தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Friday, March 25, 2016

மண்சிலம்பை கோணங்கி

________________

மண்சிலம்பை
- கோணங்கி
புனைகளம் -02
www.padippakam.com

automated google-ocr in ubunt
(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
 
தவளை இளவரசிக்குக் கண்களாலும் காதுகளாலும் கதைபோட முடியாது இனி. சீலைப்பேன் கண்டெடுத்த சூல் வாசனைகளை நாசியால் வாஸித்தாள் தவளை இளவரசி, துவைக்கிற கல்லுக்கடியில் நாவுகளை வீசிப்பிடித்த பூச்சிகள் விழுங்கப்படுமுன் அவளிடம் கடல்சிலம்பையின் பிதிர் கூறித் தப்பிவிடும். பிக்குவின் சீவரப்போர்வையில் மறைந்திருக்கும் தவளை உடல்விட்டு வெளிவந்தாள் இளவரசி நார்த்தாள்.

மோப்பநாவுகளால் புழுதியைத் தோண்டினால் பூசனி பூத்த வண்ணாக்குடியில் செம்பால்சுரந்த கழுதைகள் மண்சுவர் ஒட்டி நின்றிருந்த சிலம்பைச் சாம்பல் இற்றுப் புலர்ந்தபோதில் குளிர் வாடைக்குக் குண்ணி ஒடுங்கின புட்கள் சிலம்பின வெளிச்சத்தில் வெளிப்பட்டாள். கோரை எழுந்து கிடந்த நீரில் கடல்சிலம்பை உரசும் பாசிநிறம். வட்டமான கரை சுற்றி அமைந்த கண்மாயே ஒரு மண்சிலம்புதான். உள்ளே கால்வைக்கிறாள் வண்ணாத்தி. தொட்டதும் சுருக்கெனக் கூசி காலைக் கவ்வி சிலம்பாகிவிடும். எத்தனை மண்சிலம்பென உள்சுழலும் மீன் கடிக்க ஒசையிடும் நாவிருட்டில் சுழன்றாடும் கழல்பூசிய சாம்பல் புதருவண்ணான் கால்தூக்கிக் கவ்வும் மறுசிலம்பில் தவளைகளின் இடைவிடாத நாதம் மண்துரை பொங்கி வெளுத்த சொரித்தவளை காக்காய்புண் மின்ன விரியும் மண்சிலம்பை, ஆகாயம் விரித்த கண்மாய் நீரில் கெத்துக்கெத்தென அலை ஏறிய

இதழ் 2 / 2002 & 18
படிப்பகம்
________________

அவிழ்த்து இருளில் ஒடும் ஆவியைக் கூவிய காற்று. வெளியில் யாரோ மறைந்திருக்கிறார்கள்.

வெண்புகை நெளிந்து நாட்டையில் ஏறும் புகைவளையங்களுடன் அரங்கில் பல உருவங்கள் விருட்சம் பிளந்து வெளிவந்து எலும்புடன் போராடும் பெண்ணைச் சூழ்ந்து வாக்கு கேட்கிறார்கள். ஜன வெளியில் நிற்கும் தபசு மரத்தை நோக்கி வட்டமான கூட்டம் புகையிலிருந்து கலைந் தோடி கருங்கிடாயின் கழுத்தைக் கடித்து உறிஞ்சுகிறாள் உதட்டினால், ஒரு சொட்டு கீழே சிந்தாமல் கிடாய் உயிரும் நரம்பும் சூட்டில் கொதிரத்தமும் குடித்த உதடுகள் கீழ் ஒரம் முளைத்த பல் பளிங்கில் ஒளி ஒடியது. விலங்கின் படிகக் கண்களை அறுவி கண்மேல் கண் கற்றி பதித்து சூடி ஆடித்திரும்பி விலங்காய் பிடிபடாமல் வாட்களுக்கு நடுவில் வியூகம் அடைக்க முடியாமல் தப்பி விலகிச் சீறி கிழக்கு மேற்காய் ஒடித்திரும்பி தீவலம்போய் சுற்றி நடுவகிட்டில் கொழுந்துவிடும் தீப்பாய்ந்து வெளியேறி அரங்கில் மறையவும் ரத்தம் குடித்த மூச்சுடன் திரும்பியது கூட்டம்.

மெல்லத் தொடர்ந்து வரும் ஒளியின் அளவில் நீலம் சேரச்சேர கலையில் உடல் கரைந்து துக்கம் பூசிய சாம்பல்முகம் இமை தாழ்த்தி பீலி அசைய கடைக்கண் ஒரம் தங்கிய ஒரு துளியில் வெப்பம் ஏறும் இருள் விலகி நீர்கோர்த்து விதிர்த்த இமை அரும்பின் ஒசை மெல்லச் சுழன்று ஏறிய இசை நுனிமூக்கில் சுவாச இழை மெலிந்து ஏறி இறங்கும் அவரோகண ஆரோகணத்தில் காற்றின் நாடி இறங்கி சுவாதீனத்தில் உயர்ந்து நாட்டையில் நாடகப்பாத்திரம் திரள்கிறது. உள்ளே சங்கரதாஸ் வேஷப் பெட்டி திறந்த தவளைப்பெண் முகம்பூசிய அரிதாரம் கடல்சிலம்பை வணங்கி எடுத் தாள். அச்சிலம்பை வண்ணாத்தி கை பட்டதும் காகங்களால் மூடிய வெளி கரையும் குரல்கோடு தீவிர இருட்டு வெளி விட்டு வெளி சுற்றும் நீலம் கருஒளியில் கலந்து வீசும் காற்றில் துயர்ஏறிய காலடி களில் அழுந்தாமல் செல்லும் விரல்களின் குமிழிகளில் நகம் சிவக்க பளிச்சிடும் வெள்ளை. கால்வைத்தால் வேராகும் பாதத்தில் பொதும்பிய பூச்சிகள் கலைந்து புரளும் குழிவுகளில் சுழல்காற்று மண்ணை அரித்து குருத்து மணலில் கால்வைத்து நடந்தாள் நார்த்தாள். துணை இருட்டில் உடல்பூசிய நடிகன் நுகர்ந்த கால் சலங்கை புழுதிக்குள் பூசிய உடல் நாக்கை நீட்டி பசை கக்கி நனையும் சகதி விழுங்கி குடல்வயிறு சுரந்த பாசிக்கோரை. களியும் ஈரமண் உடல் வாசனை நீர்வெளிச்சம். கண்ணில் மூழ்கிக் கொண்டிருக்கும் பிடில் வில்லை பெண்ணாக உருமாற்றி அழுக்குச் சால்வை அசையும். சரிந்து சாய்ந்து வீழ் கிறாள் சுரதநீர் பிரியும் சால்வையுடன். ருதுவான பெண்களின் சாயல் பல பிரிந்து சேரும் சால்வையில் துளைகள் கலந்து ஒடும் நீரில் பூக்களில் உருமாறும் கண் ணாடி பார்க்கிறது. கற்றாழைகளில் பதுங்கிய பூச்சிகளின் முகமூடி படம் எடுத்து ஆடியது. ஆழத்தில் நிசப்தமான மயக்கவெளி இருளில் பேசுகிறவேளை உள்ளிருப்பவள் முகவிளிம்பில் சிலை உரு ஆன ஒளி இழை களில் முகநாடிகள் அசையும் தொணிச் சேர்க்கையில் உடைவதற்கான உணர்வு களை விட்டுப் பிடித்து ஆடிநீரில் மெல்லச் செல்லும் சாயை விளக்கொளி அகத்தில் பிரிந்த சோகப்பளிங்கு

பின்பக்கம் சரிந்த நீலக்கோடு நீர்மேல் பட்டதில் நெளியும் அலை செல்ல ஜலப் பரப்பில் ஒளித்தாவரங்களை ஏந்திய நார்த் தாள் உருஒளி சேரப் புணரும் மீன் அக விளக்கடியில் இருட்டு தலைகீழாய் வால் ஏறி மூழ்கிய கருநீரில் முகம் புதைத்துக் கண்திறந்து பார்த்த உயிரின் நிறம் துடைக் கப்பட்ட வெளி ஒரு கரும்புள்ளியாய் சுழிந்த ஒளித்துசி சுழற்றி ஒடும் செம்பழுப்புக் கோடுகளை சிதைக்கிறாள். முளைத்த முலைவாசனை கற்றாழை நெடிக்க பால் ஒளி உடல் உள்ளே பருவம் விளையாத நெஞ்சுச் சுருக்கம், கருவாகி ஈரில் வெண் சாம்பல் ஏறிச்சுருங்கிய காளான் மீது இருட்டில் நகர்ந்து எட்டும் நாவுகளில் அருந்த ஏறும் வெதும்பலில் ஆவரை பூத்தநெடி வெளிர் மஞ்சள் தூள் சிதறிய மொக்குகள் திறவாத பாதையில் நார்த்தாள். உடையாத பூ ஒன்று பழுப்பு இலை உதிரும் எருக்கஞ்செடி முள் அழகில் சாம்பல் ஏறி கரிசல் மூடிய உடல், தவளை கள் மீது பாசிக்குரல் தொலியாக மூடிய பச்சை சுடர்ந்து கொண்டிருந்த வேகம்

எதிர்சாயைகள் பூசிய உட்புறத்திலிருந்து நாடகப்பாத்திரங்கள் சுரைக் குடுவை களுடன் வந்து விதை குலுக்கிக் குலுக்கி கீழே அமர்ந்து காலிடை யோனியிடத்தில் சுரைத்தண்டு பதித்து நடுகிறார்கள். விதைக் குடுவைக்குள் புறாவும் நாவிதன் கண்ணாடி யில் தவளைப் பெண்ணும் ஒளிந்திருக் கிறார்கள். அவளைத் தேடி ஏகாளி புராணத்தில் அலைந்து காடோசெடியாக மறைகிறார்கள். கூவிய குரல் கேட்டு புறா சாம்பல் குரலில் கும்காரமிட்டு கதறியது. அவள் யோனியில் விதைக் கலயத்தின் நிழலை ஒளி அழிக்கிறது. நூலில் கோர்த்த ஒளி நெளிந்து குடுவைக்குள் சென்று கருவிதைகளைக் குழப்பி ஒலி எழுந்த கும்காரம் நீளமான சுரைத்தண்டுகளை யோனியிடத்திலிருந்து வேருடன் அசைத்து வலி அலறப் பறித்தெடுத்ததும் ரத்தஒளி பாய்கிறது தொப்பூளுக்குக் கீழே. அதிலி ருந்த கரைவிதைக் கண்கள் நெளிந்த தைல ஓசை உருவிய சுரைத்த களை உயரத் தூக்கி ஆடி ஆடிச் சலசலக்கும் ஒசை அதிகரிக்க வண்ணாத்திகளின் குலவை நீள்கிறது. சாம்பல்நிற விதை ஒளியை வெண்மையில் படியவிட்டு அரங்கில் மணல் நிறம் சேர்கிறது. ஏகாளிகள் முகத்தில் நீர் கோர்த்த மிரட்சியும் சுபாவத்தை மீறிய வெறியும் அகலமான நாக்கில் நார்த்தாள் நாடிவரை நீட்டி பச்சை ஒளிகசிய மூலிகைக் கற்றையுடன் துருத்திய நாக்கை பற்கள் பதிய அண்ணாந்து சுற்றிய வட்டத்தில் ஆண் களும் கைவிளக்கேந்தி ஒவ்வொரு நிற வெளிச்சத்தில் முகம் காட்டுகிறார்கள். பாவங்கள் மாறுபடும்.

மெலிந்து ஊனமான கால்களும் மொடா வயிறுகளில் பொருந்திய குச்சிக் கால்களும் கொண்ட சிறுமிகளைத் திரைக் குப்பின் நிழலாக பின் தொடர்ந்து பெண் களும் வெளிவருகிறார்கள். நார்த்தாளின் அகலமான நாக்கு ஆடிப் பயமுறுத்த வந்தவர்கள் மீது மூலிகைச் செடிவைத்து உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தடவிய நாக்கில் சுவைத்த மொழிமண் ஆவி ஏறிய கண்களை பைத்திய வேகத்தில் மெது வாய் மறுமுனைக்கு நகர்த்த தெருவும் நகர்ந்து நெளிகிற வீடுகளில் மனிதர்கள் புதிருக்குள் மூச்சுவிடும் வாடை சொல் புறண்ட நாக்கில் அர்த்தங்களை அடை யாமல் சுழன்றமொழி அண்ணாந்த தொண்டைக்குழியில் நீராக உருளும் அதை விழுங்காமல் வெப்பம் ஏற்றி உமிழாத பாஷையை அருந்த நூலிலிருந்து வெளியேறி நக்கிய ஈரக்கால்களில் எச்சில் மருந்தாகும் எலும்புக்குகைகளுக்குள் புகுந்து ஒளிகளாக இருளில் பிரவேசித்தாள். முதுகுத்தண்டில் சுரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் சுரைத்தண்டை மறுகையில் வைத்து வெட்டிய சூன்யத்தில் வர்ணஒளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி இதற்கான நிறஒளிகளின் கணிதத் தை நாடக ஒளிக்காரன் ஆவிசுழலும் மயக்கத்தில் திருகி வேறு வெளியில் பிர வேசித்தான் முதலில் பூக்களின் இயற்கை யை அசலாக ஒத்த வாசனையாக்குகிறான் ஒளியை அதுவே உடல்மேல் பூசிய தாதுக் களில் மகரந்தப்பொடி ஒன்றையொன்று கலக்கும் மோனத்தில் உலகத்தின் சாந்தியாகும் இருப்பு.

நாக்கில் துருத்திய பூக்கள் மடல்விரிக்க உள்ளே சிதறும் காமத் துளிகளில் அயலான பூ நிறம் அவிழ நுழைந்த நா உச்சி மேல் பிளவான ஒளி சரிகிறது தொண்டைக் குழிக்குள் நாக்கின் அடி நரம்புகளில்
இதழ் 2 / 2002 : );
________________

ஊறும் உமிழ்நீர் தொட்ட வார்த்தை நகங்கி தூள் தூளாகி நொறுங்கி விழ உளுப் பூச்சிகள் நெளியும் வார்த்தைகளுக்குள் ஒளித்தைலம் வளைந்து அலையும் நாடகத் தில் நார்த்தாள் தன் உரு இன்றி ஆவியுடல் கொண்ட நாக்கில் சுவைத்தாள் நிலக்கீற லில் பாழான ஓடைகளின் உறுமல். வெற்றிடத்தில் ஒளி பெருகும் சூன்யம். கூழாங்கல் உரசி உருளும் ஒசை ஆவி களின் எதிரொளியாய் குரல் பல அரற்றும் வனமே சுருளும் வீழ்ச்சி அதில் சூன்யத்தின் நாவுகள் சுரக்கும் மொழி வெறியோட்டத்தில் மெலிந்த கால்கள் நடக்கும் திசையில் நிறங்கள் வேகமடைந்து அழியும் நீர்மை, சிகிச்சைக்கான உடல்மண் சுவைத்த ரஸ்க் கட்டு நாக்கில் ஏறும் நரம்பு வலை பின்னிய மூலிகை உயிரினங்கள் நாவு நீட்டி கலைந்து கலைந்து சேரும் பூச்சிகளின் பாஷை ஒவ்வொரு ஜீவனும் மறுஉயிரில் பகிர்ந்த கலவி எரியும் நாவுகளில் தொட்டு ஏறும் ஈரத்தில் ஊர்ந்து தொனிக்கும் நிலங்களின் அசைவு.

மரத்த உணர்வுகளிலிருந்து லேசாய் அசைகிறாள் கால்நடுங்கி உள்ளே ஈரலைப் பற்றிய ஆவியின் பிடியில் வெப்பரத்தப் பிறவியாகி ஏறும் கால்கள் முதல் எட்டில் பெண் ஒருத்தி சூம்பிய கால்களில் தள்ளாடி முன்வைத்த எட்டில் பின்வைத்த காலெ டுத்து முதல் நிலத்தில் மரங்களென கால் வைத்தாள். பிறந்த மேனியில் நடமாடும் ஒளி நீலத்தில் கோதி எல்லாத் திசையிலும் அசையும் வெண்ணிறம் அலைகிறது. உடல் மேல் ஊறும் பூச்சிகளின் நாவுகள் நக்கி நக்கிச் சேரும் உடல் இருட்டில் கனவு மெல்ல நீரில் நகர்ந்து நடவாமல் நின்ற மரங் களைத் தொட்டு கால்விரல் அசைத்த வேருடன் பறித்த வேகத்தில் மண்ணைக்கீறி வரைந்த கோடு அழுந்தி ஊன்றிய விருட்சம் ஒசையிடும் வேர்பிடியிலிருந்து உருவி அடுத்த காலை எடுத்து ஊன்றிய நிலம் பிளந்தது. இலைகளில் ஒடும் நரம்புகள் ஈர்த்து ஒவ்வொரு பாதத்தின் கீழும் மரங் களின் வாசனை. உரித்த பட்டைகளில் உடல் ஒட்டி விருட்சமாகும் நாடகம், பூவும் பிஞ்சும் காய்த்துக் கனிவாசனை ஏறிய நாசியின் வெளிச்சத்தில் மண்நாவுகளின் நாட்டியம். ஒரு கடினம் நாவுகளின் இருட்டில் கடந்த விநாடியில் பின் வைத்த கால் விருட்சமாகும் பதைப்பு.

கண்ணாடியில் துடைக்கப்பட்ட காலத் தின் வெளியேற்றம் உள்ளே மறைந்த சுவடு களை தொலிவாரால் பின்னித் தைத்த நிலம் மின்னல் பாதத்தில் கரிய நிற இருளாகத் தங்கிய சிருஷ்டியின் காலமுனை நிழல் விழாமல் நகர்கிற எதேச்சையின் எதேச் சையில் கூடுகிற செதில்கள் பிரபஞ்ச நாவுகளை மெல்லப் புணரும் ஒளிகளின் சேர்க் கையில் நார்த்தாளைக் கடந்த இயற்கையின் விரல்களால் மண்ணைப் பிசைந்து மடித்து கன்னத்தில் கை வைத்து இமைக்காமல் கழுதைகளைப் பார்த்துக் கொண்டிருக் கிறாள். கண்ணாடியில் அசையும் மர ஒசையில் மழைநீர் மெல்ல ஊர்ந்து நரம்பு களாகி அவள் நாவுகளுக்குள் மறைந்து கொண்டிருப்பதைக் காணாமல் இருக் கிறாள். கழுதைகளின் பாதக்குளம்படி பதிந்த தடத்தில் சிறகு குவித்து அமர்ந் திருக்கிறாள். சிறகில் கோதிய இச்சையும் ஆசையும் காதல் பிரயத்தனங்களும் இன்றி இருப்பதில் மிதந்து கொண்டிருக்கும் அந்தரத்தில் மீன் சுற்றிய கண் நீலப் பட்சி அவள் இருப்பின்றிப் பதிந்த பறவைச் சிறகு விசில் நீர்மேல் சுழியும் புயல் ஒரு நாடகம், அதில் நடிகர்களின் காருண்யத்தில் படிந்த நிழல் ஒளிகள் பாயும் வெளியேற்றம்

பளிங்குருவில் நடிகர்கள் அவளோடு உரு ஒளி சேர நவநாவுகளில் நிறங்களை வெளியாக்கி முகவிளிம்பில் தொட்டு கண் படத்தில் தைலச் செந்நிறம் கொண்ட அசைவுகளை விநாடிக்கு விநாடி மாற்றி நீலத்தில் நுழைகிறான் ஒளிக்காரன் கண் உள்ளபேதே நிறங்களைப் பிரிக்கும் உடல் அசைவில் ஒரு உயிர் பலபுலத்தன ஆகி நெளியும் கருவெளி உள்ளே வெளிகளுக் குள் வெளிசேரும் கண்ணாடிகளை அடுக் கிச் சென்றான் ஒளிவர்ணம் தீட்டுபவன். வெற்றிடத்தில் நீந்திக்கொண்டிருக்கும் நார்த்தாள் ஒளியோட்டத்தில் புரண்டு விரல் களில் மீன் நாவுகள் கரும்பிய இடத்தில் துவாரங்களில் மறையும் நிறங்களின் எதிர் வீச்சில் பூசிப்படியும் உடனடி உயிர்ப்பில் பல சாயைகளின் பரப்பில் உருமாறி உடல்மாறி நடமாடுகிறார்கள். நீலத்த வளையின் தொலிப் புள்ளிகளில் குமிழ்கள் உடையும் கருநீலம் பயத்தின் குளிரில் செல்ல காலடிக்குள் நீர் புதைகிறது. கண் இமையின் அடியில் தீட்டிய கோபநிறம் கனிந்து எரிய ஆழ்ந்து பார்த்தாள். இமைகள் படபடப்புடன் நீந்திக்கொண்டி ருக்கும் விழிக்கருவில் மூழ்கி விசும்பிய கேவலில் இடம்விட்டு நகர்ந்தாள். மீன்களை நீலநிறக் கண்ணாடி ஸெல்லாக முக்கில் பொருத்தி காதில் வைத்த அரக்கு பிரேமிற் கும் கண் பளிங்கிற்கும் இடையில் கதை உரு செல்கிறது. கோரை நாற்றுகளில் ஏறிய ஒலித் தூசுகளில் பாசியும் வெளிறிய சாய்ந் திர மங்கலும் ஒளி அளவை கருக்கி வெளிப் பட்டாள் மூலிகைப்பெண்.

தரையில் ஊர்ந்த நிழல் சுற்றும் செடிமேல் பூவின் ஆழத்தில் இதழ்பிரியும் கண்ணாடிகளில் ஒரே நேரத்தில் பறந்து கொண்டிருக்கிறாள் நார்த்தாள். நிராசைகளின் மலைச்சரிவில் சரிந்து கொண்டி ருக்கும் தனிமையில் வெளியை மடித்துத் திரும்பும் விளிம்புகளில் தெறித்த தோல்வி கள் தனியே உருள்கின்றன. பூமியில் சேராமல், பறவையை அனைத்தபடி நாடக வெளியில் நாவிதனுடன் உரையாடுகிறாள். பறக்கிற வேளையில் மட்டுமே காதலை உணர முடிகிறது நார்த்தா என்றான் நாவிதன், சாவின் அருகில் துரத்தப்படும் புனைவது என்றான் முகமூடி மண் பூசிய நடிகன். சால்வைக்கு அருகில் நிறங்களைக் குறைத்து சாயம்போன வெளிர்நீலத்தை சுருதிசேர இணைக்கிறான் ஒளிக்காரன். அழகூட்டப்பட்ட விலங்குக் கூண்டிலிருந்து வெளிவருகிறாள் தவளை இளவரசி, நிஜமிருகத்தின் ஒளியோட்டத்தில் இருவரும் சந்திக்கிற இடத்தில் ஒரு பூவை எடுத்து உதடுகளில் ஏந்தி அண்ணாந்து நாவை பூவுக்குள் நக்கித் துளைத்து நுனிமேல் மகரந்தத் தூளைச் சுழற்றி பூமியின் ஈர்ப்பை அருந்தி நாக்கை உள்ளிழுக்கும் பாம்பென திரி மறைகிறவேளை பூவை மென்று உடைத்து துப்புகிறாள் கண்களில் சூன்யம் ஏறி, பூவைத் தொடாமல் சுற்றி வரும் மிருகம் அதை நுகர்ந்து கர்ஜிக்கிறது.

செந்நிறமான மலைப்பறைகளிடையே சாவதானத்தில் விலங்குகளின் நிர்வாணத் தில் இருவரும் சேர்ந்து பாறைகளின் மெளனத்தை அருகே நெருங்கி வாஸிக் கிறார்கள் பூவை விலகிய பாறை பிளந்து வேறுசில நடிகர்கள் இன்றி நிழல்கள் உடல் முழுவதும் வண்டுகளின் நிறப்பொடி பூசி கோடு வரைந்து தரையில் ஊர்ந்த புதிர் நிழல்கள் நிறங்களாக வெளியேறிப்பின் தவளை உருவம் முகத்தில் சேரும் ரப்பர் முகமூடி வளையங்களை உடல்மேல் செலுத்தி கண்ணிகளாகப் பின்னலிட்டு மந்திர வலையொன்றை உருவாக்கி அதற் குள் அபாயத்திலிருக்கும் புலியாகத் தாவி வளையங்கள் உடையாமல் தாண்டுகிறாள் வாலில் தீப்பிடிக்க கழைக்கூத்தாடிகளின் நூல் ஏணியில் அவளும் இவனும் ஏறிச் செல்ல தலைகீழ் நிலாமுற்றம் அங்கு நடமாடும் காதலர்கள் உலகில் யாரும் பார்த்திராத கனவை நிகழ்த்த ஒளிக் கற்றைகள் கோடுகளை வளையங்களில் இசையாக உருக்கி வெண்ணிறமும் மங்க லான சாயைகளில் செந்நிறமும் ஏறி கரு வரக்கு நிறமாகி நிலவிலிருந்து சுழல் கிறார்கள்.

நாவிதனின் சவரக் கண்ணாடியில் கத்தியைத் தீட்டும் அரவம் தொடர மெல்ல மோனத்தில் கரையவைக்கும் சிறிய ஒளி மயங்கியது மழிக்கத்தியில், மூக்கின் மேல் கனவு வெளிச்சம், குறைந்த பார்வையில் தவளைப்பெண் ரெப்பையை மடித்துக் கீறிய
________________

ஆழத்தில் கண்கரு வீசிய ஈர்ப்பை எல் லோரும் காணக்கூடும். அவளிடம் போன இருநிறங்களைக் கலவியின் நாட்டியம் ஆக்கினாள். பின்பார்த்தால் ஸ்திரீருபம், முன்பார்த்தால் தவளை உருவம் துகிலும் அணிகலனும் கிழித்து எரிகிறாள் மேடையில்

பழுப்பு இலைகளால் மூடிய பருவத்தை உடலான பெண் ஒருத்தி குனிந்து சாணம் பெறக்கிய கூடையில் வெட்டிய மரக் கிளைகளை ஒடித்து மரமாக்கும் பாதை மரக்கொம்பை நட்டு பருவத்தைக் கைக்குள் முடித்திறந்து சொர்ணமாம்பழம் ஒன்றை சாணத்தில் புதைத்து வயலில் வீசுகிறாள். மறுபடி மறுபூவில் விநாசமான வனத்தி லிருந்து வேறு கொம்புகளை ஒடித்து சாணக்குமிழ் ஒட்டிய அவள் கானகம் மண்சிலம்பைக்குக் கிழக்கே - ஜனன ஒசை யிடும் குருத்திலையில் ஒருவரி வாசனையில் உதிர நீர் மூடிய மழைநாவுகளுடன் சகதி யில் நெளியும் நிறவண்டுகள் உதிர்த்த உருவம்தான் நார்த்தாள். அவளுக்குள் இரவுத்தவளைகள் உள்ளே சுற்றும் நிறங் களைக் குரல்வளையில் சுழற்றி நரம்பில் பின்னிய யுகாந்த நெருப்பில் நாக்கைச் சுழற்றும் தவளைகள் சிவந்த இசை. நார்த் தாள் அகலமான யுகாந்தநெருப்பில் நாக் கைச் சுழற்றும் தவளைகள் சிவந்த இசை, நார்த்தாள் அகலமான நாக்கில் ஆவி ஏற கால்முடமான சிறுமிக்கு சிகிச்சை செய்யும் நாக்கு மடித்த குலவை.

உடல் மண் நக்கிச் சுவைத்த மண் ஒசைக்குள் நுண்துவாரங்களில் எரியும் நீலம். மெல்ல அப்பூவை ஆவி ஏறிய நாக்கில் தொட்டு செடியிலிருந்து உதட்டால் பறித்து அதன் வாசனையை நுகர்ந்தவாறு பூவுடன் வாதாடுகிறாள். அவளை நீலப்பூ பார்த்தது. அப்பூவின் சூலகத்தில் சிறுமியும் ஆவியும் குடியேறிய விநாடியில் அவள் இருப்பின்றி மறையக்கூடும். கிழக்கில் நெடுக மண்கூரை வீடுகளின் சுற்றுச்சுவர்களில் காவிமண் கோலத்தில் எறும்புகள் ஊர்ந்து வந்து அவளைத் தொடும். பைத்திய விருட்சம் இரவில் சிரித்த பூ நிலையிலா அசைவில் பல உரு அடையும் சீக்காளிப் பெண் உடல்படும் காற்று கால்வராத சிறுமி ராத்திரி நடக்கும் வெள்ளாவி அடுப்பின் கங்குகள் அருகில் உவர்மண் வெளிச்சத்தில் நடந்துவருகிறாள். தரையில் மண் ஒட்டிக் கிடந்த நார்த்தாள் சரிந்த மண்சிலம்பை நக்கி நக்கி உள்ளிருக்கும் தாத்தாவின் மரபை நுனி நாவில் மோந்து விடைத்த மூக்கில் ஏழு கமலங்களில் ஒடும் சரஓட்டத்துடன் நாவிதன் இசையும் நாவில் துடிக்க கடல் சிலம்பை பூணிய கால்களைத் தரையில்
தட்டித்தட்டி மண்ருசி நெளியும் புழு,
padippakam

________________

கரம்பையது சிலம்பை, சேத்துக்குள் நெளியும் அரவுகளில் மூச்சுவிடும் கூரை வீடுகள் திருணை வாசல் தெருத் திருகை யில் மீன் கரும்பிய வயிற்றுக்குள் சிலம் பொன்று குருத்தெலும்பில் முள்முள்ளாய் அடுக்கிய தொன்மம்.

பொக்குமண் சொரசொரக்கும் பச்சைத் தொலிபோர்த்தி இமைமூடிக் கல்கீறலில் பதுங்கி சுடர்நாவு வீசிவீசி அழைத்தாள் சிலம்பை, பிருஷ்டத்தில் கால்மடித்து நாவைப் பிளந்து சிலம்பாக்கி குமிழும் நுரைகள் ஏறும் ஒலி நிழல்கள் தாண் வம் தலைகீழ் சிரசு ஏறிய சாம்பல் புரண்ட பிரமகபாலம் வண்ணான் கைவிரல்களில் நீரில் விரித்து அலைந்தவாறு க்ளப். க்ளப் என நீர் முழவு விநாடிக்கு விநாடி மாறும் ஒலியுடல் நிசப்தமாகி லயச்சேர்க்கையில் மழைவரச் சுருள் நாவு நீட்டி நக்கி வெப்பம் விரும்பும் தவளைகள் சிவந்த சிலம்பை, ஏகாளி கரம் ஏறிய மூச்சில் தவளைக் குருத்தெலும்பில் குரல்வளை அதிரும் சேத்துப்புண் கால்பற்றிய கண்மாய் பரப்பு நாரையின் குரல் வண்ணாத்தி மூச்சில் குனிந்திருக்கும் கல்மீது சம்புக்கோரைபட்டு அலைகிற சிலம்பை நிழல் அசையும் நீரில் உள்ளே வெளியே பறக்கும் கொக்குகள்.

பாறைகளில் உலர்ந்து மடிகிற சீலைநிறம் தேயும் சாம்பலில் கொக்குகள் கால் வைத்துக் காத்திருந்த ஏத்துமீன்கள் பச்சைக் கண்டாங்கியில் ஏறிவரும் எழுதாப் புஸ்தக ஏட்டில் கன்னி ஒரு வண்ணாத்தி நீரைத்தாளாக்கி மலராத முகை தண்டோடு பறித்து நாறும் அகவிதழ் கரந்த ஏகாளி புராணத்தில் தீட்டுக்கரை, சீலைப்பேன். கோழிச்செல், பூனைக்கண் விட்டமணி, வெள்ளை, வெட்டை, ருதுஇழை பிதிர்ந்த சீலை, முட்டுத்துணி அலசி உவர்மண் கசக்கி சுடரவைத்தாள் வண்ணாத்தி காயம் உலர்த்தும் நரிக்குடலை உருவி அலகம் கதை ஏறிய உவர்மண் வாசனை அது. முலை சிறுப்பதேன். துணி கருப்பதேன். என்றது குடலை அலசிய நரி, அதற்கு வண்ணாத்தி நரி கழுத்தில் பானை வளை யத்தை மாட்டி விரட்டினாள் காட்டுக்கு நரியின் மண்முலைத் தீம்பால் நாவில் ஒலி த்த நாளில் சீலைக்குச் சீலை ஒடும் பேன் தேடி வந்த கிழ நரிகள் உதறி விரித்தன சேலைகளை நரிகளின் மடிவிந்து வேஷ்டி யில் பட்டு உவர்மண் பூசியும் கழுவாத இந்திரிய வேகத்தில் கதை ஊளையிட்டது. வண்ணாக்குடி முற்றக்கோடு சாணம்பூசிய விரலுடன் காய்ந்த நரித்தொலி வாடை கண்ட பூனைகளும் வால் உரசிக் கடிக்கக் கடிக்கக் காட்டில் சிரித்தன ஒரிகள். சிலம்பை நகரத்து காகங்கள் ஒருச்சாய்ந்து குள்ளநரி தொலி பின்னிய கண்ணி இழைகளில் வித்துக்கு மண்சுமந்த வண்ணாத்தி கைதுக்கிப் படர்ந்தாள் வேலி முள் பந்தலில்.

ஊற்றுப்பசுக்களை மேய்க்க வந்த குணசுந்தரி கடலியின் மூத்தமகள். கூரையில் படர்ந்த பாகல், சாட்டவரை, பிஞ்சும்பூவுமாய் புடலைக்கு கல்கட்டிவிட நரிவந்து மூக்கில் நுகர்ந்த பூவில் விழித்தாள் குணசுந்தரி, காகத்திடம் சொல் கேட்டு தன்னை மோந்து வந்த நரித்த த்தில் போய் விடியலும் பனியும் சேரும் பாறைமறைவில் ஒரிகள் அவளைப் பார்த்தன துக்கத்தில் ஏன் என்னை மோந்து வாராய் ஓரி என் உயிர் வேணுமிட்டு கூப்பிட்டா நான் வாரேன் அரசடிப்புதருக்கு என்றாள் பின்தொடரும் ஆள்வாடை கண்டு பயந்து.

அந்த ஒரு கால் காகம் நாவிதன் கண்ணாடியில் அமர்ந்து காமத்தை வீசியதும் கூசினாள் குணசுந்தரி, அத்துவான காட்டிலிருந்து விரட்டிவரும் மாயமான காகமே நீ யார் வந்த தூது என்ன எனக்கு விளக்கமாகச் சொல் என்றாள். காகஉரு எடுத்த புகண்ட முனி நான் எத்தனையோ காலம் விதைபோட்ட ஆலமரங்களை விழுதாக்கி மேலமர்ந்த கிளையில் பார்த்து வந்தேன் உன்னை, பெண் சாபத்தால் ஒருகால் இழந்தேன். உன்னைத் தொட்டால் மறுகால் எடுக்கும் விமோசனம் என்று காகாவென நாவிதன் கண்ணாடியைத் தூக்கிப் பறந்தபடி உரையாடிச் சென்றது ஒருகால் காகம். கண்ணாடி தொலையு மென்று நாவிதனுக்குத் தெரியாது.

உவர்மண் வெளிச்சத்தில் சவரம் செய்து கொண்டிருந்தான் புளியமரத்தடியில், கண்ணாடி தொலைந்தாலும் நாவிதனே கண்ணாடி என்பதால் மறதியில் ஒடும் கண்ணாடியில் முகங்களைத் திருப்பி சில கண்டிப்பும் ஊர்மேல் வகைகளும் இடை யிடையே வந்துபோவது யார் எனத்தெரியாத பைத்தியத்தில் மழிக்கத்தியை நரித்தொலி யில் தீட்டிச் செல்லும் ஒசை புளியமரத்தில் சில எலும்புகளாலும் முள்ளாலும் கூடு கட்டிவரும் ஒருகால் காகத்தை அவனுக்குத் தெரியும். ஞானத்தந்தையாக ஏற்றுக் கொண்ட காகபுசுண்டனை 'அய்யனே கண்ணாடி நொறுங்க நீ அலைய வேண்டாம் சுவாமி குடிமகன் தொழிலுக்குத் தாங்கள் இடையூறு செய்யவேண்டாம்' என்றான். கழுதைகள் புரண்ட புழுதிச் சிலம்பையில் கால்களை ஊன்றி நின்றாள் தவளை இளவரசி, மூதுரை கொண்ட கிழஓரி துணி உலர்ந்த பாறையில் நாவல் கனிகளை தேய்த்து குடல் இனிக்க சிரித்த வேளை மாறுகண் காகம்வந்து பழுக்காத காய்களை சாம்பல் பூசி கருவமுள்ளில் குத்திக் காத்திருந்தது பழுக்கும் காலம்வரை. காகத்தின் ஒருகண் உருளும் ஒளிக் குள் கம்மாயில் தவளை பிடிக்கும் சிறுவர் பட்டாளம் அம்மணமாய் நிழல் ஏறும் புதர்.

அவள் தாத்தா சங்கரதாஸ் வலையில் கீழ்கடல் புலித்திருக்கை ஒன்று நச்சுவால் வெட்டிக்கிழித்தது நரம்பை. இழுத்துவந்த புலித்திருக்கை பின்னிய நரம்புகளுக் கிடையே நயனத்தை உருட்டி பயமின்றிப் பார்த்தது கிழவனை அருகாமனையில் பிளந்த புலித்திருக்கை துடித்த குருதிப் பெருக்கத்தில் எல்லோரும் கதறிய உறுமும் சிலம்பொன்று கர்ப்பத்தில் லட்சம் முட்டை கள் மின்னி ஒலிக்க உருண்டு ஓடியது வெள்ளாவி முற்றத்தில், அதை எடுத்தால் ஊழாகும் ரத்தச் சிவப்பான பவளக்கொடி அறுத்து தவளைக்கண் புகுந்த சொரிமுத்து சதுரித்த பூனைக்கண்களாய் உருளும் உள்ளிருந்து தவளைக்குஞ்சுகள் தேன் அயிரைகள் மொய்க்கும் ஜீவபிரவாகத்தில் அந்தரத்தில் ஏறி தனிதனியே கூத்தாட வண்ணாத்தி நிறம் வெளிப்பட்டது பல சாயலில்.

தானே கண்ணாடியாகத் திரும்பிய நாவிதன்மேல் அசையும் தவளைகள் ஒரு புஸ்தகமாய் திறந்து கிடந்த வண்ணாக் குடியைச் சுற்றி நீர்வளையமிட்டு சங்கத மிசைக்கும் புலித்திருக்கை செங் கொட்டையில் ஊக்கால் குத்தி துணியில் போட்ட மைக்குறி எழுத்துகள் சீலைப் பேன்களாய் நகர்ந்து ஆடைகளை மாற்றிச் செல்லும் ஒவ்வொரு தவளைக்கும் குரல் வேறு. வெல்லாவித் தீ விழுங்கும் புலித் திருக்கை உள் புகுந்த குலவை ஒலிச் சிலம்பை மண்உரு கீறிப் பதுங்கும் சாம்பல் வண்ணாத்தி. மீன் வாடை கண்ட வண்ணான் தவளை மோப்பத்தில் செல்லும் பாதை. ஆள்வாடை பிரித்து துணியைக் கசக்கி பேர்வாடை சொன்னார் ஏகாளிகள். நார்த்தாளின் தவளை உடல் கொண்ட பாட்டி நாகலாம்மாள் வீடு வீடாய் பேறு காலம் பார்த்தவள். கல்வத்தில் மருந்து மாயம் அரைத்து மூலிகை வாசனையில் மனிதரை உணரக்கூடியவள். தேரை நாக்கினால் பாய்ச்சிய மருந்தை பிள்ளைமேல் தடவி நக்கி மந்திரித்து சுகக்கேடு அகற்றினாள் நாகலாம்பாள்.

அவள் அகலமான நாசித் துவாரத்தில் இருண்டிருந்த மூலிகை மோப்பம் கொண்ட மனிதரை நுகர்ந்து தலைமுடியில் வாடை பிடித்து உடல்நிலமெங்கும் நகர்ந்து சீக்கழிப் பாள். ரோகிகளுக்கு மூலிகை மருந்து கொடுத்தாள் சிலம்பையில் அவளை ஒட்டிப் படுத்து ஊறிக்கிடந்த தவளை இளவரசி உச்சிமேல் சுழலும் புலிச்சிலம்பை அதிசயம் பற்றி பாட்டிக்குத் தெரியும். கர்ப்பக் கொடி வாசனை கண்டவள்.
________________

அப்போதுதான் இலைகள் பழுப்புநிறம் அடையத் தொடங்கியிருந்த நாளில் கூத்துச் சலங்கை வெளிச்சத்தில் வண்ணார் கூடி சலவைக்குப் போனார்கள். அங்கே வாயில் வெற்றிலை மெல்லும் கலவையாரிடம் புலிச்சிலம்பை கிடைத்த சருக்கம் கூறி பெட்டகத் தை அவரிடமே ஒப்படைக்க திருக்கைமீன் வடிவ மரவைக்குள் சிலம்பையது லட்சம் முட்டைக்குள் கருவிருக்கும் சிலம்பை நகரின் வடிவத்தை தன் சுருள் பாடல்களாக உருமாற்றிய கலவையார் வண்ணாக்குடி எங்கும் கட்டைகட்டி நாட்டையில் துள்ளி ஓடினார். குலவையிடும் திரெளபதை நேரில் வந்தாள் கனவில், அவள் கால் பிளந்த நெருப்பில் களரிகட்டிப் பரபரத்த நாட்டை துள்ளிய சலங்கைப் புழுதி, சங்கரதாஸ் உதப்பைக்குப்போய் பழுத்தானைக் கூப் பிட்டான். புலிச்சிலம்பை இதோ வண்ணா ரைக் கூப்பிட்டாள் திரெளபதை அங்கே கலவையார் பைத்தியமாகிச் சுருளும் வேகத்தில் கட்டடா... களரி என்றார். பம்பரையர்களோடு ஊர்ஊராய் திரெளபதி கோயில் பொட்டலில் ஆடினார்கள்.

நீரில் நிழல்களை மடித்த புலிச்சிலம்பை மூச்சுவிட்டு திருக்கைமீனின் உறுமல்கேட்டு நார்த்தாள் கூடவே அரிதாரம் பூசி குந்தியா னாள். சூரியனைப் புணர்ந்து கர்ணனை ஈன்றும் கன்னியானாள். அவள் பருவ காலத்தின் வாசனைகளைத் தன்மேல் நுகர்ந்து பாட்டி நாகலாம்பாள் மீது பிய்த்து எடுத்த மண்ணில் நூறு பட்சிகள் செய்து நுனிக்கொம்பில் மேலமர்த்தினாள். குட்டத்து நீரில் குவளை மலரெடுத்து பட்சி நிறம் பூசினாள். கற்றாழை நாறும் பாட்டி உடம் பில் சிருஷ்டிமண் பொங்கிப் பிதுங்க பச்சிலை தட்டிச் செய்த மண் சிலைகள் வெள்ளாவி மணத்தில் அசையும். உப்புத் தரையை நக்கி நாவினால் தவளை உருட்டிய குலவை ஒசையுடன் ஊர்க்காளைகள் கொம்புகட்டி ஜல்லிக்கட்டு நடந்த பொட்ட லைத் திரும்பவும் களிமண்ணில் சுட்டு வடித்தாள் வெள்ளாவி அடுப்புச்சாம்பலில், எச்சிலிட்ட பூச்சி விட்டில் எடுத்த மண் தொட்டு குருவி வகை பொடிப்பொடியாய் வடித்தாள் தவளை இளவரசி நிறமண் விரல்களை நெளித்து காடை, கவுதாரி, அன்றில் முகங்கீறி மற்றொன்றை ஒட்டிப் பறக்கவிட்டாள்.
உள்ளே மண்சிலம்பை வடித்தாள். களிம்பேறிய பச்சைக்கு நீர்பாசி நார் எடுத்து மூக்கினால் சுற்றி கணவாய் களின் ஒசையும் காரிருள் வரும் கடலும் குடித்த சிலம்பைத் தெருக்களில் குமிழ்கள் ஒடும் நிழல்கள் கூட்டமான யுத்த வீரர்கள் மற்றும் உடையாத சிலம்பைக்குள் குமுறும் பெண் சிசுக்கள். கொடி அறுபடவில்லை இன்னும் நாக்கை நீட்டி தாய் முலைக் கருப்பில் சீம்பால் கசிய தன் பிள்ளைகளை சிலம்பிலிட்டு விதிர்த்த முலைக்கன்னியர்கள் தீப்பந்தம் சுற்றிச் சிலம்பெறிந்து ஆடும் குரவை ஆட்டத்தில் பொங்கிய கடல்தான் கருகருவென காலந்திருகும் உதப்பையில் இருந்து வந்த பரம்பரையர் கலவையார் சுருள் ஒடும் சிலம்பை பொங்கிய தெருக் களில் அரவுகள் படியேறி தாமரைக்கல்மீது சிரசு துணித்த கொடுவாள் பலிஉதிரம் கேட்டு கம்புக்கூட்டில் வளைந்து முன்பாகம் சென்று சிலம்பை கேட்டு வாதிடும் இருளில் ஒடுகிறாள் ஆவி ஏறிய சிலம்பை, உடுக்கை ஒலி பின் தொடர கடல்கூடிப் பெருகிய கூச்சல் மெல்ல வடிந்த புயல் தூங்கும் சிலம்பை, நாக்கில்லாது ஒழிகவென அக்னி சாபத்தால் பிளந்த நாவுடன் பூச்சிகளைக் கவ்வி புராணம் உரைத்தது தவளை. மெல்லிய கைகால்களில் பாயும் வேகத்தில் திரிநாவு சுடர அக்னி மடுவில் ஒளிந் திருந்தாள் நார்த்தாள். கபாலத்தை நீக்கிப் பார்த்தால் தவளை இருக்க நீர்வந்து சுற்றிய கதையைத் தாவி ஓடினாள் இளவரசி குமிழ் களாய் பச்சைநிறத் தொலியும் அடிவயிற்று மஞ்சள் பைகளில் காற்றேறிச் சரமூச்சு விட்டாள் மழைவேண்டி பசை பூசிய பகல்

சுருங்கி இரவு காணும் சுவாசத்தில் எல்லா மனிதரும் உருவிழந்து முன்சென்றார் வாசனையில், நீரருகில் விருட்சங்கள் கனிந் திருக்க கல்லுக்குள் தேரை தவம் முறியாமல் சிற்பம் சேராது. நிறம் ஏழில் நாவுநீட்டிப் பிரிக்கும் பிளந்த நாவில் புணர அழைக்கும் தவளைஒலி சுழலும் இரவில் கூத்தின் உருவங்கள் நீளும். சுருள் நாவில் சத்தம் ஸ்பரிசம். நடந்தவை கூறும் தேரையின் ஆருடம்

தவளையின் கைவிரல் நாரைபடும் ராத்திரி விளக்கில் வெளிச்சத்தை விரலாக்கி புற்றுக்குள் இருட்டு அகல் ஒளியில் கிழநாக லாம்பாள் கிழிந்த ஆடைகளை ஊசி வெளிச் சத்தில் ஒட்டுத் தைக்கிறாள் தேரைத்தொலி யுடன். அவள் உடல்வாசம் பூசிய பூவின் வாசனை அருகில் மழைப்பூச்சிகள் இருளைக் கக்கி ஒளி விழுங்கி பெருக்கிய கருஒலி மண்சிலம்பையில் ஒடிய நார்த்தாள் காலடிகள் தவளையைச் சுற்றிப்படரும். ஆடுவது யாராக இருக்கும். மழை எனும் சிறுமி கால் கொலுசு சில். சில்லென அந்தரத்தில் இருட்டி மின்னி தேரைகள்
இதழ் 2 / 2002 & 15
________________

கால் அகட்டி எழும் நீர்பெருக்கு நாகலாம் பாள் மழையின் ஊடே வான்கீறி சடை சடையாய் வீழும் இருட்டைப் பார்த்தாள் கழியில், ஊர்விட்டு ஊர்போகும் பம்பரையர் களோடு மண்சிலம்பை உதறிய வெள்ளாவி வெளிச்சத்தில் ஒத்திகை. சங்கரதாஸ் ஈரம் ஏறிய அடுப்பில் கங்குகள் சுழலும் தழலில் ஆடுகிறான் வெள்ளாவி முற்றத்தில், ஆடைகள் உவர்மண் தகிக்க எழுந்தன நா. காடி இருள் சேரப் பயங்களும் ஓங்கிய காற்றில் ஆட்டத்தில் நெளியும் வெளிச்சத்தில் அரிதாரம் பூசிய வண்ணான் அர்சுனன் அம்புவில் அதிர வாள்புராணம் ஏறி நுங்கு நுரைதள்ளி ஒடும் அஸ்திரம் தைத்த உடல்களின் துரியோதனாதியர் குவியல், எத்தனை பூ அழிந்த துணி கிழியும் ஒசையில் எழுந்தன காடுகள், கம்பும் சோளப் பயிர்விடும் குருத்தின் ஒசை கிழியக் கிழிய நிலம் ஒரு பூ அவிழ்த்து கரதநீர் வாசனைகள் பூசிய பழைய சேலைகளை உடுத்தி துர்கர்ந்தம் ஏறிய கூத்து மத்தளம் விம்ம முகவீணை இழைத்த மோகனத்தில் துரியன் தனரேகை கரைந்து காடு பூத்தது. எங்கும் அவன் உடல் மண் பூசிய விரல் களில் தனரேகை கீறிய ஆழத்தில் குமிழ் விடும் உதிரத்தி அலைகிறது சிலம்பைச் சுற்றி.

வண்ணாத்தி ஊசி வெளிச்சத்தில் பின்னித் தைத்த கிழிந்த துணி நிறங்களில் மெல்ல பழுத்த விடியல் பனி யோனி வாடையுடன் சீலை நனைய அழுத பொன்னுருவி. கர்ணன் களம் கிடந்த தேர்உருளை கீறல்விட சர்ப்பங்கள் சீறிய மண்விழுங்கி ஒசையிடும் தி வெளிச்சம் அங்கே கைக்கூட்டுக்குள் பீடி பற்றவைத்த சூட்டில் ஊதியூதி நாறும் புகை வளையத் தில் களரி ஆடும் செந்தீ கண்ணிர் உதிர மாய் சிதறி ஓடும் நார்த்தாள் மணிகளில் மண்சிலம்பை பரபரக்க கலப்பை மண் புழுதி கடிக்கத் திருகிய கழல் ஓசை நடுங்கிய களிநில முற்றத்தில் ஈரமழை வண்ணான் விரல்களில் சலங்கை குலவையிட்டு உரசும் மழை.

பூவாடிய தீட்டு உதிரம் ஆடை களைந்த தளரார் வீடுபோய் எடுத்து வந்து தாழிகளில் முறுக்கிக் கசக்கித் துலக்கிய ஒளிமுகம் சிலம் பையது. புராணம் பிசைந்த கம்மஞ்சோற்றுக் குழியில் கூத்தர்கள் கம்மாய் மீன் குழம்புவிட்டு விழுங்கிய தொண்டைக் கடியில் சஞ்சரிக்கும் ராகங்கள் உடைமாற்றி வாள் வீசித் திரும்பும் மரப்பிடிவாட்கள் மோதிய சொல் சீறும் வெள்ளாவிப்புடை வெளிச்சத்தில் நிழல் மிதக்கும் ஆழத்தில் இரவுவாடை நார்த்தாள் விளக்கை ஏந்திப் பார்த்தாள். அவள் நாடிகள் நூறு முளைத்த தவளைகளாய் மழைக்காற்றில் படர்ந்து இருட்டில் வெளியேறி நக்கிச் சுழற்றும் மண்ருசி. சுடரில் பிளந்த கால்களுடன் போ. போ. நார்த்தா. போ...' என்றது மோகினி, அவள் போனாள் கரு இருட்டும் மழையுடன். உள்ளேவா. உள்ளேவா என்றாள் பாட்டி நாகலாம்பாள்.

எட்டிய தொலைவில் மூங்கில் பாவிய கூரைகளின் வரை உருவங்களில் கழுதை கள் நிழல் பேசியது. நத்தக்கூறு மண்சுவரில் கடந்தல் துவாரமிட்டு வெளியே முகம் வைத்து உருட்டிய கொடுக்கில் நார்த்தாள் பார்த்தாள். மழைப்பூச்சிகள் ஒட்டிவந்து இறகுதிர்ந்த பூமி நிறங்களைப் பகிர்ந்து போயின தவளையிடம். கரும்பு துளை மருங்கில் சுருளும் காற்றின் தூக்கத்தில் செவிப்புலம் சிவக்க மயங்கித்திரியும் தவளை இளவரசி மண்சிலம்பை நக்கி நாசியால் வாசிக்கும் பழக்கம் உடையவள். பழுப்பு நிறங்கொண்ட சிலம்பை கழட்டி விளக் கருகில் வைத்தாள். உள்ளே கரு அலை நுகர்ந்த கண்களால் ஊர்ந்து செல்லும் மழை எறும்புகள் உவர்மண் வெளிச்சத்தில் புற்றாகும் மண்சிலம்பைத் தோண்டத் தோண்ட ஒளி.

கருவிளக்கில் கால்பட்ட எறும்புகள் இருட்டில் பதுங்கிய வைரமாய் கண் அசைக்கும். மழைபொங்கிய எறும்புகளின் சுவாசம் ஊர்ந்த ஏகாளிபுராணம் புரண்டது. மழைக்குளிரில் கதகதக்கும் வாசனை பிளந்த தெருவில் மணல் குழிகளில் ஒடுகளில் சரியும் நீர் விநோத உணர்வுகளை எழுப்பக்கூடும். ஏனோ மழைத்துவாரங் களில் இருட்டிய சிலம்பை குளிர்கிறது. தவளைகள் காமம் கொண்டாடி அடங்காத இரவில் குரல் பல சுழலும் கண்களில் எறும்புகள் கவர்க் கீறலில் வெளிப்பட்டு ஆழ்ந்த தூறல் ஈரத்தில் உதிரும் மண் ருசியில் பேசித்திரியும் கோரைப்பாயில் படுத்து வெளுத்த துணிப்பொதிகளில் மனிதஉடல்கள் விசும்பி எழுந்தன துணி போர்த்தி உருவமின்றி வசிக்கும் ஆடை களில் தன்னுர் மனிதர்களின் வாசனை களை மோப்பத்தடத்தில் வரைந்து கொண்டி ருக்கிறாள் நார்த்தாள். சுரத நீர் வாசனைகளில் ஒடும் சேலைகளில் காமம் நூல் பிரிந்து சொன்ன கதைகளில் கூத்தின் குரல் வளை சுவை ஏறிய நாக்கில் கனவு களை மோதி கலவிகளில் தோன்றும் பழைய ஆவிகளை அழைத்து அழுக்கு ஆடைகளை உடுத்தி புராணமேறும் வெள் ளாவி முற்றத்தில் பிளந்த கால்களுடன் வருகிறாள் மோகினி.

சவரக்கண்ணாடி உடையும் இருட்டைத் திறந்து தவளைகள் அசையாமல் பார்த்துக்கொண்டிருக்கும் மின்னலில் கம்மாய் நீர் கெத்துக் கெத்தென்று அலையடித்து இரைச்சலிடும் வான்கருவில் உருளும் தேர்ச்சக்கரங்களை அர்ச்சுனன் உடைத்து வீசும் ஆரங்களில் சுடர்வீசிய காற்றின் ஊளை. பழுத்தான் விரல்களில் ஊர் ஆடைகள் பட்டுக் கிழிபடும் புராணத் துகில் உடுத்தி கரைமேல் போகிறான் பம்பரையர்களோடு. உடைந்த சிம்னி வெளிச்சத்தில் கீறிய பீங்கான் நுனியில் கரித்தடம் புகைவிட்டு சுடர்மேவி நாக்கை நீட்டிப் பாடிய ஈசல்படை சிறகுவிட்டு கீழ்பாயும் மண்வாசல்.

ஊருக்குள் பூனைவேட்டை மும்முரமாய் நடந்த இரவில் சிதறி ஓடும் காட்டுக்குள் குழந்தைகள் அழும் சப்தம் கழுதைகளை சோகத்தில் ஆழ்த்திவிடும். எறும்புகளைக் குனிந்து பார்த்த கழுதை முகம் மழைக்கால உணர்வுகளில் வீடுகளுக்குள் தலைநீட்டி வெளியேறும் மனிதர்களின் தடத்தை தொடர்ந்து பூனைகளின் வாசனை பயத் துடன் கால் வைத்தது. மண்முறுக்கிய துணிகளின் உவர்வாசம் ஈரமணல் ஏறியது மெல்ல. புகைவளையும் வெள்ளாவி அடுப்பில் சுள்ளிக்கட்டைகள் உருண்டு முணுமுணுக்கும் கங்கு உறைகிறது. சாம்பல் மூடிய இருட்டு, தெறிக்கும் சலங்கை வெளிச்சத்தில் காட்டின் நிழல் வந்து மதில் பூனையை அலைத்தது வேட்டைக்கு வண் ணார்களும் அய்யனும் கொதிக்கும் அடுப்பில் புனைந்த சேலைகளை ஈரத்துடன் அடுக்கும் உரையாடலில் ஒத்திகை இரவை தீக்குள் பதித்து கருப்பு இருட்டில் வேசி மகன் விதுரனைக் கூப்பிட்டான் வெறுந் தெருவில் சுவை முள்ளை காட்டிலிருந்து கொண்டு வந்த வேசிமகன் விதுரன் அடுப்பின் வாயில் திணித்த சடசடப்பில் கொழுந்துவிடும் காமத்தில் குமிழ்நாவுகள் உயிரைத் தீண்டிப்புரண்டு ஒசையிடும் சரசரப்பில் நீலஒளி புலரும் நெளிவில் குழி விழுந்த பெரிய கண்களால் எதையோ ஸ்பரிசித்தாள் தவளை இளவரசி, நீலஒளி வெள்ளாவி மணத்துடன் நெருங்கி வந்து தொட்டது அவளை முகத்தில் நீலம்பட அய்யனும் திரும்பிப் பார்த்தான் தவளை மகளை. 'என் அரசாணி மகளே இன்னும் தூங்கலியா ராசாத்தி. உன் பொம்மை களை எடு, சுட்டு உலர்த்தி தாரேன் கொண்டா! வேண்டாம் போ...' முனகினாள்.

நெருப்பில் சுட்ட மண் உருவங்கள் திரெளபதி கோயிலில் அசைவதை உணர்ந் தாள். அங்கு விளக்குச்சரம் போடப்போகும் அக்காளின் கிளியஞ்சிட்டிகள் இருந்தன கல் வாசலில், மஞ்சள் சரக்கொன்றை அடுக்கை நாசிமேல் நுகர்ந்தாள். பூவுக்குப் பூ வாசனை மாறும் நாசியில் ஊரின் குணமிருக்கும். தெருவுக்குத் தெரு வாசனை பேதமானது.
________________

ஊமத்தம்பூ நிறத்தில் பெண்களின் சுரதநீர் அலையும் துணிஏறிய நூல் பிதிர்ந்து ஒவ்வொன்றாய் விரல் தடவிக் கோர்த்தாள் சால்வையில், சிலவாசல் வண்ணாத்தி நுகர்ந்த ரத்தத்தில் குழிவிழுந்த சாயலை கோர்த்தாள் ஊசியில், மண் கூரைகளில் பழுக்கும் ஒலை ஒடியும் ஒலியில் கல்தூண் பேசியது. செங்குளவி ஏறிய கம்மந்தட்டை நிரைசலுக்குள் சுட்ட மண்பானை அடியில் பிள்ளைப்பூச்சிகள் ஈரமண் துளைத்து குவி சலில் மூக்கு வைத்து கோடுபடும் சகதியில் கால் வைத்து ரேகை நெளியும் நார்த்தாள் ராச்சோறு எடுக்கப்போனாள். பனை விட்டத்தில் ஊஞ்சலாடி அவளை அழைத்துப்போய் இருட்டில் ஒரு கவளம் ராச்சோறு அவள் கைபட வாங்கி சத்தியம் செய்த நாவிதன் மகன் கழுவன் ஈயப் பானையுடன் அடுத்த வீட்டில் நின்று நார்த் தாள் உடல்பட்ட வாசலில் வாசனையை ஆழ்ந்து மூச்சுவிட்டு மேலத்தெருவில் மறைந்தான். மண்கூரை வீட்டில் புரை விளக்கிடம் நார்த்தாள் முகத்தைப் பார்த் தான் நாவிதன். மழிக்கத்தி வெளிச்சத்தில் நாவிதன் வளர்த்த பூனை வெருகாகி ஒடும் காமத்தில் மரமேறிக் கூப்பிடும் உங்ங்ா. உங்ங்ா. என்ற பச்சைப்பிள்ளை கரையும் அழுகுரல் இருட்டில் கலவிகள் துவங்கின ஊருக்குள் ஒடுகள் தாவியோடும் பூனை களுக்குள் சீற்றம் காமத்தின் மதில் இருட்டில் கால்தடம் பதியாமல் கண் பளிங்கை உருட்டிச் சிரிக்கும் பச்சை பூவாசனை. கால் அகட்டி யோனிப் பூ ஒன்று சுருட்டி தைலக்குமிழில் சுரதங்கள் கூப்பிடும் சுருளோசை. ஆடைகளைக் களைந்து மண்பூசிய உடல் தொட்டு உடல் நெருங்கி வளையும் நிலத்தடிச் சிற்பங்களின் மோப்பத்தில் நாவுகளை பூமிதொட்டுப் புணரும் கலவி வாசனை.

அழுக்கெடுத்து கழுவிய விரல்களில் தனரேகை பாய்ந்து பிளவுபட்ட நாக்கில் சித்திரம் கொண்ட இளவரசி சுழிகிறாள் தவளை உருவில், நாவிதன் மகன் கத்தி யுடன் போய் பழுத்தானுக்கு முகச்சவரம் செய்து கூத்துக்குப் போகும் நாளில் நார்த் தாள் முகம் தொட்டான் சவரக் கண்ணாடி யில், எறும்புகளுக்கு இளவரசியைத் தெரியும். அவள் மூச்சுவிடும் சுவரில் ஏறுகின்றன. சுடலி அருகில் படுத்தவாறு வெள்ளாவி நெருப்பைப் பார்ப்பதில் வாசனை பரவிக்கொண்டிருக்கும் பச்சை வீசும் உடல்களின் உப்புக் கோர்த்த அசைவு முனகல், சுடுதுணிகளில் மோகக் கள்குடித்த நெருக்கம் புனைந்த அரவுகள் சீறி விசிறிப் பிணையல் பட்ட ஆடை முறுக்கில் வண் ணான் நாசியில் யார் யாரோ அரூபமாய் அலைகிறார்கள் வெள்ளாவிமேல் வெள் ளிய உவர்மண் பூசிய தலைமுடி ஒன்று கருகாமல் உருகும் ஈர வெம்மையில் உயிர்படுகிறது உறவுகளில் சுருண்டு. பானையில் கொதிக்கும் நீரில் ஊரே பலகுரல்களில் பேசியது. மண்குரல்வளை ஆவி ஏறிக் குலவையிடும் அழுக்குப் பானையில் உவர் ஆடை முறுக்கும் கதைதான் இருட்டில் நறுமணம் கொண்ட பூக்களாய் பூத்து உடையும் யோனிகளில் சிதறித் தெறித்த விடுமணி வடுக்கள் தீட்டுக்கறை குமுறும் பூமி ஆங்காரம்.

வெருகுப் பூனையின் சுக்கிலத்தில் ஏறிய அழைப்பு எங்கிருந்தோ அலை. பூனை களின் சுரதநீர் அழுகுரலில் புரளும் கிணத்துமேட்டில் ஒரு ஸ்திரீ தலைச் சூலுடன் வந்து பானைவயிற்றில் பேசும் பிறவாத சிசுவிடம் பேசி கிணத்தில் தெரியும் வனத்தில் மான் மடுவைத் தொட்டு அதன் பாலைப் பீச்சி பூனையிடம் நீட்டி தன் பாதையைத் தொடர்கிறாள்.

சுவர்களில் நீர் சுவரிற்று. சிம்னி விளக்கில் சுற்றிக்கொண்ட மழை எறும்புகள் அருகில் கொம்பில் வைத்த நூறு பட்சிகளை எடுத்து ஒவ்வொன்றாக வெளிச்சத்தில் வைத்தாள். நாவிதனுக்குள் மறைந்திருக்கும் சவரக் கண்ணாடியில் ஆந்தையின் மூச்சு கதித்த குரல். கடர் மெல்லத் தொட்ட பட்சிகள் கூசி ரெக்கைகளை அசைத்து நிறங்களை உதிர்க்க படர்ந்த உலகம் வேறாக இருக்கும். எறும்புகள் தலைமுன் கொடுக்கை நீட்டிக் கடிக்கும் ஆசையில் பட்சிகள் மேல் இச்சை கொண்டன. இன்னும் அவள் நாவிதன் கண்ணாடியை அகற்றாமல் இருப்பதில் தனியே ஒடும் பார்வையில் என்ன நடந்து கொண்டிருக் கிறது. மண்பட்சிகள் உயிர்பெற்று ஆழ்ந்த பலபுலத்தன ஆகி சிறகை விரித்து விளக்கைச் சுற்றிச் சுழலும் நீலத்தில் மிதந்து கீழே மேலே எழும்பின நீந்தி, பட்சிகள் இறகுகள் உரசும் பாதையில் கழுவன் சவரக் கத்தியுடன் வருகிறான். இவ்வேளையில் சுடரில் மெல்ல நீலஒளியாகி குளிர்நீலச் சிறகுவெளி எடையற்ற பறவைகள் ஒன்று சேர்ந்து பல வளைவுகளில் திரும்பிச் சுழலும் முக்கோண வடிவத்துள் சுற்றிச் சதுரித்து வந்தன அடுத்த சுற்றில், நாலாவது சுற்றில் சிதறாமல் வடிவம் மாறும் நீல வெளிக்குள் யார் இருக்கிறார்கள். சிதை வதும் வடிவம் கூடுவதும் பட்சிகளின் பாதை யில் மறைமுக வாசனை செல்லும் விளக்குச் சிமிழ் மஞ்சள் இறகுகளுடன் மனம் குவிந்து படபடத்து எல்லாப் பட்சிகளின் குரலிலும் பேசியது. எங்கிருந்து வருகிறீர்கள் வடிவத் துக்குள் வடிவம் சேர்வதை யார் சொல்லித் தந்தார்கள் என்றது சுடர் நாவு தன் உடல் நக்கி பறவைகளுக்கே உணரமுடிந்த பாதை களே தன் அகப்பளிங்கிலிருந்து கதிர்களாக வெளிப்படுத்திய கருப்பு எறும்புகள் பின்னலான மாற்றுப்பரப்பில் கண்ணி களாகப் பின்னி வரைந்து செல்கின்றன வேகமாய்.

சுடரை மூடிய சிறகு நிழல் பொம்மை களைத் தூக்கிச் சென்று தவளைக்குள் மறைந்தது. கண்ணாடியில் தூங்கிக் கொண்டிருந்த தெருக்களில் இருந்த சாயை கள் நார்த்தாளின் துயிலில் பெரிய பெரிய பாதங்களை வைத்து நடந்து வரும் கழுதை களின் மெளனமான இருட்டு, புலம்பும் விருட்சங்கள் வாசனை வீசி ஊடுருவும் இரவு வெளியிலிருந்த பட்சிகள் களிமண் விரல்களில் அசையும் நாவுகளை நீட்டி விரியும் கண்ணாடியில் தீண்டியதும் சேவல் அமர்ந்திருந்தது நீலமும் சிவப்புமாக எரியும் இறகுகளுடன். ஊரைத் திறந்த உவர்மண் வாசனையில் பேய் பிடித்த புளியமரங்களில் அரளிப்பான இருட்டு கவிந்து கிடக்கும். காய்ந்த கொப்பில் கள்ளி ஒடித்து கூடு கட்டும் காகங்கள் ஆற்றோர மீன்உரசும் கல்லில் நீர் சலசலக்கும் ஒசை கேட்டு அடியில் சதாவும் அலைகளை நெய்து கொண்டிருந்த தவளை இளவரசிக்கு முத்து மாலை திருடிய காகத்தின் நிழல் பார்த்து திருமஞ்சன அறையில் கூச்சலிட்டாள் கிழராணி, காவலர்கள் காகத்தை விரட்டி வரக்கூடும். நாகவன் ஆலமரத்துப் பொந்தில் ஒளித்து வைத்த சவரக்கண்ணாடி திரும்பிப் பார்த்தது முத்துமாலையுடன் வந்த காகத்தை.

பகல் குனிந்து ராணியரின் பட்டுகளை முறுக்கும் மணல் விரிப்பில் உலர்ந்த கழுதையின் சோம்பல் அந்தப்புரத்தில் இருந்த பட்டாடைகளில் பதியும். கண் தூரத்தில் படிகிற உருக்களை துடைத்து வாசனைகள் ஏறும் உவர்மண் பார்வையில் மணலை நூலாக்கி முடிவிலா சால்வை நெய்து கொண்டிருக்கிறாள் தவளை இளவரசி, மோனத்தில் கவர் ஒரம் நின்ற வாறு சிம்னி லாந்தரில் முகம் நீட்டி நெய்து வரும் சால்வையில் மறைந்துபோன பொம்மைகளின் கபாவத்தில் பழுக்கும் காலத்தில் கழுதைமேல் நூல் கொண்டு போன கூத்தாடிகள் காற்றில் அலையாகி இவ்வளவான இழைகள் பிரியும் ஊர்களின் அழுக்கு வாசனைகளை தவளைகளிடம் கொடுத்தார்கள். யாரும் இல்லாத இடத்தில் நகரும் அழுக்குச் சால்வை தோன்றி பேசியது. அதில் கீதாரிகளின் ஆட்டு ரோமம் வரையாட்டின் மூச்சும் கம்பளி உரோமத்தில் விடியலான பனியும் ஊதைக் காற்றின் உளறலும் நிறங்களாக உலர்ந்த நூல் கழைக்கூத்தாடியின் அழுக்கில் புரட்டிய புழுதி இழைகள் கோர்த்தாள் நார்த்தாள். சணல் பிரியும் மணலும் பறவை

இதழ் 2 / 2002 : 17
________________

யிட்ட உதிர் இறகும் இலைகளில் மறையும் பொழுதுகளின் அடுக்கில் பின்னலாகும் சால்வையிது கதைக்கொரு நூல் எடுத்த ஆச்சிக் கிழவிகளின் சீலைநூல் கிழித்து பொத்தலை வெற்றிலைக் கரையில் தீராமல் காரிய புகையிலை வீச்சத்தில் நெய்து வந்தாள் புதிர் நிழல்கள் படிந்த சால்வையை, கிழிந்த சேலைக்குள் பருவப் பெண்விட்ட கெண்டை மீன்கண் கழிந்த நூல் எது? முட்டுத் துணிக்குள் நாறும் வாழ்வுக்கு ஊத்தைக்குழியில் மண் எடுத்து உதிரப் புனலில் நூல் எடுத்து உருக்கிச் சேர்த்த சால்வையில் சுழன்று குரூரமெதுவெனக் குழம்பும் நூல் பிரித்தாள். எச்சில் தொட்டு இழை முடித்தாள். பொம்மைகள் சிதைந்த சால்வையில் பிதிர்ந்த நூல் நீரில் அலையாகி தொடைச் சதையுதடு பிளந்த மீன் கண் ஒடும் சுரதநீர்ப் பாதையில் சால்வை நெளியும் அருவுரு தவழ்கிறது. அதில் முங்கிய நாவிதன் நுரையீரலில் பீங்கான் சவரக்கத்திகள் நொறுங்கி மீன்செதிள் அலையும் முகக்கண்ணாடி கவிழ்ந்த சால்வை.

தவளை உடல்களைந்து உலர்த்திய சிம்னி வெளிச்சத்தில் சொரி சொரியாய் நிறம்போன செதில் காடுகள் அசையும் தவளை விரல் பதியும் நீர்சலம்பல் தறியின் குரலாய் கேட்டு ஆடைகளில் முகம் புதைத்து சால்வையின் விநோத முகத்தில் விழித்திருந்தாள் நார்த்தாள். நிறம் அழிந்த சால்வைமேல் தவளைத்தொலி படர்ந்த இரவு நெடிக்க தன் குஞ்சுகளைத் தறிமேல் சிதறிவிட்ட குரல்வளைச் சுருள் ஓசை நூல் வழிகளாய் திரியும் மண் அரித்த பொம்மை களின் விரல் நகங்கள் கூர்ந்த நீலம், சால்வையில் முகம் வைத்து சுவாசித்தாள் நார்த்தாள். செம்பட்டை நிறக்கண்களால் திரும்பும் பொம்மைகள். இவ்வேளை ஜன்னலைத் திறந்துவிட உள்ளே சாயும் நீரில் தறியில் நீந்தும் பொம்மைகள் முகத் தில் சுருங்கிய பசி மயக்கம். கண்தாள மானாள் நார்த்தாள். காதுகளை அசைத்து அண்ணாந்து நடுங்கும் நாவித மகன் உதடுகளைத் திறந்து வீசிய நாவுகள் பிளந்து ஒட்டும் மண்வேருடன் உருமாறும் பூச்சி உடல்கொண்டாள் நார்த்தாள். பாலத்தின் குரல்களில் நீரின் துயர ஒசைகளைக் கேட்டாள். அதிர்ந்து பாயும் உணர்வுகள் ஈர்த்தன பாலத்தை எட்டிப்பார்க்கும் சிறுவர் களின் நிழல் குனிந்திருக்கும் பாலத்தின்மீது தேய்பிறை அழுத்தமான இருட்டில் கரையும் சாயல் கொண்ட உருவங்கள் நீரில் அலை யலையாய் உருமாறிவிடும். கருநீரில் உடைந்த நிலவு நுரைபொங்கி நெளியும் புலம்பல், தவளைகள் பதியும் கனமான இரவுக்குள் சிவந்த இசை நாவுகளை வீசிப் பிளக்கும் முகவீணையின் நாவுகளை நீருக்குள் அலைவது யாரோ. பாலத்தின் ஆழத்தில் அமர்ந்து நாவிதன் வாசித்த முக வீணை கனமான நிலவை நகர்த்திச்செல்லும் நீர்பாதையில் மூச்சு சுருள்கிறது அரவு களாய். பாலத்தின் மூன்று கண்கள் என்னேரமும் பாய்ந்து கொண்டிருந்த நீரின் இயல்பில் பாசிபிடித்து கருத்துக்கிடந்த சால்வை மெல்ல ஜலத்தில் இறங்கி கண் பாலத்தின் அருகில் போய் கரும்பாசி பேசு வதைக் கேட்டாள் பாலத்தில் காதுவைத்து. கண்ணுக்குக் கண்பாலம் அதிசய ஒலி, எந்தப் பக்கமும் அதிரும் பிரக்ஞைகளுடன் விதியில் ஒசை எழுப்பி திசைகளில் தாவி நெளியும் நுரைக்குமிழ்களில் நிழல்கள் உருண்டு ஓடுகின்றன ரவியத்தில், எல் லோரின் நிழல்களும் பாலத்தின் கண்களில் உருண்டு சுழன்று ஒடி ஒடித் திரும்பி முளைக்கின்றன மாயத்தில், ஒரு குமிழில் நார்த்தாள் தன்நிழல் கான பொம்மைகள் அதிர்வுகளுடன் பறந்து செல்கின்றன விண்மேல்.

பாலத்தில் ஓணான்கள் கடித்த நார்த் தாள் உடல் மாறி வந்த நிறத்தில் மண்பத்து பூசி பலவகை மருந்து மாயம் பார்த்தாள் ஆச்சிக்கிழவி அந்த ஊர் பால் உள்ள மரங்களின் கொப்புகள் அடியில் ஓணான் மறைந்து கொண்டு நார்த்தாளைக் கூப் பிடும். பொம்மைகள் ஒளிந்திருக்கும் கோட்டையிலும் கற்று ஊர்களிலும் சாணாங்குளக்கரை அரசமரம் ஆலமரத் துடன் பின்னிக்கொண்ட இருநிழல் ஓர் உயிராகி தாயம் விளையாடிப் போன மாட்டுக்காரப்பிள்ளைகள் நார்த்தாளின் முடிவிலா சால்வை நெய்யும் இரவுக்குரல் கேட்டார்கள் ஜன்னலில் எட்டிப்பார்த்தால் துங்காமல் விளக்கு ஒளியில் நூல் ஒடும் பாவுகளில் நகங்கள் பளிச்சிட சால்வையிடம் பேசினாள் நார்த்தாள். குழந்தையில்லாத பெண்கள் அவளிடம் கிழிந்த துணியும் அறுந்த நூலும் வாங்கித் தொட்டில் கட்டி மண்பொம்மைகளை ஆட்டிவிட்டு பலநிறத் துணிகளும் மணிகளும் கட்டி ஆடவிட்ட வெண்கல ஒலி சுழன்று மரங்களில் சுற்றிக்கிடக்கும். அங்கே நார்த்தாள் தனிமையில் தவளைத் தொலி உடல் உறித்து ஏறும் காற்றின் குளிர்ச்சியில் தொலி யில் சுரக்கும் தைலங்கள் பிழிந்து சால் வைக்கு உயிர் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். அதை யாரும் பார்த்துவிடக் கூடாது.

துவரைமார் உருவும் பருவத்தில் இரு செடி பிடுங்கி காய் தின்ற பால் வாய்ஒரம் கசிய சாணாங்குளத்து திரெளபதைக்கு தொட்டில் கட்ட ஸ்திரீகள் வந்தார்கள் உச்சி வேளை வரப்பில் நீர்முள் பூத்திருந்தது. சங்கம்புதருக்கு மேற்கே பட்டத்தம்மா ஊருணியில் தேங்காய் நீராய் இனித்த அத்துவானத்தில் குணசுந்தரி பொட்டல் பச்சேரிப் பிள்ளைகளோடு அலாக்கல் விளையாடிப்போன தடத்தில் துவரங்காய் தொலிபார்த்து வந்த முனி அடித்து சிலையா னாள் மலட்டம்மா. இது நமக்கு ஆகா தென்று வழிநெடுக புல்லுற்றுப் பசுக்கள் சொல்லியும் கேளாமல் ஊருணிக்குள் துங்கும் நீரில் முனி பார்த்து அரிச்சல் பட்டு பயந்து போனாள் குணசுந்தரி, காய்ச்சல் வந்து வருத்தமடைந்த இருட்டில் தொர மக்க சாவடியில் வண்டிகட்டி கேட்டுப் குரு சமாதிக்குக் குணசுந்தரியைக் கூட்டிப் போன அரசப்பன், பழுத்தான் சலங்கை கூடவே லம்புவதைக் கேட்டான் காட்டில், வண்டியில் உசார் இல்லாமல் கிடந்த அக்காள் அருகில் தவளை இளவரசி கோட்டுரில் மண் எடுத்துப் பூசினாள் கைகால்களில், சாமாதி மண் வெளிச்சத்தில் மொட்டைக் கிழவன் வண்டிக்குப் பின்னே பூச்சிநாயுடன் நடந்து வருகிறான் நிர்வாணமாய்

பாறைகள் மேடும் தாவுமான வீரார் பட்டிப் பாதையில் பனைகள் கலந்த நிழலில் அக்காளின் மெலிந்த உரு மேல் நகரும் பருந்து பார்த்து சுற்றியது. அங்கேயும் பாறையின் நிறத்தில் யாரோ ஒளிந்திருக்கக் கூடும் சரல்காட்டுப் புஞ்சையில் பருத்திச் களை வெடித்து ஆடிக்கொண்டிருந்த காற்றில் வில்வண்டி சக்கரம் மரகில்லாமல் கரகரத்தது பாறைகளில், கமலைக் கிணறு மெளனமாய் நீர்பதிந்த சாரத்தில் குண கந்தரி சாயல் பார்த்து கோட்டுர் மண் முடிந்த அக்காள் சேலை முந்தியில் ஆவி ஏறிய உள்ளுணர்வு, மடிப்புமலையேறி மேலிருந்த கல்புலம்பும் இருட்டில் மொட் டையக் கிழவன் புல்முளைத்துக் கிடந்தான். மலையிலிருந்த ஆலஞ்செடி இலையில் ரேகைபார்த்து தீபம்போட்டு அழுதாள் கடலி. பாறையில் தங்கினார்கள். இனி போவதற்கு அமணன் வழிவிடாமல் மறித்து தவளை இளவரசியிடம் முணுமுணுத்தான். காட்டுச் சாவடியில் உளி அடித்த பதுமை யில் கசிந்த மூலவாசனை நுகர்ந்தாள் நார்த் தாள். கிழக்கே தலை வைத்து கண்ணயர்ந்த நேரம் மாடு பெருமூச்சு விடும் சப்தம் கேட்டு வண்ணாத்திக்கல் பாறைப்பிளவில் சுனைநீர் கல்நார் உரிந்து ஓடியது. அதில் நீர் எடுக்கப்போன தவளை இளவரசி மகர மீன் ஓடிய பாறையில் நெளியும் வெளிச் சத்தில் பெண்ணுடைய வாசனை காட்டில் பரவி வந்தது. அது அக்காளின் சுபாவத்தில் கரையும் நீர் ஒரு கண்ணாக மாறி வாசி மலையானது. மறைவாக யார் இருக்கக் கூடும் மகரமீன் உருவில் வாசிமலையில் யாருமே இல்லை. சுவரோடு செதுக்கிய மகரரேகையில் அம்மணச்சிலை. ஆட்கள் வரக்கண்டு நீர்சத்தம் மேற்கே கேட்டது.
________________

அங்கிருந்து நடுமலைக்குச் சென்று அங்கே கோரைழுத்தில் மீன்சிலை வெட்டிச் செதில் செதிலாய் புல் அருகில் நீர் ஓட்டத்துடன் அவள் நெற்றியில் ஒரு பசும்புல் வைத்து இரக்கத்துடன் விரலால் தொட்டு மூடிய இமைகளில் காயும் ஜுரவேகத்தைத் துடைத்து மயிற்பிஞ்சத்தால் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை ஸ்பரிசித்து திரும்பிய தோகைக்குள் மயில்பீலியர் திரும்பிப் போயினர் யார் கண்ணிலும் படாமல், அரூபமாய் இருந்த கோரைழுத்து முனியைக் கண்ணால் பார்க்க முடியவில்லை.
செம்பாறை உதிரும் ஒலிகேட்டு புல் வளராத சமதள மேடுமேல் தவளை இளவரசி நெய்த சால்வையில் குண சுந்தரியைப் படுக்கவைத்து வேறொரு நூல் கண்டுகளை ஊதி ஊதி சுபாவத்தில் ஒடும் நிறங்களை உருட்டி பித்தத்தில் களைந்த நூல் ஓடியது. யாரும் அறியாத சால்வையில் அக்காள் துயில்கிறாள். பாறைகள் குவிந்து கிடந்த இடத்தில் சால்வை நிறம் வாசனை களாக தண்ணில் கரைந்து உருவங்களை வெளிக்காட்டி மிதந்தது. கீழே போன நார்த்தாள் சுரைக்குடுக்கையில் நீர் எடுத்து குணசுந்தரி உதட்டில் ஒரு சரங்கை விட்டாள். அந்த நீர் சலம்பி எதையோ பேசியது உள் நாவில் இறங்கி, உதட்டில் காய்ந்த தொனியில் ஏதேதோ பிதற்றினாள் சால்வையிடம். அது காற்றில் மேலேறி அசைந்து பனங்கூந்தலின் ஒசையில் மெய் மறந்து சுவாசித்தது. கீழே சால்வையில் பின்னிய சிறுமணிகள் சூசை இருட்டில் பட்டுக் கரையும் மருந்தாக ஒலித்த துக்க மான சொட்டு சொட்டான ஓசையை குண சுந்தரி ஜுரவேகத்தில் பருகினாள். சால்வை மெல்ல அலையானது. சிறிய வெளிச்சமாகி வந்த பாறைகளில் படிந்திருந்த அமணர் சிறு பெண்ணின் சால்வையில் நெய்த சுபாவத் தில் தொனித்தார்கள் உயிர்களின் திவ்ய தொனியை. நீலம் ததும்பி மேலேறிய கல்படிகளில் ஒவ்வொரு எட்டாய் அரகந்தர் செல்லக்கூடும்.

பகவாடைகொண்ட சால்வை அலையின் சப்தம்பட்ட மலை உச்சியில் நின்று அங்கே மரம் நிழல் இன்றி மழை நீரைச் சொரிந்து கொண்டிருந்தது. சால்வையில் தூறிய மழைத் திவலைகளில் எல்லா உயிர்களின் pவதொனியை நார்த்தாள் கேட்டாள். பிஞ்சுத்தவளைகள் பச்சைத் தொலியுடல் நெய்த பிளந்த நாவுகளில் பின்னிப் புனை யும் சால்வையின் ஸ்பரிசம் பட்டாள் குணசுந்தரி, அதை உடல் முழுவதும் சீவரப் போர்வையாக்கி போர்த்தினாள் குளிரில் நடுங்கும் அம்மணருக்கு அவர்கள் திசை சூழ் சால்வை விலகி அதை மணிகளின் ஒலிகளாக பின்னித்தருகிறார்கள் தவளை இளவரசியிடம் சிணுங்கும் உயிர்ச்சால்வை சுருட்டில் ஒளிந்திருக்கும் தவளை இளவரசி,

குணசுந்தரி சீக்காய் கிடந்த அமைதியில் சிலந்தி வெள்ளிவலை விரித்தவாறு நெய்து கொண்டிருந்தாள் நார்த்தாள். வலையை ஊடுருவிய குணசுந்தரி கண் நாவற்பழமாய் கசிந்து ஒட்டியது தங்கையை எங்கூடவே இருப்பியா இளவரசீ. மண்சுவர் குடைந்த சுரும்புகள் இறகில் அதிர்ந்து ஜன்னலுக்கு உள்ளே வெளியே போய் வளைந்தது. அக்கா கண்களில் நீர்த் துளிகளைப் பார்த் தாள். இருவம் பொருந்திய பார்வையில் தனியே யாருமில்லாத கூரைவிட்டில் இமை மூடாத கண்ணிர் பீழைக்குழியில் தத் தளித்தது. அக்காளின் கண்ணிருக்குள் இருப்பதான தோற்றம். பளிங்கு வெதும்பிய நீர் கன்னத்தில் புரண்டு கழுத்தில் இறங்கி பாயில் மறைந்தது. சிறுமிகள் நடமாடும் பாதங்களில் அக்காளின் விதவிதமான மென் காலடி வாசனைகள் குருத்து விரல் களில் பதிவுமாறாத கைத்தடம் பதிந்த சாண எரு பின்சுவரில் ஈரம் உலர்ந்து கொண்டி ருக்கும். இருளில் தூண்டப்பட்ட விழிகளை உருட்டினாள் குணசுந்தரி, இன்று அவள் சினேகிதிகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து அக்காளின் கைபிடித்து மருகிப்பிரிந்தார்கள். அக்காளின் புஸ்தகங்கள் உள்ளே மடித்து வைத்த கிரகநிழல் கூட்டத்திடையே கழுதை கள் சாம்பல் பிளந்த மூக்கின் சுவாசம். அவள் சினேகிதி அழுவதை ஒளிந்திருந்து பார்த்தான் அய்யன். இருட்டில் நிற்கும் அய்யன் அக்கா படுக்கை ஒரம் மூலிகைச் செடிகளை வைத்தான். அவற்றின் மயக்கத் தில் கந்தரி எதை எதையோ இலையிடம் நோக்கினாள். சாம்பல் உதிரும் மேகங்

படிப்பகம்
இதழ் 2 2002 : 19
________________

களுக்கிடையே காய்ச்சல் வந்த நிலவு அகலமாய் விரிந்து தன் ஆடைகளை அவிழ்த்து தலைமாட்டில் நெருங்கிப் படுத்து உறங்கியது. ஜூரத்தில் அவளைத் தொட்ட நிலாச்சரீரத்தில் கதகதப்பான கருங் கொங்கை பொங்கிய அமிர்தப்பால் சுட்டு முனகினாள். சீக்காளி உடல் பரவிய நிலவின் சாம்பல் மூடிக்கிடந்த இரவில் கனமான மூச்சுவிட்டாள் சுந்தரி ஏங்கினாள். என்ன ஏதென்ற தவிப்பில் ஆழ்த்தும் சரீர நிலாவின் சூட்டில் வெதும்பியதோர் மாயம் ஊற்றில் கரந்த பால் பருகிய வாயின் கடை யோரத்தில் ஒருதுளி ஒளியைக் கண்டாள் தங்கை நார்த்தாள். இவளிடம் தொடாமல் மறைந்த சரீரத்துள் கரைவதான மெலிவு

ஸ்திரீ ஜாடை உயிர்பெற ஜனனத்தில் தொடங்கிய திரெளபதி கோயில் கிளயஞ் சிட்டியில் தீபம்போட்டு மகள் சுகப்பட வேண்டிய சாயந்திரம் சரிந்து மங்கி இருண்ட தைலத்தில் எரிசுடர் ஏரியில் மிதந்து இருட்சிலம்பை அணிந்த கால் களுடன் வந்தாள் திரெளபதி மண்கரை நெளிந்து குணசுந்தரியைத் தொட்டது ஒளிநீர் புஸ்பராகக் கல் பதித்த அக்காளின் சின்ன மூக்குத்தி கதிர் நடுங்கி திரெளபதி முகம் தொட்டது. கோட்டுரில் எடுத்த மண்ணில் அவரை விதை பதித்து வரல் எடுத்தாள். அக்காளின் கண் இமைகளின் அடியில் கருத்திருந்தது காய்ச்சலின் வாட்டம். எதையோ நினைத்து சாம்பல் நிறம் அடைந்தாள். அவள் பெருமூச்சு கண் ணாடியில் படிந்து உள் சென்ற நார்த்தாள் அக்காவுக்கு கடுகஞ்சி ஆற்றி நெற்றியைத் தொட்டு தலையை நிமிர்த்தி உதட்டில் ஊட்டினாள். சிறு அளவான நம்பிக்கை போல ஒரு மிடறு பால் இறங்கி தொண்டைக் குழியில் சுவைபட்டு உயிர்த்தாள் குண சுந்தரி அவள் உடல்மீது நகரும் ரோமச் கழியில் மயங்கி மறைந்த பசு அண்ணாந்து அழைத்தபின் இரவில் சுவரைப்பிடித்து எழுந்து நின்றாள். வெளியில் சுவாதீனம் இழந்த இருட்டில் கனவுத் தாவரங்களைக் கையிலேந்தி நிர்வாணத்தில் சாம்பல் பூசிய நிலவு சரீரத்தில் பழுத்த ஊளைகளை நாய்கள் பூசி அந்தரங்கமாய் கூடிவந்து நக்கி அவள் சாம்பல் உள்ளே சிதறும் ஒளித்திரள் களை வீசி ஒடுகின்றன பூச்சிநாய்கள் மூலி கைக் கற்றைகளில் பூத்த நிறம் பல சிதறும் நிலாச்சரீர யுவதி ஒரு வண்ணத்தி உடல் மேல் மோப்பங்கொண்டு வீசினாள் கனவுத் தாவரங்களை அவிழ்த்த கூந்தலில் மூடிய அரை நிலா மூச்சுவிட்டு கீழ் தாழ்த்தி தரை யில் உரசும் வேகத்தில் தொட்டதும் ஜூர வேகத்தில பழுத்து எரியும் தன்யங்களால் பால் ஊட்டி சிணுக்கி முகம் வெட்கி நெளிவுச் சரியலை முடிச் சென்றது புதிர்நிழல் களுடன் திரும்பிப் பார்த்தாள் ஜ"ர கன்னியை உடையவிழ்ந்து உடுத்த சந்திரன் மனித முகம்போல் நீரில் கரைத்த மூலிகைச் சிரட்டையை ஏந்தி அவள் உதட்டில் ஊட்ட பச்சையும் பாசி ஒளியுமாய் கக்கினாள் காடுகள் சுருள.

தன்னைச் சினேகித்த மயில் சந்தோஷ வார்த்தை உதிர்ந்து அதில் எறும்புகள் அங்கும் இங்கும் ஒடி ரோகி ஒருவன் கைக்குள் சுற்றும் கூண்டினின்று பிளந்து பறக்கும் மண்பட்சிகளைக் கண்டாள். பட்சிகளின் கூடும் அதில் குஞ்சுகளும் முட்டைகளும் பறவாக்குஞ்சுகள் உள்ள புதரில் ஊமங்காடை அலறியது. வெளியில் வாடைக்காற்று வீசிப் புலம்பியது. கால்களை உரசிக் கதவைத் திறந்து தொழுவில் கட்டிக் கிடக்கும் ஊற்றுப் பசுவிடம் சென்றாள் குணசுந்தரி, அவளை அண்ணாந்து முகம் வாடி ஈரமூச்சுவிட வசப்பட்டு நின்ற காற்றில் நிலா பால் துவங்கி புல் மேல் அசைந்தது. பசுமுகம் கரைந்த இருட்டில் கம்மாய் விரிந்தது ஒர் சிலம்பென நீரில் அதன் நிழல் மறுசிலம்பாய் அசைய உள்ளே அரவுகள் நெளிந்து சொர்ண உடல் சுருட்டி மோகித்த மயக்கத்தை அடைந்தாள் குணசுந்தரி, கோரைப்புல் வளைந்து சிலம்பை முடி இருட்கோடு கோடாய் முளைத்த சர்பை களின் ஒடிந்த காய்ச்சல் சிலம்பை உரகம் நீரில் கிளர்ந்த கடல் சிலம்பை உயிர்பெற்று கிழவன் சங்கரதாளை எழுப்பியது ரகஸிய Lt)[TiLi.

உறக்கத்தினூடே குழந்தைகளும் நோயாளிகளும் சிணுங்கும் ராத்திரி அமைதியின்மையில் புரண்டது. கால் தரையில் உரசும் சப்தம் கேட்டுவிடாமல் நடந்தாள். முந்திய நாட்களில் வந்த இருட்டு அவளைத் தொட்டு வந்து உள்ளே செல்லும் தரையில் கால் பதிவதில் கூசியது.

பனிக்கூரை நடுங்கி வெள்ளி மறையும் வானத்தில் உயிர்போன்ற இருட்டு பிரியும் வெளிச்சத்தில் தன் உடல் கூசி சுவரிடம் போனாள். அடுக்குப்பானைகளில் புதர் கோரைகள் தலையசைத்துப் பரவிய மயக்கத்தில் பூனை மறைந்து திரிந்து அவள் கால்களை உரசி சோகத்தில் சுருண்ட வாலைக் கொண்டு சிம்னி அருகில் குளிருக் குக் குன்னிக் கிடந்தது. மங்கிய மனபிம்பம் குணசுந்தரியை நெருங்கி தீரா அலை வசத்தில் மண்பறவைகள் கிளர்ந்து சுழல் வதைப் பார்த்தாள். மயக்கத்தில் சொருகிய கண்களால் இமை படபடத்துப் பேசியது. தவளைகள் சொர சொரக்கும் நிலப் பாறைகள் பிளந்து பட்சி ஒன்றின் அலறல் தெருவில் கேட்டது. அக்காள் தூக்கத்திலும் நார்த்தாளை ஒட்டிக் கொண்டு பயந்தாள். படபடக்கும் சிறகுகளுடன் பட்சிகள் வெளியை விரித்துப் பரவிய நிழல் சுழலும் தரைப்படகுகளாய் சுற்றிவரும். அவர்கள் இருவரும் ஒருவருக்கும் தெரியாமல் நடந்து போகிறார்கள் வண்ணாக்குடியைவிட்டு. தெற்கில் திரெளபதி கண்தாளமாகிச் சிவந்து எச்சரிப்பது தெரிந்தது.

 வண்டிப்பாதை தேய்ந்து கிடந்த கருக்கிருட்டில் வெளிச்சம் கூட இல்லை. சிறுவெள்ளி போட்டிருந்த ஒளியில் தயங்கி நடந்தார்கள் கனிகள் காட்டில் பழுத்து உதிர்கிற சாம்பல் வாசனையில் கூதிர்கால மேகங்கள் மண் திட்டுகளாய் அடுக்கிக் கிடந்தன நகர்ந்து, தாகம் அடங்காமல் கனிதேடிப் பறக்கும் பழந்திண்ணி வெளவால்கள் குரல் கொடுக் கும் வாசனையில் நூறுவகை கனிகசிந்து நிறங்கள் ஊறித் தித்திக்கும் பட்சி அலகு களின் ஒலி, சிவந்திருந்த மரக்கனிகள் மஞ்சள் விதையுடன் கீறுகின்றன தொலியில்,

சாம்பல் தவளைகள் உதிர்க்கும் தொலி உலர்ந்த வானத்திலும் நீலமில்லை. மையை அரைத்துப் பிசுபிசுத்த கருக்கிருட்டு, ஆனால் பாதை தெரிந்தன கால்களுக்கு சிதறிய சாம்பல் வெளிர் மண் பார்வை கொள்ள முரலும் தவளைகளின் நீர் முயக்கம். இரவின் ஜன்னல் வெளிதிறந்த குரல் கோடுகளில் மாறிமாறிக் கதறும் தவளைகள் சுவர் பதுங்கும் அரவம். நார்த் தாள் மண் சிலம்பை நாவு நீட்டிச் சரிந்து வந்த முதல் விண்மீன் உச்சிவரை தொட்டு விழுங்கிய அதரம் குரல் சுற்றியது. ஏகாளிப் பெண் திறந்த காட்டில் ஏரியில் அக்காள் நிழல் சிலம்பை பூணி மடிந்து மடிந்து விழுங்கிய நீர் அடுக்கில் புலனாகாத கடல் சிலம்பைகள் ரகஸியத்தில் புதிரான கபாவத்தை தவளைகள் கொண்டிருக்கும். நில வெளியில் இருந்த கழுதை நிழல் மறையவில்லை. மிருகவாசனையில் உயிர் வைத்திருக்கும் இருப்பின் மர்மத்தை சார்ந்த வண்ணார் வீடுகள் உயிருக்குள் இறங்கும் துக்கமான சுமை ஏற்றிப்போன பொதிகள் புரண்டு துலங்கிய தூய துகில் உருவெடுத்த உவர்மண் வெளிச்சம்.

காடுபோய் வெருகு பார்த்து எலந்தைக் கனி பறித்து முள்கீறி ரத்தம் துளிர்த்துக் கன்றிச் சிவந்த தவளைப்பெண் கரடும் வாடிப் புல்காய்ந்த சரளைக்காட்டில் மே டேறி செடிநிழலில் எறும்புகள் அலை வதைப் பர்த்தார்கள். தட்டாண் பறந்து மழைக்குறிப்பை காற்றில் வரைந்தது. ஊருணிக்குள் நிற்கும் மரத்தில் பலநிறத் துகில் கிழித்து தொட்டிலிட்ட கல்சிசுக்கள் அசையும் மூலத்தில் கீறல் ஒடும் காடு. தாவரங்களின் அடியில் பாழும் வேரும் கல் நடமாடும் துளைகளில் நீர் பதுங்கி சுரந்தது. உடையாத மண்சிலம்பையில் நூறு நூறாய் வெண்கலமணி களிம்பேறி பாசி கக்கும் கசந்த ஒலியில் வெட்டிய பேர் உரு வந்து
________________

பாறையில் நிழலாடியது. திரும்பிவராத பெண்ணுக்கும் பேர்வெட்டிய வெண்கல மணி ஒலித்தது ராவிருட்டில், வண்ணான் வீட்டுக்கு ஒரு வெண்கல மணி கொடுத்து முட்டுத்துணி எடுத்து மாற்றுக் கொடுத்த பிள்ளைக்கொடி சுற்றி பேறுபெற்ற பெண் ணும் இருந்தாள் சிலம்பை தொட்டு பழுத் தான் மந்திரித்த சலங்கையுடன் அறுபது மணிகள் வீட்டுக்குள் இருட்டிக் கிடக்கும். அந்தப்பக்கம் யாரும் போகாமல் இருக்கவும் மூலிகை வைத்து மணிக்குள் சங்கரதாஸ் ஏடுகளை அறுத்து கூத்துமொழி சுரந்த கூரைக்குள் மரப்பெட்டி கருத்திருந்தது.

நாணல் குருவிகள் பூவுக்குப் பூ கண்ணாடி பார்த்து தாதுநீர் உறிஞ்சிய அலகில் வாதிட்டது நார்த்தாளிடம் திரெள பதி விளக்கு செவ்வரக்காய் அசைந்தது. அரளி இலைவாசம் பூக்கட்டிப் பார்த்து கோயில் பொந்தில் புறாக்குஞ்சிக்கு வரகு வைத்தாள் குணசுந்தரி, கழுதை எரு வாசனை மூத்திரம் காய்ந்த பச்சை மண் கலந்த காற்றில் சுவர் ஒரமோனத்தில் கண்கொட்டாமல் கழுதைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றின் முகபாவத் திலுள்ள சாம்பல் தொன்மை விழிகளில் சிமிட்டி உவர்பூசிய மண் துணிகிழித்து தளை திரித்தான் கிழப்பழுத்தான்.

அசேதன நிலையில் இருந்த பல பொருட்கள் தவளைக்குள் புகுந்து தன் இருப்பை எழுதாத புஸ்தகமொன்றில் வரையத் தூண்டுதல் எங்கிருந்து வரக்கூடும். எழுதும் விரல் நுனிபடாமல் அவ்விடம் சாயல்கொண்ட கழுதைகள் சுபாவத்தில் கசிந்த வடிவத்தில் ஒருங்கிணையும் கணிதத் துடன் துவைக்கிற கல்லில் வண்ணாத்தி தப்பித் தப்பி முறுக்கிய மூச்சில் விருத்தம் அடிமனதில் தாளக்கட்டில் இயங்கிக் கொண்டிருப்பது தவளைப்பெண் பழக்கமா யிருந்தது. பூச்சியிடம் சுரக்கும் நிறப்பொடி அதிர வாசனைகளை துணியில் கொட்டி நீர்வர்ணத்தை விரல்களால் தீட்டுகிறாள் முடிக்கப்படாத சால்வையில்.

வீட்டுக்குள் இருந்த தறியில் ஒரு மயங்கிச் சிமிழ் விளக்கில் ஒர் இலை படபடத்தது. நீரில் படிந்த தேசலில் விளக்கு மூழ்கிய இருட்டில் பிளவுபட்ட நாக்கில் எரியும் தவளைப்பெண் நாவிதன் இசைக் குள் ஊழின் ரேகையோடும் பைத்திய மானாள். நாவிதன் இருண்ட காரை வீட்டில் உதிரும் பொந்துகளில் சலங்கை உருளும் யாரும் பார்த்துவிடாமல் ஜன்னலை நார்த் தாள் மூடவேண்டியதாயிற்று, பைத்திய வீட்டின் முகவீணை ஒரு நிலையிலா அசைவில் பல உரு அடையும் சிற்பம். தவளைகள் இசை கொள்ளும் சுருண்ட நரம்பில் ஒடும் இலையின் பிரவாஹம். ஒவ்வொரு நாளும் சாதகம் செய்யும் நாவிதன் ரத்தம் உருகி பழுப்பு நிறம் இலைகளில் வேறுபடக் காண்பாள் அக்காளை எழுப்ப வேண்டாம் என்றாள் அரசாணி. அவள் பைத்தியம் பிடித்த கூத்துவண்ணார் தூங்கும் மரத்தடியில் அவிழாத சலங்கைகள் காற்றில் உருள் வதைப் பார்த்தாள். கூத்தில் படி வாங்கிய தவசத்தை ஆத்தாள் உரலில் குத்தும் அதிர்வு சிதறும் தானிய வெளிச்சத்தில் எறும்புகள் கூட்டமாய் வந்து தெரிந்த துகளை தூக்கி நகரும். சுவர் கீறல்களில் புதைகின்றன. தொட்டால் தவசம் உதிரும் வண்ணான் சுவர். கழுதைகள் உரசும் இடத்தில் உதிர்வதை தொடும் மழை எறும்புகள். அவள் நோக்கிய ஜன்னலை மீண்டும் திறந்தாள் இது என்ன மயக்கம் விருட்சம் கலங்கிய தூரத்தில் யாரோ நிற்கிறார்கள் ராவிருட்டில் நிலங்கள் கூப்பிடும் காற்று, தினைக்கதிர் கொண்டு வந்த அணில் வால் கீச்சிட்டு நாவிதன்மேல் உதிர்ந்த தினை மஞ்சளில் திறந்த இலை களின் படிவில் நரம்புகள் துக்கித்தன.

நாவிதன் நாக்கில் ஊறிய ரத்தம் நில வெளியென கர்ண மோட்சத்தில் சரசரக்கும் காய்ந்த மணம் குதிகாலில் அதிர்கிறது மண் சிலம்பை உள்ளே கரம் அணிந்த பெண் கள் ஆடுகிறார்கள். சங்கரதாஸ் எப்போதும் புஜக்கட்டைகளை பயணத்தில் நிறுத்தாமல் கட்டிப்போன கிராமப்பாதை கிளைவிடும்.

ஆழிகளைத் தோளில் தூக்கிப்போன நாவிதர்கள் உள்ளே மறைந்திருந்த வெயில் பட்ட சித்திரை ஆறாம்நாளில் இராகு சூழ சூரியன் சாய்ந்த மணலில் நொறுங்கும் சப்தம் செய்யாறில் சரிந்தது. வண்ணார் களை சோகமுடிவு பற்றிக்கொண்ட புழுதிக் கால்களில் அடுத்த எட்டு வைக்க முடிய வில்லை. ஆழிகள் வருகையில் கர்ணன் மாண்ட சோகம் வண்ணாக்குடி அழுத மண்கீறலில் அரவுகள் சீறி நெளிந்து ஆற்றில் செந்தழலாய் நீர்ப்போக்கு ஆற்றைக் கடக்க முடியவில்லை தாத்தாவை வேஷத்துடன் தூக்கி வந்தார்கள் அரிதாரம் நாறும் உடல் நெடிக்க புஜக்கட்டை அவிழ்க்காமல், சங்கர தாஸ் பாடல் உருண்ட செய்யாறு. ஆறு தீராமல் கோணமடையார் சாரீரத்தை விடவும் ஆழமான துக்கத்தில் உருகி ஓடிய செந்நீர் புரளும் அநித்யமானவரோடு சொல் லிப் புலம்பும் வேகத்தில் நாவிதன் எலும்புகளில் ஒடும் உருக்கத்தை மறு ராத்திரியும் வாஸித்தான் மாம்பாக்கத்தில்.

ஆழிகிடந்த சங்கரதாஸ் விழிகளைச் சுற்றிக் கோலமிட்டாள் நார்த்தாள். துயில் சுற்றிக்கிடந்த கர்ணவேடத்தில் தாத்தாவை மெல்ல எழுப்பினாள். சாவின் வரைகோடு மெல்ல நிழலாடி வந்தது. கூத்தைச் சுற்றி சங்கரதாஸ் உடல் கிடந்த நிலப்புழுதி ஏறிய வண்ணார் கந்தல் துணியுடுத்தி சாயம் போன ரவிக்கையில் சேலை பழுத்த காலத் துளைகளில் பெருகிய இசைச் சுருக்கங் களில் செம்பட்டைக் கோரைமுடி நெளிவில் கரையும். ஆனால் சங்கரதாஸ் உடல்மேல் காகங்கள் சுற்றிவரக் கரையும் இருட் கோடுகளில் பிதிர்தேவதை ஈரச்சேலை யுடுத்தி தலைவிரித்து மூடினாள் சங்கரன் முகத்தை அரைத்துக்கத்தில் கர்ணன் பேத்தியுடன் எழுந்து நடந்தான். தவளை இளவரசியிடம் ஏதோ சொல்ல அசைந்த உதட்டில் உயிரின் விக்கல் அம்புகள் பதித்த மார்பு. உதிரம் வழிநெடுக கசிந்து கொண்டிருந்தது. ஆழியின் சொற்றொடர் அம்புகளின் அருகில் குத்திட்டு உடலிலி ருந்து வெளியேறிய நாக்கில் துரியோதனா. சூதறியா சகோதரா. சதியால் உன் துடை தெறிக்க விதி உண்டாகும் நீலன் நாக்கை புரட்டுகிறான். இருட்டில் புகுந்தே. என முடியும் தொனி -

குருகேடித்திரத்தில் உருண்ட தேர் சக்கரத்தில் நொறுங்கிப் பீறிட்ட குதிரை களின் எலும்புகள் குலுங்க எழுந்த பிடரி மயிர் அலை, காட்டுக்குள் அழுத மடு இருண்ட பிரதேசங்களில் நிற்கிறார்கள் கர்ணனும் பேத்தியும். இச்சமயம் கந்தல் துகில் கிழித்து முள்படர்ந்த மேனியுடன் அரசாணி பொன்னுருவி கர்ணன் தோள் மீது நகரும் எறும்புகளை மயிலிறகால் வீசினாள் உயிர்மேல் படாமல், தவளைகள் வளைத்துக் கொண்ட கர்ணன் இறகில் நிறங்கள் உதிர நெகிழ்ந்து கிடந்த வேறுசில இறகுகளைக் குனிந்து அடுக்கி பீலிவிசிறி யொன்ற பின்னிக்கோர்க்கும் பைத்தியம் பிடித்த தவளை இளவரசி வீசிவீசிச் செல்கிறாள் காற்றிடம் புகுந்து கர்ணனைச் சுற்றி வளையும் கூட்டமான சொர்ண எறும்புகள் அரக்குவெளியில் தோன்றி கருச் சுடரில் சரிந்து மயங்கும் திசையில் சாய்ந்து தாத்தாவின் ஆழியில் ஏறி மறையும்.

முடிவில் மறந்துபோன சங்கரதாஸ் மரபு அவளுக்குள் ஊடுருவி நிலையான உருவை அளிக்கும். அசேதனங்களில் சிதறிய சலங்கை மணிகள் காற்றில் சதாவீழ்ந்து கொண்டிருக்கும் சப்த அருவியில் வசீகரம் கூடி உயிர்த்தாள் நார்த்தாள். கர்ணன் விரல் களைச் சாவு தொடாமல் சிவந்திருந்த ரேகையில் வண்ணார் கூத்துவெளி தாத்தாவின் அலமாறியில் வாசனை கொண்ட உதிர்காற்றில் காலம் படியவிட்ட ஹார்மோனியம் மீது இலை மெல்ல சுருதி ஏறித் தவழ்கிறது அந்தரத்தில், அது சங்கரதாஸ் கருணையுயிர்த்த கரங்களில் வீழ்கிறது. நரம்புகளில் உருகும் உவர்மண் _தாப உருவடிவம் மூழ்கிக் கிடக்கும் சித்திரம்
இதழ் 2 / 2002 : 21
________________

வடி நரம்புகளில் மண்ணை மென்று கவைத்து ஏறும் கூத்தின் கால் ஒட்டத்தில் கர்ணன் விரல் கோர்த்தாள் தவளை இளவரசி ஒளிவிரல் நீட்டி பூச்சற்ற பைத் தியத்தின் முகம் குழந்தையின் அழுகுரலில் பூனையிடம் சொல்லாடினாள் அறைக்குள் ஏறிவரும் நீரை உருவில் காண்பாள். சோக நிழல் படர்ந்த மண் சுவைத்து கூத்தில் ஆடும் ஸ்திரீ ஆனாள் தவளை இளவரசி, இரவின் குளிர் அறையில் பொம்மைகள் திரும்பிப்போன வண்ணார் அடிநிலத்தில் காலூன்றி ஆடும் சால்வை போர்த்திய சிறுமி உடல் நடுங்கிற்று.

தெரியாமல் தோன்றும் இருட்டு வெளிவந்து பேசியது சால்வையிடம் அக்கா இருட்டை எட்டிப்பார்த்தாள். ஒளியும் சுருண்டு விருட்சத்தின் இலையடியில் மறைய திரெளபதி வஸ்திராபரணமாய் முடிவற்ற சால்வை தீட்டுகிறாள். தீட்டுக்கறை, சாயம் அழிந்த தாவரங்கள், கன்னி கழியாத பெண் ருது கீறிய குருதி, அம்மாவின் தலைச் சூல், சீலைப்பேன். வெள்ளை, வெட்டை விட்டாமணி சுரத நீர் ஒடும் மோகினித்துகில், சுக்கிலத்துளி அதிரும் நூல் எடுத்து சுரதப்பூவில் கழற்றும் கலவி கசங்கிய இரவைப் பெண்ணாக்கி சால் வையில் ஒடவிட்டாள் நூல் உருக்களை, கரதப்பூக்கள் நொறுங்கி அவிழ்த்த மகரந்த தூள்கள் அலைந்து திரியும் சால்வை மின்னிச் செல்லும் ஒளி இழைகள், கறை கள், கண்ணிர்பட்ட ஆச்சியின் புகையிலை நார், கிழட்டுப் பழுத்தான் சுருக்கத் தொலி முள்ளெலித்தோல் ஓணான் கடித்த புண்வலி மண்பத்து பூசினாள் சால்வைக்கு காமத்தின் உருமாறும் சால்வை நிறம் இரவு வந்தால் துர்கந்தம் ஏறி ஐவருக்கு வேறு வேறாய் வாசனைதரும் கலவிக்குள் சுருண்ட இருட்டு நெய்கிறாள் பெண்ணுக்குப் பெண் வாசனை இழைமாறும் கோடுகளை. பஞ்சவர் உடல் நெடிக்கும் உப்பைப் பிரித்து ஒளி நூலாக்கி நுதல் வியர்ப்பக்கூடிய காமத்தின் கருக்குழியில் மண் பிசைந்து அபிமன் உருச்செய்தாள். நாககன்னி விரித்த அரவுத்தொலி வேறொரு சால்வையாய் நூறு வகைப் பாம்புகள் தைத்து விஷ ஒளியில் ஜனனமானான் அரவான். கடபலி உதிரம் கொடுத்த அரவாணி யோனிக்குள் சுக்கிலத் தாது நெளிய ஊத்தைக்குழியில் உதிரநூல் பின்னி வரைந்த திரெளபதி வஸ்திராபரண மிது. கரைசேராத கோபியர் சேலையில் பருவரத்த நூல் எடுத்து ஜரிகை இழைத் தாள் தவளை இளவரசி வீட்டுக்கு விலக் கான முட்டுத்துணியில் ஒடும் பாசி இழை யும் பூவில் ஒடும் கரதநீர் பெருக்கில் முந்திவேர் தொடுத்த பாஞ்சாலி துகிலை துர்கந்தம் நெடித்த ஊர் ரேகைகளை மண் சுவைத்து அலையலையாய் நெய்து வந்தாள் நார்த்தாள். யார் கண்ணுக்கும் புலப்படாத சால்வை திரும்பியது திரெளபதி வஸ்திராபரணமாய்,

கருவறை மூடிக் கலந்தெழும் தாது புழுவுக்குள் பூச்சி ஒளிகாட்டி நெடித்த நரம்புமுளைத்த பூவில் துடித்த பருவ உதிரம் நார்த்தாள் மெல்லச் சிவந்தாள். அகவிதழ் அடியில் மேலேறும் குருத்தில் பரவிய சூரியன் அவள் உள்ளே சென்று நிறமாகத் திரும்பிய பச்சை. நார்த்தாள் அகப்பளிங்கில் கோடை கழிந்து உறங்கிய விதைகள் காய்ந்த மண்சுவையை நுனி நாக்கில் தொட்டு எச்சில் கலந்த நிலப்பரப்பு உடல்மண்வாசனை உலர்ந்த சமவெளியில் மழைக்காகக் காத்திருக்கும் மெலிந்த பூண்டும் வேரும் தவித்திருந்த பசி வெறும் வயிற்றுக்குடலை மடித்துச் சுருட்டி ஒட்டிக் கிடந்த நிலத்தின் முகம் நார்த்தாள்.

கொக்குமண் உதிர்ந்த செடிமூச்சில் சுவாசிக்க இலைகள் இல்லை. தூர் பிளந்த தரையின் பெருமூச்சு. கீறலாகிக் கிடந்த வெள்ளைத்தரைக்காடு, பொட்டலில் சங்கர தாஸ் ஒலைக்கொட்டகை நாடகம் மண்பூசிய அரிதாரம் நாற தீப்பந்தம் பதிந்த இருட்டு வெப்பத்தைப் பிழிந்த வெண்கல மணி அதிரும் ஈரம், அரசடிக் காற்று ஈரத்தை வாங்கி நக்கும் நல்லதங்காள் நாடக இரவில் பிள்ளைகள் வாய்வைத்த ஊற்று நீர்காய்ந்த கரடுகளில் ஒடிந்த உயிர் ரத்தமின்றி உலைந்தது. உப்போடை குடித்த காரநீர் கசந்த கொம்பேறி நாக்கை அறுத்த நாவிதன் முகவீணை ரத்தம் தீண்டி கையால் விரல் மூடிப்பிழிந்த மணல் உதிரம் மூச்சில் ஏறி உயிர் வந்த மண் சிலம்பை, வேர் ஒளித்து வைத்த சத்தக்குழல் இருட்டில் கரும்புலி மோப்பமிடும் வாத்தியம். நீர்தேடி வண்ணான் வேட்டைக்கு பூனைகளைக் கூட்டிப்போன வனம் கிழிந்த செம்மண் பறம்பில் சலங்கை ஊற்று. சலவான் ஊளையிட்ட சுனையில் நாவிதன் குழல் வைத்து ஊதிய அரவு கல்நாகம் இருப்ப தொன்று இல்லாமல் இருப்பதில் கரிய இருள் பனித்த உருகல் தைலச்சக்கை பூசிய வண்ணாத்தி அலகபாகம் விரித்த சிரக கொடிபுரண்டு கூத்துவாசலில் மூச்சு எரிய குழல் கொண்ட நாவிதன் கற்பூர மரத்தை உருக்கி வாஸித்தான். மரம் திறந்து வந்த வண்ணாத்தி வாசனையில் சிசுக்குரல் வீறிடும் மண் இருட்டு, ஸ்பரிசித்த நாவு களில் புழுதி எழுந்து புரட்டிய தாளில் சரசரக்கும் முதுவேனில், கூழ் ஊற்றும் நாளில் ஜனம் கூடிக்குடித்த காடிக்கஞ்சியும் புளித்துக் கொம்பேறிய வெயில் உலர்ந்து துக்கங்களை வீசி வீசிக் காற்று பல புலத்தன ஆகி சுருட்டி ஏறும் கிளை நரம்பில் வார்த்தைகளின் புனை நுண்புலம் அலைந்து கொண்டிருக்கும் புஸ்தகம் உடைந்து சிதறும் நாவிதன் கண்ணாடிக்குள் பிரிந்து செல்லும் ஒளித்துசி நிலம் மயங்காமல் திணை மயங்கும் ஒலிஒர்மை கலைந்தால் யாரும் பார்க்காத சவரக்கண்ணாடி.

நார்த்தாளின் புஸ்தகம் நிர்வாணம் கொண்ட மனிதர்கள்மேல் அழுக்கைக் கழுவி கிழிந்த ஆடை யூனி பைத்திய முகம் வடிக்கும் மறைமுக நாடகம் சாண எரு பூத்த சாம்பல் வண்ணாத்தி நாவுகளில் மடித்த சொல் உச்சி நுனி அதிர்ந்து நடுநா அண்ணத்தில் வல்லின மெல்லினம் சுழற் றும் வடிவம். மோப்ப நாவுகள் நெளியும் சேர்க்கையில் புல்வெளிப் புணர் கூட்டில் நாடக ஒளிபடும் நிறமேழில் முக்கோணக் கணித முக்கோண சாய்கோடுகளில் வந்த முகங்கள் பாவனையில் மண் ஏறிய நயம் சுவைத்த சம்பாஷணை இருட்டில் மெல்லத் தொடரும் குரல்வளைக் குருத்தெலும்பில் நக்கிக் குடித்த பாஷைகளில் நீருக்கு நீர் பிணக்காகி மாறுபடும் தொனி,

நாவிதன் முகவீணை ஏழு கமலங்களின் வழியாக ஒரு உயிர் நீரோட்டம் பாய்ந்து சுழன்று கொண்டே இருப்பதால் அது நாவு களில் ஏறிய நாத உறுப்புகளில் புலனாகி நுரைபொங்கும் நிழல்களின் ஒட்டத்தில் தீராமல் மறையும் சுவாசத் துளிகளின் திரளில் கூடிப் பிரியும் கநாதம் இயற்கையில் குத்தும் முள் இலைகளில் நுனிமேல் தொட்டுக் கீறிய குருதிக்குள் முகுளநிற ஒட்டம். ரஸ்மாய் கீழிறங்கி நாளங்களில் வழக்குமொழி கருட்டிய சொல் நீளம் வாலாய் வடிவம் எடுக்கும் தொன்மம். மண்ணில் நெளியும் சத்தக்குழலின் குரல் நீட்சியில் மண்ணுக்கொரு புழுதிகடிக்கும் ரத்தத்தை தீப்பந்த வெளியாக்கி கால் அழுந்தி ஏறிய கர்ணபரம்பரை நாடகம் காட்டில் ஒடும் வர்ணமெட்டு ஹார்மோனி யத்தில் ஒட்டிவிடும். மனித சாரீர வழக்கு மொழியின் ஒலி ஏற்றத்தில் கருதி சேர மண்முகம் கலக்கும் செய்யாறு.

இருட்டிலிருந்து விலகிய அரக்கு ஒளி ஒப்பனை செய்ய மண்வெளிச்சத்தில் வண்ணார் அழுக்கு உடைதறித்து ஏறிய நாடகம் நார்த்தாள் சலங்கை கட்டிய கால்களில் புழுதியில் அலையும் குரல்வளை நெளிவு பாதத்தில் ஏறி கண்டைக்கால் நரம்பு கண்ட கதித்தகுரல் வல்லூராய் குரல்வெளி சாம் பல் உப்பில் கால்சுற்றி அளந்த மூங்கில் கணுக்கணுவாய் அளந்த அரங்க இருள். முன்னோர் எலும்பு ஒன்றை வண்ணாத்தி அடிவயிற்றில் பொருத்தி அலறுகிறாள். ஒட்டிக் கொண்டதை வெட்டி எடுக்க ஆடுகிறாள். நாக்கைத் துருத்தி கேசம்