தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, January 14, 2017

மதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு (முதல் 9 பககங்கள்)

images from  http://www.maamallan.com/2011/03/blog-post_8541.html

Automated Google OCR

மதகுரு நாவல் செல்மா லாகர்லெவ் தமிழில் : க. நா. சு. நூல் எண் 67 முதல் பதிப்பு: 1956 இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2009 432 பக்கங்கள் டெமி சைஸ்

வெளியிட்டோர் :

2/100 5வது குறுக்குத் தெரு குமரன் நகர் சின்மயா நகர், சென்னை - 600 092 )ே 938216466 Licát elejeci); marutha19990rediffmail.com

அச்சு யூனியன் பைண்டர்ஸ் & பிரிண்டர்ஸ், சென்னை - 14

 250

Madhaguru Novel Selma Lagerlöf Translated in Tamil by: Ka. Na Sul.

Book No.: 67 First Edition: 1956 Second Edition: December 2009 432 Pages Demy Size

Published by MARUTHA 2/100, 5th Cross Street, Kumaran Nagar, Chinmaya Nagar, Chennai- 600092. (3):9382116466 e - mail : marutha 1999@rediffmail.com

Printed by: Union Binders & Printers, Chennai- 14

Rs... 250

செல்மா ஒட்டிலியா லோவிஸா லாகர்லெவ் Selma Ottilia Lovisa Lagerlöf

(1858 - 1940)

செல்மா ஒட்டிலியா லோவிஸா லாகர்லெவ் சுவீடனில் உள்ள ஆஸ்ட்ரோ எம்டெர்விக் என்ற நகரத்தில் 1858ல் பிறந்தார். இவரது முதல் நாவலான மதகுரு ( Gosta Berlings Saga) 1891-ல் வெளியானது. 1895 முதல் 1896 வரை இத்தாலி முழுவதும் சுற்றிவிட்டு, தி மிராக்கில்ஸ் ஆப் ஆன்டிகிறிஸ்ட் (The Miracles Of Anthis - 1897) லொவானிஸ்கில்டின் கணையாழி (The Ring of Lowenskolds – 1928),போன்ற இவரது நாவல்கள் இவருக்குப் பெரும்புகழ் தேடித் தந்தன. 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. 1940-ல் காலமானார்.

________________




க. நா. சு. (1912-1988) (மொழிபெயர்ப்பாளர்)

மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகை (சூறாவளி, சந்திரோதயம், இலக்கியவட்டம்) ஆசிரியர் என முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தவர். அவரைப்போல் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்த தமிழ் எழுத்தாளர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம் உலகப் பேரிலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார். அவர் மொழிபெயர்த்த நூல்களின் பட்டியல் நீளமானதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறோம். 1 மதகுரு (ஸ்காண்டிநேவியன் நாவல் - செல்மாலாகர்லேவ்) 2 நிலவளம் (நார்வே நாவல் - நட்ஹாம்சன்) 3 தபால்காரன் (பிரான்ஸ் - ரோஜர் மார்டின் தூ கார்டு) 4 பசி (நார்வே நாவல் - நட்ஹாம்சன்) 5 குறுகிய வழி (பிரெஞ்சு நாவல் - ஆந்த்ரே மீடு) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளிவந்த நூல்கள் : 1 திருக்குறள், 2 சிலப்பதிகாரம், 3 தலைமுறைகள், 4 தமிழ்ச் சிறுகதைகள் தொகுப்பு மயன் கவிதைகள்' என்ற நூலுக்காக 'மகாகவி குமரன் ஆசான் விருது, தமிழ்நாடு அரசு இலக்கியப் பரிசு பெற்றவர். 1985-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.

இறவாத புகழுடைய நூல்கள்

1931-ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில் என்னுடைய பத்தொன்பதாவது வயதில், நான் முதன்முதலாக இந்தக் கெஸ்டா பெர்லிங் ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை ஆதிமுதல் அந்தம்வரை ஐம்பது தடவை களாவது படித்திருப்பேன். இப்போதும் மொழிபெயர்க்க உட்காரும் போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால், தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.

படிக்கும்தோறும் படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை 

கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் எனக்குத் தோன்று கின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்கைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்கும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.

(2)

சென்ற ஐம்பத்தைந்து வருஷங்களில் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஆசிரியர்களின் வரிசையில் சற்றேறக்குறைய அறுபது பேர் இடம்பெற்றி ருக்கிறார்கள் இந்த வரிசையில் இடம்பெறாத - ருஷ்ய டால்ஸ்டாய், ஆங்கில, தாமஸ் ஹார்டி போன்றவர்கள் - பலரும் உண்டு இவர்கள் எல்லோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது செல்மா லாகர்லெவின் பெருமை தனிப்படத் தெரிகிறது. வாழ்க்கையில் ஒரு லட்சியத்தின் அவசியத்தை வற்புறுத்துகிற நூல்களுக்கே நோபல் இலக்கியப் பரிசு கொடுக்கப்படவேண்டும் என்பது அந்தப் பரிசை ஏற்படுத்திய நோபலினுடைய எண்ணம் இதுவரையில்

________________




பரிசு பெற்றுள்ளவர்களில், லட்சியம் என்கிற விஷயத்தில் முதல் ஸ்தானம் பெறக்கூடிய ஆசிரியை செல்மா லாகர்லெவ்தான் எழுத்திலே மனுஷ்ய லட்சியங்களுக்குக் கற்பனை உருவம் தந்திருப்பது மாத்திரமல்ல அற்புதமான கவிதை உருத் தந்திருக்கிறாள். கெஸ்டா பெர்லிங் அவளுடைய முதல் நாவல் அவளுடைய முப்பத்து மூன்றாவது வயதில் 1886-ல் இது வெளிவந்தது வேறு எதுவுமே அவள் எழுதியிராவிட்டாலும்கூட உலக இலக்கியத்தில், இந்த ஒரு நாவலின் மூலம் அவளுக்கு நிரந்தரமான ஸ்தானம் கிடைத்திருக்கும் ஆனால் லாகர்லெவின் அன்பர்கள் பலர் அவள் எழுத்துகளில் போர்ட்டு கலியாவின் சக்கரவர்த்திதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். வேறு பலர் ஜெரூஸலம்தான் சிறந்தது என்கிறார்கள். அவற்றின் நயங்கள் சிறந்தவைதான் எனினும் கெஸ்டா பெர்லிங்குக்கு ஈடான வேறு நூல் அவள் எழுதவில்லை என்றுதான் உலகம் போற்றுகிறது.

கெஸ்டா பெர்லிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத் திலேயே மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்தியாவின் இதிஹாஸங்களான ராமாயணமும், மஹாபாரதமும், கிரேக்க பாஷையின் காவியங்களான இலியாதும் ஒடிஸியும், இத்தாலிய டாண்டேயின் தெய்வநாடகமும், ஜப்பானின் நாவல் லேடி முரஸாகி, ஸ்பெயின் தேசத்து டான் க்விஜோட் ஆங்கிலேயரின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இவற்றையே இந்த நாவலுக்கு ஈடாகச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன நூல்களிலுள்ள ஒரு பூரணத்வம் என்கிற தன்மைகளை இந்தக் காலத்திய எழுத்துகளில்

காணக்கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரியான பூர்ணத்துவம்,

கெஸ்டா பெர்லிங் ஸாகாவில் இருப்பது, அதைத் தனி ஒரு சிகரமாக உயர்த்துகிறது என்று சொல்லத் தோன்றுகிறது. இன்றைய நாவலாசிரியர்களிடையே அபூர்வமாகிக் கொண்டி ருக்கும் இந்தப் பூரணத்வத்தை நாம் இப்போது (ஜெர்மனியிலிருந்து தப்பி அமெரிக்கராகிப் பிறகு இப்போது ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும்) ஜெர்மன் ஆசிரியர் தாமஸ் மானின் மந்திரமலை, வெனிஸ் மரணம் போன்ற நாவல்களிலும், பிரெஞ்சு ஆசிரியர் ஆந்த்ரே லிடுவிடமும் (அதுவும் சிறப்பாக Strait is the gate - குறுகியது பாதை என்கிற நாவலிலும்தான்) காண முடிகிறது. இந்தப் பூரணத்வத்தை வார்த்தைகளைக் கொண்டு விவரிப்பதைவிட உதாரணங்களால் விளக்கிவிடுவது சுலபம் என்பதற்காக ஹொனோ பால்ஸாக்கின் நாவல்கள் எல்லாவற்றையுமாகச் சேர்த்துப் பார்த்தால் இப்பூரணத்வம் காணப்படுகிறது என்று சொல்லலாம். கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது, கலையை மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன், கவித்வம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி ஒரு சம்பவத்தை உருவகப்படுத்து கிறாள். இந்தமாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிகளைத் தவிர, வேறு யாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்

6 + மதகுரு +

இந்த கெஸ்டா பெர்லிங் ஸாகா காவியத்திலே எத்தனை அற்புதமான மனிதர்களையும் ஆண்களையும் பெண்களையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் ஆசிரியை பெண்களில்தான் எத்தனை ரகம்? அன்னா ஸ்டீன்பெக், சீமாட்டி எலிஸபெத் மரியாள் லிங்க்ளேர் - இவர்கள் யுவதிகள் பெரிய சீமாட்டி, ஏக்பி சீமாட்டி மார்கரிடா முதலியவர்களைத்தான் நாம் மறக்க முடியுமா என்ன? சகல கலா வல்லவர்களான உல்லாஸ புருஷர்களை யாரால் மறக்கமுடியும்? கெஸ்டா மட்டுமா காவிய நாயகன். அவனுடன் நடமாடுகிற ஒவ்வொருவருமே காவிய நாயகன்தான் ஸிண்ட்ராம் என்பவனைத்தான் சைத்தானின் இன்றையப் பிரதிநிதியாக எவ்வளவு நாசுக்காக தீட்டியிருக்கிறாள் கஞ்சன் அந்த ப்ரோபி மதகுரு - அவனையும் காதல் வெல்கிறது. "அவன் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்காமலிருந்துவிட முடியுமா?" என்று அன்னா, தான் காதலிக்காத ஒருவன் கல்லறை மேல் நின்று அவன் தாய்க்கு வாக்களிக்கிறாளே அதற்கு ஈடாக உலக இலக்கியத்தில் பீஷ்ம பிரதிக்ஞையைத் தவிர வேறு எதைச் சொல்ல முடியும்?

கெஸ்டா பெர்லிங்கைத்தான் எவ்வளவு அன்புடனும் அழகுடனும் தீட்டி இருக்கிறாள் ஆசிரியை? ஆனால் மேடை முழுவதையும் கெஸ்டா விடம் விட்டுவிடவில்லை அவள் காவிய திருஷ்டியுடன் அவள் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உரிய இடமும் அழகும் மெருகும் தந்து சித்திரிக்கிறாள். ஒரு கனவுலகம்தான் என்றாலும் அதில் ஏற்றதாழ்வு நிறைவுகுறைவு எல்லாம் சரியானபடி, திருப்தி தரும்படியாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கத்தில் வந்து மறைந்துவிடுகிற கதாபாத்திரம்கூட உரிய அளவில் மனத்தை விட்டகலாத வார்த்தைகளில், தீட்டப்பட்டிருக்கின்றன.

இந்த நூலை நாவல் என்று சொல்லலாமா? கெஸ்டாவைப் பற்றி விவரிக்கும் சம்பவக் கோவை என்று சொல்வதுதான் பொருந்தும் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். முப்பத்தெட்டுக் கதைகளை, அற்புதமான சம்பவங்களை, ஆசிரியை மெல்லிய தங்கச் சரட்டில் கோத்திருக்கிறாள். ஸாகா என்றால் புராணம் என்று அர்த்தப்படும் புராண புருஷனான கெஸ்டாவின் மஹிமையைச் சொல்லும் நூல் என்று ஸ்வீடிஷ் தலைப்பை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இது நாவலா, நாவலல்லவா என்பது பற்றி விவாதத்துக்கு இடமுண்டுதான். நாவல் என்றால் இப்படி ஏன் இருக்கலாகாது என்று கேட்பதைத் தவிர விவாதத்தை முடித்து வைக்க வேறு வழியில்லை.

ஆங்கில விமர்சகர்களுக்கு ஆங்கில இலக்கியத்திற்கப்பால் சாதா ரணமாக அதிக ஈடுபாடு கிடையாது. ஆகவே கெஸ்டா பெர்லிங்கைப் பற்றியோ, செல்மா லாகர்லெவைப் பற்றியோ எதுவும் விவரமான விமரிசனம் கிடைப்பதரிது. பிரெஞ்சு இலக்கியம் கொஞ்சம் ஜெர்மன் இலக்கியம் தவிர்க்கமுடியாத கஷ்டத்துக்காக கொஞ்சம் ருஷ்ய இலக்கியம் - இவை தவிர, ஆங்கில இலக்கிய விமர்சன உலகம் வேறு யாரையுமே அறியாது. கண்ணில் பட்டாலும், படாத மாதிரியே இருந்து விடும். இது

செல்மா லாகர்லெவ் / கநாசு + 7________________




காரணமாகத்தான் ஸ்காண்டினேவிய இலக்கியம் பற்றிய விலரங்கள் விமர்சனங்கள் ஆங்கிலத்தில் அவ்வளவாகக் காணப்படவில்லை ஸ்காண்டினேவிய இலக்கியத்தில், ஸ்வீடிஷ், நார்வே பாஷை இலக்கியங்கள் வெகுவாக வளர்ந்து இன்றுள்ள எந்த இலக்கியத்துக்கும் ஈடு சொல்லக்கூடிய அளவில் வளர்ந்திருக்கின்றன. ஒரு நூறாண்டிற்குள் ஏற்பட்ட இந்த வளர்ச்சி பிரமாதமானது ஸ்வீடிஷ் இலக்கியத்தில் ஸ்டிரிண்ட் பெர்க் லாகர் லெவ், வான் ஹைடன்ஸ்டாம் பெர்ஹால்ஸ் டிராம் "அன்புவழி ஆசிரியர் பெர் லாகர்க்விஸ்டு போன்றவர்களும் நார்வே இலக்கியத்தில் இப்ஸன், ப்யேர்ண்ஸன், நிலவளம்" ஆசிரியர் நட்
ஹாம்ஸன் போன்றவர்களும் தமிழ் வாசகர்களுக்கும் இலக்கிய உலகுக்கும் அறிமுகமாக வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை வளரும் தமிழிலக்கியத்துக்கு ஸ்காண்டினேவிய ஆசிரியர்கள் சிறந்த வழி காட்டுவார்கள் என்பது என் நம்பிக்கை பல வருஷங்களாகவே கெஸ்டா பெர்லிங் ஸாகாவை மொழிபெயர்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கிருந்து வந்ததுண்டு சமயம் வாய்க்கும் போதெல்லாம் சில பகுதிகளை மொழிபெயர்த்து வந்தேன். இப்போது முழு நூலை வெளியிடும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 
தமிழ் வாசகர்கள் பாக்கிய சாலிகள் கெஸ்டா பெர்லிங் ஸாகா போன்ற ஒரு நூலைப் படித்து அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்தான் சந்தேகத்துக்கிடமேயில்லை.




மதகுரு




ஆலயத்தின் பிரார்த்தனை மேடையின் படிகளிலே ஏறி வந்து கொண்டிருந்தார் 
மதகுரு அவரைக் காணும்வரையில் ஆலயத்தில் கூடியிருந்தவர்களின் தலைகள் தொங்கலிட்டுக் குனிந்திருந்தன. அவரைக் கண்டதும் அவை தாமாகவே நிமிர்ந்து கொண்டன. அப்பாடா! மதகுரு வந்துவிட்டார். அவர் அன்றும் வராமலிருந்துவிடுவாரோ என்றுதான் எல்லோருக்கும் பயம் நல்லவேளை வந்துவிட்டார் எத்தனையோ 
ஞாயிற்றுக்கிழமை களில் அந்த ஆலயத்துக்கு மதகுரு வராத காரணத்தினால், பிரார்த்தனை நடைபெறாமலேயிருந்து விட்டதுண்டு எனினும் இந்த ஞாயிறன்று அவர் வந்து விட்டார் பிரார்த்தனையும் கீதங்களும் சேவையும் முறைப்படி நடக்கும்.


எவ்வளவு உயரமான மனிதர் அவர் ஒற்றைநாடியாக கம்பீரமாக வளர்ந்திருந்தார் அவர் முகத்திலேதான் என்ன அமைதியான அழகும், காம்பீர்யமும் இருந்தது இரும்புக் கவசமணிந்து வந்திருந்தாரானால், ஒரு கிரேக்க வீரனின் சிலையே உயிர்பெற்று நடமாடுகிறது என்றே சொல்ல லாம். அவர் கண்களிலே ஒரு கவியின் 
ஆழம் இருந்தது கண்ணுக்குக் கீழே அவர் முகம் ஒரு வீரனின் முகமாக இருந்தது உலகையே ஆட்டி வைக்கும்  சக்திவாய்ந்த ஒரு ராஜகம்பீரம் அங்கு இருந்தது. அந்த முகத்தின் பாவத்திலே அவர் நின்ற நிலை நடந்த நடை,  அசைந்த அசைவு களெல்லாம் அவருடைய அறிவுக்கும், ஆற்றலுக்கும், தீரத்துக்கும், திடத்துக்கும், பண்புக்கும், கவித்வத்துக்கும் கட்டியங் கூறின. அவர் வந்ததுமே விவரிக்கவொண்ணாத ஒரு கவிதாப் பிரஸ்ன்னம் அங்கு 
வந்துவிட்டது போல இருந்தது ஆலயத்தில் கூடியிருந்தோருக்கு அவரிடம் ஒரு பயமும் பக்தியும் அந்த நிமிஷத்தில் ஏற்படுவதுபோல இருந்தது.


ஆனால் அங்கிருந்தவர்களில் அநேகமாக எல்லோருக்குமே அவருடைய இன்னொரு தோற்றமும் நன்கு பரிச்சயமானதுதான். கர்னல்பீரன் க்ரட்ஸ், கிரிஸ்டியன்பெர்க் என்கிற பலசாலியான தளபதி இருவரும் உடன்வர, அவர் குடிகார விடுதியிலிருந்து மீண்டும் குடிகார விடுதிக்கே தள்ளாடித்தள்ளாடிச் சென்று, மேலும்மேலும் குடித்து பிரக்ஞை இழந்து கிடக்கிற தோற்றமும் அங்கு கூடியிருந்தவர்களுக்கு அறிமுகமான தோற்றம்தான்.

......