தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, May 12, 2016

உற்பத்தி - சு. வேணுகோபால் : நிகழ் 32

www.padippakam.com

சிறுகதைகள் :

உற்பத்தி சு. வேணுகோபால்

சேவா நிலையத்தில் கிருஷ்ணவேணியைப் பார்த்துவிட்டு வந்தபின் கிணறு தோட்டம் பற்றின தொந்தரவுகள் நிழல்போல் துரத்த ஆரம்பித்துவிட்டன. ஒவ்வொருத்தர் வாழ்விலும் ஒரு பொருள் அல்லது இடம் அந்யோன்யத்தோடு தெரியாமலே இயங்கி வந்திருக்கிறது. சின்னான் ஓடைக்கு வடக்கு இருக்கும் தோட்டத்தை 'சாமிக்கிணறு' என்று ஊர்க்காரர்களும் வீட்டில் 'சாமித் தோட்டத்தில வேலை" 'சாமி தோட்ட மோட்டார் ரிப்பேர்’ என்றோ அதன் நிகழ்வு சார்ந்து பேசிக்கொள்வோம். இங்கு எல்லோருக்கும் கிணற்றுப் பாசனம் தான். நைனா வரப்பில் செருப்பை கழற்றி வைத்துவிட்டுத் தான் முருச வாய்க்காலில் இறங்குவார். செருப்பு போட்டால் கத்தரி செடியில் சூத்தை விழுமாம். 'நம்ம நடக்கிற மொறையிலதா பூமாதேவி பூரிப்பு கொள்றா_ நைனா பேச்சில் அது சந்தோச நிலம்.

வாயைக் கொப்பளித்துவிட்டு வராந்தாவில் வந்து உக்காந்தேன். சோபாவில் சாய்ந்திருந்த நைனா 'கோபாலா, ஈசான மூல வாங்கு செவ்வெளனி மரத்த கால வாசலுக்கு நூத்தம்பது ருவாய்க்கி வெல பேசிட்டேன். இன்னிக்கு வெட்ட வர்றேன்னான் சொன்னார், சொல்லியதிலும் கேட்டதிலும் அதிர்வு இல்லாமலே போய்விட்டது. குருத்து முறிந்து நான்கு நாள் ஆகிவிட்டது. 'பக்கத்துத் தோட்டக்காரன் செய்வென செஞ்சிருக்கணும். அவன் வெளங்குவானா? தொளங்கு

நி-22

வானா...' அம்மாவின் சாபத்தோடு சாப்பாடு தட்டு வந்தது. எதையும் தீர விஜாரிகிக்காம கண்ட மேனிக்கி மொணங்காதம்மா?" அதட்டிவிட்டு சாப்பாடு தட்டை இழுத்தேன். தலைவாசலுக்கு வந்த மனைவி அழும் குழந் தையை 'லோலே அட இந்தா... இந்தா... இந்தா வந்திட்டேன் கண்ணே. குரல் கொடுத்துக் கொண்டு மறுபடியும் அறைக்கு ஓடிவிட்டாள். நைனா தோட்டத்துக்குக் கிளம்பி போவது தெரிந்தது.

மேலு காலெல்லாம் சில நாட்களாக ஊரல் எடுக்கிறது. உள் உதடு ரணமாக இருக்கிறது. "மசாலெ ஏம்மா இப்பிடி அள்ளிப் போடுற வாய் முணுமுணுக்க எத்தனித்தாலும் வாய் புண்ணுக்கு அம்மாவின் சமையல் என்ன செய்யும்.

தள்ளிமுள்ளி சாப்பிட்டுவிட்டு கைகழுவிய வண்ணம் கொட்டத்தை எட்டிப்பார்த்தேன். அந்த வெள்ளாடு ரோமங்களையெல்லாம் உதிர்ந்து குருரமாக மெலிந்துபோய் அசை போடாமல் கண்கள் சொருக நின்று கொண்டிருந்தது. சதை ஒரு பணிக்கட்டியா? கொழுத்திருந்த ஆடு மூன்றுமாத செனையைக் கரைத்து தன் சதையை உருக விட்டுவிட்டது. ரோமமற்று சிரங்குபிடித்தத் தோலை போர்த் திக்கொண்டு துரும்பாக நிற்பதைப் பார்க்கும் போதெல்லாம் ஏண்டா பார்த்தோம் என்றிருக்கிறது.

டி.வி. மேல் இருந்த சீப்பை எடுத்து அலமாரி கண்ணாடியைப் பார்த்து சீவ நின்ற போது கண்ணாடிக்குள் என் மனைவியின் முதுகு கண்ணாடியில் திரும்பி முதுகைக் காட்டியபடி போர்வையை உதறினாள். கண்ணாடியில் உருவம் மறைய திரும்பி னேன். போர்வையை எடுக்க குழந்தை தொட்டியில் தொங்கும் அறைக்குப் போவது தெரிந்தது. என் மனைவிதான் அன்று கிருஷ்ணவேணியைப் பற்றி சொன்னது இதே மாதிரி தருணம் தான். மீசையை ட்ரிம் செய்து கொண்டிருந்தபோது என்ன ஏது என்றில்லாமல் பாதியில் ஒளிகல்லை உருவி போட் டது கணக்கா 'ஒங்க தங்கச்சியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போனா என்ன என்றாள். அப்போதும் பேசாமல் மீசையை வெட்டிக் கொண்டிருந்தேன்.

நிகழ் 189

படிப்பகம்

________________

www.padippakam.com

'சொல்றது காதில விழலையா?"

'விழுது அவளுக்கென்ன? :

'ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போகச் சொன்னா என்ன எதுக்குன்னு தொழாவிக் கிட்டு..."

எனக்கு திக்கென்றது. திடுதிப்பென்று கேட்டதும் ஏதும் தகாத உறவு? மாசமாயிட்டாளா?. இப்படித்தான் மனசை ஏதோ ஒன்று இந்த பகுதிக்கு இழுத்துக்கொண்டு ஓடியது. கோவத்தில் கத்தரிக்கோலை வீசினேன். அது என் மூத்த மகனின் ஸ்கூல்பை அருகில் போய் விழுந்தது. வெண்ணெ என்னான்னு கேட்டா... நாக்கைத் துருத்தினேன். அந்தளவிலே மூடுங்க அசால்டாக சொல்லிவிட்டு திறந்திருந்த கதவை சற்று தள்ளிவிட்டு வந்தாள்.

மேலுகாலெல்லாம் கட்டிகட்டியா வீங்கி யிருக்கு 'தன் இடது முலையைத் தொட்டுக் காட்டி இதுல வெண்குஷ்ட மாதிரி படர்ந்திருக்கு, நெஞ்சுக் கெடயில கட்டி ஒடஞ்சு தண்ணியா போகுது. நீரேத்தமோ என்னமோ? அழுகின முட்டவார்ட்பிட்டாணியைத் தொட்டு இங்கன கட்டி பழுத்து ஒடையற நெலமயில இருக்கு."

சொல்லச் சொல்ல ரோமக் கண்கள் கருக்கிட்டது. 'இதெல்லாம் மொதல்லயே சொல்லக்கூடாதா? அம்மாவுக்கு தெரியுமா?" 'ஒங்க அம்மாவுக்கு தெரியாது ஆட்டுக்குட்டிக்கும் தெரியாது. ராத்திரி என்ன கிருஷ்ணவேணி ரெண்டு முனு நாளா பேசாம் உம் முன்னு இருக்கண்ணு கேட்ட பின்னாடிதான் சொல்லிச்சு இதற்குப் பின்புதான் கடிா புடா வென்று கதாபித்து திண்டுக்கல் சேவா நிலை த்துக்குக்கொண்டு போனது.

கிருஷ்ணவேணி வாழாவெட்டியாக குடும்பத்தோடு இருக்கும்படியாய் ஆகிவிட்டது. அவனோடு வாழ முடியாமல் போய்விட்டிதே என்று கவலைகூட இல்லை. இளம் வயதில் எங்களை நம்பி மருகும் இவளுக்கு இப்படியொரு நோய் வந்துவிட்டதே என்கிற கவலைதான் நைனாவுக்கு சேவா நிலையத்

நிகழ் 170

திற்குப் போன பின்பு மணிக்கட்டில் பெறப் பட்ட கவலை முந்தா நாள் போய் பார்த்த போது நீராக வடிந்து கொண்டிருந்தது. புஜத்தை அமுக்கினால் மணிக்கட்டில் நீர்ச் சலம் கசிந்தது. முகமெல்லாம் கவலை புதிது புதிதாய் தோன்றிவிட்டது. ஊதிய மேகங்களோடு அங்கு ஒத்தையில் உட்கார்ந்திருக்கிறாள்.

எங்கள் தோட்டத்தையும் தொழிற்சாலையையும் பிரிப்பது சின்னான் ஓடைதான். ஓடை வழியாக நடந்து கிணத்துமேடு ஏறும் வரை மூக்கை பொத்திக் கொண்டுதான் போகணும் ஓடைக்கருகில் சிமிண்டால் மூடி யிருக்கும் கழிவுநீர்க் கிணறு அகலகலமானது. அதில் ஏறி நின்று பார்த்தால் வரிசை வரிசை யாக பெரிய பெரிய இரும்பு கொக்கிகளில் மாட்டுத் தோல்கள் வெளவால் கணக்கா தொங்கிக் கொண்டிருப்பது தெரியும். இப் போது தொழிற்சாலைச் சுற்றி முள் கம்பி வேலி போட்டுவிட்டார்கள்.

அந்தக் காலத்தில் கமலை வைத்து 108 கிணறளவு கொண்ட செவ்வகமாக வெட்டப்பட்ட கிணறு அது. ஊருக்கே மொத கிணறு என்பார்கள். சுத்துப்பிரகாரம் முழுக்க அப்புக்கல் வைத்து கட்டியிருக்கிறார்கள் மதி லோரமாக சுற்றிச் சுற்றி கீழிறங்கும் படிக் கட்டுகள் சுவரோரங்களில் ஈரநேமல் எப் போதும்.

மாரியம்மன் மொளப்பாரி ஊர்ச்சுற்று விழா முடிந்ததும் அந்தக் கிணற்றில்தான் இறங்கிப் போடுவார்கள். இறப்புச்சடங்கிற்கு நீர் மாலை எடுப்பார்கள். என் சின்ன வயசில் நைனா 'இங்கு குளிக்கக் கூடாது ஆகாது" என்பார். இது நைனாவுக்கு நைனா சொல் வியதாக இருக்கும். ஆனாலும் களவாணித் தனமாக எல்லோரும் கமலையிலிருந்து குதித்து குளிப்பது நிற்கவில்லை. ஊர்த் சாமிக்கிணறு என்றாலும் நிறைய பேர் எங்கள் கிணற்றில்தான் நீச்சல் பழக வருவார்கள். அது என் மகனோடு முடிந்து விட்டது போலும்.

எப்போது போய் எம்டிப் பார்த்தாலும் கவரோரங்களில் நீர்முத்துகள் இடைவிடாது விழுந்து கொண்டிருக்கும். ஒடிைக்குள் பாதி

படிப்பகம்

________________

WWW.padippakam.Com

வந்துவிட்டால், கிணற்றின் சலவைச் சத்தம் கேட்கும். நீர்க்காம்புகள் முளைத்த கிணறு. இது ஒரு காமதேனு. தொவைக்க வருபவர்களை "சுத்த பத்தமா இருக்கணும் இப்படி வந்து அணியாயம் பண்றீங்களே" அம்மா சத்தம் போட்டாலும் அது தன் பளிங்கு நீரை வாளி இறைத்துக் கொண்டுதான் இருந்தது. பனிகொட்டும் மார்கழி மாதத்தில் விடியக் காலை கேப்பை வாசத்தை நுகர்ந்தபடி ஓடுவோம். வாசியிறைக்கும் மோட்டார் ரிேல் தலை வைத்தால் வெதும்பலாக இருக்கும். உடலில் ஆவி பறக்கும். குளிராது. வரப்பு புல்களில் ஜில்லிடும் உயிர்ப்பாக இருக்கும். நீரைப்போன்ற ஜீவக்களை ததும்பும் திரவம் வேறு உண்டா? அகமும் புறமும் இதங்கள் முளைத்த எங்கள் நிலம் மெல்ல மாறியாகி விட்டது. வள்ளுவன் என்னவானான்?

தோல் பதனிடும் தொழிற்சாலை வந்த பின்னாடி கூட எட்டு மாதம் கிணற்று நீர் நன்றாகத்தான் இருந்தது. பூமியின் அடி யாழத்தில் ஒளிந்திருக்கும் சூதாடிகள் யார்? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இடை விடாது சுரக்கும் காமதேனு காம்புகளில் லேசான மஞ்சல் கலரில் வலிய ஆரம்பித்தது. நீரோட்டங்களை கற்பழித்துக் கொண்டிருக் கும் அரக்கன் தெரியவில்லை. அல்லது பூமா தேவியே இந்த விபச்சாரத்திற்கு பழகிக் கொண்டாளா? பழகும்படி ஆகிவிட்டதா? அதன் நரம்பு மண்டலங்களுக்குள் கிருமிகளை நுழைப்பது தெரியவில்லையா? தேவியின் சக்தி தான் என்ன! ஒரு நிலநடுக்கம்-ஒரு பூகம்பம்-ஒரு எரிமலை-ஏதாவது ஒன்று போதும். மறுபடியும் ஜீவன்கள் நோயில்லாமல் வாழ.

குளிக்க வருபவர்களுக்கு முதலில் லேசான அரிப்பு ஏற்பட்டது. ஊருக்கே இது விநோதமாகப்பட்டது. மாரியின் சாபமோ? அம்மா பயந்து போய் மந்திரித்து சுருளித் தீர்த்த நீரை கூஜாவில் கொண்டுவந்து ஊற்றிவிட்டார். விடியும் நீர்துளிகளில் நுரை யோடு கூடிய மூத்ரகலர் அதிகரிக்கத்தான் செய்தது. கிணற்றிலிருந்து எழுந்த துர் நாற்றம் நீராடலை நிறுத்திவிட்டது.

கிருஷ்ணவேணி சேவா நிலையம் போன பின் பூச்சித்தேவர் இறந்தார். சாயந்திரம் வரை யாரும் அதைப்பற்றி யோசிக்கவில்லை. நாலுமணி ஆனதும் தான் நீர்மாலை எடுக்க பெரியதனம் ஞாககப்படுத்தினார். அவர்க ளுக்குள் கசாபுசாவென்று பேச்சுக் கிளம்பியது. கொஞ்சம் வயதானவர்கள் 'அதெப்படி பரம்பரயா சாமிகெணத்தில நீர்மாலை எடுக்கிறதவிட்டுட்டு இங்கயே குளிக்கவே ணுமங்கிறது? ''சாய்வாகவும் நீர்மால எடுக்கிறதிலதான் கொறச்சல்' இளசுகள்

எதிராகவும் கூச்சல்போட ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக கிணத்து நீர் எடுத்து குளிக்காமல் கிணற்றை எட்டிப்பார்த்துவிட்டு மட்டும் திரும்பலாம் என்றார்கள். சிலர் 'நீரைத் தொட்டு தலை சுற்றிக் கொள்ளலாம் என்றார்கள் ஒரு வழியாக கிணற்றுமேம் டுக்கு வந்தார்கள்.

கயிறுகட்டி ஏழுவாளி நீர் இறைத்து வாளியில் வைத்ததும் இழவு வீட்டுக்காரர்கள் தொட மறுத்தார்கள். பெரிய நாகரீகக் காரங்கெ கூட்டத்தில் முணுமுணுப்பு எழுந்தது. நிலைமையைக்க ண்ட பெரியதனம் பூவரசு ஒடித்து ஒவ்வொரு வாளி நீரிலும் முக்கி வாரிசுகளின் உடலில் படாமல் சுற்றி "குளித்ததாக' அடையாளப்படுத்தினார். வெள்ளை வேட்டியின் நுனி, நான்கு கம்புகளில் கட்டப்பட்டு பந்தல்களைப் பிடித்துக் கொண்டு நின்றார்கள். நீரில் சுவராமலே வேட்டி காற்றில் படபடத்தது. மேலுகாலெல்லாம் விபூதியைப் பூசிக்கொண்டு நகர்ந்தார்கள். கூட்டத்தில் 'இந்த கெணத்தில நீர்மால எடுக்க வரணுமா? நீர்மால எடுக்கலண்ணா தான் என்ன 'அமுங்கின குரலுல் கிண்டல் எழுந்தது." இப்பென்னாப்பில என்ன? பதில். நகரும் கூட்டத்தில் கெக்கலித்திது.

தோட்டத்தைச் சுற்றி நின்ற தென்னை மட்டைகள் திடுதிப்பென்று உதிரத் தொடங்கினது. எங்களுக்கெல்லாம் நடுக்கமாகிவிட்டது. காற்று வீசாதபோதும் பழுத்த இலை உதிர் வது போல பச்சை மட்டைகள் நாள் தோறும் உதிரத்தொடங்கின. என்னமோ தெரிய வில்லை ஒண்ணுபோக ஒண்னு தொடுத்துக் கொண்டு இருக்கிறது. எங்கள் வீட்டைச் சுற்றியே சனீஸ்வரன் முகாமிட்டிருக்கானா? வச்ச வெள்ளாமையை கண் கொண்டு பாக்க முடியவில்லை. நோட்டத்துக்குப் போகவே மனசில்லை. அப்படியே இருந்துவிடவும் முடிய

நிகழ் 171

படிப்பகம்

________________

www.padippakam.com

வில்லை. சரி மரம் வெட்டுவதைப் பார்த்து விட்டு வரலாமென்று கிளம்பினேன்.

மூணு வருசத்துக்கு முந்தி அமெரிக்காகாரனை கோயம்துார் மொதலாளி இந்த இடத்தைப் பார்க்க கூட்டிவந்தபோது முதலில் எங்கள் நிலத்தைத் தான் விலைக்குக் கேட்டான். ஐந்தாறு முறை சினனமனூர் ஏஜண்ட் டாக்ஸி யோடு நைனாவைப் பார்த்து வெறுங் கையோடு திரும்பிப் போனான். அப்புறம்தான் எங்கள் தோட்டத்துக்கு மேக்கால இருக்கும் ஹரிஜக்கு நாயக்கர் மாமா தோட்டத்தை வளச்சு பிடிக்க ஆள் வந்து வந்து மோதிக் கொண்டிருந்தது. அவரும் மனசில்லாமல் அந்தா இந்தா என்று இழுத்தடித்தார். காரணம் எங்கள் நைனாவிடம் யோசனை கேட்டுக்கொண்டு இருந்தது தான்.

சில நாட்களுக்குள் அவரும் மனசை மாத்திக் கொண்டார். சிகரெட் பெட்டியைத் தட்டிய வண்ணம் வெளித்திண்ணையில் நைனா பக்கம் வந்து உட்கார்ந்தார். ஜக்கு மாமா தோட்டத்த விட்டிடலாமன்னு இருக்கேன் சுப்பு. கூலியாள் சம்பளம் தாக்கு பிடிக்க முடியல. பண்ணக்கும் இப்ப யாரும் அமரவாரதில்ல. கேவலமன்னு நெனைக்கி நாங்க. நம்ம ஊர் கம்யூனிஸ்ட்காரன் மேட போட்டான்னா என்ன தான் மொதல்ல வைறான். இருபது ஏக்கா நா வச்சிருக்கிறது அவனுக்கு பெருசன போச்சு..பையனும் லெதர் டெக்னாலஜி படிச்சிட்டு வேலையில் லாம திரியிறான். நெலம் விட்டா கம்பேனி யில நல்ல ஆபிசர் போஸ்ட்டா தாரதா சின்ன மனுரர்க்காரன் உறுதியா சொல்றான். அதான் ஒரே யோசனையா இருக்கு. கத்தரி சிகரெட் கங்கை திண்ணையில் நசுக்கி அமர்த்தினார். நைனா பதில் எதுவும் அன்று சொல்ல வில்லை.

எங்கஊர் சுத்துவட்டாரத்திலேயே கரும்புக்குப் பெயர்போன நிலம் அது. வேலைக்கி போயிட்டுவர்ற ஆம்பளை பொம்பளைகள் கை சும்மா இருக்காது. ஜக்குமாமா தோட்டக் கரையில் ஏறி நின்று சவளையின் தோகையை முறுக்கி கண்டினால் அடிகணு தெறித்து முழுதட்டையும் கையோடு வருவதை கிணத்து மேட்டிலிருந்து எத்தனையோ முறை பார்த்

நிகழ் 172

படிப்பகம்

திருக்கிறேன். கரையிலிருந்து ஓடைக்குள் குதித்து ஊர் சேரும் வரை ஈஞ்சி செவஞ்சக் கிட்டு போறது தெரியும். மறுநாள் காலையில் ஒடைவழியாகப் போனால் தின்று போட்டி சக்கைகளை எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும். சலவையோடு பேசும் கிணறுகாற்றோடு உராயும் கரும்புத்தோகை இனிப்பு வரும் ஓடை - அது ஒரு காலம்.

ஜக்குமாமா தோட்டத்தை மையமாக வைத்து அந்த பரவு முழுசையும் அமெரிக்கா, கோயம்புத்தூர் கம்பேனி கூட்டாக வாங்கியது. 150 ஏக்கர் நிலப் பரப்பளவு என்று பெயர் பலகை அறிவித்துக் கொண்டு இருக்கிறது. இப்போது கரும்பு வெளஞ்சமேட்டுப் பரப்பு முழுசும் கட்டிட கூடாரங்கள்.

கூட்டுக் குடிநீர் திட்டம் இன்னமும் எங்கள் கிராமத்துக்கு வராததால் ஊர் கடைசி யில் இருக்கும் அடிபம்புகள் டங்டங்டங் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும். சத்தம் - வரலை என்றால் ரிப்பேரில் இருக்கிறதென்று அர்த்தம். குழாயடி சண்டையை விட என் அம்மா வசவை காது கொடுத்து கேட்க முடி யாது. என் மனைவி என்னிடம் குறைபட்டுக் கொள்வதும் இதில்தான். ஒடை வழியாக பம்மி பம்மி எங்கள் கிணத்துக்கு அம்மாவுக் குத் தெரியாமல் வந்து மோட்டார் நீரைப் பிடித்துக் கொண்டு ஒட்ட ஒட்டமாக ஓடைக்குள் இறங்குவார்கள். அம்மாவுக்கு அது தெரிந்தே இருக்கும். 'பாத்தியே பாய மாட்டெங்கிது. எவளுக்காவது புத்தியிருக்கா? இவ்வளவு சொல்லியும் காத அடைச்சுக்கிட்டு பிடிச்சுக்கிட்டு போறாளே சவுண்டு வரும். ஒரு நாளும் கொடத்தைப் பிடிங்கி நீரை கவிழ்த்துவிட்டு வெறுங்கொடமாக அனுப்பி யது கிடையாது. என்னமோ நீர் பிடிக்க வரும் பெண்கள் வசவை பொருட்படுத்தாமல் நீர் எடுத்துக் கொண்டு ஓடுவதும், அம்மா திட்டுவதும் நிகழ்ந்தது. நைனா கண்டும் காணாதது போல் விட்டு விடுவார். எங்கள் முழு குடும்பத்துக்கும் முப்பது நடை நீராவது கிருஷ்ணவேணி சுமப்பாள். ஆடு மாடுகள் ஜாஸ்த்தில்லையா? அதனால் தான். எளனி கணக்கா இருந்த தண்ணி மூத்ர கலரில் மாறியது மட்டுமல்ல குடித்தால் கரிப்போட வாயெல்லாம் நவ நவக்கும். இந்த ஒரு வருஷமா யாரும் தண்ணி பிடிக்க வாரதில்லை

________________

www.padippakam.com

அடிபம்பில் போய் மல்லுக்கட்ட முடியாது என்பதால் நாங்கள் மட்டும் சாமி கெணத்து தண்ணிய கொண்டு வந்தோம்.

ஓடையை விட்டு ஏறியதும் துர்நாற்றம் வந்தது. வாரியில் நின்று கிணற்றை எட்டிப் பார்த்தேன். கருத்து நீர் தெப்பமாக நுரைத்துப் போயிருந்தது. இரண்டு தவளைகள் செத்து ஊறி மல்லாக்கப் படுத்திருந்தன. காற்றில் நெளிந்து கொண்டிருந்த கோழி இறகு காற்றுப்பட கிணற்றுள் இறங்கியது. ஊஞ்சல்போல பக்கவாட்டில் அலைந்து கொண்டே நுரைத்துப் போய் நிற்கும் அஞ்சாள் மட்ட நீரைத் தொட்டதும் நுரைகள் பொறிந்தன. எப்போதும் சலசலத்துக் கொண்டிருந்த கிணறு ஊற்றுக் கண்களுக்கு மேல் நீர் மட்டம் ஏறி மெளனத்தை கடைப் பிடித்து விட்டது.

சோளத்தட்டைகள் காஞ்சாரி நோய் விழுந்து தீப்புகையில் மூழ்கியது கணக்கா ஈன முடியாமல் பட்டுப்போய் சொடிந்து கொண்டிருந்தன. தண்ணீர் பாய்க்க பாய்க்க தாவரங்களுக்கு கடுஞ்சிதைவுகள் தான் நிகழ்கின்றன. குறுகி உள்ளுக்குள் வெந்து போகும் குரூரம். மண் விச சுரப்பிகளால் படிவம் கொண்டு விட்டது. அது தன் அற்புதமான வாசத்தை இழந்துவிட்டது.

நைனாவைக் காணவில்லை. உத்திவாங்களில் ஏறி நின்று பார்த்தேன். கொய்யா மரத்தடியில் எதையோ பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. கை வாய்க்கால் பூசாம், எருமை மோண்டு தொடை இடுக்கில் உப்பரிந்திருப்பது போல வெள்ளையாக ஏதோ படிந்திருந்தது. இதைத் தான் நீலச்சீக்கு என்கிறார்களா? பழுதுபட்ட நிலத்தின் மீது தாவரங்களின் கருகிய துயில்!

ஒரு சமயம் நிழல் அடர்ந்த தென்னை வரிசை தோட்டத்தைச் சுற்றியிருந்ததில் வெயில் பரவியிருந்தது. சில தென்னைகள் தலையை இழந்து முண்டமாக வானை நோக்கி நிற்கின்றன. தரையில் உதிர்ந்து கிடக்கும் இமிங்கிய தென்னம் பூக்களை மிதித்துக்கொண்டு ஈசான மூலைக்கி நகர்ந்தேன். செவ்வெளனி தன் மணிமுடியை கவிழ்த்துக்கொண்டு நின்றிருந்தது. காலவாசல் காரன் வெட்ட இன்னும் வரவில்லை.

லேசாக சாய்ந்து உயரே நின்ற மரம். செல்பிடித்தாற்போல் சீசனுக்கு சீசன் காய்ந்த மரம். அதன் தலைக்குள் புதைந்திருந்த சுனை களவாடப்பட்டுவிட்டது. சிலசமயம் குலை நெருக்களில் திணறி தெறித்து உதிரும் பிஞ்சு கூட துவர்ப்பு அடிக்காது. இனிப்பு. அந்த பாம்பிஞ்சை எடுத்து குருத்தில் ஊழிக் குச்சியால் துவாரம் போட்டு குடிப்போம். கா டம்ளர் நீர் இருக்கும். குருத்தே தேங்காய் சில் மாதிரி நருச் நருச் என்றிருக்கும். வாய் வெத்தலை போட்டது கணக்கா ஆகிவிடும். இந்த செவ்வெளனி மரத்தின் இனித்த சுவை யால் மட்டும் எங்கள் குடும்பத்தினருக்கு பிரியமல்ல, மட்டையின் கக்கங்களைச் சுற்றி படுத்திருக்கும் நெருக்கமான குலைகளின் அழகு வேறு எந்த மரத்திற்கும் வாய்க்கவில்லை. அண்ணாந்தால் சிவந்த முலையடைகள் தெரியும். மகோன்னதமான வாழ்வு அது நெத்துக்காக பாதி மரத்தில் சீமக்கருவேல் முள் தொட்டை கட்டி வைத்த வாக்கில் இருந் தாலும் அதை அவிழ்க்காமல் தாண்டி ஏறும் சாகசக்காரர்களுக்கும் விருந்து படைத்தது உண்டு. இருட்டில் முள்தொட்டை அவிழ்த்து தூரில்வைத்துவிட்டு ஏறிப்போய் கனங்களைப் பறித்துக்கொண்டு ஓடியவர்கள் நிறைய. காலையில் போய்ப்பார்த்தால் சிரித்து கொப்ப மளிக்கும். பச்சைக் கீற்றுகளின் பளப்பளப்போடு இயல்பாக அசைந்துகொண்டிருக்கும். கீழே முள் தொட்டிக்குள் உருண்டுபோய் மறைந்து கொண்ட தேங்காய்களை வீட்டுக்கு எடுத்து வந்ததுண்டு. தொல் கை மந்தத்திற்கு இருக்கும். அதிகம் முற்றிவிட்டால் உதடுகளில் எண்ணெய் மினுமினுப்பும் வாச மும் தெரியும்.

காற்றில் ட்ட்ரிரிட்ட பச்சை கீற்றுகள் பழுத்த செவ்வட்டையாக மாறத்தொடங்கின. பினபு குலைகளில் ஒரு பிஞ்சு கூட தறிக்க வில்லை. அதன் நெருக்கம் குலைந்து ஒடு கனங்களாக. பின் அதுவும் அற்று வெறும் மழை கீற்றுகீற்றுகளாக... பூக்கள் கூட தறிக் காமல் பொல பொலவென்று உதிரத்தொடங்கின. பளபளத்து வந்த பச்சைக்குடையை நினைத்துப் பார்த்தாலும் திரும்பவரவில்லை.

நிகழ் 178

படிப்பகம்

________________

www.padippakam.com

குடை மடங்கி உச்சியில் சரிந்து தொங்கும் காட்சி வருகிறது. அண்ணாந்து பார்க்கவே மனசில்லை நகர்ந்தேன்.

நைனா என்னை கவனித்த பின்னும் வேறொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு செப்பூத்து பறக்க முடியாமல் இறகுகள் புல்லரிக்க தள்ளாடி நடந்தது. ஊடு கரையில் ஏற முடியாமல் வாய்க்கால்குள் விழுந்தது. 'அப்ப இருந்து அது பறக்குமான்னு பாக்கறேன். கீழ் விழுந்து கிட்டுதான் இருக்கு" துண்டால் முகத்தைத் துடைத்துகொண்டார்.

கொய்யாமர இலைகள் மொரமொரத்து காணப்பட்டன. தொங்கும் கிளையை இழுத்து முக்காதர காயை எக்கி பிடிங்கி னேன். கருங்காம் பிடுங்கும் போதே கையில் நொச நொசவென்று நெளிந்தது. கை காசி புழுவை நசுக்கிய வாசம் வீசியது. பார்க்க காய். தொழு நோயால் பழுத்திருக்கிறது. துார வீசினேன்.

செம்பூத்தால் பறக்க முடியவில்லை. இந்த கொய்யாமரத்திலும் தென்னை மரங்களிலும் தான் கொட்டழுத்தம் போடுகிற எத்தனை செம்பூத்துகள் இருந்தன. தாழப் பறந்து கிளை தாவும் தோகை நீண்ட செம் பூத்துக்களை காணவில்லை. கருத்து மின்னும் அடிபாகமும் கருஞ்சிவப்பில் வலுவலுக்கும் இறக்கைகளும் பார்க்க ரம்மியமாக இருக்கும். தொட்டியில் அமர்ந்து கொண்டு பார்த்தால் இறகில் சிதறும் நீர்த்துளிகளில் விதவிதமான வண்ண பூபாபளம், ஒளிரும் கலர் கலரான நீர்த்துளிகள் பூமியில் விழுந்து நொறுங்கிக் கொண்டே இருக்கும். செம்பூத்துக்களின் சிலிர்ப்பில் கிளம்பும் நீர்துளி சூரியன்களின் வர்ண ஜாலங்கள் அது.

அக்கா குருவியைப் பார்க்காதவர்கள் இதைத்தான் அது என்கிறார்கள். தொண்டையில் காற்றைபெருக்கி ம்ம்மணம், ம்ம்ம்ை. என்னும்போதோ அக்க என்னும் போதோ எங்கோ ஒரு மூலையிலிருந்து இன்னொரு செம்பூத்து தொண்டைக்குள் சுருதி தட்டி ரீங்காரத்தை அனுப்பும். ஒருபக்கமாக பூமியில் அயனித்து சுட்டெரிக்கும் வெயிலில் மேற்புற இறக்கையை விசிறியாக விரிக்கும். அப்படி

நிகழ் 174

விரித்தால் மழை வரும் என்பார்கள். முன் கூட்டி அறிவிக்கும் சூட்சுமம் எந்த வெயில் நாள் என்பது அதுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்கம்.

வாய்க்கால் கரையிலிருந்து கழுத்தை தோயவிட்டு விழுந்தது. தைனாவை விலகிப் போய் தூக்கினேன். எந்த முனகலும் இல் லாமல் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டிருந்தது. எனக்கு சட்டென்று கிருஷ்ணவேணி ஞாபகம் தான் வந்தது. கொட்டத்தில் ரோமங்களை உதிர்ந்து நிற்கும் ஆட்டின் உறைந்த கண்கள் புறவெளியெங்கும் மிதப்பது போல் பிரமை,

இறகுகள் சிலிர்த்து தலை சொணங்கிய செம்பூத்தை கட்டுகனப்பில் போட்டு விட்டு வெந்தபுல் வரப்பில் நடந்தோம். கையகல நிலத்திலே ஆதி ஜீவன்கள் அழியத்தொடங்கி விட்ட காலம் தெரிந்தது. ஓடைக் கரையில் ஏறியபடி அதிகம் பேசாத நைனா ஹிரோசிமாவில அணுகுண்ட மேல இருந்து போட் டான்னா எல்லா எடத்திலயும் அப்பிடி தான் போடனுமெங்கிறதில்ல. சத்தமில்லாம கீழ இருந்தும் போடலாம். பூமாதேவி செத்துப் போச்சான்னு தோணுது என்றார். கரையில் ஏறி நின்றதும் தொழிற்சாலையின் சங்கு ஆங்காரமாய் ஒலிக்கத் தொடங்கியது. கருகிய காகித வார்த்தைகளாய் காற்றில் நொருங்கிப் போனது நைனா சொன்னதும் பாதச்சுவடில் நெமுறும் குறுமண ஓசையோறு ஒடையில் நடக்கலானோம்.



படிப்பகம்

www.padippakam.com



 https://groups.google.com/forum/#!msg/minTamil/p4u-saX5aTw/DN_5AXomKp4J

’மறைந்த சுவடுகள்’ என்னும் சிறுகதை, சிறுகதையில் மட்டுமே சில பிரக்ஞைகளை எட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் ஒன்று. கவிதை என்னும் மொழியின் சுயமார்ந்த இயக்கத்தோடு போட்டி போடக்கூடிய தகுதி சிறுகதைக்கு மட்டுமே உண்டு என்பதையும் ;மறைந்த சுவடு’களில் வரும் ஞான வள்ளி என்னும் வரைவு சான்று பகர்கிறது. 



காதலன் ஏமாற்றியதால் ஒரு வித வக்கிரமான பழிவாங்கும் முனைப்பாக தன் அழிப்பு என்பதையே தேர்ந்தெடுக்கும் மூர்க்கம் கையாலாகாத நிலையில் தள்ளப்படும் பெண்ணுக்குச் சில சமயம் ஏற்படலாம். அப்படி ஏற்படும் போது அது எத்தகைய உள் வேதனையில் வாடுகிறது என்பதைத் தொனிப் பொருளாகவே மட்டும் காட்டி மிகத் திறமையாக அமைகிறது ஆசிரியரின் மொழிதல் ஓட்டம்.

மனித வாழ்க்கையாகிய கிராமத்தில் சாத்தியப்படும் எத்தனை விதமான உள்ளம் என்னும் நிஜத்தின் முனைகளைத் தொட்டு காட்ட முடிகிறது சு வேணுகோபாலால் என்பது என்னை மயக்கும் சிந்தனையாக இருக்கிறது.

குழந்தைமையிலிருந்து தன்னைத் தூக்கிக் கொஞ்சியவள் என்னும் போதும், அவள் எழில் கட்டுடன் இருக்கக் காண்கையில் தழுவத் துடிக்கும் ஆண் மனம், நோயில் படுத்து உருக்குலைந்து காண்பதற்கு ஆள் விட்டனுப்பி, சேர்ந்து வெளியில் சற்றுக் காற்றாடப் போய் வரவெண்டும் என்று வேட்குங்கால் ஊர்ப்பார்வைக்கு நாணி அவளைத் தவிர்க்க வேண்டி சினிமாவிற்குச் சென்று தப்பும் நேரத்தில் கெஞ்சிய அவளின் உயிர் பிரிகிறது என்று காட்டும் போது தயக்கம் இன்றி முகம் சுளிப்பு இன்றி மன மெய்ம்மையின் ரணங்களை அறுவைக் கத்தியால் நேர்த்தியாக கிழித்துக் காட்டும் உள இயல் மருத்துவராகத் தோற்றம் தருகிறார் வேணு.





‘ஏங்க சொல்லிட்டுப் போக வேணாமா?... என் கிருஷ்ணாவை இன்னும் காணலையேன்னு, பஸ்கள்ல அடிபட்டிட்டானோன்னு அழுக ஆரம்பிச்சுடுச்சு. சாகுறப்ப யாருமே இல்லிங்க,’

ஞான வள்ளி இறந்துவிட்டாள்.

சு வேணுகோபால் இப்படி இந்தச் சிறுகதையை முடிக்கிறார் -

“வாழ்ந்ததற்கான சுவடற்றுப் போகும் வாழ்க்கை. வரலாற்றில் கால் பதியாது ஓடும் தொன்ம நதியில் கலந்த கோடானுகோடி ஜீவன்களில் ஒருத்தி.”