தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, April 03, 2016

கவிதைகள் (மா. அரங்கநாதனுக்கு) "நகுலன்" : முன்றில் 19

முன்றில் 19

www.padippakam.com
Automated Google-ocr

கவிதைகள்
(மா. அரங்கநாதனுக்கு)
"நகுலன்"


1
எங்கிருந்தோ வந்தான் 
    என்கிறோம்
அவனும் இங்கிருந்துதான் 
    வந்தான்
அவன் அங்கு சென்றதால்


ஆமாம் 
    ஆம் ஆம் 
அந்தச் சூரல் நாற்காலியில்
     சுருண்டு
    நான் 
    நான் 
    சுருண்டு 
    தான் 
    எவரெவர்
    சுருண்டு 
    எவரெவராவர் 
    என்உள்ளம் 
    என்ற தாழ்வாரத்தில் 
    என்னென்ன 
        காட்சிகள் 
பிரேத உலகில் 
என்முன், என்பின் 
உபசாந்த உலகில் 
முன்னெறி தெய்வங்களென 
என்னைப் பெற்றோர் 
பிறகு இதோ என்னருகே 
அயல் நாட்டிலிருக்கும் 
ஒரு சகோதரி 
அவள் அருகில் 
இந் நாட்டிலேயே 
வேறொரு பிரதேசத்தில் 
என் இன்னொரு சகோதரி
சற்றே தொலைவில் 
என் முன் என் பின் 
அருகில் வேறொருவன் 
பக்கத்தில்  
என் அறையில் சிதறிக் 
கிடக்கும் புத்தகங்கள் 
எழுதிக் குவித்த
நோட்புக்குகள்
சுவர்த் தட்டில் 
சர்ப்பக் குடையின் 
கிழ்ச் சுடலை ஆண்டி 
கட்டிலின் கீழ்
காலிக் குப்பிகள் 
அதோ வருகிறாள்
சுசீலா
வெளி வாசல் வழி
வருகிறார் 
சாக்ஷாத் சச்சிதானந்தம்பிள்ளை 
என் நாடி மீது 
இவ்வுருண்டு செல்லும் வினாடிகள் 

இன்னும் எவ்வளவு
நாட்கள்
பேசாமல் இரு 
இது பிரம்ம முகூர்த்தம்

3

வேளைக்குத் தகுந்த 
வேஷம்
ஆளுக்கேற்ற 
அபிநயம் 
இதுதான் 
வாழ்வென்றால் 
சாவதே சாலச் சிறப்பு


வி. ராதாகிருஷ்ணன் என்று இரும்புதகடில் அச்சால் பொறிக்கப்பட்டிருந்ததை ஆர். ராதா கிருஷ்ணன் என்று படித்தேன் என்று சொன்னேன். இதைக் கேட்ட சச்சிதானந்தம் பிள்ளை "தெரியவில்லை, இல்லையா" என்று சொல்லிச்சிரித்தார்.



என்ன 
செய்து கொண்டிருக்கிறாய்? 
என்றும் 
செய்து கொண்டிருப்பதை 
வகை மாறி 
வேறுவேறு விதமாகச் 
செய்து பார்க்க ஒரு முயற்சி 
பலிக்குமா? 
கவலையில்லை.



எப்பொழுதும் 
அவள் நினைவு 
தான் அவள் 
யார்
என்று கேட்காதீர்கள் 
சுசீலாவின் பல உருவங்களில் ஒரு உருவம்.



ஜீ. கிருஷ்ணகுட்டியின் ஒரு கேரளத்துப் பெண் என்ற  ஆங்கில நாவலைப் படித்தபின்: 

    ஒரு குறள் 
    என் செவியில் ஒலித்தது 

        அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார் 
        மறத்திற்கும் அஃதே துணை
 



எங்குதான் கவிதையில்லை. என் கவிதையை நான்தான் எழுதவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இல்லை. படித்த புத்தகங்கள், என் போன்ற பிறர் கிடைத்த அனுபவங்கள், கண்ட கனவுகள், நினைவுகளின் பேயாட்டம்-எல்லாவற்றிலும் என் கவிதைகளை அல்லது நான் எழுதத் தவறிய கவிதைகளைக் காண்கிறேன். 



தேடித்திரிந்ததைக் கண்டது
நாடி வந்தவனைக் 
கண்டபின்தான்
o

முட்டையிட்டது ஒரு பெட்டைக் கோழி 
சண்டையிட்டது ஒரு சேவல் 
'துயர் நறியர் நின்பெண்டிர் 
சேய் பயந்தனம் 
பேய் அனையம் யாம்"

உப்புத் தண்ணிர்
 -
ஞானக்கூத்தன்


வாய்ல போடாத வார்த்தைங்களால 
கெல்லட்டு ஜஸ்கூல் வாத்தியை வெய்ஞ்சி 
படிப்பப் பாதில வுட்டுப் புட்டானாம் 
கண்ணாம் பேட்ட கிருஸ்ண குமாரு 

இன்னா கெட்டுது இன்னா வுட்டுது 
படிப்பப் பாதில வுட்டதனாலே 

புல்லி விலுந்த வாலைப் பலம் வித்தான் 
திரிச்சி வெள்ளவெங் காயத்த வித்தான் 
நாலு தெரு சுத்தி நாலு காசு கண்டு 
கோணி நெனய பொதினா வித்தவளக் 
கூட்டியாந்து குடும்பம் பண்ணி 
இன்னா கெட்டுது 
ஏபிசிடி ஒப்பந்தாடில 

ராசாக் கணக்கா தலையுல தொப்பி; 
சேப்பு சட்டை கழுத்துப் பட்டை, 
இடுப்புல வாரு மறைவுல கத்தி 
சீன்சு எரநூறு ரூவா ழ்குவு 
இன்னா கெட்டுது ஏப்பிசிடி 
ஆனா இப்ப லுங்கி மூக்குக் 
கண்ணாடி இல்ல. 

அவுத்துக் கிர இன்னிக்கு விக்கனும் 
வண்டியத் தள்ளினா பயலும் வாரான் 
யாரோ கூப்புடத் திரும்பினா 
கெல்லட்டு வாத்தி கிரெ கிரெ 
கிருஷ்ணு நீயா இங்குறார் 
ஆமாஞ்சளர் இது எம் மொதப்புள்ள 
வருவான் படிக்க இங்குறான் 
குமாரு கண்ணுல தண்ணி 
வழிச்சுத் தள்ளுற உப்புத் தண்ணி, 

முன்றில் 19 26
படிப்பகம்