முட்டைக்காரி - சுந்தர ராமசாமி
===================================
ஏழகரம் நாராயண அய்யருக்கு ஆஸ்பத்திரியிலிருந்து டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு. வந்து சேருவதற்குள் மூச்சு முட்டித் திணற ஆரம்பித்து விட்டது. முதற்படியில் கால் வைத்ததும் கை விரல்கள் முன் நீண்டு சிமிண்டுத் தூணை ஸ்பரிசிக்க, மேல் படி யேறியதும் தூணோடு சாய்ந்து கொண்டார்.
தலையை உயர்த்தி அட்டவணை போர்டில் பார்வை யைப் பதிக்க முயன்றார். ஏதோ இருட்டில் வெள்ளைப் பூச்சிகள் வட்டமிடுவது போலிருந்தது. கண்களை வெகு இருக்கமாக மூடி ஒரு நிமிஷம் தலையை தூணோடு
ஆயாசத்துடன் சாய்த்தபடி நின்று விட்டு, மீண்டும் போர்டை வெறித்துப் பார்க்கலானார். வெள்ளை எண்கள் கருமையிலிருந்து விடுபட்டு முன் நகர்ந்து அந்த ரத்தில் ஸ்தம்பித்து விட்ட தோற்றம் அளித்தது. தானும் தான் காலூன்றி நிற்கும் பூமியும், தூணும் மெதுவாக சுழன்றுவர, இன்னும் சில கணங்களுக்குள் சுழற்சியின் வேகம் பயங்கரமாக அதிகரித்தது. தூண் தனது பிடிப்பை முற்றிலும் தளர்த்தி, தன்னை வெகு தூரத்தில் விட்டெறிந்து விடுமென அவருக்குத் தோன்றிற்று. பஸ் புறப்படும் வேளையை அறிந்து கொள்வதும் தன்னால் ஆகக் கூடிய காரியமாகப் படவில்லை.
விரிந்த குடை இழுபட்டுப் பின் நகர, சுவரைத் தொட்டவாறே எதிர் அறைக்குள் புகுந்து சிமிண்டு பெஞ்சியில் உடலைச் சரித்தார். தலை முன்னை விடவும் இப்பொழுது கன வேகமாகச் சுழன்றது. கண்டத்தில் சுருக்கு இறுக்கப்படுவது போல், குருதி முகத்தில் விண் விண்ணெனத் தெறித்தது. அது ஸ்திரீகள் அறை. அங்கு அப்பொழுது சில முதிய யுவதிகளும், சில கிழவிகளும் தான். கல்விப் பெண்களின் நடமாட்ட வேளையுமல்ல அது. அங்கிருந்த ஸ்திரீகளின் கண்களில் ஒரு ரோகிக்கான அநுதாபம் தவிர வேறு எதுவும் வெளிப்படவில்லை. முற்றிய ரோகி லிங்க பேதமற்றது போலும் ! இடம் மாற்றிக் கொள்ளும்.சிரமத்திற்கு அவசியமில்லை யென்று பட்டது அவருக்கு.
உதட்டிலிருந்து: தொண்டைக் குழி வரையிலும் உலர்ந்து விட்டது. மெல்லிய துணியில் கூழ் வற்றல் மாதிரி ஒட்டிக் கொண்டுவிட்ட நாவை இனி உரித்துத் தான்.எடுக்க இயலும் போலும். தொண்டை ஈரத்துக்கு இரண்டு சொட்டு நீர் வாயில் ஊற்றப்படுமானால் பிராணன் சற்றுக் குளிரக்கூடும். கையில் எதையோ ஏந்தி விசித்திரமாகக் கூவி விற்றுக் கொண்டிருந்த சிறுவனின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். அவனுடைய பார்வையில் வெளிப்பட்ட அருவருப்பு அவரை வலுவாகத் தாக்கிற்று, நழுவி அப்பால் அவன் சென்று விடுவானோ என்ற பீதியில் தலை சரித்து முகத்தில் கெஞ்சல் காட்டி ஏதேதோ சொன்னார். அவருடைய குழறல் அவனுக்கு அர்த்தமாகவில்லை. எதிர் பெஞ்சுக்: கிழவியின் ஆண்மை அதட்டலுக்கு உட்பட்டு சிறுவன் சோடா வாங்கி வர எதிர்ச்சாரியை நோக்கி. ஓடினான்.
அப்பொழுது பஸ்ஸும் வந்து நின்றது. அவர் பரப் பரப்படைந்து எழுந்து குடையைச் சுருக்கினார். குடை ஏறி குதிரையில் விழவில்லை. இருந்தும் அவசரத்துடன் தொள தொளவென்று அதைமார்போடு அணைத்தவாறு, வலது கையில் மருந்துக் குப்பியுடன் திண்ணையைப் பார்க்க நகர்ந்த்போது, அரை வேஷ்டி நெகிழ்ந்தது. குடையை தூணில் சாய்த்தார்.
பஸ்ஸிலும் வெளியிலும் கன நெரிசல். மேல் கம்பியில் கடைசி வரையிலும் கை கையாகக் காய்த்துத்தொங்கிக் கொண்டிருந்தன. கூட்டம், சீட்டின் இடைவெளியில் காலூன்றிவிட முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது
அவரால் முண்டியடிக்க ஏலாது. நிறை மாது முஸ்லீம் யுவதி இடுப்புக் குழந்தையுடன் சற்று விலகி· தின்றிருந்தாள். கடைசியில் அவளுக்குக் காட்டப்படும்: உதார சௌஜன்னியத்தில் ஒண்டிக் கொள்ளலாமென எண்ணி அவள் பின் நகர்ந்து நின்றார் அவர். மோதிச் சாயும் கூட்டத்தை மேலும் முடுக்க, இஞ்சினை டிரைவர் குப்பென்று அலறவைத்து, கையெடுக் காமல் ஹார்னையும் பிழிய ஆரம்பித்தான். மோதலும் தள்ளலும் அதிஉக்ரம் அடைந்தன. எப்படியோ' எல் லோரும் உள்ளே திணிந்து கொண்டு விட்டார்கள். அவர் பஸ்ஸின் முன் படியில் நின்று கொண்டிருந்தார். 'கை'பில் வாங்கிய சோடாவை நிம்மதியாக வாயில் ஊற்றிக் கொள்ள வொட்டாமல் அனைவரும்
ஆளுக்கொரு
விதமாய் பரபரப்புக் காட்டினார்கள். பஸ் அதிர்விலும், அவசரத்திலும் சோடா தாடையிலும் கன்னத்திலுமாக வழிந்தது. விரல் நடுக்கத்தை கட்டுப்படுத்த முயல் முயல, அம் முயற்சி காரணமாகவே அவை மேலும் நிதான மிழந்து அதிக நடுக்கம் கொண்டன. பஸ்ஸுக்கு எங்கும் ஏள ைபாவம் வழிந்தது. இனி பொறுப்பது அவமானம் என கண்டக்டர் முகபாவம் காட்டி மறுபக்கம் திரும்பி விசிலை அழத்தமாக ஊதினான். பஸ் நகர்ந்தது. அவர் எவ்வாறோ உள்ளே சாய்ந்து மேல் கம்பியை பற்றிக் கொண்டார். உடல் தள்ளாடி சகப் பிரயாணி ஒருவர் மேல். மோதியது. இது அவருக்கு ஒரு பாதுகாப்பான இடமே. இங்கு அவர் சரிந்து விழுந்து விடுவது சிறிதும் சாத்தியமல்ல.
புளியமர ஜங்ஷனைத் தாண்டி பஸ் சிறிது தூரம் கூட சென்றிராது. அவர் திடீரென்று அக்கம் பக்கம் திரும்பி வெறித்தபடி, ‘குடை, குடை' என அரற்ற ஆரம்பித்தார். கண்டக்டரோ அவ்வார்த்தைகள் காதில் விழுந்த பாவமே காட்டிக் கொள்ளவில்லை. வண்டி. முதல் நிறுத்தத்தில் நிற்கவும் அவர் கீழே இறங்கும் வேளையில்,
கண்டக்டர் அவரை வார்த்தைகளால் பின் நின்று தாக்க பஸ்ஸே கொல்லென்று. நகைத்தது.
அப்பொழுது மணி பதினொன்று தாண்டி யிருக்கக்' கூடும். வெயில் அதி உக்ரமாகக் கொளுத்திக் கொண் டிருந்தது. கொல்லனின் உலை இரும்பாய் பழுத்துக் கிடந்த சிமிண்டு வீதி, அனல் அலைகளை உமிழ்ந்த வண்ணமாய் இருந்தது. எதிர்பாரத உஷ்ணத்தின் தாக்கு தலால் அவர் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். எவ்வாறு பஸ் நிலையத்தை அடையப் போகிறோம் என மலைப்புத் தட்டியது. ஆனால் தூணில் சாய்த்த குடையின் நினைவு எழுந்து, பறிபோவதற்குள் அதை கை வசப்படுத்தி விட வேண்டுமென்ற ஆசை மூண்டு விடவே வெகு வேகமாக விரைய மனத் தயாரிப்புக்களில் ஆழ்ந்தார்.
இதற்குள் குடை பறிபோயிருக்கக் கூடுமோ என்ற சந்தேகமும் தோன்றி வலுப்பெற்றது சிமிண்டு ரோட்டைத் தாண்டினால் எதிரே பூங்காவன மதி லோரம், வெள்ளை வேட்டியின் கறுப்புக் கரை போன்ற நிழலில் ஒண்டியபடியே சென்று விடலாம். அந்த நிழலும் இன்னும் சில நிமிஷங்களில் சுவரின் அடித்தளத்தில் புதை, யுண்டு போய் விடக்கூடும். அதற்குள் பஸ்' நிலையத்தை அடைந்துவிட வேண்டுமென எண்ணி அவர். சிமிண்டு ரோட்டைத் தாண்டி இப்பால் வந்தார்.
என்று
ஒரு பூங்காவனப் பூவரசு குடை வட்ட
நிழலை வெளியே நடை பாதையில் பரப்பிக் கொண்டிருந்தது. அந்நிழலின் குளுமை இவ்வுலகை இழந்தும் அங்கு விழுந்து கிடக்கும் பேரானந்தத்தில் லயிக்கத் தக்கது பட்டது. எனினும் அதற்குள் தோல்விகளின் உருவமாக மனசில் திரண்டு விட்ட குடையை எப்படியும் மீட்டு விடுவது என்று ஒரு சவால் மூண்டு விடவே, வைராக்கியத் தால் உடல் சோர்வையும், மனச் சோர்வையும் ஓடுக்கி இரண்டு மூன்று எட்டுக்கள் வெகு வேகமாக எடுத்து
வைக்கலானார்.
டியை
அப்பொழுது அசைப்பில், பூங்கா வனத்திற்குள் அசைந்தாடி நகரும் அவளுடைய பிம்பம் அவருடைய பார்வையில் விழுந்தது. நின்று; மரஞ் செடிகளு கூட கூர்ந்து பார்க்கலானார். இலைக் கூட்டங்களின் இடை வெளியினூடே அவளுடைய உடல் துணுக்குகள் தெரிவ தும்மறைவதுமாக இருந்தன. தலைமீது நார்ப் பெட் இடது கையை பற்றியிருக்க; வலது கையை அதி லாகவத்துடன், உடலசைவுக்கு அநுசரணையாக வீசியபடி, தந்நிகரில்லையென நெளிந்துச் அசைந்தாடி, சென்று கொண்டிருந்தாள் அவள். பூங்காவனத்திற்குள் பார்வையைச் செலுத்தியவாறே, அடியெடுத்து வைத் தார். தலையும் கையும் அதிக அவசரம் காட்டின. ஆனால் அதற்கு ஏற்ப கால்களில் துரிசம் கூடவில்லை. கை அசைவில், மருந்து, புட்டியின் கழுத்து வழியே வழிந்தது. புட்டியை இடது கைக்கு மாற்றி வலது கையை. விரித்து ஒருமுறை பார்த்து விட்டு மிகுந்த அருவருப்புடன் வேஷ்டியில் துடைமீது பிசைந்து துடைத்தார். ஆயாச மூண்டு மூச்சுத் திணறத் தொடங்கி விட்டதென்றாலும், அப்பொழுது எதையும் பொருட்படுத்தாமல் கொஞ்சம் 'துரிசமாக நடந்து விட்டால் பூங்காவன முன் வாசலில் அவளைப் பிடித்து விடலாமென்ற நம்பிக்கை ஏற்பட்டது. பார்வையில் மறைந்துவிட்ட, அவள், அப்பொழுது பூங்காவன நூல் நிலையக்
கட்டிடத்தின் முன்னால்
அசைந்தாடிச் சென்று கொண்டிருக்கக் கூடும் எனக் கற்பனை செய்து, முன் வாசல் அடைய அவள் தாண்ட வேண்டிய தூரத்தை. மனசால் அளந்தபடி அசைந்து கொண்டிருந்தார். சற்று விரைந்து செல்வது சாத்திய மாயின் அவள் முன் வாசலை எட்டுவதற்குமுன், எதிர், நின்று மறித்து விடலாமென்று அவருக்கு நம்பிக்கை ஏற்படவே, மிகுந்த பிரயாசையுடன் கால்களை அதிக வேகத்துடன் இழுத்துப் போடலானார். நடைபயிலும் குழந்தைக்கு தன்பொறுப்பின்றி சில எட்டுக்களில் வேகம்
கூடுவது போலவே, படபட்வென அவருக்கும் சாத்தியமாகி விட்டன.
சில எட்டுக்கள்
முன்னால் எனில் இச் சிறு தூரம் அவருக்கு ஒரு பொருட்டல்லதான். சிபார்சுகளுக்கும் சிநேக தாட்சண் யத்துக்கும் அவர் அலைந்திருக்கும் அலைச்சல், ஒரு தெரு நாய் அலைந்திருக்கக் கூடியதல்ல. புது அறிமுகங்களைத் தேடியும், பரிச்சயங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் அவர் அலையாத வண்ணம் அலைந்திருப் பவர் தான். ஒரு தும்மல், தலைவ்லி தெரிந்தவர் அல்ல 'அவர். ஊளைச் சதையும், தொந்தி பெருத்தும் இருந் தென்ன? ஸ்தூலத்தை சதா வதைத்து ஏளனம் பண்ணும், சுறு சுறுப்பு அவருடையது. வந்து நின்றால், பந்தயக் குதிரை பின்னங்காலில் எழுந்து நிற்பது மாதிரி ஆளை அசத்தும் கம்பீரம், எப்பேர்ப்பட்ட கோடீசு வரனையும் நாற்காலியை விட்டு எழுப்பி அடித்து விடும். இளைஞ னாக தன்னை பாவித்து பஸ் புறப்பட்டபின் தாவித் தொற்றுவதிலும், பின்னங்கை கட்டியபடி, ஏணிப்படிகள் ஏறி இறங்குவதிலும் எவ்வளவு பெருமிதம் காட்டியவர் அவர். நாலு கம்பித் தூண்களுக்கு முன் நடந்து செல் கிறவனை குறி வைத்து, மேலும் இரு தூண்கள் அவன் தாண்டி விடுவதற்குள் எட்டிப் பிடித்து விடுவது "கலப் சாத்திய மாகத்தானே இருந்திருக்கிறது? இப்பொழுது கை தட்டினால் கேட்கும் பூங்காவன வாசலை எட்டுவது, சித்ரவதைப்படும் காரியமாகப் போய்விட்டது.
முன் வாசலை அடைந்ததும் அவருடைய பார்வை நாற்திசையிலும் வட்டமிட்டுத் துழாவியது. எங்கும் அவளைக் காணோம்!' பூங்காவனத்திற்குள்ளும் அவளு டைய தோற்றம் தென்படவில்லை. அக் குறுகிய நேரத் திற்குள் நின்ற நிலையில் அவள் மறைத்திருக்கக் கூடு மெனப் பட்டதே தவிர, அடியெடுத்துத் தாண்டிச் சென்றி ருக்கக் கூடுமென நம்ப முடியவில்லை. அவள் நடந்து வந்த பூங்காவனப் பாதை செப்பிடு வித்தைக்காரன் கை தட்டிக் காட்டியது போல வெறிச் சென்றிருந்தது.
க்ஷணப் பொழுதில் அவள் அவ்விடம் தாண்டி மறைந் திருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லைதான். ஆரோக் கியம் திமிர் பிடித்து உருளும் உடற்கட்டு அவளுக்கு. வில்லிலிருந்து புறப்பட்ட அஸ்திரம் போல் காரியம் நோக்கி விரையத் தெரியுமே தவிர அவள் பராக்கு பார்க் கிறவளும் அல்ல. அனுதினமும் சுற்றி வரும். இப் பாதை யில் அவளுக்கு ஒரு இசைவு கூடியிருக்கும். மேலும் அவள் சீக்காளியும் அல்லள். ரத்த அழுத்தம்-நீரழிவு கிடை யாது. சோகை இல்லை. அண்ணாந்து பார்த்தால் தலை சுற்றாது அவளுக்கு. அவள் பாக்கிய வாட்டி.
.
.
பூங்காவன முன் வாசல் ஒரு முச்சந்தி. மூன்று வழி களும், கண்ணெட்டும் தூரம் அவருக்குக் காட்சி தந்து கொண்டிருந்தன. எப்பாதையில் அவள் முன்னேறி
"
யிருக்கக் கூடும். என்பதும் அவருடைய அனுமானத்திற்கு அப்பாற்பட்ட தல்ல. ஏனெனில் அவளுடைய அன்றாட சஞ்சார மார்க்கத்தை ஒன்பது வருஷங்களுக்கு முன்னா லேயே அவருடைய மனசு தொகுத்து வைத்திருக்கிறது. -
அன்றாடம் காலை, புனித சவேரியார் கோயில் வாசல் முன்னின்று வெளிப்படும் அவள், பூங்காவனம் தாண்டி டவுனுக்குள் நுழைந்து பங்களாத் தெருக்கள் சுற்றி, மண்டபம் வழி, பொழுது சாயும் வேளையில் வடசேரி மேட்டில் தன் கூடு அடைய விரைந்து செல் வதைக் காணலாம்.
இப்பொழுது பின் தொடர்ந்து சென்று அவளை எட்டுவது ஆகாத காரியமாகப்பட்டது அவருக்கு. அவள் சிறகு முளைத்தவள். இறங்கி நேராக
குறுக்கு வழியி மண்டபம் சென்று விட்டால் பிற்பகலில் அவளை அங்கே -சந்தித்து விடலாம். அங்கு கொஞ்ச நேரம் காத்திருக்க நேர்ந்தால் அதுவும் இளப்பாறலாக அமையும். ஆனால் மண்டபம் கூப்பிடு தூரமல்ல. ஒன்றரை மைல் இல்லை யெனில் நிச்சயம் ஒரு மைலுக்குக் குறைவில்லை.
தனக்குத்தானே கிளப்பி விட்டுக் கொண்ட மூர்க்க வெறியுடன் அவர் நடக்கலானார். உடலும் சிறிது தெம்பு கொண்டு விட்டது போல் தோன்றிற்று. சுற்றல் சிறிதுமில்லை. மனச்சோர்வு, அதுகாறும் உடல் உபாதையை மிகைப்படுத்தி உணரச் செய்து கவலைக் கொள்ள வைத்து விட்டதை எண்ணியதும் அவருக்குச் சிறிது நாணமாகக்கூடப் பட்டது. அன்று காலையிலும் அதிகத் தெம்போடு இருந்திருக்கக் கூடுமே என எண்ணி னார். உடல் உபாதையை விட, அது: காரணமாகப் பிறரிடம் அதிக இரக்கம் பெற வேண்டுமென்ற ஆசையே ஓரளவு நடிப்புக்கும் தன்னை ஆளாக்கி விட்டதாகப் பட்டது. இப்பொழுது அவர் நடையில் இவ்வளவு விசை கூடிவிட்டது, அவரிடமே ஒரு ஹாஸ்ய உணர்வை ஏற் படுத்தியது. மண்டபத்திற்கு இட்டுச் செல்லும் குறுக்குப் பாதைத் திருப்பத்தில் க்ஷணப் பொழுதில் மிதந்து வந்து விட்ட மாதிரி ஒரு மயக்கம் கூட ஏற்படலாயிற்று.
அவர் குறுக்குப் பாதையில் திரும்பும் நிமிஷத்தில் எதிர் வீதியில் ஒரு வீட்டுக் கொல்லை மதிற் சுவரோடு ஒரு நார்ப்பெட்டி மறு கொல்லை தாண்டுவது அவரு டைய பார்வைக்கு இலக்காயிற்று. அப்படியென்றால் மேலும் சில நிமிஷங்களில் அவள் அவ் வீட்டிலிருந்து வெளிப்படக் கூடும். பார்வை அப்படியே அவ்வீட்டு வாசலில் படிந்து விட, கால்கள் முன் நோக்கி தானாக அசைய ஆரம்பித்தன. அவ்வீட்டு முன் வாசலில் ஒரு படுதா, வயசுப் பெண் சுற்றிக் கொண்ட ஏறிப்போன பாவாடை மாதிரி தொங்கிக் கொண்டிருந்தது. வின் அடியில் பாதங்கள் குறுக்கும் மறுக்கும் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன. வெகு நேரம் அப்படுதாவில் திருஷ்டி பதித்தபடியே, எதிர் வீட்டின் துளியூண்டு. நிழ லில், சுவரில் சாய்ந்தபடி வேர்த்து வழிய நின்று கொண் டிருந்தார்.
படுதா
ஒரு சிறுவன் குரோட்டன்ஸின் மறைவிலிருந்து வெளிப்பட்டான். திருட்டு விழிகளோடு வாயை புறங்கை
2
யால்
துடைத்துக்
கொண்டே வந்தான் . அவன்.
அக்கம் பக்கம் அவனருகே நகர்ந்து “முட்டைக்காரி இங்கு வந்தாளா?''
அவர்.
உணர்ந்தபடி, எனக்கேட்டார்.
“அன்னா போறாளே” என்றான் சிறுவன். "எங்கே? எங்கே?"
“அன்னா...அன்னா?”
சிறுவன் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினான். ‘அன்னா’ அண்ணா' வென அவன் வாய் முணு முணுத்த படி இருந்தது. தட்டெழுத்துப் பள்ளியிலிருந்து புஸ் புஸ்ஸென, வருணக் காகிதங்களை வாரியிறைந்ததுபோல் பெண்கள் வெளிப்பட்டு தெரு அடைத்து நிறைந்து கொண்டிருந்தனர்.
‘அன்னா... அன்னா...”
அவர். சுயப் பிரக்ஞையிழந்து விறுவிறுவென முன் நோக்கி நகர்ந்தார். கும்பல் தாண்டி, கண் முன் தெரு வெளிச்சிட்ட பின்பும் அவள் பார்வைக்குப் புலனாக வில்லை. நின்று பின் திரும்பியும், வீடுகளின் சுற்றுப் புறங் களில் நோட்டமிட்டபடியும் அவர் நகர்ந்து கொண்டி ருந்தார். மீண்டும் பின் திரும்பி குறுக்கு வழிதேடிச்செல் வது அவருக்கு ஆயாச வேலையாகப்பட்டது. அவ்வளவு தூரம் முன்னால் சென்று விட்டால் மிஷன் பள்ளிக் காம் பௌண்டை அடைந்து அங்கு புன்னைமரச் சோலை யில் களைப்பாறிக் கொண்டிருக்கலாம். பங்களாத் தெருக் களுக்குள் நுழைய, எப்படியும் அவள் அந்த இடம் தாண் டித்தானே ஆக வேண்டும். வார்த்தையாடவும் அது
மிகவும் தோதான இடம்.
* அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றிய கற் பனையில் அவர் ஆழ்ந்தார். ஒன்பது வருஷங்களுக்கு முன் அவளுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் போனது பற்றி தற்போது பிரஸ்தாபிக்காமலிருப்பதே விவேகம் என எண்ணிக் கொண்டார். அதைநினைவுறுத்
துவது போல் மோசமான துவக்கம் வேறு இல்லை. அன்று அவள் அழைப்பை அலக்ஷியம் செய்து உதறி விட் டதை எண்ணிய பொழுது அவருக்கு துக்கமும் ஆழ்ந்த பச்சாத்தாபமும் ஏற்பட்டன. அதற்கு முழுப் பொறுப் பும், தான் அல்ல; ஈசுவர சித்தம் அவ்வாறு அமைந்தது என ஒருவித சமாதானம் அடைந்தார்.
ஒன்பது வருஷங்களுக்கு முன் முனிசிபல் தலைவரின் வீட்டு வாசலில் அச்சம்பவம் நிகழ்ந்தது. சிபார்சுக்காக உடன் வந்திருந்தவர்கள் உள்ளே சென்றிருக்க, காரில் தன்னந்தனியாக அமர்ந்திருந்தார் அவர். வெகு நேர மாகியும் நண்பர்கள் வந்து சேராததில் சலிப்படைந்து இருக்கை கொள்ளாமல் பட்டுக்கொண்டிருந்தபொழுது, எதிரே தலையில் நார்ப்பெட்டியுடன் அவள் அசைந்தாடி வரும் தோற்றம் அவர் பார்வையில் விழுந்தது. அக்க ணமே அவர் ஒரு மனப் பதட்டத்துக்கும் ஆளாகிப் போனார். வெகு காலம் எதிர்பார்த்து நின்ற வேளை அன்று கூடிவிட்டது.
அவளுடைய தோற்றம் அங்குமிங்குமாக அதற்கு முன்பும் அவர் கவனத்தில் விழுந்ததுண்டு. அப்பொழுது பார்வை வட்டத்திற்குள் அவள் விழுந்து, தூரத்தால் மறைவுற்று விடுவது வரையிலுமோ, கூட்டத்தில்கரைந்து போய் விடுவது வரையிலுமோ, வெற்றுடல் நின்றஇடம் நின்றிருக்க, அவருடைய மனமும் பிராணனும் அவளைப் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அவளுடைய பின்னழகு அவரை மூர்க்க வெறி கொள்ளச்செய்துவிடும். அந் நாட்களிலிருந்தே ஒரு சந்தர்ப்பத்திற்காகத் தவம் செய்து கொண்டிருந்தார் அவர்.
ஒரு ராக்ஷசச் செடி முனிசிபல் தலைவரின் வீட்டு காம்பௌண்டுச் சுவரேறி, கொடிபடர்த்தி காடாய் மண்டிக்கிடந்தது. முட் செடிகள் வெகு அடர்த்தியாய் வெளியே தொங்கிக் கிடந்தன. காடுக்கும் சுவருக்குமான அவள். ஒரு அந்த இடை வெளியில் வந்து நின்றாள்
நிமிஷம் அவருடைய விழிகளை அவள் கூர்ந்து நோக்குவது போல் பட்டது. மறு கணம் அவள் உதட்டோரம் ஒரு புன் முறுவல் நெளிந்தது. அது ரொம்பவும் வேதாந்த பரமாகத் தொனித்தது அவருக்கு. லீலா வினோதங்களின் விசாரணை முடிவில் வெளிப்பட்ட தாத்பரியம் போல் ஒரு மயக்கம் ஏற்பட்டது. ஆனால் அவருடைய திக்பிரமையோ அடைந்த அழைப்பில் ஆச்சரியமோ தன்மை சிறிதும் அவள் முகத்தில் வெளிப்படவில்லை. தன்து உடன்பாடு அவளுக்கு விழுந்த அதிர்ஷ்டப்பரிசு என எண்ணிய மமதையை அடிநுனியில் கத்தரிக்கும் முகத்தோற்றம் அது. அவளுடைய முகபாலம் பள்ளத் தைப் பார்க்க வழியும் ஜலத்தை ஒரு குழந்தை வேடிக்கை பார்ப்பது போலிருந்தது.
"அபிப்பிராயமுண்டா?” என்று மட்டும் அவள்
கேட்டாள்.
குறிப்பிட்டு
விட்டு அவள்
அவர் தலையை அசைத்தார். இடமும் வேளையும் அப்பால் நகர்ந்து சென்றாள்.
பார்க்கையில் இப்போது நம்ப முடிய நினைத்துப் வில்லை. மறுநாள் வேளை வந்த பொழுது ஏனோ ஒரு விசித்திரமான அசிரத்தை தோன்ற, சோம்பி முடங்கி விட்டார் அவர். உடன்படுமென ஏற்பட்டுவிட்டதிலேயே அவருக்கு திருப்தி பிறந்து விட்டதுதான் பூராவும் காரண மெனச் சொல்வதற்கில்லை. மேலும் எங்கே எங்கேயென கொட்டாவி விட்டுக்கொண்டிருந்த நாட்கள் அல்ல அவை• இன்பங்கள் சூழ்ந்து வந்து தாக்குற தினுசுகளுக்கு பதில் சொல்ல அவகாசப்படாமல் திணறிக் கொண்டிருந்த நாட்கள். தலைக்கு நாள் நண்பர்களுடன் வெளியூர் சென்றிருந்தவர், அங்கு வழக்கமான "கேளிக்கைகளில் ஈடுபட்டு நடுநிசி தாண்டிய பின்னர்தான் வீடு வந்து சேர்ந்தார். விளக்கை அணைத்ததும் அவருடைய மனைவி அவர் படுக்கையில் வந்து தொம்மென்று சரிந்து அவர் முகத்தை தன் மார்போடு இழுத்து அணைத்துக் கொண்
டாள். தன் முகம் தவிர, பிறர் நோக்காப் போரண்மை தனது கணவர் ஒண்டிக்குத்தான் சொந்தமெனக் கருதும் அவளுடைய பேதைமையை எண்ணுகிற பொழுதெல் லாம் அவர் மனசு தழுதழுக்கும்.அவ்வாறு மன நெகிழும் வேளைகளில் அவளையும் ஒரு வேசியாகப் பாவித்து தன் னால் இயன்ற சந்தோஷங்களை அவளுக்கு வழங்குவது அவருக்கு சுபாவமாகப் படிந்திருந்தது. அன்றும் அவ் வாறே நடந்தது. விடிவது வரையிலும் அவளைப் பல வாறு தீவிரமாக சந்தோஷப்படுத்தலானார்.
காலையில் கண் விழித்தபொழுது வெயிலேறி விட்டது. முதல் நினைவாக முளைத்தது தலைக்கு நாள் சம்பவம்தான். அவள் - குறித்த வேளை அப்போது நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உடலும் மனசும் ஆயாசப்பட்டுக் கொண்டு வந்தது அவருக்கு. கை கால் துவண்டு தொய்ந்தன. அப்படியே மீண்டும் படுக்கையில் சாய்ந்தார். மன்மோ பலவிதமான கற்பனைகளில் லயிக்க ஆரம்பித்து விட்டது. சர்வ அலங்காரங்களோடு அசைந்து செல்லும் அவள், பெந்தக்கொஸ்தே சங்க போர்டின் இடது பக்கம் பள்ளத்தாக்குப் போன்ற சரிவில் இறங்கு வது போலவும், சுமை தாங்கியில் நார்ப் பெட்டியை அடையாளம் காட்டி வைத்து விட்டு, மேலும் கிடு கிடு பள்ளத்தில் இறங்கி புறம் போக்கு குடிசைகள்' தாண்டி ஓடு வேய்ந்த ஒரு ஒற்றைக் கட்டிடத்தினுள் நுழைவது போலவும், அவள் திருஷ்டிகள் சிமிண்டுப் பாதையிலேயே பதிந்து விட்டது போலவும் பல்வாறு கற்பனைகள் செய்து ஒரு விசித்திரமான சந்தோஷத்துக்கு ஆட்பட்டுக் கிடந்தார். காரியத்தை விடவும் கனவே அப்பொழுது அவருக்கு இதமாக இருந்தது.ஆனால் அன்று மாலை இழப்பின் பச்சதாபம் அவர் மனசில் கவிய ஆரம்பித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளிலும் அந்த நஷ்டத்தின் மதிப்பு அவர் மனசில் வளர்ந்ததே தவிர குறையவில்லை.
மிஷின் பள்ளிக் காம்பௌண்டில் புன்னை மரத் தடியில் தலை சாய்ந்தபடி ரோட்டையே வெறித்துப்
பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அவள் வாடைகூட அடிக்கக் காணோம்! மணி அடித்தது. பச்சை மாணவிகள் வெளிபட்டு எங்கும் நிறைந்து கொண்டிருந்தனர். பால வகுப்பைச் சேர்ந்த ஐந்தாறு குழந்தைகள் சற்று எட்ட வந்து நின்று கண் கொட்டாமல் அவரைப் பார்த்தபடியே ஒன்றுக்கொன்று குசுகுசுத்துக் கொண் டன அவருடைய கோலம் அக் குழந்தைகள் மனசில் ஒரு வேடிக்கை உணர்வையும் சிறுபீதியையும் ஏற்படுத்தின் எனத் தோன்றிற்று. அவர் இதை உணர்ந்து குழந்தை களைப் பார்த்து ஒரு அருமை பாவத்துடன் சிரிக்க முயன் றார். அவர் எதிர்பார்த்தது போலவே குழந்தைகள் மேலும் பயந்து பின், நகர்ந்தன. அவர் இரு கையூன்றி எழுந்திருந்து பள்ளியை விட்டு வெளியே வந்தார்.
எப்படியும் நடந்து சென்று மண்டபத்தை அடைந்து விடுவது என்ற எண்ணம் இப்போது அவரிடம் வலுப் பெற்றது. இம் முடிவுக்கு மாற்றமில்லையென் திட் சங்கல்பம் செய்து கொண்டார். பங்களாத் தெருக் களுக்கு இட்டுச் செல்லும் பாதை அதள பாதாளமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்படியே நடந்து சென்றால், திரும்பி ஒரு பனை உயரம் செங்குத் தாய் ஏறும் மேட்டுப் பாதையின் உச்சியே மண்டபம். நடந்தும் ஒதுங்கி அமர்ந்து இளைப்பாறியும் சென்று சேர்ந்துவிட முடியுமென்றே தோன்றியது.
வைக்கலானார்.
பள்ளத்தை
நோக்கி
அங்கு அவருக்குத் அடியெடுத்து
பள்ளத்தில் இறங்குவது சற்று ஏந்தலாக இருந்தது. உடலை முடிந்த மட்டும் தொய்த்துத் தள்ளாட, விட்டுக் கொண்டதில், தன்னுடலை இட்டுச் செல்லும் பொறுப்பை காற்றுக்கும் பாதையின் சரிவுக்கும் ஒப்படைத்து விட்டது போல் ஒரு மயக்கம் ஏற்படுத்திக் கொண்டார். இது மிகவும் அனுசரணையான யுக்தியாகப்பட்டது. ஆனால் சிறிது தூரம்கூட அவ்வாறு நகர்ந்து ஆகவில்லை.
அவருக்கு மூச்சுத் திணற ஆரம்பித்துவிட்டது. திறந்த வாயை மூட முடியவில்லை. உதடுகளை அசைத்தும் வெளியேற்ற அவஸ்தையை நாக்கைத் துருத்தியும் முயன்றார். தலையும் சுற்ற ஆரம்பித்தது. ) சரிவதற்குள் எண்ணத்தில் திண்ணைகளில் ஒதுங்கி விடலாமென்ற சற்றும் முற்றும் வெறித்தார். அந்த நண்பகல் வேலையில் முன் வாசல்கள் அடைத்துக் கிடந்தன. எதிரே குழாய் ஓரம் நகர்ந்து மின்சாரத் தூணை அணைத்துக் டார்.
கொண்
ஒரு
அவர்
தொண்டை வறட்சியும் தாங்க முடியவில்லை. முகத்தைக் கழுவி, இரண்டு மடக்கும் குடித்தால் ஆசுவாசம் பிறக்குமென்று தோன்றிற்று. அவருடைய விரல்களால் குழாயை அழுத்த முடியவில்லை. மீண்டும் மீண்டும் பலனின்று முயலுவதை கவனித்த ஒரு பெண், குடத்தை கீழே வைத்துவிட்டு அவருக்கு உதவி செய்தாள். வாயை குழாய் அருகே சரித்து, கையேந்தி இரண்டு மடக்குக் குடித்தார். அதற்குள் வயிற்றை வாரிச் சுருட்டிக் குமட்ட ஆரம்பித்தது. மீண்டும் தலையை தூணோடு சாய்ந்தபடி கண்களை மூடியுவாறு நின்றார். அப்பொழுது ஒரு வயோதிகக் குரல் ‘முட்டைக்காரி வந்தாளா?' என கரகரக்கவும், ஒரு இளங்குரல், 'இப்பம் பதில் வந்து போட்டு, அண்ணா போறாளே' என்று சொல்லிற்று. அவர் கண்ணை விழித்துப் பார்த்தார்.
வேகத்தில் புழுதி மண்டபத்தைப் பார்க்க அலைகள் வாரிச் சுருட்டி ஏறிக்கொண்டிருந்தன. காட்சி செம்மண் திரையில் மங்கி விட்டது. அதன்
நடுவே இடுப்புக்கு மேல் ஒரு பெண்ணுருவம் புழுதி அலைகளால் ஏந்தப்பட்டு கொண்டோடிச் செல்வது போலிருந்தது. மீண்டும் கண்ணை கொட்டிவிட்டுப் பார்த்த பொழுது அது வெறும் மன மயக்கம்தான் என்பது புலனாயிற்று. தலைசுற்றல் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமாய் இருந்தது. பையிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்து வாயில் ஒதுக்கிக் கொண்டர். ஏதாவது காலிக் குதிரை
அசுர
வண்டி அந்த வேளையில் அங்கு வந்து சேரலாகாதா என்று அவர் மனசு ஏங்கியது. ஆனால் அவ்வாறு வாய்ப்புகள் தக்ைகு ஏற்படக் கூடியதல்ல என்ற கசப்பும் உடன் எழுந்து, கொட்டும் மழையில் நனைந்தது போல் தலையும், முகமும், ஆடையும் ஈரம் சொட்ட, அடியெடுத்து முன்னால் செல்ல முயன்றார்.
வளைச்
து
அன்று அந்தி சாய்வதற்குள் எப்படியும் அவன சந்தித்து விடுவதுதான் நேரவிருக்கும் விதி என்ப அவருக்குத் தீர்மானப்பட்டு விட்டது. தான் பின் தொடர்ந்து வருவது அறியாது, விலகியும் மறைந்தும் செல்லும் அவளுடைய அஞ்ஞானத்தை எண்ணியபோது அவருக்கு அவள் மீது இரக்கம் கவிழ்ந்தது. அவளை சந்தித்ததும், ஆவள் பொருட்டு தான் எடுத்துக் கொண்ட சிரம்மங்களைச் சொல்ல வேண்டுமென எண்ணினார். கொஞ்சம் அழுத்தமாகவே சொல்லிவிட வேண்டியது அவசியமென அவருக்குப்பட்டது. ஒரு பெண் ஜென் மத்திற்கு இதைவிடவும் சந்தோஷம் அளிக்கும் விஷயம் எதுவும் இருக்க முடியாது என்று எண்ணிக் கொண்டார்.
ஒரு கணம் ஒதுங்கி விடுவோமா என்ற எண்ணம் ஏற் பட்டது. ஆயாசம் அதற்கு அவ்வளவு அதிகமாகி விட்டி ருந்தது. ஆனால் அவ்வெண்ணத்தை ஒப்புக் கொள்ளவே நாணமாக இருந்தது அவருக்கு. நடுவில் சோர்ந்து, அரை குறையாய்விட்டு காரியம் கெட்டகாரியங்கள் கொஞ்சமா அவர் வாழ்வில்? மீண்டும், இந்த வேளையிலும் அப்பேய் தன்னை பதம் பார்க்கப் பம்முவதை உணர்ந்த பொழுது அவர் மனசு ஆக்ரோஷம் கொண்டு நிமிர்ந்தது. தன்னை ஆயாசப்படுத்தி நடுவழியில் திருப்ப முயலுகிறார்கள் போலும்! தான் பின் திரும்புவது கண்டு மறைந்திருந்து நகைக்க மீண்டும் அவருக்கு ஆசை போலும்! அவ்வாறு கணக்கற்ற தடவை நகைத்தாயிற்று மீண்டும்...மீண்டும்... விதியின் வெற்றி கண்டு மார்தட்ட எத்தனை ஆசை. சோர்வும் உபாதைகளும் ஏவி விடப் பட்டனவையே
என்பது. இப்பொழுது அவருக்குப் புரிந்து விட்டது. கடைசி வரையிலும் தன்னை பின் திரும்புவதே சதியின் சூட்சுமம் என்பது அவருக்குத் தெரிந்தது.
இரு கரைகளிலும் இம்மி நிழல் கிடையாது, ரத்தம், வேக்காட்டில் சரும துவாரங்கள் வழி ஆவியாக வெளி யேறிக் கொண்டிருப்பது போல் பட்டது. வாய் உலர்ந்து கசப்புத்தட்ட ஆரம்பித்து விட்டது. மண்டபம் சமீபத்துக் கொண்டிருந்தது என்றாலும் தாண்டத் தாண்ட பின் நகர்ந்து சிறுத்துக் கொண்டிருப்பது போலதான் தெரிந்தது. நடக்க நடக்க நடை வழியும் தீரக் கூடியதாய் இல்லை.
அது
மண்டபத்தை அடைந்த பொழுது நின்று, தான் ஏறி வந்த பாதையைத் திருப்பிப் பார்த்தார், தன்னுடைய வைராக்கியத்தை அவரால் நம்ப முடியவில்லை. காறும் வீண் அலைச்சல் அலைந்து கொண்டிருந்த தனக்கு வைராக்கிய மார்க்கம் தட்டுபட்டு விட்டதை எண்ணி இன்ப உணர்வுகளுக்கு ஆட்பட்டார். ரோட்டோரம் பெந்தகோஸ்தே போர்டு பார்வைக்கு இலக்காகிவிட்டது. சற்றுக் கூர்ந்து கவனித்த பொழுது தன் பார்வைக்கு பிள் காட்டி நிற்கும் ஒரு கிழவி ஒரு பெண்ணுருவத்தை மறைத்து நிற்பது தெரிந்தது. இருவரும் மிக நெருங்கி நிற்பதனாது, நார்ப் பெட்டி யாருடைய தலையில் என்பது அவருக்கு மட்டும் படவில்லை. மனம், மாற்றி மாற்றி வைத்து விளையாடுவதை எண்ணி அலுப்புற்று
முகஞ்சுளித்தும், எதிர் வெயிலுக்கு இடது நெற்றில் பொருத்தியும் கூர்ந்து கவனிக்கலானார். கூர்ந்து பார்க்கப் பார்க்க பார்வை: மங்கிக்கொண்டே வந்தது.
கையை
இரு கைகளையும் இடுப்பில் ஊன்றி காற்றில் கிளை போல் அலையும் உடலாட்டத்தை லவலேசமும் பொருட் படுத்தாமல் நகரஆரம்பித்தார். கற்பனைப் பெயரொன்று சொல்லி கத்தலாமா என்று வந்தது அவருக்கு.
அப்
பொழுது அவருடைய மனச் கிலேசத்தில் எப்பெயரும் உதயமாகவு மில்லை. மனசை வைராக்கியத்துடன் குவித்து, கற்பனையில், உடலின் ஏதோ ஒரு மூலையில் மஞ்சியிருக்கும் ஜீவசக்தியை உறிஞ்சி யெடுத்து சரீரத்தை முன் நகர்த்த முயன்றார். அவள் தன் இடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறாள் என்பதில் அவருக்குத் துளி யும் சந்தேகமில்லை. தன் வருகை உணர்ந்து முன் சென்று ஆயத்தம் கொள்ளவே அவள் பின் திரும்பாது விரைந்து வந்திருக்கிறாள் என்பது இப்பொழுது அவருக்குத் தெளிவாகவே புரிந்து விட்டது. மீண்டும் ஒரு முறை அவளை ஏமாற்றத்தில் ஆழ்த்த தனக்கு எவ்வித உரிமை யும் இல்லை என்பதையும் உணர்ந்தார். அக்கொடிய பாவத்தைச் செய்யக் கூடியவராக கணமும் தன்னை எண்ண முடிய வில்லை அவருக்கு. தன்னுடைய அலைக் கழிப்பு வீணல்ல என உணர்ந்ததும் அவருக்கு மிதமிஞ்சிய மன சந்துஷ்டி ஏற்படலாயிற்று. இவ்வாறு வகையாக அமையவே சற்று திக்கு முக்காடுவது போல் பாவனை ஏற்பட்டது போலும்! கடவுளின் அனாதியான லீலைகள் எப்போதும் இவ்வாறு தானே என முணு முணுத்துக்
கொண்டார்.
ஓரடியும் எடுத்து வைப்பது சாத்தியமல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. கைக்கு எட்டும் நிலையில் வைராக்கியத்தை சோதிக்கும் கடைசி சோதனை இது என்பது அவருக்குப் புரிந்து விட்டது. நெஞ்சில் ஒரு சம்மட்டி அடி விழுந்ததுபோல்அப்படியே ரோட்டோரம் புழுதியில் உட்கார்ந்தார். நெஞ்சுக்குள் இரு:தூண்டில்கள் ஒன்றில் மற்றொன்று மாட்டிக் கொண்டு எதிர் திசை களுக்கு இழுபடுவது போல் பட்டது. இரு கரங்களையும் முட்டில் ஊன்றி எழுந்தபோது முதுகு நிமிரவில்லை. பாதையை பாதத்தால் அளந்து திட்டப்படுத்த முற் பட்டது போல் கால்கள் பின்ன ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்தார். ஒரு எட்டு வைத்து மறு எட்டு முன்
நகர மிகுந்த பிரியாசை' கொள்ள வேண்டி வந்து விட்டது.
இப்பொழுது அவளுடைய மோகன உருவம் அவரு 'டைய மனத்திரையில் தோன்றிற்று. மனக் கண்ணால் அவ்வுருவத்தை கண்ட மாத்திரத்தில் அவருக்கு ஒரு உன் மேஷமும் எழுச்சியும் பிறந்தன. தான் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரு முறை அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த் த்தும் பனிபோல் விலகிப்போய் விடுமெனஉணரலானார். தனது துயரங்கள் அப்பொழுது அவருக்கு அற்பமாகவே படும்.அப்பேர்ப்பட்ட அழகுக்கு இந்தஅற்ப துன்பங்களின் காணிக்கையேனும் செலுத்திப் பெறாதவரை அதற்கு மவுஸு இல்லையென்று பட்டது. அந்தத் துன்பமும் அந்த அழகின்ஒருபகுதியேஎன்றும் உணர்ந்தார். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க இயலுமென்று அவருக்குத் தோன்றவில்லை.
மீண்டும் மனக்கண் முன் அவ்வுருவத்தைக் கொண்டு வந்து, அதைக் கண்ணாரக் காண ஒருவேட்கை பிறந்தது. உருவம் கூடி வரவில்லை, அவ்வுருவம் உருண்டு திரளுகை யிலேயே அதன் பின்னணியில் புகை மூட்டம் ஒன்று கவிய, அரை குறைவான அவ்வுருவமும் பின்னணி மூட்டத்தில் கரைந்து விடுவதாக இருந்தது. கடந்த பல ஆண்டுகளில், இந்த நிஜ உலகில் இங்கும் அங்கும் தட்டுப்பட்ட அவளு டைய உருவத்தை மீண்டும் நினைவு கூர ஆனமட்டும் முயன்று பார்த்தார். ஒரு நிறைமாத கர்ப்பிணி பிருஷ்டம் பிதுங்க அவலக்ஷண நடைபோட்டுச் செல்லும் சித்திரம் மனசில் எழுந்தது. அவ்வாறு அவர் அவளை ஒரு முறை பார்க்க நேர்ந்தது, அவருடைய நினைவில் மின்னியது. அவ்விடத்தின் பின்னணியும் வேளையும் கூட இப்போது அவருடைய நினைவில் விரிந்தன. அப்பொழுது அவளு டைய தோற்றம் கொஞ்சம் ஆபாசமாகவே பட்டது. அடுத்து அடுத்து பல உயிர்கள் அவளிடம் காய்த்து வெளிப்பட்டதில், உடலும் கட்டுவிட்டு இறகு உரித்த
கோழிபோல் ஆகிவிட்டிருந்தாள். இன விருத்தியின் கேவல உபயோகத்திற்கு அவளும் கருவியாகிப் போன அக்கிர மத்தை எண்ணியபொழுதுநெஞ்சுகுமுறத்தான் செய்தது. முலைகள் வௌவால்கள் மாதிரி தொங்கி விட்டிருந்தன. பிருஷ்டங்கள் வெயிலில் 'காய்ந்த நுங்குபோல் சுண்டிப் போயிருந்தன.
அப்
ஒன்பது வருடங்களுக்கு முன் தனது மனத்திரையில் பதிந்த சித்திரத்தைத் தேடியா உடல் வருந்திக் குலைய இவ்லளவு தூரம் வந்தோம் என எண்ணிய பொழுது, ஒரு ஏமாற்ற உணர்ச்சி பந்து போல் மேலே கிளம்பி அவர் நெஞ்சை அடைத்தது. முன்னால்எனில்அவளுடைய அழகு தன் சிகரத்தை எட்டியிருந்த கோலம். பொழுது அவள்சொன்னபடிக்கு அவளுக்கு கல்யாணமாகி சில நாட்கதள ஆகியிருந்தபடியால் ஆண் வாடையில் அது பூர்ணமாய் பொலிவுற்றிருந்த வேளை. காலம்இதற் குள் அவளுடைய ஜீவ சக்தியைப் பிழிந்து விட்டிருந்தது என்பதே இப்பொழுது தான் அவருக்குத் தட்டுப்பட்டது.
அன்று
காலையில் பூங்காவனத்துக்குள் அளித்தது அவள் உருவம் தானா என்ற சந்தேகமும் இப் பொழுது அவர் மனசில் இழைய ஆரம்பித்தது. தன் பார்வையில் விழுந்த பிம்பம் இன்றைய அவளா,அன்றைய அவளா என யோசித்துக் குமைய ஆரம்பித்தார்.
காட்சி
அவளு
டைய தோற்றம் அவ்வாறு மதிமருள வைப்பதல்ல எனில், இன்றையத் தோற்றத்திலே அன்றைய அவளைப் போல் வேறு யாரையோ காண நேர்ந்து விட்டதே தனக்கு ஏற் பட்டிருக்கக் கூடிய பிசகோ என சந்தேகம் கொண்டார்.
கண்ணுக்குப் புலனோகாத சக்தி ஒன்று கிளம்பி வந்து தன்னை ஏந்தியெடுத்து தன் வீடு சேர்க்கலாகாதா என்ற ஆசை மனசைப் பிழிந்து வாட்ட ஆரம்பித்தது வீட்டின் நடுக் கூடத்தில் அவரை ஒரு நொடியில் கிடத்த ஒரு திவ்விய சக்தி உதவி புரியலாகாதா? அது ஒன்று மட்டும் தனக்கு லபித்து விட்டால் போதுமென எண்ணினார்.
திடீர்ரென்று மனசுக்குள் ஒரு அருவருப்பு மூண்டது. அவளுடைய நிர்வாணத் தோற்றம் அவர் மனதில் எழுந்தது.அம்மனக்காட்சியின் மேல் அவளுடைய பழைய தோற்றத்தை பதிக்க முயன்ற அவருடைய அத்தனை முயற்சிகளும் பாழ்பட்டுப் போயின. தலைவரின் வீட்டு முகப்பு வாசலும், தான் காரில் அமர்ந்திருக்கும் கற்பனை யும், முட் கொடிகள் சுவர் மீது படிந்து கிடக்கும் கோல மும் மனசில் உருவான பின்பும், தோல் போர்த்த எலும் புருவமாய், அங்கங்கள் ஒவ்வொன்றும் அவலக்ஷணம் -உமிழ, முட்டித் தட்டியபடி அவள் தள்ளாடியபடி வரும்
கோர சித்திரமே அவர் மனசில் மூண்டது.
தலை சுற்றி உடல் சரியவே பெந்தகோஸ்தே சங்க போர்டை எட்டிப் பிடித்துக் கொண்டார் அவர். அங்கி ருந்து கீழே பார்த்த பொழுது சுமை தாங்கியில் ஒரு தார்ப்பெட்டி தெரிந்தது. அதைக் கண்ணுற்றதும் அவருக்கு உடலில் ஒரு புளங்காகிதம் படர்ந்து பரவிற்று. சுய நினைவுகள் இழந்து மீண்டும் ஒரு வெறி அவர் உடலில் புகுந்து விளையாட ஆரம்பித்தது. கீழே முட்டுக் குத்தி உட்கார்ந்த படியே பள்ளத்தில் முளைத்திருந்த செடிகளைப் பிடித்துக் கொண்டே கால்களை ஆபாசமாக அகற்றி முன்னால் வைத்து கீழே இறங்கிச் சென்றார்.
சம தளத்தை எட்டியதும் மீண்டும் எழுந்து நடமாட முயன்றார். குடிசை வாசல்களில் பல பெண்கள் நின்று தன்னையே வெறிப்பது போல் அவருக்குப் பட்டது. அவர்கள் பக்கம் பார்வை திரும்பாது நகர்ந்து முன்னால் சென்றார். அறை வாசலில் நிலையின் மேல் சட்டத்தில் கரங்கள் தூக்கி, உடலை ஒயிலாய் சரித்து, வலது காலை படியில் ஏற்றி, தன் வருகை எதிர் நோக்கிக் காத் திருக்கும் மனச் சித்திரத்தை நோக்கி அவர்
அவர் சென்று கொண்டிருந்தார். அடர்ந்து கிளை பரப்பியிருந்த மரக் கிளைகளுக்குப் பின்னால் ஓடு வேய்ந்த ஒற்றைக் கூரை கண்களுக்குப் புலனானதும் உள்ளங் காலிலிருந்து பேரின்ப அலைகள் கிளம்பி அங்கங்கள் தோறும் பரவுவ
தாகத் தோன்றிற்று. அதற்கு ஈடான ஒரு பரவச உணர்ச் சிக்கு தான் எக்காலத்திலும் ஆளானது இல்லையென உணர்ந்தார். காலம் காலமாகப் புதையுண்டு கிடந்த துயரங்கள் அலை அலையாய் மேலே வந்தன. ‘மனசு கேவிக் கேவி மோனக் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தது.
முன் வாசல் சாத்தியிருந்தது. விரல்கள் நடுக்க. மெடுத்தன. ஆவல் நெஞ்சைப் பிளந்து விடக் கூடுமெனத் தோன்றிற்று. கதவை மெதுவாகத் திறந்தார்.
பாவி
அறை வெறிச் சென்றிருந்தது. செங்கல் யிருந்த தரை பெருக்கப்படாமல் தூசிபடிந்து கிடந்தது. ஒரு மூலையில் ஒரு அழுக்குக் கோரம் பாய் சுருட்டி வைக் கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்துதரையில் சாய்ந்தார்.
கைகளை-திறக்க இயலவில்லை. பக்கென்று பார்வை மறைந்தது போலிருந்தது. மார்பில் மூச்சு சுருட்டிச் சுருட்டி அடைக்க ஆரம்பித்தது.
பின் பக்கத்தில் யாரோ பாய் முடைவதுபோல் ஓலை களின் சலசலப்பு அவர் காதில் விழுந்தது.கவனம்திருப்ப எண்ணி, வாய் விட்டுக் கத்தமுயன்றார். குரல் அவர் மனசுக்குள் எழுந்து மனசுக்குள்ளேயே அடங்கி விட்டது. நாவரட்சியும் தாங்க முடியவில்லை. இரு கைகளையும் செங்கல் தரையில் சில கணங்கள் அடித்து ஓய்ந்தார்.
பார்வையில் மூட்டம் படர்ந்து கொண்டிருந்தது. ஜன்னல் வழி புலனாகிக் கொண்டிருந்த காட்சிகள் பின் நகர்ந்து தன்னுருவம், தன் நிறம் இழந்து வானத்தின் மூட்டப் பின்னணியில் கரைந்து கொண்டிருப்பது தெரிந் தது. அதன்
அதன் நடுவே சுமைதாங்கியில் நார்ப் பெட்டி மட்டும் தெளிவுற தெளிந்தது. நார்ப் பெட்டியின் பின்ன லும் விடுபட்டுச் சிலிர்ப்பது மாதிரியே இருந்தது. ஆனால் முற்றிலும் விடுபட்டு அவிழ்வதற்குள் இரு கரங்கள் மேல் எழுந்து அப்பெட்டியை சிரசில் ஏந்தி எடுத்துக் கொண் டன. நார்ப்பெட்டி, மேட்டில் கோணக் கோண. ஏறிச் சென்று கொண்டிருந்தது.
Saturday, August 16, 2025
முட்டைக்காரி - சுந்தர ராமசாமி
தளத்தைப் பற்றி
ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com