தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Thursday, June 12, 2014

மூன்று இந்தியக் குழந்தைகள் - பிரமிள்

மூன்று இந்தியக் குழந்தைகள் - பிரமிள்

தொலைதூர வெளியொன்று
கண்களில் ததும்பும் இக்
குழந்தைக்கு.

தாமரை மலரின் வாசனையில்
சுருக்கிட்டு
தொங்கிமடியும் இன்
னொரு குழந்தை.

கண்ணாடியுள்
விரியும் வெளியிலே
நின்று
வாசனையற்ற பெருமூச்சுகளாய்
ஒருகோடி உயிர்களை
வினாடி தோறும்
பெற்றிழக்கும்
இன்னொன்று

ஆனால், இவையொன்றும்
சிரிக்காது.
வேணுமென்றால்,
இதோ -
ஒரு கைப்பிடிச் சாம்பலில்
அந்திமக் கிரியைகளுக்காய்
காத்திருக்கும்
புன்னகைகள்.