தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, July 20, 2014

எதிர்பாராத முத்தம், துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ .... & எங்கெங்கு காணினும் சக்தியடா - பாரதிதாசன்

 எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்

வையம் சிலிர்த்தது நற் புனிதையேக, 
மலைபோன்ற நீர்க்குடத்தை ஒதுங்கிச்சென்று 
கையலுத்துப் போகு'தென்று மரத்தின்வேர்மேல் 
கடிதுவைத்தாள்; "அத்தான்நீர் மறந்தீர்என்று 
மெய்யாக நான்நினைத்தேன்" என்றாள்.அன்னோன் 
வெடுக்கென்று தான்அனைத்தான். "விடாதீர்"என்றாள்! 
கையிரண்டும் மெய்யிருக, இதழ்நிலத்தில் 
கனஉதட்டை ஊன்றினான் விதைத்தான்முத்தம்! 

•                  •                      • 
https://www.facebook.com/kutti.revathi.1?fref=nf
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...
அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...
புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...
~ பாரதிதாசன்

எங்கெங்கு காணினும் சக்தியடா;-தம்பி 

ஏழு கடல் அவள் வண்ணமடா!-அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்த
தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோஈ?-எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம்-அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!
காளை ஒருவன் கவிச்சுவையைக்-கரை
காண நினைத்த முழு நினைப்பில்-அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள்-அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே-இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!’
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


பாரதிதாசனையும் பாரதியையும் ஒப்பிடுவது ஏன்?
சுப்பிரமணிய பாரதியை மகாகவி என்றும் பாரதி ஒரு அதிசயம் என்றும் சொல்லும் இலக்கியக் குடிமரபினர் பாரதிதாச சுப்புரத்தினக் கவியைப் படிப்பதும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
பாரதி பாடல்களைக் கேட்பது இதம்.
சுப்புரத்தினக் கவியை கேட்பதுடன் சிந்திப்பதும் உணர்வதும் ஆக்கம் தருவன.
பாரதி அல்ல அதிசயம், அது போலப் பலர் உருவாக முடியும். தாயுமானார், ராமலிங்க அடிகள் வந்து விட்டபின் பாரதி ஒரு பின்னோக்கு நிலைதான்.
“வேதத்திலே உயர் நாடு” என்ற கவி மொழிபு மிகமிகப் பின்னோக்கிய நிலையே.
அதிசயம், அசாத்தியம் என்றால் பாரதிதாச மகாகவிதான். (மகாகவி என்ற அடை-உடை விரும்பாத மகாபின்னவீனத்துவ கோடுபாட்டு அறிஞர்கள் காலமொழிபு மாற்றிய கவிஞர் என அவரை அறிக.)
ஏனெனில் தமிழ் மொழி அதுவரை ஏற்க மறுத்த அனைத்தையும் யாப்பில் அடங்காது எனச் சொல்லப்பட்ட அனைத்தையும் பா-பாடல் என்ற இசை மொழிபாக மாற்றுவது அத்தனை இலகுவான வேலையல்ல.
சுப்பிரமணிய பாரதி இல்லாமல் போயிருந்தால் நவீன தமிழ் ஒன்றும் குறைபட்டுப் போயிருக்காது, சுப்புரத்தின பாரதிதாசன் இல்லாமல் (கவிக்களம்) போயிருந்தால் தமிழ் பா-கவி மரபு நவீனமடைந்தே இருக்காது. பண்டார சன்னதிகள் பாரதியையும் பகுத்தறிவு மரபினர் பாரதிதாசனையும் கொண்டாடி மகிழ்வதில் தப்பில்லை.
துன்பம்நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா? எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? கேட்டுப்பாருங்கள் அதிசயம், அற்புதம் என்ன என்று புரியும்.
“மணலின் ஏட்டிலே அலைகள் பாவரி
வரைவதென்பதோனோ-நிதம்
வரைவதென்பதேனோ!
கனவின் யாழினைகை விரல்கள் இன்றியே
காற்றும் மீட்டுதல் வீணோ!
காற்றும் மீட்டுதல் வீணோ!
இசையின் தாரைகள் திசைகள் எங்கணும்
இனிமை சேர்க்கும் போது- தமிழ்
இனிமை சேர்க்கும் போது- உயிர்
அசைவிலாவிடில் உலகில் மானுடர்
உய்வதென்ப தேலாது!” (பாரதிதாசனின் வரியிசையில்)
(ஓவியம் டி.சௌந்தர் இணையத்தில் பார்த்ததும் பிடித்தது)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

https://www.facebook.com/riyas.qurana/posts/912869448743142

'கலைகளில் சில தம்மைப் பல திசைகளிலிருந்தும் அணுக அனுமதிக்கின்றன.சில தம்மைச் சுற்றி வந்து மாறுபட்ட இடத்திலிருந்து,கோணத்திலிருந்து,திசையிலிருந்து நமக்கேற்ற வகையில் தம்மைக்காண அனுமதிக்கின்றன.கட்டிடம்,சிற்பம்,ஓவியம் போன்ற கலைகள் மறுதிசையில் செல்லக்கூடியவை.அப்படி மறு திசையில் இயங்க முடியாமல் ஒரே திசையில் செல்பவை? இசையை அப்படிக் கூறலாம். தொடக்கத்திலிருந்து முடிவுவரை, பிறப்பிலிருந்து சாவுவரை என ஒருவழிப்பாதையாகச் செல்கிற இலக்கியத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால் மறு திசையில் இயங்க முடியாததாகிய இலக்கியத்தை,அப்படி இயங்க வல்லதாக மாற்றவே எப்போதும் நான் விரும்பியிருக்கிறேன்.'

@ மிலோராட் பாவிச்