தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, May 04, 2018

பல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி

பல்லக்குத் தூக்கிகள் - சுந்தர ராமசாமி

O

1973

மனசு ரொம்பவும் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தது. ஓயாமல் ஒரு துக்கம். மனம் சதா அழுதுகொண்டிருக்கும். எதற்கு என்பது தெளிவாகவில்லை. 'எல்லாம் முடிந்தது. அவ்வளவுதான்' என்று மனசுக்குள் கசந்த முணுமுணுப்பு வெளிப்பட்டுக்கொண் டிருக்கும். இருந்தாலும் வெளிக்குச் சாதாரணமாக நடமாடிக் கொண்டிருந்தேன். நண்பன் சொன்ன மாதிரி இதில் ஒரு பயிற்சி இருந்தது. எவ்வளவு தான் தேற்றியும் தேறாமல். விஷம் நின்ற சடைநாய் மாதிரி மனம் புரண்டு புரண்டு துடித்தது. ஊர்விட்டு அலைவோமா என்று தோன்ற ஆரம்பித்தது. கஷ்டமான நாட் களை அலைந்து உடம்பை இம்சித்துக் கழித்திருந்தேன். இதில் நிவர்த்தியும் சொல்லும்படி இருந்தது இல்லை. இருந்தாலும் மூச்சுத்திணறிக் கிளம்பிச் சென்றேன். எங்கெல்லாம் சுற்றினேன் என்பது குழம்பிவிட்டது. உடம்பு க்ஷீணித்து. மனசும் தளர்ந்து,கடைத் திண்ணைகளில் உட்கார்ந்து போகிறவர்கள் வருகிறவர்களை இடுப்புக்குக் கீழ் பார்த்துக்கொண்டு கழிப்பேன். கடைசியில் ஒரு மலைக்கோயில் போய்ச் சேர்ந்தேன்.

அங்கு போகக் காரணம் தூரத்து நண்பன் ஒருவன் மனக்கஷ்டம் ஏற்பட்ட பொழுது அங்கு சென்றான் என்று மற்றொரு நண்பன் எந்தக் காலத்திலோ சொன்னது நினைவில் முளைத்ததுதான். ஒரு ஜே ஜே ஊர். அது தான் ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஒதுங்கி ஒதுங்கிப் போனாலும் கால்களும் கைகளும் கொத்துக் கொத்தாய் என் முகத்தில் வந்து சரிந்து கொண்டி ருக்கும். புயல் வரப்போவது மாதிரி சதா ஒரு இரைச்சல். படிக் கட்டுகளிலும் மண்டபங்களிலும் பெண்கள் தாறுமாறாய்க் கிடக் தார்கள். தள்ளித் தள்ளிப் போனதில் ஒரு மண்டபம் வந்து சேர்ந்திருந்தது. பக்கத்தில் ஒரு சுடுகாடு இருப்பது மாதிரியும். பிணத்தைப் பொசுக்க வந்தவர்கள்தான் மண்டபத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு எண்ணம். அப்படி இல்லை சாதா இடம் தான்.

ஆட்களுக்கு வாட்ட சாட்டமான உடம்பு. பயில்வான்கள்பல்லக்குத் தூக்கிகள் - மாதிரி. பக்கடா மீசைகள். முண்டாசு தார்பாய்ச்சிக்கட்டு. தொடை களில் எல்லாம் அட்டைகள் சுருண்ட மாதிரி ஒரே கறுப்பு மயிர். மொத்தத்தில் எனக்கு ஒரு அருவருப்பு ஏற்பட்டது. பொல்லாதவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது. பாதங்களில் நரம்பு புடைத்துத் தெறித்துக்கொண்டிருந்ததால் நிற்க முடியவில்லை. படியில் உட் கார்ந்தேன். பின்னாலிருந்து முரட்டுத்தனமான குரலில் எச்சில் தெறிக்கக் கத்திக் கொண்டிருந்தது எரிச்சலாக இருந்தது. பிரியத்துடன் கெட்ட வார்த்தைகள் சேர்த்து சேர்த்துப் பேசினார்கள். அவர்களுக்கும் எனக்கும் ஏதாவது உரசல் ஏற்படும் என்று எனக்கு மணத்துக்கொண்டிருந்தது. ஒரு சிலேடையும். சில கெட்ட வார்த்தைகளும் என் ஜாதியைக் குறிப்பது மாதிரி வந்தன. நான் எங்கள் ஊரில் இருப்பது மாதிரி இல்லாமல் சரியான ஊர் சுற்றி மாதிரி இருந்ததால் அப்படி ஏதாவது கிறீச்சிட்டால் கெட்ட வார்த்தைகளைக் கத்தித் தீர்க்கவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்ள விரும்பினேன். என்னிடம் தோற்றோம் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர்கள் என்னை வெட்டிப் புதைத்துவிடக்கூடும். இடமும் தோதாக இருந்தது.

ஒருவன் என் பின்பக்கத்திலிருந்து என் மணிக்கட்டில் உரசிக்கொள்வது மாதிரி நெருங்கி இறங்கி மண் தரையில் சாடினான். அவன் அனாவசியமாகக் கால்களை தொம்தொம் என்று வைத்து, இறங்கினான். தூசி கூடுதலாகக் கிளம்பி காலை வெயிலில் அந்தரத்தில் மஞ்சள் குளித்த மார்பில் தூண்கள் மாதிரி உருண்டன. அவன் சாமர்த்தியசாலி மாதிரி நின்றான். அவன் சாமர்த்தியம் என்ன என்று நான் கேட்டுக்கொண்டேன் .

அவன் மேல் மனசுக்குள் ஒரு கெட்ட வார்த்தை போட்டேன். இதனால் சிறிது சந்தோஷம் ஏற்பட்டது. அவனுடைய அசைவுகளும் முகபாவங்களும் தரங்கெட்ட நாடகப் பாங்காக இருந்தன. அவனுடைய கால்களுக்குப் பின்னால் கள்ளிப் புதர் பக்கம், வற்றல் கூழ் மாதிரி மலம் கழித்திருந்த வரிசைக்கு முன்னால் ஒரு பெரிய சாமான் தெரிந்தது. படுத்தாத்துணி போட்டுப் பெரிதாக மூடி வைத்திருந்தது அந்த சாமானை. என்ன அது தெரியவில்லை, வயிற்றோடு முகத்தைச் சேர்த்துக் கொண்டு தூங்கும் ஒரு ஒட்டகத்தைப் போர்த்தி வைத்திருந்த மாதிரி இருந்தது. குரலில் வாடை கலந்து வந்தது. எல்லோரும் குடித்திருந்த மாதிரி இருந்தது. - வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தை. ஒட்டகம் வாயாலும் காங்கனாலும் படுதாத் துணியை பலாத்காரமாக இடுக்கிக் கொண் தப்பது மாதிரி, கைகளால் தேர்வடம் இழுப்பது மாதிரி நடித்துக் கா அவன் படுதாத் துணியைச் சுருட்டி இழுத்தான். என் பாயிருந்து பெரிய திரிப்புக்கள் அருவருப்பாக வந்தன. ஒரு பல்லக்கு. அந்தக் காலம் வழிகிறது அதில். ஆகப்பழசு. தடித்தடியாகப் பழைய காலத்துக் கட்டைகள், கட்டைகளின் தொலியை சில இடங்களில் பூச்சி அரித்திருந்தது. அது சட்டையில் நூலைப் பிரித்த இடம் மாதிரி இருக்கிறது. உளுத்திருக்கவில்லை . சேர்மானம்கள் நல்ல நெருக்கம். ஊதுவத்தி குத்த முடியாது. ஒரு பக்கத்துக்கு எத்தனை பேர் தூக்குவார்களோ தெரியவில்லை.

''கிளம்புங்க அப்பா'' என்று கத்தினான் பல்லக்கை வெளிப் படுத்தியவன். எல்லோரும் ஆடியாடி வந்தார்கள். முழங்காலிலும் பாதங்களிலும் ரத்த ஓட்டம் ஸ்தம்பித்து சற்று மரப்புத் தட்டி விட்டதுபோல் ஒரு தினுசாக ஆடியாடி வந்தார்கள். மண்டபத்தின் இன்னொரு பக்கத்திலிருந்து ஒருவன் ஒரு அம்மியை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு வந்தான். பாரம் அழுந்த உயர்ந்திருந்த அவன் கைகள் நடுங்கின. அம்மி கையை மடக்கி விடும்போல் இருந்தது. கழுத்து நரம்புகளும் ஒரு மண் புழுவை நுழைத்தது போல் கவனத்தைக் கவரும்படி ஒரு நடுநெற்றி நரம்பும், புடைத் திருந்தன. அசப்பில் பின்பக்கம் திரும்பிய ஒருவன் இதைக் கவ னித்து ''விலகுங்கப்பா விலகுங்கப்பா'' என்றான். பலர் தவறாக விலகிக் கொண்டார்கள். அவன் அம்மியை மண்ணில் போட்டுவிட்டுப் பின்பக்கம் நகர்ந்தான். மண் கிழித்து புழுதி பறந்தது. சிலர் ஹம் ஹம் என்று ஒரு மூச்சுக் கலந்த அசட்டுச் சத்தத்தை ஏற்படுத்தினார்கள். அவன் ஓடிப்போய் ஒரு பெரிய குழவியை தூக்கிக்கொண்டு வந்தான். அது அம்மிக்குழவியல்ல. ஒரு ராட்ஸச ஆட்டுக்கல் குழவி. தலை பருத்து இடை ஒடித் தேய்ந்து பன்னம் வழவழவென்று நிறங்குறைந்து இருந்தது. இது போக இன்றும் இரண்டு சாமான்களையும் அவன் கொண்டுவந்து போட்டான். ஒரு மைல் கல். மேல் வளைவு உடைந்து, உடைத்த பகுதி அழுக்குப்படாமல் புதுசாக இருந்தது. இன்னொன்று என்னவோ ஒன்று. இது இரும்பு ஏர் மாதிரி இருந்தது. அதைப் பார்க்கும் போது அதன் கனம் நம் மனசை அழுத்தும். அது ஏதோ ஒரு யந்திரத்தின் உடைந்துபோன உறுப்பு. ரொம்ப விசித்திரமானது. அதை இழுத்துக்கொண்டுதான் வந்தார்கள். எல்லாவற்றையும் கயிற்றால் கட்டி ரொம்ப சிரமப்பட்டுப் பல்லக்குக்குள் துதி வைத்தார்கள். நான் எழுந்திருந்து அவர்கள் பக்கம் சென்று என் முகம் பார்த்தவனை எதற்கு என்று முகத்தால் கேட்டேன். அதற்கு அவன் ஒரு தினுசாகச் சிரித்தான். அது செவிடனின் மசகிப்பு மாதிரி இருந்தது. ஆனால் அவன் காது கேட்கிறவன்தான். எனக்குத் தெரிந்தது. எல்லோரும் முன்டா உததினார்கள், அப்போது மாறி மாறி எழுந்த உதறல் சத்தத்தில் யாருக்கு அதிக சத்தம் என்ற போட்டி ஏற்பட்டு அதில் பல கெட்ட சத்தங்களின் நினைவுகள் அவர்களுக்கு உண்டாகி. அதை உறுதி படுத்துவதுபோல் முனகல்களும் முகக் கோணல்களும் எழுந்தன. அவர்கள் எல்லோரையும் ஸ்திரீ தாகம் வாட்டி எடுப்பது மாதிரி தோன்றிற்று. அதற்காக அவர்களுடைய சதை அவர்களைக் கிள்ளிக்கொண்டிருப்பது மாதிரி இருந்தது. பல்லக்கு தோள் ஏறிற்று. நித்திய பழக்கம்போல் முன்பின் பிரிந்து கொண்டார்கள். தோள் மாற்ற கட்டைகளும் இருந்தன. அதை புளுதி பறக்கப் பொத்பொத்தென்று மண்ணில் ஊன்றிச் சென் றார்கள். நானும் அவர்கள் பாதங்களை பார்த்தபடி பின்னால் சென்றேன்.

மலைமேல் கோயில் போய்ச் சேரத்தான் புறப்பாடு என்று தோன்றிற்று. ஆனால் எத்தனை படிகள். காரை பெயர்ந்து செங்கல் உடைந்த அகலம் குறைந்த படிகள். நடு நடுவே தங்கி இளைப்பாற ஓடு வேய்ந்த கூரைகள். உடைந்து உதிர்ந்த ஓடுகள். இடையே பனங்காம்புகள். எத்தனையோ தடவை சுற்றிச் சுற்றி வந்திருந்தும் படிக்கட்டின் நுழைவு வாசல் எங்கே என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. மலையில் ஆங்காங்கு மனித உருவங்கள் அசைந்தன. பெண்களின் சிவப்புப் புடவைகள் வெயிலில் பளபளத்து இங்கும் அங்கும் காட்டுத்தீ போல் தெரிந்தன. நுழைவு வாசல் எனக்குப் புலப்படாமல் போனது ஒரு குறைவாக எனக்குப் பட்டது. ஏதோ மனசில் கற்பனை செய்து கொண்டேன். அங்கு ஒரு வளைவும் அதனடியில் யானையும் நிற்கும் என்று தோன்றிற்று. யானையைப் பிச்சையெடுக்கப் பண்ணிக்கொண்டிருப்பான் யானைப்பாகன். பிச்சை எடுக்கிறோம் என்பது யானைக்குத் தெரியாததால் யானை பிச்சையெடுக்க வில்லை என்றும் பிச்சை எடுப்போனும், பிச்சை கொடுப்போனும் ஒரே அம்சம் ஆதலால் யானைப்பாகனும் பிச்சை எடுக்கமுடியாது என்றும் எங்கள் அண்டை வீட்டு வை. மு. சாஸ்திரி சொல்லக் கூடும். சில சமயம் நான் அவரிடம்  சிக்கொண்டிருப்பேன். இருந்தாலும் இந்தப் பல்லக்குத் தூக்கிகள் நுழைவு வாசலை எப்படி வெளிப்படுத்த போகிறார்கள் என்பதில் எனக்கு ஏனோ கணத்திற்குக் கணம் ஆர்வம் பெருகிற்று. அவர்கள் சந்துசந்தாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்கள். புறப்பட்ட இடத்திற்கு இனி மேல் போக முடியாது. நான் சற்றும் எதிர்பாராத கணத்தில் வாசல் பளிச்சென்று முன்னெழும் என்ற எண்ணம் ஏற்பட்டு ஒரு கலவர உணர்ச்சி தோன்றியது.

அவர்கள் கள் நாற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். மேலதிகாரிகளையும், போதனைகளையும் புனிதத்துவத்தையும் 5. எள்ளி நகையாடுவதில் ரொம்பவும் சந்தோஷம் வெளிப்பட்டது. பார அழுத்தத்தால் குரல் அமுங்கி வந்ததால் காற்றை எதிர்த்து மிகுந்த ஆயாசப்பட்டுப் பேசினார்கள். மலையும். பெண்களின் சேலை நிறங்கள் விறகுத் தீ மாதிரியும் மீண்டும் தென்பட ஆரம்பித்தன. தெரிந்த கும்பல் மறைந்து, தெரியாத கும்பல் தெரிய ஆரம்பித்தது. பல்லக்குத் தூக்கிகள் முதுகுகளில் வியர்வை துளிர்த்தது. துளிகள் சேர்ந்து வியர்வைக் கோடுகள் இணைந்து கீழ் நோக்கி வேகமாக வழிந்து வேட்டிக்குள் இறங்கின. கனம் தாள முடியாமல் இறக்கக் கேவின. அவர்களுடைய அங்கங்கள் என்பது நடையின் தள்ளாட்டத்தில் தெரிந்தது. ''முருகா சோதிக்காதே அய்யா'' என்று ஒருவன் கத்தினான். ஒரு முனிவரின் முதுகில் அஸ்திரம் பாய்ந்தபோது வெளிப்பட்டதுபோல் உருக்கமாக இருந்தது. ''வந்தாச்சு. வந்தாச்சு'' என்றான் ஒருவன். படக் கென்று ஒரு திரும்பு திரும்பியது பல்லக்கு. ஒரு நுழைவு வாசல் வெளிப்பட்டது. நுழைவு வாசலில் ஒரு குட்டிக்கோவில். என்ன சாமி என்பது தெரியவில்லை. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து தான் பார்க்க வேண்டும். குட்டிக் கோவிலிலிருந்து சிலகஜ தூரத்தில் ஒரு மண்டபம் தெரிந்தது. சிறுநீர் கழிக்க முட்டிப்போனது மாதிரி அவர்கள் அவசரத்துடன் பொறுமை இழந்து பல்லக்கை இறக்கினார்கள். பல்லக்கை நேர்த்தியாகத் தொட வைத்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டு முயன்றும் மண்டபத் தரையில் அது இடித்துக் கொண்டு உட்காரும்படி ஆயிற்று. 'முருகா . சோதிக்காதே" என்று ஒருவன் கூவினான்.

எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து ஒரு ஒல்லி ஆசாமி வெளிப் பட்டான். டீக்கடை வாசலில் கறுப்புப் புதுசீட் பளபளப்பு சைக்கிளை அதன் சீட்டில் பிரியத்துடன் தட்டி முன் தள்ளி உருட்டிக் கொண்டுவந்தான். ஒரு பல்லக்குத் தூக்கி அவனைப் பார்ப்பதைப் பார்த்து. எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கஷ்டத்தினால், இடைவெளி அசிங்கப்பட்டு அழுத்த. அவர்களைக் கவனியாதுபோல் அவன் பராக்குப் பார்த்துக்கொண்டே வந்தான். வேப்ப மரத்தடியில் சைக்கிளைத் தூக்கி நிற்க வைத்து மீண்டும் சீட்டில் தட்டினான். சைக்கிள் அவனுக்குச் செல்வம். அதைச் செலுத்தித் தீராதவன் அவன். மண்டபத்தின் முன்னால் வந்ததும் முகத்தைத் துடைத்துக் கொண்டான் நல்ல பவித்திரமாக இருந்தான். கனைத்துவிட்டுப் பேச ஆரம்பித்தான்.

''எண்ணைக்கும் சொல்றத இண்ணைக்கும் சொல்றேன். அழுக்கத் தந்து சலவையை வாங்கிக்கிங்க."

அப்புறம்?

''முகத்தை வளிச்சுட்டு வாங்க. எச்சிலைத் துப்பாம இருங்க. புட்டியெச் சொறியாதீங்க.''

'அண்ணைக்கு மட்டும்தானா?''

 ''மகாராஜா வந்து போறவரை ....''

 ''மகாராஜாவா?''

''இல்லை பெரியவர். அதுதான் சரி. பெரீஈஈயவர். மாத்தி மாத்திச் சொல்றாங்க. ராஜான்னு சொல்றாங்க. கவர்னர்னுடறாங்க. திவான் டோய் என்கிறாங்க. குளப்பறாங்க. பொதுவாகச் சொல்றேன், பெரியவர்னு...''

''பொதுவாகப் பேசினா வம்பில்லே. பெரியவர்னு சொன்னா பெரியவர்தானே? என்னா எடை இருக்கும்?'' அ தமாஷ்க்கு இழுத்து கேலிக்கூத்தாக அடிக்கும் முனைப்புத் தெரிந்தது. சீரழித்துப் பார்க்க ஆசைப்படுவதை உணர்ந்து, பேசியவன் முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டான்.

''கும்பிடுங்க. கும்பிடறது நல்லது. பவ்வியம்; பவ்வியம். ரொம்ப முக்யம். முதுகை வளைச்சு வாயைப் பொத்தி ...''

'வாயைப் பொத்தி முதுகை வளைச்சு ... முதுகை ஒடிச்சு...'' ''பெரியவர் பல்லக்கிலே ஏறிக்கிறார்...'' 'விதானத்தைத் தூக்கணும்னு சொன்னீங்க..?''

''உட்கார்ந்து நகர முடியுமானு பாக்க, அசைவும் நட மாட்டமும் பாத்துவர, முந்திவர ஊருக்குப் போயிருக்காங்கா . வந்தாத் தெரியும்.''

''என்னப்பா .... முருகா... பழனியாண்டவா...''

''முருகான்னு கூப்பிட வேண்டாம். இப்பொ இல்லை. பெரியவர் முன்னாடி. சுப்ரஹ்மண்யா. சுப்ரஹ்மண்யா அப்ப உன்னு ...''

''ரொம்பக் கஷ்டம் ... சோதிக்காதீங்க...'

''கஷ்டமில்லை . பழகணும். பழகினா நாக்கு வளையும். உடம்பும் அப்படித்தான். மனசும் அப்படித்தான். புத்தியும் அப்படித் தான்...'

''சரி. அப்புறம்?' ''சொன்னதைச் சொன்னதைச் சொல்லச் சொல்றீங்க." 'கேட்டதைக் கேக்கறதுக்கு சுகமா இருக்கு...''

''பல்லக்குத் தோளை அழுத்தறதுன்னா வழக்கம்போல ஆய்வசாய்னு கத்தப்புடாது. பெரியவருக்கு சத்தம் ஆகாது. இறக்கணும்னா, 'வள்ளி வந்தாச்சு'ன்னு சொல்லுங்க. மறுபக்கத்துக்காரங்களுக்கும் சரினு பட்டுதுனா, அவங்க. 'அதுக்கென்ன தெய்வானையும் வந்தாச்சே' அப்படீன்னு சொல்லணும். இறக்கி

தாள் ஆத்திக்கிடலாம். இறக்கிப்புட்டு எப்பவும் செய்யறாப்லே

*"குக்குள்ளே எட்டிப் பாக்கப்படாது. வேர்வையை கட்டை விரலாலே வழிக்கப்படாது...''

அண்ணைக்கு மட்டும் தானே? ''அவரு எண்ணைக்கு வாறார்னு தெரியலே?'' ''அப்படீன்னா எண்ணைக்கும் இதே வேலையா?'

ஆயுள் பரியந்தம் செய்யணும்னாலும் செய்யவேண்டியது தான். இது இல்லைன்னாலும் இது மாதிரி இன்னொண்ணத் தான் செய்யவேண்டியிருக்கு. பழகிக்கிட்டா எல்லாம் சுலபமாகத் தெரியும். பழக்கம் விட்டுப்போனா உடம்பு வலி எடுக்கும்...''

அவன் மண்டபத்திலிருந்து இறங்கி வேகமாகப் படியேறினான். குழந்தைபோல் அனாயாசமாய் ஏறினான். சுமார் இருபது இருபத்தைந்து படிகள் ஏறியபின் சடேரென்று பின்னால் திரும்பினான். பல்லக்குத் தூக்கிகள் அவனைப் பார்த்துச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். அவன் முகத்தில் கடுகடுப்புடன் அவர்களை வெறித்துக்கொண்டிருந்தான்.

''ஐயா. ஐயா'' என்று கத்தியபடி ஒருவன் டீக்கடை வாசலிலிருந்து வந்தான். அவன் கையில் செய்திப் பத்திரிகை ஒன்று படபடத்துக்கொண்டிருந்தது. சாக்கடையில் விழுந்த ஒன்றை இருவிரல்களால் ஓரம் பிடித்துத் தூக்கிவருவது மாதிரித் தூக்கிவந்தான். படியேறி மேலே சென்றான். அவன் அருகில் சென்று பத்திரிகையை அப்படியும் இப்படியும் திருப்பி ஒரு இடத்தை விரல் சுட்டிக்காட்டினான். அவன் செய்தித்தாளை கையில் வாங்காமல் கண்ணோட்டம் விட்டான்.

''என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள் பல்லக்குத் தூக்கிகள்.

''ஒண்ணுமில்லே. பெரியவர் யாத்திரை ரத்தாகியிருக்குன்னு போட்டிருக்காங்க.''

''விடிஞ்சுதுடா அப்பா முருகா ... என் அய்யனே?'' கீழே சளசளவென்று பேச்சு ஆரம்பமாயிற்று.

''இதாப் பாருங்க. நமக்கு அதிகார பூர்வமா தெரிவிக்கலே. தூக்குங்க.''

எல்லோரும் தயங்கியவாறு நின்றார்கள். ''பழக்கம் விட்டுப் போச்சுன்னா உங்களுக்குத்தான் கஷ்டம். நாளைக்கே வாறார் என்ன அப்படினு மாத்திச் சொல்லுவாங்க. நாம நம்ம வேலை யைச் செய்துக்கிட்டே இருக்கணும்."

"அந்தக் கலப்பையை மட்டும் தூக்கி வெளியிலே வச்சுடலாமா? அளுத்துது.'

'இருந்துட்டுப் போவுது, ஜாஸ்தி தூக்கிப் பாசிகதி பின்னாலே ஏந்தல்.’

'வழக்கம் போல முருகானு கூப்பிடறோமே...'

'உங்க இஷ்டம்.'

 'முருகா முருகா' என்று கத்தியபடி பல்லக்கைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டார்கள். வெயில் உச்சியில் எறி இருந்தது. О

ஞானரதம் 1973

காத்டவி வித்துக்கள்.