தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, July 21, 2014

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி - பாபநாசம் சிவன் & நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி

தாயே ஏழைபால் தயை செய்வாயே

ராகம்: பைரவி

தாளம்: ஆதி

இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பல்லவி

தாயே ஏழைபால் தயை செய்வாயே
தயாபரி சங்கரி - சகல லோக நாயகி ( தாயே )

அனுபல்லவி

நாயேனுன் பாலன்றி எங்கே செல்வேன்
நளின மிருதுள சுகுமார மனோகர
சரணயுகல மருள தருணமிதுவே என் ( தாயே )

சரணம்

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி
எட்டாத பேராசை கோட்டை கட்டி
புண்ணாக நெஞ்சம் புலம்பும் மடம்(இடம்)
போதும் இனி முடியாது உனதடி
இப்போது அடைய இது போது வரம் அருளும் என் ( தாயே )

கற்பகம் பாட்டி பாடிய கானாம்ருதங்கள்


நீ வரவில்லையெனில் ஆதரவேது .. - மருதகாசி

http://www.mayyam.com/talk/showthread.php?6089-ONNEY-ONNU-KANNAEY-KANNU&s=5fffc9716d06426fa625785886a45197&p=254311&viewfull=1#post254311

from 'Mangaiyar Thilagam - by M.Sathyam (he sang maybe 1 more tamil song)
Lyric : Maruthakasi 
Music: S. Dakshina Moorthy

நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
வாடிய துளசி வாடாமல் வாழ்ந்திட
நீ வரவில்லையெனில் நீரைப் பொழிந்து
அன்போடு காப்பவர் யார் இந்த வீட்டினில்
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

நீ வரவில்லையெனில் நிழலும் ஏது
நேசம் பாசம் வளருவதேது
நிம்மதி இன்பம் என்பது ஏது
நிலையாய்த் தென்றல் வீசுவதேது
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

ஆறுதல் அளித்திடும் அன்னையின் அன்பை
அனாதை நானும் அறிவதும் ஏது
நீ வரவில்லையெனில் நிலவின் குளுமை
இனிமை எல்லாம் ஏது வாழ்விலே
நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் 

காரிருள் நீக்கும் கலைத்தேன் நிலையே
காவியம் புகழும் கலாவாணியே
நீ வரவில்லையெனில் இதயம் தனிலே
ஜீவநாதம் எழுவதும் ஏது

நீ வரவில்லையெனில் ஆதரவேது
நீ வரவில்லையெனில் !


அவளா சொன்னாள் இருக்காது - வாலி

http://songlyrics.lakshmansruthi.com/song_detail_list.php?&id1=&id=3994&mode=Language&Language=0

வாலி
செல்வம் - திரைப்படம் 

பல்லவி


அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...


இசை சரணம் - 1

உள்ளத்தில் உள்ளது உதட்டிலே வந்ததா
உதட்டிலே வந்தது உள்ளமே நினைத்ததா
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...

இசை சரணம் - 2

உப்பு கடல் நீரும் சர்க்கரை ஆகலாம்
முப்பது நாளிலும் நிலவை பார்க்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
நம்ப முடியவில்லை... இல்லை ...இல்லை...

இசை சரணம்-3

அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்...
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...
அவளா சொன்னாள் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை... இல்லை... இல்லை...