தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, June 11, 2018

பச்சோ அத்தை - இஸ்மத் சுக்தாயி :: மொ.பெ. ரா. வீழிநாதன்

உர்தூக் கதைகள் I
கிருஷ்ண சந்தர் ராஜேந்திர சிங் பேத்
இஸ்மத் சுக்தாயி
. மொ.பெ :: ரா. வீழிநாதன்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
புது தில்லி

பச்சோ அத்தை  -  இஸ்மத் சுக்தாயி

நான் முதல் முதலாக அவளைப் பார்த்தபோது, அவள் ரஹ்மான் அண்ணன் வீட்டு முதல் மாடியில் ஜன்னலண்டை அமர்ந்து நீளம் நீளமாகத் திட்டுக்களையும் வசவுகளையும் சேர்த்துச் சாடிக்கொண்டிருந்தாள். அதோடு சாபமும் கொடுத்துக்கொண்டிருந்தாள். இந்த ஜன்னல் எங்கள் வீட்டு முற்றத்தின் பக்கமாகத் திறப்பது. சட்டப்படி அதைச் சாத்தியே வைத்திருந்தோம். ஏனென்றால் பர்தாப் பெண்களைப் பார்க்க நேரிட்டுவிடுமோ என்ற பயம். ரஹ்மான் அண்ணன் வேசிகளின் மேஸ்திரியாகப் பணியாற்றி வந்தார். ஏதாவது கல்யாணம் கார்த்திகை, சு ன் ன த க ல் யா ண ம் படிக்கவைத்தல் ஆகிய எந்தச் சடங்காயிருந்தாலும் ரஹ்மான் அண்ணன் கூடவோ குறைச்சலோ வேசிகளைத் தருவித்து நிறக்கச் செய்து விடுவார். ஏழையிலும் ஏழையின் வீடாக இருந்தாலும் வஹீதர் ஜான், முஷ்தரீ பாயி, அன்வரீ கஹர்வா வந்து ஆடிப் போவார்கள்.

ஆனால் தெருப் பெண்களை அவர் அம்மாவாகவோ, சகோதரிகளாகவோ தான் கருதிவந்தார். அவருடைய தம்பி புந்துவும் கேந்தாவும் தினமும் கண்களுக்குக் கடிவாளம் போடாமல் யாரையாவது எட்டிக் கிட்டிப் பார்த்து வைத்து, அதன் தொடர்பாக மண்டை உடைகிறவரைக்கும் இறங்கி விடுவார்கள். ரஹ்மான் அண்ணனுக்கும் தெரு மக்களிடம் அவ்வளவாக நல்ல பெயர் கிடையாது. மனைவி உயிருடன் இருந்த காலத்திலேயே அவர் தம் மைத்துனியோடு உறவு கொண்டாடிவிட்டார். அந்த அநாதை மைத்துனிக்கு அவருடைய மனைவியை விட்டால், உறவு முறை கொண்டாட வேறு யாரும் இல்லை. எனவே தான், தமக்கையின் வீட்டில் வந்து தங்கினாள். அவள் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டாள். பால் கொடுக்காத குறை! மலஜலம் எடுத்தெறிவது முதற்கொண்டு எல்லாம் அவளே செய்து வந்தாள். எவளோ ஒருத்தி, குருவிக்கு மூக்கில் வேர்த்த கதையாக, தமக்கையின் குழந்தையை அவளே 'எடுத்து விடுவதைப் பார்த்துவிட்டாள். இரகசியம் அம்பலமாகிவிட்டது. குழந்தைகளில் பாதிக்குமேல் சித்தியை உறித்துவைத்திருந்தன என்பதும் தெரியவந்தது. வீட்டில் ரஹ்மானின் மனைவி, தன் தங்கையை எப்படியெல்லாம் சாடினாளோ தெரியாது. ஆனால் பஞ்சாயத்து வரைக்கும் வழக்கைக் கொண்டு போகவில்லை. 'கன்னிப் பெண்ணை வாயில் வந்தபடி ஏசினால் அவர்களுடைய கண்கள் அவிந்து போகும்!' என்று கூறிவந்தாள். அதோடு அவளுக்கு வரன் தேடி இளைத்துப் போனாள். பூச்சி வைத்துப் பழசாகிப் போன சதைப் பிண்டத்துக்கு எங்கிருந்து வரன் குதிரும்? ஒரு கண்ணில் பெரிய சோழி அளவுக்குப் பூ விழுந்திருந்தது. காலும் ஒன்று சிறிது குட்டை. இடுப்புக்குக் கீழே அழுத்தம் கொடுத்து விந்தி விந்தி நடந்தாள்.

தெரு மக்கள் அனைவரும் விந்தையான வகையிலே அந்தக் குடும்பத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். ரஹ்மான் அண்ணனிடம் ஏதாவது வேலைவாங்க வேண்டுமென்றால், தலையில் இரண்டு போட்டு அதிகாரத் தோரணையில் வாங்கிக்கொள்ளுவார்கள். தெருவில் வசிக்க அநுமதி கொடுத்திருந்ததே பெரிய விஷயமாயிற்றே. ரஹ்மான் இதைக் கிடைத்தற்கரிய பெரும் பாக்கியமாகக் கருதி வந்தார்.

இதனால்தான் அவள் எப்போதும் ரஹ்மான் அண்ணன் பகுதி ஜன்னலில் போய் உட்கார்ந்து கொண்டு நீட்டி முழக்கித் திட்டித் தீர்ப்பாள் , ஏனென்றால், தெருவில் உள்ள மற்றவர்களுக்கு அப்பாவிடம் சிறிது அச்சம்; அடங்கிப் போவார்கள் . மாஜிஸ்திரேட்டிடம் போய் யாராவது விரோதத்தை விலைக்கு வாங்கிக்கொள்வார்களா? எங்களுக்கு ஒரே உடன்பிறந்த அத்தை பாதுஷாஹீ கானம் என்பதும், அவள் நீட்டி முழக்கித் திட்டும் அத்தனை திட்டுகளும் எங்கள் குடும்பத்துக்கே சொந்தம் என்பதும் அன்றுதான் எனக்கு முதல் முதலாகத் தெரிந்தது.

அம்மாவின் முகம் பேய் அறைந்தாற்போல் இருந்தது. அவள் உள்ளே அறைக்குள் சென்று அச்சத்தோடு ஒடுங்கி உட்கார்ந்து விட்டாள், பச்சோ அத்தையின் குரலே இடியாகித் தன்னைத் தாக்கிவிடுமோ என்று பயப்படுபவள்போல. ஐந்தாறு மாதங்களுக்கு ஒருதரம் இப்படித்தான் பாதுஷாஹீ கானம், ரஹ்மான் அண்ணன் வீட்டு ஜன்னலில் அமர்ந்து கமறுவாள்; உறுமுவாள். அப்பா அங்கிருந்து சற்றுத் தள்ளி மறைந்து உட்கார்ந்து சாய்வு நாற்காலியில் ஆனந்தமாக நீண்டு படுத்துச் செய்தித்தாள் படித்துக் கொண்டிருப்பார். சில சமயம் தருண ம் பார்த்து யாராவது குழந்தைகளைக் கொண்டு அத்தையின் ஆத்திரத்தைக் கிளறிவிடும் பதிலாகச் சொல்ல ைவப்பார். பாதுஷாஹீ அத்தை பட்டாசாக வெடித்துத் தீப்பொறிகளாகக் கக்கிவிடுவாள். நாங்கள் எல்லாரும், வேடிக்கை விளையாட்டு, படிக்கிறது, எழுதுகிறது எல்லாவற்றையும் விட்டுவிட்டு முற்றத் தில் தனித் தனிக் குழுவாகக் கூடிவிடுவோம். ஆசை அத்தையின் வசவுகளை ஆசைதீரக் கேட்போம். அவள் உட்கார்ந்திருக்கும் ஜன்னலை அவளுடைய ஆகிருதியான உடலே முழுசாக நிறைத்திருக்கும். அவளுடைய உருவம், நிறம் எல்லாம் தத்ரூபம் அப்பா அச்சு. அவர் தான் மீசையை எடுத்துவிட்டுத் துப்பட்டா போர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரோ என்று தோன்றும். அத்தனை வசவுகளும் திட்டுகளும் கேட்டாலும் நாங்கள் அத்தையைத் தைரியமாக உற்றுப் பார்ப்போம்.

ஐந்தரை அடி உயரம், நான்கு அங்குலத்துக்கு மனரின், கட்டு, சிங்கத்தை நிகர்த்த தாடை.., வெள்ளைக், கொக்கு நிறக் கூந்தல், பெரிய தொண்டை, வாச்சி வச்சியான பற்கள் , அழுத்தமான மோவாய் - குரலுந் தான் என்ன , அப்பாவைக் காட்டிலும் ஒரு நூல் தான் ஏறத்தாழ இருக்கும்.

பாதுஷாஹீ அத்தை எப்போதும் வெள்ளையுடைதான் அணிவாள். அத்தையின் கணவர் மசூத் அலி தோட்டிப் பெண்ணை வளைய வர ஆரம்பித்ததிலிருந்து, அத்தை அம்மிக் குழவியை எடுத்துப் பட்பட்டென்று எல்லா வளையல்களையும் உடைத்துப் போட்டாள். வண்ணத் துப்பட்டா அணிவதையும் நிறுத்திவிட்டாள். அன்றுமுதல் அவள் தன்னைப் பொறுத்த வரையில் அவரை இறந்தவராகவே தீர்மானித்துவிட்டாள். 'சவம்' என்றே கூறிவந்தாள். அதோடு தோட்டிச்சியைத் தொட்ட கையால் ஒருநாளும் தன் உடலைத் தீண்டவே விட வில்லை .

இந்த நிகழ்ச்சி நல்ல வாலைப் பருவத்தில் நடந்தது. அது முதல் அவள் கைம்மை எய்திவிட்டாற்போலவே நடந்து கொண்டாள். எங்கள் அத்தை புருஷன் எங்கள் அம்மாவுக்குச் சிற்றப்பா ஆகவேண்டும். அது என்ன குழப்பமோ. புரிய வில்லை! என் அப்பா, என் அம்மாவுக்கே சிற்றப்பா ஆகணும். கல்யாணத்துக்கு முன், அம்மா சின்னவளாயிருந்தபொழுது, அப்பாவைப் பார்த்து விட்டால், பயத்தில் அங்கேயே'ஒன்றுக்கு' இருந்துவிடுவாளாம். அந்தப் பயங்கர ராட்சதனோடுதான் அவளுக்குத் திருமணம் நடக்கப்போகிறது என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கேட்டு அயர்ந்து போய் அவள் தன் அப்பாவைப் பெற்ற பாட்டி- அதாவது அப்பாவுக்கு அத்தையின் வெற்றிலைச் செல்லத்திலிருந்து அபினியைத் திருடித் தின்று விட்டாளாம். அவள் தின்ற அபினி அதிகம் இல்லாததனால், சில நாட்கள் புரண்டுவிட்டு எழுந்துவிட்டாள், சாவைச் சாகடித்து விட்டு. அப்போது அப்பா அலிகட் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாராம். அவளுக்கு உடல்நலம் இல்லை என்னும் செய்தியைக் கேட்ட வர் பரீட்சைகளையெல்லாம் விட்டு விட்டு ஓடி வந்துவிட்டார். ரொம்பச் சிரமப்பட்டு, எங்கள் அம்மாவைப் பெற்ற தாத்தா --அவர் அப்பாவுக்கு அத்தை பிள்ளை ஆகணும்- பற்றாக்குறைக்கு இரண்டு பேரும் இணை பிரியாத நண்பர்கள் வேறு- எப்படியெல்லாமோ ஆறுதல் வார்த்தைகள் சொல்லிச் சமாதானப்படுத்தித் திரும்பவும் பரீட்சை எழுத அனுப்பிவைத்தாராம். வந்து தங்கியிருந்த நேரத்திலே அவர் பசியும் தாகமுமாக அலைபாய்ந்து கொண்டிருந் தாரே தவிரப் பச்சைத் தண்ணீர் பல்லில் ஊற்றவில்லை. பாதி திறந்தும் பாதி திறக்காமலும் இருந்த கண்களோடு, எங்கள் அம்மா அவருடைய நீண்டு பரந்து விழுந்த நிழல் திரைக்குப் பின்னால் நிம்மதி இழந்து துடிப்பதை எப்படியோ கண்டு விட்டாள்.

''உம்ராவ் அண்ணா ! இவளுக்கு ஏதாவது நடந்து விட்டால் ...?'' . ராட்சதன் குரலில் இத்தனை நடுக்கமா?

தாத்தா விழுந்து விழுந்து சிரித்தார்: ''தம்பி, நம்பு! ஒன்றும் நடக்காது. கவலைப்படாதே!' என்றார்.

அன்றுதான் ஏதும் அறியாக் குழந்தையாக இருந்த எங்கள் அம்மா திடுதிப்பென்று எல்லாம் தெரிந்த மாதரசியானாள். அவள் உள்ளத்திலிருந்து அந்த ராட்சத மனிதனிடம் அவள் கொண்டிருந்த அச்சம் பட்டென விலகியது. எங்கள் பாதுஷாஹீ அத்தையைப் பொறுத்தவரையில் எங்கள் அம்மா ஒரு பெரிய மாயாஜால மந்திரக்காரி. அவள் அண்ணனைச் சொக்குப் பொடி போட்டு மயக்கிவிட்டதாகக் கூறுவாள். 'கல்யாணத்துக்கு முன்பே, அண்ணனோடு அவளுக்குத் தொடர்பு ஏற்பட்டு வயிறு விழுந்தது!' என்னும் இரகசியத்தையும் விவரிப்பாள்.எங்கள் அம்மா தனது வயது வந்த குழந்தைகளுக்கெதிரே இந்த வசவுகளைக் கேட்டுப் பிழியப் பிழிய அழுவாள் . எங்களுக்கு அவள் அடித்த அடிகள் எல்லாம் மறந்து போகும்; அவளிடம் அன்பே பொங்கிப் பெருகும். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு அப்பாவின் கம்பீரமான விழிகளில்கூட விஷமம் விளையாடத் தொடங்கும்; கடந்த கால நினைவுகள் எல்லாம் களிநடம் புரியத் தொடங்கும். அவர் மிகவும் அன்போடு கடைக்குட்டித் தம்பியை அருகில் அழைத்துக் கேள்வி கேட்க வைப்பார் :

ஏன் அத்தை! இன்று என்ன தின்றுவிட்டு வந்திருக்கிறாய்?" ''உங்கள் அம்மாவின் ஈரல்!

அர்த்தமில்லாத இந்த பதிலை அளித்துவிட்டு அத்தையே எரிந்து பொசுங்கிப் போவாள். அப்பா அதற்குப் பதில் சொல்லவைப்பார்: 'அடியே அத்தை! அதனால்தான் வாயிலே குழிப்புண் வந்துவிட்டது. பேதிக்குச் சாப்பிடு, பேதிக்கு!''

அதைக் கேட்டதுதான் தாமதம். என் சின்னத் தம்பியைச் சாக வைத்து, அவன் சடலத்தைக் காக்கை கழுகுகளுக்கு விருந்து வைத்து, அவனுக்கென்று பிறக்காத மனைவியைப் பிறக்க வைத்து, அவனைக் காதல் கனவுகள் பல கர் ணவிட்டு. பிரித்து அழவிட்டுக் கடைசியில் கைம்மையுற ஆசீர்வாதம் செய்வாள். எங்கள் அம்மா காது களில் விரல்களை விட்டுக்கொண்டு ஏதோ ஜபத்தை முணுமுணுப்பாள்:

நீர் நீ, நெருப்பு நீ நீள் வினையறுப்பாய் நீ , நீ!'' அப்புறமும் அப்பா சும்மா இருக்கமாட்டார்; நிமிண்டி விடுவார்.

தம்பி கேட்பான் : பாதுஷாஹீ அத்தை! தோட்டி அத்தை நலந்தானா?'

அத்தை ஜன்னல் வழியாகக் கீழே குதித்துவிட்டால் ..... எங்களைக் கிலி பற்றிக்கொள்ளும்.

''போடா, போ நச்சரவம்! என் வழிக்கு வராதே , என் வாயிலே விழாதே! செருப்புக் காலாலேயே நசுக்கிவிடுவேன் நசுக்கி! அந்தக் கிழக்கோட்டான் உள்ளே உட்கார்ந்துகொண்டு குஞ்சு குளுவான்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறானாக்கும்! முகலாயனுக்குப் பிறந்தவன் என்றால், எதிரே வந்து போகச் -ெ--''ஏ ரஹ்மான் அண்ணே! ஏ ரஹ்மான் அண்ணே! இந்த வெறிபிடித்த நாய்க்கு ஏன் விஷம் வைக்கமாட்டேன் என்கிறாய்?''

அப்பா சொல்லிக் கொடுப்பதைக் கடைக்குட்டித்தம்பி பயந்து பயந்தே கூறுவான். பார்க்கப் போனால் அவன் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், எல்லாருக்குமே தெரியும், குரல் மட்டுந்தான் அவனுடையது. சொல் அத்தனையும் அப்பாவுடையது என்று! அதனால் பாவம் கீவம் எல்லாம் தம்பியைத் தீண்டாது. அவன் உயிருக்கு உலை வைக்காது. இருந்தாலும் அப்பாவைப்போலவே இருக்கிற அத்தைக்கு எதிராக ஒன்று கூறும்பொழுது யாருக்குமே வேர்த்து விறுவிறுக்கவே செய்தது .

எங்கள் அப்பாவைப் பெற்ற தாத்தா வீட்டாருக்கும், அம்மாவைப் பெற்ற தாத்தா வீட்டாருக்கும் இடையில் தான் எத்தனை பெரிய வித்தியாசம், மலையையும் மடுவையும்போல! மண்ணையும் வானையும்போல! அம்மாவைப் பெற்ற தாத்தா வீடு ஹகீம்களின் தெருவில் இருந்தது. அப்பாவைப் பெற்ற தாத்தா வீடு வண்டிக்காரர்கள் வாழும் பகுதியில் இருந்தது. தாயைப் பெற்ற தாத்தா வீட்டார்கள் நல்லிதயம் கொண்ட சிஷ்தீ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். முகலாய மன்னர்கள் அவர்களுக்கு முர்ஷித் (குருமார்) பட்டம் கொடுத்து முக்தி வழியை உணர்ந்தார்கள். இந்தியாவில் குடியேறி எத்தனையோ காலம் ஓடி விட்டது. பழைய பெருமை மங்கிவிட்டது. மூக்கும் விழியும் கூட மாறிப்போய் மென்மையடைந்துவிட்டன. இயல்புகள் *கூடத் தணிந்துவிட்டன.

தந்தையைப் பெற்ற தாத்தா வீட்டார்களோ எல்லாருக்கும் கடைசிக் கூட்டத்தோடு வந்தவர்கள். மனத்தளவில் அவர்கள் தங்களை இன்னும் குதிரை சவாரி செய்பவர்களாகவே எண்ணிக்கொண்டிருந்தார்கள். இரத்தத்தில் எரிமலைக் குழம்பு ஓடிக்கொண் டிருந்தது. நிமிர்த்திப் பிடித்த வாளைப் போன்ற உருவம், நிறம். சிவந்த பறங்கியர்களைப் போன்ற முகம். கொரில்லாக்களைப் போன்று வாட்டசாட்டமான உடல். சிங்கத்தைப் போன்று கர்ஜிக்கும் குரல்! பலகை பலகையாகக் கைகால்கள்!

தாயைப் பெற்ற தாய்வீட்டார்களோ மென்மையான கை கால்கள் படைத்தவர்கள். கவியுள்ளம் படைத்தவர்கள். இனிமையும் மென்மையும் குழையும் குரலில் பேசுபவர்கள்.பெரும்பாலானவர்கள் ஹகீம், ஆலிம், மௌல்வியாக இருந்த வர்கள். அதாவது வைத்தியர், ஆசிரியர், மதகுருவாக வாழ்ந்தவர்கள். தெருவுக்குப் பெயரே ஹகீம்களின் தெரு என்று ஆகிவிட்டது. சிலர் தொழில், வியாபாரத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு அதில் பங்குகொண்டவர்கள். சால்வைகள், துணி மணிகள், பொன்-வெள்ளி போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அத்தர் மருந்து போன்ற பொருள்கள் விற்போரும் உண்டு. தந்தையைப் பெற்ற தாத்தா வீட்டார்கள் இப்படிப்பட்டவர்களைக் கறிகாய் வியாபாரிகள், கசாப்புக் கடைக்காரர்கள் என்றே கூறிவந்தனர். ஏனென்றால் அவர்கள் பெரும்பாலும் இராணுவத்தில் சேர்ந்திருந்தார்கள். அடிதடியில் உள்ள ஆர்வம் அவர்களுக்கு இன்னும் அடங்கியபாடில்லை. குத்துச் சண்டை , குஸ்திச் சண்டை , கத்தி வீசுவது , சிலம்பம் பழகுவது, தண்டால் எடுப்பது போன்ற பயில்வானின் தொழில் களில் அதிக நாட்டம் காட்டினர். எங்கள் தாயைப் பெற்ற தாத்தா வீட்டார்களுக்குத் தாயக்கட்டம், வெட்டுப்புலி, பதினைந்து புள்ளிக்கட்டம் இவற்றில் ஈடுபாடு அதிகம். அதெல் லாம் ஆண்மையற்ற அலிகளின் விளையாட்டு என்பது இவர்கள் எண்ண ம்.

எரிமலை வெடித்தால் தீக்குழம்பு, பள்ளத்தாக்கில் பெருகி வழியும் என்பார்கள். எங்கள் தந்தையைப் பெற்ற தாத்தா வீட்டார்கள், தாயைப் பெற்ற தாத்தா வீட்டார்களிடம் தங்களுக்குத் தாங்களே ஈர்க்கப்பட்டு வந்ததற்குக் காரணம் ஒரு வேளை இது தானோ என்னவோ? மேட்டிலிருந்து பள்ளத்துக்குப் பாய்வது தானே நீரின் இயல்புகூட! இந்த இணைப்பை யார் எப்போது ஏற்படுத்தினார்கள் என்பது வம்ச விருட்சத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்குச் சரியாக நினைவு இல்லை. என் தாத்தா இந்தியாவில் பிறக்கவில்லை. பாட்டிகள்கூட அதே வம்சத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஒரு சிறு தங்கை மட்டும் கல்யாணம் ஆகாமல் இருந்தாள். அவளை ஏன்தான் ஷேக்குகளின் குடும்பத்தில் கட்டிக்கொடுத்தார்களோ, தெரி யாது. ஒருவேளை எங்க அம்மாவுக்கு அப்பாவைப் பெற்ற தாத்தா, எனக்கு அப்பாவைப் பெற்ற தாத்தாவின் மேலே ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டிருக்கலாம். அவர் தம் சகோதரி பாதுஷாஹீ அத்தை சொல்வதுபோல் கறிகாய்க் கடைக்காரனுக்கோ கசாப்புக் கடைக்காரனுக்கோ கொடுத்திருக்கலாம். இறந்துபோன தன் கணவனைத் திட்டும்போ தெல்லாம். அவள் தன் தந்தைக்குப் புதைகுழியில் நிம்மதியே ஏற்படக்கூடாது என்று சாபம் கொடுப்பாள். அவர் தாம் சுக்தாயி குடும்பத்தின் பரம்பரைப் பெருமைக்குக் குழி தோண்டிப் புதைத்தவர் என்பது அவள் எண்ணம்.

என் சித்திக்கு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். எங்கள் பெரியப்பா, எங்கள் அப்பா, எங்கள் சிற்றப்பா! முதல் இருவரும் அவளைவிடப் பெரியவர்கள். சிற்றப்பா எல்லாருக்கும் சின்னவர். மூன்று சகோதரர்களுக்கும் அருமந்தத் தங்கை அவள் ஒருத்தி தான். அவள் மிகவும் பிடிவாதக்காரி; முன் கோபக்காரி. அவள் அண்ணன்-தம்பி மூவர் மீதும் அதிகாரம் செலுத்து வாள் . சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பார்ப்பாள். பெயருக்குத்தான் பெண் பிள்ளையே ஒழிய ஆண் பிள்ளையாக வளர்ந்தவள். குதிரைச் சவாரி, அம்பு வித்தை, வாள் வித்தை, வேல் வித்தை எல்லாமே அவளுக்குப் பழக்கம் உண்டு. உடல் பருத்துப் பூதாகாரமாகத் தோன்றினாலும் நடக்கும்போது பயில்வான் களைப்போல் மார்பு நிமிர்த்தியே நடப்பாள். மார்பும் என்ன , நாலு பெண்கள் அளவுக்கு இருந்தது!

அப்பா வேடிக்கையாக அம்மாவைக் கிளறுவார்:

பாதுஷாஹீ பேகத்தோடு குஸ்தி போடுகிறாயா?'' ' 'ஐயோடி!'' அறிவாற்றல் மிகுந்த ஆலிம் ஃபாஜிலின் மகள் எங்கள் அம்மா. காதுகளை இரு கைகளாலும் பொத்திக் கொண்டே கூறுவாள் . ஆனால் அதற்குள் அப்பா கடைக்குட்டித் தம்பி மூலம் அத்தைக்கு அறைகூவல் விட்டு விடுவார்:

''அத்தை! எங்கள் அம்மாவோடு குஸ்திக்கு வருகிறாயா?''

''ஊம், கூப்பிடு உங்கள் அம்மாவை! கை தட்டிக்கொண்டு, தொடை தட்டிக்கொண்டு வரட்டும். அவளைப் போட்டுப் புரட்டி எடுக்கவில்லை என்றால், நான் மிர்ஜா கரீம் பேகின் மகள் இல்லை! அப்பன் இரத்தம் தான் ஓடுகிறது என்றால், வரச்சொல்லு அந்த முல்லா மகளை!''

எங்கள் அம்மா லக்னோ தயாரிப்பான 'தொள தொள'ப் பைஜாமாவைச் சுருட்டிக்கொண்டு மூலையில் போய்ப் பதுங்கி உட்காருவாள்.

"ஏன், பாதுஷாஹீ அத்தை! அப்பாவழித் தாத்தாவுக்குச் சுட்டுப் போட்டால்கூடப் படிப்பு வராதாமே, அத்தனை முட்டாளாமே! அம்மாவழித் தாத்தாதானே அவருக்கு 'அனா ஆவன்னா' சொல்லிக் கொடுத்தார்?

எங்கள் அப்பாவழி முப்பாட்டனுக்கு அம்மா வழித் தாத்தா எப்போதோ ஏதாவது கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கலாமோ. . என்னவோ? அப்பா அத்தையை உசுப்பிவிடுவதற்காகச் சுற்றி வளைத்து வெட்டிக்கொட்டி இப்படி ஏதாவது சொல்ல. வைப்பார்! .

''அந்த மூத்திரக்கட்டி. மண்ணாங்கட்டியாவது, எங்கள் தாத்தாவு க்குச் சொல்லிக் கொடுக்கவாவது? அழகு தான், போ! ஏதோ 7ல்லறைர். காவல் புரிந்து கொண்டு நின்றது. நாங்கள் போட்ட வாய்க்கரிசியிலே வளர்ந்தது!'' ஸலீம் சிஷ்தீக்கும் அக்பர் பாதுவாவுக்கும் உள்ள உறவைப் பிடித்துக்கொண்டு போடப் !!ட்ட கணக்கு இது! ந ர ங்கள் அதாவது சுக்தாயி வம்சத்தினர், 7| க்பர் ப 1 துஷ 1 வின் பரம்பரையில் வந்தவர்கள். எங்கள் அம்மா வரித் த, ! த் த ர வீட்டுக் காரர்கள் ஸலீம் சிஷ்தீயின் வழிவந்தவர் கள். அவரைத் தாமே ப துலா!! தங்கள் குடும்பத்துக்குப் 'பீரோ ராஷத்' (கு, நாயர்) . ஆக ஏற்றுக்கொண்டார்.

அத்தைக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வரும். ' 'மண்ணாங் கட்டி! பீரே | முர்ஷிதாம், அதன் வாலாம்! விளக்குமாற்றுக் க!ட்டை ர். ருப் பட்டுக்குஞ்சலம் ரம்! மயானம் காத்தவனுக்குப் பெருமையைப் பாரு , பெருமையை!'' என்பாள்.

அவளுக்கு மூன்று சகோதார்கள்; அத்தனை பேரிடமும் சண்டை. அவளுக்குக் கோபம் வந்துவிட்டால் மூன்று பேரையுமே பிய்த்துப் பிரியைக் கட்டி விடுவாள். எல்லாருக்கும் பெரிய அண்ணா துறவியுள்ளம் கொண்டவர். பிச்சைக்காரன், பக்கிரி என்ற அடைமொழிகளால் அவருக்கு வெறுப்போடு அர்ச்சனை செய்வாள் . எங்கள் அப்பாவுக்கு அரசாங்க உத்தியோகம். அவரை நன்றிகெட்ட துரோகி, ஆங்கிலேயர்கள் அடிவருடி , அடிமை என்றெல்லாம் சாடுவாள். ஏனென்றால் முகலாய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டியவர்கள் இந்த ஆங்கிலேயர்கள் தானே? அவர்கள் இன்று அப்படிச் செய்யாவிட்டால், வெறும் பருப்புக் கஞ்சியோ கூழோ குடித்து வயிறு வளர்த்துச் செத்தொழிந்தானே ஒரு சேணியன்-அதாவது என் அத்தை புருஷன்-அவனுக்கு வாழ்க்கைப்பட்டு மாரடிக்கிறதைக் காட்டி லும் செங்கோட்டைக்குச் சிங்காரமாக ஜேபுன்னீஸாவைப்போல் ரோஜா | அத்தரில் குளித்து ஏதோ ஒரு நாட்டுச் சக்கரவர்த்தியின் பட்டத்து அரசியாக அமர்ந்திருக்கலாமே! அந்த ஆசைதான் அவளை அப்படிச் சாடவைத்தது. மூன்றாம் சகோதரன், அதாவது எங்கள் சிற்றப்பா முதல் நம்பர் போக்கிரி. காவல் துறையினர். அவர் இருக்கிறாரா என்று பார்த்து ஆஜர் புத்தகத்தில் பதிவு செய்து கொண்டு போக மாஜிஸ்திரேட் வீட்டுக்கு வருவார்கள், பெரும் தொடை நடுங்கிகளாக. அவர் எத்தனையோ கொலைகள் புரிந்தவர்; கொள்ளைகள் அடித்தவர். குடி கூத்தியில் அவருக்கு இணை அவர் தாம். அத்தை அவனைக் 'கொள்ளைக்காரா' என்று தான் கூப்பிடுவாள். அவருடைய நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது அது வெறும் பிசுபிசுத்த பயனற்ற சொல் தான்!

ஆனால் இறந்துபோன தன் கணவனிடம் கோபம் வரும் போது அவள் பேசிய முறையே அலாதிதான். ''ஏ, கரி மூஞ்சி! நாதியற்ற அநாதை என்று என்னை எண்ணிவிடாதே! மூன்று உடன் பிறந்தவர்களுக்கு நான் ஒரே ஆசைத்தங்கை. அவர்களுக்குச் செய்தி எட்டியதோ, உனக்கு இந்த உலகமும் கிடையாது, அந்த உலகமும் கிடையாது! அப்படிப் புரட்டி. எடுத்துவிடுவார்கள். வேறு ஒருவரும் வேண்டாம், சின்னவன் காதிலே விழுந்தால் போதும், கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் உன் குடலைப் பிடுங்கி உன் கையிலேயே கொடுத்துவிடுவான். அவன் பெரிய கொள்ளைக்காரன், தெரிந்துகொள்! அவனிடமிருந்து எப்படியோ தப்பினால், இரண்டாமவன் விடமாட்டான். அவன் மாஜிஸ்திரேட், உன்னைச் சிறையிலே பிடித்துப் போட்டு நாற அடித்துவிடுவான். வாழ்நாள் முழுவதும் செக்கு இழுக்க வைத்துவிடுவான். அவனிடமிருந்தும் தப்பிவிட்டதாக வைத்துக் கொள், எல்லாருக்கும் மூத்தவன் இருக்கிறானே, அவன் அல்லா வுக்கு நிரம்ப வேண்டியவன். உனக்குப் பரலோகம் கிடைக்காமல் அடித்து உன்னை மண்ணோடு மண்ணாக மடியச் செய்து விடுவான், தெரிந்துகொள். நான் முகலாயப் பெண். உன் அம்மாவைப்போல் ஷேக் இனத்துப் பெண் இல்லை!''

ஆனால் எங்கள் அத்தை புருஷனுக்கு நன்றாகத் தெரியும், மூன்று சகோதரர்களின் அநுதாபமும் அவர் பக்கந்தான் என்று! அதனால் உட்கார்ந்து சிரித்துக்கொண்டே இருப்பார். அதுவும் என்ன சிரிப்பு! இனிப்பில் விஷத்தைக் கலந்திருக்கும் விஷமச் சிரிப்பு! அதன் உதவி கொண்டுதானே என் அம்மா வீட்டார்கள், அப்பா வீட்டார்களைப் பல ஆண்டுகளாகப் பொசுக்கி எரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வோர் ஈத்-பக்ரீதுக்கும் எங்கள் அப்பா, பிள்ளைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு ஈத்காஹ் பள்ளி வாசலிலிருந்து நேரே அத்தையம்மா வீட்டுக்கு வசவும் திட்டும் வாங்கிக் கட்டிக் கொண்டு வரப் போவார். அவள் உடனே அறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளுவாள். அங்கிருந்தபடியே எங்கள் மாயமந்திரக் காரி அம்மாவையும், கொள்ளைக்கார மாமாக்களையும் திட்டித் தீர்ப்பாள். இதற்கிடையில், மறக்காமல் வேலைக்காரன் கையில் சேவை கொடுத்து அனுப்புவாள். ஆனால் பக்கத்து வீட்டிலிருந்து வந்தது என்று ஏனோ பொய் சொல்லுவாள்.

இதில் விஷம் கிஷம் கலக்கவில்லையே?'' அத்தையைக் கிண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பதற்காக அப்பா இப்படி ஒரு கேள்வி யைத் தூக்கிப் போடுவார். தாய் வீட்டுக் குப்பை கூளங்களை உதறிப் போட்டு அத்தையை மூச்சுத் திணற அடித்துவிடுவார்.

சேவை சாப்பிட்டபின் அப்பா அத்தைக்கு ஈத் பணம் கொடுப்பார் . அத்தை அதைத் தரையில் விட்டெறிந்து. 'உன் மைத்துனன்மார்களுக்குக் கொடு. அவர்கள் தான் உன் ரொட்டி தின்று வளர்ந்தவர்கள்!'' என்பாள்.

அப்பா பேசாமல் திரும்பிவிடுவார். இருந்தாலும் அவருக்குத் தெரியும், பாதுஷாஹீ அத்தை அவர்கள் போனபின் அந்த ரூபாய்களை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு மணிக் கணக்கில் அழுதுகொண் டிருப்பாள் என்று! அண்ணாவின் குழந்தைகளை மறைவில் அழைத்து அத்தையும் ஈத் பரிசு தந்தே அனுப்புவாள், ஓர் எச்சரிக்கையுடன்!

''அடே பாவிப் பசங்களா! அப்பா அம்மாவுக்குச் சொன்னால் தெரியுமா சேதி? சதையைத் துண்டு துண்டாக வெட்டி நாய்க்குப் போட்டுவிடுவேன்!''

பையன்களுக்கு ஈத் பரிசாக எத்தனை கிடைத்தது என்று அப்பா அம்மாவுக்குத் தெரியாமற்போகாது. எந்த ஈத் பண்டிகையின்போதாவது. ஏதாவது காரணத்தினால், அப்பா, அத்தை வீட்டுக்குப் போகமுடியாமற் போய்விட்டால், அழைப்புக்குமேல் அழைப்பாக வரும்.

'' நுஸ்ரத் கானம் விதவையாகிவிட்டாளா? நல்லதாகப் போயிற்று. என் மனசு இப்பொழுது தான் குளிர்ந்தது!''தனக்கு நிம்மதி ஏற்பட்டுவிட்டாற்போல் பேசுபவளுக்கு நிம்மதியே ஏற்படாது. தூதுக்குமேல் தூதாக அனுப்புவாள். கடைசியில், அவளே ரஹ்மான் அண்ணனின் வீட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு வெளியில் தலை நீட்ட முடியாமல் வசை மாரி பொழிந்து தீர்ப்பாள்.

ஒரு நாள் ஈத் பணியாரத்தைச் சாப்பிட்டுக்கொண் டிருந்த போது, ஏதோ சூட்டினால் அப்பாவுக்கு வயிற்றைப் புரட்டியது. வாந்தியும் எடுத்துவிட்டார்.

''ஏ பாதுஷாஹீ கானம்! சொன்னது கேட்டதையெல்லாம் மன்னித்துவிடு! நான் செத்தேன்!' அப்பா கரகரத்த குரலில் ஓலமிட்டார். அத்தை செய்யும் வகை ஏதும் அறியாமல் முகத்திரையையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மார்பில் அடித்துக் கொண்டே அப்பாவிடம் ஓடிவந்தாள். அப்பா குறும்பாகச் சிரிப்பதைக் கண்டதும், வந்த அதே வேகத்தில் வைத்து கொண்டே திரும்பிவிட்டாள்.

''நீ ஓடோடி வந்ததனாலே, பாதுஷாஹீ கானம் , மரணதேவன் மிரண்டுபோய் ஓடிவிட்டான்! இல்லாவிட்டால் இன்று நான் தீர்ந்திருக்க வேண்டியவன் தான்!'' என்றார் அப்பா.

அத்தை திட்டிய திட்டுக்கள் எத்தனை என்று கணக்கிட்டுக் கூற முடியாது. அண்ணனுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதை உறுதியாக அறிந்ததும், ''அப்பா மனசு வைத்தால், தலையிலே இடி விழும்! சாக்கடையில் விழுந்து உயிரைவிடுவாய்! உன் சவத்துக்குத் தோள் கொடுக்க ஒருத்தன் கூட உயிரோடு இருக்க மாட்டான்!'' என்று பலவாறு அடுக்கினாள், பிடி. சாபம் என்பது போல.

அப்பா அவளுடைய கோபத் தீயை இன்னும் வளர்க்கவேண்டி இரண்டு ரூபாய் அனுப்பி வைத்தார்.

''நம் குப்பத்துத் தோட்டிச்சிகள் திட்டினால் அவர்களுக்கு ஏதாவது இனாம் தரவேண்டுமே!''

அத்தை வருகிற ஆத்திரத்தில் கூறிவிடுவாள், 'பேஷாக இனாம் கொடு. உன் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும்!'' என்று! அப்புறம் வாய் தவறி வந்ததற்காகத் தன் முகத்தில் அடித்துக் கொள்ளுவாள், தனக்குத்தானே சொல்லிக்கொள்ளுவாள்: : ''அடியே! அடி மாண்டு போகிற பாதுஷாஹ்! உன் முகத்தில் நீயே கரியைப் பூசிக்கொள்ளுகிறாயேடி! உன் சாவை நீயே வரவழைத்துக் கொள்ளுகிறாயேடி!"

அத்தைக்கு உண்மையில் யாரிடமாவது பகை என்றால், அது அண்ணனிடந்தான். அண்ணன் பெயரைக் கேட்டாலே அவளுக்கு ஆத்திரம் நெருப்பாகப் பற்றிக்கொண்டு வரும். அப்பா வராமல் அம்மாவை மட்டும் எங்கேயாவது பார்த்துவிட்டால், ஆரத் தழுவி அன்பு செலுத்துவாள். 'நச்சோ, நச்சோ!' என்று அடிக்கொருதரம் ஆசையோடு கூப்பிடுவாள். 'குழந்தைகள் நலமா?' என்று நலம் விசாரிப்பாள். அந்த நேரத்துக்கு அவளுக்கு மறந்தே போய்விடும், இந்தக் குழந்தைகள் அனைத்தும் சாதிகெட்ட அதே அண்ணனுடையது தான் என்பது! பிறந்த நாள் முதல் அவனை எப்படிக் கரித்துக் கொட்டித் திட்டிக் கொண்டிருக்கிறாள்? கடைசி மூச்சுவரை திட்டித் தீர்ப்பது என்று உறுதிகொண்டிருக்கிறாள். என்ன வேடிக்கையோ இது! அண்ணன் வேண்டியிருக்கவில்லை; ஆனால் அவன் குழந்தைகள் வேண்டியிருக்கின்றன .

அம்மா, அத்தைக்கு உறவு முறையில் அண்ணன் மகள்கூட. என்ன குழப் ப மோ தாய்வழி - தந்தைவழி உறவிலே என் அம்மாவுக்கு நானே தங்கையாகவும்கூட ஆனேன். இந்த மாதிரி உறவு பார்க்கப் போனால் என் அப்பா, எனக்குத் தமக்கை புருஷனும் ஆனார். என் தந்தைவழியினருக்கு , என் தாய்வழியினர் கொடுத்த துயரங்கள் கொஞ்சமா, நஞ்சமா? என் அத்தை பெண் மஸ்ஸரத் கானம் எங்கள் ஜபர் மாமாவிடம் உள்ளத்தைப் பறி கொடுத்தபோது படு அனர்த்தமாகிவிட்டது.

என் அம்மாவுக்குத் தந்தைவழிப் பாட்டி-அதாவது அப்பாவுக்கு அத்தை கடைசி நாட்களை எண்ணிக்கொண் டிருந்த போது. அவளைக் கவனிப்பதற்காக இருதரப்பு ஜனங்களும் கூடினர். எங்கள் மாமாவும் தன் தந்தைவழிப் பாட்டியைக் காண்பதற்காகப் போனார். மஸ்ஸரத் கானமும் தன் அம்மாவுடன் அவள் அத்தையைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தாள்.

பாதுஷாஹீ அத்தையைப் பொறுத்தவரையில், அவளுக்கு அச்சமோ ஐயமோ தலையெடுக்கவில்லை. எனது தாய்வழி வீட்டார் விஷயத்தில் அவள் தன் குழந்தைகளின் உள்ளத்தில் எடுக்க எடுக்கக் குறையாத வெறுப்பைக் கிட்டித்து நிரப்பியிருந்தாள். எனவேதான் அத்தனை உறுதி. அதோடு பதினைந்து ,வயதுகூட நிரம்பாத மஸ்ஸரத் கானத்துக்கு அப்படி என்ன பிரமாத வயது? இன்னுங்கூட அம்மாவின் மடியில் தான் படுத்திருந்தாள். அதனால் அவளுக்குத் தான் பால் குடிக்கிற குழந்தை யாகத் தான் தோன்றியது.

என் மாமா தனது இனிக்கும் கருந்திராக்ஷை விழிகளால் மஸ்ஸரத் ஜஹானின் துடி இடை உடலைத் தலையிலிருந்து கால்வரை அளந்தபோது. அவள் நின்றது நின்றபடியே மெய்ச் சிலிர்த்துவிட்டாள். . நாள் முழுவதும் வயதில் பெரியவர்கள் நோயாளிக்குப் பணி விடை புரிந்து அலுத்துச் சலித்து உறங்கிவிட்டால், அந்தப் பணியை இளம் உள்ளங்கள் அலுத்துச் சலித்துக்கொள்ளாமல் ஏற்றன. பெரியவர்களுக்கு அடங்கிய பிள்ளைகள் என்று பெயரும் பெற்றன. இருவரும் நோயாளியின் தலைமாட்டில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்த்துக்கொள்வார்கள். நோயாளியை அல்ல; தங்களைத்தானே? மஸ்ஸரத் ஜஹான் பனிக்கட்டியில் நனைத்த துணியை பெரிய அத்தையின் நெற்றியில் மாற்றிப் போடுவதற்காகக் கையை நீட்டுவாள். ஜபர் மாமாவின் கை அவளுக்கு முன்னாடியே அங்கு நிற்கும். காதும் காதும் வைத்தாற் போலக் கண்ணும் கையும் பணியா விடை புரிந்த நேரத்திலே ...

மறுநாள் பெரிய அத்தை பட்டென்று கண்களைத் திறந்து விட்டாள். எப்படியோ சிரமப்பட்டுக் களைப்பையும் நடுக்கத்தையும் பொருட்படுத்தாமல் தலையணையின் உதவி கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். உட்கார்ந்ததும் குடும்பத்துக்குப் பொறுப்பான வர்களைக் கூப்பிட்டாள். எல்லாரும் கூடியதும், 'கா ஜியைக் கூப்பிடு!'' என்றாள்.

கிழவி காஜியை ஏன் கூப்பிடச் சொல்லுகிறாள்? கடைசிக் காலத்தில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாளா? புரியாமல் விழித்தனர். ஆனால், யாருக்கும் மூச்சுப் பிரியத் துணிவில்லை.

''இரண்டு பேருக்கும் 'நிகாஹ்' முடித்து வை! எந்த இரண்டு பேருக்கும்? கூடியிருந்தவர்களுக்குத் தலையைச் சுற்றியது. ஆனால், இங்கே மஸ்ஸரத் ஜஹான் மூர்ச்சையுற்றுப் பட்டென்று கீழே விழுந்தாள். அங்கே ஜபர் மாமா பைத்தியம் பிடித்தாற்போல் எழுந்து வெளியே ஓடினார். திருடர்கள் பிடிபட்டனர். 'நிகாஹ்' நிறைவேறிவிட்டது. பாதுஷாஹீ அத்தை திக்பிரமை பிடித்தவள்போல் வாய் அடைத்துப் போனாள்.பயங்கரமாக எதுவும் நடந்துவிடவில்லை. இரண்டு பேரும் கைகளைத்தான் பிடித்திருந்தவர்கள் என்றாலும், பெரிய அத்தைக்கு அதுவே பெரிதாக இருந்தது. பிடித்த கையைப் பிடித்து இணைத்துவிட்டாள்.

பாதுஷாஹீ அத்தைக்கு ஏற்பட்ட வீராவேசத்திலே குதிரை இல்லாமலே குதிரை ஏறினாள். வாள் இல்லாமலே வீரப்போர் புரிந்து பிணங்களுக்குமேல் பிணங்களாகக் குவித்துத் தள்ளினாள். நின்ற இடத்திலிருந்தே பெண்ணையும் மருமகனையும் விரட்டி யடித்துவிட்டாள். வேறு வழியின்றி அப்பா, மணமக்களைத் தம் வீட்டுக்கு அழைத்துவந்தார். அம்மா சந்திரனைப் பழிக்கும் அண்ணியைக் கண்டு அகமகிழ்ந்து போனாள். வெகு விமரிசையாகச் சாந்தி இரவு முடிந்து 'வலீமா விருந்து வைக்கப் பட்டது.

பாதுஷாஹீ அத்தை அன்று முதல் பெரிய அத்தையின் முகத்தைப் பார்க்கவில்லை. அண்ணனோடுகூடப் 'புது முறை யைக் கடைப்பிடித்தாள். கணவனோடுதான் அடி நாளிலிருந்தே ஒத்துக்கொள்ளவில்லை. உலகத்திடமே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் . ஒரே ஒரு விஷயந்தான் அவள் மனத்திலும் மூளை யிலும் விர்ரென்று ஏறிக்கொண்டே போயிற்று. வாழ்க்கையே பாம்பாகிப் படம் எடுத்துக் கடிக்கலாயிற்று.

''அந்தக் கிழம் தன் பேரனுக்கு என் பெண்ணை முடித்துப் போடுவதற்காக வலை விரித்து நாடகமாடிவிட்டதே!'

எப்போது பார்த்தாலும் இதையே சொல்லிக்கொண்டிருந்தாள் அத்தை. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிக்குப் பின் கிழவி உண்மையில் இருபது ஆண்டுகள் உயிரோடு இருந்தாள். அத்தை சொல்வது சரிதானோ , என்னவோ? யாருக்குத் தெரியும்?

சாகிற அளவுக்கும் அண்ணன் தங்கையிடம் ஒற்றுமையே ஏற்படவில்லை.

அப்பாவை நான்காவது முறையாகப் பாரிச வாயு தாக்கியது. இந்தத் தடவை ஆளை உயிரோடு விட்டு வைக்காது என்று தோன்றவே, அப்பா பாதுஷாஹீ அத்தைக்குச் சொல்லி அனுப்பினார் :

''பாதுஷாஹீ கானம்! என் இறுதி நாள் நெருங்கிவிட்டது. உள்ளத்து ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமென்றால், உடனே புறப்பட்டு வா!'' அந்தச் செய்தியில் என்ன அம்பு எங்கு ஒளிந்திருந்ததோ? அண்ணா விட்ட அந்தச் சொல் அம்பு. தங்கையின் உள்ளத்தில் தராசு முள்ளெனத் தைத்துக் கொக்கிப் போட்டு இழுத்து விட்டது. தளர்ந்த தன் மார்பில் 'பொட்டுப் பொட்டு' என்று போட்டுக்கொண்டு, வெள்ளை மலை ஒன்று பூகம்பத்தில் பறந்து வருகிறாற்போல், பாதுஷாஹீ கானம் வந்து சேர்ந்தாள். பல்லாண்டுகளாகப் படி ஏறாத கால்கள் இன்று ஏறி வந்தன.

பாதுஷாஹீ! உன் ஆசீர்வாதம் நிறைவேறுகிறது!'' அத்தனை கஷ்டத்திலும் அப்பா சிரித்தார். அவருடைய கண்களில் அதே இளமை பளிச்சிட்டது.

பாதுஷாஹீ அத்தை அத்தனை நரையிலும் அவருக்குச் சின்னஞ் சிறு 'பச்சோ'வாகத்தான் தோன்றினாள். பிள்ளைப் பருவத்தில் முறண்டு பிடித்துத் தன் சொல்லையே நிறைவேற்றிக்கொண்டவளாயிற்றே! சிங்கத்தை நிகர்த்த அவளது பொல்லாக் கண்கள் ஆட்டுக்குட்டியின் பேதை விழிகளைப்போலப் பயந்து கலங்கிப் போயிருந்தன. பெரிய பெரிய கண்ணீர்த் துளிகளாக அவளது சலவைக்கல் போன்ற கன்னங்களில் வழிந்து கொண் டிருந்தன.

என்னைத் திட்டு, பச்சோக் கண்ணு!'' அப்பா அன்போடு கூறினார். என் அம்மாவும் விசித்தவாறே பாதுஷாஹீ சித்தியிடம் வசவுப் பிச்சைக்குக் கையேந்தி நின்றாள்.

யா அல்லாஹ்! யா அல்லாஹ்!' அவள் கர்ஜனை புரியத்தான் நினைத்தாள். ஆனால் நடுநடுங்கிப் போனாள். 'யா-யா-யா- அல்லாஹ்! என் வயதை என் அண்ணனுக்குக் கொடேன். யா-மெளலா! என் தெய்வமே! ரசூலே! எனக்குப் பிச்சை ...'' பாடம் நினைவுக்கு வராத குழந்தையைப்போல் எரிந்து விழுந்து

அழத் தொடங்கிவிட்டாள்.

எல்லாருடைய முகங்களும் வெளிறிவிட்டன. அப்பாவின் கால்கள் உணர்வற்று ஓய்ந்து தொய்ந்தன. ஆண்டவனே! இன்று ஏன் அத்தையின் வாயிலிருந்து அண்ணனுக்கு ஒரு வசவு கூடக் கிட்டவில்லை?

அவள் வசவுகளைக் கேட்டு என்றும் சிரிப்பது போல், அப்பா அன்றும் சிரித்துக்கொண் டிருந்தார்!

உண்மை ! உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை.

No comments:

Post a Comment