தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, March 27, 2016

பயணம் - தி. சுதாகர்கத்தக்

________________

www.padippakam.com
automated google-ocr PYTHON script by TSHIRINIVASAN
| உன்னதம் 13 ஜனவரி 1996 - படிப்பகம்
சிறுகதை
பயணம் - தி. சுதாகர்கத்தக்

எங்கும் அந்த செய்தி அறியப்பட்டிருந்தது. காற்றுக்குத்தான் எங்கும் செல்வதற்கான வாய்ப்புண்டு, அதில் இணைந்து தான் அந்த செய்தி பரவியிருக்கக்கூடும்,என் அத்தையும்மாமனும்பிச்சை எடுக்கிறார்கள் என்று இவர்கள் இருவரும் இல்லாத அந்த பூர்விகமான தெரு சூனியம் கண்டுவிட்டது போல் வெறுமை அடைந்ததாக இருந்தது. இருவரும் கால் நடையாகவே எதிர்வரும் ஊர்களின் எல்லைகளை தாண்டி சென்று கொண்டிருந்தார்கள். என் மாமனைவிட என் அத்தை நிறைய வேறுபாடுகளை கொண்டவள். எல்லோரிடமும் இருந்து அவள் தனித்து தான் இருந்தாள். இவளின் உறவுக்காரர்கள் வேறு எத்தனையோ ஊர்களில் வாழ்ந்து செத்தார்கள். இவள் அவர்களின் வாழ்விற்கும் சென்றதில்லை, சாவுக்கும் சென்றதில்லை. வயசுப்பெண்ணாய் வந்தவள்தான் என் மாமனை சேர்த்துக் கொண்டாள். அவனிடமே இருந்துவிட்டதால் அவளின் உறவுகள் அறுந்துவிட்டது. வாய்க்காலைத் தாண்டி ஆரம்பிக்கும் காட்டின் முனைப்பகுதியில்தான் என் அத்தை இருந்தாள். காடும் வீடும் அவளுக்கு ஒன்றுதான் என்று கொள்ள வேண்டும். காட்டின் அருகாமையிலேயே இருந்ததால் அதன் ரகசியங்களையும், அற்புதங்களையும் அறிந்து வைத்திருந்தாள். கொஞ்சம் பெருமையுடனும், கம்பீரத்துடனும் லேசான நடுக்கம் தொனிக்க என் மாமன் சொல்லுவான் காட்டின் அருகில் எல்லோராலும் இருக்க முடியாது என்று. காட்டிற்கு பிரதானமான இருட்டுதான் பிடிக்கும். இருட்டை உவந்து ஏற்றுக்கொண்டது காடு. அந்த இருட்டில் உள்ளே நுழைந்தால் திசை தெரியாது. இதையும் மீறி என் அத்தை திசைகளை நன்கறிந்துதான் இருந்தாள்.

காட்டைப் பற்றி என் அத்தை பேசுவாள் அப்படி அவள் பேசும் பொழுது அவள் எத்தகையவள் என்று அடையாளப்படுத்த முடியாது. காட்டுடன் அவள் பேசுவதாக சொல்வாள். காடும் அவளுடன் பே சியிருக்கத்தான் வேண்டும். காட்டிற்குள் செல்வதற்கு பாதையே இருக்காது என்றுதான் சொல்லக் கேள்வி, இவள் வந்தபிறகுகால் வைத்த இடமெல்லாம் பாதையாகிப்போனது. அவள் முதலில் இங்கு வந்தபொழுது காட்டை நோக்கித்தான் ஓடினாள். ஒடியவள் வெகுநேரம் காட்டையே பார்த்துக்கொண்டு நின்றாள். திரும்பி வரும்பொழுது காட்டையே புரிந்து கொண்டு வெற்றி பெற்றவள் போல் இருந்தாள்.

காடு அங்கு இருக்கும் எல்லோராலும் மதிக்கப்பட்டுவந்தது. காட்டை அவமதிக்கும் எவனும் வெளங்கமாட்டான் என்ற ஐதீகத்துடன் பின்னியிருந்தது அவர்களின் மனம். காட்டிற்குள் வீசும் காற்று அபூர்வத்தன்மை கொண்டது. வேறு எங்கும் தங்கி இருக்காது அத்தகைய காற்று. என் அத்தை கண்டு கொள்வாள் அந்த காற்றின் வகைகளை.
| உன்னதம் 13 ஜனவரி 1996 - படிப்பகம்
________________

www.padippakam.com
பிள்ளைத்தாச்சிகளை காடு கனிவுடன் வரவேற்கும் என்று மாமன் இடையிடையே சொல்லுவான். காட்டிலேயே பிறந்துவிடுகின்றகுழந்தைகள் அழாமலயே இருக்கும். காட்டின் தீட்சண்யத்தைப் பார்த்து சிரிக்கும். அந்த காற்று தன் மூச்சிலும் ரத்தத்திலும் கலந்திருப்பதாகவே அவள் நம்பிக்கை கொண்டிருந்தாள். தீட்டான நாட்களில் அவள் காட்டிற்குள் செல்லமாட்டாள். செருப்பில்லாமல் காட்டிற்குள் செல்பவர்களையே காடு மகிழ்ந்து அரவணைக்கும் என்று என் மாமன் நினைத்திருந்தான். காடு இல்லாமல் இருக்கும் ஊர் சிதிலமடைந்து சிலந்தி வலை அண்டிப்போய் கிடக்கும் என்ற பயம் என்மாமனுக்கும் அத்தைக்கும் உண்டு. என் அத்தையின் மனம்பற்றிய உண்மை என்மாமனுக்கே கூடசரியாய் தெரியாது. காட்டிற்கு தெரியுமோ என்ற சந்தேகம் அவனுக்குண்டு. காட்டிற்கு போகும் வழியில் கள்ளுக்கடைகள் உண்டு. அவன் கள்ளைக் குடிக்கும் முன்பாகவே காட்டை நோக்கி வணங்கிவிட்டுத் தான் குடிப்பான். கள்ளை குடித்துவிட்டு அவன் 'நக்கிநாதார்னபயலுக கள்ளா குடுக்குறாணுவ,பொட்டச்சி மூத்திரமாட்டும் கொஞ்சம் உப்பும் உரைப்புமா இருக்கும்போல என்று திட்டுவான் வெகு காலமாகவே அவன் கள் குடித்துக் கொண்டிருப்பதால் அவனுக்கு பிடித்தமான வகையில் கள்ளை கொடுக்க வேண்டும் என்ற பிரியத்தில் கள்ளுக்கடைக்காரன் பதிலுக்கு அவனை எதுவுமே சொல்வதில்லை.

என்னையும் ஒரு நாள் காட்டிற்குள் அழைத்துச் சென்றாள். என் மாமன் அளிந்த பழம் மரத்தின் மீதேறி அளிந்த பழங்களை பிய்த்துப் போட்டான். அது தீராத புளிப்புச் சுவையை கொண்டது. அவளை நினைக்கையில் அந்தக் காடும் அளிந்தப் பழத்தின் புளிப்புச் சுவையையும் நினைவில் துருத்தியபடி இருக்கிறது. நானே என் அத்தையை கட்டிப்பிடித்துப் பார்க்க நினைத்ததுண்டு. அப்படியே நான் செய்திருந்தாலும் கூட அவள் 'அத்தையயே கட்டிப்புடிக்கின்ற மருவப்புள்ளே என்று சந்தோஷமாக சொல்லுவாள். நொய்யான பொரி அரிசியில் கொஞ்சம் நாட்டுசர்க்கரையை கலந்து தின்பதற்காக என் மாமனுக்கு கொடுத்தால் அவளையே கூட்டி கொடுத்து விடுவான் என்று எல்லோரும் விளையாட்டாக சொல்வதுண்டு. ஆனால் என் மாமன் கொஞ்சம் கோபமாக இருக்கும் நேரங்களில் "ஊரக்காலி மாடு, இவ எமனையும் போவா, அவன் நெழலையும் போவா என்பான்.

கண் முன்பாகவே காடு அழிந்து கொண்டிருப்பதை அவர்கள் இருவரும் சகித்துக் கொண்டார்கள். காட்டினுள் கடைசியாக சென்று வந்ததை இருவருமே ஒரே நேரத்தில் மெளனத்தை பரவவிட்டு நினைத்துக் கொண்டார்கள் அவர்களின் பொதுவான நம்பிக்கையான மழை வானத்திலேயே ஒளிந்து கொண்டிருந்தது. எல்லையில்லாமல் இருந்தது போலவே அது கருணையும் இல்லாததாகிவிட்டது என்று அவள் எல்லோரிடமும் சொன்னால் முன்பு இருந்தது போலவே இல்லாமல் இருந்த தன் ஊரை எதோ ஒரு துக்கம் பீடித்துக்கொண்டு வருவதை அவள்
| உன்னதம் 14 ஜனவரி 1996 படிப்பகம்
________________

www.padippakam.com
உணர்ந்தாள் அந்தத் துக்கம் காட்டுடன் சம்பந்தம் உடையதாயிருந்தது. இவர்கள் யாவரும் நெருங்கவே முடியாத அளவுக்கும், கண்டுணர முடியாத அரூபத்தின் ஆளுகைக்கு காடு உட்பட்டுவிட்டதாகவே பயத்துடன் கருதினார்கள். பசி நிரந்தரமான தங்கலாகவே தெருவில் பிள்ளைகளிடம் அடைந்து கொண்டது பிள்ளை பெற்ற பொம்மனாட்டிகளின் முலைக்காம்பிலிருந்தும் பசி வழிந்து எங்கும் நிழலாடியது. ஆந்தை அலறிய ஒரு சாமத்தில் ஊரின் வயசாளி சொன்னான், "இருள் வியாபித்துக் கிடந்த திண்ணையில் இருந்து எல்லாரும் பொறப்படுங்க” யாருக்கும் இது கேட்டுவிடக்கூடாது என்ற பயம் அந்தக்குரலில் அமுங்கிக்கிடந்தது. திசைக் கொருவராக கிளம்பி விட்டிருந்தார்கள் எந்த திசை என்று யாருக்கும் தெரியவில்லை என் அத்தையும் மாமனும் கிளம்பிய பொழுது பின்னிரவு தொடங்கி இருந்தது. நிலவே இல்லாமல் இருந்தது.அன்று குண்டுசி குத்துவது போல் பனி இறங்கிக் கொண்டிருந்தது குடிசைகளின் கூரைமேல் ஈரம் இறங்கிக் கொண்டிருந்தது. மண்ணிலும் ஈரம் முளைத்துக் கிடந்தது. எான் மாமன் கொஞ்சம் கொடுக்காப்புளியும் இரண்டு பனம் பழங்களையும் மட்டுமே தின்றிருந்தான் என் அத்தைக்கு அது கூட இல்லை என் மாமன் திரும்பி பார்த்துக்கொண்டு நடந்தான் அவன் கண்களுக்கு முன்னால் எதுவுமே புலனாகவில்லை என் அத்தை திரும்பிப் பார்ப்பதற்கு திராணி இல்லாதவளாக இருந்தாள். அவனுக்கும். அவளுக்கும் அங்கிருந்து எடுத்துச்
(உன்னதம் 75 . ஜனவரி 1996 Tਨ਼
________________

WWW padippakam.com -
செல்வதற்கு ஒவ்வொரு பொருள் இருந்தது. அத்தைக்கு களைக்கட்டாக இருந்தது. இறுகப் பற்றியிருந்த அவளின் கைகளில் இருந்து தலைகீழாக நிலங்களில் உழைப்பைதேங்கிக்கிடக்கச் செய்ததையும்,பயிர்களின் இடையே தன்னை எப்படி அவள் செயல்படுத்தினாள் என்று அந்த கூர்மையான இரும்பின் வெட்டுப்பகுதி தன் நினைவை அந்த மண்ணில் உதிர்த்துக் கொண்டிருந்தது. எங்கேயாவது மரத்தில் கலயம் கட்டியிருந்தால் ஏறி திருட்டுகள் குடிப்பதற்காக மரம் ஏறுவதற்கான தளகயிறை எடுத்துகழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தான். கள்ளின் போதையை அது உள்வாங்கி இருந்ததைப்போல அவன் நெஞ்செலும்பில் ஆடிக்கொண்டிருந்தது. 

மாமன் தன் ஆசைகள் புதைக்கப்பட்டு விட்டதான முடிவுக்கு வந்திருந்தான். அடுத்த முகங்களுக்கு அது சாதாரணமான ஒன்றுதான் அவனுக்கு எரிகின்ற ஆசை அது கொஞ்சம் கையளவு கொள்ளு இரண்டு உழவு மாடுகளுமேயானது அவனின் ஆசை. இங்கிருக்கும்பொழுதே தனக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். தனக்கு இனி அது கிடைக்க வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் அவன் உடல் நரம்புகளில் பாய்ந்து திகைப்பை கொடுத்தது.அடையாளம் தெரியாத ஊர்களை தாண்டிசென்று கொண்டிருந்தார்கள் ஒவ்வொரு ஊரிலும் காடு இருக்குமா என்று அத்தை தன் விழிகளை பரத்திப் பார்த்தாள். என் மாமன் தின்பதற்கு ஏதாவது தென்படாதா என்ற எண்ணத்தைமனதில்வழியவிட்டிருப்பான்பசி அவனை உந்தித்தள்ள சோற்றுக்கத்தாழையின் புதர்களின் கீழே ஈரப்பதம் அடங்கிக் கிடக்கும்மணலில்நத்தை பெரிதாவதற்குமுன்பே இருக்கும் இளளமைச்சிகளை பிடிப்பான். - 

பசியாறப்போகின்றமகிழ்வில்மாமன் அந்தசோற்றுக்கத்தாழையின் புதர்களை கண்ணால் இடுக்கிக் கொண்டு பார்த்து

சோத்துக் கத்தா
ஒக்கா ஒருத்தனோட படுத்துருந்தா
நான்-பார்த்துருந்தே 
எனக்கு பங்கு குடுறா

என்று வெறியுடன் ஆடுவான். ஊமைச்சிகளை பிடித்துக்கொண்டு வரும் அவன் அதனுடன் கொடி பிரண்டையை அரைத்து புளிசேர்த்து அவித்து வைத்திருக்கும் அதனுடன் கலந்து தின்ன வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருப்பான். பக்கத்து வேலிகளில் கோவை தழைகளின் இடையில் அது படர்ந்திருப்பதை பார்த்து அத்தை அதைகொண்டுவருவாள் பின்புகொஞ்சம்புளிக்காகவும், உப்புக்காகவும் தெரியாதவர்களின்வாசலில் போய் நிற்பாள் குடியானவர்களின் வீட்டின் மண்பானையின் அடியில் இருக்கும் புளியும், உறியில் தொங்கும் உப்பும் இதனால் குறையவே செய்யும் வயிறின் நிறைவு அவன் நடை வலியை மறக்கச் செய்யும்.
| உன்னதம் - 16 డా 1996 | படிப்பகம்
________________

www.padippakam.com
நடந்து ஊர் சுற்றியே காலத்தை விழுங்கி இருந்தார்கள் எத்தனை கிராமத்தின் எல்லைக் கற்களை கடந்து வந்திருக்கிறோம் என்று இருவராலேயே அனுமானிக்க முடியவில்லை. கடந்தது போன காலத்தின் நினைவின் உள் அறைகளில் இருந்து என் மாமன் நினைத்துப் பார்க்க பிரயாசைபட்டதே இல்லை.மாறாக அவன் பருவங்களை நினைவில் தாங்கிக் கெண்டிருந்தான். புளிய மரத்தில் புளியம்பழங்கள் செங்காய்களாக இருக்கின்ற பருவத்தையும், அத்திப்பழம் பழுக்கின்றதையும், ஈச்சம் பழங்கள் கணிகின்றபருவத்தையும், பனங்கிழங்குகிடைக்கின்றதையும், ஈசல்மாவு, வயல் எலிகள் கிடைக்கின்ற பருவத்தையும் அவன் நினைவாக கொண்டிருந்தான். உணவுப் பண்டங்களின் விளைச்சலுடனேயே பின்னிக் கிடந்தது அவனின் பருவத்தின் நினைவுக் கணிப்பு. பருவத்தை இந்த ரீதியில்தான் அவனால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று அவன் பெரிதும் நம்பினான். இருவருக்கும் சந்தோஷம் எப்பொழுதும் வரும் என்று தீர்மானிக்க இயலாதவர்களாகவே இருந்தார்கள். ஆனாலும் அத்தைக்கு நிறைய தண்ணிர் தங்கி இருக்கும்.ஆறுகளைப்பார்த்தாலும், நிழல் அடர்ந்து நிலத்தில் அப்பிக் கிடக்கும் இடங்களைக் கண்டாலும் அவளுக்கு சந்தோஷம் வரும் நிழல்இல்லாத இடங்களை அவள்வெறுக்கவும் செய்தாள்.நிழலுக்கும்பஞ்சம் வந்து விடப் போகிறது என்றும் பயந்தாள். -

விளைச்சல் முற்றிக் கிடக்கும் நெல் வயல்களின் வழியே நடக்கும் பொழுது அத்தை பரவசம் கொள்வாள். என் மாமன் பரபரப்படைந்து தன்னால் முடிந்த மட்டும் அக்கதிர்களை கையால் நிமிட்டியே நெல்சேர்க்க முனைவான். அப்பொழுது அத்தை அவனை திட்டுவாள் "உருப்படாத கோயில்ல உண்டச் சோறு வாங்கித் தின்ன பயலே” என்று, நிலத்தின் சொந்தக்கார உழவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள். பச்சைவாசனை அடிக்கும் விளைச்சல் நிலங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தார்கள். அப்படி சுற்றும் பொழுது இரவானால் காவல் காப்பதற்கு இருக்கக் கூடிய கருப்பஞ்சோலை வைத்து கட்டிய குச்சில் இணைந்து கிடப்பார்கள். சுற்றி விளைந்து கிடக்கும் பயிர்களின் சாட்சியாக வைத்து அவளை ஆளுகை செய்வான் மாமன். பொக்கை பொரு இல்லாதசாணித்தரையின் வழுவழுப்பைப்போல இருக்கும் அவளின் தொடைகளின் மேல் காலைப் போட்டுக் கொண்டு அவள் தன் ஊர் ரெக்கணம் என்று எப்பொழுதோ சொன்னதை நினைவில் மீட்டு

'ஏந்த ரெக்கணத்தியா, ஏந்த ரெக்கணத்தியா’ அவளை ஊரின் பெயராலயே அழைத்து இழைவாக கிசுகிசுப்பான். அவனின் கோவணத்தை தளர்த்திக் கொண்டே அவளை மகிழ்விக்க சொல்லுவான் உத்தா பத்தினி ஊர்மேல போனாளாம், வீட்டுக்கு ஒரு இது தீவார்த்தன காட்டுச்சாம்: அவள் அதைக் கேட்டுக்கொண்டே தன்னை திறந்து காட்டுவாள் அவனுக்கு மாமனுக்கு நினைப்பு ஒடும் அவளின் இளமையை எதுவும் நசுக்க முடியாது என்று அந்தத் தருணங்கள் மார்கழி மாதமாக இருந்தால், கிராமத்தின் தெருவில் வழிந்து கிடக்கும் ஏகாந்தமான மெளனத்தை ஒத்தை ஆளாய் குளிரில் ஊடுருவி பண்டாரம் சனி ஒழியவேண்டும் என்று மேல்ஸ்தாயில் பாடிக்கொண்டு திரிவதை இருவருமே கேட்பார்கள். அத்தை ஏக்கமாக மாமனின் அணைப்பில் இருந்து கொண்டு சொல்லுவாள் நடுவைத்தாண்டி முக்கால் இரவு கழிந்த வேளையில் திரிந்து கொண்டிருக்கும் அந்த ஊர் பண்டாரம் பூ மலர்வதைப் பார்த்திருக்கக் கூடியவன் என்று பூ மலர்வதை பார்ப்பவனின் கண்கள் ஆதிகாலக் கண் என்று எண்ணினாள். அந்தப்
உன்னதம் 17 Tof 1996 |
படிபபகம
________________

www.padippakam.com
பண்டாரத்தின் மனைவியையும் சேர்த்தே நினைத்தாள் காற்றுக்குதன்னை இழந்து விடக்கூடிய வலுவில்லாத மேற்கூரையினை உடைய அந்த வீட்டின் ஜில்லிப்பு தெளிந்து கிடக்கும் மண் தரையில் தகர்ந்துபோய் படுத்திருப்பாள் பண்டாரத்தி தன்னை விட்டு இரவில் விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்தில் நடக்கும் அவள் துணையான பண்டாரத்தை விட்டு தனித்துக் கிடப்பாள். தானியங்களே தங்கி இருப்பதற்கு சாத்தியமே இல்லாத அந்த வீட்டில் இருந்த பண்டாரத்தி தை மாதத்தில் வீட்டுக்கு வீடு காணிக்கையாய் கிடைக்கும் நவதானியப் பயிர்களுக்காக அந்த தனிமையை சகித்துக் கொள்ளக்கூடியவளாய் இருப்பாள். 

இருவரின் கால்ரேகைகள் மண்ணில் எங்கும்நெளிந்துகிடந்தது.அந்த நெளிவில் என் மாமனின் வாழ்வு உருகிக் கிடந்தது. பலவித ஊரின் சந்தைகளை பார்த்துக் கொண்டே சென்றார்கள். சந்தைகளை வெறுமனே பார்க்க மட்டுமே முடிந்தது அவர்களின் கண்களால். ஆனாலும் மாமன் கொஞ்சம் கருவாட்டுத்துண்டுகளையும் சுருக்குபைகளையும் சந்தையிலிருந்து திருடிக்கொண்டு வருவான் அத்தைக்காக கடந்து செல்லும் ஊர்களின் திருவிழாக்க ளில் இருவரும் எதிர்பாராதவிதமாக கலந்து கொண்டு தங்கள் வரவை பதிந்து கொண்டார்கள். அத்தகையதொரு ஊரின் பூகத் திருவிழாவின்பொழுதுதான் என்மாமனை இவள் பிரியநேர்ந்தது.இதையும் மீறி தான் நாடுமாறியாகிவிட்டதையும், பங்கப்பட்டுபோய் விட்டதையும் நினைத்தாள். வெறும் தலைகள் நிறைத்துக்கொண்டு இருந்த அந்த வெட்டவெளியில் இருவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். இவளை விட்டு நகர்ந்து மாமன் சீமலெந்தப்பழம் கொட்டி கிடக்கும் இடத்திற்கு சென்றவன் அருகிலேயே தேவாங்கு முடிகயிறு போடும் நபரிடம் சூழ்ந்திருந்த கூட்டத்தினுள் நுழைந்தான். அத்தையின் பின்புறம் கூட்டமாய் இருந்த குஷ்டரோகிகளின் நடுவே காணாமல் போய்விட்ட சிறுமி நின்று விழித்துக் கொண்டு இருந்தாள். அருகில் மூக்கு அழுகிப்போன ஒரு குஷ்டரோகி அவளைப் பார்த்து காற்றில் அந்த சிறுமியை அணைப்பது போல பாவனை செய்தான். இருவருக்கும் இடையில் மிதந்து கொண்டு வருவது போல் தன் தோளில் கூண்டுகளை ஏந்திக் கொண்டு அந்தக் குருவிக்காரன் என் அத்தையை நோக்கி வந்தான். அவன் அத்தையின் கண்களில் ஊடுருவிப் பார்த்தான். இவள் நிதானிக்கும் முன்பே அவள் அருகில் வந்துவாதே என்று சன்னமாக சந்தோஷத்தை நினைத்துகறிவிட்டு முன்னே சென்றான். அவன் அழைத்தது உடனேயே நிலத்தில் அமுங்கி மறைந்துவிட்டது. மிகப்பெரிய மகிழ்ச்சிஅவனிடம் இவளுக்காக இருப்பதாக பயந்து உணர்ந்தவள் காரணமற்று அவன் பின்னே சென்றாள். கூட்டம் இவர்களின் நடையால் பின்னே சென்று கொண்டிருந்தது. 

குருவிக்காரனும் இவளும் ஒதுங்கி வந்த இடம் முந்திரி மரமாக இருந்தது. கிளைகளை நிலத்தில் தழைய விட்டு மூடிக்கொண்டிருந்தது. முந்திரிப் பழங்களின் கார வாசனை நெறுநெறுத்துக் கொண்டிருந்தது. அவளிடம் புதிராகப் பேசினான். இவளுக்கு எதுவுமே அறியாத ஒன்றாயிருந்தது அவனின் பேச்சு. நெடுங்காலமாக அலைந்து கொண்டிருப்பதாக சொன்னான். அவன் கொள்ளிடக்கரையின் கோரைப்பாய் விளைந்து கிடக்கின்ற சம்புத்தட்டுகளில் குருவிகளைப் பிடிப்பதாக சொன்னான். ஒரே நேரத்தில் அந்தக்குருவிக்காரனின் கைகளை நினைத்து மகிழ்ச்சியையும், வெறுப்பையும் கொண்டாள். அவளின் மார்பை கையாண்ட அவனின் நேர்த்தியான கைகளுக்காக மகிழ்ச்சி ஊறியது.
| உன்னதம் 78 ஜனவரி 1996 படிப்பகம்
________________

www.padippakam.com
பரபரவென்று அவன் அவிழ்த்துப் போட்டு விட்டு நின்றது இவளுக்கு சிரிப்பை தந்தது. தன் சேலையை தலைக்கு சும்மாடாக்கி அம்மணமாக தன்னை அவள் மலர்த்திக்கொண்டு கிடந்தாள். உடைந்து சிதறிய கஜீரகோவின் சிற்ப நகலும், மூச்சை அறுக்கும் விந்தின் கவிச்சையும் அந்த குறுகிய இடத்தில் விரவியிருந்தது போல் காட்சி தந்தது. தண்ணிர் விட்டுப் பிசைந்து கெட்டியாக இருக்கும் கேழ்வரகு பிசைமாவு போல் வாழைப்பட்டையின் குளிர்ச்சியை தாங்கிய தொடைகளின் இடையில் பதிந்து இருந்த அவளின் குறியை ஆவலுடன் பார்த்தான். அவள் மேலான உணர்ச்சியின் பலவீனத்தில் இருந்து அந்தக் குருவிக்காரனுடன் சந்தோஷித்துக் கொண்டாள். அவன் சொன்னான் 'நீ என்ன அடிமாடா, கொஞ்சம் நல்லா தூக்கி கொடுத்தாத்தான் என்னா என்று அவளின் வியர்வை அரும்பிய காதோரத்தில் கிசுகிசுத்தான். என் மாமன் இப்படி சொல்லி இருந்தால் தான் என்ன சொல்லுவோம் என்று அப்பொழுது நினைத்தாள். அந்தக் குருவிக்காரன் ஊசி தைத்து இழுப்பது போல என் அத்தையின் மீது படர்ந்து இயங்கினான். உணர்ச்சிகளின் தாங்க முடியாத கொட்டத்தில் அவனின் படர்தல் அவளுக்கு ஒணக்கையாக இருந்தது. 

அவள் உடலிலிருந்து சக்கையாக ஏதோ ஒன்று பிழிந்து ஓடிவிட்டது மாதிரி பிறகு உணர்ந்தாள். அது புணர்ச்சிக்குப்பின் ஏற்படும் வெறுமையின் ஆரம்பம். அப்பொழுதுதான் அந்தக்குருவிக்காரன் அம்மணமாகவே எழுந்து போய் மூங்கில் கூடுகளின் கதவை திறந்து ஒரு குருவியை எடுத்து வந்து பளபளப்பை கண்களில் தேக்கிக் கொண்டு இது உனக்கு என்றான். அந்த நேரத்தில் தன்னிடம் கொடுக்கக்கூடியது அதுதான் என்று அவன் நினைத்தான். அந்தக் குருவிஎன் அத்தையின் உள்ளங்கையில் குந்தியிருந்தது. அது தன் சிறிய கண்களால் அவளை மெளனமாகப் பார்த்தது. தங்கள் இருவரின் அம்மணத்தைக் கண்டு அது ஆழமாக நகைப்பது போலவும் அவளுக்கு தோன்றியது. அது முற்றிலும் பறப்பதை இழந்து போயிருந்தது. மீண்டும் அதன் கண்களை பார்த்த அவள் அதில் காட்டின தீவிரம் அடங்கி இருப்பதாக நினைத்தாள். அப்பொழுதுதான் அந்தக் குருவியினைப் பிடித்த அவனின் கைகளை வெறுத்தாள். 

'ஏந்த இதுவுள இப்பிடி புடிச்சு வைக்கிறீங்க என்றாள் ஈனமான குரலில். இதுவரையில் அந்த குருவிக்காரன் இத்தகைய ஒரு கேள்வியை யாரிடமும் எதிர்கொள்ளாமல் இருந்தான். தன்னால் அதற்கு பதில் தர இயலாது என்பதை உணர்ந்து நடுங்கினான். என் அத்தையிடம் கொண்டிருந்த கணநேர உறவு அறுந்து பால்வெளியை நோக்கி ஊர்வதாக நினைத்தான். காற்றும் நின்றுவிட்டதுபோன்ற மெளனம் அவர்களிடையே நிலவியது. தலையை கவிழ்த்துக்கொண்டே அந்த குருவியை அவன் வாங்கிக் கொண்டு கிளைகளின் இடையே நுழைந்து வெளியேறினான். இதை என் மாமனிடம் சொன்னால் அவன் என்ன நினைப்பான் என்று அவளுக்கு தெரியவில்லை. ஒருவேலை என் மாமன் அந்தக் குருவிக்காரனை 

அட எங் கூத்தியாரே என்று நகைத்தாலும் நகைப்பான். ஒரு வேளை வெறுமனே அப்படி சொன்னாலும் அவன் என்ன நினைப்பான் என்று அவன் நெஞ்சின் சதைகளுக்குத்தான் தெரியும் 

குருவிக்காரனின் நினைப்பு வரும் பொழுதெல்லாம் ஆதி ஒறவு அறுத்துட்டுப்போனாலும் குண்டி ஒறவுகொழுந்துவிட்டு எரியுமாம் என்று தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள். இதனாலேயே அவள்
(உன்னதம் 19 ஜனவரி 1996) படிப்பகம்
________________

www.padippakam.com
என் மாமனை பிரிந்தாள் எங்காவது அவனை சந்தித்து விடலாம் என்று திடம் கொண்டாள் பூசத்தின் கூட்டத்தில் அலைபாயும் கண்களுடன் அவளை தேடி சலித்த அவன் எதிர் திசையில் பயணித்தான். இருவருமே வேறு புதிதான பாதைகளை உருவாக்கி நடந்தார்கள். அவன் நடந்த எதிர் திசை அவன் உயிரை காவு வாங்கிவிட்டது. கடைசிவரை என் அத்தைக்கு இது தெரியாத விஷயம் ஒன்றாகவே இருந்துவிட்டது. கார்த்திகையில் பனைமரம் பூ வைத்த பருவம் அது பசி அவன் உடலை அரக்கித் தள்ள மிகப் பெரிய ஈச்சங்கொத்தைநாடினான். அதன் அடியில்இருக்கும் ஈச்சஞ்சோறை பிடுங்குவதற்குகையால் அளைந்தான். எளிமையான தோற்றம் கொண்ட அந்த செடி பாம்பை மறைத்துவைத்திருந்தது. என் மாமனின் உடல் இயக்கம் அத்தனையையும் தன் கூர்மையான சின்ன நாக்கில் ஊறிஞ்சிக் கொண்டு மண்ணை துளைத்து இரக்கம் இல்லாமல் சரகரத்துசென்றுகொண்டிருந்தது. நெடுங்காலமாக மழையையும் வெயிலையும் உள் வாங்கி இருத்திக் கொண்டு இருந்த தன் முதுகை காட்டிக் கொண்டு கவிழ்ந்து கிடந்தான். பார்ப்பவர்களிடம் எல்லாம் கரிநாள் காசு வாங்குவதையும் அவன் இழந்தான். பல ஊரின் மாட்டுக்கார சிறுவர்களுக்கு பூலாப் பூ பிய்த்துக்கொடுக்கும் தன்மையையும் மறந்தவனாக கிடந்தான். தேசாந்திரமாக தீய்ச்சலான வெயிலில் சுற்றிக்கொண்டிருந்த கழுகுகள் இவ்வளவு முழுமையான அநாதைத்தனத்தை உள்ளடக்கிக் கொண்டு ஒரு பிணம் கிடப்பதைப் பார்த்து சிறகுகளை படபடத்தது. 

அவள் ஒத்தையாகிப் போனதை அறியாமலேயே நடந்து கொண்டிருந்தாள். காட்டை எங்காவது பார்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தது.அவளின் நடை எங்காவது ஒரு ஊரில் அவளை வந்து சேர்வான் என் மாமன் என்ற நம்பிக்கையினை தியாய் நெஞ்சில் தேக்கிக்கொண்டு நடக்கிறாள். மாரிக்கால இரவுகளில் தன் மார்பை என் மாமனின் உதடுகளுக்கு தரவேண்டும் என்றே எண்ணிக்கொள்கிறாள் வீராணம் ஏரிக்கரையை எட்டியிருந்த அவள் அதைப் பார்த்து 

ஒக்கட்டான் ஏரியிலே தண்ணிதான் உண்டா என்று வைது கொண்டே நடந்தாள். அந்த வைதல் வெடித்து பாளமாய் பிளந்து வறண்டு கிடக்கும் ஏரியின் நில இடுக்களிலும் நுழைந்து எதிரொலித்தது. ஏரிக்கரையிலேயே இரவு அவளின் மேல்கவிந்து விட்டது. கரையின் குடிசை ஒன்றில் கோவணம் மட்டுமே கட்டியசிறுவன் ஒருவன் அரிக்கேன்விளக்கின் துணையுடன் மாடுகளுக்கு வைக்கோல் பிரித்துப்போடும் கருணையை பார்த்துக்கொண்டே நடந்தாள். வெற்றிலைக் கொடிகளில் வேலை செய்துவிட்டுமடியில்கூலியுடன் பொழுது சாய விடுதிரும்பும்பெண்களுடன் கலந்து நடந்தாள். இரவு முடிந்து வெளிச்சம் பிரியும் நேரத்தில் பெயர் தெரியாத புதிய ஊருக்கு அவள் போகின்றாள். இவளிடம் தங்கி இருக்கும் யாராலும் கைகொள்ள முடியாத எளிமை கண்டு அவமானப்பட்டு அந்த ஊர் மூழ்கிப்போக சாத்தியமிருக்கிறது. அங்கு காடு இருந்தாலும் இருக்கும் 

சூரியன் உச்சிக்கு வரும் வேளையில் இவளின் வயிற்றின் நரம்புகளில் பசிதோன்றினால்சிதிலமடைந்த அந்த ஊரின் ஒரு உழவனின் வீட்டுவாசல் முன் கையேந்தி நிற்பாள். - 

அவளுக்கு பிச்சையாய் கிடைக்க இருக்கும் கொஞ்சம் நீராகாரம் கலந்த பழையசோறு எதாவது ஒரு வீட்டில் ஒளிந்து கொண்டுதான் கிடக்கிறது.
| உன்னதம் 20 ஜனவரி 1996 படிப்பகம்