தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, March 28, 2016

கறுப்புக் குதிரைச் சதுக்கம் , உடம்பு, ஓர் எலி, ஒரு குருவி,வாகனம்,ஆரம்பக் காலக் கவிதைகள் - அம்பைwww.archive.org
automated google ocr
posted on 10/03/2016


(மெய்ப்பு பார்க்கப்படவில்லை)

கறுப்புக் குதிரைச் சதுக்கம் - அம்பை

உணர்ச்சிவசப்படாத அறிவுஜீவிக்கு ஒர் அறிக்கை இது.

யதார்த்தத்தை என்னால் தரமுடியவில்லை. என் முதல் பாடம்: யதார்த்தத்துக்குக் கண்ணாடி இல்லை. இந்த அறிக்கையிலுள்ள யதார்த்தம் காயடிக்கப்பட்டது; பால் வற்றியது; கருப்பை பிய்க்கப்பட்டது. வேற்று வெளி - கால அனுபவங்களை, சுய வெளியின் கனத்த சொற்களால் தொய்யவைக்கும் அறிக்கை இது. இதில் அகப்படாததை உணர நீ இங்கு வர வேண்டும். கண்ணிர் வற்றிய அவள் கண்களைக் காண வேண்டும். அவளிடமிருந்து பிறக்கும் மெளனத்தை ஸ்வீகரிக்க வேண்டும். அதில் எரிய வேண்டும்.

சிறு அறைதான். நீ இதில்தானே வளர்ந்தாய்: ஆலையின் புழுதியைத் தலையில் பறக்கவிட்டவாறு வந்த ஒருத்தியிடம்தான் விசாரித்தேன். வழிகாட்டினாள். அந்த அறையில் எதுவும் இல்லை. நனைந்த துணி கனத்துத் தொங்கும் ஓர் உணர்வு. ஒருத்தி மூலையில் அமர்ந்திருந்தாள். விரிசடை திரெளபதி. தரையைத் தொட்டது கூந்தல். அதுதான் வாகனம் போல் அதன் மேலேயே அமர்ந்திருந்தாள். மங்கிய கறுப்புப் புடவை. நிமிர்ந்து பார்த்தாள். ரோஸா கந்தசாமி. அக்னி குண்டம். (கட்சியின் முக்கிய தோழர் ஒருவர் ரோஸா லக்ஸம்பர்க் நினைவாக வைத்த பெயராமே?)
O

1926. நீண்ட பயணம். கந்தசாமி பிளாட்பாரத்தில் பூனை மயிர் மீசையுடன் இறங்கியபோது கையில் ஒரு துணி மூட்டையும் மதறாஸிச் சின்னமான கூஜாவும். பரேல் சந்தில், மேலே தகரத்தகடு இருந்ததால் அறை என்று அழைக்கப்பட்ட ஒன்று. ஒரு நகரம் கை, கால் நீட்டி விஸ்தாரமாகிக் கொண்டிருக்கும் வேளை ஆலைகளால் ஈர்க்கப்பட்ட பல வெளியாட்களில் ஒருவன் கந்தசாமி. தொழில்யுகத்தின் ஆரம்ப நாடித்துடிப்பில் அவன் கலந்திருப்பான். 1928 வேலை நிறுத்தத்தில் கந்தசாமி இருந்தான். 1929 இலும். வேலை நிறுத்த காலத்தில் நடந்த மாலை வகுப்புகளில் அவன் இருந்திருப்பான். தோழர் டாங்கேயின்
** 206 -- அம்பை________________

பேச்சுகளைக் கேட்டிருப்ான். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி பற்றி மராட்டியில் பேசியதைக் கவனமாகக் கேட்டிருப்பான். கார்ல் மார்க்ஸ் வெறும் தாடி மனிதரல்ல அவனுக்கு. பல வருடங்களுக்குப் பிறகு பையன் பிறந்தபோது அவன் நிறம் மாறியிருக்கவில்லை. சிவப்புத் தான். லெனின் என்று பெயர் வைத்தான். லெனினின் தலையை வருடியவாறு சொன்ன கதைகள்:

"ரொட்டியோட வெலை ஏறிக்கிட்டே போச்சுது. ஜனங்களுக் கெல்லாம் பசி அவங்க அரமனை வாசல்ல நின்னுகிட்டு பசி, பசிங்கறாங்க அப்ப ராணி மேரி ஆன்டோனட் என்ன சொன்னா... ரொட்டி இல்லன்னா கேக்கு திங்கட்டுமே அப்படீன்னா ..."

"பகத்சிங்கைக் கடைசில ஜெயில்ல போட்டாங்க ரொம்பக் கொடுமைப் படுத்தினாங்க. அவர ஒரு நாளு விடிகாலேல தூக்குப் போட்டபோது அந்த ஒடம்பைக்கூட அவங்கம்மாவுக்குக் காட்டல்லே ..."

லெனின் கேட்ட கதைகளில் திடீர் திருப்பங்கள் நிறைய உண்டு. தேவதைகள், கடவுள்கள், ராட்சஸர்கள் இல்லாத கதைகள்தான். அவன் தலைப்புகள் இட்டிருந்தான். பிரெஞ்சுப் புரட்சிக் கதை 1917 கதை வ. உ. சி. கதை பாரதியார் கதை ஸாவர்க்கர் கதை (ஸாவர்க்கர் கப்பலிலிருந்து தப்பித்த நிகழ்ச்சியை மீண்டும்.மீண்டும் சொல்லச் சொல்வான்), காந்தி கதை 15 ஆகஸ்டு கதை மெஷின் கதை தொழிலாளி கதை. இங்கிலீசில் தான் படிக்கமுடியாத குறைக்காக லெனினுக்கு இங்கிலீஷ் படிப்பு. லெனின் ஆலையில் வேலை செய்ய அல்ல. அவன் படிக்க, யோசிக்க சமுதாயத்தை மாற்றத் திட்டங்கள் போட.
 O
அவள் தலைக்கு மேல்தான் கந்தசாமியின் மாலையிட்ட புகைப் படம் இருந்தது.

இவள் தயங்கியவாறு நுழைந்தாள்.

நிமிர்ந்து பார்த்து "யா" என்று மராட்டியில் வரவேற்றாள்.

- ஒரு சாட்டை வீச்சு வீசித் தலையை முடிந்துகொண்டாள்.

 இவள் தமிழில் "நான் லெனினோட." என்றாள்.

கண்களைக் குறுக்கிப் பார்த்தாள்.

 "அண்ணியா?" "அம்மா, யார் வந்திருக்காங்கன்னு பாரு."

தடுப்பின் பின்னாலிருந்து அம்மா வந்தாள். கண், முகம், பஞ்சுத் தலையை எல்லாம் துடைத்துவிட்டுக் கருநாகப் படமாய் எழுந்தது அந்த உலக்கைக் கைகள்தாம்.
______________

சற்றுக் கூச்சமாய் இருந்தது இவளுக்கு. அந்த கைகளைத் தான் உற்றுப் பார்ப்பது. அவற்றை இயல்பாய் ஏற்றுக்கொள்ள முடியாமல் அவற்றில் ஒடிய கரும்பச்சை நரம்புப் புடைப்புகளில் கண்கள் ஒடி ஒடி மீள்வது இவள் பேதப்பட்டு இருப்பதை மண்டையில் அடிப்பது போல் இருந்தது.

"லெனின் வூட்டுக்காரி."

"வாம்மா. வளி தெரிஞ்சிச்சா?"

கேட்டுவிட்டு அருகில் வந்து தலையை வருடினாள்.

"லெனின் செளக்யமா ?”

"நல்ல புள்ளம்மா அவன் கையைப் பற்றிக்கொண்டாள். "இன்னும் நிஜார் போட்ட சின்னப் பையனாகவே தெரியறான் எனக்கு ஒரு வாட்டி அவர செயில்ல போட்டுட்டாங்க. பன்னெண்டு வயசுப் பையனை இளுத்துக்கிட்டு ஒடறேன் அங்க. அங்க அலைஞ்சு, இங்க போயி அவரப் பாக்குற வரிக்கும் பசிக்குதம்மான்னு சொல்லலியே பையன்! எப்படிப்பட்ட புள்ள அவன்!"

அவளைக் கீழே பாயில் அமர்த்தினாள்.

"அவன் போறபோது முந்தானைலேந்து எட்டனா எடுத்துக் குடுத்து இவ்வளவுதாண்டா முடியும் தம்பின்ன போது கையைப் புடிச்சிக்கிட்டு அழுதாம்மா அவன். பிளாட்பாரத்துல அத்தினி பேர் முன்னாலியும் கொரகொரன்னு இளுத்துக்கிட்டு அழுவறான். கையைத் தடவித்தடவித் தந்தான் ..."

"அம்மா, அவங்களையும் பேச விடுவியா, இல்ல நீயே பேசி முடிக்கப்போறியா?"

"போடீ" என்று விட்டு "டீ கொண்டாறேன்" என்று எழுந்து போனாள்.

ரோஸா இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

"உங்க பேர்கூடத் தெரியாது."

"அபிலாஷா."
O

(நீ அவளைப் பார்த்து இரண்டு மூன்று வருடங்களாகி இருக்கும் இல்லையா? அவள் ஆலைத் தொழிலாளிகள் சங்கத்துக்காக வேலை செய்கிறேன், மேலே படிக்கவில்லை என்றதும் கோபமாகச் சென்றாயாமே? அங்கு சுவரில் ஒரு புகைப்படம் இருந்தது. உன் அப்பா, அம்மா, நீ, அவள். சுருட்டை சுருட்டையாய் எவ்வளவு முடி உனக்கு ! நீ போட்ட முதல் கால்சராயா புகைப்படத்தில் இருப்பது? அவளுக்கு மூன்று வயது இருக்கும். பின்னால் கார்ல் மார்க்ஸ். ஆம். அந்த புகைப்படக் கதை நீ சொல்லியிருக்கிறாய். ஸ்டுடியோவுக்கு உன் அப்பா கார்ல் மார்க்ஸ் புகைப்படத்தைச் சுமந்து வந்ததும், அதைப் பின்னால் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதும், ஸ்டுடியோக்காரர், "உங்கள் உறவா.: ஜம்மென்று இருக்கிறார் வெளிநாட்டவர் மாதிரி" என்றதும்)

எந்த விஷயத்தையும் தராசில் வைத்து நிறுத்தி இரு பக்க எடையையும் பார்க்கும் உனக்கு, பதட்டமடையாத மார்க்ஸியவாதியான உனக்கு எழுதும் அறிக்கையில் உணர்ச்சிகள் தெறித்துவிடாமல் கவனமாக இருக்க முயல்கிறேன். இதில் வெற்றி பெறுவேனா என்று தெரியவில்லை.

கனன்று கொண்டிருக்கும் நெருப்பு மாதிரி இருந்தாள் அவள். எந்த நிமிஷமும் சடாலென்று குதிரை ஏறி ராணி லகஷ்மிபாய் மாதிரி விரைந்துவிடுவாள் என்று நினைக்க வைக்கும் லகானிட்ட வேகம் அவளிடமிருந்தது. ஜூலியா படம் நினைவிருக்கிறதா? தோழியைப் பார்க்க வெட்டப்பட்ட காலுடன் வருவாளே, வதைக்கப்பட்ட முகத்துடன் வனெஸ்ஸா ரெட்க்ரேவின் அந்த முகத்தை நினைவில் கொண்டுவா. அவளை நான் மறுபடி சந்தித்தேன். தெரிகிறது. நான் ஒரு அதீதக் கனவு கலந்த உருவத்தை ரோஸாவுக்குத் தந்து கொண்டி ருக்கிறேன். அது இந்தக் கணத்தில் என் உணர்ச்சிகள் வடிக்கும் உருவம் இருக்கட்டும் அது மிகை வியப்பு பூரிப்பு. இவை இப்போதைக்கு எனக்கு உரியவை ஆகட்டும். பிறகு நிதானமாகச் செதுக்கிக் கொள்ள லாம். அப்போதும் குறைந்துவிடாது எதுவும்.

இந்த முன்னுரையை நான் உனக்குத் தர வேண்டியிருக்கிறது. உன் தங்கையை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. கொள்கையில் உன்னுடன் உடன்படாமல் வன்முறைவாதிகளை ஆதரித்த தங்கையை புத்தக அறிவு, மேற்கோள்கள், பல மணி நேரங்கள் தர்க்கம்புரியச் சொற்கள்-இவை மட்டுமில்லை இவை நம்மில் யாரிடம் இல்லை? சொற்களைப் பற்றிக்கொண்டு தொங்குபவர்கள்தாமே நாம், இவற்றுடன் அவளிடம் இருப்பது ஒர் எழுச்சி பெற்ற மனச்சாட்சி பல சரித்திர ஆதாரங்கள். ஒரு குலைக்கப்பட்ட உடம்பு ஒரு பறிக்கப்பட்ட உறவு. இந்தப் பின்னணியில்தான் நீ இந்த அறிக்கையைப் படிக்க வேண்டும்.
O

ரோஸாவுக்கு ஐந்து வயதிருக்கும்போது அவர்கள் ஜோபட்பட்டியில் (குடிசைப் பகுதி) ஒவ்வொரு வாரமும் வந்து அவர்களுடன் பேசி விட்டுப் போகும் ஆண்களும் பெண்களும் ஒரு சித்திரப் பட்டறை நடத்தத் தீர்மானித்தார்கள் குழந்தைகளுக்கு கலர் பென்சிலும் பேப்பரும் தந்தார்கள். நீலப் பென்சிலை எடுத்து முக்கால் பக்கத்தில் தேய்த்தாள் ரோஸா, கடலாம். நட்ட நடுவில் காகிதக் கப்பல் மாதிரி ஒரு கப்பல். அதன் மேல் அரை நிஜாருடன் ஒருவன். அவன் கையில் ஒரு கொடி அதில் நுணுக்கினாள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று. தன்னந்தனியாய் நடுக்கடலில் அவன் யாரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. ஆனால் அப்படி முறையிடுவது ஒரு தினப்படிச் செயலாக அவளுக்குப்பட்டது. மீதிக் கால்பக்கத்தில் பொம்மைபோல் கைகால்களை நீட்டிக்கொண்டு பலர் கரையில். எல்லோர் கைகளிலும் கொடிகள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்று. கப்பலில் நின்றவனின் கையில் ஆரம்பித்து ஒர் அம்புக்குறி கீறினாள். கந்தசாமி என்று எழுதினாள். கோணல்மாணலாய், பிறகு ஆள்காட்டி விரலைச் சப்பிக் கடித்துவிட்டு அதை அடித்து விட்டு எழுதினாள். லெனின்.

இன்னொரு விஷயம் அவளுக்கு ஞாபகம் இருக்காது. ஒரு மாலை, ஜோஷி மாமா லெனினின் விருப்பத்துக்கு இணங்கி மீண்டும் 1917 கதை சொன்னார். வெளியே வாகன சத்தம் கொஞ்சம் குறைந்திருந்தது. பிச்சைக்காரர்கள் ரொட்டிமாவு பிசைந்து சமையலை ஆரம்பித்தாகி விட்டது. எங்கோ செளபாட்டியில் கிளம்பிய உப்புக் காற்று பல கரி வாயுக்களுடன் கலந்து கொஞ்சம் சிலுசிலுக்க வைத்தது. லெனின், மாமா தோளோடு நெருங்கி சப்பிய விரலுடன் அவள் ஒரு மூலையில். முடித்துவிட்டு வழக்கம் போல் கேள்விகளுக்கு நேரம் தந்தார் ஜோஷி மாமா. அவரை என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். கையை உயர்த்தி, அனுமதி வாங்கி, அமைதியாக, மரியாதையாகக் கேட்க வேண்டும். லெனின் வழக்கம்போல், 1917 வேறு இடங்களில் நடந்தால் என்ன ஆகும்? எல்லோரும் படிக்க முடியுமா? எல்லோருக்கும் வீடு கிடைக்குமா? எல்லோரும் எல்லாம் சாப்பிட முடியுமா-கேக்கு கூட கடைசிக் கேள்வியை அவன் எதிலும் நுழைத்து விடுவான். பிரெஞ்சுப் புரட்சியின் அந்த கேக்கு பிம்பம் அவன் மனத்தில் ஒட்டிக் கொண்டுவிட்டது. சப்பிய விரலை எடுத்துவிட்டு ரோஸா கையை உயர்த்தி வெடுக்கென்று மராட்டியில் கேட்டாள். ஆம்சா ஸண்டாஸ் கராப் கா? (எங்கள் கக்கூஸ் ஏன் அழுக்காக இருக்கிறது?).

பிரெஞ்சுப் புரட்சி விளையாட்டில் கிலோடீனை இயக்குபவனாக மட்டுமே விளையாடுவேன் என்று பிடிவாதம் பிடித்து, ரத்தத்தை உறைய வைக்கும் ஒலங்களோடு லெனின் குப்புறவும் மல்லாக்கவும் "செத்து விழவேண்டும் என்று அவள் வீம்பு செய்திருந்தாலும் அவளுடைய ஆதர்சம் லெனின்தான். அவன் மேல்படிப்புக்கு டெல்லி போனபோது பிளாட்பாரத்தில் அவளும் இருந்தாள். எச்சிலையும் கண்ணிரையும் சேர்த்து விழுங்கியவாறு.
O

அபிலாஷா திரும்பி எந்த நிலை வாகாக இருந்ததோ அப்படிப் படுத்துக்கொண்டாள். ரோஸா அவள் தலையணையைச் சரி செய்தாள்.

"சேதி பேப்பரில் வந்து ஒரு மாசம் ஆயிடுச்சே? அதெப்படி இப்பத்தான் அண்ணன் அனுப்பினாரு ?"

"லெனின் என்னை அனுப்பினான்னு எப்படி நினைக்கிறே?"

"பின்னே ?"

" நாரின்னு ஒரு பத்திரிகை வருது தெரியுமா? அதோட சார்பா நான் வந்திருக்கேன். உன்னைப் பேட்டி கண்டுட்டுப் போடலாம்னு."

மல்லாந்து படுத்து விட்டத்தைப் பார்த்து வெடித்துச் சிரித்தாள் ரோஸா "நிஜமாவா?" என்று விட்டுக் குப்புறப் படுத்துச் சிரித்தாள்.

"நீ சிரிக்கிறாய்."

"எனக்கு இது நடந்திருக்காட்டா வந்திருக்க மாட்டீங்க இல்லையா?”

"அப்படி இல்ல ரோஸா. நான் லெனின் கிட்ட நிறையதடவை கேட்டுக்கிட்டேதான் இருந்தேன். இது நடந்தது."

"ஒரு சாக்காயிடுச்சு! நல்ல சாக்கு ! அண்ணனைக்கூட மசிய வெக்கற சாக்கு!"

 "இங்கு இருக்குற நாப்பத்திரண்டு சங்கமும் வந்தாச்சு என் கிட்ட கூட்டத்துல நிறையப் பேசியாயிடுச்சி. எழுதியாயிடுச்சி. மராட்டி பேசத் தெரிஞ்சவங்க, சிகரெட் பிடிக்குற பொம்பளைக, வெள்ளைப் புடவைக்காரிக, எங்க கட்சி இதை எடுத்துக்கிட்டு வாதாடும்னு சொன்னவங்க எல்லாரும் வந்துட்டும் போயாச்சு. தமிழ்ப் பத்திரிகைக்காரர்கட வந்தாரு ஒத்தரு. இது சூடான நியூஸாம். பத்திரிக பேரு "மங்களம். நல்ல மங்களமான, சூடான நியூஸ்!"

"ரோஸா, நீ..."

"இல்ல. இல்ல. தயவுசெய்து அண்ணி, நீங்களும் நீ கசப்படையக் கூடாது அப்டீன்னுட்டு உபதேசம் பண்ணாதீங்க இப்படிப் பண்ணினாங்க நிறையப் பேரு. அவங்களுக்குள்ள எத்தனை சண்டை தெரியுமா? மார்ச் எட்டு அன்னிக்கு ஊர்கோலம் போகத் தீர்மானிச்சப்போ, ஒரு சங்கம் சொல்லிச்சு, வெலைவாசி உயர்வு, கெரோஸின், அரிசிப் பஞ்சத்தையும் இத்தோட சேர்க்கணும்னு இன்னொண்ணு சொல்லிச்சு, ஒலகத்துல இருக்குற முதலாளித்துவ முயற்சிகளை எல்லாம் இத்தோட பத்தியும் சொல்லணம்னு இடது ஒற்றுமை பற்றிச் சொல்லணம்னுட்டு ஒரு பொளவு. இப்படியே பேசிக்கிட்டே போனாங்க கடைசில எல்லாரும் தனித்தனியா ஊர்கோலம் போனாங்க காலா கோடா சதுக்கத்துல சந்திச்சுக்கிட்டாங்க. அப்புறம் பேசினாங்க பேசினாங்க அப்பிடிப் பேசினாங்க . . ."

அபிலாஷாவால் அவள் வெடிப்பை ஏற்க முடிந்தது. அவர்கள் தப்புச் செய்யாமலில்லை. இடது, வலது, தலைக்கு மேல், காலின் கீழ் என்று எங்கு பார்த்தாலும் குற்றம் பார்ப்பவர்கள் இருந்தால் எப்படி? கீதா சிகரெட் பிடிக்கிறாள். அது ஒரு பழக்கம்தான். எத்தனை குடிசைப் பெண்கள் பீடி பிடிக்கவில்லை? அவள் அதை ஒரு சின்னமாக்க வில்லை. சிகரெட்டை ஒரு உறிஞ்சு உறிஞ்சின பின் என்னமாக வார்த்தைகள் விழுகின்றன அவளுக்கு! அவள் மில் தொழிலாளிகளைப் பற்றி எழுதிய புத்தகத்தை மீறக்கூடிய ஒரு புத்தகம் இன்னும் யாரும் எழுதவில்லை. எவ்வளவு துல்லியமாக, கோட்பாடு ரீதியில் துளிக்கூடப் பிசகாமல் எழுதியிருக்கிறாள்! உலகத்து எந்தத் தொழிற்சங்கம் எப்படி வேலை செய்கிறது என்பதைத்தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்வாள். கட்சியில் அவள் பதவி மிக உயர்வானது. வெறும் புத்தகங்கள் எழுதுபவர்களை உலுக்கி எடுத்துவிடுவாள் களத்துக்கு வா என்று. லெனினின் வழுக்கை மண்டையில் ஏறி உட்கார்ந்து விட்டாளே! லெனின்தான் பதிலுக்கு, "கீதா, நான் இடது என்கிறது மட்டுமில்லை, என் ஜாதியும் சேர்ந்துவிட்டால் உனக்கு ஒரு நல்ல உயிருள்ள சின்னம் கிடைத்துவிடும். மடக்குக் கதவைத் திறந்ததும் கண்ணைக் கவரக்கூடிய சின்னம். மன்னித்துக் கொள். இந்தக் கடை மூடியாகி விட்டது. மற்ற கடைகளில் பார்" என்று சொல்லி விட்டான்.

அவர்கள் செய்த பல போராட்டங்களுக்கு வலு இருந்தது. இல்லாமலா பலாத்காரம், வரதட்சினை, இரண்டும் இவ்வளவு பெரிய விஷயமாயிற்று? நடைமுறையில் தப்பு விழுந்துபோகிறது சில சமயம். இரவு கூடினோம். பதினோரு மணிக்கு ஒரு மணி நேரத்தில் அத்தனை ஆபாசச் சுவரொட்டிகளையும் கறுப்படிக்க. மாலினி வேலைதான் பெயிண்ட் வாங்கிவருவது கொண்டு வந்திருந்தாள். அப்புறம்தான் அதில் எழுதியிருந்ததைப் படித்தோம். கலக்கி, இரண்டு மணி நேரம் வைத்துப் பின் உபயோகிக்கவும். மாலினியை வாட்டிவிட்டோம். புரட்சிக்கு எதிரி என்றுகூட ஜெஸிகா சொல்லி விட்டாள்.

அப்புறம் அந்தத் தீவட்டி வெளிச்ச இரவு ஊர்வலம். தீப்பந்தம் எல்லாம் ரெடி கெரோஸின் கொட்டி எரிய வைக்கும்போது போலீஸ் வந்துவிட்டது. கெரோஸின் அல்லது பெட்ரோல் தெருவில் எரியவைக்கக் கூடாது என்று. பின்னே இதை எப்படித்தான் எரியவைப்பது என்று சீறியபோது அந்த இன்ஸ்பெக்டர் சாந்தமாக "நெய்யை உபயோகித்துப் பாருங்களேன்," என்றார். அப்புறம் ஆளுக்கு ஒரு மெழுகுவத்தியோடு ஊர்வலம் போனோம். சுட்டிக்காட்டப்படக்கூடியவைதான். ஆனால் மேலே மிதக்கிற தப்புகள்தான். கனம் இல்லாதவை.

எல்லாம் சேர்ந்துதானே எழுச்சி? சிரிப்பு, கேலி, கோபம், விமர்சனம், ஆரவாரம், படபடப்பு, ஆக்ரோஷம் எல்லாம்தான் இருக்கும். ஆணின் கொட்டையில் இரண்டு உதை விட்டாலே போதும் எங்கள் குமுறல்

அடங்க என்று நினைப்பவர்களின் கோபத்தையும்தான் ஈர்க்க வேண்டியிருக்கிறது. தெருவில் ஒன்றுக்குப் போய்க் கொண்டிருப்பவனைப் பார்த்து "இழுத்து அறுத்துவிட வேண்டும். அப்போதுதான் போக மாட்டான்" என்று குமுறும் சுலபாவிடம் வெறும் கோபம் மட்டுமில்லை. தயார் உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெண்களைச் சங்கப்படுத்தி வேலை நிறுத்தம் செய்ய அவள்தான் உழைத்தாள்.

எங்களிடம் பிளவுகள் உண்டென்றால் அது அமைப்பில் உள்ள பிளவுகளின் எதிரொலிதான். ரோஸா விஷயத்தில் அவளை வேறு மாதிரி அணுகியிருக்க வேண்டும். கிளிமூக்கு மாங்காய், மிளகு பொடி தூவிய வெள்ளரிக்காய்த் துண்டுகளின் சேர்க்கையோடு ராமபக்த ஹனுமான் படம் பார்த்தபோது, சடேலென்று மார்பைப் பிளந்து உள்ளே ராமர், மனைவி தம்பியுடன் இருப்பதைக் காட்டுவானே, அந்த மாதிரி ஒரு பரஸ்பர சம்பாஷணைத் தொடர்பு இருக்க வேண்டும். உள்ளே இருப்பதைப் பிளந்து காட்டுவது மாதிரி எவ்வளவு சுலபமாக இருந்தது அந்த மாதிரி பேச்சுத் தொடர்பு! ஒரு நெற்றிக்கண்ணைத் திறந்தால் போதும், மீறிக்கோபம் வந்தால் ஓர் ஒற்றைக்கால் தாண்டவம் ஒரு குச்சியை எதிரில் போட்டுப் பேசினால்கூடப் போதும். வாயைப் பிளந்து காட்டினால் போதும் ஈரேழு உலகங்கள் தெரிய. எவ்வளவு எளிது. சொற்கள் சேரச் சேரத் தொடர்பு இற்றுப்போய்விட்டது. இதை மீறி ஒரு தொடர்பு இருக்கிறது. மெளனத்தில் கண்களில். கைகள் இணைவதில்.

ஒவ்வொரு பெண்ணும் இன்னொருத்தியின் கண் அடியில் உள்ள கரு வட்டங்களைத் தடவ வேண்டும். பிரசவக் கோடுகளில் உள்ளங்கை களை வைக்கவேண்டும். புடைத்த நரம்புகளில் விரலை வைக்க வேண்டும். வெடித்த கால்களைக் கைகளில் ஏந்தவேண்டும். யோனியில் முகம் பதிக்க வேண்டும்.
O

(என் வருகையில் உன் பங்கு பற்றி நான் அவளிடம் சொல்லவில்லை. அது பெரிய முன்னுரையாகிவிடும். உன் டெல்லி வாழ்க்கையின் ஆரம்ப வருடச் சோகங்களை இப்போது இவர்கள் கிரகிக்கும் நிலையில் இல்லை.

ஒரு கடும் வெய்யில் கால மாலையில்தான் - உன் ஆய்வுக் கட்டுரை பிரசுரமான வெய்யில் காலம்-நீ என்னை அணுகி என்னுடன் நீங்கள் துணிக்கடைக்கு வர முடியுமா?" என்றாய். கடையில் நீ இரு பான்ட் துணிகள்-நிறங்கள் கூட நினைவிருக்கிறது, கரும் பழுப்பும் கரு நீலமும்மற்றும் இரண்டு ஷர்ட் துணிகள் எடுத்தாய் நான்தான் தேர்ந்தெடுப்பதில் உதவினேன்.

 நாங்கள் சுட்டிக்காட்டிச் சிரித்த உன் தொளதொள பான்ட்களுக்கும், ஹிந்தி சினிமா வில்லனின் சாயம் மங்கிய மேல் உடைகள் போன்ற சட்டைகளுக்கும் அதன் பின்தான் நீ விடுதலை தந்தாய். அதுவரை குளிர்காலத்தில் மெத்தையின் ஒரு பகுதியால் உன்னை மூடிக்கொண்டு நீ தூங்கினாய். பாதிரி கோட்டு மாதிரி ஒரு கறுப்புக் கோட்டும், உன் கறுத்த நிறத்தின் பின்னணியில் பளிரென்று அடித்த ஒரு வர்ணக் கலவைக் கம்பளிச் சட்டையும். ஆனால் அவற்றில் நீ கூச்சப்படுவது போல் தெரியவில்லை. நீ குறுகிப் போனது நம் புரொபஸர் தன் தயாள மனப்பான்மையை வெளியிட "இதுதான் நான் சேர்த்துக் கொண்டுள்ள ஹரிஜன் ஸ்டுடன்ட்" என்ற உன்னை எழுந்து நிற்கச் சொன்னபோதுதான். அதைவிட, பம்பாயிலிருந்தே உனக்கு உதவி, இதுவரை உன்னை ஊக்கியிருந்த குமார் உன் தோளின் மேல் எஜமானனின் கையை வைத்ததுதான் உன்னைக் குத்தியது. தன் தெளிய மார்க்ஸிய சித்தாந்தங்களை உன்னுடன் பகிர்ந்துகொண்ட குமார். "உதாரணமாக நம் லெனினை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று அவன் உன்புறம் கையை நீட்டிய போதெல்லாம் அந்த விரலிலிருந்து உன் பக்கம் தேள்கள் பாய்ந்தன. தான் கைதுக்கிவிட்ட தோரணையை அவன் விட மறுத்த போதுதான் நீ விலகினாய். ஒரு நாடகம் கலந்த நிகழ்ச்சியில். ஹரிஜன மாணவர்களிடம் நீ பேசி அவனுக்கு ஒட்டுப் போடச் செய்யவேண்டும் என்று அவன் விரும்பினான். 'ஹரிஜன மாணவர்கள் வாழ்க்கையில் நிறையக் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். எதுவும் அவர்களாக விரும்பித் தேர்ந்தெடுக்காத கஷ்டங்கள். அவர்களாகத் தேர்ந்தெடுக்கும் கஷ்டமாக இருக்கும் உன் தலைமை. இதை நான் செய்ய முடியாது. என் அருமை மார்க்ஸிய நண்பர்களே' என்று நீ அழைத்துப் பேசும்போது ஹரிஜனர் என்ற அர்த்தம் அதில் தொக்கி இருக்கும். அதைக் கேட்க சில குற்றமற்ற செவிகளை என்னால் அனுப்ப முடியாது" - எல்லோர் முன்னாலும் நீ சொன்னாய். உன்னுடைய அந்தச் சகிக்கமுடியாத கறுப்புக் கோட்டில் நீ இருந்தாய். யாரும் உன்னைக் கவனிக்கக்கூட இல்லை. நீ பேசியவுடன் ஒரு மின்சாரம் பரவியது. நன்றி மறந்த நாய் என்றான் குமார். நீ கதவருகில் போய்த் திரும்பிப் பார்த்தாய்: ஒரு நாயின் கண் மூலம் உன்னைப் பார்க்கும்போது நீ ஒரு சுவையான எலும்புத் துண்டாகக்கூடத் தெரியவில்லை எனக்கு என்றாய்.

எவ்வளவு பாலைவனங்களைக் கடந்து, கால்கள் கொப்பளிக்க, குருதியும் சீழும் சேர நீ நடந்தாய் என் நண்பா ! ஆனால் உன் வேர்கள் அருகே இவ்வளவு ஈரம் கசியும் மண் இருக்கும்போது அதில் உன் பாதங்களை அவ்வப்போது பதித்திருக்கலாகாதா? ஆனால் உன் அடி மனத்தில் இவர்களைப்பற்றி ஒர் அவமான உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். நல்ல பதவிக்கு வந்துவிட்ட அமெரிக்கக் கறுப்பன் ஹார்லெமில் உள்ள பெற்றோர்களை நினைத்து அவமானப்படுகிறான் என்று சோபனா படித்த கட்டுரை நினைவிருக்கிறதா?)

இனி விஷயத்துக்கு வருகிறேன்.

ஆரம்பச் செய்திகளில் ஒரு விட்டேற்றித்தனம் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு இப்படி ஆனதுபற்றி இவர்களின் குடிசைப்பகுதியினர் நடத்திய ஊர்வலம்பற்றிய நாலெழுத்துச் செய்தி மட்டும்தான். பலாத்கார எதிர்ப்பு அணி இதில் ஈடுபட்டு அவர்கள் வக்கீல் பகிரங்க அறிக்கை விட்ட பின்புதான் மற்ற பத்திரிகைகள் இதைப் பற்றிப் பத்திபத்தியாய் எழுதுகின்றன. இந்தச் செய்திகளையும் வக்கீலின் அறிக்கையையும் நான் ஒரு வார்த்தை விடாமல் படித்து விட்டேன். ப. எ. அணியின் செயலாளர் மீனா அரோரா எல்லாவற்றையும் தந்தாள்.

"இண்டியன் எக்ஸ்பிரஸ்" இதை முதல் பக்கத்தில் பெரிய அடைப்புச் செய்தியாய்ப் போட்டிருக்கிறது. இதன் பின் "இண்டியன் எக்ஸ்பிரஸ்" பின்வாங்கிய காரணம் ரோஸா போலீஸ் புகார் கொடுக்க மறுத்தது தான். ப.எ.அணியின் வேகம் தடைப்பட்டதும் இதனால்தான். இங்குதான் அவர்களுக்கும் ரோஸாவுக்கும் இடையே பிளவு. அவர்களால் அவளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மாற்றமுடியவில்லை. அவள் அவர்கள் காரியாலயத்தின் ஒரு கூட்டத்தில் பேசியதை அவர்கள் ரிகார்ட் செய்திருந்தார்கள். நான் கேட்டேன். அவள் ஆரம்பிப்பதே ஒரு தாக்குதல், "எனக்கும் உங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. உங்கள் புடவையின் தரத்துக்கும் என் புடவையின் தரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லவில்லை. அதைவிடப் பெரிய வித்தியாசம், உங்களை யாரும் பலாத்காரம் செய்து உங்களைக் கிழிக்கவில்லை. நான் கிழிபட்டிருக்கிறேன். ரத்தம் கொட்டியிருக்கிறேன். நம்மைச் சேர்த்திருப்பது இதுதான். நம்மைப் பிரிப்பதும் இதுதான்."

விலா குல்கர்னி "ஈவ்ஸ் வீக்லி"யில் இந்தக் கூட்டம் பற்றி எழுதுகிறாள் - "என் பூர்ஷ்வா வாழ்க்கையில் டீச்சரின் சிறு கோபம், சகத்தோழிகளின் காய்விட்ட கோபம், அப்பா அம்மாவின் கண்டிப்பான வளர்ப்புக்கான கோபம், கணவரின் சில்லறைச் சிடுசிடுப்புகள் தவிர கோபத்தை நான் அறிந்தவளல்ல. இதனால்தான் ரோஸா என்னிடம் பயத்தை உண்டாக்குகிறாள். அதைப்போல் கோபத்தை நான் பார்த்ததில்லை. அனுபவித்ததில்லை. அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு எழுந்தபோது என் உடலெல்லாம் வியர்த்து உள் ஆடைகள் ஒட்டிக்கொண்டு விட்டன. அவள் கடைசியில் கேட்ட கேள்வி இன்னும் என்னில் எதிரொலிக்கிறது. யாரிடம் நீங்கள் நீதி கேட்க விரும்புகிறீர்கள்? யார் என்னைக் குலைத்தார்களோ அவர்களிடமா? யாருக்காக இருக்கிறது நீதி மன்றம்? எனக்காகவா? நான் ஒரு ஈ, எறும்பைக்கூட வேண்டுமென்றே கொன்றது கிடையாது. ஆனால் ஒரு நாள் வரும். அப்போது அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஒவ்வொருவனின் குடலையும் நான் பிரித்து இழுத்து வெளியில் போடுவேன். அவர்கள் ரத்தத்தைப் பூசிக்கொள்வேன். இதற்கு எனக்கு எந்த நீதிமன்றத்தின் அனுமதியும் தேவையில்லை. நான் அனுமதி கேட்பவளில்லை. பறிப்பவள்.


இப்படி அவள் சொல்லித் தலையை ஆட்ட கட்டியிருந்த நீண்ட முடி மறைந்து வைத்திருந்த பாம்பு மாதிரி பொட்டென்று கீழே விழுந்தது. அந்த பிம்பம் என் மனத்தில் என்றும் இருக்கும்" என்று முடிக்கிறாள் வீலா குல்கர்னி அவள் கட்டுரையில்.

எட்டாவது மார்ச் ஊர்வலக் கோரிக்கையில் பல கட்சிகளின் கோரிக்கைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறது ரோஸாவின் விவகாரம். காரணம், நீ ஆதரிக்கும் கட்சியினர் இதைத் தனித்த ஒரு நிகழ்ச்சியாக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. தனிநபர் பற்றிய விவகாரம் அளவுக்கு மீறி விரிவதை அவர்கள் எதிர்த்து இருக்கிறார்கள். இதை அமைப்பின் சறுக்கல்களின் பின்னணியில் பார்க்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள். அனைத்துலக நிதி ஸ்தாபனத்தின் நடை முறைக் கொள்கைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சந்தை ஆக்ரமிப்பு, இவற்றின் மகத்தான பின்னணியில்தான் இங்குள்ள அமைப்பின் குறைபாடுகளைப் பார்க்க முடியும் என்று கூறுகிறார்கள். முதலில் அமெரிக்கத் துரதரகம் முன்பு நின்று அதை எதிர்த்துக் கோஷமிட்டபின்தான் ஊர்வலம் என்பது அவர்கள் கட்சி. ரஷ்யாவை ஏன் விட்டு விட்டீர்கள், அந்த ஏகாதிபத்தியம் மட்டும் குறைவா? நாங்கள் குடிசையில் உள்ள பெண்களிடம் எழுச்சியை உண்டாக்கு கிறோம். அதனால் விலைவாசி உயர்வு, தண்ணிர்ப் பிரச்சினை, கெரோஸின் விலை இவற்றையும் கோரிக்கைகளில் இணைக்கவேண்டும். அப்படித் தூதரகம் முன்பு கோஷமிட வேண்டும் என்றால் நாங்கள் ரஷ்யத் துரதரகம் முன்பும் கத்துவோம். தயாரா? என்று அடுத்த கட்சி. ப. எ. அணி இந்தப் பிரச்சினையைப் பிரதானமாக வைப்பது வெறும் ஆண் - எதிர்ப்பாகப் புரிந்து கொள்ளப்படலாம், அதைப் போலீஸாரின் வன்முறைக்கு எதிர்ப்பாகக் கொண்டாலும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்தும் பார்வை திசை திரும்பிவிடும்; அதனால் அதற்கு ஒரு தனி ஊர்வலம் இன்னொரு தினம் நடத்தலாம் என்று தீர்மானித்து, அடுத்த நாளே அதைச் செய்யவும் செய்திருக்கிறார்கள். பலாத்காரச் சட்டம் பற்றிக் கூட்டமும் போட்டிருக்கிறார்கள். சட்டம்பற்றிய மறுபார்வை இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டாலும் ரோஸா விஷயம் பிசுபிசுத்துப் போனதற்குக் காரணம் ரோஸாதான். அவள் ஊர்வலத்திலும் கூட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை.

சில ஜனநாயக உரிமைக் கழகங்கள் மூலம் பிரபாகர் ஷிண்டேயின் கட்சியினர் அவளை அணுகியபோது, "வாழ வேண்டிய இளைஞர்களைக் கண்ணைப் பறித்து, எலும்புகளை உடைத்து, முட்டியைப் பெயர்த்துப்போட்டு வைத்திருக்கிறார்கள். போய் மீளுங்கள் அவர்களை. காடுகளில் துரத்தி அடித்துக் கொல்கிறார்கள். அதைத் தடுக்க என்ன செய்தீர்கள்? எனக்கு நீங்கள் என்ன செய்யமுடியும்? போய் எழுதுங்கள் அறிக்கைகளை ரோஸா பலாத்காரம் செய்யப்பட்டாள்; அவளுக்கு நீதி வேண்டும் என்று. கொல்லப்பட்ட பிரபாகர்


ஷிண்டேயை மீட்க முடியுமா உங்களால் முகம், உடம்பெல்லாம் வீங்கி வீங்கிச் செத்தான். எங்கே போனிர்கள் அப்போது? விழுந்து அழ எனக்கு ஒரு ஆதரவான தோள் அப்போது கிடைக்கவில்லை. அன்பும் பாசமும் பலவீனங்கள் என்று முணுமுணுத்தீர்களாமே? இப்போது என்ன அக்கறை?" என்று கண்டபடிக் கோபமாகப் பேசி அனுப்பியிருக்கிறாள்.

இப்படித்தான் அந்த விவகாரம் தேங்கிவிட்டது.
O

மரங்கள் அடர்ந்த, நிலா வெளிச்சம் இலை நுனியைத் தொட்டு மடங்கிவிழும் வனத்தில் கோதாவரி பாருலேகர் நடந்தாள். ஆங்கிலேயர் களால் ஒடுக்கப்பட்டு நசுங்கிக்கொண்டிருந்த ஆதிவாசிகளின் நேசம் பெற அவள் நடந்தாள். அவளிடம் சுமை ஏதும் அதிகம் இல்லை. ஒரே ஒரு சிவப்புக் கொடிதான். அவர்கள் அவளை ஏற்கும்வரை மரத்தடியில் தூங்கும்போதும், ஏற்றுக்கொண்ட பின் ஆடு, ஆட்டுப் புழுக்கையுடன் ஒரே அறையில் உறங்கிய போதும், தேநீர் வேண்டும் என்று நாவு தவித்தபோதும் அவளை உற்சாகமூட்டியது அந்தக் கொடிதான். பைபிளைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆப்பிரிக்கக் காடுகளில் புகுந்து அலைந்து நடந்த கிறிஸ்துவச் சமயப் பரப்பாளர் களின் ஆர்வத்துக்கு இணையானதுதான் அவளுடையது. ஆனால் இவளிடம் கடவுள் இல்லை. இருந்தது. ஒரு மன எழுச்சி உண்டாக்கு வதற்கான பலம்தான்.

அதே காடுகளில் அவள் வழியில் நடந்தவன்தான் சுதாகர் ஷிண்டே பின்பு வேறு வழியில் போனவன். பிரபாகரின் அண்ணா. அதே காடுகளில்தான் அவன் பல முறை துரத்தப்பட்டதும். கடைசியில் சிறையில் அவன் தூக்குப்போட்டுக்கொண்டதாகச் சொன்னார்கள்.

ஒரு நீலம் பாரித்த கழுத்தின்மேல் தன் அரசியல் ஏறாத விரலால் பிரபாகர் ஷிண்டே நீவிவிட்டிருக்கிறான். விரலில் அந்த நீலம் ஏறியதுபோலிருந்தது. அந்த நீலக் கழுத்து அவன் மூளையின் பாதியில் என்றும் அடைத்துக் கிடந்தது. அவனுக்கு ஆதிவாசிகளின் குடிசை களில் துரங்க ஓர் இடம் எப்போதும் இருந்தது.

ஆதிவாசிகளின் நிலப் பிரச்சினைபற்றிய கூட்டம் ஒன்றில் பெண்கள் குழு ஒன்று தொழிலாளிப் பெண்களுடன் வந்தது. அப்போது ரோஸாவும் வந்திருந்தாள். கூட்டுப்பாடல்களுக்கு அவள்தான் முதல் குரல் கொடுத்தாள். மராட்டியின் அடி ஆழத்தில் கொஞ்சம் தமிழ்ப் பசையோடு பாடினாள். அவள் இன்னும் ஆலைத் தொழிலாளிகள் சங்கத்தில் வேலை செய்ய ஆரம்பித்திருக்கவில்லை. தன் தோழியோடு வந்திருந்தாள். லெனினின் கருத்துப்படி மேலே படிக்கலாம் என் றிருந்தாள்.


பிரபாகர் ஷிண்டே அவள் வாழ்க்கையின் முதல் திருப்பு முனை. அவள் படிக்கவில்லை. சங்க வேலைகளில் ஈடுபட்டாள். அதைக் கனவுகளில் மிதக்கும் செய்கையாக நினைத்தான் லெனின். வந்தான். ரோஸா நேருக்குநேர் அவனைப் பார்க்கும் உயரம் வளர்ந்து விட்டிருந்தாள். பிரபாகர் ஷிண்டேக்கும் லெனினுக்கும் விரலைச் சுட்டிச் சண்டையிட்டுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. "சுவரைத் தாண்ட ஏணி வேணும். சுவரையே உடைச்சிட்டா எப்படி?” என்று லெனின் பேசும் முன், "இந்த உபமானங்களை ஏதாவது கருத்தரங்குல சொல்லுங்க. அதுதான் சரியான இடம். நீங்களெல்லாம் இருக்க வேண்டிய இடம்" என்று ஷிண்டே இடை வெட்டியதும், அடிதடி வராத குறைதான்.

ஒருநாள் சாயங்காலம் பிரபா ஒரு மராட்டிக் கட்டுரை படித்துக் காட்டிக்கொண்டிருந்தான் ரோஸாவுக்கு ஒர் ஆஸ்பத்திரியில் ஒரு சின்ன டாக்டர். அன்றைக்கு அவருக்கு இரவு ட்யூட்டி. நான்கு கிராமத்து ஆட்கள் ஒரு பதினேழு வயது பூரண கர்ப்பிணிப் பெண்ணைக் கட்டிலில் போட்டுக் கொண்டு எடுத்துவந்தார்கள். பெண்ணைப் பரிசோதித்த சின்ன டாக்டருக்கு வியர்த்தது. ஒரு குஞ்சுக் கை அவள் தொடைகள் இடையே நீட்டிக் கொண்டிருந்தது. அதில் பச்சையும் நீலமுமாய் சீழும் விஷமும் ஏறிக் கொள கொளத்துக் கிடந்தது. அவர் ஒடிப்போய் தனக்கு மேல் இருந்த டாக்டரை அழைத்து வந்தார். அது லட்சத்தில் ஒரு கேஸ் அந்த ஆஸ்பத்திரியைப் பொறுத்தவரை செய்யக்கூடியதெல்லாம் துண்டு துண்டாகக் குழந்தையை வெளியே கொண்டு வருவதுதான். அதை அவர் செய்தார். மறுநாள் காலை பெரிய டாக்டர் அறையில் சண்டை. அந்தக் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை புத்தகத்தில் படித்தபின் செய்துபார்க்க பெரிய டாக்டருக்குச் சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. அவர் காலையில் வரும்வரை செய்திருக்கக்கூடாது என்பது அவர் வாதம். பெண்ணைக் காப்பாற்றச் செய்ததாக இரவு டாக்டர் கூறினார். பெரிய டாக்டர் அவர் ஸீனியாரிட்டியை அவமதித்து விட்டதாகச் சொன்னார். சின்ன டாக்டர் கிராமத்தினரிடம் வந்தார். அவர்களுக்கு உபதேசிப்பது தன் பட்டணத்துக் கடமை எனறு நினைத்தார்: "முன்பே கூட்டி வரக்கூடாதா?’ என்றார். அவர்களில் வயதானவர், "கூட்டி வரலாம். எங்க கிராமத்துல ரொம்ப நாளுக்கு அப்புறம் மழை கொட்டிச்சு. எல்லாரும் வயல் வேலைக்குத் தேவைப்பட்டாங்க. இவளும் வயல்லதான் இருந்தா. வேலை முடிஞ்சதும் கூட்டிட்டு வந்தோம்" என்றார். அந்தக் கொளகொளத்த கை தொங்க அவள் வயல் வேலை செய்திருப்பாள் என்பது சின்ன டாக்டரின் வயிற்றைப் பிசைந்தது. அவரே எழுதியிருந்தார் கட்டுரையை.

படித்துவிட்டு லெனின் பக்கம் திரும்பினான் பிரபா. "அறிவு ஜீவிகள் இதற்காக ஒரு சொட்டுக் கண்ணிர் சிந்த முடியுமா? கண்ணிர் இருக்கிறதா உங்களிடம்?" என்றான். எழுந்த லெனின் தன் கையில் இருந்த கண்ணாடி டம்ளரை பிரபாகரின் மீது கோபமாக வீசிவிட்டு வெளியேறினான்.
O

"அண்ணி."

“உம்"

"தூங்கிட்டீங்களா?"

"இல்லையே?"

" நாரி பத்திரிகைக்காக மட்டும்தானா வந்தீங்க?"

"அதுக்கும் சேர்த்து."

"ஷீலா குல்கர்னி மாதிரி நல்ல இங்கிலீஷில் எழுதவா ?”

"இதுக்கு நான் என்ன பதில் சொல்ல கொலஞ்சு, நசுங்கிப் போகாத பொண்ணுங்க கிட்ட உனக்குக் கோவம் போல."

"சே "

"பின்னே ? நேத்து கார்பாடா பக்கத்துல ஒரு பதினாலு வயசுப் பொண்ணு. ரெண்டு போலீஸு, ரெண்டு வட்டாரத்து தடியன்களா சேர்ந்து பூவை மிதிக்கிற மாதிரி ... அந்தப் பொண்ணு தலையைத் தடவுறபோது அது உன் கையா இருக்கணம்னுட்டு நினைச்சேன். நீ ஒரு தடவு தடவி அவளைச் சரிப்படுத்திப்புடுவே. உன்னால முடியும். உனக்கு அது புரியும்."

"அன்னை தெரிஸாவா ஆகச் சொல்lங்களா?"

"அதுக்கு நிறைய பேர் இருக்காங்க நீ உன் கோவத்தை எங்களுக்கு பலமா தா."

"யோசிக்கிறேன்."
O

ரோஸா எனக்கு ஒரு பேட்டி தந்தாள். அதன் முக்கிய பகுதிகளை உனக்குத் தருகிறேன்.

பிரபாகர் ஷிண்டே மிக மெனமையானவன். வெறும் அடுப்பு எரியும் வெளிச்சத்தில், இரவுகளில், ஆதிவாசிக் குடிசைகளில் அவ னுடன் அவள் மாவுச் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிட்டிருக் கிறாள். காலையில் கையால் குத்தி உடைத்த அரிசிக் கஞ்சியுடன், பூண்டும் மிளகாயுமாய் இடித்த சட்னி சாப்பிட்டிருக்கிறாள். மில்லிலும், ஆதிவாசிகளிடையேயும் அவன் பெயர் ஃபக்கிர். சந்நியாசி எதற்கும் நிதானத்தை இழக்காதவன். (இந்த நியதி உடைந்தது உன்னிடம் மட்டும்தான்)


அந்தக் குறிப்பிட்ட மாலையை அப்புறம் அவள் பலமுறை நினைத்துப் பார்த்தாள். சிறுசிறு விஷயங்களும் பிரம்மாண்ட நினைவுப் பிழம்புகளாய் உள்ளன அவள் மனத்தில். அன்று மத்தியானம்தான் அவன் ஆதிவாசிகள் இருப்பிடத்திலிருந்து திரும்பியிருந்தான். அவள் சங்கத்திலிருந்து வந்தபோது அவன் வந்திருந்தான். அன்று அவள் சீக்கிரமாகவே வந்திருந்தாள். மில்லின் கிடங்கில் யாரோ நெருப்பு வைத்துவிட்டார்கள். ஒரே குழப்பம். அவனும் அம்மாவுமாக பெரிய விருந்துக்கான பட்டியல் போட்டிருந்தார்கள். பூரி, கடி, ஆலுரோஸ்ட், புலாவ், ராய்தா விஷயம் என்னவென்று கேட்டால் இருவரும் சொல்லாமல் சிரித்தார்கள். விருந்துப்பட்டியலில் இருந்த விஷயங்கள் எல்லாம் அவளுக்குப் பிடித்தது.

மில் கிடங்குபற்றி அவனிடம் சொல்லிவிட்டுக் குளித்து உடை மாற்ற அவள் உள்ளே சென்றாள். பத்து நிமிஷத்திற்குள் அவள் வெளியே வந்தபின் அது நடந்தது.

ரோஸா சொன்னாள்:

பிரபாவைப் பிடிச்சுக்கிட்டுப் போனபோது அவரு ரோஜாச் செடிக்குத் தண்ணி விட்டுக்கிட்டிருந்தார். சாதாரண அரெஸ்ட் இல்லை. பின்னால ஒரு உதை. கீழே விழுந்து பல்லு தெறிச்சிச்சு. பிடரில ஒரு அடி. அவரு வாயில ரத்தம் ஒழுகிச்சு.

"கோடவுன்ல நெருப்பு வெச்சுட்டு இங்கியா வந்தே?"ன்னாங்க.

"நான் இங்கியேதான் இருக்கேன்"னு சொன்னதுக்கு ஒரு அறை. கண்ணு முன்னாலியே ஒரு கண்ணு வீங்கி மூடிக்கிச்சு. அடுத்த நாள் நானும் இன்னும் சில பேரும் போனோம். முதல்ல அவங்கதான் போனாங்க. என்னை வேண்டாம்னாங்க. ஆனா நான் போனேன். அவரைக் கிழிச்சுப் போட்டிருந்தாங்க ஒதடு நீலமா வீங்கியிருந்துச்சு. பேச முடியலை. மார் மயிரெல்லாம் ரத்தம். ஒரு கையி மடங்கி நீலமா கிடந்திச்சு மொகமெல்லாம் வீக்கம். மொனகினாரு நான் கூப்பிட்டப்போ திரும்பினபோது லுங்கி வெலகிச்சு. தொடயெல்லாம் நீலம் கொட்டை பலூன் மாதிரி வீங்கி நாகப்பழக் கலர்ல பளபளன்னு இருந்துச்சு. இன்னிக்கும் கண்ணை மூடினா தெரியறது அந்த வீங்கின கொட்டைதான். நீல பலூன் மாரி உப்பிக்கிட்டு, ரத்தம் ஒலந்துபோய் ... வலிச்சிருக்கும் ... எவ்வளவு வலிச்சிருக்கும் ... அவ்வளவு வீங்க எவ்வளவு உதை... பலமான பூட்சு காலால.. ஒத்தக் கண்ணால என்னப் பார்த்தாரு கண்ணுல உசிரு இல்ல. செவசெவன்னுட்டுக் கொழம்பிக் கிடந்துச்சு வாயை அசைச்சாரு.

அதுதான் கடைசி. மறுநா ஒடம்புதான் கெடச்சுச்சு. நானும், அம்மாவும், அவங்கம்மாவும், தங்கச்சியுமே அதைச் சொமந்துகிட்டு ஊர்கோலம் போனோம். அப்புறமா என்ன வந்து அரெஸ்ட் பண்ணி னாங்க ஒடந்தைன்னுட்டு.

பொம்பளை போலீஸ் ஸ்டேஷன் போனா என்ன ஆகும்? அதுதான் ஆச்சு. தடிதடியா வந்து விழுந்தாங்க மேல. மயக்கம் போட்டப்ப எல்லாம் தண்ணி அடிச்சு எழுப்பினாங்க முழிக்கிற போதெல்லாம் ஒருத்தன் மேல இருந்தான். அவங்க பண்ணி சலிச்ச பெறகு இருக்கவே இருக்குது குச்சி, கம்பு, ஒயருன்னுட்டு, எதெது நுழையுதோ அது. அப்புறம் சிகரெட் நெருப்பால மார்ல சுட்டாங்க கோடவுன்ல நெருப்பு வெச்சவன் கெடச்சுட்டான். உடம்புல பண்ண இன்னும் ஒன்றும் இல்ல - வெளில அனுப்பிட்டாங்க.

வந்த ஒடனே அம்மா என்னைப் பார்த்துக் கேட்டாங்க-விபரீதமா எதுவும் நடக்கல்லியேடீ பெண்ணெ - பயந்துகிட்டே கேட்டாங்க.

ரோஸா சிரித்தாள்.

(கைது செய்யப்பட்ட அன்று மாலை விருந்து எதற்கு என்று உனக்குத் தெரிய வேண்டும். அது உன் தங்கையின் கர்ப்பத்தைக் கொண்டாட டாக்டர் உன் அம்மாவிடம் அன்றுதான் செய்தியை உறுதிப்படுத்தியிருந்தார். ரோஸா இதை என்னிடம் கூறவில்லை. பிரபாகரின் தங்கை என்னிடம் சொன்னாள்.

ரோஸா திரும்பி வந்த அன்று மத்தியானம் உட்கார்ந்திருந்தாளாம். அடி வயிற்றில் வலி என்று அவள் கூறி முடிப்பதற்குள் அவளைச் சுற்றிலும் ரத்தக் கிளறியாம். அப்படித்தான் ஒரு சின்ன பிரபாகரோ, ரோஸாவோ தங்கள் முடிவுக்குத் தள்ளப்பட்டது. நான் ரோஸாவிடம் இதுபற்றிக் கேட்டபோது, "ஆமா, நான் சொல்லல, யார் கிட்டயும் சொல்லல. நடந்த கோரத்துல இது ஒரு கோரம். இங்க செல பொம்பளைங்களுக்குப் பத்து மாசம் முழுசும் உசிரைச் சொமக் கறதுக்கான சுதந்திரமும், உரிமையும் இன்னும் வரல போலிருக்குது. இதை எந்தத் துரதரகம் முன்னால போய் கத்தட்டும் நானு? எந்த ஜட்ஜுக்கு நேரம் இருக்குது இதைக் கேட்க?" என்றாள். பின் அவள் தன் இரு மார்பகங்களையும் கல்லைச் சுமப்பது போல் தன் இரு கைகளால் தாங்கி, பொட்டுக் கண்ணிர் இல்லாமல் ஒரு கேவல் கேவினாள். கனத்து வரும் என் மார்பகங்களை அடிக்கடி தொட்டுப் பார்த்து, அதில் நிழலாடத் தொடங்கியிருக்கும் பச்சை நரம்புகளில் நீ உன் இதழ்களை, வலிக்கக்கூடாது என்று பஞ்சுபோல் மெத்தென்று வைப்பதை நினைத்துக் கொண்டேன்)

O
காசிபாயி பரேலுக்கு வந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டன. அவள் வயதையெல்லாம் கேட்பது அவளைப் பகைத்துக்கொள்வதற் கான ஆயத்தம்தான். "ஏன் மாப்பிள்ளை பார்த்திருக்கிறாயா? கூட்டிவா ரெண்டு பெத்துக்கலாம் இன்னும்" என்பாள் பளிச்சென்று. அவளுடைய பிள்ளை குடித்துவிட்டு போலீஸ் லாக்கப்பில் கிடந்தால் கூட்டிவருவது இவள்தான். போலீஸ் அடிக்க மறந்த அடியை இவளே அவன் மண்டையில் போட்டுவிடுவாள்.

பரேலே அவள் கண் முன்தான் விஸ்தாரமாயிருக்கிறது. ஏன், லஞ்சம் வாங்கிய காண்டிராக்டர்கள் அந்த மேம்பாலம் கட்டி, அது ஒர் இரவு உடைந்து கீழே படுத்திருந்த எல்லோரையும் துவம்ச மாக்கிய சமீப நிகழ்ச்சிகூட அவள் முதலிலேயே யூகம் செய்ததுதான். "மும்பாயில் உடைந்து விழாமல் எது கட்டியிருக்காங்க இதுவரை?" என்று நிகழ்ச்சியைத் துடைத்து விட்டுவிடுவாள். பரேல் வினாயகர்கூட இவள் கண்முன் வளர்ந்தவர். வினாயக சதுர்த்திக்கு உட்காரும் சிறு பொம்மையாக இருந்தவர், ஒவ்வொரு வினாயக சதுர்த்திக்கும் வளர்ந்துகொண்டேபோய், இந்த வருடம் அறுபது அடியாக நின்றது வரை சரித்திரம் காசிபாயிக்குத் தெரியும். நின்றது மட்டுமல்லாமல், ஒரு காலை இன்னொன்றின் மேல் வளைத்து, கையில் புல்லாங்குழல் வேறு. ஏன், கிருஷ்ணனின் ஏக போக உரிமையா என்ன? மூவிக வாகனம் எல்லாம் அதோ மூலையில் சின்னதாக இருக்கிறது. மகாராஷ்டிரத்தின் இவ்வளவு பெரிய கடவுளுடன் எலியைச் சம்பந்தப்படுத்திப் பெரிசுபடுத்துவதை வினாயக பக்தர்கள் ஏற்க மாட்டார்கள். அதனால்தான் தாமரைமேல், குழலுடன் என்று மாற்றம் தாமரையும் குழலும் யாரிடம் இருந்தால் என்ன? வினாயகரின் முகம்கூட யானைக்களையை மீறிக் கொஞ்சம் அமிதாப் பச்சன் சாயல் அடிப்பதாகச் சிலர் சம்சயப்பட்டார்கள். இந்தப் பரேல் வாதம் எல்லாம் ஜனித்துப் பெருகியதற்கெல்லாம் சாட்சி காசிபாயி. காசிபாயை அதிர்ச்சியடைய வைக்கிற மாதிரி விஷயம் பரேலில் நடந்ததாகச் சரித்திரம் இல்லை. ஆனால் காசிபாயால் ஒரு மாலை வேளையை மறக்க முடியவில்லை. அதைப்பற்றி அவள் பேசாத காரணம் அவள் அதனின்றும் இன்னும் மீளாததால்தான்.

காசிபாயி, ஸ்ேட் வீட்டு வேலையை முடித்துவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவில் அவர்களுடன் பாதி ஹிந்திப் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்தப் பிண ஊர்வலம் அவள் கண்ணில் பட்டது. பரேல் கூட்டமே சற்று வெலவெலத்து நின்றது. பாடையைத் தூக்கிச் சென்றது. நான்கு பெண்கள். இரண்டு வயதானவர்களும், இரண்டு இளம் பெண்களும், ஒருத்தியின் தலைமுடி விரிந்து தொங்கியது. யார் கண்ணிலும் ஜலம் இல்லை. முடியைப் பிரித்துப் போட்டவள் பார்வை எந்தப் பக்கமும் திரும்பவில்லை. கேட்பவர்களுக்கு இன்னொரு பெண்தான் பதிலளித்தாள். சீக்கிரமே பாடையின் பின் ஒரு கூட்டம் சேர்ந்தது. "புலிஸ் அத்யாசார், நஹி சலேகி என்ற கோஷம் கிளம்பத் தொடங்கியது. காசிபாயும் சேர்ந்துகொண்டாள். அவளைத் தொடர்ந்து பல பெண்கள்.

அவர்கள் வெகு தூரம் நடந்தார்கள் என்பது காசிபாயிக்கு நினைவு இருக்கிறது. எரியவைத்துவிட்டுத் திரும்பும்போது காசிபாயிக்கு என்ன தோன்றியதோ என்னவோ, மற்றவர்களை விலக்கிக்கொண்டு போய் அந்த முடிவிரிந்த பெண்ணைப் பாய்ந்து அனைத்துத் தன்மேல் சாய்த்துக்கொண்டு தலையைத் தடவிவிட்டுத் தன் மார்பில் அடித்துக்கொண்டு அரற்றலானாள்.

வேறு எந்தக் கட்சியோ, குழுவோ தன் அனுதாபத்தையும் உதவியையும் அளிக்கும்முன், காசிபாய் தன் மார்பில் ஓங்கி அடித்துக் கொண்ட ஒர் அறையில் தன் எதிர்ப்புக் குரலை வெளியிட்டு விட்டாள். அந்த அறையைச் சொற்களில் மொழிபெயர்ப்பது மிகவும் கஷ்டம்.
 O

பலாத்கார எதிர்ப்பு அணியின் காரியாலயச் சுவரில் ஒரு செய்தித்தாள் அளவு வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்தது. தாளின் மேல் முனை தடித்த வர்ணப் பென்சிலால் நிறையக் கோடுகளும், அம்புக்குறிகளும், அடைப்புக்குறிகளும், எழுத்துகளும் இருந்தன. தாளின் ஆரம்பத்தில் கறுத்த எழுத்துகளில் கொட்டையாய் எழுதப்பட்டிருந்தது. ரோஸாவின் வழக்கு. மீனா அரோரா தரையில் அமர்ந்து தாளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். சுற்றி இருபது பேர் இருந்தனர். ஜோதி, சுவ ரொட்டிகளைத் தயாராக்கியாயிற்று. மேன்கா பதிப்பக ஸேட்ஜி இவள் போய் சுவரொட்டிகள் பற்றிய விவரங்கள் சொன்னதும் தாளை எடுத்து விலைப்பட்டியல் போட்டார். அதைக் கையில் வாங்கி நாலாய் மடித்து அவரிடமே கொடுத்தாள் ஜோதி.

"இது எனக்குத் தேவையில்லை ஸேட்ஜி. எங்களுக்கு நீங்கள் ஒரு குறைந்த விலைப்பட்டியல் போடப்போகிறீர்கள்" என்றுவிட்டுத் தன் சோடா பாட்டில் கண்ணாடி மூலம் சிரித்தாள்.

"யார், நானா?” "நீங்களேதான்."

"மஹாலகடிமி மந்திருக்கு மட்டும்தான் நான் தானம் செய்யும் வழக்கம்."

"இந்த வருடம் எங்களுக்கும் கொஞ்சம் தானம் செய்யுங்கள்."

"எவ்வளவு?"

"உங்களால் முடிந்த அளவு" என்றுவிட்டு மடக்கென்று எழுந்து தலைப்பு முனையை ஏந்திப் பிடித்துவிட்டுச் சிரித்தாள்.

அணியின் விகடன் ஜோதிதான். தான் சுவரொட்டி அடித்த அனுபவத்தைக் காது, மூக்கு வைத்துச் சொல்லக் காத்திருந்தாள்.


விலா குல்கர்னி "ஈவ்ஸ் வீக்லி"யில் நீண்ட கட்டுரையாய் வெளி வந்திருந்த அவள் இரண்டாவது கட்டுரைப் பக்கங்களைப் பிரித்து வைத்தாள். இரண்டொரு மராட்டி இதழ்களையும், குஜராத்திப் பத்திரிகைகளையும் கொண்டு வந்திருந்தாள் ரீலதா. ஜனநாயக உரிமைக் கழக ராதா அந்த மாத இதழை பலாத்காரத்தைப்பற்றி விவாதிக்கச் செலவிட்டிருந்தாள். ரோஸா வழக்கைப் பிரதான கட்டுரையாக்கியிருந்தாள்.

மீனாட்சி, பெரிதாக்கப்பட்ட பம்பாய் வரைபடத்தில் அவர்கள் மேற்கொள்ளப்போகும் ஊர்வலத்தின் வழியைச் சிவப்புப் பென்சிலால் குறித்துக்கொண்டிருந்தாள்.

அம்ருதா ஸிங் உள்ளே நுழைந்தாள். அப்போதுதான் கோர்ட்டி லிருந்து வந்திருந்தாள். கறுப்பு அங்கியை இன்னும் களையவில்லை. நுழைந்தவாறே, "முதல் தடவை ரோஸாவைப் பரிசோதித்த டாக்டர் சாட்சி சொல்ல ஒப்புக்கொண்டாகிவிட்டது" என்றாள்.
O

ரோஸாவைச் சம்மதிக்க வைக்க ஒரு வாரமாயிற்று. அவள் வாதம் தீர்மானமாக, துளி ஓட்டையில்லாமல் இருந்தது. விளம்பரம் பற்றி வெட்கமோ கூச்சமோ அவளுக்கு இருக்கவில்லை. ஆனால் நீதிமன்றங்களின் நீதிபற்றி அவளுக்கு உறுதியான அவநம்பிக்கை இருந்தது. நான் சொல்லக்கூடியதெல்லாம் எந்த அமைப்பு உன்னை ஒதுக்குகிறதோ அதன் ஸ்தாபனங்களை - உன்னை ஒடுக்கப் பயன் படுகிறதே அவற்றை-நீயும் உன்னளவுக்கு உபயோகி என்பதுதான். ஜனநாயக உரிமைக் கழக ராதாவும் இதை வந்து வற்புறுத்தினாள். ரோஸா டீ போட்டுத் தந்தாள். எங்களுடன் பல மணி நேரங்கள், இரவில்கூட, உட்கார்ந்திருந்தாள். நாங்கள் சொல்வதை எல்லாம் அவள் கவனமாகக் கேட்டாள். மாட்டேன் என்பதை அவள் வாய் விட்டுச் சொல்லாமலே அதன் அலைகளை அறையில் பரவவிட்டாள். கடைசியில் அவளைக் கணிய வைத்தது உன் அம்மாதான். சண்டை யிடும் பாணியும், ஆயுதமும் இப்படித்தான் என்பது சாஸ்வதமாக்கப் பட்டது இல்லை. தண்ணிரில் சண்டை போடும்போது துடுப்புத்தான் ஆயுதம், படகு கவிழ்ந்தால் கரைவரை கைதான் துணை சொன்னது உன் அம்மா.

கடைசியில் ரோஸா சரி என்றாள். நாங்கள் சேர்க்க வேண்டிய நிதி பற்றியும் திட்டங்கள் பற்றியும் பேசியபோது தன் தலைப்பின் முடிச்சை அவிழ்த்து முதல் எட்டனாவைத் தந்தது உன் அம்மாதான். (ஆமாம். அதுதான் இன்றுவரை உன் அம்மாவின் பணப்பை. ஸ்டேஷன் விடைபெறல் நினைவிருக்கிறதா?)

உன் அம்மா போன்றவர்களிடம் ஒரு பாஷை இருக்கிறது. அதற்கு, சொற்களுள்ள மொழியின் ஏற்ற இறக்கங்களும், ஒரு புலப்படாத உருவ அமைப்பும் இருக்கிறது. இருந்தும் அதில் சொற்கள் இல்லை. கை வீச்சில், கண் பார்வையில், முதுகில் அழுத்தும் கையில், சிரிப்பில், அழுகையில், அரற்றலில், ஒலத்தில், சொற்கள் நிராகரிக்கப்பட்ட மெளனத்தில் அழுந்திக்கொண்டிருக்கிற பாஷை இது. எங்களையும் அவர்களையும் பிரிப்பது இந்த பாஷைதான். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நாங்கள் பேசினாலும், அது ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் மொழிதான். வெறும் பாலம். நாங்கள் தேடுவது வேறு பாஷை என்று தோன்றுகிறது. இந்தப் பக்கம்- அந்தப் பக்கம் என்று இல்லாத பாஷை இரு கரைகளையும் முறுக்கிப் பிணைந்துவிடும் பாஷை, சிறு குழந்தை இரு கைகளையும் விரித்துத் தூக்கியவுடன் புரிந்துவிடும் பாஷை.
O

ஊர்வலம் தாதர் சிவாஜி பார்க்கிலிருந்து தொடங்கி முதன் மந்திரியின் வீடுவரை வந்தது. பின்பு காலா கோடா சதுக்கத்தில் வந்து நின்றது. கேட்வே ஆஃப் இண்டியாவிலிருந்து பார்த்த போது தலைப்பால் மூடிய தலைகளாகவே அலைஅலையாய்த் தெரிந்தது. உள்ளே புகுந்த லாரியின் பின்புறம் ஏறிப்பேசியது ரோஸாதான். கடும் கத்திரிப் பூ நிறத்தில் புடவை. மாலை வெய்யில் அதன் மேல் பட்டபோது விஷத்தை விழுங்கிய சிவன் கண்டமாய்த் தெரிந்தது. அவள் வீட்டு ஒரத்தில் ஒரு தொட்டியில் இருந்த வெள்ளை ரோஜாச் செடிபற்றிப் பேசினாள் ரோஸா. அந்தச் செடி மிகவும் ஆசையாய் நடப்பட்டது. பரேல் பஸ் சத்தம், அடுத்தவர் மூச்சு மேலே படும் ஜன நெருக்கடி, பரேலின் கெட்ட காற்று, இயந்திரங் களையே பார்க்கும் அலுப்பு இவற்றுக்கு மாற்றாக இருக்க நடப்பட்ட வெள்ளை ரோஜாச் செடி. அது வெறும் செடி அல்ல. அது ஒரு கனவு. இருவர் நெய்த கனவு. ஒருநாள் பரேல் கூட்டத்தில் ஒரு வெள்ளை ரோஜா தலைகாட்டி சில மாயங்களைச் செய்திருக்கும். இத்தகைய கனவுகள் அந்த வட்டாரத்துக்கு உரியவை இல்லை போலும். வெள்ளை ரோஜாக்கள் வேறு தோட்டங்களுக்கு உரியவை. இந்த வெள்ளை ரோஜாவின் கதை என்ன என்று சொல்கிறேன் என்ற ஆரம்பித்தாள் ரோஸா. ஒரு மணி நேரம் பேசினாள். முடித்து விட்டு அவள் தன் முஷ்டியை உயர்த்திய போது காலா கோடா சதுக்கத்தை முஷ்டிகள் ஆக்ரமித்தன. ஒரு சிறு கோஷமும் எழும்பாமல் அதீத மெளனத்தில் சில நிமிஷங்கள் கடந்த பிறகு "நாரீ ஷரீர் பே அத்யாசார் நஹி ஸ்ஹேங்கே, நஹறி ஸ்ஹேங்கே' (பெண்கள் உடம்பை ஒடுக்குவதைப் பொறுக்க மாட்டோம், பொறுக்க மாட்டோம்) என்று ஹிந்திப் பாட்டு வெடித்துக்கொண்டு கிளம்பியது).
O

ப. எ. அணியின் ஓரறைக் காரியாலாயத்தில் ஒரு சிறு கொண் டாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஊர்வலத்தின் வெற்றியை ஒட்டி அது கொண்டாடப்படவேண்டிய விஷயம்தான். இதுவரை அவர்கள் திட்டமிட்ட வேறு எந்த ஊர்வலமும் இவ்வளவு வெற்றி அடையவில்லை. கடந்த ஊர்வலங்களில் யாரைச் சேர்த்துக்கொள்வது, யாரை விடுவது போன்ற குழப்பங்கள் இருந்தன. ஒரு வயதான மாது, "நல்ல கிறித்துவர்களே, பெண்களை உதாசீனம் செய்வது ஏசுவுக்குத் துரோகம் இழைப்பது. ஏசுவின் பக்கம் வாருங்கள். பெண்களைக் கருணையுடன் நடத்துங்கள்" என்ற வாசங்கள் எழுதிய அட்டையுடனும், விநியோகிக்கத் துண்டுப் பிரசுரங்களுடனும் ஓர் ஊர்வலத்துக்கு வந்தபோது மீனா அரோராவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவள் விளக்கியதும், அந்த வயதான மாது, "நீ கிறிஸ்துவின் எதிரியா?" என்ற அன்புடன் கேட்க, அதில் ஒரு மணி நாழிகை செலவாகியது. கடைசியில் அந்த மாது மீனாவின் பின்னாலேயே பிடிவாதமாகத் தன் அட்டையைப் பிடித்து நடந்தாள் அந்த ஊர்வலத்தில். அது ஒரு நிருபர் கண்ணில் பட்டு "ப. எ. அணி எந்தக் குறிப்பிட்ட கட்சியின் கிளையும் இல்லை; அது அகன்ற ரூபம் கொண்டது என்பது உண்மைதான். அவர்கள் ஏசு கிறிஸ்துவைக்கூட விட்டு வைக்கவில்லை" என்று எழுதினார்.

"பெண்களைத் தெய்வமாகப் போற்றுங்கள்" என்ற மேற்கோள் களுடன் ஒரு குழு வந்தபோது - அந்த ஊர்வலத்தில் வந்ததே அந்த ஒரு குழுதான் - மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. உரத்த சம்பாஷனைக்குப் பிறகு வந்தவர்கள் மீனாவின் ஷர்ட்டைப் பிடித்து உலுக்கி, "பான்ட்-ஷர்ட் போட்டுக்கொண்டு பெண்களுக்கு ஆதரவு தேடாதே. புடவை கட்டு" என்று தனிப்பட்ட முறையில் ஏசுவதில் முடிந்தது. அவர்கள் அணியில் எவ்வளவு பேர் புடவை அணிகிறார்கள் என்றும், உடை என்பது எவ்வளவு மேம்போக்கான விஷயம் என்றும் மீனா விளக்கும் முன் அவள் ஷர்ட் காலர் கிழிந்துவிட்டிருந்தது. வந்தவர்கள் புடவை கட்டியிருந்தாலும் அவர்களுக்கும் தெய்வத் தன்மைக்கும் இடையே மீனாவின் கிழிந்த காலர் தூரம் இருந்தது. நடந்த ஒரே ஒரு பெரிய ஊர்வலத்திலும் வேறு வேறு வழியாய், வேறு வேறு தூதரகங்கள் முன் போய் விட்டுத்தான் அவர்கள் ஓரிடத்தில் சேர்ந்திருந்தார்கள். அவற்றோடு ஒப்பிடும்போத ரோஸா ஊர்வலம் ஒரு வெற்றிதான்.

அந்த ஊர்வலத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடிய வில்லை இவர்களால்.

பரேலின் அத்தனை பெண் தொழிலாளிகளையும், வீட்டுவேலை செய்யும் பெண்களையும், தெருக் கூட்டும் பெண்களையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எண்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்து பெண்கள், காலையில் எழுந்து, சமையலை முடித்துவிட்டு, இடுப்பில் குழந்தை களோடு, சொந்தப் பணத்தில் மின்சார ரயில் டிக்கெட் எடுத்து வருவார்கள் காலை எட்டு மணிக்கே என்றும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை. யாரும் எதையும் எதிர்பார்த்து வரவில்லை. பித்தளைத்தூக்குகளிலும், காகிதச் சுருளிலும் ரொட்டியும் உருளைக்கிழங்கும் அவர்களே கொண்டுவந்தார்கள். சிறு குழந்தைகள் வாயில் முலைக் காம்புகளும், கட்டை விரல்களும், அழுத வாயில் பெப்பர்மின்ட் குச்சியும். தலைப்பை விசிறித் தலையில் போட்டுக் கொண்ட பின் மழை, வெய்யில் அவர்களை ஒன்றும் செய்யாது போலிருந்தது. குழந்தைகளும் முலைப்பாலோடு இந்த உணர்வையும் சேர்த்துப் பருகியவைபோல் சிணுங்காமல் இடுப்பில் இருந்தன. முஷ்டிகள் உயர்ந்தபோது சில கொழுக்கு மொழுக்கு குட்டி முஷ்டிகளும், பெப்பர்மின்ட் ஒழுகிய முஷ்டிகளும், விரல் சப்பியதால் கட்டை விரலில் வடு ஏறிய முஷ்டிகளும் அதில் இருந்தன.

பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகளைச் சுவரில் இருந்த அறிவிப்புப் பலகையில் குத்திக் கொண்டிருந்தாள் பூரீலதா. ஒரு தமிழ்ப் பத்திரிகையும் அதுபற்றி எழுதியிருந்தது. ஊர்வலம்பற்றி எழுதிவிட்டு முடிவில், "ஒரு சந்தேகம், ஊர்வலத்தில் இருந்த சில பெண்களைப் பார்த்தபோது அவர்கள் ஆண்களா பெண்களா என்று தெரியவில்லை. இதுவும் பெண்கள் கோரும் சுதந்திரமா? பலாத்கார எதிர்ப்புபற்றி ஊர்வலம் நடத்தத் தகுந்த உடைதானா இது?" என்று கேட்டுத் தன் தமிழ் ஆண்பிள்ளைத்தனத்தை வெளியிட்டு, தமிழ்க் கலாசாரத்தைக் காப்பாற்றியிருந்தார் நிருபர். அதிலும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் ஓர் எழுத்தாளரை அணுகி, "இது மாதிரிப் பெண்கள் ஊர்வலம் போய் கோஷமிடுவது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்டிருந்தார். எழுத்தாளரும், "இது பற்றித் தெரிந்து கொள்வதோ அபிப்பிராயம் தருவதோ அவசியம் என்று படவில்லை எனக்கு" என்று பதில் அருளியிருந்தார். அபிலாஷா இதை எல்லாம் மொழி பெயர்த்தாள் மற்றவர்களுக்கு. பளிரென்று ஆரஞ்சு வண்ணத்தில், பத்திரிகையில் வெளிவருவதை எல்லாம் ஆசீர்வதிப்பதுபோல் புன்னகைத்த சங்கரச்சாரியார் படத்தை மேலிருப்பதுபோல் மடித்துப் பலகையில் செருகினாள் பூரீலதா. பலகையின் கறுப்புத் துணிக்கும் புகைப்பட ஆரஞ்சு வண்ணத்துக்கும் பொருந்தும் என்றாள்.

 ஊர்வல முடிவில் ஓர் ஒய்வு பெற்ற நீதிபதி தன்னை அணுகி, வெற்றி பெறப்போவது தொண்ணுாறு சதவிகிதம் உறுதி என்று சொன்னதைச் சொன்னாள் அம்ருதா ஸிங்.

எதிர்காலம்பற்றி அந்த மகிழ்ச்சி மிதமிஞ்சிய வேளையில் சந்தேகங்கள் இருக்கவில்லை.
 O

அதைப்பற்றி நான் எழுதாவிட்டால் இந்த அறிக்கை பூரணமாகாது. ரோஸாவின் ஊர்வலப் பேச்சும் அதன் பாதிப்பும். மார்க் ஆன்டனி மாதிரி எல்லோர் உணர்ச்சி மையத்தையும் தன்னிடம் ஈர்த்து வைக்க முடிகிறது அவளால். அதன் தினத்தாள் செய்திகளை இத்துடன் இணைத்திருக்கிறேன். (லோக் ஸத்தாவில் வந்துள்ள புகைப்படத்தில் வலது மூலையில் இருப்பவள் யமுனாபாயி ஸாவந்த். பார்த்தால் சாது மாதிரி இருக்கிறாள் இல்லையா? அவள் கணவனைப் போலீஸ் பிடித்தபோது, நீண்ட முறுக்கிய மீசை வைத்துள்ள போலீஸ்காரரின் மீசையை எட்டிப் பிடித்து இவள் தொங்கினாளாம். மீசை கையில்: "நாரீ' பத்திரிகையில் நான் அனுப்பிய கூட்டத்தின் புகைப்படங்கள் வந்துள்ளன. அதில் பதினாறாம் பக்கத்து மூன்றாவது புகைப்படத்தில், இரண்டாம் வரிசையில் காமிராவை நேர் எதிரே பார்த்து நிற்கும் மூவர் க்ராண்ட் ரோடில் தொழில் செய்பவர்கள். மீனா அரோராவிடம் தாங்களும் பலாத்காரத்தை எதிர்க்கும் ஊர்வலத்தில் வர விரும்புவதாகக் கூறினார்கள். அவர்கள் போலீஸ் அனுபவங்கள் பற்றி நிறையச் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷன் போவதானால் ஒரு குழந்தையை இடுப்பில் கொண்டு போய் விடுவார்களாம். குழந்தை அழஅழ, தொல்லை பொறுக்காமல் தண்டம் சீக்கிரம் கட்டச் சொல்லி அனுப்பிவிடுவார்களாம். நைலான் புடவை கட்டித்தான் போவார்களாம். கையில் நெருப்புப் பெட்டி இல்லாமல் போகமாட்டார்களாம். "எவனாவது பக்கத்தில் வந்தால், நான் நெருப்பு வைத்துக்கொண்டு விடுவேன்" என்று ஒரு பயமுறுத்தல் போட்டுவிடுவார்களாம். எந்தக் கிராமத்திலும் பணமும் சக்தியும் வாய்த்தவர்கள் சக்தியற்றவர்களைத் தண்டிக்கும் போது அதில் இலக்கு ஆகிறவர்கள் பெண்கள்தாம்; முதலில் புகுந்து இழுப்பது அவர்களைத்தான்; குலைப்பது அவர்களைத்தான் என்று கங்கா என்பவள் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்)

மீண்டும் ரோஸாவிடம் வருகிறேன். அன்றையப் பேச்சுக்கு ரோஸா எந்த ஆயத்தமும் செய்யவில்லை. காலால் மிதித்து நசுக்கப்பட்டவர் களின் நாபியினுள் ஒரு மொழி ஊற்று இருக்கிறது. அது உன் எழுத்தில் இருக்கிறதென்று நான் எண்ணியதுண்டு. எவ்வளவு தவறு அது. உன்னிடமோ என்னிடமோ அது வர அதன் தாபம் நமக்குள் நுழைய வேண்டும். அதன் நாக்குகள் நம்மைத் தீண்டி நம் சருமத்தைக் கரகரவென்று நக்க வேண்டும்.

வெகு எளிதான மராட்டியில், ஜரிகை அலங்காரம் செய்யாமல் அவள் பேசினாள். அவள் பேச்சுக்குக் கிடைத்த பெரிய பாராட்டு மீனா அரோரா அடுத்துச் செய்ததுதான். அவளுக்குப் பிறகு பேச வந்த மீனா எதிரேயுள்ள கூட்டத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பெருத்த விம்மல்களோடு அழத் தொடங்கினாள். அதைவிட நன்றாக அவள் பேசியிருக்க முடியாது. நாங்கள் ஊர்வலச் செய்தியைக் காட்ட டி.வி.யை அணுகியபோது, அந்த கோபால் ஷர்மா, "நாங்கள் காட்டுகிறோம். ஆனால் மெளனப்படம்தான். எங்கள் கமென்டரியோடு. நீங்கள் என்ன பேசப்போகிறீர்களோ, யாருக்குத் தெரியும்?" என்றான். மீனா அரோரா அழுது அவனைத் தோற்கடித்துவிட்டாள் என்று நினைக்கிறேன். அவன் டி. வி. காமராவைத் திருப்பிய பக்கமெல்லாம் கண்ணிர். அவன் செய்ததெல்லாம் படக்கென்று வெட்டிவிட்டதுதான். இவனை எல்லாம்தான் கீழே உதை விடலாம் என்று வருகிறது. உட்காரு என்றால் தவழ்பவர்கள்.

ஊர்வலம் பல வகையில் வித்தியாசப்பட்டவர்களை ஒரே இடத்தில் பிணைத்துப்போட்டது. பலரும் கலந்தது, ஒர் உருவாக்கப்பட்ட நிலைமையில், அசாதாரண உற்சாகத்துடனும், ஆழமறியா ஆர்வத் துடனும், ஓர் அதீத சந்தோஷப் பீறிடலுடனும் நடந்தது. அதன் தாக்கம் இன்னும் இருக்கிறது. சமநிலைக்கு வந்ததும் சில முட்கள் தைக்கும். ஆனால் அவை முட்கள்தாம். இரும்புக் கதவுகள் இல்லை. ரோஸா ஒரு பெரிய போராட்டத்துக்கான நிமித்தத்தை மட்டுமில்லை, வேலிகளையும் கதவுகளையும் மூடப்பட்ட ஜன்னல்களையும் ஒரே வீச்சில் திறப்பதற்கான மூச்சையும் உள்ளே ஒடவிட்டிருக்கிறாள். அந்த மூச்சில் கலந்திருக்கும் சக்திபற்றிச் சொல்லமுடியவில்லை. இது வெறும் சொற்களால் மூட்டை கட்டப்பட்ட அறிக்கை. அந்தச் சொற்களினூடே ஒர் உயிர் இழை தென்பட்டால் அதைப் பற்றிக்கொள். இருக்கும், எங்காவது முழு உயிருடன் படபடத்தவாறு. அது எங்கள் புது மொழியின் முதல் குரல். அதில் ரோஸாவின் உஷ்ண மூச்சு கலந்திருக்கும்.
 O

ப.எ. அணியின் அறைச் சுவர்களில் பல சுவரொட்டிகள் ஏறியிருந்தன. ஒன்றில் வெறும் வரைபடங்கள். முழங்கால் மேல் முகம் பதித்து ஒரு பெண்: கை கால்கள் விலங்கிடப்பட்ட முகம் தெரியாத பெண். அஞ்சூ ஒரு பெரிய கேலிச்சித்திரம் தீட்டியிருந்தாள்.

ஒரு நீதிபதி. எதிரில் கூண்டில் ஒரு பெண்.

"நீ கன்னியா?"

"இல்லை."

 "அப்படியானால் நீ பலாத்காரம் செய்யப்படவில்லை. பலாத்காரம் நடந்தபோது நீ கத்தினாயா?"

"இல்லை. என் வாயைக் கட்டிவிட்டார்கள்."

 "கத்த முயற்சியாவது செய்தாயா?"

"இல்லை. நான் மயங்கிவிட்டேன்."

 "அப்படியானால் இது பலாத்காரம் இல்லை. நீ உடன்பட்டு நடந்ததுதான்."

கேலிச் சித்திரத்தை ஒரு மிகத் தடித்த சிவப்புக் கோடு பெருக்கல் குறியால் அடித்து இருந்தது. எதிரே அம்புக் குறியிட்டு அஞ்சூ எழுதியிருந்தாள் "இது கடந்த சரித்திரம்” என்று.
O


அம்மா வீட்டில் இல்லை.

அபிலாஷா விடை பெறக் காத்திருந்தாள். வழக்கு ஆரம்பமானபின் மீண்டும் வருவாள்.

ரோஸா உடை மாற்றப் போயிருந்தாள். தடுப்புக்குப் பின்னால், சொல்ல மறந்தது ஏதோ நினைவுக்கு வர அபிலாஷா எழுந்து தடுப்பருகில் போனாள். ரோஸா உடைகளைக் களைந்திருந்தாள் அவை காலருகே குவிந்து கிடந்தன. அவள் மார்பின் மேல் தோல் கருகிய தழும்புகள் தெரிந்தன. உடைகள் இல்லாமல் பார்த்த போது நாணில் ஏற்றாத அம்பு மாதிரி தோற்றம் அளித்தாள்.

பறப்பவள்போல் வந்து அபிலாஷா ரோஸாவைத் தழுவிக் கொண்டாள். தன் முகத்தை அவள் அடிவயிற்றில் பதித்தாள். தரையில் சரிந்து அமர்ந்து ரோலாவைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டாள். ரோஸாவின் மூடிய விழிகளுள் ஈரம் கசிய ஆரம்பித்தது.
O
www.archive.org
google-ocr
(மெய்ப்பு பார்க்கப்படவில்லை)
உடம்பு
posted on 21/03/2016
சிவனுக்கு இயற்கையாகவே உடம்பில் ரோமம் இல்லையா
அல்லது அண்டம் அதிர ஆடும் முன்னர் கர்மசிரத்தையாக மழித்து விட்டுக்கொண்டாரா என்று தெரியவில்லை.

பாலா ரெட்டிக்கு இந்தச் சந்தேகம் பல முறைகள் எழுந்தது. மேடையில் ஏறும் முன்னர் ஸோப்பைத் தடவி மீசையை மழிக்கும் போதும்; சட்டைப் பித்தான்களைக் கழற்றி, மழமழக் கும் மார்பைப் பார்க்கும்போதும்.
இந்திரா குப்தா ஆடும்போதெல்லாம் கூட சிவனாகவும், கிருஷ்ண னாகவும் ஒத்துழைப்பது பாலா ரெட்டிதான். புருவங்களைத் தீட்டி, உதட்டுச் சாயம் பூசி, உடம்பெல்லாம் மினு மினுக்க, நாபியிலிருந்து ஜீவ ஊற்றாய்த்தாளம் பெருக அவன் ஆடுவான். ஆடி முடிந்ததும் மேடைக்குப் பின் வருபவர்கள் இவனைப் பார்த்து "பிரமாதம்" என்று ஒரு வார்த்தையில் கூறி இந்திராவிடம் "மயிலாட்டம் கெட்டது போங்க! அப்படி ஒருதுள்ளல், ஒட்டம், ஆர்வம்" என்று கூறும்போதும், அவனையும் மீறி அவன் நடையில், பேச்சில், உதட்டுச்சுளிப்பில் ஒட்டிக் கொண்டுவிட்ட பெண்மையை எண்ணி நாணும்போதும், சபையின் ஒரு மூலையில் "மேக்கப்போட்ட ஆம்பிளை' என்று சில கெக்கலிகள் உதிரும்போதும், நடனத்தின் ஆதாரம் ஓர் ஆண் தானா என்ற கேள்வி யோடு, தன் ஆண்மையைத்தனக்கே, விச்வரூபமாய் எழுந்து, நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது.
அறையின் மூலையில் உட்கார்ந்துகொண்டு, முழங்கால் மேல் மோவாயைப் பதித்துத் தலையை நிமிர்த்தி தன் விச்வரூபங்களை அவன் நிதமும் ரஸித்துக்கொள்வான்.
கனத்த குரலோடு, முறுக்கேறிய உடலோடு அவன் - தெருவில் நடந்தாலே பெண்கள் தங்கள் கற்பைப் பாதுகாத்துக்கொள்ள விரையும்

உடம்பு * 33 -oபயங்கர உருவம். நடனமாடும் அவனைப் பற்றி "அந்த ஹோமோவா?" என்று கூறிய சொக்கலிங்கத்தின் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து "ஏய், யாருடா ஹோமோ ? உன் தங்கைக்கு உடம்புக்கு ஒன்றுமில்லையே?’ என்பான்.
புல-புல-வென்று மயிருடன், தொடை, கால், மார்பு எல்லாம் கருமையோடு மேடையில் அவன். சபையில் எங்கும் பெண்கள், பெண்கள், பெண்களே. சிவனைப் பார்த்து உருகிய பக்தைகள் போல.
இரவில் மூக்கில் விரலை வைக்கும் லலிதா. "இப்படியும் ஒரு புலிப் பசியா?" என்று சிணுங்கும் லலிதா. புலியின் பசியில் தன் பசியையும் ஆற்றிக்கொண்டு, உடல் துவள உறங்கும் லலிதா. புலியாய் பாலா ரெட்டி. -
உலகத்தின் சலங்கை ஒலிகளை எல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒரு ராட்சச ஆமையாய் ஊர்ந்துவரும் அவன். கனத்த அழுத்தமான கோடுகளோடு உள்ள, தகர்க்க முடியாத பெளருஷத் தைப் போல ஆமை ஒடு.
நிதம் போல் அன்றும் தன் பிரம்மாண்ட ஸ்வரூபங்களைத் தரிசித்தாகிவிட்டது. காதைக் குடைந்துகொண்டான். அன்று பாரிஸி லிருந்து இருவர் அவனை ஒரு டாகுமென்டரி படத்துக்காகப் படம் எடுக்க வரப்போகிறார்கள். ஆண் நடனமாடுவதைக் காட்ட ஒரு உதாரணமாய் அவன். தாளத்தை ஆளும் பாலா ரெட்டி. ஏதோ ஒரு கலைச் சங்கம் செய்த ஏற்பாடு.
மாலை ஐந்து மணியிலிருந்து அவன் தயாராகத் தொடங்கினான். சிவப்பு நடன உடை மார்பில் பெரிய ஹாரம். தடித்து வரையப்பட்ட புருவங்கள். சிவப்பு உதட்டுச் சாயம். கீழே தசைகள் விம்மும் இடத்தில்
கங்கணங்கள்.
"லலிதா..."
"இன்னிக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம்"
அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள் லலிதா. அவன் ஆடுவதில் அவளுக்கு ஒர் அலுப்பு. அவன் பெரிய வகுப்பு வைத்து, நட்சத்திரங்களுக்கும், மந்திரிமார் பெண்களுக்கும் நடனம் கற்பித்துச் சினிமாவில் நடன டைரக்டராய் வந்திருக்க வேண்டும் அவளைப் பொறுத்தவரை.
கலைச் சங்கக் கட்டிடத்தினுள் நுழைந்தான். 6.30 மணி.
போட்டோ எடுக்கும் சாதனங்களுடனும் மற்ற கருவிகளுடனும் இருவர் வந்தனர்.
** 34 - அம்பைகலைச் சங்கக் காரியதரிசி வரவேற்றார். "இதுதான் ஆர்ட்டிஸ்ட்." பாலா ரெட்டி எழுந்து வணங்கினான். கூப்பிய கைகளுடன்.அவர்கள் இருவரும் அவனைப் பார்க்கவில்லை. புகைப்படம் எடுப்பதில் அவர்கள் நிபுணர்கள். புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர் கள். ஆர்ட்டிஸ்டுடன் நேரத்தை வீணாக்குவதை அவர்கள் விரும்ப வில்லை. பாலா ரெட்டி அமர்ந்தான்.
கலைச் சங்கக் காரியதரிசியை அழைத்தார்கள்.
"இந்த அறையில் வெளிச்சம் போதாது. கீழே உள்ள எக்ஸிபிஷன் ஹாலில் எடுக்கலாமா ?”
காரியதரிசி போய் ஒரு ரிஜிஸ்தரை எடுத்துவந்தார்.
"அந்த அறைக்கு நாளுக்கு இருநூறு ரூபாய் வாடகை ஏர்கண்டி ஷனர் 'ஆன் பண்ணினா இருநூற்று ஐம்பது."
"நாங்கள் பேசின வாடகைக்கு மேல் ஒரு பைசாவும் தரமாட் டோம்."
rx
"எங்களிடம் பேசின. கான்ட்ராக்ட் பிரகாரம் . . .
#3
"டாம் யுவர் கான்ட்ராக்ட்! . . .
++
"வாடகை . . . in o ஒரு பைசா கூட . . .
"ஏர் கண்டிஷனர் . . ."
"எனக்குப்பிரதம மந்திரியோட அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது." வெறும் ஒலிகள், ஓசைகள். சிவந்த முகங்கள் விளக்கின் ஒளியில் நீலமாயும், ஊதாவாயும் மாற, சிறு பூனைக் கண்கள் ஒளிர, காரியதரிசியின் நீண்ட பற்கள் கருத்த முகத்தில் பளபளக்க, கைகளை மேலே தூக்கியும், காலைக் கீழே உதைத்தும், உதடுகளைக் குலுக்கியும், வளைத்தும், நாசி வியர்வையில் நனைய...வெறும் சப்தங்கள். குரங்குகள் பேசிக்கொள்வதைப் போல்.
மேக்கப்பும், பட்டு உடையுமாய் பாலா ரெட்டி வியர்வையில் நனைந்தான்.
படம்பிடிக்க வந்தவன் தன் கருவிகளைச் சேகரித்துக்கொண்டான்.
"நாங்கள் ரமாகலாவைப் படம் எடுப்போம். அவள் அழகாகவா வது இருக்கிறாள்."
போய்விட்டார்கள்.
உடம்பு * 35 -


"பாஸ்டர்ட்ஸ்" என்று வைதுகொண்டே காரியதரிசியும் போய்ச் சேர்ந்தார்.
அறையில் அமர்ந்துகொண்டிருந்தான் பாலா ரெட்டி அறையெங் கும் விஷ்விஷ் என்று சாட்டையைச் சொடுக்கும் ஒலி ஆக்ரமித்துக் கொண்டிருப்பது போல் பட்டது. கண்ணுக்குத் தெரியாத, சொடுக்கப் படும் சாட்டைகள் இவனையே இலக்காக வைத்து வீசப்பட்டவை போல் தோன்றியது. இவன் உடம்பையே வெறுக்கும் ஆக்ரோஷத் துடன் அவை சீறிப் பாய்ந்தன. தோளில், மார்பில், இடையில், இடை யின் கீழ், தொடையில், தீட்டப்பட்ட விழிகளில், பூச்சுடன் கூடிய இதழ்களில் - சாட்டையின் நுனி, கொட்டிக்கொட்டி உதிரத்தை உறிஞ்சியது.
அவளிடம் இருப்பது எல்லாம் நல்ல உணவைத் தின்றதால் பூரித்து, விம்மும் இரு மார்பகங்கள்தாம். அவள் ஆடும்போது அவள் கல்லூரியில் பாஸ்கட்-பால் சாம்பியன் என்பது நன்றாகத் தெரிகிறது என்று ஒரு விமர்சகர் எழுதியிருந்தார் ஒருமுறை. ஆனால் அவள் பெண்.மேடையில் ஏறி, கலையைக் காலில் மிதித்து துவம்ஸம் செய்ய அது ஒன்றே போதும். சபை பார்க்க விரும்புவது அவளைத் தான்.
மெல்ல எழுந்து மேக்கப்பைக் கலைத்தான்; நகைகளைக் களைந் தான். உடையை மாற்றினான்.
வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான் வீட்டை நோக்கி, உடனே வீட்டுக்குப் போகப் பிடிக்கவில்லை.
பாராகம்பா தெருவின் முனையில் உள்ள பார்க்கில் அமர்ந்தான். உட்காரப் போகும் முன், "என்ன ரெட்டி, என்ன இந்தப் பக்கம்?" என்று ராமுவின் குரல் கேட்டது.
"சும்மாத்தான்."
"இங்கே ஒரு டான்ஸ் கச்சேரி.நாகலசுஷ்மிங்கற பொண்ணு. அப்பா மினிஸ்டிரி ஆப் எடுகேஷன்லே டெபுடி லெகரட்டரி. நம்பளை விமர்சனம் பண்ணச் சொன்னார்."
"எப்படி ஆடறா?"
"அழகா இருக்கா. அப்பா கலைப் பைத்தியம். அம்மா நல்ல வித்வாம்சினி. முன்னுக்கு வந்துடுவா. அமர்க்களமா ஆடறா."
"யாரு?" ராமு விழித்தார். "என்ன ரெட்டி ? ஏதாவது பார்ட்டியா?"
"இல்லியே. என்ன ஆடினா பொண்ணு?"
<> 36 -- அம்பை
"யாரு பாத்தா? அப்பா டெபுடி செகரட்டரி. அம்மா..."
"நல்ல வித்வாம்சினி."
"நீங்களே சொல்லிப்புட்டேளே?"
டெபுடி செகரட்டரி அப்பாவாக இல்லாவிட்டால் கூட ராமு விடம் நல்ல பெயர் வாங்கலாம். அவர் சுட்டிக்காட்டும் காரியதரிசியிடம் ஒரு இரவு நடனத்தைப் பற்றிப் பேசினால் போதும். எந்த சபா காரியதரிசியும் பெண்ணாக - பாலாரெட்டியுடன் ஒரு இரவைக் கழிக்கும் பெண்ணாக-இல்லாதது பெரிய நஷ்டமே. தேவையெல்லாம் இரு மார்பகங்களும் ஓர் ஆணைத் தன் உடலில்நுழைத்துக்கொள்ளும் சக்தியுமே. பின்பே சலங்கையும், நடராஜரும்.
"அப்ப நான் கிளம்பறேன்."
"இந்திரா குப்தாவோட ஆடறச்சே சொல்லுங்கோ"
LE , ** **
LD. நடக்க ஆரம்பித்தான். "ஏதாவது பணம் குடுத்தாங்களா?" லலிதா கேட்டாள். "ப்ரோக்ராம் கான்ஸல் ஆயிடுத்து."
பண்ணுருட்டியிலிருந்து இரண்டு மைல் நடந்தால்தான் திருவ திகை போக முடியும். அவன் தினமும் போவான். மூல மூர்த்தியையும் அம்மனையும் பார்க்க அல்ல. கோயில் மூலையில் நீண்ட திண்ணை யுடன் உள்ள இடத்தில், ஒரு சாதாரணப் புலித்தோலை இடுப்பில் அணிந்து, எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வெளிவந்த சுதந்திரப் பெருமிதத்துடன் ஆடும் நடராஜரைப் பார்க்க
"அப்பா, நான் பரதம் கத்துக்கறேம்பா." "அடி செருப்பாலே! பொம்பிளையாடா நீ?"
தஞ்சாவூர் வரை ஓடி வந்து கற்றான். பின்பு டில்லிக்கு வந்தான். எல்லாம் அந்தப் புலித்தோல்காரன் ஊட்டிவிட்ட ஆசையில்.
"இன்னிப்போது இப்படி வீணாப் போச்சா?" லலிதா அலுத்துக் கொண்டாள்.
"நான் ஆடறேன். நீ பாக்கறியா?"
சிரித்தாள் லலிதா. பார்வை சட்டென்று பித்தான் திறந்த சட்டைப் பக்கம் சென்றது. அதன் கீழே வழவழத்த தொடைகள் மேல் அவள் கண் போகாவிட்டாலும், மனம் போகும். ஒன்றும் பேசாமல் தன் அறைக்குள் சென்று கிளாஸில் சிறிது விஸ்கியையும் தண்ணிரையும் விட்டுக்கொண்டான்.
உடம்பு ぐ> 37 <>சிறிது நேரத்தில் அறையில் கூரையைத் தொடும் ஓர் உருவம் நின்றது. உடம்பெல்லாம் சடை சடையாக மயிர். மயிரின் அடர்த்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மெல்ல, மெல்ல இரு மார்பகங்கள் அதில் முளைத்தன. பாலா ரெட்டி இன்னொரு முறை கிளாஸை நிரப்பிக்கொண்டான்.

'கணையாழி நவம்பர் 1973

-- 38 - அம்பை
posted on 14/03/2016
ஓர் எலி, ஒரு குருவி - அம்பை

துரக்கத்தில் முகத்தைத் திருப்பிக் கண்ணை விழித்தபோது எலியின் முகம் கன்னத்தருகே இருந்தது. ஆ என்று அலறித் துள்ளி வெடவெட வென்று நடுங்கியபடி நின்றபோது எலியும் அலறலால் தாக்கப்பட்டுத் துள்ளி ஜன்னலில் ஒண்டிக்கொண்டது. மூக்கை நிமிர்த்திப் பார்த்தது, இப்படி அலறி என்னைப் பயமுறுத்தினாயே? என்பதுபோல். அது ஒவ்வொரு முறை நகரப் பார்த்த போதும் ஒர் அலறல். கடைசியில் இருந்த இடத்திலேயே நகராமல் உட்கார்ந்தது. எதிரே விறைத்தபடி நின்றுகொண்டு ஜன்னலில் இருந்த எலியை விடாமல் கண்காணிப்பு.

 எலிகளுடன் உறவாடுவது கஷ்டம். அதுவும் இந்த எலியுடன். இந்த எலியாகத்தான் இருக்க வேண்டும். புத்தக அலமாரியின் மேல் தட்டில் இருக்கும் சுயசரிதைகளை மட்டும் தின்னும் எலி. சில சுயசரிதைகளின் அட்டைகளை ஒரு முறை இல்லாமல் தின்ற பலன் 'என் சரித்' என்றும் என் சுயசரி என்றும் என் க என்றும் மொட்டை யாக நின்றன தலைப்புகள். ஒரு கழுதையின் ஆத்மகதை' என்று பெரிய எழுத்துகளில் தலைப்பிட்ட சுயசரிதையில் கழுதை மட்டுமே எஞ்சியிருந்தது. கீழேயிருந்து பார்க்கும்போது கதாசிரியரின் புன்னகை பூத்த புகைப்படத்தின் கீழே கழுதை என்று தடித்த எழுத்தில் இருந்த சொல் மட்டும் தெரிந்தது. அந்தக் கதாசிரியரைக் குறிக்கும் சரியான சொல் அது என்று பலர் நினைத்தாலும், எலியின் தீர்ப்புக்கு அதை விடுவதை எவ்வளவு தூரம் அவர் விரும்புவார் என்று தெரியவில்லை. கழுதை என்று ஒரு பாவ்லா அடக்கமாக அவர் தன்னைக் கூறிக் கொண்டாலும் இப்படி அது வலியுறுத்தப்படுவதை அவர் ஆட்சேபிக் கலாம் என்று பட்டது.

அதனால்தான் மறுநாள் கர்க்கர்க் என்ற சத்தம் இரவில் கேட்டதும் மேல்தட்டில் டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தாள். எலி ஆத்ம கதையில் அமர்ந்து கழுதையைச் சுற்றி கடிக்கத் துவங்கியிருந்தது. கீழே அவளைப் பார்த்தது. சிரிப்பதுபோல் பட்டது. நாக்கு அலறலில் புரண்டது. வழக்கமான சனிக்கிழமை இரவைக் கொண்டாடிவிட்டு அசந்திருந்த நண்பர்கள் விழித்துக்கொண்டனர். இரண்டங்குலஎலியைத் துரத்தினர். குளியலறையில் புகுந்துகொண்டது அது. பரம்வீர் தென்னந் துடப்பத்துடன் உள்ளே புகுந்து கதவை மூடிக் கொண்டான்.

"பரம், அதைக் கொல்லாதே. மயக்கம்போடவை.'

"அது இருப்பதே இரண்டங்குலம். அதை எப்படி அடித்தால் மயக்கம் போடும் என்று நான் கண்டேனா?” என்றான் அவன் உள்ளேயிருந்து.

"நீவிர் இத்துணை துரத்தியும் அது மடியவில்லை என்றால் என் செய்வீர்கள் ' என்றாள் ஸ-ஸன் சுத்தத் தமிழில். பாரீஸிலிருந்து வந்திருந்தாள். பரம்வீரின் தோழி. மூன்று மாதத் தீவிரத் தமிழ்ப் பயிற்சி பெற்றிருந்தாள். பெண் தெய்வங்களைப் பற்றி ஆராய வந்திருந்தாள். மகாவிஷ்ணுவின் காலருகே லகஷ்மி அமர்ந்து பாதத்தை வருடுவது அவள் அவர் ஆளுமையிலிருப்பதற்கான குறியீடு அல்ல; பாதத்தை வருடுவது உலகை சம்ரட்சிக்கவும், அதற்கான படைப்பை உருவாக்குவதற்காகவும் தேவையான உற்சாக உத்வேகத்தை அவருக்கு உண்டாக்கத்தான் என்கிறாள். இவ்வளவு உத்வேகத்தை உண்டாக்கும் சக்தி உள்ளவள் அவள் சொந்தப் பாதத்தையே வருடிக்கொண்டு, விஷ்ணுவின் வேலையைத் தானே செய்வதற்கென்ன என்று கேட்ட தும், "நீவிர் என்னை நகைப்புக்கு உள்ளாக்குகிறீர்கள்” என்றாள். பரம்வீர் குளியலறையில் எலியுடன் செய்த போராட்டக் கூச்சல் களுக்கு "ஐயகோ சொல்லிக்கொண்டு நின்றாள்.

பரம்வீர் தென்னந்துடைப்பத்தின் மேல் மல்லாந்த எலியுடன் வந்தான்.

"மயக்கம்தான்" என்றான் அவளிடம். கீழே தெருவில் விட்டுவிட்டு வந்தான். இரவு ஒரு மணிக்கு, தலையை முடிந்து கொண்ட ஸர்தார்ஜி, துடைப்பத்தில் எலியுடன் கீழே போனதும் கட்டடத்தின் காவல் காரர்கள் சற்றுக் கலங்கிப்போயினர். மறுநாள் அவளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தனர். மயக்கம் போட்ட எலி கண்ணை விழித்ததும், மெல்ல நகர்ந்து சுய சரிதைகள் இல்லா உலகை நோக்கிப் போயிருக்கும் என்று நினைத்து மறுநாள் நிம்மதியாக உறங்கும்போது இப்படி கன்னத்தருகே எலி.

இது அதே எலியா? மயக்கத்திலிருந்து விழித்ததும் நேரே இங்கு வந்து விட்டதா? இல்லை அதன் ஜோடியா?

இந்தப் பெரிய நகரத்தில் எலிகளும் பெருச்சாளிகளும் அதிகம் என்று பலர் எச்சரித்திருந்தனர். சொன்னவர்கள் கலைஞர்களும் அறிவுஜீவிகளுமாக இருந்ததால் இங்குள்ள மனிதர்களைக் குறித்த உருவகபூர்வமான விவரணை அது என்று நினைக்க வாய்ப்பு இருந்தது. மேலும் ஒரே அறையும் சமையலறையும் கொண்ட வீட்டில் இருந்த கீதா மற்றும் ஸுக்தேவின் வீட்டின் சமையலறையில் கடுகெண்ணெய் ஊறுகாய் மணம், கொடியில் தொங்கிய சட்டைகளின் வேர்வை மணம் இவற்றினிடையே அந்த நகரத்தின் முதல் இரவை அமூல் யோவுடன் கழிக்க நேர்ந்தபோது இந்த எலி உவமை மிகப் பொருத்தம் என்று தோன்றியது. அந்தச் சமையலறை ஓர் எலி வளை மாதிரிதான் இருந்தது. அன்றிரவுதான் அந்தக் கனவு வந்தது.

வானளாவிய கட்டடங்கள். நாலாபுறமும் மலைகள் போல். குறுகிய தெருக்கள். இருக்க இடம் தேடி ஒரு கட்டடத்தில் துன்ழந்ததும் நிமிர்ந்தால் முதுகு இடிக்கும் எலி வளைகளாகின்றன. அவ்வீடுகள். மனிதர்கள் மல்லாந்து படுத்தும், ஒருக்களித்துப் படுத்தும், தலையை முட்டின் மேல் பதித்து அமர்ந்தும், பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இருக்கிறார்கள். ஒருத்தி அலுவலகத்திலிருந்து வருகிறாள். வெகு லாவகமாக வளைக்குள் போகிறாள். தங்கள் இருப்பிடங்களின் செளகரியம் பற்றி அசரீரி தொனியில் அவர்கள் கூறுகின்றனர் ... வளைக்குள் செளகரியமாக நிற்க ஒரு கயிற்றைப் பிடித்துக் கொள்ளப் போகும்போது பார்த்தால் அது ஒரு எலியின் நீண்ட சொரசொர வென்ற வால் . . .

தூக்கத்தில் சத்தம் போட்டிருப்பாள் போலும். விழிப்பு வந்தது. அமூல்யோ நிம்மதியாக உறங்கியவாறு இருந்தான். நித்திரை வரம் பெற்று வந்தவன் அவன். அவனை உலுக்கினாள்.

அமூல் . . . அமூல் ...”

ஹா ...” என்று திடுக்கிட்டு விழித்தான்.

"அமூல், ஒரு கனவு வந்தது.”

“ம்”

"ஒரு பயங்கரக் கனவு அமூல். என் உடம்பெல்லாம் ஜில்லிட்டு விட்டது.”

அமூல்யோ எழுந்து உட்கார்ந்து பாட்டிலிலிருந்து தண்ணிரைக் குடித்தான். ஒரு கிளாஸில் ஊற்றி அவளுக்குத் தந்தான். அவள் குடித்த பின், "சொல்லு' என்றான். அவள் விவரித்தபின் சிரித்தான். "அதெப்படி இவ்வளவு அழகான உருவகக் கனவாக வருகிறது. உனக்கு? குறியீடு எல்லாம் கூட இருக்கிறது. இத்தனைக்கும் உனக்கு ஃப்ராயிடுடன் உடன்பாடுகூட இல்லை” என்றான்.

அவன் வயிற்றில் குத்தினாள். "நீ ஒரு குண்டன். நீ ஒரு பொறுக்கி நீ ஒரு கும்பகர்ணன். நீ ஒரு மூர்க்கன்." ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு குத்து.

சிரித்துக்கொண்டே அவன் படுத்துக் கொண்டான். அவன் வயிற்றில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். இரு புறமும் கால்களைப் போட்டு, சம்ஹாரம் செய்பவளைப் போல்.

அமூல்யோ ஓங்கிய அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். மென்மையாக அவள் கண்கள் நிரம்பிப்போயின. அமூல்யோவின் கண்களிலும் கண்ணிர் மெல்லப் படர்ந்தது.

தலைக்கு மேலே உள்ள, அடுப்புப் புகையால் கரிந்துபோன அலமாரிகள்; எந்த நேரமும் காலி செய்யச் செளகரியமான அலுமி னியப் பாத்திரங்கள், மண்ணெண்ணெய் ஸ்டவ்; சுவரோரங்களில் துரவிய கரப்பு மருந்து; பத்தடி தள்ளி சமையலறைச் சாக்கடை. இவற்றைப் பார்த்து அவளையும் பார்த்து மெளனித்தான்.

அவள் அவன் தொப்புளை மெல்ல நெருடினாள்.

 "அது வெறும் கனவுதான் அமூல்' என்றாள்.

 அவளுக்குக் கோயமுத்துரர் வீட்டின் விஸ்தாரமான கொல்லைப் புறம் நினைவுக்கு வந்தது. சில இடங்களுடன் சில பிம்பங்களும் இணைந்து வருகின்றன. அந்த வீட்டுடன் ஒன்றி வரும் பிம்பம் பாட்டியுடையது. பதின்மூன்று வயதிலிருந்து குழந்தை பெற்ற பாட்டி. பெரிய, பெரிய வாணலிகளில் காய்கறிகளையும், அல்வாக்களையும் கிளறி இறக்கின பாட்டி சோனிப் பேரக் குழந்தைகளுக்கு - இவளும் அதில் சேர்த்தி - உடம்பில் அழுந்த அழுந்த விளக்கெண்ணெய் தடவியவாறே ராமாயணம் சொன்ன பாட்டி. சாட்டை நாக்குப் பாட்டி. ஒரு சொல் சொன்னால் சுரீரென்றிருக்கும்.

கிருஷ்ணன் குழலுக்கு மயங்கி ஆவினம் நின்றதுபோல் பாட்டியைச் சுற்றி மிருகங்கள்.

நல்ல வெய்யில் நாள் மத்தியானம் உறங்கிக்கொண்டிருந்த பாட்டி சடக்கென்று விழித்தாள். கொல்லைப்புறம் போனாள். கிணற்றின் பின்னால் இருந்த சுவரில் ஒரு குரங்கு கர்ண கடுரமாக அரற்றிக் கொண்டிருந்தது.

 “என்னடா?” என்றாள் பாட்டி.

"உர்” என்றது.

 "பாட்டி, பக்கத்துல போகாதே பாட்டி” என்று இவளும் சித்தி பிள்ளைகளும் கூச்சல் போட்டனர்.

 பாட்டி அதையே பார்த்தாள். குளியலறை பக்கத்திலிருந்த விறகு அடுக்கி வைக்கும் அறைக்குப் போய் ஒரு கொட்டாங்கச்சியை எடுத்து வந்தாள். தொட்டித் தண்ணியில் அதை முக்கி நிரப்பினாள். குரங்கின் அருகே போனாள். தண்ணிர் நிரம்பிய கொட்டாங்கச்சியை நீட்டினாள். வெடுக்கென்று வாங்கிக் கொண்டு ஒரே மூச்சில் குடித்தது. இன்னும் நிரப்பினாள். மூன்று முறைகள் வாங்கிக் குடித்துவிட்டு வாலைச் சுழற்றிக்கொண்டு தாவியது.

"அதுக்குத் தாகம்” என்றாள் பாட்டி.

வீட்டில் கறுப்பும், வெளுப்பும், பழுப்புமாய் பூனைகள் ஒரு டஜனாவது இருக்கும். பேத்தி-பேரன்மார் பந்தி, ஆண்கள் பந்தி முடிந்து பெண்கள் பந்தியுடன் பாட்டி ஒரு காலை நீட்டிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்ததும் ஓடி வரும் பூனைகள்.

"மியாவ்" என்கும் ஒன்று.

"அப்பளம் வேணுமாம்” என்று மொழிபெயர்ப்பாள் பாட்டி. அப்பளம், ரசம், சாதம், உருளைக்கிழங்கு ரோஸ்ட் என்று ருசி கண்ட பூனைகள். அப்போதுதான் பெத்துப் பிழைத்த பூனைக்கு நெய் சாதம் போடுவாள். காலைப் பால் வந்ததும் பூனைகளுக்குப் பால் கிடைத்து விடும்.

"உனக்கு ஒரு பூனை வேணுமா?" என்றான் அமூல்யோ.

"ம்ஹாம். உனக்கு? உங்கள் வீட்டில் நாய் உண்டே?”

"இந்தக் கூண்டு வீடுகளிலே பிராணிகளை அடைப்பது ரொம்பத் தப்பு” என்றான்.

"குழந்தைகளைக் கூட" என்றாள் அவள்.

எலிக் கனவிற்குப் பிறகு பல முறைகள் எலி தரிசனம். எலிப் புராணங்கள். கீதாவும் ஸுக்தேவும் கூறிய எலி அனுபவங்கள். பாப்கார்ன் கொறித்தவாறு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது காலில் சுருக்கென்றதாம் கீதாவுக்கு. உதறிவிட்டு அவள் நிமிரும்முன் ஸாக்தேவ் காலை உதறினானாம். இருவரும் கீழே பார்த்தால் ஒரு பெருச்சாளி ஓடியதாம். இருவர் பாதங்களும் ரத்தக்களரி. பல ஊசிகளுக்குப் பின், நியாயமான கோபத்துடன் பத்திரிகையில் வேலை செய்யும் நண்பனை அணுகி இது பற்றி எழுதச் சொன்னபோது, அவன் ஒரு பொறுமையான புன்னகையை உதிர்த்து அவன் பத்திரிகையின் சினிமா விமர்சகரின் அனுபவத்தைக் கூறினானாம். நிருபர்களுக்கான பிரத்யேகக் காட்சியைத் தவறவிட்டவள் படம் வெளியான தியேட்டரில் பார்க்கப் போனாள். குறிப்புகளை அவள் எழுதும்போது அவள் துப்பட்டா இழுபட்டது போல் தோன்றியதாம். அதை லட்சியம் செய்யாமல் நாற்காலியின் கைப்பிடியில் தாளை வைத்து அவள் மும்முரமாக எழுதினாளாம். இடைவேளை வெளிச்சம் வந்ததும் குனிந்து பார்த்தால் மடியில் ஒரு எலி! அவள் எழுந்து நின்று அலறியபோது ஒடிய எலியைப் பார்த்து மற்றவர்கள், "எலிக்கா இப்படி?” என்றார்களாம். அருகிலிருந்தவர் ஒரு விஸ்தாரமான எலி ஜோக் சொன்னாராம். ஒரு பெண் ஜூடோ கற்றுக்கொண்டாளாம். கராத்தே கற்றுக்கொண்டாளாம். களறிப்பயிற்று கற்றுக்கொண்டா ளாம். ஒருநாள் அவள் வீட்டுச் சமையலறையில் ஒரு சுண்டெலி ஒடியதாம். அவள் வீலென்று அலறி நாற்காலியில் ஏறி நின்று கொண்டாளாம். கெக்கேகெக்கே என்று சிரித்தாராம் சொல்லிவிட்டு.

அவர் காலை எந்தப் பெருச்சாளியாவது கடித்ததா என்று தெரியவில்லை.

அவளுக்கு ஒர் எலி ராஜகுமாரன் கதை தெரியும். மூன்று ராஜ குமாரர்கள். அதில் ஒருவன் எலி ராஜகுமாரன். மற்ற இரு ராஜ குமாரர்களும் இவனைத் துரத்திவிடுகிறார்கள். பல இன்னல்களுக்குப் பிறகு இவனொரு ராஜகுமாரியைச் சந்திக்கிறான். அவள் இவனை முத்தமிட்டதும், அவன் ஒர் அழகான ராஜகுமாரனாக மாறிவிடு கிறான். கொஞ்சம் பெரியவளானதும் கதைக்கு இவளொரு பின் குறிப்பு சேர்த்துக்கொண்டாள். எலி ராஜகுமாரன் அழகான ராஜ குமாரனானான் முத்தத்தின் பின், ராஜகுமாரி எலியானாள். என்ன அற்புதம்! எந்த ராஜகுமாரனும் அவளை முத்தமிட முன்வரவில்லை. எலி ராஜகுமாரன் கூட.

கீதாவும், ஸுக்தேவும் ஒரு வருடம் வெளியூர் போன பிறகு இவர்கள் அதே வீட்டில் தங்கியபின் போராட வந்த எலி இது. பெரிய நகரங்களைக் குறிக்க ஏதாவது ஒரு சொல் இருக்கும். நியூயார்க்கை பிக் ஆப்பிள் என்பதுபோல். இந்த நகரத்தைக் குறிக்கும் ஒரே சொல் எலி என்று பட்டது. எலி நகரம். எலி மனிதர்கள். முத்தமிட்டாலும் எலியாகவே இருக்கும் மனிதர்கள். இந்த ஜன்னலில் ஒண்டியிருக்கும் எலிக்குப்பின்னால் ஒரு சரித்திரம் இருக்கலாம். பல யுகங்களாக எலியாக இருந்து அலுத்து, பல சுயசரிதைகளைத் தின்று களைத்து, அவளை முத்தமிட்டு உருமாற நினைத்த எலியாக இருக்கலாம் இது.

எழுந்து ஒரு நீண்ட கழியால் ஜன்னல் கதவைத் தள்ளினாள் வெளிப்பக்கமாய். எலி துள்ளி வெளியே ஒடியது.

மறுநாள் அமூல்யோ தன் வெளியூர்ப் பயணம் முடிந்து வந்ததும் எலிபற்றிச் சொன்னாள். எலி பாஷாணம் வாங்கலாமா என்றான் அமூல்யோ. இது கொஞ்சம் இலக்கிய எலியாக இருக்கிறது. ரொம்பத் துடித்துச் சாக வேண்டாம் என்று தோன்றியது அவளுக்கு. பாஷாணம் இல்லாமல் சாக ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தன. பார்க்கப்போனால் ஒர் அபத்தமான உலா அவளிடம் இருந்தது. ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் மேல் பாடிய உலா. அவர் இறக்கும் சில மணி நேரங் களுக்குமுன் இந்த உலா அவர் முன் படிக்கப்பட்டதாகவும், அவரை உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனதற்கும் அந்த உலாவுக்கும் சம்பந்தம் உண்டு என்றும் பிளவுபட்ட கட்சியின் ஒரு பகுதியினர் ஒரு வதந்தியைப் பரப்பியிருந்தனர். அந்த உலாவைத் தின்றால் இந்த எலி கட்டாயம் சாகும் என்று நினைத்தாள். ஆனால் துடிக்காமல் சாகுமா? சிரிப்பு வந்தது.

"ஏன், உன்னிடம் அதைச் சாகடிக்கிற மாதிரி புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்ன?”

"இதோ பார், நீ தமிழைக் கிண்டல் பண்ணாதே. உன் புத்தகம் எல்லாம் எலிசுடத் தின்காத சொத்தைப் புத்தகம்.”

 இது என்ன மாகாணப் பிரச்னையா:

"பின்னே என்ன, ழ சொல்லத் தெரியாத மடையன் எல்லாம் தமிழைக் கிண்டல் பண்ணுகிறதா? டாமில் என்ன டாமில்? தமி ழ், தமிழ் - ழ சொல்லு."

'ழ' என்றான் அமூல்யோ சுத்தமாக.

"ஒரு தடவை சொன்னால் ஆயிற்றா? வாழைப்பழம் வழுக்கி கிழவி நழுவி குழியில் விழுந்தாள். சொல்லு.”

"இதோ பார், ஸ்லீப்பர் கிடைக்காமல், தூங்காமல் வந்திருக்கேன். ஒரு கப் டீ தந்து விட்டு எனக்குத் தமிழ் -பார், தமிழ் என்று சொல்லி விட்டேன் - கற்றுத் தரக் கூடாதா?”

பல தரப்பட்டவர்கள் வாழும் நகரம் இது என்றார்கள். ஆனால் இதில் மதறாஸிகள் என்று பெரிய அடைப்புக்குறியில் அடக்கப் பட்டவர்கள் இருந்தார்கள் என்று தெரிந்தது. அமூல்யோவின் நண்பனொருவன். இவளைக் கண்டதும் அவன் வாய் கொஞ்சம் கோணும். "நமஸ்காரம்ஜி” என்பான் அரைத்துஅரைத்து. 'அம்' போட்டு விட்டால் தமிழ் என்ற நோக்கில், "சாம்பாரம், ரசம், டீயம், காப்பியம், பூரியம், சப்பாத்தியம்..” என்று சரமாரியாகக் கூறிவிட்டு "க்யாஜி” என்பான் இழுத்தவாறு.

இரண்டொரு தடவைகள் சென்றபின், "விஜய், பாவம் குழந்தை யிலிருந்தே இந்தக் கோளாறு உண்டா? இதுக்கு ஏதாவது குணமாகும் வழி உண்டா? இவ்வளவு பேசக் கஷ்டப்படுகிறீர்களே?" என்றாள் கனிவுடன்.

விஜய் திடுக்கிட்டு, "இல்லையே, இது வந்து... மதறாஸி ..." என்று தடுமாறினான்.

 "சரிதான். நான் உங்கள் நாக்கு சரியில்லை என்று வருத்தப் பட்டேன், இத்தனை நாள். நாங்கள் இப்படிப் பேசுவதில்லை பாருங்கள்.”

விஜய் அமூல்யோவைப் பார்த்தான் உதவிக்கழைப்பதுபோல்.

 "என்ன விஜய்? என்ன குடிக்கிறீர்கள்? டீயம் ?”

 "டீ" என்றான் மெல்லிய குரலில்.

இன்னொரு நண்பன் மூன்று பெக் ரம் உள்ளே போனதும் ஜோக் சொல்லுவேன் என்று அடம்பிடித்தான். "நான் மதறாஸி மாதிரி நடிக்கப்போகிறேன்" என்றான் உரக்க மற்றவர்கள் அவனை அடக்கும் முன் அவன் மதறாஸியாகிவிட்டான். "நான் மதறாஸி மாதிரி சாப்பிடப் போகிறேன்” என்று அறிவித்தான். சட்டைக்கையை மடித்து விட்டுக் கொண்டான். எதிரே இலை இருப்பது போல் பாவித்து ஒரு கை அள்ளி உஸ்ஸென்று உறிஞ்சினான். இன்னொரு கை அள்ளி இன்னொரு உஸ். பிறகு பரபரவென்று அள்ளி வாயில் திணிப்பது போல் பாவனை. கடைசியில் நாக்கை வெளியே விட்டு உள்ளங் கையையும், புறங்கையையும் நக்குவதுபோல் காட்டினான். அவனே சிரித்தான். யாரும் சிரிக்கவில்லை.

விஜய் அவனருகே மெள்ளப் போய் என்னவோ கிசுகிசுத்தான். அவன் அவளைப் பார்த்து இளித்துக் கொண்டே "சும்மா தமாஷ்" என்றான். "எனக்குத் தமிழ் நாட்டுக் கோயில் பிடிக்கும். அப்புறம் டோஸா, வடா, இட்லி (டவில் அழுத்தி) . .” என்று இழுத்தான்.

"சனியனே' என்றாள்.

அமூல்யோவுக்கு மட்டும் புரிந்தது. நண்பனின் பையைக் கையில் தந்து வெளியேற்றினான். விஜய் அன்று போகும்போது நமஸ்காரம்ஜீ கூடச் சொல்லாமல் பலகீனமாக அவளை அனைத்து குட் நைட்' என்றான்.

ஒரு வெறி வந்தது. அதிகமாகத் தமிழர் வாழும் பகுதியில் வாழையிலை விற்பவனை அணைத்துக்கொள்ளலாம் போல இருந்தது. 'அவுக' இவக என்ற சொற்கள் காதில் விழுந்தவுடன் தாமிர பரணியே கரை புரண்டு வந்துவிட்டதுபோல் தோன்றியது. தோசை யும், இட்லியும், வடையும், ரசமும், இடியாப்பமும், செட்டி நாட்டுக் கோழிக்கறியும் வாழ்க்கையின் ஆதாரங்களாகத் தோன்றின. மறந்தே போன தமிழ்ப் பாடல்கள் திடீரென்று இரவு வேளைகளிலோ, மத்தியான வெயிலிலோ, பேருந்துகளில் அல்லது ரயிலில் ஜனத் திரளில் வியர்வையை அழுந்தத் துடைக்கும்போதோ ஒரு மின்னல் வலியாய் நினைவுக்கு வந்தன. மொட்டை மாடியில் இரவு கால்களை அகற்றி வைத்து நடை நடந்தவாறே நட்சத்திரங்களைப் பார்த்து தாத்தா பாடும் காவடிச் சிந்து கேட்டது :

ஊத்த சரீரமிது ஒன்றுக்கும் உதவாது
பீத்த சல்லடை போலே - கிளியே
சதா நமக்குத் துன்பமிது.

தமிழ்ப் புத்தகசாலையை எட்டும்வரை இந்த வெறி பிடித்து ஆட்டியது. புத்தகசாலையில் வண்ணவண்ண அட்டைகளில் மல்லாந் தும், குப்புறவும் படுத்த பெண்களைக் கண்டதும் கால்கள் சற்றுப் பின்னிக்கொண்டன.

புத்தகசாலைக்காரர் வேட்டிக்குள் போட்ட ஒரு கையை எடுக்கவே மாட்டார் என்று தோன்றியது. உள்ளே அப்படி என்ன புதையல் இருந்தது என்று தெரியவில்லை. பெண்களைக் கண்டதும் அவர் கை அப்படிப் போய் மறைந்து கொண்டது. தமிழ்ப் பண்பாடு பற்றி எஞ்சியிருந்த ஒரு கையை ஆட்டியபடி அழுத்தத்துடன் பேசினார். "ஒரு பண்பாட்டை நாங்க பாதுகாத்துக்கிட்டுருக்கோம்மா."

"தமிழுக்காகக் கல்லடி பட்டவன் நான்.” மண்டையில் ஒரு வழுக்கை மூலையைக் காட்டினார். "வெளியில பாரதியார் சிலை ஒண்ணும், திருவள்ளுவர் சிலை ஒண்ணும் வைக்கணும்னுட்டு இப்ப ரொம்ப முயற்சி பண்ணிக்கிட்டிருக்கிறோம். சுவத்துல எல்லாம் குறள் எழுதணும்னுட்டு நான் ஒரு யோசனை முன்வச்சிருக்கேன். நுழைஞ்ச உடனே குறள் கண்ணுல படனும்மா பளார்னுட்டு குத்தணும் கண்ணை. இப்ப நீங்களே நுழையlங்க தெய்வம் தொழாள்

கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை - எதிர்ல குறள். எப்படியிருக்கும்மா உங்களுக்கு? சிலிர்த்துப்போயிடும் இல்லையா? அப்படியே புல்லரிக்கும். நம்ம பெண்கள நாம்ப போற்றணும்மா. குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னா னுட்டு பரிசு தர மாட்டோம். குத்துவிளக்கு தருவோம். தமிழ்ப் பண்பாட்டுல பெண்கள் பங்கு பற்றிப் புத்தகம் தருவோம்” முன்னால் சாய்ந்தார். "ஒன்னுமில்லம்மா. நம்ம பண்பாடு முழுக்க முழுக்கப் பெண்கள் கையில் இருக்கும்மா." பெண்கள் கையில் பண்பாட்டை ஒப்படைத்த நிம்மதி அவர் குரலில் தெரிந்தது. இவருடைய கை தன் பண்பாட்டுத் தேடல்களை விட்டுவிட்டு வெளியே வந்தால் அதிலும் கொஞ்சம் பண்பாட்டுச் சுமையை வைக்கலாமே பாதுகாக்க என்று தோன்றியது.

சங்கத்தின் வாசலருகே, தென்னிந்தியர்கள் எல்லோரும் கலை களைப் பயிலும் சபையின் பாடகர் ஒருவர் மற்றவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

"என்னை வெளில அனுப்பிச்சுட்டாங்க தெரியுமில்ல?"

 "அப்படியா? ஏன் ?”
வெளேரென்று கஞ்சி போட்டு விறைத்திருந்த சட்டையின் பொத்தான்களை மடமடவென்று கழற்றி வெற்று மார்பைக் காட்டினார்.

"பூணுால் இல்ல."

மிகவும் வீர்யம் வாய்ந்த பாஷாணம் வாங்கி வந்தார்கள் இருவரும். ரொட்டியில் தடவி மூலைகளில் போட்டனர். ஒரு ரொட்டித் துண்டை கழுதையின் ஆத்மகதையின் பின்னால் போட்டாள். எந்த ரொட்டித் துண்டை அது தின்றதோ தெரியவில்லை. மெத்தென்ற நீலத் துணியில் தைக்கப் பட்ட பையின் உள்ளே அடக்கமாய்ப் படுத்து இறந்து கிடந்தது. அவளுக்குத் திக்கென்றது. அது கஷ்டப்பட்டிருக் குமா? துடித்து இருக்குமா? அது தொல்லைப்படுத்தியது. தூக்கத்தைக் கெடுத்தது. புத்தகங்களைப் பாழாக்கியது. நீலப் பைக்குள் தனியாகத் துடித்து இறந்துபோனது. அமூல்யோ கடற்கரையின் ஒர் ஒரத்தில் பையை உதறிவிட்டு வந்தான். கடற்கரையில் இவர்கள் ஒரு முறை பார்த்த எலிபோல் இதால் முரண்டு பண்ண முடியாது. ஓர் எலிக்கூண்டில் எலியுடன் இவர்கள்முன் ஒருவன் நடந்தான் கடற் கரையில் ஒரு மாலை. கூண்டு வழியாகப் பார்த்து கீச்கீச்சென்றது ஒரு குட்டி எலி, கடற்புறமாய் வாயை வைத்துக் கூண்டைத் திறந்தான். எதிரே கடலைப் பார்த்து அசந்தது. கூண்டை விட்டு வர மறுத்தது. கத்தியவாறே கூண்டின் கம்பியைக் கவ்விக்கொண்டது. கூண்டுடன் வந்தவன் அதை உதறினான். உலுக்கினான். தட்டினான். ஒவ்வொரு முறையும் வெளியே வராமல் எலி அடம் பிடித்தது. சங்கடப்பட்ட வாறே கூண்டருகே தவம் கிடந்தான் எலி வெளியே வரும் என்று.கடற்கரையை விட்டு வெளியே போகும்போது கடைசியாகத் திரும்பிப் பார்த்த போது எலி இன்னும் வெளியே வந்திருக்கவில்லை. அவன் கூண்டருகே அமர்ந்திருந்தான் கூண்டைத் திருப்பி எடுத்துப் போக. எலி அவன் பிடிவாதத்தை ரசித்ததாய்த் தெரியவில்லை. சூரியன் அஸ்தமித்த அந்தி ஒளியில் அவனுடைய மற்றும் எலிக் கூண்டின் நிழலுருவங்கள் தெரிந்தன. எதிரே தொடுவானம். அருகே கட்டடமலைகள்.

குருவியின் வருகை இது நடந்து சில தினங்களுக்குப் பிறகு நடந்தது. ஒருவர் மட்டுமே செளகரியமாக நிற்கக் கூடிய வராந்தாவில் நின்றபடி கீழே குவிந்திருந்த குப்பை மேட்டையும், அதனருகேயே மலம் கழிக்க அமர்ந்திருந்த குழந்தைகளையும் பார்த்துவிட்டு, பார்வையை எதிரே இருந்த பழைய சினிமா தியேட்டரின் பக்கம் திருப்பியபோது பழைய இந்திப் படம் ஒடிக் கொண்டிருந்தது அங்கே மின் விசிறிகள் ஓடாத குறையை நிவர்த்தி செய்ய பால்கனி கதவுகள் திறக்கப்பட்டி ருந்தன. கனத்த, கறுப்புப் படுதாக்களினூடே முகேஷ் ராஜ்கபூருக்காகப் பாடிய பாடல் ஒன்று மிதந்து வந்தது. இவள் தோளை உரசியவாறே அது விழுந்தது. பதறிப் போய் நகர்ந்து குனிந்து பார்த்தால் குருவி. சின்னக் குருவி. ஒரு சிறகு கோணலாய் முறிந்திருந்தது. அலகினுள் கோவைப் பழச் சிவப்பு. தொடப் பயமாக இருந்தது. பேனா மை போட வைத்திருந்த மை நிரப்பியில் தண்ணிர் நிரப்பி அதன் வாயில் சொட்ட விட்டாள். கண்களைத் திறந்தது. ஒர் அட்டையால் அதை ஏந்தி ஒரமாக வைத்தாள். இரவு அதன் மேல் ஒரு வலைக் கூடையை வைத்து மூடினாள்.

காலையில் கூடையைத் திறந்ததும் ஒரு கூச்சல் போட்டது குருவி. கிக்கீகிக்கீ என்று கத்தியவாறே சுற்றியது. மை நிரப்பியை அலகால் தட்டியது. இவள் மலைத்துப்போய் திரும்புவதற்குள் இரு குருவிகள் வராந்தா சுவரின் கைப்பிடியில் அமர்ந்தன. வேகவேக மாய்ப் பறந்து வந்து புழுக்களைக் குட்டிக் குருவியின் வாயில் திணித்தன. குட்டிக் குருவி சமர்த்தாய், ரசிக்கும் கிக்கி ஒலிகளை எழுப்பியபடி முழுங்கியது. பிறகு மீண்டும் முடங்கிக்கொண்டது.
மத்தியானத்தில் துவங்கின பறக்கும் பாடங்கள். மேலிருந்து கீழே, கீழிருந்து மேலே மெதுவாகவும், வேகமாகவும் பறந்தது ஒரு குருவி. அது அமர்ந்ததும், மற்றொன்று பறந்தது. குட்டிக் குருவி கோணல் சிறகுடன் எழுந்து, காற்றில் எழும்பி விழுந்தது. ஐந்துமணி வரை விடாமல் முயன்றன இரு குருவிகளும். குட்டிக் குருவி பறக்கும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு நடக்கத் துவங்கியது. இரண்டு குருவி களும் அவள் பொறுப்பில் குட்டிக் குருவியை ஒப்படைத்து விட்டுப் பறந்தன. தொடர்ந்து சில நாட்கள் வருகை தந்துவிட்டுக் குருவிகள் இரண்டும் மறைந்தன. குட்டிக் குருவியால் ஐந்தாறடிக்கு மேல் பறக்க முடியவில்லை. புத்தக அலமாரியின் முதல் தட்டின் இரும்புப் பிடியைத் தன் வாசஸ்தலமாக்கிக்கொண்டது. இரவில் திருட்டுத்தனமாக வந்து புத்தகங்களை முற்றுகையிட்ட எலி போல் இல்லாமல் பகல் வேளையிலேயே ஒரு பக்கத்துப் புத்தகங்கள் முழுவதும் எச்சமிட்டது. ஒரு நாள் அதன்முன் மண்டியிட்டு அமர்ந்து, "சிட்டுக் குருவி, சிட்டுக் குருவி சேதி தெரியுமா? என்னை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ...” என்று பாடியதும் கர்ரக்" என்று சத்தமிட்டு எதிர்ப்புத் தெரிவித்தது. சிவப்பு நிறம் அதை வெகுவாக ஈர்த்தது. சிவப்பட்டைப் புத்தகங்களின்மேல் தாராளமாக எச்சத்தைப் பரப்பியது. இரவு வெகு நேரம் கழித்து வந்து கதவைத் திறக்கும்போது புத்தக அலமாரியின் மூலையிலிருந்து க்விக்' என்று கூவித் தன் மறுப்பைக் காட்டியது.

புத்தக அலமாரி அருகே உள்ள சன்னலைத் திறந்ததும் அதன் கம்பியில் அமர்ந்தது. மில் புகையின் கருமை படிந்த கட்டடங்களை, வாகனங்களின் நெடியும் கூச்சலும் கலந்த பின்னணியில் சன்னல் வழியாகப் பார்க்கும்போது முன்னணியில் ஒரு கோணல் சிறகுக் குருவி கண்ணில் பட்டது. மணிக் கண்களை விழித்து வெளியே பார்க்கும் குருவி.

மழைத் திரையின் பின்னே எல்லாம் மங்கல் கோடுகளாகத் தெரியும்போது, சன்னல் கம்பியில் பதித்த முகத்தின் அருகே குட்டிக் குருவி இருந்தது. கண்ணை இடுக்கி, விழிகளை ஒர் ஒரத்தில் வைத்துப் பார்த்தபோது குருவி கண்களை நிரப்பியது. அதன் தலையின் பின்னே, சாம்பல் பூசிய நகரம் நீண்டது. குருவியின் தலையில் வைத்த நகரம் போல். கிரீடமாய்.

சன்னலில் தலையைப் பதித்து நின்றவாறே கண்கள் அசந்த ஒரு நேரத்தில் கண்ணை விழித்தபோது குட்டிக் குருவியைக் காணோம். "குட்டி, குட்டி' என்று கூவியவாறே வீடு முழுவதும் தேடினாள். 'குட்டி என்று உரக்கக் கூவி வராந்தாவின் வெளியே எட்டிப்பார்த்த போது கட்டடச் சுவரின் ஓர் ஒட்டையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தது. கோணல் சிறகு தெரிந்தது. பருந்தோ, கழுகோ, வல்லூறோ அதைத் தாக்கும்முன் அதை மீட்பது எப்படி என்று கலங்கியபோது, நளினமாக எழும்பிப் பறந்து மீண்டும் ஒட்டைக்குள் நுழைந்தது. இன்னொரு முறை எழும்பி பறந்து காட்டியது. அமூல்யோவும் அவளும் வராந்தாவில் நின்றுகொண்டே இருக்க, மூன்றாம் முறை மேலே எழும்பி மேலேயும் கீழேயும் லயத்துடன் பறந்து ஐம்பதடி துரத்தில் இருந்த மரம் ஒன்றில் புகுந்துகொண்டது. மரத்தில் பல சிட்டுக்குருவிகள்.

கண்ணுக்கெட்டிய துரம் வரை நெடிய, இடைவெளி இல்லா கட்டடங்கள். சீர்செய்யப்படாத சுவரின் வெடிப்புகள், வெடிப்புகள் மேல் சில சுவர்களில் பூசிய சிமெண்டின் வளைவு வளைவான கோடுகள், மழைத் தண்ணிர் சுவரில் ஊறாமல் இருக்கத் தார் பூசிய சில சுவர்கள். வராந்தாவில் இருந்து வெளியே நீண்ட கொக்கிகளில் 
தொங்கிய வண்ண உடைகள், சில சன்னல்களில் இருந்த தொட்டி களிலிருந்து வெளியே நீண்ட பச்சை இலைகள் இவற்றுடன் நகரம் ராட்சஸன் மாதிரிக் கிடந்தது. அதன் நடுவே முட்டி மோதிக் கிளைத்திருந்த மரத்தின் கிளையில் ஒரு சிட்டுக் குருவி.

அதன்பின் ஒருநாள் மாலை அந்த அனுபவம் ஏற்பட்டது.

தெரு விளக்குகளும், கடை விளக்குகளும், விளம்பர நியான் விளக்குகளும் பளிச்சிட ஆரம்பித்தாகிவிட்டது. வீதி ஒரு வாகன சமுத்திரமாக இருந்தது. விர்விர்ரென்று இரண்டடுக்குப் பேருந்துகளும், புகுந்து, நுழைந்து விடாமல் ஒலி எழுப்பியவாறே விரையும் ஆட்டோக் களும், பொறுமையற்ற ஸ்கூட்டர்களும், மோட்டார்களுமாக ஒசைப் பிரளயம். வாகனங்களுடே நுழைந்து, ஒடி, முண்டியடித்து வீதியின் அப்புறத்தை எட்டிவிட்டான் அமூல்யோ. பாதி வீதியைக் கடந்து, வீதியை இரு பகுதிகளாகப் பகுக்கப் போடப்பட்டிருந்த கற்களாலான ஒரடித் தளத்தில் இவள் சிக்கிக்கொண்டாள். எதிரே இருந்து அமூல்யோ வா வா வென்று கையை அசைத்தான். சுற்றிலும் ஒரு சிறு சதுர அடி இடைவெளியைக்கூட வீணாக்காமல் பளிச்சிட்டப் பெரியபெரிய விளம்பர விளக்குகள் கண்ணை முட்டின. முதுகை உரசுவது போல் வந்தது இரண்டடுக்கு சிவப்புப் பேருந்து நீலமும், மஞ்சளும், கருப்புமாய் விளம்பரங்களுக்கான ராட்சஸ வண்ணத் தீட்டல்களுடன். நின்று கிரீச்சிட்டு, கடந்து முன்னேறும் மூர்க்கமான வாகனங்கள். இரண்டடி பாய்ந்து நடந்து, பிறகு கறுப்பு நிறத்தில் சீறிக் கொண்டு வந்த மோட்டாருக்குப் பயந்து மீண்டும் பின்னால் வந்தாள். காதருகே ஹாரன் ஒலிகள் தமுக்கடித்தன. முகம், கழுத்து, அக்குள், தொடை எல்லாம் வியர்வை வெள்ளம். மீன்கள் விற்கும் கூடைகள் இரண்டைச் சாய்த்துப் பிடித்தபடி ஒருத்தி அருகில் வந்தாள். வாடை அடித்தது கூடைகளிலிருந்து. கூடைகளைப் பிடிக்காத மறு கையால் இவள் இடையை வளைத்துக்கொண்டாள். கூடைகளை உயர்த்தி வாகனங்களை மறித்தபடி இவளை இழுத்துக் கொண்டு போனாள். வீதியின் அப்புறத்தை எட்டியதும் அமூல்யோவின் அருகே இவளை விட்டுவிட்டுப்போனாள்.

எச்சிலும், துப்பலும், சாக்கடையும், சிகரெட் துண்டுகளும், சிறு வியாபாரிகளும் நிறைந்த நடைபாதையில், நகரத்தின் சகல ஓசைகளும் பிரவாகித்துப் பெருகிய இடத்தில், மூச்சு வாங்க நின்றபோது எதிரே அவன் வந்தான். நகரத்தின் மொழியில் பேவ்டா என்று அழைக்கப் படுபவன். மில்லி அடிப்பவன். பேவ்டாக்களிடம் நகரம் கனிவுடன் நடந்து கொண்டது. பேருந்துகளிலோ, ரயிலிலோ, அவர்கள் நீட்டிப் படுத்துக் கிடந்தால் யாரும் அவர்களை உலுக்கி எழுப்புவதில்லை. "பேவ்டா ஹை, பேவ்டா ஹை" என்று மன்னித்துக் கடந்தனர். இரவு பன்னிரெண்டு மணிக்கு, ஒரு முறை ஒரு பேவ்டா பேருந்தில் ஏறி நடத்துனரிடம் சீட்டு வாங்கமாட்டேன் என்று அடம் பிடித்தான். "குடி, குடி, குடி, மாலையில் குடி, காலையில் குடி, பகலில் குடி, இரவில் குடி குடி, குடி, குடி” என்று ஹிந்தியில் முழக்கமிட்டபடி நின்றான். நடத்துநரே அவன் சீட்டை எடுத்தார். "கோயில் வந்தால் எழுப்பு” என்று விட்டுத் தடால் என்று படுத்தான். வழியெல்லாம் கோயில். பத்தடிக்கு ஒரு சாயிபாபா நடைபாதைக் கோயில். எந்தக் கோயிலில் எழுப்ப? "பாவம், பேவ்டா” என்றார் நடத்துநர்.

எதிரில் வந்த பேவ்டா அருகில் வந்ததும், நடுத்தர வயது மனிதர் என்று தெரிந்தது. பத்தடி தள்ளி இருந்தபோது மெல்ல ஸ்லோ மோஷனில் சரிந்து விழுந்தார் நடைபாதையில். யாரும் கண்டு கொள்ளவில்லை. வழியில் கிடக்கும் அவர்மேல் இடறாமல் சுற்றி நடக்கத்தொடங்கினர்.

அவளும் அமூல்யோவும் அருகில் போனதும் அவர் எழுந்திருக்க முயன்று தோற்றார். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் இரண்டங்குல இடைவெளி வரப் பிரித்து, "கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது” என்று கூறி மலர்ச்சியுடன் புன்னகைத்தார். அவரை வழியிலிருந்து எழுப்பி ஒரு கடையின் சுவரோரமாய் அமர்த்தினர். "என் செருப்பு காலில் இருக்கிறதா? அதைக் கையில் தா, காலிப் பயல்கள் துரக்கிக்கொண்டு போய்விடுவார்கள்” என்றார். கையில் ஜோடி செருப்பைத் தந்ததும் அதை அணைத்தபடி கண்களை மூடிக்கொண்டார். முகத்தில் நிம்மதியான புன்னகை.

பஸ் நிறுத்தத்தை அடைந்ததும் நீண்ட வரிசையில் நின்று கொண்டனர். பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தில் சாய்ந்து அவள் சிரிக்கத் தொடங்கினாள். ஒரு வினாடிக்குப்பின் அமூல்யோவும் சேர்ந்துகொள்ள இருவருக்கும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.

'காலச்சுவடு ஆண்டுமலர்', 1991


https://ia801409.us.archive.org/4/items/Vaganam/Vaganam.pdf
automated google-ocr
posted on 18/03/2016
வாகனம் - அம்பை

எல்லோருக்கும் அவரவர் தேவைக்கேற்ப ஒரு வாகனம் இருக்கிறது. அவரவர் தகுதியையொட்டி அமைந்த வாகனம். சிவனுக்கு நந்தி முருகனுக்கு மயில் விஷ்ணுவுக்குக் கருடன் சனீஸ்வரனுக்குக் காகம் யமனுக்கு எருமை. அத்தனை பெரிய உடம்புடைய வினாயகருக்குக் கூட அதிகம் பயணம் செய்யாமல் அரசமரத்தடியில் அமர்ந்திருந்தால் போதும் என்றாலும் வாகனக் குறை இருக்கக் கூடாது என்று ஒரு மூஞ்சூறு வாகனம் துணைக்கு நாயகர்களுடன் வாகனத்தில் ஒண்டிக் கொண்டுவிடும் தேவிகளுக்குக்கூட சொந்த வாகனத்தைப் பொறுத்த வரை குறை இல்லை. பாகேச்வரிக்கு அன்ன வாகனம். பத்மாசனிக்கு நாக வாகனம். மகேச்வரிக்கு ரிஷப வாகனம். மீனாட்சிக்குக் குதிரை வாகனம். இது தவிர சிலர் சும்மா இருக்கும்போது சிவப்புத் தாமரை அல்லது வெள்ளைத் தாமரையில் மிதந்தபடி இருக்கிறார்கள். சற்று உக்கிரமாகச் செயல்பட நினைக்கும் பெண் கடவுள்கள் சிங்கத்தின் மீதேறி அதன் பிடரியைப் பிடித்தபடி தங்கள் பயணத்தைத் துவக்கிவிடுகிறார்கள். தேவிகள் இருக்கட்டும். அரசிளங்குமரிகள் மற்றும் ராணிகள் எத்தனை பேர் யானையேற்றம், குதிரையேற்றம் செய்யவில்லை? தேரோட்டியவர்கள் கூட உண்டு. காவியத்து நாயகி கள் புஷ்பக விமானத்தில் பறந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் குழந்தை களுக்கான, தேவதைகள் வரும் புனைகதைகளில் சூனியக்காரிகள் கூடத் துடைப்பக்கட்டையில் பறந்து வருவார்கள். பாக்கியத்துக்கு ஒரு வாகனத்திற்காக ஆசைப்பட இத்தனை புராண, சரித்திர, காவியப் பின்புலம் இருந்தது. இருந்தும் வாகன யோகம் இருக்கவில்லை.

 O 

சின்னக் குழந்தையாக இருந்தபோது அவளுக்கு மூன்று சக்கர சைக்கிள், பெடல் மோட்டார் வண்டி என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. பத்து மாதத்திலேயே அவள் நடக்க ஆரம்பித்து விட்டாளாம், நடைவண்டிகூட இல்லாமல் குடும்பத்துப் புகைப்பட ஆல்பத்தைப் புரட்டும்போது அவளுடைய பெரிய குடும்பத்து
வாகனம் ** 347 --
________________

அத்தனை ஆண் குழந்தைகளும் ஒரு மூன்று சக்கர சைக்கிளுடனோ, சின்ன மோட்டார் வண்டியில் அமர்ந்தபடியோ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்தன. இவளுடையதும் இருந்தன. மரப்பாச்சி பொம்மையைக் கையில் பிடித்தபடியோ, அழகிய வேலைப்பாடு செய்த, வெல்வெட் மெத்தை பதித்த மர நாற்காலியின் கையை அல்லது நீளமான காலைப் பிடித்தபடியோ அந்தக் குடும்பத்து அத்தனை பெண்களுக்கும், குழந்தைகள், பெரியவர்கள் என்ற பேதமி ல்லாமல் அந்த அலங்கார நாற்காலி துணை நின்றிருந்தது. அதன் முதுகு, கை, கால் என்று வயதுக்கேற்றபடி ஒரு பகுதி பெண்கள் சார்ந்து நிற்க உதவியிருந்தது. எதையாவது பிடித்துக் கொள்ளாமல் பெண் பிறவிகள் நிற்க முடியாது என்பதில் அவர்கள் குடும்பத்துப் புகைப்படக்காரருக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது என்று தெரிந்தது அவளுக்கு ஆண்களுக்குக் குழந்தைப் பருவத்தி லிருந்தே சக்கரங்கள் உள்ள வாகனங்கள் துணை நின்றன. அரை யானை கனம் கனத்த, அசைக்கவே முடியாதபடி பூமியில் அழுந்தி நின்ற தேக்கு நாற்காலிதான் பெண்களுக்கு அம்மாவழித் தாத்தா வாங்கிய முதல் கறுப்பு ப்யூக் காரின் மேல் ஸ்ட்ை கோட்டுடன் சாய்ந்தபடி நின்றவாறே தாத்தாவின் புகைப்படம். பின்பு அதே போஸில் மாமாக்களின் புகைப்படங்கள் இருந்தன. மூன்று சக்கர சைக்கிளிலிருந்து ப்யூக் கார் வரை ஓர் அதிகாரபூர்வமான வாகன முன்னேற்றம் கண்கூடாகத் தெரிந்தது ஆண்களைப் பொறுத்தவரை.

அப்பாவின் குடும்பத்தில் சித்தப்பாவுக்கு இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு ஏற்பட்டபோது ஒரு மோட்டார் பைக் வந்தது பள பளத்தபடி அதில் சித்தியை ஏற்றிக்கொண்டு சுற்றியது மட்டுமல் லாமல், அவளை அதன்மேல் அமர்த்தி, பல புகைப்படங்களையும் அவர் எடுத்தது பல விமர்சனங்களைக் கிளப்பியது குடும்பத்தில். அதன் தோல் இருக்கைமேல் அமர்ந்து விட்ட சித்தியை எப்படி மீண்டும் தூய்மைப்படுத்துவது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடித்தன. சாணத்தைப் போட்டு மோட்டார் பைக்கைக் கழுவுவதா, அல்லது சித்தியையே சாணத்தில் குளிப்பாட்டுவதா போன்ற பட்டி மன்றங் கள் நடந்தன. முடிவில் எல்லாவித மீறல்களுக்கும் ஏதாவது ஒரு நிவாரணச் சடங்கு வைத்திருந்த ஒரு புரோகிதரின் யோசனைப்படி பசு மூத்திரம் ஒரு துளி கலந்த எதையோ விழுங்கி சித்தி தன்னைச் சுத்திகரித்துக்கொண்டாள் என்று கேள்வி. ஒரு முறை அவள் சுத்திகரிக்கப்பட்ட பின்பு எந்த விமர்சனமும் வரவில்லை. சித்தி மோட்டார் பைக்கில் சவாரிசெய்தாள் நிதமும்.
O

கூட்டத்திலும் மழையிலும் பேருந்தை அல்லது மின்ரயிலைப் பிடித்து அலுவலகம் செல்லப் பழக்கப்பட்ட அந்த நகரத்திலிருக்கும் அத்தனை பேருடனும் அவள் கலந்துபோயாயிற்று. ஆவேச மழையாக
<- 348="" 4="" p="">________________

இருந்தால் குடையிருந்து ஒர் உபயோகமும் இல்லை. குடையைப் பிரித்தவுடன் அது கம்பிகளை நீட்டியபடி மடங்கி அம்பேல் சொல்லி விடும். மழைக்கோட்டும் தொப்பியும்தான் கை கொடுக்கும். ஆண்கள் தங்கள் கால்சராயை முட்டுக்கு மேல் மடக்கி விட்டுக்கொண்டு, காலணியைப் பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு கைப்பெட்டி சகிதம் கிளம்பிவிடுவார்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கியோ, ரயிலடியை நோக்கியோ. மழைக்காலத்துக்கு என்று புடவைகள் உண்டு பெண்களிடம் பருத்தி அல்லாத, வேகமாக உலர்ந்துவிடும் செயற்கை இழைப் புடவைகள். அதுவும் முட்டுக்கு மேல் ஏறிவிடும். ஸல்வார் கமீஸாக இருந்தால் ஸல்வார் முட்டு வரை மடக்கப்பட்டு விடும். ஆயிரக்கணக்கான, பலவித வடிவமும் வயதும் உள்ள பெண் கள் வேலைக்குப் போகும் மும்முரத்தை முகத்தில் காட்டியபடி ஒரு கூட்டமாகத் திரண்டு இப்படி வரும்போது யாருக்கும் வெறித்துப் பார்க்கவோ, கவனிக்கவோகூட நேரமிருக்காது. எதிரே நின்று வெறித்துப் பார்க்கும் அல்லது நோட்டம் விட முற்படும் வேற்றுார் ஆளை, "உனக்கு அம்மா இல்லையா. அக்கா, தங்கச்சி இல்லையா?” என்றெல்லாம் நின்று கேட்காமல், வேகமாக முன்னேறும் அந்தக் கூட்டம் தயங்காமல் வீழ்த்திவிட்டுப் போய்விடும். பாக்கியத்துக்கும் இது பழகிவிட்டது.

அவள் செல்ல வேண்டிய ஈரடுக்குப் பேருந்தை எதிர்நோக்கி நின்று, அது வந்ததும் முண்டியடித்து ஏறி, "ஒ, குடை ஏ, மஞ்சள் புடவை அரே கறுப்புப் பான்ட் ஏ, நரைத்த தலை முன்னால் போங்க, முன்னால் போங்க . . .' என்று நடத்துநரால் முன்னால் தள்ளப்படும் குறியீடுகளில் மறைந்துபோன நபர்களில் ஒருத்தியாய்ப் பயணித்து இறங்கி, பின்பு ரயிலடியில் எந்த பிளாட்பாரத்தில் வண்டி நிற்கிறது என்று பளிச்சிடும் விளக்குக் குறிகளைப் பார்த்துத் தெரிந்துகொண்டு, படிக்கட்டில் ஏறி, பாலத்தில் ஒடி, இறங்கி, விரைவு மின்ரயிலைப் பிடித்து அமர்ந்து வெளியே பார்ப்பாள். ஒவ்வொரு நாளும்.
O

பாக்கியத்தின் அம்மாவின் காலத்திலேயே மகரிஷி கர்வே மகா ராஷ்டிரத்தில் நடத்திய பள்ளியில் பெண்கள் சைக்கிள் விட ஆரம் பித்தாயிற்று. சைக்கிள் பந்தயங்களில் வேறு அவர்கள் பங்கெடுத் தார்கள். சைக்கிள் ஒட்ட மகாராஷ்டிரப் புடவைக் கட்டு வாகானது. பத்திரிகைகளில் முட்டுவரை ஸ்கர்ட் போட்ட மேல் நாட்டுப் பெண்கள் சைக்கிள் ஒட்டுவது போல் விளம்பரங்கள் வந்தபடி இருந்தன அப்போது, ஆனால் அம்மா வீட்டுப் பெண்களுக்கு வாகன யோகம் தாத்தா கோயமுத்துரர் வந்த பிறகுதான் வந்தது.

தாத்தா தேர்ந்தெடுத்த வீடு சற்றுத் தள்ளி, ஒதுக்குப்புறமாய் இருந்தது. மாமாக்கள் கல்லூரி போக, எடுபிடி வேலை செய்யப்
வாகனம் ** 349 --
________________

போக என்று ஒரு ராலே சைக்கிள் வந்தது வீட்டுக்கு முன்பக்கம் பிடியிலிருந்து உட்காரும் இருக்கைவரை குறுக்குக் கம்பி போட்ட ஆண்களுக்கான சைக்கிள். சில நாட்கள்வரை மாமாக்களின் தனி உரிமையாக இருந்தது. பின்பு சுவரைப் பிடித்தபடி கமலா சித்தி அதை ஒட்டப் பழகி தங்கை ஆனந்திக்கும் தேர்ச்சி கொடுத்தபின் அது பொது வாகனமாயிற்று. புடவையுடனேயே முன்னால் காலை மடித்து அதில் ஏறிவிடுவாள் கமலா சித்தி, வேகவாகினி அவள். ஒடிசல் தேகம். நீள நீளமாய்க் கால்கள். விடுமுறையில் கோயமுத்துரர் போனபோது இவள் காரியரில் தொற்றிக்கொண்டு போனதுண்டு அவளுடன் நின்றபடியே மிதித்து ஒட்டி, வேகமெடுத்தபின் அமர்ந்து, மரம், செடி, வீடுகள் எல்லாம் பார்வையில் நிற்காமல் ஒடும்படி சைக்கிளை விடுவாள் கமலா சித்தி. பறக்கும் குதிரையில் போவது போல் கற்பனை ஓடும். இறக்கைகளை விரித்து வானில் பறக்கும் வெள்ளைக் குதிரை.
வேறு உலகத்துக்குப் போய்விட்டு வந்தவள்போல் ஒரு கிறக்கத்து டன் இறங்குவாள் காரியரிலிருந்து முன்பற்கள் இரண்டும் உடையும் வரை சைக்கிள் சவாரி நீடித்தது. அதன் பின்பு தாத்தா ப்யூக் வாங்கிவிட்டார். சித்திகள் அதை ஒட்டவில்லை. ப்யூக் வாகன சவாரி எப்போதாவது கோயமுத்துார் போகும்போது கிடைத்தது. கமலா சித்தியுடன் போன சைக்கிள் சவாரியின் சுகமில்லை அதில், கையை விரித்துப் போட்டுக்கொண்டு ஒட்டுவது போன்ற கமலா சித்தியின் பராக்கிரம சாகசங்கள் மாமாக்களிடம் இல்லை கார் ஒட்டும் போது.
O

மின்ரயிலின் சன்னலூடே பார்க்கும்போது மோட்டார் சைக்கிள், ஜீப், கார் என்று விரைபவர்கள் கண்ணில் படுவார்கள். ஈரடுக்குப் பேருந்தின் மேலடுக்கிலிருந்து கீழே பார்க்கவும் அவளுக்குப் பிடிக்கும். பார வண்டி, தண்ணிர் லாரி, பேரீச்சம்பழத்துக்குத் தர வேண்டியது போல் கிடுகிடுத்துப் போன சைக்கிள், முதுகை நன்றாக வளைத்து ஒட்ட வேண்டிய பந்தய சைக்கிள், பல வண்ணங்களில், வடிவங்களில், ஒலிகளில் விரையும் கார்கள் என்று கண்ணில் படும் வாகனங் களுக்குக் குறைவே இல்லை.

அப்படி அவள் ஒரு முறை மேலடுக்கிலிருந்து பார்த்துக்கொண்டி ருந்தபோதுதான் அதைப் பார்க்க நேரிட்டது. அந்த விபத்தை. ஒரு ஸ்கூட்டரில் நான்கு பேர் கொண்ட குடும்பம் போய்க்கொண்டி ருந்தது. கடைத் தெருவிலிருந்து வந்திருந்தார்கள் என்று கூறுவது போல், பின்னால் அமர்ந்த மனைவியின் கையில் பெரிதாகப் புடைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பை, ஸ்கூட்டர் ஒட்டும் அப்பாவின் முன்னால் நின்றபடி பையன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே
<- 350="" p="">________________

இடுக்கில் பெண். முகங்களில் சிரிப்புடன் ஒரு குதுகலமான குடும்பம். நொடியில், இவள் பார்த்துக்கொண்டே இருந்தபோது, ஒரு பேருந்து கட்டுக்கடங்கா வேகத்தில் வந்து ஸ்கூட்டரைத் தாக்கியது. வாகனங் கள் நிறுத்தப்படும் கிரீச் ஒசைகளும், உரத்த பேச்சுகளுக்குமிடையே கீழே ரத்தம் பூசிக்கொண்ட குடும்பம். பெண்ணின் சிறு கையில் இறுகப் பிடித்த மஞ்சள் மோட்டார் பொம்மை இருந்தது.

அந்த முனை எப்போதுமே ஒரு விபத்து முனைதான். அதற்கு முன்தினம்கூட மோட்டார் சைக்கிளில் போன ஒரு பையன் பெட்ரோல் வண்டி மோதி செத்திருந்தான். இவள் வீடு திரும்பும் வழியில் அன்று பார்த்தபோது அந்த விபத்து நடந்த இடத்தில் எண்ணெயும் கண்ணாடித் துகள்களும் சிதறி இருந்தன. சற்றுத் தொலைவில் ஒற்றைச் செருப்பு ஒன்று குப்புறக் கிடந்தது.

"விபத்துகள் அதிகமாகிவிட்டன. காலையில் போனால் மாலை திரும்புவோமா என்றிருக்கிறது” என்று சிலர் பேசிக்கொண்டனர்.

O

இவளுடைய தம்பிக்கு ஒரு வயதாகும்போதுதான் மூன்று சக்கர சைக்கிள் வந்தது வீட்டில். கறுப்பு வண்ண சைக்கிள். அதன் பின்பு அவனுக்கு நான்கு வயதாகும்போது வீட்டுக்கு இரண்டு சக்கர சைக்கிள் வாகனம் ஒன்று வந்தது. சிவப்பு வண்ணப் பூச்சுடன் வழுக் கும் சிவப்பு ரெக்ஸின் இருக்கையுடன், நான்கு வயதுப் பையன் ஒட்டு வதற்கான வாகனம். அதைத் தொட்டுத்தொட்டு ரசித்ததுடன் சரி.

அந்தக் கனவு மட்டும் அடிக்கடி வந்தது. அந்தப் பறக்கும் கனவு. சைக்கிள் பெடலில் கால் வைத்ததும் ஓர் எடையற்ற உணர்ச்சி. பிறகு சைக்கிளுடன் வானில் எம்பிஎம்பிப் பறப்பது. எடையே இல்லை. பெடல் பூவிதழ்போல்.
பார்க்கப்போனால் சின்ன வயதில் அவள் சைக்கிள் விட்டது ஒரு முறைதான். சந்தில் ஒட்டிக் காட்டுகிறேன் என்று தம்பியிடம் சவால் விட்டுவிட்டுக் குப்பைத் தொட்டிமேல் ஏறி சர்க்கஸ் செய்து, சுவரில் முட்டி, சைக்கிளுடன் சாக்கடையில் விழுந்தாள். 'மளக் கென்று வலது முழங்கையில் சத்தம். அப்படியும் எழுந்து மீண்டும் ஒட்டினாள். வலது முழங்கை பங்கனபள்ளி மாம்பழமாகியது. "சைக்கிள் பக்கம் போனால் தெரியும்” போன்ற கூப்பாடுகளுக்குப் பிறகு, கை கால் முறிந்த பெண்ணுக்குத் திருமணமாகாது போன்ற எச்சரிக்கைகள் தொடர்ந்து, தம்பிக்கு மட்டுமே சைக்கிள் ஒட்ட அனுமதி வழங்கப்பட்டது. அவனுக்குக் கை, கால் உடைந்தால் அவனை யார் கட்டிக்கொள்வார்கள் போன்ற இவள் வாதங்கள் யார் காதிலும் விழவில்லை.
வாகனம் * 351 -
________________

கிண்டி அருகில் குடிபோனபோது குதிரைச் சவாரி பழக வேண் டும் என்று இவள் விண்ணப்பித்தாள் பெற்றோரிடம். இவளுடைய 'விபரீத ஆசைகளைப் பற்றிய பல கருத்து மோதல்கள் வீட்டில் நடந்தன. பின்பு குதிரையும் விலக்கப்பட்ட வாகனமாயிற்று.

டில்லியில் மேல்படிப்பு படிக்கும்போது மனத்தில், ஸ்கூட்டர் வேண்டுமென்ற வெளியிடாத ஆசை இருந்தது. தோழன் மணி வண்ணன் புத்தம்புது ஸ்கூட்டரைக் கொண்டுவந்து, "வாங்க பாக்கியம், ஒரு ரவுண்டு அடிக்கலாம். போணி பண்ணுங்க" என்றான். மறுக்காமல் அவன் பின்னால் உட்கார்ந்துகொண்டாள். அவன் ஸ்கூட்டர் ஒட்டப் பயின்று பல வருடங்கள் ஆயிற்று, ப்ரேக் விஷயத் தில் அவனுக்குப் போதிய ஞானம் இல்லை போன்ற அத்தியாவசிய மான விவரங்களை மணிவண்ணன் கூற மறந்துவிட்டான். சிறு வீதிகளில் உள்ள மாடுகள், எருமைகள், நாய்கள், பன்றிகள், மணியில் லாச் சைக்கிள்கள் இவைகளைக் கடந்து பிரதான வீதியை எட்டியதும் இரு புறமும் வேகமாக ஒடும் வாகனங்கள். புது மாடு மாதிரி மணிவண்ணன் மிரண்டுபோனான். பின்னால் அவசரப்படுத்தும் பார லாரியும் எதிரே விரைந்து வரும் பேருந்தும் அவனைக் கலவரப் படுத்த, எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் ப்ரேக்கை ஓங்கி அழுத்த, இவள் தெரு ரிப்பேர் செய்யப் போட்டிருந்த சரளைக் கற்களின் மேல் தூக்கி எறியப்பட்டாள். உடலெல்லாம் சிராய்ப்புக்கள். "ஐயோ, உங்களுக்குப் பின்னால உக்காரத் தெரியலையா? நல்லா பிடிச்சுட்டு உக்காரணும். எழும்புங்க. ரவுண்டை முடிச்சிடலாம்” என்றான் மணிவண்ணன் விடாப்பிடியான வேதாளம்போல, சரளைக் கற்களை விட்டு எழுந்தபடி, கோபித்துக்கொள்ளாமல், மணிவண்ணன், ஒரு நாளைக்கு இத்தனை விழுப்புண்கள் போதுமே?” என்றாள். இன்னமும் தோள்பட்டையிலும், முழங் கையிலும் உள்ளங்கை அளவுக்குத் தழும்புகள் இருக்கின்றன.

O -

மின் ரயிலின் சன்னல் வழியாகவும், இரண்டடுக்குப் பேருந்தின் மேலடுக்கிலிருந்தும் பார்க்கும்போது, பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை என்று பல வடிவங்களில் வசீகரமாய்க் கண்ணில் மோதிச் சென்ற வாகனங்களில் உட்கார்ந்து பயணம் செய்யும்போது, அந்த நகரத்தில் அவற்றுக்கு இடமில்லை என்று தோன்றியது. காலையும், மாலையும், இரவும் எந்நேரம் அவற்றில் போனாலும் ஹாரனின் பிளிறல்களும், மராட்டி, இந்தி மற்றும் ஆங்கிலத்தின் பொறுக்கி எடுத்த, பெண்களை மையமாக்கிய கெட்டவார்த்தைகளும், பிரதான வீதிகளில் அங்குலம், அங்குலமாய் நகரும் அவஸ்தையும் கேட்டு, உணர முடிந்தது. இசை வடிவில் வந்த ஹாரன் ஒலிகள் சில சமயம் எலும்பை ஊடுருவித் தாக்கின. எதிலும் மோஸ்தரைப் பின்பற்றும் சிலர் காரைப் பின்புறமாக நகர்த்தும்போது அமெரிக்க உச்சரிப்பில் "இந்தக்
* 352 -- அம்பை
________________

கார் பின்னால் போகிறது” என்று ஆங்கிலத்தில் பதிவுசெய்த ஒலிநாடாவை இயக்கும் ஒலியை எதிர்பாராத சமயம் கேட்டபோது துரக்கிவாரிப்போட்டது. சிலர் குழந்தையின் அழுகை ஒலியை இதற்குப் பயன்படுத்தியதால் வேளை கெட்ட வேளையில், தெருவில் நடந்தபடி, நகரம் இல்லாக் கனவில் மூழ்கியிருக்கும்போது, குழந்தையின் அழுகை திடீரென்று முதுகின் பின்னால் கிளம்பித் திடுக்கிடவைத்தது.

துரத்தில் இருந்து பார்க்கும்போது கறுப்பும் மஞ்சளும் கலந்த சமோசா மாதிரி அழகாகத் தெரிந்த ஆட்டோக்கள் பயணம் செய்ய ஏறியதும், மற்றப் பெரிய வாகனங்களின் புகை உமிழ்வில் சிக்கிக்கொண்டன. விரைவு நெடுஞ்சாலைகளில் ஆட்டோவில் போய், பார லாரி, மோட்டார் வண்டி, பேருந்து இவை கக்கும் புகையைச் சுவாசித்து மீள்வது ஜீவ மரணப் போராட்டம்போல் தோன்றியது.

தெருக்களும், வீதிகளும், நெடுஞ்சாலைகளும் குருதியையும், குப்பை யையும், புகையையும் அப்பிக்கொண்டு நிற்க, வாகனங்கள் அசுர கணங்களாய் அவற்றில் ஓடின.
O

கல்பாக்கத்துக்கு அவள் தம்பியை மாற்றல் செய்தபோது, "கடலைப் பார்க்க வாயேன். இங்கே இருக்கும் மீனவர்கள் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களில் ஒருவன் என் நெருங்கிய நண்பன். கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறான். கட்டு மரத்தில் ஏற்றிக்கொண்டு போய்க் கவிதை படிப்பான். சினிமாவுக்குப் பாட் டெழுத ஆசையாம். கட்டுமரத்தில் ஏறிக் கடலைப் பார்க்க வா” என்று அழைப்பு விடுத்தான். கடல் பக்கமாய் வீடு. தெருக்கள் இடையே கடற்கரை மணல் கொட்டிக் கிடந்தது.

போய்ச் சேர்ந்தவுடனேயே தம்பியும், தம்பி குழந்தைகளும், அவளுமாய்க் கடல் நோக்கி நடந்தனர். “பொம்பளங்கள கட்டு மரத்துல ஏத்தக் கூடாது” என்று தயங்கிய தம்பியின் நண்பனைக் கவிதைப் பக்கமாய்த் திசை திருப்பிக் கட்டுமரத்தில் ஏறிக் கொண்ட னர். பொங்கும் அலைகளினால் ஏற்பட்டக் குமட்டலுக்குக் கடலைப் பார்க்காமல் வானைப் பார்க்கச் சொன்னான். கடலலைகள் கால் களில் முட்ட, மேலே வானைப் பார்த்தபடி, மீனவ நண்பனின் ஏலேலோ பாணிக் கவிதைகளைச் செவிமடுத்தபடி கட்டுமரப் பயணம்.

வீடு திரும்பியதும் எலுமிச்சம் பழ சர்பத் குடிக்கத் தோன்றியது. "இதோ" என்று தம்பி மனைவி கதவைத் திறந்து வாயிலில் நிறுத்தி யிருந்த சைக்கிளில் ஏறி எலுமிச்சம் பழம் வாங்கச் சென்ற போதுதான் கண்ணில் சைக்கிள் பட்டது. சிறிது நேரத்துக்குப் பின் தம்பியின்
வாகனம் * 353 ->
________________

பெண் அவள் தோழியிடமிருந்து புத்தகம் வாங்கச் சைக்கிளில் போனாள்.

மாலையில், "எனக்கும் சைக்கிள் ஒட்டணும்” என்றாள் மெள்ள. தம்பி பெண்ணும், பையனும் உற்சாகமாக உடன் வந்தனர். சைக்கி ளைத் தள்ளி ஏறுவது மறந்துபோயிருந்தது. ஓர் ஒரமாகச் சைக்கிளை நிறுத்திவிட்டு ஏறி, விட ஆரம்பித்ததும் தெரு குறுகிப்போவதுபோல் தோன்றியது. இரு பக்க மணலும் இவள் மேல் பாய்வதுபோல் பட்டது. வெகு துரத்தே முள்வேலி சுற்றிக்கொண்டு நின்ற மரங்கள் தெருவின் குறுக்கே ஓடிவர முயன்றன. கால் செருப்புக்கள் கழன்று விழுந்தன.

+
"அத்தே, அத்தே! மணல் மேல ஏத்துங்க. சைக்கிள் நின்னுடும்' என்று தம்பி பையன் சைக்கிள் பின்னால் ஓடி வந்தபடி கத்தினான்.

மணல் மேல் ஏற்றி, சைக்கிளும் அவளுமாய் விழுந்தனர். வீட்டுக் குத் திரும்பியதும் தம்பி மனைவி சிராய்ப்பின் மேல் மருந்திட்டாள். "ஏங்க்கா, தேவையா இதெல்லாம்?" என்றான் தம்பி.

விடாப்பிடியாக, மறுநாள் விடிகாலை தம்பி குழந்தைகளுடன் ஒசைப்படுத்தாமல் வெளியே வந்தாள். "அத்தே, உங்களால முடியும். கமான் அத்தே. மெள்ள மிதியுங்க. திருப்புங்க” என்ற உற்சாகமூட்டும் அவர்கள் குரல்களின் துணையோடு அந்தப் பகுதியைச் சைக்கிளில் வலம் வந்தாள். ஒரு ராணி போல் உணர்ந்தாள் சில கணங்களுக்கு.

O

திட்டமே போடாமல் ஒரு வாகனம் அவளுடையதாயிற்று. சக்கர மில்லா, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வாகனம். ஒசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். மூஞ்சூறு வாகனம். கணிப்பொறியை ஏந்திச் செல்லும் வாகனம். அதில் ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம் போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப் பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத் தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில் அமைத்துக்கொண்டாள். இது தவிர, பூகோள நகரங்கள் அமைப்புத் திட்டம் மூலம் உலகின் பல இடங்களுக்கு ஒரு வீட்டுப் பக்கம் அமைப்பதற்காக வலம் வந்தாள்.

 முடிவில், சினிமா, காதல், புரட்சி இவற்றுடன் இணைந்த பாரீஸ் நகரத்தில் ஒரு வெற்றிடம் தேடிக் குடி புகுந்தாள்.

இரண்டு வீட்டின் நுழைவாயிலிலும் வீட்டிற்கு வரப்போகும் விருந் தாளிகளுக்குத் தன்னை அறிமுகப்படுத்தும் முதல் கட்டச் செயலாகத் தனக்கும் வாகனங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி எழுதினாள். தற்போது தன் வாகனம் என்று குறிப்பிட்டு, மின்னியக்க மூஞ்சூறின் மேல் ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்துகொண்டாள்.
* 354 -o- அம்பை
________________

பாம்பு, சிங்கம், அன்னம், குதிரை என்று வாகனம் அமைத்துக் கொண்டவர்கள் வழியில் வந்த அவளுக்கும் ஒரு வாகனம் அமைந்து போயிற்று. அரக்கர்களை அழிக்கவும், தேவர்களைச் சந்திக்கவும், மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள்.
'தினமணி' பொங்கல் மலர், 1997

வாகனம் -- 355 --


ஆரம்பக் காலக் கவிதைகள் - அம்பை

https://ia600806.us.archive.org/8/items/orr-11853_Aramabak-Kaalak-Kavithaikal/orr-11853_Aramabak-Kaalak-Kavithaikal.pdf


ஞானம் பெற எல்லா முயற்சிகளையும் அவள் மேற் கொண்டாயிற்று. மூன்று நாட்கள் தொடர்ந்து அழுதால் கடவுளைக் காணலாம் என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியிருக்கிறார் என்பதால் மூன்று நாட்கள் தொடர்ந்து அழ. வசதிப்படாவிட்டாலும் (ஒவ்வொருவருக்கும் தனி அறை இல்லாத வீட்டில், காலையில் எழுந்ததிலிருந்து இரவு துரங்கும்வரை அம்மாவின் கட்டளைகளோ அப்பாவின் குரலோ துரத்தும் வீட்டில், தொடர்ந்து எதைத்தான் செய்ய முடியும் :) விட்டு விட்டு ஆறு நாட்கள் அழுதும் எந்தக் கடவுளும் தரிசனம் தரவில்லை. அதில் ஏமாற்றம்தான். ஞானத்தைத் தேடி அலையும் ஒரு பதினாறு வயதுப் பெண் வேறு என்னதான் செய்ய முடியும் என்று தெரியவில்லை. எதுவும் தெளிவாகப் புரியவில்லை. அவள் ஒரு பாவமும் செய்யவில்லை என்றுதான் அவள் நம்பினாள். ஆனால் சில விஷயங்கள் பாவத்தில் சேர்த்தியா என்று தெரியவில்லை. சின்ன வயதில் ஒரு முறை அக்காள் பத்மாவுக்கும் இவளுக்கும் ஆளுக்கொரு தர்பூசணிப் பழத்துண்டு தந்தபோது இவள் தன்னுடையதை உடனே தின்னவில்லை. பத்மா முடிக்கும் வரை காத்திருந்துவிட்டுப் பிறகு தன் பழத்துண்டை நக்க ஆரம்பித்தாள். "ஏய், எனக்குக் கொஞ்சம் தாடி" என்று பத்மா கெஞ்சியபோது, பழரசம் முகவாயில் ஒழுக, மாட்டேன்” என்று மறுத்தாள். ஒருமுறை அம்மாவை மனத்திற்குள் "சனியனே" என்று திட்டியிருக்கிறாள். எப்போது பார்த்தாலும், முடி சீவிக்கொள்ள, பாட, பால் குடிக்க, சாப்பிட, துங்க, எண்ணெய் தேய்த்துக்கொள்ள என்று கண்டித்தவாறிருக்கும் அம்மா பட்டென்று இறந்து, அம்மா இல்லாத அனாதையாகத் தன்னைக் கற்பனை செய்திருக்கிறாள். ஒரு 'கெட்ட புத்தகத்தைக் கூட அவள் மூன்று முறை வாசித்துப் பிறகு குளியலறை வெந்நீர் அடுப்பில் போட்டு எரித்துவிட்டாள். இதை எல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பார்கள் என்று தெரியவில்லை. சேர்ப்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை. ராஜா காலத்து உடையணிந்த சித்ரகுப்தர் இந்தக் கணக்கெல்லாம் வைத்துக்கொள்கிறார் என்றால் மாறி வரும் காலம் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்ல அதுவும் பெண்கள் வெகுவாக மாறி விட்டதை விளக்க- யாராவது நம்பகமான நபர் உண்டா போன்ற கேள்விகள் அடிக்கடி மனத்தில் எழுந்தன.

இவ்வாறு ஞானத்தைத் தேடி அலைந்து, தானும் தன் மூலம் உலகமும் உய்வதற்கான முயற்சிகளை அவள் மேற்கொண்டிருந்த போதுதான் அந்தப் பெரிய அளவு நீல டயரி வீட்டுக்கு வந்தது. இவர்கள் குடும்ப டாக்டருக்கு யாரோ தந்து, அவர் இவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைத்தது. குழந்தைகளுக்கான பால் பவுடர் தயாரிக்கும் நெஸ்லே கம்பெனியாரின் டயரி அன்னை மற்றும் மகவுப் புகைப்படங்களுடன் தாய்மை மருத்துவ வல்லுநருக்கான குறிப்புகளுடன் கூடிய டயரி அது. யாக்கை நிலையாமை பற்றிய சிந்தனைகளில் அவள் மூழ்கியிருந்த வேளையில், யாக்கை உரு வாவதுடன் சம்பந்தப்பட்ட டயரி தன் வீடு தேடி வந்தது இறைவன் தன் மனோபலத்தைச் சோதிக்கச் செய்யும் முயற்சி என்று அவள் திடமாக நம்பினாள். "ஒரு பக்தருக்குச் சூலை நோய், எனக்கு தாய்மை மருத்துவ வல்லுநரின் டயரியா? ஹாம்!” என்றவாறு இறைவனின் சோதனைகளை எண்ணி வியந்தாள். பூசை அறைக்குச் சென்று ரவி வர்மாவின் கடவுள் ஒவியங்களை நேர் கொண்ட பார்வையுடன் நோக்கி ஒரு ஞானப் புன்முறுவல் பூத்தாள். நடிகை மதுபாலாவின் கோணல் புன்சிரிப்பிலிருந்து இவள் தன் ஞானப் புன்முறுவலைக் கடன் வாங்கியிருந்தாள். இந்தப் புன்முறுவல் அவள் முகத்தில் தோன்றும்போது முகத்தில் ஒளி கூடுகிறது என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் சில காரணங்களினால் அதை மற்றவர்முன் செய்வதைத் தவிர்த்தாள். "என்ன, பல்வலியா?” என்று அம்மா ஒரு முறை கேட்டுவிட்டது ஒரு காரணமாக இருக்க லாம். ஞான வேட்கை இல்லாதவர்களுக்கு இந்தப் புன்முறுவலை இனம் காணும் பக்குவம் ஏது ?

அந்த டயரியின் நீல நிறம் அவளை மிகவும் ஈர்த்தது. நீலம் அவளுக்குப் பிடிக்கும். காரணம் வான் நீலம், கடல் நீலம், பண்ருட்டி யிலிருந்து வந்த இரண்டடி உயர, குழலுதும் கண்ணன் பொம்மையும் நீலம். அவளிடம் ஒரு நீலப் பட்டுப் பாவாடையும் இருந்தது. ஆனால் உலக வாழ்க்கையுடன் இணைந்த ஒன்றாக அது இருந்ததால் நீலம் பிடிப்பதற்கான காரணங்களின் கணக்கில் அவள் அதைச் சேர்ப்பதில்லை. நீல டயரி யாராலும் உபயோகப் படுத்தப்படாமல் கிடந்ததால் அதை அவள் தன் உபயோகத்துக்கு எடுத்துக் கொண்டாள்.

அதை எதிரில் வைத்துக்கொண்டு, அதன் வழுவழுப்பான வெற்றுப் பக்கங்களைப் புரட்டியபோது, அவளுக்கு முன் பல பக்தர்கள் செய்ததைத் தானும் செய்யவேண்டும் என்ற அவா எழுந்தது. பக்திக் கவிதைகளை எழுதும் அவா. இரண்டொரு நாட்களுக்குப் பின் சிறிது முயற்சிசெய்து கடவுள் எங்கே?' என்று தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதினாள். "எங்கே இறை எனக் கேட்காதே பேதையே, ஆங்கே உன் உள்ளத்தே உறைவான் இறைவன்!” என்று ஆச்சரியக் குறியுடன் முடிந்தது கவிதை, தன்னைக் கைவிடக் கூடாது என்றும் தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சல் தொனியில் சில கவிதைகளை எழுதினாள். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போல் கவிதைகள் அமையவில்லை என்று தோன்றியது. அது குறித்துச் சிறிது வருத்தமாகவும் இருந்தது. சற்றுக் கோபமாகவும் இருந்தது. ஞானத் தேடலில் இவர்கள் எங்கெல்லாம் அலைந்திருக்கிறார்கள் காடு, மேடு, கழனி என்று இரவு பகல் பாராமல் திருட்டு, விபத்துகள் என்றிருக்கும் நகரத்தில் வாழும் பதினாறு வயதுப் பெண் எப்படி அதுபோல் அலைய முடியும்? வீட்டுத் தோட்டத்தை வேண்டுமானால் அவள் சுற்றிவரலாம். மற்றபடி அதிக தூரம் செல்ல அனுமதியும் கிடையாது. தோழிகளுடன் “பாசமலர்' படம் பார்க்கப் போனதற்கே காலம் கெட்டுக் கிடக்கிறதென்றும், இப்படி இவள் போவதில் தனக்கு உடன்பாடில்லை என்றும் அம்மா கடிந்துகொண்டாள். மேலும், அந்தப் பக்தர்களுக்கு எல்லாக் கட்டங்களிலும் இறைவன் துணை நின்றிருக்கிறார். நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கி, பிட்டுக்கு மண்சுமந்து என்று அநேக வழிகளில் ஒத்துழைத்திருக்கிறார். இவளைப் பொறுத்த வரையில் அநியாயமாக நடந்து கொள்கிறார் இறைவன் என்று தோன்றியது. ஒரே ஒரு அற்புதத்தைக்கூட இவளுக்காகச் செய்யவில்லை. ஒன்றுமி ல்லை. ஒரு ரயில் இத்தனை வேகத்தில் இந்தப் பக்கத்திலிருந்து வருகிறது, இன்னொரு ரயில் வேறு வேகத்தில் எதிர்ப்புறத்திலிருந்து வருகிறது, கடக்க வேண்டிய தூரம் இவ்வளவு, இரண்டு ரயில் வண்டிகளும் எந்தக் கட்டத்தில் சந்தித்துக்கொள்ளும்; அல்லது ஒரு தொட்டியில் ஒட்டை உள்ளது. அதில் விழும் நீரின் வேகம் இத்தனை, ஒட்டை வழியாக நீர் வெளியேறும் வேகம் இத்தனை, தொட்டி நிரம்ப எவ்வளவு நேரமாகும் போன்ற கணக்கு களுக்கு விடைகள் கிடைக்கும் சிறு அற்புதம் கூடவா செய்யக் கூடாது? அது மட்டுமல்ல. கீழே விடப்பட்ட குழந்தை பாலுக்கு அழுகிறது என்று ஞானப் பாலூட்டி, அந்தக் குழந்தையை அற்புத மான கவிதைகள் எழுதவைத்தபோது, சுதந்திரம் அடைந்த ஒரு நாட்டில் கோயமுத்துர் என்ற ஊரின் கொசுக்கடி பிடுங்கும் ஆஸ்பத்திரி ஒன்றில் பிறந்ததற்காக இவளுக்கு ஞானப்பால் மறுக் கப்பட வேண்டுமா என்ன ?

ஒரே ஒரு முறை மட்டும் அவள் வாழ்வில் ஒர் அற்புதம் நிகழ்ந்தது என்பதை இவ்வாறு நினைக்கும்போது அவள் நினைவு படுத்திக்கொள்வாள். அவள் தந்தை பெண்களுக்கு கணக்கு, விஞ் ஞானம் இரண்டும் வராது என்று திடமாக நம்பினார். இதை எப்படி அவள் மனத்தினுள் ஊன்றினார் என்று தெரியவில்லை. அவளுக்குக் கணக்கு வரவில்லை. ஒருமுறை இடைப் பரீட்சையில் சிக்கலான பின்னக் கணக்கு ஒன்று தரப்பட்டது. வகுப்பில் கணக்கில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கும் ஸ்டெல்லாவுக்குக்கூட அது போட வரவில்லை. எல்லோருக்கும் பூஜ்யம் போட்டுவிட்டு, கணக்கு டீச்சர் கணக்கைப் பலகையில் போட முற்பட்டபோது, தற்செயலாக இவள் தன் விடைத்தாளைத் திறந்து பார்த்தாள். அந்தப் பின்னக் கணக்கை இவள் சரியாகப் போட்டிருந்தாள்! ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்த கணக்கு டீச்சரே வியந்து போனாள். அதைச் சிவனின் சிறு அற்புதமாகவே இவள் கண்டாள். "பின்னக் கணக்கைப் போட்டுவிட்டாய். நாளைக்கு விஞ்ஞான விடைத்தாள் வருகிறது. எப்படிச் செய்கிறாய் என்று பார்க்கலாம்" என்று சிவனைக் கடிந்துகொண்டாள் செல்லமாக அந்த முறை சிவன் விஞ்ஞானத்தில் தேறவில்லை.
++
"வாரணமாயிரம் சூழ வலம் வந்து " பாடலை அந்தச் சமயத் தில் பாட்டு டீச்சர் அவளுக்கும் பத்மா அக்காவுக்கும் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருத்தி கடவுளையே மணம்புரிய நினைப்பது இவளுக்கு சுவாரசியமான ஒன்றாக இருந்தது. அக்கமகா தேவியின் கதையையும் அப்போது கன்னட வகுப்பில் சொல்லித்தந்தி ருந்தார்கள். மகாதேவி அக்காவும் சிவனுக்காக எல்லாவற்றையும் துறந்தவள். இப்படிக் கடவுளையே கணவனாக வரிப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக இவளுக்குப் பட்டது. முதலாவது, சிலைகளாக இருக்கும்போதும், ரவி வர்மா படங்களிலும் அழகாகக் காணப்படுபவர்கள் நிஜமாகவே தரிசனம் தர வரும்போது எப்படி இருப்பார்களோ என்ற பயம் இருந்தது. இரண்டாவது, அப்போது ராமனாகவும், கிருஷ்ணனாகவும் கடவுள் வேடத்தில் நடித்துவந்தது என். டி. ராமராவ் தான். சிவனை மனத்தால் வரித்துவிட்டு நாளைக்கு அவர் என். டி. ராமராவ் உருவில் கதவைத் தட்டினால் என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. சரி. அவ்வையாராக மாறி "பாலும் தெளிதேனும் ' என்று கே. பி. சுந்தராம்பாள் குரலில் பாடலாம் என்றால் ஒரேயடியாக முதுமை வேண்டுவது பற்றிச் சற்றுத் தயக்கம் ஏற்பட்டது. மனத்தின் மூலையில் நீலப் பட்டுப் பாவாடை விரிந்து தொல்லை தந்தது. வரும் தீபாவளிக்குக் கிளிப் பச்சை நிறத்தில் ஒரு பட்டுப் பாவாடை வாங்கித்தரவேண்டும் என்று ஒர் ஒப்பந்தம் வேறு அம்மாவுடன் இருந்தது.

ஆனால் இதற்காகவெல்லாம் அவள் ஞான வழியை முற்றிலும் துறக்கத் தயாராகவில்லை. கல்கியின் சிவகாமியின் சபதம் வீட்டில் பைண்டு செய்யப்பட்டு இருந்தது. அதன் முடிவு அவளை வெகுவாகப் பாதித்தது. சிதம்பரம் சென்று, சிவன் முன் நடனமாடி, சிவனை மணப்பதுபோல் ஒரு கவிதை எழுதினாள். சத்தியம் என்று அதற்குத் தலைப்பிட்டாள்.

சலங்கை ஒலியின் மந்திரங்கள்
சலியாமல் அவையில் முழங்கிட
அசுரனைக் கொன்று ஆடுமுந்தன்
அடைக்கலமாய் நான் வருவேன்

என்று எழுதி முடித்தபோது, கண்களில் நீர் சுரந்தது.

கவிதைகளையும், தன் இறை உணர்வையும் அவள் இருவருடன் தான் பகிர்ந்துகொண்டாள். ஒன்று, மிக்கி அவர்கள் வீட்டுக் கறுப்பு நாய். இரண்டாவது கெம்பம்மா. கெம்பம்மா பக்கத்து வீட்டில் நடந்துகொண்டிருந்த கைவேலைக் குடிசைத் தொழிலில் வேலைசெய்பவள். போக்கிடம் இல்லை என்று இவர்கள் வீட்டின் பின்புறம், தோட்டத்தில் காலியாகக் கிடந்த மோட்டார் ஷெட்டில் அவளுடைய ஒரு தகரப் பெட்டியுடன் வாழ வந்தவள். அம்மாவுக்குக் கூடமாட வேலை செய்து உதவுவாள். மிக்கி இவள் தோழன். இவள் கவிதைகளைப் படித்துக் காட்டும்போது முன்னங்கால்களில் முகம் பதித்து, காதுகள் இரண்டும் தொங்க, படுத்தவாறு கேட்கும். சில சமயம் இவள் தொடைமேல் முகத்தை வைத்துப் படுத்தபடி கண்மூடியவாறு கேட்கும். இவள் குரல் தழுதழுத்தால் தலையை உயர்த்திப் பார்க்கும். இவள் கட்டிலின் கீழ்தான் அதன் குடியிருப்பு.

கெம்பம்மாவுக்கு இவள் தன் கவிதைகளைக் கன்னடத்தில் விளக்குவாள். பொறுமையுடன் கேட்டு, "சன்னாகிதே' என்று நற்சான்றிதழ் வழங்குவாள். புரந்தரதாசரின் தேவர் நாமா பாடல்களை எளிதான வழிமுறையில் பாடுவாள்.

பிறகுதான் அது நடந்தது. அந்த இரவு நிகழ்வு. ஒரு நாள் இரவு பதினோரு மணிக்கு, “ஏ ஸ்களே முண்டே " என்றொரு அலறல் கேட்டது பின்பக்கம். அடுத்த ஐந்தாவது நிமிடம், இன்னும் அடைக்கப்படாமல் இருந்த பின்கதவைப் படிரென்று தள்ளித் திறந்து, புயல் போல் பாய்ந்து உள்ளே புகுந்து, இவள் கட்டிலின் கீழே தஞ்சம் புகுந்தாள் கெம்பம்மா.

அப்பாவும் அம்மாவும் பின்புறக் கதவருகே சென்றபோது, குடி போதையில் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். 'லே கெம்பம்மா, ஹொரகே பாரே (ஏ கெம்பம்மா, வெளியே வா) என்று கூச்சலிட் டான். "நான் உன் புருஷன். வா வெளில” என்று கன்னடத்தில் சத்தம் போட்டான்.

அவனை வெளியேற்ற முயன்ற அப்பாவைக் கோபமாகப் பார்த்து, "ஒரு பெண்டாட்டி போறாதா உனக்கு? என் பெண்டாட்டியும் கேக்குதா?” என்று கூவினான்.

கட்டிலடியே கெம்பம்மா கோழிக்குஞ்சு போல் ஒண்டிக்கொண்டு இருந்தாள். அவள் உடல் நடுங்கிக்கொண்டு இருந்தது. அவள் புருஷன் அப்பாவை விரசமாகப் பேசியதும், கட்டிலடியேயிருந்து வெளியே வந்து, அவனை நோக்கிக் கால்கள் தொய்ய நடந்து, சற்றே நடுங்கும் குரலில், "குடிச்சிட்டு வந்து கண்டதையும் பேசாதே" என்றாள் கன்னடத்தில்.

அதற்குப் பதிலாக அவள் அடிவயிற்றில் ஒர் உதை விழுந்தது. "அம்மா” என்று அலறியபடி அவள் உட்கார்ந்ததும், முதுகில் ஒரு குத்து.

"தேவா, காப்பாடு . . " என்று கடவுளை விளித்தாள் கெம்பம்மா. பிறகு ஒருமையில் கடவுளை அழைத்தது தவறு என்று எண்ணியோ என்னவோ, "தேவரே, காப்பாடி ' என்று குரல் கொடுத்தாள்.

பின்பக்கத்துப் படிக்கட்டில் அவளைத் தள்ளி, அவள் கூந்தலைப் பிடித்து இழுத்தபடி படிகளில் உருட்டினான். படிகளின் கீழே போனதும் புல்வெளியில் தள்ளி, பளிச்சென்று அவள் இரு கால்களையும் பிரித்து, நடுப்பகுதியில் ஓங்கி ஒரு உதை விட்டான்.

"ஹா ” என்றலறினாள் கெம்பம்மா. கவிழ்ந்து கொண்டாள். அன்று பெளர்ணமி. பின்பக்கத் தோட்டம் முழுவதும் அரளி, துளசி, வாழை, அவரை, புடலை, பலா என்று விரிந்து கிடந்தது. எல்லாவற்றின் மேலும் நிலா ஒளி சிதறிக் கிடந்தது. புல்வெளியில் குறுகிப் குப்புறக் கிடந்த கெம்பம்மா அந்த ஒளியில் வேட்டை யாடப்பட்ட மிருகம் போல் கிடந்தாள். நொடிக்கொருமுறை, "தேவரே. தேவரே " என்று கதறினாள். அவள் விலாவில் ஒரு மிதி மிதித்து அவன் அழுத்தியதும், முதல் முறையாக, "மிக்கி " என்று கூவினாள்.

உள்ளேயிருந்து மிக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. உயரே, உயரே எம்பி, துள்ளித்துள்ளிப் பாய்ந்து வந்து, பின்பக்கத்துப் படிகளை ஒரே தாவில் கடந்து, உறுமியபடியே கெம்பம்மாவின் புருஷனின் குரல்வளையைக் கவ்வ முற்பட்டது. பீதியில் அங்கும் இங்கும் ஒடிய அவன், பின்பக்கத்து வேலியைத் தாண்டி ஒடிப்போனான்.
கெம்பம்மா புல்வெளியில் குப்புறப் படுத்து விம்மியபடி கிடந்தாள். மிக்கி அவளருகில் வந்து அவள் தலையை நக்கித் தந்தபடி நின்றது. அப்பாவும் அம்மாவும் பேச்சே எழாமல், உறைந்துபோய் நின்றனர். எல்லாம் பத்து நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.

பத்மா அக்காவும் இவளும் சற்றுப் பின்னால் தள்ளி நின்று கொண்டிருந்தனர்.

அம்மா இவள் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, இவள் தன்னை வேறு யாரோ போல் உணர்ந்தாள்.

இவளை நோக்கி, "நீ ஏன் இங்க வந்தே? இதெல்லாம் பார்த்து பயந்துடுவ” என்றாள் அம்மா மெல்லிய குரலில்.

அவள் பதில் கூறாமல் பின்பக்கத்துத் தோட்டத்தைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள்.

 O

சில காலம் தனிமை, ஏக்கம், கனவு, ஊமை என்று தலைப்பு களிட்டு, சாகும்வரை தனிமை, உடல் வேகும்வரை தனிமை' என்ற ரீதியில் சில கவிதைகளை எழுதினாள். அதன் பிறகு, நீல டயரியில் எந்தக் கவிதையும் பதிவுசெய்யப்படவில்லை.

'கிழக்கும் மேற்கும்', 1997
 அம்பை

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை
http://azhiyasudargal.blogspot.in/2011/05/blog-post.html
வலையேற்றியது: RAMPRASATH HARIHARAN | நேரம்: 9:40 AM | வகை: அம்பை, கதைகள்  
ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.   ambai5

சமையலறையின் கிழக்குப்புறம் பார்த்த ஜன்னல் வழியே பச்சை மலைகள். மேலே ஒரு வெள்ளைப் பொட்டுக் கோயில். பிள்ளையார் கோயில். அந்த ஜன்னலின் கீழேதான் சமைக்கும் மேடை. வெடிப்புப் பாதங்கள் பச்சை மலையில் உறுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஜன்னல் வெளியேதான் துணி உலர்த்தும் கொடி. கால்சராய், சட்டை, பைஜாமா, புடவை, பாவாடை விரிந்து ஜன்னலை மறைக்கும்.

கொத்தமல்லிப் பொடி, காரப் பொடி, கரம் மசாலாப் பொடி தூவி,அரைத்த பசு மஞ்சளும், இஞ்சியும் தடவப்பட்டுத் தயிரில் ஊறிய மாமிசத் துண்டங்களைக் கிளறி நிமிர்பவர்களை எதிர்கொள்வது ஒரு நாடா தொங்கும் பைஜாமாவாக இருக்கலாம். இதில் யாருக்கும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வாழும் பாங்கு சமையலறையைச் சுற்றியே இருந்தது. சமையலறை என்ற தத்துவத்தை ஒட்டி, சாப்பாட்டுப் பிரியர்கள் - மதுப் பிரியர்கள் என்றே பெயரெடுத்த வம்சம். அனுபவிப்பவர்கள். உல்லாசிகள். பார்க்கப்போனால் இவர்கள் கல்யாணத்தில் அஜ்மீர் உறவினர்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காத விஷயம் யாருக்கும் எந்தவித மதுபானமும் குடிக்கத் தரவில்லை என்பதுதான்.

குலதெய்வம் அம்பாவுக்குக்கூட மதுதான் பிரஸாதம். ஸ்காட்சிலிருந்து நாட்டுச் சரக்குவரை எதைத் திறந்தாலும் சுவரில் தெளித்து “ஜெய் அம்பே” சொல்லிவிட்டுத்தான் குடிப்பது. பிறந்த குழந்தையின் வாயில் முதலில் மதுவில் முக்கிய விரலைத்தான் இடுவது. அப்படி இருக்கும்போது இப்படிக் கல்யாணம் செய்துகொண்டால்? சரி. ரம், ஜின், விஸ்கி வேண்டாம். அஜ்மீரிலேயே தயாராகும் ஆரஞ்சு வண்ணக் கேஸர் கஸ்தூரி இல்லையா? மண்டையைப் போய் ஒரு உதை உதைக்குமே? சே சே. இது என்ன இப்படிக் கல்யாணம் செய்துகொண்டாய் என்றார்கள் அவனிடம். வீரனுக்கு லட்சணமான குதிரையும் மதுவும் இல்லாமல் ஒரு கல்யாணமா? ராட்சஸப் பூக்கள் வரைந்த கடும் செம்மண், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பாவாடைகள் இடுப்பிலிருந்து உப்பிப் பருத்த பிருஷ்டங்களின்மேல் மடங்கி மடங்கிச் சரிய, வெள்ளி நிறச் சரிகைகள் இட்ட முக்காடுகளைத் தூக்கி வயதான பெண்கள் அவனிடம் கேட்டார்கள்: குடிக்க ஒன்றுமில்லையா?

ஜீஜி நடமாடிக்கொண்டிருந்தபோது டாணென்று மாலை ஏழு மணிக்கு அப்பளம் சுட ஆரம்பித்துவிடுவாள். பப்பாஜி வெளியறை முக்காலியில் மற்ற விஷயங்களை வைத்துவிட்டுத் தயாராக இருப்பார். ஜீஜி கார அப்பளம் தட்டில் அடுக்கி வைத்து வருவாள். கார அப்பளம் தீர்ந்ததும் நாக்கில் சுள்ளென்று உறைக்கும் பிகானீர் ஸேவ். அது அலுத்தால் சோளப் பக்கோடா. அல்லது மிளகாயும் கடலை மாவும் தடவிப் பொரித்த நிலக்கடலை. எதிரெதிரே அமர்ந்து ‘ஜெய் அம்பே’ என்று விட்டு ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் பெண்களும் இருந்தால் குடும்பத்தோடு சிரித்துக்கொண்டு. ஜீஜி நாட்டுப் பாடல்கள் பாடுவாள் - ‘சந்தைக்குப் போனால் எனக்கொரு குஞ்சலம் வாங்கி வா.... நல்ல வண்ணத் தாவணி வாங்கிவா....’ ‘இன்னமுமா ஆசை?’ என்று பப்பாஜி சிரிப்பார்.

சமையலறை மூலையில் ஒரு கும்மட்டி அடுப்பில் சாய் செய்யத் தண்ணீர் கொதித்தவாறே இருக்கும். சாப்பிடும் சமயத்தில் வீட்டு வாசலில் யாராவது தெரிந்தவர் வந்துவிட்டால் முதலில் ‘ஜில்’லென்று தண்ணீர்.

“சாப்பிடுங்களேன். சாச்சாவுக்கு ஒரு தட்டு கொடு” என்று ஆரம்பிப்பார் பப்பாஜி.

“இல்லை. சும்மா இப்படி வந்தேன்.”

“சரி, சாய் குடிக்க என்ன வந்தது?”

“வேண்டாமே.”

“காஃபி?”

“தண்ணி போதும்.”

“அதெப்படி வெறும் தண்ணி. கொஞ்சம் ஷர்பத் போட்டுக் குடியுங்கள்.”

"சரி.”

ஜீஜி எழுந்திருப்பாள்.

“அப்படியே ஒரு தட்டில் ரெண்டு கபாப் கொடு.”

ஜீஜி சமையலறையை எட்டும்முன் காலையில் செய்த வெந்தயக் கீரை பரோட்டா பப்பாஜிக்கு நினைவு வரும். “ஸுனியேஜி” என்று மனைவியை விளிப்பார். “அந்த மேதி பரோட்டாவும் ரெண்டு சூடாக்கி எண்ணெய் தடவிக் கொண்டுவா. சாச்சா ருசி பார்க்கட்டும்” என்பார்.

வந்தவர் தோல்வியை ஒப்புக்கொள்வார்.

“நான் சாப்பிட்டே விடுகிறேன்.”

ஜீஜி எப்படியும் சமையலறைக்குப் போவாள். இரண்டு முட்டைகள் மிளகும் உப்பும் தூவிப் பொரிக்க. ஒருவேளை, சாப்பாட்டு அளவில் ஏதாவது குறைந்துவிட்டால்?

ஆனால் சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள். அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்ய வாட் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து,  அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்துகொண்டோ, அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா  பருப்பைக் கிளறியவாறோ. சமையலறை ஒரு இடம் இல்லை. ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மீனாட்சிதான் ஒரு முறை சாப்பிடும் நேரத்தில் அந்த விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள், பப்பாஜி அப்போது கீழே இருந்த கார் ‘ஷெட்’டின் மேல் ஒரு அறை கட்டிக்கொண்டிருந்தார்.

“பப்பாஜி, சமையலறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைப் பெரிதுபண்ணிவிடுங்களேன். அதை நீங்கள் அகலமாக்கினால் நாற்காலி போட்டு உட்காரலாம். இடது பக்கம் ஒரு பாத்ரூம் கட்டினால் அதில் பெரிய தொட்டி போடலாம். பாத்திரம் தேய்க்க. பாத்ரூமுக்கு வெளியே துணி உலர்த்த அலுமினியக் கம்பி போட்டு விடலாம்.”

பப்பாஜி இந்த அபிப்ராயத்தால் தாக்கப்பட்டவர்போல் பார்த்தார்.

ஜீஜியும் வியப்படைந்தவள்போல் அவரைப் பார்த்தாள். மருமகள்கள் இதுவரை இப்படிப்பட்ட அபிப்ராயங்களை முன்வைத்ததில்லை. ராதா பாபிஜி, தட்டை வெறித்துப் பார்த்தாள். குஸுமா தலை முக்காட்டைச் சரி செய்துகொண்டாள், அவள் படபடப்பை மறைக்க. பப்பாஜி கிஷனை நோக்கினார். அவன் நிதானமாகச் சாப்பிட்டவாறிருந்தான்.

பப்பாஜி தொண்டையைச் செருமிக்கொண்டு, “எதற்காக?” என்றார்.

“இந்த சமையலறைத் தொட்டி ரொம்பச் சின்னது. தண்ணி வேறு சரியாகப் போவதில்லை. வேலைக்காரி அங்கேயே பாத்திரம் தேய்த்தால் சமையலறை முழுவதும் தண்ணீர். நிற்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியில் துணி தொங்கினால் மலையை மறைக்கிறது பப்பாஜி.”

கிஷனைப் பார்த்தார் மீண்டும். அந்தக் கட்டடக் கலை நிபுணன் தன் மனைவியோடு உடன்பட்டான்.

“அவள் சொல்வது சரிதான் பப்பாஜி. அப்படியே செய்து விடலாம்.”

“நீ எங்கே சமையலறைப் பக்கம் போனாய்?”

“அவள் மைசூர் சமையல் செய்யும்போது இவன்தான் மிளகாய், வெங்காயம் அரிந்தான்” என்றாள் ஜீஜி.

“பேசாமல் உனக்கே தங்க வளையல் போடலாம் போலிருக்கிறதே.”

“தங்கவளை எதற்கு பப்பாஜி. மோதிரம் போடுங்கள்.”

பப்பாஜி சிரித்தார்.

அறை கட்டி முடித்தாகிவிட்டது. சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. துணி உலர்த்த இன்னும் இரண்டு நைலான் கயிறுகள் கட்டப்பட்டன, ஜன்னல் எதிரே. பப்பாஜியின் மௌனச் சவால்: பெண்ணே, மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு? அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்து சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும், என்ன சம்பந்தம் பெண்ணே. கறுத்த நிறமுடைய, முக்காடு அணிய மறுக்கும், என் பையனை வசியப்படுத்திய, நிறையப் பேசும் பெண்ணே...

***

பின்னிரவு மூன்று மணி வாக்கில் மயில்கள் அகவ ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக. கர்ண கடூரமாக. குரல் இழந்த சாதகம். ஐந்தரை மணிக்கு அவளும் கிஷனும் மொட்டை மாடி போனபோது எதிரே மரத்தில் சிவன் விரித்த ஜடையாய் மயில் வால் தொங்கியது. கரு நீலமும், மென் பச்சையும், தீர்க்கப் பச்சையும் பளீரிடத் திரும்பியது. எதிர்பாராதபோது பறந்து மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்து வாலை நீட்டிப்போட்டது. பிறகு, இரண்டு மொட்டை வால் மயில்கள். திரும்புவதற்குள் இன்னும் இரண்டு, சாட்டை வால்களுடன். வயிற்றினுள் ஒரு மென் தன்மை இதமாய்ப் பரவியது. காலைக்கடன்களை முடித்ததும் வயிற்றுக் கனம் அகலும் இதம். அந்தக் கருநீலப் பச்சை ஐஸ் துகள் சிலீருடன் எல்லா அடங்காச் சூட்டையும் தணித்தது. கிஷனின் உதடுகளில் ஒரு முறை நாக்கால் தடவி மென்மையாக முத்தமிட்டாள். பனித்துளி ஒட்டிய, அடித்தளச் சூட்டை இனம் காட்டிய முத்தம்.

மொட்டை மாடிக் கதவு கிர்ரிட்டது. படி ஜீஜி (பெரிய ஜீஜி) எழுந்தாயிற்று. கதவருகே இருந்த பெரிய ட்ரம்மிலிருந்து கரி எடுக்க வந்திருப்பாள். கும்மட்டி அடுப்புப் பற்றவைக்க. படி ஜீஜி பப்பாஜியின் சிறிய தாயார். பப்பாஜிக்கு பதினேழு வயதாகும்போது அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார் ஒரு பதினேழு வயதுப் பெண்ணை. ஐந்து பெண்கள் பெற்றாள். பப்பாஜிதான் ஆதரவு. பெர்யர்தான் படி ஜீஜி. அவளுக்கும் ஜீஜிக்கும் இடையே இரண்டே வயதுதான் வித்தியாஸம். பொக்கை வாய். பொய்ப் பல் வேண்டாம் என்று விட்டாள். மாமிஸம் சாப்பிடுவதை விட்ட பின்னர் எதற்குப் பல் என்று கூறிவிட்டாள்.

காலில் அணிந்த கனத்த வெள்ளித் தண்டை படியில் இடிக்க, போய்விட்டாள் படி ஜீஜி.

”சாய் கொண்டு வரட்டுமா மீனா?”

”ம்.”

கிஷன் போனதும் மாடி இரும்புத் தொட்டிக் குழாயைத் திறந்து முகம் கழுவி, பல் தேய்த்தாள்.

தொப்பியால் மூடிய கெட்டிலில் சாய் கொண்டுவந்தான் கிஷன். கீழே வைத்து இரு கோப்பைகளில் சாய் ஊற்றியபோது இஞ்சி, துளசி மணம் பரவியது. ஒரு காலை நட்சத்திரம் மினுக்கியது. மயில் நீலப் பச்சையில் தெறித்தது. சாய் தொண்டையில் சூடாய் இறங்கியது.

கீழே போனபோது சமையலறை மூலையில் பெரிய பித்தளை டம்ளரில் கிஷன் ஊற்றித் தந்திருந்த சாயை முக்காட்டுத் தாவணித் துணியால் பிடித்தவாறு அமர்ந்து, ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தாள் படி ஜீஜி. ராதா பாபிஜி இன்னொரு பெரிய கெட்டிலில் சாய்த் தூளைப் போட்டுச் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“நாஸ்தாவுக்கு மாவு பிசையட்டுமா?” என்றாள் படி ஜீஜி.

“பப்பாஜி உலவப் போயிருக்கிறார். சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வருவார். ரொட்டி வாட்டினால் போதும், அதை நான் வெளியில் டோஸ்ட் செய்துகொள்கிறேன். இன்றைக்கு என்ன நம் சமையலா, இல்லை மைசூர் சமையலா?”

“அவளும் கிஷனுமாய் நேற்று காய்கறியும் தேங்காயும் வாங்கி வந்தார்கள்.”

“என்ன தேங்காய் சமையல் சப்புச்சப்பென்று? நீங்கள் ஒன்று செய்யுங்கள், படி ஜீஜி. மஞ்சளும் இஞ்சியும் அரைத்துவிடுங்கள்.  மட்டன் புலாவ் செய்துவிடலாம். சுரைக்காய் துருவிவைத்து விடுங்கள். கோஃப்தா செய்துவிடலாம். சேப்பங்கிழங்கைத் தொலி சீவிவிடுங்கள். பெரிய ஏலம், மிளகு, லவங்கப்பட்டை, தனியா, லவங்கம் இடித்துவிடுங்கள். நல்லா நைஸாக. தனியாவை வேறாக எடுத்து இடியுங்கள் கொஞ்சம். ராத்திரி ஆலு-கோபிக்குப் போடலாம்.”

சமையலறைக்கு வெளியே வந்தாள் சாய் கெட்டிலும் கோப்பைகளும் வைத்த தட்டை ஏந்தியவாறு.

“என்ன மீனா. இன்றைக்கு என்ன சமைக்கப் போகிறாய்?”

“எதுவும் இல்லை. நாங்கள் கணேஷ் மந்திர் மலையில் ஏறப்போகிறோம்.”

”சரிதான்.”

மீனாட்சி சமையலறையில் நுழைந்தாள் இரண்டாம் ஈடு சாய் தயாரிக்க.

படி ஜீஜி பொக்கை வாய் திறந்து சிரித்தாள். தன் பித்தளை டம்ளரை நீட்டினாள்.

“எனக்கும் சாய்.”

“இஞ்சி போடவா படி ஜீஜி?”

“ம். போடு. எனக்கு, நீ போடும் சாய் பிடிக்கும்.”

“சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வந்திருக்கிறேன். கொஞ்சம் ஜிலேபியைப் பாலில் போடுங்கள்” என்று ஒரு பொது உத்தரவு வெளியிலிருந்து வந்தது. மீனாட்சி ஜிலேபிப் பொட்டலத்தைச் சமையலறைக்குக் கொண்டுவந்து பிரித்தாள்.

”உஷ்..... இதோ.... இதோ....”

மீனாட்சி திரும்பினாள். “எனக்கு நாலு குடு” என்றாள் படி ஜீஜி.

அது ஒரு உணவுப் போர். நிதர்சனமாகப் பங்குபெறுவோர் - ஜீஜி, படி ஜீஜி. தாத்தா உயிருடன் இருந்தபோது படி ஜீஜி கொடுங்கோல் ஆட்சி செய்தாள். மலை மலையாய்ச் சப்பாத்தி மாவு பிசைந்தாள் ஜீஜி. கூடை கூடையாய் வெங்காயம் அரிந்து கிலோ கணக்கில் மாமிசம் சமைத்தாள். மாலை வேளைகளில் படி ஜீஜி கேஸர் கஸ்தூரி குடித்தபோது அப்பளம் சுட்டாள். பக்கோடா செய்தாள். குடல் பொரித்தாள். தாத்தா இறந்தார். பத்து நாட்களில் சமையலறையில் ஜீஜிக்குப் பதவிப் பிரமாணம் நடந்தது. குங்குமம், வெற்றிலை, மது, மாமிசம் இவற்றுடன் படி ஜீஜியின் மற்ற சாப்பாடும் பறிக்கப்பட்டது. நிதம் நிதம் மாமிசம் சமைக்கப்பட்டது. மரக்கறி உணவு உண்பவர்களுக்கு (படி ஜீஜி மாத்திரம்தான்) ஜனநாயக உணர்வுடன் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. படி ஜீஜி இரவெல்லாம் ஏப்பம் விட்டுக் கொண்டும், உடம்பையே கிழிப்பதுபோல் குசுவிட்டுக் கொண்டும், கக்கூஸில் ‘உம் ஆ’ என்று முனகியவாறும் தன் போர்க்களத் தோல்வியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் தாக்கப்படும்முன் அவள் இரண்டாம் போர்முனை ஒன்றைத் துவக்கினாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை படி ஜீஜிமேல் அம்பா வர ஆரம்பித்தாள்.

ஜீஜியும் பப்பாஜியும் அவரவர் பானங்கள், சுட்ட அப்பளங்கள் இவற்றுடன் அமரும் மாலை வேளைகளை அம்பா தேர்ந்தெடுத்தாள். முதலில் அறையிலிருந்து ‘ஹே’ என்று குரல் கொடுத்தாள் அடி வயிற்றிலிருந்து. பதறி ஓடி வந்ததும் “என்னை மறந்தாயா?” என்று சீறினாள். தாழ்ந்து வணங்கி “உத்தரவிடுங்கள் அம்பே” என்று ஜீஜி சொன்னதும், “எனக்கான பானத்தைத் தா, கேஸர் கஸ்தூரி வேண்டும். ஒரு கிலோ பர்பி வேண்டும். வறுத்த இறைச்சி வேண்டும்.... அ... ஆ...” என்று கட்டளையிட்டாள். எல்லாம் தரப்பட்டதும் அம்பா “போங்கள் எல்லோரும்” என்று உத்தரவிடுங்கள். படி ஜீஜியின் அறையில் ஆரவாரம் கேட்கும் சற்று நாழிகை.

மறுநாள் காலை மதுவால் கனத்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்து சமையலறையில் ஒரு பொக்கைவாய்ப் புன்னகையுடன் காட்சியளிப்பாள் படி ஜீஜி. “அம்பா கஷ்டப்படுத்திவிட்டாள்” என்பாள்.

படி ஜீஜியை வம்புக்கு இழுக்கலாம். அம்பாவைக் கேள்வி கேட்கும் தைரியம் ஜீஜிக்கு வரவில்லை.

“ஜிலேபி தா” என்றாள் படி ஜீஜி.

நாலு ஜிலேபிகளைத் தந்தாள் மீனாட்சி. வீட்டில் எல்லோருக்குமாக ஜிலேபி பிரிக்கப்படும்போது படி ஜீஜிக்கு அவள் பங்கு கிடைக்கும். இது ஆசையினால். ஆரம்பத்தில் இவற்றை அவள் எங்கேதான் வைக்கிறாள் என்று நினைத்தாள் மீனாட்சி. பிறகுதான் தெரிந்தது பல மடிப்புகள் தைத்த நாலு கஜப் பாவாடையினுள் அவள் இரு ஜேபிகள் தைத்திருந்தாள். அவற்றை மீனாட்சிக்குக் காட்டியிருக்கிறாள்.

தொப்பியால் சாய் கெட்டிலை மூடினாள்.

”மசாலா சாமான்களைத் தந்துவிட்டுப் போயேன்” என்றாள் படி ஜீஜி. ”நெய்யும் வேணும். மட்டன் புலாவ் செய்ய.”

இது சமீபத்தில் எழுந்த ஒரு புதுக்களம். ஜீஜியின் ஆஸ்த்மாவும், ரத்த அழுத்தமும் அவள் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டன. அவள் படுக்கை அருகே உள்ள மர பீரோவில் லவங்கம், குங்குமப்பூ, லவங்கப்பட்டை, மிளகு, திராட்சை, பெரிய ஏலம், ஏலக்காய், சர்க்கரை, நெய், முந்திரி எல்லாம் இருக்கும். அவளைத் தாண்டாமல் பீரோவை எட்ட முடியாது. அதை அடையும்முன் ஒரு கேள்விப் பட்டியல் நீட்டப்படும். எதற்காக நெய்? நேற்றுத் தந்தது என்ன ஆயிற்று? சப்பாத்திக்குத் தடவினதில் மீதி அரைக் கிண்ணம் இருந்தால் இப்போதைக்குக் கால் கிண்ணம் போதுமே? மசாலா சாமான்களைக் காட்டிவிட்டு எடுத்துப்போ. காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த குங்குமப்பூ. அதைப் புலவில் கொட்ட வேண்டாம். மரக்கறி சாப்பிடுபவர்களுக்கு என்ன காய்கறி? நேற்று சமைத்தது ஏதும் மீறவில்லையா அவர்களுக்கு? சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கக்கூஸ் போனால் யாருக்கு என்ன பயன்?

ஒளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலாபுறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்.

ஜன்னலைத் திறந்து மலையையும், பச்சையையும், ஆகாசத்தையும், நீலத்தையும்  உள்ளே இழுத்ததும் பலம் உறிஞ்சப்பட்டாற்போல் இளைத்தனர். வீணா மோஸியைப்போல். கிஷனின் சித்தி. ஐம்பது வயது. பதினைந்து வயதில் விதவை. ஒரு கிராமத்தில் டீச்சராக இருந்தாள். பள்ளிச் சொந்தக்காரர் வீட்டுத் தோட்டத்து மூலையில் ஒரு அறையும் சமையலறையும். அசோகமரம் வாசலில். சமையலறை பின்னால் சம்பக் மரம்.. வெள்ளைப் பூக்களும் மஞ்சள் தண்டுமாய், ஜன்னலை ஒட்டிய பூங்கொடிகள் உள்ளே நுழைந்துவிடும் சுதந்திரமாய். பசித்தால் சமையல். மாலையில் பக்கத்திலுள்ள குழந்தைகள் வந்துவிடும். டீச்சரைப் பார்க்க. இல்லாவிட்டால் அசோகமரத்துக் குயில் பாட்டு. ஆனால் வீணா மோஸி “நான் அதிகாரமற்றுப் போனேன்” என்பாள். ‘டீச்சர், டீச்சர்’ என்று சுற்றிக்கொள்ளும் குழந்தைகள். பள்ளியின் ஆரபக் கல்வியின் பூரணப் பொறுப்பு. நினைத்தால் வீசு நடை பஜார் வரை. நார்க்கட்டிலை அசோக மரத்தின் கீழே இழுத்துப்போட்டு கக்ஹூ கக்ஹூ என்று தாகம் தீரும்வரை குயில் தோழமை. காலையில் பின்கதவைத் திறந்ததும் தொடும் தூரத்தில் வெள்ளை மலர்கள். இருந்தும், வீணா மோஸிக்கு மூச்சு முட்டியது. வெட்ட வெளியில் எம்பியதும் மண்ணுக்காக வீறிட்டாள், யோனியும், கருப்பையும், மார்க்காம்புகளும் கல்லாகின. கனம், இழுப்பு, கீழ் நோக்கி விழுந்து விழுந்து, விழுந்து விழுந்து, மண்ணில் சரண். பாதங்களைப் புதைத்து அசைவற்று நிற்க.

***

ஏரியின் மூலையிலிருந்து வெள்ளை இறக்கைகள் நளினமாய்த் தாழ்ந்தும், உயர்ந்தும், சாய்ந்தும் நகர ஆரம்பித்தன. கண்ணில் பட்ட முதல் கணம் ஒரு சிறு வியப்பு மீனாட்சியினுள் சிதறியது. ஏரியின் முழு வீச்சிலும் சுழன்று நீரில் மிதக்கும்போது அந்தச் சிவப்பு அலகுகள் தூரத்தில் ஒளிர்ந்தன. பிறகு மீண்டும் எழும்பி வெள்ளை இறக்கைகளைச் சரேலெனப் பிரித்து இடமும் வலமும் சாய்ந்தும் எழுந்தும்.... வெகு அருகே, முகத்தின் அருகே இறக்கை வீச்சு, பவழ அலகு தட்டையாய் நீண்டு. ரஷ்யப் பறவைகள். ஆனா சாகர் ஏரியில் சில மாதங்கள் வரும் திடீர் விருந்தினராய்.

அதற்கு முந்தைய இரவுதான் ஏரிப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. எல்லா உறவினர்களுடனும் ஏரியைப் பார்க்கும் திட்டம். இருபது பேர்களுக்கு நூறு ஏரி. உருளைக்கிழங்கு ஸப்ஜி, தக்காளிச் சட்னி, ஸாண்ட்விச் நூறு, நொறுக்குத் தீனி, குழந்தைகளுக்கு நிரப்பப்பட்ட பால் புட்டிகள், ஃப்ளாஸ்க்கில் வெந்நீர். மாலையில் சூடாகப் பக்கோடா  சாப்பிட ஒரு ஸ்டவ், ஒரு பாட்டிலில் எண்ணெய், கடலை மாவு, வெங்காயம், மிளகாய்ப் பொடி, உப்பு, பெரிய மிளகாய் - பஜ்ஜி போட - இத்யாதி. விடிகாலை நான்கு மணிக்குச் சமையலறை விளக்கு எரிந்தது. ஒரு பெரிய தாம்பாளத்தில் கோதுமை மாவைப் போட்டுப் பிசைய ஆரம்பத்தில் ஜீஜி. குஸுமா வாணலியில் எண்ணெயை விட்டு, பிசைந்த மாவை இட்டுப் பொரிக்கத் துவங்கினாள். ராதா பாபிஜி ரொட்டியில் வெண்ணெயும் சட்னியும் தடவ ஆரம்பித்தாள். ரொட்டிப் பொட்டலங்கள் அவளைச் சுற்றி, படி ஜீஜி நொறுக்குத் தீனிகளைப் ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் போட்டு ரப்பர் வளையத்தால் இறுக்கினாள். ஏரிப் பயணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி மீனா யோசித்திருக்கவில்லை.

“மீனா, எழுந்துவிட்டாயா?” என்றாள் ராதா பாபிஜி. கூந்தல் வியர்வையில் ஒட்டிக்கொண்டிருந்தது. “சாய் போடுகிறாயா?”

மீனா இவர்கள் எல்லோருக்கும் சாய் போட ஆரம்பித்தாள். துளசி இலையைப் போட்டாள் வெந்நீரில். பல் தேய்த்துவிட்டு வந்த கிஷன் கோப்பைகளைத் தட்டில் வைத்தான்.

ராதா பாபிஜி தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். “குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும். ப்ளாஸ்டிக் பையில் ரெண்டு, மூணு ஜட்டி அதிகப்படியாய் எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ரியா சில சமயம் சொல்லாமலே போய்விடுவாள். புல்லில் விரிக்க ஐந்தாறு கம்பளங்களாவது சுருட்டி வைக்கவேண்டும். எத்தனை கைக்குழந்தைகள் மொத்தம்? நாலு.  பால்டப்பா, க்ளாக்ஸோ மீனாவுக்கு. அர்ச்சனா குழந்தைக்கு லாக்டோஜன், மறக்காமல் பிஸ்கட் பொட்டலம். இதுக்கு உப்புதான் பிடிக்கும். இல்லாவிட்டால் வழியில் வாங்க வேண்டும். அழுது தொலைக்கும் இல்லாவிட்டால். இவருக்குப் பிடிக்காது. சர்க்கரை, ஸ்பூன் மறக்காமல். பரிமாறக் கரண்டி, தட்டுகள், குஸுமா, அந்த சோப் பாட்டிலை எடுத்துக்கொள், தட்டுக்கழுவ, அங்கே குழாய் உண்டு. படி ஜீஜி, வெங்காயம் ஒரு பத்து பதினைந்து அரிந்துவிடுங்கள். ப்ளாஸ்டிக் பொட்டலத்தில் போட்டுக்கொண்டு போனால் நிமிஷமாய் பக்கோடா. மீனா, ப்ளீஸ், குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறாயா?”

“பாபிஜி, ஆறு மணிதான் ஆகிறது. அழும் எழுப்பினால். கோபால் பாய் சாஹப் குளிப்பாட்டட்டுமே அப்புறமாய்.”

”ஆமாம். அவர் குளிப்பாட்டுவார், நினைத்துக்கொண்டு இரு.”

மீனா சாய் கோப்பையை நீட்டினாள். பித்தளை டம்ளரில் படி ஜீஜிக்கு விட்டுத் தந்தாள். ராதா பாபிஜி சலிப்புடன் பேசியது அவளுக்குப் புரிந்தது. ராதா பாபிஜி கணக்கில் புலி. அதில் மேல்படிப்பு மேற்கொள்ள வீட்டில் அனுமதிக்காததால் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தாள். வங்கியில் அவளுக்கு சகுந்தலாதேவி என்றே பெயர். சில மாதங்களுக்குமுன் அவளும் கோபால்பாய் ஸாஹபும் கிஷனையும், மீனாட்சியையும் ஜோத்பூருக்கு வந்து சில நாட்கள் தங்கும்படி அழைத்திருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் கோபால்பாய் சாஹப் டாக்டர். நல்ல வெய்யில் காலம். மத்தியானச் சாப்பாடு இன்னும் ஆகவில்லை.

“இந்த ஊர் வெய்யில் எரித்துவிடும். ஒன்றும் செய்ய முடியாது. ராதா பாங்க் வேலைக்காக இரண்டு நாட்கள் போனாள். தவித்துவிட்டேன். சமையலறையில் நிற்க முடியவில்லை. இங்கே வேலைக்கு ஆளும் கிடைக்கமாட்டார்கள். ஒரு டீ போடக்கூட சமையலறையில் நிற்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள் கிஷன்.”

கிஷன் மெள்ளச் சொன்னான்: “பாங்கில் பெரிய வேலை பார்க்கும் ராதா பாபிஜி இப்போது அதே சமையலறையில்தானே சமைத்துக்கொண்டிருக்கிறாள்?”

”ஆமாம் அதற்கென்ன? பெண்களுக்கு அதெல்லாம் சகஜம்தானே?”

கோபால்பாய் சாஹப் விடுமுறைக்கு வந்த வேளையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளைக் குளிப்பாட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.

“ராதா பாபிஜி, எந்தப் புடவை கட்டிக்கொள்ளப்போகிறீர்கள்?” என்றாள் குஸுமா.

“அந்தச் சிவப்பு ஸில்க்தான். ராத்திரியே இஸ்திரி போட்டாகிவிட்டது. அவருடையது அப்புறம் குழந்தைகளுடய சட்டைகளுக்கும் போட்டுவிட்டேன்.”

”நான் அந்தக் கறுப்புப் பொட்டுப் போட்ட வெள்ளைப் புடவை கட்டலாம் என்று நினைத்தேன். ரவிக்கை இஸ்திரி போடவில்லை. மீனா, என் கறுப்பு ரவிக்கை தருகிறாயா?”

“எடுத்துக்கொள்ளேன். ஆனால் அது ஸ்லீவ்லெஸ்.”

“அடடா! அப்படியானால் என் ரவிக்கையை இஸ்திரி போடுகிறாயா மீனா? நான் ஸ்லீவ்லெஸ் போடமுடியாது. என் கை சுத்தமாயில்லை.”

“தலைப்பால் போர்த்திக்கொண்டு விடு பேசாமல். நீளத் தலைப்பு விட்டு. உன் கைக்கு அடியில் யார் வந்து பார்க்கப்போகிறார்கள்?”

”இதோ பார் மீனா. தமாஷ் பண்ணாதே. இஸ்திரி போடுகிறாயா?”

“சரி. சரி.”

மெதுவாகச் சுவரைப் பிடித்து நடந்து வந்து ஜீஜி ஊறுகாய் பரணியைத் திறந்தாள்.

“என்ன செய்கிறீர்கள் ஜீஜி, போய்ப் படுங்கள் பேசாமல்” என்று அதட்டினாள் ராதா பாபிஜி.

“ஊறுகாய் பிடிக்குமே எல்லோருக்கும். எடுத்து வைக்கிறேன்.”

”அங்கே சமையலறையில் என்ன சத்தம், தூங்கவிடாமல்?” என்று குரல் கேட்டது.

நச்சென்று மௌனம்.

ரகசியக் குரலில், “மீனா, சாய் அடுப்பில் உருளைக்கிழங்கை வேகப்போடுகிறாயா?”

“ராதா பாபிஜி, தாளித்து ப்ரஷர் குக்கரில் போடலாமே? வேகவிட்டு உரிக்கவேண்டாம்” குஸுமா கிசுகிசுத்தாள்.

“நீ செய் அதை. மீதி பூரி படி ஜீஜி பொரிக்கட்டும்.”

எட்டு மணி அளவில் கழுத்து, அக்குள் எல்லாம் வியர்வை மழை. ரவிக்கை ஒட்டிக்கொண்டது. எண்ணெய்ப் புகை கண்ணில். முழுத்தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகள். பப்பாஜி சமையலறையில் எட்டிப் பார்த்தார்.

”ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டு விடுமே உங்களுக்கு?” என்றார்.

அஹ்ஹா என்று சிரித்தார்.

சிறு சிறு பறவைகள் கக்ளக் என்றபடி நீரில் மிதந்தன கறுப்பும் மஞ்சளுமாய். திடீரென்று வெள்ளை இறக்கை வீச்சு. பவழ நிழலுடன்.

கம்பளங்களில் சீட்டுக் குலுக்கல். சிலவற்றில் பெண்கள். “மம்மீஜி, டட்டி” என்று பின்பாகத்தைப் பிடித்துக்கொண்டு குழந்தை சொல்லும்வரை. பழைய பேப்பரைக் கையில் ஏந்தியபின், கக்கூஸ் பயணம். குழந்தை தலையில் ஒரு குட்டு. வலிக்க வலிக்க. அம்மாக்கள் ஒழித்த இடத்தில் கன்னிப் பெண்கள். இடையிடையே சீட்டை வைத்துவிட்டு எழுந்து தண்ணீர் உபசாரம்.

சாப்பிட்டு தட்டுகளை குஸுமாவும் ராதா பாபிஜியும் கழுவியாயிற்று.

ஸ்டவ் ஏற்றல். பக்கோடா போட ஆரம்பித்தனர்.

“அரே என்ன வாசனை? எனக்கு இரண்டு வெறும் மிளகாயுடன்”

இடையில் குழந்தைகளுடன் பேச்சு.

“ராஜூ, நீ என்ன செய்வாய் பெரியவன் ஆனதும்?”

“பைலட். ஸுய்ங்கென்று.”

“நீ, ப்ரியா?”

”நானு... நானு.... நானு.... வந்து... தப்பாத்தி தெய்வேன் எங்க வீட்டுலே.”

“என்ன சமத்தாய்ப் பேசுகிறது?” ஜீஜி சிரித்தாள்.

“அஜ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நான் ஏறியிருக்கிறேன்” என்றார் பப்பாஜி.

“ஜீஜி, நீங்கள்?” என்றாள் மீனாட்சி.

”அவர் மலை ஏறினபோதெல்லாம் எனக்கு வயிற்றில் குழந்தை” என்றாள் ஜீஜி. சிரித்தாள் வாய்விட்டு. எல்லோரும் சிரித்தனர். ஜீஜி பதினாலு குழந்தைகள் பெற்றாள்.

எல்லாவற்றையும் வாரிக்கொண்டு, இன்னொரு முறை ‘டட்டி’ போகலாமா என்று யோசித்த குழந்தைகளின் மனதைத் திசை திருப்பிவிட்டு கிளம்பினர்.

குஸுமா பின்தங்கினாள். “மீனா, மெள்ள நடவேன். இன்னும் நான் பறவைகளைச் சரியாகப் பார்க்கவில்லை.”

“ஸதீஷைக் கூப்பிடவா?”

“இல்லை, இல்லை. அவர் போகட்டும், கலாட்டா ஆகிவிடும் அவரைக் கூப்பிட்டால்.”

மெதுவாக நடந்தார்கள்.

“பத்து நாள் தள்ளிப்போயிற்று. லேடி டாக்டரிடம் போகணும் என்று நினைப்பதற்குள் வந்துவிட்டது.”

”தயாராக வந்தாயா? நீ சொல்லியிருந்தால் கடைக்குப் போய் ஸானிடரி டவல் வாங்கியிருக்கலாமே...”

“தயாராய்த்தான் வந்தேன். இருந்தாலும் வெள்ளைப் புடவை. கொஞ்சம் பின்னால் பார்.”

“இல்லை. ஒன்றும் ஆகவில்லை.”

“வேகமாக நடப்போமா? ஏரிப்பக்கம் உட்கார நேரம் இல்லை. ராத்திரி சமையலுக்குப் பூண்டு உரிக்க வேண்டும்.”

“வா நீ பேசாமல்.”

ஏரி அருகே குஸுமாவை உட்கார்த்தி மௌனித்தாள்.

ஜீஜியிடம் ஒரு முறை “உங்கள் மூன்றாம் பிள்ளைக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும்?” என்றபோது சடாரென்று பதிலளித்தாள் ஜீஜி - படித்தவள். வெளுப்பானவள், பேசாதவள் என்று. “சரியாகச் சொன்னாய்” என்றார் பப்பாஜி. அப்படி ஒரு பெண் இருப்பாள் என்று மீனாட்சி நம்ப மறுத்தாள். ஜீஜியின் பதில் அன்று மத்தியானம் நடந்திருந்த சம்பவத்தின் நீட்சி என்று நினைத்தாள். மத்தியானம் பப்பாஜியின் நண்பர் வந்திருந்தார். சரும நோய் நிபுணர். அப்போது மீனாட்சிக்குக் கையில் சில வெள்ளைத் திட்டுக்கள் வந்திருந்தன. கொஞ்சம் அரிப்புடன். சரும நோய் நிபுணரிடம் பப்பாஜி அறிமுகப்படுத்தினார்: இவள் கிஷனின் மனைவி. ஓயாமல் ஊர் சுற்றுகிறாள். சதா கையில் புத்தகம். வாயாடி. இவள் கையைப் பாருங்கள்.

நிபுணர் உபதேசம் : நீ வீட்டில் இரு. மற்ற பெண்கள் மாதிரி. எல்லாம் சரியாகிவிடும். அவரவர் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மாதிரி இருந்துவிட்டால் ஏது நோய்?

“ஆஹா” என்றார் பப்பாஜி.

ஜீஜி கூறியது அதை ஒட்டிய ஹாஸ்யம் என்று நினைத்தாள். ஆனால் ஜீஜியின் விளக்கத்துக்கு உரை போட்டாற்போல் கிடைத்தாள் குஸுமா.

அரசியலில் எம்.ஏ. ஃப்ரெஞ்சில் டிப்ளோமா. எதற்காக ஃப்ரெஞ்ச் படித்தாள் என்று தெரியவில்லை. திருமணத்திற்காகக் காத்திருக்கும்போது ஏதாவது மொழியில் டிப்ளோமோ வாங்குவது காத்திருத்தலின் ஒரு அம்சம் என்று தெரிந்தது. வெளியூரில் வேலை செய்யும் மாப்பிள்ளையானால் வெளிநாட்டு மொழி உபயோகமாக இருக்குமாம். பூ வேலை செய்த குஷன்கள், தலையணை உறைகள், கை வேலைப் பொருட்கள், பூ வேலையும் லேஸ் வேலையும் செய்த புடவைகள் எல்லாம் செய்திருந்தாள் குஸுமா அந்தச் சமயத்தில். பூ அலங்கார வகுப்புகள், பேக்கரி வகுப்புகள், தையல் வகுப்புகள், ஜாம், ஜூஸ், ஊறுகாய் வகுப்புகள் எதையும் அவள் விட்டுவைக்கவில்லை. எல்லா வித்தைகளையும் கற்றிருந்தாள். பூரணமான மருமகள்.

வெகு தூரத்திற்குப் போய்விட்டிருந்த வெள்ளைக் கூட்டம் நினைத்துக்கொண்டாற்போல் உயரே எழும்பி வட்டம் சுற்றி இடப்பக்கம் வந்தது. மிதமான வேகத்தில் மிதந்தாற்போல் வந்து சுழன்றது.

குஸுமா அழ ஆரம்பித்தாள்.

”அந்த அலகு... என்ன சிவப்பு...” என்று விசித்தாள்.

மெல்லச் சிவக்கத் தொடங்கிய மாலையில் பவழம் மிதந்தது இறக்கைகளுடன்.

உரிக்காத பூண்டு... இறக்கைகள் திறந்தன மறுவட்டம் அடிக்க.

உருவாகாத கரு... ஒயிலாக நீரின்மேல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சறுக்கி இறங்கி மிதந்தன.

விசும்பல் ஒலி.

***

ஹோலிப் பண்டிகை விடுமுறையில் அஜ்மீர் வந்தபோதுதான் ஜீஜிக்கு நோயின் கடுமையான தாக்குதல் நேர்ந்தது. ஒரு மத்தியானம், அன்றைய சமையலுக்கான உபகரணங்களைத் தந்துவிட்டு சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு குளிர்ப்பதனப் பெட்டியில் என்ன மிஞ்சியிருக்கிறது என்று பார்க்க ஜீஜி மெல்ல நடந்து வந்தாள். அதை எட்டும் முன்பே மூச்சு முட்டியது. சுவாசம் பெருத்த ஓசையுடன் இழுத்தது. மற்றவர் ஓடி வரும்முன் தன் கனத்த சரீரத்துடன் தரையில் விழுந்துவிட்டாள் ஜீஜி. வியர்வை பெருகியது. சிறுநீர்  பெருகி உடையெல்லாம் ஈரம்.

“நான் போய்விடுவேன்... நான் போய்விடுவேன்... என் மருமகள்கள் எல்லோரும் வெளியூரில்... அந்தப் பாவி படி ஜீஜி என் சமையலறையை ஆளப்போகிறாள்... ஹே பக்வான்...” என்று அரற்றிக்கொண்டே தலையை இடமும் வலமும் திருப்பினாள். கீழே இருந்த டாக்டர் ஓடி வந்து ஊசி போட்டார். மூச்சு சீராகியது. இமைகள் இழுக்க உறங்கிப்போனாள்.

கண் விழித்ததும் இடுப்புச் சாவியைத் தொட்டுக்கொண்டாள். “ராத்திரி என்ன சமையல்?” என்று கேட்டாள். பீன்ஸ் என்றதும் “ஏன், நான் காலிஃப்ளவர் அல்லவா சொல்லியிருந்தேன்? அவள் மாற்றினாளா? நான் போய்விடுவேன் என்று நினைத்தாளோ?” என்று பொருமினாள்.

“இல்லை ஜீஜி. காலிஃப்ளவர் கிடைக்கவில்லை பஜாரில்.”

”புடவை... வேறு புடவை... தா” என்றாள்.

குஸுமா, ஜீஜியின் பீரோவைத் திறந்து பச்சைப் புடவை, பச்சை உள்பாவாடை, இளம் மஞ்சள் ரவிக்கை எடுத்தாள். ஜீஜியின் படுக்கை அருகே வைத்தாள். தலையைத் திருப்பிப் பார்த்த ஜீஜி, “பச்சை வளையல் எங்கே?” என்றாள் ஈனஸ்வரத்தில். மீனாட்சி வளையல் பெட்டியைத் திறந்து பச்சைக் கண்ணாடி வளையல்களை எடுத்து வைத்தாள்.

கதவை மூடி ஜீஜியின் ஆடைகளை அகற்றினர். முழுவதும் சிவக்கப் பழுத்த பழம் ஒன்று வற்றினாற்போல் இருந்தது அவள் உடம்பு. அகங்கையில் கோடுகள் கனத்து ஓடின. புறங்கை சுருங்கி நரம்புகள் பளபளத்தன. அடிவயிற்றில் ஏரிட்டு உழுதாற்போல் ஆழமான பிரசவ வரித் தழும்புகள். அவள் உறுப்பின்மேல் புறத்துமயிர் வெளேரென்று பசையற்று, அங்கங்கே உதிர்ந்து இருந்தது. பருத்துப் பின் தளர்ந்த பின்பாகமும், தொடைகளும் வெளுத்த கீறல்களுடன் சுருங்கித் தொங்கின. உள்தொடை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது. ஸ்தனங்கள் சுருங்கிய திராட்சை முலைக்காம்புகளுடன் தாழ்ந்து தொங்கின. கழுத்தில் பல தங்கச் செயின்களின் கரிக்கோடுகள். நெற்றியில் வகிட்டின் முனையில் கனத்த தங்கக் குண்டுடன் தலையில் அணிந்த சுட்டிப் பட்டம் அழுத்தி அழுத்தி வழுக்கை விழுந்தாற்போல் வழவழவென்று ஒரு தழும்பு.

வாழ்ந்த உடம்பு. சிறுநீர், மலம், ரத்தம், குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு. எத்தனை தடங்கள் அதில்!

புடவை கட்டி முடித்ததும், ஜீஜியின் தலையை வாரி, வண்ண நூல் குஞ்சலம் தொங்கும் கருத்த நூல் சவுரியைக் கூந்தலில் இணைத்துப் பின்னிவிட்டாள் ராதா பாபிஜி. பீரோ சாவியை குஸுமா ஜீஜியின் இடுப்பில் செருகினாள். ஜீஜி படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.

மற்றவர்கள் போனதும் ஜீஜி அருகில் உட்கார்ந்துகொண்டாள் மீனாட்சி. ஜீஜியின் கை இடுப்பைத் துழாவியது. ஜன்னல் திரைகள் மூடப்பட்ட அறை இருண்டிருந்தது.

மருந்து, தூக்கம், அயர்ச்சி சேர்ந்து ஜீஜியின் குரல் கனத்து வெளிப்பட்டது. ஆனால் காற்றினில் அலைந்துவிட்டு வந்ததுபோல் அழுத்தமின்றி இருந்தது.

“சிகப்புக் கலர் பாவாடை...”

“என்ன ஜீஜி?”

“என் கல்யாணப் பாவாடை. சிகப்புக் கலர். தங்க வெள்ளிச் சரிகை உடலெல்லாம். தங்கத் தகட்டுப் பொட்டு. பன்னிரெண்டு தங்க வளையல்கள். இரண்டு அட்டிகை, சிவப்பில், பச்சையில், முத்துத் தோடு. பவழத் தோடு. நெற்றிச் சுட்டியின் தங்கக் குண்டு அஞ்சு பவுன். ஒரு வெள்ளிச் சாவி வளையம். பதினாலு வயது எனக்கு. என்னை வழியனுப்புகிற ‘பிதாயி’ன்போது என் அம்மா காதில் சொன்னாள். நெஞ்சில் முட்டுகிறது அந்த ‘பிதாய்’. முக்காட்டோடு அவள் குனிந்து என்னைக் கட்டிக்கொண்டாள். பெரிய மூக்கு வளையம். உறுத்தியது. “சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே.... இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்....”

“இருக்கட்டும் ஜீஜி. தூங்குங்கள்.”

“முப்பது பேர் வீட்டில். அஞ்சு கிலோ ‘ஆட்டா’ பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் ரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்தது.... பப்பாஜி சொன்னார்... சபாஷ்... நீ நல்ல உழைப்பாளி... என்று....”

ஹா என்று மூச்சு விட்டாள்.

“கோபாலுக்கு முன் ஒரு ஆண் குழந்தை. அவன் போய்விட்டான். தெரியுமா? ஒரு வயதில். பூஜை அன்று, எல்லோரும் சமையலறையில்... குழந்தை படியேறி மதில் சுவரில் ஏறப்பார்த்து விழுந்துவிட்டான்... முப்பது படி ஏறியிருந்தான்.... எண்ணெயில் பூரியைப் போட்டது ஈச்சென்ற அலறல்.....  வயிற்றில் முட்டியது.... பின் மண்டையில் பிளவு... முற்றத்துக் கல் தரையில் வெள்ளைப் புழுக்கை மாதிரி அவன் மூளை சிதறியிருந்தது... ஆண் பிள்ளைகள் எல்லாம் வந்தபின்... பொரித்தேன்... மீனா... கேட்கிறாயா... பொரித்தேன் மீதம் பூரிகளை...”

மீனாட்சி ஜீஜியின் நெற்றியில் தடவினாள்.

“மாமனார் போனதும் வெள்ளிச் சாவி வளையத்தில் சாவி கோத்துக்கொண்டேன்.....”

“மீனா... எனக்கு எத்தனை செல்வாக்கு பார்த்தாயா? நன ராணி மாதிரி அதிகாரம் செலுத்துகிரேன்... இல்லையா?” ஜீஜி முனகினாள். உறங்கினாற்போல் கிடந்தாள்.

பெரிய வட்டப் புஷ்ப வடிவில் கமலமும், நீலமும் பச்சையும், முத்தும் பதித்த தோடுகளை அணிந்த சருகுச் செவிகள் அருகே மீனாட்சி குனிந்தாள். விரிந்த கடலில் பாம்புப் படுக்கையில் மகா விஷ்ணு மிதப்பதுபோல் ஜீஜியும் அவளும் மட்டுமே. இருண்டு கிடந்த அறையில் ஒரு தொப்புள் கொடி அறுந்த தன்மை ஏற்பட்டது. அந்த உரையாடலை அவள் நிகழ்த்தினாளா, அது தன்னால் ஏற்பட்டதா, அப்படிப் பல முறை யோசித்ததால் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா, அது ஜீஜிக்கும் அவளுக்கும் மட்டுமேயான உரையாடலா என்று தெரியவில்லை.

ஜீஜி, அந்தச் சமையலறை, அட்டிகை, வளை, தங்கக் குண்டுச்சுட்டி - அதிலெல்லாம் ஒரு பலமுமில்லை.

அதிகாரம் அதிலிருந்து வரவில்லை.

அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம்.

அதிலிருந்து எல்லாம்.

விடுபடுங்கள்.

விடுபடுங்கள்.

விடுபடுங்கள்..

விடுபட்டால்... அப்புறம்.... எஞ்சுவது?

சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்த நீங்கள்தான். அறுபட்ட நீங்கள், வெறும் கேஸர்பாயி, கேஸர்பாயி மட்டுமே. அங்கிருந்துதான் பலம். அதிகாரம்.

அதை எல்லாம் துறந்த நான்... நான்... யார்?

கண்டுபிடியுங்கள். முங்கிப் பாருங்கள்.

எதில்?

கிணற்ரில், உங்கள் அந்தரங்கக் கிணற்றில்.

பற்றிக்கொள்ள எதுவுமில்லையே... பயமாக..

இன்னும் முங்குங்கள். முங்குங்கள். கேஸர்பாயிக்கும் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள்.

நிதம் இடப்பட்ட அந்த முந்நூறு சப்பாத்திகளும், பதினாலு குழந்தைகளை உதைக்கவிட்ட வயிறும் இல்லாவிட்டால்

மட்டன் புலவு, மஸாலா, பூரி - ஆலு, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்கா விட்டால்

நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தின் கவலை அரிசி, பருப்பில் பூச்சி; மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத், ஜூஸ், ஜாம்; பழைய துணிகள் போட்டுப் பாத்திரம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று மண்டையெல்லாம் பூச்சி, ஊறுகாய், சுண்ணாம்பு அடைத்திருக்காவிட்டால்.

மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால்

ஒருவேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்;

புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைகளுக்கு ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறை, தூக்குமரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகம் உண்டாக்கியிருக்கலாம்.

நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?

சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்

காதிலும் கழுத்திலும் நுதலிலும் உறுத்திய நகையில்

பலம் என்று

எப்படி நினைத்துக்கொண்டீர்கள்?

முங்குங்கள் இன்னும் ஆழமாக.

அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள். சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.

உங்கள் யோனியும், ஸ்தனங்களும், கருப்பையும் சுழன்று விழும் சமையல் மணம் தூரப் போய்விடும். நகையின் மினுமினுப்பு மறைந்துவிடும். பால்தன்மை அற்ற நீங்கள். அதில் சிக்காத நீங்கள், அதில் குறுகாத நீங்கள். அதனின்றும் விடுபட்ட நீங்கள்.

அதைத் தொடுங்கள் ஜீஜி.

தொட்டு

எழுங்கள்.

எழுங்கள்.

எழுங்கள்.

அதுதான் பலம். அதனின்றும்தான் அதிகாரம்.

ஜீஜி திரும்பி, மீனாட்சியின் தேடிப் பற்றிக்கொண்டாள்.

*****

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (சிறுகதைத் தொகுப்பு) – க்ரியா பதிப்பகம். அம்பை சிறுகதைகள் (1972-2000) – காலச்சுவடு பதிப்பகம்

.

 http://www.tamilvu.org/courses/degree/p101/p1012/html/p1012663.htm6.3 சிறுகதை நோக்கும் போக்கும்


பெண்கள் உழைப்பு சுரண்டப்படுதல், அவர்களுடைய உரிமைகளும், உணர்வுகளும் ஒடுக்கப்படுதல் இவற்றின் அடிப்படையில் எழும் பெண்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துதலை அம்பையின் நோக்கமாகக் காண்கிறோம்.
ஆண் ஆதிக்கத்திற்கும், பெண்கள் அந்த ஆதிக்கத்தின் கீழ் அடங்குவதற்கும் உரிய காரணங்களை உளவியல் ரீதியில் புனர் சிறுகதையில் அம்பை எடுத்துக் காட்டுகின்றார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). இச்சமுதாயத்தில் பிறந்த ஆண்களும், பெண்களும், ஆண்களாகவும், பெண்களாகவும் உருவாக்கப்படுகின்றனர். இச்சமுதாயமே அவர்களின் நடத்தைக்குக் காரணமாகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது அவர் நோக்கமாகிறது. 'இவ்வுலகில் பிறந்தவர்கள் இயல்பாக இருப்பதே அவர்கள் சுதந்திரம்’. அவர்களை அவ்வாறு இருக்க விடுவதும் சுதந்திரம் என்பதைப் பல சிறுகதைகளில் வெளிப்படுத்துகிறார் அம்பை.


6.3.1 முறிக்கப்படும் சிறகுகள்


உயிர் வாழ உணவு தேவைதான். அந்த உணவைத் தயாரிக்க ஒரு சமையலறையும் தேவைதான். ஆனால் அந்தத் தேவை பெண்கள் மீது செலுத்தும் அழுத்தமும் ஆதிக்கமும் சொல்லி முடியாது. சமையலறை பெண்கள் மீது செய்யும் ஆதிக்கம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற சிறுகதையில் விவரிக்கப்படுகிறது.
ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப் போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகள் எடுத்தனர்.' பேடி அதிகாரம்' என்று இதனைக் கடுமையாகச் சாடுகிறார் அம்பை.
"திருமணமான புதிதில் முப்பது பேர் வீட்டில் அஞ்சு கிலோ ஆட்டா மாவு பிசைவேன். 300 சப்பாத்தி இடுவேன்" என்று கூறுகிறாள் ஜீ.ஜி. முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள்பட்டையில் குத்திக்குத்தி வலித்தது. அவளைப் பார்த்துப் பப்பாஜி சொன்னார். "சபாஷ் நீ நல்ல உழைப்பாளி" என்று (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). சந்தேகப்படும் கணவன் மனைவியை எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாக்குகிறான் என்பதைச் சொல்லும் சிறுகதை 'வல்லூறுகள்' (சிறகுகள் முறியும்).
‘உடன்கட்டை ஏறுவது ஒரே மனிதனிடம் அவளுக்கு உள்ள விசுவாசத்தின் உச்சக் கட்ட நிரூபணம்’ என்று வாமனன் சிறுகதை குறிப்பிடுகிறது.
சமையலறைச் சிந்தனைகளே பெண்ணின் மனத்தை ஆக்ரமித்திருப்பதால் அவளால் உலக அறிவும் விழிப்புணர்வும் பெற இயலாமல் போய் விட்டதை இக்கதையில் இடம் பெறும் மீனாட்சி வாயிலாக அம்பை குறிப்பிடுகிறாள்
நாலு நாட்களுக்கு ஒருமுறை ஸ்டவ் திரியை இழுத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும். மழைக் காலத்தில் கவலை. அரிசி, பருப்பில் பூச்சி, மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெயில் காலத்தில் அப்பளம், பழங்கள் வரும் காலத்தை ஒட்டி சர்பத், ஜூஸ், ஜாம், பழைய சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுண்ணாம்பு, மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று பெண்களின் கவலைகளையெல்லாம் எடுத்துரைக்கிறார். இவை இல்லாமல் இருந்திருந்தால் 'புதுக்கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம், காவியம் எழுதியிருக்கலாம், குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம்’ என்று பெண்ணின் உழைப்பும் குறுகிய வட்டத்திலான உணர்வுகளும் அவளை இதுவே உலகம் என்று எண்ணச் செய்து விட்டதையும், அவள் விரும்பினால்தான் அதிலிருந்து அவள் விடுபட முடியும் என்பதையும் உணர்த்துகிறது வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்னும் சிறுகதை.

6.3.2 பெண்நிலை நோக்கு


சாயா திருமணமானவள். கணவன் பாஸ்கரன் சாயாவின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் சிறிதும் மதிப்பளிக்காதவன். தன்னுடைய ஒரு சொத்தாக மட்டுமே மனைவியை நினைப்பவன். எழுதாத சமூகச் சட்டங்களினால் இச்சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற கட்டுப்பாடுகளும், ஆதிக்க வேகமும் சாயாவுக்குக் கோபத்தை உண்டாக்கினாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
அலுவலகம் செல்லும் கணவனுக்குத் தினமும் அக்கறையாகச் சமைத்து உணவு கொடுத்தனுப்புகிறாள். அன்போடு அவள் செய்தவற்றை அவன் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் மேலிட வாய்விட்டே கேட்டு விடுகிறாள்.
"நீ நன்னாத்தான் சமைக்கிறே. சாமானை வீணடிச்சுடறே. இருந்தாலும் ஓட்டல்ல சாப்பிடறதை விட இது லாபம்தான்" (சிறகுகள் முறியும்) என்று கூறுகிறான். இதுபோன்ற தருணங்களில் தன்னுள் எழும் ஆத்திரத்தைச் சாயா எப்படிச் சமாளிக்கிறாள் தெரியுமா?
நாட்டை ஆளும் ராணியாக, ஆணையிடும் அரசியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்வாள். "இஸ்திரி போட்ட பேண்ட் உடுத்தினால் என்ன?" என்று கேட்டால், "வண்ணானுக்கு எத்தனை கொடுக்கிறது?" என்று புலம்பும் கணவன்.
மனதுக்குள்ளே இடும் சட்டம்: கருமிகளுக்குக் கல்யாணமே ஆகக்கூடாது. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும் போது, கெட்டியாக மூடிக் கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம். அடக்குமுறை அதிகமாக அதிகமாகச் சுதந்திர தாகமும் அதிகரிக்கிறது. சாயாவுக்கும் அப்படித்தான். அவள் தங்கையைப் பெண் பார்க்க வருவதால் சாயா வரவேண்டுமென்று அவள் தாய் கடிதம் எழுதியிருந்தாள். பாஸ்கரனோ "ஆயிரம் பேர் பெண் பார்க்க வருவா, ஒவ்வொரு தடவையும் நீ போக முடியுமா? "என்கிறான். அந்தக்கணம் ஓர் இந்துப் பெண்ணுக்குத் தோன்றக் கூடாதது என்று காலம் காலமாய் எல்லாரும் சொல்லும் ஓர் எண்ணம் அவளுக்கும் தோன்றியது. அவனை விட்டுப் போய்விட வேண்டும் என்று அவள் நினைத்தாள். பத்து வருஷங்களாய் இழுக்க இழுக்க நீளும் ரப்பர் துண்டாய் வளைந்து கொடுத்த மனம் அன்று கல்லென்று உறைந்தது. மனம் நினைத்த மறுவினாடியே எதிர்காலத் திட்டங்கள் நீண்டு அவள் தீர்மானமே செய்து விட்டாள். அவள் சிறகுகளை விரித்து அவள் பறக்க வேண்டும். விசும்பின் நிச்சலனமான அமைதியில் அவள் சிறகுகள் அசைய வேண்டும். அதுதான் வாழ்க்கை என்று நினைக்கிறாள். (சிறகுகள் முறியும்)

• பெண்ணின் சாதனை


ஆணாதிக்கத்தில் உரிமைகள் ஒடுக்கப்படலாம். உணர்வுகள் அடக்கப் படலாம். ஆனால் பெண் நினைத்தால் சாதிக்கலாம் என்பதை அம்பை எவ்வளவு சுவையாகச் சொல்கிறார் என்று பாருங்கள்:
எந்த வாகனமும் ஓட்ட அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. அவளுக்கு ஒரு வாகனம் உரிமை உடையதாயிற்று. சக்கரமில்லா, சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தாத வாகனம், ஓசையின்றி, மோதலின்றி, ரத்தமின்றி இயங்கும் வாகனம். மின்னியக்க வாகனம். அதில் ஆரோகணித்துத் தகவல் வீதியில் பல காத தூரம் பயணம் போனாள். தகவல் வலைக் கூட்டத்தாரின் வீட்டுப் பக்கங்களை நோட்டம் விட்டாள். பல வீட்டின் கதவுகளைத் தட்டித் திறந்தாள். தனக்கென்று ஒரு வீட்டை அதில் அமைத்துக் கொண்டாள். தற்போது தன் வாகனம் என்று குறிப்பிட்டு மின்னியக்க மூஞ்சூறின் மேல் ஆரோகணித்தவளாய்த் தன்னை வரைந்து கொண்டாள். அரக்கர்களை அழிக்கவும் தேவர்களைச் சந்திக்கவும் மின்னியக்கத் தருணம் பார்க்க ஆரம்பித்தாள். இவ்வாறு அக்கதை (காட்டில் ஒரு மான்) செல்கிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே அமையும் தோழமை உணர்வையும் நெருக்கத்தையும் பல படைப்பாளிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அதேபோலத் தாய்க்கும் மகளுக்கும் அமைந்த தோழமை உணர்வையும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் நிலையினையும் வெளிப்படுத்துகிறது அம்பையின் 'பிரசுரிக்கப்படாத கைப்பிரதி' (காட்டில் ஒரு மான்).


6.3.3 உளவியல் நோக்கு

'தனிமையெனும் இருட்டு' உளவியல் ரீதியாகப் படைக்கப்பட்ட சிறுகதை (சிறகுகள் முறியும்). கணவன் வெளியூரில் வேலை நிமித்தம் தங்குவதாகவும், தனிமையை விரட்ட கணவன் அருகில் இருப்பது போலவும் அவன் தன் விருப்பப்படி நடந்து கொள்பவனாகவும் கற்பனை செய்தே காலத்தை இனிமையாக ஓட்டிக் கொண்டிருக்கிறாள். நாளடைவில் அதுவே பழக்கமாகிவிடவே இனியதான அந்த உலகத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள். உண்மையில் கணவனிடமிருந்து மறுநாள் வருவதாகக் கடிதம் வந்த போது அவளால் அதை ரசிக்க முடியவில்லை. இதுநாள்வரை தான் அனுபவித்த சுதந்திரமான கற்பனை இன்பத்தைக் கைவிட முடியாமல் தூக்க மாத்திரைகளை விழுங்கி விடுவதாகக் கதை முடிவடைகிறது.
சமுதாயத்தில் ஆண்கள், பெண்கள் இவர்களின் நடத்தைக்கு, சமுதாயம் அவர்களுக்குக் கற்பித்துத் தந்ததே என்று உளவியல் ரீதியான காரணத்தை ஒரு சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார் (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை).
‘லோகிதாஸ்’ என்ற ஆண் உருவாக்கப்பட்டான். சபரி என்ற பெண்ணும் உருவாக்கப்பட்டாள்.
ஆண் சம்பாதிப்பவன். சம்பாதிப்பவனே ஆண். நீ சம்பாதிப்பவன். நீ வேலைக்குச் செல்பவன். நீ உரிமைகளை உடையவன். நீ அழக் கூடாதவன். நீ உறுதியானவன். நீ தீர்மானங்களைச் செய்பவன். நீ ஆண் - இப்படி உருவாக்கப்படுபவன் ஆண் என்று ஆணாதிக்கச் சமுதாயத்தை எடுத்துக் காட்டுகிறார். (வீட்டின் மூலையில் ஒரு சமையலறை)
ஹிஸ்டரி எடு! அப்புறமா அடுப்பு தானே ஊதணும்? சமைக்கக் கத்துக்க,வாய்க்கு ருசியா சமைக்காத பொண்ணை யார் கட்டுவாங்க? ஃபெமினா பாரு, ரெசிபி கத்தரிச்சு வை. நீ வீட்டைப் பேணுபவள், நீ அழகு சாதனங்களுக்கானவள். நீ அடக்கமானவள். நீ தீர்மானங்களைக் கேட்டுக் கொள்பவள். நீ தேவியானவள். நீ உபயோகமானவள். நீ சுகத்தைத் தருபவள். நீ தேவைக்காக மட்டுமே வேலை செய்பவள்.நீ பாதுகாக்கப்பட வேண்டியவள். நீ பெண். இவ்வாறு சபரி என்ற பெண்ணை உருவாக்கியுள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்.
ஆண் மேம்படுத்தப்பட்டும், பெண் அடக்கப்பட்டும் உருவாக்கப் படுவதால் இச்சமுதாயச் சூழல் அதனை வளர்க்கவே வழி செய்வதை அம்பை எடுத்துக் காட்டுகிறார். 

 6.4 சிறுகதைக் கலை


சிறுகதைக்குரிய கரு அதற்குப் பொருத்தமானதான கதைக்களன், இயல்பான கதைமாந்தர் படைப்பு, மனத்தில் நிற்கும் சிறந்த கதை வடிவம், ஒருமைப்பாடு அனைத்தும் பொருத்தமுற அமையும் போது அங்கும் சிறுகதை இலக்கியம் ஒரு சிறந்த கலையாகின்றது. பெண் நிலை நோக்கில் சமுதாயத்தை நோக்கும் ஒரு பார்வையில் பிறந்த கருத்துகள் அம்பையின் சிறுகதையில் சிறுகதை வடிவம் கொள்கின்றன. இவர் படைக்கும் கதைமாந்தர்கள் இவ்வுலகில் நாம் சந்திக்கின்றவர்களே. ஆனால் அவர்களுடைய அகநோக்கும், ஆழ்ந்த சிந்தனையும் இவருடைய சிறுகதைகளின் உள்ளடக்கமாகின்றன. தனக்கென்ற சில உத்தி முறைகளையும், அதற்கேற்ற மொழி நடையையும் அம்பை கையாள்கின்றார். இதுபற்றி இனிப் பார்ப்போம்.


6.4.1 பாத்திரப் படைப்பு


அம்பையின் கதை மாந்தர்களில் ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்க உணர்வு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பெண்கள் அவ்வாதிக்க உணர்வினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் ஒடுக்கப்படுவதை அறிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வு பாதிக்கப்படும் பெண்கள் மனத்தில் இருப்பதை அம்பையின் பெண் கதைமாந்தர்கள் வாயிலாக அறிகிறோம். அவ்வெதிர்ப்புணர்வைச் சிலர் தங்கள் பேச்சில் வெளிப்படுத்துகின்றனர். சிலர் செயலில் காட்டுகின்றனர். பெரும்பாலும் சமுதாயம் முழுவதுமே பெண்களுக்கான தனிப் பார்வையோடு இருப்பதை இளம்பெண்கள் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றனர். யம பயம் கொண்ட ஒரு முதியவர் தன் வாழ்நாள் பெருக வேண்டும் என்று யாகம் செய்கிறார். ஆனால் அவர் மகளுக்கு இச்செயல் வெறுப்பை உண்டாக்குகிறது. ஓம குண்டத்தில் அவர் நெய் வார்க்கும் போது ஏற்கனவே உயிரிழந்த ஓர் எலும்புக் கூடு நெய் வார்ப்பது போல் இருந்ததாக மகள் உணரும் காட்சியை ம்ருத்யு சிறுகதை காட்டுகிறது (சிறகுகள் முறியும்).
பெண்கள் வாழ்க்கை சமையலறையைச் சுற்றியே இருப்பதைக் காட்டும் சிறுகதை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. குழாயடித் தண்ணீருக்கு நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். மருமகள் மீனாட்சி துணிச்சலாகப் பாத்திரம் தேய்க்க வெளியே ஒரு தொட்டி போடலாம் என்கிறாள். மாமனார் பப்பாஜி எதற்கு என்று கேட்கிறார். சமையலறைத் தொட்டி சிறியது. வெளியில் கொடியில் கட்டியிருக்கும் துணிகள் மலையை மறைக்கிறது என்கிறாள். ஆனால் சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. "மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு. அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்துச் சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும் என்ன சம்பந்தம் பெண்ணே..... முக்காடு அணிய மறுக்கும் ... நிறையப் பேசும் பெண்ணே" என்கிறது மாமனார் பப்பாஜியின் மௌனச் சவால். சந்தேகப்படும் கணவனுக்குத் தன் மௌனத்தாலேயே தண்டனை தருகிறாள் அவன் மனைவி (வல்லூறுகள், சிறகுகள் முறியும்). பெண்ணுரிமை அடிப்படையிலேயே பல கதைமாந்தர்களைப் படைத்திருப்பதை அம்பையின் சிறுகதைகளில் காணலாம்.

6.4.2 கதைப் பொருள்


பெண் உழைப்பும் உரிமையும் சுரண்டப்படுதல், ஒடுக்கப்படும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்படுதல், எதிர்ப்புணர்வைத் தெரிவித்தல் ஆகியன அம்பையின் கதைப் பொருளாக அமைகின்றன. பெண்கள் பற்றிய ஆராய்ச்சி நூலொன்று இவர் எழுதியுள்ளார் என்று முன்னரே பார்த்தோமல்லவா ! அதையொட்டியே பல நுணுக்கமான ஆய்வுகளை இவர் கதைகளில் காணலாம். பெண்ணின் சுதந்திரம் ஆணுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல பெண்களை இவர் கதைமாந்தராகப் படைத்துள்ளார். இளமை முதல் முதுமை வரை, அடுப்படி முதல் ஆகாயம் வரை பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாமல் இருப்பதையும் அவ்வுணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் கதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆணின் அடக்குமுறைக்கு எதிராக, உணர்வுகளைப் பல்வேறுநிலைகளில் பெண் எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதைப் பல சிறுகதைகளுக்குக் கதைப்பொருள் ஆக்கியிருக்கிறார் அம்பை.


6.4.3 உத்தி முறை

சிறுகதைத் தலைப்பிலேயே, கதைக் கருவைப் புலப்படுத்தும் உத்தியை இவருடைய பல சிறுகதைகளில் காணலாம். ‘சிறகுகள் முறியும்’ என்பது பறத்தற்குரிய சிறகுகள் இருந்தும் சுதந்திரம் பறிக்கப்பட்டதன் அறிகுறியாக இடப்பட்ட தலைப்பாகிறது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்கும் பொருந்துவது போல் முறியும் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
கதைக் கருவை உருவகமாக்கித் தலைப்பிலே தரும் உத்தி ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத் தலைப்பில் காணலாம். மான் கொடிய விலங்குகளுக்கு அஞ்சக் கூடியது. அச்சத்துடன் ஓடினாலும் அதற்கென்று ஓர் உலகம் இருக்கிறது. ஒருநாள் தன் கூட்டத்தை விட்டுத் தான் வாழும் காட்டில் ஒரு பகுதியை விட்டு விட்டுப் புதியதொரு பகுதிக்கு வந்து விடுகிறது. எதைப் பார்த்தாலும் புதியதாக இருப்பதால் அஞ்சி அஞ்சி ஓடுகிறது. பிறகு துள்ளித் துள்ளி ஓடி அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்கிறது. அதன் பின்னர் அச்சமின்றி அங்கு வாழ்வதாகச் சொல்லப்படும் இக்கதை ஒரு பெண்ணால் அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த மானைப் போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை அறிந்து கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள். எல்லாக் குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள் என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள் என்பதை உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்.
ஒரே தலைப்பில் (பயணம் 1, பயணம் 2, பயணம் 3) மூன்று சிறுகதைகளைப் படைத்து வேறுபட்ட மூன்று பயண அனுபவங்களைச் சுவைபடச் சொல்கிறார் அம்பை (காட்டில் ஒரு மான்).6.5 தொகுப்புரை

அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பெண்ணிய நோக்கில் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் அம்பையின் சிறுகதைகள் இதுவரை மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. மாத இதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து தன் சிறுகதைப் படைப்புகளை அளித்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள இவர் அந்த ஆய்வு அடிப்படையிலேயே சிறுகதைகள் படைத்து வருகின்றார். பிறப்பதற்கு முன்னரே ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் வாழும் உரிமையில்லாமல் போகிறது. பிறந்த பின்னரோ அவள் உரிமைகளையும் உணர்வுகளையும் ஒடுக்குவதற்கு இச்சமுதாயம் வைத்திருக்கும் சாத்திரங்கள், கோட்பாடுகள் அனைத்தும் அம்பை கதைகளின் களன்களாகின்றன. குடும்பத்தில் தொடங்கிச் சமுதாயம் முடியப் பெண்கள் உரிமையற்று ஒடுக்கப்படுதலும், அந்த உரிமைகளைப் பெறும் முயற்சியில் அவள் ஈடுபடுதலும் அம்பையின் சிந்தனையில் கருக்கொண்டு சிறுகதை வடிவம் பெறுகின்றன.
புராணக் கதைகளைப் புதிய பார்வையோடு நோக்கி அம்பை புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்.
கல்வி அறிவில்லாத கிராமத்துப் பெண் ஆணின் அடக்குமுறைக்கு உட்பட்டு வீட்டு வேலைகள் செய்யும் ஓர் அடிமைபோல்தான் இருக்கிறாள். தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதை அறியாதவளாய் இருப்பதால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். டாக்டர் பட்டம் பெற ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்ணோ அந்த அடக்குமுறைகளினால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகிறாள். வேதனைக்கு உள்ளாகிறவள் ஒடுக்கப் பட்டிருப்பவளின் மகிழ்ச்சியைப் பார்த்து வியப்பதும் அம்பையின் கதைகளில் காணலாம். அறிவியல் தொழில் நுட்பச் சாதனங்களாகிய கணினிகளிலும் ஆணாதிக்க உணர்வு மிக்கிருப்பதை எடுத்துக் காட்டுகிறார் அம்பை. மனித நேய உணர்வினை எடுத்துக் காட்டும் சிறுகதைகளையும் அம்பை படைத்துள்ளார்.
கடலில் பிடித்த மீன்களில் மஞ்சள் மீன் ஒன்று மீனவர் கையிலிருந்து கீழே தப்பியது. அதை மீண்டும் கடலில் கொண்டு போய் விட்டு மகிழ்ச்சியடையும் உயர்ந்த உணர்வையும் அம்பை மஞ்சள் மீன் சிறுகதையில் எடுத்துக் காட்டுகிறார். வெவ்வேறு வகையான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுகிறார் அம்பை. வெவ்வேறு வகையான கதை மாந்தர் படைப்பு அம்பையின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும். ஆணாதிக்கம், அதை உணர்ந்த பெண்களின் எண்ணங்களும், பேச்சும், செயலும் அம்பையின் அனைத்துப் படைப்புகளிலும் எதிரொலிக்கின்றன எனலாம்.தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)
‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
(விடை)
2)
சமையலறையில் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுதல் குறித்த சிறுகதை யாது?
(விடை)
3)
‘வாகனம்’ சிறுகதையில் பெண் இறுதியாகத் தேர்ந்தெடுத்துப் பயிலும் வாகனம் எது?
(விடை)
4)
உளவியல் ரீதியில் படைக்கப்பட்ட சிறுகதை எது?
(விடை)
5)
‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது?
(விடை)