தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, October 09, 2016

சொந்த மண்ணிற்கு வருகை, காலைச்சிற்றுண்டி- ழாக் ப்ரெவர்

சொந்த மண்ணிற்கு  வருகை - ழாக் ப்ரெவர்
(மொ.பெ. வெ.ஸ்ரீராம்)
-க்ரியா அலியான்ஸ் ஃபிரான்சேஸ், சென்னை வெளியீடு

வடக்கு பிரான்சின் ப்ரெதோன் பிரதேசத்தை சார்ந்த அவன்
சொந்த மண்ணிற்குத் திரும்புகிறான்
பலவித இன்னல்களையும் அனுபவித்த பின்னர்.
துவார்வானெனல் துறைமுகத்   தொழிற்சாலைகளுக்கு முன்னால்
உலவிக்கொண்டிருக்கிறான்
யாரையும் அவனுக்குத்  தெரியவில்லை
யாருக்கும் அவனைத் தெரியவில்லை
சோகமாக இருக்கிறான்
க்ரெப் தோசை  சாப்பிடலாமென தோசைக் கடையில் நுழைகிறான்
ஆனால்அவனால் அவற்றை சாப்பிட முடியவில்லை அவனால்
இறங்க விடாமல் ஏதோ ஒன்று தடுக்கிறது
காசைக் கொடுக்கிறான்
வெளியேறுகிறான்
ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறான்
ஆனால் புகைக்க முடியவில்லை.
ஏதோ ஒன்று இருந்துகொண்டிருக்கிறது
அவன் தலைக்குள் ஏதோ ஒன்று
மோசமான ஏதோ ஒன்று
மேலும்மேலும் அவன் சோகமடைகிறான்
திடீரென அவனுக்கு நினைவிற்கு வரத் தொடங்குகிறது:
சிறுவனாக இருக்கையில் யாரோ அவனுக்குச் சொன்னார்
"உன் வாழ்க்கை தூக்குமேடையில் முடியும் ՝
ஆக, பல வருடங்களாகவே”
எதுவும் செய்ய அவனுக்குத் துணிவில்லை
சாலையைக் கடக்கக்கூட
கடல் தாண்டிச் செல்லக்கூட
எதுவுமே, சுத்தமாக எதுவுமே
அவன் நினைவுபடுத்திப்பார்க்கிறான்
எல்லாவற்றையும் முன்கூட்டியே சொன்னவர்
மாமா க்ரெஸியார்
எல்லோருக்கும் இன்னலை வரவழைத்த மாமா
அயோக்கியன்!
 பாரிஸில் வோழிரார் பகுதியில் வேலை செய்யும்
தன் தங்கையை நினைத்துப்பார்க்கிறான்
போரில் இறந்துவிட்டதன் சகோதரனையும்தான்
அவன் பார்த்திருந்த எல்லாவற்றையும்
செய்திருந்த எல்லாவற்றையும் நினைத்துப்பார்க்கிறான்.
சோகம் அவனை இறுக அணைக்கிறது
மீண்டும் ஒரு முறை முயல்கிறான்
சிகரெட்டைப் பற்றவைக்க
ஆனால் அவனுக்குப் புகைக்க விருப்பமில்லை
ஆக, மாமா க்ரெஸியாரைப் போய்ப் பார்ப்பதென்று
முடிவு செய்கிறான்
அங்கே போகிறான்
கதவைத் திறக்கிறான்
மாமாவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை
ஆனால் அவனுக்கு அவரைத் தெரிகிறது
அவரிடம் சொல்கிறான்:
"வணக்கம், மாமா க்ரெலியார்”
பின்னர், அவர் கழுத்தை நெறிக்கிறான்
 கேம்பர் நகரத்தின் தூக்குமேடையில்
தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறான்
இரண்டு டஜன் தோசைகளைச்   சாப்பிட்டுவிட்டு
ஒரு சிகரெட்டையும் புகைத்த பின்னர்.

காலைச்சிற்றுண்டி

காப்பியை ஊற்றினான்
கோப்பையில்
பாலை ஊற்றினான்
கோப்பைக் காப்பியில்
சர்க்கரையைப் போட்டான்
பால் கலந்த காப்பியில்
சிறிய ஸ்பூனினால்
கலக்கினான்
பால் கலந்த காப்பியைக் குடித்தான்
கோப்பியைக் கீழே வைத்தான்
என்னைப் பாராமலேயே
ஒரு சிகரெட்டைப்
பற்ற வைத்தான்
புகையை
வளையங்களாக விட்டான்
சாம்பலைத் தட்டினான்
சாம்பல் கிண்ணத்தில்
என்னிடம் பேசாமலேயே
என்னைப் பாராமலேயே
எழுந்தான்
 தொப்பியை அணிந்தான்
மழை பெய்துகொண்டிருந்ததால்
மழைக்கோட்டை
அணிந்துகொண்டான்
பிறகு புறப்பட்டுவிட்டான்
மழையிலேயே
ஒரு பேச்சுமின்றி
என்னைப் பாராமலேயே
நானோ
என் தலையைக் கைகளில் ஏந்தி
அழுதேன்.