தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, April 14, 2016

சின்ன விசயங்களின் கடவுள் பற்றி, புக்கர் பரிசு : அருந்ததி ராய் அரசியல் வாசிப்புகள் - யமுனா ராஜேந்திரன் : காலக்குறி10 | மார்ச் 99

சின்ன விசயங்களின் கடவுள் பற்றி
யமுனா ராஜேந்திரன்
காலக்குறி10 | மார்ச் 99
படிப்பகம்
WWW.padippakam.Com

அருந்ததி ராய்
வாழ்க்கை:

அம்மா கேரள சிறியன் கிறிஸ்தவர். மேரிராய் பெயர். அப்பா ராய் வங்காளி. மேரி - விவாகரத்தானவர். அருந்ததியின் சகோதரர் லலித். இரட்டைப் பிறவிகள் அல்ல. கோட்டயம் நகரத்திலிருந்து கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் அயமனம் கிராமம் சொந்த ஊர். அருந்ததியின் மாமா ஜியார்ஜ் ஜஸ்க், அருந்த்தியின் தாத்த ஜான் குரியன் தலைமைப் பொறியியலாளராக இருந்து பாதிரியாக ஆனவர். ஐஸ்க்கின் விவாகரத்துப் பெற்ற மனைவி விெலியா பிலிப்ஸன். பாரடைஸ் ஊறுகாய் பேக்டரி ஐஸ்க் தொடங்கியது தான். ஐஸ்க் இப்போதும் தாயுடன், அம்மாச்சியுடன் தான் வாழ்கிறார். புள்ளியம்பல்லின் வயல்களுக்கு அப்பால் மிருச்சல் நதியோடுகிறது. தற்போது 38 வயதாகும் அருந்ததி 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறார். கட்டிடக்கலை பயில்கிறார். கோவாவில் திரிகிறார். குகா எனும் மார்க்ஸிஸ்டோடு வாழ்கிறார். பிற்பாடு கிருஷ்ணன் என்பவரை மணக்கிறார். கிருஷ்ணன் ஏற்கனவே மணமானவர். இரண்டு குழந்தைகள் அருந்ததி ராய் அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். . தற்போது அருந்ததி,இரு பெண் குழந்தைகள, கிருஷ்ணன் ஆகியோர் குடும்பமாக வாழ்கிறார்கள். தாய் பிறந்தது ஷில்லாங்கில், பிற்பாடு அயமனம் வத்தவர் மேரி வழிக்கு மன்றம் சென்று தன் சொத்துரிமையை நிலைநாட்டியவர். தற்போது org the God of small Things வெடிப்பின் விளைவுகள் தொடர்பான

கதை: 

கதையில் வரும் ராஜல் எனும் பெண் — - குழந்தையும் எஸ்தா எனும் ஆண் குழந்தையும்  ரெட்டையர்கள். கிறிஸ்தவ மலையாளி வங்காள் அருந்ததிராய்
பெற்றோர்க்குப் பிறந்தவர்கள். விவகாரத்துப் அரசியல் வாசிப்புகள்
பெற்ற மலையாளித்தாய் அம்மு சிரியன் கிறிஸ்தவ ஆண்வழி மரபுகளால் துன்புறுத்தப்படுகிறார். அம்முவுக்கும் வெளுத்தா என்கிற பரவனுக்கும் காதல் ஏற்படுகிறது. காம்ரேட் — எம்.கே. பிள்ளை, போலீஸ், CPM காங்கிரஸ் என அனைத்து அரசியலாளரும் வெளுத்தா கொல்லப்பட காரணமாகிறார்கள். வெளுத்தா CPM கட்சியிலிருந்து Mட கட்சிக்கும் போனதாகச் சொல்லப்படுகிறது: அம்மு காசநோய்க்கும் பலியாகிறார். குட்டி முதலாளி சாக்கோ . அத்தை கொச்சம்மா அம்முவின் சகோதரன்அம்முவைக் களங்கப்படுத்துபவள். மம்மாச்சி அம்முவின்தாய். குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நாவலில் ஆணாதிக்கம் / ஜாதியம் / நவகாலனியம் / நிலப்பிரபுத்துவம் / உலகமயமாதலின் பின்னணியில் வளர்ந்த குழந்தைகளின் நினைவு மீட்புகளாக சம்பவங்கள் இடம் பெறுகிறது. மிருச்சல் ஆறு கதையின் ஜீவனுள்ள அடித்தள மாக ஒடிக்கொண்டிருக்கிறது. குழந்தைக்கு சாவு, காதல், அன்பு, பயம் போன்றன. அதன் கரையில்தான் அறிமுகமாகிறது. 

வரலாறு/புனைவு:

 மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி/மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி போன்றவற்றுக்கு இடையி லான பிழைகள் பிரச்சினைகள் ஸ்துல மானவை. இ.எம்.எஸ்.நம்புதிரிபாத் ஸ்துல மான பாத்திரம். அன்றைய வரலாற்றுக் காலகட்டமும் / இடம் பெறும் மனிதர்களும் ஸ்துலமானவர்கள். 70 களின் சம்பவங்களுக் கிடையில் நாவல் இயங்குகிறது.

கொச்சம்மா பாத்திரம் புனைவு. அப்படி எவரும் இல்லை. அம்மாச்சி பாத்திரமும் சாக்கோ பாத்திரமும் நிஜம். சாக்கோ தான் ஜேக்கப். தன்னில் 25% தான் எஸ்தா; 75% வேறு யாரோ புனைவு என்கிறார் லலித். மேரிக்கு வெளுத்தாமாதிரியான உறவு இருந்ததில்லை. அது புனைவு. ஆயினும் ஜாதிவிட்டு ஜாதி கட்டுவது இன்றும் அயமனம் பிரதேசத்தில் பிரச்சினைக்கு உரியதுதான். சோபிமோல் எனும் குழந்தையின் மரணம் புனைவு. அப்படி யான சிறுமி இல்லை.

இது விஜயகுமார் குறிப்பிடுவது போல தன் வரலாற்று நாவல் அல்ல; வரலாறு ஸ்துலம் * சில பாத்திரங்கள் ஸ்தூலம் சில பாத்திரங் களும் சில சம்பவங்களும் முழுப்புனைவு.

கதையின் முக்கிய சம்பவங்கள்:

1. CPl-M ஊர்வலம்: அது தொடர்பான அரசியல் விவரணங்கள் 2. எஸ்தா ராஹேல் சினிமா பார்ப்பது: ராஹேல் பாலியல் சுரண்டலுக் குள்ளாவது 3. காம்ரேட் பிள்ளை பரவனை / வெளுத்தாவை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்துப் பேசுவது. 4. காம்ரேட் பிள்ளையின் மனைவி அடிமையாகி, ஜாதி வெறியனாக இருப்பது 5. அம்மு வெளுத்தா இடையிலான உடலுறவு சம்பவங்கள். 6. கொச்சமாவுடன் வரும் குழந்தைகள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு உள்ளாவது. 7. வெளுத்தா போலீஸ்காரர்களால் அடித்துக் கொல்லப்படு வது 8. சாக்கோ காம்ரேட் பிள்ளைக் கிடையி லான வர்க்க சமரசக் கூட்டு: உரையாடல் 9. காங்கிரஸ் / கம்யூனிஸ்ட் ஜாதீய உணர்வு. இவர்களுடன் காம்ரேட் பிள்ளை சேர்ந்து கொண்டு வெளுத்தா மரணத்தைக் கண்டு கொள்ளாது விடுவது. 10. நக்ஸல்பாரி எனக் காரணம் காட்டி வெளுத்தாவின் சாவை மூடிமறைப்பது என இச்சம்பவங்களால் ஆனது நாவல். வரலாறும் தனிமனித வாழ்வும் புனைவும் கோட்பாட்டுச் சர்ச்சைகளும் சம்பவங்களாகி இந்திய வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் பற்றிய சித்திரமாக விரிகிறது நாவல்.

எவர் சின்ன விசயங்களின் கடவுள்? 

அருந்ததி: நேர்முகம் 

எதிர்காலம் குறித்த இரண்டாவது அனுமானத்தில் அருந்ததிக்கு நம்பிக்கையில்லை. ஐான் லெனனை மேற்கோள்காட்டுகிறார் அருந்ததி: 'நீங்கள் முற்றிலும் வேறு திட்டங்களைக் கொண்டு செயல்படுகிறபோது, உங்களுக்கு நேர்வதுதான் வாழ்க்கை'. 

அவளது வாழ்க்கையை ஒரு கடவுள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் என அவர் நம்புகிறாரா?

'இல்லை. நான் ஒரு சாதாரண விலங்கு போன்றவள். எனக்கு மதம் என்பது இல்லை'

பின் எவர்தான் சின்ன விஷயங்களின் கடவுள்?

'அவர் இழப்புகளினதும் பய உணர்ச்சிகளதும் கடவுள். "(He is a God of loss and Goosebumps)"

ஆகவே, நீங்கள் இருந்தாலும் இவ்வளவு தானா? ஆமாம். அது அப்படித்தான். சில வேளை நீங்கள் இறப்பதற்கு முன்னாலும் கூட அப்படித்தான். 

 ஆதாரங்கள்:
 1. To the Booker Boo. Pono" Eichart is "The week'. Oct. 26.1997. India.
2. The Million Dollar First Novelist: Interview
with Arundhathi Roy by Maya Jassi. Weekend May 24, 1997. U.K.
3. Interview With Roy Kate Kellargy: 'Guardians' 21th June 1998. U.K.
4. The God of small things: Flamingo 1997. U.K. by Arundhathi Roy (340 Lué&#1ğı&#6ir).
________________

WWW.padippakam.com
புக்கர் பரிசு 

அருந்ததி ராய் அரசியல் வாசிப்புகள்


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) கோட்பாட்டாளர் அய்ஜஸ் அகமது, தலித் விமர்சகர் விஜயகுமார், மார்க்ஸிய - லெனினிஸ்ட் கட்சியின் கல்பனா வில்ஸன் போன்றோர் சின்ன விஷயங்களின் கடவுளை தத்தமது கொள்கைத் திட்டங்களில் இருந்து அரசியல் வாசிப்பு செய்திருக்கிறார்கள். பெண்ணிலைவாத நோக்கிலிருந்து மாயாஜசி ஐரோப்பிய மையநோக்கிலிருந்து கேட் கெல்லாவே இந்திய தேசீய பெண் நிலைவாத நோக்கிலிருந்து சுப்ரியா செளதிரி போன்றோ ரும் வரலாற்று வாசிப்பை நிகழ்த்தி யிருக்கிறார்கள்.புலம்பெயர் தமிழனின் தூரநோக்கிலிருந்து ந. கண்ணன் பார்த்திருக் கிறார். நாவலைச் சுற்றி ஆங்கில மரபைப் பின்னணியாகக் கொண்ட விமர்சனங்கள் / விஷயங்கள் டேன் கிளாஸ்பர் ஸ்டீபன்மோஸ் போன்றோரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.'

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸிலிருந்து இங்கிலாந்தின் அப்சர்வர் உள்பட இந்திய பத்திரிகைகள் அவுட்லுக், தி வீக் போன்ற வற்றில் அருந்ததிராயின் நேர்முகங்கள் வந்திருக் கின்றன. இலக்கியம், அரசியல், காலனித்து வம், ஜாதியம், கேரள கம்யூனிஸம் போன்றன விவாதங்களின் மையமாக அமைந்திருக்கிறது. பெண்ணிலைவாதம், ஆண் மைய எதிர்ப்பு, பொருள்முதல்வாத இயங்கியல் பார்வை பின் நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளினடிப் படைகள் விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன. நாவலின் சில குறிப்பிட்ட சம்பவங்கள், சில குறிப்பிட்ட வர்ணனைகள், சில குறிப்பிட்ட பாத்திரப் படைப்புக்கள் அனேகமாக, அனைத்து விமர்சனங்களிலும் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன. 1. காம்ரேட் பிள்ளை, இஎம்எஸ். நம்பூதிரி பாட் போன்றோரைச் சுற்றிய பிரச் சினைகள். 2. அம்மு வெளுத்தா இருவருக்கு மிடையிலான பாலுறவு நிகழ்வுகள் 3. சக்கோ வின் ஆண்மையப் பார்வை 4. அம்முவின் செயல்பட இயலாநிலை 5. சிரியன் கிறிஸ்தவ
சமூகமும் கேரள இடதுசாரி இயக்கமும் பார்ப்பணிய மையப்பட்டமை 6. முழுச்சமூக அமைவுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஆதாரமாகியிருக்கும் சாதிய அமைப்பு போன்ற இப்பிரச்சினைகளே அநேகமாக இந்தியாவி லிருந்தும் தமிழ்ச்சூழலிலிருந்துமான விமர் சனங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தன." மேற்கத்திய விமர்சனங்கள் அநேகமாக மூன்று அம்சங்கள் பற்றியதாகவே இருந்தது. 1. தீண்டத் தகாத பரவனுக்கும் கிறிஸ்தவ மணவிலக்கு பெற்ற பெண்ணுக்குமான காதல் 2. குழந்தை களின் சிதறுண்ட / நிராதரவான / அன்பற்ற உலகம் 3. இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பவர் கள் நிறுவனம் சார்ந்த பேராசிரியர்களாஅல்லது பரந்துபட்ட வாசகர்களா எனும் விவாதம்: தரம் என்றால் என்ன என்பது பற்றிய விவாதம்.” 

அருந்ததி புக்கர் பரிசு பெற்ற சந்தர்ப்பத்தைத் தொடர்ந்ததாக இதுவன்றி ஸல்மான் ருஸ்டியின் இந்திய எழுத்து தொகுப்பு நூலை முன் வைத்தும், நோபல்பரிசு, புக்கர் பரிசு போன்ற வற்றை ஏன் இந்தியாவின் மிகச் சிறந்த பிராந்திய எழுத்தாளர்கள் பெறவில்லை என்கிற பிரச்சினையை முன்வைத்தும், ஆங்கில மொழி ஆதிக்கம் / காலனிய இலக்கியத் தர மதிப்பீடுகள் மீது காட்டமான தாக்குதல்களுக் தொடுக்கப்பட்டன."

இச்சந்தர்ப்பத்தில் சில செய்திகளும் முக்கியப் பிரச்சினைகளாக எனக்குத் தோன்றின் (1) இந்த நாவல் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட முடியாத சூழல் இந்நாவல் மீதான நீதிமன்ற வழக்குகளால் உருவாகியிருந்தது.2. உலகெங்கும் 58 மொழிகளில் இப்புத்தகம் சமகாலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது 3. அருந்ததிராயின் மிக எளிமையான மூக்குத்தி யணிந்த படங்கள் புத்தக விளம்பரங்களில் QLib @L15pg. like a runaway girl / africoவிட்டு ஒடிப்போன பெண்போல இருந்தார் என்று ராய் பற்றி ஒரு ஆங்கில பெண் விமர்சகர் எழுதினார். 4. நியூயார்க் டைம்ஸ் வெளி யிட்டிருந்த இந்தியாவின் மிகச்சிறந்த 12 எழுத்தாளர்களில் 11 பேர் வெளிநாட்டில் வாழ்கிறார்கள் எனும் செய்தி கண்டு ஆச்சர்யப் பட்ட அருந்ததி: ஏன் இவர்கள் இந்தியாவில் வாழ முடியவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது, என்னால் இந்தியா வுக்கு வெளியில் வாழ்வதைப் பற்றிக் கற்பனை கூட செய்ய முடியாது என்று சொல்லியிருந்தார்."________________

www.padippakam.Com
II 
ஆங்கிலத்தில் மட்டுமே எழுதும் இந்திய படைப்பாளிகளை இரண்டு வகைகளில் பிரிக்கலாம்.

1. இந்தியாவுக்கு உள்ளேயே இருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகிறவர்கள்.

2. இந்தியாவுக்கு வெளியே இருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள்.

இந்தியாவுக்கு உள்ளேயிருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதும் படைப்பாளிகள், வெளியேயிருக்கும் படைப்பாளிகள் போல சர்ச்சைகளில் சிக்குவதில்லை. அவர்களது பதிப்பாளர்கள் வாசகர்கள் கதைமாந்தர்கள் அனைவருமே இந்திய சூழலுக்குள் அடங்குபவர்கள். முல்க்ராஜ் ஆனந்த், ராஜாராவ், ஆர்.கே. ராமன், குஷ்வந்த்சிங், கமலா தாஸ் போன்றவர்களை இவ்வாறு குறிப்பிடலாம். இவர்களது எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களில் நவகாலனித்துவ அணுகுமுறை, மேற்கத்திய மதிப்பீடுகள் குறித்த விமர்சன அணுகுமுறை இடம் பெறுவதில்லை. மேற்கிலிருந்து எழுதும் எழுத்தாளர்களுக்கு எப்போதுமே இந்தப் பிரச்சினைகள் இருக்கிறது."

 ஸ்ல்மான் ருஸ்டி, விக்ரம் சேத், அமிதவ் கோஸ் போன்று மேற்கிலிருந்து எழுதும் எழுத்தாளர் களின் வாசகர் பரப்பு:இந்தியாவில் மட்டுமல்ல உலகம் தழுவியதாக இருக்கிறது. பதிப்பாளர் கள் வாசகர்கள் கதைமாந்தர்கள் போன்றோ ரும், இந்திய சமூகத்துள் மட்டுமே அடங்குவர் அல்ல. பிரிட்டிஸ் ராஜ்யத்தின் ஆட்சி நாட்களோடு தொடர்புகொண்ட மனிதர்களும், அவர்களது வழித்தோன்றல்களும், புலம் பெயர்ந்தவர்களிடம், பிரிட்டிஷ் ரெட்பேனர்ட் பாத்திரங்களும், இவர்களது படைப்புக்களில் இடம் பெறுகிறார்கள். இவர்களது எழுத்துக்கள் பற்றிய விமர்சனம் நிச்சயமாக நவகாலனிய ஊடுருவலாலும் கலாச்சார ஆதிபத்தியம், மேற்கத்திய மதிப்பீடுகளின் ஊடுருவல் போன்றவற்றின் பின்னணியில் தான் பார்க்கப் பட முடியும்.

இன்னும் மேற்கத்திய பதிப்பாளர்களும் வாசகர் களும் உலகின் பிறபகுதி எழுத்தாளர்களை நாடிப்போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. தமது மொழி நீர்த்துப் போய்விட்ட போது அதற்கு புதிய ஜீவனையும் புதிய உள்ளடக்கத்தையும் தருபவர்களாக ஆங்கிலத் தில் எழுதும் ருஸ்டி / ரொமேச் சந்திரா / மைக்கேல் ஒண்டாஜி போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று ஆங்கில நாவலாசிரியர் மார்ட்டின் அமிஸ் (Martin Amis) குறிப்பிடு கிறார். மேற்கத்திய தத்துவமரபு / அரசியல் நம்பிக்கைகள் இன்று நெருக்கடிக்கு உள்ளாகி யிருக்கிறது. ஒரு ஆன்மீக வெற்றிடம் ஐரோப்பிய மனிதனுக்குள் நிலவுகிறது. போப் ஜான்பால் மட்டுமல்ல டோனிபிளேயரும் பில் கிளிண்டனும் கூட மூன்றாவதுபாதை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. பன்முகத் துவத்தை அவர்கள் போற்றுகிறார்கள். பன்முகத்தைத் தழுவியதாகவே தமது ஆதிக்கம் நிலைநாட்டப்பட முடியும் என்பதை மேற்கத்தியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பமும் உலகமயமாதலும் உலகத்தின் எக்கோடி மனிதனும் எக்கோடி மனிதனுடனும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளக் கூடிய சூழல் இன்று உருவாகிவிட்டது. அவ்வகையில் உலகம் மனிதர்களுக்கிடையில் மிகவும் குறுகலானதாகிவிட்டது. ஜாதீயப் பிரச்சினைகளையும் கறுப்பின மக்களின் பிரச்சினையும் ஒரே தளத்தில்தான் இயங்கு கின்றன. மேற்கின் சிங்கிள் மதரின் பிரச்சினை யும் இந்தியாவில் முதிர் கன்னிகளின் பிரச்சினையும் ஒன்றுதான். குழந்தைகள் எல்லா சமூகங்களிலும் சுரண்டப்படுகிறார்கள். அவர்களது ஆளுமை நசுக்கப்படுகிறது. மேற்கின் ஜிப்ஸிகள் பிரச்சினையும் ஜபஸ்டா பூர்வகுடி மக்களின் பிரச்சினையும் ஒன்றுதான். கிரீன் பீஸ் _ மூவ்மெண்ட் நர்மதி நதி அணைக்கட்டு திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடியும். இனக்கொலை உலகப் பிரச்சினை. தேசீயம் உலகப் பிரச்சினை. சமப்பாலுறவு உலகப் பிரச்சினை. இப்படி உலகின் எந்த மனிதனும் எந்த மனிதனுடை யதும் அனுபவங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனாகவே இன்று இருக்கிறான். ருஸ்டி, அருந்ததிராய், தஸ்லீமா நஸ்ரீன், ஸ்ரமாகோ, ஒன்டாஜி போன்றவர்கள் இந்த தளத்தில்தான் சஞ்சரிக்கிறார்கள். கம்யூனிஸம் உலகெங்கிலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. போலந்திலிருப்பவனுக்கு கேரள கம்யூனிஸம் பற்றிய பிரச்சினைப் புரிந்து கொள்வதில் சிக்கலில்லை.பிரச்சினைகள் உலகமயமாகி வருவதையும், உலகில் எங்குவாழும் வாசகனும் பிற படைப்பாளிகளே புரிந்து அனுபவிக்கும் சூழல் உருவாகி வருவதையும் இடதுசாரி அரசியல் வாதிகளை விடவும் சர்வதேசீய பதிப்பாளர்கள் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். நவகாலனியம் / மேற்கத்திய மதிப்பீடுகள் / ஏகாதிபத்தியம் என்று விமர்சனக் கண்ணோட் டத்தை அமைத்துக் கொள்கிறவர்கள் இந்த அம்சத்தைக் நிர்ணயித்துக் கொள்வதில்லை. அநேகமாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த விமர்சகர்கள் எல்லாருமே அருந்ததியின் நாவலை அரசுசாரா இயக்க நடவடிக்கையாகவே' கணிக்கிறார்கள். இது யதார்த்தத்தைக் கணக்கிலெடுக்காத அணுகுமுறை ஆகும். பொதுவாக மேற்கத்திய பரிசுகள் என்றாலே ஏகாதிபத்திய அரசியல் சதி என்றுதான் பார்த்து நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். 

நோபல் பரிசு / பாஸ்டர்நாக், ஸால்ஸெனித் எலன் போன்ற பிரச்சினைகளின் பின்னணி யிலும், புலிட்சர் பரிசு, ஸ்டாலின் பரிசு போன்றவற்றின் பிண்ணணியிலும்தான் மேற்கத்திய பரிசுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் உருவாகியிருந்தன. கெடுபிடிப் போர் காலகட்டத்தில் உலகத்தில் இது உண்மை யாகத்தான் இருந்தது. மூன்றாவது பாதை பேசும் காலகட்டமான இன்று தாராளவாதம் தனது இறுதிக் காலத்தை அன்மித்துவிட்டது. கெடுபிடிப்போர் அநேகமாக முடிந்துவிட்டது. 

சமீபத்திய நோபல் பரிசுகள் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கும், தேச விடுதலைப் போராட்டம், கம்யூனிஸ் அரசியல், அடித்தட்டு மக்களின் பொருளியல் போன்றவை பற்றி எழுபவர்களுக்கு சார்பாகவே கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக நோபல் பரிசுக் கமிட்டி அதனது இடதுசாரி சாய்வுக்காக, கன்ஸர்வேடிவ் விமர்சனங்களால் பத்திரிக்கை களால் கண்டிக்கப்பட்டு வருகிறது." இதே ரீதியிலான பாதிப்பு இங்கிலாந்தின் இலக்கியப் பரிசான புக்கர் பரிசுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

iii

மேற்குலகம் முழுவதும் என்றுமே ஏகாதி பத்தியத்தின் அறிவுப் பாசறையாக இருக்க வில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உலக ஒருமைப் பாட்டைக் கோருவோர், மார்க்ஸ் முதல் கென்லோச்வரை இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கலாச்சாரச் செயல்பாட்டாளர் களும் இலக்கியவாதிகளும் அவ்வாறு இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்கள் பல்கலைக் கழகங்களில், கலாச்சார அமைப்புக்களில், பரிசுக் கமிட்டிகளிலும் இடம்பெறுகிறார்கள். இந்தியாவில் தற்போது நடைபெறும் இந்திய வரலாற்றுக் கழகத்துக்கு எதிரான பிஜேபி / அருண்சோரியின் தாக்குதல்கள் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது." ருஸ்டியின் Midnight Children புக்கர் விருது பெற்றபோது அது பிரிட்டிஷ் எதிர்ப்பு நாவல் என்றே பார்க்கப்பட்டது. ஆனால் 20 ஆண்டுகளின் t?girls Booker of Booker Luffolb sg Gg நாவலுக்குக் கிடைத்ததை நாம் ஞாபகம் கொள்ள வேண்டும்.' தனது God of Small things offo/abou A tribute to British Raj stairspy ஒரு விமர்சகர் குறிப்பிட மிக ஆத்திரமாக அதை மறுக்கிறார் அருந்ததி." 

புக்கர் பரிசு 1969 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு புக்கர் பரிசுக்கு முப்பதாவது ஆண்டு நிறைகிறது. புக்கர் எனும் நிறுவனம் கயானாவில் செயல்பட்டு வந்த ஒரு வியாபார நிறுவனம். 1945 ஆம் ஆண்டு ஜாக் காம்பெல் எனும் ஸ்காட்லாந்துக்காரர்.அந்த நிறுவனத்தின் மேலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். காம்பெல் இலக்கியத்தில் நிறைய ஆர்வம் கொண்டவர். தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரித்தவர். 

அவர் பதிப்புத்துறைக்கு வந்த காரியம் மிகமிக யதேச்சையானது. கயானா சுதந்திரம் பெற்ற பின் புக்கர் நிறுவனம் பிரிட்டனுக்கு திரும்பியது. ஜேம்ஸ் பாண்ட் நாவல்களை எழுதிக்கொண்டிருந்த இயான் பிளெமிங், ஜாக் காம்பலின் நண்பர். இயன் பிளமிங் தன் இறுதிக் காலத்திற்குப்பின் தனது புத்தகங்களில் இருந்து வரும் வருமானத்தை தனது குடும்பத்திற்குச் சேர்ப்பிக்க ஒரு வழி கூறுமாறு தனது நண்பரைக் கேட்டார். புக்கர் நிறுவனம் இவ்வாறுதான் பதிப்புத் துறைக்கு வந்தது. இயான்பிளமிங், அகதா கிறிஸ்டி, டெனிஸ், வீட்லி, ரோபர்ட் போல்ட், ஹரால்ட் பின்டர் போன்றோர்_புத்தகங்களுக்கான பதிப் புரிமையை புக்கர்நிறுவனம் பெற்றது. புத்தகப் பதிப்பில் நிறைய இலாபம் ஈட்டியது.'

ஏற்றுமதி இறக்குமதி நிறுவனமான புக்கர் நிறுவனம் பதிப்புத்துறைக்கு வந்தது போலத்தான் புக்கர் பரிசை நிறுவியதும் யதேச்சையாகத்தான் நடந்தது. ஜோனதன் கேப் பதிப்பகத்தின் பதிப்பக இயக்குனர் டோம் மோஸ்ச்லர் தனது 18 வயதில் பாரிஸி லிருந்தபோது Prix Goncourt எனும் பிரெஞ்சு இலக்கியப் பரிசு இலக்கிய வாசகர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பைக் கண்டு வியந்தார். அப்பரிசு பெற்ற புத்தகங்கள், அதற்குப் பின் அதிகமாக குறைந்த பட்சம் ஐந்து இலட்சம் பிரதிகள் அதிகமாக விற்பனையாவதைக் கண்ணுற்றார். 1951ஆம் ஆண்டு பாரிசிலிருந்து இலண்டன் வந்த டோம் தொடர்ந்து இதுபற்றி சிந்தித்து வந்தார். புக்கர் பதிப்பகம் இவ்வேளையில் இயான் பிளெமிங், அகாதா கிறிஸ்டி புத்தக விற்பனையில் இலாபம் குவித்துக் கொண்டிருந்தது. கிரகம் கிரீனுடன் டோம், புக்கர் நிறுவனத்துடன் கலந்துபேசி இலக்கியத்திற்கென ஒரு பரிசு நிறுவுவதை பரிந்துரைத்தார். புக்கர் நிறுவனம் அப்போது கயானிய ബ இலக்கியவாதிகளின் நடவடிக்கைகளுக்கு உதவி செய்து வந்தது. இச்சூழலில் பரிசை இங்கிலாந்தில் பதிப்பிக்கப் படும். ஆங்கிலப் புத்தகங்களுக்குத் தரவேண் டும் எனவும், எழுத்தாளர்கள் பிரிட்டனைச் சார்ந்தவர்களாகவும், காமன்வெல்த் நாடு களிலிருந்து மட்டுமே, தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் முடிவாகியது.'

1. பதிப்பாளர்கள் புக்கர் நிறுவனத்தவர் நூலகர் போன்ற நிர்வாகக் குழு செயல்படும்.

2. நிர்வாகக் குழு தேர்வுக்குழுவை முடிவு செய்த்ாலும், தேர்வுக்குழு சுயாதீனமாக இயங்கும்.
 3. தேர்வுக்குழு ஒரு குறும்பட்டியலை தேர்வு செய்யும். அதிலிருந்து ஐந்துபேர் கொண்ட நீதிபதிகளின் குழு. (பெரும்பான்மை மூவர்) தேர்ந்தெடுக்கும் நாவலை பரிசுக்குறியதாக அறிவிக்கும். பரிசுவிழா நாளன்றுதான் படைப்பாளி அறிவிக்கப்படுவார். அதுவரை ரகசியமாக இருக்கும்.

கடந்த முப்பது ஆண்டுகளில், 10 ஆண்டுகள் ஆங்கிலத்தில் எழுதும் பிரிட்டிஷ் அல்லாத படைப்பாளிகள் புக்கர் பரிசு பெற்றிருக் கிறார்கள்.
வி.எஸ். நைபால் (டிரினிடாட் / பிரிட்டன்) நதீன் கேதிமர் (தென் ஆப்பிரிக்கா), ஸல்மான் ருஸ்டி (இந்தியா / பிரிட்டன்) தோமஸ் ஜெனல்லி (ஆஸ்திரேலியா), ஜே.எம். கோட்ஸ்ட் (தென் ஆப்பிரிக்கா) கேரி ஹல்ம் (நியூஜிலாந்து) பீட்டர் கேரி (ஆஸ்திரேலியா) பென் ஒக்ரி (நைஜீரியா/ பிரிட்டன்) மைக்கேல் ஒன்டாஜி (இலங்கை / கனடா) அருந்ததிராய் (இந்தியா)." இதுவன்றி 12 படைப்பாளிகள் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். 

இடதுசாரி வலதுசாரி விமர்சனங்கள் எல்லா நிறுவனங்கள் அமைப்புக்கள் போலவே புக்கர் பரிசு நீதிபதிகள் குழுவுக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வோலோசோயிங்கா, நெபோ, டிரக்வால்காட், போரியோபோ, ஸ்ரமாகோ போன்றவர்கள் நோபல் பரிசு பெற்றபோது நாம் எப்படி அணுகினோமோ அதே போல்தான் நதின் கோதிமர், ருஸ்டி, ஒன்டாஜி, அருந்ததிராய் போன்றவர்கள் புக்கர் பரிசு பெற்ற விஷயத்தையும் நாம் அணுக வேண்டும். டால்ஸ்டாய், தாஸ்தியாவ்ஸ்க்கி, பெர்டோல் பிரெக்ட் போன்றவர்கள் நோபல் பரிசு பெறவில்லை என்பதால் இன்றைய உலகில் நோபல் பரிசு பெறும் முக்கியத் துவத்தை நாம் மறுதலித்துவிட முடியாது. அதைப் போலவே புக்கர் பரிசுக்கு அப்பால் நல்ல படைப்பாளிகள் இல்லை என்றும் நாம் நினைத்துவிடக்கூடாது. புக்கர் பரிசுக்கமிட்டி பரிசின் தேர்வு வரையறை, கருத்தியல் வரையறை போன்றவற்றை உணர்ந்துதான் இருக்கிறது. தேர்வுக் குழுவினரின் Subjective factor களையும் புக்கர் கமிட்டி மட்டுமல்ல, விமர்சகர்களும் வாசகர்களும் அறிந்துதானிருக் கிறார்கள். ஆகவே இந்தியாவில் வாழும் அதிய ற்புதமான பிராந்திய மொழிப் படைப்பாளி கள் அங்கீகரிக்கப்படவேண்டிய பிரச்சி னையை, புக்கர் விருதைச் சுற்றி எழும் விவாதங்களுடன் இணைத்துப் பார்ப்பது எவ்வகையிலும் பொருத்தமில்லை என்றுதான் தோன்றுகிறது. 

மொழியின் வலிமையும் கலாச்சாரத்தின் சாரமும் கொண்டவையாக இருப்பது பிராந்திய மொழிப் படைப்புக்கள்தான். இந்திய ஒப்பீட்டு இலக்கிய விமர்சகரான கலாநிதி. கே.எம். ஜார்ஜ் இந்திய மொழிகளில் நோபல் பரிசு பெறும் தகுதியுள்ள படைப்புக்கள் என சில நாவல்களைக் குறிப்பிடுகிறார்.

1. அஸ்ஸாமிய மொழியில் எழுதப்பெற்ற
 'அகாரி ஆத்மர் கஹானி. ஆசிரியர்: ஸயத் அப்துல்மாலிக், 
2. வங்க நாவலான ஆரோக்யா நிகேதன் ஆசிரியர்: தாராசங்கர் பானர்ஜி.
3. வங்க நாவலான ஆரண்யர் அதிகார்’ ஆசிரியர்: மஹேஸ்வதா தேவி.
4. ஒரிய நாவலான 'சித்ரா நதி மற்றும் பெரி சுசிகாரபெல ஆசிரியர்: சிதகார்த்மஹாபத்ரா
5. பஞ்சாபி மொழி நாவலான பிஞ்ஜார். ஆசிரியர்: அம்ரிதா பிரிதம் 
6. உருது நாவலான ஆக் காதர்யா ஆசிரியர்: குர் அதுல்ஜன் ஹைதர். 7. கன்னட நாவலான மரலி மன்னிகே: ஆசிரியர்: சிவராம் காரந்த்
8. தமிழ் நாவலான ஒரு புளிய மரத்தின் கதை' ஆசிரியர்: சுந்தர ராமசாமி
9. மலையாள நாவலான 'செம்மீன் ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை
கஸாக்கின்ட இதிகாசம் நாவல் ஆசிரியர்: ஒ.வி. விஜயன்
10. மராத்தி நாவலான: 'சாந்த கோர்ட் சால அஹே’ ஆசிரியர்: விஜய் டெண்டுல்கர்

இந்நாவல்களை ஆங்கில இலக்கியமும் அவ்வப்பிராந்திய இலக்கியம் அறிந்த மொழி ஆளுமை மிக்கவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது நோபல் பரிசுக் கமிட்டியின் பரிந்துரைக்குச் செல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார் ஜார்ஜ். தகுதியை தேடிச் செல்லும் இப்போக்கு உலக அளவில் நம்மை விரித்துக்கொள்வதன் பொருட்டு மேற்கொள்ளவேண்டும். ஸல்மான் ருஸ்டி @gm(553 Vintage Book of Indian Writing grgylb புத்தகத்தில் இந்தியாவின் பிராந்திய மொழி படைப்பாளிகளில் எவருமே இடம் பெறவில்லை. குற்றத்தை ஸல்மான் ருஸ்டிமீது மட்டுமே நாம் சுமத்திக்கொண்டிருக்க முடியாது. அநேகமாக உலகின் எல்லா மொழி ப  ைட ப பா ள |ா. க ளு  ைட ய து மா ன படைப்புக்களின்பட்டியகள் உலக மொழிகளில் வெளியிடப்படுகிறது. விவரங்களைத் தரவேண்டிய பொறுப்புக்கள் இந்திய கலாச்சார நிறுவனங்களுக்கு உண்டு. அவை இந்தியாவின் வளமான பிராந்திய மொழி படைப்பாளிகள் பற்றிய விவரப்பட்டியல்களைத் தொகுக்க வேண்டும். சிறந்த படைப்புக்கள் என்று கருதப்படுபவைகள் ஆங்கிலத்தில் மட்டுமல்ல உலகமொழிகளிலும் (குறிப்பாக பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ்) ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்படவேண்டும். பிராந்திய மொழிக்கு எதிராக X ஆங்கிலத்தில் எழுது வோரை நிறுத்தி தாக்குதல் தொடுப்பதில் ஏதும் அர்த்தமில்லை. இந்தோ - ஆங்கில எழுத்தாளர்கள் இந்திய படைப்பாளிகள் என்று பார்க்கிற ருஸ்டியின் பார்வையை ஆங்கிலச் சார்புப் பார்வை என்று பார்ப்பதை விடவும், அவருக்கும் அவர் போன்ற உலக வாசகர்க்கும் நமது பிராந்திய மொழி இலக்கிய வளத்தை நாம் கொண்டு தரவில்லை என்று பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

ஸல்மன் ருஸ்டி, அருந்ததிராய் போன்றவர் களின் பிரச்சினையை ஆங்கிலம் X இந்திய மொழிகள், ஆங்கில ஆதிக்கம் X இந்திய பிராந்திய இலக்கிய வளம் என்று பார்க்காமல், நமக்கு இருக்க வேண்டிய கடமைகள் பொறுப்புக்களில் அக்கறை செலுத்த வேண்டியதே இன்றைய தேவையாகும். இந்திய பிராந்திய மொழிகளில் எழுதும் படைப் பாளிகள் எந்த இலத்தீனமரிக்க, ஆப்பிரிக்க, மேற்கத்திய அமெரிக்கப்படைப்பாளிகளுக்கும் ஆளுமையில் படைப்பாற்றலில் குறைந்த வர்கள் அல்ல. நோபல் பரிசு பெறும் புக்கர் பரிசும் பெறும் படைப்புக்களின் தகுதிக்குக் குறையாத எத்தனையோ படைப்புக்களை நாம் நமது மொழியில் கொண்டுள்ளோம் என்று பெருமைப்படவேண்டும்.

ஆங்கில விமர்சகர்கள் அருந்ததியின் நாவலை முன்வைத்து இரண்டு வகையில் பிளவுபட்டுள் ளார்கள். 1. நாவலின் தேர்வுக்குழு மிகக் குறுகிய வட்டம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். கல்வித்துறையாளர்கள்-இலக்கியவிமர்சகர்கள் -இலக்கியப் பதிப்பாளர்கள் போன்றோர்தான் நாவலைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதோடு குறும்பட்டியல் Hard Back விலையில் போடுவதால் பெரும்பாலான வாசகர்கள் வாசிக்கக் கிடைப்பதில்லை. பதிப்பாளர்கள் குறும்பட்டியல் நூல்களைPaperback பதிப்பில் குறைந்த விலையில் வெளியிட வேண்டும். வாசகர்களும் பிற சமூகப் பகுதியினரும் தேர்வு அமைப்பில் இடம்பெற வேண்டும் என்று சில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். 2. ஸல்மான் ருஸ்டி, விக்ரம் சேத் போன்றவர்களோடுஅருந்ததிராயை ஒப்பிடுகிறார்கள். ருஸ்டி, சேத் போன்றோர் learned நாவல்களை எழுதுகிற படைப்பாளிகள். அருந்ததி அதிகமாகச் (Cover Play) @lossgåsjiangrum-G (Word Play) செய்கிறவர். அவருடைய நாவலை முதல் குறிப்பிட்டவர்களின் இலக்கியத் தரத்திற்குச் சொல்ல முடியாது." 

ருஸ்டி, சேத் சார்பான இலக்கிய விமர்சகர்கள் குற்றமாகச் சொல்கிற அதே விஷயத்தைத்தான் அருந்ததியின் தனித்துவமான எழுத்து ஆளுமையாகக் குறிப்பிடுகிறார் நடுவர் குழுத் தலைவரான ஜில்லியன் பீர்(Gian Bee); தென் இந்திய வரலாற்றை ஏழு வயது இரட்டைக் குழந்தையின் பார்வையில் சொல்லும் இந்நாவல் காதல் பற்றியது, மரணம் பற்றியது, பொய்கள் பற்றியது, மதிப்பீடுகள் விதிகள் பற்றியது. அசாதாரணமான மொழிப் புதுமை u?) gör (extra-ordinary linguistic inventiveness) புதிர்களிடையில் நுழைந்து செல்லும் சொல்லும் முறை இருப்பினும் கதை தெளிவாகச் சொல்லப்படுகிறது. நாங்க்ள் அனைவருமே ஜீவனுள்ள இந்நாவலால் ஆகர்சிக்கப்பட்டோம்' என்று குறிப்பிடுகிறார்.' 

ஆங்கிலத்தில் எழுதும் பிற இந்திய எழுத்தாளர் களிலிருந்து மிக வித்தியாசமானதாகவே அருந்ததி'ராயின் எழுத்து பார்க்கப்படுகிறது. 

அருந்ததி ராயின் தனித்துவப் பண்புகள்தான் என்ன?

1. பிற நாவலாசிரியர்களின் நிகழ்களம் - மேற்கத்திய இந்திய பெருநகர்ப்புறமாக (urban metropolis) இருக்கும். ராயின் கதை நிகழ்களம் கலங்கலான கிராமமாக (obscure willage) இருக்கிறது. நதி முக்கியமான நிகழிடமாக இருக்கிறது. 

2. அருந்ததிராய் மற்ற நாவலாசிரியர்கள் போல் அல்லாது ஸ்துலமானவர்க்கப்போராட்டத்தை யும், கேரள இடதுசாரி இயக்கத்தையும் தனது படைப்பில் கையாளுகிறார்.

3. தனிப்பட்ட பிரச்சினைகளான காதல், நினைவு, இழப்பு போன்றவை ஆண்வழிச் சமூகக் கொடுமையின் பின்னணியில், அரை-நிலபிரபுத்துவ, பிற்பட்ட முதலாளித்துவ சமூக அமைப்பின் பின்னணியில் சொல்லப் படுகிறது.’ என்கிறார் கல்பனாவில்லன்.

அருந்ததிராயும் தனது இயல்புணர்வுதான்.தன் எழுத்தாகியிருக்கிறது: எழுத்து முறையும் இயல்புமே நாவலாகியிருக்கிறது என்கிறார். தான் அதிகம் படித்தவள் இல்லை, ஆங்கிலப் பல்கலைக் கழகங்களில் படித்தவள் இல்லை என்கிறார். தன்னை இன்னொன்றாக்கிப் பார்க்கும் மாஜிக் ரியாலிஸ்ட் எழுத்தாளராக தன்னால் முடியாது என்கிறார். இன்னொரு நாவல் தன்னால் எழுத முடியுமென்று தோன்ற வில்லை என்கிறார். நிஜவாழ்வுதான் நாவல் என்கிறார். குழந்தைகளின் தொல் விளை யாட்டு, மூன்று காலங்களை இல்லாததாக்கி விளையாடு வதுதான் நாவலாகியிருக்கிறது என்கிறார்."ஆங்கிலத்தில் எழுதும் பிற இந்திய எழுத்தாளர்களை ஒப்பிட, ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும்கூட இந்நாவலில் அதிகமும் இந்தியத் தன்மை கொண்ட நாவல்தான். ராய் பதிப்புக்காகத் திட்டமிட்டுச் செயல்பட்டா ரல்ல, புத்தகம் இங்கிலாந்தில் பதிப்பிக்கப் பட்டது என்பது சந்தர்ப்பவசமாகவே நிகழ்ந் திருக்கிறது."தொடர்ந்து நிகழ்ந்தவை அனைத் துமே தற்செயலாகவே நிகழ்ந்திருக்கிறது.

இந்த நாவல் பற்றிய விசேசமான விமர்சனங்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தரப்பிலிருந்தும் தலித் தரப்பிலிருந்தும் வந்திருக்கிறது. ராயின் நாவல் கம்யூனிஸ் எதிர்ப்பு நாவல் - லிங்க மையவாத பாலுறவு நாவல் - மேற்கத்திய மதிப்பீடுகளை தூக்கிப்பிடிக்கும் நாவல் என்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சியினரின் விமர்சனம்’, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்/மேல் வருண சாதி எதிர்ப்பு நாவல் - சாதியமைப்பு அகமண எதிர்ப்பு நாவல் - இந்துமயமாக்கப் பட்ட சிறியன் கிறிஸ்தவ எதிர்ப்பு நாவல் என்கிறார் தலித் விமர்சகர் விஜயகுமார். இன்னும் பரவச நிலைக்குச் சென்று, இந்த நாவலின் நாயகன் வெளுதா ஒரு தலித் பரவன். இவன்தான் 'சிறிய விசயங்களின் கடவுள்' என்று தலித் பாத்திரமொன்றை முழுமுதற் கடவுள் ஸ்தானத்துக்கும் உயர்த்தி விடுகிறார்.' தோப்பில் முகமது மீரானின் நாவல் முகம்மதியர்களிடம் உள்ள சாதிவித்தியாசத்தை சொன்னதுபோல அருந்ததியின் நாவல் கிறிஸ்தவத்திற்குள் சாதி வித்தியாசம் இருப்பதைச் சொல்கிறது என்கிறார் நா. கண்ணன். இன்றும் இதை பெண்ணிய நாவலென்றும் கண்ணன் சொல்லும் ஒரு கூற்றுமிக மிக முக்கியமானது. ஸல்மன் ருஸ்டி நைபால் போன்ற இந்திய வம்சாவளி ஆங்கில நாவல் ஆசிரியர்களுக்கும் பாரிய வித்யாசம் தெரிகிறது. ராய் காணும் இந்தியா அவளது தாய்நாடு. அதனது அழகையும் செளந்தர்யத்தை யும் அதன் மக்களையும் அவர்களது வாழ்வையும் தத்ரூபமாகப் படம் பிடிக்கும் அதேவேளையில் அதன் குற்றங்களையும் கோபப்படாமல் சொல்லிச் செல்கிறார்’

அருந்ததி ராய் படத் தயாரிப்பாளர்கிருஷ்ணனை மிகச் சமீபத்திலேயே மணந்து கொண்டார். இந்நாவலில் வரும் அம்மு பாத்திரம் ஒரளவு அவள் தாய்தான். வெளுத்தாவுடனான உறவு கற்பனை என்கிறார். குழந்தைகள்தானும் தனது சகோதரனும் என்கிறார். தகப்பன் வங்காளி, தாய் விவாகரத்தான மலையாளி. தான் தனது தாத்தாவினால் molastateபண்ணப்பட்டேன் என்கிறார். கிழக்கத்திய கம்யூனிஸம் ஆச்சார இந்துமதம் + ஜனநாயக மாதிரி = கேரள கம்யூனிஸம் என்கிறார். அருந்ததி தன் கல்லூரி நாட்களிலும், கோவாவில் இருந்த வேளையிலும் இவரோடு சேர்ந்து வாழ்ந்தவர் குகா என்பவர். மார்க்சிஸ்ட் டெல்லி மனிதர்கள் வேஷதாரிகள் எனும் அருந்ததி கேரள மார்க்ஸியம், மனிதனுக்கு பெருமித உணர்வு தந்தது முக்கியமானது என்கிறார். 100% கல்வியறிவு தந்தது சாதனை என்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு சாதனைகள் மீது தனக்கு மரியாதை இருக்கிறது என்கிறார்." இ.எம்.எஸ். மீதும் தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவள் என்கிறார். இச்சந்தர்ப்பத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் முயற்சியில் நடைபெற்ற அணுஆயுத குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில் பிரகாஷ் காரத், என். ராம் ஆகியோருடன் கலந்து கொண்டு பேசியதையும் சேர்த்து ஞாபகம் வைக்கலாம். இந்திய மார்க்ஸிஸ்ட்டுகள் மீது விமர்சனம் கொண்டவராயினும் மார்க்சிஸ் எதிர்ப்பு குறுங்குழுவாதிகளுக்கு எதிரானவர் அருந்ததி ராய். 

"தலித் பிரச்சினை என்பது அடிப்படையில் ஒரு சமூக, கலாச்சார, மதப் பிரச்சினை. பொருளியல் காரணிக்குள் அடக்க முனைகின்றனர். ' என்கிறார்.தலித் விமர்சகர் விஜயகுமார். தலித் சித்தாந்திகள் அருந்ததிராயின் நாவலை வெளுத்தாவை கடவுளாக்கி வழிபடுவதற்கு தோதாகப் பாவிக்கிற மாதிரி மார்க்சிஸத்திற்கு எதிராகவும் பாவிக்க நினைக்கிறார்கள். நாவலில் கடவுள் என்று எவரும் இல்லை. கடவுள்களை உருவாக்குவதும் நாவலின் நோக்கம் இல்லை. சின்ன விஷயங்களில் கடவுள் எனும் கருத்தமைவு இழப்புக்களின் குறிப்பாக, தத்துவார்த்தமாகவே நாவலில் கையாளப்படுகிறது.

'இரண்டு உயிர்கள். இரண்டு குழந்தைகளின் குழந்தைப் பருவம். துன்புறச் செய்யும் எதிர்கால மனிதர்களுக்கான ஒரு வரலாற்றுப் பாடம் (பக்கம். 336) இதுதான் நாவலின் செய்தி. நிறையக் கடவுள்களை எதிர்பார்த்து நிறைய சின்ன விசயங்கள் நாவலில் உள்ளது. ஆண்வழி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சாதீயம் எல்லாமுடம் இங்கு பெரிய கடவுள்கள் கொண்ட பெரிய விஷயங்களாக இருக்கிறது. பாலியல் ரீதியில் குழந்தைகள் சினிமாதியேட்டரில் குழந்தமை அழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான எதிர்காலம் அழிக்கப்படுகிறது.

மணவிலக்குப் பெற்ற பெண்ணின் பிரச்சினை கள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஜாதீய சாயம் பூசி ஒரே ஒரு சாவியை மந்திரச் சொல்லாக உதிர்ப்பதை நாவல் நிராகரிக்கிறது. அருந்ததி, விஜயகுமார் சொல்வதுபோல 'முழுமையாக இந்துமத நீக்கம் செய்யப்பட்ட அறிவுஜீவி மட்டுமல்ல மாறாக முழுமையான மதச்சார்பற்ற அறிவுஜீவி. எந்த மதத்தீவிர வாதத்தினின்றும்தன்னைவிலக்கிக்கொண்டவர். 

இந்துமத நீக்கம் என்று பேசிக்கொண்டு இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம் பற்றியோ கிறித்தவ காலனியாதிக்கம் பற்றியோ வாய் திறக்காமல் நழுவிக்கொண்டிருப்பவர் அல்ல அருந்ததி. அரசு சாரா அமைப்புக்களில் இருக்கும் ஏகாதிபத்திய/கிறிஸ்தவ நலன்களை விஜயகுமார் போன்றவர்கள் கேள்விக்குட் படுத்த வேண்டும். தனிமனிதராக மதம் மாறும் சுதந்திரம் எவர்க்கும் உண்டு. ஆனால் கூட்டமாக மதம் மாற்றுவதிலும் போதனை செய்வதிலும் அக்கறை செலுத்தும் சவுதி அரேபிய வகை இஸ்லாம் பற்றியும் விஜயகுமார் போன்ற வர்கள் அக்கறை செலுத்த வேண்டும், இன்றள வும் பாரதீய ஜனதாவின் இந்துத்துவாவுக்கும், அணுகுண்டு வெடிப்புக்கும் எதிராக பரந்துபட்ட வெகுஜன எதிர்ப்பைக் காட்டி எழுப்பியிருப்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள்தான். சாதியத்திற்கு பொருளியல்அடிப்படையே இல்லை எனப் பேசுகிற கருத்து முதல்வாதிகள் அல்லர் மார்க்சிஸ்ட்டுகள். மார்க்சிஸ்ட்டுகள் தலித்தியக் கோட்பாட்டாளர்கள் மாதிரி மதப்பிரச்சினைகளில் அதி தீவிரவாத நிலைகளை மேற்கொள்ள முடியாது.

நாவலில் பிற ஆங்கில இந்திய படைப்புக்களில் இல்லாத அளவில் உணர்ச்சிமயமான பாலுறவச்சித்தரிப்புக்கள் உள்ளன. சாபுதாமஸ் என்பவர்நாவல் ஆபாசம் என்று பதனம் திட்டா வழக்கு மன்றத்தில் வழக்குகூட தொடுத்திருக் கிறார்.” நாவலில் அம்மு வெளுத்தா இவர்களுக் கிடையிலான கறுப்பு வெளுப்பு உடல்களின் கலப்பும் உள்வாங்குதலும் மயக்கமும் அதிர்ச்சிகரமான பிம்பங்களை எழுப்புகிறது. (பக்கம்:335). நாவலில் அப்பிம்பங்களைத் தமது நினைவில் எழுப்பிக் கொண்டு அதிர்ந்து போகிறார்கள் பேபி கொச்சம்மாவும் அம்முவின் பிற உறவினப் பெண்களும். மேலும் லிங்கமையப் புணர்ச்சி அச்சந்தர்ப்பங்களில் விவரிக்கப்படுவதுமில்லை. நாவலின் தர்க்கத்திற்கு மிக மிக அவசிய மானவை கலவிச் சித்தரிப்புக்கள்.

 V

கடவுள் அதிகாரமுள்ளவர்களுக்கும் பலம் வாய்ந்தவர்களுக்கும் ஆனவராகத்தான் இருக்கிறார். பெரிய விஷயங்களைக்காப்பாற்று வதற்காகத்தான் கடவுள் இருக்கிறார். விதிகளைச் சட்டங்களை மரபுகளைக் காப்பாற்றும் கடவுள்தான் இருக்கிறார். அறவியல் கல்வி, செல்வம், வீரம், ஒழுக்கம் போன்றவற்றுக்கான கடவுள்கள். அழகுக்கு உள்ள கடவுள் ஏன் அழுக்குக்கு இல்லை? ஒழுக்கமின்மைக்கு ஏன் கடவுள் இல்லை? சமூகத்தின் மைய மனிதர்க்கு உள்ள கடவுள் ஏன் விளிம்புநிலை மனிதர்களுக்கான கடவுளாக இல்லை? குழந்தைப் பருவம் கொலை செய்யப்படுகிறது, குழந்தைகள் பிரிந்துபோகிறது, அடையாளமற்றுத் தவிக்கிறது. இந்த நான்கு ஜீவன்களின் வாழ்வை பெரிய கடவுள்கள் துன்பத்தில் ஆழ்த்து கிறார்கள்.

 இந்த நாவல், உள்வாங்கப்பட்டதற்கான மேற்கத்திய சமூகத்தின் காரணங்கள் வேறு, இந்திய சமூகத்தின் காரணங்கள் வேறு. மேற்கத்திய சமூகத்தில் விவாகரத்தான பெண்களுக்கும் அவர்களின் இடையிலான மனோவியல் ரீதியான பிரச்சினைகள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக ஆகிவருகின்றன. வீட்டை விட்டு ஒடிப்போகின்ற இளம் பெண்களின் பிரச்சினை, போதை மருந்து பழக்கத்துக்கு ஆளாகும் பிரச்சினை போன்றவை முக்கியமானது. குழந்தைப் பராமரிப்பில் உள்ள பொருளியல் பிரச்சினை கள் தனித்துவாழும் தாய்களுக்கு இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கிறது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தனி தாய்மார்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த பணச்சலுகைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் வேலைக்குப் போக நிர்ப்பந்தப்படுகிறார்கள். மணவிலக்குப் பெற்ற பெற்றோரின் குழந்தைகள் பற்றிய தொடர் ஆவணப்படமான Children of Divorced Lil of 1717?) aimólastmaðugo ஆறு வாரங்களாக இந்த ஆண்டின் தொடக்கத் தில் ஒளிபரப்பானது. இதுவன்றி கறுப்பு / வெள்ளை கலப்பின உறவுகளில் பிறந்த குழந்தைகள் அடையாளமற்றுத் தவிக்கின்றன. ஆப்பிரிக்க மையவாதிகள் அக்குழந்தைகளை அங்கீகரிப்பதில்லை. வெள்ளை இனவாதி களும் அக்குழந்தைகளை விலக்கி வைக்கிறார் &çir. @ #&ypéSlçi girgät 'God of Small things நாவல் வெளியாகிறது. குழந்தைகளின் துயரமயமான உலகம் அவர்களின் பார்வையிலே விரிகிறது. நாவல் உடனடியாக மேற்கத்திய/அமெரிக்க சமூகங்களை பற்றிப் பிடிக்கிறது.

குழந்தைகளின் மனநிலை வளர்ச்சிபற்றி மிகுந்த அக்கறை கொண்ட சமூகமாக இச்சமூகம் வளர்ந்திருக்கிறது. குழந்தைகள் மனோரீதியில் பாலியல் ரீதியில் அவர்களது கையறுநிலையில் சுரண்டப்படுவது பற்றிய உணர்வு இங்கு சமூகவியலாளர்களையும் உளவியலாளர் களையும் பற்றிப்பிடித்திருக்கிறது. குழந்தைகள் மனோவியலை ஆய்வு செய்வதற்கென்றே பல்கலைக் கழகங்களில் தனித்துறைகள் 2-Girarsar. FreeAssociation Books arggiih upírsfästu உளவியல் ஆய்வமைப்பு குழந்தை களின் சிதறுண்ட உலகம் பற்றியே நிறைய புத்தகங்களை கொண்டு வருகிறது. குழந்தைகள் இலக்கியம் இங்கு ஒரு தனிப்பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும் குழந்தைகளின் சொல் விளையாட்டு, வேடிக்கை பார்க்கும் பண்பு, விட்டு விலகும் அப்பாவித்தனம், துயரம் பேன்றவைதான் நாவலின் கட்டமைப் பாக உருப்பெற்றிருக்கிறது. நாவலில் மேற்கத்திய சமூகத்தினரிடம் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குவதற்கான சமூக / உளவியல் / கலாச்சாரக் காரணங்கள் இவைதான்.

இந்தியாவில் இந்நாவல் ஆங்கில ஆதிக்கத்தின் இன்னொரு வடிவாகவே பார்க்கப்பட்டிருக் கிறது. மார்க்சிஸத்தின் மீதான என்.ஜி.ஒ. தாக்குதலாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அருந்ததியின் நேர்முகங்களை வாசிப்பவர்க்கும், கேரளத்தில் அன்று நிலவிய சூழலை கவனத்தில் எடுத்துக் கொள்பவர் களும், சாதி பற்றிய மார்க்சியவாதிகளின் ஆழ்ந்த அக்கறையின்மையையும் நினைவு கூர்பவர்களும் வேறு முடிவுகளுக்கே வந்து சேர முடியும். மேலும் நாவல் முழுக்கவும் ஆணாதிக்கம் நக்கலுக்கு உரியதாகவே நோக்கப்பட்டிருக்கிறது. ஆணாதிக்க நிலை களை கட்டிக் காக்கிறவர்களாகவே இங்கு காம்ரேட் பிள்ளையும், மார்க்சிஸ்ட் கட்சியினரும், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதிக்கும், கிழக்கத்திய மார்க்சிஸம் என்று பேசப்படு வதற்கும், இந்து சனாதனத்துக்கும் இருக்கும் உறவையும் நாவல் பரிசீலனைக்கு உள்ளாக்கு கிறது. இவைகளை வரலாற்று ரீதியில் வைத்துத்தான் பார்க்கலாமே அல்லாது குறிப்பிட்ட இயக்கத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகப் பார்ப்பதில் கொஞ்சமே நியாயமுள்ளது.

நாவலில் பாவிக்கப்பட்ட மொழி-சம்பந்த மாகவே மேற்கத்திய மரபு விமர்சகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். ஆங்கில மொழி ஆதார மொழியாகக் கொண்ட பண்டிதர்கள் அதன் ஆசாரத் தன்மையைக் காத்துக் கொள்ளவே முயல்வார்கள். அருந்ததியின்மொழியாளுமை அனாசாரத் தன்மை (unorthodox) சார்ந்தது. எல்லாவிதமான நிலைபெற்ற மொழி ஆசாரங்களையும் இலக்கணங்களையும்.அவரது கதைமொழி உடைத்துவிடுகிறது. ஆங்கில விமர்சகர்களின் கோபம் இதனாலேயே எழுகிறது என்று குறிப்பிடுகிறார் அருந்ததி” ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக் கும் அனிதா தேசாய் போன்றவர்கள் அருந்ததியின் இந்த அனாசார மொழிபற்றி அதிர்ச்சி தெரிவிக்கும்.அதே வேளை இந்த புதிய மொழியை வரவேற்கவும் செய்கிறார்கள். ஒ.வி. விஜயன் போன்றவர்கள் தமது இலக்கியம் பிராந்திய இலக்கியம் என்று சொல்லப்படுவதை மறுக்கிறார்கள். இந்தோ-ஆங்கில இலக்கியத்தை அவர் கிழக்கிந்திய கம்பெனி யின் மறுவடிவம் என்றே பார்க்கிறார். உலக மயமாதல் பற்றி நக்கலுடன் நாவலில் கையாளும் அருந்ததியின் நாவல் அதே உலகமயமாதலின் விளைவாக இந்தியாவுக்கு வெளியில் பதிப்பிக்கப் பெற்றது, ஒரு முரண் நகை என்றார்சுப்ரியாசெளத்ரிஃஇந்தியாவில் நாவல் எனும் வடிவில் புத்தகம் வரத் துவங்கியதில் இருந்து மிக அதிகமாக விற்ற 5frau softs God of Small things 5masöSTsir இருக்கிறது. புக்கர் பரிசு நாவல்களிலேயே அதிகம் விற்பனையாகி, அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலாகவும் இதுவே இருக்கிறது. இந்நாவல் பரிசுபெற்றதால் ருஸ்டிக்கு அவ்வளவு சந்தோசம் இல்லை யென்று சொல்லப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் இருண்ட முகத்துடன் காணப்பட்ட ருஸ்டி, அருந்ததி ராயை அனைவரும் பாராட்டிய போதும் கூட எதுவும் வாழ்த்துச் சொல் கூட சொல்லவில்லை என்கிறார்கள் விழாவில் பங்கு பெற்றவர்கள். ஆனால் அருந்ததி இந்திய எழுத்தாளர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்ததில் முதலாமானவர் ருஸ்டிதான் என்று குறிப்பிடு கிறார். ஆனால் தனது எழுத்துக்களையும் தன்னையும் ருஸ்டியோடு வைத்து மதிப்பிடு வதை காட்டமாக மறுத்துவிடுகிறார். நான் ஆய்வு செய்து எழுதுபவள் இல்லை, என் வாழ்வை எழுதுபவள் என்கிறார்.அருந்ததி.(33)

இவ்வாறான வாதப் பிரதிவாதங்களுக்கும் தத்தமது கொள்கைக் கோட்பாடுகளைத் தேடும் அரசியல் வாசிப்புக்களுக்கும் ஆளாகியிருக்கும் இந்நாவலை எவ்வாறு நாம் அணுகுவது சாத்தியமாக இருக்கும்? இந்நாவலை எந்த இடத்தில் பொருத்தி வைத்து நாம் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது. 

ஒரு புனைக்கதையின் மீதான அரசியல் வாசிப்பென்பது, சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின்பாலான ஆசிரியரின் அரசியல் பார்வைகளின்மீதான மதிப்பீடுகள் அடிப்படை யில் மட்டும் உருவாக முடியாது. பிரதானமான சமூகப் பொருளாதாரசக்திகள் மற்றும் சமகால கருத்தியல் போக்குகளில் அந்த நாவல் எங்கு நிலை கொண்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்றார் கல்பனாவில்லன்.(34)

அவ்வகையில் இந்நாவல் இந்திய சமூகத்தின் இன்றைய தீமைகளான மதவாதம், சாதீயம், பெண்ணடிமைத்தனம், வலதுசாரி அரசியல், போன்றவற்றுக்கு எதிரான மிகத் தெளிவான நிலைபாட்டை மேற்கொள்கிறது. இதற்கு மேலும் இந்திய சமூகத்தவர்கள் அதிகம் கவலைப்படாத மணவிலக்குப் பெற்ற பெண்ணின் பாலியல் தேர்வு, நிராதரவான குழந்தைகளின் துயரம் போன்றவற்றையும் இந்நாவலில் விரிவான பார்வைக்கு முன் வைத்திருக்கிறது. இச்சூழலில் இந்நாவல் மீதான எவ்வகையிலு மான எதிர்மறையிலான விமர்சனங்கள் இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்லாது என்பது மட்டும் நிச்சயம். உலக இலக்கிய / அரசியலில் அக்கறையுள்ள வர்களுக்கு மட்டுமல்ல இந்திய இலக்கிய / அரசியலில் அக்கறை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்பதும் நிச்சயம்.

அடிக்குறிப்புகள்: 

1. A. God of small thing: Review by Aijaz Ahmed Frontline Aug.8.1997. India.
B. பார்ப்பன இடதும் மனுநீதியும், பேரா.பி. விஜயகுமார். நிறப்பிரிகை மறுபிரசுரம்: சரிநிகர்க் 01.04.1998. இலங்கை.
C. Arundhati Roy and Patriarchy: a rejoinder: Kalpana Wilson Liberation unpopogth: Inquilab / Spring 1998. U.K.
D. Hollywood is clamouring to film her book. Why won't she fell it? by Kate Kellaway: interview with Roy.
The observes. 21 June 1997.U.K.
E. A private signature by Supriya Chudhri the Asian Age -5, May 1997. U.K.
F. உலக அரங்கில் கவனத்தை ஈர்க்கும் இந்திய நாவல்: நா. கண்னன்.
ஈழமுரசு 09-15 ஏப்ரல் 1998. பிரான்ஸ்.
2. நா. கண்ணன், பேரா.விஜயகுமார், கல்பருவில்ஸன், அப்ஜஸ் அகமது, சுப்ரியா செளத்ரி, போன்ற இந்திய விமர்சகர்கள் எல்லோருடைய கட்டுரைகளுமே இப்பிரச்சினைகளைச் சுற்றியே அமைகின்றன. ஜாதி - கம்யூனிலம் ஆண் வழிச் சமூகம் பற்றிய விமர்சனங் களாகவே அமைகிறது. 3. A. புக்கர் பரிசுக் கமிட்டி இவ்விசயங்களைக் குறிப்பிடுகிறது; குழந்தைகளின் உலகமாக விரியும் நாவல் எனக் குறிப்பிடுகிறது. B. Winning Saga of love, death, lies and laws: currgscir - விமர்சகன்-அதிகார அமைப்பு-அதிமத்யத்வ இலக்கிய to9ujljGissir ujigi. Dan Glaister, Stephen moss Guirairp வர்கள் விவாதிக்கிறார்கள். The Guardian. Oct.15. 1997. U.K.
4. A. What did Rushdie mean and why? by Rukmini Bhaya Nair
B. Answring an Authology by Ranjana Sidhandha Ash. Library ReviewsThe Hindu Magazine/17 Aug. 1997. India 5. Under fire. but India is in my blood
Interview with Arundhathi Roy by peter popham
Independent on Sunday 21 Sep. 1997. U.K.
6. பொதுவாக இடதுசாரி அமைப்புக்கள், அதிலும் கட்சி சார்ந்த அமைப்புக்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து எழுதுபவர்களை இவ்வாறுதான் பார்க்கிறார்கள்..அய்ஜஸ் அஹமது, ஒ.வி. விஜயன் போன்றோரின் பார்வைகள் இத்தகையதுதான். இன்னும் ருஸ்டி பற்றிய ஆசார இஸ்லாமிய அறிவுஜீவிகளின் பார்வையும் இத்தகைய தாகவே அமைகிறது. விதிவிலக்கு: எட்வர்ட் லெத்.
7.1997புக்கர் பரிசு விழாவுக்கு முன்பாக மெல்வின் பிராஜ் எனும் தொலைக்காட்சி இலக்கியக்காரர், கோர் விடால், ஸல்மான் ருஸ்டி, மார்ட்சன் அமிஸ் ஆகியோர் பங்கு பெற்ற உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். 'நாவல் எனும் வடிவம் இறந்து விட்டதா?’ என்பதே விவாதமாக இருந்தது. கோர்விடால் இறந்து விட்டது என்றார். அவ்வுரையாடலில் மார்ட்டின் அமீஸ் ஆங்கில மொழிக்கு புதிய ஜீவன் வழங்கியவர்கள் என ருஸ்டி, பென் ஓக்ரி போன்றவர்களைக் குறிப்பிட்டார். 8. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல பெரும்பாலுமான இடதுசாரிகள் இப்படியான பார்வையை மேற்கொள்வதற்கான சூழல் இந்தியாவில் நிலவத்தான் செய்கிறது. அரசுசாரா நிறுவனங்களின் மிகப் பெரிய பிரச்சாரங்களில் ஒன்றாக மார்க்ஸிய/கம்யூனிஸ் இயக்கங்களின் மீதான தாக்குதலாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளிடம் நிதிஉதவி பெறும் இவர்கள் ஜாதீய அமைப்புக்களிலும் செயல்படுகிறார்கள். ஆசிய ஆப்பிரிக்க இலத்தீனமெரிக்க நாடுகளில் செயல்படும் எதிர்ப்புரட்சியாளர்கள் இவர்கள். ஆனால் அருந்ததியின் மீதான இப்படியான பார்வை மிகைப்படுத்தப்பட்ட வொன்றாகும்.
9. No prizes for Peace as Nobel Judges fall out over Literature short list: Report from stockholm by Imme Karas The Independent 8.Oct. 1998. UK.
கன்சர்வேடிவ்கள் இடதுசாரிகள் - பின்அமைப்பியல் வாதிகளிடையில் நடைபெறும் தேர்வு குறித்த சர்ச்சைகள் பிரசித்தமாகி வருகிறது. அரசியல் ரீதியிலும் தேர்வுகள் முன்வைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கம்யூனிஸ்டு போரியோபொவுக்கு எதிராக கன்ஸ்ர்வேடிவ் நாவலாசிரியரான மரியோவர்கஸ் லோர்சா முன் நிறுத்தப்பட்டார். 1997 க்கான பரிசை இறுதியில்
போரியோ போ பெற்றார். 10. இடதுசாரிகளின் திரிப்புக்கள்:அருண்சோரி நேர்முகம்: கண்டவர்: ஸ்வபன்தாஸ் குப்தா. இந்தியா டுடே நவம்பர் 1997 தமிழ்நாடு இந்தியா. 11. 1981 ஆம் ஆண்டு மிட்நைட் சில்ட்ரன் புக்கர் பரிசு பெற்றது. இருபது ஆண்டுகள் கழித்து The Booker ofBooks பரிசையும் 1993 ஆம் ஆண்டு மிட்நைட் சில்ட்ரன் பெற்றது. 12. In a soft explosion "She explained that as a subject of the empire, her attitude towards English was confused, that she lowed the English language but it was also, for her a language of rage, grogy offgouflair sorrocoa: பற்றிக் குறிப்பிடுகிறார் கேட் கெல்லாவே. The Obsorver review: 21. June. 1998. U.K.
13. The Booker Story by Sir Michael.H.Caine booker 30 (1969-1998): A Book: 1998 Booker Prize. U.K.
14. The booker story by Sir Michale A Caine The Booker 30: page: 6 - 12: Booker Plc. 1998. UK. Howitallbegan by Tom Gallahar. Thesan book. P. 15 - 16.
15. A common wealth of talent by Aliastai Niven The Booker 30: The Book. P.40-42. Fripciólassig @south என்பதை ருஸ்டி நிராகரிப்பது போலவே அஸிஸ்டர் நிவனும் நிராகரிக்கிறார்.அதுதணி இலக்கிய அடையாளம் என்று ருஸ்டி வாதிடுகிறார்.
16. Why Indians Miss out by Dr. K.M.George The week. Oct. 26. 1997/Kerala/India.
இன்றைய சூழலில் இப்படியான பட்டியல்கள் மிகுந்த சர்ச்சைக்குரியவை. அடித்தட்டு மக்களின் பிரக்ஞை, யதார்த்தவாதம் மீறிய எழுத்து, இனஎழுச்சி, பெண் பிரக்ஞை போன்றவற்றின் சூழலில் பட்டியல்கள் பலதிறத்தவையாக அமைய முடியும். ஒருமாதிரிக்காகவே இங்கு இப்பட்டியல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 17. Answering an Anthology by Ranjana Siddhartha Ash Literary Review The Hindu Magazine/Aug. 97 to his magic. At best, reading the prose has the quality of france. At Norst, it is saturation of words. The language pleasure itself as the narrative driffs storgy off gouflair மொழி விளையாட்டை விமர்சிக்கிறார்கேட் கெல்லாவே. The Observer Review. 21, June, 1998. UK.
18. I was not admitted to it's magic. At best, reading the prose has the quality of trance. At worst, it is a saturation of words. The language measure itself of the narrative drifts storgy of CŞāşşūjor Glidity) விளையாட்டை விமர்சிக்கிறார் கேட் கெல்லாவே. The obserer Review. 21, June 1998 U.K.
19. Gillian Best chair Norman of the Judges on the Novel. The Guardian: Oct. 15. 1997. UK.
20. Arundhadhi Roy and Patriarchy: A Rejoinder by Kalpana Wilson. inquilab. Spring 1998. UK.
21. For me language is a skin of mythought, Interview: Arundhadhi Roy by Alix Wilbur the week. Oct. 26. 1997. Kerala. India.
22. Harper Collins இன் இந்தியப் பிரதிநிதி பங்கஜ் மிஸ்ரா மூலம் நாவல் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதிப்பிக்கப்பட்டது.தற்செயல் என்கிறார். பதிப்புத்துறை பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார் அருந்ததி.
The Million doller first novelist by Maya Jassi. Weekend
காலக்குறி L27
Guardian: May 24, 1997. UK.
23. God of Small Things: Review by Aijaz Ahmed Front line Aug. 8, 1997. India.
24. பார்ப்பன இடதும் மனுநீதியும்: பேரா. ச. பி. விஜயகுமார். நிறப்பிரிகை மறுபிரசுரம்: சரிநிகர் அக்.01.04.1998. இலங்கை. 25. உலக அரங்கின் கவனத்தை ஈர்க்கும் இந்திய நாவல்: நா. கண்ணன். ஈழமுரசு 09-15 ஏப்ரல் 1998. பிரான்ஸ்.
26. Underfire but India is in my blood Interview with Roy by Petor Pophem. Independent on Sunday 21 Sep. 1997. UK.
தன்மீதான அவதூறுகள் கேரள கம்யூனிஸத்தின் மீதான அருந்ததியின் விரோதவுணர்வின் வெளிப்பாடு என்கிறார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத். 'உண்மையில் நான் கேரள கம்யூனிஸ் இயக்கத்தின் மீது மரியாதை கொண்டிருக்கிறேன்; அது மிக நல்ல காரியங்களைச் செய்திருக்கிறது. இப்படியானவொரு இயக்கத்தை நீங்கள் தொடங்கினால் அதன் மீதான பொறுப்புள்ள விமர்சனங்களெல்லாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.அதைத்தான் நான் செய்தேன்' என்கிறார் அருந்ததி. 27. பார்ப்பன இடதும் மனுநீதியும்: பேரா. ச.பி. விஜயகுமார் நிறப்பிரிகை மறுபிரசுரம்: ஆசிரியர் சரிநிகர் 01.04.1998. இலங்கை. 28. Interview with Ray: Kate Kalleway. Guardian 21 June 1998 UK தனக்கு மதமே இல்லையென இந்நேர் முகத்தில் அருந்ததி குறிப்பிடுகிறார். 29. I know that this is the battle, and here is where I must pursueitto the end gTeiigu aypåGjSgir Lögí) SAGsögS$) &olo@@piri. Independent On Sunday: 21 September 1997. ՍK.
30. All Indian Writers get lumped with Rushdie, It's irritating. Interview with Roy by Sanjay Suri. Outlook. Oct. 27. 1997. India.
31. English Chatrifyed by Sagarika Gosh. Comments by O.V. Vijayan. Outlook: Oct. 27, 1997. India.
32. A private signature by Supriya Chadhuri The Asian Age 5. May 1997. UK.
33. (i) All Indian Writers get lumped with Rushdie, its irritating. Interview with Roy by Sanjay Suri Cutlook OVt. 27. 1997. India.
(ii) The Million dollar - First Novelist by Maya Jassi: The Guardian: May 24/1997. UK.
வாழ்வை தான் அருவமாக்கி விடாமல், உள்ளபடி எழுதுகிறேன் என்கிறார் ராய்.
34. Arundhati Roy and Patriarichy: A Regionder by Kalpana Wilson. Inquilab. spring 1998. UK.
மார்ச்’99
படிப்பகம்