தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, May 10, 2018

ஞானக்கூத்து - மா. அரங்கநாதன்

http://www.subamangala.in/archives/199107

நியூயார்க் - வெஸ்ட் சைட் அவன்யூவிலிருந்து, சிவசங்கரன் என் கிற சிவம் தன் தந்தை முத்துக்கறுப் பனுக்கு எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்.

இரவு ஏழரை மணிக்கு மேல் பேசுவதுதான் நல்லது. அம்மாவும் இருக்கவேண்டும்.
நடந்துதான் போகிறேன். நன்றாகவே இருக்கிறது. ரயிலில் போனால் ஒரு டாலர் ஆகிவிடுகிறது. நடந்து செல்வதில் கஷ்டமில்லை .
இங்கே ஒரு கோவில் இருக்கிறது. ஒரு தடவை போயிருந்தேன்.
எனக்கு சால்ட் லேக் சிட்டி என்ற இடத்திற்கு மாற்றம் கிடைக்கக் கூடும் - அதாவது எங்கள் கம்ப்யூட்டர் பிரிவிலுள்ள அத்தனை பேருக்கும்!

சமையல் செய்வதில் கஷ்டமில்லை. எல்லாம் கிடைக்கிறது. பிஞ்சுக் கத்திரிக்காயும் வெண்டைக்காயும் வாங்குவது சுலபம்.
நிறையப் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. முன்புபோல ஆர்வமில்லை.
திருமந்திரமும் அருட்பாவும் என் னிடம் பத்திரமாக உள்ளன.
இங்கே நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேலை பார்க்கும் ஒரு நிருபரோடு பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நல்ல அனுபவம். நிறையப் படித்திருக்கிறாள் - கம்ப்யூட்டர் விஞ்ஞானம் உட்பட - உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறாள்.________________

"சென்னை கூட வந்திருக்கிறாளாம். நிறைய மொழிகள் தெரிகிறது. ஒரேயடியாகச் சொல்லி விட்டாள். "இன்னும் நூற்றாண்டு ஒருவர் உயிரோடிருந்தால் அப்போதும் படித்துக் கொண்டிருக்கக் கூடியவை இரண்டே இரண்டு - ஆலிசின் அற்புத உலகம் - திருக்குறள்." அவள் பெயர் செல்வி லவூலா.

இங்கே உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலமே போதும். அதைக் கொண்டே ஒப்பேற்றிவிடலாம். முதலில் எப்படியிருக்குமோ என்றிருந்தேன். இப்போது பழகிவிட்டது. இங்கேயுள்ளவர்களிடம் கேட் டால் அவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள் 'எங்களுக்குத் தெரிந் ததும் இவ்வளவுதான்" என்று.

காலையிலே பழச்சாறுதான். ரொட்டி பழகிவிட்டது. என்னுடன் இருக்கும் நண்பர்கள் வேறுவகை யான உணவுகளைச் சாப்பிடு கின்றார்கள்,

தொலைபேசிக்கு எட்டாயிரம் ரூபாய் கட்டிவிடுவது நல்லது.

தலைமைச் செயலக இணைச் செயலாளர் முத்துக்குமாரசாமி பிள்ளை (இ.அ.ப) என்று கப்பட்ட அருமையான தாளில் 'ஒய்வு'
அச்சடிக் என்று மாத்திரம் மையால் எழுதப் பெற்று முத்துக்கறுப்பனுக்கு வந்த கடிதம்.
"நம்முடைய சங்கம் மூலமாகத் தான் தங்கள் பையனுக்கு பெண் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தேன். எங்கள் பூர்வீகம் தெற்கே - குடும்பம் பரம்பரைச் சைவம்தான், என் சித்தப்பா அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். தற்போது ஊரிலிருக்கும் அவர் தங்கள் தந் தையை அறிவார். சித்தப்பா சொல்லி விட்டால் போதும் - நாங்கள் வேறு எதுவும் பேசுவதில்லை .
எங்களுக்கு ஒரே பெண். எம்.எஸ்ஸி. தேறியுள்ளாள். ஊர்ப்பக்கம் குடும்பத்து வீடும் நான்கு கோட்டை விதைப்பாடு வயலும் உண்டு. இங்கே அசோக் நகரில் சொந்தவீடு. எல் லாம் பெண்ணிற்குத்தான். அவளது விஞ்ஞானப் படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக தற்போது கல்லூரி யொன்றில் வேலை பார்க்கிறாள். -
நாற்பது ஆண்டுகள் சென்னையி லிருந்தும் நமக்குள்ளே அறிமுகம் இல்லாமல் போனது அதிசயமே. பகளையும் தங்கள் குடும்பத் தாரையும் அறியாவிடினும் நம் முன் னோர்கள் ஆசியாலும் நம் சமூகச் கா உதவியாலும் இந்த சம்பந்தம் நடபெறவுள்ளது சிவனருள் போலும்.
மேலும் தங்கள் கடிதங்கண்டு.

ஏழு மணிக்குத்தான் பள்ளிக் கூடம் முடிந்து வந்தாள் சரசுவதி பம்மாள். தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த முத்துக் கறுப்பன், "வர நேரமாயிடு மோன்னு பாத்தேன் - போன தடவையே பயலுக்கு ரொம்பவும் வருத்தம்"
சரசுவதி முகங்கழுவிக் கொண் டாள். காப்பி போட்டுக் கொண்டி ருக்கும்போது, தொலைபேசி மணி படித்தது. "நீங்களே எடுங்க -________________

நான் பொறகு பேசுறேன்” என்றாள்.
முதலில் யாரோ பேசிய பிறகு சிவத்தின் குரல் கேட்டது.
"அப்பாதானே - இன்னைக்கும் அம்மா இல்லையா"
"இருக்கா - உனக்கு வேறே இடத் துக்கு மாத்தம் இருக்கும்னு எழுதி யிருந்தியே - அது என்னவாச்சு"
"அது அடுத்த சனிக்கிழமை தான் தெரியும். அநேகமா போக வேண்டியிருக்கும். இங்கிருக்கிற நாலு பேரும் போகணும்" "அது ரொம்ப தூரமாச்சே"
"ஆமா - எல்லாம் கம்பெனி பொறுப்புத்தான். இடங்கூட அவங்க தான் தருவா. போனா ஒரு ஐநூறுடாலர் அதிகம் கிடைக்கும்."
"உடம்புக்கெல்லாம் ஒண்ணு மில்லையே"

"ஒண்ணுமில்லை அம்மா கிட்டே குடு அப்பா .'
சரசுவதி குழலை வாங்கிக் கொண்டாள்.
“மக்கா - உடம்பு எப்படியிருக்கு '- எண்ணை தேச்சுக் குளிக்கியா",
“எல்லாம் நடக்குதும்மா அங்க ஒண்ணும் விசேடமில்லையே. வீடு ரிப்பேர் பண்ணணும்னா பண்ணிட லாம். பணம் அனுப்பித்தரேன். அப் பாக்கு உடம்பு 'எப்படியிருக்கு. ''போரிங்'லே தண்ணியெல்லாம் அப்பா அடிக்காண்டாம்"
“மாத்தம் எங்கியோ இருக்கும்னு அப்பா சொன்னாளே” "இருக்கும் - நான் எழுதுகேன்" “அப்பாட்ட குடுக்கட்டுமா?" “நேரமாகிப் போச்சே - வைச்சுருகேன்- எழுதறேன்”________________

வைத்துவிட்டு சரசுவதியம்மாள், 'எவ்வளவு அருமையா சத்தம் கேக்குது பாத்தேளா - பக்கத்திலேயிருந்து பேசுகது மாதிரி இருக்குது" என்று வியந்தாள்.
உயர் திரு முத்துக் குமார் சாமி பிள்ளையவர்களுக்கு முத்துக் கறுப்பன் எழுதிக்கொண்டது:
தங்கள் அறிமுகம் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி, இதைப் பற்றி பையனுக் கும் விவரம் தெரிவித்திருக்கிறேன் - தங்களுக்குத் தெரியும், பிள்ளைகள் விருப்பப்படிதான் எல்லாம் வேண்டு மென்று.
என் தந்தையாரையும் மற்ற முன் னோரையும், தங்கள் சித்தப்பா மூலமாகத் தெரியும் என்று எழுதி யிருந்தீர்கள். இருந்தாலும் நானும் சில விவரங்கள் தருவது நல்லது.________________

படியால் இங்குவந்து வேலை தேடிக் கொண்டேன். என் மூத்த சகோதரர் - அவருக்கு வயது அறுபத்தைந்து - இப்போதும் தமது மனைவியார் வீட்டில்தான் வாசம். அவர்தம் மகன் ஆபத்தில்லாத மனநோய் கொண்டவன் என்று சொல்கிறார்கள். என் தம்பி - வயது நாற்பத்தைந்து - இப்போதுதான் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதி எஸ்.எஸ். எல்.சி தேறியுள்ளான். இன்னும் ஓர் ஐந்து ஆண்டுகளில் கீழ் நிலை எழுத் தராக பணியில் பதவியுயர்வு கிடைக்கும். தம்பியின் பிள்ளைகள் இப்போது தங்கள் அம்மாவுடன் வசிக்கின்றனர்.________________

என் பெரியப்பா - விடுதலைப் போராட்ட சமயம், தம்முடைய மகளையும் பேரப்பிள்ளையையும் பார்க்க வேதாரண்யம் சென்று, அங்கே ஒரு பலசரக்குக் கடையில் உப்பு வாங்கி வந்தபோது, போலீஸ் தடியடிபட்டு, ஜெயிலுக்குப் போய் பின்னர் தியாகிகள் பென்ஷன் பெற்றுக் காலமானார். பெரியம்மா வீட்டில் தான் நானிருந்தேன். பால் மாடு கள் நாலைந்து அவர்களுக்கு. நான் தான் அவைகளைக் கவனித்து வந்தேன். வேனற்கால விடுமுறையில் என் கவனக் குறைவு மேய்ச்சலில் ஒரு மாடு காணாமல் போயிற்று. நான் சொல்லாமல் கொள்ளாமல் சென் னைக்கு வந்துவிட்டேன்.________________

தாய் மாமன் பற்றியும் நாம் சொல்லவேண்டும். ஊரில்தான் இன்ல. மிருக்கிறார். அங்கே தென் மரங்களிலிருந்து காய்களைத் திருடி அவர் விற்றது எனக்கு ஏழு வயதிலிருந்தே தெரியும். இப்போது அம்மா கோவில் சொத்து அவர் கையில் எனக்கு அவரது முகம் மறந்து விட்ட து. | சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது, என் கல்யாணம் முடிந்தது. இங்குள்ள சார் சங்கத்தில் போய் அழைப்பு வைத்தேன். அந்தச் செயலாளர் சாந்தமா "நீ அழைப்புத் தரவேண்டியது , அரசுக்குத்தான் - சங்கத்திற்கல்ல. என்றார்.
அவர் சொன்னது உண்மைதான் ! நான் மணஞ்செய்து கொண்டது, ஓர் ஆதி திராவிடப் பெண். எனினும் | அரசாங்கத்திற்கு அழைப்புத் தர வில்லை .

இப்போது சங்கத்தில் எனக்கு : யாரையும் தெரியாது. இருந்த தெரியாதபோதிலும் அவர்கள் பலவிதத்திலும் உதவியாயிருப்பது நல்ல  காரியம்.
66.
அவருக்குத் தானே உங்க 5 | பதிலை அனுப்பணும். 'காப்பி'யை | எதுக்கு பையனுக்கு"
"அவனைப் பத்தினதுதானே ! இந்தப் பதில் - படிக்கணும் அவனும்'
“பொங்கல் சமயத்திலே வந்தா ஏதாவது முடிவாப் பார்த்துச் செய்தாகணும்னு எழுதிடுங்க”
"அதையும் எழுதியிருக்கேன்” | “எங்கப்பள்ளிக் கூடத்திலே நீ சொன்னா ஒருத்தி - யாரையாவது ! கட்டிக்கிட்டு வந்து நின்னா என்ன செய்வேன்னு” "என்ன செய்வே?"________________

"என்ன செய்வே ?"
"இப்பக் கூட எழுதியிருக்கான் பாத்தேளா - ஏதோ பெண் நிருபர்னு அந்த மாதிரி பழக்கம் வந்து ஒரு வெள்ளைக்காரியைக் கூட்டிக் கிட்டு வந்துட்டா?"
"அப்படிச் சொல்ல முடியாது" "ஏன் முடியாது?"
"வெள்ளைக்காரியாத்தான் இருக்கணுமா; - அமெரிக்காவிலே கருப்பர் களும் உண்டு”
முத்துக் கறுப்பன் சாய்வு நாற் காலியில் தன்னைச் சாய்த்துக் கொண்டார். நல்ல காற்று வீசியது. இந்தப் பட்டணத்தில் முதன் முறையாக நல்ல காற்றை அனுபவிப்பவர் போல் மூச்சிழுத்துக் கொண்டு கண்களை மூடினார்
.________________
ஆரஞ்சு - சச்சிதானந்தன்
 ::: மொ . பெ : நிர்மால்யா
-
 வறட்சி மாதத்தில் பிறந்ததால் இருக்கலாம்
என் சின்ன மகளுக்கு
ஆரஞ்சு இவ்வளவு அதிகம் பிரியத்திற்குரியதானது.
மருத்துவ மனைகளதும் சந்தைகளதும்
விழா இடங்களதும் ஒருமித்துக் கலந்த மணத்தின்
நடுவே யிருந்து ஆரஞ்சின் மணத்தை அவள் எப்போதும் இனம் பிரித்தெடுப்பாள்.
உறக்கத்தில் அவளின்
கனவுகள் நிறைய ஆரஞ்சுத் தோட்டங்கள் பூத்து நின்றன | ஒரு நாள்

ஒருநாள் சமையலறையின் அப்புறம்
அவள் ஆரஞ்சின் ஒரு விதையைத் தூவினாள்
எங்கள் பரிகாசத்தைப் பொருட்படுத்தாமல். |
அவளின் ஆவல். ஈரத்தில்
அது முளைத்தது: கரும் பச்சையிலைகள்
மற்றோர் சீதோஷ்ணத்தின் செய்தி ஏடுகளாயின.
அறிமுகமில்லா பூக்கள்
மாம்பூக்களை விளையாட்டாக்கிப் பூத்துக் குலுங்கின;
மரகத நிறமுள்ள காய்கள்
பருவ மழையின் புதுமையில் நனைந்தபடி.

நேற்று பொன்நிறம் படரத் துவங்கிய
முதல் ஆரஞ்சை மகள் என் கையில் வைத்தாள்:
 'இப்போது?' எனக் கேட்பதைப் போல
 நான் மெளனமாய் ஆரஞ்சு தோலுரித்தேன்
ஒரு அலியின் துகிலுரிப்பதைப் போல
நான் அதிர்ந்தேன்:
 அதில் சுளைகளுக்குப் பதில் வெறுமை இருந்தது.
இரவின் பழம். இருளின் களஞ்சியம்.
அதில் ஆரஞ்சின் அழைக்கும் மணம் இல்லாதிருந்தது,
ஆரஞ்சின் ஒரு மெழுகு உருவம் போல.
'எனது வேர்கள்'... அது தேம்பி அழுதது.

நான் கண்டேன்: அச்செடியின் வேர்கள்
தன் ஊர் தேடி போகத் துவங்கியதை;
சுண்ணாம்புப் பாறைகள் வெளிறிய. பிசாசுகளாய்
அவற்றின் பாதையைத் தடுத்து நின்றன.
பருவகாலம் ஒரு பிள்ளைத் தின்னும் துர்தேவதை போல்
மண்ணின் வயிற்றை வந்தடைந்தது.
அதன் இளம் முளைகள் அழுகிக் கொண்டிருந்தன.
சொந்த வாசிப்புகளின் மொழி புரியா மண்ணில்
அவ்வேர்கள் திகைப்புடன் சுற்றித் திரிந்தன.

என் மகள் அந்தப் பழத்தைச் சொல்லி அழுதாள்
நான் அதன் வேர்களைச் சொல்லி.