தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, January 06, 2017

பெருமாள் முருகனின் இரட்டை நாவல்கள் - மாரப்பன் : சதுக்கப்பூதம்

 Automated Google_OCR

padippakam

2. பெருமாள் முருகனின்
இரட்டை நாவல்கள்
ஆரம்பத்தில் அலுங்காமல் குலுங்காமல் அசைந்து வந்ததேர் ஒரு முடக்கில் கிடைதட்டி நின்று விட்டபோது பெருமாள் முருகன் ஒரு பக்தி ஆவேசத்துடன் அலைக்கூட்டி தனிமனிதனாக வடம்பிடித்து ஒடவைக்க முயற்சித்திருக்கிறார் என்ற பட்சபாத மற்ற வாதம் ஒரே மூச்சில் தம்கட்டி ஒன்றன்பின் ஒன்றாக கொண்டு வந்த அவரது ஏறுவையில் நிழல்முற்றம் - இரட்டை நாவல்களின் - வேகத்திலும் விறுவிறுப்பிலும் தெளிந்து கிடக்கின்றன. இன்னும் சரியாக குறிக்கவேண்டுமானால் ஒரு விதமான சேத்துவேஷம் போட்டுப் புரண்டு விசுவரூபத்தை காட்டியிருக்கிறார் - மொன்னை அரிவாகை வழக்கமாக தூக்காமல் சாணை திட்டிய கூரான வாளை சுழட்டிக்கொண்டு வீரக்களத்தில் விளையாட இறங்க்கியிருக்கிறார்-என்றும் நீட்டிக் கொள்ளலாம் ஒரு சனி ஞாயிறு விடுமுறையில், வேப்பமரத்து நிழலில் கட்டில் போட்டு வரிசைக்கிரமமாக இருநாவல் களையும் வாசித்தபோது அதன் சங்கிலித் தொடர்ச்சிகள் என்னில் சிலப்பதிகாரம்- மணிமேகலை இரட்டைக்காப்பியங் களைத்தான் முன்னிறுத்தியது. இளங்கோவடிகளும் சித்தலைச் சாத்தனாரும் கதையை ஆளுக்குப் பாதியாக அறுத்துக் கூறு கட்டிக் கொண்டதைப்போலோ-ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடியதைப் போன்றோ - பங்குப் பாகப்பிரச்சினையோ, அசிரத்தையோ பெருமாள் முருகனுக்கு ஏற்படவில்லை. கதையிலும் சரி, களத்திலும் சரி-ஒட்டி உறவாடிய உற்றார் உறவினர்களும் ஓடிவிளையாண்ட ஊரும் கைகொடுத்திருக்கிறது. தன் சொந்த மண்ணை ஏர்கட்டி உழுததில் பெருமாள் முருகன் பெருவெற்றி ஈட்டியிருக்கிறார். இதில்தன்னோடு அண்ணன், அக் காள் அம்மா அப்பா பாட்டன்-பாட்டிகளையும் இழுத்துவிட்டிருக் கிறது தெரிகிறது. ஒரு கொங்குக் குடும்பத்தின் பெற்றோர் உடன்பிறப்பு, வேலைக்காரி போன்ற நிலைத்த உறவுகளில் பணத்தின் வரவு எப்படியெல்லாம் வேலையைக்காட்டி விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்பது திருச்செங்கோடு வட்டாரத்தின் பின்னணியாக பெருமாள் முருகன் தரும் மறைமுக விமர்சனம். இவரது கண் முன்னால் கூட்டப்பள்ளி மண் கத்தக் கத்தக், கதறக்கதற புல்டவுசர் அரக்கனால் கற்பழிக்கப்பட்டு காலணி என்ற திருட்டுக் குழந்தையையும் பெற்று இக்கத்தில் இடுக்கிக் கொண்ட போது, இந்தக் கண்ராவியைக் காணச்சகிக்காமல்
14 A. F. g.
படிப்பகம்padippakam
தலையில் துண்டைப்போட்டு சந்தைப்பேட்டைமேடு விஜயா தியேட்டரில் நிழலுக்கு அன்டிய போது அங்கும் வெயில்தான் தகித்தது. நேராக மேற்க்கில் ஈரோட்டுக்கோ, கோயம் புத்தூருக்கோ, போகத்தெரியவில்லை. கிழக்கே திருச்செங் கோட்டுக்கோ, சேலத்துக்கோ, சென்னைக்கோ சடீரென்று பறந்துவிடமுடியுமா?. இந்த இடைப் பகுதி - in between-தான் *நிழல்முற்றம்' காலங் காலமாக காப்பாற்றிய பூமி-கரைசேர்த்து வைத்திருந்த பிதுராஜித சொத்துக்கள்-பறிபோனபின் வெளியில் எட்ட இருந்து பார்க்காமல் மேடையின் உள்ளே ஒரத்தில் நின்று பிராமிட்டையும் எடுத்துக்கொடுத்து நாடகத்தையும் ஒட்டி யிருப்பதைப் போல் செயல்பட்டிருக்கும் பெருமாள் முருகனின் இந்தப் புதிய யுக்தி தமிழ்நாவல்களுக்குப் ரொம்பவும் புதுசு தான் அமைப்பு மாறும் போது அகராதி விரிவடைவதில்லை. தமிழ் அகராதி நவீனப் படுத்தப்படும் போது நிச்சயம் பெருமாள் முருகனின் சில கண்டு பிடிப்புச் சொற்களை சேர்த்துத்தான் தீரவேண்டும், 

ஆ. ஷண்முகசுந்தரத்தின் அடியொற்றிய கொங்கு நாவலா இரியர்களான கு. சின்னப்ப பாரதி, சி. ஆர் ரவீந்திரன், க. சுப்ரமணியன், சூர்யகாந்தன், இரா. வடிவேலன், விட்டல்ராவ் ஜி.சித்தார்த்தன் வரிசையில் பெருமாள் முருகன் வந்தாலும் அவர் களிடமிருந்து கத்தரித்துக் கொண்டும் பிற பிரபல தமிழ் நாவலாசி ரியர்களிடமிருந்து வெகுதூரம் விலகியும் இவர் நிற்கிறார்.கொங்கு நாவல்கள் தமிழில் வித்தியாசமான ஒரு இனிமையை பெறுவதற்கு ஆர்.ஷ. வின் கெட்டியான அஸ்திவாரம் மட்டுமல்லாமல் அதன் கிராமங்களின் மண்வாடையும் ஒரு மூலகாரணம். அளவில் ஓங்கி நிற்கும் கரிசல் இலக்கியங்களில் நீர்வரட்சியைத் தவிர இதர கரிசனைகள் கிடைப்பதில்லை. தஞ்சை கிராமங்களின் வயல்வாசணையை சி. எம். முத்து தனது 'நெஞ்சின் நடுவே *கறிச்சோறு நாவல்களில் தன்னை மீறிச் சிறப்பாகச் செய்திருக் கிறார். ஆர். ஷண்முகசுந்தரத்தை கி. ராஜநாராயணனோடு ஒப்பிட்டு பூச்சாண்டி காட்டி அற்பசந்தோஷமடைவது பாதி வயிறு தின்றுவிட்டு பத்தாதற்கு பச்சைத் தண்ணீரை "மொடக் மொடக்" என்று குடித்த பரம்பரை ரசனைப் பஞ்சத்தைதான் காட்டுகிறது. ஆர். ஷண்முகசுந்தரத்தை தாமஸ்ஹார்டிக்கு முன்னால் நிறுத்ததிரணியில்லாமல் தமிழ்த் தூசிகளுக்கு முன்னால் நிறுத்துவது குண்டுசட்டிக் குதிரை விமர்சன வறட்சியன்றி வேறென்ன?ஹார்டிடோர்சஸ்டர் மண்ணையே எழுத்தாக்கியதால் தான் அவன் ஆவி அங்கேயே திரிகிறதாக இன்றும் கூறுகின்றனர். ஆா ஷ-வுக்கு இத்தா பிடி’ என்று கையில் திருவோட்டைத்தான் திணித்தது தமிழ்நாடு. உலகின் எந்தப் பெரிய நட்சத்திர நாவலாசிரியர்களும் நிலத்தின் பூலோகத்தன்மையை, ஒரு குறிப்பிட்ட வட்டார வாழ்க்கையின் விசேஷத்தை இவர்களைப் போல் தோண்டி பேச்சு இலக்கிய மாக்கியதில்லை. ஒரு வெங்கமேட்டுச்சந்தையும், (நாகம்மாள்) எட்ஜான் ஹெத்தும், (Edgon Heath - in 'THE RETURN OF THE NATIVE) 2-G)é5 இலக்கியத்தில் என்றும் நிலைத்திருக்கும் அதன் ஆசிரியர்கள் பெயர் மறந்துவிட்டால் கூட, இவர்கள் கமிட்டி
af. 4. A 15
படிப்பகம்padippakam
முடிவு செய்யும் உலகின் விலையுயர்ந்த பரிசுகளையோ குருட்டாம் போக்கான வாசக கும்பலையோ கொண்டவர்கள் அல்ல. இப்படித்தான் ஒருகாலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் உறுப்பினராக இருந்தால் ஜெயகாந்தனும் சுந்தரராமசாமியும் அலக்காகத் தூக்கப்பட்டு பிறகு தொப்பென்று கீழே போடப்பட்டார்களே ஒழிய, இவர்களது இலக்கியம் என்று அல்ல் 

இவர்களது படைப்பில் பிரச்சாரவாடை இல்லையென் றாலும்கூட நாவல்களைப் பொறுத்த வரையில் வடிவமோ, கனமோ இம்மிகூட தென்படாதது பரிதாபந்தான் இருக் கிறது என்றால் ஒரு காலத்தில் இவங்க நம் ஆளுங்கைய்யா - என்ற திக சி பாணி வரட்டுசப்புக்கட்டுத்தான். சிப்நலத்திற்காக இன்று இந்தியம் தேசியம் மாயைகளைத் தழுவிக் கொண்ட வர்கள் முதல்தரமோ கலைஞர்களோ கிடையாது என்பதை கா. நா. க அன்றே தயங்கித்தியங்கி பட்டியவில் அடித்தும் சேர்த்துமிருக்கிறார். சந்தேகத்திற்கின்றி இவர்கள் இரண்டாந் தர எழுத்தாளர்கள்தான் - டால்ஸ்டாய் / புதுமைப்பித்தனின் மட்ட/மலின பாதிப்புகள்தான் என்பதை பாமர வாசகனுக்கு புரிய வைப்பது கடினம். ஒரு கால கட்டத்திலிருந்து அடுத்ததற்கு நகரும்போது பிறமொழிப் படைப்புகள் கருத்திலும் நடையிலும் முந்தையதைவிட ஸ்திரத்தன்மை கூடியிருக்கும்போது தமிழின் துரதிஷ்டம் அதை இழந்துவிட்டிருக்கிறது. உயர2உயரப் பிறந் தாலும் ஊர்க்குருவிகள் வானத்தை பிடிக்கமுடியாது என்பதற்கு இவர்கள் தமிழ்சாட்சிகள் பண்டிதர்கள் தாரைதப்பட்டை களுடன் பாடைகட்டித் தூக்கிச் சென்று சுடுகாட்டில் வைத்த போது பாய்ந்து சென்று காப்பாற்றிய புதுமைப்பித்தனைப் போல் கட்சிக்காரர்களிடமிருந்து தமிழைக் காக்க இன்று யாரும் இல்லாதது வருந்தத்தக்கது. ஒரு கும்பலோ/கூட்ட்மோ தரத்தை நிர்ணயித்துவிட ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அரசியல் அல்ல. இலக்கியம் வாழையடி வாழையாகி வரும் எவனோ ஒரு வாசகன உணர்ந்து சொல்வது. 

தொண்ணுறுகளின் துவக்கத்தில் தமிழ்நாவல் இலக்கியத்தில் பெருமாள்முருகன் பெயர் பெரிதாக தெரிந்தபோது 'அய்யய்யோ ஒரே அபத்தம் அசிங்கம். ஆபாசம் என்று சிலர் கண்மூடி காதுபொத்தி காரி உமிழ்ந்தனர். சம்பவங்களைப் கோர்த்துக்கொண்டு துப்புக்கெட்டாற்போல் எழுதுகிறார். ஜாதி வெறியர் திராவிட எதிர்ப்பாளர். என்ற எரிச்சல் மத்தாப்புகள் எகிறிப் பொறிந்தன. ஊன்றிக் கவனித்தபோது தான் அது யதார்த்தம் என்று தெரிந்தது. பொய்யை பூசி மெழுகியிருந்தால் இந்த இயாகோவின் Motiveless maignity-க்கு பலியாகியிருக்க மாட்டார். 

நினைவோட்டக்கலை ஜாய்சின் Ulyssus-க்கு முன்னே ஹார்டியின் கடைசி நாவலான Jude the Obscபre-ல் வெளிப்பட்ட போது டோரதிரிச்சர்ட்சன் (Pointed Roots), விர்ஜ்னியா வுல்ப் (MRS, Dalloway) முதலியோர் அதற்கு தூபமிட்டிருந்தனர். மாக்சிம் கார்க்கியின் அர்த்த மனோவ் நகுலனின் நினைவுப்
16 Δ σ. εί.
படிப்பகம்padippakam
பாதை நீலபத்மநாபனின் பள்ளிகொண்டபுரம்' - இவ்வுக்திக்கு சில சிறந்த உதாரணங்கள். ஆர். ஷண்முக சுந்தரத்தின் *அழியாக் கோலம் முதல் அத்தியாயத்தில் சாமியப்ப கவுண்டர் ஒரு பகலும் இரவுமாக இருபத்திநாலு மணி நேரம் ஆல மரத்தடியில் அப்படியே கன்னத்தில் கைவைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்து மனைவி மாரக்காளும், மகள் முத்தாயாளும் வற்புறுத்தியும் சாப்பிடாமல், பேசாமல் முந்தைய முப்பத்தினட்டு வருஷ வாழ்க்கை நிகழ்வுகளை மோனத்தில் அசைபோட்டுப் பார்ப்பது இக்கலைக்கு வளம்சேர்க்கும் தலைசிறந்த தமிழ்ப் பகுதிகள். இந்நாவலில் சினிமாத்தனம் இருப்பதாக குத்து மதிப்பிடுவது குருட்டுத்தனம். ஆர். ஷண்முக சுந்தரத்தின் கைவண்ணம் புத்துயிர் பெற்றிருப்பது 'அழியாக் கோலம் நாவலில்தான் என்பது சிட்டி - சிவபாத சுந்தரத்தின் துணிபு. தகழியின் *செம்மீனை" இந்தியாவில் பத்தாது என்று வெளிநாடுகளிலும் தூக்கிக் கொண்டு காவடி ஆடியிருக்கிறார்கள் ஏதோ இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உடனடியாக நிலை நாட்டிவிட்டதுபோல் அடிப்படையில் அது கருத்தம்மாவின் ஒண்ணாநம்பர் சதைக்கதை. பஷீரின் "பாத்துமாவின் ஆடு பால்யகால சகி", "எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது" நாவல்களுக்குப் பக்கத்தில் நிற்க்ககூட அருகதையற்றது தகழியின் செயற்கைப் பூச்சுக்கள். ஒரு காலத்தில் நோபல் பரிசு பெற்றதற்காக தாகூரின் மிஸ்டிசிச பிராண்டுகளை இன்னும் நாம் சுமந்துகொண்டுதான் திரிகிறோம். ஆர். ஷண்முக சுந்தரமும் வைக்கம் முகமது பஷீரும் பிரபலமாகாத இந்தியாவின் முதல் தரங்கள். இவர்களை குறுநாவல் வகையறாக்களில் அடைக்கும் அரைவேக்காட்டு குட்டிச்சாத்தான்கள் எர்னஸ்டு ஹெமிங் GaJGíslasör Gg5 TL'di Uffasi GupöpD “Old man and the sea’še5 எத்தனைப் பக்கங்கள் என்றாவது தெரிந்து கொள்ள வேண்டும்? பொச்சுப் பெருத்தவனுக்கு போடுங்கடா பருப்புஞ்சோற்றை என்ற போக்கு இலக்கியத்தை அரசியலாக்கிவிடும். 

சாத்தன் பாம்பு வடிவில் ஏடன் தோட்டத்திற்குள் புகுந்தது போல் நாகரிகம் பணவடிவில் புகுந்து ஒரு கிராமத்தையே நாசமாக்கும் போது சொறிபிடித்த கொட்டத்தலையை தெரியாமல் தின்று வேகும் வெயிலில் சொக்குத் தாக்கி விழுந்த செம்மறி ஆடுகள் போல் ஜனங்கள் தவிக்கிறார்கள். எங்கு போவது? என்ன செய்து கஞ்சி குடிப்பார்கள்? இந்த உலகம் எல்லோருக்கும் Utopia ஆகிவிடுமா! சட்டென்று சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ குடியேறிவிட முடியுமா? பூமியைச் சுரண்டிய மனிதன் அங்குமட்டும் வாலைச் சுருட்டிக்கொண்டு சும்மா இருப்பானா? வீம்புக்குச் சூரி விழுங்கும் இந்த தோசிக்காலன் போன இடம் உறுப்பட்டிருக்கிறதா? எல்லாம் போன பின் இடத்தை காலி செய்ய வேண்டியதுதான். ஒவ்வொன்றையும் நினைத்து நினைத்து, நெக்குருகி, நெஞ்சு பொறுக்காமல் 'ஓ'வென்று வாய்விட்டழுதிருக்கிறார். ஒரு ஊமைபோல் வெளியில் சத்தம் கேட்காமல், சில இடங்களில் அவை கவிதை யாகவும் துவைந்திருக்கிறது.
af. ... A 17
படிப்பகம்padippakam
விடும் காடும் விலைபோனதும் பொன்னு ஏறுவெயிலில் துடிதுடிக்கிறான். அளவில் சிறிதாயினும் அது அவனுக்கு அலக்ஷாண்டர் சாம்ராஜ்யம். வாழ்வின் மதிப்பீடுகள், விதிவசத்தாலா அழிக்கப்படுறது. காலனிகட்டு மானம்மட்டும் கூட்டப்பள்ளியின் பொன்விளையும் மண்ணை சிமெண்டால் மூடியது என்ற சமாதானம் திருப்தியளிக்க வில்லை இதர காரணிகள் நியமிக்கப் பட்டிருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். 

பொன்னு கொங்குவேளாளர் குடும்பத்தில் கூப்பிடப்படும் செல்லப்பெயர். பொன்னான், பொன்னையன், பொன்னுப்பயன், பொன்னுசாமி. எல்லாம் ஒன்றுதான். மாரியம்மன் கோயிலைச் சுற்றிக்கொண்டு தொடரவிளையாட்டில் மாலைவரை சோறு குடிக்கவராத வேளைகளில் ஏ. பொன்னு." என்று தாய்மார்கள் இசைப்பது செத்தபாம்பு ராகத்துக்கு அடங்காது. “கட்டித்திண்னி" கருப்பட்டிவாயா என்றுபுருஷனைத்திட்டிவிட்டு கண்டாரஒழி, கழுதைமுண்டை என்று மயிரை இழுத்துப்போட்டு செமத்தையாக வாங்கிச்சாகும் தாயாரின் பாத்திரம் எதனின் எதிரொலியுமல்ல, குடிக்கு அடிமையாகிய தந்தையோ, ரெண்டும் கெட்டான் நொனையும் நோரான்டும் பேசினாலும் பாட்டன் முப்பாட்டன் தலைக்கட்டாக இறைத்து விளைந்த கிணறு மூடும்போது பொன்னுவின் தாத்தா தேசத்தியாகிக்களைக்கூட தூசியாக்கிவிடுகிறார். பாட்டி பரவாயில்லை, ஒட்டன் உப்புலியன் சுளுக்கு கொடுத்து வாங்கும் கருத்தானியாக வேலையுண்டு வெட்டியுண்டு என்று இருக்கிறாள். அக்காள் கொத்துவேலைக்கு (அதாவது கட்டிடசித்தாள் வேலைக்கு) போனவள் ஒன்னுந் தெரியாத பாப்பாளாக இருந்துவிட்டு மேஸ்திரியிடம் ஒடித் தாழ்ப்பாள் போடும்போது சிக்கிக் கொள்கிறாள். டாக்ஸி பார்டர் ரவுடிப்பசங்களுடன் சேர்ந்து கெட்ட அண்ணன், லாரி டிரைவர் பெரியப்பா, பெரியம்மாள் குடும்பவட்டங்களாக பொரிந்து கொண்டாலும் ஏன் நேர்க்கோடு இழத்தாற்ப்போல் ஒரே ரோஷமாகப்பேசுகிறார்கள்? 

மணி-யின் ஆவல் மனதைத்தொடுகிறது. மனிதர்களைவிட இதற்கு மண்ணின் மீது பாசம். காலால் பறித்துப்பிராண்டுகிறது. ஊத்து, வதைக்குடித்துவிட்டு அங்கேயே காவலுக்குப் படுத்துக் கொள்கிறது. இதன் தொழிலுக்கும் வேட்டுவைக்கப்படுகிறது. உயிர்விட்டபோது பொன்னு இறுதிமரியதையுடன் அதை அடக்கம் செய்கிறான். நாயைப்பதிவு செய்த ஆசிரியர் நன்றிக்குரிய வராகிறார். இப்படித்தான் விட்டல்ராவின் போக்கிடத்தில் ஊரே அழிந்தபோதும் கரியன் என்ற நாய் தன் எஜமானி பேச்சிவீட்டையே சுற்றிக் கொண்டிருந்துவிட்டு அவளிருக்கு மிடத்துக்கே கடைசியில் வந்துவிடுகிறது.
காரவேலை மோகத்தில் கருத்திழந்த அக்காள் செந்திலுடன் ஏற்காட்டுக்கு ஒடிவிடுகிறாள். இவன் ஜாதிப்பறையன் என்பதால் போலிசுக்குப் பணம் தந்து பட்டை இழு இழத்துவிடுகிறார்கள். பி பிபிடும். டும் என்று சேர்த்து வைக்காமல் இரண்டாந்தாரமாக
18 A F, ,
படிப்பகம்padippakam
சிாட்டிவிடுகிறார்கள். காலம் ஜாதிகளை உடல்மூலம்தான் இணைக்க முயல்கிறது. சுடுகாட்டுப் பிரச்சினையிலும் பல பட்டரை காலனியாருடன் ஊர்க்கட்டுப்பாடு. கூட்டப் பள்ளி மாரியம்மன் கோயில், சுவரை பஸ், லாரிகள் இடித்துவிட கட்டயாரும் முன்வருவதில்லை. பணம் சேர்த்தலே கடவுள் வழிபாடு என்றானபோது வெறுங்கல்லால் கோயில்கட்ட யாருக்கு அக்கறை? 

நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சியாக நாவலில் இடம் பெறுவது குழிவெட்டியபள்ளத்தில் ராமாயி உடல்வியாபாரத்திற்கு நிற்பது தான். ஒருகாலத்தில் அஞ்சாங்கல்லும், பாண்டிக்குழியும் விளையாண்ட ஆருயிர்த்தோழியல்லவா. இதற்கு முன்னறிவிப்பு அவள் தகப்பனே இவளுக்கு தரகனாக மாறிவிடுவதில் தெரிந் தாலும் முரளியுடனும் நண்பனுடனும் இவன் போனதற்கு என்னசொல்ல,. பொன்னு பெரியமனிதன் ஆகிவிட்டான் மீசை முளைத்துவிட்டது. பொம்பிளை தேவைப் படுகிறது. திருச்செங் கோடுமலை அர்த்தனாரீஸ்வரரும் - புஷ்பகவிமானத்தில் கணவனுடன் வானுலகம் சென்ற கண்ணகி நின்றஇடத்தில் தோன்றிச்சிரித்த சந்திரனும் சாட்சிதான் இக்காட்சிக்கு ஆள் அடையாளம் தெரிந்து தீக்குழி இறங்கியது போன்று தாக்கி பின்பல்டி அடித்த போதுதான் - பீச்சியபாலை கைதவறி கீழே கொட்டியபோதுதான் பெருமாள்முருகன் பிரகாசமாகத் தெரி கிறார். மார்மீதும் மடிமீதும் தோள் மீதும் துடைtதும் தூக்கி வளர்த்தவளையா. தாயையா. புணர்வது? அய்யய்யோ. இதற்குப் பதில் ஒரு விட்டர் பெட்ரோலை தலையில் ஊத்திப் பெருத்தி உயிரை மாய்த்துக் கொள்ளலாமே. இது தெரியாது நடந்த பிறகு ஒடிபஸ் கண்களை பிடுங்கிவீசிவிடுன்றான் தி. ஜானகிராமன்" மோகமுள்களில் செய்த தவற்றை ஏறுவெயிலில் பெருமாள் முருகன் செய்யவில்லை என்பதை ஒரு கைதேர்ந்த கலைஞனாக்குகிறது. இதில் எது யதார்த்த மனம்? அவசங்கள் பாலுணர்வுக்கு எல்லாச் சமயத்திலும் கூச்சமாக இருப்பதில்லை. ராமாயி பாத்திரத்தை வைரக்கல்லாக்கியபோது அக்காளை மட்டும் தப்பிக்க வைத்து புனிதமாக்கி ஏன் பித்தளையாக்கியிருக்கிறாள். இது ஒரவஞ்சனையல்லவா. ஒரு பக்கத்தீர்ப்பல்லவா? இங்கே தலித்திய ိုရှီးဂျို့ வாதிகளின் வசவுக்கு ஒரேசமயத்தில் ஆளாகிறார்.
கவிதை எழுதித்திரிந்த காரல்மர்க்ஸ் பொருளாதாரத்தில் நுழைந்து மேதையாகக்காரணம் இதே வறுமைதான். ஒரு Struggle for existence தான் எல்லா இயக்கங்களுக்கும் முக்கிய காரணம். கற்பு நிலமான்யம் வளர்த்திவிட்ட மூடத்தனத்தின் உச்ச பிற்போக்குத்தனமும் கடவுள் தத்துவத்தின் உடன்பிறப்பு மாகும். இது அரசியலின் அடிமைப்பெண்ணாகவும், பணத்தின் வேலைக்காரியாகவும் மாறி சமயங்களில் சாகசவேலைகள் செய்கின்றது. கிராமங்களில் பெரியபண்ணையக்காரனிடம் கூலிக்கு ஊழியம்கட்டும் கீழ்ச்சாதிக்காரன்தான் அடுத்தவன் பொழியைப் புரட்டவும், வாய்க்கால் வரப்புகளைச் சேர்த்தும் சிறுவிவசாயிவயிற்றில் மண்ணைப் போடுகிறான். இந்த நிலத்தின்
g. - A 19
படிப்பகம்padippakam
உட்பூசல்களும் பகையும் தலை வாலை விழுங்கி தன்னையே அழித்துக் கொண்டதுபோல், அண்ணன், தம்பியைக்கூட பிரித்துக் குத்துக் கெலையிலும் கேர்ாட்டிலும் நிறுத்தியிருக்கிறது. அரசியல் சமூக அமைப்புகள் கருப்பு சிவப்பு கொடிகளையும் கொள்கைகளையும்தான் மாற்றிக் கொள்கின்றன. மற்றபடி அதிகாரம் தனிமனிதனுக்குத்தான் இதுநாள்வரை தலை வணங்கியிருக்கிறது. மாக்கியவல்லியின் சித்தாந்தப்படி எல்லாமே SG Power pulitics' 25irsår. 

நாவலின் கதைசொல்லவேண்டுமானால் முழுவதையும் அப்படியே திருப்பித்தான் எழுதவேண்டும். அனைக்கட்டு திட்டத்தில் ஊர்கள் மூழ்கியபோது க. சுப்ரமணியன் வேரும் விழுதும் மூலம் வேதனையை தெரிவித்தார் 亭f云5rf சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு. டேனிஷ்பேட்டை கிராமம் இரும்புச்சுரங்கத்திற்காக தத்து எடுக்கப்பட்டபோது விட்டல்ராவ் பேக்கிடம் வழியாக ஆசிரியாரக அனுதாபம் தெரிவித்தார். சாகத்தசாமியின் "சாயாவனம் காட்டையழித்து சர்க்கரை ஆலை நிறுவியவிபரம், பெருமாள் முருகனின் ஏறுவெயில் கூட்டப்பள்ளி குக்கிராமம் காலனிக்கு இரையானபரிதாபக்கதை. குடிசைகளைப் பிய்த்து எறிந்து குண்டுகுழிகளை நிரவி, கான்கிரிட்போட்டு கதவு, நிலவு கண்ணாடி ஜன்னல்களுடன் ஒரு கட்டிடம் எழுப்பி காம்பவுண்டுக்குள் ஒரு குரோட்டன்ஸ் வைத்துவிட்டால் மனிதன் முன்னேறி விட்டதாகவும் நன்றாகப் பிழைத்துக் கொண்டதாகவும் பூரித்துப் போய்விடுகின்றான். அந்த சொர்க்க மாளிகைக்குள்ளே தானே பூசையறையையும்- பொச்சுக்கழுவும் கக்கூஸையும் ஒருசேரவைத்திருக்கிறான். பத்தாதற்கு மாடிமேல் மாடியும். டி. வி. ஆன்டனாக்களும். மலத்தை இவைபோட்டுத் திண்னும் மாயாஜாலப் போதையான இந்த வீடுகட்டும் வேட்கை யில் அடிமட்டமனிதன் கூட ஆகாயவிமானத்தில் ஏறிக்கனவு காண்கிறான். கையில் மட்டும் காசிருந்தால் கல், மண், இரும்பு, செங்கல், புளூபிரிண்ட், மேஸ்திரி கான்ட்ரக்டுகள் பறந்தடித்து ஓடிவந்து பத்து நாளில் கிரகப்பிரவேசமும் நடந்துவிடும் பாரதி இல்லம் நிமிர்ந்து பாரதியார் தம் தலைப்பாகையுடன் சிரித்துக் கொண்டு வீட்டுக்கு காவல் இருப்பார். அரசின் வீட்டுவசதி வாரியங்கள் ஒட்டுமொத்த விளை நிலங்களையும் இயற்கையை யும் இப்படித்தான் அழித்து சுகாதாரச் சீரழிவை வளர்த்து விடுகின்றன. சுற்றுச் சூழலியம் சமீபத்தில் இலக்கிய மார்க் கெட்டில் Leading ஆக ஒடிக்கொண்டிருக்கிறது. விரைவில் வெள்ளி விழா கொண்டாடலாம். 

நகரங்களின் கிராம ஏஜெண்டுகளான- இந்தி எதிர்ப்பு போராட்ட மொழிப்போர்த்தியாகி தி.மு.க மொண்டிமாரி, அ.தி.மு க. பழனிச்சாமி இருவரும் அசல் நாட்டு நடப்புகள். வீரபாண்டியார் உண்மைநபர் அமைச்சர் சின்னையன் . .? வயிற்றுப் பிழைப்புக்காக சுரண்டினாலும் முழுக்கத்துண்டித்துள் கொள்ள முடியாத பாவ ஜீவன்கள் இவர்கள். ஒட்டு வேட்கையின் போது மாண்புமிகுகளுக்கும் மாவட்டச் செயலாளர் களுக்கும் இவர்கள் தயவு தேவையல்லவா? ஜனநாயகத்தை கட்டிக்காக்க
20 A &. Ա.
படிப்பகம்padippakam
ஐந்தாண்டுகளுக்கு முன்னமே கூட தேர்தல்கள் அவதாரம் எடுத்தே தீரும் எந்த ஷேசன் தடுத்தாலும்,
இது எம்.ஜி.ஆர் யுகம், அண்ணாவின் வாரிசானாளும் பெரியாரின் பக்தரானாலும் திராவிடத்தின் தந்தை எம்.ஜி.ஆர் தான். தமிழகத்தைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்ட சக்கிலியர் களுக்கு குலதெய்வம் போல் உண்மையான மதுரைவிரன் எம்.ஜி.ஆர். தான் காதலி பொம்மி பானுமதிதான். பிறஜாதி ஏழை எளியோர்க்கு “நாடோடி மன்னன் 'ஆயிரத்தில் ஒருவன்
எங்கவிட்டுப்பிள்ளை' விவசாயி' மீனவகண்டின் இப்படி வாரி வழங்கும் பாரிவள்ளல், பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவருக்கு குழந்தை இல்லாததால் அவர் சொத்துக்கள் தங்களுக்குத்தான் சொந்தம் என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய சித்தாந்தம். வவரன் சிவாஜிக்கு ரசிகர் மன்றங்கள் கூடகம்மிதான். 'செவாலியர் விருதெல்லாம் யாருக்குத் தேவை? சத்துணவுத்திட்டம் மகத்தான ஐந்தாண்டுத் திட்டம்தான். தந்தவர் சரித்திரநாயகன் எம்.ஜி ஆர். அல்லவா? இதை எதிர்த்து எந்த எதிர்க்கட்சியாலும் ஒன்றும் வால்வீச முடியாது. தமிழகத்தின் சினிமா அரசியலை அற்புதமாக அலசியுள்ளார். பெருமாள்முருகன். இதுவும் நாவலுக்கு புதிய பரிமாணந்தான். 

கூட்டப்பள்ளி சிறுசுகளுக்கு கிழக்கே திருச்செங்கோட்டு மலையில்தான் சூரியன் உதிக்கிறது என்பது சொல்லித்தராத பூகோளப்பாடம். பெருமாள்முருகன் பாரதிதாசனைப் படித் திருப்பார்போல் தெரிகிறது.
ஏ வானத்துப் பெரு நிலவே
வந்துவிடு என்னோடு
மோனப்பெரு வெளியில்
மூழ்கிடுவோம் நெடுங்காலம்
என்று நிலவு பாலாய் கொட்டுவதை பவுர்ணமிகளில் ரசித்திருக் கிறார். நீச்சல் தெரியும் என்பதை 'தொப்' என்று கிணற்றில் குதித்து இருநாவல்களிலும் நிறுபித்திருக்கிறார். திருச்செங் கோட்டுத் தேரின் ஒருமாத விஷேத்தையும் ரதவீதிகளையும் மலையடிவார அமைப்பையும் குளம் நிரம்பி மழைக்காலங்களில் கடைபோயி குட்டைகளை அடைவதையும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையையும் யதார்த்தமாக காண்பித்தவர், சங்ககிரி ரோட்டின் சித்தாராமபாளையம், நாமக்கல் ரோட்டின் குமர மங்கலம் மற்றும் சேலம் வேலூர் ரோட்டின் முதல் கிராமங் களையும் தொட்டிருந்தால் ஏறக்குறைய திருச்செங்கோடு வட்டார வாழ்க்கை முழுமை பெற்றிருக்கும். நிலத்தில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு பைனான்சில் போட்டு முடக்கஅந்த ஆசைக்கப்பல் திவாலாகி கவிழ்ந்ததும் கன்னத்தில் கொர்’ என்று கைவைத்துக் கொள்கிறார் தந்தை. தாய் சிறுவாடு சேர்த்து வைத்ததை காலனிக்காரிக்கு கந்துகொடுக்க கபக் என்று அவள் விழுங்கி கைவிரித்து விடுகிறாள். உழைப் பில்லாத உறிஞ்சல்தொழில் நஷ்டத்தை வேறு இடத்தில் பிடித்தகாடு ஈடுசெய்கிறது. பிணந்திண்னிக் கிணறாக
g. s. A 21
படிப்பகம்padippakam
இருத்தாலும் பின்னால் நல்ல விலை போகிறது நிலம், ரிக் வாங்கிவிட்டு ஆந்திரா, ஒரிசா வடமாநிலங்களில் நல்ல காசு கிடைக்கிறது. லாரி தறி, இத்யாதி தொழில்களில் விவசாயம் இடமாற்றம் செய்யப்பட்டு, விளை நிலங்கள் வீடாகவும் வியாபாரக்கிடங்காகவும், புதுவடிவம் பெறுகின்றன. சட்டி அகப்பைகள் கம்பு சோளச்சோறுகள் மாறி கோழிக்கறி, கொத்துப்புரோட்டா, குருமா- என்ற ஒட்டல் சாப்பாட்டு மோகம் வலுக்கிறது. கள்ளு, பட்டை சாராயங்கள் தள்ளப்பட்டு பிராந்தி, விஸ்கி பீர், ரம் என்று பாட்டில்கள் விளையாடுகின்றன. இத் துணைச் சீரழிவிலும் சாவடியில் தாயம், சீட்டாட்டங்கள் காசு கட்டி நடககின்றன. கோயில் நோம்பி கொண்டாட்டங் களும் தொத்திக் கொண்டு தொடர்கின்றன
திராவிட இயக்கத்தின் இருபெரும் கொடைகள் அடுக்குப் பேச்சும் மேடைநாடக உற்பத்தியும் பெரியாரின் மழலைநடை கா நா.சு வை காந்தமாய் கவர்ந்திருக்கிறது. இவற்றில்தான் நாம் திராவிட இலக்கியத்தை அகழ்ந்தெடுக்க வேண்டும் சி என். அண்ணாத்துரை தொடர்நது ஏ வி.பி. ஆசைத்தம்பி, மு. கருணாநிதி வரை அடுக்குத்தமிழ் அழகுபெற்றிருக்கிறது. அதற்ககுடபின் அது வாழ்வில்லை என்பதை இன்றைய மலினங்கள் நிறுவிக்கின்றன இது சினிமாவிலும் பூந்து தமிழ்ச் சமூகத்தை சீரழித்து நிறுத்தியிருக்கிறது. கண்ணதாசனும் வைரமுத்தும் எ.எஸ் விஸ்வநாதனும் இளையராஜாவும், டிஎம் செளதராஜனும் எஸ் பி பாலசுப்ரமணியனும் தமிழசினிமாவுக்கு தேவையற்றவர்கள் திருமண நேரடக்சில கருவைக்கதாநாயகன் வேலுச்சாமியையும் கூட உபடஸ் எரி கதாநாயகி வேலுச்சாமியையும் ஜோடி சேர்த்து மாட்டிக் கொண்டார் மாப்பிள்ளை ராசமணி மடியில் குவா குவா படங்களைத் தருகிறார்கள். அசல் நடப்பை ஒட்டிய ரசனையல்லவா? அந்தக்கால காகிதப்பூ ஓரிரவு' வேலைக்காரி இழந்தகாதல் ரத்தக்கண்ணிர் நாடகங்கள் பெரியரின பகுததறிவை புயல வேகங்களில் பட்டி தொடடிகளில் பரப்பியவை. இச்சீர்த்திருத்த இயக்கம் தீவிரயாக வேலை செய்ததின் விளைவுதான் இன்று பிராமணர் களை விட மற்றவகுப்பார் படிப்பிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறியிருப்பது ஒரு ஏழை பிராமணன் திருமணத்தின் தாலி கடடு முடிந்ததும் மேடையில் தேங்காயைத் திருடி பஞ்சகச் சத்தில் மூடி பூணுரலை இறுக்கிக் கட்டிக்கொண்டு பிறகு வேலைக்காரனிடம் சிக்கிக் கொண்டு அந்த அம்பி / அய்யரின் வேஷம் வெளியானதும் கொள்ளென்று சிரித்து குடுமி அவிழ ஓடுவது அக்கால நாடகங்களில் தலைசிறந்த காமெடிக்காட்சிகள், ஆரிய அழிப்புப் போராட்டத்தில் திராவிடத் தலைவர்கள் கையாண்டஆயுதங்களில்நாடகமும்ஒன்று. கல்லாங்குத்தில் இன்றும் சேலம் மாவடட சங்கரதாஸ் சுவாமிகள் நாடக நடிகர் சங்கம் சென்னை தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அடுத்துப் பெரியதும் அதனுடன் இணைக்கப்பட்ட பெருமையும் கொண்டது. இதில் சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக நாடகத்தில் நடித்த நடிகை களும் இன்று கிழவியாகி கலைக்கு உழைத்ததற்காக OAP பென்சன் வாங்கிக்கொண்டு இருக்கின்றனர். மந்திரிகுமாரி படம்
22 A. F. J.
படிப்பகம்padippakam
சேலம் மாடர்ன் தியேட்டர்சில் தயாரான போது ஏற்காட்டில் அதன் சூட்டிங் பார்க்க பல ஆசாமிகளும் கட்டிச் சோற்றுடன் போய் வாயில் ஈ ஆடாமல் காத்துக்கிடந்திருக்கின்றனர். இதன் ஒதங்களை இன்னும் சேலம் பெரியார் மாவட்ட திருவிழாக்கால அமெச்சூர் நாடகங்களில் பார்க்கலாம், மாலா, ஜீவா, சந்திரிகா, மகாலட்சுமி, சித்ரா காஞ்சனா, சியாமளா, வசந்தி, சுமதி முதலிய நடிகைகள் இங்கே பிரபல கதாநாயகிகளாக வரலாறு படைத்திருக்கிறார்கள். இவற்றை சக்திவேல் கதை, வசனம் எழுதி வில்லனாக நடித்து இயக்கிய "மீண்டும் மணக்கோலமா? நாடகத்தின் பின்புலத்தில் பார்க்க வேண்டும். விதவை மறு மணத்தை வற்புறுத்தி வாழத்தான் வேண்டும் கதையாக இது இருக்கவேண்டும். கதாநாயகன் ரோலுக்கு 500 ரூபாய் என்றால் வில்லனுக்கு 750 ஏலத்தின் ரேட், ஏனெனில் கதாநாயகன் தொட்டுத்தான் அணைக்க முடியும் வில்லனுக்கு ஜாக்கெட்டை கிழித்து, சேலையை உரிந்து கதாநாயகியை கற்பழிக்கும் துச்சாதன பாக்கியமும் கூடுதலான கனவுசீன் பாடலும் கதை அதிகாரத்தை மீறித்தரப்படும் ஒன்று. நமது நாவலாசிரியர் மேனேஜர் பாத்திரத்தில் மட்டும் கெளரவக்தோற்றம் காட்டி விட்டு பொருளாளராக பொறுப்பு ஏற்று ஒதுங்கிவிடுகிறார். ஏறுவெயிலின் இப்பகுதிகள் நகைச்சுவை நிறைந்து காணப் படுவதுடன் நாடகம், மீதான ஒரு நக்கல் பார்வையையும் வெளிப்படுத்துகிறது.
CNC காலேஜ் ராகிங்கள், ஜட்டிபோட்டு அம்மாவிடம் வாங்கிக்கொள்ளும் கொச்சை வசவுகளில் நளினம் மிளிர்கிறது, ஆட்டு ஏவாரம் முடிந்து ஆயாசமாக தாத்தா வேட்டியை பாங்காக உறுவி தலை மாட்டில் வைத்துவிட்டு கோவணத்துடன் படுப்பது துணிமணி அணிவதின் சிக்கனத்தையும் சுகாதாரத்தை யும் எடுத்துக்காட்டுகிறது. இவன் ஆட்டுக்குட்டியை முன்னால் இழுத்துவர - தாத்தா பின்னால் தள்ளி முடுக்கிக் கொண்டு சந்தையிலிருந்து வீட்டுக்கு ஒட்டி வருவது. அடுத்த நாள் பதினஞ்சு கூறாக கறிபோவது. போன்ற தினசரி அலுவல்களை கூர்மையாக கவனிக்கப்பட்டுள்ளன. காலனி பலபட்டறை ஒரு பகட்டு தேவடியாள் நாகரிகத்துக்கு ஒன்றுமறியாதவர்களை சுண்டி இழுத்துச் சிதைப்பது பூர்ஷ்வாவேசித்தனமும் - நிலமான்ய நேர்மையும் நேர்க்கோட்டில் சந்திக்கும் முரண், உழுதுண்டு பிழைத்த நிலவாழ்வில் ஒரளவாவது ஒற்றுமையும் அன்பும் ஓங்கியிருந்தது. இதில் கிஞ்சித்தும் கிடைக்கவில்லை. கைமாத்துக் கள் சரளமாக கிடைத்த காலம்போய் இன்று இரட்டை வட்டிக்குக் கூட கடன் கிடைப்பதில்லை. 

'நிழல்முற்றத்தை ஏறுவெயிலை தாண்டிப் படித்தால்தான் பிடிகிடைக்கும். இது சந்தைப்பேட்டைமேடு பூரீவிஜயாதியேட்டர் வாழ்க்கையை மையப்படுத்தியிருக்கிறது. சினிக்கலான ஒரு எள்ளல்தொணி - யதார்த்தச்சித்தரிப்பு இவற்றில் பெ. மு. ஒரு படி உயர்ந்துள்ளார். ஒரு புதிய களம் கொண்ட தமிழ்நாவல் து. ஜி. நாகராஜனின் விபச்சார உலகம்போல் ஒருவகையான ஆலமர வாழ்க்கை கிளைகிளையாக படர்ந்துள்ளது. ஒரு
23 ܠ4 ܛܲܛ . ܊ܧ
படிப்பகம்padippakam
கூடாரத்தின் கீழான பிழைப்புப் பிரச்சினைகளின் போராட்டம் இதில் ஒருமுகப்படுத்தப்பட்டு படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் ஒரிடத்தில்கூட தன்னைக்காட்டிக்கொள்ளாமல் முழு அமாவாசை நிலவாக மறைந்துவிட்டிருக்கிறார்.

ஒரு பத்தாந்தர சினிமாக்கூட தமிழில் யதார்த்தமாக இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு வாழ்க்கை முறைகள் கூட சினிமா ஜபர்திஷ்டையாக மாறிக்கொண்டு வருகிறது. எல்லாம் ஒரே பாடல்கள், சண்டைகள் இங்கே எது Film என்று யாருக்கும் புரியவில்லை. புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா கூட போக்கியத்தை தூக்கி எறிந்து விட்டு இதில் நுழையக் காரணம் காசு போதைதான், வயிற்றில் வளரும் சிசுவுக்குக் கூட தாயே 'யப்பா. ரஜனி ஸ்டைல் கற்பிக்கிறாள். இந்த விபச்சாரக் கலையில் இந்தியாவில் சத்யஜித்ரே தவிர யாரும் கலாரீதியாக வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரும் - சாந்தாராமும் ஒரு விட்டின் கதவைத்தான் தெரியாமல் தட்டிவிட்டு திருதிரு வென்று விழித்தார்கள் இவர்களது கலையென்றால் சொல்லுபவர்கள் ஷேக்ஸ்பியர் யார் என்று தெரியாதவர்கள். இந்திப்படங்களா. இன்னும் புராண காலத்தைய நீளங்கள். ராஜ்கபூரின் மூன்று பாகம் - இரண்டு இடைவேளைப்படமான சங்கம் முடியும் போது இரவும் விடிந்து கோழியும் கூவிவிடும் இருப்பினும் எம். ஆர். ராதா என்ற நடிப்புக் கலைஞனை தேர்வுசெய்துதான் தீரவேண்டும். அண்ணாத்துரை, சிவாஜிகணேசன் பாதிப்பு நிறையக்கிடக்கிறது. மக்களைப் பெற்ற மகராசி முரடன் முத்து' போன்று யதார்த்தத்தில் - ஒரு ANT - HEROIC தனங்களில் சிவாஜி ஆழம் பாதித்திருந்தால் ஒரு உலகக்கலை ஞனை, தமிழகம் பெற்றிருக்கும், அவரை தமிழ் சினிமா பயன் படுத்திக்கொள்ள தவறிவிட்டது திருவிளையாடல் - விர பாண்டிய கட்டபொம்மன்'. இவைகள் ஒரே ஆர வாரிப்புகள். நமது இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர், இறையருட்செல்வர் ஏ. பி நாகராஜன் போன்ற கலைமேதைகள் மட்டமான மேடை நாடகங்களை கேமிராவுக்குள் அடக்கிய திறமைசாலிகள்தான் டிவி, விளம்பர பாணி மணிரத்னம், குமுதத்தில் வைரமுத்து பாணி புதுக்கவிதை படிக்கத் தெரிந்த பாரதிராஜா - இவர்கள் பெரிய டைரக்டர் களாகி தமிழ்ச்சினிமாவை வளப்படுததியவர்கள். ரோஷம் பொறுக்க முடியாவிட்டால் பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டியதுதான் வழி. இங்கே ரீதர் என்ற கலைஞன்தான் தனது 'நெஞ்சில் ஒர் ஆலயம் படத்தில் மட்டும் சினிமா மீடியத்தை கொஞ்சம் கையாண்டுள்ளான், அதுவும் ஒரிரு பிரேம்களில். இது விமர்சனம் திராவிடப் பாரம்பரியத்தின் சினிமா இலக்கிய வாரிசுகளாக அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா. இவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர்களாக வந்திருந்தாலும் - சினிமாவை கட்சிப் பிரசாரத்திற்கு பிரயோகத்திருந்தாலும் - தங்களை கலை மேதைகள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டதில்லை. குறை குடங்கள்தான் எதிலும் கூத்தாடிக் கொண்டு வெட்கமில்லாமல் முன் நிற்கின்றன. இந்த தொத்து நோய்கள் இப்போது டி.விகளை ஆக்கிரமித்துள்ளன.
24. A f, g:
படிப்பகம்padippakam
*மருதமலை, மாமணியே பாடலுடன், பூதன் பூளைக் கண்களுடன் நைந்து கிடப்பதை வெறிச்சோடிய தியேட்டர் சூழல் விவரிக்கின்றது. சக்திவேல், நடேசன், முத்து, வத்தன், கணேசன், சோடாக்கடைக்காரர், அவர் மகன், டீக்கடைக்காரர் அவர் சம்சாரம், குழந்தை, சைக்கிள் ஸ்டேண்ட் பையன், வாட்ச்மேன், டிக்கிட் கிழிப்பவர்கள், கட்டில் கடை கிழவி, கிரக்கி கருவாச்சி, தியேட்டர் மேனேஜர், நோட்டீஸ் ஒட்டும் பையன்கள் முதலியோர் முன்னும் பின்னுமாக வலை போல பின்னப்பட்டுள் ளார்கள். வழக்கமான நாயகன், நாயகியைத் தேடினால் ஏமாற்றம்தான். திருச்செங்கோடு சேலம் ரோட்டில் முதல் பஸ் ஒட்டிய பெருமைக்குரியவர் தியேட்டர் முதலாளி. அவரது மருமகளின் ராசியான பெயர்தான் கொட்டகைக்கு சூட்டப் பட்டுள்ளது. காட்டில் உள்ள சோடாக் கடைக்காரர் வீட்டிற்கு இரவோடு இரவாக தடம் போடுகிறார்கள், பயங்கரமாக தண்ணியடித்துவிட்டு பள்ளிபாளையம் வரை நோட்டீஸ் ஒட்டுகிறார்கள். துண்டு சிகரெட்டுக்காக அடிதடி, ஹோமோ செக்சுவல் பழக்கங்கள், புளுபிலிம்மில் ஆண் பெண்களின் அம்மண வேட்டைகளில், ஆசிரியர் வெளிக்காட்டும் விஷயஞானம் நாவலுக்கு, வண்ணம் கூட்டுகிறது. அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் கூட இவ்வகையில் முழுமை பெற்றதாக கூறமுடியாது. ஆனால் இந்திரா பார்த்தசாரதியின் எக்ஷிஸ்டென்சியலச நாவலான குருதிப் புனலில் தான் தாயோலி. என்ற வக்கிரக் கொச்சை கண்ணயா நாயுடு திட்டியதாக முதலில் துணிந்து கையாளப் பட்டது. 

தலைவர் படம் ஒடும் போது வசூல் நிறைகிறது. தொப்பையன் சிவாஜியின் புதியபறவையில் "எங்கே நிம்மதி பாட்டு வரும்போது இடைவேளைக்கு முன் வந்திருந்த பத்து பேரும் தூங்கி காத்தோடுகிறது. அந்த சமயம் பார்த்து மைனர். கருவாச்சி லீலைகளும் சீட்டிலியே தொடர்கின்றன. அணிமூர், ஆண்டிபாளையம், எமப்பள்ளி முதலிய சுற்று வட்டார கிராம மக்களும், தறி ஒட்டும் பையன்களும் இங்கே தான் படம்பார்க்க வருகின்றனர், "சாமி படங்களும், “பொம்பளைங்க' படங்களும் பழசானால் கூட போட்டிருந்தால் நன்றாக ஒடியிருக்குமே. சரஸ்வதி சபதத்தில் பத்மினி, சாவித்திரி, கே.ஆர். விஜயா மூன்று குந்தானிகளும் ஒன்றாக வருவதில்லையா? 'குலமா குணமா' பிரமாதமான குடும்பச்சித்திரம் ஆயிற்றே?

மொத்தத்தில்-நாணயத்தின் இருபக்க பொம்மை. மக்கை போல் ஏறுவெயிலும் நிழல்முற்றமும் பொருள் பொதிந்த நவீனக் குறியீடுகளாக பொருத்தமான தலைப்புகளாக அமைந்துள்ளன. நாஞ்சில் நாடன் முன்னுரையில் குறிப்பிட்டது போல் கூரிய சிலாம்புகள், எங்கும் கானாம் - யதார்த்தத்தின் குளிர்தென்றல் தான் குளுமையாக வீசியிருக்கிறது. ஒன்றில் நடுத்தரத்தின் கீழ்மட்டம்-இன்னொன்றில் கடைத்தரத்தின் தரை மட்டம் - சர்க்கஸ் கம்பியில் நடப்பதைப் போன்ற சிரமங்கள் சித்தரிக்கப் பட்டுள்ளன. நோயின் பீடைகளை கழித்து எறியும் போது வாசகர்களும் அதை மிதித்து பிடிக்கப்படுவது போன்ற உணர்வு
8. g. A 25
படிப்பகம்