தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, April 17, 2016

விரிந்த வயல்வெளிக்கப்பால் - அசோகமித்திரன்

automated google-ocr மெய்ப்பு பார்க்க இயலவில்லை

விரிந்த வயல்வெளிக்கப்பால் - அசோகமித்திரன்


"ஏண்டா, விடிஞ்சதும் போதுமா இதுதான உனக்கு வேலை" என்று அம்மா கடிந்தாள். மாணிக்கம் அவளைப் பொருட்படுத்தாமல் புட்டியிலிருந்து சிறிது மண்ணெண் ணெயை ஒரு தகரடப்பியின் மூடியில் ஊற்றிக் கொண்டான்.

"போடா அந்தாண்டை செட்டிக்கடையிலே இன்னும் பத்துநாளைக்கு மண்ணெண்ணெயே கிடையாதுன்னு சொல்லி யொழிச்சிருக்கான், வீட்டிலிருக்கறதை நீ கொட்டிப்பாழ் பண்னறயா? போடா அந்தாண்டை" என்று அம்மா கத்தினாள். 

"என்னது? என்னது" என்று பாட்டி தாழ்வாரத்துக் கோடியிலிருந்து குரல் கொடுத்தாள். மாணிக்கம் சமையலறையிருட்டிலிருந்து வெளியே வந்தான்.

"என்னதுடா?" என்று பாட்டி கேட்டாள்.

"ஒண்னுமில்லே" என்று மாணிக்கம் சொல்லியபடி நகர்ந்தான்

"என்னாதுடி": என்று பாட்டி மீண்டும் அம்மாவைக் கேட்டாள்.

________________

/140

"இது ஒண்ணு. எது எடுத்தாலும் என்னது என்ன துன்னு," என்று அம்மாவின் பதில் சிறிது தணிந்த குரலில் இருட்டிலிருந்து வந்தது.

மாணிக்கம் பெரிய துணிக் கிழிசலை எடுத்து வைத்துக் கொண்டு தன் சைகிள் முன்னால் உட்கார்ந்து கொண்டான். விருவிரென்று தன் விரல்களால் சாத்தியப் பட்ட அளவுக்கு சைகிளைத் துடைத்தான். பிறகு துணியைத் திரித்து சந்து பொந்துகளில் நுழைத்து இழுத்து மேலும் அழுக்கைப் போக்கினான். அப்படியும் பல இடங்களில் தூசு படிந்து ஓரளவு நிரந்தரத் தன்மை விளங்குமாறு கூட சைகிளின் மூலை முடுக்குகளில் கறைகள் இருந்தன. மாணிக்கம் துணிக் கிழிசலின் ஒரு நுனியை மண்ணெண்ணெயில் நனைத்து தன் கண்ணுக்குப்பட்ட கறைகள் மீது சொட்ட விட்டான். பிறகு அந்த இடங்களை வெறும் துணியால் மீண்டும் துடைத்தான். மண்ணெண்ணெய் பட்டுத் துடைக்கப்பட்ட இடங்கள் பளிச்சென்று தோற்றம் கொண்டன. ஓரிரு நிமிடங்களில் அந்த மினுமினுப்பு மங்கிப் போய் மீண்டும் பழைய நிலை திரும்பியது. இப்போது மாணிக்கம் துணியின் பெரும்பகுதியை மண்ணெண்ணெயில் தோய்த்து மிக விறுவிறுப்பாக சைகிள் முழுதும் மீண்டும் துடைத்தான். மட்கார்ட், ஃபிரேம், ஃபோர்க்குகளைத் துடைத்து விட்டுச் சக்கரங்களின் ஆரக் கம்பிகளையும் துடைத்தான். துணிக் கிழிசல் நூலாகப்பிரிந்து ஆரக்கம்பிகளிடையில் பல இடங்களில் சிக்கிக் கொண்டது. மாணிக்கம் ஒவ்வொரு நூலாக விலக்கினான். சங்கிலி ஒன்றைத் தவிர சைகிளின் எல்லாப் பாகங்களையும் ஒரளவுக்குத் துடைத்தாகி விட்டது. சங்கிலி யில் ஏராளமாக மசைபடிந்து கிடந்தது. அந்த மசையெல்லாம் போகத் துடைக்க வேண்டுமானால் நான்கு முழு வேஷ்டியில் பாதி வேண்டும். அல்லது கை வைத்த பழைய பனியன் இன்று வேண்டும். அப்புறம் நிறைய மண்ணெண்ணெய் வேண்டும். இவ்வளவும் செய்தான பிறகு மீண்டும் அந்தச் சங்கிலி மசைபடியத்தான் போகிறது. சங்கிலியில்லாத சைகிள் சாத்தியமா என்று மாணிக்கம் யோசித்தான். சங்கிலி இல்லாமல் இருப்பதில் பல செளகரியங்கள் இருந்தன. நடுத்தெருவில் சங்கிலி கழண்டுபோய் அதைக் கையெல்லாம் கரியாக்கிக் கொண்டு சரியாகப்போட வேண்டியதில்லை. வேஷ்டி நுனி சங்கிலியில் மாட்டிக் கொண்டு வண்ணுனால் கூடப் போக்க முடியாது மசைக்கறை பட்டுக்கொன வேண்டியதில்லை. காரியரில் சுகுணாவை அழைத்துக் கொண்டு போகும்போது பையன் எங்கே சங்கிலி-முள்சக்கரத்திடையில் காலை, விட்டுக்

________________

141|விரிந்த வயல்வெளிக்கப்பால்

கொண்டு விடுவானோ என்று பயந்தபடியே சைகிளை ஒட்டிச் செல்ல வேண்டியதில்லை. மானிக்கம் தகர டப்பி மூடியை வழித்து துடைத்து சைக்கிளைத் துலக்கினான். சைக்கிளில் அழுக்கு போயிருக்கலாம். ஆனால் அது பழைய  சைகிள் தான் என்பது அவ்வளவு மண்ணெண்ணெயாலும் மாற்றப் படாததொன்றாக இருந்தது. ஒரு காலத்தில் ஒரே சீராகப் பளபள வென்று இருந்திருக்கக் கூடிய சக்தரங்கள், கைப்பிடிகூட இப்போது பல இடங்களில் துரு ஏறிக் கிடந்தன. மாணிக்கம் கால் மிதியை ஒரு முறை யழுத்திப் பின்சக்கிரத்தைச் சுற்றினான். உயர்ந்து போகும் சுருதியொலியுடன் அது வேகமாகச் சுழன்றது. அப்போது சைகிள் புது சைகிள் போலவே இருந்தது.

மாணிக்கம் சைகிளைத் துடைத்து முடித்து விட்டு வீட்டின் கிணற்றங்கரைக்குச் சென்றான். மாட்டுத் தொழுவத்தில் லட்சுமியைத் தவிர மற்ற மாடுகளையெல்லாம் மேய்ச்சலுக்கு ஒட்டிச்சென்றாகி விட்ட்து. பரிதாபம் தோன்றும் கண்களுடன் லட்சுமி மாணிக்கத்தைத் திரும்பிப் பார்த்தது. மாணிக்கம் லட்சுமியின் நெற்றியையும் அடிக் கழுத்தையும் சொறிந்து கொடுத்தான். மாடு கழுத்தை நீட்டி முகத்தை உயரே தூக்கிக் கொண்டது. லட்சுமிக்கு வலது காதுக்கடியில் ஒரு கட்டி கிளம்பியிருந்தது. அது கிளம்பிய நாளிலிருந்து அது தீனி ஒன்றும் சரியாகத் தின்னாமல் மாடு இருந்த இடத்திலேயே கிடந்தது. கட்டி பழுத்த பின்தான் சூடு போட்டுக் கட்டியைத் திறக்க வேண்டும. கட்டி கிளம்பிய இடத்தில் ரோமம் நீக்கியிருந்தார்கள். மாணிக்கம் கட்டியை அழுத்திப் பார்த்தான். அது கல் போலக் கெட்டியாகயிருந்தது. மாணிக்கம் புது வைக்கோலைச் சிறிது கையிலெடுத்து லட்சுமியின் வாய்க்கருகில் கொண்டுபோனன். அது வைக்கோலை முகர்ந்தது. பிற்கு முதத்தை வேறுபுறம் இருப்பிக்கொண்டு விட்டது. மாணிக்கம் மீண்டும் மாட்டைச் சொறிந்து கொடுத்தான். "இன்னும் இரண்டு நாள் கூட ஆகும்” என்று சொன்னான். மாடு மாறாத பரிதாபக் கண்களோடு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது.

மாணிக்கம் வீட்டுக் கொல்லப்புறத்திலிருந்த வாழை மரங்களிடம் சென்றான் இரு மரங்கள் தார் போட்டிருந்தன. நல்ல வேளையாக இரண்டும் தென் திசை நோக்கிக் குலை தள்ள இல்லை. முன்பு ஒரு தடவை தெற்கு நோக்கி ஒரு மரம் தார் போட்டிருந்தது. மரத்தை வெட்டிச் சாந்த்து விடுவதா  வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே

________________

இன்னும் சில நாட்கள்/142

அவன் தங்கைக்குக் கழுத்தில் பெரிதாக வூங்கி சுரம் வந்து விட்டது. பதினைந்து மைல் தள்ளியிருந்த டவுன் ஆஸ்பத்திரிக்கு அவளை எடுத்துச் சென்றார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப்ட்ட குழந்தைக்ண்ணை திறக்காமல் இருபத்தினான்கு மணி நேரத்தில் செத்துப் போய் விட்டது. குழந்தையின் கால் வெள்ளிக் கொலுசுவைப் பார்த்துப் பார்த்து அம்மா எவ்வளவோ நாட்கள் புலம்பியிருக்கிறாள். எல்லா வாழை மரங்களையும் வெட்டித் தள்ளி விடுங்கள் என்று கதறியிருக்கிருள். ஆளுல் கிணற்றங்கரையில் இரைத்துக் கொட்டிய தண்ணிர் கொல்லையிலேயே தேங்கத்தான் வேண்டியிருந்தது. எப்படியோ வாழைமரங்கள் பிழைத்துக் கொண்டன. அவை இன்னும் சில நாட்களாவது பிழைத்திருக்கும்.

கொல்லைப்புற வேலியைத் திறந்து மாணிக்கம் பாதைக்கு வந்தான். பாதையின் வலது கோடியில் அக்கிரகாரத்து வீடுகள் இருந்தன் பலவற்றில் இப்போது வசிப்பவர்களே கிடையாது. இருந்தாலும் பல்லுப்போன கால் போன பாட்டியம்மாதான் யாராவது இருந்தாள். அக்கிரகாரத்து முதல் வீடாகிய மாடிவீட்டை ஒரு நாகப்பட்டினம் சாயபு வாங்கி விட்டார். அது மட்டும் பச்சை, மஞ்சள் வர்ணங்களில் பளிச்சென்று இருந்தது. அதை இப்போதைக்குக் கிடங்கு போலத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.

மாணிக்கம் அக்கிரகாரத்தைத் தாண்டி அடுத்த தெருவுக்குப் போனான். அந்தத் தெருவில்தான் தபால் பெட்டியிருந்தது. இன்னும் சில் நாட்களில் அங்கே தபாலாபீஸே வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். தபால் பெட்டி வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் செட்டியார் கடை வைத்திருந்தார். கடையையடுத்த சிறு வீட்டில் சங்கம் இருந்தது. சங்கக் கட்டிடத்தை யொட்டி ஒரு உயரமான கோலில் கொடி யொன்று பறந்து கொண்டிருந்தது. சங்கத் திற்கு நேர் எதிரே இருந்து வேப்பமரத்தின் உச்சியில் ஒரு கோலைக் கட்டி வேறொரு கொடி பறந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறை அந்த வெவ்வேறு கொடிக்காரர்கள் கூடி வாக்குவாதம் செய்து கொள்ளும் போதெல்லாம் செட்டியார் தன் கடையைப் பாதி மூடி விடுவார்.

செட்டியார் வீட்டிற்குள் மாணிக்கம் நுழைந்தான். ரேழியைத் தாண்டியவுடனே தாழ்வாரத்தில் ஒரு அகலமான மரபெஞ்சு போட்டிருந்தது. தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்தப்பட்ட பெஞ்சுப் பலகை வழவழவென்று இருந்தது. பெஞ்சுப் பலகையைக் கால்களுடன் இணைத்த



________________

இடங்களில் பித்தளைப் பூண்போட்டுத் திருகாணி செலுத்தி யிருந்தார்கள். பித்தளைப் பூண்கள் பளபளவென் றிருந்தன.

பெஞ்சின் மீது உட்கார்ந்திருந்த சித்தப்பா, 'என்னடா காலையில் நீயும் போட்டிக்கு வந்துட்டயா?" என்று மாணிக்கத்திடம் கேட்டார். பிறகு அன்றைய தினத்தந்தி தாள் ஒன்றை அவனிடம் கொடுத்தார். மாணிக்கம் நின்றபடியே செய்திகள் படிக்க ஆரம்பித்தான்.

மார்பைத் துணியால் மூடிக் கொண்டு செட்டியார் வந்தார். சித்தப்பா தன்னிடமிருந்த இன்னொரு தாளைச் செட்டியாரிடம் கொடுத்தார். செட்டியார் அதைப் பார்த்ததும் பார்க்காததுமாக ,"என்ன, சண்டை வந்துடும் போல இருக்கே?'  என்றார்.

"ஆமாம், அப்படித்தான் தெரியுது," என்று சித்தப்பா சொன்னர்.

"நேத்தித்கு மூணு டாங்கி நாசம்னாங்க. இன்னிக்கு மறுபடியும் மூணு டாங்கி நாசமாமே," என்று செட்டியார் பத்திரிகையில் கண் வைத்தபடியே சொன்னர்.

*மூர்க்கப் பயங்க, எவ்வளவு உதை வாங்கிண்டாலும் மறுபடியும் மறுபடியும் வம்புக்குன்னே வந்தபடியிருக்காங்க,” என்று சித்தப்பா சொன்னர்

"எம்பாடுதான் ரொம்பச் சங்கடமாய்ப் போயிடறது,' என்று செட்டியார் சொன்னர். 'டிப்போக்கு நேத்திக்கு மண்ணெண்ணெய் வாங்கிவரப் பையனை அனுப்பிச்சா நாலு நாள் பொறுத்து வான்னுட்டான். நாலு டின் எண்ணெய் கேட்டா ஒரு டின்தான் தருவேன்னு சொல்லியிருக்கான். இங்கே மனுசாளுக என்னமோ எல்லா எண்ணெயும் என் வீட்டிலேயே நான் புதைச்சு வைச்சிருக்கிற மாதிரி திட்டிட்டுப் போறாங்க. இவன் அம்மா வந்து நேத்திக்கு என்னெனனெல்லாம் கேட்டுட்டுப் போயிட்டா?' என்று செட்டியார் மாணிக்கத்தைப் பார்த்தார். மாணிக்கம் பத்திரிகையை விட்டுத் தலையைத் திருப்பாமல் இருந்தான்.

மாணிக்கத்தின் சித்தப்பா பேச்சைத் திருப்புகிற மாதிரி, "முன்னே ஒரு தடவை கூடத்தான் ஏதோ கப்பல் வரலேன்னு நாட்டையே பறக்க அடிச்சாங்க,' என்று சொன்னார்.

செட்டியார் சுவாரஸ்யம் குறைந்தவராக, 'இப்போ ரயில் வரலேன்னு சொல்லப் போருங்க." ஒன்று சொல்லிப் பத்திரிகை மீது பார்வை ஒட்டினர். சட்டென்று, 'மூணு

________________

இன்னும் சில நாட்கள்|144

"டாங்க் நாசம், நாலு டாங்க் நாசம்ருங்களே, அவன் திருப்பி அடிக்கவே மாட்டானா?"என்று கேட்டார்.
*****************************6
மாணிக்கம் உடனே, அவன்அடிக்க வரத்துேைலதானே நம்பளே அடிக்கப் போறோம்?' என்ருன். செட்டியார் மாணிக்கத்தை ஒரு முறை முறைத்துப் பார்த்தார். சித்தப்பா, 'பள்ளிக்கூட்த்துப் பைய்னுக்கு இதெல்லாம் என்னடா பேச்சு? உன் பாடம் எதாவது இருந்தா படி, போ, என்ருர். மாணிக்கம் முகம் சிவந்து குனிந்து நின்றன். "இவர்தான் படிப்பை முடிச்சுட்டார் போலேயிருக்கே,' என்று செட்டியார் பத்திரிகை பார்த்த வண்ணமே சொன்னர்.

"நல்ல பரிட்சை சமயத்திலே சீக்கா விழுந்துட்டான்,' என்று சித்தப்பா சொன்னர். செட்டியார் தன் கையிலிருந்த தாளை பெஞ்சு மீது போட்டுவிட்டு வெளியே போனுர். சித்தப்பாவும் அவரைத் தொடர்ந்து வெளியே போனர். போகும் போது மாணிக்கத்தின் தோளை மெதுவாக அழுத்தி விட்டுப் போளுர்,

பெரியவர்கள் இருவரும் வெளியே போனவுடன் மாணிக்கம் பத்திரிகை முழுக்க வேகமாய்ப் படித்தான். முற்றத்தின் ஒரு பக்கத்தைத் தட்டி கொண்டு தடுத்திருந்தது. அதற்குப் பின் இருந்த அறைகளில் பேச்சுக் குரல், பாத்திரங் கள் ஒலி, இவையுடன் சொய்யென்று தோசை சுடும் சப்தமும் வந்தது.

மாணிக்கம் தாழ்வாரத்தில் பெஞ்சை யடுத்து இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான். அங்கே செட்டியாரின் இரண்டாவது மகன் ராமலிங்கம் எதையோ மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். மாணிக்கத்தைப் பார்த்தவுடன், 'ஏண்டா நேத்து ராத்திரி வரலே?" என்று கேட்டான்.

"அப்பா வீட்டிலேயே இருந்தார்,' என்று மாணிக்கம் சொன்னன்.

:இந்தா, என்று ராமலிங்கம் ஒரு புத்தகத்தை மாணிக்கத்திடம் கொடுத்தான். அது எஸ். எஸ். எல். சி. பத்து வருட கணக்கு வினத்தாள்கள் கொண்டது.

மாணிக்கம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தான்.

ஏண்டா அழறே?' என்று ராமலிங்கம் கேட்டான். போடா, எனக்குக் கணக்கே வரமாட்டேங்குது," என்று மாணிக்கம் நெஞ்சடைக்கச் சொன்னன்.


*****************
________________

145|விரிந்த வயல்வெளிக்கப்பால்

“யாருக்குத்தாண்டா கணக்கு வராது? போட்டுப் போட்டுப் பார்த்தாத்தான் எதோ இரண்டு  இரண்டு மூணு தெரியறது.  நீ வாடான்னா  வீட்டிலேயே உட்கார்ந்துடறே. இப்போ கணக்குப்  போடலாம், வரயா?”

“ இப்போ முடியாதுடா, நான் மத்தியானம் வரேன்."

'உன் இஷ்டம்."

மாணிக்கம் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். பிறகு அறையில் பெரிதாக மாட்டப்பட்டிருந்த காலண்டரிடம் சென்றான்.ராமலிங்கம் “எடுத்துண்டு போ,. என்று சொன்னான்.

மாணிக்கம் ராமலிங்கத்தைப் பார்த்தான், “ இல்லே, இங்கேயே, இருக்கட்டும்,” என்றான். அவனும் ராமலிங்கமுமாகச் சேர்ந்து சோவியத் நாடு பத்திரிகைக்கு மூன்றாண்டுச் சந்தா கட்டியிருந்தார்கள். இரண்டு வருடங்கள் முடியப் போகின்றன. அதற்குப் பரிசாக வந்த காலண்டர்கள் ஒன்றன் மீது ஒன்றாக அங்கே மாட்டியிருந்தது. மாணிக்கம் காலண்டர் தாள்களைப் புரட்டி ஒரு வண்ணப்படத்தை மட்டும் பார்த்த படி நின்றான். அது கிராமப்புறப் படம். மிகப் பெரிய வயல் வெளி. பயிர் நன்ருக முற்றி அறுவடைக்குத் தயாராகக் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. வயல் வெளிக்குப் பின்னல் ஒரு மலைத்தொடர் லேசாகத் தெரிந்தது, சிறிதே வெண்மேகங்கள் கொண்ட வானம். வயல்வெளியில் தூரத்தில் ஒரு டிராக்டர் பொம்மைப் போலத் தெரிந்தது. டிராக்டரின் ஒரு செங்குத்தான குழாய் வழியாகப் புகை வந்து கொண்டிருந்தது.

மாணிக்கம் தீர்க்கமாக ஒரு முறை மூச்சு இழுத்து விட்டான். அவனுக்கு டிராக்டர் விடும் புகை காற்றில் கரைந்து மறைந்து, மீண்டும் குழாய் வழியாக வெளிவந்து, மீண்டும் கரைந்து மறைவது போல இருந்தது. பயிர்கள் காற்று வீச்சில் அலை அலையாக அசைந்து கொண்டிருந்தன, மேகங்கள் வானத்தில் மிக நுண்ணியமாக மிதந்து போய்க் கொண் டிருந்தன.

பூமியே அதிர்வது போல,ஒரு அலாரம் அடிக்க ஆரம்பித்தது. ராமலிங்கம் பாய்ந்து சென்று அதன் தலையில் ஒரு தட்டு தட்டினான். கடிகாரம் ஓய்ந்தது.

''' மணி என்ன?’ என்று மாணிக்கம் கேட்டான்.
 “எட்டரை இந்தக் கோமாளியை அஞ்சு மணிக்கு

________________

இன்னும் சில நாட்கள்/146

அடிக்கத் திருப்பி வைச்சா எட்டரைக்கு அடிக்கறது." என்று ராமலிங்கம் சொன்னான்.

மாணிக்கம் பதில் பேசாமல் படத்தையே பார்த்த மாதிரி நின்றான். ராமலிங்கம் சொன்னன், 'ஒரு வேளை, நீ பார்த்துண்டிருக்கிற கிராமத்திலே இப்பத்தான் அகுச் மணியோ என்னவோ.”

மாணிக்கம் காலண்டர் தாள்களைத் தொங்க விட்டுத் திரும்பினான். “நான் வரேண்டா,” என்றான்.

'மத்தியானம் வரயா?' என்று ராமலிங்கம் கேட்டான். 

"அப்பா வீட்டிலேயில்லேன்னா நான் வரேன்." 

"படிக்கப் போறேன்னா ஏண்டா உங்கப்பா விட மாட்டார்?'

"படிக்கப் போறேன்னத்தான் விடமாட்டார்.' மாணிக்கம் தன் வீட்டுப் பக்கம் விரைந்தான். வெளிச்சம் நிறையேயிருந்தும் நிழல் லேசாகத் தான் தரையில் விழுந்தது. ஆகாயத்தில் வெண்மையான மேகங்கள் சூரிய ஒளியை மிருதுவாக மாற்றியனுப்பிக் கொண்டிருந்தன.

தாழ்வாரத்தில் நல்ல வேளையாகப் பாட்டி மட்டும்தான் இருந்தாள். மாணிக்கம் ஓசைப் படாமல் சைகிளை வெளியே எடுத்தான். அம்மா பார்த்தால் நிச்சயம் அவனைப் பழைய சோறு போட்ட இலை முன்னால் உட்கார்த்திவிடுவாள்.

மாணிக்கம் சைக்கிளை வேகமாக மிதித்து ஆற்றங்கரைப் பக்கம் போனான். வண்டிப் பாதை ஆற்றங்கரைப் பக்கத்தோடு சென்றது. மாணிக்கம் மணலில் சைக்கிளைத் தள்ளி எடுத்துச் சென்றான் ஆற்றில் தண்ணிர் போய்க் கொண்டிருந்தது. மூங்கில் பாலம் வழியாக ஆற்றைக் கடக்கக் கரையோர வண்டிப் பாதையில் இரு பர்லாங்குகளாவது போக வேண்டும். மாணிக்கம் சைக்கிளைச் சிறிது தூக்கிய வண்ணம் தண்ணிரிலேயே இறங்கி ஆற்றைக் கடந்தான். ஒரேயொரு இடத்தில் தான் தொடையளவுக்குத் தண்ணிர் இருந்தது. அந்த வேளையில் நிறையப் பேர்கள் ஆற்றைக் கடந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள் பள்ளிக்குப் போகும் பெண்கள்தான் மூங்கில் பாலத்தை உபயோகித்தார்கள் பெண்களில் கூடத் துணிச்சலானவர்கள் தண்ணிரில் இறங்கித்தான் ஆற்றைக் கடந்தார்கள்.

ஆற்றைக் கடந்ததும் மாணிக்கம் சைக்கிளைத் தரையில் இறக்கினான். இரு சக்கிரங்களும் தண்ணீரில் நனைந்திருந்தன.


________________

147|விரிந்த வயல்வெளிக்கப்பால்

அவன் கீழே இறங்கியவுடன் சைகிளில் ஈரமாகயிருந்த இடங்களில் மணல் ஒட்டிக்கொண்டது.

மாணிக்கம் பிரேக்கையே உபயோகப் படுத்தா வண்ணம் சைக்கிளை மெதுவாக ஒட்டித் சென்றான்.. அவன் கிராமத்தைவிட இந்தக் கிராமம் இன்னும் பெரியது. இங்கேதான் உயர்நிலப்புள்ளி இருந்தது. பெண்களும் பையன்களுமாக அதை நோக்கிக் குவிந்த வண்ணமிருந்தார்கள். ஏழு மாதங்கள் முன்பு வரை அந்தப் பள்ளி மாணிக்கத்துக்கு நண்பர்களோடு கூடுமிடம் வரலாற்றுப் பாடங்கள் படிக்கும் போது விந்தையூட்டுமிடமாக, கற்கும் கல்வி ஒரு சமயம் உற்சாக மூட்டுவதாக, இன்னொரு வேளை பயமூட்டு வதாக, நம்பிக்கை தருவதாக நிராசை விளைவிப் பதாக, வீட்டுப் பெரியவர்கள் யாரும் பக்கத்திலில்லாத சுதந்திரத்தில் பெண்களை நேருக்கு நேர் பார்க்குமிடமாக, அவர்களைக் கிண்டல் செய்யுமிடமாக, அவர்களோடு பேசுவதில் உற்சாகம் கொள்ளுமிடமாக இருந்திருக்கிறது. அவனுக்குக் கீழ் வகுப்புகளில் படித்தவர்கள்தான் இன்று அப்பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்க முடியும், போய்க் கொண்டிருந்தார்கள். அவன் மட்டும் பரிட்சையில் தேறியிருந்தால் இன்று அவர்களெல்லோரும் அவனுக்குக் குறைந் தவர்கள்தான். ஆனல் அவர்கள் இன்று அவனுக்குச் சரிசமம். சரிசமம் என்று கூட்ச் சொல்வதற்கில்லை. அவர்கள் இன்னும் தோல்வி காணாதவர்கள். அவன் ஒரு தோல்வியடைந்தவன். 

மாணிக்கம் யார் கண்களையும் சந்திக்காமல் தெருக்களைக் கடந்து சென்றான் பஸ் போகும் சாலையருகில் மீண்டும் கூட்டம் இருந்தது. ஒரு புஸ் நின்றிருந்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த பிரயாணிகளில் பலர் கீழேயிறங்கிச் சாலையோரமாகச் சாலைக்கு முதுகைக் காட்டி உட்கார்ந்து எழுந்தார்கள். டீக்கடையில் டீ வாங்கிக் குடித்தார்கள்.

சாலையைக் கடந்து செல்லும் இன்னுெரு வண்டிப் பாதையில் மாணிக்கம் தன் சைகிளைச் செலுத்தினான், அழகாக நேர்கோடுகளில் கரை கட்டபட்ட வயல்வெளி அவன் பார்வையில் பெரிதாக விரிந்து கொண்டேயிருந்தது.

வண்டிப் பாதை சிறு மேட்டு நிலத்தில் முடிவடைந்தது. அங்கிருந்து வயல்கள் ஓரமாக ஒற்றையடிப்பாதை சென்றது. சைகிள் அந்த ஒற்றையடிப் பாதையின் குண்டு குழிகளில் இறங்கி ஏறிச் சென்ற போது மாணிக்கத்திற்குக் குதிரைச் சவாரி செய்வது போலிருந்தது.
________________

இன்னும் சில நாட்கள்/148

சுமார் அரைமைலுக்கு அதிகமாகச் சென்ற, மாணிக்கம் சைகிளில் உட்கார்ந்த படியே வலது காலைக் கீழே ஊன்றித் தன் பார்வை கொள்ளுமளவுக்கு வயல் வெளியைப் பார்த்தான். மூன்று, நான்கு வயல்களைத் தவிர அங்கே முற்றும் நன்கு ஓங்கி வளர்ந்த பயிர்க் கதிர்கள் காற்றில் அசைந்து ஏரித் தண்ணீர் மேற் பரப்பு போல் சிற்றலைகாளக தென்பட்ட்து தொலைவில் மலைத்தொடர் அப்போதே கலையத் தொடங்கும் பணி மூட்டத்தில் பிரம்மாண்டமான நாடகத் திரை போல் காட்சியளித்தது.

பச்சை நிறத்தின் பல சாயல்களில் வயல்கள் அலை அசைவு காண அவன் கண்ணில் நிறைந்தன. அது பிரத்யட்சம் என்ற நினைப்பு நீங்கி ஒரு மாபெரும் வண்ணப்படம் போல் தெரிந்த்து. கண்ணுக்கெட்டிய வரை பச்சைப் பசேலென்ற வயல்வெளி, பின்னல் லேசாகத் தெரியும் மலைத் தொடர். வண்ணப்படம். அந்த வண்ணப்படம். அந்த காலண்டர் வண்ணப்படம். அதுவேதான். அந்த வண்ணப் படத்திற்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம். இங்கே டிராக்டர் தூரத்தில் குப் குப் பென்று புகைவிட்டுக் கொண்டு போகவில்லை.

மாணிக்கம் வாயைச் சிறிது திறந்தபடி அப்படியே நின்றன். கீழே ஊன்றியிருந்த கால் வலித்தது. அப்போது அவனுக்குக் கதிர்கள் அசைவது மீண்டும் தெரிய ஆரம்பித்து விட்டது. மலைத்தொடர் இன்னும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. வானத்தில் வெண் மேகங்கள் வெகுவாகக் கலைந்து வெயிலின் தீவிரத்தை அதிகப்படுத்தத் தொடங்கி விட்டன.

கூவென்று ஒரு ஒலி தூரத்திலிருந்து மிதந்து வந்து அவனுக்குக் கேட்டது. மாணிக்கம் ஒற்றைப் பாதையில் மீண்டும் சைகிள் விட்டுக் கொண்டு சென்றான். ரயில்வே ஸ்டேஷன் ஒரு மைல் தூரத்தில் இருந்தது. பாஸஞ்சர் வண்டி அங்கு வந்திருக்க வேண்டும். அந்தக் கூவல் ரயிலின் கூவல்தான்.

மாணிக்கம் வயல்களைப் பிளந்து சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில் சைகிளை வேகமாக விட்டுக் கொண்டு சென்றான் பாதை பல இடங்களில் தண்ணீர் வடிகாலுக்காகத் தடைப்பட்டது. சில இடங்களில் சைகிளை விட்டுக் கொண்டே செல்ல முடிந்தது. சில இடங்களில் இறங்கி சைகிளைத் தூக்கிக் கொண்டுதான் கடக்க வேண்டியிருந்தது. இங்கிருக்கும் வயல்கள் போலத்தான் எங்கும் இருக்க



________________

149|விரிந்த வயல்வெளிக்கப்பால்

வேண்டும். இங்கிருக்கும் மலைத்தொடர் போலத்தான் எங்கும் இருக்க வேண்டும். எங்கோ யாரோ ஏதோ 'பிரதேசத்தை வரைந்த வண்ணப்படம் இந்த இடத்தைப் பார்த்தே வரைந்த மாதிரி இருக்கிறது. இந்த மண்ணும் பயிரும் காற்றும் வானமும் மேகமும் மலைத்தொட்ரும் எல்லா விதத்திலும் ஒன்றுதான்.

மாணிக்கத்திற்கு சித்தப்பா, செட்டியார் ஞாபகம் வந்தது. அவர்கள் வரப்போகும் யுத்தத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். வயலில் மூன்று டாங்கிகள் நாசம். நான்கு டாங்கிகள் நாசம். டாங்கிகள் வயலில் இறங்குமா? சண்டை என்றால் இறங்கித்தான் ஆக வேண்டும். ஒரு விதத்தில் டிராக்டரும் டாங்கியும் கூட ஒரே மாதிரிதான். ஆனல் வயலில் டாங்கிகள் மட்டும் நாசமாவதில்லை. இதோ இந்தப் பயிர்கள், இந்த அற்புதப் பயிர்களும் நாசமாகின்றன. வயல் வெளிக் காட்சியே நாசமாகிறது.

ரயில் இன்னுெரு முறை கூவியது. இப்போது மாணிக்கத்திற்கு ரயில் பாதை கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது. தந்திக் கம்பங்களை நன்றாக வரிசையாகப் பார்க்க முடிந்தது. குப் குப் பென்று இஞ்சின் புகைவிட்டுக் கொண்டு கிளம்பியது. அது விட்ட புகை டிராக்டர் புகையைவிடப் பல மடங்கு அதிகம். ஆனாலும் அதுவும் புகை. புகை சில விநாடிகளே காற்றில் மேலே மிதந்தது. பிறகு கரைந்து மறைந்தது. புகை தோன்றித் தோன்றி, கரைந்து மறைந்து கொண்டிருந்தது.

மாணிக்கம் வேகமாக ரயில் பாதையை நெருங்கி, ரயில் பாதையையொட்டிச் சென்ற ஒற்றையடிப் பாதையில் சைகிளை நிறுத்தினான் ரயில் தடாம் குடாம் உஸ் புஸ் ஸென்று அவனை நெருங்கிக் கொண்டிருந்தது.

மாணிக்கம் சட்டென்று தன்னைத் தயார் நிலையில் இருத்திக் கொண்டான். என்ன காரணத்தினாலோ வேகமாக ஓட முடியவில்லை. மாணிக்கத்துடன் ஏதோ கேட்டு பேசி உறவாட வேண்டும் என்ற எண்ணத்தோடு மெதுவாக நெருங்குவது போலத் தோன்றிற்று.

மாணிக்கம் சைகிளை விடத் தொடங்கினான். இப்போது இஞ்சின் சிறிது சிறிதாக அவனைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சைகிளை மிதித்து ரயிலோடு சென்றான். இஞ்சினை அடுத்திருந்த பெட்டி  முற்றிலும் மூடிய பெட்டி: அதையடுத்த பெட்டிகளில்தான் பயணிகள்



________________

இன்னும் சில நாட்கள்/150

இருந்தார்கள். பயணிகள் பெட்டி ஒன்று, இரண்டு, மூன்று கூட அவனைத் தாண்டிச் சென்று விட்டது.

மாணிக்கம் இன்னும் வேகமாக சைகிளை விட ஆரம்பித்தான். இப்போது அவன் சைகிள் வேகம் ரயிலின் வேகத்திற்குச் சமமாக இருந்தது. ரயிலில் ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்த சிலர், மாணிக்கத்திற்குக் கையை விசி உற்சாகப்படுத்தினார்கள். ஏதோ ஒரு பையன் மட்டும் ‘ஹேய், ஹேய்’ என்றான்.

மாணிக்கம் தன் பலங் கொண்ட மட்டும் சைகிளை மிதித்தான். இப்போது அவன் ரயிலை விட வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். ரயில் நீராவி சக்தியில் போய்க் கொண் டிருந்தது. அவன் தன் சொந்த சக்தியில் போய்க் கொண் டிருக்கிறான் இதோ இன்னொரு பெட்டியை அடைந்தாகி விட்டது. இதோ அதையும் கடக்கப் போகிறான். இப்போது அவனுக்கு அந்த மூடிய பெட்டிதான் பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் இரண்டு எட்டில் அதையும் தாண்டி விடலாம்.

இஞ்சினிலிருந்த ஒரு ஆள் மாணிக்கத்தின் பக்கம் தலையை எட்டிப் பார்த்தான். அவன் தன் தலமயிரை ஒரு கைக் குட்டை கொண்டு இறுகக் கட்டியிருந்தான். அவன் மாணிக்கத்தைப் பார்த்துக் கையை வீசினான். மாணிக்கமும் கை வீசினான்.

இப்போது இஞ்சினிலிருந்த இன்னொருவனும் மாணிக்கத்தை எட்டிப் பார்த்தான். அவனும் மாணிக்கத்தைப் பார்த்துக் கைவீசினான். ஒற்றைப் பாதை நல்ல வேளையாக அதிகத் தடங்கல்கள் கொண்டிருக்கவில்லை. ஒரிரு இடத்தில் மட்டும் மண் புழுதிப் பொடியாக இருந்தது.

மாணிக்கம் இஞ்சினையும் அடைந்து விட்டான். இஞ்சினையும் அதற்கடுத்த பெட்டியையும் இணைத்த கொக்கி கடாம் புடாம் என்று ஒலித்துக் கொண்டிருந்தது. இஞ்சின் சீரான தாளகதியில் பல இடங்களில் நீராவியையும் புகையையும் வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

இஞ்சின் டிரைவர் அவசியமேயில்லாத போதிலும் ஒரு முறை இன்சினக் கூவவைத்தான். அவன் எதையோ பிடித்து நகர்த்த ரயில் வேகம் கூட ஆரம்பித்தது.

மாணிக்கம் இடைவெளியே விடாது சைகிளை மிதித்துக் கொண்டிருந்தான். இப்போது ரயில் சிறிது சிறிதாக அவனைத் தாண்டிப் போக ஆரம்பித்தது. அதன் வேகம் இன்னமும்
 ________________

151|விரிந்த வயல்வெளிக்கப்பால்
அதிகரித்தது. ரயில் பயணிகள் ரயிலோடு பந்தய மோட்டும் கேலி செய்து கொண்டிருந்தார்கள். மாணிக்கத்தை பார்த்துக் கைவீசி, கத்தி, உற்சாகப்படுத்தி, கேலி செய்து கொண்டிருந்தார்கள். 

நான்கு பெட்டிகள் மாணிக்கத்தைத் தாண்டிச் சென்று விட்டன. மீண்டும் இஞ்சின் ஒரு முறைக் கூவியது. இஞ்சினில் இருந்த ஒருவன் மாணிக்கத்தைப் பார்த்து, கைக்குட்டையால் வீசிச் சைகை செய்தான். 

ஒவ்வொரு பெட்டியாக மாணிக்கத்தைத் தாண்டிச் சென்றது. இஞ்சின் நீராவி சக்தியில் செல்கிறது. மாணிக்கம் தன் சொந்த சக்தியில் சைகிள் ஒட்டுகிறன். நீராவி சக்தி முன்னால் தன் சக்தி மட்டும் கொண்டு போட்டியிட முடியுமா? 

முடியுமோ என்னவோ? சைகிள் இன்னும் புதிய சைகிளாக யிருந்தால் முடியலாம். இன்னும் நிறைய மண்ணெண்ணெய் கொண்டு சுத்தம் செய்திருந்தால் முடியலாம். மாணிக்கம் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். 

ரயிலின் கடைசிப் பெட்டியும் அவனத். தாண்டி சென்றது. அதன் பின்னல் ஒரு விளக்கு இருந்தது. பகல் நேரமாதலால் அது ஏற்றப் படாமல் இருந்தது. கடைசிப் பெட்டியின் பின்புறம் மட்டும் ஒரு கறுப்புநிறப் பலகை போலத் தோன்றிற்று. அதன் அளவு அவன் சிறிது சிறிதாகக் குறைந்த வண்ணமேயிருந்தது, சில நிமிடங் களில் ரயிலே தூரத்தில் ஒரு புள்ளி போலத் தென்பட்டது. அப்புறம் அதுவும் மறைந்து விட்டது.

மாணிக்கம் களைப்பால் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் பார்த்தான். வயல்வெளி மட்டும் இன்னமும் அவன் பார்வை யெட்டியவரை இருந்தது.
  
(1971)