தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, May 23, 2018

என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர்களிடம் சொல் - யுவான் ருல்ஃபோ :: ஆங்கிலம் வழி தமிழில் : அமரந்த்தா & சாரு

காலம் 1992.03 

_
இரண்டு மிகச் சிறிய புத்தகங்களே வெளிவந்திருந்தாலும் ருல்ஃபோ மெக்ஸிகோவின் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர். 1924இல் இவரது தந்தை கொல்லப்பட்டார். தொடர்ந்து இவரது உறவினர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர், இவரது தந்தையின் தந்தை கிரிஸ்டெரேர் கலகத்தின்போது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். சில ஆண்டு கள் கழித்து இவரது தாயும் இறந்தார். இவரது சிறுகதைத்தொகுப்பு : EI Ilano en llamas (1953) நாவல் : Pedro Paramo இரண்டாவது நாவல் 

என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர்களிடம் சொல்

இச்சிறுகதை ருல்ஃபோவின் "எரியும் சமவெளி'' என்ற தொகுப்பில் ஜார்ஜ்டி, சேடு --ஆல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம் வழி தமிழில் : அமரந்த்தா & சாரு________________




''என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர் களிடம் சொல், ஹஸ்தினோ! போய்ச் சொல். உனக்குப் புண்ணியமாகப் போகட்டும். அவர்களிடம் சொல். தயவு செய்து சொல்.''

''என்னால் முடியாது. அங்கே ஒரு சார்ஜண்ட் இருக்கிறார், உன்னைப் பற்றி எதைச் சொன் னாலும் அவர் கேட்கத் தயாராக இல்லை .''

''சாமர்த்தியமாகச் சொல்லிப் பார். இதுவரை என்னை பயமுறுத்தியதே போதும் என்று அவரி டம் சொல் உனக்குப் புண்ணியமாகப் போகட்டும்.”

''ஆனால் அது உன்னை வெறுமனே பயமுறுத்துவதற்காக அல்ல. நிச்சயமாக அவர்கள் உன்னைக் கொல்லத்தான் போகிறார்கள். இந்த நிலையில் நான் மறுபடியும் அங்கே போக விரும்பவில்லை .''

''இன்னும் ஒரு முறை போய்ப் பார். ஒரே ஒரு முறை போய் உன்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்.''

''இல்லை, எனக்குப் போக வேண்டுமென்று தோன்றவில்லை. இப்போது நான் போய் அவர்களைத் தொந்தரவு செய்தால் நான் உன்
நிலத்தில் மேய விட்டால் நான் அவைகளைக் கொன்று போடுவேன்.''

"கால்நடைகள் அவைகளின் இஷ்டத்திற்கு போவது என் தவறல்ல. அவைகளுக்கு ஒன்றும் தெரியாது. நீ அவைகளைக் கொன்றால் அப் புறம் நான் உன்னைச் சும்மா விடமாட்டேன்' என்று இவன் அதற்கு பதில் சொன்னான்.

பிறகு அவன் என்னுடைய ஒரு வயதுக் குட்டி ஒன்றைக் கொன்றான்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மார்ச் மாதம் நடந்தது அது. ஏனென்றால் ஏப்ரலில் நான் சம்மனிலிருந்து தப்பி மலை களுக்கு வந்து விட்டேன். பத்து பசுக்களையும் என் வீட்டின் உரிமையையும் ஜட்ஜூக்குக் கொடுத்தும் கூட சிறைத் தண்டனையிலிருந்து " நான் தப்ப முடியவில்லை . அதற்குப் பிறகும் அவர்களின் தொந்தரவிலிருந்து தப்பிக்க மிச்சம் மீதி இருந்ததையும் கொடுத்தேன். ஆனாலும் தொந்தரவு விட்டபாடில்லை. அதனால் தான் நான் என் மகனோடு பாலோ தெ வெனாடோ என்கிற எனக்குச் சொந்தமான இந்த நிலத் திற்கு வந்து சேர்ந்தேன். பிறகு என் மகனும் வளர்ந்து பெரியவனாகி என் மருமகள் இக்னாசி யாவுடன் திருமணமாகி இப்போது எட்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆக, இது எப் போதோ வெகு காலத்திற்கு முன்பு நடந்த ஒன்று. இப்போது மறக்கப்பட வேண்டியது. ஆனால் அப்படி ஆகவில்லை என்று தோன்று கிறது.

ஒரு நூறு பெஸோக்களால் எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்று அப்போது கணக் கிட்டேன். செத்துப் போன தோன் லூப்பே அவன் மனைவியையும் இரண்டு கைக் குழந்தை களையும் தான் விட்டுச் சென்றான். அப்படி யும் அவன் மனைவியும் கூட விரைவில் செத்துப் போனாள் என்று அவர்கள் வேதனையுடன் சொன்னார்கள். குழந்தைகளை அவர்கள் எங்கோ தூரத்திலுள்ள உறவினர்களிடம் கொண்டு சேர்த்தார்கள். எனவே அவர்களிடம் பயப்படுவதற்கு எதுவும் இல்லை .

- :னால் என் பொருட்களைத் திருடி அனுபவித் துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண் ணத்தில் தான் மற்றவர்கள் இன்னமும் எனக்கு சம்மன் வந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். கிராமத்திற்கு யார் வந்தாலும் என்னிடம் வந்து ''யாரோ அந்நியர்கள் வந்திருக்கிறார்கள். ஜாக்கிரதை, ஹுவென்சியோ'' என்று சொல் லிக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் மலைகளுக்கு ஓடி வந்து அங் குள்ள மரக் கூட்டங்களிடையே ஒளிந்து கொண்டு புல் பூண்டுகளைத் தின்று கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பேன். நாய் கள் என்னைத் துரத்தி வருவது போல் சமயங் களில் நடு நிசியில் கூட நான் அப்படி ஓடி ஒளிய நேர்ந்திருக்கிறது. என் வாழ்க்கை முழுவதுமே இப்படித்தான் கழிந்தது. ஒரு வருடமோ இரண்டு வருடமோ அல்ல. என் வாழ்க்கை முழுக்கவும் இப்படிக் கழிந்தது. -

ஆனால் இப்போது அவர்கள் வந்திருக்கிறார் கள். மக்கள் அந்தச் சம்பவம் பற்றி எல்லாவற் றையும் மறந்து விட்டார்கள் என்ற தைரியத் தில் இனிமேல் தனக்காக யாரையும் அவன் எதிர்பார்த்திராத இந்தத் தருணத்தில் இனி குறைந்த பட்சம் தனது இறுதி நாட்களையா வது நிம்மதியாகக் கழித்து விடலாம் என்று நம்பியிருந்த போது அவர்கள் வந்திருக்கிறார் கள், ''குறைந்த பட்சம் என் கடைசி காலத்தி லாவது எனக்குச் சிறிது அமைதி கிடைக்கும். அவர்கள் என்னை நிம்மதியாக விட்டு விடுவார் கள்” என்று அவன் நினைத்தான்.

-அவன் மனப் பூர்வமாக தனது அந்த நம்பிக்கை யில் உறுதியாயிருந்தான். அதனால்தான் மரணத்திலிருந்து தப்பிக்க இவ்வளவு தூரம் போராடிய பிறகு, வாழ்வின் முக்கிய மான காலத்தையெல்லாம் அவர்கள் வருவதை யறிந்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஓடி ஒளிவதிலேயே கழித்து விட்ட பிறகு, எல்லாரிடமிருந்தும் தப்பிக்கும் பொருட்டு ஒளிந்து வாழ்ந்த அந்தக் கொடுமையான நாட் களெல்லாம் உடம்பில் வடுக்களாய்ப் படிந்து உடல் வற்றி தோலாய்ச் சுருங்கிய பிறகு, இப் போது வாழ்வின் அந்திமக் காலத்தில் திடீ ரென்று கொல்லப்படுவோம் என்று நினைத்துப் பார்க்கவே முடியாததாக இருந்தது.

அவன் தன் மனைவி தன்னிடமிருந்து பிரிந்து போனதைக்கூட சகித்துக் கொள்ளவில்லையா? அவன் மனைவி ஓடிப் போய் விட்டாள் என்று அறிந்த அன்று அவளைத் தேடிப் போக வேண்டும் என்று அவன் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. அவள் யாரோடு எங்கே போனாள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், போனது போகட்டுமென்று இருந்து விட்டான். இனிமேல் கீழே கிராமத்திற்குப் போக வேண்டி யிருக்காது. மற்ற எல்லா இழப்புக்களையும் சகித்துக் கொண்டது போலவே இதற்கும் அவன் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இனிமேல் அவனுக்கு கவலைப்பட எஞ்சியதெல் லாம் அவனுடைய வாழ்க்கை மட்டும் தான். அதை அவன் செய்வான்-வேறு எதைச் செய்ய முடியாவிட்டாலும் யாரும் தன்னைக் கொல்லும் படி விட்டு விட மாட்டான். இதுவரை அவ னால் அது முடியவில்லை. இப்போது அது முடியவே முடியாது.

ஆனால் அதற்காகத்தான் அவர்கள் அவனை அங்கிருந்து கொண்டு வந்தார்கள். அவனைக் கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவனே அவர்களைத் தொடர்ந்து சென்றான். பயத்தினால் கட்டப்பட்டு தனியாகச் சென்றான். எலும்பும் தோலுமாய் வற்றிக் கிடந்த அவனது வயோதிக உடம்பு மரண பயத்தினால் மேலும் ஒடுங்கியிருந்த நிலையில் அவனால் ஓடிவிட முடியாதென்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சாவை நோக்கித்தான் அவன் அழைத்துச் செல்லப்பட்டான். சாவை நோக்கி. அப்படித் தான் அவர்கள் அவனிடம் சொன்னார்கள்.

அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. சாவை வெகு அருகாமையில் பார்க்கும் போதெல்லாம் வயிற்றில் ஏற்படும் தேள் கொட் டினாற் போன்ற வலியை உணர ஆரம்பித்தான். பயத்தினால் கண்கள் விரிய வாயில் எச்சில் ஊற மிடறு விழுங்கினான். கால்கள் கனப்பதை, தலை சுழல்வதை, நெஞ்சுக் கூட்டை உடைத்து விடுவது போல் இதயம் துடிப்பதை உணர்ந் தான். அவர்கள் தன்னைக் கொல்லப் போகி றார்கள் என்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை .

இன்னமும் கொஞ்சம் நம்பிக்கை மீதமிருக் கிறது. அவர்கள் தன்னை தவறுதலாக அழைத்துச் சென்றிருக்கலாம். ஒரு வேளை வேறு ஒரு ஹுவென்சியோ நாவாவுக்குப் பதிலாக அவர்கள் தன்னைப் பிடித்திருக்கலாம். அவர்களுக்கிடையே அவன் கைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமைதியாக நடந்து கொண்டிருந்தான். வானம் நட்சத்திரங்களின்றி இருண்டிருந்தது. வறண்டிருந்த அந்தப் பூமி யில் மெலிதான காற்று லேசாய் வீசிக் கொண் டிருந்தது. தூசு படிந்த சாலைகளுக்கேயுரிய மூத்திர நெடி அடித்தது.

முதுமையினால் ஒடுங்கியிருந்த அவன் கண்கள் அந்த இருட்டிலும் அவனது காலடியிலிருந்த பூமியையே பார்த்துக் கொண்டிருந்தன. அவ னது வாழ்க்கையே : இந்த மண்தான். இந்த மண்ணில்தான் அவன் அறுபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். கைகளால் அளைந்திருக் கிறான். உணவைப் போல் ருசித்திருக்கிறான். வெகு நேரம் 'இது தான் கடைசி தடவை' என்பது போல்-இது கடைசி தடவை தான் என்பது அவனுக்கு கிட்டத்தட்ட புரிந்து போய் ! விட்டது-ஒவ்வொரு துளியாகக் கண்களால் . தழுவினான்.

பிறகு, எதையோ சொல்ல விரும்புவது போல் தன்னுடன் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தான். தன்னை விட்டு விடும்படி அவர் களிடம் சொல்லப் போகிறான். '' நான் யாரை யும் ஒன்றும் செய்து விடவில்லை , தம்பிகளே” என்று அவன் அவர்களிடம் சொல்லி விடப் போ கிறான். ஆனால் சொல்லாமல் மெளன மானான். இன்னும் கொஞ்ச தூரம் சென்று சொல்லலாம் என்று நினைக் கிறான். அவர் களை வெறுமனே பார்க்கிறான். அவர்கள் தனது நண்பர்கள் என்று கூட அவனால் நினைக்க முடிகிறது. ஆனால் அதை அவன் விரும்பவில்லை. அவர்கள் நண்பர்கள் அல்ல, அவர்கள் யாரென்று அவனுக்குத் தெரியாது, தன் இரு பக்கமும் அவர்கள் வருவதையும் சாலையின் தொடர்ச்சியைக் காண அவ்வப் போது வளைந்து பார்ப்பதையும் கவனித்தான். எல்லாமே மங்கித் தெரியும் அந்த இரவு கவியும் நேரத்தில்தான் அவன் அவர்களை முதன் முதலில் பார்த்தான். விளை நிலங்களின் மேல் சோள நாற்றுக்களை மிதித்துக் கொண்டு அவர் கள் நடந்தார்கள். அங்கே சோளப் பயிர் இருப் பதை அவன் தான் அவர்களுக்குத் தெரிவித் தான். அது ஒன்றும் அவர்களை நிறுத்தி விட வில்லை .

அவர்களை அவன் சரியான சமயத்தில் பார்த்து விட்டான். எல்லாவற்றையுமே சரியான சமயத்தில் பார்க்கும் அதிர்ஷ்டம் அவனுக்கு எப்போ துமே இருந்து வந்திருக்கிறது அவன் உடனே ஒளிந்து கொண்டிருந்திருக்க முடியும். அவர் கள் திரும்பிப் போகும் வரை சில மணி நேரம் மலையில் மறைந்திருந்து விட்டுப் பிறகு கீழே இறங்கியிருக்கலாம்.


ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை மழை இல்லாததால் சோளப் பயிர் கருக ஆரம்பித்து விட்டது . இன்னும் கொஞ்ச நாளில் முற்றிலுமாகக் காய்ந்து விடும். ஆக, அவன் எதற்காகக் கீழே போனானோ அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. மீண்டு வர முடியாத குழியில் அகப்பட்டுக் கொண்ட மாதிரிதான் ஆகி விட்டது அவன் போய் அவர்களைப் பார்த்தது.

தன்னை விட்டு விடும்படிச் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பியபடியே அவர் களின் பின்னே சென்று கொண்டிருந்தான், அவர்களின் முகத்தை அவன் பார்க்கவில்லை. தன் முன்னும் பின்னுமாய் அசைந்த அவர் களின் உடம்பை மட்டுமே பார்க்க முடிந்தத'. அதனால், தான் பேசியது அவர்கள் சா தில் விழுந்ததா என்றே அவனால் அனுமானிக்க முடியாதிருந்தது. '' நான் யாருக்கும் எந்தத் தொல்லையும் கொடுத்ததில்லை” என்றான். அவன் சொன்னது அதுதான். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை . ஒருவர் கூட அவன் சொன்னதைக் கேட்டதாகத் தெரியவில்லை. யாரும் அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. தாக்கத்தில் நடப்பது போல் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள்.

சொல்வதற்கு இனி எதுவுமில்லை என்று நினைத்தான். நம்பிக்கையை வேறு விதமாகத் தான் தேட வேண்டும். கைகளை மீண்டும் தொங்க விட்டபடி இரவால் இருண்ட அந்த நால்வருக்கிடையே கிராமத்து வீடுகளைத் தாண்டிப் போனான்.

கர்னல், இதோ அழைத்து வந்து விட்டோம்.” - '' கிய வாசலின் முன்னே அவர்கள் வந்து நின்றார்கள். தொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு பவ்யமாக யாரையோ எதிர்பார்ப்பது போல் நின்றான் அவன். ஆனால் யாரது?' என்ற குரல் மட்டுமே கேட்டது.

''பாலோ தெ வெனாதோவிலிருந்து நீங்கள் அழைத்து வரச் சொன்ன ஆள் தான், கர்னல்”.

''அலிமாவில் அவன் எப்போதாவது வசித்ததுண்டா என்று கேள்'' என்று திரும்பவும் உள்ளிருந்து கேட்டது குரல்.

"ஏய், நீ அலிமாவில் எப்போதாவது வசித்ததுண்டா?'' - எதிரே நின்று கொண்டிருந்த சார்ஜண்ட் அதே கேள்வியைத் திரும்பக் கேட் டான்,

"ஆமாம், அதுதான் என்னுடைய ஊர் என்று கர்னலிடம் சொல்லுங்கள். சமீப காலம் வரை நான் அங்கேதான் இருந்தேன்.''

''லூப்பே தெர்ரரோஸை அவனுக்குத் தெரி யுமா என்று கேள்.''

"லூப்பே தெர்ரரோஸை உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார்.”

''தோன் லூப்பேவையா? தெரியும். எனக்கு அவனைத் தெரியுமென்று அவரிடம் சொல்லுங் கள். அவன் செத்து விட்டான்.''

உள்ளிருந்து வந்த குரலின் தொனி இப்போது மாறியது : ''அவன் செத்துவிட்டான் என்று எனக்குத் தெரியும்'' - அந்தக் கோரைப்புல் தடுப்பின் மறு பக்கத்திலுள்ள ஒருவருடன் பேசும் தொனியில் தொடர்ந்தது குரல். ''தெர்ரரோஸ் எனது தந்தை. நான் வளர்ந்த பிறகு அவரைப் பற்றிக் கேட்ட போது அவர் இறந்து விட்டார் என்று சொன்னார்கள். நாம் எதைப் பற்றிக் கொண்டு, எதிலிருந்து வேர் விட்டு வளர வேண்டுமோ அது கிள்ளியெறியப் பட்டு விட்டது என்று தெரிந்து கொண்டே வளர்வது என்பது மிகப் பெரிய கொடுமை. எங்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. ''பிறகு தான் தெரிந்தது அவர் கொலை செய் யப்பட்டார் என்று. முதலில் கோடாரியால் வெட்டி பிறகு எருமைக் கொம்பால் அவர் வயிற்றைக் கிழித்திருந்தார்கள். அப்படியே அவர் இரண்டு நாட்கள் குற்றுயிராய்க் கிடந் திருக்கிறார். இந்த நிலையில் அவர் ஒரு வாய்க்காலில் கிடப்பதைக் கண்டுபிடித்த போது தன் குடும்பத்தாரைக் கவனித்துக் கொள்ளும் படி கெஞ்சியிருக்கிறார்._

“காலப் போக்கில் இது மறந்து விட்டாற்போல் தான் தோன்றும். மறக்கத்தான் முயற்சியும் செய்கிறோம். ஆனால் எவன் அதைச் செய் தானோ அவன் இன்னும் உயிரோடுதான் இருக் கிறான் என்பதை எப்படி மறக்க முடியும்? அவனை எனக்குத் தெரியாது. ஆனாலும் வாழ்க்கை நிரந்தரமானது என்ற மாயையில் தன் அழுகிப்போன ஆத்மாவை சீராட்டிக் கொண்டிருக்கும் அவனை என்னால் மன்னிக்க முடியாது. அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரிந்து விட்ட காரணத்தால் அவனை முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். இன்ன மும் அவன் உயிரோடிருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. அவன் பிறந்திருக்கவே கூடாது.'' அவர் பேசியதெல்லாம் இங்கே வெளியிலிருந்தே தெளிவாகக் கேட்டது.

அவனைக் கொண்டு போய் கட்டிப் போடுங் கள். நன்றாக வேதனைப் படட்டும். பிறகு சுடுங்கள்'' என்று உத்தரவிட்டார்.

கர்னல், என்னைப் பாருங்கள், இப்போது நான் எதற்கும் பயனற்றவன். தள்ளாமை யால் நானே விரைவில் செத்துவிடுவேன். என்னைக் கொன்றுவிடாதீர்கள்'' என்று கெஞ் சினான் அவன். கொண்டு போங்கள் அவனை!'' - உள்ளி ருந்து மீண்டும் கேட்டது குரல்,

நான் ஏற்கனவே வேண்டிய தண்டனையை அனுபவித்து விட்டேன், கர்னல், என்னிட மிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு விட்டார்கள். பல விதங்களில் என்னைத் துன் புறுத்தினார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என்ற பயத்தி லேயே கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் குஷ்ட ரோகியைப் போல் ஒளிந்து வாழ்ந்தேன், கர்னல். இந்த மாதிரி சாக நான் என்ன பாவம் செய்தேன். கடவுளாவது என்னை மன்னிக் கட்டும். என்னைக் கொன்று விடாதீர்கள் ! என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர் களிடம் சொல்லுங்கள் !”

அங்கே அவன் கிடந்தான். தொப்பியால் தரையை அறைந்து கொண்டு அடித்துப் போட்டது போல் புலம்பிக் கொண்டு கிடந்தான் அவன்.

உடனே உள்ளிருந்து வந்த குரல் சொன்னது : ''அவனைக் கட்டிப் போட்டு அவன் நினை விழக்கும் வரை மதுவைக் கொடுங்கள். அப் போது தான் துப்பாக்கிச் சூடு அவனுக்கு உறைக்காது.''

இறுதியில் அவன் ஒரு வழியாக அமைதி அடைந்தான். அதோ அந்தக் கம்பத்தின் கீழே விழுந்து கிடக்கிறான். அவன் மகன் ஹுஸ் தினோ வந்து வந்து போனான். இப்போது மறுபடியும் திரும்பி வந்து போய்க் கொண்டிருக் கிறான்.

உடலை கழுதையின் மேல் வைத்து வழியில் விழுந்து விடாமலிருக்கும்படி இறுகக் கட்டினான். ஏதும் வித்தியாசமாய்த் தோன்றாம லிருக்க தலையை சாக்கினுள் வைத்து மறைத் தான். பிறகு இறந்தவனுக்கான சடங்குகளை விரைவில் செய்து முடிப்பதற்காக பாலோ தெ வெனாதோவை நோக்கிச் செல்ல அவசரத் துடன் கழுதையைக் கிளப்பினான்.

''உன் மருமகளும் பேரக் குழந்தைகளும் உன்னைத் தேடுவார்கள். அவர்கள் உன் முகத்தைப் பார்த்து அது நீ தான் என்று கண்டு பிடிக்க முடியாது. துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகி விட்ட உன் முகத்தைப் பார்க்கும் போது ஓநாய்கள் உன்னைத் தின்று விட்டது என்று தான் அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்” என்று இறந்தவனிடம் சொன்னான்.

0 0 0


________________

19. கொத்துப் பரோட்டா மொழிபெயர்ப்பு! 

சாரு நிவேதிதா

காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் ஒருமுறை சொன்னார். அந்த நாவல் முழுவதையும் என்னால் மனப்பாடமாகச் சொல்ல முடியும் என்று.
திவ்ய பிரபந்தத்தை மனப்பாடமாகப் பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், உரைநடையால் அமைந்த ஒரு நாவலை யாரேனும் மனப்பாடமாகச் சொல்ல முடியுமா? முடியும் என்கிறார் மார்க்கேஸ். மார்க்கேஸ் என்ன சாதாரண நபரா? லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிக முக்கியமான புள்ளி. உலகமெங்கும் கொண்டாடப்பட்ட One Hundred Years of Solitude நாவலை எழுதியவர். அப்பேர்ப்பட்ட ஒரு இலக்கியவாதி சொல்கிறார். அந்த நாவல் எனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று. 'லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அந்த நாவல் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய வேறொரு நூல் கிடையாது' என்கிறார் சூஸன் ஸொன்டாக்.

இத்தனை பாராட்டுகளுக்குரிய அந்த நாவலின் பெயர் பேத்ரோ பராமோ. எழுதியவர் யுவான் ருல்ஃபோ. மெக்ஸிகோவைச் சேர்ந்தவர். 1918ஆம் ஆண்டு பிறந்த ருல்ஃபோ 1926-1929ஆம் ஆண்டுகளில் நடந்த கிறிஸ்தெரோக்களின் கலகத்தில் தன் தந்தையை இழந்தவர். கிறிஸ்துவின் பெயரால் மதவாதிகள் கம்யூனிஸ்டுகளையும் பகுத்தறிவுவாதிகளையும் கொன்றொழித்ததுதான் கிறிஸ்தெரோக்களின் கலகம் என்று சொல்லப்படுகிறது. சமீபத்தில் குஜராத்தில் பார்த்தோமே அதைப்போன்ற கொடுமைகளுக்கு அப்போது கம்யூனிஸ்டுகள் ஆளாயினர். அவர்களின் காதுகளும் நாக்குகளும் அறுக்கப்பட்டன. கண்கள் பிடுங்கப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். அதாவது, நாத்திகவாதிகளுக்குக் கிறிஸ்துவின் பெயரை உச்சரித்தபடி மதவாதிகள்  கொடுத்த தண்டனை இது!

நாம் ருல்ஃபோவிடம் வருவோம். கம்யூனிஸ்டுகள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராமங்களில் நிலமற்ற ஏழை விவசாயிகள் நூற்றுக்கணக்கான பேர் இந்த மதவாதிகளால் கொல்லப்பட்டனர். இதே விதத்தில்தான் ருல்ஃபோவின் தந்தையும் கொல்லப்பட்டார். அதை சிறுவனாக இருந்த ருல்ஃபோ காண நேர்ந்தது. இந்த நிகழ்ச்சி அவரது வாழ்விலும் சிந்தனையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு குரூரமான முறையில் தந்தையை இழந்த ருல்ஃபோ பின்னர் தாயையும் இழந்து அனாதை விடுதிகளில் வளர்ந்தார்.
1953இல் அவரது முதல் சிறுகதைத் தொகுதி EIllano en illamas வெளியாயிற்று. 1955இல் 'பேத்ரோ பராமோ' என்ற நாவல் வெளிவந்தது. ருல்ஃபோ எழுதியவை மிகவும் சொற்பம். பதினைந்து சிறுகதைகள், ஒரு நாவல். ஆனாலும் தன் வாழ்நாளிலேயே கொண்டாடப்பட்டவர் அவர். பேத்ரோ பராமோவுக்குப் பிறகு அவர் ஒரு நாவலை எழுதினார். ஆனால், சாகும் தறுவாயில் அதை வெளியிடாமல் அழித்துவிட்டார்.

பேத்ரோ பராமோவின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு சூஸன் ஸொன்டாக் எழுதிய முன்னுரையின் ஆரம்பத்தில் நாவலின் துவக்க வாக்கியங்களை மேற்கோள் காண்பித்து நாம் ஒரு அற்புதமான கதை சொல்லியின் கைகளில் மாட்டிக்கொண்டு விட்டோம் என்பதை இத்துவக்க வாக்கியங்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன' என்கிறார். ஆனால், பேத்ரோ பராமோவின் தமிழ் மொழிபெயர்ப்பை ஆவலுடன் புரட்ட ஆரம்பித்தால் நாம் ஒரு கசாப்புக் கடை மொழிபெயர்ப்பாளரிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோம் என்றே தெரிகிறது.

ஆட்டுக் கறியைக் கொத்துவதுபோல் ருல்ஃபோவைக் கொத்திக் குதறியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பராமோ என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்குப் பாழ்நிலம் என்று பொருள். அதாவது கதை நாயகனான யுவான் தன் தந்தையைத் தேடி கொமாலா என்ற ஊருக்கு வருகிறான். அந்த ஊரில் வசிப்பவர்கள் வெறும் நடமாடும் பிரேதங்கள். அது ஒரு பாழ்நிலம் என்பதாக நாவல் சொல்லுகிறது. ஆனால், மொழிபெயர்ப்பாளரோ பேத்ரோ பராமோவைப் பாம்பின் வால் என்று மொழிபெயர்த்துள்ளார். நல்ல வேளை கழுதையின் வால் என்று எழுதாமல் விட்டார். தப்பினோம்!
பாம்பு என்பதற்கு ஸ்பானிஷில் பொதுவாக ஸொப்பியந்த்தே என்பார்கள். விஷமுள்ள பாம்பு - லிபோரா. விஷமற்ற பாம்பு - குலேப்ரா.
பேத்ரோ என்பது மீட்டர் என்பதன் ஸ்பானிய வடிவம். தமிழில் விவிலியத்தில் பேதுரு என்று வரும்.
(தமிழுக்கும் ஸ்பானிஷக்கும் உச்சரிப்பில் பல ஒற்றுமைகள் உண்டு. தில்லியில் அர்ஜென்டீனிய தூதரகத்தில் நான் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டபோது பாதியில் விட்டுவிட்டேன். அது வேறு விஷயம். அங்கே நான் ஒருவன்தான் தமிழன். மற்றவர்கள் வெளிநாட்டினர் மற்றும் இந்திக்காரர்கள். ஃப்ரெஞ்சும், ஆங்கிலமும் மட்டுமே அறிந்தவர்களுக்கு ஸ்பானிஷ் கடினமாகவும் எனக்குச் சுலபமாகவும் இருந்ததை அறிந்தேன். காரணம், ஸ்பானிஷில் எல்லா எழுத்துக்களையும் உச்சரித்தாக வேண்டும். இதைப் பார்த்து அவர்கள் மருண்டார்கள். ஆனால், நமக்கு இது சுலபம். தமிழிலும் மற்ற பல இந்திய மொழிகளிலும் மௌன எழுத்துக்கள் கிடையாது.

எல்லா எழுத்துக்களையும் உச்சரிப்பது ஸ்பானிஷின் சிறப்புகளில் ஒன்று என அம்மொழியை அறிந்தவர்கள் சொல்வார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட அறிந்துகொள்ளாமல் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் (Jorge Luis Borges)இன் பெயரைப் பல விதங்களிலும் கொலை செய்து வருகின்றனர். அவர் பெயரைக் குறிப்பிடும் அத்தனை பேருமே போர்ஹே என்றும் லூயி போர்ஹே என்றும் குறிப்பிடும் காரணம் என்ன என்பதும், ஏன் போர்ஹேஸ் என்ற பெயரை அத்தனை பேரும் சொல்லி வைத்ததுபோல் ஒரு எழுத்தை முழுங்கி விட்டு போர்ஹே என்கிறார்கள் என்பதும் சத்தியமாக எனக்குப் புரியவில்லை. இதற்கிடையில் 'ஜோர்ஜ் லூயி போர்ஹே' என்ற தலைப்பில் சினிமாப் பாட்டுப் புத்தகத்தின் தரத்தில் தமிழில் ஒரு புத்தகம் வேறு வந்துள்ளது! ஷேக்ஸ்பியரின் பெயரை 'ஷேக்பியர்' என்று எழுதினால் எத்தனை அவலமோ, அத்தனை அவலமானது போர்ஹேஸின் பெயரை போர்ஹே என்று எழுதுவது! சரி. நாம் இப்போது கழுதை வாலை - ஸாரி பாம்பின் வாலைப் பிடிப்போம்...)

பேத்ரோ பராமோ என்ற நாவலில் பேத்ரோ என்பது இரண்டு பொருள்களில் வருகிறது. ஒன்று - யுவானின் தந்தையின் பெயர் பேத்ரோ பராமோ. மற்றொரு பொருள் - தன் சொந்த இடத்துக்கு வருதல் என்பதையும் இப்படிச் சொல்வார்கள். எந்த்ரார் கோமோ பேத்ரோ போர்சு காசா... entrar como pedro por su casa.
நல்ல வேளையாக மொழிபெயர்ப்பாளர் பேத்ரோ பராமோ நாவலுக்கு பாம்பின் வால் என்று பெயர் வைத்துவிடவில்லை. 'பெட்ரோ பராமோ' என்றே வைத்துள்ளார். இருந்தாலும் 'பெட்ரோ' என்று சொல்லும்போது ஸ்பானிஷின் தனித்துவம் கெட்டு, பெட்ரோல் பங்க் ஞாபகம் வந்துவிடுகிறது. t, d எல்லாம் ஸ்பானிஷில் 'த்த', 'த'வாக மாறிவிடும். ஸ்பானிஷ் அவ்வளவு மென்மை என்பார்கள். ட்ட (t) என்பது எதையோ உடைப்பதுபோல் இருக்கிறதாம்!
பாம்பின் வால் எங்கே தென்படுகிறது என்றால் 'பேத்ரோ'வில் அல்ல. எரியும் சமவெளி என்ற ருல்ஃபோவின் சிறுகதைத் தொகுப்பில். இதையும் 'பெட்ரோ' மொழிபெயர்ப்பாளரே பெயர்த்திருக்கிறார். அதில்தான் ருல்ஃபோ 'பாம்பின் வால்' என்று ஒரு நாவல் எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ருல்ஃபோவின் ஒரு சிறுகதையை பத்து ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்து தமிழ் உலகுக்கு அடியேன் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். (யாரும் கண்டுகொள்ளவில்லை. அது வேறு). அந்தக் கதையின் தலைப்பு: என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர்களிடம் சொல்!'

அந்தக் கதையில், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தகராறின்போது கோபத்தில் கொலை செய்துவிடுகிறான் ஒருவன். மரண தண்டனைக்குப் பயந்து வேறு ஊருக்கு வந்து, தன் மகன் ஹுஸ்தினோவுடன் வாழ்ந்து வரும்போது அவனை வயதான காலத்தில் ஒரு கர்னல் பிடித்துச் சென்று கொன்று விடுகிறான். அந்தக் கர்னல் யார் என்பதைச் சொல்ல மாட்டேன். கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இப்போது கொத்துப் பரோட்டா மொழிபெயர்ப்புக்கு வருவோம். நாம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மொழிபெயர்த்த கதையாயிற்றே என்ற ஆர்வத்துடன் 'எரியும் சமவெளி' புத்தகத்தை வாங்கி அவசர அவசரமாகப் பக்கங்களைப் புரட்டி என்னைக் கொல்ல வேண்டாம்' கதைக்கு ஓடி வந்தேன். வந்தவுடனேயே விழுந்தது ஒரு அடி . கதையின் ஆரம்பத்திலேயே 'கசாப்பு' வேலை.
'என்னைக் கொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் சொல். ஜஸ்டினோ! அவர்களிடம் போய்ச்சொல். ஆண்டவனுக்காக! அவர்களிடம் சொல். ஆண்டவனுக்காகத் தயவு செய்து அவர்களிடம் சொல்.'

படித்து விட்டு எனக்குக் கண்ணீர் வந்து விட்டது. ருல்ஃபோ என்ற இலக்கிய மேதை தமிழில் படும் பாட்டை எண்ணி. இது மட்டுமல்ல, மொழிபெயர்ப்பு என்பது இந்த நபருக்குக் குடிசைத் தொழில் மாதிரி ஆகி விட்டது. அவர் பாட்டுக்கு மாதம் இரண்டு புத்தகங்களை விட்டுக்கொண்டேயிருக்கிறார்!
என்னிடம் இப்புத்தகத்தின் ஆங்கிலப் பிரதி இல்லை. யாரோ சுட்டு விட்டார்கள். ஆங்கிலத்தில் கதையின் துவக்கம் இதுதான்.

Tell them not to kill me, Justino! Go and tell tehm. For God's sake! Tell them. For God's sake, tell them not to kill me.'
'for God's sake' என்பதுதான் ஆண்டவனுக்காக என்று மாறியுள்ளது - ரஜினி ஸ்டைலில்.

நான் இதைப் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் புண்ணியமாகப் போகட்டும்... என்னைக் கொல்ல வேண்டாமென்று அவர்களிடம் போய்ச் சொல்' என்று மொழிபெயர்த்திருந்தேன். 

மற்றொரு மொழிபெயர்ப்பாளர் அவன் நகம் நிலத்துக்குள் இறங்கியது' என்று பெயர்த்திருக்கிறார். முதலில் புரியாமல் விழித்தேன். உங்களுக்கு இதற்குள் புரிந்து விட்டதல்லவா? Nail என்பதற்கு அன்பர் அறிந்த ஒரே பொருள் நகம். ஆணிக்கும் அதுதான் என்பது அன்பருக்குத் தெரியாததால் வந்த வினை!
இப்போது தலித் இலக்கியம் பற்றிய பேச்சு, தமிழில் பரவலாகியுள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு இதற்குச் சம்பந்தமே இல்லாத ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பைத் தந்திருக்கிறார். அவர் பெயர் சூத்ரதாரி. நூலின் பெயர்: Narrative of the life of Frederick Douglass, an American Slave, Written by Himself இந்த நூலின் ஆங்கிலத் தலைப்பைக்கூட வெளியிடாமல் ஒரு அடிமையின் வரலாறு' என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் அன்பர்.

இதே நூலை இரா. நடராசனும், அமெரிக்கக் கறுப்பின அடிமையின் சுயசரிதை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்த இரண்டு மொழிபெயர்ப்பிலும் உள்ள கொடுமைகளைப் பற்றித் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்.