தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, May 17, 2018

உயிர்த்தெழல் - ஜீநா

http://www.subamangala.in/archives/199207/#p=25

உயிர்த்தெழல் - ஜீநா

"மரம் வெட்ட ஆள் வந்திருக்கு' - என்று பலமாக இரண்டு தடவை சுத்திய பிறகுதான் அப்பா மெல்லத் திரும்பி என்னைப் பார்த்தார். பேனாவினை மூடி விட்டு, ஒரு பேப்பர் கட்டை ஒரமாக நகர்த்திவிட்டு, புரிந்த பாவனையில் எழுந்தார். அப்பாவுக்கு இப்போது காது கேட்கும் திறன் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகிறது. போதாக்குறைக்கு எனக்கு வேறு, குரல் கொஞ்சம் கம்மி. நல்ல பொருத்தம் தான்.
"அவன் தானே?" - என்று கேட்டார், மூக்குக் கண்ணாடியை கழட்டிக் கொண்டே.________________

எங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலுள்ள இலவமரத்தின் காய் | களை ஒரு மாதத்திற்கு முன்புதான் ஒருவன், அடித்து எடுத்துக் கொண்டு போனான். இப்போது மரத்தை வெட்டிப் போட, எவனோ, நான் வீட்டில் இல்லாத சமயம் அப்பாவோடு பேசிவிட்டுப் போயிருக்க வேண்டும். இந்த இரண்டு வருஷமாகவே மரத்தை எப்போது வெட்டுவது என்பதுதான் வீட் டுக்குள் பேச்சு. நாலு தென்னங் கன்றுகளும், மரங்களாக நன்கு உருவெடுக்க ஆரம்பித்து விட்டன. எல்லாம் ஒன்றுக்கொன்று பக்கம் பக்கம். இவற்றுக்கு நடுநாயகமாக உயர்ந்து நின்று, கிளைகளைப் பரப்பிக்கொண்டு நிழல் வீசிக் கொண்டிருந்தது இந்த இலவ மரம். அதுவும் பலமுறை நல்ல காய்ப்பு தந்து விட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் காய் அடிக்க________________

ஆள் வருபவன் ஏதோ ஒரு குறை சொல்லாமல் இருக்க மாட்டான். அப்போதுதான், அவனால் விலை சற்றுக் குறைச்சலாகக் கேட்க முடியும். காய்களும் அதிகமாகத் தள்ளிக் கொண்டு போகலாம். ஆனால், இந்த மரத்துக்கும், எல்லா ஜீவராசிகளைப் போல மூப்பு வந்துவிட்டது போலிருக்கிறது. கடந்த இரண்டு வருஷமாக காய்ப்பு குறைந்து விட்டதோடு, காயின் சைஸும் சிறிதாகிக் கொண்டே வந்தது. இந்தச் சமயம் பார்த்து தான், இந்த சின்னஞ்சிறிய கொல்லைப் புறத்தில் நாலு தென் னங்கன்றுகளையும், வாழைகளை யும், ஒரு கொய்யாவையும் அம்மா________________

வைத்து வளர்க்க ஆரம்பித் தாள். எல்லா செடி, கொடி, மரங் களும் ஒன்றையொன்று இடித்துக் கொண்டு வளர்ந்து, பார்க்கிறவர் களுக்கு 'காடா இது' என்று கேட் கும் அளவுக்கு அப்படி ஒரு தோற்றத்தைத் தந்தது. கொய்யா ஒரே வருஷத்தில் காய்தர ஆரம்பித்து விட்டது. வாழை மரங்களும், எட்டு மாதத்திற்கு ஒரு தடவை ஒரு தார் என்ற அளவில் பயன் தந்தது. - ஆனால், இந்த இலவ மரம் மட் டும் ரிவர்சில் போய்க் கொண் டிருந்தது. போதாக்குறைக்கு அதன் நிழல் மற்ற மரங்களுக்கு வேண்டிய சூரிய ஒளியை தடுத்து விட்டது வேறு. மற்ற மரங்கள் நன்றாக வளர வேண்டுமென்றால், இந்த மரத்தைக் கட்டாயம் பலி போட வேண்டும் என்ற கட்சியில்தான் நிறைய பேர், என்னையும் சேர்த்து. இத்தனைக்கும் பதினாலு வருஷத் துக்கு முன்பு இந்த மரத்தை________________

வைத்தவனே நான்தான். அப் பொழுது நான் சிறுவன். என் கையில் ஒரு கட்டையை கொடுத்து ஒரு குழியில் வைத்து மண் ணால் மூடச் சொன்னார்கள், நான் வைத்த அந்த மரத்தின் பஞ்சுதான் பம்பாய் பெரியப்பா வீடு வரை, கோயம்புத்தூர் அத்தை வீடுவரை போயிருக்கிறது. அத்தி பூத்தாற் போல் வீட்டுக்கு வரும் உறவினர் கள் கையில் இரண்டு தலையணை களையாவது கொடுத்து அனுப்புவது அப்பாவின் வழக்கம். அவர்களும், அதற்காகத்தான் வருகிறார்களோ என்று கூட சில சமயம் சந்தேகம் எழும்.
"மரத்தை ஏன் வெட்ட வேண் டும்? அது பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறது" - என்று சொல்லிக்________________

கொண்டிருந்த அப்பாதான், இன்று மரம் வெட்ட ஆளை அழைத்திருக்கிறார். அதுவும் ஒரே யடியாக வேரோடு வெட்டி, (விடப் போவதில்லையாம், பக்க வாட்டு கிளைகளையெல்லாம் வெட்டி) மேலேயும் கொஞ்சம் வெட்டிவிட்டால் போதும் என்ற ஏற்பாடு. சில மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் இலை துளிர்க் - கும். மறுபடியும் வெட்டுவதா? / மறுபடியும் ஒரு செலவா?" என்று எகனாமிக்ஸ் படிக்கும் தம்பி சொன்னது அப்பாவிடம் எடுபட வில்லை. அப்பாவின் கிறுக்குத் தனங்களில் இதுவும் ஒன்று என்று பேசாமல் இருந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நான்கு நாட்களாக மரம் வெட்டு பவனை அப்பா எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். இன்று இரண்டுபேர்________________

அரிவாள், குச்சியோடு வந்திருக் கிறார்கள். "அவன்தானா?" என்ற அப்பாவின் கேள்விக்கு - நான் பதில் சொல்லவில்லை. அப்பாவே போய்ப் பார்த்துக் கொள்ளட்டும். நானோ பின் கதவைத் திறந்து, கடைசி கடைசியாக இலை தழைகளோடு இருக்கும் இலவ மரத்தைப் பார்க்கும் ஆசையோடு கொல்லைப்புறம் சென்றேன்.
ஒருகணம் அந்த மரத்தின் கம் - பீரமும், ஏதோ ஒரு அம்சமும் என்னை சிலிர்க்க வைத்தது. அதன் பருத்த கீழ்ப்பாகத்தைக் கட்டிப் பிடிக்க வேண்டும் என்றால், இரண்டு பேர் கைகோர்த்துக் கொண்டால்தான் முடியும். அதன் வேர் எவ்வளவு ஆழமாக மண்ணில் பரவி நிற்கின்றதோ? அதன்________________

மேல் உச்சிக் கொம்பு என் கண்ணில் படவில்லை, சில மைனாக்கள் கிளைகளில் அமர்ந்து, அழகாக சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தன. இலேசான காற்றில் கிளை களும், இலைகளும் அசைய, இடைவெளியில் சூரியன் கதிர்கள் விட்டுச் சிரித்தது. எல்லாம் அரை நாளில் போகப் போகிறது. பதினாலு வருஷங்களாக ஓங்கி வளர்ந்து விட்டிருந்த அந்த விருட்சம், மனிதனின் வெட்டருவாள்பட்டு சிதைக்கப்படப் போகிறது. இப் படி நான் நினைத்துக் கொண் டிருந்தபோது, எனக்குள் அந்த மரத்தின் மேல் அன்பு எழுவதை உணர்ந்தேன். மரத்தை வெட்டுவது பாபம் என்ற எண்ணம் வேறு லேசாகக் குத்தியது. வேறு வழி யில்லை. ஒன்றுக்காக மற்றொன்று போய்த்தான் ஆக வேண்டும். அதுதான் இயற்கையின் நியதி! இலவமரம் போனால் நான்கு தென்னை மரங்கள் நன்றாக வரும்.________________

இப்படி மனசுக்குள் தர்க்கவாதம் செய்து கொண்டிருந்தபோது, மரம் வெட்டுபவன் இயந்திரத் தனமாக அரிவாளோடு நடந்து வந்தான். அவனுக்குக் கூலிதான் முக்கியம். .என் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்கள் என்ன வென்று, அவனால் நிச்சயம் ஊகிக்க முடியாது. அம்மாவின் கவலையோ, வெட்டப்படும் கிளை கள் கீழே உள்ள செடி கொடி களை நாசப்படுத்தி விடக் கூடாது என்பதுதான். முக்கியமாக தென் னங்குருத்தின் மேல் கிளை விழுந்து விடக் கூடாது என்று வெட்டு பவனை எச்சரித்துவிட்டுத்தான் மரத்தில் ஏற அனுமதித்தாள்.________________

பிறகு என்ன, மத்தியானத்திற்குள் மரத்தின் மேல்பாகம் தரை மட்டமாகி வானமே பளீர் எனத் தெரிந்ததோடு, அதுநாள் வரைத் தெரியாத பக்கத்து வீட்டுப் பால் கனியில் மனிதர்கள் நிற்பது கூடத் தெரிந்தது. சாயந்தரத்திற்குள் பக்க வாட்டுக் கிளைகளை வெட்டி போட்டுவிட்டு, கேட்ட கூலிக்குச் சற்று அதிகமாகவே வாங்கிக் கொண்டு போய் விட்டான் மரம் வெட்டியவன். அன்றிரவு பெளர்ணமி வெளிச்சத்தில் அந்த இலவ மரம் ஒரு மாடர்ன் ஆர்ட் சிற்பம் போல நின்று கொண்டிருந்தது. பார்ப்பதற்கு ஒரு நினைவுச் சின்னம் போல இருக்கிறது என்றாள் தங்கை. டில்லி இரும்புத் தூண்________________

போலிருக்கிறது என்றான் தம்பி. அப்பாவோ, மரம் வெட்டியவ னோடு கடைசியில் ஏற்பட்ட கூலித் தகராறை சுட்டிக் காட் டிவிட்டு, "அடுத்த தடவை இந்த மாதிரி ஆட்களைக் கூப்பிடக் கூடாது" என்றார் அம்மாவிடம். அம்மாவிற்கு கீழே விழுந்த மரக் கிளைகளினால் மற்ற செடிகொடிகள் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்பதில் பெருத்த நிம்மதி,
எங்கள் வீட்டில் மொட்டை மாடிக்குச் செல்வதற்கு முன்னால் ஒரு அறை உள்ளது. அங்கேதான், நாலு வருடமாக சேமித்த பஞ்சும், உடைக்காத கொஞ்சம் காய்களும் மூட்டையாக கட்டப்பட்டு ஒரு மூலையில் கிடக்கும். இந்த ஏழெட்டு வருடங்களில் எங்கள் வீட்டுக் கென்று நாங்கள் செய்து கொண் டது நாலைந்து தலையணைகளும், ஒரு மெத்தையுந்தான். ஆனால், அவ்வப்போ________________

புறா . ஆனால், அவ்வப்போது வரும் சில உற வினர்களின் கண்ணில் இந்த பஞ்சு பட்டால் போதும், உடனே அது தலையணைகளாய் மாறி பிர யாணம் புறப்பட்டு விடும். இந்த உறவினர்களின் சாதுர்யம் அப் பாவின் மூளைக்கு எப்போதும் எட்டுவதில்லை. இவர் எங்களை யும் சில சமயம் சேர்த்துக் கொண்டு காய்களை உடைத்துப் பஞ்சாக மாற்றி மூட்டையில் அடைத்து வைத்திருப்பார், வந்த உறவினர்கள் பஞ்சு கேட்டால் போதும்,________________

| 'அவரே உட்கார்ந்து உறை தைத்து பஞ்சை அடைத்து தலைய ணைகளாய் செய்து கொடுப்பார் எங்களுக்கு இதையெல்லாம் பார்க்க சிலசமயம் எரிச்சல் வரும் இதனால், அப்பாவிற்கும், அம்மா விற்கும் இடையில் சில நேரம் களில் வாய்ச் சண்டை சுட | உருவாகும். | மரம் வெட்டி நாலு மாதங்கள் ஓடிவிட்டன. புது இலைகள் துளிர்க்கவில்லை . மாறாக மரம் | சுருங்கிக் கொண்டே வருவது தெரிந்தது. நிச்சயமாக அது செத்துக் | கொண்டிருக்கிறது. இனிமேல் | அது காய்கள் தரும் என்பதை நினைத்துப் பார்க்க வாய்ப்பில்லை, இப்பொழுது சூரிய வெளிச்சம் எல்லா மரம், செடி, கொடி களுக்கும் கிடைத்தன. இன்னொன் றையும் சொல்ல வேண்டும். முன் பெல்லாம் காலை நேரத்தில் பின் கதவைத் திறந்து வைத்திருப்போம். மரத்தின் நிழல் நீண்டு வீட்டு ஹால் வரைக்கும் வரும். அதனால் வீட்டிற்குள் ஒரு குளிர்ச்சி, காற்றோட்டம் இருக்கும். இப் பொழுது கதவைத் திறந்து வைத் தால், சூரியன் அறையில் தகிப்பை | உண்டு பண்ணியது. கதவை | மூடினாலோ காற்றோட்டம் கிடை யாது. எல்லாமே நம் வசதிக் | கேற்ப அமைந்துவிடாது என்றாள் அம்மா. உண்மை என்றுதான் எனக்கும் பட்டது.)________________

திடீரென்று ஒரு நாள் சாயந் திரம் இரண்டு உறவினர்கள் வீட் டுக்கு வந்தார்கள். அப்பா வழக்கம் போலவே நடந்து கொண்டார். தடபுடல் உபச்சாரம். ஊரில் உள்ள மற்றவர்களின் நலம் விசா ரித்து, அதையும் இதையும் பேசி நேரம் போனது தெரியவில்லை. இரவு நிலா வெளிச்சத்தில் மொட்டை மாடியில் தடபுடல் விருந்து! பேச்சு கும்மாளத்துக்கு நடுவில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் அதைக் கவனிக்கத் தவறவில்லை . - "இலவ மரத்தை வெட்டியாச்சு போலிருக்கு" என்றான் என் அத்தை பையன். எல்லோரும் அதன் திசை பக்கம் திரும்பினோம். நிலா வெளிச்சத்தில் அதனைப் பார்க்க புது தினுசாகத் தெரிந்தது எங்களுக்கு - "இந்த மரத்தால மத்த செடி கொடிகளுக்கு சரியான சூரிய | வெளிச்சம் கிடைக்கிறதில்ல. அது மில்லாம் அது வரவர சரியா காய்க்கறதில்ல. அதனாலதான் இவரே ஒரு ஆளைக் கூட்டிண்டு வந்து, வெட்டச் சொல்லிட்டார்" என்றாள் அம்மா. அப்பா எதுவும் பேசவில்லை . அவர் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?
"இதை வெட்டி நாற்காலி மாதிரி பண்ண முடியுமோ ?" - என்று கேட்டாள் அத்தைப் பையனின் புது சம்சாரம்.
"இது எதுக்கும் யூஸ் ஆகாது. தீக்குச்சி செய்யறவனுக்குத்தான் இது உபயோகப்படும். அவன் எங்க தேடிட்டுப் போறது?" - என்றாள் அம்மா . | "பாக்கிறதுக்கு மாடர்ன் ஆர்ட் மாதிரி இருக்கு" - என்றாள் தங்கை, எல்லோரும் ஆமோதித் தார்கள், | டாப்பிக் பஞ்சு பக்கம் போனது.________________

"மாமா, நீலா உங்காத்து பஞ்சு கொஞ்சம் கேட்டா. ரெண்டு தலகாணி கிடைச்சா அவ ரொம்ப சந்தோஷப்படுவா" - என்று மெயின் பாயிண்டிற்கு வந்தான் அத்தைப் பையன். நீலா என்பவள் பம்பாயிலிருக்கும் அவனுடைய அக்காள். பஞ்சு அவனுக்கா அல்லது அவன் அக்காவிற்கா என்பது உண்மை யில் . யாருக்குத் தெரியும்? புதிதாக கல்யாணம் பண்ணிக் கொண்டவன் காசு கொடுத்து தலையணை, மெத்தை கூடவா வாங்கக் கூடாது? அப்பாவின் பதில் என்னவாயிருக்கும் என்ற திகிலுடன் காத்திருந்தோம்.
"நீ எப்பப் போகப் போறே?” சாப்பிட்டு முடித்துவிட்டிருந்த அப்பா கைகழுவ எழுந்தார்.________________

"நாளைக்குக் காத்தால் பழனி போயிட்டு வரணும். சாயந்திர மாத்தான் கிளம்பப் போறேன்" - என்றான் மருமான்.
"நாளைக்கு சாயந்திரமா?" மறுநாளைக்கு காத்தாலே போயேன்'
"இல்ல மாமா, கோயம்புத் தூரிலே பேரூருக்கும், மருதமலைக்கும் போக வேண்டியிருக்கு அம்மாவும் கூட வர்றேன்னு சொல்லியிருக்கா.."
"மேல் ரூமிலதான் பஞ்சு கிடக்கு பஸ்லே கொண்டு போயிட முடியுமில்ல? நீ ஏற்கெனவே நிறைய லக்கேஜோட வந்திருக்கே...'
"பஞ்சுதானே, என்ன வெயிட் இருக்கப் போறது மாமா - என்று________________

முத்தாய்ப்பு வைத்து முடித்தான் அத்தை மகன்.
எங்களுக்கு அப்பாவின் தயாள குணம் ஆச்சரியத்தைத் தரவில்லை . நிச்சயம் அது தயாள குண மில்லை . வெறும் அசட்டுத்தனம். பின் என்ன, எங்கள் வீட்டிற்கே, சில புதுத் தலையணைகள் தேவைப் படும் நேரம் இது. பழையவை முதலில் இருந்த மாதிரி 'கிண்' என்று இருப்பதில்லை . மேலும் என் தங்கைக்கு அலையன்ஸ் வேறு பார்த்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், தன் மகளுக்கு சீர் செனத்தியோடு ஒரு மெத்தையும், செய்து தரலாமே என்ற எண்ணம் கூடவா இவருக்குத் தோன்றாமல் ,போயிற்று? வேறொன்றுமில்லை, 'இல்லை' என்று அடித்துப் பேச தைரியம் கிடையாது. தைரியம் உள்ள அம்மாவை இந்த மாதிரி சமயங்களில் பேசவும் விடுவதில்லை .
அத்தைப் பையனும், அவனது புது சம்சாரமும், ஒரு பஞ்சு மூட்டை சகிதமாக மறுநாள் சாயந் திரம் கிளம்பினார்கள். கோயம் புத்தூரில் ஒரு நாள் கழிக்க, அவர்களுடன் அப்பாவும் கிளம்பி விட்டார். வீட்டில் இரண்டு நாட் களாக இருந்த ஒரு விதமான இறுக்கம் இப்போது தளர்ந்து விட்டிருந்தது. அன்றிரவு வழக்கம்போல், நிலா காயும் மொட்டைமாடியில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.
________________

"ரொம்ப நாளா நான் சொல் லிண்டிருந்தேன், வீட்டிலே மூணு, நாலு தலையணையாவது செய் யணும்னு. இன்னிக்கு எல்லாம் போயே போச்சு" - என்று பஞ்சு டாப்பிக்கை தொடங்கி வைத்தாள் என் தங்கை .
"என்கிட்ட ஒண்ணும் சொல் லாதே! அவாத்து, உறவுக்கார ஆளுங்க வந்தாப் போதுமே, இவருக்கு கண்ணு மண்ணு எங்கே தெரியறது?" - என்று அம்மா சீறினாள்.
"இப்ப நாங்க வேல கிடைச்சு வெளியூர் போகும்போது, எங் களுக்கு தலகாணி தேவைப்படும். அப்ப காசு கொடுத்து வாங்கணும். அதுவுமில்லாம சுத்தமான பஞ்சு எங்கேயும் கிடைக்காது தெரியுமா?" - என்றான் தம்பி எங்களைப் பார்த்து.________________

இந்த நான், இ போயி மிச்ச
"அவா எதுக்கு வந்திருக்கா? இந்த பஞ்சுக்கும், பழனி போறதுக் கும்தான். இங்க வந்து தலையைக் காட்டிட்டுப் போயிருக்கா. ஓசிச் சாப்பாடு! செலவும் மிச்சம் " என்றாள் அம்மா.
"நாம மூணு வருஷமாவே காய்களை விலைக்குக் கொடுத் துட்டு வந்திட்டோம். இப்ப காய் களும் கிடையாது. இப்ப நமக்கு சுத்தமான இலவம் பஞ்சு வேணு மின்னா, யாராவது தெரிஞ்சவா மரத்திலேருந்துன்னா விலைக்கு வாங்கணும்! எல்லாத்தையும் கூடவே இருந்துவேற பார்க்கணும் - என்றாள் தங்கை.________________

"இந்தத் தடவை காய்களை விலைக்கு வாங்கினவன் பக்கா - ஃபிராடு. உங்கப்பாவும் அவனுக்கு -ஏத்த மாதிரி. அவன் அஞ்சுக்குப் பதிலா ஆறு ஆறா மூட்டையிலே போட்டுண்டிருக்கான். இவர் அதைப் பார்த்துண்டு வெறுமனே________________

நின்னுண்டு இருக்கார். நான் பாத்து அவன ரெண்டு சத்தம் போட் டேன். அப்புறம் அவன் அஞ்சு எண்ணிப் போடறான். அப்புறமா உங்கப்பா என்கிட்ட சொல்றார், "நானும் பார்த்தேன், அவன் ஆறு ஆறாத்தான் போட்டுண்டிருந்தான்' னுட்டு, பாத்துண்டிருந்த மனு ஷனுக்கு அவனை அதட்டணும்னு தோணாதோ? அப்புறமா அவ னண்டை சொல்றார், 'அம்மா சத்தம் போடுவாங்கன்னிட்டு', வீட்ல நம்மளை அடக்கி வைக்கத்தான் தெரியறது" - அம்மா மனதில் உள்ளவற்றையெல்லாம் வெளியே கொட்டினாள்.
சிறிது நேரம் மௌனம் நிலவி 'யது. பிறகு டாப்பிக் மாறியது.
திடீரென்று என் மனதில் பெரிய பாரம் ஒன்று ஏறி உட் கார்ந்து கொண்டது போலிருந்தது. அது இனம் புரியாத ஒரு வருத்தம். சிதைக்கப்பட்டிருந்த________________

-- புயாத ஒரு வருத்தம். சிதைக்கப்பட்டிருந்த இலவ மரத்தை மெளனமாக பார்த்தேன். அதன் பக்கவாட்டில் இருபுறமும் நீட்டிக் கொண்டிருந்த கிளைகள் இரண்டு கைகள் போல் தோன்றின. இந்த நிலா ஒளியில் ஒரு மனிதன், துயரத்தின் வடிவாய் தன் இரு கைகளையும் பக்க வாட்டில் நீட்டிக் கொண்டிருப் பது போல எனக்குப் பட்டது. உண்மையில் அது மரமா, இல்லை ஒரு வேளை மகாத்மா, இல்லை கிறிஸ்துவா? பல வருடங்களாக பலன் தந்த பிறகு, இப்பொழுது வெட்டப்பட்டபோதும் கூட கருணை யும், அன்பையும் காட்டிக் கொண்டு நிற்கிறதே! இந்த விருட் சத்திற்கு மனிதர்களின் சுயநலத் தைக் கண்டு கோபமும் வெறுப் பும் வரவே வராதா? என்னையே உனக்குத் தருகிறேன் என்று சொல் லும் இந்த சிதைந்த மரத்தை விட,________________

இன்னொரு எகதியாகக்
இந்த எண்ணற்ற மரங்கள், விடவா மனிதன் இன்னெ மனிதனுக்காக பெரிதாக தியா செய்து விட்டான். இந்த மனுச பயலுக்குத் தன் இனத்தின் மேல் அப்படி ஒரு கர்வம், பெருமை மதிப்பு எல்லாம். மற்ற பிராகா களும் சரி, செடி, கொடி, மாத்ரம் களும் சரி அவனுக்குக் கிள்ளு... கீரை. இவன் வசதிக்கு இவன் " உயிர் வாழ்தலுக்கு, அவை உலது தில் உதித்திருக்கின்றது என்கி, கத்தி நினைப்பு. தெய்வாம்சம் மனித னிடத்தில் மட்டும் பொதிந்திருக்க கிற ஒன்று இல்லை . இந்த களில், செடி கொடிகளில், மலை ,
மரம் : யில், ஆறுகளில், வானத்தில் - நிலவில் அங்கும், இங்கும், எங்கும் " பரவி விரவி நிற்கின்ற ஒன்று. எல் 2, லாமே அதன் அம்சம். மரம், மட்டை ம் வரை, நீ ஏன் ஒரு கிறிஸ்து உனக்காக உயிர் விட்டார் என்று | பைத்தியக்காரத்தனமாக வெறிய________________

- 200 யாக வெறய னாக, உன் உள்ளத்தை ஒடுக்கிக் கொள்கிறாய்? அன்பும், கருனை - யும் வெளிப்படுத்துகிற எல்லாமே ! தெய்வத்தின் அம்சம்தான். அவற்றை 5 நீ பார்க்காமல் உன் எண்ணத் தைக் கொண்டு உருவான உருவங் களையும், அருவங்களையும் தொழு கிறாய். பெருமை அடித்துக் - கொள்கிறாய். ஆனால், உண்மை யில் அது உன் கொல்லைப் புறத் தில் இருப்பது கூட உன் கண்ணில் படுவதில்லை : நீ அதனை அறிய உன்னிடத்தில் அன்பும் கருனைவு மில்லாமல் முடியுமா?
என் மனத்தில் ஆர்பரித்த எண் ணங்கள் அடங்க நீண்ட நேரம் ஆயிற்று. அன்றிரவு படுக்கைக்குச் செல்ல சிறிது தாமதம் ஆயிற்று.________________

மறுநாள் காலை, பறவைகளின் இன்னிசை கேட்டு, நான் எழுந்த போது, ஜன்னலுக்குப் பின்னால் செந்நிற ஒளி படர்ந்திருந்தது. நான் எழுந்து, ஜன்னலருகே நின்ற வாறு வெளியே பார்த்தேன். அடி வானம் முழுவதும் ஆர* நிற வர்ணம் சிதறி இருந்தது. மரம் கள் காற்றில் அசைந்து. மெல்ல சப்தம் உண்டாக்கிக் கொண்டிருந் தன். என் கண்கள் இலவ மரம் இருந்த திசையின் பக்கம் திரும்பின. என்ன அற்புதம்! - அதன் பக்க வாட்டில் கிளைத்துக் கொடு டிருந்த இரண்டு மொட்டை கொம்புகளுக்குக் கீழ் இரண்டு கொத்து இலைகள் துளிர் விட்டிருந்தன.