தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, June 05, 2014

மழை மனம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மழை மனம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

ஒரே சீராய் பெய்து கொண்டிருக்கிறது மழை
உன் நினைவாய்...
அதன் சன்ன இழை யொவ்வொன்றும்
என்னை உன்னில் நெய்துவிட
கன்றிப்போகு முடல்
காற்று வருடலுக்கும்
மண்வாசனையாய்ப் பெருகும் உறவின்
மணம்...
எத்தனையோ மலைகடந்து
நடந்தோடிய படி
பித்தா(ய்) பிறைசூடி
எத்துளி கரைவாய் என்னில் ?

என் உனக்கு - கவிதைத் தொகுப்பிலிருந்து
வெளியீடு - புதுப்புனல்