தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, May 18, 2014

முகப்பு - மாக்ஸ் ஜேகப் (மொ.பெ. - பிரமிள்)

முகப்பு - மாக்ஸ் ஜேகப் (மொ.பெ. - பிரமிள்)

ஆம், நான் கவனம் கொள்ளாத வேளையில்
அது என் மார்புக் குவட்டிலிருந்து உதிர்ந்திருக்கிறது
கடல் மீது ஒரு சிறிதும் அலைத்துடிப்பை
எழுப்பாத படகு ஒன்று
மாலுமிகளுடன்
கற்குகையிலிருந்து வெளிப்படுவதுபோல,
என் மார்பகத்தின் தாய்மையிலிருந்து
உதிர்ந்திருக்கிறது ஒரு புதிய கவிதை.
நானோ அதைக் கவனிக்கவேயில்லை.

- MAX JACOB (1876-1944)
'FRONTISPIECE"

Frontispiece
Yes, it fell from my nipple and I wasn't aware of it. The way a boat and its crew glide out of their anchorage in the rocks without even a ripple, without the earth sensing that new adventure, a new poem fell from my Cybele-breast and I wasn't aware of it.

 http://www.questia.com/read/49033321/the-selected-poems-of-max-jacob