தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Tuesday, March 29, 2016

உம்பளாயி , பொறா ஷோக்கு - தஞ்சை ப்ரகாஷ் கதைகள்

___www.archive.org
google ocr_______________

338 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
28 உம்பளாயி

posted on 09/03/2016

முழங்கால் அளவு ஊத்தம் போட்ட சேற்றில் பாவாடையை தொடைக்கு மேல் துக்கி இடுப்பில் வரிந்து போக்கு காட்டிக் கொண்டிருந்த அந்த ஒத்த கண்ணு வெறாமீனை பாயசம் போல் ததும்பிக்கிடந்த சேற்றை, காலாலும், கையாலும், அளைந்து அளைந்து தரையில் விசிறி அடித்து தேடிக் கொண்டிருந்தாள். உம்பளாயி, உம்பளாயிய தெரியாது. ஆதிரியார் வூட்டு பொண்ணு அவ! தூரத்துக் களத்து மேட்டுல மேக்குடியார் நின்னுகிட்டு இருந்தாரு யானைக்கால் மாதிரி ஒவ்வொரு தொடையும் பெரிசு பெரிசாய் இம்மாந்துரத்திலிருந்தே தெரியறது "பீமன் மாதிரி இருக்கு மேக்குடியார் பார்வை ஒண்ணும் சரி கிடையாது. உம்பளாயிக்குத் தெரியும். வயசு அறுபது ஆனாலும் துப்பு கெட்டவன். மாமன் உறவு கொண்டாடிக்கிட்டு போற சோட்டுலவர்ர சோட்டுல கையப் போடுற ருசிரொம்ப உள்ள பயஆனா இந்த வெறா மீனு மாதிரிதான்! அந்த லக்லே தண்ணில வெறா புடிக்கலாம், சேத்து வெறா புடிக்கிறதுக்கு ரொம்ப நீக்கு போக்கு வேணும்? வூட்டு கெழவி கூட சொல்லும். அந்தி மசங்கல்ல களத்துப் பக்கம் போகாதடி மேக்குடியான் அங்கு நின்னுகிட்டு ஊறுகா மட்டய தட்டிக்கிட்டு இருப்பான். அப்புறம் 'ஆ' ன்னா போச்சோ 'ம்' ன்னா போச்சோ? அப்புறம் இடுப்ப புடிச்சிக்கிட்டு நகர்ந்து கிட்டு இருப்ப அப்படிங்கும். ஏன் நீ தான் கொட்டைய பிதுக்குகேன் யார் வேண்டாம் என்று கத்துவாள். உம்பளாயி "யாங் மாங் இப்படியே பாத்துக்கிட்டேயிருக்க கருத்தப் பொட்டக்கண்ணு தெரியாது. சேத்துல முழுங்து முழுந்து முழந்துமிதி - என்று கத்தினான். காவுத்தான் வரப்பில் நின்று கொண்டு - யாண்டால எழவு எடுத்த பயலே இது எங்களுக்குத் தெரியாதா? வெற மீனு பாச்சல எனக்கு கத்துக்குடுக்கிறீக? என்றாள் உம்பளாயி. காவுத்தனுக்கு அறுபது வயது இருக்கும். இந்த நாட்டுப் பள்ளவநுவல்லேயே மூத்தப்பள்ளன்! உம்பளயாய்க்கு வயது பதினெட்டுக்குள்ள அது போடுற போடு இந்தப் போடா இருக்கு கட்டத்துரைத்துப் போச்சாடா எனக்கு? நீ போட்ட கூப்பாட்டுல மீனு உள்ள போய்டுச்சிடா? நண்டு நத்தை திங்கிற புத்தி ஒன்ன வுட்டு போவுதா என்றபடி அளைந்த சேற்றையே மறுபடியும் காலால் அளைந்தாள் நறுக்கென்று காலில் உரசிப் பாய்ந்தது வெறா உம்பளாய் களைத்திருந்தாள். உடம்பு முழுக்கவும் வேர்வை கடலாக வழிந்து கொண்டிருந்தது. மூணு நாளா இந்த வெறா மீனு அவள நொங்க புட்டு புரட்டுது. அம்மாகூட சொல்லிச்சு "எட்டுப்பட்டிமுண்டே இப்படி பாவாட தாவணியோட கெளம்பி போlயேடி ஒண்ணப்பார்த்தா பறவூட்டுப் பொண்ணு மாதிரியிருக்கு சட்டை போடாம. லவுக்க போடாம இப்படி________________

உம்பளாயி - 339
காலையிலேயிருந்து சாயங்காலம் வரைக்கும் சேத்த உடம்புல வாரி பூசிக்கிட்டு அப்படி மீனை தின்னாட்டி ஆவலியா? ஒப்பன் பார்த்தான்னா என்ன வகுந்துபுட்டுதான் மறுவேலை பாப்பான். நீ ஒக்காந்து ஒம்பது வருஷமாச்சு இன்னும் எந்திரிக்கல. ஏம் பிராணன வாங்குற எல்லாம் அந்த கெழவி குடுக்கிற கெப்புறு. நீ அந்த ஆட்டம் ஆடற. மீனு திங்கிறதுன்னா இப்படியா அலைவா ஒரு பொண்ணு விடிஞ்சா போதும் ஒட்டு சில்லு ஒண்ணக் கையில் எடுத்துக்கிட்டு வய வயலா எறங்கிர்ற, மானங்கெட்ட சிறுக்கி" உம்பளாய்க்கு தொண்டையை அடைத்துக் கொண்டது அழுகை இப்போதுவரத் தொடங்கியது. அப்போது அல்ல. உம்பளாய் கொஞ்சம் திமிரான அழகுதான்! என்னத்துக்கு இப்படி பாக்கிறாய் என்று அடிக்கடி காறித் தப்புவாள். முதுகுக்கும் பின்னால் எப்பவும் ஊர்ப்பசங்க வயசுவித்தியாசம் இல்லாமல் குஞ்சு குளுவான்ல்ல இருந்து நண்டுசிண்டுல இருந்து கிண்டு கெழங்கட்ட வரைக்கும் இப்படியா பார்ப்பானுவ துள்ளுதுன்னு? யாராவது சொன்னா போதும் அடுத்த நிமிஷம் போட்டது போட்டபடி போட்டுபுட்டு ஊத்தங்கூடையைத் துக்கிட்டு மேக்கால் வயல்ல இருட்டுன்னு பாக்காம. எறங்கி வெறால புடிச்சிருவா தேளிமீனு கூட அங்க மேயும். கடிச்சிதுன்னா கடுப்பு அடங்க அடுத்த நாளாகும். ஆம்பள வளேயே கொஞ்சம் அசத்துற மடுவு உத்தாண்டயான் மடுவு. இவளேயே கொஞ்சம் அசத்துற ஏறங்கிறதுக்கு பயப்படுவாங்க மூணு ஆளு. நாலு ஆளு ஆழம் இருக்கும். மீனு மடுவுல இருக்காதுன்னு சொல்வாங்க. நீளமா கட்டிவுட்டு இருக்கிற சிமிண்டு கட்டையில தண்ணி கணுக்கால் அளவு பரவி ஒடற இடம் அது. பெரிய வெறா மீனு நாலு ஐய்ந்து சிமெண்டு கட்டையில மேலே ஏறி மேஞ்சுகிட்டே எகிறி நீஞ்சும் பாக்கிறதுக்கு கண்ணு கொள்ளாது. யாரும் புடிக்க முடியாது. மேஞ்ச ரப்பு ராங்கியில பாசி தரையிலே மேல மேல மேயும். அந்த உழுவம் பாசி அப்படின்னா வெறாலுக்கு ரொம்பப் பிடிக்கும், அந்த மீனு ருசி உம்பளாய்க்குத்தான் தெரியும். மடுவுக்குள்ள நீஞ்சுக்கிட்டே பரிகூடயால மீன அலாக்கா அமுக்கணும். கொஞ்சம் அசந்தா மடுவுக்குள்ளே சொழண்டு கிட்டுயிருக்கிற தண்ணிக்குள்ள போயி சொழல்ல மாட்டிக்கிற வேண்டியதுதான். அப்புறம் வுட்டாமெதக்கணும் ஒரே அழுத்தல் நாலு வெறா மீனையும் அமுக்கிட்டு கூடையோட மடுவுல இருந்து ஒரு எவ்வல்ல கரையேறிடுவா உம்பளாய். ஆனா அவள்ட்டேயே இந்த ஒத்த கண்ணு வெற பத்து நாளா போக்கு காட்டுது தண்ணி எறச்சாச்சு நாலு பள்ளனுவவுட்டு, பரிகட்டியாச்சு வா மடையையும் பூட்டியாச்சு எட்டுக்கு பத்து சைகல இருந்த வயசு குறுக்கி ஒரு குழிக்குள்ள கொண்டு வந்தாச்சு ஆனா மீனு அம்புட்ட பாடு இல்ல. மீனு தண்டுண்துல மீனு எளசுன்னு நல்லா தெரியாது ஆனா அளவு பெரிசு கடல் வஞ்சரம் மாதிரி நீளம் வலுவான ஊக்கவுள்ள மீனு, நல்ல கருத்த நிறம் நல்ல பளபளன்னு கரும் பலிங்கி மாதிரி பெரிய, பெரிய செதிலோட பார்க்கவே களையான மீனு வெட்டித்துண்டம் போட்டா இருபத்தைந்து துண்டு ரெண்டு குடும்பம் சாப்புடலாம். இப்படி மீனு கோலிக்கிட்டு நிக்கிறதா உம்பளாயின்னு தெரிஞ்சா ஆதிரியாரு சும்மாவுட மாட்டாரு. அந்த பக்கம்________________

34() - தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
ஆதிரியாரு ஆட்டவுட்டு வயலுக்கு எறங்கினா இந்த பக்கம் உம்பளாய் மதகுல இறங்கிடுவா இந்தப் பக்கம் அஞ்சனியிலிருந்து நார்த்தங்காரு மேல? அடிவாசல் வரைக்கும் ஒரு வா மாட உயர்ந்து இல்ல, உத்தங்கள் ஒண்ணையும் மிச்சம் வைத்கிறதும் இல்லை. ராத்திரி பகல்ன்னு நேரம் கிடையாது. மாசி பங்குனியில ஆத்துல தண்ணி குறைய ஆரம்பிச்சிடுச்சின்னா உம்பளாய்ப் பாடு கொண்டாட்டம்தான். கோயில் குளம் வரைக்கும், பள்ளங்குடி, பறக்குடி மேடு வரைக்கும் ஆதியாரு மானங்கெட்ட மாதிரி சத்தம் போடுவாரு மீனுகாரங்க மீனுக்காக ஆதிரியார் ஊட்டு வாசல்ல வந்து பணத்தை வாங்கிட்டு போவாங்க, மீனாட்சி அம்மாளத்தான் ஆதிரியாரு போட்டு சதும்பி எடுப்பாரு கெழவிதான் கத்தும் அடப்பாவி நாசமா போறவனே உட்றா உட்றான்னு கத்தும், படாத இடத்துல பட்டு உயிர் போகுமில்லடா அடிக்கனுமின்னா மொவள போயி அடி அதவுட்டான். இவள போட்டு வெதும்பி எடுக்கிறான். அந்த ஒடுகாலி முண்ட எவனாவது மீன்காரனோடதான் ஒடபோறா! அப்படின்னு கத்தும் ஆதிரியாரும் அடிக்காமாலாவுட்டாரு பத்து வயதுல எற கூடையோட மாமடுவுல எறங்கினாபொண்ணு உம்பளாய். கருவாடாகி வெறா மீனுன்ன அதோட கெவுச்சி கூட ஒரு ருசியாச்சே மீனுல கவுச்சி போச்சுன்னா அப்புறம் ஏது ருசி அப்பிடின்னு உம்பளாய்ச் சொல்றதைக் கேட்டு அவங்க அம்மா மீனாட்சி வெளக்கமாத்து கட்டையை எடுத்துகிட்டு "நாக்கு ஆவாதடி இல்லன்னு கவுச்சிபோயி மீனு ருசின்னு நக்குவியா நீ? நீ உருப்புடமாட்டாயா. ஒரு நல்ல களியாக முண்டன் ஒருத்தன் வந்து மிதிக்கிற மிதில இந்த வெறாமீனு கெரஞ்சுபோற மாதிரி நீயும் கெரஞ்சி போவனும் இல்லனுன்னா காலையிலே பரிசுடையோட வயல்ல இறங்கவேண்டியதுதான் 'மாயி நாங்களும் வர்ரமே ஆயி' என்றபடியே பள்ளப் பயலுவ கூடவே சேத்துல இறங்கிடுவானுவ! இப்ப பெரிய பயனுவளும் அவளோட சேத்துல நின்கிறானுவ ஆதிரியாருக்கு சாகலாமான்னு கூட வரும். உம்பளாய்ன்னு ஒரு பேய் அலறல் அலறிகிட்டு உடியாருவாரு அப்புறம் உம்பளாய்ப் பாக்க முடியாது. சீலையை வரிஞ்சுகிட்டு தண்ணில குதிச்சா காவேரில எதிர்கரையில போய் ஏறிடுவா ஆத்துக் குறுக்கால ஒண்ணற மையிலு நீயிறது.ண்ணனு ஆம்பளைகளுக்கு தெணறும்போது மூச்சு வாங்கும். முழு ஆத்துலயும் தண்ணி ஏறி கூழை அசையும். தெறந்து வாங்க தண்ணி ரெண்டு கூரையையும் மேடேறி நொரை தள்ளி போகும். போதும் உம்பளாய் எங்கையாவது தூண்டில ஒண்ணெப்புடிச்சிக்கிட்டு கழுத்து அளவு தண்ணில நிக்கும். ஆளு உயரத்துக்கு ஒரு மீன் புடிச்சி பள்ள பயலுவோட கரையேத்திவிட்டு நின்னப்போ ஆதரியாரு அவள வெறகு கட்டையால அடிச்சது இன்னும் உச்சந்தலையில தழும்பா இருக்கு. சேலுபெண்டே மீனு அது ஆதிரியாருக்கே பயம் வந்துட்டது. அவ்வளவு பெரிய மீனு, ஆத்துல புடிச்சு அவரு பாத்ததே இல்லை கொளத்துலதான் இப்படி மீனு புடிப்பா எப்பவும் எப்போதும் பள்ளிகூடத்துல பள்ளப்பயலுக தேவடியா முண்டே பதினாறு வயசுல இப்படியாமீனு புடிப்பா சாவகாசம்தான் ராத்திரி படுக்கைக்கு வந்து இருட்டு குள்ளாற அவ அம்மா காலடியில் படுத்து கெடப்பா காலையில எந்திரிச்சோடனே அடி திமுதிமுன்னு________________

உம்பளாயி 341
உம்பளாக்கு விழும். கரண்டிக்கா தழும்பு எத்தனை அடிவயத்துல பழுக்க இழுத்திருக்கின்னு அப்பா சொல்லி கதறும் மீனாட்சி. ஒரு தடவ மிதித்த மிதில மூச்சு அடைச்சு போச்சு உம்பளாக்கு வாகடம் பாக்கிற வைரம் சொல்லிச்சு 'வயசுக்கு வந்த பொண்ண இப்படி மார்ல போட்டு மிதிக்காதீங்க மூச்சுபோன போக்குல போச்சுன்னா அப்புறம் 'வா'ன்னா வருமா' அப்டின்னுகத்துன அப்புறம்தான்! அடிக்கிறதையே எல்லோரும் நிறுத்துனாங்க. ஜாதகத்துல அவளுக்கு ஜலழுகத்தினு இருக்காமே! சேரங்குளம் அய்யரு சொன்னாரு. எப்பப் பார்த்தாலும் மீனாட்சியம்மாதான் கண்ணுல தண்ணிவுட்டு கதறும், செத்த நேரம்தான் அப்புறம் சிட்டா எங்கியாவது பறந்திருவா உம்பளாய பத்து தடவ பொண்ணு பார்க்க வந்துட்டு போட்டானுவ பொண்ணு புடிக்கலன்னு கல்யாணம் ஆக மாட்டேங்குது மாமனுவ? வீடு தங்காம மீன் ஊத்தம் போட்டுக்கிட்டு இருக்கிற பொண்ண யாரு கட்டிக்குவா? வீடு தங்காம மதகு ஆறுன்னு ஏறி இறங்கிட்டு இருக்கிற பொண்ணுன்னு எல்லோருக்கும் சிரிப்பா போச்சு. ஆனா மேக்குடியாறு அவள விட்றதுல்ல களத்துல வயலுல்ல ஆத்துல, படித்துறையில, வெத்தலக் கொடிக்கால்ல. இருபது கண்ணு சட்டர்ல எங்க பார்த்தாலும் சரிதான் ஒரு லாவு லாவி தூக்கிடுவாரு மூச்சிலே பயலே! என்று கத்தியபடியே தப்பி ஓடுவாள் உம்பளாய் உம்பளாய்க்கு ஒரு வெள்ள ராசி வெறா மீனு இருந்தது யாருக்கும் தெரியாது. அது வய வாய்க்கால் மடு எஞ்சயம் வராது. வூட்டுகுள்ள உக்காந்து பீராஞ்சி போகுதே மொத படித்துறை அக்ரஹாரம் அந்த ஊரு மொத வூட்டு சாரநாதன் தான் அது உம்பளாய் என்ற பேரெக்கேட்டே சிரிடாசிரின்னு சிரிச்சான் அந்த பாப்பார பையன். அது என்ன பேரு 'உம்பளாயி அப்படின்னு சிரிச்சான். அக்ராரத்துஏட்டி பாப்பானுவ தனியா ஒரு சின்ன கிராமமே கட்டிப் புட்டானுவ நூறு வருஷத்துல கள்ளணுவ வளத்துவுட்ட அக்ரஹாரம்தான் அது ஓடான வுட்ல அஞ்சினி அலங்காடு காவேரிக்கு எதிர் கூரையில உம்பல் சுத்து பட்டம் முப்பது கிராமத்துக்கும் விசேஷத்துக்கும் எல்லாம் இங்கே இருந்துதான் புரோகிதத்துக்கு போவானுவ புது அக்ரஹாரத்து பாப்பானுவ படிக்கிறதுக்கின்னு கரமுண்டானுவனாம், சேண்டாபிரியனுவனாம் இன்னும் நூறு வருடத்துல கொஞ்ச காசையா அழிச்சிருக்கானுவ? சாமின்னு சொல்லி, பூதம்னு சொல்லி புரோகிதமுன்னு சொல்லி ஜபம், யாகமுன்னு சொல்லி, கொஞ்ச காசையா கரவுட்டுக்கனுவா? இப்ப கிட்டன்சுல அக்ரஹாரத்துக்குள்ள ரெண்டு டாக்டர் எம்.பி.பி.எஸ் வந்துட்டானுவ ரெண்டும் பாப்பான் யாருவூட்டு காசு? இப்பவும் கள்ளணுவ காசுதான். வைத்தியத்துக்கு குடுக்கிறதும் கள்ளனுவதான். போன வருஷத்திலிருந்து ஊசி போட்டுகிறதுக்கு இங்க வருதுவோ ஜனங்க அப்படின்னா பாரேன் திருக்காட்டுப்பள்ளி வரைக்கும் வந்த பஸ்சு இப்ப டவுன் பஸ்ஸாகி புது அக்ரஹாரத்துக்கு எதுக்க மேங்கால் வரைக்கும் வந்திருச்சி! ஆனா அந்த பஸ்சு கள்ள குடிக்கி வராது. வெள்ளாள அய்யர் வூட்டு பஸ்சு கம்பெனி ஆயிடிச்சி. அது பாப்பார குடியவுட்டு அஞ்சினிக்குள் பூந்து கள்ளகுடிக்கி எப்படி வரும் நூறு வருஷத்து உம்பளாய்குட்டி வயல்ல எறங்கி வெள புடிச்சிகிட்டு திரியிறா, கள்ளனுவ வூட்டு புள்ளைஇவ!________________

342 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
அக்ரஹாரத்துக்குள்ள வந்து வெள்ளான அய்யர்வூட்டு டவுன் பஸ்ஸில திருக்காட்டுப்பள்ளி போயி நாகசாமி அய்யரு ஐஸ் ஸ்கூல்ல படிக்க பணம் கட்டி அம்பது வருஷமா கோழி முட்டை கோழி முட்டையை வாங்கதுவோ. உம்பளாய்த்தான் பனிரெண்டு வயது வரைக்கும் படிச்சா. அரு என்னாமோ பாப்பாரக் குட்டிய இன்னமும் இன்னமும் புது அக்ரஹாரத்துல இருந்து தஞ்சாவூர் காலேஜூக்கு படிக்க போவுதுவோ டஸ்-டஸ்சுன்னு இங்கிலிசு பேசுதுவோ. உம்பளாய் மாதிரி குட்டியோ காவேரி ஆத்தையும், கூளை அத்தையும் தாண்டி போகவே திருப்பி வராது. பாப்பாரக்குடி ஒண்ணொன்னு இதே பரிசல்ல ஆறு நிறைய தண்ணி போனாலும் கடந்து போயி டெல்லி, கல்கத்தா, பாம்பேயின்னு போயி இடம்மாறி, குடிமாறி கலெக்கடர் டாக்டர், ஆபிஸ்ரு, ஒம்பியரு, முனுசுப்பு, டாக்டர் டிரைவர் அப்டின்னு மாறிக்கிட்டே போன்ப்ப உம்பளாய்க்குட்டி அன்னு மோட்டார் காரையும் அக்ரஹாரத்துக்குள்ள வர்ற பஸ்ஸையும் ஈன்னு இளிச்சிகிட்டு பாத்துக்கிட்டு நிக்கறப்ப சேண்டாபிரியவரும், மழவராயனுவரும் பள்ளி கூடத்துமேல போவமா கீழறெங்கி பாதியிலேயே திரும்பி, திருவாரூருக்கும், திருவிடைமருதுருக்கும், புதுக்கோட்டைக்கும் பொம்பள நாயத்தேடிப் போய்ட்டானுவ அதுக்குதான் இந்த பஸ்சு காரு கேணி பட்ற, ரேக்களா மாட்டுவண்டி எல்லாம் அஞ்சினிக்குள்ளாற வந்ததே. கள்ளக்குடி பொண்டுவ மயிர இப்படி அறுக்கிறதுக்குத்தான். ரொம்ப குடியில இப்ப வெள்ளப்புடவ கட்டறதக்கூட நிறுத்திட்டாளுவ தெரியும்லா. உம்பிளாயி சின்ன புள்ளயா இருக்கிறப்ப கட்டுவைரவளம் பாத்துர்ற இருக்கா இப்ப ஏகப்பட்ட கள்ளக் குடிகோ ரோட்டுக்கு வந்து தஞ்சாவூருக்கு போய்டுச்சி புதுக்கோட்டையிலும் திருவிடைமருதூரிலும் ஆட்ட காலிவரைக்கு கள்ளனுவ காசு போய் சேர்ந்தது. இப்படித்தான் ராமாஞ்சியம் கெழவி கோழியோட ஒக்காந்து தவுடு பெசங்க வைக்கிறப்ப ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சா விடிய விடிய ஓயாது. உம்பளாய் தண்ணிலிருந்து புது அக்ரஹரத்து பாத்துக்கிட்டே இருந்தவள்ள அஞ்சியிலே இருந்தாலும் ஒரு பாப்பானுவ புது அக்ரஹாரத்து லகுந்து சேத்துல இறங்கி பாத்துயிருக்காளா? அக்ரஹாரத்து வூட்டு வூடெல்லாம் படமா நிமிர்ந்து போச்சு ஊருக்குள்ள கருப்பு கட்சி, சிகப்பு கட்சி எல்லாம் வந்து கொடி குத்திபுடிச்சி பாப்பான் ஒழிக, தமிழன் வாழ்க அப்டின்னு செவுத்துல எல்லாம் கருப்பு கரிய அரச்சு எண்ணெயில கொளப்பி எல்லா பயலுவளும் எழுதி வச்சானுவ, உம்பளாயி அப்போ புடிச்சி சேத்துலதான் நிக்கிறா வெறா மீனை புடிக்கணுமில்ல? உம்பளாய் மட்டுமல்ல கள்ளப் பயனுவல்ல ரொம்ப பேரு மீனுப் புடிக்கல்லயேதவிர பொம்பள புடிச்சிக் கிட்டுதான் திரிஞ்சானுவ வயலு வெளஞ்சது காவேரியும், கூழையாத்துலயும் தண்ணி குறையல. பஞ்சன முடுக்கெல்லாம் நெல்லும் விளைந்தது. அடுத்த நாலஞ்சு மாசத்துல சேத்துக்குள உம்பளாயியோட நண்டும் சிண்டுமாய் நாலு நிக்கும் செம்பு கையில கையில துக்கிகிட்டு வய நண்டு புடிக்கும் கள்ளக்குடி வயல்ல எறங்கினாக்க ஆனா உம்பளாய் அவவரைக்கு என்ன கிடைச்சுதோ அதுல ஆனந்தமா இருந்தா. எப்படியும் ஒரு வெற மீனு புடிக்காம வீட்டுக்கு போறதில்லை. வயல்ல வெற________________

உம்பளாயி 343
புடிக்கிறதுன்னா ஜில்லா கலெக்டருக்கு ஜில்லாவ புடிக்கிறமாதிரிதான் தெரியுமில்ல. ஆனாயாருக்கு புரியாது உம்பளாக்கி அக்ரஹாரத்துக்குள்ள ஒரு வெள்ளராசி வெறாமீனு இருக்கே அது யாருன்னு தெரியுமா? சாரநாதன் பத்து வருஷத்துக்கு மிந்தி அவள் தூண்டில்ல மாட்டுனவந்தான். திருக்காட்டுப் பள்ளியில் வில்லு வண்டியில ஆதிரியாரு வூட்டுகுட்டி பள்ளிக்கூடத்துல படியோ படின்னு படிச்சுப்புட்டு முட்டை முட்டையாய் வாங்கிட்டு திரும்பி வரப்ப நீர்க்காவியோட அழுக்கு வேஷ்டி கட்டிக்கிட்டு சாரநாதன் மூச்சு எறக்க எறக்க வண்டி பின்னால் நடந்து வருவானே! அவன் யாரு? பாப்பார பயதானே ஆச்சர்யமா இருக்கும். அவளுக்கு வெள்ளராசி வெறமீனு, அவன் வெறா மீனுல வெள்ளராசி ருசி இல்ல. ஆனா உம்பளாயிக்கு வெறாமீனுல வெள்ளராசிதான் வேணும். வில்லு வண்டி ஒட்டியாற சாமிநாதன் கண்டியரு சொல்லுவாரு "ஏ ஆயி இந்த பயல வண்டியில ஏத்திக்கிருவியாப்பாரு?" சாரநாதன், பின்னாலேயே "வேண்டாம் மாமா நா நடந்தே வாரேன்' அப்பிடிம்பான். ஆனா உம்பளாயி அவன் பார்க்கிற பார்வை உம்பளாய்க்கி மட்டும்தான் தெரியும் புரியும். கண்ணுல இத்தன பார்வை இருக்குதா. அவன் பயப்புட்றது கூட உம்பளாக்கி வெற மீனு பாசையில் புரியும் கண்ணு ரெண்டும் அவ பாக்காத எடத்தல நோக்கமா பாக்கும் அது கள்ளப்பய பார்வை கிடையாது கண்டியரு ஹெ ஹெ ஹெ ஹெய்-ன்னு கத்திக்கிட்டே மாட்டு வால புடிச்சி முறுக்கிடுவாரு வில்லு வண்டி பறக்கும் சாரநாதன் துரமாகி போவான். "பாப்பார பயலுவல்ட ஜாக்கிரதையா இருக்கணும் ஆய்யேய் அப்படின்னு ஒரு நமுட்டு சிரிப்போட அவள பாத்து சொல்றது பயமாகவே இருக்கும் உம்பளாய்க்கு பத்து வருஷத்துல சாரநாதன் உம்பளாய் நெஞ்சுக்குள்ள துள்ளுற வெள்ளராசி வெற மீனு ஆகிப்போனான். சுத்திமுத்தி எங்க பாத்தாலும் வெடமான கள்ளப் பயலுவ மத்தியில அதை ஒளிக்கிறது எவ்வளவு கஷ்டமாக இருந்தது உம்பளாய்க்கி. ஆனா ஒன்று மட்டும் பாவி பட்ட நெஞ்சுக்கு தெரியவே மாட்டேங்குது. மொத மொத முத்து ரத்தினம் கொண்டையாரு வீட்டுல இருந்துதான் மாமாவுக்கு வந்து அவள பொண்ணு கேட்டாங்க. உம்பளாய் பயந்துபோய் அழ ஆரம்பிச்சா? மீனாட்சியம்மா "ஏண்டி உனக்கு என்னா வந்திருச்சி மாமன் புடிக்கலைன்னா புடிக்கலன்னு சொல்லு. அத வுட்டுவிட்டு அழுது கொட்டுன்னா என்ன அர்த்தம்?' 'ஏய் தஞ்சாவூர்லேயும் வெண்ணாறு, வெட்டாறு எல்லாம் ஓடுதுடி அங்கேயும் வெற மீனு எல்லாம் கெடக்கும் என்றாள் மச்சினி பொண்ணு ஆடு பாக்க வந்தப்போ முத்து ரத்னம் கூளை ஆத்துக்குள்ள பரிசல் வரும்போது உம்பளாயிய சேத்துக்குள்ள பள்ளனுவளோடேயும், வலையவனோடேயும் நின்னு மடுவுல மீனு மிதிச்சிகிட்டு இருந்தத பார்த்தவுடனேயே பொண்ணு வேண்டான்னுட்டான் எல்லோருக்கும் பொசுக்குன்னு போயிடுச்சி. அதுக்கு அப்புறம் நாலு மாமனுவ வேண்டாம்னுட்டான். ஆதிரியார் குடி பூரா இதே பேச்சா போச்சு அப்புறம் மெல்ல மெல்ல மீனு புடிக்க போற குட்டிய எவன் கட்டிக்குவான் அப்டின்ற கேள்வியே எங்க பார்த்தாலும் தெரிஞ்சுது. உம்பளாய்க்கு வேண்டியது வெள்ளராசி கருவெறா வீடு தங்கினதுல்ல படிப்பு________________

344 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
ஏறல, வீடு பூறா நெல்லு மூட்டையும் துவர மூட்டையும் அடுக்கி கிடந்தாலும் அந்த வெள்ள வெற உம்பளாயிய இழுத்துக்கிட்டே போவுது தொடதண்டிக்கி அது வளந்திடிச்சி அக்ரஹாரத்துக்குள்ளே போயி அவள பார்க்க வேண்டியது இல்லை. உம்பளாய்க்கு மனசுக்குள்ள நினைக்க வேண்டியதுதான். ஒடம்பும் வேணும் மனசுக்குள்ள ஒடம்பு வந்திருதே அதுக்கு என்ன செய்றது. ஒண்ணு இல்லாம ஒண்ணா இல்ல. காலையிலே அவளைப் படித்துறையிலே பார்க்கலாம். அக்ரஹாரத்து சிவன் கோயில் படித்துறை, நாகலிங்க மரத்தடியில் நாகலிங்க பூ பொறுக்கி சேத்துக்கிட்டு இருப்பாள். அந்த பூவை பார்க்கும்போதெல்லாம் உம்பளாய்க்கு பயமா இருக்கும். அவன் மாதிரியே அந்தப் பூவும் வீரியத்தோட நிக்கும். அவளையே நட்டுக்கிட்டு பார்ப்பான் அந்தப் பாப்பான். உம்பளாய்க்கு மனசுக்குள்ள நாகலிங்க பூ பூந்து லிங்கமா நிற்கும். கையிலே ஒரு இங்கிலிஸ் புத்தகத்தை வச்சுகிட்டு உம்பளாய் மாரயே பார்த்துக்கிட்டு இருப்பான். அத்தாம் பெரிய புத்தகத்துல என்னதான் எழுதியிருக்குமோ. படித்துறை மேலச்சுவர்ல பிராமணன் ஒழிக சூத்ரன் என்றால். என்று எழுதியிருந்தது. அவன் அவள் பார்வை போன திசையில் லேசாக சிரித்தாள். பிராமணன் ஒழிக. என்றான். அய்யய்யோ நீங்க பிராமின் ஆச்சே என்றாள் உம்பளாய், ஆமாடி விரால்மீன்தான் என்றான் சாரநாதன். படித்துறையின் கீழ்ப்படிக்கட்டில் நாலு பிராமணர்கள் உக்காந்து ரெண்டு பேருக்கு தர்ப்பணம் செய்வித்துக் கொண்டிருந்தார்கள். கரையோரத்தில் இருந்த கிளுவ மரத்தில் கிளிகள் கீச்கீச் என்றன. நீங்கள் வெற மீன்தான் வெள்ள வெற மீனு என்று சிரித்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆறு படர்ந்து கிடந்தது. இப்போதெல்லாம் ஆற்றில் கூட தண்ணீர் வரத்து கொறஞ்சுதான் போச்சு. 'சடசடவென்று செங்குத்தாக மீன் கொத்தி ஒண்ணு வந்தது. ஒரே இடத்தில் நின்று சிறகடித்ததைப் பார்த்த உம்பளாய்க்கி மீன் கிடைக்க வேண்டுமே என்ற பதைப்பு. அவனையே பார்த்தாள். சாரநாதன் லேசான வெட்கத்துடன் தலைகுனிந்து நாகலிங்க பூக்குடலையில் எதையோ தேடினான்? சல்பபென்று தண்ணீரில் விழுந்து பாய்ந்ததுல மீன்கொத்தியின் அலகில் ஒரு கெண்டை வெள்ளி மினுங்கி பறந்தது."ஏட்டி என்னாடி இங்க பாப்பாரப் பயலடே கின்னாரம்" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தபோது மேக்குடியான் சாரநாதனைப் பார்த்து "என்ன அய்யரே கள்ள குட்டிக்கிட்ட என்னய்ய ஒட்டு கட்டுற. அவெள நான் கட்டிக்கப்போறேன்ய்யா. நீ பாட்டுக்கு கம்பிவுடாதே என்ற முரட்டுத்தனமான மேக்குடியாரின் அசிங்க பேச்சு கேட்டு சாரநாதன் 'மேக்குடியாரே நானா வேண்டாங்கிறன் வேணுமின்னா அவளெ இழுத்துக்கிட்டு போயி தாலிய கட்டும். உமக்கு வேண்டியதுதான் இப்படியொரு பொண்டாட்டி' என்று கலகலத்துச் சிரித்தான். கசக்குதா வெள்ளத்தோலுப் பாப்பான்தான் வேணுமா. 'உனக்குதான் இனிமே கல்யாணம் கிடையாதே. சேத்து வெற மீனை பாப்பானால புடிக்க முடியுமா? செதில புடிச்சி தூக்கினா எப்படிப்பட்ட வைரமீனும் தலையைப் போட்டுடும் தெரியுமாடி' என்ற மேக்குடியாரு பேச்சு________________

உம்பளாயி 345
சாரநாதனுக்கு கசந்தது. மனதுக்குள் அழுக்கு தடியன் அவனால் ஒன்றும் முடியாது. அவனுக்கு நன்றாகத் தெரியும். படித்துறையில் விக்கித்து நின்றான் அவன். "உனக்கு வெற மீன்தான் வேண்டுமா எத்தனை மீன் வேணும் நான் புடிச்சி தரண்டி' என்றார் மேக்குடியார். கூறை ஆரு பூராவும் தண்ணி வடிஞ்சி கிடக்கு சேறுதான் இடுப்பு அளவு கிடக்கு. மேக்குடியானுக்கு இரண்டு கையில்லே பத்து கை தெரியும்? பத்து கையிலேயும் ஒரே ஒரு வெற அழுத்திப் புடிச்சா நிண்ட முடியாது. நிமிர முடியாது தெரியும்லே." நாகலிங்க மரத்தடியில் இருந்து அங்கே என்ன நடந்தது என்று பார்த்த சாரநாதனுக்கு விக்கித்துப் போயிற்று. உம்பளாயியை தண்ணீரில் இருந்து எவ்வி இடுப்புக்கு மேல் பிடித்து தூக்கிவிட்டார். மேக்குடியார் விளையாட்டு மாதிரி இருந்தாலும் வழக்கமாக மேக்குடியாரை அடிக்கவோ தட்டவோ திமிறவோ முடியவில்லை உம்பளாயியால், திமிறித்துள்ளி சேற்றில் பாதி தண்ணீரில் பாதியுமாய் விழுந்த உம்பளாயியை படித்துறை அய்யர்கள் திரும்பி பார்த்தனர். தண்ணீரில் நீந்த முயன்ற அவளைப் பார்த்து 'ஒழுங்கா வீட்டுக்கு போயி சேரு பிராமண சவகாசம் எல்லாம் வேண்டாம்' என்று விளையாட்டுபோல் விசயத்தை போட்டு உடைத்தார். மேக்குடியார் அவனையே பார்த்து தண்ணீரில் இறங்கி நீந்தி சுழலும் மடுவை தாண்டி நீந்திப்போன உம்பளாயியை கண்கொட்டாமல் பார்த்த சாரநாதனை "அய்யரே இந்தக் குரல் உசுப்பியது. "ஒனக்குத்தான் பொண்ணு அமெரிக்காவுல படிக்குதே அப்புறம் யாய்யா மீனைத் திங்கற கழுதைகிட்ட." என்ற மேக்குடியாரின் பேச்சு படித்துறை பிராமணர்களையும் உசுப்பிதான் விட்டது. துரத்தில் போய்கொண்டிருந்த விரால்மீன் ஒன்று சேற்றில் துள்ளியது சாரநாதனுக்குப் புரியவில்லை.


2தலையில் இருந்து தீ மாதிரி வியர்வை கீழே காந்தலாக இறங்கிக் கொண்டிருந்தது. உம்பளாயின் மேல் இந்த ஒத்தக் கண்ணு கருவராசி ஒத்தக் கண்ண வச்சுக்கிட்டு அவள இந்த ஒட்டு ஒட்டியது அவளுக்குத் தாங்கவில்லை. நாள் முழுவதும் சேற்றிலேயே நிற்கிறது. அவளுக்கு புதுசு இல்லை. இதையெல்லாம் ஒரே ஒரு மீனுக்காகன்னு நினைக்கும்போது தாங்க மாட்டேங்கிது. பங்குனி வெயில் கோடு கோடாக வெள்ளைத் தடி ஒன்றை குறுக்கும் நெடுக்குமாய் சுழற்றி அடிப்பது போல் இருந்தது. அவளுக்கு மனசு முழுக்க பாரம் - "இன்னும் எத்தனை நாளக்கி தாண்டி வூட்டலயே ஒக்காந்து ஆட்டை தேய்க்கப் போற' என்றது ராமாஞ்சியம் அப்பாயியின் குரல்! பாலத்தடி நைனாபாய் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி வர காசு நீட்டும்போது நைனாபாய் கையைப் பிடித்து வாங்குகிறான் பரிசல்காரன் தடி சோணாசலம் காரணமே இல்லாமல் தானே ஏறிக்கொள்ளும்போது இடுப்பைப் பிடித்து துக்கி விடுகிறான். பள்ளிக்கூடத்து வாத்தியார் எபனேசர் என்னடி இன்னமா கல்யாணம் ஆகாம இருக்க என்று சொல்லியபடி எங்கேயோ கிள்ளுகிறார். "ஒண்ணால ஒண்ணும் பண்ண முடியாதப் சாரநாதா இந்த________________

346 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
செறுக்கிய நீ வந்த தூக்க நேரமே இல்லையா ஊரு உலகத்துல எல்லாருக்கும் ஒரு விடிவுகாலம் வந்திருச்சி! இந்த மீன் நாறி செறிக்கிக்கி அது வராது? மிந்தியெல்லாம் மீனுன்னு ஒரு நெனப்புதான் இருக்கும். இப்பல்லாம் மீனோட ஏம் நினைப்பும்தான் மிச்சம். அப்பன் கத்துது. ஆத்தா கூச்சல் போடுது. அப்பாயி தொரத்திக்கிட்டே வருது. உம்பளாயிக்கி காதோரம் நெருப்புகால் வியிது. சேத்துல கானல் வெயில் உருகி வெளி வெளியா வடியுது. மீனு அம்புட்ட பாட காணும். ஒத்தக் கண்ணு சேத்துல எங்கியாவது கருப்பா தெரிஞ்சா போதும், கையில் இருக்கும் வீச்சரிவாளால் ஒரே வீச்சு ரெண்டு துண்டா சேத்துல ரெத்தத்தோடு மிதக்கும். துரத்துல புளியந்தோப்பு தெரியுது. புளிய மரமெல்லாம் நெளி நெளியாய் பங்குனி கானல்ல அலை அலையாய் நெளியது. துரத்துல மேக்குடியாரு பீமன் மாதிரி நிக்கிது. ரொம்ப நேரமா படுகாளிப்பய ஒவ்வொரு நாளும் எங்கியாவது ஒரு எசகுலெ அவளெ மாட்டாம விட்டறது இல்லை! அப்பாகிட்ட சொல்லியாச்சு அம்மாகிட்ட அழுதாச்சி! நீ ஏண்டி மயிராயி மீனு புடிக்க போற? போறதுனால்தான் அவன் வர்ரான் குறுக்க துன்னு காறித்துப்ப வேண்டியதுதானடி? ஆனா ஒண்ணு ஞாபகம் வச்சுக்க கள்ளன்னா கள்ளன்தான் சின்னது பெரிசுன்னு கிடையாது. வெட்டிப்போட்டா கட்டிக்கிட்டு வரும் ஜாக்ரதையா இருந்து பொழ உங்கப்பன் உனக்கு கண்ணலாம் செய்து வைப்பாருன்னு எனக்கு தோணலை அந்தி மசங்கிச்சுன்னா தண்ணிப் போட்டுப்புட்டு வெண்டி பாளையத்தான் கடையில சாக்கனாக்கறி சாப்பிட்டுபுட்டு ராத்திரில வந்து புரள்றதுக்கு வூட்டுக்கு வர்றதோடசரி ஒக்கா மூணு பேருக்கு கல்யாணம் பண்ணினதோட நெலமெல்லாம் போச்சு இருக்கிறது சோத்துக்குத்தான் மிஞ்சும். மூங்கி குத்த வெட்டுங்க வெட்டுங்கன்னு சொல்லுக்கிட்டு இருக்கேன். மூங்கில் குத்தலாம் பழுத்து நெளியது. வெட்டக்காணும். ஒண்ணயலா கட்டி அனுப்பப்போறான் அந்த ஆளு மேக்குடியான் வந்து பொண்ணு கேட்டா மிடியாதுன்னு அனுப்ப சத்து இல்லடி ஆமா குடும்பம் எந்த கெதில இருக்குதுன்னு தெரிஞ்சிக்க மீனு தேடிக்கிட்டு சேத்துக்குப்பில் பொதைஞ்சிறாத வுட்டுட்டு வூட்ல அடங்கி பொண்ணா உக்காரு இல்ல, மேக்குடியான் வந்து பொண்ணு கேட்டான்னு வையி? ஒங்கப்பனுக்கு வெல என்ன தெரியுமா ரெண்டு முட்டி சாராயம். நாலு துண்டு செம்புவி ஆட்டுக்கறி. அடுத்த நாள் கோயில்ல முகூர்த்தம் வச்சு படித்துறையில் கல்யாணம் பண்ணிப்புடுவானுவ ஆம்மா' என்பாள் அம்மாச்சிகாரி "ம் செய்வான் செய்வான் இந்த வேலையெல்லாம் மேக்குடியான் வச்சுக்கிட்டான் வீச்சருவாள எடுத்து ஒரே வீச்சுதான். அறுபது வயது கெளப்பயலுக்கு பொண்ணாடி பாக்குறீங்க. உட்டா மேஞ்சிற மாட்டிய மேஞ்சு? ஏங் கண்ணான ஒம் பேத்திக்கி கடக்குட்டி வைரத்துக்கு டெல்லி மாப்ள கொண்டாருவான்டி தெரியும்லடி நாயிங்களா?" சுருட்டைப் பிடித்துப், பப் என்று புகை விட்டுக் கொண்டு ராமாஞ்சியம் கெழவி மீனாட்சியம்மாளைப் பார்த்து. அப்படியே குப்புறவிழுந்து அழ வேண்டும் போல் இருந்தாலும் உம்பளாய் அழவில்லை. அழுகிறது உம்பளாய்க்கு முடியாது. அடக்க________________

உம்பளாயி 347
மாட்டாமல் கோபம் வருமே! உம்பளாய் அழுகிற பொண்ணு இல்ல. ஆனால் அம்மாளுக்கு கிட்டன்சுல மேக்குடியார் மேல ஒரு "இது இருக்கத்தான் செய்யது. ஒன்னு மேக்குடியாரு “ஏண்டி ஆளு. நாலு பொண்டாட்டி கட்டி புள்ளையெல்லாம் கரையேத்திவுட்ட ஆனா பொண்னெல்லாம் கட்டி குடுத்தாச்சு பொண்டாட்டியிலெ ஒருத்தியும் உசிரோட இல்லை. இந்தக் கரையிலயும், கூளை ஆத்து எதிர் கரையிலயும் நஞ்சையும் புஞ்சையுமா ஏழு வேலி, மூணு போகம் தோப்பு வாழக்கொல்ல எல்லாம் இருக்கு மாமரமும் இருக்கு முடியாதுன்னு நம்ப சொல்லலாம் ஊர்ல இந்தப் பேச்சும் இருக்கும். மேக்குடியாருக்கு அந்த வெறா குட்டி மேல கண்ணுடா அப்படின்னு எளவட்டப் பசங்க கேலி பேசுவனுங்களே தவிர, வூடேறி வந்து பொண்ணு கேக்க மாட்டான். அவனும் ஊர்ல பெரிய தலக்கட்டு'.

 ஆதிரியாரு குடும்பம். ஆனா பணம் வாங்காம எந்தக் கள்ளன் கட்டப்போறான்? மிச்ச சொச்சத்த வித்தாதான் கல்யாணமுன்னு காத்திக் கிட்டுருக்கு அதே யோசிக்கும் போதே பறி கூடையை எடுத்துக்கிட்டு ஊத்தம் போட்டுடக் கிளம்பிடுவா உம்பளாய். நீ என்னடி வலச்சியா மீன் புடிக்க போlயே - அப்டிங்கறர்னுவளே ஒரு தாலிய கட்டி கிட்டிக்கிட்டு போங்களண்டா. வேணும்னாடா மீனு புடிக்கிறேன் மீனு புடிக்காம இருக்க முடியலேடா. ஒருத்தன் ஒருத்தனா வர்ரான், ஏய்யா இது நம்ம வூட்டு ஆயியா! அட்டிங்கிறான் - இது என்ன ஜாக்கெட் போட காணும் புத்தி போகுது பாரு பயலுவளுக்கு தாயழி? ஒங்க ஒயும், ஒங்க பாட்டியும் ஜாக்கெட்டு போட்டுக்கிட்டு இருந்தாளுவ? நாளு பூரா கூழை ஆத்து சேத்துல வெலாங்கு புடிக்கிறானுவ வலையனுவ அவனுங்க எதுனாச்சும் போட்டுக்கிட்டா மீன் புடிக்கிறானுவ தண்ணிக்குள்ள மொழப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுப்பாரு நீயே முடியுமான்னு. மனசு அதங்கியது இப்படி

"பட்டி முண்டெ ஒன்னே வெடி மீன் புடிக்கச் சொல்றது? திலும்பியும், திலும்பியும் அதயே பேசிக்கிட்டு எளவெடுக்க வேண்டியதா இருக்கு கால முறிச்சு போடப்போறேன். வீட்டோட கிட அந்த வெற மீனு திங்கிற நாக்க இழுத்துவச்சி அறுத்தா மீன்கார சிண்டான் தஞ்சாவூருக்கே மீனு அனுப்புறானே அவங்க கிட்ட கூட சொல்லி பாத்துச்சு. தெனம் நாலு மீன கொண்டாந்து போட்டர்றான்னு போடாமயா இருந்தான் அந்த மீனு வேண்டாமாமன்ல்ல நல்லா இல்லயாம். சேத்து மீனு வேறயாம். ஆத்து மீனு வேறயாம். ஒக்காள இப்படியுமா இருக்கும் ஒரு பொண்ணு' என்று பொலம்பி தீர்த்தது ராமாஞ்சியம் கெளவி, சேத்துக்குள் மீனு நீயும்மா? நெளியுமா? யாரால சொல்ல முடியும். ஆராமீனு பொதையும் கேள்விப்படிருக்கிறோம். கொரவ பொதையும் தலையைமட்டும் சேத்துக்கு மேல் நீட்டிக்கும். வெள்ள உளுவ சேத்துல அலையும் ஆளு வெற மீனு ஒன்னுதான். சேத்துல மேயும். பொதையும் லேசுல சாவாது. அடிச்சப் போட்டாலும் மூணு நாளு ஆகும். சாவு லேசுல வராது. கொழம்புக்கு ஒரசுணாக்கூட மனுஷ உடம்பிலிருந்து ரத்தம் வடியிற மாதிரிதான். வெட்டித் துண்டுபோட்டாக்கூட கொழம்பு________________

348 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
சட்டிக்குள்ளேயிருந்து வெளியே துள்ளிக்குதிக்கிற மீனு வெற மீனுதான்! உம்பளாய் நடு முதுகிலிருந்து ஒத்த கோடா ரத்தம் மாதிரி வேர்வை மெதுவா வடிஞ்சு சேத்துல எறங்குது. தொடை இடுக்கியெல்லாம் ஆறாமீனு புடுங்கியது. சேத்துல இருக்கிற பாசி கவுச்சி மூக்கைத் துளைக்கிது.

ராமசாமி இந்த கோலத்தில் அவள பார்த்து பிடாரிகோவில் நடயில் இருந்து எழுந்து பாய்ந்தபடியே, "ஏய் உம்பளாய் குட்டி இன்னைக்கு தோகூர் கிருஷ்ணன் கோவில்ல தலிக உர்ஷகம் வெண்ணெய் தாழி திருவிழா என்னோட வருவாயா உனக்கு பாடி ஜாக்கெட்டுபய்ட் டுபயட் சாரி எல்லாம் வாங்கிதாரன். குச்சி முட்டாயும் வாங்கித்தாரேன்" என்றபடியே எட்டி அவள் கையைப் பிடித்தான். சாராயம் விற்போருக்கு அவன்மேல் கமரகை வீசியது. அப்படியே உதறி தள்ளிவிட்டு பாய்ந்து வரப்பின் மேல் கால்வாயில் விழுந்து எழுந்து ஓடும்போதும் உம்பளாய்க்கு பின்னால் "ஏய் நில்லுடி எவன்டி ஒன்னை தாலி கட்டி கட்டிக்கிப்போறான். மரியாதையா வந்துரு" என்று குச்சாலும் துரத்தி ஓடிவருகிற திமு திமு என்கிற காலடி ஓசைகளும் அவள் நெஞ்சை அடைத்து கதற வைத்தன என்றாலும் பாய்ந்து தலைதெறிக்க ஓடினாள் உம்பளாய் வளியார் முழிகதொட்டத்தை வரப்பில் ஒதிக்கி லேசான அந்தி போலதில் தாண்டி ஒடும்போது 'ஏன்னாஏன் இப்படி தலைதெறிக்க ஒடியார என்று கேட்டபடியே மலைபோல் குறுக்கே நின்று சிலம்பகழிய குறுக்கே நீட்டி வரப்பில் துரத்தி ஓடிவருகிற கும்பலை எதிர்த்து நின்றார் மேக்குடியார். சிலம்பகழிகள் சுழல ஆரம்பித்தவுடனேயே கிழக்கு ராமசாமி கும்பல் சிதறி ஓடியது. மறுகையில் லாவி உம்பளாயிய எட்டி பிடித்தார் மேக்குடியார். ஓங்கி முதுகில் அவளை முரட்டுத்தனமாக அறைந்தார். திமிராடி உனக்கு அடுத்தவாரம் ஒண்ண கட்டிக்கப்போறேன். ஒப்பன் சொல்லலையா பரிசம் போடவும் உங்க ஆய்கிட்ட பணம் குடுத்திட்டேன். இனிமே இந்த வயகாடு சுத்திறது. மீனு புடிக்கிறது. இந்த பயலுவலோட சுத்தறது எல்லாத்தையும் வுட்டுட்டு மருவாதியோட எனக்கு சோறு சமைச்சுபோட தயாரா இரு இல்லைன்னா முதுகுதோல் உரிஞ்சிடும்.

ஏய்யா மேக்குடியாரே! இது நோக்கு நன்னாயிருக்கா? எந்த வயசுல என்ன பண்றடா? என்ற ஆணித்தரமான வேற்றினக் குரல் கேட்டு உம்பளாயியும் மேக்குடியாரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர். எதிரே வெள்ளை ராசி சாரநாதன்.

"போடா பாப்பாரப் பயலே இவளைத் தேடிக்கிட்டு இங்கே வந்தியாக்கும். ஊசபருப்புப் பயலே இவ அம்ப பொண்டாட்டிடா நான்தான் கட்டிக்கப் போறேன். தெரியுமா? வர தையிலே கல்யாணம் அப்பன்கிட்ட பரிசுப்பணம் கொடுத்துட்டேன். இதுல எல்லாம் நீ தலையிடாதடா மவனே. முதுகு தோலு உறிஞ்சிபோகும்' என்றாரே தவிர, பேச்சில் வன்மம் இல்லை. பகை இல்லை. விளையாட்டாகவே சொல்ல வேண்டியதையும் சொல்லிவிட்டார். மேக்குடியார் அவளை விடவும் இல்லை. விலகவும் இல்லை. அடச்சீ வுடு நீ மனுஷனாட்டாம் என்று சொல்லி பதட்டப்பட்ட உம்பளாயியை மீண்டும்________________

உம்பளாயி 3.49
ஒருமுறை முகர்ந்தார் மேக்குடியார் சாரநாதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணெதிரே நடக்கும் கோளாறை அந்த கோமளமான பையனால் எதுவும் செய்ய முடியாதென்று அவளுக்கெங்கே தெரியப்போகிறது? அடச்சீ வுடு என்று கத்தியபடியே உதறியபடி வயல் வரப்பில் ஓடினாள் உம்பளாய்.

 "ஐயரே ஒனக்கு இது மூணாவது தடவை. உம்பளாயியத் தேடிக்கிட்டு இங்கெல்லாம் வராதேய்யா. நல்லதுக்கு சொல்றேன், இந்த மீன் நாறி சிறுக்கிய ஊர்கோலி திரியறத வுட்டுபுட்டு போயி காலேஜ்ல படிக்கிற வேலையைப் பாருய்யா' என்ற மேக்குடியாரின் ஒங்கரித்த குரல் உம்பளாயியின் பின்னலிருந்தும் துரத்தியது.

அவள் சேற்றையே வைத்த கண் வாங்காமல் பார்த்தக் கொண்டிருந்தாள். அடுத்த வெள்ளிக்கிழமையன்று செண்பக அடவி தோட்டத்தில் செண்பகப்பூ சேகரிக்க உம்பளாயி போனபோது கண்டபிள்ளை வீட்டு ஜானகி, சுப்பையா ரெட்டியார் மகள் துர்கா, கரமுண்டார் வீட்டு பெண் லட்சுமி எல்லோரும் காலை நேரத்தில் கூட அவளோடு நடக்க மறுத்துவிட்டார்கள். இந்த மீன் கவுச்சியினால் அவர்கள் வேகமாக முன்னே ஓடுவதும் பின்னால் துரத்திக் கொண்டே உம்பளாயி ஒடுவதும் ஒரு ஒடிப்புடிச்சி விளையாட்டுப்போல மூச்சு வாங்கியது. அன்றைக்கும் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வூட்டுக்கு செங்கல் ஏறினாள் உம்பளாயி. அவள் கொண்டு போயிருந்த ஆறு வெறா மீனையும் கொஞ்சம்கூட முக்காமல் முனையாமல் உரசி கழுவி துண்டு போட்டு கொல்லைப் புறத்தில் மூன்று கல் வைத்து அடுப்பில் ராமாஞ்சியம் அப்பாயி குழம்பு வைத்து பொரித்து உம்பளாயி நாக்கத் தட்டி சாப்பிடும்போது ராத்திரி மணி பத்து. அப்பா, தம்பி, தங்கை எல்லோரும் முன்னால் தூங்கி கெடந்தார்கள். திண்ணையில் பாடி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தது ராமாஞ்சியம். அழுவதில் ஒரு சுரம் பாடுவதில் ஒரு லாவகமும் திருப்தியும் பேத்தியைப் பற்றி பெரிய கனவுகள் ருசிகரமான காட்சிகளில் முழுகியபடி ராமாஞ்சியம் கெழவியினுடைய கனவுகள் இரவு வெகுநேரம் வரை யாரோ கொல்லைப்புற புளியந்தோப்பில் வெள்ளை வேட்டி படபடக்க நிற்பது போலிருந்தது. கனவாகவும் இருக்கலாம் தோப்பு இருண்டு கிடந்தது. இந்தத் தோப்பு படுகைத் தோப்பு. அந்தப்புரம் வெற்றிலைக்கொடிக்கால், அதற்கு அப்புறம் ஆறு. உம்பளாயிக்கு துக்கம் வரவில்லை. எதிரே தோப்புக்குள் வெள்ளை ராசி, தூக்கி வாரிப்போட்டது உம்பளாயிக்கு கோடைக்காலம் புழுக்கம் - உம்பளாயிக்கு எப்போதும் இருப்பதில்லை. நாள் முழுவதும் கழுத்தளவு காவேரிச் சேற்றில் இருக்கும் அவளது உடல் சில்லிட்டிருந்தது. வீட்டில் எல்லோருக்கும் பருப்பும், முருங்கைக்காயும், பறங்கிக்காயும் உடம்பில் வியர்வைப் பெருக்கி விட்டிருந்தன. சட்டை அணியாமல் இடுப்புவரை வெற்றுடம்போடு கொடியில் கிடந்த மெல்லிய கதர்துண்டை எடுத்து போர்த்தியப்படி சந்தேக கனவுகளோடு படுகைத் தோப்புக்குள் இறங்கினாள் யாருமறியாமல். பெரிய பெரிய புளிய மரங்கள். மணற்பாங்கான படுகைபூமி. துரத்தில் சலசலக்கும் ஆறு. கோடையின் வறண்ட காற்று________________

350 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
என்றாலும் ஆறுதலான தென்றல் தோப்புக்குள் அவன் நிற்கிறானோ? இல்லை தோற்றம்தானோ? சாரநாதனை நினைத்தவுடன் கை, கால்களில் மின்சாரம் பாய்ந்தது. வீட்டுக்கு போய் ஜாக்கெட் போட்டுக்கொண்டு வரலாமா? வேண்டாம். எல்லோரும் ஏனென்று கேட்பார்கள். விழித்துக் கொள்வார்கள். உம்பளாயிக்கு சல்லியமாகப் போய்விடும். கதர்துண்டு நெஞ்சோடு இறுகியது. தேரப்புக்குள் மனுஷ வாடை யாருமில்லையா கால்கள் பரபரத்து பாய்ந்தன. மணலில் நடப்பது ஒருவகையில் சிரமாயிருந்தது. மின்னல் வேகம் தோப்புக்குள் ஆற்றின் வெம்மை கலந்த குளிர்க்காற்று. உம்பளாயியை இரண்டு கரங்கள் இறுகித் தழுவித் துக்கின. மெய்மறந்து போனாள் உம்பளாயி. அவன்தான் சாரநாதனா? மனசு சொல்லொண்ணா ஆனந்தத்தில் மிதந்தது. கற்பூர மணம் தூப தீபநைவேத்ய கோயில் மணமும் அவனிடமிருந்து செல்வக்கலை, கல்விக்கலை இதெல்லாம் கலந்த ஒரு மேல் மட்டத்து சுகமான வாசனை கழுத்தில் ஒரு நவரத்ன மாலை இருளில்கூட பளபளத்தது. அவர்கள் இருவரின் இடையில் இருந்த காற்று உஷ்ணம் காட்டியபோது இடையில் இருந்த கதர்துண்டும் துரப்போய் விழுந்தது. அவளைப்போலவே சாரநாதனும் வெற்றுடம்போடுதான் இருந்தான் என்பது அனல் பறக்கும் அந்த வேளையிலும் உணர்ந்தாள்.

"என்னையக் கட்டிக்குவாயாடி?

"என்னையக் கட்டிக்குவியா?

ரெண்டு பேரும் சிரித்தார்கள். இருவரும் மணலில் விழுந்தார்கள். சரிந்து கொண்டே ஆற்றுப் படுகையில் உருண்டார்கள். அவளால் நம்ப முடியவில்லை. எத்தனை வருஷம் பயந்தான்கொள்ளியாகவே இருந்தான். துணிந்து விட்டானா? மறுபடியும் நம்பாமல் கேட்டாள்.

'ஏய் எல்லாரையும் ஏய்த்துவிட்டு என்னைக் கட்டிக்குவியா'? இருளில் அந்தக் கருவராசி வெறா மீனான உம்பளாயியை அவன் முறுக்கி எடுத்துக் கொண்டிருந்தான். 'உம்' 'உம்' என்ற பதிலைத் தவிர அவனிடமிருந்து வேறு பதிலே இல்லை. ஆனால் அவள் விடாமல் 'டேய் கேக்கிறேன்ல கட்டிக்குவியா? இப்படியே விட்டுவிடுவாயா? வாயில் என்னா கொழுக்கட்டையா வச்சிருக்க? காட்டுத்தனமா இதெல்லாம் பண்ண தெரியுதுல்லே. கேக்கறதுக்கு பதில் சொல்லத் தெரியலியா' என்று அவன் காதுகளில் உரக்க கத்தியபோது அப்போதுதான் அந்த கோரமான காட்சியை உம்பளாயி கண்டாள். அவள் மார்புகளைச் சுவைத்து அவளைக் கட்டித் தழுவி இயக்கிக் கொண்டிருந்தபோதும் கூட கனிந்து இறங்கிய உயிர் ரசம் பாயும் முன்பு அவன் மூக்கை அருவருப்புடன் அவனே பொத்திக் கொண்டு அவளது நாற்றத்தைத் தவிர்த்துக் கொண்டிருந்த கோரம்தான் அது. அவன் வாய் கட்டிக்குவேன் கட்டிக்குவேன் என்று அலப்பியது. ஆனந்தத்தின் கொடு முடியில் இருந்ததாக கற்பனையில் தன் மார்புகளை அவனுக்கு நிவேதனம் செய்திருந்த அப்படியே நிலைகுத்தி அவளது அருவருப்பை நரகலைத் தின்னும் அவனது அசிங்கத்தைத் திடுக்கிட்டு தவித்து அவனிடமிருந்து குதறும்________________

உம்பளாயி 351
வெறுப்புடனும் குரோதத்துடனும் 'போடா! பாப்பார நாயே கம்மனாட்டி அருவருப்பா இருக்கா தேடி வந்து பொறுக்கும்போது தோணலியா நாத்தம் இனிமே இங்க வந்தியின்னா செருப்படிதான் வழுவும். நாறுகிறதாக்கும் எந்திரிச்சி ஒடு பொறுக்கி நாயே" என்று கத்தியபடி அவனது புட்டத்தை பிடித்து உருவி தன்னை அவனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள அவன் முறுகிய அணைப்பிலிருந்தும் ஆழ்ந்த புதைப்பிலிருந்தும் அவனைக் காலால் எட்டி உதைத்து தள்ளியபடியே எழுந்து கதர்துண்டை கீழே இருளில் தேடினாள் உம்பளாயி, குப்புற விழுந்துபோன சாரநாதன் இந்த சதியை எதிர்பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் பலிஷ்டமான உருவம் ஒன்று அவர்கள் இருவரையும் பார்த்தபடி கடந்து சென்றதை லேசாக பாலாவி போல் வீட்டை நோக்கிய ஓடிய உம்பளாயி உணர்ந்தாள். அது அவளைத் தேடிக் கொண்டேயிருக்கிற மேக்குடியார்தான். அதற்குப்பின் வீட்டு கொல்லைப்புறத்திற்கே உம்பளாயி வருவதில்லை. இந்த இரவு சாரநாதனின் அருகாமையில் உணர்ந்த கற்பூரத்தையும் சாம்புராணி துபதீபமணங்களையும் கோயிலையும் அவள் அடியோடு வெறுத்தாள்.

இதோ கோடையின் அக்கினியால் இந்த ஒத்தக்கண் வெறா மீனுக்காக சேற்றில் அலைந்துகொண்டிருக்கிறாள். கண்கள் பொங்கி வடிந்து கொண்டிருந்தன. சேற்றை வாரி கரையில் வீசிக்கொண்டேயிருந்தாள். ஆவேசம் வந்ததைபோல் மடுவிலிருந்த சேறு முழுவதும் கரையேறியதுதான் மிச்சம். அந்தக் கடுவராசி ஒத்தக்கண்ணு வெறா மீனு அகப்படவே இல்லை. சேரிப்பிள்ளைகளெல்லாம் அவளுக்கு உதவியாக சேற்றை சுற்றிலும் வாரி இறைத்தார்கள். கழுத்தளவு சேறு பாதிக்கும் குறைவாக குறைந்துபோனது. பள்ளத்தில் நின்று நிழல் தட்டியதை உணர்ந்தாள் உம்பளாயி. இரண்டு தூண்கள் போன்ற கைகள் கொண்டு அவளை சேற்றில் இருந்து தூக்கியதுரெண்டு கரங்கள். வரப்பில் உட்காரவைத்த பிற்பாடுதான் அது யாரென்று தெரிந்தது. அது மேக்குடியார்தான். உனக்கென்ன இந்த ஒத்தக்கண்ணு மீனு தானே வேணும். இதபார் நான் குத்திதாரேன். ஆனா ஒரு விஷயம். உடனே நான் தாலி கட்டுவேன் சம்மதம்தானா? உம்பளாயின் கண்கள் நிலைக்குத்தி நின்றன. அப்பொழுது அவ்வளவு காணாமல் போயிருந்த அந்த ஒத்தக்கண்ணு ராட்சஷ மீன் மேலே துள்ளியது. சேறு கொதித்தது. கையிலிருந்த நீண்ட வீச்சருவாளால் ஓங்கி வீசினாள் உம்பளாயி, மிக லாவகமாக வெட்டு வீழ்ந்திருக்க வேண்டிய மீன் வெட்டுப் படாமலேயே சேற்றில் பாய்ந்தது. மீண்டும் அதே நேரத்தில். மின்னல் வேகத்தில் குதித்த மேக்குடியாரின் கைத்தடி சேற்றில் எந்த இடத்தில் மீன் விழுந்ததோ அதே இடத்தில் மேக்குடியார் தன் கைப்பிரம்பை பாய்ச்சினார். இறங்கியது கையில் இருந்த தடியை லாவகமாக சேற்றிலிருந்து தூக்கினார் மேக்குடியார். அதில் அவளை ஏமாற்றிய அந்த ஒத்தக்கண்ணு வெறா மீன் ரத்தம் வடிய குத்திச் சிக்கியிருந்தது மட்டுமல்ல இன்னொரு வெறா மீன் வெள்ளை ராசி மீனும் அந்த ஒரே குத்தில் மாட்டியிருந்தது லேசான விஷயம் அல்ல. ரெண்டு மீனையும் உருவி மேக்குடியார் அவளது பறி கூடையில் போட்டார்.
________________

352 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
"என்ன சரிதானா? இதே மாதிரி ஒரு குடுவராசி குட்டியத்தான் எனக்கு பெத்தெடுத்தக் கொடுக்கணும்' என்று மேக்குடியார் சொன்னபோது. வேண்டாமென்றோ, மாட்டேனென்றோ இல்லையென்றோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் சரியென்றும் சொல்லிவிடாமல் நின்ற உம்பளாயியையும் பார்த்து மேக்குடியார் சொன்னது.

"இனிமே ராத்திரி வேளையில படுக்கைத் தோப்புல ஒன்னையப் பார்த்தேன்னா அதே இடத்துல வெட்டி புதைச்சிடுவேண்டி' என்றார். உள்வாங்கிய மூச்சு வெளியில் விட்டவாறு "இனிமே ஏன் அங்கெல்லாம் போகப்போறேன்' என்று காறித்துப்பியப்படி தூரத்தில் தெரியும் காவிரியில் துள்ளாட்டாம் போடும் வெறா மீன்களை எண்ணியவாறே நடந்த உம்பளாயி கொஞ்சதுரம் வரப்பில் நடக்கவிட்டு சுற்றும் முற்றும் இல்லென்னா ஒரு துள்ளல்ல பரி கூடைய கிழிச்சி வெள்ள ராசி வெரு கூளை ஆத்துல பாஞ்சுடும். பரியோட கழுத்த கிறுக்கி, முறுக்கி கட்டிபுட்டு வதெக்கி கரையேறின உம்பளாயிய கண்ணு ரெண்டும் பளப்பளக்க அப்படியே வாரி முழங்கிர்ற மாதிரி வெறியோட பார்த்தான் சாரநாதன். கூடைக்குள்ள வெற படபடபடபடங்கும் திமிலடுச்சி துள்ளுள சத்தம் கேக்குது

“மா ஆயி மேல ஏறிட்ட மீனுதான் ஆம்புடல்லில்ல' என்ற சாம்பான் கலியனிடம் 'ஊத்தங்கால பாத்துக்கடா இந்த வர்றேன்' என்றபடி மேலே வழிந்த சேற்றை இரு கைகளாலும் வழித்துவிட்டு பக்கத்து மணல்மேட்டில் கிடங்குபோட்டு வெட்டியிருந்த ஊற்றுக் கழுங்கில் இறங்கி தண்ணீரை வாரி மேலே அடித்துக் கொண்டு சேற்றை கழுவினாள். நெஞ்சு சொல்ல முடியாத ஆனந்தத்தில் கும்மளி போட்டது. ஊற்றில் வந்த கழுங்கு தண்ணீர் பவுன் உருகிவடிகிற மாதிரி சேற்றையும் அவள் வியர்வையும் கழுவிக்கொண்டு உஷ்ணமாக வடிந்தது அவளுக்கே புரிந்தது. நேரே நிமிர்ந்து பார்த்தாள். அவளையே பார்த்துக்கொண்டு சாரநாதன் தலைமுடி அவிழ்ந்து தொங்கியது. குலை குலையாக சொல்ல முடியாத ஆசை அந்தப்பிராமணக் கண்களில் உம்பளாயியை உலுக்கியது. என்ன தைரியம் இந்தப் பயலுக்கு ஈரத்தில் மதிய வெயிலின் உஷ்ணம் சூடேறி ஆவி படர்ந்தது. தூரத்தில் உம்பளாயியும் அவளைவிட வெகு தூரத்தில் திரும்பி திரும்பி பார்த்தபடி மணல்மேட்டில் ஏறி கிலுப்பைத் தோப்புக்குள் நுழைவதை பார்த்தபடி சாம்பான் கலியனிடம் “ஏண்டா ஆயி எங்கடா போவது அய்யர பாக்கவா" என்று போட்ட கூப்பாடு பரியில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்த மீன்களுக்கு கேட்கவே இல்லை.

 இலுப்ப எண்ணெய்க்கு இப்போதெல்லாம் மவுசு கொறஞ்சு போச்சு! மருந்துக்கு இலுப்பந்தழை புடுங்க வரறவங்கா தவிர இப்ப யாரும் இலுப்பதோப்புல அன்றதே இல்லை. மேக்குடியார் வீட்டு இலுப்பத்தோப்பு அது ஒரேதாக்கா அறுபது மரம் நிக்கிது. ஆளுயரத்துக்கு கிளுவவேலி கட்டி அடைச்சிருக்கு மூங்கிப் படலயத் தள்ளிகிட்டு என்னா தைரியம் அந்த பாப்பானுக்கு திரும்பி திரும்பி பாத்துகிட்டே உள்ளே போறான் சாரநாதன். பின்னாலேயே உம்ளாயியும் சொல்ல முடியாத பரபரப்போட உள்ளே நிழல்________________

உம்பளாயி 353
இலுப்பத்தழை வாசம் அடர்த்தியான மதிய நேரத்தில் வெளிச்சமும் இலுப்பைத் தலைகளின் மினுமினுப்பும் இருட்டுமாக தோப்பு யாருமில்லாமல் ஹோவென்று ரெண்டு பேரையும் விழுங்கிகொண்டது. நிழலில் ஒளியும், நிழலில் இருளும் பேச்சே இல்லாத மெளனத்தில் உம்பளாயி கைகள் இரண்டையும் பிடித்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டாள் சாரநாதனை.
(வெளிவராதது)
www.archive.org
https://ia800503.us.archive.org/13/items/orr-11454_Pora-Shokku/orr-11454_Pora-Shokku.pdf

google ocr

3.68 - தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
31 பொறா ஷோ
க்கு
posted on 11/03/2016 

லாஇலாஹா இல்லல்லா லாஇலாஹா இல்லல்லா ஓ அவுலா லா இலாஹா இல்லல்லா ஒளர் முகம்மது ஒளர் ரசூலுல்லா அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையுள்ளோனும் ஈடு இணையற்ற ஒப்பற்ற தனித்துவமுள்ளோனுமாகிய அல்லாஹாதால்லா இன் கருணையைக் கொண்டு இறைவன் ஒருவன் இல்லால் வேறில்லை. அல்லாவின் தூதரும் ஒருவரே முகம்மதுதான்நபி என்றறியுங்கள். 'ஓ' என்ற பாங்கொலியும் வானைக் கிழிக்கும் மஸ்தானின் பேரொலியாக நான்கு புறங்களில் எதிரொலித்தது. தஞ்சாவூர் கீழவாசல் இன்னமும் விழிக்கவில்லை. அந்தகாரம் முற்றிலும் நீங்கவில்லை. சூரியன் மறைத்த இருள்சேர் அல்லாவின் கருணை போலவே நான்கு புறங்களிலும் சுடரொளி வீசி சூரியக் கதிர்கள் மூலம் உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக இதழ் பிரித்து மடல் அவிழ்த்து ஒளி வெள்ளம் பூச முயன்று கொண்டிருந்தது. அந்த இருளில் இருள் பிரிந்த ஒளியில் கீழ வாசல் அகழ்மேட்டில் வானத்தைப் பார்த்தபடி சாக்கடையின் மேல் நின்று கொண்டு இடுப்பில் கை கொடுத்து முதுகை நிமிர்த்தி வானத்தைக் கண்களாலேயே துழாவிப் பார்த்துக் கொண்டு நின்றார் காசீம் மொகைதீன் ராவுத்தர். நூற்றி ஆறு வயது ராவுத்தருக்கு நம்ப முடியாது யாராலும் தலையில் உள்ள துருக்கி குல்லா விழுந்து விடுமோ என்ற பயம் பார்ப்பவர்களுக்கு இருக்கும். எதைக் கொண்டு அது பிடிப்பில் இருக்கிறது? உறுதி சொல்வது கடினம். தலையில் எப்போது எடுத்துக் கவிழ்த்தியதோ யாருக்குத் தெரியும்? அது இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது. தலையைச் சுற்றிலும் லேசான வழுக்கையும் அடர்த்தியான முடியும் யாரும் அறுபத்தி ஐந்து வயதிற்கு மேல் சொல்ல முடியாது. வில் போன்ற தேகம். எட்டு வயதில் குமரைத் தூக்கி வந்தவர்களோடு தஞ்சாவூருக்கு வந்தது. ஏதோ கனவுபோல் ஞாபகம் இருக்கிறது ராவுத்தருக்கு ஒரு பக்கம் பிழிந்து போட்ட சக்கை போன்ற உடல். இன்னொரு புறம் ஒரு செழிப்பு ஆச்சரியமானது. வற்றிய உடலானாலும் நீரோட்டம் குறையாத தேகம். வானத்தையே பார்த்துப் பார்த்துத் தீட்டிக் கொண்ட கண்கள். குச்சி குச்சியான விரல்கள். ஆனாலும் சிற்பக் கலைஞனின் விரல்கள் போன்ற அழகு ரகங்கள். சிவந்த தேகம். ரத்தம் செத்ததனால் வெளிறிய சருமம். ஒன்றை ஒன்று போட்டியிட்டன. சாக்கடையின் விளிம்பில் ஓராள் ஆழத்திற்குக் கோவென்று பாயும் சாக்கடை நீரை காசீம்பாய் பார்க்கவில்லை. அல்லாவின் பாங்கொலியை அவர் செவிகள் கேட்கவில்லை. உதடுகள் லாஇலா என்று உச்சரித்தாலும்கூட வெளியில் ஒலி எழுப்பவில்லை. அவரது தேகம்தான் அங்கு நின்றது. கண்கள் வானத்திலே பூரணமாய் இன்னும் இருள் விலகாத புகைக் குழம்பிடையே யார் கண்ணுக்கும் எட்டாத எதையோ தேடிக் கொண்டு இருந்தது. அந்தக் கண்களில் ஏதோ ஒரு வெறி. அடங்கமாட்டாத ஆர்வம். அடக்க மாட்டாத துணிச்சல் யாவும் வானத்தை நோக்கி கூரான ஏதோ ஒரு அவயம் அவர் முகத்திலிருந்து புறப்பட்டு வானில் துளாவுவதான தோற்றம். இதைப் பார்க்கும் யாருக்கும் தோன்றும் அந்தக் கண்களில் தெரியும் தீச்சுடர் ஜூவாலை வீசியது யாருக்குத் தெரியும்? நூற்றாண்டுகளாகப் புழுதி புரண்ட அந்தத் தஞ்சை மண்ணுக்கு மட்டுமே தெரியும். கொடுரமான புழுதி. கீழவாசல் மேடு இருளில் தெரியும் பள்ளிவாசல். காதர் மியான் தைக்கால் மேடு - கண்ணுக்கெட்டிய வரை தெரியும் கீழவாசல் அகழ்மேட்டுத் தண்ணீர் காலைநேரத்தில் சூரிய ஒளியில் அந்தச் சாக்கடை நீரில் துள்ளும் கருப்பு ஜிலேபிக் கெண்டை மீன்கள். அவற்றின் பாரம்பரியத்திற்கு காசீம் மொகைதீன் ராவுத்தரைத் தெரியும். எத்தனையோ ஆண்டுகளாக அவைகள் குஞ்சுகளாகவும் முட்டைகளாகவும் மீண்டும் பெரிய ஜிலேபிக் கெண்டைகளாகவும் மாறி மாறி உருமாறி வரும் அந்தச் சாக்கடை கும்பி மீன்களுக்கு ராவுத்தரைத் தெரியும். வானத்தைப் பார்த்து ரத்தத்தால் துழாவி அறிய முயலும் அவரது ஞானம் எட்டாதது. உயர பறந்து போனது. காலம்கூட அவரைச் சிதைக்க முடியவில்லை. தூரத்தில் வாப்பா வாப்பா வரியா இல்லையா என்ற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் தூரத்தே மாடுகள் வெட்டப்படுகிற குரூர ஒலம் ஆரம்பிக்கும் முன்னதாக குவாட்டர் ஹவுஸ் பணியாளர்கள் கத்தக் கத்த மாடுகளை இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதையும் காசீம்பாய் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் வெட்டப்பட்டு விடுவோம் என்று அந்த மாடுகளுக்கு எப்படித் தெரியுமோ தெரியாது. தீனமான அந்தக் குரலே ஒரு தனி பாஷையாக இருந்தது. உலகம் விழிக்கும் முன்பு ரத்தம் ஓடையாகி ஓடுவதற்கு முன்பாவே தனது இனத்தின் அவலக் குரலை அவை எழுப்பின.

 "வாப்பா வாப்பா வந்து தொலையிறயா இல்லையா. உன்னோட இதே தொல்லையாப் போச்சு. துனியா தர்கீர் இப்படி இருக்கு வந்து தொலையேன். எமனத்தாலி தொலஞ்சாலும் பரவாயில்ல. அல்லா உனக்கு இது நல்லாயிருக்கா? பாரேன் நெட்டுக் குத்தா நிக்கறதே. அப்பான்னு கால் வலிக்குதேன்னு சொல்லி உட்காரமாட்டாங்களா மனுஷாளு' என்று பள்ளத்திலிருந்து குரல் அபயமாய் எழுந்தது. காசீம் ராவுத்தர் அதையும் கவனித்துப் பார்க்கவில்லை. அவர் காதுகள் செவிடுபட்டிருந்தன. புலன்கள் யாவும் இருண்டு ஒளியாக மாறி அவர் முகத்திலிருந்து வானத்தை நோக்கி நீண்டிருப்பதான விபரீத அர்த்தம் அந்தத் தஞ்சைப் புழுதிக்குத்தான் தெரியும். அவரைப் போலவே நூற்றாண்டுப் புழுதி அது. ............ இருநூறு வருடங்களுக்கு முன்பு தஞ்சைக்குள் நுழைந்த மாலிக்காபூரின் படை துரத்தித் துரத்தி அடித்துத் தஞ்சாவூர் மக்களின் உடுதுணிகளையும் சேலைகளையும் பிடுங்கி முதுகில் கொறடாவால் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரை போட்டுவிட்ட ரத்த அடையாளம் கொள்ளை அடித்துச் சென்ற கோடிக்கணக்கான கோயில் சொத்துகள் இதே அகழ்நீரில் மிதந்த நூற்றுக்கணக்கான பிராமண உத்தமர்களின் சடலங்கள் பின்னர் விரட்டி வந்த காலத்தில் மூன்றரை லட்சம் போர் வீரர்களோடு தஞ்சையைச் சூறையாடிய மாதவராவ் சிங்ளே அவனைத் தொடர்ந்து இந்தப் புழுதி மண்ணை நோண்டி இதில் . கழுதை கட்டி ஏர் உழுது விளைச்சலைப் பார்த்து மறுபடியும் உழுது தஞ்சை மண்ணைப் பூண்டற்றுப் போக பிராமணர்கள் சொல்லிய வானகத் திணையின்படி குலநாசம். ஸ்தலநாசம், பூமிமாதா நாசம் செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆடிய ஆட்டம் அந்தப் புழுதிக்குத் தெரியும். வரலாற்று ஆசிரியர்கள் உணர மாட்டார்கள்.

அடுத்துக் குறுக்கில் வந்த ஹைதர் அலி ரீரங்கப்பட்டணத்தில் இருந்து திண்டுக்கல் வழியே தஞ்சையைக் கவிழ்க்க பாய்ந்து வந்த முஸ்லீம் படைகள் அங்கே தஞ்சையில் வெடித்துச் சிதறிய பீரங்கிக் கங்குகள் தஞ்சை பலமுறை சுடுகாடாகி வந்ததெல்லாம் விற்றுப் பறித்ததை எல்லாம் தின்று. சாலையோரத்துப் புளியமரத்தில் இருந்த புளியைக் கரைத்துக் குடித்து இந்த அகழ் தண்ணீரில் இறங்கி எத்தனை பெண்கள் மானமிழந்த உடல்கள், எத்தனை நூற்றாண்டுகளாக மிதக்கின்றன. ஹோ என்று அலறும் காளியின் நர்த்தன வீரியம் நூற்றாண்டுகளுக்குப் பின் இன்னும் தஞ்சையில் சுடர்விடுகிறது.

நூற்று இருபத்தியொரு பள்ளிவாசல்கள் ஒருபுறம் பாங்கொலி எழுப்ப ஒரு நேரம் நகராவின் பேரிடி ஓசை லாஇலாஹா கூக்குரலும் தொடர்ந்து மருட்டும் இருளும் தஞ்சையின் நிசும்ப குதினியாகிய ராவுகால காளிகளும் சம்மதம். இது ராவுத்தருக்குத் தெரியும். ஒரு நூற்றாண்டாக அவர் காளியமர்த்தனத்தையும் வானத்தில் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

மூவிலைவேல் சுடரொளி வீச எடுத்த பாதத்தின் கீழ் அரக்கன் நசுங்க நாக்கு மடித்து ரத்தம் சொட்டும் வளையீற்றுப் பற்கள் கோரம் சிரிப்பொலி எழுப்பும் குரல்வளை நொறுங்கும் வைரச் சிதறலால் காளியின் பேருருவம் வானுக்கும் பூமிக்குமாய் இடித்துச்சிதிலமாகிக் கிடக்கும் தஞ்சை அரண்மனை சுவர்களின் மேல் சாக்கடை நீரின் சுழற்சிக்கப்பால் கண்ணுக்கெட்டியவரை பரந்து கிடக்கும் ஆழமான அகழ்நீரில் அல்லாவின் கருணையாக உலகம் என்றும்போல் மீண்டும் மீண்டும் அதுவதாகிச் சுழல்வது தஞ்சை மண்ணுக்கு மட்டுமே எட்டும்.

காசீம் மொகைதீன் ராவுத்தர் அவரது ரத்த நாளங்களில் எதிரொலிக்கும் அத்தனையும் வானத்திலே பூசிப் பார்த்துவிடும் சாதுர்யம். வாப்பா வாப்பா என்ற கூக்குரலுக்குச் செவி சாய்க்காத அந்தக் குரூரமான இன்பம் அவர் முகத்தில் மேலும் ஒளியைப் பாய்ச்சியது. அப்படி வானத்தில் என்னதான் பார்க்கிறார்? ரம்லத்துக்குத் தெரியும். அவள் கையிலிருந்த இரும்பு பிஞ்ஞானத்தில் கொழுப்பு நிறைந்த டீ தளும்பியது. பள்ளத்தையே திரும்பிப் பாராமல் வானத்தையே துழாவும் வாப்பாவையே இப்போது கருணையோடு பார்த்தாள் ரம்லத் ரம்லத்தின் கண்களில் லேசாக நீர் கலங்கியது. இவர் ஏன் உயிருடன் இருக்கிறார்? யாருக்காக எதற்காக காசீம் ராவுத்தர் இருக்க வேண்டும்?
அவளது நெஞ்சம் பாரத்தால் விம்மியது.

 மேடேறிப் போய் வழக்கம்போல அவரை மடியில் உட்கார வைத்து இந்த டியை ஊற்றிவிட வேண்டும்தான் வேறு எதையும் சாப்பிடமாட்டார். எழுபத்தி ஐந்து வயதில் காதீம்பாய் பண்ணிக் கொண்ட நிக்காவில் பிறந்தவள்தான் ரம்லத் பதினெட்டு வயதுதான் ரம்லத்துக்கு இடையில் சிலகாலம் அவரது பீவி அவரைவிட்டு ஓடி இருந்தாள். திரும்பவும் அவளே ஓடிவந்து காசீம் பாயிடம் சேர்ந்து கொள்ள என்ன இருந்தது அவரிடம் ரம்லத்துக்கும் அது புரியாத ரகசியம்தான்.

உம்மா ஜைத்துன்பீ வாப்பாவைக் கட்டும்போது அவளுக்கு ரம்லத்தின் வயதுதான். ஜைத்துனை காசீம்பாய் மெஹர் கொடுத்துக் கட்ட முடியாத குமர் என்பதால் இலவசமாகவே கொடுத்தார்கள். காசீம்பாய் அப்போதும் வானத்தைப் பார்த்துக் கொண்டேதான் நிக்காஹக கித்தாட்டில் கையெழுத்துப் போட்டார். குமரிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு 'உன்ன கிளவனுக்குக் கட்டி வச்சிட்டாங்கடி' என்று அவள் காதில் ஒதினார்கள். அன்றிரவே சைக்கிள் கடை மஸ்தானுடன் ஜைத்துன் ஒடிப்போனாள். மஸ்தான் ரொம்ப நாளாக வைத்திருந்த குறி ஜைத்துன் எல்லாப் பெண்களைப் போலவும் ஜைத்துனும் ஒரு ராஜகுமாரனைத்தான் கனவு கண்டாள். கீழ வாசல் துலுக்கத்தெரு கடைசியில் இருந்த நவாமியான் பள்ளிவாசலில் பாங்கு ஒதிக் கொண்டிருந்த ஹையத்பாய் பெற்றெடுத்த பெண் ஜைத்துன் பாங்கு ஒதிஓதிக் குடலில் புண் வந்து பீடிப்புகையும் தீத்தண்ணீருமே மருந்தாய் வாழ்ந்த ஹையத் ஒருநாள் மையத்தில் வாய்பிளந்துபோனார். காலையிலும் மாலையிலும் அல்லாவின் பெயர் சொல்லிக் கூக்குரலிட்ட அந்தக் குரல் ஒடுங்கிப் போனது. பள்ளிவாசல் மீசான்கல்லில் அவர் சடலம் கிடந்தது.

ஜைத்துனின் உம்மா பதினொரு குமருகளை விட்டுட்டு போனீஹளே என்ற ஜைத்துனின் உம்மாவின் கதறலின் எதிரொலி அங்கே ஒரு நூற்றாண்டாக உறங்கிக் கிடக்கும் நவாமியான் பகீர் கேட்டு அதிர்ந்து போய்விடவில்லை. தர்காவின் தூண்கள் ஒரு வேளை அழுதிருக்குமோ என்னவோ?

தினமும் தள்ளாடியபடி அந்தத் தூண்களுக்கு உள்ளே உள்ள படிகளின் மூலம் மேலேறிச் சென்று தஞ்சாவூரின் நான்கு திசைகளும் அலற லாகுலாஹா சொல்லும் ஹையத்தின் குரல் அழுதிருக்குமோ என்னவோ? பக்கத்திலிருந்த கபாஸ்தான் ஒருவேளை சிரித்திருக்கக் கூடும். அங்கிருந்த ஆத்மாக்கள் மலக்குகளாகி வரும்பொழுது அவற்றுக்குள் ஹையத்தும் இருப்பார். பதினொரு குமருகளும் சிதறி யார் யாருடனோ வாழ்க்கை நடத்த அவர்களாகவே தீர்மானித்த நரகங்களில் போய்ச் சிக்கிக் கொண்டார்கள். ஜைத்துன் கடைசிப் பெண். அவளை யார் கையில் கொடுப்பது? ஜைத்துனின் அம்மா சந்தேகமே படாமல் ஜைத்துனை காசீம் ராவுத்தருக்குக் கொடுத்தாள். ஏன் என்று அவளுக்கே தெரியாது.

கீழவாசல் மார்க்கட்டுக்குப் போகும்போது ஒரு நாள் தற்செயலாக வானத்தைப் பார்த்தாள் ஜைத்துனின் உம்மா. தன்னந்தனியே கோட்டை வாசல் மேலே மதில்மேலே நின்று வானத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த காசீம் ராவுத்தரை அல்லாவின் உருவமாகவே ஒளிப்பிழம்பாக அவள் பார்த்தாள். இந்த மனுசன் என்னங்கிறே எப்போதும் நீண்ட தாடி காற்றில் கொடியாய்ப் பறக்கணும். வானத்தை நிமிர்ந்து பார்த்த தலையிலிருந்த குல்லாய் கீழே சரியாமல் இருக்கும் விந்தையை ஜைத்துனின் உம்மா பலமுறை கடைத்தெருவில் குமருகளிடம் பேசி இருக்கிறாள். என்றாலும் ஜைத்துணை அவர் கையில் பிடித்துக் கொடுத்தபோது தெருவில் எல்லோரும் மண் வாரித் துற்றினார்கள்.

வேற ஆள் கெடைக்கல்லயா ஒனக்கு? என்று சொக்கட்டான் உருட்டினார்கள். எனக்கு அவரு மலக்குதான். மூத்தவளும் கடைசிக்கு முந்தினவளும் செறுக்கியும் சொல்லாமலே ஒடிப்போறாளுக. நாலாவதும் எட்டாவதுமா படிச்சிட்டு இருந்தவளுகளே ஆறாம் படிச்ச பயலுக தேடிக்கிட்டாளுக தெனமும் சோத்துக்கு பறக்கற பறப்புலே மிச்சம்மீதி சந்து, களிசல் கருவாடு விக்கப் போனதும் பளய பாத்திரம் பளய பேப்பர் பொறுக்கப் போனதுகளும் சாணி அள்ளப் போனதுகளுமா படச்சவனே அல்லா இதுதான் நீ கொடுத்த வாழ்க்கை விவரத் தெரிஞ்சி அவள ஒருத்தன் நிமிண்டறதுக்கு முன்னாலே ஒரு கொட்டிலே அடைக்கணும் அல்லா என்று பதறியபடி ஒரு நாள் கோட்டை மதிலேறினாள். ஜைத்துனின் உம்மா காசீம் ராவுத்தருக்கு பசிக்கவே பசிக்காதோ கையிலிருந்த அலுமினியத் தூக்கில் அவருக்காக கறியும் ரொட்டியும் கொண்டு போனாள்.

"மருமவனே இத சாப்பிடுங்க" என்றாள் ஜைத்துனின் உம்மா. 'அப்படி வச்சிட்டுப் போ' என்றார் முதன் முறையாக காசீம்பாய். 'ஊஹவம் நாளக்கி வந்து பாத்தா அப்படியே இருக்கும்". ஒருநாள் சம்பளம் இதிலே ரொட்டியா கறியா இருக்கு வயசான காலத்திலே ஏன் இப்பிடி நின்னு நின்னே வறண்டு போக என் பொண்ணு ஜைத்துனை நிக்காஹ் பண்ணிக்குங்க. ஆம்பள இல்லாத குடும்பம் எல்லா பயலும் பொறுக்கிப் பயலுங்க. எம்பொண்ணுக அத்தனையும் தெருவிலே நிக்குது. ஜைத்துன் 17 வயசு குமர். அவளுக்கு நெனவு தெரிஞ்சா எனக்கு வாண்டாம்பா அதுக்கு மிஞ்சி அவளக்கெட்டி ஒரு குட்டியும் போட்டிங்கன்னா பாதுகாப்பா ஆயிரும். அல்லா பேரச் சொல்லிப் பாடின எம் புருஷனுக்கு இந்த கதி வரலாமா சொல்லுங்க கலகலவென்று சிரித்தார் காசீம் மொகைதீன் ராவுத்தர்.

அவர் கருணையோடு அவளைப் பார்த்தார். தாடியை உருவியபடி "எனக்கு நிக்காவா? பதினேழு வயசா? ஒம் பொண்ணா? எனக்கு வானத்தைப் பாக்கவே நேரமில்ல." அலுமினிய மூடியைத் திறந்து பார்த்தார். செவ்வையாகத் தேங்காய் அரைத்து கொழுப்பு உருக்கி பெரிய பிரபுக்கள் வீட்டிலும் செய்யாத விதமாய் மணம் வீச கறி வறுத்திருந்தது. நீலச் சிவப்பு நிறத்தில் எண்ணை சொட்ட கறியின் மணம் அவரைத் தாக்கியது. அவர் மனைவி இறந்தபின் அவரிடம் பல வருடங்களாக யாரும் நெருங்குவதே இல்லை. பள்ளத்தில் துலுக்கத் தெரு சரிவில் இருந்த பள்ளிவாசல் பின்னால் இருந்த வீடு ஒன்றுதான் அவர் வகையில் மிச்சம். அந்த வீடும் கடனில் மூழ்க இன்னும் கொஞ்சநாள்தான் இருந்தது. யாருமில்லா அந்தக் கணம் அவரை பயமுறுத்த முடியாது. வானம் என்ற ஒன்று இருக்கும்வரை நிமிர்ந்த நோக்குடன் வானத்தைப் பார்த்துக் காலம் ஒட்டிவிடுவார் ராவுத்தர்.

'உம்மா உம்மா எங்க உன்ன ரொம்பநேரமா காணம்' என்றபடியே கோட்டைக் குத்துச் செங்கல் வழியாக ஏறி அநாயசமாக ஓடி வந்தாள் ஜைத்துன் வானத்தைத் தவிர வேறெதுவும் பாராத அவரது கண்கள் அல்லா ஹத்தாலின் கருணையால் முதல் முறையாக ஜைத்துனை ஊன்றி நோக்கின. உம்மாவின் முதுகின் பின்புறம் நின்றவளைக் கையைப் பிடித்து வெளியே இழுத்து விட்டாள் ஜைத்துனின் அம்மா. காசீம்பாய் ரத்தம் திடீரென சூடேறியது. இவளா, இவளையா, இவளுக்கா விதியா? என்ற அலை நெஞ்சில் மோத அடப்பாவமே என்றன அவரது உதடுகள். ஆனால் அவரின் நாசித்துவாரங்கள் விரிந்தன. பெருமூச்சு சீறியது. உள்ளுக்குள்ளே இருந்த ஏதோ ஒன்று கபாடம் திறந்து கொண்டது. விரிந்த வான நிலத்தில் சூரியன் போல் கண் கூசியது.

கருப்புக் கிழிசல் ஜாக்கெட்டும் வெள்ளை பர்தாவும் அந்தப் பெண்ணுக்கு எப்படி இத்தனை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டன. ஆம் ஏதோ ஒரு சக்தி அவள் கண்களைக் கூர்ந்து நோக்கியது. ஜைத்துன் மேலும் உள்ளே மறைந்து நின்றாள். 'அத்தாவுக்குத்தான் உன்னயக் கட்டிக் கொடுக்கப் போறேன். முன்னாலே வா. அவர் பாக்கட்டும்' என்றாள். என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி கைகளைத் தொங்கவிட்டாள் ஜைத்துன் காதோரம் முடி சுருளைகளாக வியர்வையில் பேரழகு சிந்தின. வெறும் கழுத்தில் இருந்த கறுப்புக் கயிறு மார்பிலிருந்த ஒரு ஒற்றைப்பரு கருப்பில் முட்டியபடி பிரிந்து கொடுத்தது. அந்த 75 வயது கிழவரெ இல்லை என்று சொல்லவிடவில்லை. அலுமினியம் முடியில் ரொட்டியை எடுத்துக் கறியில் தோய்த்து வாயில் திணித்து அவளையே பார்த்தபடி "எங்கிட்ட என்ன இருக்குன்னிட்டு இவளக் கட்டறேங்கறே" என்று கேட்கும் முன் ஜைத்துனின் உம்மா அவள் கையைப் பிடித்து இந்தாங்க பிடிங்க என்று ஒப்படைத்தாள். கறியின் மணமும் சுவையும் ஜைத்துனின் சாகசமும் சாதுர்யமும் ஒரே நேரத்தில் அவரை அமுக்கி அடித்ததைவிட ஜைத்துனின் பேரழகு அவரை மீண்டும் பூமியைப் பார்க்க வைத்தது. பூமி சிவந்தது. இரண்டு பெண்களும் அவரைச் சூழ்ந்து இறுக்கிய அந்த மாலையிலிருந்து அவர் தப்ப முடியவில்லை. எல்லோரும் கேலி பேச நிக்காஹ் நடந்தது.

ஏன் என்று தெரியாமலே அவரிடம் அவள் வந்து சேர்ந்தாள். ஆனால் அன்றிரவே மஸ்தானுடன் ஓடிப்போனாள். இது இங்கே உள்ள பெண்களுக்கு ஒன்றும் புதிதல்ல. மஸ்தான் அவளைக் கேரளத்தில் கொண்டு போய் விற்றான். அவளுக்கே அது தெரியாது. பாஷை தெரியாத ஊரில் ஜைத்துன் மஸ்தானிடமிருந்து விற்ற கதை கேட்டு பதறிப்போனாள். நான்கு ஆண்கள் எமகிங்கரர்கள் போல் அவளைத் தூக்கிச் சுவற்றில் மாட்டினர். இரவு வெகு நேரத்திற்குப் பின்னர் நினைவு திரும்பிய போது அவள் ஒரு முந்திரி வேனில் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. அவள் சுத்தமாக வேறு ஒருத்தி ஆகி இருந்தாள். இனி பயமில்லை. முந்திரி மூட்டை மேலிருந்த வெட்டுக் கத்தி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த வேனில் இருந்து கவலையே படாமல் குதித்தாள் ஜைத்துன்.

நடந்து நடந்து ஒரு பள்ளி வாசல் வாயிலில் வந்து வீழ்ந்தாள் ஜைத்துன். அங்கிருந்து நாலு உத்தமர்கள் அவளை ரயிலேற்றி அனுப்பினார்கள். வரும்பொழுதே நேராக காசீம் ராவுத்தர் கிட்டதான் வரணும் என்று தோன்றிவிட்டது. அவளுக்கு இனி அத்தா போதும். இனி எங்கும் யாருடனும் போவதில்லை என்ற தீர்மானத்துடன் பத்துநாள் பட்டினியுடன் உடல் முழுவதும் அடியும் உதையும் வாங்கிய கன்றிப்போன புண்களுடன் காசீம் மொகைதீன் ராவுத்தர் திறந்த வீட்டிற்குள் இருண்ட திண்ணையின் வழியாக ஏறி யாருடைய சம்மதத்தையும் கேளாமல் மீண்டு வந்து புகுந்து கொண்ட அவளை யாரும் ஏதும் கேட்கும் முன்னமே சேர்த்துக் கொண்டார் காசீம் மொகைதீன் ராவுத்தர். இதுதான் ரம்லத் பிறந்த கதை ரம்லத் வயிற்றில் உருவாகும் வரை ஜைத்துன் அவளைச் சுத்தமாகப் பெற்றெடுக்க தீர்மானம் செய்து கொண்டே பெற்றெடுத்தாள் ஜைத்துன். சுத்தமான ராவுத்தரின் ரத்தத்தில் அவளைப் போன்ற உருவமாகவே பிறந்தாள் ரம்லத்.

வானளாவிய சுவர்கள். ராமர் செங்கற்களால் கட்டப்பட்ட புராதனச் சுவர்கள். கீழே செம்பாரங்கற்கள் மீது எந்த பிடிப்பில் அவை நிற்கின்றனவோ? தஞ்சாவூரின் கீழவாசல் கோட்டை முழுக்க பள்ளம் முழுவதும் முஸ்லீம்களால் நிரம்பியிருக்கின்றன. கீழக்கோட்டை வாசலிலிருந்து நீண்ட சரிவான பாதை இருபுறங்களிலும் அகழிநீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கோட்டை இப்போது கோட்டையல்ல. நாயக்கர் தெலுங்கர் வடுகர் என்று வந்தேறிகள் வந்து சூழ்ந்த நூற்றாண்டுகள் கழிந்தே போயின. இன்றும் கோட்டைச் சுவர்மீது பன்றிகள் மேய்கின்றன. கீழவாசல் மேட்டு சுவரின் நீட்சியில் ஒரு சிறியமேடு, அதுதான் பீரங்கிமேடு, பிரம்மாண்டமான பீரங்கி நூற்று இருபத்தைந்து அடிகளுக்கும் மேல் நீண்ட பெரிய பீரங்கி மேட்டில் பல நேரம் வெய்யிலில் குளிர் காய்ந்துகொண்டு பீடியை உறிஞ்சி ஊதிக் கொண்டு அதோ காசீம் முகைதீன் ராவுத்தர்.

வானத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கும் அவரைத் தேடிவழக்கம்போல் ரம்லத் வந்து பீரங்கி மேட்டின் கோட்டைப் படிக்கற்கள் வழியே மேலேறி வந்தாள். கீழ் அலங்கம் மேலிருந்து வளைந்து வளைந்து தெரிந்தது. பல வீடுகளின் கூரையிலிருந்து காலைச் சமையல் புகை எழும்பி மணந்தது. பச்சை மிளகாய் உப்பு கலந்து அம்மியின் னிக்னிக் என்ற ஓசையும் மேலெழுந்து வீசும் தேங்காயின் பூரணமான வாசனையை நுகர்ந்து 'வாப்பா இந்த டியெக் குடிங்க' என்று அவரை நெருங்கி அவரது தோள்களுடன் இணைந்து நின்று நெஞ்சைத் தடவிக் கொடுத்தாள் ரம்லத்பி.

வானத்தையே பார்த்துத் துருவிக் கொண்டிருந்த காசீம் முகைதீன் பாய் அவளையே உற்றுப் பார்த்தார். காலை பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகையின் தீவிரத்தில் அந்த இரும்புப் பிஞ்ஞானத்தில் இருந்த ஒரு மிடறு உள்ளிறங்கியதும் ஆவி பறந்து திருப்தியாகவே ரம்லத்தைச் சந்தோஷமாகப் பார்த்தார் காசீம்பாய். இந்த டீயோடு அப்புறம் காசீம்பாயைக் கண்டு பிடிக்க முடியாது. எங்கே போவார் எங்கிருந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று யாரும் சொல்லவே முடியாது. உணவு அறவே கிடையாது. யார் கொண்டுபோய் கொடுக்கக் கூடும் திடீரென்று யாராவது திருவையாறு போகும் பஸ் டிரைவர் முஸ்லிம் ஜனம் பிடித்துக் கொண்டு வந்து விட்டு விட்டுத் திட்டுவார்கள். "குலமங்கலம் ரூட்ல பஸ்ல போய்ட்டிருந்தே காசீம்பாய் ஆத்தங்கரை மலத்துல கால்வெச்சு நின்னுட்டிருந்தாரு பிடிச்சு இழுத்துட்டு வாரதுக்குள்ள போதும் போதும் என்று ஆய்ருச்சி, வீட்ல போட்டு மூடிவைய் நானியம்மா' என்பான் அந்த ட்ரைவர் கீழவாசல்காரர்கள் பிடித்து பத்திரமாகக் கொண்டு வந்து விடுவார்கள் என்றாலும் உடனே வெளியே புறப்பட்டு விடுவார். ரம்லத்தை ஒத்த குமருகள் வந்து பிடித்து திண்ணை மீது அவரை ஏற்றி உட்கார வைத்து குசலம் விசாரித்து உள்ளே அடைப்பார்கள். ஆனால் சித்த நேரத்தில் யாராவது வந்து ரம்லத்திடம் சொல்வார்கள் காசீம் பாய் கலக்டர் ஆபீஸில் புறாக்கூண்டு அருகே நின்று அழகைப் பரிசீலித்துக் கொண்டு இருப்பதாக ரம்லத் இன்று நேற்றா இவற்றைப் பார்க்கிறாள். ரெண்டு நிமிடத்தில் மறந்து விடுவார். வெளியே ரெயில்வே ஸ்டேஷன் தஞ்சாவூர் கெடியாஸ் போய் நிற்பார் காசீம் மிகைத்தீன் ராவுத்தர் தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளே மாலை நேரத்தில் அவருக்கு ஏராளமான பறவைகளுடன் பார்வையும் பழக்கமும் இருந்தது.

யாராவது பிடித்து இழுத்துக் கொண்டு போவார்கள். பைத்தியம் போல கூடவே போவார் காசீம்பாய். எல்லாருக்குமே கிழவன் என்ற பரிவு. அவரோ வானத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார். பசிதாகம் இராது. காலநேரம் தெரியாது. முன்பெல்லாம் இது சுலபமாய் இருந்தது. இப்போது தத்கீர் மாறி விட்டிருந்தது. "ஏம்பாபா எஞ்ச.இப்டி சுத்திக்கிட்டிருக்கீங்களாம்?" யாராவது கேட்பார்கள் 'பொறா ஒண்ணெக் காணும்ப்பா' வாயிலிருந்த பீடி எடுபடாமலே பதில் சொல்வார் காசீம்பாய் கேட்பவர்களுக்கு ஆச்சர்யம். இந்தக் கிழவருக்குத்தான் எத்தனை தீர்க்கமான பார்வை கண்கள் சிவந்து வயதுக்கு மீறிய வேகம் காட்டும் யாரையும் அசத்தும் பார்வை காசீம்பாயுடையது.
இரவு வேளைகளில் ஜைத்துன் அவரைத் தேடி அலைந்து இழுத்து வந்து தன் மடியில் போட்டுத்தான் துங்க வைப்பாள். இப்போது ஜைத்துனும் உயிருடன் இல்லை. காசிம்பாய் பெரிய அதிருஷ்ட்டக்காரர்தாம். எங்கோ ஒடிப்போய் சிக்கி எவனோடோ மாடுபோல் பிடிபட்டு தப்ப முடியாத வலையில் இருந்தும் தப்பிவந்த போதும் காசீம்பாய் அவளை ரோசப்பட்டு துரத்தி விடவில்லை. தெருவிலும் கீழவாசலிலும் பேசாத பேச்சு பேசி
மண்வாரித் துற்றிய போதும் ஹாஜியார் அப்துல் சலாம் ராவுத்தர் கூப்பிட்டு அவளைத் துரத்து. தலாக் கொடுத்து அடித்து விரட்டு என்றெல்லாம் கண்டித்த போதும் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. காசீம் பாயிடம் வந்து கதறிய ஜைத்துனை வீட்டுக்குள் வைத்துக் கொண்டதும் ஜைத்துன் துணிச்சலே வடிவாய் நிமிர்ந்தாள். அடுப்பு பற்ற வைத்து நோம்புக் கஞ்சி காய்ச்சினாள். காசீம்பாய் காலடியில் உட்கார்ந்தபோது ஈரம் படிந்த விழிகளோடு ஜைத்துணை தடவிக் கொடுத்தார். பெரிய வீடு அது முன்னோர்கள் கட்டிய விசாலம். வீடு முழுவதும் அடித்து வாரித் துற்றி கூட்டினாள் ஜைத்துன் அது ஹவ்வால் மாதம். நோன்பு பிடித்தாள். காசீம்பாய் அருகில் உட்கார்ந்து ஒதினாள் இரவு பகலாக அவரைக் கரிசனையுடன் துடைத்து மணம் வீச வைத்தாள். புதிய ஜூம்பாக்களைத் துவைத்து உலர்த்தி இஸ்திரி போட்டாள். பைஜாமாக்களைத் தைத்தாள். இரவு கண்ணாடிக் கிண்ணத்தில் பிர்னி கஞ்சி வைத்து ஊட்டினாள். ஜைத்துனைக் கருணையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் காசீம்பாய். அவளைத்தான் பீவியாக அவரால் எண்ணவே முடியவில்லை. பீடிக்கங்கு இருளில் சுடர்விட இருவரும் அருகருகே இருந்து கொண்டே இருந்தனர். ஜைத்துன் பீவியை அவள் உம்மா அழுத்தமாகச் சொல்லி வாட்டியிருந்தாள். அதன்படியே ஒற்றை பைஜமாவில் அவருக்காகக் காத்திருந்தாள்.

"இந்த துனியாவுல அதும் மாதிரி ஆம்பளை சுத்தமான ஆம்பளை கிடையாது. ஜைத்துன் வயசாச்சேன்னு நெனைக்காதே. சுத்தமான ஆம்பளை. இருபத்தைஞ்சு வருஷமா எனக்குத் தெரியும். ஒன்னையே கெட்டுனது அல்லாவோட கிருபை, துங்கிடாதே ஜைத்துனு. அந்த ஆளெதுங்க உட்றாதே! வேன்னா தெருவுக்குத்தான் வரணும். கெட்டிப்புடி உட்றாதே! முட்டியடி. வணங்க மாட்டான். வணங்கு கொடல் கறியும் வெதர் பொரியலும் பண்ணி ஊட்டி ஊடு. கஞ்சி கூட செவுரொட்டிக் கஞ்சிவை மடியில இருந்து ஊட்டு. அப்பா மாதிரி அம்மா மாதிரிதான். கொஞ்சம் கொஞ்மா எளக்கி மாட்டு. உட்றாதெ- உம்மா சொன்னது நெஞ்சில் நின்றது. உண்மைதான். இழக்க முடியாத தூய்மை. காசீம் ராவுத்தர் எழுபத்தைந்து வயது கிழவனை வசப்படுத்தும் வறுமை தாயையும் மகளையும் துரத்தியது. வீட்டுக்கு வெளியே இருந்து உம்மாவும் இரண்டு குமர்களும் காசீம் பாய் வீட்டில் அடைக்கலம் ஆகிவிட்டிருந்தனர். பிறை கண்டதும் ஜைத்துனின் கண்கள் போன திசை எல்லாம் காவல் நின்றாள் உம்மா. ஜைத்துனுக்கு ஆம்பளைன்னாலே அசிங்கப்பட்டுப் போயிருந்தாள். காசீம்பாய் வியப்பே வடிவாக்கினார். காலங்கள் சதித்தன. இருண்டு விடிந்தன. மூணு மாசம் கழிந்த போதும் ராவுத்தர் மடியில் துங்கிக் கிடக்கும் ஜைத்துண் பீவியை இருட்டில் வந்து அடித்து எழுப்பி துணியையும் உருவி திரும்பி ராவுத்தரிடம் விரட்டும் வேலையும் பயன் தரவே இல்லை.

ஜைத்துனின் எல்லா முயற்சியும் ஏனோ தோற்றுக்கொண்டுதான் இருந்தன. உம்மா விடவில்லை. ஒரு கொடுரமான இரவு அது இரண்டு பேரும் காசீம் பாயிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். உம்மாவின் மனசில் ஏதோ சங்கல்பம். ஜைத்துன் பீவிக்கு ஆம்பிளை உடம்பு என்பது கசந்து போய்விட்டிருந்தது. மண்ணகல் ஒன்றை கொளுத்தி அந்த பழைய வீட்டு உத்தர விட்டத்தில் வைத்தாள் உம்மா. ஜைத்துனின் கண்கள் திடீரென்று விரிந்தன. ஜைத்துனின் உம்மாவின் பெயரைச் சொல்லி காசீம்பாய் அரற்றலானார்.

"என்னெ உட்ரு ஷம்ஷாத்து வாண்டாம் அடிப்பாவி, அடிப்பாவி உட்றி உட்றி கண்கள் அகல விரிய அசந்து போனாள் ஜைத்துன்பி, அந்த இரவின் பரிசுத்தத்தை உடைத்துக் காட்டினாள் ஜைத்துண்பியிக் உம்மா ஷம்ஷாத்பேகம். இருளும் ஒளியும் தங்கம் போல உருக வடிம்ஷாத் பேகம் காசீம் பாயை உருட்டி எடுத்தாள்.

இப்போது காசீம் பாயிடம் சத்தமே இல்லை. பளீரென்று ஒரு அறை விழுந்தது ஜைத்துனுக்கு.

" இப்ப போடி போ. போயி உடாதெபோ கட்டில் கிழிசல் மெத்தையில் இருந்த காசீம்பாய் முணக முணக ஜைத்துன் பி தழுவிப் புரண்டாள்.

" ஜன்னத்து ஏம்பாருவெ குடு. ஏம்பாருவெ குடுத்துரு ஐயப்பா அம்மா அம்மா முணகினார். ஜன்னத் அவரோட மொதல் பொண்டாட்டி

"நானு ஜைத்துன்பின்னு சொல்றீ புரியட்டும்-இப்போது காசீம்பாய் புறாவின் வேகம் சூழ ஜைத்துனை முறுக்கி மெத்தையில் புதைத்தார். முப்பது வருடத்து தேக்கமான அவரது முரட்டுவில் வளைந்து ஜைத்துனை இறுக்கி சிதைத்தது.

'உம்மா உம்மா உம்மா இஞ்ச வாயேன் வா கதறினாள் ஜைத்துன். முறுக்கமும் பிடியும் மூச்சு முட்ட அவளை வளைத்து உள்ளமுக்கினார் காசீம். வானத்தில் அனல் புறாக்கள் சிதறின. இருளில் ஜைத்துன் முதல் முறையாக இனித்துக் கிடந்தாள். காசீம் ராவுத்தர் ஜைத்துனை இணைத்தும் பிளந்த முதல் கனவு நிஜமாய் அனல் சுடர்ந்தது. உம்மா சொன்னது நிஜம். நிஜம். முரட்டு ஆம்பிளைதான் அடங்காத ஆம்பளை ஆச்சர்யமான வேகம். சுடரும் ஆம்பளை காசீம் அரற்றலுக்கு ஜைத்துனின் உம்மா ஷம்ஷாத் இடமே தராமல் கதவுகளை இறுக அடைத்தாள்.

 விடிந்த போதும் ஜைத்துன் வெளியே வரவில்லை. வரமுடியவில்லை. வரவிடவில்லை. சந்தோஷப் புறாக்கள் அந்த வீட்டைச் சுற்றிப் பறந்தன. காசீம்பாய் மெளனமாகவே உட்கார்ந்திருந்தார். ஒன்பது நாட்கள் ஆயிற்று. அவர் சுய நினைவுக்கு வந்து வெளியே வர. அதற்குப் பிறகும் பத்து நாளாச்சு.

என்ன மாயம் ஜைத்துன் கர்ப்பம் ஆகி விட்டதும் உடனேயே தெரிய வந்ததும் சந்தோஷம் தாயும் மகளும் இருந்து சந்தோஷமாக காசீம்பாயை ஊட்டினர் மூன்று மாதம். -

தனியாக ஜைத்துன் கேட்டாள். "மிந்தி வாண்டாம் வாண்டாம்னிங்களே அத்தா. வயித்த பாத்திங்களா இப்ப"

வயிறு கனிந்து பெருகியிருந்தது. இடுப்பு விரிந்து வெளுத்திருந்தது. காசீம்பாய் முகத்திலும் பரவசம். இப்ப கூட ஒரு பிள்ள வேணும்.

வீட்டுப் பொறுப்பு இப்போ ஷம்ஷாத்து கைக்கு வந்தாச்சு காசீம்பாயைக் கேட்கமாலேயே இப்போ எல்லாம் நடந்தது. அவர் ஜிப்பாவில் இருந்த எல்லாம் அவரைக் கேட்காமலேயே ஷம்ஷாத் பேகம் எடுத்துக் கொள்வாள். ஒவ்வொரு ஓடிப்போன மகளாக வந்து சேர்ந்து விடும் பெருகியது. மூணு வேளையும் நிம்மிதி பெரு மூச்சுடன் கானா நடந்தது. இப்போது காசீம்பாய் திண்ணையில் உட்கார்ந்து உட்கார்ந்து இரவில் வெகு நேரம் பீடி ஊதிவிட்டு உள்ளே போகும் போது இருட்டில் பின் நடையில் ஷம்ஷாத்து அவரைக் கையைப் பிடித்து ஜைத்துன் அறைக்குள்ளே அனுப்பி அடைப்பாள்.

மகளாகவோ பேத்தியாகவோ பார்த்து பெண்ணின் மடியில் காசிம் பாய் புது உயிர் பிறந்தது ஆச்சர்யம்தான். வளைத்து எடுத்தார்.

பத்தாவது மாதம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள் ஜைத்துன்பி. நம்பத்தான் முடியவில்லை. இரண்டும் பெண் குழந்தைகள்.

இரவுகளில் ஜைத்துன் காசீம் பாயிடம் ஆண் குழந்தை வேண்டும் என்றாள். இரண்டு பெண் போதாதா என்றார் காசிம் ஒன்று ஜனபா இன்னொன்று ரம்லத்பி.

வாழ்க்கை சுலபமாக இருந்தது. சொத்துக்கள் விற்றாகின. வீட்டையும் விற்றாள். மிச்ச மீதி வாழ்க்கை சுலபமாகும். வீட்டை விற்பது சுலபமாய் இல்லை. ஏராளமான கடன் ஏற்கனவே சுமந்திருந்தது.

காசிம் முகைத்தீன் ராவுத்தருக்கு வேலை என்றால் புறா வளர்த்து நோக்குக்குக் கொடுப்பதுதான். தாயும் மகளும் தேடித் தேடி ஓட வேண்டிய நிர்பந்தமும் வந்தது.

அந்தப் பெரிய வீடு கனத்தது. வீடு நிரம்ப பெண்கள். சீலைகள் பர்தாக்கள் தொங்கின. காசிம்பாய் எங்கே எப்போது போவார் என்றும் எப்போது வருவார் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாது. வீட்டின் பின்புறம் இருந்த காடி கானா என்ற வண்டி நிறுத்தும் இடத்தில் ஷம்ஷாத் பேகம் மகள்களை விட்டு ஏதோ தோண்டிக் கொண்டிருந்தாள். தரையைப் பேர்த்து எடுக்கும் வேலை நடந்தது. ஜைத்துன்பி ஆச்சர்யமாகத்தான் கேட்டாள். "என்ன உம்மா பண்றே?"

நாலு பெண்கள் கையிலும் கடப்பாறை. சத்தமில்லாமல் இடித்து தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் மூச்சு வாங்கியது. அயரவில்லை. திம்திம் என்று இடித்துத் தள்ளினார்கள். ஷம்ஷாத்து சுற்றிச் சுற்றி வந்து உத்திரவிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது தரை பளபளத்தது. ஒரு பெண் இடிந்த காரைகளைப் பெயர்த்துக் கூட்டித் தள்ளினாள். மேலும் பளபளப்பு. தங்கம்போல இப்போது தரை ஒளிவிட்டு மினுங்கி டாலடித்ததை ஐந்து பெண்களும் ஆச்சர்யமாய் பார்த்தனர்.

"என்னம்மாது? ஏகக்குரலில் வினவியபோது, "கவர்தார். மூச்சு விடக்கூடாது. உளியும் சுத்தியலும் கொண்டாந்து பேத்து எடுங்க. சத்தம் வெளியே வந்திச்சு அவ்வளவுதான்' என்றாள் பேகம் ஷம்ஷாத்து. அவளுக்கும் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

டங் டங் டங் என்று சப்தம் நாலு நாளாக யாருக்கு என்று பதில் சொல்ல. கடைசியாக இடிந்தது.

 கீழவாசல் உச்சினிகாளி தெருவிலிருந்து மாய நாடார் வந்தார். ஷம்ஷாத் ரகசியமாகக் கூட்டிக் கொண்டு வந்து பேரம் பேசினாள். இருபத்தையாயிரம் கொடுத்துவிட வேண்டும் என்றாள். மாய நாடாரோ அசந்து போனார். கொல்லைப் புறச் சந்து மூலம் அழைத்து போய் தரையைக் காட்டினாள். மாயநாடார் மூக்கின்மேல் விரல்வைத்து வியந்து நின்று போனார்.

'பொம்புளை செய்த வேலையா இது' என்றார். தரையில் இருந்து பெயர்த்து எடுத்து சன்னச்சதுரங்களாக தாமிரத் தகடுகள் வெட்டிவெட்டி அடுக்கி, அந்த அறை முழுதும் அடுக்கப்பட்டும் அடேயப்பா இருபது ஆம்பிளைகள் சேர்ந்து செய்தாலும் முடிகிற வேலையில்லை. பத்தாயிரம்தான் தரலாம் என்றார் மாயநாடார். அதுவே அதிகம் ரொம்ப அதிகம் என்றார். "வாண்டாம்னா உட்ருங்க. நானு விருதுநகர்ல இருந்து ஆளெ வரச் சொல்லி இருக்கேன் வித்துக்குவேன்' என்றாள். ஷம்ஷாத்து.

"ஆமா போலீசுக்குத் தெரிஞ்சா என்ன ஆவும் தெரியுமா? இதெல்லாம் புதையல் மாதிரி. கவுண்மெந்துல எடுத்துக்கிட்டு போய்டுவாங்க ஏங்கிட்ட உட்டா பணமாவுது அப்படியே கெடைக்கும்' என்றார் மாயநாடார். அவர் கண்களின் தீவிரம் அவரே காட்டிக் கொடுப்பார் என்றும் தோன்றியது.

ஷம்ஷாத்து வெளியே பயத்தைக் காட்டாமல் "ஒரே பேச்சிதான் நாடாரே இருபது குடுத்துடு."

"ம்ஹம் பன்னண்டு தரலாம் மிஞ்சி மிஞ்சிப் போனா. அதுவே ரொம்ப அதிகம்."

'சரி உள்ளாற வா நாடாரே. உனக்கு வாயால சொன்னா தெரியாது உள்ளாற வா." மாய நாடாருடன் அறைக்குள் சென்றாள். சற்று நேரத்துக்குப் பின்னால் வெளியே வந்த மாய நாடார் மடியில் இருந்த பணமெல்லாம் உருவி விட்டிருந்தாள் ஷம்ஷாத் பேகம் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்து விட்டுக் கொண்ட மாயநாடார் 'அஞ்சுக்கு மூணு பழுதில்ல" என்று சொல்லிக் கொண்டே வெளியே நின்ற துணை ஆட்களைத் தாமிரத் தகடுகளை அள்ள உள்ளே அழைத்தார். இடுப்பில் இருந்த கைலியை இறுக முடிந்தபடி "குமருக இருக்கிற இடம் பீச்சந்து வழியாக வரச் சொல்லையா' என்றாள். ஷம்ஷாத்தின் வியர்வை மாய நாடாரின் மூக்கில் மணந்தது. அது அங்கிருந்த குமருகள் ஒவ்வொருவருக்கும் பயிம் தந்தது. ஹசினா பீவி பர்தாவை இழுத்து விட்டுக் கொண்டு பனமரத்தடி மாதிரி இப்படி ஒரு ஆளு இருப்பானா? கன்னங்கரேலு' என்றாள் கில்ஹாட் என்ற இன்னொருத்தி. 'உஷ் அந்த கருந்தடியன் காதிலெ விழப்போவுது உம்மாவுக்குத் தெரிஞ்சா வெளுத்துடுவா. ஏய், முப்பத்தையாயிரம் பிடுங்கிட்டாடி" என்றாள் ஹசினா. "எப்படி அது" என்று கேட்டாள்தில்ஹாத், "உஷ் உம்மா வருவா. அத்தாவுக்கு இதெல்லாம் தெரியாதா?' என்றபோது உள்ளே திரும்பி வந்து கொண்டிருந்தாள் ஜைத்துன் வெளியே மழை சாரல் அடிக்க ஆரம்பித்தது. மழையில் நனைந்தபடி கருந்தடியர்கள் உள்ளே வந்து பளபளக்கும் தாமிர அடுக்குகளைச் சுமந்து கொண்டு வெளியே சென்றனர். பளபளத்த அவர்கள் உடல்களைப் பெண்கள் ஆர்வத்தோடு பார்த்தார்கள். அடுப்பிலிருந்த புஸ்கா நெல்சோறும் கோழிக்கறியும் குருமாவும் வாசனை பிடித்த அந்த இளைஞர்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் அதே காடிகானாவில் சாப்பிடக் கிடைத்தது. முப்பத்தைந்தாயிரம் செய்கிற வேலைதானே. இதெல்லாம் சரியாக நடந்தது.

பெண்களின் கேலிச் சிரிப்பொலியும் எக்களிப்பும் நாற்புறமும் எதிரொலிக்க மாயநாடார் திருப்திகரமாக வெளியேறினார். ஷம்ஷாத்து உள்ளே போனவள் வெளியே வரவே இல்லை. இன்னும் எதை பிடுங்கி விற்கலாம் என்பது அவள் யோசனையாய் இருந்தது. அந்த வீடே ஒரு பெரிய பணப்பெட்டி என்றுதான் சொல்ல வேண்டும். உத்திரங்களை இறக்கி விற்கலாம். எல்லாம் பர்மாத் தேக்கு. காசீம் ராவுத்தரின் முன்னோர்கள் ரங்கூனில் இருந்து கொண்டு வந்து சேர்த்த மரங்கள். அவை காசின் மதிப்பு தெரியாத காலத்தில் தந்தங்களை வாங்கிச் செதுக்கி கருங்காலியில் பதித்து சித்ர வேலை செய்த பிரம்மாண்டமான துண்கள் தேக்கு மரத் தூண்களில் அடுக்கடுக்காக கருங்காலியும் சில்வர் மட்டும் கலந்து இலை, பூ, காயும் பழமுமாய் சிற்ப வேலை செய்த அபூர்வமான தூண்கள். என்றைக்கு விற்றாலும் ஈனக்கிரயத்தில் கொடுத்தாலும் ஒரு துண் ஒன்றுக்கு இருபதாயிரம் கிடைக்காது. உடனே விற்க முடியாது. காத்திருக்க வேண்டும். தொங்கிப்போன கிழவனின் நெஞ்சு பூராவும் பணம் ஜைத்துனுக்குச் சாமர்த்தியம் போறாது. கிழவனைத் தலைக்குமேல் துக்கியே எல்லாவற்றையும் உறிஞ்சிடணும் என்று சொல்லிக் கொண்டாள். உள்ளே இதெல்லாம் நடப்பது ஒன்றும் தெரியாது ஜைத்துனைப் பற்றிய கனவுகளோடு வாசல் குறட்டுத் திண்ணையில் இந்த உலகம் எதுவும் தெரியாத காசீம் மொகைதீன் ராவுத்தர் தனது இளமைக்கனவுகளில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். வெளி உலகில் ஜைத்துனைத் தவிர வேறு எதுவுமே தெரியாது பொறா ஷோக்கு ஒன்றைத் தவிர.

ஆலங்கட்டி மழை மழை பெய்து கொண்டிருந்தது. சாரல் மழை, சக்தி இல்லாதது போல் புடைத்துக் கொட்டும்
 ஆலங்கட்டி மழை.

 கந்தக மணம் வீசும் இதுபோன்ற மழை பனிக்கட்டிகள் மணல்போல் இறையும் ஆலங்கட்டி மழை இப்போதெல்லாம் பெய்வதே இல்லை. தஞ்சாவூர் கீழவாசல் கோட்டை வாசல் இடிந்து விழுந்த மழை ஒன்றும் சேர்ந்தது. இப்போதெல்லாம் தஞ்சாவூர் கோட்டை என்றாலே யாருக்கும் நினைவில்லையே. அவசியம்தான் இல்லையே. கீழ வாசல் கோட்டை வாசல் எவ்வளவு பெரிது தெரியுமா? சாதாரண ஆலங்கட்டி மழைக்கு அது விழுந்து விடுமென்று யார் எண்ணினார்கள்? மழை நிதானமாகவும் அழுத்தமாகவும் பெய்து கொண்டே இருக்கிறது. சவங்கலான காலம் போல ஆலங்கட்டி மழையின் கற்சிதறல் போன்ற பனியின் கட்டி மழை வலுவில் இடிந்து கிடந்த கீழவாசல் கோட்டை வாசல் கதவுகள் அருகே ஒரு பேய் போல மாறு பார்வையுடன் நிற்பது யார்? காசீம் முகைத்தீன் ராவுத்தர்.

அவரை மழையில் இருந்து ஒதுக்கிக் காப்பாற்றி மடியில் போட்டு குழந்தையாக்க இப்போது ஜைத்துன் பிபியும் இல்லை. அவரைப் பகடைக்காயாக உருட்டி விளையாடி வாழ்க்கையை உடைத்து கபரஸ்தானுக்கு அனுப்பிய ஷம்ஷாத் பேகமும் இப்போ இல்லை. ஆம். காலத்தின் கோலம் இருபது இருபத்தைந்து வருடங்களில் ஷம்ஷாத் பேகம் என்ற அற்புதமான ஸ்திரீ புரிந்த சாகசம்தான் அவள் பத்து குமருகளும் கடந்து போய் பல்கிப் பெருகி விளைந்து போனார்கள்.

ஆம். அந்தப் பழைய வீடு ஒரு ஐஸ்வர்ய குகை என்று யாரும் அறியும் முன்னதாக துனியாவில் அந்தப் பழைய வீட்டை இடித்து உதிர்த்தே புதிய வாழ்வை ஜெயித்துக் கட்டினாள் ஷம்ஷாத்பேகம்.

அடுப்படி மறைந்தது. நெய்யும் அப்பமும் இடியப்பக் குழல்கள் ஓயாமல் கரந்து ஆவி பரந்தது. அற்புதமான பிரியாணி, அபூர்வமான நளபாகம் யுனானி சமையல். உடலை வளர்க்கும் அற்புதம் ஷம்ஷாத் பேகத்துக்குத் தெரிந்திருந்தது.

காசீம்பாய் கிழவர் என்று எண்ணாமல் அந்த வீட்டைப் பர்தாவில் மூடி அனைத்து அவரது ஆண்மையை எழுபது வயதுக்கு மேலும் விசிறி வளர்த்து அக்னி குண்டமாக்க தேவதைபோல் மலக்காக் ஜைத்துன்பியை லகான் போட்டு அடக்கி காசீம்ராவுத்தருக்குப் படிய வைத்த சாதுர்யம் யாருக்கு எட்டும்? பசியும் பட்டினியும் விபசாரமும் அழுக்கும் அபத்தமும் நிறைந்த துனியாவில் வாழ விதித்தபோது இந்த வழியை யார் அவளுக்குச் சொல்லிக் கொடுக்க முடியும்? எது அது?

இதே துனியாதான். பத்து வயதிலேயே குமரானவள் ஷம்ஷாத் அவள் அம்மா நம்பவே இல்லை. பத்து வயதில் பெரிசானது பயமாய் இருந்தது. மூலைக்கடை பக்கரியிடம் நாடா போட்டு குர்ரான் ஓதி ஆருடம் பார்த்தாள். பக்கிரி சொன்னது. யாருக்காவது சீக்கிரம் நிக்கா பண்ணிடனும் இல்லேன்னா ஆபத்துதான்' என்றார்.

ஷம்ஷாத்தின் அந்தக் குடும்பத்துக்கே பாதகமாய் வந்தது. ஷம்ஷாத்தை பதினோரு வயதில் அரண்மனையில் கோடாவாயாவாய் இருந்த முரட்டுக் குதிரைக்காரன் ரப்பேலுக்குக் கொடுத்து கன்னி கழித்தாள் அவள் உம்மா. அது அந்தக் காலம். அப்போதும் ஏழ்மை தன் கொடுமை கரத்தை விரித்து ஷம்ஷாத்தை உறிஞ்சியது. பசியின் காலம். ஷம்ஷாத்தை பத்து மாத பத்து மாத இடைவெளியில் ஓயாமல் பிரசவிக்க வைத்து பிழிந்தெடுத்தான் ரப்பேல். பெரும்பாலும் பட்டினியும் பசியும் புளியங் கொம்பிலிருந்து கொழுந்து பறித்துத் தின்பதும் புளியங் கொட்டையை அறைத்து இடித்து கஞ்சி வைப்பதுமான கொடுரமான காலம். நினைக்கவே பலம் தந்த உறவு ரப்பேலுடையது. ஊக்கமான ஆள். அவனுக்கு அரண்மனையில் சாப்பாடு கிடைத்து விடும். அதோடு உலுப்பை தலைக்கு எண்ணெயும் தருவார்கள். மருந்து மாயமும் அங்கு உண்டு. ஷம்ஷாத்தின் பர்தாவை உருவி எறிந்து விட்டு இரவு முழுவதும் ஹீனமான குரல் அனுங்க அனுங்க ஷம்ஷாத்தை வெறியின் வடிவமாக்கும் ரப்பேலிடம் ஒரே நல்ல குணம் விடாமல் அவளை உயிருடன் வைத்திருந்ததுதான். காசு தரமாட்டான். முடியாது என்று ஒதுங்கினாலும் சிதைத்து எடுத்து ஒரு மூலையில் அவளை வியர்வைக் கடலில் பிழிந்து போட்டுவிட்டு எழுந்திருக்கும் ரப்பேலைக் கட்டித் தழுவ விடாமல் பரிதாபமாக கவ்விக் கொண்டு தன் ஆசைகளை அவன் மார்பில் கொட்டி அழும்போது மீண்டும் ஒருமுறை அவளை முறுக்கிப் பிழிந்துவிட்டு அதையே மீண்டும் தந்துவிட்டு சில்லறை காசுகளை எறிந்து விட்டுப் போவான் ரப்பேல். அதுக்கப்புறம் ஆப்பக்கடை ஆரம்பம். குடும்பம் முழுசும் ஆப்பக் கடையில்தான். வெல்ல ஆப்பம் தேங்காய்ப்பால் ஆப்பம் வெள்ளை முறுக்கு விற்பாள் ஷம்ஷாத் பேகம். அதே கீழவாசல் கோட்டை வாசல் வெளியேதான் ஆப்பத் தகரத்தை வைத்து காற்று வீச்சு பாதிக்காமல் இன்னொரு சதுரத்தை அடுப்புக் கற்களைச் சுற்றிலுமாய் மறைத்து ஆப்பம் சுடுவாள். அபாரமான சுவை. அந்தக் காலம் அப்படி கீழவாசலில் அவள் ஆப்பம் பிரசித்தம் பெரிய வீட்டு ஹாஜியார் பொண்டாட்டி கூட வாங்கிச் சாப்பிடுகிற அபூர்வமான ஆப்பம் திடீரென்று ரப்பேல் வருவான். ஒரு அடுக்கு வெல்ல ஆப்பத்தை இபிலீஸ் மாதிரி சுருட்டிச்சுருட்டி வாயில் திணித்து கயளிகரம் செய்து அன்றைய வியாபாரத்தை ஸ்தம்பிக்க வைத்து விட்டு அதைக் கேட்டதும் ஷம்ஷாத்தை இழுத்துப்போட்டு அவளை அதே இடத்தில் சாத்து சாத்து என்று சாத்தி தெருவையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டு ரெளடிப் பெண்கள் தடுக்க வரும்போது பிடித்து இழுத்துப் போட்டு அறைந்து விட்டுப் போவான்.

ஏராளமான ஜனங்கள் தெக்குச் சீமையிலிருந்தும் வடக்குச் சீமையிலிருந்தும் தஞ்சாவூருக்குப் பஞ்சம் பிழைக்க வந்து கொண்டிருந்த தாது வருஷ பஞ்சம் அது. இராமநாதபுரம் பக்கம் இருந்து வந்த தேவமார்கள். தேவாங்குச் செட்டிகள், தெலுங்கு பேசும் நாயக்கர்கள், பிராமணத்தெலுங்கு ராவ்கள் ஆந்திரப்பிரதேச வடுக தேசத்திலிருந்து வடக்கிருந்து வந்தார்கள். கொடுமையான பஞ்சம். கோயம்புத்தூர் பக்கமிருந்த வந்து கீதாரிகள் என்று தஞ்சாவூர் கிடுகிடுத்தது. எங்கும் தொழில் இல்லை. சோற்றுக்கு விதைக்க நெல்லும் இல்லை. விதை நெல்லை வேக வைத்து சாப்பிட்ட காலம். சிங்கம்புணரி பாலயம்பட்டியிலிருந்து வந்த பஞ்சத்துக்குப் பயந்தோடி வந்த நாடார்கள் தஞ்சாவூர் கோட்டைக்கு வெளியே கூலிக்கு வயலில் புரியாமல் வேலை செய்தார்கள். அரண்மனையில் மராட்டியர்களின் மாற்றம் - தெலுங்கு பேசியவர்கள் மராட்டி பேசினார்கள். காலம் பட்டினி வியாதி, கொள்ளை நோயால் தப்பித்து வந்தவர்களைக் காவிரி சேர்த்துக் கொண்ட விபரீதம். வடக்கே இருந்த வந்த ராஜூ ஜாதியினர் கோட்டைக்குள் புகுந்தனர். மழை பெய்தது. ஆலங்கட்டி மழை தண்ணீரே இல்லாத பனிப்பாறை மழை! வெளியே வர ஜனங்கள் பயந்து பட்டினியாய் வீட்டுக்குள் காலங்கழித்த சுகமான நேரம் காலம் நிலைத்தது. பல இனம் பல மக்கள் பல பட்டினிப்பட்டாளங்கள் தஞ்சாவூரில் அபயம் அடைக்கலம் ஆயின.

வித விதமான பெண்கள், கறுப்புகோபி இட்ட நெற்றியுடன் கன்னட ராயர்கள் நான்கு வீதிகளிலும் வளைய வந்தார்கள். விபரீதமான முகச் சாயல் கவர்ச்சிகள். ஒரு புறம் ஒதுங்கிய இடப்புற வலப்புறசீலை கொசுவத்தோடு கும்டா அணிந்த மராட்டியப் பெண்களின் ரகங்கள். எல்லோருக்கும் வேலை இல்லை. ஆனால் பசித்தது. உழைக்கத் தயார்தான். கூலியில்லை. வேலை தர ஆள் இல்லை. தஞ்சாவூர் கனத்து போயிற்று வழிப்பறி கொள்ளைகள்: திருட்டு, பிடித்துப் பறித்துப் போகும் கள்ளர் பெருமை- மறுபடியும் காவல் என்ற பெயரில் கவர்தல்- ஊர் ரெண்டு பட்ட நேரம் பெண்களால் மட்டுமே சுலபமாக வேனும் ஜெயிக்க முடிந்தது. இந்த வேளைகளிலும் காசீம் முகைத்தீன் ராவுத்தருக்கு வேலை இருந்தது. தஞ்சாவூரைச் சுற்றிலும் அறுபது புறா வீடுகள் இருந்தன. அவருக்கு எட்டு வயதில் பழகிய வேலை அது. பொறா ஷோக்கு கொடிகட்டி பறந்த காலம். ஷம்ஷாத் குழந்தையாய் இருந்த போதே காசீம் முகைத்தீன் ராவுத்தரைத் தெரியுமே. பெரிய வீட்டுக் குடும்பம். வானளாவிய வீடு அது துலுக்கத் தெரு முகப்பில் பள்ளிவாசல். அதன் பின்னால் பளிங்குக் கற்களால் ஆன மாளிகை காதர் மியான் கைக்காலில் உள்ள நிலம் பெரும் பகுதியும் காதர் முகைதீன் ராவுத்தரின் வாப்பா ரங்கூனில் இருந்து வட்டித்துக் கொண்டு வந்த செல்வம். ஏராளமான சொத்து நெய் மணம், கொழுப்பு உருகும் கறிவாடையும் குஞ்சாவி நெடியும் கவுச்சியும் இல்லாமல் அந்த வீடு இல்லை. பத்து மகள்களும் பத்து திசையில் சம்பாதிக்கப் போனார்கள். யார் யார் சிங்கப்பூரில் இருக்கிறார்கள் யார் ரங்கூனில் அரித்து கொண்டு வந்தார்கள் என்ற கணக்கு இல்லை. காலம் காசீம் முகைத்தீன் ராவுத்தரைப் பெற்று தந்த போது அவர் வாப்பா மய்யத்தாகிப் போனதும்தான் எல்லாம் புரிந்தது உலகுக்கு.

வந்த பணம் நிலைத்துவிட்டது. யாரையும் காணோம். அவர்கள் இந்தோனோஷியாவிலும் ரங்கூனிலும் தங்கி விட அவர்களை நிக்காவ் செய்த ஒரே காரணத்தால் வெந்து வெந்துகொண்டே அந்த வீட்டின் உள்ளே திரைச் சீலைகளுக்குள் இருண்டு போனார்கள். ஏராளமான பெண்கள் போனவர்களும் வந்தவர்களும் அந்நியர்களாகிப் போன விபரீதம் செய்தி ஏதும் இல்லை. பெரிய ஹாஜி மய்யத்தான பிறகு குடும்பம் ஏன் குப்புற விழுந்தது. யாராலும் சொல்ல முடியவில்லை.

அரண்மனைகளில் குமஸ்தாவாக வேலை செய்த இந்த காசீம் அரண்மனையிலேயே மாரடைத்து செத்ததும் அவர் மனைவி ரசியா கதறிக் கொண்டு ஓடியவள் திரும்பி வரவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

ஆலங்கட்டி மழை. அன்றும் கூட வெளியே வர பயந்த போது பர்தாவை உருவி எறிந்து விட்டு அத்தா போயிட்டீங்களா என்று கதறியபடி ரசியா எங்கே போனாள். ரசியாவைத் தேடிப் போன லாலுவும் சாஹியும் மீண்டும் காணோம். என்ன ஆச்சு? ஆலங்கட்டி மழையில் யார் வெளியே போவது? தலை மண்டை உடைந்து விடும். கோரமான பனிக்கட்டி மழை.

அந்த வீட்டு நிர்வாகம் அவன்மீது இருந்தது. சின்னக் காசீம் பயந்தான். இருந்த மூன்று ஆண்களில் காசீம் சின்னவர். அந்த வீட்டை மீதம் பிடித்து காத்திருந்தவர். தஞ்சாவூர் அரண்மனையில் ஏதேதோ நிகழ்ந்து கொண்டு மராட்டிய அரசர்கள் தலை துக்கி ஆடினர். ஏராளமான முஸ்லீம் சிப்பாய்கள் புதுப்புது உடைகளில், தஞ்சாவூர் சுற்றிலும் மாடுகள் காணாமல் போயின. யாரிடமும் சொல்ல முடியவில்லை. தினமும் கவாத்தும் உடம்பு பயிற்சியும் செய்யும் சேனை வீரர்கள் கோட்டைக்கு மேலும் வெளியேயும் ஆலங்கட்டி மழை சாரலிலும் பயிற்சி செய்தார்கள். காசீம் முகைத்தீன் ராவுத்தர் அப்போதும் எங்கோ போவார் எங்கோ வருவார். வீடு பற்றியும் யார் பற்றியும் அவருக்கு நினைவு இராது.

எப்போதாவது அந்த வீட்டு மாடிக்குப் போய் வானத்தில் இருந்து புறாக்களுடன் சமிக்ஞை பழக மேலே ப்ோகும் போதுதான் அந்த வீட்டுப் பெண் மக்கள் அவரை கண்டதும் பர்தாவை இழுத்து வீட்டுக்குள் ஒதுங்கும் போது தெரியும் முக்கோண முகங்களைக் கொண்டுதான் இவள் இன்னாள் என்று தெரியும். அடேயப்பா எத்தனை பெண்கள் எத்தனை பெரு மூச்சுகள். ஒன்றும் முடியாமல் அவரைத் தேடிவரும் பெண்களை எத்தனை முறை ஒதுக்கி புத்தி சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்த வீட்டில் இருள் இப்போதும் நிரந்தரம் ஆயிற்று. ஆலங்கட்டி மழையில் அந்த வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் பனிக்கட்டி பொறுக்கும் வேளைகளிலும் கூட மனைவிகளின் தாபத்தைத் தணிக்கக் கூட வீடு தங்க மாட்டார் காசீம் முகைத்தீன் ராவுத்தர்.

சாப்பிடும் காலத்தில் உட்கார்ந்து உண்ணும் போது ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளின் தழுவல் நேரும். காசீம் மெத்தைப் புறத்தே ஏறக்கூட இடம் தரமாட்டாள் ஜன்னத். காசீம் முகைத்தீன் ராவுத்தரின் ஐந்து பீவிகள் ஐந்து பேரும் தெற்கே கீழக்கரை பட்டணம் சார்ந்த பெரிய வியாபாரியின் நைஜாமின் பெண்கள். வீட்டுக்குள் வரும் போதெல்லாம் பீவிகளின் வியர்வை ஊறலில்தான் விழிப்பார்காசீம் ஜன்னத் அவரை விட்டு எழும்பவே மாட்டாள். காசீம் பாய் வந்ததும் மடக்கி அவர் கரங்களை வளைத்து கால்களுடன் பின்னிப் பின்னி கிறங்க அடிப்பாள். ஐந்து பேரிடமும் மாறி மாறி மிகக் கிரமமாக காதலைக் கொடுக்கும் அமைதி அவரிடம் இல்லாவிட்டாலும் எப்போதும் அவரைத் தழுவித் தழுவி நேரத்தை வீணாக்காமல் ஐந்து பீவிகளும் கிரமமாக - வாரி வாரி அவருக்கு-அவருக்கு மட்டும் வாரி வழங்கி ஒவ்வொருவரும் கொடுமையான வேகத்துடன் காதலித்தார்கள். தெய்வம் போன்ற பெண்கள் - சமைப்பதும் ஊட்டுவதும் காப்பதும் ஆன அபூர்வமான மூடுபடம் இட்ட பாயும் குதிரைகள் அவர்கள். காசிம் பாயை ஊட்டி ஊட்டி அவரது உயிரை வளர்த்தது ஆச்சர்யம். வெளி ஆண்கள் யாரையும் தெரியாது. அந்த வீட்டைவிட்டு இருண்ட மூலைகளும் அரவை எந்திரமும் உரலும் குந்தாணியும் திருவையும்தான் தெரியும் உள் வீட்டுக்குள் அங்கணத்தில் யாரும் வர முடியாத கோட்டை போன்ற வீடு. வீட்டு ஆண்களுடன் கூட அதிகம் பேச யாரும் இருப்பதில்லை. ஆலங்கட்டி மழை பொழியும் போது மட்டும் எல்லாம் பெண்களும் வேடிக்கை பார்க்க வாசல் குறட்டில் வந்து நிற்கும்போதும் யாரும் அவர்களைப் பார்க்க முடிவதில்லை. மூடி மூடியே ஒரு அற்புத வாழ்க்கை ஜன்னத் வந்து சொன்னாள். 'ஹோவன்ரா புள்ளையாண்டிருக்கிறா. மூணுமாசம் பாருங்க அத்தா அவ கூட புள்ளைப் பெறப் போறா' என்றாள் வெட்கப் புன்னகையுடன் அவர் மார்பில் அவளது கனிகள் கசங்க இறுக அணைத்தபடி "எனக்குத் தெரியாம எப்படி நடந்தது?" என்று முட்டி முட்டி அவரைத் திகைக்க அடித்தாள் ஜன்னத் ஆலங்கட்டி மழையின் இரைச்சலில் ஜன்னத்தின் ஆபாசமான திட்டுதல் புரியவில்லை. அவர் மேல் ஏறி இறுக்கியபடி "ஜொஹரா கிட்ட எப்ப போனியா? எப்ப எப்ப?" என்று கசக்கி வசக்கினாள் ஜன்னத்.

ஜன்னத் ராணி இளையராணி அவளைவிட மிகச்சின்ன பெண் ஜொஹரா அவளைச் சரியாகக் கூடப் பார்த்ததில்லை. காசீம்பாய் நிக்கா செய்து கொண்டு வந்ததிலிருந்து அவளெ ஜன்னத் போட்டு வைத்ததும் நல்ல பிள்ளையாகத்தான் இருந்தார் காசீம்.

மற்ற பீவிகளுக்குத் தடை சொல்ல ஜன்னத்தால் முடியாது. ஹாலினாவும் ஜன்னத்தும் நூரியும் அயர மாட்டார்கள். அது ஒரு பந்தயம். யார் ஜெயிப்பது? ஜெயித்தப்பெண்ணுக்குக் காசீம்பாய் தங்கம் வெட்டிக் கொடுத்தாக வேண்டும். அத்தனை சுகம் அது கேட்பவர்களுக்கு உடம்பும் முலையும் யோனியும் ஆன காமம் மாதிரி இருக்கும். புரியாத பந்தயம். ஐந்து பீவிகளும் முட்டாக்குக்குள் மூடி மூடியே பத்து பெண்களையும் மூன்று ஆண்களையும் பெற்று எடுத்தனர். காசீம்பாய் பெரிய குடும்பி.

இப்போதல்ெலாம் ஆலங்கட்டி மழை பெய்வதில்லை. தாது வருடப் பஞ்சம் கொடுரம் ஆயிற்று. பெரிய வீட்டிலும் அது உச்சமாய் எட்டியது. வீடு பற்றிய நினைவே இராது. காசீம் முகைத்தீன் ராவுத்தருக்கு ஜொஹ்ரா என்ற பெண்ணை நிக்கா செய்த அன்று பார்த்தது. எப்படி பண்ணினிங்க என்று சவுக்கை எடுத்துக் கொண்டு சொடுக்கினாள் ஜன்னத் ஜொஹ்ராவைக் கூப்பிட்டு வெள்ளிக் கம்பியால் பழுக்க வைத்து இழுத்தாள். எனக்குத் தெரியாம எப்படி அவுசாரி போனே என்று அடித்து துவைத்தாள்.

இரவு பத்து மணிக்கு மேல் ராவுத்தர் வீட்டுக்கு வந்தபோது மன்ஸில் இருண்டு கிடந்தது. நீண்ட அழுகுரல் ஜொஹ்ராவின் ஒற்றைக் கோட்டு அழுகுரல் அது ஜொஹ்ராதான் என்று இனம் காட்டும் தனி விக்கல் கதறலாய் எழுந்தபோதுதான் - காசீம் முகைத்தீன் ராவுத்தருக்கு நினைவு வந்தது. ஆமாம். அன்றும் ஆலங்கட்டி மழையின் இரவுதான். காடிகானாவில் உழைத்தும் அத்தர் மணம் தனி ஒரு விக்கல் கேட்டதும் "யாரு?" என்றார் காசீம்பாய். "உள்ற போகாதிய" என்ற முனகலுடன் உடைந்து கிடந்த காடி கோச் படிக்கட்டிலிருந்து 'உள்ற ஜன்னத் நாரி' என்று குசுகுசுத்ததுடன் இரண்டு அனல் பறக்கும் பிறைமுகம் அக்னி உதடுகளுடன் "அத்தா என்னெ உட்றாதிய உட்றாதிய" என்றபடி அவரை புனுகு ஜவ்வாது மணத்துடன் காரை வளையல்களும் தங்க வளையல்களும் நெருங்க, இரண்டு கரங்கள் சின்ன அழுகுரல் சிணுங்கலுடன் தழுவிக் கொண்டன. காசீம்பாய் இயக்கினார். ஆவேசம் பயம் மூச்சு முட்டும் ஆசை. ஜொஹ்ராவுக்கு ஆணின் முதல் ஸ்பரிசம் உள்ளிறங்கி கொடி வீசி மின்னலுடன் ஆலங்கட்டி மழை வேறு பனியுடன் கனத்த குளிர் நெருக்கியடிக்க, ஜோஹ்ரா என்று காதலுடன் பலியிடட்ாள் ஜன்னத் நாரி வர்றதுக்குள்ளே வர்றதுக்குள்ள என்று புலம்பிப் புலம்பி நடுங்கியபடி சூழ்ந்து பொங்கிய ஜொஹ்ராவின் வடிவ அழகை மெல்ல மெல்ல பீடிக் கங்கின் வெளிச்சத்தில் பார்த்து அசந்து போனார் காசீம். அல்லா. படச்சவனே என்ற ஆனந்தம் இது. இது அசிங்கம்ங்கறாளே ஜன்னத்? இது கேவலம் பெண்ணாசை துனியாவுல தப்புன்னு அல்லா சொல்லவே இல்லெ, அப்பா இத்தினி நாளு ஜொஹ்ராவுக்குத் தர வேண்டிய சொகத்தைத் தராதது எத்தனை பெரிய தப்பு எல்லாருக்கும் எத்தனை பணிஞ்சி மாடு மாதிரி இந்த வீட்டுக்கு எத்தனி வருஷமா உழைக்கிற ஜொஹ்ரா இந்த நினைப்பு வந்ததும் தாமரை இதழ்களைக் கடித்துச் சுவைத்து மார்புகளில் குடியேறி இரண்டறப் புகுந்தார் காசிம்பாய். ஜொஹ்ரா மந்திரம் பூண்டு தங்க முலாம்பூசிய உடம்பை அவருக்குள் நடுங்கியபடி ஜன்னத்தின் பயத்திலும் அவரை வாரித் தழுவி சென்றாள்.

 'ஜோஹ்ரா ஜோஹ்ரா எங்கடி போனே அப்ப பிடிச்சு காணுமே" என்ற கூக்குரல் கேட்டுக் கொண்டே இருக்க அந்தப் பழைய கோடாவண்டியின் இருண்ட பின்மெத்தையில் கோச்சு கதவுகள் இறுக அடைத்துக் கொள்ள ஜொஹ்ராவின் ஆழமான குகையுள் கனலுடன் காசீம்பாய் புது மனுஷனாய் ஆதம் நபியும் ஹவ்வாவும் ஆகிப் போனார்கள். முழு நிர்வாணம்.

ஆலங்கட்டி மழை ஜோவென இரைந்து பெய்யலில் அதற்குப் பின் மழையற்றுப் போனது. மழை போலவே ஜொஹ்ராவையும் காண முடிவதேயில்லை. இதெல்லாம் காசீம்பாய்க்கு மறந்தாபோகும். ஒளித்துக் கொண்டார். ஜன்னத்துக்குச் சந்தேகம் வந்தால் போச்சு எப்ப நடந்ததுடி எனக்குத் தெரியாமை, எவங்கூட படுத்தே என்று ஆபாசமாய் திட்டி சூடு வைத்தாள் ஜன்னத், அவளைப் பொறுத்தவரை ஜொஹ்ரா ஒரு அடிமை வேலைக்கு நிற்கிற கூலி. ஜன்னத் போலவே அந்த வீட்டில் ஆண் வாசனைக்குக் காத்திருக்கும் அற்புதமான கற்புக்கரசிகளான பன்னிரெண்டு பெண்கள் அந்த வீட்டில் புழுங்கிக் கிடந்தது யாருக்குத் தெரியும். கரணம் தப்பினால் மரணம் நேரும். எல்லா ஆம்பிளைகளும் சபரி போயிருந்ததால் சாப்பிடாமல் துங்காமல் ஒதாமல் தூங்காமல் கன்னிகாக்கும் அந்த மகா உத்தமமான பெண்கள் தெய்வமல்லாமல் வேறு யாராய் விளங்க முடியும், ஆனால் இப்போதெல்லாம் ஆலங்கட்டி மழை பெய்வதில்லை. ஏனோ மழையும் அற்றுப் போய் பஞ்சமும் வந்தது. வீடும் இருண்டது. கொள்ளை நோய் வந்தபோது அந்த வீட்டு பெண்கள் நாலுபேர் பலியானார்கள். பஞ்சத்தோடு கொள்ளை நோய் வந்தபோது - பிணங்கள் சாதாரணங்கள் ஆயின.

இன்னும் ஒரு தடவை ஜோஹ்ராவைப் பார்க்க ஆசைதான். அதற்கு முன்னதாகவே அவள் கர்ப்பம் ஆகிவிட்டாள். எப்படி என்று தெரியவில்லையாமே. வெள்ளிக்கம்பியைப் பழுக்க வைத்து இழுத்தும் யார் என்று சொல்ல மறுத்தாள் ஜொஹ்ரா, கதறக் கதற அவளை அடித்து நொறுக்கி அள்ளினாள் ஜன்னத். 'யாருடி பண்ணா? யாரு செஞ்சா? யாருகிட்ட படுத்தே? ஜன்னத் மிருகம் குதறியது. திடீரென்று உள்ளே வந்தார் காசீம். வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஜன்னத்தைத் தன் நீண்ட கரங்களில் இழுத்து தடுத்துப் பிடித்துநாலு பீவிகளும் கதறதுக்கிப் போட்டு மிதித்தபடியே "நாந்தாண்டி காரணம். நாந்தான் செஞ்சேன். ஏ. பெண்டாட்டிதான? எம் பீவிதானே அவளும். அவ வயித்துப் புள்ள என்னுது. பேசாதடி மூச்சு உடாதெ" என்று அறைந்தார் காசீம்.

எல்லாரும் நிலை குத்தி நின்று போனார்கள்.

தனி விக்கல் ஒன்று ஜொஹ்ராவிடம் உடன் கிளம்பியபோது அங்கே அவளை அள்ளி எடுத்துக் கொண்டு தன்னறைக்குள் கொண்டு போய் மறைந்து கொண்டார். அவள் மார்புச் சேலையில் புதைந்து போனார். விக்கல் தனியாக வீச அவருடன் கலந்து போனாள் ஜொஹ்ரா. ஆலங்கட்டி மழை நின்றது போலவே அவரது ஆசையும் பாசமும் நிலைத்து நின்றது. அப்புறம் ஜொஹ்ராதான் ராணி.

ஜன்னத் அத்துடன் படுத்த படுக்கை ஆகிப் போனாள். அவளால் இதனை சகிக்க முடியவில்லை. நூரியிடம் இருந்த நிர்வாகத்தையும் பயந்து போய் அவர்களாகவே ஜொஹ்ராவிடம் கொடுத்துவிட்டதும் ஜன்னத்துக்கு எல்லாம் மாறியது போலாயிற்று. கொடுரமான வைசூரி வந்து ஊரே கலகலத்து கொட்ட ஆரம்பித்தபோது பத்து சாவு இந்த வீட்டிலும். பெரிய தனக்காரர் வீடுகளில் கூட பயங்கரமாய் கோட்டை மேடு முழுவதும் வைசூரி சாவு நேர்ந்தது. அப்போதுதான் பெரியவீட்டு சின்னக் காசீம் அரண்மனையில் மாரடைப்பில் பொட்டென்று முடிந்துபோனார். அந்த வீட்டுப் படி இறங்கி அறியாத இரண்டு பெண்கள். அவரது பீபிகள் ரசியா, மணி ரெண்டு பேரும் முதல் முறையாக வீட்டுப் படி தாண்டி கதறியபடியே ஓடினார்கள். திரும்ப வரவில்லை. யார் போய் தேடுவது? வீட்டில் ஆம்பளை என்று இருந்தவர்கள் மூவர் மற்ற பதினைந்து பேரில் சபர் போனவர்கள் இரங்கூனுக்கும் சிங்கப்பூருக்கும் போனவர்கள் திரும்பக் காணோம். அபரிதமான சம்பாத்தியம். வீட்டு ஆம்புளைகளில் காசீம்பாய் தவிர சின்னக் காசீம் அரண்மனை உத்யோகம். மாரிலே அத்தர் கழுத்திலே சந்தனம் என்று இருந்தவர். அடுத்தது ரசூல்பாய் ஒருவர். மூன்று பேருமே வீட்டை விட்டு வெளியேறினால் ராவுக்குப் பத்து மணிக்கு மேல்தான் எட்டிப் பார்ப்பார்கள். ஆண்மக்கள் இல்லாத குறைந்து தேய்ந்த வீடாச்சு பெண்களைக் காணும். வீட்டுக் குமர்கள் புலம்பினர். வயதான கிழவிகள் வெளியே வர அஞ்சினர். ஊர் பஞ்சத்திலும் பசியிலும் ரெண்டு பட்டுக் கிடந்தது. பயம் எல்லோருக்கும். சரபோஜி மகாராசா காலத்தில் தழைச்ச குடும்பம் இப்ப இருண்டு கிடக்கு கோட்டைக்கு வெளியே நாடார்கள் மண்டி கடை திறந்து கீழ வாசல் கடை தெருவே பெரிதாயிற்று கரத்தட்டாங்குடி மண்டித் தெருவும் எண்ணை வியாபாரமும் கீழ வாசலிலும் ஆரம்பித்தது ஆச்சர்யம்.

எங்கு பார்த்தாலும் மனிதர்கள். இவ்வளவு பேர் தஞ்சாவூரில் ஏது? எப்படி வந்தார்கள்? மராட்டியர்களோடு மராட்டியராவகளும் மல்லுகச் செட்டிகளும் அரண்மனையில் வந்து பல்கி விட்டார்கள். கவாத்து செய்யும் சிப்பாய்களிடையே மல்யுத்தப் புரட்டல்களும் மல்கம்பம் ஏறுதலும் பாய்தலும் தஞ்சாவூரை வியப்பில் ஆழ்த்திய போது எதிலும் எந்த வியப்பும் ஏறாத ஆத்மா ஒன்று உண்டென்றால் அது காசீம் முகைத்தீன் ராவுத்தர்தான். வீட்டில் ஏக களேபரமாய் இருந்தது. ரசியாவைக் காணும். போனவன் வர்லெ, கூடவே போன மஹிம்மும் திரும்பி வரவே இல்லையாமே ஏன்?

காசீம் பாய் இருளில் வீடு வந்து சேர்ந்த போது பெண்களின் கதறல் பிலாக்கணம்-

"ரசியாவெக் காணும் மஹிம்மும் வர்லெ' அழுகை ஆச்சர்யமான பயம் எல்லாருக்குமே. பெண்கள் வெளியதெருவில போகக் கூடாதுன்னு தெரியாது என்று கத்தி விட்டு காசீம்பாய் கையில் தீப்பந்தத்துடன் புறப்பட்டார். பத்து முஸ்லீம் இளைஞர்களும் கூடப் புறப்பட்டார்கள் துலுக்கத் தெருவிலிருந்து. அதே நேரத்தில் பெரிய வீட்டு பின் கட்டில் சமையல் அறைக்கு அடுத்த உக்கிராணத்தில் ஜன்னத் பீவி ஒரு பெண் குழந்தையும் ஆண் பிள்ளெயாக ஐந்து நிமிடத்தில் இரண்டாவதுமாக பெற்றெடுத்தாள். இப்போதெல்லாம் ஜன்னத் நடமாட்டம் ஓய்ந்து விட்டது. பொறா ஷோக்குக்கு போனாகாசீம்பாய் வர்றதே எப்ப என்று சொல்லவே முடியாது. அடுத்த அதே மணி நேரத்தில் ஜொஹ்ராவும் பிள்ளைகள் இரண்டு போட்டு பந்தயத்தில் ஜெயித்தாள். அவளுக்குள் ரெண்டும் பெண்கள்தான். இரண்டு வெளியே வந்ததும் ஆச்சர்யம். இன்னும் ஒன்று ஆண் - மூன்று பிள்ளைகள் காசீம்பாய் அயர்ந்து போக.

ஜன்னத் உள்ளே அழுது கொண்டே இருந்தாள். பொறுக்க முடியவில்லை. மனமும் இல்லை. இனி என்ன செய்ய?

"ஒரே உந்தலில் மூணு புள்ள பெத்திருக்காளே ராச்சசி. தூய்மையான நஞ்சின் வாடை பிள்ளைக் கவுச்சி. ரசியாவைத் தேடிப் போனவர்கள் பிள்ளை பிறந்த சேதி கேட்டு வந்து வியந்தார்கள். ஜோஹ்ரா ராணியாகத்தான் கிடந்தாள். அதிகாரம் கொடிகட்டியது. ஜன்னத் ஊமையாகக் கிடந்தாள். காசீம் முகைத்தீன் ராவுத்தரை மட்டும் காணோம். ரசியா எங்கே? எல்லாரும் மெளனம் ஆகிப் போனார்கள். பொம்பள வெளியே போனா அவ்வளவுதான் என்று முனகினார்கள். போய் வந்த இளைஞர்கள் கொதித்தனர். ரெண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்றார்கள். விஷயம் இதுதான். ரசியா, மாஹிம், லாலு மூணு பெண்களையும் கீழராஜா வீதியில் இருந்த மங்கள விலாசம் அரண்மனையில் பிடித்துக் கொண்டு போய் அடைத்து விட்டார்களாம். பெண்களைத் திரியவிட மாட்டார்கள். திரிந்தால் யார் பிடித்து எடுக்கிறார்களோ அவர்களுக்கு அட அல்லா. இது என்ன ஞாயம். ஆனால் யாரும் மூச்சு விடவில்லை. சின்ன காசீம் உடல் மய்யத்துக்குக் கொண்டு போகப் பட்டது. எல்லாரும் சாப்பிட்ட பின்னர் மாடிக்கு ஏறிப் போகும் காசிம் முகைத்தீன் ராவுத்தரை அந்த ஒரே ஆம்பளையைத் தேடிப் புறப்பட்டது ஒரு பெண் உருவம், இரவு வெகு நேரம் ஆகி விட்டிருந்தது. மாடியில் இருந்த பொறாக்கூண்டில் இருந்த புறாக்கள் அவர் சருகல் கேட்டதும் உம் உம் என்று குலவை ஆடின. ஒவ்வொரு புறாக்கூடாக மாடம் மாடமாகப் பிடித்துப் பார்த்து அவைகளுடன் பேசிக்கொண்டிருந்தார் காசீம்பாய்.

விசாலமான மாடி மொட்டை திடல் அந்த இடம்.

அங்கே ஆயிரம் ஆயிரம் புறாக்களுக்குக் குறைவில்லாமல் வளர்த்து வந்தார். அவருக்குப் பிழைப்பே புறாக்கள் உலகம். அவருக்கு ஒரு புறாக்கூண்டு. புறாவின் பாஷை அவருக்குத் தெரியும். எட்டு வயதில் அவரிடம் சையத் பாவா என்ற மக்கீர் இரண்டு புறாக்களைக் கொடுத்து இதை வளர்த்துவா என்றதிலிருந்து புறாக்களின் ஸ்நேகம் புறாக்களின் துனியா அவருக்கு மிகச் சுலபமாக அறிமுகம் ஆனது. புறாக்களில்தான் எத்தனை வகை? நமக்கு எல்லாம் ஒன்றேதான். காசீம்பாய்க்கு அத்தனையும் இனம் பிரிக்க முடியும். தனித்தனியே கூப்பிட முடியும். எந்தப் புறாவையும் ஐந்து நிமிடத்தில் தன் தோளில் உட்கார வைக்க முடியும் உஹிசம் மஹலம் என்று ஒரு விதமாக பாஷையில் அவைகளுடன் பேச ஆரம்பித்தால் மணிக்கணக்காக புறாக்கள் அவரைச் சுற்றிக் கொண்டே இருக்கும். சொன்னபடி கேட்கும். சொன்ன இடத்தில் உட்காரும் அரபி இல்லாத தமிழும் அல்லாத ஏதோ ஒரு விசேச சங்கேதத்தை அவர் புறாக்களிடமிருந்து கற்றிருந்தார். தஞ்சாவூரில் அரண்மனையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியில் அரண்மனை மேல் மாடியில் பத்தாயிரம் புறாக்களை நிர்வாகம் செய்தார். ரகுநாத நாயக்கனின் பேரன் மன்னாருக்கும் அவர் புறாஷோக்கின் குரு.

இந்த பொறா ஷோக்கு என்றால் என்ன? பணக்கார விளையாட்டு. கோழிச்சண்டை போல ஆட்டுக்கிடாய் மோதல் போல, மாடுபிடி போல மஞ்சுவிரட்டு மாதிரி. ஆனால் அவற்றெ விட மிக நுண்மையான அபூர்வமான விளையாட்டு ஆந்திராவிலிருந்து கம்மவாரி நாயக்கர்கள் தஞ்சாவூருக்குக் கொண்டு வந்த பல விருது பெற்ற விளையாட்டுகளுள் இதுவும் ஒன்று புறா பந்தயம் என்றும் சொல்வது உண்டு. ராஜாவுக்குச் சமதையாக விளையாடுவதற்கு அந்தப் புறாக்களுக்கு மட்டுமல்ல அரசவை பிரதானிகள், ராஜ நிர்வாகிகள், அரசனின் மந்திரிகள் ஆகியோரும் பந்தய புறா வளர்ப்பிலும் அவைகளின் ஷோக்கு கூட்டுவதிலும் ஈடுபடுவார்கள். புறாக்கள் ஒரு அற்புதமான உயிரினம். ஈரறிவு உயிரினமாக பொதுவாக அதைப்பற்றி மனிதன் தவறாக கணக்கிட்டிருக்கிறான். அந்த ஈரறிவிலேயே ஏழாவது அறிவுவரை நீட்டிக் கொள்ளும் ஷருதா பிறவி புறா. அது காசிமுக்கு அத்துப்படி இரவுபகலாக புறாக்களுடனேயே அவரது ஜீவனம் கழிந்தது. சோறு வேண்டாம் துக்கம் வேண்டாம் மனைவி வேண்டாம் குடும்பம் வேண்டாம். புறாக்கள் போதும் அவருக்கு. அது என்னவோ அவரைக் கண்டதும் புறாக்கள் கும்மளி இட்டுக் கொண்டு அவரைச் சுற்றிச் சுற்றி பறப்பதும் அவரது தோள். தலை, உடல் முழுவதும், புறாக்கள் உட்காரும் ஆச்சரியமான காட்சி எங்கும் கிடைக்காது. வாயில் புகையும் பீடியுடன் ஒவ்வொரு புறாவாகப் பிடித்து தட்டிக் கொடுத்து வாய் நிறைய தானியத்தைத் தன் எச்சிலோடு சேர்த்து ஊட்டும் அவரது வாயும் புறாவின் அலகும் ஒன்றாகி விடும். நீளமாக ஊதி விடும் அந்த உணவு சில நேரம் அவருக்கும் உணவாகி விடும். சுவைத்து சுவைத்து தான் உண்டதை கக்கி கக்கி புறாக்களுக்கு ஊதி விட்டுத் தரும் ஊட்டு முறை அந்தப் புறாக்களுக்கு இனிக்கும் போல, ஒரே நேரத்தில் பறந்து பறந்து அவர் வாயிலிருந்து மென்று நைவான தானிய உணவை அவருக்கு வலிக்காமல் அள்ளி உண்ணுகிற காட்சி பெரிய வீட்டு பெண்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. தேவலோகத்தில் இருந்து வந்த காப்ரியல் மலக்கு மாதிரி அவர் அந்தப் புறாக்களின் நாயகனாக அவற்றுடன் உறவாடி அவருக்கு வேறு நினைவே அற்றுப்போனது. யாருடனும் பேசவே மாட்டார். இரவு பகல் என்று தஞ்சாவூர் அவர் தெருவில் அலைவது எல்லாம் புறாக்களுக்காகத்தான். அரண்மனைக்குள் நாயக்க மன்னர்கள் இவருக்குத் தனி உரிமை கொடுத்திருந்தனர். அரண்மனைக்குள் மட்டும் பத்து புறா வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தனர். சின்னச் சின்ன மாடங்களுடன், எப்போது வேண்டுமானாலும் புறா வந்து போகக்கூடிய தானாகவே திறந்து மூடிக் கொள்ளக் கூடிய காக்காப் பொன் கதவுகள் சுழலும் அற்புதமான கூடுகள். மனிதனை விட அற்புதமாக வாழும் புறாக்கள். திருவையாற்றின் கரையில் ஆற்றங்கரையிலும் என்றைக்கும் விளங்கும் புறாவீடு உண்டு. குலமங்கலம் போகும் ஆற்றோரப்பாதையில் புறாக்கள் வந்தடையும் தனிக் கூண்டுகளை அரசர்கள் கட்டித் தந்தார்கள். பல தேசங்களில் இருந்து குறிப்பாகப் பாரசீகத்திலிருந்தும் அரேபியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டன. வந்ததும் அவற்றுடன் பேசிப் பழக்கி அவைகளின் பாஷையையும் தனதாக்கிக் கொள்ளும் ஆச்சரியமான அல்லாவின் மனிதன் காசீம். அந்தப் புறாக்களும் அவரை மீறி எதுவும் செய்ய முடியாத அன்பில் பிணையுண்டு நின்றது. மாரியம்மன் கோவில் அருகே சமுத்திரத்தின் கரையில் நான்கு புறா வீடுகளை சரபோஜி கட்டினார். இப்போது தஞ்சாவூரில் உள்ள நவதர்க்காவிலும் காசீம் கொண்டு வந்து சேர்த்த புறாக்கள் மேய்ந்து அந்தப் பள்ளி வாசல்களைத் தெய்வீகம் ஆக்கி கொண்டிருந்தன. புறாக்கள் இல்லாமல் நபிகள் நாயகரும் இருந்திருக்க மாட்டார் என்று நம்பினார் காசீம். அவர் புறாக்கள் வளர்ப்பதில் மட்டுமல்ல. புறாஷோக்கு என்பது வேறு. அந்தக்காலத்தில் புறாப் பந்தயம் என்பது வேறு புறாக்களை வளர்த்து செல்வந்தர்கள் ராஜாக்கள் அவற்றை மாடு போன்ற பந்தயத்தில் இறக்கி விளையாடினார்கள். இதில் ஏராளமான பணம் பந்தயமாகக் கட்டப்பட்டது. எந்தப் புறா சொன்ன இடத்தில் சொன்ன விதம் சேர்ந்து உங்களுக்கு ஏற்றபடி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேவைப்பட்ட செய்தியோடு வெற்றிகரமாக முதலில் வருகிறதோ இது ஒரு வகை இன்னொரு பந்தயம் குரூரமானது. போர் புறாக்கள் இவை எதிரி புறாக்களை விரட்டிச் சென்று அடித்து வீழ்த்தும் பயங்கரமான நம்ப முடியாததாகும். இவை மாமிசம் உண்ணும் புறாக்கள். இவைகள் மிகக் கடுமையானபயிற்சியும் போர் வில்லங்கமும் வீரியமும் எந்தக் காலத்திலும் காண முடியாதது. ராவுத்தர் போர் புறாக்களைக் கத்தி காலில் கட்டி வாயில் மருந்து கொடுத்து சாராயம் கொடுத்து வீரியம் ஊட்டி போருக்கு அனுப்பவதில் வித்தகர். அதற்கென்று தனிக் கூடுகளும் மாடங்களும் வாழ்க்கை முறையும் உண்டு. ஒரு போர் புறாவின் விலை பதினாயிரம் வராகன். கிழக்கு சைபீரியாவில் இருந்து வரும் சாதுவான புறாக்கள் அவை. அவற்றை உருமாற்றி வீர சாகசத்திற்கு இளக்கி எடுப்பது ஆச்சரியமான பயிற்சி. அவருக்கு எந்த நேரமும் தலைக்குள்ளே புறாக்கள் சிறகடித்துக் கொண்டே இருக்கும். அவர் அரச குடும்பத்துக்கு மிக முக்கிய உறை வாள். மாலிக்காபூர் திண்டுக்கல்லில் இருந்து தஞ்சாவூருக்குப் படை எடுத்து சென்ற போது படையின் ரகசியங்களைப் புறாவின் மூலம் கண்டு பிடித்து கொடுத்தவர். முஸ்லீம்கள் பலர் தங்கியபோது பல தமிழர்கள் முஸ்லிம்களாக ஆனார்கள். நீல நிறக் கண்கள் உள்ள பட்டாணிப் பெண்கள் கோவை உதடுகள் கொண்ட ராவுத்தர்களுடன் கலந்தபோது தமிழ்ப் பெண்கள் பலர் விசுவாசிகள் ஆனார்கள். தாலியை விட்டு கருகமணி கட்டிக்கொண்டார்கள். ராவுத்தர் அப்போதும் புறாவிட்டுக் கொண்டுதான் இருந்தார். முஸ்லிம்கள் பலர் ஹஜ் போய்க் கொண்டிருந்தபோது காசீம் புனிதமான புறாக்களுடன் மல்லடித்துக் கொண்டிருந்தார். வானத்தைப் பார்க்கும் இவரது முகம் அரை நூற்றாண்டு. காலமாக புறாக்களையே சுவாசித்து வந்தது. காசிம்பாய் ஒரு ஹராமி என்று முஸ்லிம்கள் சொன்னார்கள். காஷ்மீர் என்று மெளல்வி சொன்னார். ஆனால் புறாக்கள் அவருக்குக் கற்றுத் தந்தன. ரசூல் சல்லவரிக் குரல் வானமெங்கும் புறாக்கள் போலவும் பரவி கும்மிட்டு ஒலி சூழ்ந்தது. இது தேவ துஷணம் போல தோன்றியது. ஆனால் ஐம்பது ஆண்டுகளாக மனிதர்களுடன் பழகுவதை விட புறாக்களைப் புரிந்து கொள்வதில் நேரம் செலுத்தி பழகி வந்த தெய்வீக மனிதரின் குரல் கனவு போன்ற அவரது கண்களும் சிவந்த உதடுகளும் இளமை மாறாத ஆண்மை புன்னகையும் நெடிய ஆறடி உயரமும் அனல் போன்று சூடு பிடிக்கும் அவரது ரத்தமும் எல்லாமே புறாக்களால் போவிக்கப் பட்டவை. அவரது குரல் கேட்டு வானத்தில் பறக்கும் புறாக்கள் விர்றென்று திரும்பி அவரை நோக்கி பாய்ந்து வரும் விந்தை அவரது ரகசியம் இந்தப் புறாக்களுக்கு மட்டும் தெரியும் அடுத்து அவரது ஆணை எதையும் உடனடியாக நிறைவேற்றி விட்டுத்தான் அவை அடங்கும். நினைத்தால் அவரது எதிரியின் கண்களை நிமிடத்தில் குருடாக்கும். அந்த பாஷை அத்தனை வலுவானது. ஆணை அத்தனை அன்பு வடிவவானது. மனிதன் மீறி விடுவான் புறா அவரது குரலுக்கு உயிர் கொடுக்கும் துணிவும் தியாக வீரமும் அந்த ஈரறிவு உயிருக்கு இருந்தது வியப்பல்ல.

ஆற்றோரமாக நடந்து கொண்டிருந்தார் காசீம் தஞ்சாவூரில் இருந்து பிரியும் வெள்ளாற்றுக் கரையில் வானத்தைப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார். துரத்தில் ஆள் அரவம் அற்ற சோலை. இவை கொடி தழைகளுக்கு நடுவில் பெரும்பாலும் இடிந்த மினார் ஒன்று தெரிந்தது. அதில் ஏகப்பட்ட மாடங்கள். ஏராளமான குரங்குகளும் மணிப் புறாக்களும். காசிம்பாய் வெற்றிலைக் கொடிகளை நீக்கியபடி அந்த இடிந்த பள்ளிவாசலை லட்சியமாக்கி மரங்களிடையே நடந்தார். பழைய மன்னர் காலத்து பள்ளிவாசல். பக்கத்திலேயே புராதனமான கபர். பெரிய நீர்த்தடாகம் காடாக வளர்ந்து கிடக்கும் தாமரை இலைகள். நீர்ப்பரப்பில் மேலே தலை துக்கி காற்றில் கவிந்தாடும் பெரிய சிவப்புத் தாமரைகள். ஆச்சர்யமான அழகு. நொய் என்ற தேனீக்கள் தாமரைப் பூக்களில் இரைச்சல், "ஹவ்வோ லக்கு உமா' என்று அவர் கூவினார். இரண்டாம் முறை அவர் கூவவில்லை. அவ்வளவுதான். நான்கு மினார்களின் மாடங்களில் இருந்த புறாக்கள் கங்கங்கங் என்று பெரும் இரைச்சல் வீசியபடியே அவரை நோக்கிப் பறந்து வந்து அவரது தோள்களிலும் ஜிப்பாவின்மீதும் தொப்பியின் மீதும் பச்சை உருமால் மீதும் அடுக்கடுக்காக வந்து பயமின்றி அமர்ந்த புறாக்களின் மணம் அவற்றின் இறகுகளின் மினுமினுப்பு. அவற்றின் ஓயாத பேச்சு. காசீம் மணிப்புறாக்களில் மூன்றினைத் தேர்ந்தெடுத்துப் பிடித்தார். சிறகடித்தபடி சம்மதத்துடன் அவரது தோள்களில் அமர்ந்தன.

மற்ற புறாக்களுக்கு ஊதிவிட்டார். சில புறாக்களைச் சொடுக்கிவிட்டார். சிலவற்றை இறகு பிரித்து வானத்தில் விட்டார். சந்தோஷமாக எல்லாப் புறாக்களும் பறந்து சென்றன.

தோளில் இருந்து மூன்று மணிப்புறாக்களோடு நடந்து வெளியே வந்தபோது பள்ளிவாசல் உள்ளேயிருந்து மெலிந்த நெடிய உருவம் ஒன்று அவரை நோக்கி வந்தபடியே பேசினார் ஆலங்கீர் மெளல்விசாஹிப்,

'ஊரு ரெண்டுபட்டு கெடக்கே பாபா. இஞ்ச பொறா புடிக்க ஏன் வந்திய? துனியா ரொம்ப கெட்டு போச்சி. ஜாக்ரதையா போங்க ஆத்தங்கரையெல்லாம் பொம்பளை கொமர்களோட பொணம் கெடக்கு யார் என்ன ஏதுன்னு யாரும் கேக்க முடியலை நாயக்கர் காலமில்ல இது. முஸ்லிம்களுக்கு காலமில்ல தாதா. உங்களுக்கு இன்னும் பொறா ஷோக்கு உடமாட்டேங்குது. கவனமா போங்க" என்றார் ஆலம் பக்கீர்.

லேசாகச் சிரித்தபடி புறாக்களை ஒவ்வொன்றாக 'ஜாவ்ரே ஜாவ்லாகூ! நான் வர்றவரைக்கும் அரண்மனைப் பள்ளிவாசல் மினார்ல இருங்க. பின்னாலேயே வந்திர்றேன்" என்றபடியே பறக்கவிட்டார்.

'ஆலம் சாஹிப் படச்சவன் இருக்கும்போது என்ன பயம்? அவன் எங்கும் இருக்கான் பாய். அவனை மீறி எதுவும் இல்ல. யாரை நம்பி நம்ம அப்பன் பாட்டன்மார் இஞ்ச வந்தாங்க அல்லா அவுகளை தஞ்சாவூர்ல பாலைவனத்துல இருந்து எந்த தைரியத்துல கொண்டாந்து சேர்த்தாராம். தஞ்சாவூருக்கு வர முந்தி என் பாட்டன் பூட்டான்மார் அரேபியாவில் இருந்து மேனாவிலேயும் பல்லக்குலேயும் வந்தாக நடந்து நடந்து நடந்தே பாலைவனத்துல இருந்து ஆப்கானிஸ்தான் பலூஜிஸ்தான் ராஜஸ்தான் எல்லாம் நடந்து நடந்து நடக்கும்போதே பலுகி பெருகி நடக்கும்போது படிச்சி, நடக்கும்போதே வேட்டையாடி சாப்பிட்டு, நடக்கும்போதே தனியா என்னென்ன படிச்சிக்கிட்டு நடக்கும்போதே மருந்து செடியெல்லாம் பறிச்சி வைத்தியம் யுனானி எல்லாம் செஞ்சுகிட்டு நடந்துகிட்டே சண்டைபோட்டு சேந்தவங்களையெல்லாம் முஸ்லீம் ஆக்கிகிட்டு யாருகிட்டயும் வேத்து வாசனை நேராம நேராம கூட்டம் கூட்டமா புள்ளை குமர்களைப் பெத்தெடுத்து திடீர்னு இஞ்சபாளையம் எறங்கினாங்களே. ஆரெக் கேட்டு ஆரு சொன்னா? முன்னூறு வருஷமா இஞ்ச தொழுகையும் லவ்வாத்தும் து ஆவும் செய்யலியா? பொழுது விடியலியா? சாஹிபு, பைத்தியம் மாதிரி பயப்படாதிக எந்தக் காலமும் நிலையானது இல்ல சாஹிப் எவனும் நிக்கிறதில்லெ, ரத்தம் தெளிவா இருக்கிற வரைக்குதான் எல்லாம். ரத்தம் கலங்கினால் - கலந்து கொட்ட வேண்டியதுதான். துனியாவுல இதெல்லாம் பாத்து பயப்பட என்ன இருக்கு ஆலம் சாஹிப் ஒங்க பத்து கொமருகளையும் காவு கொடுக்கலியா? படச்ச அல்லா இருக்கான் என்னைக்கும் இதெல்லாம் இப்படியேதான் இருக்கும். கொஞ்சநாள் ஆட்டம் அப்றம் மர்கயா யாரு எப்படி போனா என்ன? நீங்க பாக்காததா?" என்றார் காசீம்.

அந்தப் பள்ளிவாசலுக்குப் புறாவைத் தவிர வேறு யார் வருவான்கள் காசீம்பாய் தவிர வெள்ளாறு சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது அவர் பேச்சு போல. ஆலங்கீர்சாஹிப் கீழே குனிந்தபடி சற்று நேரம் யோசித்தார். அதே நேரத்தில் திமுதிமுவென்று யாரோ சோலை இருளில் ஓடி வருவதும் துரத்தி வருவதும் புரிந்தது. கூச்சல் 'பிடிபிடி அவளை விடாதே" என்ற சப்த கோலங்கள்.

ஆம் நெற்றியில் நீண்ட கறுப்பு கோபி நாமம் இட்ட கன்னடச் சாயல் பொங்கும் இளம் பெண் ஒருத்தி, கழுத்தில் கறுப்பும் மஞ்சளும் ஆன தந்தமாலையும் வைரச் சங்கிலியும் தொங்கின. தொடைகள் துலாம்பரமாகத் தெரிய சுங்குவிட்டு பின் கொசுவம் வைத்து கட்டிய புடவைக்கட்டு பட்டுச் சீலையின் மினுமினுப்புமாக அபாரமான அழகு. பின்னால் குதிரையில் அரண்மனை மராட்டிய வீரர்கள் பதினாறு பேர் கையில் குந்தம் குலுங்கும் பித்தளை விலங்கு இமைக்கும் நேரத்தில், 'மாப் கரோஜி. என்னைக் காப்பாத்துங்க என்னை காப்பாத்துகங்க டேரோ என்றாள்.

அந்தச் சிறுமி வெண்மையான செழுமையான அவளது துடைகளும் மேலே சொக்காப் போடாத தோள்களும் அற்புதமான நயம் பேசியது. அந்த இருளிலும் ஒளி, ஒரே நிமிட்ம்தான். ஆலம்சாய்பு அவள் கையைப் பிடித்து காசீமிடம் ஒப்படைத்து, "உள்ற போங்க நான் பாத்துக்கிறேன். காப்பாத்து" என்றார்.

அதற்குள் பள்ளிவாசல் தோட்டத்துக்குள் பதினாறு குதிரைகளுடன் ஏகப்பட்ட சத்தம் காலாட்கள் வேறு. தாடிகள், கூரான மீசைகள் தொப்பிகள். ஒருவன், "கியாபாத் அவரத் கஹாம் ஹை? அவள் எங்கே' வந்தவன் உள்ளே போனான்.

பள்ளிவாசலில் புறாக்களின் கும்மல் சத்தம் மட்டும் மினார்களில் லேசான சஞ்சலத்துடன் சிறகடிப்புடன் கேட்டது. ஆபத்து அவைகளுக்குப் புரிந்து விட்டிருந்தது.

சிப்பாய்கள் பள்ளி வாசல் உள்ளேயும் வெளியேயும் மினார்களிலும் சுற்றிலும் உள்ள சோலையிலும் தேடி அலசியும் பயனில்லை. யாரையும் காணோம்.

காசீம் ராவுத்தர் புறாவைப் போல பறந்தது என்ன மறிமாயமோ இமைக்கும் நேரத்தில் எங்கே போனார்.
(முடிவுறாத கதை)