தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, June 05, 2018

செக்காவ் சித்திரம் : ஸலூனில் கருமி (க. நா. சுப்ரமண்யம்)

சக்தி : விக்கிரம, புரட்டாசி

செக்காவ் சித்திரம் :

ஸலூனில் கருமி

க. நா. சுப்ரமண்யம்https://s-pasupathy.blogspot.com/search/label/க.நா.சுப்ரமண்யம்

‘சக்தி’ யில் 1940-இல் வந்த ஒரு ‘செக்காவ் சித்திரம்’.

காலை : மணி இன்னும் ஏழு அடிக்கவில்லை , ஆனால் அவனுடைய ஸ்லூன் திறந்திருக்கிறது. நாவிதன் தன் கடையைச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான். சுத்தப்படுத்த அங்கு ஒன்று மில்லை ; எனினும், அவன் வியர்க்க விறு விறக்கச் சுத்தப்படுத்துவதில் ஈடுபட்டிருக்கிறான். ஒரு துணியைப் போட்டு ஒரு இடத்தைத் தடை துடை என்று துடைத்து க் கொண்டிருக்கிறான். அந்த இடம் அவன் துடைப்பதால் பள பள வென்று ஆகிவிடப் போவதில்லை, அது அவனுக்கும் தெரியும் ; ஆனால் அவன் துடைப்பதை நிறுத்தவதாக இல்லை. இன்னொரு இடத்தில் கைவிரலால் நோண்டுகிறான். நாற்காலி இடுக்கில் ஓடி ஒளிந்துகொள்ள முயலும் மூட்டைப் பூச்சியைப் பிடித்துச் சுவரில் தேய்த்து நசுக்குகிறான். அந்த நாவிதனுக்கு வயது இருபத்திரண்டுதான் இருக்கும். வெள்ளையாக உடை அணிந்திருக்கிறான். ஆனால், அவன் முகத்தில் எண்ணெய் வழிகிறது.

ஸலூன் ரொம்பச் சின்னதுதான் ; மிகவும் குறுகியது. அதன் சுவர்கள் எல்லாம் ஒரே அழுக்கடைந் திருக்கின் றன. ஸ்லூனின் இரண்டு சிறிய ஜன்னல் களுக் கிடையே ஒரு கதவிருக்கிறது. கதவுக்குமேல் ஒரு சின்ன ம ணி யிருக்கிறது. ஏதாவது அசைவு எற் பட்டால் போதும் ; அந்த மணி,கரண காரியமில்லாமல், மொண கொணவென்ற, சீக்காளியின் மூச்சு அடித்துக் கொள்ளுவது போல் அடித்துக்கொள்ளு கிறது. சுவரில் மாட்டியிருக்கும் நிலைக் கண்ணாடி,தன்னைப் பார்ப்பவரின் உருவத் தைத் தயாதாட்சண்யமின்றிக் குறுக்கி, சீட்டி, சர்வ கோணலாக்கிக் காட்டுகிறது. முகக்ஷ்வரம், மயிர் வெட்டுதல் எல்லாம் இந்தக் கண்ணாடி முன் தான் நடக்கும். அந்தக் கண்ணாடிக் கருகில், நாவிதனைப் போலவே எண்ணெய் வழிந்த தோற்றத்துடன், ஒரு மேஜை கிடக்கிறது. அதன்மேல் க்ஷவரத் தொழிலுக்கு வேண்டிய சாமான்கள் -சீப்பு, கத்திரி, பவுடர், சோப், பிரஷ் எல்லாத் தளவாடங்களும் காணப்படுகின்றன. அந்த ஸலூனையும், அதிலுள்ள சாமான்களையும் விற்றால், ஒரு காசு பெறாது என்பது நிச்சயம்.

தவுக்கு மேலிருக்கும் ஒட்டை மணி. இதோ கதவு அசைவதால், கொண கொண என்று அடித்துக் கொள்ளு கிறது. ஒரு கிழவன் உள்ளே வருகிறன். அவன் ஒரு பெரிய சால்வையைத் தலையின் மேல் போட்டுப் போர்த்திக் கொண் டிருக்கிறான். அ வ ன் நாவிதனின் அத்தை புருஷன். ஒரு காலத்தில் பாங்கியில் காவல்காரனாக இருந்தான். இப்போது பூட்டு-சாவி ரிப்பேர் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கிறான். 

"என்னப்பா? என்ன ? சேமந்தா னே ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறான் கிழவன், நாவி தன் தன் நிலைக்கண்ணாடியைச் சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறபடி யால், பதில் சொல்லவில்லை. - 

போர்வையை எடுத்து ஒரு ஆணியில் மாட்டுகிறான் கிழவன் , ஒரு தரம் கனைத்துக்கொள்ளுகிறான் ; பெருமூச்சு விடுகிறான்; அப்புறம் சொல்லுகிறான்: உன் கடைக்கு வர்றதுக்கு எவ்வளவு தூரம் நடக்கவேண்டி யிருக்குது! ஆயாடி! எவ்வளவு தூரம் " 

" வாருங்க! சேமமா? '' 

"ஏதோ சேமந்தானப்பா. எனக்கு நடுப்பற, காய்ச்சல் அடிச்சுது. "

* காய்ச்சலா ? காய்ச்சலா அடிச்சுது" | 

" ஆமாம். நடுப்பற ஒரு மாசம் படுத்த | பரிச்சை தான். நான் இறந்தே போய்டுவேன் இன்று எண்ணிட்டேன்.... என் மயிர் ஏகமா வளந்துடுச்சு, சவரம் பண்ணிக்கத்தான் வேணுமின்னு டாக்டரு சொன்னாரு. மறுபடியும் தானே வளரருதி. --அதான் நம்ப மருமவனிடம் போவோமின்னு இங்கே வந்தேன். வேறே யார் கிட்டேயாவது போறதை விட, உன்னிடம் போறதே சரி இன்னு வச்சேன்... எனக்குன்னு கவனமாய் வெட்டிடுவாய்; காசும் வாங்கிக் கொள்ள மாட்டாய்... உன் கடை ரொம்பத் தூரமாய்த் தான் இருக்கும். இருந்தாலும் என்ன ? நடந்தே வந்துட்டேன். நடந்தது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்குது..."

" இப்படி உக்காருங்க, தலைமயிரை வெட்டுறேன்" என்று ஒரு நாற்காலியைக் காட்டிக்கொண்டே கூறினான் நாவிதன். கிழவன் அந்த நாற்காலியில் உட்கார்ந்து எதிரில் இருக்கும் கண் ணாடியில் தன் மு க த் ைத பார்த்துக் கொள் ளுகிறான். அவனுடைய விகாச முகத்தை மேலும் கோரமாக்கிக் காட்டு கிறது அந்தக் கண்ணாடி. கிழவன் தோளில் ஒரு வெள்ளைத் துணியைப் போட்டு மூடுகிறான் நாவிதன் ; அந்த வெள்ளைத் துணிமேல் திட்டுத் திட்டாக அழுக்கும் மஞ்சள் பொட்டுக்களும் காணப்படுகின்றன. கையில் கத்திரியை எடுத்துக்கொண்டு சுத்தப் படுத்து கிறன் சாவிதன்.

'' தலையை மழுங்கச்சி சிரச்சுடட்டுமா?"

சிரைச்சு விடேன்! பூசணிக்காய் மாதிரி ஆயிடும். அதனால் என்ன ? பரவாயில்லை. மயிர் அப்புறம் தானே அடர்த் தியா வளர்ந்துடுது."

'' அத்தை சேமமா ?" " இருக்கா...சேமந் தான்... " “ ம்... இந்தக் காதை இப்படி மடிச் ஈப் பிடிச்சுக்குங்க. "

எம் பிடிச்சுக்கடி றன், ஆனால் சாக்கிர தையா வெட்டு. கத்திரிக்கோல் வெட் டறப்போ மயிரையும் பிடிச்சு இழுக் குதி. எப்பா ! வவிக்கிது..."

''உங்க பெண்ணு சேமமா ?"

 * என் பெண்ணா ? அவ சேமந்தான். சந்தோசமாயும் இருக்கா, போன புதன் கிழமை அவளைப் பரிசம் போட்டுக் கொடுத்திதி, சீயேன் அதுக்கு வரல்லே?" 

த்திரியின் சத்தம் திடீர் என்று நின்று விடுகிறது. கையைத் தொங்க விட்டுக் கொண்டு, மிரண்டவன் போலக் கேட்கிறான் நாவிதன் : '' யாரைப் பரி சம் போட்டுது ? ''

** என் பெண்ணைத் தான்." 

“ ஏன் ? யாருக்கு ?" 

** உனக்கு அவனைத் தெரியாது. எங்களுக்கு அடுத்த தெருவிலே இருக்கான் அவன். அவனுக்குச் சொந்தமா அதே தெருவிலே ஒரு வீடும் இருக்குது. அவன் ரொம்ப நல்ல பையன். இந்த விசயத்திலெ எங்கள் எல்லோருக்கும் ரொம்பத் திருப்தி. கலியாணம் இன்னும் இரண்டொரு வாரத்திலே நடக்கும். நீ அதற்கு வராமெ இருக்சிடாதே!"

* இது என்னமா இப்படி நடந்திச்சு ? ” என்று கேட்கிறான் நாவிதன். அவனுக்கு ஆச்சர்யமும் பி ர மி ப் பும் தாங்கமுடிய வில்லை. " அது... அது எப் படி முடியும் ? அவளை... அவளை.., ஏன்,,,


நான் அவள் கிட்ட ஆசை வெச்சிருக் தேனே! அவளை நான் கலியாணம் பண் ணிப்பதாக எண்ணி யிருந்தேனே ! இது எப்படி நடந்திச்சு ?"

| * ஏன்? நாங்க பரிசம் போட்டாச்சு. அவ்வளவு தான். அவன் ரொம்ப நல்ல  பையன்."

நாவிதன் முகத்தில் வியர்வை அரும்பி வழிந்து ஓடுகிறது. கத்திரியை மேஜை மேல் போட்டு விட்டுக் கையால் தன் மூக்கைச் சொறிய ஆரம்பிக்கிறான்.

நான் உங்க பெண்ணைக் கவியாணம் பண்ணிப்பதாக எண்ணி யிருந்தேன் " என்கிறான் மறுபடியும் : " நீங்க இப்படி ஏற்பாடு செய்துட்டது தப்பு.தான்,... நான் அவள் கிட்டப் பிரியம் வெச்சிருக்கேன். அவளும் என் கிட்டப் பிரியம் வெச்சிருப்பதாய் ஒப்புக்கொண்டாளே! அத்தையும் சரி என்று சொன்னாள்... உங்ககிட்ட நான் ரொம்ப மரியாதை வெச்சிருந்தேனே; எங்க தகப்பனாரை விட இல்லெ பெரியவரா உங்களை மதிச்சிருந்தேன்! இவ்வளவு நாளும், கூலியில்லாமே, உங்க தலை மயிரை வெட்டி யிருக்கேன்... உங்க விருப்பத்துக்கு விரோதமாக நான் நடந்துக் கிட்டதே கிடையாது.  ஞாபகம் இல்லியா, என் அப்பா இறந்ததும் வீட்டிலிருந்த நாற்காலியையும் பணத்தையும் நீங்க தானே எடுத்துக்கிட்டுப் போனீங்க! திருப்பிக் கொடுத்தீங்களா? இல்லை, நான் தான் ஏதாவது ஆட்ச்சேபனை செய்தேனா?"

 " அது சரி, எனக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்குது. ஆனால் யோசிச்சுப் பாரு, 8 அவளைக் கலியாணம் பண் ணிக்க முடியுமா ? உனக்குப் பணம், பதவி, பவிசு ஒண்ணும் கிடையாதே! நீ செய்யும் இந்தத்  தொழிலிலே வருவாய்  ஏது?"

" பரிசம் போட்டிருக்கிங்களே, அவன் பணக்காரனா ?"

“ அவன் கோவாப்பரடிவ் சங்கத்திலே சேர்ந்தவன். ஒரு ஆயிரத்தைந் நூறு நல்ல இடத்திலே வட்டிக்குப் போட்டு வெச்சிருக்கான்... அதைப் பத்திப் பேசிப் பிரயோசனமில்லை. செய்தது செய் தாயிடுச்சு ; அதை மாத்த முடியாது. சீ வேறே ஒரு நல்ல பெண்டாட்டியாய்ப் பார்த்து கட்டிக்கவேண்டியது தான், அப்படி உனக்குன்னு ஒருத்தி அகப் படாமலா போயிடுவா ...சரி, அது கிடக்கு. மயிரை வெட்டறதைப் பாதியி லெ நிறுத்திட்டையே ! அட பாக்கியும் வெட்டுங்கறேன்...”

________________

நாவித இளைஞன் ஒரு வினாடி - மெளனமாக நிற்கிறான். " அப்புறம் தன் சட்டைப்பையி லிருந்து ஒரு கைக்குட்டையை எடுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விம்ம ஆரம்பிக்கிறான்.-

 “வா, அப்பா! இதென்ன இது?" என்று அவனைத் தேற்றப் பார்க்கிறான் கிழவன். "போதும், அளாதே! நிறுத்து. பொம்புளை மாதிரி அள உனக்கு வெக்கமா வில்லே ?...மயிரை வெட்டறத்தை முடிச்சுட்டு அளு ! வா , நாளியாகுது."

நசலி தன் கத்திரியை எடுக்கிறான். அதை ஒரு நிமிஷம் உற்றுப்பார்த்துக் கொண்டே நிற்கிறான். அப்புறம் மது படியும் அதை மேஜைமேலே போடு கிறன். அவன் கைகள் * வெட வெட ' வென்று நடுங்குகின்றன.

" என்னாலே முடியாது" என்கிறான் அவன். '' இப்போ என்னாலே உன் தலைமயிரை வெட்டமுடியாது. இப்போ அதுக்கு வேண்டிய பலம் எனக்கு இல்லை, எனக்கு ரொம்பவும் வருத்தமாமிருக்குது ; அவளும் வருத்தப்படுவா, நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நேசம் வெச்சோம்; கலியாணம் பண்ணிப்பதாய் வாக்குச் செய்துக்கிட்டோம். ஈவு இரக்க மில்லாத உன் மாதிரி மனிசங்கள் எங்களைப் பிரிச்சு வெச்சுட்டான்கள், போ! இங்கே நிக்கவேண் டாம். உன்னைக் கண்ணாலே பார்க்கவே பிடிக்கல்லை எனக்கு."

 "அப்போ நான் நாளைக்கு வர்ரேன். பாக்கி மயிரை நாளைக்கு வெட்டு நீ."

"சரி "

'' நீ அழாதே! நான் நாளைக்கு அதிகாலையிலெ வர்ரேன்."

கிழவனின் தலையில் ஒருபாதி நன்றாக மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பாதியில் நிறைய மயிர் வளர்ந்திருக்கிறது. பார்க்கச் கைதி மாதிரி தோற்றம் அளிக்கிறான்! விகாரமாகத் தான் இருக்கிறது. ஆனால் வேறென்ன பண்ணுவது சால்வையால் முக்காடிட் இத் தலையை மூடிக்கொண்டு ஸலூனில் இருந்து வெளியேறுகிறான் கிழவன். தனியாக விடப்பட்ட நாவித இளைஞன் துக்கத்தில் ஆழ்ந்தவனாக உட்கார்ந்திருக் கிறன்.

மறுநாள் அதிகாலையில் கிழவன் மறுபடியும் ஸலூனுக்குள் வருகிறான்,

" உனக்கு என்ன வேணும்?" என்று கேட்கிறான் நாவிதன்.

“ என் தலை மயிரில் பாதியைத்தானே வெட்டினை நேத்து ? இன்னிக்கி மறு பாதியையும் வெட்டிடு."

" சவரக் கூலியை முன்னாலெ கொடு. அப்படிக் கொடுத்தால் தான் வெட்டிடுவேன் " என்றான் நாவிதன்.

ஒரு வார்த்தைகட்டப் பதில் பேசாமல் - வெளியேறுகிறான் கிழவன், காசு கொடுத்து க்ஷ்வரம் செய்து கொள்ளு வதா! அதில் துளிக்கட்ட நம்பிக்கை இல்லாதவன் அவன். இன்று வரையில் அவன் தலையில் ஒரு பாதியில் மயிர் நீளமாகவும், மறு பாதியில் குட்டையாக வும் தான் இருக்கிறது. தானாக வளர்ந்து சமனாகட்டும் என்று இருக்கிறான் அவன்,

தன் மகளின் கலியாண தினத்தன்றும் அதே கோலத்திலே தான் காட்சி யளித்தான் கிழவன்.
No comments:

Post a Comment