறுதியாகப் பள்ளிக் கூடத்தைப் பற்றிச் சொன்னான் :

" பட்டணத்தின் நடு மையத்திலே வெள்ளையடிச்ச, ஓடு வேய்ந்த ஏழு பெரிய கட்டடம் இருக்குது. இங்கே இருக்கற பள்ளிக் கூடம் போல இல்லெ, பெரிய தோட்டம் !....... செடிகள்ளெ தான் எத்தனை எத்தனை ரகங்க தெரியுமா? நான் அது எல்லாத்தோட விதைங்களையும் கொண்டு வர்றேன் என்ன? அப்புறம் விளையாடறத் துக்குன்னு இருக்கற பெரிய மைதானம். ஓ! இது எல்லாத்தையும் கண்டிப்பாப் பாக்கணுமாக்கும் ! பசங்க எத்தன பேரு தெரியுமா ? ப்பூ! கணக்கே கிடையாது. ஹெட்மாஸ்டர், தங்க ப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி போட்டிருக்கறாரு  தடியாவும் இருக்கறாரு. கையிலே எப்பவுமே பிரம்பை வெச்சிக்கிட்டுத்தான் இருக்காரு. அப்புறம், என் கிளாஸ் டீச்சருக்கு கண்ணு ஒண்ணுதான் இருக்குது! எங்க க்ளாஸிலே மொத்தம் 42 பேர் இருக்கறாங்க ; இதிலே 14 பேர் பெண்ணுங்க.... "

திடுக்கிட்டவாறு மஜீத் தனது பேச்சை இடையில் நிறுத்தினான் ; புத்தகத்தில் சுஹ்ராவின் இரு சொட்டு நீர்த்துளிகள் !

"சுஹ்ரா"- மஜீத் கேட்டான் : கண்ணீருக்கான காரணம் அவனுக்கு விளங்கவில்லை. "ஏன் அழுவறே?'' மஜீத் மீண்டும் மீண்டும் கேட்டான். கடைசியில் அவள் முகத்தை உயர்த்திச் சொன்னாள் "

"எனக்கும் படிக்கணும். "சுஹ்ராவுக்கும் படிக்கணும்!... இதுக்கு என்ன வழி? மஜீத் தீவிரமாகச் சிந்தித்தான், கேவி அழும் ஒலி அவனது இதயத்தில் முழங்கிக் கொண்டே இருந்தது. இறுதியில் வழி கிடைத்தது.

மஜீத் சொன்னான் : "நான் கத்துக்கறதையெல்லாம் தினமும் சுஹ்ராவுக்குச் சொல்லித் தரேன், என்ன ?

தங்களுக்கிடையே இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டாலும், இதைவிடச் சிறந்த மார்க்கம் ஒன்று, மஜீத்துக்குத் தோன்றியது.மஜீதின் வீட்டில்தான் நிரம்பச் சொத்திருக்கிறதே? சுஹ்ராவையும் கூடப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்தால் என்ன? வாப்பாவிடம் சொல்ல பயம், உம்மாவிடம் சொல்வது என்று அவன் முடிவு செய்தான்,

அன்று இரவு உண்ட பிறகு, வாப்பா வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தார், உம்மா பாக்கு வெட்டிக்கொண்டு இருந்தாள்.

திக்திக்கென்று இதயம் அடித்துக்கொள்ள, மஜீத் உம்மாவின் அருகே சென்றான். மெள்ள " உம்மா" என்று அழைக்கவும் செய் தான்.

தாய் அன்போடு கேட்டாள் : " ஏன்டா கண்ணு ? " மஜீத் மெள்ளச் சொன்னான் : " அந்த சுஹ்ராவையும் நாமே படிக்க வச்சா என்ன ?"

சிறிது நேரத்துக்கு யாரும் எதுவுமே பேசவில்லை, வாப்பா, வெற்றிலையை மடித்துச் சுருட்டி வாயில் வைத்து, வெட்டப்பட்ட பாக்குத் துண்டுகளையும் வாயில் போட்டுச் சேர்த்துக் கடித்து மெல்ல ஆரம்பித்தார். பிறகு தங்கம் போல் ஒளி வீசிக் கொண்டிருந்த பித்தளைச் செல்லத்திலிருந்து, வெள்ளி டப்பி ஒன்றை எடுத்துத் திறந்தார்.

காரமான நெடியுடன் கலந்த வாசகர் அந்த இடம் முழுவதும் பரவியது, இடித்துச் சேர்த்த புகையிலையை உள்ளங்கையில் வைத்துக் கூட்டி, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டார் ; எல்லாவற்றையும் ஒன்றாக, வாயின் முன் ஒரு பக்கமாக அடக்கிக் கொண்டார். பிறகு முற்றத்தில் வெகுதூரம் வரை பீச்சியடிக்குமாறு எச்சிலைத் துப்பினார்.

"- இதற்குள்ளே துப்பினால் போதாது ? " உம்மா கோளரம்பியை * வாப்பாவின் அருகே வைத்துவிட்டுச் சொன்னாள் : "அந்தச் செடீங்களோட இலேங்களிலெல்லாம் ரத்தம் மாதிரிப் பொட்டுப் பொட்டா எச்சல் விழுந்திருக்குது பாருங்க ! "

"உக்கும் ! இவ பிறந்த வீட்டுச் செடி " என்று தீவிரமான வெறுப் புடன் சொல்லிக்கொண்டே, வாப்பா ஈஸிச் சேரில் மல்லாந்து கொண்டார்,

பகலைக் காட்டிலும் பிரகாசமான சர ராந்தலின் உக்கிரமமான வெளிச்சத்தில் வாப்பாவுடைய * ஃப்ளானல் " ஷர்ட்டின் தங்கப் பித்தான் கள் மஞ்சள் நிறத்துடன் ஒளி வீசின. கறுத்த புருவங்கள் "எச்சில் துப்புவதற்கான கிண்ணம்,உயர்ந்தன, தவிட்டு நிறமுடைய தோல்போல மினுமினுக்கும் நெற்றி, சுருங்கியது. தங்க ப்ரேம் போட்ட கண்ணாடியின் வட்டமான சில்லினூடே வாப்பா பார்த்தார் ; மஜீதைப் பற்றிய தமது கருத்தை வெளிப்படுத்தினார்,

"அடீ, இவன் எங்கேயாவது போய்த் தொலையட்டும். ஊர் உலகத்தையெல்லாம் கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு, நம்மப் போலொத்த சனங்க எல்லாம், வாழ்க்கையை எப்படி நடத்தறாங்கன்னு பாத்து கத்துக்கிட்டு வரட்டும், புரியுதா ?-இல்லே ! "

" போச்சுடா! ஆரம்பிச்சிட்டீங்களா ? வாயெத் தொறந்தாப் போச்சு ! உடனே போயிடு இங்கிருந்து, போயிடு கிராமத்தைவிட்டு! அரே அல்லா ! நீங்க ஏன் தான் இப்படியெல்லாம் பேசறீங்களோ ? 

" அடி ! இவனுக்கு அறிவுங்கறது துளிக்கூட இல்லே ! " | "' ஆமாமாம், மத்தவங்களுக்கு அது ரொம்ப இருக்குது. எனக்குத் தான் நல்லாத் தெரியுமே !' '* உம்மா குத்திக்காட்டிப் பேசினாள். வாப்பா விடுவாரா?

"அடீ, இவனுக்கு கிடைச்சிருக்கறது, உன் அறிவுதாண்டி ! புரியுதா ?--இல்லே ! "

"ஆமான்னேன், இப்பல்லாம் என் புத்தி ரொம்ப கெட்டுத்தான் போயிடுச்சு. என்ன செய்யறது ? படைச்சவனோட  அளவுப்படி, .! "

"இல்லாட்டி இவனுக்கு இப்படித் தோணுமாடீ ? இல்லே, தெரியாமத்தான் கேக்கறேன், தோணுமா ? என் தம்பிமாருங்களுக்கு, எல்லாமாச் சேந்து மொத்தம் 26 குழந்தைங்க, உன் தம்பிமாருக்கும் தங்கைமாருக்குமாகச் சேர்ந்து மொத்தம் 41 பசங்க, அவங்க எல்லாரும் இங்கே வந்து சோத்தைத் தின்னு கும்மாளமடிக்கறப்பொ , நான் ஏதாவது வாயைத் திறக்கறதுண்டா ?- இல்லே ! "

"ஓ, ஆண்டவனே ! என்ன பேச்செல்லாம் பேசறீங்க ?" : "அடீ, * ஆயிரந்தடவை ஆண்டவனை அழைச்சாலும், உனக்கு அறிவு வருமாடி ?-இல்லே! நான் சொல்லறது உனக்குப் புரியுதா ? - இல்லே ! "

"அப்படியா! கொஞ்சம் எய்திக் காட்டுங்க,"* எழுதப் படிக்கத் தெரியாத உம்மா கூறினாள்,

இதைக் கேட்ட வாப்பா குபீரென உரக்கச் சிரித்தார். உம்மாவுடைய வெள்ளை ரவிக்கை முழுவதும் சிவந்த எச்சில் கறைகள் படிந்தன.

"போடி உள்ளே ! " வாப்பா உத்திரவிட்டார், " போயி உன் ரவிக்கையை மாத்திக்கிட்டு வா. புரியுதாடீ ?- இல்லே !உம்மா உள்ளே போனாள். ரவிக்கை மாற்றிக்கொண்டு திரும்பினாள், வாப்பா தொடர்ந்தார் ; "' எழுத்து : அ2 , உங்க வாப்பா படிச்சிருக் கறாரா ? -இல்லே! அம், உன் சகோதரனுங்க படிச்சிருக்கானுங் களா ?-இல்லே !" 1

உம்மா விடுவாளா ? " ஒஹ்வோன் சனனும், உங்களைச் சே நீத வங்கள்ளாம்தாம் நிறையப் படிச்சுருக்காங்க * *

இதற்கு வெகு நேரம்வரை வாப்பா பதில்  எதும். சொல்லவே இல்லை. வாப்பா, எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வில்கர். வாப்பாவுடையர் அப்பாவும் அம்மாவும் கூட எழுதப் படிக்கக் கற்றவர்கள் அல்லர். இதை அம்மா நினைவுபடுத்தியதால், வாப்பாவுக்குக் கோபம் கோபமாக வந்தது :

" ஜாஸ்தி பேசினே, பாத்துக்க, ஆமாம். "'-வாப்பா கர்ஜித்தார் : * " உன் பல்லைத் தட்டி கையிலே கொடுத்திடுவேன், புரியுதாடி :இல்லே ! **

அதற்கு உம்மா பதில் ஏதேனும் சொன்னால், உடனே பெரிய சண்டை நடந்திருக்கும்! வெற்றிலைச் செல்வத்தைத் தூக்கி முற்றத்தில் வீசுவார். உம்மாவை அடிப்பார் ; மஜிதை அடிப்பார் ; மஜிதின் சகோதரிகளை அடிப்பார். அது மட்டுமல்.. மஜீதின் செடிகள் அனைத்தையும் பிடுங்கி எறிவார்...

அதனால் உம்மா எதுவும் சொல்லவில்லை. ஓடம் ஒன்றும் பேசாதது கண்ட அப்பா கேட்டார் ;

"ம் ஏண்டி வாயடச்சுப் போயிடுச்சோ ? - இல்லே " " உம்மா ரொம்ப சாந்தமாகச் சொன்னாள் : " இதெல்லாம் ஏன் சொல்றீங்க ? மஜீது என்னவோ ஒன்னு கேட்டா 3 -ஆண்டவனோடு அருளாலியும் பெரியவங்க ஆசீர்வாதத்தில்யும் நமக்குத் தான் போதுமான அளவு சொத்து இருக்குதே ? அந்தச் சுஹராவோடு வாப்பாவோ இறந்து போய்ட்டாரு, இப்ப அவங்களுக்கு யாருமே நாதி கிடையாது. நாம் அவளைப் படிக்க வெச்சா என்ன ?"

மஜீத் ஆவலோடு காத்திருந்தான். உம்மாவின் கழுத்திலேயும் காதுகளிலும் தங்க நகைகள் தகதகவென மின்னிக் கொண்டிருந்தன.

"இருக்குதுடீ. நமக்கு வேண்டிய அளவு சொத்து இருக்குது! உன் அப்பன் சம்பாரிச்சுக் கொடுத்ததா? இல்லே உனக்குச் சீதனமாக் கிடைச்சுதா?"

"ஆரம்பிச்சிட்டீங்களா, சீதனம்! பேசறத்தேட்ட பாரு. பின்னே சும்மாவில்லெ கட்டிக்கிட்டு வந்தீங்க ? எண்ணி ஆயிரம் ரூபாயும் கூட கழுத்திலும் காதிலும் கையிலும் காலிலும் அப்புறம் இடுப்பிலும், தோலாக் கணக்கிலே பொன்னு போட்டுக்கிட்டு வந்தது மறந்து போயிடுச்சோ ? **

"வாஹ்வா !! வாப்பா மீசையை இரு பக்கமும் தடவி விட்டவாறு சொன்னார் : ""முள்ளங்கி பத்தை மாதிரி முழுசாக் கொடுத்தாங்க பாரு ஆயிரம் ரூபா! அடீ, உன் எடைக்கு எடை ரூபா கொடுத்தாக் கூட உன்னைப்போல் அறிவு கெட்ட ஒருத்தியே யாராவது கட்டிப்பாங்களா ? -இல்லே ! "

"அப்படியானா, இப்ப போயி அறிவுள்ள ஒருத்தியை கட்டிக்குங்களேன்!"

"கட்டிக்குவேண்டி! கட்டிக்குவேன் ! என்னைப்போல யோக்கியதை உள்ள ஆம்பிளேங்களுக்கு, ஆயிரமல்லடி, பத்தாயிரம் கொடுக்கறதுக்கும் ஆள் உண்டுடீ ? புரியுதா டீ ?-இல்லே :

உம்மா இதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. வேண்டும் என்றால் வாப்பாவுக்கு எத்தனை பேரை வேண்டுமானாலும் கலியாணம் கட்டிக் கொள்ளலாம். உம்மா எதுவும் சொல்லாததனால் வாப்பாவுக்குக் கோபம் வந்தது.

“அவ சொல்லறதைக் கேட்டியா? நமக்கு வேண்டிய அளவு சொத்திருக்குதாம் ! ''--' தம்பிடிக் காசுகூட கிடையாது " என்பது போல வாப்பா பேசினார்.

மஜீதுக்கு உண்மை நிலைமை என்ன என்பது, நன்றாகத் தெரியவே செய்யும். அந்தக் கிராமத்திலேயே அதிகம் சொத்துள்ளவர் அவர் தான். ஒவ்வொரு தடவையும், பறித்துப் போடப்படும் தேங்காய்கள், தோப்பிலே மலைபோலக் குவிந்துகிடக்கும். ஒவ்வொரு முறையும் அறுவடையாகி மிதித்துக்கொண்டு வரப்படும் நெல்லைக் கொட்டி வைக்கப் போதுமான இடம் கிடையாது. இவையெல்லாம் தவிர, மர வியாபாரத்திலும் மிகுந்த லாபம் கிடைத்து வந்தது,

ஒரு முறை மரங்களை விற்று வந்தபோது வாப்பா' /'/HT: 11 கொண்டு வந்தார், அவற்றை வெள்ளைக் காகிதத்தில் குடித்: றுபோகக் குவித்தார். பிறகு சர ராந்தலின் முன்னால் அமர்ந்துகொண்டு வாப்பா ஒவ்வொன்றாக எண்ணி எண்ணி, வரிசையாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தார். பிறகு துணிப் பையில் போட்டுக் கட்டி பெட்டியில் வைத்துப் பூட்டினார். பூட்டுவதற்கு முன்னால் மஜீத், அவற்றை வாரி வாரி இறைத்து விளையாடினான். அவற்றின் தகதகக்கும் பொன் நிறத்தையும் கணீர் ஒலியையும் மஜீதால் வர்ணிக்கவே இயலவில்லை, அவ்வளவு பணம் படைத்த ஒருவருக்கு, ஒரு அப்பாவிப் பெண்ணை படிக்க வைக்ககூடாது? உம்மா சொன்னாள் : " இல்லேன்னு சொல்லாதீங்க! நமக்குத்தான் இருக்குதே? இந்தக் கிராமத்தில் இருக்கறவங்க எல்லாரையும்விட அதிகமான சொத்து நமக்கு இல்லே? அந்தச் சுஹ்ராவைப் படிக்க வைக்கறதுக்கும், மஜீதுக்கு ஆகிற செலவுதானே ஆகும் ? ”

வாப்பாவுக்குப் பற்றிக்கொண்டு வந்தது : "அடீ, உனக்கு அறிவு இல்லேன்னு நான் சொன்னா உனக்கு புரியுதாடீ?-இல்லே! அடீ, என்னோட உன்னோட ரத்தபந்தம் எல்லாமாச் சேர்ந்து, எத்தனன்னு தெரியுமாடீ? -இல்ல! இருபத்தியாறும் நாற்பத்து ஒன்னும் எத்தினின்னு தெரியுமாடி ?-இல்லே ! "

உம்மா கேட்டாள் : "" எத்தினிடா மஜீது?." மஜீதுக்கு வியர்த்துக் கொட்டியது. அவன் காகிதமும் பென்சிலும் எடுக்க ஓடினான். அது கண்ட வாப்பா, பெரும் பரிகாசச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டுச் சொன்னார் : இதோ போறதேடீ உன் புத்தி!"

மஜீத் காகிதமும் பென்சிலும் கொண்டு வந்து 26இன் கீழே 41 என்று எழுதி, பிறகு வியர்த்து விறுவிறுக்கக் கூட்டத்தொடங்கினான்,

அப்போது வாப்பா சிரித்துக்கொண்டே சொன்னார் :

"அடி, அறுபத்தி ஏழு !"

அதற்குள்ளாக மஜீதும் கூட்டி முடித்திருந்தான், "ஆமாம் அறுபத்தியேழு, சரிதான் " மஜீத் ஒப்புக்கொண்டான். வாப்பா கர்ஜித்தார் : " போடா அப்பாலே." அடி, வாப்பா கர்ஜித்தார் : "" அந்தச் சுஹ்ரா நல்ல பொண்ணுதான். கெட்டிக் காரியும்கூட. இருந்தாலும், அவளை நாம் படிக்க வெச்சா அதுக்கும் முன்னாலே இந்த 67 பேரையும் படிக்க வெக்கணம் ! அதுக்கு வேண்டிய பணம் நம்மகிட்டே இருக்கிதாடீ ? **

உம்மா ஒன்றுமே சொல்லவில்லை, ''அவன் இன்னுமா இங்கிருந்து போகலை?''-மஜீதைப் பார்த்து வாப்பா மீண்டும் சொன்னார் : "" போடா இங்கிருந்து .!"

மஜீத் துக்கம் தொண்டையை அடைத்து கொள்ள அங்கிருந்து போனான், அவன், சன்னலருகிலிருந்து இருளினூடே சுஹ்ராவின் வீட்டைப் பார்த்தபோது, கைகளில் முகத்தைத் தாங்கியவாறு மண்ணெண்ணெய் விளக்கின் ஒளியை உற்றுப் பார்த்துக்கொண்டு சுஹ்ரா வராந்தாவில் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.சுஹ்ராவின் வாழ்க்கை எந்தவித இலட்சியமுமின்றி, அப்படியே கழிந்து கொண்டிருந்தது. அவள் அநேகமாக எப்போதுமே மஜிதின் வீட்டிலேயேதான் இருப்பாள். அங்கு எல்லோரும் அவளை நேசித்தார்கள். இருந்தாலும் அவளுடைய முகத்தில் துயரத்தின் சாயல் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. "எதற்கும் விசனப்படக் கூடாது " என மஜீதின் உம்மா அவளிடம் கூறிக்கொண்டே இருப்பாள்,

"எனக்கு விசன மொன்னும் இல்லையே" என்று சுஹ்ரா புன்முறுவலுடன் சொல்லுவாள். ஆயினும் அவளுடைய குரலில் ஒலித்த சோக இழையை, அவளால் மறைக்க முடியவில்லை. மஜிதுக்கும் இது மிகுந்த வேதனையைத் தந்தது. அவன் கூறுவான் :

"சுஹ்ராவின் டாழைய சிரிப்பொலியைக் கேக்க ஆசையா இருக்குது."

அவள் சொல்லுவாள் : "ஏன்? என் சிரிப்பு பழைய சிரிப்பு மாதிரி இல்லே!" * "இல்லே! இந்தச் சிரிப்பிலே கண்ணீர்க்கறை" படி, இருக்குது.'' ** ஓ! அது ஒரு வேளை நான் வளர்ந்து பெரியவளாயிட்டேனில்லே, அதனாலேயிருக்கும் ''-சற்றுப் பொறுத்து, ** நாம் வளராமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ." என்பாள்.

துக்கமும் ஆசாபாசங்களும் வளர்ந்ததனால்தான் தோன்றுகின்றனவா என்ன ?

அவர்கள் குழந்தைகளாக இருந்தார்கள். அவர்கள் அறியாமலேயே அவர்கள் வளர்ந்து விட்டார்கள் ! அழகிய மார்பகங்களும், கறுத்து நீண்ட கூந்தலுமுடைய ஒரு சுந்தர யுவதியாக சுஹரா வளர்ந்து விட்டாள், மஜீத் அரும்பு மீசையுடன் கூடிய இளைஞனானான்.

சுஹ்ராவுக்குத் தனது எதிர்காலம் குறித்து மனதில் பெரும் அச்சம் இருந்து வந்தது. சகோதரிகளும் அவளும் அன்னையும் அனாதைகளாகி விட்டார்கள். தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அந்தக் குடும்பபாரத்தைக் சுமக்க வேண்டியது அவளது பொறுப்பாகும்.

அவளுக்குப் பதினாறே வயசு தான் ஆகியிருந்தது. ஆயினும் அவள் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும். எத்தனை நாட்களுக்குத்தான் மஜீதின் உம்மாவிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்வது? எவ்வளவு காலம்தான் பிறரை அண்டி வாழ்வது? அங்கு மஜீத் மட்டும் இருந்தானானால் அவளுக்கு இவ்வளவு கலக்கம் ஏற்படாது.

மஜீதின் வாப்பாவுடனே, உம்மாவுடனோ, சகோதரிகளுடனோ சுஹ்ராவுக்கு எந்தவிதமான மனத் தாங்கலும் கிடையாது. ஆயினும் மஜீதோடு தனக்குள்ள 'ஏதோ ஒன்று', மற்றவர்களுடன் இல்லை. மஜீத் அவளது முன்னால் இருக்கும் வரை எதுவுமே இல்லை ; இல்லாதபோது தான் எதையோ பறிகொடுத்ததுபோல்... மஜீத் காலையில் பள்ளிக்கூடம் போனால், மாலை திரும்பி வரும்வரை, இனம் புரியாத ஒரு கலக்கம், ஒரு வெறுமை! மஜிதுக்கு உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால், அவளுக்கு ஏனோ உறக்கமே வருவது இல்லை. எப்போதும் மஜிதி . அருகிலேயே இருக்க வேண்டும் ; இரவு பகல் அவனுக்குச் சேவை செய்யவேண்டும் !

அவளுடைய விருப்பத்துக்கு ஆதரவு தருவது போல, ஒரு சம்பவம் நேர்ந்தது. மஜீதின் வலது காலில் 'விஷக்கல்" ஒன்று குத்தி விட்டது. அவன், நகரத்துக்குப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து, அது நான்காவது ஆண்டாகும். ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும்போது காலில் வலி தோன்றியது.

நொண்டி நொண்டி நடந்தபடியே மஜீத் வீடு வந்து சேர்ந்தான். அடுத்த நாள் உள்ளங்காலில் வீக்கம் கண்டிருந்தது. உடம்பு பூராவும் எரிச்சலும் வேதனையுமாக இருந்தது. வலி பொறுக்காமல் மஜீத் கட்டிலில் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு புரண்டு துடித்தான், " கொப்பளம் உடைந்து விட்டால் வேதனை குறைந்து விடும்" என்று எல்லோரும் சொன்னார்கள், ஆனால் யாரேனும் அருகில் சென்றால் மஜீத் வாய்விட்டு அலறித் துடிப்பான் ; அழுவான்.

அவன் கட்டிலின் அருகே, எப்போதும் ஆள் கூட்டம் தான். நோய் பற்றி விசாரிக்க வந்தவர்களுடைய சந்தடி ஏதும் இல்லாத அபூர்வமான சமயங்களில், சுஹ்ரா அறைக்குள் சென்று காலின் அருகே அமர்ந்து வீங்கிப் பழுத்திருக்கும் இடத்தில் ஊதிக் கொண் டிருப்பாள். பழுத்த கொய்யாப்பழம் போல உள்ளங்காலில் மஞ்சளாகக் கொப்புளம் காணப்பட்டது. மஜீதால் அதன் வலியைப் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை.

"சுஹரா நான் செத்துப்பூடுவேன்!! மஜீத் துயரம் மேலிட அழுதான்,இதற்கு என்ன செய்யலாம்? எதுவுமே தோன்றமாட்டேன் என்கிறதே! அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவள் மஜீதின் வலது உள்ளங்காலை தன் கன்னத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டாள். பிறகு உள்ளங்காலில் தனது அதரங்களைப் பதித்து அழுத்தமாக முத்தமிட்டாள்,

முதல் முத்தம் '..... அவள் எழுந்து நின்றாள். மஜீதின் சூடேறிய நெற்றியைத் தடவிக் கொடுத்தவாறே மஜீதின் முகத்தினருகே குனிந்தாள். அவளுடைய தலைமுடி அவிழ்ந்து மஜீதின் மார்பில் வீழ்ந்து பரவியது. அவளுடைய மூச்சுக் காற்று அவனது முகத்தை மெல்லத் தொட்டு வருடியது. அசாதாரணமான ஏதோ ஒரு சக்தி மின்சாரம் பாய்வது போல அவனது நாடி நரம்புகளைத் தட்டி எழுப்பியவாறு ஊடுருவிச் சென்று கொண்டிருந்தது.......

காந்தத்தால் ஈர்க்கப்பட்டது போல மஜீதின் முகம் உயர்ந்தது. கைகள் இரண்டும் அவளுடைய கழுத்தில் மாலையாக கோத்துக் கொண்டன, அவன் அவளைத் தன் மார்போடு ஒருசேர இறுக அணைத்துக் கொண்டான்.

"சுஹ்ரா ! என் உயிரே!" சுஹ்ராவின் சிவந்த அதரங்கள் மஜீதின் உதடுகளில் அழுந்தின. பிறந்த நாள் முதல் உள்ளதுதான் என்றாலும் அன்று, முதன் முதலாக விழித்துக் கொண்ட உணர்ச்சிப் பெருக்குகளின் தூண்டுதலினால் அவர்கள் ஈருடல் ஓருயிராக ஒன்றுபட்டனர்,

ஆயிரமாயிரம் முத்தங்களை அவர்கள் பரஸ்பரம் அர்ப்பணித்துக் கொண்டார்கள். கண்கள் நெற்றி, கன்னங்கள் கழுத்து நெஞ்சு....... உடம்பு முழுவதும் புத்துணர்ச்சி!

" கட்டி உடைஞ்சிடுத்து !” புன்முறுவலுடன் இனிய சுரத்துடன் கூடிய சங்கீதம் போல, சுஹ்ரா இசைத்தாள்.

மஜீத் எழுந்தமர்ந்தான். அற்புதம்!....... கொப்புளம் உடைந்து போயிருந்தது. வெட்கத்தால் கனிந்து போயிருந்த சுஹ்ராவின் அன்பு மிகுந்த முகத்தை, மஜீத் பார்த்தான்,

அந்தப் பவழ அதரங்களின் ருசியும், முதல் முத்தங்களின் போதையும்! சுஹ்ரா முத்தமிட்ட உள்ளங்காலில் முன்னெப்போதுமிராத ஒரு குளுமை.....

சுஹ்ராவால் அன்றிரவு உறங்கவே இயலவில்லை. உடம்பெல்லாம் தகித்தது... அவள் வாடி வதங்கினாள்.சுஹ்ரா மஜீதை நேசித்தாள். மஜீத் சுஹ்ராவை நேசித்தான். இதை இருவருமே அறிந்திருந்தார்கள். அன்பு வலைப் பின்னலின் நடுவே, மஜீத் சிக்கிக் கொண்டிருந்தான், ஆயினும் வாழ்வுப் பிரச்னைகளும், உன்னதமான ஆசை இலட்சியங்களும், அவனது மனதை உறுத்திய வாறு இருந்தன. தன் மானம் உள்ளவன் அவன். தன்னைப் பற்றிப் பெருமதிப்பு அவனுக்கு உண்டு. அவனுடைய வாழ்க்கைப் பாதை, அவன் தந்தையின் வாழ்க்கை முறைக்கு மாறானதாக இருந்தது. குடும்ப விஷயங்களைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது, வாப்பாவோடு ஏதாவது பேசக்கூட மஜீத் பயந்தான்.

வாப்பா, யாருடைய கருத்துக்களையும் மதியாமல் தமது இஷ்டப்படி எதையும் செய்து வந்தார், மஜீதுக்கு ஏதாவது தேவைப்பட்டால் உம்மாவிடம்தான் கேட்டு வாங்கிக் கொள்வான். வாப்பாவின் குரல் கேட்டால் போதும்! மஜீதின் இதயத்தில் குரோதப் புயல் வீசத் துவங்கிவிடும்.

எதனால் இந்த வெறுப்பு? அவனுக்கே காரணம் தெரியவில்லை, அவர் ஒரு நல்ல தந்தையல்லவா? மஜீதுக்குத் தேவையானவற்றை யெல்லாம் செய்து கொடுக்கவில்லையா? பின், அந்த தந்தையுருவில் காணும் குறைதான் என்ன?

தன்னுடைய வாப்பாவைக் காட்டிலும், சுஹ்ராவுடைய வாப்பாவைத்தான் மஜீதால் அதிக அளவு நேசிக்கவும் மதிக்கவும் முடிந்தது. சுஹ்ராவுக்கு. அவளுடைய வாப்பாவிடம் பயமில்லை. தந்தையைப் பற்றிப் பேச்செடுத்தாலே போதும், சுஹ்ராவுடைய கண்கள் குளமாகி விடும். மஜீதின் வாப்பா இறந்தால் அவன் அழுவானா? உம்மா இறக்கும் பட்சத்தில் மஜீத் நிச்சயமாக அழுவான்,

எப்படியாயினும் மஜீதுக்கு அங்கு வசிப்பதில் துளியும் விருப்பமில்லை. பெரும்பாலான நேரத்தை, அவன் வீட்டுக்கு வெளியிலும், தனது சொந்த அறையிலுமாகக் கழித்தான். இப்படியிருக்கையில் மிக முக்கியமான ஒரு சம்பவம் நடந்தது. |

மஜீத் அப்போது நகரப் பள்ளிக்கூடத்தில் இறுதி வகுப்புக்கு ஒரு வகுப்பு கீழே படித்துக் கொண்டிருந்தான். வயலில் அறுவடையும் போரடிப்பதும் தொடங்கியிருந்தன. வெய்யில் தீவிரமாக இருந்த சமயம். போதும் போதாதற்கு, ரம்ஜான் வேறு, அன்ன ஆகாரமில்லாமல் குடிநீர் பருகாமல் உமிழ்நீரைக்கூட விழுங்காமல், பகல் முழுவதும் நோன்பை ஒட்டிப் பட்டினியிருப்பதால், காலணாப் பெறாத விஷயத்துக்கெல்லாம்கூட, வாப்பா வெறி பிடித்து கூச்சலிட்டு வந்தார்,

ஒருநாள் காலை வாப்பா வயல் வெளிக்குப் புறப்படும் முன்பாக மஜீதைக் கூப்பிட்டுச் சொன்னார் : "அறுவடையாகிப் போரடித்து உலர்த்தி வைக்கப்பட்டுள்ள நெல்லை, அக்கரையிலிருந்து, தோணியில் கொண்டு வரவேண்டும். கூட நம்மவர் யாரும் இல்லையென்றால் படகோட்டிகள் வழியிலேயே வாரி விற்று விடுவார்கள்."

|"உனக்குத் தான் விரதமில்லையே ! நீ பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியவுடனே வயலுக்கு வா. என்ன, வர்றியா ?-இல்லே ! "

மஜீத் சொன்னான் : "வந்திடறேன். " ஆனால் மஜீத் போகவில்லை. வழக்கம் போல் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடனே, அவன் விளையாடப் போய்விட்டான், அந்தி வேளை உபவாசம் முடியும் நேரத்தில் வாப்பாவைக் காணாதபோது தான், மஜீதுக்குக் காலையில் வாப்பா சொன்னது நினைவுக்கே வந்தது .........

நன்றாக இருட்டிய பிறகுதான் வாப்பா வந்தார். மஜீதைப் பார்த்தவுடனேயே வாப்பா இரைந்தார். தாங்கமுடியாத சினத்தோடு அவர் மஜீதின் கன்னத்தில் 'பளீர்' என ஓர் அடி வைத்தார். மஜீதின் தலை சுற்றியது ; தலைக்குள்ளே மின்மினுப் பூச்சிகள் பறந்தன.

மீண்டும் மீண்டும் வாப்பா அவனை அடித்தார். "ஒண்ணு , நீ திருந்தணும், இல்லே , சாகணும். புரியுதா ? இல்லே ! "

அடிச்சத்தத்தையும் இரைச்சலையும் கேட்டு, உம்மா உள்ளிருந்து ஓடி வந்தாள். மஜீதைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்,

"போதும் நிறுத்துங்க! புத்தி வர்ற அளவுக்கு அடிச்சாச்சில்லே?" "போடி உள்ளே", வாப்பா கர்ஜித்தார்- "சொன்னாக் கேக்க மாட்டே.” வாப்பா உம்மாவை அடிக்க ஆரம்பித்தார். அழுது கொண்டே ஓடிவந்த சகோதரிகளையும் அடித்தார் ; கதவுகளை அடித்து உடைத்தார் ; பாத்திரங்களை வீசி எறிந்து உடைத்தார்.

இந்த அமர்க்களத்துக்கிடையில் மஜீத் செயலற்று நின்று கொண்டிருந்தான்,

"போடா, போ, ஊரெல்லாம் சுத்தி அலைஞ்சிட்டு கொஞ்சம் கத்துக்கிட்டு வா, புரியுதா ?- இல்லே ! "

வாப்பா இடிமுழக்கம் செய்தவாறே மஜீதின் பிடரியைப் பிடித்து முற்றத்தில் தள்ளினார். மஜீத் கவிழ்ந்து வீழ்ந்தான். உதடுகளில்அடிபட்டு ரத்தம் வழிந்தது. மஜீத் எழுந்து நின்றதும், வாப்பா மீண்டும் கத்தினார் : "போ வெளியே!"

அந்த ஒரு சத்தமே மஜீதை உலகத்தின் கோடி வரை விரட்டுவதற்குப் போதுமானதாக இருந்தது. மஜீத் அங்கிருந்து போனான். வாயிற் படிக்கட்டில் அமர்ந்து கொண்டான். அவனால் அழக்கூட இயலவில்லை. ஒரு துளிக் கண்ணீர் கூட இல்லை. இதயத்தில் உக்கிரமான குரோதப் புயல் பயங்கரமாக வீசிக்கொண்டிருந்தது. நல்ல அறிவுரைகளைச் சொல்லி அமைதிப்படுத்தவோ, ஆறுதல் வார்த்தைகள் கூறவோ யாரும் வரவில்லை !

வீட்டில் மயான அமைதி! சரியான ராந்தல் தீவிரமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது ; ஆனால் சாவு வீடு போல...அங்குச் சலனமில்லை!

விரிந்து பரந்த இந்தப் பூவுலகில் அவன் தன்னந்தனியனானான், வீட்டையும் கிராமத்தையும் உதறிவிட்டுச் செல்லுவது, என்று அவன் தீர்மானித்தான். ஆனால் எங்குப் போவது? கையிலோ காசில்லை ; வெற்று உடம்பு ஒன்று தான் அவனிடமிருப்பதெல்லாம். ஆயினும் அவன் வாழ்ந்து காட்டுவான்! அவன் இளைஞனல்லவா ? போகத் தான் வேண்டும் ! ... அவன் போனான் !

அதற்கு முன்னால் சுஹ்ராவின் வீட்டை நோக்கி அவன் சென்றான். அவர்கள் இருவரும் வழக்கமாக அமரும் மாமரத்தின் கீழ், இருளில் ஏகாந்தமாக அவன் நின்றான்.

தொலைவில் சுஹ்ராவின் இனிய குரல் ஒலி கேட்டது. மண்ணெய்ணெய் விளக்கின் முன்னால் அமர்ந்தவாறு, அவள் "குர்ரானை' ஓதிக் கொண்டிருந்தாள். இடையே, அவள் முகத்தை உயர்த்தி மாமரம் இருந்த திசை நோக்கினாள், எதையோ கூர்ந்து பார்ப்பது போல, அவளது விழிகள் நின்று நிலைத்தன. தங்கம்போலிருந்த அவளது கன்னக்கதுப்புக்கள், மின்னிக் கொண்டிருந்தன. தொட்டால் ரத்தம் கசியுமோ என்றிருந்த அதரங்கள், விரிந்தன. சற்று நேரம் அப்படியே இருந்துவிட்டு அவள் மீண்டும் வாசிப்பதைத் தொடர்ந்தாள்.

"சுஹ்ரா" -மஜீத் கூப்பிட்டான், உதடுகளைத் திறக்காமல், மனதிற்குள்ளாகத்தான், உரக்கக் கூப்பிட வேண்டும் என்று தோன்றியது. இறுதியாக விடைபெற்றுக் கொள்ளவேண்டாமா?... வேண்டாம்! அவன் திரும்பி நடந்தான் ; பைத்தியக்காரனைப் போல கிராமம் பின்னால் சென்றது; பட்டணத்தைக் கடந்து முன்னேறினான், காடும் மலைகளும் நகரங்களும் பின்னால் செல்லச் செல்ல, அவன் முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தான். அவன் ஏழு ஆண்டுகள் .......

இவ்விதம் சுற்றினான். நீண்ட பெரும் ஏழு வருடங்கள்! இதற்கிடையே வீட்டில் என்னென்ன நேர்ந்தன என்றோ, சுஹ்ராவின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்றே எதுவுமே அவனுக்குத் தெரியாது!

அவன் கடிதங்கள் ஏதும் அனுப்பவில்லை, எதையும் தெரிந்து கொள்ளவேண்டாம் என்று அல்ல. போடவில்லை, அவ்வளவுதான். அவனைத் தேடிக்கொண்டு வீட்டிலிருந்து யாரேனும் வந்துவிட்டால் ?

அவன் சுற்றினான், பலவிதமாக நடந்தும், வாகனங்களிலும், பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து கொண்டும், ஆண்டிகளுடன் அவர்களது சகாவாகவும், சன்னியாசிகளின் சீடனாகவும், ஹோட்டல் வேலையாளாகவும், அலுவலகக் குமாஸ்தாவாகவும், தேசியக் கிளர்ச்சிக்காரர்களில் ஒருவனாகவும், குபேரனைப் போன்ற செல்வச் சீமான்களின் விருந்தினனாகவும் இப்படிப் பல்வேறு வேடங்களில் பலவிதமாக அவன் வாழ்க்கையை ஓட்டினான். பல மதங்களைச் சேர்ந்தவர்களுடன் கலந்து உறவாடி னான்...

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏதும் அவனுக்கு, அப்போது இருக்கவில்லை, அதற்கான வாய்ப்புக்கள் எதையும் அவன் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை. பார்ப்பது, அறிவது, கற்பது, இதுவே அவனது இலட்சியங்களாக இருந்தன.

அவன் பார்த்தான் - சின்னஞ்சிறு கிராமங்கள் - மாபெரும் நகரங்கள் ; சிற்றருவிகள்-நீண்ட பெரும் நதிகள் ; சிறு குன்றுகள்பெரும் மலைத் தொடர்கள் ; மண் துகள்கள் நிறைந்த வயல்வெளிகள் -பெரு மணல் பரப்பான பாலைவனங்கள் இப்படி ஆயிரமாயிரம் மைல்களைக் கடந்து அவன் சென்றான். எதைப் பார்ப்பதற்காக? எதனைக் கேட்பதற்காக?

மனிதர்கள் எல்லாவிடங்களிலும் ஒன்றுபோலவேதான் இருக்கிறார்கள். மொழியிலும் நடையுடை பாவனைகளிலும் தான் வேறுபாடு. எல்லோரும் ஆணும் பெண்ணும் தாம் ;... பிறந்து, வளர்ந்து, இணை சேர்ந்து, பெருக்குகிறார்கள். பிறகு மரணம்; அவ்வளவுதான், பிறப்பு இறப்புகளுக்கிடையில் உள்ள தாங்கவொணாத் துயரங்கள், எங்கும் தாம் இருக்கின்றன, இறப்போடு இவை எல்லாம் தீர்ந்து விடுமோ? இப்படி ஒரு தெளிந்த அறிவோடு, அவன் ஊர் திரும் பினான், எதற்கு ? சுஹராவை மணந்து கொண்டு, மீதிக்காலத்தை எங்காவது அமைதியாகக் கழிக்கவேண்டும் என்றுதான்,

ஆனால் அவனை நிலைகுலைந்து போகும்படிச் செய்யும் மாற்றங்கள் தாம், அவனை எதிர்கொண்டழைத்தன. வியாபாரத்தில் அடிக்கடிநேர்ந்த நஷ்டங்களினாலோ அல்லது கிராமத்தில் ஒரு பாலம் கட்டுவதற்கு ஒரு பெரும் தொகை கோரி, சர்க்காருக்கு விடுக்கும் மனு என்று கூறிய ஒருவரின் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ அவர்களுடைய சொத்தெல்லாம் கடனில் மூழ்கியிருந்தது. வீடும்கூட அடமானத்தில் இருந்தது. தாய் தந்தையர் இருவருமே நன்கு மூப்படைந்து போயிருந்தார்கள். சகோதரிகள் இருவரும் வளர்ந்து மணப் பருவத்தையும் கடந்து விட்டிருந்தனர். எல்லாவற்றுக்கும் மேல், சுஹ்ரா வுக்குக் கல்யாணமாகியிருந்தது. மஜீத் கிராமம் வந்து சேர்வதற்கு ஓராண்டு முன்புதான், இது நடந்து முடிந்திருந்தது. பட்டணத்தில் எங்கேயோ ஓரிடத்தில் உள்ள ஒரு கசாப்புக் கடைக்காரன் தான் அவளை மணந்திருக்கிறான்,

சுஹ்ரா மறு பக்காகக் காத்திருக்கவில்லை. "வாழ்க்கை சுயநலம் மிகுந்தது போலும் ' என்ற முடிவுக்கே மஜீத் வந்தான். எப்படியிருந்தாலும், கிராம மக்கள் எல்லோரும் மஜீதைக் காண வந்தார்கள். அவனது பெட்டிகளையும் படுக்கை முதலானவற்றையும் நாலைந்து ஆட்கள் சுமந்து சென்றதைப் பார்த்த கிராமத்தார் "மஜீதிடம் நிறையப் பணம் இருக்கிறது" என்று நினைத்தார்கள். ஆனால் அவனிடம் இருந்ததோ, நிறையப் புத்தகங்களும், ஒரு 10 ரூபாய் நோட்டும்தான். திரும்பி வந்த தொடக்கத்தில், மஜிதுக்கு அளவுக்கதிகமான உபசரிப்பு கிட்டி வந்தது. கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று முறை விருந்தாளியாகச் செல்லும் கட்டாயம் அவனுக்கு ஏற்பட்டது. வயிறு நிரம்ப உண்டாலும் கூட, மேலும் மேலும் வற்புறுத்தி அவனை உண்ணுமாறு உபசரித்தார்கள் . ஆனால் ஒரே மாதத்துக்குள் உண்மை வெட்ட, வெளிச்சமாகி விட்டது, தரித்திரத்தில் மூழ்கியுள்ள அந்தக் குடும்பத்தின் 'ஒரு தரித்திர அங்கம்தான் ' மஜீதும் ! வெறும் பாப்பர் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டுவிட்டார்கள்,

"அவன் ஏன் தான் வந்தானோ?"- இதுதான் கிராமத்தாரின் கேள்வி. " ஏழு ஆண்டு கழிச்சி வந்திருக்கறான், வெறுங் கையோட!"

மஜீதை வெறுப்போடு பார்ப்பதும், அவன் காதுபட அவனைக் கேலி செய்வதும், கிராமத்தில் வரவர சகஜமாகிவிட்டன. இதனால், அவன் வீட்டைவிட்டு வெளியே போவதையே நிறுத்திக் கொண்டு விட்டான், வீட்டில், தன் பழைய அறையிலேயே எப்போதும் இருந்து வரலானான்.

அந்த அறையில்தான், மஜீத் சம்பந்தப்பட்ட எத்தனை எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன! படித்துக் கொண்டிருந்தபோது இந்த அறையைத்தான் அவன் உபயோகித்து வந்தான். மஜீதின் சுன்னத் சடங்கு' நடந்ததும் இங்குதான். விஷக்கல் குத்திப் படுத்திருந்ததும், இந்த அறையில் தான், இதில் பழைய சாய்வு நாற்காலி ஒன்றைப் போட்டுக்கொண்டு, வெளியே பார்த்தபடி மஜீத் படுத்துக் கொண்டிருப்பான், வீட்டில் சரியாகச் சாப்பிடக்கூட எதுவும் கிடையாது. மஜீதின் சகோதரிகள், தேங்காய் நாரை அடித்துப் பிரித்துத் திரிக்கும் கயிறுகளை வாப்பா அங்காடியில் கொண்டுபோய் விற்றுவிட்டு, ஏதாவது வாங்கி வருவார். அதிலிருந்து பெரும் பங்கை, உம்மா மஜீதுக்கே கொடுப்பாள். பிறகு கருணையோடு சொல்லுவாள்! "வந்ததுக்கு இப்ப என் மவன் இளைச்சு போய்ட்டானே ! உன்னை எப்படி வளர்த்தோம் தெரியுமா ? உனக்கு நிறம் கொஞ்சம் மட்டுங்கிறதுக்காக பாலில், தங்கத்தை அரைத்துச் சேர்த்து உனக்கு நிறைய குடுப்போம் என் ராசா."

கண் கொட்டாமல் உற்றுப் பார்த்தவாறு பிரமை பிடித்ததுபோல மஜீத் அமர்ந்து கொண்டிருப்பான், என்ன செய்வது? கையில் பணமில்லை ; கிடைக்க வழியுமில்லை; உதவி செய்ய ஆளும் இல்லை, மஜீத் நாளுக்கு நாள் சோர்வடைந்து வந்தான், மனத்தைத் தீவிரமாக ஈடுபடுத்த வேறு வேலை ஏதும் இல்லையாதலால் அவன் மறுபடியும் ஒரு தோட்டம் போட்டான் ; ஆனால் இம்முறை தனியாக.

முற்றத்தின் முன்னால் சதுரமாக வெள்ளை மணலைப் பரப்பிவிட்டு, நான்கு எல்லைகளிலும் செடிகளை நட்டு வளர்த்தான், சுஹ்ரா கையினால் நட்டு வளர்க்கப்பட்ட செம்பருத்திதான், ஒரு பக்கத்து எல்லையாக இருந்தது. அது இப்போது ஒரு பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அவன் வந்தபோது அதில் பூக்கள் நிறைந்திருந்தன. பச்சைப் பசேலென்ற இலைகளுடன் கூடிய காடுகளில் இரத்தத் துளிகள் தெறித்து விழுந்திருப்பதுபோல, கருஞ் சிவப்பு வண்ணப் பூக்கள் அதில் ஒரு போதும்' ஓய்ந்துபோவதே இல்லை. அதனடியில் ஈஸிச் சேரைப் போட்டுக்கொண்டு, அதில் சாய்ந்தபடி படித்துக் கொண்டிருப்பான் அவன். ஆனால் அவன் கண்கள் தாம் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்! புத்தகத்தைப் பிரித்து மடியில் வைத்தபடி அப்படியே இருப்பான் அவன்!

"என் ராசா, உனக்கு என்னடா கண்ணு கவலை?" என்று உம்மா துருவித் துருவிக் கேட்பாள்.

அவன் மெதுவாகச் சொல்லுவான் : ""ஒண்ணுமில்லே. ""உம்மாவும் சிந்தனை வயப்பட்டுச் சொல்லுவாள்: "உம்! எல்லாம் படைத்தவனின் செயல்."

மஜீதை உற்சாகப்படுத்துவதற்காக “அவனுடைய பிரியமான செடிகளுக்குத் தண்ணீர் கொட்டுவதில் ' அவனுடைய சகோதரிகள் தங்களுக்கிடையே போட்டி போடுவார்கள். இதனால் அவர்களுக்கிடையே சண்டை வருவதும் உண்டு. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்து மஜீதின் அருகே வந்து கூறுவார்கள்: "இக்காக்கா, செடிகளுக்கெல்லாம் நான்தான் தண்ணி ஊத்தினேனாக்கும் !" 

மஜீத் சமாதானப்படுத்துவான் : " செடியிலே பூக்கற பூக்களை, நீங்க ரெண்டு பேருமே ஆளுக்குப் பாதியா எடுத்துக்குங்க ! "

“அவுங்க அம்மா வூட்டுச் செடி!'' -வாப்பா சொல்லுவார். ""என் சொத்தெல்லாம் கரைச்சி அவனை நான் படிக்க வெச்சேன் ; வெளியே போயி சம்பாரிச்சுக்கிட்டு வந்திருக்கறான் பையன் ! இப்ப, இந்த வயசு காலத்திலே நான் சொகம்மா இருக்கறதுக்காக இந்தத் தோட்டம் போட்டிருக்கிறான்! -இதெல்லாத்தையும் நான் ஒரு நாள் வெட்டி பிடுங்கியெறியப் போறேன்! நான் சொல்றது காதிலே விழுந்து தாடி ? -இல்லே!"

உம்மா சொல்லுவாள் : "எப்படியிருந்தாலும் இந்த முற்றமெல்லாம் எவ்வளவு சுத்தமாயிடுச்சி பாத்தீங்களா ? "

வாப்பா, உலர்ந்த வெற்றிலையில் காய்ந்த சுண்ணாம்பை உதிர்த்துப் போட்டவாறே சொல்லுவார்! "நான் சொல்றது கேக்குதாடி? இல்லே !"

“என்ன வேணும்! ”  எங்கிருந்தாவது கொஞ்சம் புகையிலைக் காம்பு வாங்கிக்கிட்டு வா. 

உம்மா ஒரு பழம்துணியைத் தலையில் முக்காடாகப் போட்டுக் கொண்டு, அழுக்கேறிக் கிழிந்த ரவிக்கையுடன் அண்டை அயல் வீடுகளுக்குப் புகையிலைக் காம்பு வாங்கிவரப் போவாள்.

நினைவு அலைகள், மஜீதின் இதய வெளியினூடே தாவிச்சென்று கொண்டிருக்கும்,

வறுமை ஒரு கொடிய நோய், அது உடலையும் மனதையும் ஆன்மாவையும்கூட நாசம் செய்துவிடுகிறது. இப்படி உடலும் மனமும் ஆன்மாவும் நாசமாகி அழிந்துபோன இலட்சோப லட்சம் ஆண், பெண்களை, பல்வேறு சாதிகளிலும் அவன் கண்டிருக்கிறான்.
அந்தக் காட்சிகளெல்லாம் அவனது மனதை நிறைத்துவிடும். உருக்குலைந்த அருவருப்பான இந்தக் காட்சிகள் மட்டும், அவனது நினைவில் பசுமையாக இருப்பது ஏன்?

வாழ்வு ஒளிமயமான அழகுடையதுதான் -ஆயினும் அதன் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சேற்றையும் சக்தியையும் அவனால் மறக்க முடியாமலே இருக்கிறது. வாழ்வின் சீர்கேடுகள்! வாழ்வின் இல்லாமைக் கொடுமைகள்.!

உண்ண உணவில்லாதோர், உடுக்க உடையில்லாதோர், இருக்க இடமில்லாதவர், உடல் ஊனமுற்றவர்-இப்படி நிராசையால் வாடுவோரின் முடிவில்லாத நீண்ட பெரும் ஊர்வலம்... இரவும் பகலும் அவனது இதயத்தினூடே சென்று கொண்டேயிருக்கும். இவற்றையெல்லாம் மறக்கவே அவன் விரும்பினான்-ஆனால், மறப்பது எப்படி? மண்டைக்குள் எப்போதும் ஒரு எரிச்சல் ; இதயத்தில் தாங்க முடியாத ஒரு சுமை.

சுஹராவைப் பற்றி நினைக்கையில் அவனது கண்களிலிருந்து நீர் பெருகி ஓடும். அவளைப் பார்க்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அவள் வேறொருவனின் மனைவியல்லவா? ஆயினும் தொலைவிலிருந்தாவது அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆவல். அவளைப் பழிப்பதற்காக அல்ல ; சொல்லம்புகளால் அவளைத் துளைப்பதற்காகவும் அல்ல. வெறுமே அவளைக் காண்பதற்காகத் தான்! அந்த இனிய குரலைக் கேட்பதற்காகத்தான்!

அவள் மஜீதை மறந்துவிட்டாள் ! ஆனால் மஜீதால் அவளை மறக்க இயலுமா? நிறைய மாம்பழங்களைத் தந்து அவர்களுக்கு ஆசி வழங்கிய அந்த மாமரத்தின் அடியில், இரவின் ஏகாந்தத்தில் மஜீத் சென்று அமர்ந்திருப்பான். யாரையும் எதிர்பார்த்து அல்ல. எதிர் பார்க்கத்தான் யாரிருக்கிறார்கள் அவனுக்கு !

நான் திரும்பி வந்திருப்பது பற்றிக் கேள்வியுற்றால் சுஹ்ரா ஒரு முறை... ஒரு முறையும் வரவே மாட்டாள் என்று மஜீத் நினைத்தான்.சுஹ்ரா வந்தாள்; மஜீத் திரும்பி வந்திருக்கிறான் என்பதைக் கேள்வி யுற்றதும் அவள் பிரேம பாசம் பொங்கிப் பெருக, மூச்சு இரைக்க ஓடி வந்தாள், ஆனால் அவளைக் காண மஜீதுக்கு விருப்பமில்லை. அவன் மனம் உடைந்து, நிலைகுலைந்து, ஆடிப்போயிருந்தான், அவனால் அசையவும் முடியாமலிருந்தது. அவ்வளவு தூரம் சோர்ந்து தளர்ந்து போயிருந்தான் அவன்,

"எங்கே ?'' என்ற சுஹராவின் கேள்வியும் "தோட்டத்தில்" என்ற உம்மாவின் பதிலும் மஜீதின் காதில் விழுந்தன. அவனுடைய இதயம் துரிதகதியில் அடித்துக்கொண்டிருந்தது. அவன் துளிக்கூட அசையாமல் ஈஸிச்சேரில் படுத்துக்கொண்டிருந்தான், தோட்டம் அந்தி வெய்யிலில் மூழ்கியவாறு இருந்தது. வண்டுகள் ரீங்காரம் செய்தபடி பூக்களுக்கிடையே தாவிப்பறந்து கொண்டிருந்தன, மணத்தைப் பரப்பியவாறு வந்து கொண்டிருந்த இளம் காற்று, இலைகளை லேசாக அசைத்துக்கொண்டிருந்தது. மஜீத் மாலை மஞ்சள் வெய்யிலில் மூழ்கி சிலைபோலக் கிடந்தான். சுஹராவின் காலடி மிகமிக அருகே வந்தது!

அவளது துயரம் நிரம்பிய குரல் பின்னால் கேட்டது : ""ஓ! புதுத் தோட்டம்!'' மஜீதின் இதயத்தில் தாங்கவொண்ணாத வலி, வேதனை. வெறும் சாதாரண வலி அல்ல, கூர்மையான முட்களைக் கொண்டு குத்திக் கிளறியது போன்று இதயத்தில் விண்விண் ணென்று தெறிக்கும் வலி, இதயம் வெடித்து அழுகை குமுறி வர ஆயத்தமாக இருப்பது போன்று நெஞ்சடைக்கச் சுஹ்ரா கேட்டாள் :

"என்னை நினைவு இருக்குதா?" மஜீதின் கண்கள் குளமாயின,

அவள் மீண்டும் கேட்டாள் : " எங்கிட்டெ கோபம் போல யிருக்குது ?"

மஜீத் திரும்பிப் பார்த்தான். அவனது இதயம் சுட்டது. அவனால் எதுவுமே பேச இயலவில்லை. சுஹ்ரா முழுக்க முழுக்க மாறிப் போயிருந்தாள் ... கன்னங்கள் ஒட்டி உலர்ந்து போயிருந்தன. கை விரல் கணுக்கள் வீங்கித் தெறித்துக்கொண்டிருந்தன, நகங்கள் தேய்ந்து போயிருந்தன. மொத்தத்தில் சோகை பிடித்ததுபோல, வெளுத்துப் போயிருந்தாள், காதுகளில் கறுப்பு நூல்கள் தலைமுடியினால் மறைக்கப்பட்டிருந்தன. இப்படி...பரஸ்பரம் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். வெகு நேரத்துக்கு அவர்களால் எதுவும் பேசவே இயலவில்லை,

மெள்ள மெள்ள சூரியன் மலை வாயிலில் வீழ்ந்தான். வேறுபாடுகளே இல்லாமல் செய்தபடி இருள் எங்கும் பரவியது, அவர்கள் எதையுமே அறிந்தவர்கள் அல்லர், கிராமத்தை அணைத்தவாறு செல்லும் நதியின் இரு பிரிவுகளையும், வெண்மைக் கிரணங்களில் மூழ்க்கடித்த வண்ணம் பூரண சந்திரன் குன்றின் உச்சியிலிருந்து எட்டிப் பார்த்தான்.

கிராமத்தின் மோனத்தைக் குலைத்தவாறு தொலைவில் எங்கோ ஓரிடத்திலிருந்து ஒரு காதல் கீதம் காற்றிலே மிதந்து வந்தது, யாரோ ஒரு காதலன், தனது காதலியை நினைந்து சோக இழையோடு இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தான் :

தாமரைப் பூங்காவிலே தனியாக வசிப்பவளே! பஞ்சவர்ணக் கிளி போல பசுமை நிறம் படைத்தவளே! பூமுகம் பார்த்த பின்னே பூரிக்கும் கால மெதுவோ காமினி அருகு வந்தாயோ காலக் கேடும் தடுத்ததுவோ தாமரைப் பூங்காவிலே தனியாக வசிப்பவளே ! இப்படி மீண்டும் மீண்டும் அந்த முகம் தெரியாப் பாடகன் உருப் போட்டுக்கொண்டிருந்தான்.

இறுதியில் மஜீத் முணுமுணுத்தான் : "சுஹ்ரா!!" இறந்த காலத்தின் இதயத்திலிருந்து வருவதுபோல் அந்த அழைப்புக் கேட்டது, "ஓ!" மஜீத் கேட்டான் : "உடம்புக்கு என்ன ? "

அவள் : "ஒண்ணுமில்லே,” " பின்னே ஏன் இவ்வளவு தூரம் பலஹீனமாயிருக்கறே?'' சுஹரா அதற்குப் பதிலளிக்கவில்லை. நீண்ட பெருமூச்சுடன் அவள் சொன்னாள் :

"நீங்க வந்திருக்கற விவரம் எனக்கு முந்தா நேத்து தான் தெரிஞ்சிது.”

சற்றே சினம் பொங்க மஜீத் கேட்டான் :''நான் திரும்பி வரவே மாட்டேன்னுதானே நீ நினைச்சே?'' "எல்லாரும் அப்படித்தான் நினைச்சாங்க. நான்..." "உம்? *!" எனக்கு நிச்சயமாகத் தெரியும், நீங்க வருவீங்கன்னு." “அப்புறம் ஏன்...?." "எல்லாருமா முடிவு பண்ணிட்டாங்க. என்னோட சம்மதத்தை யாருமே கேக்கலே. உம்மா வயித்து நெருப்பைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. என் வயசுப் பொண்ணுங்களுக்கெல்லாம் விவாகமாகி, எத்தினியோ வருஷங்க ஆயிட்டிருந்தது. பொன்னும் வர தட்சிணையும் இல்லாமே என்னை யாரும்..."

"பொன்னும் வரதட்சிணையும் வாங்கிக்காம. சுஹ்ராவைக் கலியாணம் செய்துக்கத் தயாரா ஒரு ஆம்பிளெ கூட இல்லேன்னு சுஹ்ரா நம்பினது எதனாலே ?"+

"எனக்கு நம்பிக்கை இல்லாம் இல்லை, நான் ஒரு வினாடிகூட மறக்காமத்தான் இருந்தேன். ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு பகலும், நான் நினைச்சு நினைச்சு அழுவேன். எந்த விதமான ஆபத்தோ, நோய் நொடியோ வராம இருக்கவேண்டி நான் ஆண்டவரை தினம் தினம் வேண்டிக்கிட்டே இருப்பேன்."*

"நான் சுஹ்ராவை மறந்தே போயிட்டேன்னுதானே சுஹ்ரா நினைச்சே ?"

"அப்படின்னு நான் நினைக்கவே இல்லை. ஆனால் நீங்க ஏன் கடிதமே போடாம இருந்தீங்க ? "

"போடலை. அவ்வளவுதான். பல தடவை எழுதினேன், ஆனா அனுப்பல், "

“நான் தினமும் கடிதத்தை எதிர்பார்த்துக்கிட்டே இருப்பேன், இன்னிக்கு வரும். நாளைக்கு வரும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்."

"பின்னே எப்படி இந்தக் கலியாணம் நடந்திச்சி?"  “அதான் முதல்லியே சொன்னேனே! என்னை யாருமே கேக்கலை, அதோடகூட எத்தினி நாளு தான் வீட்டுக்குப் பாரமா இருந்துகிட்டு இருக்கறது? நான் பொண்ணு இல்லே ?"

"...உம்...? " கடைசியிலே வீட்டையும் தோப்பையும் அடமானம் வெச்சு, பொன்னு, பணம் இதெல்லாம் கொடுத்து, கலியாணத்தை முடிச்சாங்க."

"ஆனா நீ ஏன் இப்படித் துரும்பா இருக்கறே?" சுஹ்ரா ஒன்றும் பேசவில்லை.

"சொல்லு சுஹரா? ஏன் இவ்வளவு மோசமா இளைச்சுப் போயிட்டே ?,"

" கவலையினாலே." "என்ன கவலை ?" " ...உம்,... ! " " சுஹ்ரா ?" "ஓ!  " சொல்லு." சுஹ்ரா குமுறிக் குமுறி அழுதாள். பிறகு அவள் மெள்ள மெள்ளத் தன் கணவனைப் பற்றிக் கூறினாள்,

கா ரொம்ப முன் கோபமுள்ளவரு, அவருக்கு வேறொரு மனைவியும், ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க, நான் பிறந்த வீட்டுக்குப் போயி கணக்குப் பார்த்து என் பங்கு சொத்தைக் கண்டிப்பா வாங்கிட்டு வரணும்னு, அவரு சொல்லுவாரு. எனக்குத் தங்கைமார் இல்லையா? நான் என்ன செய்வேன்? நான் அதுக்குச் சம்மதிக்கலேன்னா, என்னை அடி அடின்னு அடிப்பாரு. ஒரு தடவை என் வயத்திலேயே ஓங்கி உதைச்சாரு. நான் கவுந்து விழுந்தேன் . அன்னிக்கு என் பல் உடைஞ்சு போயிடுச்சு, இதப் பாருங்க..."

அவள் வாயைத் திறந்து காட்டினாள். அந்த வெண்மையான வரிசைகளிடையில் ஒரு காலி இடம்,

"சுஹரா !" “ஓ!" "அப்புறம் ?" "நான் அங்கே போனப்பறம், இது வரை வயிறு நிறையச் சாப்பிட்டதே கிடையாது. ஒரு நிமிடமாவது மன நிம்மதிங்கறதே கிடையாது. நான் ஒரு மனைவியே இல்லே, வெறும் வேலைக்காரி, தேங்காய் நாரை அடித்துக் கொடுத்துட்டு கூலி வாங்கி வந்து, அவரு கிட்ட கொடுக்கணும். பணம் கொஞ்சம் கொரஞ்சாலும் போச்சு ; என்னை அடிக்க ஆரம்பிச்சிடுவாரு. நான் வீட்டுக்கு விலக்காகி இருந்தப்ப..."

"... உம்..." "சேர்ந்தாப்போல நாலு நாளு " "... உம்..." . "பட்டினி கிடக்கவேண்டியிருந்திச்சி." இப்படியாகச் சுஹ்ரா கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லத் தொடங் கினாள் . சொல்வதற்கு அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன.அவள் மனதில் நிறைய ரகசியங்கள் புதைந்து கிடந்தன. அவள் மனதில் செத்துப் போகணும்னு எண்ணம் பலமுறை ஏற்பட்ட துண்டு. ஆனால் ஒரே ஒரு ஆசை மட்டும்தான் அவளுக்கு இருந்தது ; ஒரு தடவை, ஒரே ஒரு முறை வந்து பாத்துட்டு, அப்பாலே  சாகணும் "

"சாவைப் பத்தியே சிந்திச்சுட்டு மாசை வீணுப் புண்ணாக்கிக்காதே. வாழ்க்கை முடிஞ்சு போகலை ; இன்னமும் இருக்குது. ஒளிமயமான எதிர்காலம் உண்டுன்னு நம்பு"  சுஹ்ராவிடம் சொன்னபோது, நீண்ட பெருமூச்சு ஒன்றைத்தான் அவள்  பதிலாக அளித்தாள்.

அவள் நாற்காலியின் முன்னால் அவனுடைய பாதங்களை அடுத்து அமர்ந்திருந்தாள். இவ்வாறு வெகுநேரம் அவர்கள் இருவரும், மெளனமாக, சந்திர ஒளியில் மூழ்கிக்கொண்டிருக்கும் உலகைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக மஜீது சொன்னன் :

"சுஹ்ரா, போய்ச் சாப்பிடு. மன அமைதியோடு தூங்கு. நாளை பார்க்கலாம். "

" என்னால் ஒண்ணுமே முடியவில்லை "'-சுஹ்ரா எழுந்து கொண்டாள். .

" அவ்வளவு தளர்ச்சியா இருக்குதா ? " ' --மஜீதும் எழுந்து கொண்டான்,

"மனோ வியாதி. " " வீணா அலட்டிக்காதே, போய் சொகம்மா தூங்கு.. "நாளை எங்காவது போவீங்களா?!" " இல்லை , " " நாளைக் காலைலே வறேன் என்ன ! " சுஹ்ரா போகத் தொடங்கினாள். மஜீத் சொன்னான்: "வா. " சுஹ்ரா நிலவின் ஒளியில் மூழ்கியிருந்த தென்னை மரங்களினூடே செல்வதைப் பார்த்துக் கொண்டே, மஜீத் ஈஸிச்சேரில் சாய்ந்து கொண்டான், கையில் மண்ணெண்ணெய் விளக்குடன் உம்மா வந்தாள். மஜீத் மயங்கிச் சாய்ந்து கொண்டிருப்பனதக் கண்ட அந்த அன்புத்தாய் கேட்டாள் :

"ஏன் மகனே, நீ இங்கே தனியா இருக்கறே ?" "ஒண்ணுமில்லே. " ""மகனே, அந்தச் சுஹராவோட கோலத்தைப் பாத்தியா ? கிளி போலப் இருந்த பொண்ணு எப்படியாயிடுச்சு, எல்லாம் ஆண்டவன் செயல்."

மஜீதுக்குக் கோபமும் துக்கமும் ஒருசேர வந்தன : " அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது எதனாலே? "

"மகனே, நீ ஏதாவது சாப்பிட்டுட்டுப் போயி படுத்துக்க, எதுக்காகவும் விசனப்படாதே. படைச்சவன் எல்லாத்தையும் சரி பண்ணுவான், "

மஜீத் அன்றிரவு உறங்கவில்லை. சுஹ்ராவும் உறங்கவில்லை. தோப்புக்களும் கால்வாயும் அவர்களுக்கிடையே இருந்தன. இரு பெரும் சுவர்களும் அவர்களது மத்தியில் இருந்தன . இருந்தாலும் அவர்கள் தூங்கவில்லை. வருங்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தார்கள், வருங்காலம்... !

வெகு சீக்கிரத்திலேயே சுஹ்ராவிடம் மாறுதல்கள் தோன்ற ஆரம்பித்தன , உள்ளத்தில் ஒரு புதிய ஒளி. முகத்தில் ரத்த ஓட்டமும் கண்களில் தீட்சண்யமும் ஏற்பட்டன. தலையில் வகிடு எடுத்து சுருண்ட கரும் கூந்தலை அழகாகச் சீவி, காதுகளை மூடிக் கொண்டை போட்டுக் கொள்வாள். அண்டை அயல் வீட்டுப் பெண்கள் வியப் படைவார்கள்.

" சுஹ்ரா வந்துக்கு இப்ப ரொம்பத் தேறிட்டா. இப்ப அவ திரும்பிப் போனா அவ புருசனுக்கே அவளை அடையாளம் தெரியாது!" கணவன் !

அவள் எப்போதும் மஜீதின் வீட்டிலேயேதான் இருந்து வந்தாள். செடிகளுக்குத் தண்ணீர் விடும் விஷயத்தில் அவளும் அக்கறை காட்டி வந்தாள், மஜீதின் சகோதரிகள் சொல்லுவார்கள் : ""இந்தச் செடிங்களை யெல்லாம் தண்ணீர்விட்டு வளர்த்தது நாங்கதான் தெரியுமா ?"

சுஹ்ரா அந்தச் செம்பருத்தி மரத்தை சுட்டிக்காட்டிக் கேட்பாள் : "இது?"

""இது முதல்லேருந்தே இங்கே இருக்குதே!" சுஹ்ரா அதை ஆட்சேபிக்கமாட்டாள்! முதல்லேருந்தே எல்லாம் அங்கு இருக்கத்தானே செய்தன.

ஒரு நாள் மஜீத் அவளிடம் கேட்டான் : "சுஹ்ரா! திரும்பி எப்ப போகப்போறே?"

அவளுக்கு விளங்கவில்லை, அவள் வியப்போடு கேட்டாள் : " எங்கே?" "புருஷன் வீட்டுக்கு."  "ஓ!"

அவளது முகம் சுருங்கியது. "அவரு என்னைக் கலியாணம் செய்துக்கிடலியே ?... ":

"பின்னே ?! "நான் எங்கூட கொண்டுபோன தங்க நகைங்களையும் சொத்தில் எனக்குள்ள பங்கையும் தான், இதிலே, தங்க நகைங்களையெல்லாம் அவரு வித்து சாப்பிட்டுட்டாரு. இனிமே பாக்கியிருக்கறது என் பங்கு சொத்து தான். ஆனால், அது கிடைக்க வழியில்லேன்னு அவருக்கே நல்லாத் தெரியும்,". சிறிது பொறுத்து, அவள் மிகவும் தாழ்ந்த குரலில் கூறினாள் : "ஆனா இந்த கிராமத்து சனங்களுக்கு என்னெப் பார்க்கப் பிடிக்கலேன்னா நான் போயிடறேன்!''

" சனங்களுக்கிடையே அப்படி ஏதாவது கருத்து நிலவுதா என்ன ? "

"நிலவுது போலத்தான் தோணுது." அவள் அழகிய ஒரு ரோஜா மலரைப் பறித்து முகர்ந்துவிட்டு தலையில் செருகிக் கொண்டாள்,

மஜீத் சொன்னான் : " அந்தச் செம்பருத்திப் பூவாக இருந்தால் அதிகம் பொருத்தமாக இருந்திருக்கும்." இதைக் கேட்டுச் சுஹ்ரா சிரித்தாள். ஆயினும் அவளுடைய முகத்தில் துயரத்தின் சாயை படர்ந்தது. சற்று நேரம் கழித்து அவள் கேட்டாள் :

"இந்தச் செம்பெருத்தி-நினைவிருக்கிறதா ?" மஜீத் சொன்னான் ; "கேட்டிருக்கறேன்," " "அப்படியானா" "கொஞ்சம் பெரிய ஒன்று'

"ஆமாம் அரசகுமாரி  சொல்லிக் கேட்டிருக்கிறேன்!"

அவர்கள் இருவருக்குமிடையே மிகவும் நெருக்கம் ஏற்பட்டது என்றாலும் மஜீதின் வாழ்க்கையில் "7 வருடங்கள் ” பற்றி அவள் எதுவும் அறிந்தவள் அல்லள். அந்த ரகசியங்களுக்குள் ஊடுருவிச்செல்ல அவள் விரும்பினாள். எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள வேண்டும், அவனுக்கு அறிமுகமான ஆண் பெண் ஒவ்வொருவர் பற்றியும், விவரங்களை அவள் கேட்டறிந்தாள். பெண்களைப்பற்றிச் சொல்லும்போது சுஹ்ரா கேட்பாள் :"அவளுக்கு என்ன வயசு? நிறம் எப்படி ? அழகியா? அவளைப்பத்தி அடிக்கடி நினைக்கறீங்களோ?"

மஜீத் எல்லாவற்றுக்குமே பதில் அளிப்பான். இருந்தாலும் அவளுக்குத் திருப்தியே ஏற்படாது. மஜீத் சொல்லாமல் விட்டுவிட்ட விஷயம் ஏதாவது இருக்குமோ ?

"எங்கிட்டு என்கிட்டெ, நிசத்தை மட்டும்தான் சொல்லணும்-- தெரியுதா?"

மஜீத் சிரித்துக் கொண்டே சொல்லுவான் : " நல்ல பொண்ணு போ ! "

" பையா ! "

அவள் புருவத்தை உயர்த்துவாள். பிறகு பிரண்டுவதற்காக கைகளை நீட்டியவாறே முன்னேறுவாள். பிறகு, சிரித்துவிடுவாள்.

வெண்மையான அழகிய முத்துப்போன்ற பற்களுக்கிடையே உள்ள அந்தக் கறுப்பான காலி இடம், தேய்ந்து போயுள்ள அந்தக் கை நகங்கள் பிறண்ட வரும் அந்தப் பழைய பாவனை-மஜீதின் இதயத்தை மூடியிருக்கும் லேசான தோலைக் கூர்மையான ஒரு கருவி கொண்டு வலுவோடு தேய்ப்பது போல்...

 " இந்த மஜீதுக்கும் சுஹ்ராவுக்குமிடையே என்ன விஷயம் ? அக்கம் பக்கத்து வீட்டவர்களுக்கு அறிந்தாகணும். "

" அந்தப் பொண்ணு புருசங்காரன் வூட்டுக்கு இன்னும் ஏன் போகலை? உம், இதெல்லாம் ஆண்டவனுக்குப் பொறுக்கா து ! "

மஜீதும் சுஹராவும் பரஸ்பரம் தங்களுக்கிடையே பேசிக்கொள்வது பண்பாட்டுக்கு முரணான செயல், “ஆகாயம் இடிந்து விழுந்துடாது? அவளோட புருசன் அடிச்சுப் போட்டா என்ன வந்திடுச்சாம் ? ஒரு வாட்டி அடிக்கறபோது பல்லு போயிருக்கும். இருந்தாலும் கட்டிய வனில்லே ?"

" சுஹரா !" ஒரு நாள் மஜீத் சொன்னான் : "நம்மைப் பத்தி அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க என்னென்னமோ பேசிக்கறாங்க!"

"அதுக்காக? "

"ஒண்ணுமில்லே. சுஹ்ரா, சாக்கிரதையா இருக்கணும். பெண்ணுல்லே! பெயருக்குக் களங்கம் ஏதும் உண்டாகாமே பார்த்துக்கணும்,"

"ஓ! எனக்குக் களங்கம் ஏற்படட்டும்! என் ஆன்மாவுக்கும் களங்கம் ஏற்படட்டும். வேறே எங்கேயும் இல்லையே?"

அவளுடைய கண்கள் நிறைந்தன. உடனே ஏதாவது சொல்லியாக வேண்டும் என்று மஜீதுக்குத் தோன்றியது. சுஹ்ராவைப் பற்றிய முடிவு அது. ஆனால் எப்படிச் சொல்வது ?

சுஹராவுக்குக் கொடுப்பதற்கு அவனிடம் ஏதேனும் இருக்கிறதா ? ...... வீடில்லை. சம்பாத்யமும் கிடையாது. அவன் சொன்னான் ; " சுஹ்ரா, உன் புருஷன் வீட்டுக்கு இனிமே போகவேணாம். "

" இல்லே"  .

மஜீத் உம்மாவிடம் விவரங்களைச் சொன்னான். வெகு நேரத்துக்கு அவள் ஏதுமே பதிலளிக்கவில்லை. இறுதியில் உம்மா தன் கருத்தை வெளியிட்டாள் . மஜீத் சுஹ்ராவை மணந்து கொள்வது நல்லது தான், ஆனால் மஜீதின் இரு சகோதரிகள், மணப்பருவத்தை கடந்து நிற்கிறார்களே ?

"நம்மகிட்ட காசு பணமேதுமில்லேதான், ஆனாலும் மானம் மரியாதை பார்க்க வேணுமா? என் மவன் எங்கனாச்சியும் போயி மாப்பிள்ளை தேடிக் கொண்டாரணும். கொஞ்சம் பொன்னும் பணமும் சேர்க்கணும். சீதனம் கொடுக்கணுமல்ல? இந்த ரெண்டு பொண்ணுங்களையும் யாரு கையிலாச்சும் ஒப்படைச்சுட்டு, பிறவு என் மவன் கலியாணம் கட்டிக்கிடலாம் !"

மாப்பிள்ளை தேடிப் பிடிச்சாப் பத்தாது ; பொன்னும் சீதனமும் கொடுக்கறதுக்கான வழியும் கண்டுபிடிக்கணும். மஜீத் கேட்டான் : "சீதனம் வாங்கிக்காம யாரும் கலியாணம் செஞ்சுக்கிட மாட்டாங்களா?"

""யாரு இருக்காங்க மவனே ? இல்லாட்டிப் போனா, ஏதாவது கூலிக்காரனோ கிறிஸ்தவனா மாறினவனோதான் கிடைப்பான், நமக்கு அது போதுமா ?... காதிலும் கழுத்திலும் இடுப்புக்குமாவது பொன்னு பூட்டித்தான் அனுப்பணும்! "

மஜீதின் சகோதரிகளின் நான்கு காதுகளிலுமாக மொத்தம் 42 துளைகள் இருக்கின்றன. அநாவசியமாக ஏன் இவ்வாறு குத்தித் துளையிடவேண்டும்? கழுத்திலும் இடுப்பிலும் பொன்னாபரணம் பூட்டிக் கொள்ளாவிட்டால் குடியா முழுகிவிடும்? சீதனம் என்பதே இல்லாமல் இருக்குமானால் !.......

""உம்மா! இந்தக் காது குத்து இதெல்லாம் இல்லாம இருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்! நம்ம சமூகத்திலே மட்டும்தான்இந்த அசிங்கமான ஏற்பாடுங்க-அசிங்கம் பிடிச்ச வரதட்சிணை, விசித்திரமான ஆடை ஆபரணங்க.........!''

உம்மாவும் வாப்பாவும் எதுவுமே சொல்லவில்லை. தொடர்ந்து மஜீத் கேட்கவுமில்லை. அவர்களைக் குறை சொல்லி என்ன பயன்? அந்தத் தலைமுறையின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப அவர்கள் அதையெல்லாம் செய்தார்கள். அது அவசியமா ? அனாவசியமா ? என்றெல்லாம் அவர்கள் யோசித்துப் பார்க்கவேயில்லை, வழிவழி வந்த ஆசாரங்களிலிருந்தும் பழக்க வழக்கங்களிலிருந்தும் அணுவளவேனும் பிசகி நடப்பது என்பது சிரமம்தான். ஆனால் அதற்குத் தேவையான சூழ்நிலை இப்போது இல்லையே.

மஜீதுக்கு இரவு உறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. எப்போதும் சிந்தனை தான், சகோதரிகளை எப்படியாவது நல்ல முறையில் திருமணம் செய்து கொடுக்கவேண்டும்...... இளமையின் முழுமையோடு அவர்கள் உள்ளனர். ஆசைகளும் இச்சைகளும் அவர்களுக்கு இருக்கின் றன... உடுக்க உடைகளில்லை ; உண்ணவும் ......; பலவீனத்தைத் தோற்றுவிக்கக்கூடிய நிமிடங்கள் பல இருக்கத் தானே செய்கின்றன ? தவறான பாதையில் ஓரடி வைத்தாலும்...?

மஜீதின் கவலைகள் அதிகமாயின, பல காரியங்களைச் செய்து முடிக்கவேண்டும் என்று அவன் விரும்பினான், வீட்டின் மேல் உள்ள கடனைத் தீர்க்கவேண்டும். சகோதரிகளைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய காரியங்களைச் செய்து முடிக்கவேண்டும். அவர்கள் வயதானவர்கள்; எந்த நிமிடமும் மரணத்தின் பிடியில் அவர்கள் சிக்கிக் கொள்ளக் கூடும். அவர்களுடைய வாழ்க்கையைச் சுகம் நிரம்பியதாகச் செய்ய வேண்டும்,

சுஹ்ராவைக் கலியாணம் செய்துகொள்ளவேண்டும். பிறகு அவளுடைய சகோதரிகளும் தாயும் உள்ளனர் ; அவர்களுக்கும் ஏதாவது ஒரு வழி பிறக்க வகை செய்யவேண்டும். ஆனால் என்ன செய்வது? எல்லாவற்றுக்குமே பணம் வேண்டுமே? எதையாவது ஒன்றைத் தொடங்கினால் அதைத் தொடர்ந்து போய்ச் செய்ய முடியும். ஆயினும் எந்த ஒரு பணியையும் துவக்குவதில் தானே சிரமம் ! கையில் பணமில்லாமலும் உதவிக்கு யாருமே இல்லாமலும் இந்த உலகத்தில் எவரும் எதையும் செய்தது கிடையாது.

ஆனால் உம்மாவின் கருத்து வேறாக இருந்தது. தொலைவில் உள்ள நகரங்களில் தயாள குணமுள்ள முஸ்லிம் செல்வந்தர்கள், நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்கள் சமுதாய வளர்ச்சிக்கென பற்பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள். திக்கற்ற அனாதை யுவதிகளுக்கு மணம் செய்து வைத்தல், வேலையில்லாதோருக்கு வேலை தேடித்தருதல், இலவசக் கல்வி போதனைக்கெனப் பள்ளிக்கூடங்களை அமைத்தல், அகதிகளையும் உடல் ஊனமுற்றோரையும் வைத்துப் பராமரிப்பதற்கான அனாதை இல்லங்களை நிறுவுதல்- இப்படியாகப் பல நற்பணிகளை அவர்கள் செய்து வருகிறார்கள் என்று உம்மா சொன்னாள், “ மவனே, நம்ம நிலைமை அவங்களுக்குத் தெரிஞ்சாப் போதும். நிச்சமெல்லாம் அவங்களே பாத்துக்கிடுவாங்க, எனக்கு நல்ல நம்பிக்கை இருக்குது. அந்தப் பக்கிரி தான் எல்லாம் சொன்னானே !"

ஏதோ ஒரு வழிப்போக்கன் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறான், * தொலைதூரமுள்ள நகரங்களில் செல்வந்தர்களெல்லோரும் தயாள குணமுள்ளவர்கள் ' என்று !

அச்சமும் திகிலும் சூழ மஜீத் புறப்படத் தயாரானான். எங்காவது சென்று ஏதாவதொரு வேலையில் அமர்ந்தே ஆகவேண்டும்.

" நான் போயிட்டு சீக்கிரமா வந்திடறேன் " - மஜித் சுஹராவிடம் விவரமெல்லாம் சொன்னான் ; " நான் எல்லோரையும் உங்கையிலே தான் ஒப்படைச்சுட்டுப் போறேன் ! "

"நீங்க வர்றதுவரை, நான் பத்திரமாய் பாத்துக்கறேன். கவலைப் படாதீங்க” -- சுஹ்ரா பொறுப்பேற்றாள். மஜீத் உறுதியான ஒரு நோக்கத்தோடு புறப்படலானான்,

ஒரு நாள் மாலையில் மேற்குத் திசை தொடுவானத்தில் தங்க மேகங்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவனுடைய பெட்டி படுக்கைகளைச் சுமந்துகொண்டு ஒரு பையன் பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றான். மஜீத் எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான்,

வாப்பா சொன்னார் : “' எனக்குக் கண்பார்வை மங்கிக்கிட்டே போகுது. ஒரு மூக்குக் கண்ணாடி வாங்கிட்டு வரயா ?இல்லே !"

“ கொண்டு வறேன் ” என்று சொன்ன மஜீது தன்னுடைய அறைக்குள் சென்றான். நீர் நிறைந்த கண்களுடன் சுஹ்ரா மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தாள்,

"ஒண்ணு சொல்லட்டுமா? "-அவள் சொன்னாள்,

மஜீத் முறுவல் பூத்தான், "சொல்லு, அரசகுமாரி, சொல்லு. "

"வந்து ---"" மேற்கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்ய இயலவில்லை ; அந்தச் சமயத்தில் மோட்டார் காரின் ஹார்ன் ஒலி கேட்டது. உம்மா வாயிற்படியில் தோன்றினாள்,

" மவனே, சீக்கிரமாப் போ. வண்டி போயிடும் " மஜீத் இறங்க எண்ணினான். சுஹ்ராவுடைய கண்கள் நிறைந்து நீர் தாரை தாரையாக ஓடியது. மஜீத் கேட்டான் :

" நான் போய் வரட்டுமா ?"

அவள் சிரம் தாழ்த்தி அனுமதி தந்தாள். புதிர் நிறைந்த வருங்காலத்தை எதிர்நோக்கி மஜீத் இறங்கினான். வாயிற்படிக்குச் சென்றபோது தான் கண்ட சுஹராவின் நிலையும் வீட்டின் தோற்றமும் மனதிலிருந்து ஒருக்காலும் அழியாத சித்திரங் களாகப் பதிந்துவிட்டன,

பல மாதங்களுக்குப் பிறகும் அந்தச் சித்திரம்தான் மஜீதின் கண் முன்னே ஓடியது.

11

சுஹ்ராவைத் திருமணம் செய்து கொள்வது, அதற்கு முன்பாக சகோதரிகளுக்குக் கணவன்மார்களைத் தேடிக் கண்டுபிடிப்பது, சீதனத்துக்கும் ஆபரணங்களுக்கும் தேவையான தொகை சேர்ப்பது ஆகியவற்றுக்கு ஏதாவது ஒரு வேலை செய்தே ஆகவேண்டும். ஆனால்... நிராசை தான் அவனை எதிர்கொண்டழைத்தது. எங்குமே வேலை கிடைக்கவில்லை. வேலை காலி இருந்தாலும் சிபார்சுக்கு ஆள் தேவையாயிருந்தது. லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. பரீட்சை பாஸ் செய்த சர்டிபிகேட் தேவையாக இருந்தது. இவை எதுவுமில்லாமல் வேலை கிடைப்பது சுலபமான காரியமல்ல, இருந்தாலும் அவன் அயராமல் முயன்றுகொண்டே யிருந்தான். பல நகரங்களிலும் சுற்றிச் சுற்றி அலைந்தான், சொந்த ஊரிலிருந்து 1500 மைல் தொலைவில் உள்ள பெரும் பட்டினம் ஒன்றை, மஜீத் சென்றடைந்தான். இதற்கிடையே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன, அங்கு அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது, சிரமமான வேலை யல்ல, வருமானமும் கூடுதலாகவே கிடைத்தது. ஓய்வின்றி உழைத்தால் போதும், நூறு ரூபாய்க்கு 40 ரூபாய் வீதம் கமிஷன் கிடைக்கும். கம்பெனிச் சொந்தக்காரனே உறுதிமொழி அளித்திருந்தான் ,

கம்பெனிச் செலவில் சைக்கிள் உண்டு; அதில் சாம்பிள்களை ஏற்றிச் சென்றால் போதும். கம்பெனிக் கட்டடத்திலேயே, இருக்க இடமும் கிடைத்தது.

இப்படியாக மஜித் வேலைக்குச் செல்லவாரம்பித்தான், சிறிய ஒரு தோல் பெட்டியில் சாம்பிள்களை அடுக்கி வைத்துக்கொண்டு, ஆர்டர் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு அவன் சைக்கிளில் கிளம்புவான். நகரமெல்லாம் சுற்றி ஆர்டர்களைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி பொங்க அந்தியில் அவன் இருப்பிடம் திரும்புவான்,

இப்படி ஒரு மாதம் ஓடிற்று. சகல செலவும் போக, மஜீத் வீட்டுக்கு நூறு ரூபாய் அனுப்பிக் கொடுத்தான். வாப்பாவுக்கு வெள்ளெழுத்துக் கண்ணாடியும், சுஹ்ராவுக்கும் மற்றவர்களுக்கும் உடைகளுக்கான தொகையும்கூட அவன் அனுப்பியிருந்தான்.

மற்றும் ஒரு மாதம் ஓடியது. அடுத்து வருங்காலத்தில் என்ன ஏற்படப் போகிறது என்பது யாருக்குமே நிச்சயமில்லையல்லவா ? கெடுதல்களை யாருமே எதிர்பார்ப்பது கிடையாது. மஜீத் எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆயினும் எதிர்பாராத வகையில் திடீரென நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

அன்று திங்கட்கிழமை ; மஜீதுக்கு நன்றாக நினைவிருக்கிறது ; நல்ல உச்சி வேளை. வழக்கம்போல சூட்கேஸைஸ் சைக்கிளின் விளக்கு மாட்டும் கொக்கியில் மாட்டிவிட்டு, கடலோரம் உள்ள தார் போட்ட ஜன சந்தடியில்லாத பாதை வழியே அவன் போய்க் கொண்டிருந்தான். செங்குத்தான இறக்கம் ஒன்று அங்கு உண்டு. நல்ல வேகத்தோடு அவன் சைக்கிளை ஓட்டி வந்தான். பெட்டி குலுங்கிக் குலுங்கி, அதன் பிடிவிட்டு சக்கரத்தினிடையே சிக்குண்டு வீழ்ந்தது. மஜீத் சைக்கிளிலிருந்து கம்பி அழிகளில் தூக்கியெறியப் பட்டு கீழேயிருந்த ஆழமான சாக்கடையில்...

குன்று ஒன்று, உடலின்மேல் இடிந்து வீழ்ந்தது போல, ஏதோ ஒடிந்து விழுந்த வலியுடன் உள்ள ஒரு நினைவு. தன்னிடமிருந்து எதுவோ அறுத்துத் துண்டிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. எல்லாமே இருளில் மறைந்து விடுகின்றன,... எல்லாமே, மறதி என்னும் இருவரில்...,புயல் வீசும் இரவிலே தோன்றும் இடி மின்னல்போல் எப்போதாவது நினைவின் வெளிச்சம் தெரியும்... தாங்கவியலாத் வலி.. மருந்துகளுடைய நெடி, ஆட்கள் வேதனை தாளாமல் அரற்றும் ஒலி,... உயிருள்ள நீண்டு உருண்ட ஏதோ ஒன்று, வாயின் வழியாகத் தொண்டைக்குள்ளே இறங்குகிறது. வயிற்றில் சூடான திராவகம் நிறைகிறது. இப்படியெல்லாம் ஒரு தோற்றம்... இத்தகைய அனுபவங்களிலேயே யுகங்கள் கழிந்து கொண்டிருக் கின்றன !

நினைவுகள் தொலைவிலேயே உள்ளன. எதுவும் தெளிவாக இல்லை. வெண்மையான புகைபோல, வெண்மேகங்களைப்போல நினைவுகள், மஜீதிடமிருந்து தொலைவில், மிகமிகத் தொலைவில் செல்லத் தொடங்குகின்றன, எல்லாமே மறதியில் சென்று மறையப் போகின்றனவோ ?

இல்லை ! வாழ வேண்டும் !... வாழ்க்கை ! தாங்கவொண்ணா  எரிச்சலும் வேதனையும்,,, ஆயினும் வாழ வேண்டும்! மஜீத் முயற்சி! செய்தான், தன்மீது அமர்ந்துள்ள மறதி என்னும் தன் குறை, முழுவலுவையும் பிரயோகித்துக் தூக்கிக் கவிழ்ப்பதுபோல... வலியுடன்

கூட நினைவும் தெளிவாக வர ஆரம்பித்தது.

அவன் நீண்ட பெருமூச்சு விட்டான். மெதுவாகக் கண்களைத் திறந்தான். நீண்டு நிமிர்ந்தவாறு கிடந்தான் அவன். கழுத்துவரை வெள்ளைப் போர்வை ஒன்று போர்த்தப்பட்டிருந்தது... ஆஸ்பத்திரி!

அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது,

தீவிரமான தாங்கவொண்ணாத வலி ! வலது நெற்றியில் தீப்பற்றயெறிவதுபோல்... விண்விண்ணென்று மண்டைவரை வேதனை, வலி... கையால் தடவினான், இடுப்பில் நிறையத் துணிகள் சுற்றிக் கட்டப்பட்டுள்ளன,

மஜீத் வலது காலைத் தேடிப் பார்த்தான். எலும்புகளினூடே ஒரு ஜில்லிப்பு ஊடுருவிப் பாய்ந்தது.

சூன்யம் ! அவனுக்கு பிரமிப்பு ! வியர்த்துக் கொட்டியது. நினைவு மங்குவது போல் தோன்றியது. தனது வலது காலின் ஒரு பகுதி என்றென்றைக்குமாக விடுபட்டுப் போயுள்ளது ! படுத்தபடியே ஆழம் காணவியலாத ஒரு குழிக்குள் வீழ்ந்துவிட்டதுபோல, உலகமெல்லாம் சுற்றுகின்றதோ ?

அவன் மறுபடியும் தேடிப் பார்த்தான். வெறுமை ! கீழே ஒன்று மிருக்கவில்லை. சகிக்க முடியாத வேதனை ! சுஹரா முதல் முத்தம் ஈந்த வலது கால் ! ஐயோ அது எங்கே போயிற்று!கண்கள் திறந்திருந்தன. கன்னங்களின் வழியே சூடான நீர் ஓடிக்கொண்டேயிருந்தது, படுக்கையின் அருகே டாக்டரும் நர்ஸும் கம்பெனி மானேஜரும் வந்தார்கள்.

மஜீதின் நெற்றியில் தண்ணென்ற தமது கையை வைத்தபடி கம்பெனி மானேஜர் மெதுவாகக் குனிந்தார். " மிஸ்டர் மஜீத், நான் மிகமிக வேதனைப்படுகிறேன். நீங்கள் வருத்தப்படலாகாது. "

" சுஹரா !"

 " என்ன மஜீத்? ''

 " நீ ஏன் + உம் * கொட்டலை ? "

" நான் " உம்" போட்டுகிட்டுத்தானே இருக்கறேன் ! ஆமாம், பையன் ஏன் என்னை * நீ "ன்னு கூப்பிடறே ?"

மஜீத் துடித்தான். ' சுஹ்ரா ! ' என்று அலறியவாறே திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்,

64 பகல்களும் 64 இரவுகளும் கழிந்தன. தன்னைவிட உயரமானதொரு கைத்தடியின் உதவியோடு மஜீத், கம்பெனி மானேஜர் உடன்வர, ஆஸ்பத்திரியின் கேட்டைக் கடந்து மக்கட் கும்பல் நிறைந்த தெரு வீதிக்கு வந்தான், கம்பெனி மானேஜர் மஜீதிடம் 50 ரூபாய் கொடுத்துவிட்டுச் சொன்னார் :

" இனிமே நீங்க ஊரிலே உங்க வீடுபோய்ச் சேர்ந்திடுங்க, உங்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது கண்டு நான் ரொம்ப விசனப்படறேன், ""

மஜீத் வாய்விட்டு அழுதான் ; அவன் சொன்னான் : " என் சகோதரீங்க திருமணப் பருவம் கடந்தும் வீட்டிலேயே இருந்துகிட்டு இருக்கறாங்க, பெத்தவங்களுக்கு ரொம்ப வயசாயிடுச்சி, இருந்த சொத்துகளெல்லாம் கடனிலே மூழ்கிக் கிடக்குதுங்க, என்னைப் பெத்தவங்களுக்கு நான் ஒரே ஒரு ஆம்பளப் புள்ளெதாங்க, வீட்டுக் கஷ்டங்களுக்கு ஒரு பரிகாரம் தேடாம, அங்கே போறதுக்கு எனக்கு விருப்பமில்லே, அதோட இப்படி ஒரு நொண்டிக் கோலத்தோடே, நான் அங்கே போயி அவங்களுக்கு ஒரு பாரமா இருப் பானேன் ?"

" இனிமே என்ன செய்யறதா உத்தேசம் ?"

"" எனக்கே நிச்சயமா ஒண்ணும் தெரியலை.”

" என் கம்பெனியிலே உங்களுக்குத் தகுந்த மாதிரி-- உங்களாலே கிளார்க் வேலை செய்ய முடியுமா ?."

"" முடியாதுங்க. நான் கணக்கிலே ரொம்ப மோசமுங்க."இப்படியாக மஜீத் மீண்டும் தனித்து விடப்பட்டான். அவன் 40 ரூபாய், வீட்டுக்கு அனுப்பினான். கூடவே ஒரு கடிதமும், வலது காலை இழந்த விவரத்தை அவன் குறிப்பிடவேயில்லை. " உடம்பு சுகமில்லாமே இருந்தேன். அடுத்த கடிதம் கிடைக்கும் வரை கடிதம் ஏதும் அனுப்ப வேண்டாம் " என்று மட்டுமே அதில் எழுதி யிருந்தான்,

மஜீத் மீண்டும் வேலை தேடும் முயற்சியைத் துவக்கினான். இரண்டு கைகளாலும் தடியை ஊன்றிப் பிடித்துக்கொண்டு, ஒற்றைக்காலில் சாய்ந்தவாறு குதித்து குதித்து... நாலடி வைத்ததும் நிற்பான்....... மறுபடியும் நடப்பான், இப்படியே ஓரிரு மாதங்கள் கழிந்தன. நிலையாக ஓரிடத்திலும் தங்கவில்லை. கிடைத்தவிடங்களில் படுப்பான்,

இறுதியில் நகரத்தில் உள்ள தணிகர்களைப் பார்த்து உதவி கோரலாம் என்று கருதி விசாரித்ததில், ஒரு கான் பகதூர்தான் மிகவும் தயாள குணமுடையவர் என்று கேள்விப்பட்டான் . நகரத்தில் உள்ள மிகப்பெரும் மாளிகைகள் யாவும் அவருடையது தானாம். தங்கக் கட்டிகளும் மற்றவைகளும் அவருடைய நிலவறையில் பூஞ்சக்காளன் பிடித்துக்கொண்டு கிடப்பதாக மக்கள் பேசிக் கொண்டார்கள். சர்க்காரில் செல்வாக்குள்ள ஆசாமி அவர். சமீபத்தில்தான் பத்தாயிரக்கணக்கில் ரூபாய் செலவழித்து அவர் கவர்னருக்கு ஒரு விருந்து கொடுத்திருந்தார். அவரால் எதுவும் சாத்தியம்... எதுவும் !

ஆனால் வாயில் காவலர் மஜீதை உள்ளே விடவில்லை. தினமும் அவன் அந்த மாளிகை வாயிலில் போய் நிற்பான். இப்படியாக ஒரு வாரம் சென்றது. இறுதியில் காவலாளிகளுக்கே அவன்மீது இரக்க மேற்பட்டது. கான் பகதூரின் சன்னிதானத்துக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். மஜீத் சலாம் வைத்தான், ஒரு முஸல்மான் மற்றொரு முஸல்மானைப் பார்த்தால் ' அஸ்லாமு அலைகும்' என்று சொல்லவேண்டும் என்று இருக்கிறது. மஜீத் சொன்னான், ஆனால் கான் பகதூர் என்ன காரணத்தாலோ தெரியவில்லை, சலாம் திருப்பவில்லை. அது காதில் விழுந்ததாகக் கூட அவர் காட்டிக்கொள்ளவில்லை. கான் பகதூருக்கு சுமார் 50 வயது இருக்கும். வெள்ளை வெளேர் என்று உருண்டு திரண்ட உடல்வாகுடன் அவர் காணப்பட்டார், கல் பதிக்கப்பெற்ற தங்க மோதிரங்கள் மினுக்க, தாடியைத் தடவியவாறே மஜீதின் துயரமிகு கதை முழுவதையும் ' உம்' கொட்டிக்கொண்டு அவர் செவிமடுத்தார், கடைசியில் கான் பகதூர் சொன்னார் : " நம்முடைய சமுதாயத்தில் திருமணத்துக்கு வழியற்ற பெண்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். உணவுக்கு வழியில்லாதவர்களும் நிறையப் பேர் உள்ளனர். என்கால் சாத்யமானவைகளை யெல்லாம் நான் எப்போதுமே, எல்லோருக்குமே செய்து வருகிறேன். சொல் ? இதற்கு மேல்; நான் வறேன்ன செய்ய முடியும் ?"

மஜீத் எதுவும் சொல்லவில்லை, சமுதாய முன்னேற்றத்துக்கென, கான் பகதூர்கான் செய்திருக்கும். மகத்தான காரியங்களையெல்லாம் விவரமாகச் சொன்னார். அவர் 4 பள்ளிவாசல்களை நிறுவியுள்ளார். ஏனைய கோடீஸ்வரர்கள் எல்லோரும் ஒவ்வொரு பள்ளிவாசல் வீதம்தான், தட்டி உள்ளனர். இதுவும் போதாமல் அவர் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதற்கென சமுதாயத்துக்கு, ஓர் இடத்தையே தானமாக வழங்கியுள்ளார். அங்கு ஒரு கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தால், அவருக்கு மாதம் தோறும் நிறைய வாடகை கிடைத்திருக்கும் அல்லவா ? சமுதாயத்துக்காக, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு பணம் என்று நஷ்டப்படுவது ?"

" இதற்கும் மேல் நான் செய்ய வேண்டியது ஏதாவது இருக் கிறதா ? சொல்?"

மஜீத் ஒன்றுமே பேசவில்லை. கான் பகதூர், மஜீதின் கால் ஊனமாகி விட்டதற்காகவும், தமது அனுதாபதத்தைக் தெரிவித்துக் கொண்டார், " வி தி ; அல்லாமல் வேறு என்ன சொல்லுவது ?"

மஜீத் பேசவேயில்லை. அவன் அந்த நீண்ட தடியை ஊன்றிக் கொண்டு, மனச்சுமையோடு சலாம் சொல்லிவிட்டு மெதுவாக வெளியேறினான் , வாயில்படி கடக்கவிருக்கையில், கான் பகதூர், ஒரு வேலையாளிடம் ஒரு ரூபாய் கொடுத்தனுப்பினார்.

" அதை எங்கிட்டத் தந்ததாகச் சொன்னாப் போதும். நீங்களே எடுத்துக்குங்க." என்று அந்த வேலையாளிடம் சொல்லிவிட்டு மஜீத் அகன்றான்.

அந்த ரூபாயை மஜீத் ஏன் வாங்கிக்கொள்ளவில்லை ? அந்தக் கோடீஸ்வரனிடம் தினந்தோறும் அநேக ஆயிரம் சாதுக்கள் யாசகத்துக்குப் போகிறார்கள் என்பதும், அவர்களுக் கெல்லாம் அவர் தானம் கொடுக்கிறார் என்பதும் மஜீதுக்குத் தெரியாதா என்ன? அவன் ஒரு கோடீஸ்வரனாக இருக்கும் பட்சத்தில், என்ன செய்திருப்பான்?முதலில் வந்து யாசிப்போனுக்குத் தனது சொத்தின் ஒரு பகுதியைக் கொடுத்திருப்பானோ? ஒரு செப்புக் காசுக்கும் கூடுதலாகக் கொடுத்திருப்பானோ ?

கான் பகதூர் ஒரு ரூபாய் கொடுத்தார். அதை வாங்கிக் கொள்ள வேண்டியது அவனுடைய கடமையல்லவா ?

மஜீத் யோசித்தான், ஆனால் அங்கு ஐந்து கோடீஸ்வரர்களேயிருந்தனர். அவர்களைக் கழித்தால் மீதியிருப்பவர் ஆறு லட்சம் பொதுமக்களாவர்,

சிறகொடிந்த பறவைபோல மஜீத் அங்கிருந்து போனான், மஜீதின் தடிக்கம்பு நான்கு "இஞ்ச்" தேய்ந்தது. உள்ளங்கை ! "இஞ்ச்"கனத்தில் வீங்கிக் கன்றிப் போயிருந்தது. பட்டினி கிடந்து, பட்டினி கிடந்து சரீரம் ஒட்டி உலர்ந்து போயிற்று.

மஜீதுக்கு ஒரு வேலை கிடைத்தது. ஒரு ஹோட்டலில், எச்சில் பாத்திரங்களைக் கழுவி வைக்கும் வேலை, காலை 4 மணிக்கு எழுந்து கொண்டால் இரவு பதினோரு மணிவரை குழாயடியிலேயே இருக்க வேண்டும்,

பெரிய கூடையில் கொண்டுவந்து வைக்கப்படும் எச்சில் பாத்திரங்களை ஒவ்வொன்றாகக் கழுவி, வேறொரு கூடையில் அடுக்கி வைப்பான், அதை வேறொருவன் வந்து எடுத்துப் போவான், அதற்குள்ளாக மற்றொருவன் எச்சில் பாத்திரங்களைக் கூடையில் கொண்டு வைப்பான், இதுதான் வேலை, ஆயினும் வயிறு நிறைய உண்பதற்கு ஏதேனும் கிடைக்கும். மாதந்தோறும் 5 ரூபாய் வீட்டுக்கும் அனுப்புவான்,

வீட்டிலிருந்து முதலில் வந்த கடிதம் சுஹ்ராவுக்கு உடல் நலமில்லாமல் இருப்பது பற்றித் தெரிவித்தது. அவள் மிகமிக பலஹீனமடைந்திருக்கிறாள். கொஞ்சம் இருமலும் இருக்கிறது.

"இங்கே எல்லாரும் சுகம், உங்களை ஒரு முறை பார்க்க ஆசையாக இருக்குது "- இப்படிக்குச் ' சுஹ்ரா.'

12

சுஹ்ராவைக் காண மஜீதுக்கும் ஆவல் பொங்கியது. 1,500 மைல் தொலைவில் இருந்த மஜீத் சுஹ்ராவைப் பார்ப்பான் ; அவள் இருமுவதைக் கேட்பான் ; அவளுக்கு ஆறுதல் மொழிகள் கூறித் தேற்றுவான் !

" சுஹ்ரா, இப்ப எப்படியம்மா இருக்குது ? நெஞ்சுவலி இருக்குதா ?"-இப்படிக் கூறிவிட்டுக் கழுவி வைத்த கிண்ணியைப் பார்த்துக்கொண்டிருப்பான்.

இரவு உறங்கப் போகையில் சுஹ்ராவிடம் சொல்லுவான்; "தூங்கு, தூங்கென் சுஹ்ரா தூங்கம்மா !''

ஆனால்... மஜீத் பார்ப்பது, நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் நீல வானம் தான்.

இப்படியிருக்கையில் மற்றொரு கடிதமும் வந்து சேர்ந்தது. கையெழுத்து சுஹ்ராவுடையது அல்ல, வேறு யாரையோ விட்டு, உம்மா எழுதச் சொல்லியிருக்கிறாள். அதைப் படித்தபோது நகரத்தின் பேரிரைச்சல் அப்படியே , "பட்டென" நின்றுவிட்டது போல் மஜீதுக்குத் தோன்றியது.

" பிரியமான என் மவன் மஜீத் படித்தறிய வேண்டி, சொந்த உம்மா எழுதிக் கொண்டது. முந்தா நாள் அதிகாலை நம்முடைய சுஹ்ரா நம்மைவிட்டுப் போய்விட்டாள்.!' அவளுடைய வீட்டில், என் மடிமீது தலை வைத்தவாறே அவளது உயிர் பிரிந்தது. எங்களுக்கெல்லாம் இருந்து வந்த துணையும் உதவியும் அவளோடு போய் விட்டன. இனி, ஆண்டவனுக்கு அடுத்தபடியாக நீதான் இருக் கிறாய்,

மகனே ! போன மாதம் 30 ஆம் தேதி, நம்முடைய வீட்டையும் தோப்பையும் கடன்காரர்கள் ஜப்தி செய்து, எடுத்துக் கொண்டு விட்டார்கள், வீட்டை உடனே காலி செய்யும்படி, அவர்கள் வற்புறுத்துகிறார்கள். இந்த இரண்டு வளர்ந்த பெண்களையும், உடல் நலமில்லாத வாப்பாவையும் அழைத்துக் கொண்டு நான் எங்கே போவேன்?

மகனே ! நான் தூங்கிப் பல நாட்கள் ஆகின்றன, உன் சகோதரிகளை ஒத்த வயதுடையோர் எல்லோரும், மூன்று நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டார்கள். நடக்கக் கூடாதது ஏதும் நடந்து அவப் பெயர் ஏற்பட்டுவிட்டால்...அருமை மகனே ! இங்கே இருப்பவர்கள் ஈவு இரக்கமில்லாதவர்கள். நானும் வாப்பாவும் எவ்வளவோ மன்றாடியும் உடனே வேறு இடத்துக்குப் போய்விடுமாறு ஜப்தி செய்தவர் கட்டாயப் படுத்துகிறார். நம்ம சாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் அங்கு இருப்பார்களே ? அவர்களிடம் சொன்னால் ஏதாவது ஒரு வழி காட்டாமல் இருக்கமாட்டார்கள்,

என் மகனே ! சுஹ்ரா இருந்தபோது, எனக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. இரண்டு மாதமாகவே அவள் படுத்த .படுக்கை தான் , காசநோய், இறப்பதற்கு, முன்னால் அவள் உன் பெயரைத்தான் சொன்னாள் : நீ வந்துவிட்டாயா வந்துவிட்டாயா என்று பலமுறை கேட்டாள். எல்லாம் ஆண்டவனின் செயல் ! "

கடிதத்தைப் படித்து முடித்தபோது சுஹ்ராவைக் கடைசியாகப் பார்த்த காட்சி மனதின் நினைவினூடே ஓடிட து. மக்கள் நடமாட்டம் இல்லாத நிசப்தம்  தரிசு பூமியின் பரந்த மண்ணரில் நிறுவப்பட்ட ஒரு சிலைப்போல், மஜித் அமர்ந்து நினைவு கூர்ந்தான். சுஹ்ராவின் வாழக்கை வரலாற்றிலே ஒவ்வொரு ஏட்டையும் ஆதியோடு அந்தமாக !

எங்கே 'விடிவு அன்று அவன் வீட்டில் விடை பெற்றுக் கொண்டு வேலை தேடப்புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தான். அவள் ஏதோ சொல்ல ஆரம்பித்தாள் ; அதை முடிப்பதற்குள்ளாக மோட்டாரின் ஹார்ன் ஒலி கேட்டது...

உள்ளே வந்தாள் ... அவன் முற்றத்தில் இறங்கினான்........தோட்டத்து வழியே படியிறங்கினான்....... திரும்பி நோக்கினான்,

மேற்கே தொடுவானத்தில் தங்க மேகங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மரங்களும், வீடும், தோட்டமும் இளம் மஞ்சள் வெட்ட வெயிலில் மூழ்கிக் கொண்டிருந்தன ...

சகோதரிகள் இரண்டு முகங்களை மட்டும் வெளியே நீட்டியவாறு, கதவின் மறைவிலே... வாப்பா, சுவரில் சாய்ந்தவாறு வராந்தாவில் ...உம்மா முற்றத்தில்... சுஹ்ரா நிறைந்த கண்களுடன் அந்தச் செம்பருத்தி மரத்தைப் பிடித்தவாறு தோட்டத்தில்...

அவள் சொல்ல விரும்பியது அப்போது அவளது உதடுகளில் இருந்துகொண்டிருந்திருக்கும் !

சுஹ்ரா சொல்ல விரும்பியது என்ன ?

printed at Modern Printers, K-30, Naveen Shahdara Delhi-110032

No comments:

Post a Comment