தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, March 26, 2016

புலிக்குகை நாயனம் - கோணங்கி : காலக்குறி 8 & தமிழ்ப் புனைகதை மரபும் கோணங்கியும் - எஸ்.சண்முகம்

புலிக்குகை நாயனம் - கோணங்கி 
WWW.padippakam.com
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
காலக்குறி 8
கல்க்குழம்பின் தீநாவுகளைக்கொண்ட தவளைகளின் ஒலிநாவுகள் அறுபத்திநாலையும் உள்ளோசையாகக் கொண்டிருந்த காருகுறிச்சி நாயனநுரையீரல் மரத்தின் மண்சாம்பல் இலைகளின் மூச்சு காற்றலையை துளைகளாக்கி விரலடி ஊர்ந்த கமகவளைவில் கிரககோளங்களை தலைகீழாக நிறுத்தி சுழல்விதியில் ஈரல்சுருள செங்குத்துப் பாறைகள் நெருங்கிய கபாலக்குகைக்குள்ளிருந்து வெளிவந்து ஒரு பிரத்யட்சமான கோடுகள் சினந்த புலி திமிறிநாயனமாய் உருக்கொள்ளப் பகலில் மறைந்து இரவில் உறுமும் நாயனத்தை சிப்பிப்பாறையில் செதில் செதிலாய் எழுந்த அரவுபுனைநிழல் ஆயிரம் விரித்த சடை முனி அருணகிரி அடைத்த போது எங்கெங்கோ அலைந்து பித்துப்பிடித்த தெருநாய்கள் பிரலாபித்த குரைப்பை பிலாக்கணத்தை குடைவரைக் கழுகுமலை அம்மணவாயன் சாமி கல் உதட்டில் முணுமுணுத்த சென்னிகுளம் ரெட்டியார் காவடிச்சிந்தின் கனமார்க்க சங்கீதக் கட்டைகள் ஆறு அரையில் ஆங்கார மகுடம் பற்றிய தீயெழச் சுடர்கிளையேறிய தோடிராகம் ரத்தமாய்ப் பெருகி செந்நிற வண்ணத்துப்பூச்சிகள் கழுகுமலைப் பிளவில் துடித்த ஆயிரம் உதிரநாவுகள் நீட்டி உறிஞ்சிய கல்லின் வறண்ட சமணமேனியில் சித்திரம் தீர்ந்த கால அணுவை நோக்கி அலகு குத்திப்பாய்ந்த இசைப்பறவை சிதம்பரச்சாமி சாக்குக்கெட்டி அலைந்து சிறகடித்த சந்தக்கவி அதிர்வு கடம்பகந்தன் விழி சுழல நாசுகர சுருதி சுழி சுழல வருவதெனச் சாக்குக்கெட்டிச்சிதம்பரம் காடோ செடியாகப் பார்த்த செடியிலை முச்சின் அளவு பிளக்கும் சொல்லுக்கிடையில் வைத்து திருகு கள்ளிக்காட்டில் பாலை அலைதலை முள்மரம் காய்ந்த கருவேலம் வந்த நல்லுர் வனத்தில் உடமுள் புதரில் அடைந்து முள்படுக்கையில் துயின்று தீண்டிய கவைமுள் அடுக்கை இசையாக்கி கருவேலங்காட்டு துறைவெளி சுழற்றிய தான்தோன்றி வர்ணஇறகு சாக்குக்கெட்டிச் சிதம்பரம் சிறகில் உதிர்ந்து அண்ணாமலைரெட்டியார் காவடிச்சிந்தின் மகுடவளைவில் சுழன்று சுழன்று செந்தூரில் இசைக்கு நாக்கை வெட்டிய மாரியப்பாசாமியின் உள் அண்ணத்தில் ரத்தம் கொப்பளித்த வர்ணமெட்டில் கடல் மகுடம் பாட கர்னாமிர்தசாகர நூலில் லெகஷனங்களாய் உறைந்து துடிக்கும் மாரியப்பாசாமியின் அரிந்த நரம்புகளே துடிகொள்ள நாஉதிரம் தொட்டு சீவாளியை எடுத்த காருகுறிச்சி எனும் உரு திருப்புகழில் தோய்ந்த செந்நாள் தோன்றிய திருமதுரையில் தடாதகையின் விரல்களில் கால்வைத்த சொல்கிளியாய் கூடுவிட்டு பாய்ந்த அருணகிரிக்கு கிளியிறகும் நகங்களகும் முளைத்து பதவர்ண்ணம் ஒலித்த அரவுபுனைநிழல்
காலக்குறி (-11-) மார்ச் 98
படிப்பகம்
________________

நாற்றிமூன்றாய் நீளும் இசைக்கோடு தோடிராகச் சக்கரவர்த்தி ராஜரத்தினத்தின் இசைப்பனுவலை முட்டியது மண் நுகர்ந்து.
 
மிகக்குளிர்ந்த மழை நீரை உள்ளடக்கிய காருகுறிச்சி நாயனத்திற்கு முன் அடங்காத புலி அமர்ந்திருந்தது. அதன் துர்வாடை ஏறிய பழமையுடன் கட்டுக்கட்டான செம்மஞ்சள் கருப்புகோடுகளில் ஆழ்ந்திருந்தார் அருணாசலம். நினைக்க அச்சத்திலாழ்த்தும் நாயனப்புலி. குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து இருளில் மறைந்து உள்ளே திரும்பி வந்தது கொடுங்கைகளில் பாறையின் ரேகைகளை திருகி. பெரிச்சிக்கோயில் ஆறுமுகம் தவில் நொறுக்கும் கணம் பற்கள் அழுந்த பாதாளம் வரை கேட்கும் மாட்டுத்தோல் உரசியது. யாரும் நகராமல் வெளி வெற்றிடங்களில் பரவிய தவில் சொல் அசரீறியாய் புலிக்கோடு பதிந்தது சுற்றி, அந்த மிருகம் திமிறி, நாயனத்தில் தோன்றி மறைய அதன் கரங்களிலிருந்த நகங்கள் அபூர்வ மிருதுவாய் இருந்தன. இருளில் மூழ்கிய நாயனம் வெகுகாலத்திற்குப் பின் வெளியே வர அசுரவேக இசை நரம்புகள் கொண்ட புலி தீவளையத்துள் பாய்ந்து ஓடியது. சுற்றிவைக்கப்பட்ட மின்கம்பிகளில் உடல்பதுங்கி புஜங்களை நிமிர்த்தி அண்ணாந்து அலறியது கானைநோக்கி கட்புலனுக்கு அடைபடாத புலிவால் நாயனத்தை தொட்டுக்கொண்டிருந்தது. குருதியேறிய தொலைதூர விழிகளால் பார்த்தது புலி, சுடர்வீசும் இசைக்குள் தீக்குமிழாய் சுருண்டு எழுந்த புலி பாறைகளில் பரம்புக்காடுகளில் மெல்ல பதுங்கி உயரே தகதகக்கும் சூரியனை பார்த்ததும் நாயனத்தின் ஒளிக்கீற்று அருணாசலத்தின் விரல் நகத்தில் தெறித்தது. உடலோடு ஒட்டிய புலி மறைந்து கொண்டிருந்த வேளை சீவாளியை சரிசெய்து திரும்புகிறார் காருகுறிச்சி.

 எட்டு என்றால் அரசனென்ற சொல்லை மறித்த ராஜாவுக்குப் பணியாத காங்கேயன் துதிக்கை நீட்டி கனராகங்களை அலைபடும் செவிப்பொறி நுட்பத்தில் ஆலாபிக்க யுகாந்த காலந்தொட்டு வரும் வாழ்வின் சலிப்பை கண்ணின் விளிம்பில் தேக்கிய ஆனை ஐப்பசி சதுர்த்தசியன்று மண்டபத்துணை ஒடித்து சமஸ்தான சங்கீத யோகி எனும் சங்கிலிகள் குலுங்கி உடைத்து எழுந்த ஆங்காரப்பிளிரலில் அந்தப்புரச் சோம்பேறி உறக்கம் பதறி ஓட மயான பூமிமேல் நின்றது. ராஜாவின் கனவில் வந்த ஆனை தாகத்தில் வருந்தி குருமலை ஏகி ஆடிய ஊழிக்கூத்தில் ஆனையின் கபாலம் உருள அதன் சீடர்கள் கமகக்கிரிய ராகத்தில் 'மீனாட்சிமே முதல் தேஹறி. கீர்த்தனைபாட வேங்கிட்கிருஷ்ணமுதலி ஆனைக்குப் பரிசளித்த திராட்சைத்தோட்டத்து வயலினை எடுத்து சுருதி சேர்க்க நடுங்கிய கண்களுக்கிடையில் முணுமுணுத்த தந்திகள் அநுபல்லவியில் அமைந்த 'மீனலோசனி பாசமோசனி. என ஆனையின் சொல்நரம்பில் அறுந்து மண்மேட்டில் புகுந்த 87 இசைக்கருவிகளை அதன் எண்பில் வடித்த பிரபஞ்ச அண்டகோளவிலாசம் சுருள ஒளியுருவில் அசையும் ஆனையின் கனராகசாயைகள் தானே எழுந்து எட்டயபுரத்துக்கும் கோவில்பட்டிக்கும் இடைகாட்டில் அலைவுற்ற கிருதிகள் கீறிய ஆனையின் தந்திகளில் நடுங்கிய கடைசி தொனி உலகின் எல்லா இடத்தும் பொருள்களிலும் இசைகலந்து உயிர்மை கொள்ளப்பார்த்திருந்த மனக்கண் படலமாய் மெல்லிய மங்களில் விரிந்த கரடுமுரடமான பாறைப்பிளவில் மின்மினிகளாய் உறவாடிக்கொண்டிருந்தது நாதருபத்தில் பிரபஞ்சம் முழுமையும் பரவிய இசை கானல்நீராக புலப்பட்டு நெருங்க நெருங்கி மறையும் தோற்றத்தில் நூறு ஆனைகளின் அசைவில் குருமலை நீட்டிக் கிடக்கிறது. மாமத ஆனையின் விவேகத்தினால் மாயையை கிருதிகளாக்கி ராகங்களில் பதுங்கிய மலையின் சாயைகளை மரபில் புனைஒலி கீறிய கீர்த்தனைகளில் என்னைத் துன்புறுத்தாதே விட்டுவிடு. மரத்தில் மறைந்த மாமத ஆனையே. யுத்தங்களால் துர்கந்தத்தினால் கொடுமையில் வீழ்ந்த நகர இடிபாடுகளில் சாய்ந்த ஆனைகளின் உடலுக்குள் புகுந்து அழும் பேய்களின் கழுகின் ஒலத்தை தொடர்ந்து பார்த்த மிகச் சின்னச்சின்னக் கண்களின் அடியில் கீறிய கருப்பு விளிம்பில் ஓயாத சலிப்பின் ரேகை படர்ந்த தீட்சண்யத்தை ஆனை அதோ எரியும் மரத்தில் திராட்சை வயலின் மறைவதை கடைசியாகப் பார்த்தது ஆனை. சாத்துர் தென்வடல் தெருவுக்கு எட்டாத தூரத்தில் வைப்பாற்று மணல் திரியில் ஊற்றில் நீர்பருகி பெருமாள்கோயில்தெரு பாாத்த ஊசிக்கோபுரத்தில் சாம்பல் புறாக்கள் அசைந்து தன் திராட்சை வயலினை கேட்க ரயில்வே பீடர்ரோட்டில் உலவும் சாயைகளின் பழமையான ஞாபகங்களில் மணல் பரவியிருந்தது. உபாதையில் மேடு ஏறிவந்த ஒற்றை மாட்டு வண்டியில் கொண்டுபோன ஊற்றுநீர் மெல்ல சலனமடைந்து ஆனையின் கண்ணில் குளிர சக்கரங்கள் மணலில் சரகரவென்று உரசும் ஏதேதோ அகால உரசலில் அந்த ஊரின் ஊசி கோபுரமே ஊற்றுநீர் ஸ்படிகத்தில் தலைகீழாய வந்து சாத்தூர் தெருவில் நடந்து கொண்டிருந்தது தலைகீழ் ஆனை ஊசிக் கோபுரமுனை மீது நின்ற கானம் ஆனைபார்த்து கா காவென கரைந்தது வெயில் போக கும்பனியா பாலத்தில் சென்ற ஆனை கடலையூர் செல்ல பீக்கிலிபட்டி சரல்பாதையில் வளையும் மேடுகளில் மேல்வந்த இளம்புவனம் வாணியச்செட்டி உருட்டியபாறை ஏழு கல் செக்காய் உருமாறிப் பூட்டிய கிழக்கத்திக்கர்ளைகள் ஒத்தையாய் அலுத்துச் சலித்து ஒரே இடத்தில் சுற்றிச்
காலக்குறி | 12 | மார்ர் 98
படிப்பகம்
________________

WWW.padippakam.com
சுற்றிப் பரவும் தினசரி வெயில்மேல் அசைந்த ஆவி நீர்மேல் சாத்துரிலிருந்து வந்த ஆனை வழி நெடுக விருவு மூச்சில் கால் பொசுங்க பனங்கூந்தல் அறுந்து ஆந்தை உட்கார்ந்த மொட்டைப் பனைமேல் தெம்மாங்கு விடாமல் வரண்ட பாதைமேல் பின்த்ெர்டர கரிசல் பிளவில் துடித்து எகிறிப்பாயும் விட்டில்ப்பூச்சியிடம் மனது வைத்துச் சிரித்த முதுநரி காட்டில் கண்ட ஆனையைக் கான்ல்நீர் என ஏமாந்து மேயும் ஆடுகளிடம் ஆணையின் கதைபோட ஆடுகள் வாய்வைத்த முள்ளின் மேல் நின்றது விட்டில்பூச்சி. வாடக்கரடுகளை மென்று எச்சில் நுரை நூல்நூலாய் வீசி சலியுடன் கோடு விழும் பாதையில் ஆனைபாதம் புழுதிபுரண்டு காலாற இடம்தேடி செக்கடி சேர கால்கடுத்தும் ஓயாத காளைகளின் மெலிந்த முகத்தில் பார்த்த வாட்டத்தை எழுதிய முகத்தில் வாசித்த ஆனை காளையின் காதுகள் விண்மேல் அசைய கொம்புகள் ஏகாந்தத்தில் குத்திநின்றன. மூர்க்கத்தில். காளையின் திமிள்மேல் துதிக்கை போட்டு அதன் காதை வருடி ஒவ்வொரு ராகத்தையும் மந்தரஸ்தாயி முதல் தாரஸ்தாயி வரையில் பொருந்தும் சஞ்சாரங்களைக் காட்டி அந்தந்த ராகத்தின் முழு உருவங்களையும் ஒலிருபமாய் பண்உரையும் புதிர்வனத்தில் பனை ஓசையின் காற்றுக்கு அடங்கிய லகஷ்ணத்தில் கிருதிகளை இயற்ற கீழே செக்குநக்கித்தம்பிரான் பைத்தியாய் சிரித்து செக்கு உலக்கையில் ஒட்டிய எள்ளுத் தவிடை தாடையில் அசைத்து உறிஞ்சியவாறு ஆனையே நீ வருவதாக இருக்கும் கல்வெட்டு அங்கே கொடிய விஷஸர்பங்கள் உலவும் காடு. பச்சை மூலிகை தேடி திட்டி விடத்தின் பார்வை முன் நிற்கிறேன். அந்தக்காட்டு வழி போகாதே. ஆனை தலையசைத்து அழைத்தது தம்பிரானை. சர்ப்பமுச்சு கேட்கும் கொடிய வனத்தில் தான் தோன்றியான நாதபிந்து சூல் கொண்டதை நினைத்து காடேகியது ஆனை.

செக்குநக்கித்தம்பிரான் கூட்டிப்போன குருமலைக்காடு ஜீவனிழந்திருந்தது கோடை. சூரியன் குருமலைமேல் உடைந்து நொறுங்கி அக்கினி ஆற்றில் சிங்காதனம் அமைத்து உட்கார்ந்திருந்தான். எட்டயபுரம் செல்லும் வழி தொடுவான் வரை புகைப்படலம் முடியிருந்தது. கருவேலங்காட்டு வெப்பப்பறவைகள் கீழ்மேலாய் கர்ணமடித்து கட்புலனாகா உலகில் சஞ்சரிக்கும் ஆனைபார்த்து உயரஎழுந்தது. மரங்களுக்கு ஊடே ஆனை செல்ல செக்குநக்கித்தம்பிரான் அரளிப்பான புதரில் மறைந்து செடியிலைகளின் மூச்சில் கரைந்து ஆலகால விஷப்பூச்சிகள் உயர ஏழுந்து ஆடும் இலைவாசனையில் சொக்கி தன் பிள்ளைக்கையை அல்ாவியது ஆனை. வனம் மேல் விசும்பிய நீலநிற அரவுகள் பச்சை கக்கிக்கக்கி எங்கும் வெளிறிய பச்சை சூழ வேறொரு வனம் திறந்தது மெல்ல. எல்லாப்புலனிலும் ஓடி பற்றிப் பரவியது இளம்பச்சை. கொடிய விஷத்தில் எப்புறமும் விரிந்து வியாபித்த கிளைகளில் ஏறிய அத்துவான தனிமை சிறுபூண்டின் சருகிலும் சலனமடையும். ஆனையின் சிறுகண் ஆழத்தில் சுழன்ற அரவங்கள் சீற்றத்தில் ஸ்ஸ், சென இரையும் பலவித ஏற்ற இறக்கத்தில் விஸ்சென விசும்பிய காற்றுச் சுருணைகளில் மயக்கப்பிரதேசம் விரிந்து குழந்தையென கால்வைத்து நகர்ந்து உள் சென்ற ஆனை தந்தத்தில் பதிந்த மந்திரத்தை வேட்கையோடு அண்ணாந்து தொனித்த ஆனந்தாம்ருதகர்ஷணி எனும் கிருதியை காடுடைய திருநீலகண்டநாயகி பச்சைக்கல்லாய் காடுரைந்து எழுந்து ஆனைமுன் செடிகளிடையே மறைந்து எட்டிப்பார்க்க ஆனை தவித்த வேகவாசிப்பில் ஈயவானத்தில் எங்கிருந்தோ கருமேகங்கள் கூடி பூதங்களாய் வந்து குனிந்து அம்ருதவர்ஷணி ராகத்தை கேட்டுக் கரைந்து பொழிந்த கோடைமழை மீது வந்த இடிகுருமலையில் உருண்டு பாறைகள் உரசியுரசி எழுந்தது நீர். தம்பிரான் உணர்ச்சி அடங்க ஆனை மறைந்திருந்த இடம்தேடி ஓடி பைத்தியமாய் சிரிக்க இருவர் நயன அசைவில் ஆனைக்கண் பேசிய பரிபாஷையில் ராகங்களின் புதிர் ஆழமாகிக்கொண்டே சென்றது. மெளனத்தில்.

செக்குநக்கித்தம்பிரானுக்கு இசையில் பாகம் கொடுத்த குருமலைதாழையூற்று தான்தோன்றியாய் எழுந்தது. தாழை மடல் சுற்றி இதழிதழாய் விரியும் பெருவங்கிய குருமலைக்குள் உறுமியது புலியாகி. எலும்பின் வடிவத்தை அரும்பு அரும்பாய் எடுத்து மருக்கொழுந்தின் காந்தநெடியில் மறையும் ஆனை காட்டில் விட்ட அம்ருதவர்ஷணி ராகத்தை புலி பருகி குருமலைமேல் பசுமைச்சாறு பொங்கும் கமகச் செறிவு. காயாத வனத்தின் அரளிப்பில் புலித்தடத்தில் தாவி ஓடும் பிடிக்கமுடியாத ரகசியஈர்ப்பை செக்குநக்கித்தம்பிரான் புலியோடு ஒரே சுனையில் நீரருந்த அலைமீது அசையும் புலி உருவம். கிறுக்குத் தம்பிரான் கல் உருளும் உப்போடை மடிப்பில் சுரிந்து படிந்த மணல்ஒலி அத்வானத்தில் மெல்ல சலனமுற்று ராகங்களின் நுட்பமான சாயை மிருதுவாய் ருபம்கொள்ள கானல்வரியில் நடந்துவந்த காறுகுறிச்சிமுன் காடே எதிர்நின்று ஒவ்வொரு இலைவடிவ அமைப்பில் ராகம் ஒவ்வொன்றும் அளவுகொண்டு எட்டிய விண்மேல் பருந்தின் சிறகின் கற்றிலும் மெதுவாய் அசைந்து மிதந்து கரைவதை பார்வைகொண்டார் அருணாசலம்.

ஆனையின் சூளாதி ஸ்ப்த தாளங்களின் அடிப்படையில் வறண்ட பாறைமேல் பட்சிகள் ஓயாது
காலக்குறி (-13- மார்ச் 98
படிப்பகம்
________________

www.padippakam.com
ஒலித்தொகை பதிய வந்துபோய் வந்து செல்லும் தடங்கள் அடுக்கடுக்காய் நிழலாடுகின்றன மணல்மேல். குருமலைச் சின்னமீனாள் காட்டுக் கருஞ்சிலையாய் உருக்கொள்ள ராகசஞ்சாரத்தில் இரவெல்லாம் நாயனம் ஓசைகொள்ள குருமலைப்புலவமார்பிள்ளை நாயனத்தில் இன்ன இடத்தில் இன்ன பண் என செக்குநக்கித்தம்பிரான் பூர்வத்தில் நாயன அடைவுமுறை செய்ய அதைப்பின்பற்றிப் போய் மலைமீது எல்லை தாவும் கடும்புலி. திமிரி நாயனத்தை அபிவிருத்தி செய்யவும் அருணாசலம் காடேகி லாடவடிவில் கிடந்த குருமலை மடிப்பின் அடியில் தாழையூற்றில் புலியுடன் நீர்பருகிய கிறுக்குத் தம்பிரானை வெயில் மேல் மிதந்த சின்ன மீனாள் சாயையென தோடிராக கிருதிகளை அவற்றின் பல்லவி அமைத்துள்ள எடுப்பில் சுரங்களைக் காட்டியது நாயனம். தொலைவில் காட்டுக்கோயில் கிறுக்குத்தம்பிரான் சாக்குக்கொட்டிச்சாமியின் கீர்த்தனைகளை நடைத்தெம்மாங்கில் உருமாற்றி செடியிலைகள் அசையும் காற்று வேகத்தில் ஒலிக்க மலைப்பாறைமீது சூரியனை நோக்கி அருணாசலம் அனலாற்றில் இறங்கி நடந்தவாறு சங்கீதத்தின் பிரதானமான சாயல்படிந்த கருப்புமண்ணில் உருக்கொடுத்த கருப்பு நாயனத்தின் ஒசைக்கு ஆடிய பேய்களுக்கும் சாம்பல் நரிகளுக்கும் நாய்க்கும் பட்சி ஜாலங்களின் செவிப்பொறியில் இயல்பும் சாயையும் பொருந்திய ராகங்களை கிருதிகளாக நாயனத்தில் வாஸிக்க வெயில் மேல் சிவந்த புலி வலம் பாய்ந்து ராக உள்ளோசையில் சிறகடித்த கமகங்களின் அபூர்வத்தை கேட்டு கோவில்பட்டி சித்திரைத் தீர்த்த திருவிழா பார்க்க வந்த சுத்துப்பட்டி ஜனம் நரம்பிலும் ரத்தத்திலும் கனவிலும் பயந்து கேட்ட புலிஆட்டத்துடன் நடைமல்லாரியில் ஆலாபித்துவந்த செண்பகவல்லி தேர் அச்சில் கரகரத்த பழம்ஓசையில் நாயனம் ஒலித்த அபூர்வ கிருதிகளை கேட்கக்கூடும் ஒவ்வொரு காலமும்.

 கொன்றை குமுதக்குழல் ஆம்பல் எனவும் மந்தித்தோப்புமலைமாடு மேய்க்கும் கூசாலிபட்டி அருந்ததியச் சிறுமி அமைதியிருந்த புழையும் குழலும் எடுத்து கதிரேசன் மலைமீது திரிந்து பாறையில் உலர்த்திய கிளாய்த்தோல் தவில் குருமலை துர்தேவதைக்கு நிரபலி கொடுத்த பன்றி உதிரம் காளையின் திமிளில் காய்ந்து ஓங்கிய தம்பாலுரணிச்சங்கரன்பகடை சத்தக்குழலில் கையன் வாலித்த தவில் இடியுடன் பிரித்த மின்னலை குரல்வளையில் வளைத்த சின்னஞ்சிறு கழைக்கூத்தாடி கயிற்றில் நின்ற பெருவிரல் இடுக்கில் சுழன்ற ஒலி விசிறியால் முகத்தை முடி மெல்லத் திறந்த கூத்தாடி அழங்காரி கழைத்துண்டுகள் நறுக்கி எடுத்து துளையிட்டு பெரிய சிறிய சாண் குழலை சிறுபிள்ளைக்கு கொடுத்து அழும்பிள்ள்ை வாய்வைத்து ஊதிய கழைவளர் தூம்பு விரல் உளர் துளையில் பண்ணோசையில் கொடிய காற்றுப் பூச்சிகள் குடித்த வெறும் வயிற்றுக்காற்று வறண்டு இழைத்த நாதநூல் இழைமேல் உடலை விசிறியாய் சுழற்றி கூடையாக்கி காற்றடுக்காய் உருமாறினாள் கழைக்கூத்தாடி. கிழக்கூத்தன் உருமி தேயத்தேய சர்ப்பங்கள் திரிநாக்கு நீட்டி கூத்தியை முத்தமிட்டு தலைமயங்கி படமெடுத்து கழுத்தில் கற்றி உடல்பிணைந்து பரவியது பச்சைவெளி. சிறுகுழந்தை பாம்பு வால் நுனிபற்றி நுனிவாலில் விசும்பிய படத்தில் வாய்வைத்து நாயனமாய் பாம்பை ஊத நெளிவு நெளிவாய் வால் துடித்த தலைகீழ் குழல் மகுடியாய் மயங்கிப் பிறந்தது ஆதிநாயனம். 

குருமலைப் பச்சேரிப்பூனை கால்தூக்கி விரல்களை அசைத்த தும்பின் பருமனும் குருமனும் பழையோர் விரல் உணர் கழைத்துளையில் அடைத்த காற்றின் சீர் ஓசையில் வல்லிசை ஒலிக்கவும் அழுத்தம் மென்மை உணர்வு நிலை தங்கி தான்தோன்றி வனத்தில் சீறிய புலிக்குகையில் இருந்தது அருணாசலத்தின் திமிரி நாயனம், பின்னே மீன்துள்ளிகிராமத்தில் மறைந்த புலி சீவாளியை எடுத்து திமிரியில் சேர்த்த சங்கரன்கோவில் கோமதிக்கு பெருங்கேர்ட்டூர் புத்துமண்ணும் நெற்கட்டும்செவல் பிடிமண்தொட்டு சிவகிரிக்கல்சிகரம் பொங்கிய கற்பகால எரிமலைக்கல் குளம்பாய் தீநாவு நீட்டி அனல் நாக்கில் குரல் சுழன்று விழுந்த கல்லில் நச்சாடை தவிர்த்த சிங்காரன் தூக்கியபாத அசைவு பாறைமேல் நிற்கும் மெளனமான பருந்து பந்தல்குடி நையாண்டி மேளம் கைச்சிலம்பு ஆடி பம்பை உறுமி ரெட்டைத்தவில் முழங்கி சினந்து குதிரைகள் மயானம் ஏக ருத்ரபூமியில் தழல் சுருண்டு கபாலம் உருள சூரியன் மீது பாயும் புலி முன்னே எதிர் வலம் பாயும் இடப்புலி வெப்பம் கக்கி சாவின் தொடு எல்லையில் புலியாட்டம். முன்னைப் பழம் இசைக்குள் பதுங்கிய பெருவங்கியம் முகவீணை திமிரி பாரி என இடையே திருவானைக்கோவில் சுப்பிரமணியஆசாரி அயினிமரத்தை கழைதுளையாய் நறுக்கி நிலை வாட்டத்தில் பனி உரைவில் முன் பனியில் பின் பனியில் வேனலில் பருவசக்கரம் சுழற்றி ஆறவைத்த கண்தொடாத மரத்தை மூன்று பாகமாய் சேர்த்த இசைப்பெரி இடபாரி நாயனம் மூன்று கட்டை சுருதியுடன் முப்பத்திரெண்டு மேள ஜன்ய ராகங்களை பூர்வீக சங்கீத உண்மை ஏடு புரட்டி வந்தனர் பின்னே. பாறை பனை ஓலை கபாலம் மரப்பட்டை மண் ஓடு கீறிய செம்புலியின் உருஒத்த திமிரி நாயனத்தை ஆனைத்தந்தத்தில் வடித்த அருணாசலம் பூர்வீகத்தோடு சென்ற கிள்ைவழி சென்றார் சேதுபந்தம் வரை உத்தரகோசமங்கை கோயில் மரகதக்கல் நாயனத்தில் ஓடும் கடல்மிருகம் குழியுடலி லட்சம் உணர் அரும்புகள் நீட்டி
காலக்குறி | 14 | மார்ச் 98
படிப்பகம்
________________

WWW.padippakam.com
அணுவணுவாய் ஒலிபிரித்து நீரின் மர்மத்தை மெல்லோசை கொடுத்த மரகதப்பச்சை நீர் திரிகாலமாய் உரைந்து கல்லாகி வளர்ந்த ஆருத்ராதரிசன வேளை சந்தனக்காப்பு நீங்கித்திறந்த ஆறடி மரகதலிங்கத்தில் ஜனித்த மரகதக்கல்நாயனம் சூரிய நெருப்பாற்றில் ஊத இட பாகத்தில் சந்திரன் குளிர்ந்த கடல் நீராகி நீர் நாயனத்தை பிடித்தபோது திருப்புல்லாணி புல்லி முனிவன்வாகட குணத்தில் தாவரங்கள் பரவும் வனராகங்களை வரைந்து கீழைக்கடலில் மரகதக்கல்நாயன அடைவு முறை வகுக்க ஆதிசேது நீர் தொனித்தது திருப்புல்லாணி, அரசமரத்தில் உரையும் அகத்தியன் முடிவிலா மணல் படுகைநோக்கி நின்ற நெட்டுப் பனங்கூட்டத்தை பார்த்தவாறு பனைகளுக்கிடையே செல்லும் கூண்டு வண்டியில் அருணாசலம் இருவர் மரத்தேரில் மறைவதை எட்ட நின்றுபார்க்க கருமெழுகு பூசிய செக்குலக்கையில் ஊறிவடித்த தைல சிற்பங்கள் ஆழ்ந்த கலவியில் மெய்யுருக கடல்மேல் பிரதிகொள்ளும் வெளியில் கரைகிறது திருப்புல்லாணி மரத்தேரும் தொலைவே செல்லும் கூண்டு வண்டியும். வாலிநோக்கம் கடல் நீரை அறுத்து எழுந்த மங்களநாதர் கோயில் நீர்த்துண்உரைநிலையில் எழுந்த சிற்பயானி ராவிருட்டில் கேட்ட தோடியை ராஜரத்தினம் ஆருத்ரா தரிசனத்தில் சேதுநீரை நாயனமாய் பிடித்து ஆலாபிக்க லட்சம் பேர் தீபந்தம் சுழற்றி ஆடிய தீமுண்ட தவில் சொல்லை கோபுரத்தில் இருந்த திக்குப்பாலகர் உச்சரிக்க கல்மறைவில் கேட்ட வேறொரு அருணாசலம் முகவீணையில் வாலித்து நடந்த காருகுறிச்சி மணலில் மடித்தஓசை பற்றி நடந்த சிறுவன் பாதது.ாளியை தூக்கி தோளில் சுமந்த சக்கரவர்த்தி கல்லிடைக்குறிச்சி பாழ்மண்டபத்தில் சத்தக்குழலில் கேட்ட பிரதி தோடியை கூப்பிடக் கூப்பிட திரும்பிப்பாராமல் மறைந்த தெருவில் மண்கூரையிலிருந்து வந்தான் சிறுவன் காருகுறிச்சி. பிள்ளைக் கிளியை தோளில் சுமந்து தஞ்சாவூர் வழியில் சொல்லிச் சொல்லி மரங்கள் அசைந்து கேட்ட இலைமுச்சின் உயிரை அயினி மரத்தில் வடித்த ராஜரத்தினம் சீவாளியை கீறிக்கொடுத்த பதவர்ணம் என்றுமே அழியாது. காலத்தில் பாடிப்பாடி மெருகேறும் சக்கரவர்த்தியின் நாதஉரு மரகதப்பச்சைப்புலி உறும வாலிநோக்கம் கடலாய் சுரிந்து சுழன்று ஏறிய உப்புநீர் குழல் உள்பாய்ந்து கரித்த உப்பு சுநாதமாய் நாக்கைத்தொட தேனிக்குத் தேனி. கொடுத்த வர்ண பதத்தை தோடியில் இரு மூன்று நாளாய் தொடரும் தேனிக்களின் ரீங்கார வளைவுகான் பூக்களடி மது உள்ளறை சுனை தோய்ந்து கூட்டமாய் உருண்டு திரண்டு ஓடும் தேன் அரக்குநிற நாயனத்தில் உரைந்தது காலமாய். எஞ்சின் ஹெட்லைட் மங்கலாய் அசைந்து இழுத்த ரயில் வண்டித்தொடர் சேரன்மகாதேவி ஸ்டேஷனில் நின்று முச்சுவாங்கி மெல்ல இரும்பின் குமுறலோடு ஓட ஆரம்பித்தது. தாமிரபரணி ரயில்பாலத்தில் மழையோடு போன அம்ருதவர்ஷணி ராகத்தை குருமலை ஆனை அனல்நாக்கில் உச்சரித்த ரயில் ஜன்னல்களில் பட்டு த்வனித்த மெலிந்த திவளைகளில் வடிந்து உருகும் உணர்வுகளினூடே அதிர்ந்த பாலத்தின் ஏதேதோ அமானுஷ்ய ஈர்ப்பில் சிலிப்பர் கட்டைகளுக்கிடையில் தாவித்தாவி மறையும் சிறுமியின் எட்டிப்பார்க்கும் அதிசயம் பிரிந்துவந்த தங்கைகளின் உருக்கொண்டது கங்கைகொண்டான் ரயில் நிலையம். அங்கங்கே இருந்த ஆளற்ற ஸ்டேஷனில் எல்லோரது ஆசைக்கும் இடமிருந்தது. யாருமில்லாத வேப்பமர ஸ்டேஷனில் மரக்கிளைகளில் ஏறியகாற்றின் கிசுகிசுப்பின் ஏற்ற இறக்க ஒலி பேதத்தில் வேம்பு ஸ்டேஷனில் நின்று போயிருந்தது ரயில். வேம்பு கிசுசிசுத்த ரகஸிய உரையாடலில் விரிந்த காருகுறிச்சி ஊர் மண்கூரை வீடுகளின் கூம்புகளில் இற்ற சாம்பல் இறுகி மெல்லத் துடித்து ஒடிந்து ஓலமிடும் ஒலி வாஸியா நின்ற கருப்புநாயன மெளனத்தில் விழுந்தது. சின்னவளின் வாடிய முகத்திலிருந்த கோடகள் ரேகைகளில் மங்கலான இலைமரங்களின் தனித்த சோகம் தாவர நரம்பின் மஞ்சள் வெளிறிய அம்மாவின் சாயை அரசிலையாய் துடித்து வாடி காற்றின் மிருதுவான வரிகளை வாசித்து புலம்பி காற்றில் சுருளும். குறுக்குக்கட்டைகளில் கடந்த திருநெல்வேலிப்பாலத்தின் கீழே சுழிந்து சுரிந்த நீரின் கண்பார்த்த எலும்புப் பார்வையில் பின்னே விதியின் கடைசி விநாடிக்கான துர்சகுனம் ஆற்றின் கரைதொட்டு சீறியது. ஊமையாய் பேசும் அணுவணுவான நெடுந்தொலைவு. தொட முடியாத கிராமங்களின் வரைகோடுகளின் அருகே பின்னிரவில் போய் மயங்கிய வீடுகளைத் தொட்டு தவித்துத் செல்லும் நீள ரயில் வண்டித்தொடர் நுண்கருவிகளுக்குள் வளையாத அத்துவானம் மீது வளையும் புலப்படாத ஊர். செங்கல் சுவர்களில் எட்டிப்பார்த்த புறாவின் சாம்பல் கழுத்தில் ஆயிரம் ஒயில் வளைவு அசையும் சிறுமிகளின் சாடை. எல்லாம் இசை எனப்பரவிய வறண்ட நிரப்பரப்பில் பழுப்படைந்த நீளரயில் தொடர் வெளி மரங்கள் வட்டமாய் சுற்றி தொலைவதும் வா. வா. வென நெளியும் கிளைபரப்பி எல்லாப் பக்கமும் கூப்பிடும். வெள்ளியம் கரைந்து புகையும் நிலத்தோற்றங்கள் மீது வெள்ளிப்புழு நெளிந்து வளைந்து ஏன் எங்கே. விண்.னென்ற அதிர்வு துன்யப்பரப்பில் துளைந்து புழுக்கள் நெண்டி நிமிண்டி வெண்படலத்தில் உலவும்.

நெல்வேலியில் நாயனக்குழலில் படிந்த ரத்தத் துளிகள் நீண்டு வர, வெப்பம்தகிக்க உயிர்பிரிந்து பரவியபோது இன்னொரு பக்கத்தில் இடபாகமாய் அமர்ந்திருந்த செம்மண் ஊர் அருணாசலம் விலகி
காலக்குறி | 15 | மார்ச் 98
படிப்பகம்
________________

www.padippakam.Com
எழுந்தார் நாயனத்தைவிட்டு. முப்பது வருஷங்கள் தொடாமல், அகன்று நின்றார் சங்கீத சாகரத்தின் முச்சடக்கி, அவிழாத மூச்சு அடிஈரலில் சுழன்று குமிழ்விட்டு கிளையேறி அசைத்த நுரையீரல் மரத்தின் லட்சம் கிளை முச்சில் அடக்கியிருந்த காற்று கல்லாய் உரைந்து கதிரேசன் மலைக்குகையில் அம்மணருபத்தில் காத்திருந்தது கொடும்புலியாய் தேக அமைப்பு ஆறடியும் சிங்கத்தினின்று மாறுதலைக்கொண்ட ராக்காலக் கண்நிறம் மஞ்சளாய் தேகத்தின் கோடுகள் கருப்பு வெட்டாய் வெண் அடிவயிற்றில் ஆறுசுனை மடுவில் ஊறும் புலிப்பால்கட்டி கதறும் இருளில் முன்கால் வலிமையால் பாறையில் தூக்கிப் பதித்த நகங்கள் கீறிய பண்வரிகள் இரவில் தேடிய நாயனத்தில் கொடும்புலி அமர்ந்திருந்தது. ஜாலத்தில் போகும் வழியெங்கும் பரவிய மிருக ஈர்ப்பில் தானே மயங்கி வரும் மனிதர்கள் குகை வாயில் நின்று அழைத்த குரலில் புலி அலறியது. புளித்தபுல் ஒட்டுப்புல் வாசனைப்புல்லில் புரண்டு நூறு அடி வளர்ந்த குகைக்குள் மறையும் புல் சயனத்தில், (His MASTER's voicE 78 கருப்பு இசைத்தட்டு மேல் அமர்ந்த கிராமபோன் ஊசியுள் ஒளிந்து கொண்டது காறுகுறிச்சியின் சாம்பல் நிற ப்ளசர் எண். MDR 5532 பிளைமவுத் ராசி மண்டலத்தை அரக்கில் கேட்டபோது ஊமத்தம்பூ குழயின் பித்தளை உலோகக் குரலில் பொறிப்புலியின் வயவரி ஒவ்வொரு கருப்பு இசைத்தட்டாய் சுழன்று ஓடிய கோவில்பட்டி கடலையூர் ரோட்டிலிருந்த வீட்டுக்கும் வக்கீல் தெரு விட்டுக்கும நகர்ந்த துர்சகுனத்தை மதராஸ் பட்டிண வாசலில் எடுத்த படப்பிடிப்பில் குலமகள்.ராதையாய் விதிமேல் பாய்ந்தது பூனை. படத்தில் பிடிக்கமுடியாத சர்க்கஸ் விதியை நாலுபோலில், நிறுத்தி பார்விளையாடிய நாடோடி ரத்தத்தில் ஓடிய கழையில் சுழன்ற உடல் கரைந்து ஒளி விசிறியாக உருமாறுவதை நேரில் பார்த்த அருணாசலம் அதை நாயனதில் சர்க்கஸ்காரிகள் உடலை காற்றின் ஒலி அடுக்காய் பிடிக்க நாகசுர விரலடி பயிரவி ராகத்தில் விருபோனி எனும் வர்ணத்தை முக்காலமும் விளங்க வேகவாலிப்பாய் பிடித்தபோது கோவில்பட்டி செம்மண் தெரு அசுரசாதகம் செய்தது. உலோகக் கூண்டில் அடைபட்ட புலி சர்க்கஸ் அரங்கை விட்டு வலம் பாய்ந்து தப்பிய தருணம் தீவளையத்தில் பட்ட வால்நுனி லேசாய் கருகியிருக்கும். கதிரேசன்மலைக்குகையின் ஆதி ஞாபகம் தூத்துக்குடிமெயிலில் பின்னோக்கி இழுத்துச் சென்றது அருணாசலத்தை செப்டம்பர் பதினொன்றில் என்றோ வாஸித்த சின்னஞ்சிறு கிளியை எட்டயபுரம் மேலவாசலில் ஜீவா முன் திரஸ்ரகதி ஆதி தாளத்தில் ராகமாலிகாவில் அடக்கியிருந்தது நாயனம். தலைமறைவில் வாழ்ந்த பேர் தெரியாத கலகக்காரர் நரம்பில் ஒளிந்து கொண்டுதான் இருக்கும் அந்த வாலிப்பு. பாழ்விழுந்தநெல்லையப்பர்கோபுரமுகத்தில் உமையின் கண்ணில் புகுந்தகதை சாவிலும் பின்தொடர அவர் திரும்பியிராத ஊர் காருகுறிச்சி, சாவின்விதி நெல்வேலியில் நிறுத்தியது நாயனத்தை பிறந்த திரவாசம் தாண்டி தாமிரவருணி ஆற்றுக்கு அப்பால் விடாத விதியை தாண்டிப்போன கடக்கமுடியாத அணுதுளைந்த ஈயநிற விண்மேல் நீர்வறண்ட மேகங்கள் கரையும் சமவெளிச்செம்மண்னர் பேர் கோவில்பட்டி நாற்பது வருஷங்கள் திரிந்த சரல்மண் தெருவில் அருணாசலத்தின் அசுரசாதகம் கோவில்பட்டி செம்மண் முகங்குத்தி எழ கதிரேசன் மலைச்சரிவில் உருண்ட லாடவடிவ பாறை மறைவில் இசை நுட்பத்தில் உதிர்ந்த துகள் மாதாங்கோயில் பொட்டுக்கட்டிய மரபில் வந்த வெளிப்படாத சிலைமறவில் இருந்த பெரியோர் வாய்ப்பாட்டும் அசுர நாயனத்துளைகளில் வருவித்த மூலிகைக் குருமலைக்காற்று கூட்டில் நோயக்கற்றி நாலாட்டின்புத்துர் ஸ்டேஷன் தாண்டிப்போன செம்மண்ரோட்டின் கீழே இருந்தது இடைசெவல், முத்தம்மாள் சித்திரமேனி நாதசுரவிரலடி கீறினார் காருகுறிச்சி. முத்தம்மாளை கூண்டு வண்டியில் கூட்டிப்போன நாளில் வளையும் பாதையாய் தெம்மாங்கு, செண்பகவல்லியின் கருஞ்சிலைக் களிம்பை தொட்டதும் நாயனம் பதறியது. அவள் கருங்கண்ணில் புகுந்த அருணாசலம் இருவர்கதை நமயன அசைவில் மறைந்த செண்பக ஆறும் செண்பகராஜாவும் தேரும் செண்பகவல்லி கண்மேல் சுற்றும் புராணத்துடன் இணைத்தது நாயனம். காருகுறிச்சியார் வந்தேறிய செம்மண்ஊர் குயிலாய் சுற்றிச் சுற்றி நெருங்கி வந்த பருத்திக்காட்டில் குகன்பாறை மைப்பாறையில் உள் மறைந்து குயிலும் ஓசை தட்டியது குடப்பாறையில் அருணகிரிமுனி திருப்புகழ் சிந்துபைரவியில் வரகனூர் ஜைன குகைக்குடைவில் கேட்க வாளோடு பேசிய வரதங்காராஜா முன் சூழ்ந்த பாறைஉருக துளிர்த்த திருகுகள்ளி அடுக்கில் விரலடி செல்ல கோடை உருமாறி வரகு உதிர்ந்த காட்டில். சிதறிய தவில் பாறையில் பிளந்து ஆலங்கட்டிகள் சிதற சிறுவர்களோடு வரதங்கராஜாவும் ஒடி ஒடித்தொட்ட குளிர்ச்சியை வைத்தது நாயனம.

செண்பகஆற்றுடன் மறைந்த ஊராளியர் காடர் கழைக்கூத்தாடிகளின் நெருங்கிய குருதித்தொடர்பு ஒருங்கு கலந்து செம்பாறைக்கபாலக்கவிகை மோடுவடிவ குறுவங்கியத்தை வெண்கலப் படிமத்துடன் இணைத்தபோது ஜனித்த சத்தக்குழல் தபசிருந்த புலிக்குகையில் கொடுவரி வேங்கையாய் பதுங்கியது. உடன் வாசித்த வேறொரு அருணாசலம் குகை இருளில் உருகிய காற்று செந்நிலமாய் விரிந்தது
காலக் குறி | 16 | மார்ச் 98
படிப்பகம்
________________

மெல்ல. வறண்ட கோயில் தூண்களைத் தட்டி உலோக ஊழியின் ஒலிபல கேட்ட அவ்வூர்
நாயனக்காரர் மகள் வெயிலாச்சி தொட்ட கல்லெல்லாம் உரசிய உள்குரலில் பேசியது. செண்பக ஆறு. இறவாதகுயில்விளக்கு அவள் மேனியெங்கும் திரிநாவு படர்ந்து எரியும் இருசுடர் தொனித்தது காருகுறிச்சியை. நிருபதுங்கராகமாய் அருணாசலத்தின் குரல் வளைக்குறுத்தெலும்பு தைவதத்தை ஷட்சமாக கிரகபேதம் செய்தது. நிருபதுங்கம் கூடற்திருமாறன் முன் சூரியச்சந்திரர் இவரென நாயனக்குரல் நாண்மூச்சுப்பை துருத்தி எரியும் முச்சு நீரில் அமிழ்ந்து நெருப்பாய் பரிதி சுழன்று நாய்களின் கபாலத்தில் சுழன்றது. கடைக்கோடு. கருப்பு நாயனங்கள் இரண்டை கோவில்பட்டி மீதிருந்த செந்நிறக்குன்றுகளில் புலிக்குகையில் வைத்த அருணாசலம் இருவர் இசையெனும் மாயநோய்க்கு ஆட்பட்டு கதிரேசன்மலையைச்சுற்றி நின்ற வறண்டகுன்றுகளிடையே மறைந்தனர் கல்லின் வேட்கையில் உச்சியிலிருந்த சுனைப்பாறையில் மாடுகள் புலம்பும் ஓசையை மந்தித்தோப்புசிறுமிகள் தூரத்தில் நின்று பதில் ஒலிக்க பாறைகளின் அடிநாதத்தை உணர்ந்த ஊர்காலிமாடுகளின் குளம்புகளின் பிளவுகளுக்கிடையில் இருவராய் நின்றனர் காருகுறிச்சியும் அருணாசலமும், குருமலைவனத்தில் காய்ந்த மான்தொலி ஐந்துகண்ணுடைய தோல்வாத்தியத்தை கேட்டாள் செண்பகவல்லி. கூட்டமாய் ஓடும் மான்கள் பூமிமுட்டும் ஓசை வறண்ட பாறையில் சுனைகீறி வந்த நீர்மைஆடியில் புலி வந்து நிற்க கண்ணருகே பாயும் இசை குகையில் மறைந்த நாயனத்தின் மிருதுவான காற்று வேங்கைத்தோளில் அசைந்தது அந்தரங்கமாய், பாறைகளைப் பிளந்துநின்ற சந்திர சூரியராய் சாம்பல் நாயின்பைத்தியம் பிடித்த விலாஎலும்பில் பாயும் இசை அருவியை புலிக்குகைநாயனத்தில் வாலித்த காருகுறிச்சியை நேரில் கண்ட எட்டயபுரம் சமஸ்தானத்திலிருந்த தைல வண்ண ஓவியப் பெண் முத்துக்கனகவல்லி அரண்மனை நந்தவனத்தில் பறித்த ஓர் லயமலரை இரு அருணாசலநாயனக்காரர் முன் தோடியுள் சுழலும் முச்சில் வைத்தாள்.

செந்நிறக்குன்றுகள் மீது மந்தமானவெயில் அசையும் பாறைகளை உருக்கி மூச்சில் விழுங்கி செந்நிற எரிகற்களாய் ஊரின் ஞாபகங்கள் நுனங்களின் கபாலத்துள் ஈர்த்து எரியும் செண்பகவல்லி நிற்கும் கோலத்தை நாயனத்தில் வைத்தனர் அருணாசலம் இருவரும். இசையுள் ஒருவராகி உருமாறி வெளியே இருவராகி அமர்ந்திருந்தனர் சித்திரைத்தேரோட்டத்தன்று சுழன்ற குடைராட்டிணத்தில். மேட்டு மைதானத்தில் சுற்றும் சித்திரைத் தீர்த்த குடைராட்டினப்பொறியின் உள்அமைப்பை கிரகசுரப்பிரஸ்தாரமாக்கி ராட்டினத்துள் நாய்கள் முன்னோட மரக்குதிரைகள் எகிறிப்பாய்ந்து வர சுழன்ற குடைராட்டினத்திலிருந்தவாறு பிரபஞ்ச அமைவின் ஒத்திசைவான ஓசையின்சுழற்சிவிசை மடங்காகப் பெருகி ஓடும் கிரகங்களின் விதியை தங்கள் இருவருக்குமான பெயரின் கண்ணாடியில் பார்த்தபோது ராகங்கள் மட்டுமே கண்ணாடியில் சுழன்று கொண்டிருந்தது முடிவற்று. ஆளற்ற கண்ணாடியில் நாதவிரல் மட்டும் ஊர்ந்து ஊதந்துளைகள் தர்ச்சனி முதலாக விட்டுப்பிடித்த ஆரோகணம் சுரம் சுரமான மேலேறி குடைராட்டின மூடுபடுதாமேல் கிழிந்த நட்சத்திரத்தெறிப்பில் மோதிச் சரிந்து ஒளியுமிழ்ந்து வர சுண்டுவிரல் விட்டுப் பிடித்த அவரோகண சுரஇறக்கத்தில் குதிரைகள் சுழன்று சுற்ற நட்சத்திர அண்டகோள விலாசம் சுழன்று குடை ராட்டினப் பொறி அமைவில் ஆரோகண அவரோகணம் நிரவிச் சுழலும் பழமையான ராட்டினத்தில் நூற்றி மூன்று பண் நிலைகுலையாமல் சுழன்றாடும் சித்திரைத் தீர்த்த குடைராட்டினம். சித்திரை முழவின் கண்ணிலிருந்து எழும் தாளவிசை ஒத்தும் குழல் இசை எழ நிறப்பட்டையில் ஆதார ராகங்கள் எழ ஒலி செய்யும் குழல்காரன் பலூன்களுடன் சிலம்பச்சிலம்பும் சித்திரைக்காற்று.

வெறுமையான குன்றுகள் மீது மயங்கியிருந்த அகாலத்தின் அஸ்சுவாரஸ்யமான தூக்கத்தில் தன்மயமாகி அலைந்த அருணாசலம் நாயனத்தின் சம்பரிதாய வாசிப்பின் கூண்டைவிட்டு வெளியே பறந்தபோதுதான் கடலையூருக்கு வில்வண்டி கட்டிப்போன ரெட்டை குழல்துப்பாக்கிக் குழலாய் பள்ளத்தில் போன வண்டிச்சோட்டில் பாறைகளிலும் குகைகளிலும் குரல்பல எதிரொலித்த ஆளற்ற வெறுங்காற்றின் அமானுஷ்யமான ஓசை இழுத்தது வேகஈர்ப்பாய். விரிசல் கண்ட பாறையின் குரல் கரகரத்தது. சக்கரங்களுக்குக் கீழ் கற்கள் நொறுங்கும் ஒலி. நொடிப்பாதையில் மறித்தன செம்பாறையில். ஊசிஊசியான செங்குத்துப்பாறை அச்சமுட்டியது. அப்பால் பொட்டல்காடு. எங்கும் மங்கிய வெளிச்சத்தில் சூன்யப் புழுக்கள் நெண்டி நிமிண்டித் துளையும் சூன்யம். வெகுதூரம் வரை ஆளரவமில்லை. நிழல் மண்டிய கள்ளித்தலைகள் ஆடி அழைத்தன. வறண்ட கற்கள் உருண்டு குவியல் குவியலாய் குத்துச்செடி. வர்ணங்களை வெள்ளி நீந்தும் வெயிலோடு செம்பாறை வெளிப்படுத்த இசையின் கரடுகள் உயிர்ப்பெய்தி அகாலத்தின் அசைவில் நயங்கள் பிறந்தன. மனோ வியாபகத்தில் சங்கீத ஏடுகள் புறண்டு நடுப்பாரி நாயனம் தொட்ட எல்லையில் ஈயநிறவானம் வளைந்து எழுந்தது. அஸ்திவாரத்தை பாறைப்படிவுகளில், கண்டு நின்ற வில்வண்டியிலிருந்து காட்டில்
காலக்குறி | 17 | மார்ச் 98
படிப்பகம்
________________

இறங்கி வறண்டபாறை மடியிலளிதில் அருணாசலம், திமிரியும் பாரியும் வளைந்த சங்கீத ரத்னாகரத்தின்வரி ஊசிப்பாறைகளின் நெளிவாகி மறைந்து தோன்ற கீர்த்தனைகளிலே நிரவல் செய்தும் சுரப்பிரஸ்தாரமும் பலமாய் விரிந்தன விண்ணில் சுற்றிவரும் மேகங்களுக்குக் கீழே குறும்பாறைகளும் தொலைவுப்பரம்புகளின் சரிவில் அவாந்திரத்தின் மாயநோய் பீடித்த சாவின் வசீகர அசைவும் உயிரின் மங்கிய படிவுப்பாறைகளும் எங்கே. ஏன். என யார்யாரோ வருவதாகத் தோன்றி மறையும் பொருக்குப்பரம்புகளில் ஊழியூழியாய் சாயல் கொண்ட உருவங்கள் அசைந்து அவாந்திரத்தில் நகர்கிறார்கள் மெல்ல. கோரை கோரையான களர்நிலத்தாவரங்கள் சருகுடன் முணுமுணுத்த ஒலி பாறைகளின் ஆழத்தில் காய்ந்து கிடந்த வட்டப்பாறைகளில் பயங்கர நிசப்தம். கூர்மையான செங்குத்துக் குன்றின் கீழே மொட்டை வண்டியில் பாறைகளை சுற்றி சரலில் தடுமாறி அசையும் தடதடத்த ஒலி. துங்கிவழியும் வண்டிக்காரன் தன்மேல் கட்டிய பாறையை மறந்து வண்டிமேல் அசைகிறான். செங்குத்தாய் கீழே பளளத்தில் கரும்பனைகள் உரசும் சரசரப்பு. அரக்குநிற நாயனத்தை தோளிலிருந்து இறக்கிவிட அது கொடுவரி வல்லியமாய் மிகுந்த சினத்தில் முழ்கி நடுங்கும் பாறையின் செம்மஞ்சளாய் உருமாறிப் பின்னோக்கி வலம்திரும்பி பாறைமறைவில் இருந்து எட்டிப்பார்த்தது ரத்தம் குடித்த கண்களால். பாறைகளை தொடு நகங்களால் பிளந்து எரியும் வெப்பத்தை நுகர்ந்து அண்ணாந்து அலறியது தலைதூக்கி, செந்தலையை சிகரமான பாறைமீது காட்டி உடல் பதுங்கி நின்றது. கூரான பற்களில் ஊசி ஊசியான வெண்மை மிருதுவாய் பளிச்சென்றது. பாறைகள் திரட்டிய மனோபலத்தையெல்லாம் ஒரு rணத்தில் தாவி உயிர்ப்புற்று தொலைவே சென்றது தன்னைவிட்டு. கர்ஜனையின் ஒலி கற்பாளங்களில் எதிரொலித்தபடியிருந்தது முடிவற்று. மூப்படைந்த அரக்குப் பாறைகள் உயரம் வரை எழுந்து பரவ பாறைக்குள் தொங்கிச் சுழலும் இவ்வூரின் செந்நிறமான தெருக்களில் புள்ளி புள்ளியாய் நடமாடும் உருவங்கள் மறைகின்றன அசைந்து. ஈயத்தைக் காய்ச்சி விண் முழுவதும் உருக்கும் உஷ்ண வேளையில் பிளவுபட்ட இருபாறைகளுக்கிடையில் கைநழுவிச்சென்ற நாயனம் பாறைமீது புலியாக குத்துப்பாறையில் கிழிக்கும் ஊசிவெயிலில் மெல்ல நகர்ந்து எட்டிப்பார்த்தபோது முடிவில்லாத சமவெளியின் தொடுவானில் செந்நிற ஊரே வறண்ட பாழ்தோற்றமென எதைஎதையோ வாக்கியங்களில் முடிவு பெறமால் கூப்பிடக் கூப்பிட புலப்படாத எரியும் கற்களின் ஈர்ப்பில் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் போலும், விநோதக்கற்களின் பரப்பில்போன வேவுபார்க்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியாய் நீளும் வண்டிச்சோட்டில் வெடியோசைக்குப்பின் அருணாசலம் உச்சரித்த கடைசி தொனி விண்மேல் ஏறி உயர்ந்து சூன்யத்தை அவாவித் தவிக்கிறது தனியே. சூன்ய ஈர்ப்பில் பதிந்த வெறுங்கோடுகள் வறண்டு உலர்ந்த ரேகைகள் கிறுக்கிக் கிறுக்கிச் செதுக்கிய வெற்றிடத்தில் யாருமின்றிப் பதிந்த துளைவுகள் ஒருங்கு கலந்து பரவிய பாறைகளின் துக்கத்தில் உரு இழந்த காற்று மெல்ல வந்து உருட்டிச் சென்று பாறைகள் குத்தும் செதில் செதிலான பிளவுகளுக்கிடையே ஒலிக்கோவை. புலனாகா வழியிலிருந்து வந்த சாம்பல் குருவிகள் உயரத்திலிருந்து தொங்கி சரிந்து வளைந்து ஆலாபித்த கமகவளைவில் அபாந்திரவெளிக்கும் செம்பாறைகளுக்கும் இடையில் இசைவெளி வெண்படலமாய் அசைந்து மிதந்த சாம்பல் குரலை கேட்டுக் கேட்டு பின் சென்றது காருகுறிச்சியின் உரு.
காலக்குறி | 18 | மார்ச் 98
படிப்பகம்

________________

WWW.padippakam.com 


 தமிழ்ப் புனைகதை மரபும் கோணங்கியும் - எஸ்.சண்முகம்
| Each author is the next author's reader, and each reader is an author who is read by the other readers. Each front line narrator is a second-line naratee, and each front line naratee (each first reader) is a second line - narrator. The set of narratee (authors) and the set of narrators (first readers) are identical, and that identity forms the un "narrated" set.  

Jean Francois Lyotard
(Lessons in Paganism) 

(1) 

கதையென வழங்கிய ஒரு வகை எழுதுதல் முறைமையானது, இன்று பல்வேறு மாறுதல்களினால் வித்யாசப்படுத்தப்பட்டுள்ளது, (1) முறைமாற்று (2) வரிசை மாற்று என்ற இருவகையான மொழி ரீதியான வேறுபாடுகளை அடைத்துள்ளதாக பின்-நவீனத்துவ சிந்தனையாளரான ழான் பிரான்சுவா லியோடார்ட் சொல்கிறார். வழமையான கதை ஆசிரியன்/கதை/வாசகன் என்ற பாகுபாட்டிலிருந்து மொழிக்களனானது மாறியுள்ளது. 

இன்று 
Narratee/Narrator
Narratee/Narrated
Narrator/ Narrated

என்ற மொழிவகையில் மாற்றம் தண்டிருக்கிறது என்கிறார். மேற்கண்டவாறு பல்வேறு நிலைபாடுகளாய்" (Positions) முறைமாறியும் வரிசைமாறியும் வந்துள்ளது. கதைக்கு 'மனிதப் பண்பு' மையமென கொண்ட கதையாடல்கள், Narratee/ ஆக சொல்லுதல்களின் கட்ட்விழ்ந்து இருக்கிறது. மனிதப் ப்ண்பை நோக்கியே குவிக்கிப்பட்ட வாசகனின் வாசித்தல் சிதறிடிக்கபட்டது. தமிழின் புனைகதை மரபில் முதல் இரு நாவல்களின் போக்கே இருவேறு எதிரெதிர் பண்புகளை கொண்டிருக்கிறது. 1. பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளை ஸ்பானிய நாவலாசிரியனின் Don Quixote-ல் உள்ள Chivalry என்ற கூற்றை அடிப்படை பிரதியியல் நுட்பமாக கொண்டு எழுதினார். 2. இரண்டாவதாக கமலாம்பாள் சரித்திரம் எழுதிய பி.ஆர். ராஜமய்யர் அவருடைய நாவலுக்கு 'சீதையின் நற்பண்புகளை" பாத்திரவயப்படுத்தலை செய்வதையே தனது பிரதியிய கோட்பாடு என கண்டறிகிறார் ஆக தமிழ்நாவலின் ஊற்று கண்ணிலிருந்து இருவேறு கிளைகள் பிரிந்துள்ளன.

1. பிரதாப முதலியார் சரித்திரம் - Chivalry வழியான அறநெறியை மனிதவயப்படுத்துவது
 2. கமலாம்பாள் சரித்திரம் -9 நற்பண்பை மீட்டெடுத்தல் 
இவ்விரு பண்புகளின் வழியே தமிழ் புனைகதையானது வளர்ந்துள்ளமை நோக்கத்தக்கது. இந்த இரு நாவலாசிரியர்களும் சரித்திரம் என்பதை 
1. வேதநாயகம்பிள்ளை - Chronicle ஆகவும் 
2. ராஜமய்யர் - Biography 
ஆகவும் மாற்றியுள்ளனர். மேலும் தங்களின் கதை பிரதியாக்கத்தைத் தீர்மானித்தவையாக அவர்களுள் கருதும் விஷயத்தைக் காணலாம். 

1. பிரதாப முதலியார் சரித்திரம் :- இந்த 'கதைக்கு நிலைக்களமான தென் இந்தியாவை (landscape) முன்னர் எழுதிய அறநெறி நூல்களுக்கு உதாரணங்களாக காட்ட எழுதினேன் என்கிறார். தேசியப் பண்பு, இல் வாழ்க்கை, தென் இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள். 

2. கமலாம்பாள் சரித்திரம் :- இச்சரித்திரமெழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மேற்கண்ட இருவரிடமும் ஓரளவில் அறநெறியை பாத்திரவயப்படுத்தல் அதாவது பிரதிக்குள் அறங்களை Intern செய்யும் போக்கு இருந்திருக்கிறது. ஆனால் வேதநாயகம் பிள்ளை கதை (Tale) என்பதற்கு அழுத்தம் தந்திருக்கிறார் என்பது ஆவரது கூற்றாலேயே தெரியவருகிறது. அவரது நாவலின் ஒவ்வொரு பகுதியையும் Chivalric tale ஆகவே கட்டமைத்துள்ளார். புலியெனும் கிலி போன்றவை

படிப்பகம்
________________

இதற்கு தக்க பிரதியல் சான்றாகுமadதிறிேகியினிதவயப்படுத்துவதில் நகைச்சுவையை மொழிக்கட்டமைப்பில் கொண்டுவருவதில் ஒரு இரண்டக நிலையை காணலாம். கவர்னருக்கு வணக்கம் சொல்லும் காவலர்களைக் காணும் கவர்னருடன் அமர்ந்துள்ள சிறுவன் தனக்குத்தான் அது அளிக்கப்படுகிறது என நினைப்பதை அப்பிரதியில் இழையூவிட்டிருப்பது வணக்கம் என்ற மரியாதையை parody செய்வதும் கதைமொழியின் ஒரு இழைப்பின்னல் (Texure) ஆக நாவல் முழுவதும் காணமுடிகிறது. ஆனால் ராஜமய்யர் பிற்கூற்று என்ற நாவலின் கடைசிலுள்ள குறிப்பில் "எனக்கு கதையே முக்கிய கருத்தன்று" என்று கூறுவதில் Tale என்பதை மறுதலித்தும் அதை ஒரு கருத்தாக மொழிப்படுத்தும் கதை மரபுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறார். இவ்வாறு இருவேறு நேரெதிர் பண்புகளோடு உருவான தமிழ் புதினம் ஒருபுறம் பிரதாபமாகவும் ஒருபுறம் சரித்திரமாகவும் வளர்ந்துள்ளது. 

(2)

அடுத்ததாக புதுமைப்பித்தனும், மெளனியும் சிறுகதையை எவ்வாறு மொழிச் செயல்பாடாக மாற்றினார்கள் என்பதை சுருக்கமாக பார்க்கலாம். புதுமைப்பித்தன் சிறுகதைகளில் ஒவ்வொரு கதையையும் ஒரு பிரத்யேகமான மொழி அமைப்பில் கட்டமைக்கும் போக்கைக் காணலாம். பெரும்பாலாக () ஏதார்த்த எழுத்து (2) எதிர் எதார்த்த எழுத்து (3) முழுக்க முழுக்க மொழிமய சிறுகதைகளாக பிரித்து அறியலாம். இங்கு மேற்கண்டவைகளைப் புதுமைப்பித்தன் சிறுகதை என்ற மொழியை அவர் அறிந்த அறிதல் கட்டமைப்பாக (Cognitivę 29ņstrụę ) கருதலாம். அதோடன்றி இதிலிருந்து விடுபட்ட விதமாய் பத்து வெவ்வேறு விதமான 'ಘೀஇல் பத்து பத்தாக சிறுகதைகளை எழுதியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது. இவை விரிவாக வேறொரு தனிக்கட்டுரையாக காணததககதாகும. 

இதற்கு இணையாக மெளனியும் சிறுகதைகளை எழுதியபோதிலும் புதுமைப்பித்தனிடம் காணக்கிடைக்கும் Hetro discursive தன்மையதான மொழி விளையாட்டு அமையப்பெற்ற சிறுகதைகள் அதிகம் இல்லாதபோதிலும் மெளனியின் குறிபிட்டத்தக்க போக்காக ஒரே சிறுகதையில் பல்வேறு விதமான மொழி அமைப்பை சிறுகதை சட்டகத்தினுள் அடக்கி பிரதியாக்கியுள்ளமை முக்கியமானது. சிறுகதையை மெளனி பன்முக முனைகளைக் கொண்ட சொல்லாடல் தொகுப்பாக தருகிறார். கதையென்பதை ஒரு வகையான மொழிக்கூற்றின் தன்மை வழியாகவே கட்டமைக்கிறார் மெளனி. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தனும் மெளனியும் இரண்டு எதிரும் புதிருமான போக்கிலேயே தங்களது எழுத்துக்களை கட்டமைத்துள்ளனர்.

புதுமைப்பித்தன் : யதார்த்தம், எதிர் எதார்த்தம், சொல்லுதலால் ஆனவை.

மெளனி : யதார்த்த மொழிச் சிறுகதைகள் , ஒரே கதையில் பல்வேறு விதமான  மொழி கொண்டவை.

இவ்வாறு நீண்டுள்ள புனைகதை மரபில் ஒருபுறம் வலிமையான ஒற்றை மொழி கிளைத்தல் (Language Narration) யதார்த்த வகையான எழுத்துமுறை வாசக தளத்தை கரடுதட்ட வைத்துள்ள வகைமையாக மாறியுள்ளதை அறியலாம். மற்றொரு போக்காக "சொல்லுதல்" என்ற மொழிக்களனை சொல்லாடல் வயமான பிரதியாக்க நுட்பமாக கொண்ட எதிர்-எதார்த்த போக்கின் புனைகதை மரபு ஒன்று வளர்ந்து வந்துள்ளது. அந்தப் போக்கு தொடர்ந்து கதை சொல்லியை அடுத்தக் கதையைப் பிரதிப்படுத்தும் கதை சொல்லியின் வாசகனாக்கும் மரபை தமிழில் சாத்தியப்படுத்த முயன்று கொண்டிருக்கின்றது. 

(3)

இன்று புனைகதை மரபில் மைய அழுத்தம் பெற்றுள்ள எதார்த்த எழுத்துமுறை அதற்கு எதிரான எதிர் எதார்த்த போக்குகளை விளிம்புகளுக்கு வெளியே தள்ளிவிட்டு வாசகரின் கற்பனை பாதுகாவலர்களாக தங்களை முன்னிறுத்தி கொண்டுள்ளது. விளிம்புகளுக்கு வெளியே இயங்கும் இந்த எதிர் எதார்த்த புனைகதை பீட்டர் லமார்க்சின் Fiction Narration ஆகிய இரண்டையும் குறித்த கருத்துக்களை அறிவது உதவும்.

1. "Fiction' can simply mean 'Novel' or even story.
2. 'Narrative' carries clear cannotation of making or structuring, but without the
ontological implications of 'Making up' or fabricating within Narratives there can be
காலக்குறி | 22 | மார்ச் 98
படிப்பகம்
________________

WWW.pagippakam.com 

fictions both in the object and the description senses But Narratives are not limited to
fictions in either sense.

இவ்வாறு சொல்லுதல் என்பதை ஒரு குறிப்பிட்ட வரையறையில் கட்டுப்படுத்த முடியாது என தெரிகிறது. கதைப்பிரதியில் Narrative என்ற சொல்லுதல் ஒரு கட்டமைப்பை பருண்மைப்படுத்த முயல்கிறது. இதனோடு தொடர்புள்ள Peter lamarqueன் மற்றொரு கருத்தைப் பார்ப்போம். எதிர் எதார்த்தத்தை கட்டமைக்கும் இரண்டு பண்புகளை தருகிறார் அதில் இரண்டாவது அவர் தரும் குறிப்பு.

1. Fiction is whatever is man-made (conceptually or linguistically).
2. Truth is man-made (Conceptually or linguistically)
3. Therefore, truth is just a species of fiction. 

மேற்கண்டவற்றை வைத்துப் பார்க்கும்போது கதைப்படுத்தல் (fictionalisation) அல்லது பிரதிப்படுத்தல் (textuali-sation) என்பது அடிப் படையில் மொழி ரீதியாக செய்யப்படுகிறது என்பது நன்கு விளங்கும். ஆக மொழியால் Narrate செய்யப்பட்ட கதையென் பது ஒருவன் அதை கையாளும்போது அவனு க்கும் முன்பு அதே மொழியை மற்றொருவன் வேறு ஒரு சொல்லுதலுக்கு அதைப் பயன் படுத்தி கதைப்படுத்தி இருப்பான். ஒரு கதைப் பிரதியென்பதின் மொழியானது கதைக்கு முன்பும்/கதை முடிந்த பின்பும்/சொல்லவந்த கதையையுமின்றி/வேறு கதையை சொல்லியும் இருந்து வந்துள்ளது என்பது அதன் சாத்தியம். ஆகையால் ஒரு கதை சொல்லி (Story teller) கையகப் படுத்தும் மொழிக்கு அர்த்தம் என்பதே அவ னது 'சொல்லுதலின் நிமித்தம் உருவாகி கதை யானதும் கரைந்து போய் அடுத்துவரும் மற்றொரு கதைச்சொல்லியின் Narrationக்காக காத்திருக்கிறது. கதையை யூகங்களின் அடிப்படையில் வாசித்தல் என்ற பின்நவீனத்துவ முறையை அறிமுகப்படுத்திய தமிழவனின் சரித்திரத்தில் படிந்த நிழல்கள்' என்ற நாவலையும் இங்கு குறிப்பிடவேண்டும். இப்படி பல்வேறு கதைசொல்லிகளைக் கண்ட தமிழ் புனைகதையின் ஏடுகளில் கோணங்கியின் கதைப் பிரதியையும் ஒருமுறை வாசிப்போம்.

(4)

சிறுகதையின் 'சொல்லு தலின் மொழியை (Narrative Language) 356T னால் இயன்றவரை ஒரு நூதனமான நிலைக்கு உந்தித் தள்ளியவர்களில் கோணங்கி என்ற கதை சொல்லியும் ஒருவர். அவரது பனிவாள் மற்றும் 'உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை' ஆகிய இரண்டு புனைகதை களின் மொழி வழியில் நமக்கு வாசிக்கக் கிடை க்கக்கூடிய புதிய மொழிப் பரப்பைக் காணலாம். பனிவாள் என்ற கதையில் வரும் முதல்வரி "தானாக இருந்த நீரில் ஒரு துளை விழ அதன்வழி ஆலிஸ் பிறந்தாள்.' என்பதைச் சொல்ல வேண்டும். என்று சொல்லுதல் துவங் குகிறது. ஆலிஸ் என்ற 'குறி (Sign) தமிழில் - - - - - - - • . ." - பிரயோகப்படுத்துவதில் 

 
(மூளைப்பற்றி 19-ம் நூற்றாண்டின் பார்வையை விளக்கும் படம்.) (Phrenological)
காலக்குறி (-23_| மார்ச் 98
படிப்பகம்
________________

பொதுவாக உணரப்படும் சிக்கல் ஆலிஸ் என்பதை கதை சொல்லுதலின் துவக்கமாக
கொள்ளும்போது, 'ஆலிஸ் என்ற லூயி கரோலின் கதைக்குறி தமிழில் inter texualise செய்யப் படுவதோடு மறு பிரதியாக்கப்படுவதையும் கவனிக்க முடியும். ஆலிஸ் பிறந்தாள் என்பதை சொல்ல வேண்டுமென்பதில் தமிழ் புனைகதை பரப்பிற்கு அதை கதை செல்லுதலின் துவக்கமாக சொல்லலாம். ஆலிஸ் எங்கிருந்து கதை மொழியில் முகிழ்கிறாள் என்று பார்ப்போம். "எல்லா துளைகளிலும்.ஆலிஸ்" எனும்போது கதையின் பரப்பில் இருக்கக் கூடிய எல்லாவிதமான aporiaவிலிருந்து ஒரு தமிழ்ப்படுத்தப்பட்ட மொழிக்குறியாக்கம் நிகழ்கிறது. அவளது முன்பிரதியாக்க நிலையான (Pre-textual Narrative) முயலை துரத்தியபடி அதன் குழியில் விழுந்ததில் லூயி கரோலின் விந்தை உலகமானது மொழியுள் கதவை திறக்கிறது. ஆனால் இங்கு அவள் பின்னால் ஓடிய யாவரும் அவள் விழுந்த மொழி விந்தையின் ஆழத்தை பார்க்க ஆலிஸின் மாற்றம் கதையாக துவங்குகிறது. "உறைந்து உறையாத நீரில் "பணிவாளாக" மாறித் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்" என கதையில் வருகிறது. ஆலிஸ் என்ற விந்தையான குறி தமிழில் 'பனிவாளாக பிரதிப்படுத்தப்படுகிறது. அவ்வாறு பிரதிப்படுத்துபடும் போது ஆலிஸின் தோற்றம் தமிழில் மொழிப்பிறப்பாக மாறுவதை குறிக்கும் கோணங்கியின் கதை சொல்லுதலில் இவ்வாறு மொழிப்படுத்தப்படுகிறது. "நீரை வாளாக ஏந்தி வாளின் கூர்முனை கொண்டு நீரில் ஒரு துளைவிழ அவள் பிறந்தாள். அவள் என்பதை ஆலிஸ் பனிவாளாகிய பிரதியியல் விந்தையில் பணிவாள் அவனாக பதிலிப்படுத்தப்படுகிறது (substitute), இக்கதையின் நிகழும் இந்த பிரதியியல் ரசவாதம் முழுக்கதையின் முதல் பத்தி வரப்போகும் கதைக்கு Narrator-ன் Inter texualise செய்யம் பிரதியல் மொழிச் சாத்தியப்பாட்டை ஒரு சிறிய முகவுரை போல் அறிவிக்கிறது.

ஆகியவை கதைக்குள் ஒரு பிரதியியல் நுட்பமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. ஆலிஸ் தோன்றுதல் 
2. பனிவாளாக பதிலியாதல்
3. "அவள் என பிறத்தல்
இலவாறு பனிவாளாக மொழி மாற்றம் பெறும் ஆலிஸ் இருவேறு  எதிர்ெதிரான பண்புகளைக் கொண்ட மூதாதைக் கூட்டத்தினரின்  இடையே இருக்கத் துவங்குகிறாள், பனிமனிதர்கள் x மணல் மனிதர்கள். இவர்களின் இடையே மிதந்து போகும் பணிவாள்ை இரு கூட்டத்தினரும் கையகப்படுத்த எத்தனித்த வண்ணம் இருக்கிறார்கள். இந்த பனிவாளின் கீழ் கட்டப்பட்டுள்ள இருவேறு கற்பனை நிலபரப்பாக பனிவெளியும் X மணல் வெளியும் பிரதியில் தோற்றம் கொள்கிறது. பனிமனிதர்களின் உடலிய விளிம்பில் பணித்துகளும் X மணல் மனிதர்களின் உடலிய விளிம்பில் மண்துகளும் பூசப்பட்டு நிலப் பரப்பு (Landscape) உடற்பரப்பு (Body scape) ஆக மாற்றம் கொள்ளும்போது அதற்கிணையாக ஆலிஸும் மனதில் உள்ளதையெல்லாம் உடலில் வரைந்து கோலமிடுகிறாள், கதைப்பிரதியின் கற்பனை மனிதர்களுக்கீடாக ஆலிஸ் என்ற மொழிக்குறியும் தன்னை மறு ஒப்பனை செய்து கொள்ள தனது (Self) என்ற மனதை உடல்மேல் வரைந்து மாற்றிக் கொள்கிறாள். இன்று பின் நவீனத்துவ கோட்பாடுகளில் ஒன்றாக கூறப்படும் Surface/Self Refashioning இங்கு கதை சொல்லுதலில் நடந்தேறுகிறது.

பனிவாளை சுற்றி வலைப்பின்னலாக அமைக்கப்பெற்றிருக்கும் சொல்லுதல்களை விளங்கிக் கொள்ள, முதலில் இருவேறு மொழிபரப்புகளை இனங்காண வேண்டும். கதையை மொழிரீதியாக நகர்த்தும், 'பனிவாள்' என்ற ஆலிஸின் மறுபுனைவாக்கம் பனி X மண் என்று இரு கற்பனையான பிரதியியல் பிரதேசங்களை உருவாக்கியுள்ளது. அதில் உருப்பெறும் இருவேறு எதிரிடை மனிதர்களிடம் வசப்படாமல் மிதக்கும் பனிவாளை கைக்கொள்ள நடக்கும் பிரதியிய நீட்சியின் மொழியாக்கமே கதையை கட்டமைக்கும் சொல்லுதல்கள். இப்படி இருவரிடமும் சிக்காமல் fluid narrative ஆக நகர்ந்து போகிறது. இதுவரை கதைமொழியில் வந்தவைகளின் அடுத்த கட்ட சொல்லுதலாக பனிமனிதர்கள் X மண் மனிதர்களின் முதாதையர்களின் வருகையும் அவர்கள் எப்படி நினைவு உறைந்த மொழிக் குறியாக மாறி உள்ளனரோ அதுபோல பனிவாளும். ஒரு குகைக்குள் புகுவதன் மூலம் இருவேறு உலகங்களின் இடையே interplay விளங்கிய பனிவாள் ஸ்படிகக் கல்லாக மாறுகிறது.

பனிவாளை தொடர்ந்து வரும் இரண்டுவித கதை சொல்லுதலின் பதிலியாக பனிமனிதர்களையும் X மண் மனிதர்களையும் கொள்ளலாம். இவ்விரு மொழிச் சொல்லுதலும் பனிவாளை பின்பற்றி குகைக்குள் நுழையும்போது அங்கு புதிய 'மிருகிய பெண் இணைவை (Bestial matrix) எதிர் கொள்கிறார்கள்.

நிர்வாணமான ஆதிக்குடி பெண்ணின் நரபலி ஆட்டத்தில்தான் பனிவாளானது வசப்படுகிறது.
காலக்குறி | 24 1 மார்ச் 98
படிப்பகம்
________________

அவள்மீது மிருக நாற்றம் வீசுகிறது. அவளிடமே பனிவாள் வச வசப்படுகிறது. ஆலிஸ் பனிவாளாக மாறியதிலிருந்து குகைக்குள் ஸ்டிகக் கல்லாக உறைகிறாள். கதையின் முன் பகுதியில் வரும் நீரின் குழியிலிருந்து தோன்றிய 'அவள் இடம் வசப்படுகிறாள். ஆக கதையின் முதல் குறியாக வந்த 'ஆலிஸ் தோன்றினாள் என்பது இடையில் 'அவள் பிறந்தாள் எனவும் கடைசியில் ஸ்படிகமாக உருமாறி ஆதிக்குடி பெண்ணிடமிருந்து மீண்டு "பணிவாளின் வெள்ளை உருவம் துருவ நட்சத்திரத்தில் தோன்றுவதாக விழித்திருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" சிலர் (வாசகர்கள்). இதன் வழியே கோணங்கியின் பிரதியாக்க செயல்பாட்டை காணும்போது புனைகதை மரபில் லூயி கரோலின் 'ஆலிஸ் என்ற விந்தையான குறியை தமிழ்ப் பிரதிமயப்படுத்தலில் எவ்வாறு இரு எதிரிடையான கற்பனையான நிலப்பரப்புகளை மொழிப்படுத்தி சாத்தியமாக்குகிறார் என்பது விளங்கும்.

(5)

மிருகியல் நாற்றத்துடனும் நரபலி ஆட்டத்துடனும் முடியும் பனிவாளின் பிரதியியலின் வழியே கோணங்கியின் அடுத்த கட்டகதை மொழியாடலாய் (language game) "உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை"க்கு வருவோம். இதன் முதல் வரியிலேயே கூறப்படும் முன் அறியப்படாத உயரமான மஞ்சள் நிற அலியின் தலைமுடியின் வாசனை அந்த அறையை ஊடுருவி மிருகிய நாற்றத்திலிருந்து அலியின் தலைமுடி வாசனையோடு கதைப் பிரதியின் சொல்லுதல் துவங்குகிறது. அலிகளின் எதிரிடை குறியாக சிறுத்தைத் தோலால் கொண்ட யுவதி, ஏற்கனவே மிருகிய நாற்றமுடையவள் இந்த பிரதியில் தனது உடலின் மேற்பரப்பை (Surface) சிறுத்தையின் தோலைப் போர்த்துக் கொள்கிறாள். இந்த கதைப் பிரதியில் வரும் அலிகளின் கைகளில் உப்புக் கத்தி' என்ற பனிவாளின் மூலம் மற்றொரு பிரதியிய சாத்தியப்பாடு விரிவடைகிறது. இனி உப்புக்கத்தியின் கதை சொல்லுதல்களைக் காணலாம். 

மஞ்சள் நிற அலிகள்
சிறுத்தை யுவதி

இந்த அலிகளின் கதையாடலை நிர்மாணிக்க ஒரு கற்பனை நகரம் கட்டமைக்க பெறுகிறது. எரிது என்று அம் மொழி குறியில் இரண்டு சொல்லுதல்களை கொண்டுள்ளது.  எரிது என்ற நகரானது அலிகளின் கற்பனையான நிலப்பரப்பாக  கொள்ளலாம். அங்கு கதை சொல்லுதல் என்பதை ஆடியுள் நிகழ்த்தப்படும் அசைவுக் கோர்வைகளாகவும் ஒன்றோடு ஒன்று இணைவற்ற பிம்பங்களை அடுக்குதலையே கோணங்கி தனது கதைமொழியின் போக்காக சொல்லிச் செல்கிறார்.\ 'உப்புக்கத்தி'யைத் தேடிய இரு வேறு பண்புகளை கொண்டவர்களின், உடைத்தெறியப்பட்ட, சொல்லாடல்களின் தொகுப்பாக கொள்கிறார். "பழங்கண்ணாடி வேவு” பார்க்கும் பாழ் அறைக்கு ரகசிய அலிகளும் யுவதிகளும் வந்து உப்புக் கத்தியைத் தேடுகிறார்கள்." "கூட்டமாய் வரும் மிருகங்கள் மஞ்சள் அலிமீது ஊர்ந்து நெருங்க உடலனைத்தும் கொண்ட முர்க்க வெறி தாயாமாய் சிதறி வெடிக்கக் காத்திருக்கிறான் கண்ணாடி முன்"

முதலில் உப்புக்கத்தியை தேடி அலிகளும் ல யுவதிகளும் வேவு பார்க்கும் கண்ணாடியுள் பிரவேசிக்கிறார்கள். “வேவுபார்க்கும் கண்ணாடி" தான் எதிரிடையான உடலிய சாத்தியங்களின் பிரதியிய பரப்பாகும். இந்த இரண்டு எதிரிடைகளைத் தாண்டிய கூட்டமான மிருகங்கள் மஞ்சள் அலியின் மீது தாக்க தன்னுள் உள்ள இன்மைப் பண்பான தாபம்" வெடித்துச் சிதறும் காட்சி கண்ணாடியின் முன்னின்ற அலியால் பார்க்கப்படுகிறது. தன்னிலையின் சிதறலை (mirroring of the self) தானே பிரதிப்படுத்துவதன் மூலமாக பிணைக்கும் தாபம் என்ற பெருந்தத்துவ சொல்லாடல் தகர்கிறது. இவ்வாறு 'மஞ்சள் அலி' என்பதை அலியில் பொருள்படுத்த பிரதியில் 'மஞ்சள்' என்ற நிற ஜீவியாக குறியாக்கம் செய்கிறார் கதை சொல்லி. இந்த மஞ்சள் நிறத்தை அலிக்கு பதிலிப்படுத்த பிரதியின் ஓரிடத்தில் பச்சைப் பெண்? என்ற குறியை இதற்கு நேரெதிராக பயன்படுத்துகிறார். 'பாசீ' என்ற சங்கேதச் சொல்லின் துணைக்கொண்டு அடையாளப்படுத்துகிறது. கதைமொழி. மஞ்சள் X பச்சை இங்கு மஞ்சள் என்ற நிறத்தை, பச்சை என்ற fertility-ன் எதிரிடையாகவும் ஒருவித சமிக்ஞையாகவும் மொழியால் இணைத்துக்காட்டப்படுகிறது. இங்கு மஞ்சள் என்பது anti-fertility யாகக் குறிக்கப்பெறுகிறது. மேலும் இங்கு (absence of the presence) என்பது ஒரு பாலுக்கான பாலியல் உறுப்பு இல்லாமல் போகும்போது அதனை மறு கண்டெடுத்தலை (re-discover) செய்யுமுகமாக மஞ்சள்நிற அலியின் செயல்பாட்டை மொழி ரீதியாக கண்டறிவதைக் காணலாம்.

காலக்குறி | 25 | மார்ச் 98
w
படிப்பகம்
________________

"உப்புக் கத்தியை எடுத்து சுரோனிதப் பையை கீறிக்கல்லை எடுத்து கண்ணைக்கறி கண்மேல் பதித்த சுரோனிதக்கல்” -

தன்னிடமுள்ள உப்புக்கத்தியால் தன்னிடமில்லாத சிறுத்தை யுவதியின் சுரோனிதப்பையைக் கீறிக் கிடைத்த கல்லை தனது உடலிய சாத்தியப்பாட்டை மாற்றி அமைக்கும் முகமாக கண்களின்மேல் அந்த கல்லை பதித்து மாற்றிப்பார்த்தல் என்பதை மறு கட்டமைப்பு பார்வை (Re-structured Gaze) எனப் புனைகதையின் புதிய மொழி சொல்லுதலாக கொள்ளலாம்.

 - உப்புக் கத்தியை வைத்து தன்னை மறுகட்டமைப்புக்கு உட்படுத்தும் மஞ்சள் அலிகள், 'பும் மைதுனைக்காரர்களை கத்தியின் விளிம்பால் தொடுகிற' செயல் தன்னையொத்த பும்மைதுணைக்காரர்களின் உடல் விளிம்பைக் கத்தியால் தொடுவது, விளிம்பு மற்றொரு விளிம்பைத் தொடும் ஒரு நுண்ணிய சொல்லுதல் (Micro narrative) ஆக பிரதியாகிறது. 

அடுத்ததாக, அலிகளின் மொழிப் பிரதேசமாக கட்டப்பட்டுள்ள உப்பு வெளியில் அலிகள் தங்கள் உடலை மஞ்சளாக பதிலிப்படுத்துதலை கீழறுப்பு செய்யுமுகமாக தங்களின் உடல்களை மாற்று உடல்களோடு சேர்த்து இழைபின்னுதலை, 

"வண்ணத்துப் பூச்சிகளை அலி உடல்களில் சேர்த்து தைத்துவிடும் அந்நியனைத் தேடி பலர் வந்து போகிறார்கள். வர்ண இறகுகளின் நிறப்பொடியில் ஆணைப் பெண்ணாக மாற்றும் தையல் வேலை நடந்து வந்தது இரகசியமாக"

எனவும்

 "அலிகள் அலைவுறும்" சந்துகளில் ஒவ்வொருவர் உடலிலும் விநோத பிராணிகளை ஒட்டித் தைக்கும் தோல் தையலில் இழைக்கட்டு பிறந்ததும் இணைந்து கொண்ட இரு உயிரினமான விநோதம் நகரை நெருக்கடியில் சிக்க வைத்தது" எனவும் மேற்கண்டவாறு மொழிவயப்படுத்துகிறார் கோணங்கி அலியின் உடலியல் விடுதலையின் குறிப்பீடாக வண்ணத்து பூச்சியின் இறகுகளின் நிறப்பொடியில் ஒரு பாலை (ஆண்) வேறொரு பாலாக (பெண்) மாற்றுவதை 'வண்ணம்' என்ற குறிப்பீடு மஞ்சள் நிறத்தை கீழறுப்பு (Subwert) செய்து பல வண்ணங்களாக பிரதியியல் விடுவிக்கிறது. ஆனால் அலிகளின் உடல்மீது ஊர்ந்து தாபத்தை சிதறடித்த பிராணிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். அதே பிராணிகளை அலிகள் உடலில் ஒட்டி தைத்து விளிம்பில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து அவர்கள் இரு உயிரினமாக மாறும் புதிய பிரதி சாத்தியத்தை கோணங்கி கட்டமைக்கிறார். 

அலிகளின் கதை நகரமான எரிது. அதன் இரகசிய சமுகத்தின் வரலாற்றை பல்வேறு நுண்ணிய சொல்லுதல்களினால் கட்டியுள்ளதைக் கண்டோம். இந்தப் பிரதியில் வரும் ஒரு கிழட்டு அலிமீது பல சிறுமிகள் தங்கள் ரேகைகளை பதிக்கிறார்கள். அந்த அலியின் உடல்மீது உள்ள சுருக்கங்களை அலிகளின் வரலாற்றின் வரிகளாக கோணங்கி பிரதிவயப்படுத்தியுள்ளார். சிறுமிகள் கைரேகைகளை பதிப்பதை போல.

கட்டுரைக்கு பயன்படுத்தப்பட்ட நூலகள் :
1. Narrative & Invention : The limits of fictionality - Peter Lamarque (Narrative & Culture - Edited by Christopher Nash)
2. Lessons in Pagenism - Jean Francois Lyotard (The Lyotard Reader - Edited by Andrew
Benjamin)
பிரதாபமுதலியார் சரித்திரம் : மாயுரம் வேதநாயகம்பிள்ளை
கமலாம்பாள் சரித்திரம் பி.ஆர். ராஜமய்யர்
சரித்திரத்தில் படிந்த நிழல்கள் : தமிழவன்
பட்டுப்பூச்சியில் உறங்கும் மூன்றாம் ஜாமம் : கோணங்கி
:
உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை கோணங்கி
காலக்குறி | 26 | மார்ச் 98
படிப்பகம்