தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Monday, March 28, 2016

அவன் நிழல் - தமிழவன்

உன்னதம் 70 ஜனவரி 1996 படிப்பகம்__
WWW.padippakam.com சிறுகதை
அவன் நிழல் - தமிழவன்
 automated google-ocr

நான் அந்தக் காலையில் அவனைச் சந்தித்ததை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.

என் புத்தகங்கள் நிறைந்த அறையில் நான் ரொம்ப நேரம் படித்து விட்டுக் கண்கள் பஞ்சடைக்க நிமிர்ந்த போது அழைப்பு மணி  கேட்டது. இடுப்பிலிருந்து நழுவிய கைலியை எடுத்து சட்டையின் மீது அசிரத்தையாக உடுத்துவிட்டு கதவைத் திறந்தால் ராமசுப்பிரமணியன். அவன், கேட்ட புத்தகத்தைத் தருவதற்காக வந்திருந்தான். என்னிடம் பேசிக் கொண்டிருக்க வந்திருக்றானோ என்று சந்தேகம் வரும்படி எதைப்பற்றி நான் பேசினாலும் விரிவாக உதாரணங்கள் சொன்னான். நான் சாதாரணமாக ஒப்புக்குச் சொன்னதை எல்லாம் அதில் தத்துவம் இருக்கிறது என்று ராமசுப்பிரமணியன் பேசினான். சற்று நேரத்தில் நான் அமைதியாக இருக்கத் தொடங்கினேன். அவன் எங்கோ ஒளித்து வைத்திருந்த வார்த்தைகளை என்முன் கொட்டி வருத்தப்படுவதென்று கங்கணம் கட்டியவன் போல பேசிவிட்டுப் போன போது அவன் சொன்னதில் ஒரு வார்த்தையும் என்னைத் தொத்தியிருக்கவில்லை என அறிந்தேன். என்றோ ஒருநாள் அவன் வந்துசென்ற நினைவு அந்த நடுஇரவில் வர அதனை ஒதுக்கி விட்டு நான் படித்துக் கொண்டிருந்த தமிழ் விவிலியப் பகுதியை எடுத்துக் குறித்துக் கொண்டேன். அவை இப்படி அமைந்திருந்தன:

அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து கடந்து போன தண்ணிரைப் போல அதை நினைப்பீர்.

அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்ட பகலைப் பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும். இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப் போலிருப்பீர்.

நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர் தோண்டி ஆராய்ந்து சுகமாய் படுத்துக் கொள்வீர்:

நான் குறிப்பெடுத்ததை ஒருமுறை படித்துப் பார்த்தேன். பின்பும் அந்த ஜன்னல் வழி இருளில் நிழல் தெரிந்தது. அந்த நிழல் ஒரு பெரிய பறவையின் நிழல் போலவும் வேறு ஏதோ போலவும் தெரிந்தது. பூதாகாரமான உடலோடு என் வீட்டுத் தாழ்வாரத்தில் நின்ற பெரிய ஆலமரத்தின் அடியில் காட்சியளித்தது. குளிராக இருந்ததால் மப்ளரை எடுத்துக் கழுத்தைச் சுற்றிக் கட்டினேன். காதுவழி குளிர் இன்னும் என்னைத் தாக்கியதை உணர்ந்தபோதுமப்ளரை அவிழ்த்துகாதுகள் வழி சுற்றிக் கட்டிக் கொண்டேன். மேசை மீது எச்.ஜி. வெல்ஸின் மிகப் பெரிய நூல், அது ஒரு குட்டையான புத்தகம் கிடந்தது, அவரது எல்லா கதைகளையும் தொகுத்த
| உன்னதம் 70 ஜனவரி 1996 படிப்பகம்________________

www.padippakam.com
தொகுப்பு. நான் அதை நூலகத்திலிருந்துஎடுத்துவந்தேன். முதல் தாள் கிழிந்திருந்ததால் யாரோ ஆங்கிலத்தில் அந்த நூலின் பெயரை எழுதியிருந்தார்கள். அதன் கீழ் நூலக சீல் போடப்பட்டிருந்தது. அதற்கடுத்த பக்கத்தில் உள்ளடக்கம் பக்க எண்களுடன் கொடுக்கப்பட்டிருந்ததையும் கண்டேன்.

என் பழைய வீட்டின் மேல் மாடிக்குச் செல்லும் படிகள் மிகப் பழைய மரத்தில் அமைந்திருந்தது போலவே அதன் நீண்ட கைப்பிடிகள் துருப்பிடித்த ப்லமான - இரும்பு பாளத்தாலாகியிருந்தது. எதற்காக இந்த வீடு என் ஒய்வு பெற்ற காலத்தில் பிடித்திருந்தது என்று யாரும் என்னிடம் கேட்கவும் இல்லை. அப்படி யாரும் கேட்காததால் நான் அப்படி யோசித்துப் பார்த்ததும் இல்லை. விளக்கு வீட்டின் மேற்குச் சுவரில் இருந்ததால் தெற்குப்பகுதிநோக்கி உயர்ந்து மேல் இணைந்திருந்த படிகளை நோக்கி நான் போன போது என் ஓரத்தில் விளக்கொளி விழுந்தது. நான் ஏறும் படிகளில் எனது நிழல் விழுந்ததைக் கண்டு சற்று நேரம் பார்த்தபடி நின்றேன்.

இப்படிப் படிகள் வழி ஏறியதும் ஏறிக் கொண்டிருப்பதும்
| உன்னதம் ... ?? . ஜனவரி 1996 ਾਧਨ੍ਯ–________________

www.padippakam.com
நினைவுகளில் தாக்கிக் கொண்டேயிருக்கும்படியான வாழ்க்கை. எனது இரண்டாவது மகன் டெல்லியிலிருந்து வந்து அதே மாளிகையில் காலையில் தினமும் எனக்குப் பிடித்த கண்ணன் தேவன் தேயிலையில் டீ தயாரித்துக் கொடுத்துவிட்டு ஒருநாள் போயும் விட்டாள். பின்புமழை வந்தது. மழையில் நனைந்து என் குழந்தை பிராயத்தை நினைத்து லேசாய் கண்களின் ஒரத்தில் கண்ணிர் உருள நின்றதை ஒரு நாள் நினைத்தேன். தங்க கோடுகளிட்ட தோல் அட்டைகளுக்குள் அடுக்கப்பட்ட தாள்களைக் கொண்ட புத்தகங்களை எத்தனை நாள் படித்துவிட்டேன் என்பதும் ஞாபகம் இல்லாதபடி பழமை பலமாய் என்னைச் சுற்றி எழுந்திருந்தது.

எத்தனையோ முறை ஏறியதுபோல் இன்றும் விளக்கொளிபட ஏறிய போது எதிர்பார்க்காத விதமாய் கதவு திறந்து கிடந்தது. படிகளில் இருந்த விளக்கின் பொத்தானை நான் அழுத்தியிருந்ததால் எழுந்த விளக்கொளி திறந்த கதவுவழி மேல் தளத்தில் ஒரு கூம்பு வடிவத்தில் கிடந்தது என் காதுகளைத் தீட்டிக் கேட்கவேண்டுமென்று ஒர் உள்ளுணர்வு எழ. காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டேன். மெளனமாக இருந்தது. ஒலியைக் கேட்பது போல மெளனத்தைக் கேட்பதும் பழக்கமாகியிருந்தது. விளக்கொளி படர்ந்த பகுதியிலிருந்து இரண்டு எட்டு எடுத்துவைத்து அங்குள்ள இன்னொரு விளக்குக்காக ஒரு பொத்தானை அமுக்கினேன். விளக்கு சற்று தாமதித்து எரிந்தது. ஒயர்கள் சரியாக இல்லாததால் அப்படி அந்த விளக்குகள் தாமதித்து ஒளி கொடுப்பதை நான் பலமுறை பார்த்திருந்தேன். அங்கிருந்தது சி படிந்தசோபாவில்சென்று, மெளனமாக அமர்ந்து, என் நிழல் பக்கத்து சுவரில் விழுந்ததைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். என் காலில் ஏதோ தட்டுப்பட நான் அணிந்த கோட்டை வயிற்றுப் பகுதியில் பிடித்தபடி குனிந்து அதைப் பார்த்த போது என் மனதில் ரொம்ப காலம் மனம் அறியாத குது.ாகலம் ஏற்பட்டது. அங்கு மூன்று பொருள்கள். புத்தகத்திலிருந்து விழுந்தமயில் தூவி, பக்கத்தில் கிடந்த பழைய நாணயத்தில் என்ன என்று காணமுடியாதபடி அதிலிருந்த உருவம் மாறியிருந்தது, இன்னொன்று கறுத்துப்போன ஈரக்கசிவுடன் இருந்த எண்கள் இல்லாத ஒரு மரஸ்கேல் என் கண்களில் காலம் தோற்றுப் போனதைப் பார்த்தேன். இப்போது சுவரில் இருந்த என் நிழலைக் கவனித்த போது நான் என்பது புரிந்தது.

அங்குக் கிடந்த இலக்கண நூலில் ஒருவரி அடையாளமிடப்பட்டிருந்தது. அவன் நிழல் என்பது இருபொருள் தரும் ஒன்று, அவனது நிழல் என்பது. இன்னொன்று, அவனே நிழல் என்பது.

இப்போது நான் இல்லாமலானேன்.

| உன்னதம் 12 ஜனவரி 1996
படிப்பகம்