தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, May 03, 2018

பீஹாரும் ஜாக்குலினும் - சுரேஷ்குமார இந்திரஜித் :: தினமணி பொங்கல் மலர் 1996


www.padippkam.com
________________

க்ரையோஜெனிக்ஸ் பற்றிய ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள பாரீஸ் வந்திருந்த நான், அங்கிருந்த ஒரு புத்தகக் கடை யில் 'India A Mysterious Country' என்ற புத்தகத்தை வாங்கினேன். இந்தப் புத்தகம் ஹெர்மன்ஸ்டாடிங்கர், ஜாக்குலின் ஆகிய இருவர் ஜெர்மன் மொழியில் எழுதி ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் 18- பக்கத்தில் காணப் பட்ட பகுதி என்னைத் திடுக்கிட வைத்தது.

"....... கோயில் பெரியதாக இருந் தது. கோபுரங்கள் கண்களை உறுத்தும் செயற்கையான வண்ணப் பூச்சுகளால் அழகற்றதாக இருந்தன. கோயிலில் இருந்த சிற்பங்களின் அழகு, நுட்பங்கள் பற்றிய பிரக்ஞையின்றி மக்கள் வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். வெளி மதிற்சுவர் ஓரம் ஒரு சாமியார் ஒன்றுக்கிருந்து கொண்டிருந்தார். கோயிலின் ஒரு பகுதியில் கடைகள் இருந்தன. கடைக்காரர்கள் எங்களைக் கண்டதும் தத்தம் கடைகளுக்கு வருமாறு அழைத்தனர். அவர்கள் அழைப்பில் நாகரீகமற்ற தன்மை இருந்தது. கோயிலுக்கு வெளியே எங்களை பிச்சைக்காரர்களும் சிறுவர் சிறுமியர் களும் சூழ்ந்துகொண்டனர். காசு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்ததால் நாங்கள் காசு கொடுப்பதில்லை. வெள்ளையர்களை மக்கள் ஏன் வேடிக்கைப் பொருளாகப் பார்க்கிறார்கள் என்று ஒரு கல்லூரிப் பேராசிரியரை நேற்று சந்தித்த போது கேட்டோம். 'உங்களின் நிறம், உயரம், தோற்றம். தவிர வெள்ளையர்கள் எங்களை ஆண்டார்கள்.' என்றார்.

நெருக்கடி மிகுந்த இந்தச் சாலையில் மக்கள், நின்றுகொண்டும் | நடந்து கொண்டும் சாப்பிட்டுக் | கொண்டும் குடித்துக் கொண்டும் தூங்கிக் கொண்டுமிருந்தனர். இடையே மாடுகளும் நாய்களும் அலைந்து கொண்டிருந்தன. சாப்பிட்டவர்கள் இலைகளையும் கழிவுகளையும் சாலைகளில் எறிந்து கொண்டிருந்தனர். பொரிகடலைக் கடை ஒன்றில் ஸ்டாலின் படமும், காந்தி படமும் அருகருகே பெரிய வடிவத்தில் மாட்டப்பட்டிருந்தன. ஜாக்குலின் இதை எனக்குச் சுட்டிக் காட்டினாள். அக்கடைக்கு அருகே இருந்த டீக்கடையில் இந்துக்கடவுள் படம் பெரியதாகவும் ஒரு புறத்தில் கிறிஸ்து படமும் இன்னொரு புறத்தில் மசூதி பட மும் சிறியதாக மாட்டப்பட்டிருந் தன். அக்கடையில் டீ சாப்பிட டீக்கடைகளில் அனைத்து நேரங்களிலும் யாராவது குடித்துக் கொண்டிருப்பதை நாங்கள் பார்த் திருந்தோம். அந்த டீக்கடையருகே 'எம்போரியம்' என்ற பெயரில் வீடு போன்றிருந்த அந்தக் கட்டடம் ஒரு சினிமா தியேட்டர் என்பதை சுவரொட்டி மூலமாக அறிந்தோம்.) ஒரு இந்துக் கடவுளின் முன் சதைப்பிடிப்பான ஒரு பெண் கேளிக்கை விடுதியில் ஆடும் பெண்ணின் உடைகளுடன் ஆடிக் கொண்டிருக்கும் பெரிய சுவ ரொட்டி சுவரில் ஒட்டப்பட்டிருந் தது. நுழைவுச் சீட்டு கொடுக்கும் இடத்தில் மக்கள் கும்பலாக நெருக்கி நின்று கொண்டிருந்தார்கள்.

டீ குடித்துக் கொண்டிருந்த போது அக்கடையின் ஓரத்தில் நின்று புகைத்துக் கொண்டிருந்த லுங்கி அரைக்கைச் சட்டை அணிந்த ஒரு பையன் எங்களை நோக்கி வந்தான்.

'நீங்கள் எந்த தேசத்திலிருந்து வருகிறீர்கள்?' என்றான்.

'நாங்கள் ஜெர்மனி' என்றாள் ஜாக்குலின்.

 'கிழக்கு ஜெர்மனியா?" என்றான்.

 'அங்கிருந்து வெளியே வருவது சுலபமல்ல. நாங்கள் மேற்கு ஜெர்மனி.

'அப்படியானால் நீங்கள் சார்த் தர் பிறந்த தேசத்திலிருந்து வந்தி ருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்' என்றான்.

ஜாக்குலின் சொன்னாள்: 'சார்த் தர் பிரான்ஸைச் சேர்ந்தவர். ஜெர் மனி அல்ல'

அவன் சிகரெட்டை கீழே போட்டு அணைத்துவிட்டு 'இந்தியாவை நீங்கள் விரும்புகிறீர்களா' என்று கேட்டான், |

 'இந்தியாவைப் பற்றி இன்னும் அறியவில்லை' என்றாள் ஜாக்குலின்

அவன் கையசைத்து விடைபெற் றுக்கொண்டு அருகிலிருந்த சினிமா தியேட்டரின் கவுண்டரை நோக்கிச் சென்றான்...' -

இப்பகுதி என்னைத் திடுக்கிட வைத்ததற்குக் காரணம் இதில் குறிப்பிடப்பட்டிருந்த பையன் நான்தான். 1975-ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது நான் பட்டமேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊரின் மிக மோசமான சினிமா தியேட்ட ரான எம்போரியத்தில் தெலுங்கு டப்பிங் படம் பார்க்க வந்தபோது | இந்தச் சம்பவம் நடந்தது.

அந்தச் சமயத்தில் தொலைபேசி ஒலித்தது. எடுத்தேன், இரண்டு மாணவர்கள் சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள். நான் வரட்டும் என்றேன் . கருத்தரங்கிற்கு தயார் செய்ததிலிருந்து கருத்தரங்கு முடியும்வரை ஏற்பட்டிருந்த பதட்டத்திலிருந்து தற்போது விடுதலை பெற்று கேளிக்கையை விரும்பும் மனோ நிலையிலிருந்தேன். இந்தச் சமயத்தில் மாணவர்களைச் சந்திப்பது எனக்கு அலுப்பூட்டியது. வந்திருந்தவர்களில் அடால்ப்ஃ விண்டாஸ் என்ற பெயர் கொண்டிருந்தவன் ஹீலியம் வாயு பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியிருப்பதாகக் கூறி அக்கட்டுரையை என்னிடம் தந்து அதை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தான். அவனுடைய ஆர்வம் எனக்குப் பிடித்திருந்தது. அவர்கள் விடைபெற்றுச் சென்ற பின்னர் சற்று நேரம் சும்மா உட்கார்ந்திருந்தேன். |

 பிறகு தொலைபேசி மூலம் எனக்குப் பெண் துணை வேண்டும் என்றும் இந்தியப் பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன். முயற்சி செய்கிறோம் என்று பதில் வந்தது.

சற்று நேரத்தில் அழைப்புமணி - கதவைத் திறந்தேன். ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் மரியாதையுடனும், புன்னகையுட னும் எனக்கு முகமன் கூறி உள்ளே வந்தாள். தயாரிக்கப்பட்ட உற்சாகத்துடன் அவள் பேசினாள்,

'நீங்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?' என்று கேட்டேன். தனது பூர்வீகம் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டம் எந்றாள். தன்னுடைய பாட்டி பாண்டிச்சேரியிலிருந்த | போது ஒரு பிரஞ்சுக் கனவானை மணந்து பிரான்ஸ் வந்து குடிய மர்ந்ததாகத் தெரிவித்தாள். தமிழ் தெரியுமா என்று நான் கேட்டதற்கு, தெரியாது என்றும் தமிழ் நாட்டுடன் தொடர்பில்லை என்றும் தெரிவித்தாள்.

நான் வங்காள மாநிலத்திலுள்ள பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்த வன் என்றும் எனது கொள்ளுத் தாத்தா தாதாபாய் நௌரோஜியிடம் உதவியாளராக இருந்தவர் என்றும் என் தந்தை அமர்தியா | ஒரு கவிஞர் என்றும் தாயார் ஒரு | நாடக நடிகை என்றும் தெரிவித்தேன். பிறகு நான் இங்கு வந்ததற் கான காரணம் பற்றி சுருக்கமாகக் கூறினேன்.

'...... சுப்பிரமணிய பாரதி, தாகூர் | ஆகிய இரு கவிஞர்களைத்தான் தெரியும்' என்றாள் அவள். நான் மிக்க நல்லது என்று கூறினேன்.

 | தொலைபேசி ஒலித்தது. எடுத்தேன். மறுமுனையில் என் நண்பன் ராமச்சந்திரமேனன் பேசினான். அவன் இந்தியாவின் ஒரு மத்திய | இணை அமைச்சரின் கூடுதல் செயலாளராகப் பதவி வகிப்பவன். 'எப்போது பாரீஸ் வந்தாய்?' என்று கேட்டேன். 'இன்று காலையில் தான்' என்றான். 'எப்படி என் இருப் பிடத்தைக் கண்டு பிடித்தாய்?' எனக் கேட்டேன். 'அரசாங்கத்திலிருப்பவர்களுக்கு இதெல்லாம் கடினமில்லை ' என்றான். 'வருகிறாயா ஒயின் சாப்பிடுவோம்' என்றான். 'திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர் வீகமாகக் கொண்ட இந்தோ - பிரெஞ்சு பெண் ஒருத்தி இங்கிருக் கிறாள்' என்றேன். அவள் இதைக் கேட்டுப் புன்னகைத்தாள். 'அவளை யும் கூட்டிக் கொண்டு வருகிறாயா? ' என்றான் மேனன். 'அவள் முன் னால் நான் கேலிச் சித்திரமாக மாறிக் கொண்டிருக்கிறேன். நீயும் அவ்வாறு ஆக விருப்பு 11 nr?" என்று | நான் மலையாளத்தில் கூறினேன். 'அத்தகைய ஒருத்தியை நான் | பார்க்க விரும்புகிறேன்' என்றான் மேனன். 'நீ இங்கு வருகிறாயா?' என்றேன். "என்னைச் சந்திக்க இன் னும் சற்று நேரத்தில் ஒரு எழுத்தா ளர் வருகிறார்' என்றான். 'யார் அவர்?' என்றேன். 'அவர் பெயர் ஜாக்குலின். ஆய்வுக் கட்டுரைகள் | எழுதுபவர். இந்தியாவைப் பற்றிச் | சில புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது Criminal Face of Indian | Politics என்ற புத்தகம் எழுத உத்தே | சித்திருக்கிறார், அது சம்பந்தமாக | என்னைச் சந்திக்க விரும்புகிறார், அரசாங்கத்திலிருந்து கொண்டு | நான் என்ன உதவி செய்ய முடியும் | என்று தெரியவில்லை' என்றான்.

'' 'India -A Mysterious Country' என்ற புத்தகம் எழுதியவரா? அவர் இன் னொருவருடன் சேர்ந்து அப்புத்த கத்தை எழுதினாரா?" என்றேன்.

- ' 'India - A Mysterious Country' என்ற - புத்தகம் எழுதியவரா? அவர் இன் னொருவருடன் சேர்ந்து அப்புத்த கத்தை எழுதினாரா?" என்றேன்.

 - 'ஆமாம். அவர் ஜாக்குலின் கணவர் ஹெர்மன் ஸ்டாடிங்கர். Religion and caste in Indian Politics என்ற புத்தகத்திற்கான களப்பணி யில் இருந்தபோது பீகாரில் அவர் கொல்லப்பட்டுவிட்டார். ஜாக்குலின் காயங்களுடன் தப்பினார். அப்போது இந்திய அரசாங்கம் ஜாக்குலினுக்கு உதவி செய்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது' என் றான் மேனன், |

 'நான் அவரைப் பார்க்க முடி யுமா?' என்றேன். 'தாராளமாகப் பார்க்கலாம். அப்படியானால் இந்தோ பிரெஞ்சுக்காரியை என்ன செய்வது?" என்றான் மேனன். 'நான் பிறகு அதற்கு ஏற்பாடு செய்கி றேன்' என்று தொலைபேசியை வைத்தேன். |

நான் அவளைப் பார்த்து இந்தியாவின் மத்திய இணை அமைச்சருடன் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தொடர்பு கொள்ள வேண்டி யிருப்பதால் வெளியே செல்ல வேண்டியிருக்கிறது என்றும் மீண் டும் அவளைச் சந்திக்க மிகவும் விருப்பம் கொண்டிருப்பதாகவும் கண்டிப்பாக அழைப்பதாகவும் தற் போது அவளை விட்டுச் செல்லும் சூழ்நிலை மிக்க வருத்தத்தை எனக்கு ஏற்படுத்துவதாகவும் கூறினேன். |

அவள் அலுப்புடன் எழுவதாகத் தோன்றியது. ஆனால் பேசும்போது எப்போ தும் புன்னகையுடனேயே பேசும் வழக்கத்தை அவள் கொண்டிருந்தாள்.

நான் காரில் சென்று கொண்டிருந்தேன். 1975ம் ஆண்டு நான் உக்க டையில் சந்தித்த அந்த வெள்ளைப் பெண்ணை நினைவு கூர முயன்றேன். சுவரில் சாய்ந்து டீயை உறிஞ்சிக் கொண் டிருக் கும் வெள்ளைப் பெண்ம ணியின் குதூகலமான தோற்றம் மட்டும் நினை வுக்கு வந்தது. பீஹாரில் பாட்னாவில் வாடகைக் காரில் நான் சென்று கொ ண் டிருந்தபோது கும்பலால் மறிக்கப்பட்டு கொல்லப்பட்ட டிரைவர் என் நினைவுக்கு வந்தார். நான் அப்போது உயிர் தப்பி ஓடினேன். அடுத்த டுத்து வாகனங்களைக் கொளுத்துவதில் கும்பல் ஆசை யும் உற்சாகமும் கொண்டிருந்தது. வாகனங்கள் ஓட்டி வருபவர்களை யும் தாக்கிக் கொண்டிருந்தது. தாக்குதலில் ஏதோ ஓர் நிலையில் உயிர் இழப்பு ஏற்பட்டுக் கொண் டிருந்தது. நான் கால்கள் வெடவெடக்க ஷட்டர் இழுக்கப்பட்ட ஒரு கடையின் உள்ளே அங்கிருந்த மூன்று நபர்களுடன் நின்று கொண்டிருந்தேன். ஒருவரோடு ஒருவர் பேசாமல் வியர்வை வழிய
ஷட்டரைத் தூக்கச் சொல்கிறார் என்று உணர்ந்தேன். நான் தயங்கி னேன். மீண்டும் அவர் அவ்வாறே கூறினார். நான் மேலும் யோசிக்காமல் ஷட்டரைத் தூக்கினேன். நான் எதிர்பாராதபடி ஓசையுடன் ஷட்டர் சுருண்டது. வெளியே தெரிந்த காட்சியின் வெளிச்சத்தில் கண்கள் கூசின. காவலர்களின் தலைகள் இந்த இடம் நோக்கித் திரும்பின. துப்பாக்கி, லத்தியுடன் இருந்தவர்கள் என்னை நோக்கி ஓடி வந்தனர். நான் கைகளை உயரே தூக்கிக் கொண்டேன். |

புத்தரைக் கண்ட, மெளரியர்களைக் கண்ட, அசோகரைக் கண்ட, ஷெர்ஷானைக்கண்ட பின்னர் வங்காள நவாபிற்குச் சொந்தமான 1764-ம் ஆண்டு நடைபெற்ற பக்ஸார் போரில் பிரிட்டிஷாருக்குக் கை மாறி சுந்திர இந்தியாவில் உள்ள இந்தப் பூமியில் நான் கைகளைத் தூக்கி கொண்டே வெளியே வந்தேன்..

கார் நின்றது. ராமச்சந்திர மேனன் இருக்கும் அறையை விசாரித்து, அந்த அறையை அடைந்தேன், மேனன் கதவைத் திறந்தான். அறைக்குள் சென்று உட்கார்ந்த சில நொடிகளில் 'ஜாக்குலின் எப்போது வருவார்'? என்றேன். 'இப்போதுதானே செல்கிறார்' என்றான் மேனன். நான் பதட்டத்துடன் அவரைப் பார்க்க வேண்டுமென்றுதான் வேகமாக வந்ததாகக் கூறினேன். மேனன் வேகமாக எழுந்து ஜன்னலருகே சென்றான். என்னை அழைத்தான். ஜன்னலினூடே காரை நோக்கிச் சென்று கொண்டி ருந்த மெலிந்த தலை நரைத்த ஒரு பெண்ணைக் காண்பித்தான். 'நல்ல வேளை இன்னும் போகவில்லை. ஜாக்குலினைப் பார்த்துவிட்டாய்' என்றான். மெலிந்த தலை நரைத்த அந்தப் பெண் காரினுள் நுழைந்து கொண்டிருந்தாள். |

கைகளைத் தூக்கிக் கொண்டே வெளியே வந்த என்னைக் காவலர் கள் சூழ்ந்து கொண்டனர். ஒருவர் என் கையை முறுக்கினார். நான் அவர்களிடம் ஆங்கிலத்தில் நான் யாரென்பதை விளக்க முயன்றேன். - கையை முறுக்கியவர் விட்டுவிட்டார், வெள்ளை ஆண் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்த இடத்தில் காயங்களுடன் அழுது கொண்டிருந்த ஒரு வெள்ளைப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த அதிகாரி முன்னால் என்னை அழைத்துச் சென்று நிறுத்தினார். அவரிடம் நான் என்னைப் பற்றிக் கூறினேன். அப்போதிருந்த நிலையில் நான் அந்த வெள்ளைப் பெண்ணை சரியாகக் கவனிக்கவில்லை . '

நான் தற்போது ஜாக்குலினைச் சந்தித்திருந்தாலும் அல்லது இனி மேல் சந்தித்தாலும் அந்த வெள் ளைப் பெண்தான் இவரா என்று எனக்குக் கூற இயலாது. ஆனால் 1975-ம் ஆண்டு டப்பிங் சினிமா பார்க்கச் சென்ற சமயம் ஜாக்குலின் சுவரில் சாய்ந்து நின்றிருந்த அந்த குதூகலமான தோற்றத்தை என்னால் மறக்க இயலாது.