தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, March 31, 2016

கார்லோஸ் ஃபியூண்டஸ் - பாரிஸ் ரிவ்யூ - 1981 நேர்காணல் : ஆல்ஃபிரெடு மெகாபம் சார்லஸ் ருயாஸ் : உன்னதம் 6 ஜனவரி 1996

________________

குறிப்பு
www.padippakam.com
AUTOMATED Google Ocr
கார்லோஸ் ஃபியூண்டஸ்
சர்வதேச அங்கீகாரம் பெற்ற மிக முக்கியமான லத்தீன் அமெரிக்கப் படைப்பாளி. மிகச் சிறந்த நாவலாசிரியர். சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள், அரசியல் விளக்கக் கட்டுரைகள் ஆகியவற்றிலும் இவர் பங்கு குறிப்பிடத்தகுத்தது. லத்தீன் அ .ெ ம. ரி க் க படைப்பிலக்கியவாதிகளில் அதிபுத்திசாலி என்று கருதப்படுகிறவர்.

1928, நவம்பர் 21 இல் மெக்ஸிகோவில் பிறந்தகார்லோஸ் ஃப்யூண்டஸ், தூதரகப் பணிகள் நிமித்தம் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்த தந்தையோடு பல தாடுகளுக்கும் சென்றவர்.
மெக்ஸிகோவில் சட்டப் படிப்பும் (1948) ஜெனிவாவில் சர்வதேச உறவுகள் பற்றியும் படித்துப் பட்டங்கள் பெற்றார். சர்வதேசத் தொழிலாளர்அமைப்புக்குழுவின் மெக்ஸிகோ செயலராக இருந்த அவர் அதனைத் தொடர்ந்து ஜெனிவாவில் மெக்எறிகோ தரதரகத்தின் கலாச்சாரப் பிரதிநிதியானார் (1950-52) பின் மெக்ஸிகோநகரில் ஐக்கியநாடுகள் தகவல் மையத்தின்செய்திப்பிரிவுச் செயலராகப் பணி புரிந்தார். 197577களில் பிரான்ஸில் மெக்ஸிக தரதராகச் செயல்பட்டார்.

தற்சமயம் அமெரிக்காவில் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் ஃப்யூண்டஸ், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், பெர்னார்டு கல்லூரி, கொலம்பியா
ப ல் க  ைல க் க ழ க ம் , பென்சிலிவேனியா பல்கலைக் கழகம், பிரின்ஸ்டைன் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகம் போன்றவற்றில் பல்வேறு ஆசிரியர் பதவிகளைக்
(1928– )வகித்திருக்கிறார்.
1958 இல் இவருடைய முதல் guarsugar where the Air is Clear வெளிவந்தது. 1910-20 புரட்சிக்குப் பிந்திய மெக்ஸிகோ பற்றிய துட்பமான, தீர்க்கமான அணுகலாக அமைந்திருந்த இத்தாவல் மெக்ஸிகோவில் அதிர்வலைகளை எழுப்பியது. The Good conscience (1959) நாவல், ஜெய்ம் செயல்லோவின் கல்வி பற்றியும், கடைசியில் மெக்எலிக நிர்வாகத்துக்குள் அவர் அமிழ்ந்து விடுவது பற்றியும் sonásápa. The death of Artemio cruz (1962) estacir வெல்றிைன் மகத்தான gangăul long citizen kane இன்பாதிப்பில் உருவான நாவல். Holy place (1967) stará, seir அம்மாவிடம் காமம் கொள்ளும் ஒடியஸ் ரீதியிலான ஒரு இளைஞனை முன் வைத்து மேக்ஸிகோவின் புதுப் பார்வையில் அணுகுகிறது. A change of Skin (1968), .ெ வ எரி ந ட் ட வ கு க் கு ம் .ெ ம. க் எலி க ரீ க ளு க் கு ம் இடையில் நிலவிய உறவைப் பரிசீலிப்பதின் மூலம் அறுபதுகளில் மெக்ளிகோ வெளியுலகோடு கொண்டிருத் உறவைப் பதிவு செய்யும் நாவல். -

Terra Nostra (1976) (3suIpj திசையில் கவனம் செலுத்திய நாவல், ஹிஸ்பானிக் கலாச்சாரத்தில் எங்கு எப்படி தவறு நிகழ்த்தது என்பதை அறியும் முகமாக அ க் க ல | ச் ர த் தி ல் .ெ ம டி ட் .ே ட ர னி ய னி ன்மூலங்களைக் இரரை முற்படுகிறார். புனிதம் மற்றும் ஆசாரத்தை கி று க் கு த் த ன ம க வலியுறுத்தியதும், ஸ்பானிய மொழிபெயர்ப்பும் கலாச்சாரத்திலிருந்து யூதமற்றும் அராபிய நவீனத் தன்மைகளை அவர் ஈவிரக்கமற்று நீர்மூலமாக்கியதுமே வீழ்ச்சியின் அடிப்படை என்று கண்டடைகிறார். Terra Nostrasjib 6 sisum&rdqsiu பற்றியும் ஃப்யூண்டஸ் கட்டுரைகளும் எல்லாத் தளங்களிலுமான ஹிஸ்பானிக் ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கின. துண்டுபட்ட ஹிஸ்பானிக் உலகில் ஒருமைய்ைக் காண்பதில் புதிய பாதையை அவை வகுத்துள்ளன.

The Hydra Head (1979) znatá, இயற்கையின் ஆற்றலைப் பரிசீலிக்கும் வகையில் மெக்எலிகோவின் எண்ணெய் வளங்களைக் குறியீடாக்கி சமகாலத்திய மெக்ஸிகோவை asons&pas. Distant Relations (1981) ஒரு படைப்பாளி
எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், எல்லாவற்றையும் முன்வைக்க வேண்டிய அவசியத்தையும் பரிசீலிக்கும் தாவல். Christopher unborn (B87). 14&u உலகு கண்டுபிடிக்கப்பட்ட ஐந்நூறாம் ஆண்டுநிறைவுதாளான 1992 அக்டோபர் 12 ஆம் நாளைக் களமாகக் கொண்டு ஐந்நூறு ஆண்டுகள் பற்றிய கணிப்பையும், அந்த நிறைவு நாளில் மெக்ஸிகோ நாடும் நகரமும் எப்படி இருக்குமென்ற கற்பனையும் பின்னிப் பிணைத்து உருவான நாவல். கார்லோஸ் ஃப்யூண்டஸ் பல்வேறு கால கட்டங்களில் எழுதிய £nssangasi, Burnt water (1981) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கிறது

நன்றி : பாரிஸ் ரிவ்யூ - 1981 நேர்காணல் : ஆல்ஃபிரெடு மெகாபம் சார்லஸ் ருயாஸ்
கடந்த ஆண்டுகளில் - - - - -
 குறிப்பும் சி. மோகன்.
| உன்னதம் 6 ஜனவரி 1996

________________

WWW padippakam.com
நேர்காணல்

கார்லோஸ் ஃப்யூண்டல்

ப்யூண்டஸ்:1977 ஏப்ரல் முதல் தேதி பிரான்ஸ் நாட்டு தூதர் பதவியிலிருந்து விலகினேன். உடனடியாக, பாரிஸின் வெளிப்புறத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கிருந்தபடி மீண்டும் எழுதத் தொடங்கினேன். மனசாட்சியுள்ள ஒரு டிப்ளமட்ஆக இருந்ததால் இரண்டு வருடங்களாக நான் ஒரு வார்த்தை கூட எழுதியிருக்கவில்லை. நான் வாடகைக்கு எடுத்திருந்த வீடு இயல்பாக அப்படி அமைந்ததுகுஸ்தவ்டோர்க்குச் சொந்தமானது. வடிவமும் அச்சமும் குறித்த என் பேராவலை அந்த வீடு எனக்குத் திரும்பவும் அளித்தது. அங்கிருந்த"லிட்டில் ரெட் ரைடிங் குட்” என்ற டோருடைய வரைபடங்கள் கொஞ்சமும் நம்ப முடியாத அளவு மிகவும்.காம உணர்வைத்துண்டுவனவாக அமைந்திருந்தன. உதாரணமாக, படுக்கையில் ஒநாயுடன் சிறுமி இந்தச் சூழ்நிலையில் தான் என் சமீபத்திய நாவலான Distant Relations, பிறந்தது.

கேள்வி. 

நீங்கள் தூதராக இருந்தபோது உங்களால் எழுத முடியாமல் போனது ஏன்?

ப்யூண்டஸ் 

அரசியல் விவகாரம் என்பது ஒரு வகையில் எழுத்துக்கு எதிரானது. நீங்களே பலவாறாகப்பிரிந்து அதில் செயல்படவேண்டும்;ஒரு பெண் அழுதுகொண்டே வருவார். ஏனென்றால் அவருக்கு செயலருடன் சண்டை நடந்திருக்கும் ஏற்றுமதி இறக்குமதி விவகாரங்கள் மாணவர்கள் பிரச்சனை: தூதரக அலுவல்கள், எழுத்துக்கு எழுத்தாளனின் ஒரு முகத் தன்மை அவசியம். அதைத்தவிர வேறெதுவும் செய்யக்கூடாது என அது வலியுறுத்துகிறது. இப்போதெல்லாம் நான் அதிகமாகவே எழுதுகிறேன். தவிர, எப்படி எழுதுவதென்பதையும் நான் கற்றுக் கொண்டேன். அதற்கு முன்பு, எப்படி எழுதுவதென்பது எனக்குத் தெரியாது. ஒரு உயர் மட்ட அதிகாரியாக இருந்ததன் மூலம் நான் அதைக் கற்றுக் கொண்டதாகவே நினைக்கிறேன். உயர்மட்ட அதிகாரியாக இருக்கும்போது நிறையவே மன அளவிலான நேரம் கிடைக்கிறது. யோசிப்பதற்கு அவகாசம் இருக்கிறது: தலைக்குள் எப்படி எழுதுவதென்பது உங்களுக்கு பிடிபடுகிறது: நான் இளைஞனாக இருந்த போது மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். 'மால்லார்மேயின் வெற்றுத்தாளை வைத்துக்கொண்டு, என்ன சொல்லப் போகிறேன் என்பது தெரியாமல் ஒவ்வொரு நாளும்போராடி இருக்கிறேன். இப்போராட்டத்தில் அல்சரை சம்பாதிக் கொண்டேன். முழுமூச்சான மனோபலத்தில் அதை நான் முடித்தேன். ஏனெனில் இருபது முப்பது வயதுகளில் எழுதும் போது உங்களுக்கு போதிய வலு இருக்கிறது. பின்னர், உங்கள் சக்தியை முறையாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. நான் அலுவலக மேஜைக்குப்பின் இரண்டு ஆண்டுகள் இருந்ததன் உண்மை ஒரு வேளை இதுவாகத்தான் இருக்குமென்று இப்போது அதுபற்றி யோசித்துப் பார்க்கும்போது தோன்றுகிறது என் மனம் விக்ராந்தியாக இருந்து அது தனக்குள்ளாக எழுதிக் கொள்ளவும், அந்தப் பதவியை விட்டு விலகியதும் நான் எழுதப் போவதைத் தயார் செய்து கொள்ளவும் வகை செய்தது. ஆக எழுத உட்கார்வதற்கு முன்பாகவே என்னால் இப்போது எழுத முடியும்.
| உன்னதம் , , ,-63. . 

-டி-கம்
________________

www.padippakam.com
வெற்றுத் தாளை இதற்கு முன் பயன்படுத்தியிராத வகையில் என்னால் இப்போது உபயோகிக்க முடியும்.

கேள்வி 

எழுதுவதற்கான தயாரிப்புகள் உங்களுக்குள் எப்படி நிகழ்கிறது.
ப்யூண்டஸ் 

நான் காலை நேர எழுத்தாளன். எட்டரை மணிக்கு எழுதத் தொடங்கி 12 % வரை தொடர்ந்து எழுதுவேன்; பின் நீந்தச் செல்வேன். திரும்பி மதிய உணவு மதியத்தில் வாசிப்பு அதன் பின் அடுத்த நாள் எழுத வேண்டியதை முன்வைத்து நடக்கத்தொடங்குவேன். எழுத உட்கார்வதற்கு முன்பாக தலைக்குள் என் புத்தகத்தை நான் இப்போது எழுதிக்கொள்ள வேண்டும். இங்கு பிரின்லைட்டனில் நடந்து செல்வதை ஒரு முக்கோன வடிவத்தில் பின்பற்றுகிறேன்; மெர்சர் தெருவிலுள்ள ஐன்ஸ்டைனின் வீட்டுக்குச் செல்வேன். அங்கிருந்து திரும்பி ஸ்டாக்டன் தெருவிலுள்ள தாமஸ் மன்னின் வீடு பின் அங்கிருந்து ஈவ்லின் பகுதியிலுள்ள ஹெர்மன் பிராக் வீடு. இந்த மூன்று இடங்களுக்கும் சென்ற பிற்கு வீட்டுக்குத் திரும்புவேன். அதற்குள்ளாக, நாளைக்கான 6 அல்லது 7 பக்கங்களை மனதளவில் எழுதி முடித்திருப்பேன்.

கேள்வி: 

மீண்டும் எழுதுவதென்பது விரிவானதாக இருக்குமா? அல்லது மனதளவில் எழுதியதைக் கணக்கில் கொண்டே அமையுமா?

பதில் 

நான் தாளில் பதிவு செய்தவுடன் அது நடைமுறையில் முடிந்து விடுகிறது; எந்த ஒரு பகுதியோ, காட்சியோ விடுபட்டிருக்காது. அடிப்படையில் விஷயங்கள் எவ்விதம் நகர்கின்றன என்பது எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட அவை என் தீர்மானத்தில் இருக்கின்றன. அதே சமயம் ஆச்சரியமெனும் அம்சத்தை நான் எனக்குள்ளேயே தியாகம் செய்து விடுகிறேன். நாவல் எழுதும் எவரும் ப்ராஸ்டிய பிரச்சனையில் தாம் ஈடுபடுவதை அறிந்திருக்கிறார்கள். தான் எழுத இருப்பதை ஏதோ ஒரு வகையில் அறிந்திருக்கும் அதேசமயம் அது என்னவாக வெளிப்பட்டிருக்கிறது என்பதானது திகைப்பூட்டுவதாக இருக்கிறது. ப்ராஸ்ட்தான் என்ன எழுதப் போகிறதாக நினைத்தாரோ அதைத்தான் எழுதினார். எனினும் அது பற்றி தான் எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பதாகத்தான், எழுதினார் - இது பிரமிப்பூட்டுவது. ஒரு வகையில் நாம் எல்லோருமே இத்தகைய சாகசச் செயலில்தான் ஈடுபட்டிருக்கிறோம். நீங்கள் என்னசொல்லப்போகிறீர்கள் என்பதை அறிந்திருப்பது; உங்கள் விஷயங்களை உங்கள் கைக்குள் வைத்திருப்பது; அதே சமயம் ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் கொண்டிருப்பதில் கிடைக்கும் கண்டுபிடிப்பு, திகைப்பு, மேலும் வாசகனின் முன் தீர்மானிக்கப்பட்ட சுதந்திரம்.

கேள்வி: 

இங்கிலாந்திலும் ஐக்கிய நாடுகளிலும் எடிட்டர்களின் வரலாறு குறித்தும் இலக்கியத்தில் அவர்களது செல்வாக்கு குறித்தும் எழுத முடியும். அத்தகையதொரு வரலாறு, ஹிஸ்பானிக் உலகில் சாத்தியமா?

ப்யூ. 

சாத்தியமேயில்லை. ஏனெனில், ஸ்பானிய ஹிடல்கோ கெளரவமிக்க கீழ்நிலைப் பணியாளர் வின் கெளரவம்,நம்முடைய படைப்பில் நாம் என்ன செய்யவேண்டும் என்று ஒரு எளிய உழைப்பாளிசொல்ல முன்வருவதை ஒரு போதும் அனுமதிப்பதில்லை. ஸ்பெயினிலிருந்து நாம் உள்வாங்கிய
| உன்னதம் - 64 ஜனவரி 1996
படிப்பகம்
________________

www.padippakam.com
மிகையான் பெருமிதத்தாலும், அபரிதமான தனித்துவத்தாலும் உருவான பயங்கர மனச்சிதைவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையிலிருந்து இது உருவாகிறது. ஒரு ஹிடல்கோ தனக்கு மேலான அதிகாரத்திற்குத் தான் பணிவதை போல, ஒவ்வொருவரும் தனக்குப்பணிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். லத்தின் அமெரிக்காவில் நீங்கள் யாருடைய பிரதியையாவது எடிட்செய்யமுயற்சித்தால், ஒரு சர்வசாதாரண எழுத்தாளன் கூட உடனடியாகப் பின் வாங்கி. நீங்கள் தணிக்கை செய்வதாகவோ அல்லது அவனை அவமதிப்பதாகவோ குற்றம்சாட்டுவான்.

கேள்வி: 

அப்படியானால், உங்கள் சமூகத்துடனான உங்கள் உறவு ஒரு அமெரிக்க எழுத்தாளரிடமிருந்து வேறுபட்டது என்று சொல்வீர்களா? உதாரணமாக ஹிடல்கோ படிமமானது, உங்கள் கலாச்சாரத்தில் எழுத்தை மிகுந்த கெளரவமாகக் கருதுகிறதா?

ப்யூண்டஸ்: 

ஒரு மெக்ஸிக எழுத்தாளன் என்ற முறையில் என் நிலை கீழை ஐரோப்பிய எழுத்தாளர்களைப் போன்றது. நம் சமூகங்களில் பேச்சுக்கான சலுகைகள் இருக்கின்றன. ஆனால் அங்கு அப்படியான சலுகைகள் அரிது. மத்திய ஐரோப்பியாவில் உள்ளதைப் போல நாங்கள் மற்றவர்களுக்காகப் பேசுகிறோம் லத்தின் அமெரிக்காவில் இது மிக முக்கியமானது. அந்த அதிகாரத் துக்காக நீங்கள் கடன் பட்டிருக்கிறீர்கள் என்பதென்னவோ உண்மை தான் ஒன்று நீங்கள் சமூகத்திற்காக உழைப்பீர்கள் அல்லது தலை குப்புற விழுவீர்கள்.
கேள்வி: உங்கள் கலாச்சாரத்தின் அதிகார பூர்வ பிரதிநிதியாக உங்களை நீங்கள் கருதுகிறீர்கள் என்று இதற்கு அர்த்தமா? ப்யூ. இல்லை; நான் அப்படி இருக்க விரும்பவில்லை, பிரெஞ்சு சர்ரியலிஸ் வாதியான ஜேக்யூஸ் வாக் கூறியதை நான் எப்போதுமே நினைவில் கொண்டிருக்கிறேன். தனது நாட்டின் பிரதிநிதியாக இருப்பதை போல் ஒரு மனிதனைக் கொல்லக் கூடியது வேறெதுவுமில்லை.

கேள்வி:

 அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களுக்குமிடையேயான சமூகக் கடமைகளில் ஏதும் வித்தியாசம் இருக்கிறதா?

ப்யூ 

அமெரிக்க எழுத்தாளர்கள் செய்ய வேண்டியதை விடவும் நாம் நம் கலாச்சாரத்தில் செய்தாக வேண்டிய விஷயங்கள் அதிகம். அவர்களுக்கென்றும் அவர்கள் எழுத்துக்கென்றும் அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது:ஆனால் நமக்கிடையே சமூக எதிர்பார்ப்புகள்-கடமைகள் இருக்கின்றன. பாப்லோ அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம்: ஒவ்வொரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளனும் ஒரு கனத்த உடலை இழுத்துக் கொண்டு செல்கிறான் - மக்களுடைய, கடந்த காலத்தினுடைய, தேசிய வரலாற்றினுடைய உடலை. கடந்த காலத்தின் மித மிஞ்சிய பளுவை நாம் தம்வயப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது; வாழ்க்கை நமக்குத் தந்திருப்பதை அப்போது நம்மால்மறுக்கமுடியாது. உங்கள் கடந்தகாலத்தை நீங்கள் மறந்தால் இறந்துவிடுவீர்கள். கூட்டுமுயற்சிக்கான சிலகடமைகளை
| உன்னதம்- 65
ஜனவரி 1996) - לחההחtם
________________

www.padippakam.com
நிறைவேற்றியாக வேண்டும். ஏனெனில் ஒரு எழுத்தாளனாக அல்லாமல் ஒரு குடிமகனாக சில கடமைகள் இருக்கின்றன. இதற்காக உங்களது அழகியல் சுதந்திரத்தையும், உங்களது அழகியல் சலுகைகளையும் நீங்கள் ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது பதட்டத்தை உருவாக்கும். ஆனால் எவ்விதப் பதட்டமுமின்றி இருப்பதைவிடவும் சமயங்களில் ஐக்கிய நாடுகளில் நிகழ்வதைப் போல - இந்தப் பதட்டத்தைக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

கேள்வி: 

உங்கள் ஆரம்ப கால படைப்புகளில் 1910-20 புரட்சிக்கு பின்னான மெக்ஸிகோ வாழ்வை மையப்படுத்தினர்கள். அது உங்களுடைய மெக்ஸிகோ. ஒரு மெக்ஸிகோ எழுத்தாளராக அந்தப் படைப்புகளில் உங்களை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், The Death of Artemic Cruz'#G: பின், நீங்கள் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற பிறகு, உங்கள் நிலைபாடு மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ப்யூ 

இல்லை, எல்லா எழுத்தாளர்களுமே சில கருத்தாக்கங்களில் உழன்றபடி தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் சில வரலாற்றிலிருந்து வந்து சேர்வன வேறு சில முழுவதும் தனிமனிதனுடையவை:மிச்சமிருப்பவை, ஒருவனின் மனதில் சதா உழன்றபடி இருக்கும் கருத்துப் பிரதேசங்களைச் சார்ந்தவை. ஒரு படைப்பாளி தன் ஆத்மாவில் கொண்டிருக்கும் இவை மிகவும் உலகளாவிய தன்மையன. என்னுள் உழன்று கொண்டி ருப்பவை என்னுடைய எல்லாப்படைப்புகளிலும் இருக்கின்றன. அவை பயம்பற்றியன. என்னுடைய எல்லா நூல்களுமே பயம் குறித்தவை-கதவின் வழியாக யார் வரக்கூடும் என்பது குறித்த உலகளாவிய பய உணர்வு என்னை நேசிக்கிறவர்கள் யார் என்பது குறித்தது. நான் யாரை நேசிக்கிறேன் என்பது பற்றியது; மேலும் என் விருப்பத்தை எப்படி அடையப் போகிறேன் என்பது குறித்தது. நான் கண்ணாடியில் பார்ப்பது என் ஆசையின் பொருளையா அல்லது அதன் வடிவத்தையா? என்னில் உழன்று கொண்டிருக்கும் இத்தகைய விஷயங்கள், வரலாற்றுப் பார்வையோடு நான் அணுகும் பொதுவான பல விஷயங்களோடு சேர்ந்து என் எல்லாப் படைப்புகளிலுமே இருக்கின்றன. ஆனால் வரலாற்று அளவிலும் சரி, தனி மனிதத்துவ அளவிலும் சரி, என் கருநிறைவுறாததாகவே அமைந்திருக்கிறது: ஏனெனில் இந்த உலகம் பற்றியும் நம்மைப் பற்றியும் நாம் பயந்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி

 நீங்கள் தூதராக இருந்தபோது உங்கள் தலைக்குள் எழுதியதுபற்றிச் சொன்னிர்கள். இப்போது நீங்கள் மீண்டும் எழுதத் தொடங்கும் போது தொடர்ந்து அதையே செய்கிறீர்கள். ஒரு விஷயத்தில் - குறிப்பாக நீங்கள் உங்கள் நாட்டிலிருந்து வெளியே இருந்து கொண்டு வேறு மொழி பேசும் நிலையில் - முதலில் தலைக்குள் எழுதிக்கொண்டு மனதளவில் தணிக்கை செய்வதென்பது உங்க்ள் எழுத்து பாணியை மாற்றியிருக்குமோ என்று தோன்றுகிறது.
ப்யூ மெக்ஸிகோ இலக்கியத்தில் என் நிலை அசாதரணமானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் நான் மெக்ஸிகோவிலிருந்து மிக விலகி வளர்ந்தவன்.-மெக்ஸிகோ என்பது கற்பனை வெளியாகவே
I_உன்னகம் - 66 . ώστολμή? 1996 & |
________________

Www.padippakam.com
எனக்கு இருந்திருக்கிறது.இதேசெைதாந்து இந்நி ைகலை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். என்னுடைய மெக்ஸிகோவும் அதன் வரலாறும் மனதில் நிகழ்ந்தவை. அதன் வரலாறு என்று நான் கனவு கண்டதும், கற்பனை செய்ததும் அந்த நாட்டின் உண்மையான வரலாறு அல்ல. கடைசியில் நான் இளைஞனாக மெக்ஸிகோவுக்கு வாழச் சென்ற போதுஎன் கனவுகளையும், அந்தநாடு குறித்த என்பயங்களையும்.யதார்த்த நிலையோடு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டியதாயிற்று. இது ஆழ்ந்தபதட்டத்தை உருவாக்கியது. அதன் விளைவு தான் where the Air is clear இப்படியொரு புத்தகத்தை மெக்ஸிகோவில் எவரும் எழுதமுடியாது. புரட்சிக்குப் பிந்திய காலத்தை - சமூகக் கட்டுமானத்திலும் நமது கற்பனையான, வரலாற்று ரீதியான வாழ்வின் பண்டைய இழைகளின் உயிர் மீட்சியிலும்-நகரில் அது பிரதிபலித்த வண்ணம் ஒருவரும் நாவல் எழுதியிருக்கவில்லை. என் பதினைந்தாவது வயதில் பயமும் வசீகரமும் கலந்த உணர்வில் நான் கண்டுபிடித்த மெக்ஸிகோவிலிருந்து இது உருவானது. மெக்ஸிகோவுக்கு வெளியிலிருப்பதுஎனக்கு எப்போதுமே மிகப்பெரிய அளவு உதவியிருக்கிறது.

கேள்வி: 

மெக்ஸிகோவிலிருந்து உடலளவிலும் மனதளவிலும் தூரத்தில் இருப்பதென்பது நீங்கள் அங்கிருக்கும் பட்சத்தில் பார்க்க முடிவதை விடவும் மிகத்தெளிவாகப் பார்ப்பதைச்சாத்தியமாக்குகிறது என்று சொல்கிறீர்களா?

ப்யூ

 ஆம், மெக்ஸிகோ மீதான என் பார்வை, எதிர்பாராத் தன்மையினால் புதுப்பிக்கப்படுகிறது. "எதுவுமே எனக்கு திகைப்பூட்டுவதில்லை. ஏனெனில் இந்த உலகு என்னை வசீகரிக்கிறது” என்று சிறந்த ஸ்பானிய பரோக் கவியான கியுவேதோ இதை வெளிப்படுத்துகிறார். மெக்ஸிகோவினால் நான் இன்னமும் வசிகரிக்கப்படுகிறேன். நீங்கள் சொன்னபடி, வேறுமொழி பேசியபடி வசிக்கிறேன். ஆனால் இது ஸ்பானிய மொழியில் எனக்குப் பெரிதும் உதவுகிறது. அமெரிக்க ஆங்கிலத்தோடு நான் வளர்ந்தபோதிலும் என் ஸ்பானியத்தை என்னால் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. நான் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாகவும் மறு உருவாக்கம் செய்ய வேண்டியதாகவும் ஸ்பானிஸ் எனக்கு ஆகியிருக்கிறது. மெக்ஸிகோவுக்கு வெளியில் இருக்கும்போது, மொழியோடு தனித்து இருப்பதான உணர்வில் அதனோடுமல்லுகட்டும்போது அது மிகவும் சக்திவாய்ந்ததாக அமைகிறது. அதே சமயம் நான் மெக்ளிகோவில் இருக்கும் போதோ, காபி கேட்கவும், தொலைபேசியில்பதில் சொல்லவேண்டியதாகவும் வேறெல்லாவகையிலும் அது உடனடியாகமலினப்பட்டுவிடுகிறது. நான்மெக்ஸிகோவுக்கு வெளியே இருக்கும்போது ஸ்பானிஸ் எனக்கு தனித்துவமிக்க அனுபவமாக இருக்கிறது. இதை எனக்குள்ளாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என நான் உணர்கிறேன். என் வாழ்வு முன்னிறுத்தும் ஒரு உண்மையாக இது ஆகிவிட்டது. 

கேள்வி: 

ஆங்கிலத்தில் எழுதும் ஆசை எப்போதாவது உங்களுக்கு மேலிட்டிருக்கிறதா?

 ப்யூ 

இல்லை, ஆங்கில மொழிக்கு இன்னும் ஒரு எழுத்தாளர் தேவை இல்லை என்பதை நான் வெகுசீக்கிரமாகவே உணர்ந்துகொண்டுவிட்டேன். ஆங்கில மொழி விசேஷமான திறமையை தொடர்ந்து இடையறாத மரபாகக் ஜனவரி 1996 |
| உன்னதம்
படிபிகம்
________________

www.padippakam.com
கொண்டிருக்கிறது. அது உறங்கப் போகும் போது, எப்போதுமே ஓர் ஐரிஷ் மனிதன் தோன்றி அதை எழுப்பிவிட்டு விடுவான்.

கேள்வி 

பலமொழிகள் அறிந்த நீங்கள் எந்த மொழியில் கனவுகாண்கிறீர்கள்:

ப்யூண் 

நான் ஸ்பானிஸ் - இல் தான் கனவு காண்கிறேன் காதலிப்பது கூட ஸ்பானிஸில் தான். இது சமயங்களில் மிகுந்த குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆனால் என்னால் ஸ்பானிஸில்தான் அதைச் செய்யமுடியும். வேறுமொழிகளில் அவமானப்படுவது எனக்கு பொருட்டே இல்லை. ஆனால் ஸ்பானிலின் ஒரு அவமானச் சொல் உண்மையில் என்னை கோபத்தில் குதிக்கும்படி செய்து விடுகிறது. இந்தக் கோடையில் எனக்கு ஏற்பட்ட ஒரு புதுமையான அனுபவத்தை உங்களுக்குச் சொல்கிறேன். மெக்ஸிகோவில் அம்ப்ரோஸ் பியர்ஸின் சாகசங்களைப் பற்றி ஒரு குறுநாவல் எழுதினேன். புரட்சியின் போது 1914இல் பஞ்சோ வில்லா ஆர்மியில் சேர்ந்து கொள்வதற்காக, பியர்ஸ் மெக்ஸிகோ சென்றான். பியர்ஸின் குரலாக அது அமைய வேண்டும். ஆனால் அதை ஸ்பானியத்தில் மொழி பெயர்ப்பது மிகவும் சிரமமென்பதா- ல் அது எனக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது. அவனுடைய குரலிலேயே அவனுடைய பேச்சை அமைக்க வேண்டி இருந்ததால் அது அவனுடைய கதைகளில் இருந்து எனக்கு கிடைத்ததால்நான் அந்தக் குறுநாவலை ஆங்கிலத்தில் எழுதினேன். அது மிக பயங்கரபான அனுபவம். நான் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போதே, திடீரென மேஜையின் அடியிலிருந்து பாக்னர் தோன்றி"ஹாஹா, உன்னால் முடியாது” என்றார். கதவின் வழியாக மெல்வில் தோன்றி "உன்னால் முடியாது, உன்னால் முடியாது” என்றார். இந்த ஆவிகள் எல்லாம் தோன்றின. ஆங்கிலத்தின் உரைநடை மரபு அவ்வளவு வலிமையாகத் தன்னை வலியுறுத்தியதானது என் கைகளைக் கட்டிப்போட்டது. சரவிளக்குகளில் தொங்கிக் கொண்டும், கிண்ணங்களை உருட்டிவிட்டுக் கொண்டும் இருக்கும் இந்த எல்லா மனிதர்களோடும் சேர்ந்து எழுத வேண்டியிருக்கிற என் வட அமெரிக்க சகாக்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஸ்பானிஸில் 17ஆம் நூற்றாண்டுக்கும்20ஆம் நூற்றாண்டுக்கும் இடையேயான மிகப்பெரிய வெற்றிடத்தை நாம் நிரப்பவேண்டியிருக்கிறது. எழுதுவதென்பது சாகசத்தை விடவும் மேலானது. சவாலை விடவும் மேலானது. நமக்கும் செர்வாண்டிசுக்கும் இடையே கிளாரின், கால்டோங் என்ற இரண்டு 19ஆம் நூற்றாண்டு நாவலாசிரியர்களைத் தவிர்த்துவிட்டோமானால் மிகப்பெரிய பாலைவனம் தான் விரிந்து கிடக்கிறது.

கேள்வி. 

லத்தின் அமெரிக்க நாவல்களில் காவிய அலை வீசுவதற்கும் ஒவ்வொரு படைப்பிலும் சமூக மற்றும் வரலாற்று ரீதியான பார்வைகளை உள்ளடக்கும் முயற்சிக்கும் இது ஒரு காரணமா?

ப்யூ 

சரிதான். பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க எழுத்தாளர் டொனால்டு பார்தெல்மேயுடன் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்: “லத்தின் அமெரிக்காவில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இவ்வளவு பெரிய நாவல்களை உங்களால் எப்படி எழுதமுடிகிறது? எல்லாவித விஷயங்களோடும் பெரிய பெரிய நாவல்களை எழுத எப்படி முடிகிறது?
ജങ്ങഖf 1996
- 6Ꭿ? - படிபபகம
________________

WWW padippakam.com
லத்தீன் அமெரிக்காவில் காகித தட்டுப்பாடு இல்லையா? இதை எல்லாம் எப்படி நீங்கள் செய்கிறீர்கள் ஐக்கிய நாடுகளில் விஷயங்களைத் தேடுவது எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. நாங்கள் மெலிந்த புத்தகங்களை மெல்லிய மிக மெல்லிய புத்தகங்களையே எழுதுகிறோம். நான் அந்தச் சமயத்தில் சொன்ன பதில் எல்லாவற்றைப் பற்றியும் எழுத வேண்டியதை நாங்கள் உணர்வதேஎங்கள் பிரச்சனை. அதாவது நூற்றாண்டுகளாக நிலவும் மெளனத்தை நாங்கள் நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது. வரலாற்றினால் மெளனமாகிப் போய்விட்ட எல்லாவற்றுக்கும் நாங்கள் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.

கேள்வி. 

லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் தங்களுக்கான கலாச்சார அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்று நீங்களும் கருதுகிறீர்களா? -

ப்யூ 

ஆம். இவ்விஷயத்தில் மத்திய மற்றும் கீழை ஐரோப்பிய எழுத்தாளர்களுடன் எங்களுக்கு மிக வலுவான தொடர்பு இருப்பதாகக் கருதுகிறேன். இன்று நாவல் எங்கு உயிரோடும் உந்துதலோடும் இருக்கிறது என்று நீங்கள் என்னிடம் கேட்பீர்களென்றால் அது அடிப்படையில் லத்தின் அமெரிக்காவிலும் கீழை ஐரோப்பா என்று அழைக்கப்படுவதிலுமே - செக்கோஷ்லவாகியர்கள் அதை மத்திய ஐரோப்பா என்று தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள் - இருக்கிறது என்று சொல்வேன். அவர்கள் கீழை ஐரோப்பாவை ரஷ்யா என்று நினைக்கிறார்கள் எப்படியிருந்த போதிலும் விஷயங்கள் சொல்லப்பட வேண்டும் எழுத்தாளன் அவற்றைச் சொல்லவில்லை என்றால் வேறு எவரும் சொல்லப்போவதில்லை என்றும் நினைக்கக் கூடிய மக்களைக் கொண்ட இரண்டு கலாச்சாரப் பகுதிகள் இருக்கின்றன. இது மிகுதியான பொறுப்பை உருவாக்குகிறது. மிகப்பெரிய கனத்தை எழுத்தாளன் மீது சுமத்துகிறது. அதே சமயம் ஒருவித குழப்பத்தையும் உண்டுபண்ணுகிறது. ஏனெனில் சேவை தான் முக்கியம்:கரு தான் முக்கியம்; எனவே புத்தகம் நல்லதாக இருக்க வேண்டும் என ஒருவர் சொல்லக் கூடும். ஆனால் அதுவல்ல விஷயம். பொலிவிய சுரங்கத் தொழிலாளியின் நிலைமை குறித்தும், எகுடோரிய வாழைப்பழ பறிப்பாளனின் நிலைமை குறித்தும் கண்டனம் செய்பவை போன்ற முழுவதும் நல்லநோக்கங்களுடன் கூடிய எத்தனையோ நாவல்களை நீங்கள் லத்தீன் அமெரிக்காவில் படித்திருப்பீர்கள். ஆனால் அவை எவ்வளவு பயங்கரமான நாவல்களாக - பொலிவிய ஈயச் சுரங்கத் தொழிலாளிக்கோ, எகுடோரிய வாழைப்பழ பறிப்பாளனுக்கோ ஒன்றும் செய்யாதது மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கும் எவ்விதப் பயனுமின்றி - எல்லாத் தளங்களிலும் தோல்வியுற்றிருக்கின்றன. ஏனெனில் அவற்றில் நல்ல நோக்கங்களைத் தவிர வேறெதுவுமில்லை.ஆனால் இன்னமும்கடந்தகாலம் பேசப்படுவதெற்கென்று அப்படியே முழுமையாக இருக்கிறது. மெளனமான, இறந்துபட்ட கடந்த காலம், நீங்கள் அதற்கு மொழியின் மூலம் உயிரூட்ட வேண்டும். ஆக, என்னைப்பொறுத்தவரை எழுதுவதென்பது அடிப்படையில் ஒர் அடையாளத்தை நிறுவுவதற்கான அவசியமாகவும், என்னுடைய நாட்டுக்கும் மொழிக்குமிடையே ஓர் தொடர்பை நிலை நிறுத்துவதற்கு
| உன்னதம் 69 . >ಪವಾ೯]
птупали
________________

www.padippakam.com
மானது என் தலைமுறையைச் சேர்ந்த பிற எழுத்தாளர்களுடன் இனைந்து நாங்கள் எங்கோ துரங்கிக் கொண்டிருப்பதாகவும் பின் விழித்துக் கொள்வதாகவும் ஏதோ'தாங்கும் அழகு விளையாட்டுவிளையாடுவதுபோல நான் உணர்கிறேன்.

கேள்வி: 

இரட்டை கலாச்சாரம் கொண்ட ஒரு காலை உள்ளூர் கலாச்சாரத்திலும் மற்றொன்றை வெளி சக்தியான மேற்கத்திய கலாச்சாரத்திலும் ஊன்றிக் கொண்டிருக்கும் பல தலைமுறைகளைச் சார்ந்த ஸ்பானிய மற்றும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர்களுக்காக நீங்கள் பேசுவதாக இதைச் சொல்ல முடியுமா?

ப்யூ. 

லத்தின் அமெரிக்காவின் அடிப்படையான கலாச்சாரத் தன்மைகளில் ஒன்று அது மேற்கத்திய கலாச்சாரத்தின் விபரீதமான கிளை என்பது. அது மேற்கத்தியது, ஆனால் மேற்கத்தியதில்லை. அதனால் ஒரு பிரஞ்சுகாரனை விட அல்லது ஒரு ஆங்கிலேயனைவிட நாங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை நன்றாகப் புரிந்து கொண்டாக வேண்டும் என்பதை உணர்கிறோம். அதே சமயம் நாம் நம்முடைய சொந்த கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இது, சமயங்களில் இந்திய கலாச்சாரங்களுக்கு நாம் திரும்பிச் செல்வதாக ஆகும். ஆனால் ஐரோப்பியர்களோ, நம்முடைய கலாச்சாரங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியதில்லை என்று கருதுகிறார்கள். பெetzalcoat, மற்றும் Descartes ஐ நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். Descartesபோதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆக, ஐரோப்பாவுக்கு அதன் உலகளாவிய கடமைகளை அதற்குத்தொடர்ந்து நினைவூட்டுவதாக லத்தின் அமெரிக்க அமைந்திருக்கிறது. அதனால் தான் போர்ஹே போன்ற எழுத்தாளர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் ஒர் மாதிரி வடிவமாக இருக்கிறார். ஐரோப்பியனைப்போன்று அவர் இருப்பதன் உண்மை, அவர் அர்ஜென்டேனியன் என்பதையே குறிக்கிறது. யதார்த்தத்தை சிருஷ்டிக்க போர்ஹே செல்லும் எல்லைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தை எந்த ஒரு ஐரோப்பியனும் உணர்வதில்லை. யதார்த்தத்தை கண்ணாடி போல் பிரதிபலிக்காமல் அவருடைய சொந்த மரபில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார வெற்றிடங்களை நிறைவு செய்யும் வகையில் புதிய கலாச்சாரத்தை போர்ஹே படைக்கிறார்.

கேள்வி: 

ஸ்பானிய புனைகதையின் பரிணாமத்தில் எந்தெந்தப் படைப்பாளிகள் இடம்பெறவில்லை. நீங்கள் பாக்னரையும்மெல்வில்லையும் குறிப்பிட்டீர்கள். பால்சாக்கையும் என்னால் சுலபமாக நினைக்க முடிகிறது.

ப்யூ 

அவர்கள் எல்லோருமே இருக்கிறார்கள். ஏனெனில் நாங்கள் அவர்களை ஒருங்கினைத்துக் கொண்டிருக்கிறோம். வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிற மரபுகளைச் சார்ந்த எழுத்தாளர்களை லத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை வலியுறுத்துவதால் உங்கள் கேள்வி முக்கியமானது. சமயங்களில் ஆச்சரியம் தரும் வகையில் அசாதரணமான ஒத்த தன்மைகளை நாங்கள் கண்டடைகிறோம். லத்தின் அமெரிக்க நாவல்களில் "ஜாய்ஸ் மற்றும் பாக்னரின் உயர்ந்த பாதிப்பு குறித்து அதிகமாக இங்கு அலட்டிக்
உன்னதம் 70 ஜனவரி 1996 /
படிப்பகம்
________________

WWW padippakam.com
கொள்கிறார்கள். நல்லது இரண்டு விஷயங்கள் பற்றிச் சொல்லியாக வேண்டும்.முதலாவது,இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தைச்சார்ந்தஸ்பானிய மொழிக் கவிஞர்கள் ஆங்கில மொழியின் சிறந்த கவிஞர்களை ஒத்திருந்தார்கள். எலியட் எழுதிய அதே சமயத்தில் தான் நெருடா எழுதினார். ஆனால் நெருடா நூலகங்களே இல்லாத மழையால் நனைந்து கொண்டிருக்கும் தென் சிலியின் நகரத்திலிருந்து எழுதினார். ஆயினும், எலியட்டின் அதே அலைவரிசையில் அவர் இயங்கினார். நாவலாசிரியர்களுக்கான எங்களுக்கு மொழியைப் பேணி வைத்திருந்து தந்தது கவிஞர்கள் தான். அந்தக் கவிஞர்கள் இல்லாமல்-நெருடா வலேஜா, பாஸ், ஹீய்டோப்ரோ அல்லது கேப்ரியலா பிஸ்ட்ரல் இல்லாமல் - லத்தின் அமெரிக்க நாவல் என்று ஏதும் இருந்திருக்கமுடியாது. இரண்டாவது18ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கி-டிபே ரிச்சர்ட்ஸன் மற்றும் ஸ்மோலெட் தொடங்கி - காலம் பற்றிய உள்வாங்கல் நிகழ்ந்ததற்கேற்ப மேற்கத்திய நாவலில் காலம் பற்றிய உணர்வில் புரட்சிகர மாற்றங்களை ஐரோப்பிய மற்றும் ஐக்கிய நாடுகளைச் சார்ந்த மிகச் சிறந்த நாவலாசிரியர்கள் நிகழ்வித்தனர். காலத்தை இப்படி உடைத்ததானது, பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மேற்கு திணித்த நேர்கோட்டுக் காலம் என்பதான ஒற்றைக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததானது, இந்திய மதங்களிலிருந்து வந்து சேர்ந்த வட்டச் சுழல் காலம் பற்றிய நம் உணர்வோடு தீர்க்கமாக ஒத்துப்போனது. காலத்தை சுழல் தன்மை கொண்டதாகக் காணும் நம் கருத்து - நமது அடிப்படையான வரலாற்றுப் பார்வை - விகோவிடமிருந்தும் ஒரே சமயத்தில் மாறுபட்ட காலங்களைக் காணுகிற நம் அன்றாட அனுபவத்திலிருந்தும் பெறப்பட்டது. நமக்கு மலைகளில் இரும்பு யுகம் இருக்கிறது. நகரங்களில் இருபதாம் நூற்றாண்டு இருக்கிறது. பாக்னர்,பரோக் எழுத்தாளர் என்பதாலும் லத்தீன் அமெரிக்கவோடு பரோக்கைப் பகிர்ந்து கொள்வதாலும் காலம் நேர்கோட்டுத் தன்மையானது அல்ல என்பதை ஏற்பது பாக்னரிடம் குறிப்பிடத்தக்க அளவு வலுவுடன் நிகழ்கிறது. தோல்வி மற்றும் இழப்பு குறித்த நம் உணர்வைப் போன்ற உணர்வுகொண்ட இருபதாம் நூற்றாண்டு மேற்கத்திய எழுத்தாளர் அநேகமாக அவர் ஒருவர் தான்.

கேள்வி. 

ஆனால் பாக்னரும் பிந்தைய நிலச்சீர்திருத்தக் கலாச்சாரத்தையே மறு உருவாக்கம் செய்கிறார்.

ப்யூ

நிலச்சீர்திருத்தக் கலாச்சாரத்திலிருந்து பிந்தையநிலச்சீர்திருத்தக் கலாச்சாரத்துக்கான பாதையானது நம் நிலையை ஒத்ததுதான். ஆனால் எதைவிடவும் முக்கியமாக பாக்னர் வீழ்ச்சிகுறித்த எழுத்தாளர். வெற்றியின் கதைமட்டுமல்ல, வீழ்ச்சிகளின் வரலாறும் கூடத்தான் நாம் என்று சொன்ன ஒரே அமெரிக்க எழுத்தாளர் அவர் தான். இது, அவர் எங்களோடு பகிர்ந்து கொள்வது. வரலாற்றுரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தோற்றுப்போன சமூகங்களால் அமைந்ததுலத்தின் அமெரிக்க இந்தத்தோல்வி,ஒர்புதைபட்ட மொழியை வெற்றிக்குப்பின் உருவாக்கியிருக்கிறது. லத்தின் அமெரிக்காவில் பரோக் என்பது பழைய உலகிற்கு புதிய உலகின் எதிர்வினை; அது ஐரோப்பிய கலாச்சார வடிவமான பரோக்'ஐ எடுத்துக் கொண்டு பின்,
Ιε στα πιο | | IQ LT15LD Զշanoյի 1996 l
________________

WWW.padippakam.com
இந்திய கலாச்சாரத்துக்கான கருப்பர் கலாச்சாரத்துக்கான ஸ்பானிஸ் மற்றும் போர்த்துக்கிசிய அமெரிக்காவின் கலாச்சாரமான மிகச்சிறந்த மத ஒருமைப்பாட்டுக்கான மறைவிடமாக தன்னைப்புனருத்தாரணம்செய்தது. இன்று நாங்கள் எழுதும்போது அந்த மரபில் எங்களைப் பிணைத்துக் கொள்கிறோம்.

கேள்வி: 

நாம் முன்னர் குறிப்பிட்ட கடந்த காலத்தின் சுமை என்பது மிக முக்கியமான விஷயம் இல்லையா? அது ஒவ்வொரு லத்தின் அமெரிக்க எழுத்தாளரும் மிகுந்த கனத்தை சுமக்கும்படி செய்கிறது. அது மொழியை உருக்குலைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் கடந்த காலத்திற்குள்ளும் அதே போல் எதிர்காலத்திற்குள்ளும் எதிரொலிக்கிறது.

 ப்யூ. 

பாக்னரை Die Gangoris என்று குறிப்பிட்டது ஆலென்பேட் என்று நினைக்கிறேன். அது உண்மையில் ஒர் உயர்ந்த பாராட்டு என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் நிறைவுறாக, மிகுந்ததாகம் கொண்ட பிணைந்த பிரதிகளிலான பரோக் என்ற இந்தக் கலாச்சாரத்தினோடு பாக்னரை இது தொடர்புபடுத்துகிறது. கரீபியன் கலாச்சாரமென்று ஒன்று இருக்கிறது. அது பாக்னர், கார்பென்டர் கார்சியோ மார்க்வெஸ், டெரிக் வால்காட் மற்றும் எய்மே செசாரேக்கை கொண்டிருக்கிறது. பரோக்கின் உள்ளும் புறமுமாக இருப்பது தான் கரீபியன், அதுவே மெக்ஸிகோ வளைகுடா. ஜின்ரைஸின் wide sargasso sea ஐ எண்ணிப்பாருங்கள்.

கேள்வி: 

இம்மாதிரியான ஒரு கலாச்சார பார்வையை நீங்கள் வளரிளம் பருவத்தில் அடைந்தீர்களா அல்லது எழுதத் தொடங்கிய காலத்தில் அடைந்தீர்களா?

ப்யூ 

வளரிளம் பருவத்தில் தான். விளக்கமாகச் சொல்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு பிட்டே ஜெராஸ்கி என்ற என் நண்பர் ஜீன்பால் சார்த்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுத அவரிடம் அனுமதி பெற்றார். அவர் சொன்னார். என்னிடம் ஒரு பிரமாதமான யோசனை இருக்கிறது. குழந்தையாக இருந்தபோது அவர் வாசித்த புத்தகங்களைக் குறிப்பிடும்படி சார்த்தரிடம் கேட்கப் போகிறேன். அவரின் அறிவு ரீதியான உருவாக்கம் எப்படி அமைந்தது என்பதை அதிலிருந்துநான் அறியப்போகிறேன். பின்னர் ஜெராஸ்கி திரும்ப என்னிடம் வந்து இதெல்லாம் என்ன புத்தகங்கள், நான் ஒருபோதும் கேள்விப்படவே இல்லையே என்றார். சார்த்தர் குழந்தையாக இருந்தபோது படித்த புத்தகங்களெல்லாம் நாங்கள் லத்தின் உலகில் படித்த - நான் சின்ன குழந்தையாக இருந்த போது படித்த புத்தகங்கள். எமிலியோசல்களி-அவரின்றி.இத்தாலி, பிரெஞ்ச், ஸ்பானிஸ் அல்லதுலத்தீன் அமெரிக்க இலக்கியம் என்று எதுவுமே இருந்திருக்காது. அதே போல் மைக்கேல் ஷிவாகோ இந்தப் படைப்பாளிகள் நம் மரபின் ஒரு பகுதி, ஆனால் ஆங்கிலே-சேக்ஷன் மரபைச் சேர்ந்தவர்கள் அல்ல. எனக்கு இந்த இரண்டுமே கிடைத்தது என் அதிர்ஷ்டம். நான் சல்கரியையும் ஷிவாகோவையும் படித்ததோடு மார்க் டுவைய்னையும் ராபர்ட் லூயி ஸ்டீவன்சனையும்படித்தேன். Captain Bloodஇன் ஆசிரியரான சபாடினியைப் படித்ததனால் தான் நான் எழுத்தாளரானேன் என்று எட்டாக்டரோ என்னிடம் சொன்னார். அந்தப் புத்தகங்கள் உங்களை அப்படியொரு ஜனவரி 1996
Ιε σπρώ
படிப்பகம்
________________

www.padippakam.com
அற்புதமான உலகுக்கு அழைத்து செல்கின்றன. அழகிய ஸ்பானிய போர் கப்பல் மூலம் நீங்கள் அந்தத் தீவை நோக்கி பயணம் செய்கிறீர்கள். அதிலிருந்து வெளியில் வர நான் ஒரு போதும் விரும்பியதில்லை. புதையல்தீவை (Treasure Island) தேடுவதற்காக என் எஞ்சிய வாழ்க்கையைச் செலவிட நான் விரும்பினேன்.

கேள்வி. 

ஆனால் நீங்கள் வளர்ந்த பின்பு பிற கலாச்சாரங்களுக்கு உங்கள் கலாச்சாரத்தை ஏதோ ஒரு வகையில் பிரதிநிதித்துவப்படுத்தும் உணர்வு உங்களிடம் ஏற்பட்டிருக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

 ப்யூ 

நான் அப்படிச் செய்தேன். உங்களுக்கு இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். முப்பதுகளில் வாஷிங்டனில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு மெக்விக குழந்தை நான். பள்ளியில் பிரபலமானவனாக நான் இருந்தேன். ஒரு அமெரிக்கப் பள்ளியில் இப்படி இருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. 1995 மார்ச் 18இல் வெளிநாட்டினர் சொந்தம் கொண்டிருந்த எண்ணெய் பகுதிகளை மெக்ஸிகோ அரசுடமையாக்கிக்கொண்டதுவரை இது நீடித்தது. அதன்பிறகு நான் ஒரு குஷ்டரோகிபோல் ஆகிவிட்டேன். எவரும் என்னோடு பேசுவதில்லை. எல்லோரும் முகத்தைத்திருப்பிக்கொண்டார்கள். ஏனெனில், 'நம் எண்ணெய் கிணறுகளை மெக்ஸிக கம்யூனிஸ்டுகள் திருடிக் கொண்டுவிட்டதாக ஒவ்வொரு நாளும் த ைலப்புச் செய்திகள் அலறின. எனவே அதற்கு எதிர்வினையாக நான் பயங்கர மெக்ஸிக வெறியனாக மாறிப்போனேன். 1939இல் வாஷிங்டனில்ரிச்சர்டுடிக்ஸ்-இன் படம்பார்க்க கெய்த் தியேட்டருக்குப் போனது என் ஞாபகத்துக்கு வருகிறது. (அந்தப்படத்தில் டிக்ஸ், சாம் ஹஸ்டனாக நடித்தார். அலமோ தோன்றியவுடனே நான் என் இருக்கையிலிருந்து குதித்து (Gringos) கிருங்கோக்கள் ஒழிக மெக்ஸிகோ வாழ்க என்று கத்தினேன். ( Gringos - லத்தின் அமெரிக்காவில் வெளிநாட்டவரை-குறிப்பாக அமெரிக்கர் அல்லது ஆங்கிலேயரை-பரிகாசத்தோடு குறிக்கும் சொல். யுத்தம் தொடங்கியபின்பு பிராங்ளின் ரூஷ்வெல்1939 டிசம்பரில் உலகின் எல்லாப்பகுதிகளையும் சார்ந்த குழந்தைகள் அமைதி பற்றிப் பேசும்வகையில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். மெக்ஸிகோவின் பிரதிநிதியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஒரு இளம் மெக்ஸிகனைப் போல சம்பிரதாய உடை அணிந்து சென்று மெக்ஸிகோவின் பெயரால் அமைதிக்காகப் பேசினேன்.

கேள்வி: 

மெக்ஸிகோ பற்றி உங்களுக்குப் புறவயமான பார்வை இருக்கிறது: அதே சமயம் மெக்ஸிகோ உங்களுக்குள் இருப்பதாகவும் நீங்கள் உணர்வதாகத் தெரிகிறது என்பதால் தான் கேட்டேன்.

ப்யூ 

விலகி நின்று பார்க்கக் கூடிய என் இயல்புக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். ஏனெனில் அதனால் தான் மற்றவர்கள் சொல்லாததை என்னால் சொல்ல முடிகிறது. முகமூடியிட்ட ஒரு நாட்டினரான மெக்ஸிகோவினருக்கு நான் ஒரு கண்ணாடி தருகிறேன். அதில் எப்படி இருக்கிறோம் என்பதை, எப்படிப் பேசுகிறோம் என்பதை, எப்படி செயல்படுகிறோம் என்பதை அவர்கள் பார்த்துக்கொள்ளலாம். என்னுடைய எழுத்துக்கள் என் முகமூடி என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். வார்த்தை முகமூடிகளை என் நாட்டுக்கான கண்ணாடியாக நான் தருகிறேன்.
| உன்னதம் _73 ஜனவரி 1996 | படிப்பகம்
________________

www.padippakam.com
Quetzalcoat! இன் Plumed Serpent இல் வரும் பழங்கதையில் மெக்ஸிகோ விளக்கப்படுகிறது. கடவுள் மனிதனைப் படைக்கிறார். அவனுக்கு ஒரு கண்ணாடி தந்து சாத்தான் அவனை அழிக்கிறான். தனக்கு முகமில்லை என்று அவன் நினைக்கும்போது அவனுக்கு முகமிருப்பதை சாத்தான் காண்பிக்கிறான். மெக்ஸிகோவின் சாரம் இது தான்; உங்களுக்கு முகமூடிதான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும்போது உங்களுக்கு முகம் இருப்பதை நீங்கள் கண்டடைவது
.
கேள்வி

 நாவல் என்பது ஒரு நெடுஞ்சாலையில் நகரும் கண்ணாடி என்ற ஸ்டெந்தாலின் படிமம் உங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றுகிறதா?

ப்யூ. 

இது ஒரு பிரச்சனையை எழுப்புகிறது. ஏனெனில் இலக்கியமானது யதார்த்தத்தின் முகமூடியாகவோ அல்லது கண்ணாடியாகவோ இருப்பதன் மூலம் திருப்தி அடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. இலக்கியம் யதார்த்தத்தை உருவாக்குகிறது. அப்படி இல்லாதவரை அது இலக்கியமே இல்லை என்று நினைக்கிறேன். வாழ்வின் பொதுவான அம்சங்களை பிரதி Gertiu ŝħizsir La marquise sortita anq heures எழுதியாக வேண்டும். ஆனால் அது போதுமானதில்லை. யதார்த்தத்தை இலக்கியம் நீட்சியடையச் செய்கிறது. இல்லையெனில் அது எதுவுமே செய்வதில்லை.

கேள்வி: 

ஆலிஸின் கண்ணாடியை இந்த இடத்தில் நாம் கணக்கில் கொள்ளலாம், நம்மை நாமே பார்த்துக் கொள்கிற கண்ணாடி நாம் மற்றவர்களுக்கு அன்பளிப்பாகத் தருகிற கண்ணாடி, ஆனால் வளர்ந்து ஆளான பிற்கு மூன்றாவது கண்ணாடி பயமூட்டுவதாக இருக்கிறது. 

ப்யூ. 

அது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஒரு கண்ணாடி. அது ஆசையோடும் துயரங்களோடும் தொடர்புடையது. கண்ணாடியாக இலக்கியம் என்பது பற்றிய என் கருத்தாக்கத்தோடு பரோக் கவிகு வேதோ மிக நெருக்கமாக இருக்கிறார். குவேதோவைப் பொறுத்தவரை கண்ணாடியின் புனிதமும் மலத்துவாரத்தின் அசுத்தமும் எப்போதும் ஒன்றுக்கொன்று இணைந்தே இருக்கிறது. ஸ்பெனிஸில் கண்ணாடி என்பது espelo அதாவது speculum. அது மலத்துவாரத்தைக் குறிக்கிற culo என்ற வார்த்தையை உள்ளடக்கியிருக்கிறது. குவேதோவைப் பொருத்தவரை உலகின் மையம் அதுதான் - நீங்கள் ஆசையை உள்வாங்குவதும் வெளியிடுவதும் அந்த மகிழ்ச்சித்துவாரத்தின் மூலம் தான். அதனால் தான் கண்ணாடியில்பிரதிபலிக்கும் சுத்தத்தை குவேதோ பாடுகிறார். குவாஸ்தன் ஒவியத்தில் ஒரு கண்ணாடியைப்பிடித்தபடி கண்ணாடியில் உங்களை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதைப் போல நான் குவேதோவை என்னுள் எப்போதும் கொண்டிருக்கிறேன். மனம், வாய், கண்கள் எல்லாமே கண்ணாடி தான். ஆனால் கடைசியில் enlo the speculam மூலமாக யதார்த்தம் வெளியேற்றப்படுகிறது. கண்ணாடியைப் பற்றி யோசிக்கும்போது நான் எப்போதுமே இப்படித்தான் நினைக்கிறேன். கண்ணாடியும் கழிவறையும் பிரிக்க முடியாதவை.

கேள்வி: 

உங்கள் கற்பனையில் பிரதியின் வித்து எப்படி வேர் கொள்கிறது? உங்கள் படைப்பின் விஷயம் எங்கிருந்து துவக்கம் கொள்கிறது?
| உன்னதம் 74 ஜனவரி 1996 |
படிப்பகம்
________________

www.padippakam.com
ப்ழ் நகரப் படிமங்களிலிருந்து என் புத்தகங்கள் இருக்கொள்கின்றன. என்னுடைய கனவுகளின் அல்லது பயங்கர கனவுகளின் நகரம் மெக்ஸிகோதான். பாரிஸோ, நியூயார்க்கோ என் படைப்புக்கு எவ்வித உந்துதலும் தருவதில்லை. என் பல படைப்புகளுக்கும் அடிப்படை நான் offs& LITsrå360a13u. 2 grgrostosto Burnt Water @@ 2 Giram The Dall dueen என்ற கதை என் வளரிளம் பருவத்தில் ஒவ்வொரு பிற்பகலிலும் நான் பார்த்தது தான். அங்கு அடுக்குமாடி வீடு ஒன்று இருக்கிறது. அதன் முதல்தளத்தை சன்னல்கள் வழியாகப் பார்க்க முடியும். அங்கு எல்லாம் இயல்பாகவே தோற்றமளிக்கும். ஆனால் இரவில் அது அசாதரணமான ஓர் இடமாக உருமாறும் பொம்மைகளும் பூக்களும் நிறைந்திருக்கும். வாடிய பூக்கள், ஒரு பொம்மை அல்லது குழந்தை பாடையில் படுத்திருக்கும். நான் நகரத்திய எழுத்தாளன் நகரைத் தாண்டிய இலக்கியத்தை என்னால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னைப்பொருத்தவரை அது மெக்ஸிகோ நகரம். அதனுடைய முகமூடிகளும் கண்ணாடிகளும். மரபுச் சின்னமான அந்த நகரின் ஈரமண்ணில் அதன் மூலவேர்களைக் காண்கிறேன். மக்கள் சந்திக்கவும் நகரவும் மாறவுமான வெளியைக் கொண்டிருக்கிற நகரம் அது.


கேள்வி.

 நான் உங்களிடம் ஒரு சர்வசாதாரணமான கேள்வியைக் கேட்க நினைக்கவில்லை. எனினும், உங்களை எதுகண்டி இழுக்கிறது. உங்களை எது எழுத வைக்கிறது?

 ப்யூ. 

ஒரு புனைவு ஆழ்ந்த உணர்வின் கனவு என ஹெம்லெட் சொல்வது அற்புதமான விஷயம். என் புனைவு, ஆழ் உணர்வின் கனவு அழுகையாகப் பிறக்கும் அது. நான் முழுமையடையவும், நிறைவடையவும் விரும்புகிறேன்; நான் மேலும் ஏதாவது சேர்க்க விரும்புகிறேன்" என்கிறது. உதாரணமாக Artemia Cruz, பல குரல்கள் ஒலிக்கும் நாவல். இலக்கியம் என்பது ஒரு குரலினடியாகப்பிறக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒருகுரலைக் கண்டடைகிறீர்கள். அதற்கு ஒரு காகித வடிவம் கொடுக்க விரும்புகிறீர்கள். ஆனால் அந்தக் குரல்தான் ஒரு நாவலின் யதார்த்தமாக அமைகிறது. 

கேள்வி. 

நீங்கள் ஆர்டெமியோ க்ரூஸின் குரலைக் கேட்டீர்களா?
 
ப்யூ 

ஆம்; அவனுடைய குரல்சொன்னது: இந்த நிகழ்காலத்தில் நான் இறந்து கொண்டிருக்கிறேன். எனக்கு உடலிருக்கிறது. ஆனால் நான் என் இருப்பை இழந்து கொண்டிருக்கிறேன். அது என்னிடமிருந்து வடிந்து செல்கிறது. அவனுக்கு ஒரு இறந்தகாலம் இருந்தது. அவன் இறக்கப் போகிறான் அவன் நினைவுகள் இறக்கப் போகின்றன. மேலும் இன்னொரு குரல் - கூட்டான ஒரு குரல்- சொன்னது நாங்கள் இந்தத் தனிமனிதனைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மொழியும் நினைவுகளுமான வார்த்தைகளால் நாங்கள் ஒரு உலகை வெளிப்படுத்துகிறோம். அது தொடர்ந்து செல்லக்கூடியது ஒர் இலக்கியவெளியில் பல குரல்கள். இணைந்து தமக்கான வடிவத்தைக் கேட்டு நிற்பதுதான் விஷயமே.

கேள்வி 

அதே ஆண்டில் வெளியான Aura, Artemic Cruz இலிருந்து மிகவும் வித்தியாசமானதாக மிகவும் பரீட்சார்த்தமானதாகத் தெரிகிறது.
| உன்னதம் 75 ஜனவரி 1996 | படிபபகம
________________

www.padippakam.com

க்யூ கவிஞர்கள் எப்போதும் பயன்படுத்துகிற முன்னிலை ஒருணிைன் எழுதப்பட்டது. அதைப் பயன்படுத்த நாவலாசிரியர்களுக்கும் உரிமை இருக்கிறது. தான் எல்லாவற்றையும் அறிந்திருக்கவில்லை என்பதை ஒப்புகொள்ளும் குரல் அது. மேலும், நீங்கள் ஒரு நாவலாசிரியர் மட்டும் தான். ஏனெனில், நீங்களும் எல்லாம் அறிந்திருப்பதில்லை.எல்லாவற்றையும் அறிந்த காவியக் கவிஞன் போன்றதல்ல உங்கள் நிலை. கதவுகள் எவ்விதம் மூடும் என்பதை ஹோமர் துல்லியமாக அறிவார். Auer beach சொல்வது மாதிரிஹோமரிடம் கதவை மூடுவதென்பதுநான்கு பாடல்களாக அமையும்; ஹெக்டரின் மரணமும் நான்கு பாடல்களாக அமையும். ஏனெனில் இரண்டுமே சரிநிகர் முக்கியத்துவம்வாய்ந்தவை. ஆனால் இந்தக்கவித்துவக் குரலானது. நாம் தனியாக இல்லை. வெறெதாவது நம்மோடு இணைந்து கொள்ளும் என்கிறது. Auraவில் நான் ஒரு குறிப்பிட்ட மரபை பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்தி இருக்கிறேன். மேலும் மரபின்றி படைப்பு என்பது இல்லை. மிகச் சிறந்த ஜப்பானிய திரைப்படமான 'உகத்சு இலிருந்து ஒளரா எனக்குக் கிடைத்தது. அதில் இளம் வேசியை மனம் முடித்த கையோடு ஒருவன் போருக்குச் செல்கிறான். அவள் மனைவியருள் புனிதமானவளாகிறாள். அவன் திரும்பி வரும்போது அவள் தற்கொலை செய்து கொண்டுவிட்டதை அறிகிறான். சில போர்வீரர்களால் நகரம் கைப்பற்றப்பட்ட நிலையில் கற்பழிப்பிலிருந்து தப்பிப்பதற்காக அவள் தன்னைத்தானே மாய்த்துக் கொள்கிறாள். அவளுடைய சமாதிக்குச் செல்கிறான். அங்கு அவளின் அழகிய உடல் மிகக் கச்சிதமாகப் பாதுகாக்கப்பட்டிருப்பதைக் காண்கிறான். ஆவிகளோடு பேசும் அவலட்சணமான கிழவியை அணுகி அவள் மூலமாகப்பேசுவது ஒன்றுதான் அவளை அடைவதற்கான ஒரே வழி மந்திர சக்திகளுடன் கூடிய முதிய பெண்மணி என்பது ஒர் அசாதாரண மரபு. இங்கு பாக்னரிடமும், ஹென்றி ஜேம்ஸிடமும், டிக்கன்ஸ்னிடமும்மிஸ் ஹேவிசாவிடமும் புஷ்கினின் பெlenoi Spades இல்வரும் Countessஇடமும் திரும்பிச் செல்கிற அங்கிருந்துவெண்ணிற தேவதையை அடைகிற, ஓர் மரபோடு என்னை நான் இணைத்துக்கொண்டேன். நீங்கள் எழுத அமரும்போது ஹோமர் வரையான உங்களின் முழு மரபையும் நீங்கள் உங்கள் எலும்புகளில் உணர வேண்டும் என்று வெர்ஜினியா வுல்ப் சொல்வதோடு நான் பெரிதும் உடன்படுகிறேன்.ப

கேள்வி:

 பெரிதும் பேசப்படாத மூன்றாம் நெப்போலியனின் மெக்ஸிகோ தலையீட்டுக்கும், மேக்ஸிமிலியனுக்கும், கார்லோட்டாவுக்கும் நீங்கள் ஒளராவில் குரல் கொடுத்துள்ளிர்கள். 

ப்யூ 

கார்லோட்டா என்னை உழல வைக்கும் ஒரு விஷயம். அவள் என் ஆவிகளில் ஒன்று, வாழ்வின் மரணத்தைப் போலவே மரணத்தின் வாழ்வும் என்நாட்டில் மிக முக்கியமானது. ஆர்டெமியோ குரூஸையும் ஒளராவையும் நான் ஒரே சமயத்தில் எழுதினேன் என்பது ஆர்வமூட்டக் கூடிய விஷயம். அவை ஒன்றுக்கொன்று உறுதுணையாக அமைந்திருக்கின்றன. ஆர்டெமியோ குரூஸ் வாழ்வின் மரணத்தைப் பற்றியது, ஒளரா மரணத்தின் வாழ்வு பற்றியது.
உன்னதம் 76 ஜனவரி 1996
படிப்பகம்
________________

WWW padippakam.com
கேள்வி

ஔராவின் வரும் மந்திரக்காரி ஒரு குறிப்பிட்ட வகை மாதிரிப் பெண். உங்கள் படைப்பில் இடம்பெற்றிருக்கிற பிற பெண்படிமங்கள் எவை?

ப்யூ. 

கொஞ்சமும் புனிதமற்ற பெண்களையே சித்தரிப்பதாக நான் தாக்கப்படுகிறேன். என் கலாச்சாரம் பெண்கள் பற்றிக் கொண்டிருக்கிற எதிர்மறையான பார்வையே இதற்குக் காரணம். அராபி, ஸ்பானியார்டு, அஸ்டெக் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கலாச்சாரம் பெண்ணியத்துக்கு உகந்ததில்லை. உதாரணமாக, அஸ்டெக்-இல் ஆண் கடவுளர்கள் எல்லாம் ஒரே ஒரு விஷயத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்: காற்று, நீர், யுத்தம். ஆனால் பெண் கடவுளர்கள் இரட்டை மனப்போக்கினராக புனிதத்தையும் அசிங்கத்தையும், இரவையும் பகலையும், காதலையும் குரோதத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு, ஒரு உணர்வு நிலையிலிருந்து மற்றொன்றுக்கு அவர்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அஸ்டெக் உலகில் அதுதான் அவர்களின் பாவம். என் நாவல்களில் பெண்மையின் இருண்மை குறித்த வகைப்பாடுகள் இருக்கின்றன.

கேள்வி: 

ஆண்களால் உருவாக்கப்பட்ட பெண் படிமம் பற்றிய இந்தக் கருத்தினால் தன்னிச்சையாக திரைப்பட நடிகைகளோடு நீங்கள் மாயம் செய்கீறீர்கள்.. Holy place வரும் Clandia Navo இது எனக்கு நினைவுபடுத்துகிறது. 

ப்யூ. 

உண்மை தான். அவள் மிக மேலான ஓர் உதாரணம். மெக்ஸிகோவின் முகத்துக்கு மிகச்சிறந்த இரு குறியீடுகளான மரியா பெலிக், டோலரிங் டேரியோ என்ற இருபெண்கள் பற்றி கடந்தகோடையில் நான் ஒருநாடகம் எழுதினேன். ஹாலிவுட்டின் பழைய இசைப்படமான Flying Dawnto Rio வில் வரும் டேங்கோ நடன காட்சியிலிருந்து உருவான Orchids in the moon light. அதில் இரண்டு பெண்களும் தங்களை மரியா பெலிக்ஸ் ஆகவும் டோபரிஸ் டேரியோ ஆகவும் கருதிக்கொண்டு அப்படியே நடக்கவும் செய்கிறார்கள். அவர்கள் வெனிஸில் நாடுகடத்தப்பட்டவர்களாக வசிக்கிறார்கள் என்று
நீங்க்ளும் கருதிக் கொள்வீர்கள். ஆனால் நடிகைகளின் உண்மையான முகங்களும் அங்கு அரங்கில் காண்பிக்கப்படுகின்றன. அந்த ஆச்சரியகரமான முகங்கள் ஒருபோதும்முதுமை அடைவதில்லை. ஏனெனில் டியாகோரிவேரா ஒரு முறை அவர்களிடம் சொல்வது போல, உங்களுடையதைப் போன்ற அழகிய மண்டையோடுகள் ஒரு போதும் முதுமை அடைவதில்லை.


கேள்வி:
HolyPlaceஇல் மையகதாபாத்திரமைான ஆண்மீது பெண் நிகழ்த்தும் பாதிப்பை விளக்குகிறீர்கள். அம்மாவின் முன்பு, மிட்டோ தன்னுடைய அடையாளத்தை இழந்து விடுவதாகத் தோன்றுகிறது; கார்போட்டாவைப் போல அல்லது மந்திரக்காரியைப் போல அவள் ஒரு தீவிர பெண்வகை மாதிரியாகத் தெரிகிறது. 

ப்யூ 

இல்லை. ஏனெனில், கிளாடியா நெர்வோவிடம் தீவிரத்தன்மை ஏதுமிருப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக, மெக்ஸிக ஆண்கள் தான் அவளை தீவிரமானவளாக ஆக்குகிறார்கள். அவள் தன்னைத் தானே
[ವಡಾ - 77 ஜனவரி 1996 படிப்பகம்
________________

www.padippakam.com
தற்காத்துக் கொள்கிறாள். அவள்தான் மையப்பாத்திரம். பெண்கள் மையப்பாத்திரங்களாக இருப்பதை ஆண்கள் அனுமதிப்பதில்லை. தீவிரமான நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஏனெனில், மெக்ஸிகோ என்பது பெண்களை விபச்சாரிகளாகவோ கன்னியாஸ்திரிகளாகவோ இருக்கும்படி தண்டிக்கும் ஒரு நாடு. கார்டஸிக்கு உதவி தன் இனத்துக்குத் துரோகம் செய்த இந்தியப் பெண்ணான la Manche ஆகவோ, மதரீதியான, அரசியல் ரீதியான அதிகார அமைப்புகள் எழுப்பிய நிர்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டு தன் ஆளுமையையும் குரலையும் நெறித்துக் கொள்ளும் Sojuanalues dela Cruz என்ற கன்னியாஸ்திரிகளோ அல்லாமல் பல நிலைகள் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆண்கள் தங்களுக்கென்று ஒதுக்கி வைத்திருந்த பாத்திரத்தை அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். விஷயங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

கேள்வி:

 1938இல் எண்ணெய் பிரதேசங்களை தேசியமயமாக்கிய மெக்ஸிகோவுக்கும் இன்றைய மெக்ஸிகோவுக்கும் இடையே அது கடந்து வந்த பிரம்மாண்டமான மாற்றங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒட்டு மொத்தமான மதிப்பீட்டுக் கட்டுமானங்களும் உருமாறிய நிலையால் ஒரு சமூகம்நொறுங்கிக்காணப்படுகிறது என்று நான்கருதுகிறேன். கலாச்சாரம் பற்றிய உங்கள் புராணிகப்பார்வையில் இந்த வரலாற்றுயதார்த்தம் எவ்விதம் இடம் கொண்டிருக்கிறது:

ப்யூ

மெக்ஸிகோவில் நிகழ்ந்துகொண்டிருக்கும்மாற்றங்கள் எல்லாமே.இங்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது என்ற உண்மையையே சுட்டுக்காட்டுகின்றன. அதன் Mythsஒர்மரபு.அந்த Mytisசுவாசிக்கின்றன. அவை காப்பியங்களுக்கு, அவல இலக்கியங்களுக்கு இன்றைய வாழ்வின் Maladiama க்களுக்குக் கூட ஊட்டமளிக்கின்றன. சமூகம் நொறுங்கிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இன்றைய நிலை பற்றிய கணிப்பை மேற்கொள்ள வேண்டிய பயங்கர நிலையில் நாம் இருக்கிறோம். மெக்ஸிகோ உண்மையில் முழு லத்தின் அமெரிக்காவுமே வளர்ச்சி பற்றிய மாயத்தில் ஏமாந்து போயின. ஐக்கிய நாடுகள் பிரான்ஸ், கிரேட்பிரிட்டன் ஆகியவற்றைப் பின்பற்றினால் தான். நாம் வளமான பணக்கார ஸ்திரமான நிலையை அடைவோம் என்ற எண்ணம் அது நடக்கவில்லை, திடீரென நாம் 1980இல் இருக்கிறோம். உங்களுடைய உலகிலும் கூட வளர்ச்சி என்பதுமாயத்தோற்றம் தான் என நாங்கள் அறிகிறோம். எனவே, உண்மையிலேயே நாம் கொண்டிருக்கிற நம்முடைய அரசியல் வாழ்வு துண்டுதுண்டானது. தோல்வியை தழுவியது எங்கள் வரலா று:ஆன ால் எங்கள் கலாச்சார பாரம்பரியம்செழுமையானது. நம்முகங்களையும், நம் சொந்த கடந்த காலத்தையும் நமக்கு நாமே பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன் - நாம் பேசிக்கொண்டிருந்தகண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டியதருணம்.

கேள்வி:
 தகுதியைத் தீர்மானிப்பதற்கான ஒரே அளவுகோல் பணம் என்று நியூயார்க்கில் ஆகிவிட்டதைப் போல, மெக்ஸிகோ கலாச்சாரம் சரிந்திருக்கிறதா? லோகாயதம் மெக்ஸிகோ சமூகத்தில் நிலைபெற்றுவிட்டதா? | உன்னதம் 78 ஜனவரி 1996 |
படிப்பகம்
________________

www.padippakam.com
ப்யூ 

இல்லை; உங்கள் கலாச்சாரம் கிடந்த காலமற்றது. அது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலவாறான காலங்கள் ஒரே சமயத்தில் கூடி உலவும் கலாச்சாரம் கொண்டது மெக்ஸிகோ. உங்கள் பூர்ஷ்வாவை விடவும் மோசமான, ஒன்றுமே அறியாத, தான் அறிவிலியாக இருப்பது குறித்து பெருமைபடுகிற சகிக்க முடியாத பூர்ஷ்வாவை நாங்கள் மெக்ஸிகோவில் கொண்டிருக்கிறோம். மதத்தின் ஆன்மீக மதிப்புகளைக் கொண்டிருக்கிற பெரும்பாலான மக்களையும் நாங்கள் கொண்டிருக்கிறோம். கடந்த காலத்தில் நாங்கள் கடுமையாகத் தாக்கிய அந்த மதம் இப்போது தோன்றியிருக்கிறது. மெக்ஸிகோவின் சூழ்நிலையில் அது ஒரு கலாச்சாரமதிப்பாக நிலவுகிறது. நான் கத்தோலிக்க மதிப்புகளைச் சொல்லவில்லை. புனிதமான உணர்வினை, முயல்புனிதமானது என்பதான, எல்லாமே புனிதமானது என்பதான உணர்வினையே குறிப்பிடுகிறேன். தராகுமாரஸ் பிரதேசத்துக்கு நீங்கள் சென்றீர்களானால் லோகாயத விஷயங்கள் குறித்த அலறல்களை அவர்கள் லட்சியம் செய்வதில்லை என்பதைக் காணலாம். மூலங்களுக்கு மீண்டும் வடிவம் கொடுப்பதிலும், மீண்டும் மூலங்களில் தங்கள் இருப்பை புதுப்பித்துக் கொள்வதிலுமே அவர்கள் அக்கரைப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கடந்த காலத்தில் காண்கிறார்களே அன்றி எதிர்காலத்தில் அல்ல.

கேள்வி. 

ஆனால் The Hydra Head என்ற உங்கள் நாவலில் மெக்ஸிகோ, அதன் பறந்துபட்ட எண்ணெய் வளத்தினால் மையத்தை நோக்கி எறியப்படப் போகிறது என்று காண்பித்திருந்தீர்கள்.

ப்யூ 

ஆம், எண்ணெய் சமூகத்தைப் பாதிக்கப் போகிறது. Cistobal Nonato என்றொரு நாவலை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். புதிய உலகு கண்டுபிடிக்கப்பட்டதன் ஐநூறாம் ஆண்டு நிறைவு நாளான 1992, அக்டோபர் 12இல் அது நிகழ்கிறது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தான நிலவரத்தை நாம் கணிப்பில்கொள்ளும்போதுமெக்ஸிகோநகரமும், நாடும்,அப்போதுஎப்படி இருக்கும் என்று நான் வியக்கிறேன்.

கேள்வி. 

நீங்கள் எதை வெளிப்படுத்த இருக்கிறீர்கள்? உங்களுடைய எல்லா ரகசியங்களையும் வெளிப்படுத்தவேண்டாம். கோடி காட்டினால் போதும்.

ப்யூ 

ஓ, அது ஒரு நிழலான வெளிப்பாடுதான். அது ஒரு அறிவியல் புனைவு நாவல் அல்ல. அதில் எலெக்ட்ரானிக் நுட்பங்கள் ஏதுமில்லை. பிறக்காத ஒரு குழந்தையின் மூலம் கதை சொல்லப்படுகிறது. தான் வந்து விழப் போகிற உலகம் பற்றி அது கேள்விப்படுபவற்றின் மூலம் அதனிடம் உருக்கொள்ளும் மனப்பதிவு தான் கதை. மெக்ஸிகோ நகரின் வாழ்வு அநேகமாக சிதைந்துவிட்டது; ஏனெனில் எல்லாவித பெளதீகப் பிரச்சனைகளோடும் கூடிய மூன்று கோடி மக்கள் கொண்ட நகரத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது - வானில் மிக உயர்ந்த இடத்தில் வசிப்பது குளிர், மலைகளால் சூழ்ந்திருக்க அது பனிமூட்டத்தை போர்த்தியிருப்பது, தொலை தூரத்திலிருந்து தண்ணிர் கொண்டுவர வேண்டியிருப்பது, கழிவுகளை வெளியேற்ற வேண்டிய நிலை. மலத்தால் அது மூழ்கியிருக்கிறது. மெக்ஸிகோவுக்கு நேர்ந்தது இதுதான்.
| உன்னதம் - 79 ஜனவரி 1996 | படிப்பகம்
________________

www.padippakam.com
கேள்வி: 
Terra Nostra பற்றி என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் எதிர்காலத்தில்-1999 ஜூன்-டிசம்பருக்கிடையே நிகழ்கிறது. அந்த நாவலிலும் உங்கள் முதனிலை ஈடுபாடு கடந்த காலம் என்பதென்னவோ உண்மைதான். உங்கள் நோக்கமும் பரந்துபட்டதாக இருக்கிறது.

ப்யூ 

அது அதிகப்படியான கேலி நாவல். அதன் நோக்கமும் மிகவும் ஒருமுனைப்படுத்தப்பட்டது. இந்த நாவலில் தாயின் கருப்பையில் கதை சொல்லி இருப்பதென்பது, இதன் எல்லைகளை கடுமையாகச் சுருக்கிவிட்டது. அவனுக்குக் கிடைக்கிற தகவல்களுக்கு ஒர் எல்லை இருக்கிறது. அவன் கேட்பதும் அவனுடைய உயிரணு அவனுக்குச் சொல்வதும் தான். TeாaNosta போல நான் இதில் எதுவும் செய்ய விரும்பவில்லை.அதுமெடிட்டெர்ரேனிய கலாச்சாரத்தினூடான உல்லாசப்பயணம். நமக்குக் கிடைத்த எல்லா உலகத்தினூடானது. நம் சமூகத்தில் நிலவுகிற படைப்பு சக்தியினூடானது.

கேள்வி:

 Cristobal Nonato பற்றிய ஒரு சுருக்கமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தீர்கள். 1941 இல் நீங்கள் வாஷிங்டனை விட்டுவந்தபின்பு, ஒரு சிறுவனாக நீங்கள் எழுதிய புத்தகத்தைப் பற்றி நான் கேள்வி மட்டுமே பட்டிருக்கிறேன். அந்தப் பிரதி பற்றிப் பேசுவதில் உங்களுக்கொன்றும் ஆட்சேபணை இருக்காது என்று நினைக்கிறேன். அந்தப் புத்தகம் உங்கள் நினைவில் இருக்கிறதா? -
ப்யூ

 அது எனிக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. வாஷிங்டனில்வாழ்ந்ததன் மூலம் ஆங்கிலத்தில் நான் எப்போதுமே சிக்கிக் கொண்டிருந்தேன். எனவே, நாங்கள் சிலிக்குக் குடிபெயர்ந்தபோது ஸ்பானிஸில் நான் மீண்டு கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது எனக்கு வயது பதினொன்று. சிலி அப்போது சிறந்த கவிஞர்களின் நாடாக இருந்தது. குறிப்பாக கேப்ரியலா மிஸ்ட்ரல் மற்றும் பாப்லோ நெருடா, லத்தின் அமெரிக்காவிலேயே அதிகமும் அரசியல் மயமான நாடும் அதுதான். நான் ஒர் ஆங்கிலேயர் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். ஏனெனில் சிலியிலும் அர்ஜெண்டெனாவிலும் ஆங்கிலேயர் பள்ளிகள் சிறந்தவை. பிரகாசமான ஆடைகளை நேர்த்தியாக உடுத்தியிருப்பேன்; பள்ளியின் டை மற்றும் சிறிய சாம்பல்வண்ணத்தொப்பி, ஒவ்வொருமுறைMongomeryயுத்தத்தில்ஜெயிக்கும் போதும் நாங்கள் காற்றில் எங்கள் தொப்பியை எறிந்து, ஹிப், ஹிப், ஹிர்ரா என்றுகத்தவேண்டும். பள்ளியில் அரும்பும் எழுத்தாளர்கள் பலர் இருந்தனர். என்னுடைய மிகச்சிறந்த நண்பனான இப்போது கேன்ட்-இன் மிகச் சிறந்த அறிவாளியாக இருக்கிற ராபர்டோ டோரெட்டியும் நானும் இணைந்து அந்த நாவலை எழுதினோம். எங்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழுந்தன. ஏனெனில் ஒரு மெக்ஸிகனும் சிலியனும் சேர்ந்து எழுதும் நாவல் மெர்சிலெஸில் ஆரம்பிக்கிறது. நாவல்கள் மெர்சிலெஸில் தான் ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் அங்கு தான் 'Count of monie Cristo- (அலெக்ஸாண்டர் டுமாஸின் பிரசித்த பெற்ற புனை கதை காட்சியளித்தார். மக்களை மெக்ஸிகனில் பேசவைப்பதா? அல்லது சிலியனில் பேசவைப்பதா என்ற பிரச்சனை ஏற்பட்டது. இதுடுமாஸிக்கு ஏற்பட்டிருக்காது. நாங்கள் சமரசம் செய்து கொண்டு அவர்களை Andalusionsஇல் பேசவைத்தோம். மெர்சிலெஸிலிருந்து நாவல் ஹைய்திக்கு நகர்கிறது. நாங்கள் iane Eyre
| உன்னதம் 80 ஜனவரி 1996 படிப்பகம்
________________

WWW padippakam.com
ாத்தோ-இதில் இதிரை Eொல்ை இருந்து எங்களைக் கவர்ந்தது மலையின் மீது ஒரு இருண்ட கோட்டையை நாங்கள் சேர்த்துக் கொண்டோம். நாவல் அத்தகைய மூட்டமான சுற்றுச் சூழலில் அங்கு நிகழ்கிறது. பைத்தியக்காரப் பெண்கள் கட்டிலோடு பிணைக்கப்பட்டிருக்க, இளம் எஜமானர்கள் வெள்ளையருக்கும் நீக்ரோவுக்கும் பிறந்தபெண்களோடுகாதல்புரிகின்றனர். அது 400 பக்கங்கள் வரை செல்கிறது.

கேள்வி: 

அந்த தடிமனான கொதிக் புத்தகத்தை எவராவது எப்போதாவது படித்தார்களா?

ப்யூ.

 அப்படிச் சொல்ல முடியாது. சுவரோவியக் கலைஞனான டேவிட் அல்பரோ ளமிக்குயுரோஸிடம் நான் சத்தமாக வாசித்துக் காண்பித்தேன். அவர் என்னுடைய பலியாள் டிராட்ஸ்கியை கொலை செய்யும் முயற்சியில் அவர் சம்மந்தப்பட்டிருந்ததால் அவர் மெக்ஸிகோவுக்குதப்பி ஒடவேண்டிய நிலையில் இருந்தார். அவர் சிலிக்குச் சென்று சிலன் என்ற சிறிய நகரில் அமர்க்களமான சுவரோவியம் ஒன்றை வரைந்திருந்தார். அந்நகரில் இருந்த பள்ளிக் கூடம் பூகம்பத்தில் அழிந்துவிட்டிருந்ததால் அந்நகருக்குமெக்ஸிகோ ஒரு பள்ளி கூடத்தை அன்பளிப்பாகத் தந்தது. தூதரகத்தில் அலுவல் அதிகாரியாக என் தந்தை பணியாற்றியதாலும் சிக்கியுரோஸிடம் போதுமான பணம் இல்லாததாலும் ஏதோ ஒரு வகையில் அவர் தூதரகத்தைச் சார்ந்திருந்ததால் நாங்கள் அவரை அங்கு அடிக்கடி அழைத்தோம். அவர் ஒரு வசீகரமான மனிதர். எனவே இரவு உணவுக்குப் பின் அவரை அமரச்செய்து என் நாவலைகேட்கும்படி செய்தேன். அவருக்கு வேறு வழி இல்லை. அவர் தூங்கி வழிந்தபடி இருந்தார். அவர் ஒரு குட்டி துரக்கம் போட்டுவிட்டதென்னவோ உண்மைதான்.

கேள்வி: 

ஆக நீங்கள் ஆங்கில நாவலையும் கொதிக் நாவலையும் பிணைத்தீர்கள். அதாவது டுமாலையும் சல்காரியையும்.

 ப்யூ. 

ஆம். அது மிகவும் நாடகப்பாங்கானது கொஞ்சமும் காட்சி பூர்வமானதல்ல, அது மிக மூட்டமானதாகவும், பிராண்டே தன்மை கொண்டதாகவும்இருப்பதாக நாங்கள் நினைத்தோம். சார்லோட்டும்எமிலி பிராண்டேயும் எங்களை வெகுவாகப் பாதித்திருந்தார்கள். சிலியில் எங்கள் குழுவிலிருந்த ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு இருந்தது. எங்கள் வீழ்ச்சியின் சிகரம் பிரான் வெல் பிராண்டே நல்ல கலைஞர்களாக இருக்க நீங்கள் பிராண்டேக்களை போல் இருக்க வேண்டும்.

கேள்வி:

 அந்த பரிசுத்தவாதிகள் தான் வீழ்ச்சியின் சிகரமா? ப்யூ நாங்கள் அப்படித்தான் நினைக்கிறோம். 1942இல் சிலியில் 13 வயதுச் சிறுவர்களுக்கு பிராண்டேக்கள் எப்படித் தோன்றியிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். - கேள்வி பிரசுரத்துக்கு முன்பு நீங்கள் அதிகமாக எழுதியிருந்தீர்களா? ப்யூ ஆம் நான் மெக்ஸிகோ நகருக்கு திரும்பிய பிறகு, என் வாழ்வில் முதன்
| உன்னதம் 81 ವಾದ 1996] படிப்பகம்
________________

www.padippakam.com
முறையாக நான் கத்தோலிக்க பள்ளியில் சேர்க்கப்பட்டேன். நாங்கள் சிலியை விட்டுக்கிளம்பி பியூனோஸ் ஏர்ஸ்க்குப் போனோம். அங்குள்ள பள்ளிகளில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அது பெரோன் காலத்தின் ஆரம்பம் கல்வியின் மீது ஏதேச்சதிகாரத்தின் செல்வாக்கு சகிக்க முடியாததாக இருந்தது. எனவே, மெக்ஸிகோ போக வேண்டுமென வற்புறுத்தினேன். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நான் அங்கு சென்றதும் கத்தோலிக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அந்தப் பள்ளி என்னை எழுத்தாளனாக ஆக்கியது. ஏனெனில், அது எனக்கு பாவம் பற்றிச் சொல்லிக் கொடுத்தது. நீங்கள் செய்யும் எல்லாமே பாவம் நிறைய செயல்கள் பாவமாக இருந்தபடியால், அதன் காரணமாக அவை மகிழ்ச்சியளிக்கக் கூடியனவாக இருந்ததால் அவை என்னை எழுதத் துாண்டின. விஷயங்கள் தடை செய்யப்படுமெனில் ஒருவன் அது பற்றி எழுத வேண்டும் விஷயங்கள் விலக்கப்படுமெனில் அவை ருசிகரமானதாக இருக்கும்
.
கேள்வி

 பாவம் பற்றிய கருத்து எழுதுவதற்கான உந்துதலாக அமைவது இன்னமும் உங்களிடம் தங்கியிருக்கிறதா?

ப்யூ 

ஆம். Terra Nostra வை மெக்ஸிகோவில் அந்தக் கத்தோலிக்கப் பள்ளியிலேயே எழுதத் தொடங்கிவிட்டதாகத் தான் கருதுகிறேன். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான புனிதமான ஆத்மார்த்த காதல் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பசி மிகுந்த காமம் விருத்தியடையும் என செயின்ட் ஜான் கிரிஷ்லோஸ்டாம் சொல்கிறார். Terra Nostraவின் அடிப்படையான அம்சம் இது அங்கு மக்கள் சதையால் சந்தித்துக் கொள்வதே இல்லை. அவர்களுக்காக மற்றவர்கள் உடலுறவு கொள்கிறார்கள். கத்தோலிக்க பள்ளியில் நான் நிறையவே கற்றுக்கொண்டேன்.

கேள்வி: 

மெக்ஸிகோ நகரில் நீங்கள் எவ்வகையான கத்தோலிஸத்தைக் கொண்டிருக்கிறீர்கள்?

ப்யூ 

அது மிகவும் அரசியல் ரீதியான கத்தோலிஸம், மெக்ஸிக வரலாறு குறித்தபத்தாம் பசவித்தனமான விளக்கத்தோடு இணைந்துசெல்வது. அங்கு ஒரு ஆசிரியர் இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்கும் போது அவர் ஒரு லில்லி மலரோடு வருவார் நடனமாடச் செல்வதற்கு முன் வரை இது ஒரு பரிசுத்தமான கத்தோலிக்க இளைஞன் என்று அவர் சொல்வார். பின் அதைத் தரையில் எறிந்துவிட்டுக் காலால் மிதிப்பார். அதன் பிறகு குலைந்து போன அந்த லில்லியை எடுத்துக் கொண்டு நடனத்துக்குப் போய் அங்கு ஒரு பெண்னை முத்தமிட்டதற்குப்பின்னான கத்தோலிக் இது என்று சொல்வார். அதன் பிறகு குப்பைக் கூடையில் அதை எறிவார். மெக்ஸிமிலியனுக்கும், புரட்சியைக் கண்மூடித்தனமாகக் கையாண்ட சர்வாதிகாரியான போர்பிளியே டயஸிக்கும் சட்டம் - ஒழுங்கு குறித்த எல்லாப் படிமங்களுக்கும் அனுசரணையாக அவர்கள் மெக்ஸிக வரலாற்றை மறுபடியும் எழுதினார்கள். எங்கள் நாட்டில் தாராளமயத்தின் படிமமாகத் திகழ்ந்த மெக்ஸிகோவின் ஜனாதிபதியாக இருந்த இந்தியரான பெனிடோ ஜிரெஷ்-இன் பிறந்தநாளை நான் துணிச்சலோடு கொண்டாடியதற்காக பள்ளியிலிருந்து ஒரு மாதத்துக்கு வெளியேற்றப்பட்டேன்.

கேள்வி: 

நீங்கள் இப்ப எழுதத்தொடங்கினர்கள் என்பதைப் பார்த்தோம்
| உன்னதம் 32 ஜனவரி 1996 |
படிப்பகம்
________________

WWW padippakam.com
எழுத்தை தொழில் முறையாகக் கொண்ட போது என்ன எழுதுவதென்று நீங்கள் எப்படி முடிவெடுத்தீர்கள்?

ப்யூ.

 நான் வாழ்ந்த மெக்ஸிகோவை நாவலாக எழுதுவதென்று முடிவு செய்தேன். சில குறிப்பிட்ட இலக்கிய வகைகளுக்குள் மெக்ஸிக நாவல் அடைபட்டுக் கிடந்தது:இந்திய நாவல்கள், புரட்சிகுறித்த நாவல்கள் மற்றும் பாட்டாளி வர்க்க நாவல்கள் இருந்தன. என்னைப் பொருத்தவரை அவை மெக்ஸிக புனை கதையின் சாத்தியங்களைக் கட்டுப்படுத்தும் இடைக்காலச் சுவர்களைப் போல் தெரிந்தன. அந்தக் கட்டுப்பாடுகளின் மீது நம்பிக்கையிழக்கச் செய்வதாக நான் வாழ்ந்த மெக்ஸிகோ நகர் இருந்தது. ஏனெனில் ஓர் இடைக்கால நகரத்தைப் போல திடீரென தனது சுவர்களையும், தடுப்புப் பாலங்களையும் இழந்து, ஒரு திருவிழாவைப் போல தனக்கு வெளியேதன்னை நீட்டிக்கொண்டிருந்தது. யுத்தத்தின் காரணமாக, ஐரோப்பியபிரபுக்கள் மெக்ஸிகோவில் இழையோடியிருந்தார்கள், வளர்ந்து வரும் பூர்ஷ்வாக்கள். பெண்களின் வாசனையும் மீன் வாசனையும் இரண்டரக் கலந்த மீன்மார்கெட்டின் அருகே நம்பமுடியாத அளவு Bordelios நியான் வெளிச்சத்தைக் கொண்டிருந்தது. சல்வடார் எலிஸாண்டோஅங்கு போய், விபச்சாரிகளோடு காதல் புரிகையில் அவர்களது அக்குளை வெட்டுவார். அப்போதுதான் ரத்தப் பெருக்கில் அவர் காதல்புரிய முடியும். பிறகு இரவு முழுவதும் மெக்ஸிக இசை, மெக்ஸிகோ நகரம் நாற்பதுகளின் பிற்பகுதியிலும் ஐம்பதுகளிலும் தனது பரோக் சாராம்சத்தைக் கண்டடைந்தது. தடைகளை உடைத்தெறிந்து அது பெருக்கெடுத்தது. பிரமிப்பூட்டும் கேபரே நடனங்கள் என் நினைவிலிருக்கிறது. அது தான் Where the Air is clear இன் ஆதாரம். மெக்ஸிவினுடைய பிந்திய புரட்சிகர வாழ்வின் மையப் பாத்திரம், மெக்ஸிகோ நகரம். ஒரு நாவலும் அது பற்றி எதுவும் பேசியிருக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

கேள்வி: 

உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் எழுத்தாளர்களாகவோ கலைஞர்களாகவோ இருக்கிறார்களா?

ப்யூ. 

குறிப்பிடும்படி இல்லை. என் அப்பா உயர் அரசு அதிகாரி என் அம்மா இல்லத்தரசி என் அப்பாவின் சகோதரர் ஒரு சுவையான கவிஞர். ஆனால் 20 வயதில் டைபாய்டில் இறந்துவிட்டார். என் பாட்டி வெரா குரூவில் Grandma Moses மாதிரியான ஒரு கவி. அவர் வறண்ட பிரதேசங்கள், கடல், ஆறுகள் பற்றி எழுதியிருக்கிறார். நன்கு அறியப்பட்டவர்.

 கேள்வி: 

உங்கள் சித்தப்ப்ா அல்லது பாட்டி பற்றி ஏதேனும் Myths இருந்து அது உங்கள் இலக்கியத்துக்கான முன் மாதிரியை உருவாக்கியிருக்கிறதா?

ப்யூ:

Coltide Velezde fuentesஎன்ற முப்பாட்டி தான் ஒரே Myth வெரா குருவிக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் அவர் பயணம் செய்தபோது கொள்ளைக்காரர்களால் அவர் விரல்கள் வெட்டப்பட்டன. அவர் தன் மோதிரங்களைக் கழட்டாததால் அவர்கள் விரல்களை வெட்டி எடுத்துவிட்டனர். என் நினைவிலிருக்கும் ஒரே Myth அவர் தான்.
கேள்வி. நீங்கள் எழுத்தாளராக முடிவு செய்ததை, உங்கள் வாழ்வுக்கான சம்பாத்தியத்துக்கு எழுத்தைத் தேர்வு செய்ததை உங்கள் வீட்டில் எப்படி
| உன்னதம் - - 83 ஜனவரி 1996 || படிப்பகம்
________________

www.padippakam.com
எடுத்துக்கொண்டனர்: ப்யூ என் பெற்றோர்கள் என்னைச் சட்டம் படிக்கச் சொன்னார்கள். ஏனெனில் மெக்ஸிகோவில் எழுத்தை நம்பி நான் வாழ்ந்தால் பசியால் செத்துவிடுவேன் என்றார்கள். சிறந்த கலைஞரும் மனிதாபியுமான அல்போன்ஸோ ரைய்ஸையும் பார்த்தேன். மெக்ஸிகோ ஒரு சம்பிரதாயமான நாடு என்றும், எனக்கென்று ஒரு அந்தஸ்து இல்லாவிட்டால் மக்களுக்கு என்னை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது தெரியாதென்றும் சொன்னார். கைப்பிடி இல்லாத ஒரு தேநீர் கோப்பை போல நீ ஆகிவிடுவாய் என்றார். நான் சட்டம் படிக்கத் தொடங்கியதுமே அது படிப்பதில் எனக்கு வருத்தமேதும் இல்லாமல் போய்விட்டது. முதலில் நான் ஜெனிவாவுக்கு - என் முதல் ஐரோப்பிய விஜயம் சென்றேன். அங்கு நான்கட்டுப்பாட்டைக்கற்றுக்கொண்டேன். மெக்ஸிகோ திரும்பியபோது, ஸ்பானிஸ் உள்நாட்டுப் போரின் போது ஸ்பெய்னைத் தஞ்சமடைந்த மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் என்னால் படிக்க முடிந்தது. செவில் பல்கலை கழகத்தின் முன்னாள் தலைவரான மேனுவேல் பெட்ரோஸோ, குற்றவியல் சட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால் நான் Crime and Punishment படித்தாக வேண்டும் என்றும் வணிகவியல் சட்டத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால் பால் சாக்கை படிக்க வேண்டும் என்றும், சாரமற்ற சட்டப்புத்தகங்களை மறந்துவிடவேண்டும் என்றும் என்னிடம் சொன்னார். அவர் சொன்னது சரி. என் வாழ்வில் சமூகத்துக்கும் கதைக்கும் இடையேயான பரிமாணங்களில் ஒர் இணைப்பை நான் உடனடியாகக் கண்டடைந்தேன். நான் ஒரு கார்பரேட் வக்கீலாக ஆகியிருந்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக Where the Air is clear எழுதினேன். அப்போது எனக்கு அபரிமிதமான சக்தி இருந்தது. சட்டப் பள்ளியை முடித்ததும், மெக்ஸிகோ பல்கலை கழகத்தில் பணிபுரிந்து கொண்டு, ஒவ்வொரு இரவும் குடித்துவிட்டு மாம்போ நடனம் ஆடியபடி நான் அந்த நாவலை நான்கு வருடங்களில் எழுதி முடித்தேன். அற்புதமான காலம். அதோடு சரி. நீங்கள் சக்தியை இழந்து உத்தியைப் பெறுகிறீர்கள்.

கேள்வி:

 உங்கள் இரண்டாவது நாவல் முதல் நாவலைத் தொடர்ந்து வந்து விட்டது. 

ப்யூ. 

உண்மையில் என் இரண்டாவது நாவல் தான் முதலாவது. The Good conscienceஐநான் ஏற்கனவே எழுதி முடித்திருந்தேன். அது மிகவும் சம்பிரதாயமான புத்தகம். Where the Air is clearஇன் வெள்ளம் அதை அடித்துக்கொண்டு போய்விட்டது. எனக்கு அந்த நாவல் ஒரு புத்தகத்தை விடவும்கூடுதல்அர்த்தமுடையது.அது என்வாழ்க்கை. அதுமிகுந்தசத்தத்தை எழுப்பியது. சொர்க்கத்தின் அளவுக்குப் பாராட்டப்பட்டது; நரகத்தின் அளவுக்கு கண்டிக்கப்பட்டது. கழிவறையில் தண்ணீர் அடித்துத் தள்ளிவிடத்தான் அது லாயக்கு என்று ஒரு விமர்சகர் சொன்னார். Glucos(35m spañór 'convent of the sacred Heart or 15 alug, glossrooir வாசிப்பதற்குத் தேவைப்படுகிற மிகுந்தஏமாற்றமளிக்கும் தன்மையை நான் கண்டடைந்திருக்கிறேன். கேள்வி. ஆக, தானாக ஒரு வடிவத்தை அமைத்துக் கொண்டுவிட்ட ஒர் படைப்புலகை பாக்னேரிய அல்லது பால்சாக்கியதைப் போன்ற ஓர் உலகை
| உன்னதம் 84 ஜனவரி 1996 படிப்பகம்
________________

WWW padippakam.com
நாம் கொண்டிருக்கிறோம்.இது இன்னமும் உயிர்ப்போடு இருகிறதா?

ப்யூ 

நான் அதனிடமிருந்து ஒரு போதும் விலகியதில்லை. Burt Water இன் முன்னுரையில் மெக்ஸிகோ நகரிலுள்ள கற்பனையான அடுக்கு மாடிவீடு பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்: Artemic Cruz அக் கட்டடத்தோடு இணைந்த ஷெட்டில் சிறப்பாக வாழ்கிறாள். மந்திரக்காரியான ஒளரா அதன் அடித்தளப் பகுதியில் வாழ்கிறாள். அதற்கிடையேயான பகுதிகளில் என்னுடைய மற்ற எல்லாப் பாத்திரங்களும் இருக்கின்றன. மாயத் தன்மையான யதார்த்தத்தின் பதட்டத்தில் நான் எப்போதுமே சிக்கிக் கொண்டு விடுகிறேன்; ஏனெனில் இந்த நாவல்களின் யதார்த்தம் மாயத்தன்மையானவை. செர்வாண்டிஸின் ஒரு நல்ல வாசகன் என்று என்னை நான் கருதுகிறேன். அவர்தான் யதார்த்த நிலை குறித்த சந்தேகங்களை வடிவமைத்து யதார்த்தத்தை துவங்கி வைத்தார். என் எழுத்தின் ஒரு முனை மாய யதார்த்தம் என்றால் மற்றொரு முனை பிரமாண்டபரிமாணம்-இது மிக யதார்த்தமானது; ஏனெனில் அது மனதில் நிகழ்கிறது. மக்கள் பால்சாக்கை சமூக யதார்த்த எழுத்தாளர் என்றே நினைக்கிறார்கள்; அவரின் தோற்றங்கள் தெரிவிப்பதை விடவும் பால்சாக் தரும் பாடம் எனக்கு மிகவும் ஆழமானது.

கேள்வி:

 உங்கள் எழுத்தின் தொடர்ச்சி பற்றி நீங்கள் மிகவும் விழிப்போடு இருக்கிறீர்கள்.

ப்யூ. 

ஒரு வகையில் என் நாவல்கள் ஒரு புத்தகத்தின் பல பகுதிகளாக @05ášárspor. 'Where The Aris Clear QupérôGärr officir affis); The Death of Artemio Cruz- நகரில் வசிக்கிற ஒரு தனி மனிதனை முன் வைத்தது. AChange of Skin-அந்தநகரம்,அதன் சமூகம் உலகை எதிர்கொள்வதும் அதுநாகரிகத்தின் ஒரு பகுதி என்ற உண்மையோடு பிடிமானம் கொள்வதும் அதற்கு வெளியே ஓர் உலகு இருப்பதும் அது மெக்ஸிகோவிற்குள் தானாக தலையிடுவதும் என்பதாக அமைந்தது. மறுதலிக்கப்பட்ட தனித்துவம்மிக்க ஒர் கூட்டுமனம் இந்தப் புத்தகங்களில் அமைந்திருக்கிறது. ஆனால் எந்த ஒரு பாத்திரமும் தனியாகப் பேசுவதில்லை; ஏனெனில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பாத்திரத்தோடும் ஒரு ஆவி இருப்பதாக நான் கருதுகிறேன். DistantRelationஇல் இவை எல்லாம் ஓர் உச்சத்தை எட்டியிருக்கிறது. அது இலக்கிய ஆவி பற்றிய ஆவிக் கதை. புனைகதைப் படைப்பாக இந்த உலகு பற்றியது; வாசகரிடம் தருவதற்குப் பயப்படுகிற வகையில் அபாயகரமான புனைகதை. நான் பெரிதும் கவனத்தில் கொள்கிற நாவல். Distant Relations என்னை ஒர் எழுத்தாளனாகவும் என் இலக்கிய ஈடுபாடுகுறித்தும் அதிகம் பேசுகிறநாவல். அது எழுத்து பற்றியது. எழுத்து பற்றி நான் எழுதிய ஒரே நாவல். ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்திடம் சொன்ன கதையை அது என்னிடம் - ப்யூண்டஸிடம் - சொல்கிறது. ஒரு கதை முழுவதுமாகச் சொல்லி முடிக்கப்படும்வரை எனக்கு திருப்திஏற்படுவதில்லை. எனக்குமுழுக்கதையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அது எனக்குக் கிடைத்ததும் வாசகர்களாகிய உங்களுக்கு-சாத்தானிடமிருந்து கிடைத்த ஒருபரிசு போல - அதை நான் தந்து விட வேண்டும். அதன் தலைப்பு உணர்த்துவது போல, அது தூரத்து உறவினர்கள் பற்றிய கதை. புதிய உலகிலும் பழைய உலகிலும்
DEಿವಾಹ - 85 . ஜனவரி 1996
סחהדחה מה
________________

www.padippakam.com

வசிக்கிற-இரு-குடுஇைற்துை-இவர்களின்_முழுதையுைம் சொல்லிவிட முடியாது; ஏனெனில், முழுக்கதையையும் ஒரு பிரதி உட்கொண்டிருக்க முடியாது. கரீபிய தேசத்து மீதான பிரான்ஸின் செல்வாக்கையும் டantreamont அல்லது Heredia போன்ற லத்தீன் அமெரிக்காவைச் சார்ந்த பிரெஞ்ச் எழுத்தாளர்களின் ஆவிகளையும் அது முன் வைக்கிறது. ஒரு கதை முழுவதுமாக ஒரு போதும் எப்படி சொல்லப்படாமலேயே இருக்கிறது. ஒருபிரதி எப்போதுமே முழுவதுமாக எப்படி காலிசெய்யப்படாமலேயே இருக்கிறது என்பதாக புனைகதைகளின் மூலவேர்கள் பற்றியும் அது பேசுகிறது.

கேள்வி? 

Terra Nostral Duistant Relations 3)Usor@Guo e pov3auri Lupf]u amaugu முதலாவது, ஸ்பானிய அமெரிக்க கலாச்சாரத்தினை மெடிட்டெர்ரேனிய மற்றும் ஸ்பானிய மூலங்களிலிருந்து வரைந்து காட்டுகிறது. இரண்டாவது, இலக்கியப் பிரதியின் மூலவேர் பற்றியும், ஒட்டு மொத்த வரலாற்றினை உள்வாங்கவும் வெளிப்படுத்தவுமான உங்கள் வியர்த்த முயற்சியினையும்விளக்குகிறது. ஏதோ ஒருமுழுமையை வெளிப்படுத்த இரண்டுநாவல்களிலும் காணப்படும் உங்கள் விருப்பமானது, லத்தீன் அமெரிக்க நாவலின் எழுச்சி என்றறியப்பட்ட அறுபதுகளில் நாவலாசிரியர்களின் பொதுவான அக்கரையைவெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. நீங்கள் இந்த எழுச்சியை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்: 

ப்யூ.

 கார்சியோ மார்குவஸ் சொல்வது போல் சொல்லலாமென்று நினைக்கிறேன். லத்தீன் அமெரிக்காவில் நாங்கள் ஒருநாவல் எழுதுகிறோம். கார்சியே மார்குவளியின் கொலம்பிய அத்தியாய-ம்:கார்பென்டியரின் கியூபா அத்தியாயம் ஜீலியோ கொர்தசாரின் அர்ஜெண்டைனா அத்தியாயம். இவ்வாறாக அது அமைகிறது. நாவல் என்பது ஒரு சமீபத்திய வளர்ச்சியாக அமைந்த ஒரு கண்டத்தில் நாங்கள் வாழ்கிறோம். அங்கு பல விஷயங்கள் சொல்லப்படாமல் விடுபட்டிருக்கின்றன. தனி மனிதர்கள் பற்றிப் பேசுவது கடினம். ஏனெனில்ஒர் பின்னமான கலவை நிகழ்ந்துவிட்டது:Atemocruzஇல் ason unráðriðgeir One Hundred Years of Solitudeg,69 (33rréârgyalsTrrãair. Terra Nostraastais one Hundred Years of Solitude g)60(5ßgilbøj(BarGrrr@görı IrrgårG 196ör Three Sad Tigers®)6605 figh Gorts gamyn for Hopscotech@6605:55 lb பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். லத்தீன் அமெரிக்காவின் எழுத்துத் தன்மையை அதன் தொடர்ந்த பிரதிப் பிணைப்பு உணர்த்துவதாக இருக்கிறது.

கேள்வி. 
ஆக, ஒரு மெக்ஸிக எழுத்தாளராக தனித்துவிடப்பட்டிருப்பதாக நீங்கள் ஒரு போதும் உணர்வதில்லை. அல்லது. உங்கள் படைப்பு மெக்ஸிகர்களுக்கு மட்டும் என்று நீங்கள் நினைப்பதில்லை இல்லையா? 

ப்யூ. 

எழுத்து வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே நான் பிரக்ஞை பூர்வமாக, மெக்ஸிக இலக்கியம் அல்லது பெருவிய இலக்கியம் அல்லது சிலிய இலக்கியம் என்று பேசுவது அபத்தம் என்பதை உணர்ந்திருந்தேன். அதாவது நாம் ஏதாவது அர்த்தம் கொள்வதாக உலகளாவிய தன்மை கொள்வதாக இருந்தால் அது ஸ்பானிஸ் என்று நாம் அழைக்கும் கந்தலான ஆண்டிகளின் மொழியினது பரந்துபட்ட எல்லையில் தான் இருக்க வேண்டும். | உன்னதம் 86 - ஜனவரி 1996
படிப்பகம்
________________

www.padippakam.com
கேள்வி: 

மெக்ஸிகோ நகரிலிருந்து பியூனஸ் யேர்ஸ் வரை வாசகர்கள் விரிந்திருப்பதை அறுபதுகளினூடாகத் தங்களால் கற்பனை செய்யமுடிந்தது என சில ஸ்பானிய - அமெரிக்க எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
 
ப்யூ 

என்னைப் பொருத்தவரை அப்படி நிகழவில்லை. ஐம்பதுகளில் Revista Mexicana Literatura என்ற அருமையான இதழை நான் தோற்றுவித்து நடத்தினேன். 1955இல் ஜீலியோ கொர்தஸ்ாரின் ஆரம்ப காலச் சிறுகதைகளை சிந்தியோவிட்டியர்,ஜோஸ்லெஸ்ாமாலிமா போன்ற க்யூபா கவிஞர்களை, ஜார்ஜ் லூயிபோர்ஹேயும் அடால்ப்பியோ சஸாரஸும் இணைந்து எழுதிய ஒரு சிறுகதையைக் கூட நாங்கள் பிரசுரித்தோம். ஐம்பதுகளின் மத்தியில் மரபு ரீதியான தடைகள் நொறுங்கி விழுந்துவிட்டதை நான் உணர்ந்தேன். அதே சமயம் வாசகர் எண்ணிக்கை வளர்ச்சி அடைந்தது. அதுபோலவே அறிவார்த்தஏன் லோகயதரிதியாகவும் எழுச்சிக்கான அடியோட்டம் அங்கிருந்து பதிப்பகங்களும், விநியோகஸ்தர்களும், ஒரு மொழி இனத்தைச் சார்ந்தவர்கள் நாம் என்ற படைப்பாளிகளின் ஞானமும் அங்கிருந்தன
.
கேள்வி

 எழுத்தாளர்களுக்கிடையே இன உணர்வு மேலெழ அறுபதுகள் மிக சாதகமாக இருந்தது ஏன்?

 ப்யூ 

க்யூபா புரட்சி நிச்சயமாக ஓர் சந்திப்புக்கான மையத்தை உருவாக்கிக் கொடுத்தது. க்யூபா புரட்சி அத்தகைய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் எழுப்பியது. க்யூபாவினர் தங்களுக்கான பிரதேச சோசலிச யதார்த்தம் என்பதை வளர்த்தெடுக்கும்வரை, மக்களை பகிஷ்கரிக்கத் தொடங்கியது வரை, ஹவானா மையப் புள்ளியாக இருந்தது. கடைசியில் ஒரு இனத்தின் சாத்தியப்பாடுகளை அவர்கள் அழித்தனர். ஆனால் ஒருமைப்பாட்டு உணர்வினை உருவாக்குவதில் க்யூபா புரட்சி அடிப்படையான அங்கம் வகித்தது. காஸ்ட்ரோ ஹவானா வந்தபோது நான் அங்கிருந்தேன். எங்கள் வாழ்வில் மின் அணு பாய்ந்த தருணமது பின்னோக்கிப் பார்க்கும் போது, இன்றும் அது நிலைத்திருக்கிறது. அதன் பிறகு, ஸ்பானிய அமெரிக்க இலக்கியத்தில் ஒரு அசாதாரணமான விஷயம் நிகழ்ந்தது:எழுச்சியின் போது முக்கியத்துவம் பெற்றிருந்த ஒவ்வொருவரும் எல்லோருக்கும் நண்பர்களாக ஆயினர். இன்று அது ஒர் சோகமாக முடிந்துவிட்டது. இன்று நாம் இடைக்காலத்தில் நுழைந்ததோடு அந்த நட்பு முறிந்துவிட்டது. மக்கள், தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காக பகைவர்களாக மாறிவிட்டார்கள். இன்று அந்த நாளை ஏக்கத்தோடு நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம்.

கேள்வி 

எழுச்சி பற்றிய உங்கள் தனிப்பட்ட பார்வை, ஹிஸ்பேனிக் உலகில் வாழ்க்கை வரலாறோ, சுயசரிதையோ மிகவும் அருகிக் காணப்படுவதை எனக்கு நினைவூட்டுகிறது. வரலாற்றுச் சம்பவங்களுடன் தங்களுக்கான உறவை லத்தீன் அமெரிக்காவில் எழுத்தாளர்கள் விவரிப்பதை நாங்கள் இப்போது தான் கவனிக்கத் தொடங்கியுள்ளோம். ஜோஸ் GL_n(36 TrrGamorrajós Personal History of the Boom' Gustairsp log 336, Gößg, போதிலும், சுயசரிதைகள் நினைவுக் குறிப்புகள் (memoirs) என்ற மரபு
| உன்னதம் 87 - ஜனவரி 1996 |
пушшавш
________________

WWW.padippakam.com
கானப்படவில்லை.

ப்யூ. 

ஏன் என்று நான் சொல்கிறேன். என்ன எழுதுவது என்பதுபற்றியபம் இருக்கிறது.ஏனெனில் அது உங்களை சமரசப்படுத்துகிறது. பாரிஸிலிலுள்ள மெக்ஸிக தூதரகத்தை அடைந்ததும் எனக்கு முன்னிருந்தவர்களில் ஒருவர் எழுதிய குறிப்புகளிலிருந்து சில தகவல்கள் கேட்டேன். பிரெஞ்ச் அரசியல் குறித்த அவரின் கருத்துகளை அறிய நான் ஆர்வப்பட்டேன். அவர் ஒரு போதும் அப்படி எதுவுமேஎழுதியதில்லை என்பது தெரியவந்தது. என்றாவது ஒரு நாள் அதை அவருக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடும் என்பதுதான் காரணம்.

கேள்வி:

Aremiocuzஇல்citizenKanaஇன்செல்வாக்குபற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்கள் எழுத்துக்கு திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவா?

ப்யூ

 நான் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவன். எனக்கு பத்து வயதானபோது என் அப்பா என்னை உலகக் கண்காட்சி மற்றும் 'சிட்டிசன்கேன்பார்ப்பதற்காக நியூயார்க்குக்கு அழைத்துச்சென்றதுதான் என் குழந்தைப் பருவத்தின் மிகச் சிறந்த நாள். அது என் கற்பனையின் மையத்தை தாக்கியதோடு என்னை விட்டு ஒரு போதும் அகன்றதில்லை. அந்தத்தருணத்திலிருந்து சிட்டிசன்கேனின் ஆவியோடுதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் எழுதும்போதுவேறுசில சிறந்த திரைப்படங்கள் பற்றிய பிரக்ஞையோடும் இருக்கிறேன். பனுவலின் படைப்பு மற்றொன்று. இன்னொருவர் vonstrokeim-குறிப்பாக மெளனப்படமான, குழு நடனங்கள் எதுவும் இல்லாத The Merry Widow' ஜான் கில்பர்ட்டுக்கும் மே முர்ரேக்குமிடையேயான காதல் மிகச் சிறந்த காட்சிகளாகியிருந்தன. அவர்கள் கருப்பு போர்வைகள் விரித்த படுக்கையில் அமர்ந்திருக்க அவர்களைச் சுற்றி கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழகிய பெண்கள் புல்லாங்குழலும் கஞ்சிராவும் வாசிக்கின்றனர். கடைசியில் காதல் உச்சக் கட்டத்தை அடையும்போது, அந்தச் சிறியபடுக்கையின் திரைகளை அவர்கள் இழுத்து விடுகிறார்கள். ஆக, அவர்கள் பார்வையிலிருந்து முற்றிலுமாக விலகிவிடுகிறார்கள். காட்சியல்லாததை நாம் பார்த்துக் கொண்டிருக்க, நாம் பார்க்காத, கற்பித்துக் கொள்கிற அடுக்கடுக்கான பிரதிபிம்பங்- கள் எழுகின்றன. இது மிகவும் ஆற்றல் மிக்கதென அறிந்தேன். இந்த ஒன்றைத்தவிர மற்றபடி அது என் மீது செல்வாக்கு செலுத்தியது என்று சொல்ல முடியாது. நகைச்சுவைநடிகர்கள் எல்லோரையுமே பாதித்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்தகலைஞர்களும் மார்க்ஸ் சகோதரர்களுக்கு இடமுண்டு. மிகச் சிறந்த அராஜக வாதிகள், புரட்சிக்காரர்கள், உடமைகளைத் தகர்த்தவர்கள். சிரிப்பாலும் அபத்தத்தாலும் உலகையே வெடிக்கச் செய்தவர்கள். ஒவ்வொருவரையும் நடைமுறைரீதியாக அவர்கள் பாதித்தார்கள் என்றே நான் நினைக்கிறேன். கிட்டனும், சாப்ளினும், ஆனால் இலக்கியம் என்பது வேறு விஷயம். அது வார்த்தைகளால் சொல்லப்படுவது: திரைப்படத்திலிருந்து வித்தியாசமானது; மிக மிக வித்தியாசமானது.
| உன்னதம் 88 ஜனவரி 1996 - படிபபகம
________________

www.padippakam.com
கேள்வி.

 அப்படியானால் திரைப்படம் நாவலின் இடத்தை அபகரித்துக் கொள்ளும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

ப்யூ 

நம் காலத்தின் மிகச் சிறந்த திரைப்படக் கலைஞர்களில் ஒருவரான லூயி பனுவலோடு சில மாதங்களுக்கு முன் மெக்ஸிக்கோவில் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு எண்பது வயது அவருடைய திரைப்பட வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறார் என்றும் திரைப்படத்தின் எதிர்கால நிலை எப்படி இருக்கும் என்றும் கேட்டேன். அவர் சொன்னார் திரைப்படங்கள் அழியக் கூடியவை என்றே நான் கருதுகிறேன்; ஏனெனில் அவை தொழில் நுட்பத்தைப் பெரிதும் சார்ந்திருக்கின்றன. தொழில் நுட்பமோ வெகுவேகமாக முன்னேற்ற மடைவதால் படங்கள் பழையனவாக, பழைய காலத்தினவாக ஆகிவிடுகின்றன. தொழில் நுட்பம் வளரும் வேகத்தைப் பார்த்தால் எதிர்காலத்தில் திரைப்படமென்பது நீங்கள் ஒரு மாத்திரை சாப்பிடுவதில் தான் அமைந்திருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் அந்த மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு இருட்டில் உட்கார்ந்துகொள்ளவேண்டும். உங்கள் கண்களின் மூலமாக, நீங்கள் பார்க்க விரும்பும் படத்தை வெற்றுச் சுவரில் போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி: 

யாரோ ஒருவர் வருவார், உங்கள் கண்களைப் பொத்துவார்.

 ப்யூ

 ஆம் தணிக்கையாளர்கள் இருப்பார்கள். அப்படியானால் உங்கள் தலைக்குள் திரைப்படம் ஒடத் தொடங்கிவிடும். அவர்கள் உங்களைக்கொன்றால் தான் முடியும். கலை சுதந்திரத்துக்கு அது தான் இறுதி சாட்சியாக இருக்கும்.

கேள்வி: 

உங்கள் படைப்பு பரவலாகப் போய்ச்சேர நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கலந்துரையாடல் காட்சிக்கு (Talk Show) நீங்கள் போவதுண்டா?

ப்யூ 

அநேகமாக, ஒவ்வொரு நாடும் அதற்கே உரிய சைபீரியாவைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனில் ஒரு விமர்சன பூர்வ எழுத்தாளனை பைத்தியக்கார விடுதிக்கு அனுப்பி விடுவார்கள் என்பது நமக்குத் தெரியும். ஐக்கிய நாடுகளில் அவனை கலந்துரையாடல் காட்சிக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அங்கு அவர்கள் கே.ஜி.பி.யை எதிர்கொள்ளவேண்டும். இங்கு ஜானி கர்சனை எதிர்கொள்ள வேண்டும். இது அதை விடவும் தர்மசங்கடமானது. செக் எழுத்தாளர் மிலன் குந்தராவின் நிலையோடு தன் நிலையை ஒப்பிட்டு பிலிப் ராக் சொன்னது ஐக்கிய நாடுகளில் எல்லாமே செல்லுபடியாகும், ஆனால் எதுவுமே முக்கியமானதல்ல. செக்கோஸ்லவாகியாவில் எதுவுமே செல்லுபடியாகாது. ஆனால் எல்லாமே முக்கியமானவை. ஆக, இங்கு ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்காத கூடுதல் பரிமாணம் அந்த எழுத்தாளனுக்குக் கிடைக்கிறது. நான் சென்ற ஆண்டு பாரீஸில் இருந்த போது என்னுடைய ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. நான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அப்போது அவர்கள் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. அவர்கள் சொன்னார்கள், இல்லை இல்லை. இதனால் அதிகப் புத்தகம் விற்கும். Apostruphes என்று அழைக்கப்படும் அந்த நிகழ்ச்சி
| உன்னதம் 89 ஜனவரி 1995) படிப்பகம்
________________

www.padippakam.com
மிகவும் பிரசித்தமானது. பிரான்ஸில் மூன்று கோடி மக்கள் அதைப் பார்க்கிறார்கள். சரிநாம்போகலாம் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். என்று நான் சொன்னேன். அது ஒரு பயங்கரமான அனுபவம். ஏனெனில், அங்கிருந்த சற்றும் பொறுமையில்லாத ஒரு பிரெஞ்சுக்காரர் தொடர்ந்து என்னை இடைமறித்துக் கொண்டே இருந்ததால் என் கருத்துக்களை என்னால் வெளியிட முடியவில்லை. விஷயங்கள் வெகுவேகமாக நகர வேண்டும் என்று அவர் நினைத்ததால் நான் எதுவுமே சொல்ல முடியாமல் போயிற்று அது நடைபெற்ற விதமும் நான் பேசிய விஷயமும் எனக்குக் கொஞ்சமும் சந்தோஷம் தருவதாக இல்லை. என் மனைவி ஸில்வியாவோடு நான் என் அபார்ட்மெண்டை அடைந்தேன். எங்கள் அபார்ட்மெண்டின் பணிப்பெண்மணி எங்களுக்காகக் காத் திருந்தாள். ஆ, இப்போது தான் டி.வி.யை அமர்த்தினேன். எவ்வளவு அருமையாக இருந்தது. பிரமாதம், அற்புதம், என்றாள் இல்லை அது பயங்கரமாக இருந்தது. மிக மோசம். நான் சொன்னது எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை என்றேன் நான். ஆனால் அவள் சொன்னாள், மிஸ்டர் ப்யூண்டஸ் நீங்கள் சொன்ன எதையுமே நான் கேட்கவில்லை. நான் உங்களைப் பார்த்தேன். நான் உங்களைப் பார்த்தேன் என்றாள். தொலைக்காட்சியோடு பசைபோல் ஒட்டிக் கொள்ளும் மக்கள், உண்மையில் தங்கள் ஆத்மாவின் அடியாழத்திலிருக்கும் ஒரு இடுக்கில் இருக்கிறார்கள். தங்களைப் பார்க்க முடிகிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அடையாளத்தின் சாரமாக இது அமைகிறது. புகைப்படத்தைக் கண்டுபிடித்தது தான். 19ஆம் நூற்றாண்டின் உண்மையான புரட்சி என்று வால்டர் பெஞ்சமன் மிக அருமையர்கச் சொல்லியிருக்கிறார். வரலாறு நெடுகிலும் மக்கள் முகமற்றவர்களாக இருந்திருக்கிறார்கள், திடீரென அவர்களுக்கு முகம் கிடைத்துவிட்டது. முதல் புகைப்படங்கள், அவை அறிய பொக்கிஷங்கள் என்பதால் வெல்வெட்டால் அடுக்கப்பட்டு நகைப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. அவை உங்களின் அடையாளம். இப்போது திடீரென மூன்று. நான்கு, ஐந்து கோடி மக்களால் பார்க்கப்ப்டுவதற்கான வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கென ஒரு அடையாளம் கிடைக்கிறது. நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு ஆள். அது எவ்வளவு சுருக்கமானதாக இருந்தாலும் சடுதியில் மறைந்தாலும் விஷயமில்லை. அது நிலப்பிரபுத்துவத்தின் முடிவைச் சொல்கிறது. உங்களுக்கு முன் இருக்கும் டி.வி.யின் மூலம் நிலப்பிரபுத்துவத்தின் முடிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: 

உங்களுடைய நினைவுக் குறிப்புகளை எழுதுவதற்கு எப்போதாவது திட்டமிட்டிருக்கிறீர்களா?

ப்யூ 

ஆம், நேரம் வரும்போது நான் அதைச் செய்ய மிகவும் விரும்புகிறேன். அதற்காக சுவையான தகவல்களைக் குறித்து வைத்திருக்கிறேன். மெக்ஸிகோவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நினைவுக் குறிப்பு எனும் இலக்கிய வகையைத் தொடங்குவதென்பது நல்ல அபிப்ராயம் தான். அந்த இலக்கிய வகையில் சிலவற்றைப் பதிவு செய்யவும், படைக்கவும் செய்யலாம். என் தலைமுறை, கதை சொல்லும் மரபை உருவாக்குவதில் சிறப்பாக
| உன்னதம் 90 - ஜனவரி 1996 /
படிப்பகம்
________________

www.padippakam.com
வெளி_டுகிறது._நினைவுக் குறி_ரை உருவாக்க எங்களுக்கு நேரம் இருப்பதாகவே நினைக்கிறேன். கடந்த காலத்தில் கொர்தேயின் கடிதங்கள், பெர்னால் டயஸ்டே காஸ்டில்லோவின் மெக்ஸிகோவின் வெற்றி குறித்த சுயசரிதை ஆகியவற்றில் அது இருக்கிறது. குல்லெர்மோ காப்ரெரா இன்பா ன்டேயின் ஹவானாவில் இளமைப் பருவம் பற்றிய புத்தகத்தில் இதற்கான நம்பிக்கையை நான் காண்கிறேன்.

கேள்வி: 

இப்போது நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் வேகத்தில் நீங்கள் தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நினைக்கிறீர்களா?

ப்யூ. 

எழுதும் காரியம் உடலளவில் சுலபமாக எனக்கு ஆகிவிட்டது. காலம், நகர்ந்து கொண்டிருக்க கடந்த காலம் நிகழ்காலமாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் வாழ்ந்ததும், இனி எப்போதைக்கு-மாக இழந்துவிட்டது என்று நீங்கள் நினைத்ததும் உங்கள் படைப்புக்குத் துணையாய் நிற்கிறது. திடீரென அது ஒரு வடிவம்பெற்று, அதற்கே உரியகால ஒழுங்கில் இருந்துகொண்டிருக்கிறது. இந்தக் கால ஒழுங்கு ஒரு இலக்கிய வடிவத்தைக் கோருகிறது. ஆக, இன்றைய உங்கள் வாழ்வின் மையமாக கடந்த காலத்தவை தோற்றம் கொண்டு முன் நிற்கின்றன. நீங்கள் அவற்றை முக்கியமற்றவையாகவோ, இறந்துவிட்டனவாகவோ கருதுகிறீர்கள். ஆனால் தங்களுக்கான வாய்ப்பை எதிர்நோக்கி மட்டுமே அவை இருந்து கொண்டிருக்கின்றன. உங்களுடைய இருபத்தைந்தாவது வயதில் - அதற்கும் குறைவாகவே வாழ்ந்த நிலையில் - நீங்கள் ஒரு கருவை வலிந்து எடுத்துக்கொண்டால் அதை வைத்துக்கொண்டு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அறிகிறீர்கள். திடீரென தானாக வலிய முன்வந்து அது தன்னைத் தருகிறது. ஐம்பதாவது வயதில் பாத்திரங்களும், வடிவங்களும் நீள்வரிசையில் வார்த்தைகளைக் கேட்டு என் ஜன்னலை ஒட்டி நிற்கின்றன. அங்குநிற்கும் எல்லாவற்றையும் கைப்பற்றிவிட வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்குப் போதுமான அவகாசம் இல்லை. தேர்வு செய்யும் முறை பயங்கரமானது, ஏனெனில் தேர்வு செய்யும் போது நீங்கள் சிலவற்றை அவசியம் கொன்று விடுகிறீர்கள்.

கேள்வி: 

இரட்டை பயிற்சிக் காலம் ஒரு அற்புதமான படிமம். எழுதத் தொடங்கும் கட்டத்தில், அப்படி இருப்பதே கர்ப்ப வாச காலமாகவும் இருக்கிறது, அதைத் தொடர்ந்து இப்போதிருப்பது, வேதனை மிகுந்த பரிபூர்ண நிலைக்காலமாக இருக்கிறது. 

ப்யூ. 

உங்கள் வாழ்வின் பாதியைக் கடந்துவிட்ட பின்பு மிகத் தீவிரமாக எழுதும் முனைப்புகொள்ளும் வகையில் சாவின் முகத்தை நீங்கள் பார்த்தாக வேண்டும். ரிம்பாடு போன்று முடிவை வெகு முன்பாகவே கண்டவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அதைப் பார்க்கத் தொடங்கும்போது இந்த விஷயங்களை எல்லாம் காப்பாற்றிவிட வேண்டும் என்பதை உணர்வீர்கள். மரணம் கலை இலக்கியத்தின் மகத்தான துணைவன் மரணம் தான் எழுத்தின் உயர்ந்ததேவதை. நீங்கள் இனி ஒரு போதும் வாழப்போவதில்லை என்பதால் எழுதியாக வேண்டும்.

| உன்னதம் 91 - ஜனவரி 1996