அண்மைக்கால காதலிக்கு - லஷ்மி மணிவண்ணன்
என் தனிமையை
நீ அனுமதிக்கிறவளாய் இருப்பாயா
என் அறையின் காலியிடங்களை
ஒரு போதும் உன்னால்
நிரப்ப முடியாது
வரலாற்றின் காலத் தொடர்ச்சியில்
வெற்றிடங்களாய் வந்து சேர்ந்த
வெற்றிடங்கள் அவை
உனக்குள் அவை பீதியை ஏற்படுத்தலாம்
என்னைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிற
இடங்களை இந்த காலியிடங்கள்
அடைத்துக் கொண்டிருக்கலாம்
எனக்கான பெண் இந்த காலியிடங்களை
ஒரு போதும் உருக்குலைக்கமாட்டாள்.
அவளுக்கு மிக நேர்த்தியாக அவற்றைக்
கையாளத் தெரியும்.
அதன் பகுதிகள் எதுவும் அவளால் சேதம் அடையாது
உனக்குண்டா காலியிடங்களை நிரப்ப விரும்பாமல் பாதுகாக்கிற
பொறுமை.
- சங்கருக்கு கதவற்ற வீடு ---- எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து
என் தனிமையை
நீ அனுமதிக்கிறவளாய் இருப்பாயா
என் அறையின் காலியிடங்களை
ஒரு போதும் உன்னால்
நிரப்ப முடியாது
வரலாற்றின் காலத் தொடர்ச்சியில்
வெற்றிடங்களாய் வந்து சேர்ந்த
வெற்றிடங்கள் அவை
உனக்குள் அவை பீதியை ஏற்படுத்தலாம்
என்னைப் புரிந்து கொள்ள முடியாமல் போகிற
இடங்களை இந்த காலியிடங்கள்
அடைத்துக் கொண்டிருக்கலாம்
எனக்கான பெண் இந்த காலியிடங்களை
ஒரு போதும் உருக்குலைக்கமாட்டாள்.
அவளுக்கு மிக நேர்த்தியாக அவற்றைக்
கையாளத் தெரியும்.
அதன் பகுதிகள் எதுவும் அவளால் சேதம் அடையாது
உனக்குண்டா காலியிடங்களை நிரப்ப விரும்பாமல் பாதுகாக்கிற
பொறுமை.
- சங்கருக்கு கதவற்ற வீடு ---- எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து