தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Tuesday, May 10, 2016

மக்கள் சினிமாவின் மகத்தான நாடோடி - ரித்விக்கட்டக் (3 பேட்டிகள்)


மக்கள் சினிமாவின் மகத்தான நாடோடி - ரித்விக்கட்டக் (3 பேட்டிகள்
 நிழல் - 3
www.padippkam.com

 
சினிமாவுக்கும் வாழ்வுக்குமிடையே எவ்வித வேறுபாடுமின்றி வாழ்ந்த உன்னத கலைஞரான ரித்விக்கட்டக், இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாகவே கருதப்படுகிறார். கலைக்கும் வாழ்வுக்குமான ஊடாட்டம் அவரது அந்திம காலம் வரை நீடித்துள்ளது
 தமது விரிந்த மன உலகிலிருந்து அவர் இங்கே பேசுகிறார். .." 
(1975-76 கால கட்டங்களில் வெளிவந்த அவருடைய 3 பேட்டிகளின் சாராம்சம் இது

1. திரைப்படத்துறையை நோக்கி உங்களை ஈர்க்கச் செய்தது எது.? - 
சதா சஞ்சலப்பட்டவாறே அங்குமிங்குமாய் அலைந்து திரிந்த நான் கடைசியில் வழிதவறிப் போய்த் தான் சினிமாவிற்குள் பிரவேசித்தேன் என்றுகூட சொல்லலாம். எனது தந்தை அவரது கொள்கையில் பிடிவாதமாகயிருந்திருந்தால், இந்நேரத்தில் நான் ஒரு வருமானவரித்துறை அதிகாரியாகியிருப்பேன். இச்சமயத்தில் எனக்கு கிடைத்த ஒரு வேலையையும் உதறிவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தேன். நான் அந்த வேலையிலேயே நீடித்து இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கமிஷனராகவோ அல்லது அக்கெளண்ட் ஜெனரலாகவோ மாறியிருப்பேன். ஆனால், இப்போது நான் ஒரு தெருநாய் தான். வேலையை விட்ட பிறகு கவிதை எழுத ஆரம்பித்தேன். அது என்னால் இயலாத காரியம் என்பதை உணர்ந்தவுடன் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டு ஒரளவு வெற்றியும் பெற்றேன். சுமார் நூற்றுக்கும் அதிகமான கதைகள் Desh, Parichay, Shanibarer; போன்ற வங்களா முன்னணி பத்திரிக்கைகளில் பிரசுரமாகி எனக்கு சிறிது பேரும் கிட்டியது. "இலக்கியம் மனித ஆன்மாவை ஆழமாக ஊடுருவி செல்லக்கூடியது" என்பதை பின்னாளில்தான் உணர ஆரம்பித்தேன். எனக்குள் அது வேர்விட்டு வளர நீண்டகாலமாகியிருந்தது. எனது கதைகள் உடனடியாக மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களை கிளர்ந்தெழச் செய்ய வேண்டுமென அப்போது நான் ஆசைப்பட்டேன். இந்நேரத்தில்தான் (IPTA - Indian People Theatre Association) இயக்கமும் உருவாகி இருந்தது.. அவர்களின் ஜபன்பந்தி (1943), பிஜன் பட்டாச்சார்யாவின் நபன்னா (1944), என்ற இரு நாடகங்களையும் பார்த்தவுடன் - உள்ளூர நான் பாதிப்படைந்தேன். இலக்கியத்தை விட நாடகத்தின் பரவலான் வீச்சையும், முழு பலத்தையும் உணர்ந்த போது கதைகள் எழுதுவதை விடுத்து, நாடக ஆக்கங்களில் முனைப்புடன் ஈடுபட்டேன்

1950ல் ஜாதவ்பூர் பல்கலை கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவின் போது தாகூரின் Bisarjan- நாடகமாக்கி அதில் முக்கியபாத்திரமாக நடித்திருந்தேன். அப்போதைய ஜனாதிபதி ராதா கிருஷ்ணனால் துவக்கி வைக்கப்பட்ட அந்நிகழ்ச்சியை சுமார் 8000 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இருப்பினும் பெருவாரியான மக்களிடம் எனது படைப்புகள் சேர வேண்டுமென்றால் சினிமா மீடியத்தின் மூலமே அது சாத்தியப்படும் என்பதை உணர்ந்தவுடன் இத்துறைக்கு தாவினேன். எனை சூழ்ந்திருக்கும் சமூகயதார்த்தத்தை, நான் உண்மை என்று உணர்ந்ததை உரக்க கத்தவேண்டுமென்று நான் ஆசைப்பட்டபோது அதற்கு சினிமாதான் ஒரு ஐடியலான மீடியம் என்ற முடிவுக்கு வந்தேன். சினிமாவின் இடத்தை விரைவில் தொலைக்காட்சி பிடித்துவிடும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அப்படியாயின், நானும் சினிமாவை துறந்துவிட்டு டி.வி. பக்கம் என் பார்வையை திருப்பி விடுவேன்

2. சமூகத்திற்கு ஒரு கலைஞனின் பங்களிப்பாக குறிப்பாக சினிமா கலைஞர்களின் பங்களிப்பாக எதை கருதுகிறீர்கள்.? - 

நான் கலைஞனல்ல. ஒரு சினிமா கலைஞனாகவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், சினிமாவே எனக்கு ஒரு கலைவடிவமும் அல்ல. கலை சமூகத்தை மாற்றாது. அதே சமயத்தில், கலை கலைக்காக மட்டுமே என்ற கோட்பாட்டிலும், உடன்பாடில்லை. சினிமா என்பது முடிவுகளை காண்பிக்கும் வழிமுறையாகவே எனக்குப் படுகிறது. (It is only a means to an end) அதாவது மக்களுக்கான  வழிமுறைகளை கோடிட்டு காட்டுகிறது என நம்புகிறேன். எனது சினிமா மக்களை சீர்திருத்திவிடும் என்ற போலியான மாயையும்  நான்_ஏற்படுத்த விரும்பவில்லை. மேலும் நான் ஒரு சமூகவியலாளனும் அல்ல

மக்கள்தான் எப்போதுமே மகத்தானவர்கள் என நான் நம்புகிறேன். அவர்கள்தான் தங்களை தாங்களே மாற்றியமைத்து கொள்கிறார்கள். நான் எதையும் மாற்றியமைப்பதில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய_மாற்றங்களையெல்லாம் நான் பதிவு மட்டுமே செய்கிறேன். ஃபெலினி மிக அழகாய் மானுடவாழ்வை வரைந்து காட்டினார். Rajan Tarafdar இதையே Ganga படத்தில் செய்து காட்டினார். என்னால் சிலவற்றை மட்டுமே பதிவு செய்ய முடிகிறது. நான் எதையும் நல்லதாகவோ, கெட்டதாகவோ பார்க்கவில்லை. மாறாக, அது நமக்கு ஏற்புடையதாக இருக்கிறதா அல்லது இல்லையா என்றே பார்க்கிறேன். நான் இங்கு வெறும் ஒரு பார்வையாளன் மட்டுமே. புனிதத்தன்மையற்றது என எதுவுமேயில்லை. என்னைப் பொறுத்தவரை, சினிமா என்பது சக மனிதர்களின் சுகதுக்கங்களை வெளிப்படுத்தும் ஒரு வடிவம். நாளை மனித அறிவு சினிமா ஊடகத்தை தகர்த்தெறிந்து வேறொரு புதிய_ஊடகத்தின் மூலம் தனது உணர்வுகளை பரிமாறிக் கொள்ள முயலும், ! அப்போது, அதுவே ஒரு ஐடியல் மீடியமாக அமையும்

3. நாளுக்கு நாள் அழுகிக்கொண்டிருக்கும் மனித ஆளுமையை கவனிக்கிறீர்களா

சொல்லப் போனால், சிதிலங்களினூடாகத்தான் நான் வாழ்க்கையை பார்க்கிறேன். அதில் வளர்ச்சியை காண்கிறேன். மேலும் வாழ்வின் தொடர்ச்சியில் நான் முழு நம்பிக்கையோடு இருக்கிறேன். இதனின் ஒரு அம்சமாகத்தான், "வாழ்வதற்கு நான் ஆசைப் படுகிறேன். எனை வாழவிடுங்கள்" என்று ஒரு படத்தின் முடிவில் எனது கதாபாத்திரம் கதறுகிறது. இறக்கும் தருவாயிலும் வாழ்வின்மீது கொண்ட தீராத காதல் அவளை தொடர்ந்து வாட்டுகிறது
வாழ்வதற்கான உரிமை வற்புறுத்தப்படும்போது யாருமே மரணத்தை எளிதில் விரும்புவதில்லை. இரண்டாம் உலகப்போரின் தாக்கம், நமது வங்காள சமூக பொருளாதார வாழ்க்கையையும் பாதிக்கவே செய்தது. ஒரே இரவில் தீய வழியில் சேகரித்த பணத்தின்மூலம், இலர் பணக்காரர்களாயினர். உழைக்கும் மக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டனர். என் கண் முன்னாலேயே நடந்த எல்லா அநீதிகளுக்கும் ஒரு சாட்சியாகவே நின்று கொண்டிருக்கிறேன். போருக்கு முன்பாக Aadmi, Aurat, அச்சுத கன்யா, Jhoola போன்ற சில நல்ல படங்களை பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம், வக்கிரமும் கொடுரமும் நிறைந்த படங்களையே காண முடிகிறது

4. உங்களை ஆழ்ந்த பாதிப்புக்குள்ளாக்கியதன் மூலம் திரைத்துறைக்கு வழிகாட்டிய இயக்குனர்களை குறிப்பிட முடியுமா..? 
 ஐசன்ஸ்டீனின் Battleship Potemkhin, புடோவ்கினின்_Mother_செக்கோஸ் லோவியப் u படமான Кrakatit, Otakarvavra வின் Nema Barikada போன்ற படங்களும்,  சினிமா தொடர்பான புத்தகங்களான  ஐசன்ஸ்டீனின் Film Form, The Film Sense, புடோவ்கின் எழுதிய Film Technique & Film Acting மற்றும் பெங்குவின் பதிப்பகத்தில் தொடர்ச்சியாக வெளிவந்த Ivor Montagu வின் சினிமா தொடர்பான கட்டுரைகள், பெல பேலாசின் சினிமா கோட்பாடு' போன்றவைகளும் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. _ நான் இங்கே குறிப்பிட்டிருந்த படங்களெல்லாம் இந்தியாவில் அப்போது தடை செய்யப் பட்டிருந்தன. நாங்கள் மிக ரகசியமாகத்தான் அப்படங்களை பார்த்தோம். இந்தியாவில் முதல் திரைப்பட விழா நடந்தபோது தான், "இத்தாலிய நியோ - ரியலிசம்எங்களுக்கு அறிமுகமானது. இதுபோன்ற தீவிர திரைப்படங்களும், புத்தகங்களும் தான் என் ரசனை | மட்டத்தை உயர்த்தி எனக்கான உலகத்தை விசாலப்படுத்தியது. இங்கு நான் குறிப்பிட்ட எல்லோருமே சினிமாவை கலைக் கண்ணோடோ அல்லது மேலோட்டமாகவோ பார்த்ததில்லை. மாறாக, சினிமாவை அழகாக வெளிப்படுத்திய நமது முன்னோடிகளாகவே அவர்களை காண்கிறேன். ஐசன்ஸ்டீன், புடோவ்கின், டெளசென்கோ ஆகிய மூவரும் சினிமாவில் ஒரு புதிய கலைமொழியை உருவாக்கினர். இவர்களுள் செர்கி ஐசன்ஸ்டீனும், புடோவ்கினும் தான் உலகிலேயே முதன்முதலாக சினிமா கோட்பாடுகளை உருவாக்கினர். இவர்களுக்கு முன்பே The Great Train Robbery யை இயக்கிய எட்வின் போர்ட்டர், மற்றும் Griffith ம் இருந்திருந்தாலும் அவர்கள் இருவரும் மிகச் சாதாரண இயக்குனர்களே. உலகின் மூலையில் திரைப்பட இயக்குனர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் எல்லோருமே ஐசன்ஸ்டீனுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். அவர் போட்ட உப்பை தின்று வளர்ந்தவர்கள்தான் நாம், அவர்தான் சினிமாவின் காளிதாசராக, சினிமா உலகின் தந்தையாக விளங்குகிறார். நாம் எல்லோருமே அவரின் வழித்தோன்றல்கள்தான். சினிமாவின் நுட்பங்களை, காமிராவின் மொழியை உணர்த்திய அவர் நமக்கெல்லாம் பாதுகாவலராக, நமது தந்தையாக, வரலாற்றின் தொடக்க காலத்து ஆதாமாக, ஆதிமனிதனாக எல்லாவற்றையும் விஞ்சி ஓர் உயர்ந்த இடத்தில் நிற்கிறார்

5. பல்வேறுவிதமான போக்குகள் நிலவும் சினிமாச் சூழலில் சரியான போக்கை பிரதிபலித்த இயக்குனர்களாக யாரை கருதுகிறீர்கள்...? 

"இன்றைய பூர்ஷ்வா உலகில் திரைப்படம் என்பது ஒருபேனாவையும், பேப்பரையும் போல் மிக எளிதாக மாற்றப்படாத வரை நல்ல திரைப்படங்களை தயாரிக்கவே முடியாது என்று முன்பு ஒரு முறை கோடார்ட் குறிப்பிட்டிருந்தார். பேனாவை கொண்டு பேப்பரில் எழுதுவது போல் எளிதாக சினிமா அமைய வேண்டுமென விரும்பினார். அவர் கனவு சாத்யப்படாததால் சினிமா எடுப்பதையே நிறுத்திவிட்டு பாரீசின் இருமருங்கிலும் மரங்களடர்ந்த சாலைகளிலும், கட்சிப் பணிகளிலும் தனது எஞ்சிய நேரத்தை செலவிடுவதாக அவரைப் பற்றி ஒரு  பிரெஞ்சு பத்திரிக்கையாளர் சில o மாதங்களுக்கு முன்புஎன்னிடம் கூறினார். ஒரு கலை வடிவம் ணிமாைத கண்டு வெறுப்புற்று, சினிமா எடுப்பதையே புனுவலும் நிறுத்தி விட்டார். என்கருத்துப்படி, செர்கியுட் கெலிச்சியும்; லூயி புனுவலையும் சிறந்த க் கு ர் ாக கருதுகிறேன். ஜப்பானிய பள்ளியில் மிசோகுச்சி, ஒசு, Tahaka, நகிசா ஒசிமா ஆகியோர் நம்பிக்கையோடு காணப்படுகிறார்கள். ஏற்றுமதிக்கான தரம் வாய்ந்த குரோசேவாவை பற்றி நான் பேச வரவில்லை. தென் அமெரிக்காவில் லியோபோல்டோ டோரிநில்சன், கிரீசில் மைக்கேல் ககோயானிஸ், ஸ்வீடனில் பெர்க்மென் ஆகியோரும் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அமெரிக்க ரகசிய சினிமா பற்றியோ (Under Ground Cinema) பிரிட்டிஷ் சினிமாவோ, அல்லது மருத்துவரீதியாக நோயிலிருந்து நீக்கப்பட்ட வறுமையின் சமூகயதார்த்த்தை காண்பித்த "ரே"யையோ ஒரு திட்டவட்டமான அமைப்புக்குட்படுத்தி ஆய்வு செய்ய முடியவில்லை. இத்தாலிய பாடசாலை எனக்கு ஒரு விரயமான சக்தியாகவே தெரிகிறது. இத்தாலிய நியோ-ரியலிசம் உருவாக்கிய ஒரு சிறு தீப்பொறி தான் பின்னாளில் ஒரு விசித்திரமான ரியலிசமாக (Fantastic Realism) மாறியது. ஃபெடிரிகோ பெலினி, மைக்கலஞ்சலோ ஆன்டோனியோனி, லூசினோ விஷ்கோன்தி ஆகியோர் இதற்கு பெரும் பங்காற்றினர். இதே போல் தான் Andrze waida வும் மற்றவர்களும் போலந்து பள்ளியை உருவாக்கினர். பின்பு வந்த ரோமன் போலன்ஸ்கி இதையே நியோஎக்சிஸ்டென்சியலிசமாக மாற்றியமைத்தார். இதன்மூலம் போலன்ஸ்கி ஹாலிவுட்டில் தனக்கான சொர்க்கத்தை கண்டடைந்தார். பிரெஞ்சில் உருவான 

புதிய அலை இயக்கத்தார் (Nouvelle Wague) தாங்கள் கண்டுபிடித்த எல்லாவற்றிற்கும் உடனேயே ஒரு புதிய லேபிளை பொருத்திவிடுகிறார்கள். எனக்கு இது ஒரு வெறுமையானதாகவே தெரிகிறது. ட்ரூபோவின் The 400 Blows apuļib, Resnais - Robbe-Grilletd ன் தயாரிப்பான Last Year at Marienbad படத்தையும் ஒரே தரத்தில் வைத்து எடை போடுகிறார்கள். ஆனால், இரண்டுமே வெவ்வேறானவை. என்னால் French School ஏற்க முடியவில்லை. ஆனால், இதிலிருந்து பல அற்புதமான இயக்குனர்கள் உருவாகியுள்ளார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. நியூ - வேவ் இயக்கத்தின் தாக்கத்தை வங்காள படைப்பாளர்களிடம் காணமுடியும். அதையும்தாண்டி வெளியே இது சென்றுள்ளதா எனத் தெரியவில்லை. நான் எந்த பள்ளியிலும் எனை இணைத்து கொள்ள விரும்பவில்லை. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் சூழலைப் பற்றி எனக்கு தெரியவில்லை

6. நமது இந்திய படங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள். குறிப்பாக இந்திய புதிய அலை இயக்கம் வெறும் கூச்சலை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக கருது கிறீர்கள...? 

நான் மிக அரிதாகத்தான் சினிமாக்களை பார்க்கிறேன். 1947க்கு பிறகு நான் ஹிந்தி படங்களையே பார்த்ததில்லை. இருப்பினும் பிமல்ராய், - - B.. சோப்ரா, ராஜ்குமார், மெகபூப்கான் ஆகியோரை எனக்கு பிடிக்கும். இந்த மீடியத்தை நன்கு உணர்ந்தவர்களுள் பிமல்ராயும் ஒருவர். இவர்தான் எனது குருவும் கூட. தனதுநயாடெளர்' படத்திலிருந்து தீவிரமான கருத்தோட்டமுள்ள படங்களை பி.ஆர்.சோப்ரா இயக்கி வருகிறார். இப்போதெல்லாம் வங்கத் திரைப்படங்களில் எவ்வித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. பொருளாதார ரீதியாக நலிந்து கொண்டிருக்கும் வங்கத் திரை உலகம், ஹிந்தி படங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் தவறில்லை. நான்கூட ஒரு போஜ்பூரி படம் ஒன்றை இயக்கப்போகிறேன். நமது புதிய இயக்குனர்களும் தரம் தாழ்ந்து சேற்றில் அமிழ்ந்துபோய் எப்போதும் கண்ணிரையும், Horse Opera வையுமே வழங்குகின்றனர். கல்கத்தா ஒரு தரிசு நிலமாகவ்ே மாறி வருகிறது. ஒரு சிறு பையனை கூட இங்கு என்னால் கோடிட்டு காட்ட முடியவில்லை. ஆனால், பாம்பேயிலும், கேரளாவிலும், காஷ்மீரிலும், ஏன் அஸ்ஸாமிலும் கூட துடிப்பான சில இளைஞர்களை பார்க்க முடிகிறது. ஷியாம் பெனகல், குமார் ஷகானி, மணி கெளல், பூனாவிலிருந்து சத்யதேவ் துபே, சத்யூ ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் நம்பிக்கையூட்டுகிறார்கள். இன்றைய வியாபார சூழலின் பிடியில் சிக்குண்டு வங்காளத்தில் முன்பு நிலவிய அறிவார்ந்த இயக்கங்களெல்லாம் தடுமாறுகின்றன. மணிகெளவிடம் சிறிது ஒருதளப்பார்வையும் எப்போதும் வார்த்தைகளின் மீதான காதலும் இருந்து வருகிறது. குமார்சகானி எனது மிகச்சிறந்த மாணவன். நம்மையே நிலைகுலையச் செய்யும் வண்ணம் சிறந்த படங்களோடு அவன் உருவாகுவான்

எனது மாணவர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் கையில் காமிராவை எடுத்துகொண்டு நகரத்து தெருக்களுக்கு செல்லுங்கள் என்பதுதான். நகரவாழ்க்கை ஏராளமான கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பம்பாய் எண்ணற்ற வாழ்வியல் கூறுகளில் தோய்ந்த மிகப்பெரிய அழகான நகரம். 1961 ல் வெளிவந்த Portrait of a City யை விட நல்ல படங்களை இங்கு நம்மால் தயாரிக்க முடியும்

7. சத்யஜித்ரேயை பற்றிய உங்கள் பார்வை....? 

சத்யஜித்ரே ஒரு தேசிய கலைஞன். இந்திய சினிமாவுக்கு ஒரு கெளரவத்தை ஏற்படுத்தியவர். நமது தேசத்தின் பெருமிதமும் அவர்தான். ஆனால், எதிர்காலத்தில் அவர் திரைப்படங்களை எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். பெரும்பாலான வங்கத்து இயக்குனர்களிடம் ரே' யின் தாக்கத்தை காண முடியும்.மேலே போய்விடும். ஆனால் சினிமாவை பற்றிய எனது பார்வை அவரிடமிருந்து  வேறுபட்டிருப்பதால் என்னிடம் அவருடைய தாக்கத்தை காணவே | | முடியாது.  

8. வங்கமொழியில் o: மட்டுமே சினிமாவை படைப்பேன் என் திடமாக நம்புகிறாரே...? 

ஒரு மொழியிலுள்ள மிக நுட்பமான வேறுபாடுகளை கூட தெரிந்த ஒருவரால்தான், அம்மொழியில் சிறந்த படங்களை உருவாக்கமுடியும். இதன்மூலமே இயக்குனர் அப்படத்திற்கும் மொழிக்கும் நேர்மையாக இருக்க முடியும்

9. உங்களது பெரும்பாலான படங்களில் ரவீந்திர சங்கீத் முக்கிய இடத்தை வகிக்கிறது. தாகூரிடம் மட்டும் ஏன் இந்த அபரிமிதமான பக்தி. மேலும் அவரை நீங்கள் ஒரு மிகையான ரொமாண்டிக்காக பார்க்கவில்லையா

அவர் இல்லாவிடில் நான் இல்லை. என் பிறப்பிற்கு முன்பேயே எனது உணர்வுகளை தடுத்தாட் கொண்டவர் அவர். அவரைப் போய் ரொமாண்டிக்' என்று சொல்கிறீர்களே. அவர் பல்வேறு வடிவங்களை எடுத்தவர். அவரின் "சதுரங்கா படித்துள்ளீர்களா? அவர் புதிர் நிறைந்த ஒரு உலோகாயாதவாதி. ஒரு குறும்புக்காரராக, கலகக்காரராக தெருவோர மக்களின் மொழி நடையிலும் எழுதியுள்ளார்
 நீங்கள் ஒரு விசித்திரமான பொம்மையை கடைகளில் பார்த்திருக்கக் கூடும். அதில் உள்ள ஏணி ஒன்றின் உச்சியில் சிறிய குரங்கு காணப்படும். பொம்மையை மேல்நோக்கி பிடிக்கும்போது குரங்கு கீழே வந்துவிடும். தலைகீழாக பிடிக்கும்போது குரங்கு - - to L = நம்நாடு பல்வேறு மொழிகளை கொண்டுள்ளது
பல வடிவங்களில் பல்வேறு வகைகளில் தனக்கே உரித்தான ஒரு அரசியலை எப்போதும் கொண்டுள்ளது. ரவீந்திரநாத் இந்த குரங்கு பொம்மையை போன்றவர். அதனால்தான் அவரை Performing Monkey of Bengali Literature என்கிறோம்.. அவரைத் தவறாக புரிந்துகொண்ட சிலர் 'ரொமாண்டிக் என்ற லேபிளை அவர் மீது ஒட்டிவிடுகிறார்கள்

10. உங்களது படங்கள் தீவிரமான அரசியல் உணர்வை வெளிப்படுத்துவதால், இந்தியாவின் முதல் அரசியல் சினிமா இயக்குனர் என்று உங்களை பலர் அழைப்பது உண்மைதானா..? 

எனக்கு தெரியாது. இம்மாதிரியான கேள்விகளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். நான் யார் என்பதை எனது மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ஒரு அகன்ற தளத்தில் வைத்து பார்க்கும்போது, எல்லா படங்களுமே, எல்லா கலைகளுமே, கலைஞர்களும் கூட அவர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு அரசியலுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு வர்க்கத்தை சார்ந்து இயங்குகிறார்கள். சினிமா தாக்கத்தை காணமுடியும்

11. நமது புராண இதிகாச மரபு உங்களையும், பொதுவான நோக்கில் இந்திய சினிமாவையும் எவ்வாறு பாதித்துள்ளது..? 

நமது வீரகாவிய மரபு - -> (Epic Tradition) இந்திய எப்போதுமே ஆக்ரமித்து வருகின்றன. நமக்கான ஒரு நீண்ட பாரம்பரியத்தின் வேர் பிரக்ஞைபூர்வமாகவே நம்முள் இயங்கி வருகிறது. நானும் இதில் ஒர் அங்கமாதலால் மக்களின் நம்பிக்கைகளிலிருந்து எளிதில் என்னால் விடுபட முடியாது. ஒரு நாட்டுப்புற வடிவத்தில் (Folk Form) என் படங்களில் இவற்றை பயன்படுத்துகிறேன். நம்மிடம் செழுமையான இசை வடிவமும் உள்ளது. ரவிசங்கரும் நானும் பல இடங்களுக்கு சென்று பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பதிவு செய்துள்ளோம். சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வாய்மொழி வரலாற்று பாடலை எனது படத்தில் பயன்படுத்தியுள்ளேன். சச்சின்தேவ் பர்மன் கூட நாட்டுப்புற பாடல்களை பதிவு செய்துள்ளார். அவைகளெல்லாம் நமக்கு ஒரு கருவூலம். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் ராம்லீலா விழாவைக் காண கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ராம்லீலாவின் ஒவ்வொரு காட்சியிலும் பேசப்படும் வசனங்களை மக்கள் துல்லியமாகவே அறிவார்கள். இருப்பினும், அந்நிகழ்ச்சியை எப்படி வழங்குகிறார்கள் என்பதை காண்பதற்காகவே மக்கள் வருடாவருடம் செல்கின்றனர்
 நம் இருப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு தாயின் அன்பான உருவம் இருவேறுநிலைகளில் நம் கூடவே பயணித்து வருகிறது. இக்கருத்தையே எனது 
மேகதக்க தாரவிலும், Jukti Takko Ar Gappo படத்திலும் பயன்படுத்தியிருப்பேன்._, 

12. பார்வையாளர்கள் உண்ர்வுபூர்வமாக சினிமாவின் கதாபாத்திரங்களோடு தங்களை பொருத்திப் பார்க்கும் பழைய மேட்டுக்குடித்தனமான, மாயையை உடைத்தெறிந்துவிட்டு இயக்குனர் நேரடியாக மக்களோடு பேகம் நவீனத்துவத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? 

மிகப் பழங்காலந்தொட்டே இப்போக்கு நிலவி வருவதால் இதில் நவீனத்துவம் என ஒன்றுமில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏதென்சில் பிறந்து வாழ்ந்து மறைந்த அரிஸ்டோபேன்ஸ் _ படித்துள்ளீர்களா. இதுபோன்ற பல உத்திகளை அவர் அப்போதே செய்துள்ளார். ழான் லுக் கோடார்ட் போன்றவர்கள் தற்போது இதை செய்து வருகிறார்கள். நமது புராதன கலை வடிவங்களில் படைப்பாளரே பார்வையகம்களோடு ஒரு புதிய உத்தியில் உரையாடியுள்ளார்கள். நமது ஜாத்ராளின் அடிப்படை கொள்கையே இதுதான். கலையில் நவீனம் என்று எது வு ேம யி ல் ைல. - _ரு ப் பி னு ம் ல் | ற் றி லு ம் வீ த் ன் ைம காணப்படுகிறது. தான் புதுமையான ஒன்றை செய்துவிட்டோம் என்று கூறி ஒருவர் தன்னையே மார்தட்டி கொண்டால், அவர் ஒரு முட்டாள். மேலும், முட்டாள்களின் - . சார் க் கத் தி ல் தா ன் o அவர் வாழ்வதாக கருதப்படும். கலை நாளுக்கு நாள் ஒரு புதிய வடிவத்தை எடுத்தவாறே முடிவற்ற வெளியை நோக்கி ஜனிக்கிறது. எல்லா உத்திகளுக்குள்ளும் ஆட்பட்டு, தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளுக்குட்பட்டு முற்றிலும் வெறுமையான பின்னும் கலை தொடர்ந்து எங்கோ ஒரு புள்ளியில் நீடித்து வருகிறது. நாம் அதனை ஒரு மறு - கண்டுபிடிப்பு மட்டுமே செய்கிறோம்

13. சினிமாவில் பாடல்களின் பங்கு பற்றி..? 

தொன்றுதொட்டே நமது எல்லா படைப்பாக்க செயல்களினூடாகவும் பாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இன்றைக்கு கனவு வியாபாரிகள் (Dream Merchants) சிலர் பாடல்களை தவறான நோக்கிற்காக பயன்படுத்துவது வேதனைக்குரியது. இசை நமது வாழ்வின் ஒரு பகுதி. மேலும், இசை என்பது நாடகத்தோடு உள்ளார்ந்த தொடர்புடையது. எனவே சினிமாவில் பாடல்கள் இடம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை. பாடல்கள் வலிந்து திணிக்கப்படாமல் கதையோட்டத்தினூடே மிக இயல்பாக அமைவதையே நான் விரும்புகிறேன். மேகதக்கதாரா வில் (1960) அற்புதமான மீனவர்களின் பாடல் ஒன்றையும், சுபர்ணரேகாவில் 8 பாடல்களையும் சேர்த்துள்ளேன். ஒரு வங்காள நாட்டுப்புற கதையை மையமாக வைத்து நான் எழுதியுள்ள ஸ்கிரிப்ட் ஒன்றில் வசனங்களே கிடையாது. மாறாக 2.5 பாடல்களும், கவிதைகளுமே அதில் இடம் பெறும். இதேபோல், காது கேட்காத வாய்பேச இயலாத மஹாராஸ்டிராவை சேர்ந்த "Koli' என்ற ஆதிவாசிப் பெண் குழந்தையை மையமாக வைத்து நான் எழுதியுள்ள ஸ்கிரிப்டில் பாடல்களும், வசனங்களும் சுத்தமாக கிடையாது. பின்னணி இசையும், இயல்பான சில சப்தங்களும் மட்டுமே அதில் இடம் பெறும். முதலில் வெளியான எனது 'அஜான்ட்ரிக்' படத்தில் பாடல்களே கிடையாது. அதற்கான தேவையும் படத்தில் இல்லை என்று நான் கருதினேன். சில சமயங்களில் பாடல் காட்சிகளே கூட அழுத்தமான விஷயங்களை பேசக் கூடும்

14. சர்வதேச அங்கீகாரத்தை பெறுமளவிற்கு இந்திய திரை உலகம் போதுமான நடிகர்களை உருவாக்கியிருக்கிறதா..? 

வெளிப்படையாக சொல்லப் போனால், நடிப்பு என்ற பெயரில் நடிகனின் மீதான அந்த நேரத்தைய - கவர்ச்சியும், _ கதாநாயக வழிபாடுகளையும் தவிர உருப்படியாய் வேறு எதையும் இங்கு காண மு டி வி ல் ைல_. டொஷிரோ மிஃபியூனே, Bondarchuk, s Giulietta Masina ஆகியோரிடம் காணப்படும் அபாரத் திறமை இந்தியச் சூழலில் சாத்யப்படுமா என்று . ரி வி ல் ைல . - க் கு ரு க் கு ம் , நடிகர்களுக்கும் பல விஷயங்களில் ஆழ்ந்த ஒத்துணர்வு தேவைப்படுகிறது. இது நம்மிடத்தில் இல்லாதது வருந்தத்தக்கதே. காமிராவின் ஆங்கிள், லைட்டிங், எடிட்டிங் போன்ற துறைகளிலும் ஒரு நடிகனுக்கு நுட்பமான பயிற்சி அவசியம். அப்போதுதான் பல பரிமாணங்களுடைய இத்துறையில் ஒருவன் சிறந்த நடிகனாக தேர்ச்சி பெற முடியும். நமது புகழ்மிக்க நடிகர்களும், நடிகைகளும் திரையில் கடுமையாக உழைப்பதை பார்க்கும் போது, ஒரு பணிச்சறுக்கு நீரோட்டத்தில் யானை, ஒன்று தொடர்ந்து நடனமாட முயற்சிப்பதைப் போன்ற காட்சியே எனது ஞாபகத்திற்கு வருகிறது. பெரும்பாலானோர் புகழடைவதற்கும், பணம் சம்பாதிப்பதற்குமான ஒரு களமாகவிே இத்துறையை தேர்ந்தெடுப்பது மிகக் கேவலமான ஒன்று. இதிலிருந்துதான் நமது எல்லா வீழ்ச்சியும் ஆரம்பமாகிறது

15. வியாபார நோக்கிற்காகவும், வெகுஜன மக்களின் பொழுது பேர்க்கிற்காகவும் மட்டுமே படம் எடுப்பதை விரும்பாத நீங்கள் பிரச்சாரரீதியிலான படங்களை விரும்புகிறீர்கள...? அடுத்ததாக, இதுவரையிலான உங்கள் படைப்புகள் மூலம் நீங்கள் கண்டடைந்த உண்மை என்பது என்ன..? - 

44 

இெை) அதேநேரத்தில், அழகியலோடு இருக்க வேண்டும். உண்மையாகவும் இருக்கவேண்டும்" என்று தாகூர் ஒருமுறை கூறினார். எது உண்மை? சாஸ்வதமான உண்மை என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு கலைஞனும் எளிதில் காலாவதியாகிவிடாமல் தனக்குள்ளே பெரும்பயணத்தை மேற்கொள்வதன்மூலமே உண்மையின் சாரத்தை கண்டடையமுடியும்
கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு வங்காளியான நான், சுதந்திரம் என்ற பெயரில் எனை சுற்றியுள்ள மக்கள்மீது வலிந்து திணிக்கப்பட்ட வன்முறையின் கொடுரத்தை நேரில் கண்டு அவஸ்தைப்பட்டேன். பாசாங்குத்தனமும்
பொய்முகங்களும் கோலோட்சிய அக்காலகட்டத்தில் எனது ஆத்மார்த்த வெளிப்பாடுதான் "Jukti Takko Ar Gappo" என்ற படமாகியிருந்தது. மேலும் "வர்க்கச் சார்பற்ற கலை" என ஒன்று இருந்ததில்லை. ஏனெனில் நமது சமூகமே அடிப்படையில் ஒரு வர்க்கச் சார்புடையதுதான் முடிவில் அது மனிதனையே சார்ந்து நிற்கிறது. எந்த ஒரு _ இறுக்கமான கொள்கையின் மீதும் எனக்கு பிடிமானமில்லை. ஆனால், அதே நேரத்தில் "மிகப்பெரிய இயக்குனர்கள்" என்று நாம் கருதும் சிலர் மிக மேலோட்டமாகவே மனித உறவுகளின் மேன்மையை பற்றி பலத்த சர்ச்சையை எழுப்புகின்றனர். அடிப்படையில் ஒன்றுமேயில்லாத இவர்கள்தான், புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு தங்கள் சமூக கடமையிலிருந்தும் படிப்படியாய் நழுவி விடுகின்றனர். அவர்களது பணி தங்களது ஸ்தாபனங்களின் கொள்கைகளை பூர்த்தி செய்வதாகவே அமைந்துவிடுகிறது
தங்களுக்கு எந்த கொள்கையின் மீதும் குருட்டுத்தனமான ஈடுபாடு கிடையாது என்று கூறுபவர்கள் ஒரு முகமூடி - அணிந்து கொண்டு முடிவில் தாங்கள் சார்ந்த நிறுவனத்திடமே தீவிரமாக இயங்குகிறார்கள். இவர்களை நான் முற்றிலுமாக வெறுக்கிறேன். சமூக வாழ்வில் வரும் ஒழுக்கமும், நேர்மையும் எனை இப்போது வேதனைக்குள்ளாக்குகிறது. குறிப்பாக இளந்தலை முறையினரிடத்தில் நமது மதிப்பீடுகள் அருகி வருகின்றன. எனது இந்த தார்மீக கோபம் தான் "Shey Bishinu Priya" என்ற எனது அடுத்த படத்தில் பதிவாக உள்ளது
 16.நீங்கள் 8 திரைப்படங்களையும் (Feature Films) 10 க்கும் மேற்பட்ட குறும்படங்களையும் இயக்கியுள்ளீர்கள். இவற்றுள் உங்களுக்கு பிடித்தமானது எது - ஏன்
 இதற்கு பதில் சொல்வது மிகவும் கடினமானது. ஆனால், இன்றுவரை ஒரு நான்கு படங்கள்தான் எனக்கு திருப்பதியளிக்கிறது. செறிவான வெளிப்பாட்டு முறையிலும் சில தொழில் நுட்ப சாதனைகளினாலும் Ajantrik எனக்கு பிடிக்கிறது. ஆழ்ந்த தத்துவார்த்த கருத்துகளை தாங்கியதாக சுபர்ணரேகாவை கருதுகிறேன். கவித்துவ அழகு நிரம்பிய பெங்காலிய கிராமிய வாழ்வின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கட்டுரையாகவே 'Titas Ekti Nadir" படம் அமைகிறது. பருவகாலங்களில் கடுமையாக உழைக்கும் நாட்டுப்புற உழைக்கும் மக்களின் கதாபாத்திரங்களை இதில் இயல்பாக சித்திரித்திருந்தேன். நான்காவதாக "கோமல் கந்தாரில் இயல்பான கதையோட்டமும், பரிசீலனைக்காக நான் முன்மொழிந்திருந்த ஒரு கருத்தோட்டமும் ஏறத்தாழ நான்கு நிலைகளில் ஒரு சேர இயங்கியது குறிப்பிடத்தக்கது

17. செக்ஸ், நிர்வாணம் மற்றும் முத்தக் காட்சிகள் போன்றவை சில படங்களிலும் நாடகங்களிலும் இடம் பெற்று அவை நியாயப்படுத்தப்படுகின்றன. இது பற்றிய உங்களது பார்வை என்ன....? 

குழந்தைத்தனமான கேள்வியையெல்லாம் என்னிடம் கேட்கிறீர்கள். நான் இவைகளை ஆதரிக்கவுமில்லை. தங்கள் சக்தியை செலவிடுவதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கலையில் எல்லாமே மதிப்பிடப்படுகிறது. ஆனால், கலை என்ற பெயரில் இதை வியாபாரமாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. அதே சமயத்தில் இந்தியப் பண்பாட்டின் பாதுகாவலர்களே தாங்கள்தான் என்று மார்தட்டிக்கொள்ளும், மூர்க்கத்தனமான பழமைவாதிகளிடம் நான் வேண்டு வதெல்லாம் தயவு செய்து, நமது பண்டைய கோவில்களுக்கும், புராதனமான குகைகளுக்கும் சென்று வாருங்கள் என்பது தான். நமது முன்னோர்கள் எவ்வித விகல்பமுமின்றி இதனை அற்புதமாகவே பதிவு செய்துள்ளனர். எதையும் லாப நோக்கோடு பொருத்தி பார்க்கும் இன்றைய சூழலில் இது பற்றிய பார்வை என்பது அவரவரின் மன உலகைப் பொறுத்தே அமையும் இந்த எலிப்பந்தயத்தில் என்னை நான் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை

18. சினிமா, நாடகம் என்ற இரண்டு மீடியாவிலும் நீங்கள் பணியாற்றியுள்ளதால் இரண்டுக்குமிடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடாக எதை கருதுகிறீர்கள்...? 
 ஒரு நல்ல சினிமா என்பது அதனுடைய எடிட்டிங்கைப் பொறுத்தது. நேரத்தின் நுட்பத்தை ஒருவர் முன்கூட்டியே திட்டமிடத்தெரிந்தால்தான் இது சாத்யம். இந்தியாவில் சத்யஜித்ரே மட்டுமே இதை கடைபிடித்திருந்தார். மேலும் திரைப்படம் என்பது பல்வேறு இயந்திர ரீதியிலான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளதால் திடீரென தோன்றும் கற்பனைகளுக்கோ, உந்து சக்திகளுக்கோ இங்கே இடமில்லை. இயக்குனர் என்பவர் சினிமாவில் ஒருசர்வாதிகாரி போலவே செயல்பட வேண்டியுள்ளது. நாடகத்தில் மேடையை நிர்வகிப்பதற்கென்றே ஒரு ஸ்டேஜ் மேனேஜர் இருக்கிறார். திரைவிலகியவுடன் நடிகர்கள்தான் நிகழ்த்துபவராக மாறுகிறார்கள். இயக்குனர் ஒரு ஓரத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை உற்றுநோக்குவதோடு சரி. :என் வாழ்வின் கடைசி கட்டத்தில் மீண்டும் நான் "தியேட்டர் பக்கமே கவனம் செலுத்துகிறேன். ஏனெனில், இது எனக்கு ஒரு அறிவார்த்தமான பயிற்சியாகவே படுகிறது. வேறு எந்த மீடியத்தையும் விட நாடகத்தில்தான் எழுத்தாளருக்கும், பார்வையாளர்களுக்குமிடையே ஆரோக்கியமான பரிமாறு தலுக்கான தளம் அமைகிறது. எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், தெம்பையும் ஊட்டுகிறது. பிரெக்ட் என்னிடத்தில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதால் ஆங்கிலத்திலிருந்து அவருடைய சில நாடகங்களை வங்காளத்தில் மொழி பெயர்த்துள்ளேன். “Organon" என்ற அவருடைய _ தியரிட்டக்கல் எழுத்துக்களை யெல்லாம் தொடர்ந்து வாசித்து வருகிறேன்

19. அகதிகளின் பிரச்சனை உங்களது பெரும்பாலான படங்களில் தவறாமல் இடம்பெறுகிறது பங்களாதேசில் வைத்து நீங்கள் தயாரித்த "Ttas Ekti Nadir Naam" என்ற 
படத்தில் நேரடியாகவே இப்பிரச்சனையை கையாண்டுள்ளீர்கள்...? 

நானும் ஒரு அகதிதான். இதை என்னால் மறக்கவே முடியாது. பிரிவினையும் அதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் கொடுரமும் ஆறாத வடுவாய் என் ஞாபகங்களில் புதைந்திருக்கிறது. நேரடியாக நான் இதில் பாதிக்கப்படாவிடிலும், வேறொரு தளத்தில் உணர்வுரீதியாக நான் ஒடிந்து போயிருந்தது உண்மை. உங்களுக்கு வேண்டுயனால் _ இது "அகதிகளின் பிரச்சின்ை" என்ற ஒரு அன்றாட செய்தியாகப் படலாம். ஆழ்ந்த அதிர்வை எனக்குள் ஏற்படுத்திய இந்நிகழ்வை, நான் ஒரு "பண்பாட்டுப் பிரிவினை" என்றே கூறுவேன். வங்கப் பிரிவினையின் போது போலியான தற்பெருமை பேசியவர்களையும், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று கூக்குரலிட்டவர்களையும் நினைக்கும்போது அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. தேசவிடுதலை என்ற பெயரில் அப்போது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்தான் நடந்தது. மக்களின் மாறிவரும் மனோபாவங்களையெல்லாம் இப்போது நான் அமைதியாய் கவனித்துக் கொண்டிருக்கிறேன்

உணர்வால் எனை ஆட்கொண்டிருந்த வங்காளம் மெல்ல மெல்ல விலகிப் போவதை கண்கூடாகப் பார்க்கிறேன். பிரக்ஞைபூர்வமாகவோ, பிரக்ஞையற்றோ எனது வலிகளும் துக்கங்களும் திரைப்படமாக வெளிப்படுகின்றன. _ பொருட்களைக் கூவிக்கூவி விற்பவனின் மன நிலையோடோ அல்லது எங்கோ ஓரிடத்தில் அமைதியாகவோ எனது படங்கள் அதற்கான லயத்தில் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. சுற்றியுள்ள வெறுமையும் விரக்தியும் _ என சந்தோஷத்தை கலைத்துவிட்டன. நான் இப்போது மிகவும் சோர்வடைந்து விட்டேன்

தமிழாக்கம் - மு. இசக்கியப்பன் 

 கே.சி.எஸ்பணிக்கர் குறித்த ஒரு விவரணப் படத்தை ...
சென்னைக்கருகிலுள்ள ஈஞ்சம்பாக்கத்தில் சோழமண்டலம் எனும் ஒவியர் கே.சி.எஸ். பணிக்கர் குறித்த ஒரு விவரணப் படத்தை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. P.K. சீனிவாசனின் இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்படம் பணிக்கரின் வாழ்வியல் வரலாறு குறித்த ஒரு அறிமுக ஆவணம்

பணிக்கர் இருபதாம் நூற்றாண்டு இந்திய ஓவியர்களில் பிரதானம் வாய்ந்தவராக கருதப்படுகிறவர். 1930களிலேயே இளம் ஓவியராக கலையுலகில் பிரபலமடைந்த அவரது ஆரம்பகால ஒவியங்கள் பெரும்பாலும் நீர் _ வண்ண ஒவியங்களில் இடம் பெற்ற மனித முகங்கள் இறுக்கம் நிறைந்த சமூக விளைவுகளாக தம்மை இனம்காட்டுபவை. ஒரு உற்று நோக்கவில், அவை நமது முகங்களாக தென்படும். மன அதிர்வும் நம்முள் அலையடிக்கிறது. அவரது பல ஒவியங்களில் கேரள நகரங்களின் மனிதக் கூட்டங்களும், கால்வாய்களும், தென்னை மரங்களும் இடம் கண்டுள்ளன. முக்கியமாக, "பொன்னாணி என்னும் கேரள கிராமத்தின் நிலவெளிகளைச் சித்தரிக்கும் அவரது நீர் - வண்ண ஒவியங்கள் நமது இளம் பிராயத்தின் கிராம உலகினை நிறம்விரித்து 

மலபார் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒவிய கிராமத்தை பணிக்கர் உருவாக்கினார். இது அவரது ஓவிய ஈடுபாட்டின் மிகப்பெரும் 1977-ல் ஒர் பலருக்கும் தருகிறது
சாதனை. Artrends எனும் இந்திய ஓவியத்திற்கான இதழையும் வெளியிட்டு வந்தார்
சென்னையில் பணிக்கர் காலமானார். பணிக்கர் குறித்த ஒரு அறிமுகப் பதிவைத் தரும் இந்தக் குறும்படத்தில் அவரது ஒவியங்கள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. பணிக்கரின் ஒவியம் பார்த்திராத ஒவியக்கண்காட்சியைக் ஏற்படுத்துகிறது. பிரதானமாக Mother and Child ஒவியத் தொடர்கள் அதனது தாய்மை சுரக்கும் உணர்விழகில் மிக ஆழமான பாதிப்பை பார்வையாளனுக்குத் காணும் மனஎழுச்சியை இப்படம் இப்படத்தில் நிறைய ஒவியங்கள் இடம் பெற்றிருந்தாலும், அவரோடு பழகின. சந்தித்த சக ஓவியர்களின் கருத்துக்கள் இல்லாதது குறைபாடாகவே உணர்ந்தேன். அவரது உறவினர்களிடமும்
நண்பர்களிடமும் _ கருத்துக்கள் கேட்டிருந்தால், பணிக்கரின் ஓவிய ஆளுமைக் குறித்த முழுமையான வரைபடம் நமக்குக் கிடைத்திருக்கும்.இப்படம் ஒரு ஒவியரைப் பற்றிய அறிமுகப்பதிவு எனும் விதத்தில் வரவேற்கப்பட வேண்டியதாகிறது. பணிக்கரின் ஒவியங்களுள் 23 நிமிடங்கள் வலியேற்றுகிறது
வாழ்ந்து அலைந்த உணர்வை இப்படம் அளித்தது. தமிழகத்திலும் முதிய கலைஞர்கள் குறித்த ஆவணப் படத்தின் அவசியத்தை இப்படம் நம்முள் மேலும் ஞாபகமாக .....