தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, April 29, 2014

விரக சூட்சுமம் - பிரேதா : பிரேதன், தனிமை ஒரு ராஜ்ஜியம் -அநாமிகா

(புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்டமனிதர்களும் ... நாவலிலிருந்து)

- பிரேதா : பிரேதன்

3. விரக சூட்சுமம்

உனது  குச்சிகளை வீணாக்காதே
கிழித்து கிழித்து விரல்வரைத்
தாங்கி இருந்து உதறி எறியாதே
எண்ணெய் இல்லா என்னை எரிக்கும் உனது எத்தனிப்பு
என் திரி கருகிய புகை நெடியில்
உன் சுவாசம் சிக்கி சூன்யமாய் உறையும்
காற்றுச் சுழலும் பெரும் வெளியில்
என்னை மூட்டித் தவிக்கிறாய்
உன் விரல்கள் கொப்பளிக்க
நிறுத்திவிடு
எண்ணெய் இருந்தால் என்ன
இருளில் இருப்போம்
நீயும் நானும் யார்யாராக என்பதின் போதமற்று
(என் தமக்கையின் நாட்குறிப்பு)

என் தமக்கையைப் பற்றி நினைத்து அழுதல்
அடர்த்தியானது-என் கண்ணீரின்
கருப்புச் செதில்கள் என் சுவர்களில் ஒட்டிக்கொள்ளுமே
அதைப் பெயர்த்தெடுக்க சொல்லித் தந்தவள் அவள்தான்
என் முதல் முகப்பரு திரண்டபோது
நீ-பருவம் கொண்டவன் என்று சொல்லி
செல்லமாய் கிள்ளியது ஞாபகமிருக்கிறது
பால்யத்திலிருந்து என் விழியில் குடையும்
அழகானதும் சோகமானதுமான
முகம் அவள் மட்டுமே
அவள் அழும்போது மார்புகள் விம்மித்தணிதல்
பிரபஞ்த்தில் ஓர் அவல அழகு
அவள் உடல் வாசம் இரவுகளைப் பொசுக்கி
பகல்களைப் பிழிந்து தொடுவானில் புகையவிடும்
ரகசியம் வாய்ந்தவை
பின்னங்களின் முடிச்சுகள் தேடி அவள் விரல்கள்
என்றும் சலித்ததில்லை
அனாதைத் தனத்தின் கருப்பு மணல் வீட்டில்
நானும் அவளும் புதைந்த காலத்தில்
நான்களைக் கீறி என் முகத்தில் பூசுவாள்
குமிழ்கள் ஊதிப் பெருவெளியெங்கும்
கண்ணீரில் பறப்பாள்
தீவுகளில் தனது சுவடுகள் மூட்டி எரித்துச் சலிப்பாள்
அவள் அற்புதமானவள்
முதன் முறை எனக்கு மனநோய் நாட்களில்
என் எழத்துக்களைப் பிரதி செய்து எனக்குத் தருவாள்
என் விழிக்கு முன்னே அவளின் நிர்வாணங்களின் சலனம்
ஈரச்ஜுவாலைகளாய் சிதறிப் பரவும்
அழுகைகளில் கபாலம் பிளந்து நெடிவீச
என் ஊமை விரகம் விழித்துக் கொப்பளிக்கும்
பூமியின்-தனித்த விழுந்த பெருமூச்சுப் பிளவுகளில்
பதுங்கி விளையாட எங்களின் நிழல்கள் இடம்பெயரும்
அவளின் முதல் ஓவியம் எனது கருப்பு உருவம்
அதில் எனக்கு நான்கு  கண்கள் இருந்தன
உதடுகள் பெருத்து தலை பிரட்டைகள் ஊர்ந்தன
அன்று இரவு நெடுநேரம்  அழுதோம்
அறை தேடி அலையும் எனது பருவங்களில்
அவள் சோகங்களின் சிம்புகள்
மின்னல் தூசுகள் கலங்கிச் சீறின
இரண்டாம் முறை எனது மனநோய் நாட்களில்
மார்பு புற்றுநோய் குதறி
தன் அவல வசீகரம் இழந்தாள்
அழுகையின் அலை மட்கி பிரபஞ்சம் சருகாகிக் கருத்தது
பிரியும் கணம்வரைக்கும் எங்களுக்குள் ஒரு
சூட்சும விரகம் இழை பின்னித் தவித்தது
ஊமைதாபங்கள் சாம்பல் கிண்ணங்களாகி
எம்மை நிறைத்தது
அவள் மரணத்தின் முன்தினம் எங்கள்அறைக்கள்
நாங்கள் நிர்வாணிகளாய் அழுதோம்
மதுக் கோப்பையில் கருப்பு படிந்து
பிளந்து நகர்ந்து
இறப்பதற்கு முன் அவள் சொன்னாள்-
முத்தங்கள் மட்கிப் போகும் வரை
சதைகள் முள்ளைத் தின்னும்
எப்போதும் சாவுக்குக் கண்ணை உறுத்தும்
மனதின் வெடிப்புகளில் சூன்யம் தேங்கும்
அவள் சாவுக்கு நான் அழவில்லை
என் நண்பன் போதை மருந்து சாப்பிடுவதை
அன்று முதல் விட்டுவிட்டான்
நான் துவக்கிவிட்டேன்
நேற்று பழைய சீப்பில் அவளின் முடிகள் சில
இருக்கக் கண்டேன்.
Riyas Qurana face book post

தனிமை ஒரு ராஜ்ஜியம் அங்கு அரசன்போல் வாழ்கிறேன். காற்று என்னுள் சுழல்கிறது, அதை இன்னும் நெடுநாள் வைத்திருக்க முடியாது.போகட்டும். அது போகட்டும். மீண்டும் திரும்பாது என்பது தெரியும் இருந்தும் அதுபோகட்டும். நீ வரும் வழியில் கிளைகள் அசைத்ததா? உன் உடையில் தடவித் தனியே போனதா? வெகுதூரம் போனது, நீ அருகில் வந்ததும் எப்படித் திரும்பி என்னுள் வந்தது? காற்றாய் வரவில்லை. என் சுவாசமாய் வந்தது.

அநாமிகா