தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, March 27, 2016

தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு - கோணங்கி

_______________

தாவரங்களின் மொழிவலையில் விரியும் கதைப்பரப்பு

- கோணங்கி

நூல் விமர்சனம்


தாவரங்களின் உரையாடல்'- எஸ். இராமகிருஷ்ணன், தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை-78. விலை ரூ.35


ரத்தத்தில் மிதந்து வரும்
பித்தப்பூவை
கண்களால் பறிக்கிறேன்


- தேவதச்சன்


கற்பனைவேகத்தில் இழையும் பித்தநிலையில் அந்தி மயக்கத்தில் கோவலன் யாழ், பிரிந்து வந்த கண்ணகியை நரம்புகளில் உருக்கொடுத்த வேளை அவள் கண்களை எரிமகரத்தைப் பிடிக்கும் மீன்வலையாக விரித்தபோது பித்த வேகத்தில் விரியும் மொழி வலையில் லட்சம் கண்துளை துவாரங்களுடன் விண்மீன்களை யெல்லாம் அள்ளிக்கொண்டு வரும் பெருவெளி அவள் கண்களாலான வலையாக விரிந்திருக் கிறது கானல் வரியில், பாண்டிய மன்னனின் பதினாறடி கூந்தல் நீண்டு திருமுடியுடன் வளர்ந்து கொண்டே அவையை துழ்ந்து திரிசடையன் கட்டுச் சடைக்குமேல் வளருகிறது தொன்மமாக.


பித்தனின் கபாடபுரத்தின் கடல் குகையில் பலிபீடிகையில் பலியான கன்னியின் சிரசு, அவள் அளகபாகத்தில் ரத்த விளாருடன் பிரித்தெடுக்கப் பட்ட கூந்தலும் கட்டுக்கட்டாய் நெளிந்து சீறி ஓசையிடுகிறது. கன்னியின் குருதி தோய்ந்த கூந்தலை யாழில் நரம்புகளாகப் பூட்டி தேவகணிகை கூடற்திருமாறனை நிருபதுங்க ராகமாய் கூந்தலின் ரகசிய இழைகளால் இசைத்துக்காட்ட அவள் இமைப்பரப்பிற்குகீழ் கருநீர்சுழிந்து "முதற்சங்கத்தில் (Old Academy): அசுரரும் கொடுரமான அரக்கக் கடுவுளரும் மாடனும் பாண்டியன் திருமுடி அசைய புல்வர் களாய் அமர்ந்த கடைக்கோடு" விண்ணுக்கடியில் ஒளியுமிழத் தோன்றி விரிந்தது நிருபதுங்க ராகமாய். மீண்டும் கபாடபுரக்கிளி பித்தனின் தோள்மேல் அமர்ந்து (New Academy) பித்தனே தொன்மமாய் மொழி வலயாக விரிந்து மொழிமண்டபத்தில் பிரபஞ்ச விசையாக (Cosmic Axis) சுழன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் கிழக்கு மேற்கு தெற்கு வாசல்வரை நட்சத்திரவாசி சொல்லா நின்ற வடக்கிருந்து உயிர்நீத்த கவியின் மொழி தான் கவிதையை எழுதுகிறது. எனவே உலகின் மொழி மாறிவிட்டது. கதாவடிவங்களின் பரப்புக்குள் மொழியானது ஸ்படிக உடலாக (Crystal Body) மாறியிருக்கிறது. தமிழின் மரபு பிரதிகளை (Traditional Text) எல்லாம் படிகமாக கடல் பளிங்காக வைரவெட்டாக பவளப்பாறைகளில் உறையவைத்து சென்றிருக்கிறார்கள். அதை நவீன படிகமாக (Modern Crystal) மாற்றுவதுதான் இனியான எழுத்து. கதையின் சமூகவியல் பகுப்பாய்வுகளில் கருத்தோற்றத்தெளிவும் அறிவின் தர்க்கமும் தத்துவமின்மையும் கதையாக மாறுவதற்கும் கருத்து ஸ்படிகம் (Idea) நகர்த்தும் கதையுத்திகள் அனைத்தும் உதிர்ந்து மொழிக் கதையாக மாறுவதற்கும் கதாமொழிவலை உருவாவதற்கும் வேறுபாடு உண்டு.

* நாகார்ஜூனன் கட்டுரையிலிருந்து

கோணங்கி
மொழி உடலில் (Crystal Form) தளிக்கோடுகளாக வெட்டப்பட்டு படிகச் சிலைகளாக உருமாறி கல்குடைவுக்குள் (Cut in) அகமொழி அடுக்கை குடைதலி லிபி அடுக்காக தன் கதைப் பரப்பெங்கும் மரபுப் பிரதிகளின் மின்னலை படர விட்ட புதுமைப்பித்தன் மொழிதான் நவீன கதையை எழுதியது. கதாவடிவங்களின் பரப்புக்குள் படிகமாக நிறமற்ற ஆடியாக பனிக்கட்டியாக கடல் பளிங்காக மொழி உடலாக பார்க்கவில்லை புதுமைப்பித்தனும். 


எஸ்ஸர் ஓவியம் போன்று மொழி உடலை பலவகை நார்களாக கீறி சுழற்றும் திசாதிசை களிலிருந்து உள்ளிறங்கும் புதிர் படிக்கட்டுகளில் சென்றடைகிற இந்த Space எந்த Space-ல் இருக்கிறதென கதைப்பரப்புகள் பல தோன்றி எங்கிருக்கிறோம் எனக் காண்பதும் தலமாற்றங் களை வாசகனை சென்றடைவதுமான மந்திர வலை அடுக்கில் (Magical Layers) .... அடுக்கு நிகழ்காலத்தின் கதை சொல்லிகள் பலரின் குரல்களுடன் கதைபோடத் தொடங்கிய இரவிற் சொன்ன அராபிய கதை டெக்கமெரான் கதை என நவீன படிகமாக மாற்றி யடுக்கிய கதைப் பேழையை இழுத்துக்கொண்டு வருகிறார்கள் போரியே முதல் Dictionary of kazars .....முன்னோடிகள். 


கடந்த பதினைந்து ஆண்டுகளில், மீட்சி வெளியீடான லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மொழிபெயர்த்த உலக மொழிகளின் நவீன கதை ரேகைகள் பாய்ந்து 

காலக் குறி | 57 | 1ο Πή ά98 

படிப்பகம் 

________________ 


படர்ந்த தமிழ் சிறுகதைகள் #'# தை நோக்கி நகரத் தொடங்கியது. புதிய கதை வெளியும் அதைத் தாண்டி மொழிதான் கதையை எழுதுகிறது என்ற பிரபஞ்ச விசைக்குள் கதையின் சுழல் விதிகள் மாறியுள்ள வேளையிது. இதனால் முன் வரிகளை அழித்தவாறு துவங்கும் மொழிவலை விண்ணிலிருந்து கீழ்பாய்ந்து பூமியைச் சுற்றி மொழிகளாலான கதை வலை விரிவுகொள்கிறது. 


எனவே வைதீகப் பாங்கை முன்வைத்த குடும்ப அச்சில் சுழலும் சிறுகதைக்காரர்களும் கதாபாத்திரங்களும் கதைகளின் திரைக்குப்பின்னே மெல்ல நகரத்தொடங்கினார்கள். தமிழ் கதைகளை அடைத்துக் கொண்ட எழுத்தாளனின் பிம்பம் தனக்கே போட்டுக்கொண் ஜே.ஜே. எல்லாம் குரல் அடங்கி கதைமீது தன்நிழல் விழாமல் மறைந்துதிரியும் காலமிது. Dictionary of Kazars .... நிகண்டு இசை இலக்கணம் மறைந்த இனத்தின் சொல்க் கதகைளின் அகராதிகளாக மாற்றப்பட்டு கருங்கடல் கிளியின் குரலாக மாறி குளக் குறிகள் தொன்மம் என கிழக்கு ஐரோப்பா வில் அரசியல் புதிரின் புயல் வீச்சிலும் மொழி யின் அழியாத கட்டுமானத்தை அகராதியாக கோர்த்து உலகின் மிக உயர்ந்த சிகரத்தில் கட்டப்பட்ட மொழிக்கோட்டையாக நிலவின் துரத்திலும் புலனாகும் சீனச்சுவராக மொழியின் Cosmic Balance அசைவாடிக்கொண்டிருக்கிறது. 


மொழியின் ஆழ்மன அடுக்கில் பிரபஞ்சத்தின் கோல விதிகளும் நிழல்களும் நட்சத்திரங்களின் பெயர்கொண்ட மனிதர்களும் குலக்கடவுளர் புராணம், எல்லைக்காவல் புரியும் இருபத்தோரா யிரம் நடுகற்கள் வழிபாடு வணங்கப்பட்ட சுறாமுள்ளால் இனிதான் எழுதப்பட இருக்கும் நூறுநூறு lcons காட்டுதேவதை புராணங்களை .... (Centralised Power God-ராமா, விஷ்ணு, கல்கி அவதாரங்கள்) சம்ஹாரம் செய்யும் அதிகாரமே மையமாக சுழிந்து கருஞ்சுழியாக மையத்தைச் சுற்றி அழிக்கும் பரப்பிலிருந்து விலகி தனித்தனி தானியங்களில் உறைந்த தமிழ் மரபின் ஓசை இருண்ட காடுகளின் எல்லையில் கேட்டுக்கொண்டிருக் கிறது. எல்லையில் நின்று விட்ட நல்லதங்காளின் அறுபதடிக் கூந்தலே மார்க்வெசின் Love and other demons நாவலில் பலியாக கன்னியின் கூந்தல் அலை இருபது மீட்டர் வளர்ந்திருந்ததை பக்கமாய் வைத்து தொடங்கப்பட்டு விட்டது சொல்கதையில் பிறந்த நவீன மொழி. 


எஸ். ராமகிருஷ்ணனின் மூன்றாவது கட்டக்கதைகள் பதினெட்டில் ஊடுருவியபோது பனிரெண்டு கதைகளுக்குள் சந்தடியற்ற காலடிகளோடு நெருங்கும் பூனைகளை கண்டு பிடித்தேன் முதலில், இதுவரை எந்த தொகுப் பிலும் இடம் பெற்றிராத வரிகளில் அலையும் பூனை' கைப்பிரதியில் படிக்க நேர்ந்தது. எட்கர் ஆலன் போவின் கருப்புப் பூனை தெனாலிராமன் பூனை வளர்ந்த கதை நான்கு பஞ்சு வணிகர்கள் ஆளுக்கொரு காளை செல்லமாக வளர்த்து பூனைக்கு தங்கக்காப்பிட்டு வளர்த்தபோது அடிபட்ட காலில் வணிகன் ஒருவன் எண்ணைத் திரி சுற்ற எரிந்த தீயில் பஞ்சுப்பொதிகள் மறைந்த கதைவரை 'ஆலிஸின் அதிசய உலகில் எஸ். ராமகிருஷ்ணின்ே மொழிபெயர்த்த பூனை மறைந்துவிட்டது அதன் சிரிப்பு மறையவில்லை எனப் பூனைகள் சித்திரங்களை உருவாக்கி காட்டின்உருவத்தில் அலையும் வெருகுப் பூனையாய் திரிகூடமலைக்குள் உயரும் தாவரங்கள் தானே பேசிக்கொள்ளும் கிரகணவேளையில் ராபர்ட்ஸ் ளிைன் கருப்புப் பூனை கபில நிறக் கண்களுடன் வினோதக் கற்பனைகளை புனைந்து தாவரங் களுக்குள் ஓடும் பாறைகளின் ரேகைகளை மொழியாக மாற்றும் உருமாற்றத்தில் துல்லியமாக அடியெடுத்துவைக்க தெனாலிராமன் பூனை பாலைக்கண்டு தப்பி ஓடுவதுபோல் மொழியாக மாறுவதில் இடைவெளி காண்கிறது. விளை யாட்டுத் துப்பாக்கிகளுடன் உப்பு வீதிகளில் வெடியோசைக் கிளப்பி ஒளிந்து திரியும் அ.தி.கொ.கழக உளவாளிப்பூனைகளும் காமிக்ஸ் திருடர்களும் இரும்புக்கை மாயாவிகளும் கார்ட்டுண் மொழியிலிருந்து பின்தொடருகிறார்கள். எனினும் எனினும் மூன்றாம் நாள் காலை ராபர்டஸனின் பூனை மிகுந்த கலக்கமுற்று எல்லா செடிகளுக்கும் பயந்து அலைந்தது. பூனை விரல்கள் பட்டதும் சில இலைகள் மூடிக் கொண்டன. தனியே பறக்கும் வண்ணத்துப் பூச்சி கள் பூனையின்மேல் பறந்து பார்த்துச் சென்றன. பாறையில் இருந்து தாவ முயன்று வீழ்ந்த பூனை யின் சத்தம் கேட்டு பூனையின் அடியொற்றி அதன் பின் இறங்கிய ராபட்ஸன் இதுவரை எவரும் கண்டறியாத அருவியைக் கண்டான். 


பூனையின் நிசப்தத்தைப் போலவே பிரம்மாண்ட அருவி சப்தமிடாதது வினோதமாக இருந்தது. இத்தனை உயரத்திலிருந்து வீழ்ந்தபோதும் அருவியில் துளிகூட சத்தமில்லை. பிரம்மாண்ட மெளனம் வீழ்ந்துகொண்டிருப்பதுபோல இருந்தது. சப்தமில்லாத அருவியை இப்போதுதான் முதல்முதலாக பார்க்கிறான். நீரின் அசைவுகூட இல்லை. நீர் வீழ்ந்து ஓடும் பாறைக்குள் ஒரு விலங்கைப்போல வீழ்ந்தபடி அருவியின் தோற்றத்தைப் பார்த்தபடியே இரண்டுநாள் 

காலக்குறி | 58 | மார்ச் 98 

படிப்பகம் 
________________ 

WWW pagippakam.com 

கிடந்தான். அருவியின் சத்தம் எங்குபோய் பதுங்கிக்கொண்டது என்று தெரியவில்லை. 'ஐந்தறிவுச் சாமியாருக்குத்தான் அருவியின் ரகசியம் புரியும்' என விக்கிரமாதித்தன் ஏற்கனவே எழுதியிருக்க தாண்டவராய சாமிகளின் மூலப்பிரதி கவிதையிலும் திறக்கப்படவில்லை. செண்பகாதேவியில் பாம்புகள் நெளியும் இதுவே அருணகிரிநாதரிடம் அரவுப்புனை நிழல்' என நூறு நிறங்களாக அரவின் புனைவெளி பாய்கிறது. கயிற்றரவு என புதுமைப்பித்தன் கயிறு புனைவு அரவு என கண்ணாடியில் உரையாடுவதும் அருவியை வைரத்தொங்கல் பாரதிதாசன் படிக உடலாக பார்த்ததும் அருவியை விரித்த கூந்தலாக சுரேஷ்குமார் இந்திரஜித்தின் கதை ஒன்றும் இஸ்பெல் அலண்டெயின் வாலிம்மை கதையில் 'வானத்திலிருந்தே பாயும் ஆறுமாதிரி இலாப்பெண் நீர்வீழ்ச்சியாய் நின்றுகொண்டிருந் தாள். அவள் கானகங்களின் அடி ஆழத்தை ஊடுருவி ஓடும் நீர்வீழ்ச்சிதான் என நிசப்தம் ஆழம் பெறுகிறது. பூக்கள் படர்ந்த பாறையில் படுத்துக் கிடந்த பூனையும் இந்த விசித்திர காட்சியில் தன்னை விடுவித்துக்கொள்ள முடியாமலிருந்தது. 


ராபட்ஸன் உரு பூனைச்சாமியாராகி அவனது பூனைக்குணம் கத்தியலைந்தது. மரங்களை பிராண்டியபடி அலைவதையோ காற்றில் திரியும் ஏதோ உருவத்தை அது துரத்திக்கொண்டு போவதையோ பார்த்திருக்கிறார்கள். 


செல்மாலாகர்லேவின் தேவமலர் கதையுடன் பக்கம்பக்கமாய் வைத்து ஒப்பிடமுடியும். கீயிங்கே காட்டுத்திருடன் உறையும் மலைக்குகைக்குள் பாறையின் ரேகைகள் திரிகி விரியும் கிறிஸ்துமஸ் பணியிரவில் மரங்களும் தாவரங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பிணைந்து எழும் தோற்றத்தை திருடன் மனைவி பார்க்க மணியோசையும் இசையும் கல்ந்த தாவரங்கள் பாடி உயிர் பெறுவதை உலக இலக்கிய விளிம்பில் ஒளிர் வடையச் செய்த வரிகளில் ஓடும் கருப்பு ட்யூலிப் மலரின் வினோத உருவத்தை இயற்கையின் துகலாகவே காண நேர்வதை தாவரங்களின் உரையாடலுடன் வைத்துவிடமுடியும். 


எனினும் எனினும் 


தாவரங்களின் மொழியை விலகியே ஐடியாவை எழுத்தின் எல்லா சாத்தியத்திலும் கையாண் டுள்ள எஸ்.ரா. மலைகளின் மடிப்பில் தாண்ட வராய சாமிகளின் மூலப்பிரதி திறவுபடாமல் .... Nature-or Cosmic Language மூலப்பிரதியில் குமுறும் மலை உருவங்களின் ரகசிய உரையாடலில் தொடரவில்லை கதை மொழி. Romantism சித்திரப்படுத்துதல் நுண்புல விவரணைகளில் தோன்றும் மளனம் புறவயமானதுதான். இலைகளின் வெளிகளுக்கிடையில் சுழலும் Bo. tanical World கீழ்திசை கதைமரபின் அபூர்வத்தை திறக்கும் கல்ச்சாவி மூலப்பிரதிக் குள்தான் மறைந்திருக்கிறது. கதையில் குறிப்பாக மட்டுமேஉள்ள சித்தர் படுகையில் ஒவ்வொரு வெள்ளியின் நகர்விலும் தாவர இனங்களின் குணருடங்களை தேடித்தேடி பச்சையிலைச் சாறில் எழுதப்பட்ட பருவச்சுழற்சி கிரகணங் களின் ஆருடம் பீடித்த நோய்களில் ஊடுருவி மனித நரம்பு மண்டலத்தை பூனை உருட்டிய சித்தர் கபாலத்துள் நட்சத்திரங்கள் குவிந்துள்ள கணிதத்தை தாவரமொழி பாதரசப் பரப்பாக மூலப்பிரதியில் முணுமுணுப்பதை எஸ். ராமகிருஷ்ணனின் மொழி அடைய இடைவெளி காண்கிறது. இலைமுச்சில் காத்திருக்கும் மலைகளின் தாடியுடன் காலத்தை எட்டிவளர்ந்த மொழித்தாவரங்களான சித்தர்களின் ரசப்பரப்பை நவீன படிகமாக மாற்றும் பராபரக்கண்ணியை மொழிவலையாக பின்னும் இயற்கையின் நீட்சியிலிருந்து ஜனித்த எழுதும் தாவர விரல்களுக்கு முன்பே மரபுப்பிரதியில் சாத்திய மாகியிருக்கிறது. தாவரங்களின் நடுங்கும் நயனத்தை நரம்புகளாக்கி இசைக்க புனைவின் மயக்க பரபப்பைத் தாண்டி Romanticism-த்தின் கூண்டுகளைக் கீறித்திறக்கும். Rock cut மாதிரி மொழி அடுக்கு எஸ். ராமகிருஷ்ணனின் கதைப்பரப்பில் வசப்படவில்லை. 


ரகசிய ஆண்கள் கதையில் கனவில் உலவும் வனமால்ை உடலே காஸ்மிக் பேலன்ஸ் தானே. தானியங்களின் உரசல் சத்தம் கேட்டு கல்பொந்துகளிலும் கிணத்து உள் அடுக்கு களிலும் மறைந்திருந்த பறவைகள் விழிப்புற்று படைபடையாக தாசி வனமாலை வீட்டுமுன் இறங்கின. பறவைக் கூட்டத்தின் வரவால் அந்தப்பகல் துகள்துகளாகி சத்தங்களால் நிரம்புவது பறவைகளின் ஒளித்தொகைக்குள் உருவெடுத்த வனமாலை எனும் தாசியுடல் பிரபஞ்ச இசைவில் இசையாகிக் கலந்து மணிமேகலையின் ஸ்படிக ருபத்தை அடைவதை அவள் உடல் பறவைகளைாகி மாறி மறைவதை கதைக்குள் விலகிய கணம் ஒன்றில் சிலிர்த்து உறைந்து போனேன். வீட்டின்முன் விழும் பறவைகள் மண்ணில் மோதி மாபெரும் சிறகுகள் மோதுவதை தமிழ் க்ளாஸிக்கல் டெக்ஸ்டிலிருந்து நவீனப்படுதலை உணர நேர்ந்தது. தார்க்கோவ்ஸ் கியின் 'ஸ்டாக்கர் பிலிமில் கண்ட குதிரை ஒன்று குமிழ் பிடிகொண்ட கதவைத்தட்டிக்கொண்டே இருக்கிறது. குதிரையின் உடல் ஜூம் லென்ஸ் வழி உடல் நீண்டு தெருவெங்கும் வளைந் திருக்கிறது. இடைவிடாது தட்டுதலால் கதவு திறந்துகொள்ள குதிரைப்படியேறி உமிப்படுக்கை 

காலக்குறி | 59 | மார்ச் 98 

படிப்பகம் 

________________ 


யொன்றில் படுத்துக்கொள்ளுக்திவிே தட்டியெழுப்பும் மொழி காண் கண்வழி நிகழ்வ தில்லை. ஒற்றைக்கண்ணுள்ள நாய்க் கூட்டம் தன்னை விரட்டும் கனவுக் கார்ட்டுனில் சித்திரம் கொண்ட ப்ளாட் கதையாடல் கனவில் உள்பர ப்பில் படாமல் விலகிவிடுகிறது. 


பசுவொன்று கற்பம் கலங்கி மஞ்சள் பாரித்த உடலும் சூரியனை விரித்த கண்களுடன் இறந்து கிடந்தது. நாற்பது ஆடுகள் மெல்ல தன் நிறம் மாறி செந்நிறம் கொண்டதையும் அவை வெக்கைத் திரட்சி தாங்காது பூமியை முட்டி பிளந்து தலைமண்ணில் புதைய வானை நோக்கி உயர்த்திய பின்கால்களுடன் குருரமரணம் கொண்டதையும் நிஜத்தில் காண நிறங்கள் பலவந்து கதையில் பொருந்திய கடிகாரத்தின் துடிப்பு நேர்க்கோட்டிலும் அடுக்கிய கனவு சித்திரங்களின் நிறமாலைகளில் மயங்காமல் கடிகார முள்ளின் கோடுகள் தினசரிப் பரப்பில் சுற்றித்தேய்ந்த காலத்தின் ஒழுங்கான அடுக்கு நேர்த்தியாகி தாதுவருஷப் பஞ்சத்தில் வனமாலை உடல் வெளிறி முடிவுதிர்ந்து மெலிந்த தோற்ற த்தை நிலப்பரப்பிலும் நேர்முகம் கொள்ள மையத் தைச்சுற்றியே கதையும் கதையுள் காலமும் படர்வ தால் கதையில் நிர்ணயிக்கப்பட்ட பருவச் சக்கரம் சுற்றாமல் கால ஒழுங்கில் நகர்வதால் டாலியின் உருகிவழியும் கடிகாரத்தின் ஃபுளுடிட்டி கனவின் காலத்திற்கு இடம் மாற்றப்படாமல் எதார்த்தம் மாயம் கனவு புனைவில் உருமாறும் பிம்பங்கள் நிஜத்தில் அதிரவைக்கும் அலகுகளைக் கதை கொண்டுவரவில்லை. 


பறவைகளின் அலகுகளால் நொறுக்கப்பட்ட ஒரு பகல் வேளையில் மொழியின் சாத்தியத்தை தக்கவைக்க ஓரளவே முயன்றிருக்கிறது ரகசிய ஆண்கள். அவளது கடந்தகால வசீகரத்தையும் நிர்வாணத்தையும் கண்டிருந்த மரபல்லிகள் அந்த அறையின் உத்திரத்தை விட்டுப் போக வேயி ல்லை. இரவில் அவை விடாமல் சத்தமிட்டு அவளின் தனிமையை போக்கின. சாம்பல் பல்லியின் காலத்திற்குள் அதன் நாவில் சுருளும் குரலானது கதை நாவுகளாக நீட்டி கடிகாரத்தின் பயங்கரமான உலோக ஒளியை தன் உச்சரிப்பால் உடைத்து கெளளியின் உச்சரிப்பைக் கனவின் ஆருடமாக கொண்டிருந்தால், சுப்பையா பிள்ளை யை பிரிண்ட் செய்யப்பட்ட ஆருடச் சக்கரத்தில் ஏற்றிக்கொண்டு வந்திருக்க நேர்ந்திருக்காது. தாசியான வனமாலையைத் தேடி ரகசிய ஆண்க ளெல்லாம் வந்துபோன அருபங்கள் சுவர்களாக அறைகளாக கண்ணாடிப்பரப்பில் எழுந்து நின்றாலும் அவள் வீட்டை ஊர்பெண்கள் காணத் துடிப்பது என்பது சாதாரண ஆர்வம் என்ற அளவில் நின்றுவிடுகிறதே. தாதுவருஷ பஞ்சத்தில் ஊரும் காடுமாய் வெளிரிக்கிடக்கும் வனமாலையை உருட்டிய கபாலங்கள் மொத்த வாழ்நிலையின் துயரமாய்ப் படர அவள் தொட் டால் ஒரு கபாலத்தை தலைகீழைக்கி அட்சயப் பாத்திரமாய் உருமாற்றமுடியும். ஏனோ பின் வீட்டில் மண்கலயம் உருண்டு உடைகிறது கதையில், அட்சயப் பேழை என்னும் தாசி வனமாலை விரல்கள் வழங்கியிருக்கும் இசை யென்னும் கர்ணாமிருத சாகரம் மணிமேகலையின் குறியீட்டில் ஊடுருவி தொன்மத்தைத் தீண்டி பிடிதானியத்தை அவள் வழங்க அத்தானியங்களே நவீன மொழிக்கு ஒளிபாய்ச்சியிருக்கும். தாசி வனமாலை மெய்யுருகி வழங்கியது இச்சையெனும் தானியமாக மாறாமல் சுவர்களாக சூழ்ந்து நிற்கிறது பாழ் வீட்டைச்சுற்றி. கொஞ்சம் # Té5&loré, (Slow Death) வனமாலையின் சாவு விரிகிறது. கதைப்பரப்பாய். 


இச்சையை அமுதமாக மாற்றும் கன்னிமையின் ரேகைகளைக் கலங்கமற்ற எரிந்திராவும் அவள் காதகிப்பாட்டியும் பற்றிய சோக வினோதக் கதையில் மார்க்வெஸ்ஸும் அனடோல் பிரன்ஸின் தாசியும் தபசியும் நாவலிலும் ப்ளாபர்ட்டின் மேடம் பவாரியிலும் மணிமேகலையில் சிலப்பதிகாரத்தில் பிரபஞ்ச விசை கதைருபங்களின் உடல், மொழி உடலான தால் இவ்விரு காப்பியங்களின் தொன்மத்தில் ம்யூசிக் என்சைக்ளே பீடியாவாகவே ஒளிந்திருக்கிறது. திறந்துகிடந்த படுக்கையறையில் இறந்துகிடந்த வனமாலையின் ஸ்தனங்களில் நகங்களைப் பதித்தபடி நின்றிருந்த வெருகுப்பூனை ஆள்முகம் கண்டு தாவி ஓடியது. அவர்கள் சென்று பார்த்த போது வனமாலை இறந்து இரண்டு நாளாகிப் போயிருந்தது. ஆனால் பல பரிமாணங்களில் சுழலும் எரிந்திரா வீசும் துயரக்காற்றில் பாலை வனத்தின் தனிமொழியாக உலர் காற்றையும், முடியாத சூரியாஸ்தமனங்களையும் தாண்டி துரதிர்ஷ்டத்தின் எச்சமற்றபுத்துலகு நோக்கி மானாக ஓடுகிறாள் எரிந்திரா.


எம்.வி. வெங்கட்ராமின் நித்திய கன்னியின் ரிஷிபுங்கவரான விசுவாமித்திரர் குருதட்சணயாக சீடன் காலவனிடம் கேட்டது உடல் வெள்ளை யாகவும் காதுமடல் கறுப்பாகவும் உள்ள எண் ணுறு குதிரைகளை கொண்டுதருமாறு பணித்தார். காலவன் யயாதி மன்னனிடம் சொல்கிறான். அவனிடம் அத்தகைய பரிசுகள் இல்லை. பதி லாக, புதல்வி மாதவியை தானம் செய்கிறான். அவள் நித்யகன்னி. ஒரு குழந்தை பெற்றவுடன் முன்புபோலவே கன்னியாகிவிடும் அதிசய வரம் பெற்றவள். அவளை அடுத்தடுத்து மூன்று அரசர்களுக்கு திருமணம் செய்வித்து அறுநூறு பரிசுகளைப் பெறுகிறான் காலவன். மீதி குதிரைகள் இருநூறுக்கு பதிலாக விசுவாமித்திரரே அவளை திருமணம் புரிகிறார். ரிஷிப்பிண்டம் ராத்தங்காதாகையால் ஒரு மகவு பிறந்ததும், நித்திய 

காலக்குறி | 60 | மார்ச் 98 

படிப்பகம் , 

________________ 


WWW.padippakam.com 

கன்னியாகிறாள். இந்த அவலங் களுக்கிடையே உயிரைப்போல காலவனும் மாதவியும் நேசித்த நிலையிலேயே எரிந்திராவில் ட்ராய் யுத்தம் முடிந்த புராணத்திலிருந்து முடியாத சமுத்திரப் பயணம் புறப்பட்ட யுலிஸ்ஸ் மீட்கிறான் எரிந்திராவை. இறுதியில் பாலைவனத் துயரக் காற்றில் மானாகி மறைகிறாள் எரிந்திரா. காட்டுக்குள் ஓடி தப்பிவிட்ட மாதவியும் மானாகி மறைகிறாள் நித்தியகன்னியில், மரம் செடிகொடி களையெல்லாம் தாண்டி வேடுவனால் துரத்தப் படும் மானாகி தரையில் கால் பாவாமல் ஆரண்ய த்தின் சந்துபொந்துகளில் பதுங்கி வெளிப்பாய் ந்தாள் மாதவி, மான்களின் கூட்டத்திற்கிடையில் மறைந்துபோனாள் மாதவி. உவவனத்திலிருந்து மணிபல்லவத்துக்கு தெய்வத்தால் தூக்கிச் செல்லப்படுகிறாள் மணிமேகலையும். நீர்நகரில் அலையுற்ற பாசுரங்கள் கீறி உருவெடுத்த ஆண்டாளின் விரல்களே வனமாலை விரல்களும். அவள் விரலில் நின்று மொழிபேசிய கிளிகளை யெல்லாம் துர்கனவுக்குப்பின் அவள் வளர்த்து வந்த கிளிகளெல்லாம் பூனைக்கு இரையாயிப் போயின. 

உப்புவயல் கதையில் க்ராண்ட் சர்க்கஸில் இருந்து' சொர்ணராசு திருடிவந்த செங்கொண்டைக் கிளியின் பித்தத்தில் உலாவும் மொழிக்கூண்டில் உள்திறந்து மீன்முள்ளை. சொல்கிளிக்கு கொடுக்க அது இரவெல்லாம் கத்தி கத்தி இறந்துவிட்டது. 


தினசரி வாழ்வின் திரைக்குப்பின்னே நடமாடும் நிழல்கள் கண்வசமாகின்றன எனும் வரி பாரதியின் கைவசம் ஆகவேண்டுமென்ற பிரபஞ்ச வெளியை கண் வசமாக நகர்த்த கண்மேல் பார்க்கிற கதையாகத்தான் பின் அட்டையிலிருந்து முன்னே திரும்பிவர தாவரங்களுக்குமேல் எழுந்து தலையாட்டும் ருசோவின் ஓவியத்திலுள்ள ஓணானின் உச்சரிப்பை விலகியே தாவரங்கள் உரையாடுகின்றன. கண்வசமாகிற நிழல்நிழலாய் பட்டாளம் பட்டாளமாய் மகாபிரளயமாய் வருகிற நிழல்க்கூட்டம் வெடியோசையுடன் கிளப்பும் விளையாட்டுத் துப்பாக்கியுடன் அதீ.கொ.கழக உளவாளிப்பூனை, புலிக்கட்டம் கதையில் ஒட்டுவீட்டின் மீது அடுத்த ஒட்டின்மீது அடுத்தஓட்டின்மீது தாவும் பூனை இறந்த பூனைகளும் ஒதுங்கிய தெருவென உப்புவயல் கதையிலும், பெயரற்ற ஊரின் இருட்டாக நட்சத்திரங்களுக்கிடையில் பூனையின் கபாலத் தினுள் ஓடும் பாதரசத்திரியாக எரிந்துகொண்டி ருந்த உலோகக்கண்கள் “நயனம் கதையே இசைக்குள் பார்க்கிறது கதையை. நயனம்' கதையில் மீண்டும் க.நா.சு.வின் பொய்த்தேவு சோமுப்பண்டாரத்தை உயிர்ப்பித்து சாயவேஷ் டியுடன் சைவ மரபுக் கதையாக நயனம் சுருக்கம் கொள்கிறது. கரப்பான்பூச்சிகள் தன்னருகில் 

காலக்குறி -61 

பயமின்றி அலைவதையும் சிரிப்பதையும் காண நயனம் என்ற உடல் இசைக்கருவியாகி பூச்சியாக மாறும் விரல்களே நயனத்தை இசைக்க முடியும். அது நடக்காமல் கரப்பான் பூச்சியின் நுனி மீசையில் திறந்துகொண்ட அபாயமாக முடிந்திருக் கிறது. உடல் படிகமாக மாறும் மொழிவலையில் இசை மறைந்திருக்கிறது. 


கண் இமைக்கும்போது தொன்மம் இமையாகவும் பார்வை தொன்மத்தில் துலாவி சித்திரம் கொள்ளும் வரிகள் பல இருக்கவே நட்சத்திரங் களோடு சூதாடுபவர்களும் பெயரற்ற ஊரின் பகல் பொழுதும் இமைத்தால் எல்லையற்ற இருளில் கண்வசமாகிய இரு கதைகள் மொழிவசமாகி விடுகின்றன. இவ்விரு கதைகள் மட்டுமே எஸ்.ராவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்து செல்லக் கூடும். 'கண்ணிம்ைத்துக்காண்பார் தம் கண் என்ன கண்ணே" என பதினான்கு கதைகள் கண்வச மானதால் நிழல் வசமாகின்றன. காண்கண்வழி நகர்ந்து எதார்த்தத்தையும் புனைவையும் கலந்து கதைப் பூதத்தை சமாளிக்க முயன்றிருக்கிறார் எஸ்.ரா. தினசரி திரையின்பின்னே நிர்ணயிக்கப் பட்ட கடிகாரத்தை பாதம் கதையில் மழைச்சிறுமி இடறி வீழ்த்தினாலும், மழையானது நிழல்கோடு களாகும் மொழியாகவில்லை. கதையின் நிழலாகவே மழைநின்று பார்த்துக்கொண்டி ருக்கிறது. 


ஜலசதுரங்கம் கதையில் கண்ணாடி, நீர் எனக் கட்டங்களில் திகைத்து ஃபுளுடிட்டிக்கு நகர்கிறது. மொழியின் ரகசியத்தை ஆடிமீது தீட்டி நகரும் கண்கள் வண்டுகளாக மாறி நிலப்பரப்பில் அலைந்து புதிய கதைமொழிக்கான வேட்கை நட்சத்திரங்களுடன் துதாடுபவர்கள், ஜலசதுரங்கம் இரண்டின் சூதாட்ட பலகையும், தாஸ்தா வொஸ்கியின் துதாடி' நாவலில் சுழலும் ருலட் ஆட்டத்தில் சீரோவில் போய் போய் பந்தயம் கட்டும் வெறி தொற்றிவிடுவதை இங்கு உணரமுடியும். கதையின் திரவநிலயும், யதார்த்தம் மீறிய சித்தரிப்பும், திரவமொழியும், மழைசார்ந்த வீடு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜோவோ கிமேரஸ் ரோஸ்வின் நதியின் மூன்றாவது கரையின் இருட்டு நீரின் ஞாபகப் பரப்பாய் விரிகிறது. பீத்தோவனின் கடைசி சிம்பொனியான ஒன்பதாவது சிம்பொனி நிகழ்ந்தபோது ஹிட்லரின் வருகையை முன்னுணர்ந்து இசையில் நடந்தேறிய தருணத்தில் பீத்தோவனின் காதும் கண்களும் செயலிழந்து இருண்டுபோயின. 


ஜமாலன் எழுதிய கட்டுரையில் ஒரு மணியார் டரை எதிர்பார்ப்பதுபோல் சாவுக்காக காத்திருந்த புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தில் பின்னால் 

மார்ச் 98 

படிப்பகம் 

________________ 


www.padippakam.com 

நடக்கப்போகும் கலாச்சார அக அழிப்பான மதுதி இடிப்பும் கதைப்பின்னலில் புதிர் வழியே முன்னுணரப்பட்டுவிட்டது. கர்நாடக முரசும் நவீனதமிழ் இலக்கியத்தின் மீதான ஒரு அமைப்பியல்,விமர்சனமும் நூலை யாரும் எழுதக்கூடும் யார் கைமுலம் வேண்டுமானாலும் நடந்தேறிவிடும் அபாயம் முன்னுணர்ந்து பதிவாகியிருக்கிறது கர்நாடக முரசில். கதை அழிப்பு என்பது அக அழிப்பாக இலக்கியம் X ஜேர்னலிஸ்ம் என இரண்டும் ஒரே பரப்பிற்கு வந்துவிட்டது. கதையழிப்பு ரப்பர் வேலையை செய்யுமளவிற்கு தூண்டப்பட்டுவிட்ட நிலை சிறுபத்திரிக்கை, மிடில் மேகஸின், காலச்சுவடு, நிறப்பிரிகை, இந்தியா டுடே கதைமலர்கள் என ஒன்றாகியிருக்கிறது. ஜேர்னலிஸ் எழுத்தின் சவமரபான கல்கியின் சரிததிரம் கல்லறை யிலிருந்து மீண்டும் எழுப்பப்பட்டு கல்கியின் வந்தியத்தேவன் மீசையும் அவன் ஆரோகணித்த குதிரையும் வாலாட்டி சிணந்து பின்னோக்கி பறக்கும் வெற்றிவீரனின் களிப்பில் உரைநடை பாயும் புலி பண்டாரவன்னியன் வரை வெற்றியின் புராண சரித்திரநாயகர்கள் அவதாரமெடுத்துவர செர்வாண்டஸின் ‘டான் கெஹாட்டே தோல்வி யுற்ற வீரனாய் காற்றலையை நோக்கி போர்தொடு க்கும் வாளுடன் வரும் Parody அப்போது வரையான உலகநாவலைத் தலைகீழாக மாற்றியது தமிழில் இதுவரை நடக்கவேயில்லை. ஜேர்னலிலம் X இலக்கியம் புல்டசோஸ் செய்யப்பட்டு சமவெளியாக மாற்றப்பட்டுவிட்ட காகிதக்காட்டில் வெட்டப்பட்ட மெக்கானிக்கல் க்ளேஸ் காகிதங்களாக சூழலே சுருட்டப் பட்டுள்ளது. Eternal Parody' தொடரப்படாமல் காகித முகமூடி அணிந்தவர்கள் கர்நாடக முரசு அறைந்து கொண்டிருக்கிறார்கள். 


புதுமைப்பித்தனின் பிரம்மராட்சஷை சில்வியாவின் துரபத்மனை உயிர்ப்பிக்கும் தருணம் வந்துவிட்டது. நவீன மொழியின் கட்டுமானிகளாக பிரேம் ரமேஷ், சில்வியா, தமிழவன், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர். ராஜேந்திர சோழன், ந. முத்துசாமி, பாதசாரி, கோணங்கி என தமிழ் மரபின் ஓசை சலனமடைகிறது. ஆதிக் குடித் தனிமொழியில் ஆயிரம் வனராக்கிகளின் ரத்ததாகம் கொண்ட குலதேவதைகளின் சடைநாக்கில் தொங்கும் அசுரனின் மொழி ஒரு ஆயிரம் வனமந்திர விலங்கின தாவரமனித யோனிபேதங்களில் சுழலும் கதைப்பரப்பு பேசாத வார்த்தைகளாய் சூரபத்மன் நாவில் கீறிய ரத்தமாய் பாய்கிறது. பிரேமின் 'கண்ணாடியில் முகங்கள் சில்வியாவின் தமிழ் மரமகளிருக்கு அசரீரி சொன்ன புராணக்கதை', மைத்ரேயி, சூரபத்மன்', தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் பாதசாரியின் காசி' 

காலக்குறி 162 

'இலைகள் சிரித்தன, எஸ். ராமகிருஷ்ணனின் 'நட்சத்திரங்களோடு துதாடுபவர்கள்', 'பெயரற்ற ஊரின் பகல்வேளை, கோணங்கியின் பாதரச ஒநாய்களின் தனிமை', 'புலிக்குகை நாயனம்', 'அல்பெருனி பார்த்த சேவல் பெண்", ஆர். ராஜேந்திரசோழனின் 'இச்சை', 'பரிணாமச் சுவடுகள், ந. முத்துசாமியின் நீர்மை', 'வண்டி', புதுமைப்பித்தனின் நாரத ராமாயணத்தின் ரகசிய தோட்டத்தின் புதிர்பாதையில் தோன்றுகிறார்கள் கதைகளோடு. 


சூரன் பொம்மை என்னடா ஆச்சு? சூரன் பொம்மை என்னடா ஆச்சு? என் உயிரை யெல்லாம் கொடுத்து செய்வேன். நான் அந்த கோர உருவத்தை மறுநாளே சிரச்சேதம் செய்து விடுவார்கள். சம்ஹாரம் முடிந்ததும் உடலைச் சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். எதிர் காலத்தில் பண்டிதனுக்கு வரப்போகும் அழிவை யூகித்த எனக்கு நிகழ்காலத்தில் கேட்கும் குரல்களை இனம்பிரிக்கமுடியவில்லை. பல குரல்களையும் அப்படியே பதிவு செய்கிறேன். இனம் காண்பதும் பிரிப்பதும் உங்கள் பொறுப்பு. 


சூரன் பொம்மை என்னடா ஆச்சு? சூரன் பொம்மை என்னடா ஆச்சு? 


காலம் உருவத்தினுள் சுருண்டு மடங்கி உட்கார்ந்து உருவத்தையும் காலத்தையும் வென்று நிற்குமோ? ஆத்மாவை ரத்தத்தில் கரைத்து உடலினுள் புகுத்தும் வித்தை எங்ங்னம்? சீறும் சக்தியை ஜடத்தினில் வெளிக்கொணர்வது எங்ங்னம்? பித்தனாய் உழைத்த பண்டிதன் இடையில் வழவழப்பை அதிகப்படுத்தி பிருஷ்டங்களை இன்னும் செழுமைப்படுத்தி கழுத்தின் வளைவைச் சரிப்படுத்தி கண்களில் ஆழத்தை உண்டாக்கி காதுமடலை மென்மையாக்கி நாவில் பூனை ரோமங்களை படரவிட்டு சூரபத்னை எழுப்பியதும். 


'அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவரசத்தை தடவு' என்றான் புதுமைப்பித்தன். மின்னல் வீச்சு சட்டச்சடசடாவென கம்பிகள் வழியாக பாய்ந்து குகைமுழுவதும் ஒரே பிராகாசமாகி கண்ணைப் பறித்தது. பிரம்மராட்சஷை எழுப்ப நன்னயப் பட்டன் முகமும் உடலும் கோர உருப்பெற்றது. பேய்ப் பாய்ச்சலில் சென்றுமறையும் ஒருபெண் உருவின் சடையைப் பிடித்து திரும்பி குகைக்குள் மறைந்தான். வெளியே குமுறும் இடியும் மின்னலும் எங்கிருந்தோ வந்து கவிந்தன. குகைக்குள்ளே பேய் உருவில் நடமாடுகிறான் புதுமைப்பித்தன். 

சூரன் பொம்மை என்னடா ஆச்சு? சூரன் பொம்மை என்னடா ஆச்சு? மார்ச் 98 

படிப்பகம் 

________________ 

WWW padippakam.com 

பாறையைப் பிளந்து கொண்டுவந்த புத்தரின் அரசியல் கார்ட்டுன் நாடகத்தில் மொழி தகர்ந்தேபோச்சு. சூரன்பொம்மை தகர்ந்தேபோச்சு. எங்கோ மழை இரவில் காடுகளில் கணியான் கூத்தில் மகுட ஒசைக் கிடையில் கேட்ட வெறியாட்டத்துள்ளிருந்து சூரன் பொம்மை அசைகிறது. எஸ்.ரா.வுக்குள் வந்தால் வாத்து எலும்புக்காரியாள் ஏவப்பட்ட நிலப்பரப்பில் ஊர் மருத்துவச்சி பிரசவிக்கத்துடிக்கும் பெண் வயிற்றில் வாத்து எலும்பைவைத்துமுணுமுணுத்த வார்த்தை புனைவு வெளியாக விரிகிறது. எலும்புக்குழல் ஊதி கர்ப்பப்பாதையில் சுருளும் காற்றைப் புராதன இசையாக்கி திறவுபடா ஆதிப்பெண்ணின் கருசுழிந்த தொல்தமிழ் இன்னொருகதை உலகை கருக்கொண்டிருப்பதை இனியான புனைவு வெளியில் புது எழுத்துக்கான வேட்கையே எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங் களின் உரையாடல். 


காற்றை மொழியால் சுழற்றும் நுரை ஈரல் மரத்தில் இலைகளின் நடுக்கத்தை வெள்ளித்தாவரங்களில் உருமாறும் குணபேதங்களின் துட்சுமத்தை மொழிச்சித்தர்கள் ரஸவாதத்தில் வைத்த மரபுப் பிரதிகளை மறுஉருவாக்கம் செய்யும் தமிழ் மரபின் நாபிக்கொடியிலிருந்து தொப்புள் ஈரவாடை நெடிக்க இனியாகும் எழுத்து மொழிவலையாய் விரிகிறது. எனவே. 


22:3.98 பதிவு

------------------------------------------------------------------------------------------------------------------------------

(காலக்குறி 1-7 இதழ்களில் வெளிவந்தவற்றின் பொருளடக்கம் - அடைவு)

இதழ் எண். தலைப்பு ஆசிரியர் மொழி பெயர்ப்பாளர் 1. அரேபிய ைஹக்கூ ஃபிர்தெளஸ் சபீத் ஹவசேன் அஜகான் 1. சிறுவர்களின் பாடம் ஹாங்க் ரிக்ள்ர் ry 1. கண்ணிர் சிந்து டாக்டர்.அத்னன் அல் நாஹ்வி ?? 1. கடவுளின் பெயரால் அஜ. கான் 1. முகத்தில் முகமாய் ・法 அஜ. கான் 1. வெற்றியின் நிறம்கருப்பு B அஜ. கான் 2. நசுக்கப்பட்ட நமது வரலாறு Hል ஜமாலன் 2. வீடு எங்கே இ ெேதளஸ் சபித் ஹுசேன் அஜ. கான் 3. ஆத்மாவின் கிடைப்பு “E နွှိရှ႕ႏို தாவ்ஹித் (எகிப்து) அஜகான் 3. கரைந்த நட்பு 18 அஜ. கர்ன் 3. சீதனம் என்றொரு சிறையிலே துரையூரான் (யாழ்ப்பாணம்) 3. வாழ்க்கைக்கும் உண்டு ASCII code ஜமாலன் 3. மீண்டு விடு த.அ. குவேமா (பிலிப்பைன்ஸ்) அஜகான். 3. காலத் தொடக்கம் காலித் அல்ஃபைசல் அஜ.கான் 4. என் மகன் பிறந்த அன்று சமினா தாவ்ஹித் அஜகான் 4. பல்லி வாழ்வென அஜகான். 4. ஹைகூ எட்மண்ட் சி.லோசடா அஜ.கான். 4. டி.எஸ். எலியட்டிற்கு ஜமாலன் 4. உதடுகளை முடிக்கொள்ள வேண்டுமா ஃபிர்தெளஸ் சபித்ஹசைன் அஜ.கான் 5. அரண் + மனையும் அரண் + ஐயும் பழமலய் 5. நிலாக்கதையும் என்பாட்டியும் தெளசிக் அகமது (எகிப்து) ஞானம் 5. கண்ணால முருங்கை நள்ளாறு நாராயணன் 5. தெருநாய் - அம்ரிதாபிரிதம். வினய்தர்வாத்கர் (இந்தியா) அஜகான் 5. இளமை நிரம்பிய இரத்தம் வாடிடுமா_ ஜுபைரி நஸ்லிம் (கென்யா) அஜ.கான் 5. கூடுகளுக்குள் ஒரு கூடு அஜ. கான் 6. இலையுதிர்காலமும் வாழ்வும் ஜோசப் பி.சோலிஸ் (பிலிப்பைன்ஸ்) ஜே.கே. 6. மானுடம் வேண்டும் துறையூரான் 7. திருடப்பட்ட விலா எலும்பு அஜ. கான் 7. சிறை அஜ. கான் 7. தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம். பொதிகைச் சித்தர் 7. போஸ்னியா உன்னை என்னால். சமீனா தாவ்ஹித் அஜ.கான்.

சிறுகதைகள்

1. அந்நியன் ஃபௌஜியா அல் ஜரல்லா (அரபு) அஜ. கான் 2. சுய்வருத்திகள் ஜேரயெஸ் - - - 3. மணற்கண்கள் நிறைந்த. காலித் அகமது அல் பூசிப் (அரபு அஜ. கான் 4. ஆறை ஹ. சேன் ஆலி ஹசேன் (அரபு அஜ் கான் 4. கிளர்ச்சி ட்ரேசி ஹாமில்டன் (ஸ்காட்லாந்து) அஜ்தான். 5. அந்த நொடியும். கைரியர்-அல்-சக்காஃப் ஹசன் - 7. த்ோழர்கள் நாடின் கோடிமர் சு. மகேந்திரன்

காலக்குறி | 63 | மார்ச் 98

படிப்பகம்