Wednesday, September 24, 2025

 

ஒரு குடும்பம் சிதைகிறது - பைரப்பா
ஒன்று
1
மைசூர் சமஸ்தானத்தின் தும்கூர் ஜில்லாவில் உள்ள தீப்டூர் தாலூகாவைச் சேர்ந்த கம்பனகெரே பிர்க்கா ராமஸந்திர கிராமத்தின் கணக்குப் பிள்ளை ராமண்ணா இறந்த பிறகு அவரது வீட்டில் இருந்தவர்கள் அவருடைய மனைவி கங்கம்மாவும் அவருடைய இரண்டு பிள்ளைகள் சென்னிகராயனும் அப்பண்ணய்யாவும்தான். ராமண்ணா இறந்து அப்போது ஆறு வருடங்களாகி விட்டன. அதாவது விஸ்வேஸ்வரய்யா திவான் பகதூர் பட்டம் பெற்றபோது அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தார். அப்போது அவர் மனைவி கங்கம்மாவிற்கு இருபத்தைந்து வயது. மூத்தவன் சென்னிகராயனுக்கு ஒன்பது வயது. இளையவன் அப்பண்ணய்யாவுக்கு ஏழு வயது. ராமண்ணா இறந்ததிலிருந்து அவருடைய பரம்பரை கணக்குப்பிள்ளை வேலையை கிராம மணியக்காரர் கங்கே கவுடருடைய மைத்துனன் சிவலிங்கே கவுடன் பார்த்து வந்தான். இன்னும் மூன்று வருடங்களில் பதினெட்டு வயதாகி மேஜர் ஆனதும் சென்னிகராயன், தன் னுடைய அப்பாவின் வேலையை ஏற்றுக் கொள்ள வேண்டும். கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்ப்பதென்றால் இலேசா? அதற்கு சரியான படிப்பு வேண்டும். 1ஜைமினியைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்தால் சுவாதீனம், வசூல், விளைச்சல், ஜனத்தொகை கணக்குவழக்குகள் தெரியும். கிராமத்தின் 2 கூலிமடத்து ஆசிரியர் சாதாளிக்கரை சென்னகேசவய்யாவிடம் சென்னிகராயன் கல்வி கற்று வருகிறான்.
.
1. ஜைமினி : கன்னட மொழியில் மகாபாரதம் இயற்றியவர். இங்கு அவரது
நூலைக் குறிக்கிறது.
2.கூலிமடம்: கதை நடந்த காலத்தில் கிராமத்து மடத்தில் கல்வி கற்பிப்பது
வழக்கம்.
2
இரண்டாவது மகன் அப்பண்ணய்யாவுக்கு பதின்மூன்று வயதாகியும் மடத்துக்குப் போகவில்லை. மணலின் மேல் “ஸ்ரீ ஓம்'' என்று எழுதிப் பழக ஆரம்பிக்கவில்லை. "அப்பண்ணா, மடத்துக்குப் போறியா இல்லையா ?" என்று ஒரு நாள் தாய் கோபத்துடன் கேட்டாள். “போகாவிட்டா உனக்கென்னடி கழுதைமுண்டை"- மகன் சீறினான். “ஏண்டா என்னை முண்டைன்னா சொல்றே ? உன் வம்சமே அழிஞ்சு போகுதா இல்லையா பாருடா, தேவடியா மகனே?' என்று சபித்தாள் தாய். “உன் வம்சம்தான் அழிஞ்சு போகும்" என்று மகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியிலிருந்து ' தண்ணீர்க்கார முத்தன் வந்தான். "என்னைக் கழுதைமுண்டைன்னு சொல்றான். இந்தக் கம்ம நாட்டிப் பயலைப் பிடித்துக் கொண்டு போய் சென்னகேசவய்யாவிடம் உட்கார்த்தி விட்டு வாடா, முத்தா” என்று கங்கம்மா உத்தரவிட்டாள். அதைக் கேட்டவுடனேயே அப்பண்ணய்யா வெளியே
வெளியே ஓடிப் போனான். ஆனால் முத்தன் பெரிய ஆள். பத்தே எட்டில் போய் அவனுடைய சிண்டைப் பிடித்து, "அய்யய்யோ" என்று அவன் கத்தியதைப் பொருட்படுத்தாமல் இழுத்து வந்து கங்கம்மாவின் முன்பு அவனை நிறுத்தினான். "இந்த தேவடியா மகனை ரெண்டு உதைத்து இழுத்துக் கொண்டு போ”-என்று அவள் கட்டளை யிட்டாள். ஆனால் பிராமணப் பையனை எப்படி உதைப்பது? அப்படி செய்தால் கால் புழுத்துப் போகும் என்பது முத்தனுக்குத் தெரியாதா? அவன் அப்பண்ணய்யாவின் தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.
சிறியவன் போன பிறகு கங்கம்மாவுடைய பார்வை வீட்டிலிருந்த பெரிய மகன் மீது திரும்பியது. 'டேய், சென்னி ஹொன்னவள்ளிக்குப் போய் சீதாராமையாவிடம் கணக்குப் படின்னு எத்தனை தடவை அடிச்சுக்கிறது? நாளைக்குப் போறியா? இல்லை தடி எடுத்து உன்னை ரெண்டு தட்டு தட்டவா?'' "என் விவகாரத்துக்கு வந்தா அம்பட்டன் ருத்ரனைக் கூட்டி வந்து உன் தலையை மொட்டையடிக்கிறேன்'' - தூண் மறைவிலிருந்த பெரிய மகன் உறுமினான். "உன் அப்பன் செத்துப் போன போதே என் தலையை மொட்டை அடிச்சாச்சு. பெத்த அம்மாவை இப்படிச் சொன்னா உன் நாக்குப் புழுத்துப் போகும் முண்டைப் பயலே''.
ஹான்னவள்ளி, ராமஸந்திர கிராமத்திலிருந்து பதினெட்டு மைல் தூரத்திலுள்ள கிராமம். இரண்டும் ஒரே தாலூக்காவைச் சேர்ந்தவையென்றாலும் பிர்க்கா வேறு, வேறு. ராமஸந்திர, கம்பனகெரே பிர்க்காவிலிருந்தாலும் ஹொன்னவள்ளி முக்கிய
3. தண்ணீர்க்காதன்: வயலில் நீர் பாய்ச்சுவது போன்று எடுபிடி வேலை செய்பவன்.
ஒன்று
3
மான இடம். முன்பு தாலூகாபீஸ் இருந்த இடம். ஹொன்னவள்ளி தாலூகாவானதிலிருந்து சீதாராமையா கஸ்பா கணக்குப்பிள்ளை யாக இருக்கிறார். கணக்கு வழக்கில் கெட்டிக்காரர் மட்டுமல்ல, அதிகாரிகளையே ஆட்டி வைப்பார். அவரிடம் கணக்குப் படித்த எவனும் கணக்குப்பிள்ளைத் தொழிலை ஜமாய்த்து விடலாம். இப்படித்தான் அரிசிகெரே, கண்டசி, ஜாவகல்லு முதலிய ஊர் மணியக்காரர், கணக்குப்பிள்ளைகள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சீதாராமையாவின் கீழ் பாடுபட்டுப் படிப்பது என்றால்
சாதாரணமல்ல. பாராவுக்குத் தலைப்பெழுதி சிவப்பு மையில் கோடு போடுவதைத் தெரிந்து கொள்வதற்குள்ளாக அவருடைய ரூல்தடியால் நூறு அடி வாங்க வேண்டும். ஆயிரம் உளி அடி விழாமல் சிலை எப்படி வரும்? என்று வாத்தியாரைப் போல அவரும் சொல்கிறார்.
இந்தப் பையன்களின் போக்கைப் பார்த்து கங்கம்மாவின் மனம் குமுறியது. அழுகை வருவது போல் ஆகி கண்களில் உள்ள நீரைத் துடைத்துக் கொண்டாள். “அக்கம்பக்கத்து வீட்டுப் பசங்க அம்மாவைக் கண்டா எப்படிப் பதறுது ? இந்த முண்டங் களுக்கு வரக்கூடாத ரோகம் என்ன வந்திருக்கு? என் தலையெழுத்து” என்று ஒருமுறை அழுதாள். எழுந்து நேராக சமையலறைக்குள் சென்று இரும்புத்துண்டை அடுப்புக்குள் வைத்தாள். மதியத்துக்கு மேல் மூன்று மணியாகி விட்டதால் அடுப்பில் தணல் இருக்கவில்லை. எரிந்து போன தேங்காய் மட்டை சாம்பலாகும் நிலைக்கு வந்திருந்தது. அம்மா தனக்கு சூடு போடு வதற்குத்தான் இரும்புத்துண்டை சூடாக்குகிறாள் என்பது பதினைந்து வயது மகனுக்குத் தெரிந்தது. அவன் ஒரு முறை கழுதைமுண்டை, மொட்டைமுண்டை,” என்று ஒரே மூச்சில் கத்தி விட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிப் போனான். இனிமேல் அவனைப் பிடிப்பது முடியாது என்று கங்கம்மாவுக்குத் தெரியும். ஆனால், அவள் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டாள். 'இந்தக் கம்மனாட்டிப் பயல்களை ஒரு கட்டுக்குள் எப்படிக் கொண்டு வருவது” என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள். இரும்புத் துண்டு அடங்கிப் போன தணலுக்குள்ளேயே சிறிது சிறிதாகச் சூடேறிக் கொண்டு இருந்தது.
"
போது
திருமணமாகி கங்கம்மா அந்த வீட்டுக்கு வந்த பதின்மூன்று வயதுப் பெண். கணவனுக்கு நாற்பத்தைந்து வயது. முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. கடைசியில் அவளும் இறந்தாள். முதல் தாரம்
தாரம் கங்கம்மா
4
-
பக்கத்துப் பெண்தான் - அதாவது ஜாவகல்லு கிராமத்தைச் சேர்ந்தவள். அந்தத் தொடர்பினால்தான் ராமண்ணாவுக்கு கங்கம்மாவைக் கொடுத்தார்கள். ராமஸந்திர கிராமத்தையும் சேர்த்து மூன்று கிராமத்துக் கணக்குப்பிள்ளை வேலை. ஆறு ஏக்கர் நன்செய் வயல், எட்டு ஏக்கர் புன்செய் பூமி, முன்னூறு தென்னைமரம், வீட்டில் பாத்திரம் பண்டம், தங்கம் வெள்ளி— இத்தனை உள்ள அவருக்கு யார்தான் பெண் கொடுத்திருக்க மாட்டார்கள்? முதலில் இருந்தே ராமண்ணா சாதுவான ஆள் என்று ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள். பசுவைப் போல சாது. இளங்கன்றைப் போல
சாது. ஆனால் கங்கம்மா பெண்புலி- என்று ஜனங்கள் சொல்வதுண்டு. இது காதில் விழுந்தபோது
“இந்த ஜனங்களை செருப்பால் அடிக்க வேணும்” என்று அவள் சொல்வதுண்டு. ஆனால் இந்த“மொட்டச்சிப் பிள்ளைகளுக்கு புத்தி வர வைக்க வேணும், இல்லாவிட்டா நான் ஜாவகல்லுப் பெண்ணே அல்ல. இந்த இரும்புத்துண்டு இங்கேயே இருந்து சூடாகட்டும். சாயங்காலம் பலகாரம் சாப்பிட எப்படியும் வர வேணுமே! அப்போது கால் மேலே, கன்றுக் குட்டிக்கு இழுத்தாற் போல் ரெண்டு இழுக்கிறேன். கன்றுக் குட்டிக்கு சூடு இழுக்கா விட்டா எங்கே சொன்ன பேச்சு கேக்குது? மாட்டுக்கார பேலூரான் சூடு போடாவிட்டா மாட்டுக்கு ஜன்னி வரும்னு சொல்றான். அதெல்லாம் பொய். சொன்ன பேச்சு கேக்க வேணும். இல்லாவிட்டா சூடு இழுக்கலாம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே சூடான இரும்புத்துண்டு பிடியை தன்னுடைய சிவப்பு முந்தானையால் ஒரு முறை புரட்டி மறுபடியும் சூடான தணலில் தள்ளினாள்.
அதற்குள் வீட்டின் ஓட்டு மேலே யாரோ மெதுவாக திருட்டுத்தனமாக நடப்பது போல் தோன்றியது. 'இந்தப் பட்டப் பகலில் திருட்டுப் பயலுக ஏன் வர்றானுக? குரங்கு திம்மண்ணன் வந்திருப்பான். தோட்டத்து இளநீரை விட்டு ஊருக்குள் வர தைரியம் வந்திட்டதா? இந்த முண்டச்சிப் பயலுக்கு'-என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே காலடிகள் அவளுடைய தலைக்கு நேராக வருவது போலத் தோன்றியது.
“உன் வீடு பாழாய்ப் போகட்டும்” என்று சொல்வதற்கு வாயெடுத்தவள், "அய்யோ, ஆஞ்சனேய சாமியின் சொரூபம் அல்லவா. கெட்ட பேச்சு பேசினா சாபம் கிடைக்கும்" என்று உடனே நாக்கைக் கடித்துக் கொண்டு தலையைத் தூக்கி மேலே பார்த்தாள். யாரோ மேலேயிருந்து ஒரே சமயத்தில் இரண்டு தடிகளால் ஓடுகளை அடித்து உடைப்பது போல் இருந்தது.
பதினைந்து இருபது ஓடுகள் உடைந்து சுக்கு நூறாகி அவளுடைய தலை மேலும், முகத்தின் மேலும் விழுந்தன. இதுகளோட வீடு பாழாய்ப் போகட்டும்” என்று அவள் சத்தம் போட்டதும், ‘அதோ இருக்கா ! இன்னுமொரு நாலு தடவை போட்டு விளாசு அப்பண்ணய்யா” என்று சென்னிகராயன் மேலிருந்து சொன்னது கேட்டது. அண்ணன் தம்பி இருவரும் கையில் இருந்த உலக்கையினால் அவளுடைய தலைக்கு மேலிருந்த ஒடுகளின் மேல் தங்களுடைய கைவரிசையைக் காட்டினார்கள் "தேவடியாப் பிள்ளைகளா ! மணியக்காரர் சிவே கவுடரிடம் சொல்லி உங்களைத் தொலைச்சுக் கட்டறேன்” என்று சொல்லிக் கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினாள்.
·
“சிவே கவுடரைக் கூப்பிட்டு வர்றாளாம் சென்னையா,' என்று அப்பண்ணய்யா அண்ணனை எச்சரித்தான். இருவரும் உலக்கைகளை அப்படியே போட்டு விட்டு கூரையின் பிற்பகுதி வரை ஓடிப் போய் அங்கிருந்து சாக்கடையைத் தாண்டிக் குதித்து ஓட்டம் பிடித்தனர்.

Friday, September 19, 2025



அந்தோன் சேகவ் - ம. கோர்க்கி

==========================

முன்பு ஒரு நாள் என்னை அவர் குச்சூக்-கோய் கிராமத் துக்கு வருமாறு அழைத்திருந்தார்; அங்கே அவருக்கு ஒரு சிறு

கொல்லையும் அதில் இரண்டடுக்குகளில் வெண் ணிற வீடு ஒன்றும் இருந்தன. தம்முடைய இந்தப் “பண்ணையை’* எனக்குக் காட்டிச் சென்ற போது, உற் சாகமும் விறுவிறுப்பும் மிக்கவராய் அவர் சொன்னார்:

“என்னிடம் பணம் நிறைய இருக்குமானால், நோயால் நலிவுற்ற கிராமப் பள்ளி ஆசிரியர்களுக்காக இங்கே உடல் நல விடுதி ஒன்று கட்டுவேன். வெளிச்சமாய் இருக் கும் தெரியுமா? பெரிய பெரிய சன்னல்களும் நல்ல உயர மான மச்சுத் தளங்களும் கொண்டு ஒரே வெளிச்சமாய் இருக்கும்படிக் கட்டுவேன். அதில் அருமையான நூலகமும் பல விதமான இசைக் கருவிகளும் இருக்கும், தேனீ வளர்ப் பிடமும் காய்கறித் தோட்டமும் கனிச் சோலையும் அமைத் திடுவேன். வேளாண்மை விஞ்ஞானம், வானிலை ஆய்வு— இப்படிப் பலவும் குறித்து விளக்க உரைகளுக்கு ஏற்பாடு செய்வேன். பள்ளிக்கூட ஆசிரியர்களாய் இருப்போர் எல்லாம் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். ஆமாம், எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்!’’

திடுமெனப் பேச்சை நிறுத்திவிட்டு இருமினார், பிறகு கடைக் கண்ணால் என்னை நோட்டமிட்டார், அவருக்குரிய

* அவரது இறுதி ஆண்டுகளில் சேகவ் காச நோய் வாய்ப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, கிரீமியாவில் கருங் கடற்கரையின் கண் யால்தா என்னும் இடத்தில் தங்கியிருந்தார். யால் தாவில் அவர் கட்டிக்

காண்ட இந்த வீட்டில் 1899லிருந்து 1904 வரை வசித்து வந்தார். இப்போது இந்த வீடு சேகவ் நினைவுக் காட்சியகமாய் இருந்து வருகிறது.—(பதிப்பாசிரியர்).

11

அந்த மென்மை வாய்ந்த இனிய புன்னகை அவரது முகத் தில் தவழ்ந்தது—எதிர்த்து நிற்க முடியாதபடி எவரை யும் அவர் பால் கவர்ந்து இழுத்து, அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்கச் செய்யும்படியான புன்னகை அது.

‘“உங்களுக்கு எனது ஆசைக் கனவுகளைக் கேட்க அலுப் பாகவா இருக்கிறது? ஆனால் நான் இதைப் பற்றிப் பேசப் பிரியப்படுகிறவன். கூர்மதியும் கல்விஞானமும் உடைய நல்ல ஆசிரியர்கள் ருஷ்யக் கிராமங்களுக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள், தெரியுமா? விரிவான கல்வி மக் களுக்குக் கிடைத்தாக வேண்டும், இல்லையேல் அரசானது அரை வேக்காட்டுக் கற்களைக் கொண்டு கட்டிய வீட்டைப் போல் இடிந்து விழவே செய்யும்! இதைப் புரிந்து கொள் வோமானால், ருஷ்யாவில் பள்ளி ஆசிரியர்களுக்கு எப்படி யாவது தனிச் சிறப்பான நிலைமைகள் கிடைக்கச் செய் தாக வேண்டும், அதுவும் உடனே அவசரமாய்ச் செய்தாக வேண்டும் என்பது விளங்கும். ஆசிரியராய் இருப்பவர் கலை வாணராய், இலக்கிய விற்பன்னராய் இருத்தல் வேண்டும்; தமது பணியில் அடங்காத ஆர்வம் கொண்டவராய் இருத் தல் வேண்டும். ஆனால் நம்மிடம் இருப்பவர் தேர்ச்சித் திறனில்லாத மூட்டைத் தூக்கியாய், அறைகுறைக் கல்வி கற்றவராய் இருக்கிறார். குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதற்காகக் கிராமத்துக்குப் போகும் இவர், கடத்தல் தண்டனை பெற்றுக் கடின உழைப்புக்காகத் தொலைவிடத்துக்குச் செல்லும் கைதிக்கு இருக்கக் கூடிய அதே அளவு உற்சாகத்துடன்தான் புறப்பட்டுப் போகி றார். கிராமத்திலே பட்டினி கிடக்கிறார், அடக்கி ஒடுக்கப் படுகிறார், பிழைக்க வழி இல்லாமற் போய்விடும் அபாயம் அவரை அச்சுறுத்துகிறது. ஆசிரியராய் இருப்பவர் கிராமத்திலே முதலாமவராய் இருத்தல் வேண்டும்; விவ சாயிகள் அவரிடம் கேட்கும்படியான எல்லாக் கேள்வி களுக்கும் பதிலளிக்க வல்லவராகவும், சக்தி வாய்ந்தவர் என்றும் எல்லோரது கவனத்துக்கும் மதிப்புக்கும் உரியவர் என்றும் விவசாயிகளால் போற்றப்படுகிறவராகவும் இருத் தல் வேண்டும். அவரைப் பார்த்துக் கத்துவதற்கு... அவரை அவமானப் படுத்துவதற்கு எவரும் துணிய முடி யாதபடி அல்லவா இருக்க வேண்டும் ஆனால், நம் நாட்டில்

12

துணிச்சலுடன் அல்லவா இதைச் செய்கிறார்கள் எல்லா ரும்-கிராமப் போலீஸ்காரர், பணக்காரக் கடைக்காரர், பாதிரியார், காவல் துறை அதிகாரி, பள்ளிக்கூடத் தர் மகர்த்தா, கிராம மூதாளர், பிறகு பள்ளிக்கூட இன்ஸ் பெக்டர் என்பதாகச் சொல்லிக் கொண்டு கல்வி நிலையை மேம்படுத்துவதில் கவலை கொள்ளாமல் மா வட்டச் சுற்றறிக்கைகளை அப்படியே எழுத்துக்கு எழுத்து செயற் படுத்துவதில் முனைந்துவிடும் அந்த அதிகாரி ஆகிய எல் லாரும் இதைத்தானே செய்கிறார்கள். ஆசிரியரானவர் மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டுகிறவர்—புரிகிறதா உங் களுக்கு?-மக்களுக்குக் கல்வியறிவு ஊட்டுகிறவர்! இவ ருக்கு இப்படிக் கஞ்சத்தனமாய் அற்ப ஊதியம் அளிப்பது எப்படிப்பட்ட மடமை! இம்மாதிரியான மனிதர் கந்தல் அணிந்து செல்கிறார்; இடிந்து போய் வெதுவெதுப்பின்றி ஈரமாய் இருக்கும் பள்ளிக்கூடங்களில் குளிர் தாங்காமல் நடுங்குகிறார்; சரிவர அமையாத கணப்படுப்பின் புகையிலே திணறுகிறார்; எந்நேரமும் அவருக்கு நீர்க்கோவை, முப்பது வயதுக்கெல்லாம் குரல்வளை அழற்சி, கீல்வாதம், காசம்... சகிக்க வொண்ணாத நிலைமை! நமக்கு வெட்கக்கேடு! ஆண் டில் எட்டு, ஒன்பது மாதங்களுக்கு நமது ஆசிரியர் குகை யிலே உறையும் துறவியைப் போல் வாழ்கிறார்—பேசு வதற்கு ஆள் யாரும் இல்லை, புத்தகங்கள் இல்லை, பொழுது போக்குகள் இல்லை, தனித்திருந்து அசடர் ஆகின்றார்!.. தம்மிடம் வருமாறு நண்பர்களை அழைத்து உறவாடத் துணிவாராயின், சந்தேகத்துக்குரிய பேர்வழியாகக் கருதப் படுகிறார். ஆம், சந்தேகத்துக்குரியவர்

,



மூடர்களை மிரட்டுவதற்காகத் தந்திரக்காரக் கயவர்கள் கையாளும் அபத்தச் சொல்!... வயிற்றைப் புரட்டுகிறது... ஒருவகை அபசாரமே அன்றி வேறல்ல, மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மகோன்னதப் பணியாற்றும் மனிதருக்குப் புரியப்படும் அபசாரம். ஆசிரியரை நேருக்கு நேர் சந்திக் கையில் எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? நெஞ்சு குறுகுறுக்கிறது, அவரது பயந்த சுபாவத்துக்காகவும் அவந்தரையான கோலத்துக்காகவும் உள்ளுக்குள் எனக்குச் சங்கடமாய் இருக்கிறது, ஆசிரியரது இந்த அவல நிலைக்கு எப்படியோ நான்தான் காரணம் என்பது போன்ற குற்ற

13

உணர்ச்சி என் மனத்தை உறுத்துகிறது... வேடிக்கையல்ல, உண்மையைச் சொல்கிறேன்!”

ஆலோசித்தவாறு கணப் பொழுது மௌனமாய் இருந்தபின் கையை வீசிக் காட்டி மெல்லிய குரலில் கூறினார்:

"எவ்வளவு அபத்தமான, அலங்கோலமான நாடு- நமது இந்த ருஷ்யா!'*

அவரது அன்பு கெழுமிய கண்களின் மீது ஆழ்ந்த சோகம் கரு நிழலெனப் படர்ந்தது. மெல்லிய பின்னல் களாய் அந்தக் கண்களைச் சுற்றிலும் சுருக்கங்கள் தோன்றி, அவருடைய பார்வையை ஆழமாக்கின. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவர் தம்மைத் தாமே கிண்டல் செய்து கொண்டார்:

"பாருங்களேன், மிதவாதச் செய்தியேட்டிலிருந்து தலையங்கக் கட்டுரையை அப்படியே முழுமையாய் உங் களிடம் சொல்லித் தீர்த்து விட்டேன். போகலாம் வாங்க, பொறுமையாகக் கேட்டதற்காக உங்களுக்குத் தேநீர் தருகிறேன்...'

அடிக்கடி அவர் இப்படிச் செய்வது வழக்கம்: ஆர்வ மும் உருக்கமும் உளமார்ந்த முனைப்பும் மிக்கவராகப் பேசிக் கொண்டிருப்பார், பிறகு திடுமெனத் தம்மையும் தாம் பேசிய பேச்சையும் கேலி செய்து நகை புரிந்து கொள்வார். அவரது இந்த மென்மை வாய்ந்த, துயரம் தோய்ந்த நகைப்பானது, சொற்களின் மதிப்பை, கனவு களின் மதிப்பை அறிந்த ஒருவருக்கு உரித்தான நுட்பம் மிகுந்த அந்த ஐயப்பாட்டினை நமக்கு உணர்த்தும். அதோடு உள்ளங் கவரும்படியான தன்னடக்கமும் அரிய உணர்ச்சி நயமும் இந்த நகைப்பில் கலந்திருப்பதைக் காண முடியும்...



பேசாமல் மௌனமாய் நாங்கள் வீட்டுக்குத் திரும்பி நடந்தோம். பிரகாசமான, வெதுவெதுப்பான நாள் அது. கதிரவனது ஒளியில் அலைகள் பளிச்சிட்டு விளையாடி இரைந் தன. குன்றின் அடிவாரத்தில் நாய் ஒன்று எதைப் பற்றி யோ மகிழ்ச்சி கொண்டு கீச்சுக் குரல் எழுப்பிக் கொஞ்

* அக்காலத்திய ஜாரிஸ்டு ருஷ்யாவைப் பற்றி இவ் வாறு கூறினார் சேகவ்.—(பதிப்பாசிரியர்).

14

சிற்று. சேகவ் என் கரத்தைப் பற்றிக் கொண்டு இரு மலுக்கு இடையே மெல்லக் கூறினார்:

“வெட்ககரமானது, சோகம் வாய்ந்தது, ஆயினும் இதுதான் உண்மை: நாயைப் பார்த்துப் பொறாமைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் மிகப் பலரும்...

66

,,

உடனே புன்சிரிப்பு சிரித்தபடி மேலும் சொன்னார்:

"இன்று நான் பேசுகிற பேச்சு எல்லாம் கிழடு தட்டிய பேச்சாய் இருக்கிறது... கிழவனாகி வருகிறேன்!’”

அடிக்கடி அவர் என்னிடம் கேட்பார்:

66

'இதைக் கேளுங்கள், ஆசிரியர் ஒருவர் வந்திருக் கிறார்... நோய் வாய்ப்பட்டவர், மணமானவர்—அவருக்கு உதவ வழி உண்டா? நீங்கள் ஏதாவது செய்ய முடியுமா? தற்போதைக்கு அவருக்கு ஏதோ ஏற்பாடு செய்திருக் கிறேன்...'

இல்லையேல்:

“கோர்க்கி, கேளுங்கள் இதை: ஆசிரியர் ஒருவர் உங் களைப் பார்த்துப் பேச விரும்புகிறார். அவரால் எழுந்து வருவதற்கில்லை, படுத்த படுக்கையாய் இருக்கிறார். நீங் கள் போய் அவரைப் பார்க்கிறீர்களா?”

இல்லையேல்:

"புத்தகங்கள் அனுப்பி வைக்கும்படி இதோ சில ஆசிரியைகள் கேட்கின்றார்கள்...”

சில சமயம் அவர் வீட்டில் இந்த “ஆசிரியர்’” இருக்கக் காண்பேன்: வழக்கம் போல் இவ்வாசிரியர் தமது எக்கச் சக்கமான நிலைமையை உணர்ந்து அதனால் முகம் சிவந்து போய்,தடங்கலின்றிக் “ கல்விஞானத்துடன்' பேச வேண்டு மென்ற முயற்சியால் வியர்த்து விருவிருத்த நிலையில், நாற் காலியின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு பாடுபட்டுச் சொற் களைத் தேடிப் பிடித்துப் பேசுவார்; அல்லது பிணியெனச் சொல்லத்தக்க அளவுக்குக் கூச்சம் கொண்டவருக்கு உரிய மிதமிஞ்சிய அன்னியோன்னியத்துடன் பேச முயன்று, எழுத்தாளரின்

கண்ணுக்கு அசடாகப் பட்டு விடக் கூடாதே என்ற

விருப்பத்தில் ஏனைய யாவற்றையும் மறந்தவராய் அந்தோன் பாவ்லவிச்சைப் பார்த்துக் கேள் விக்கு மேல் கேள்வியை அடுக்கிச் செல்வார்; அனேகமாய்

15

எல்லாம் திடுமென அந்தக் கணத்தில் அவர் மனத்துள் உதித்த கேள்விகளாகவே இருக்கும்.

அந்தோன் பாவ்லவிச் தாறுமாறான அந்தப் பேச்சைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார், துயரச் சாயல் படிந்த அவரது கண்கள் பளிச்சிட்டுப் புன்னகை புரிந்து, கன்னப் பொட்டுகளில் உள்ள சுருக்கங்களைச் சிலிர்க்கச் செய்யும். ஆழமும் மென்மையும் கனிவுமுடைய அவரது குரலில் பிறகு அவர் பேச ஆரம்பிப்பார். அவருடைய சொற்கள் எளிமை வாய்ந்த தெளிவான சொற்களாய், வாழ்க்கையுடன் நெருங்கிய பிணைப்பு கொண்டவையாய் இருக்கும். அவரைப் பார்த்துப் பேச வந்தவரை இந்தச் சொற்கள் உடனே நிம்மதியடைய வைத்து இயல்பான நிலைமைக்குத் திரும்பி வரச் செய்யும். கெட்டிக்காரராய் இருக்க வேண்டுமென்ற முயற்சியை ஆசிரியர் விட்டொ ழித்து விடுவார், இதனால் உடனே அவர் கெட்டிக்காரராய் மட்டுமன்றிச் சுவையானவராகவும் மாறி விடுவார்...

இந்த ஆசிரியர்களில் ஒருவர் என் நினைவுக்கு வரு கிறார்—நெட்டையான, ஒல்லியான மனிதர், ஒட்டி உலர்ந்த முகமும் சோர்வுடன் தாடையை நோக்கிக் கவிழ்ந்த நீளமான கிளி மூக்கும் கொண்டவர். அந்தோன் பாவ்லவிச்சுக்கு எதிரே அமர்ந்து, அசங்காத கரிய விழி களால் அவரது முகத்தை உற்றுப் பார்த்தவாறு தொண தொணக்கும் அடித் தொண்டைக் குரலில் அவ்வாசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார்:

"கல்வி போதனைக் காலம் முழுமையிலும் வாழ்நிலை யிலிருந்து வரப்பெறும் இவ்வித மனப்பதிவுகள் குவிவு பெற்று, அந்த மாதிரியான மனோதத்துவக் கலப்படத் திரட்சியாய் உருவாகி, சுற்றிலும் உள்ள உலகினை எதார்த்தப் போக்குடன் அணுகுவதற்கு அறவே வழி இல்லாதபடிச் செய்து விடுகிறதே. உலகம் என்பது அதைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கருத்துருவமே தவிர வேறு என்ன...'

இங்கே அவர் தத்துவஞானத் துறையினுள் நுழைந்து, குடிமயக்கம் கொண்ட நிலையில் பனிக்கட்டியில் அடி யெடுத்து வைத்தவரைப் போல் வழுக்கியடித்துக் கொண்டு சென்றார்.

16

66

'அது சரி, இதைச் சொல்லுங்கள்” என்று தணிவான குரலில் அன்புடன் கேட்டார் சேகவ். "உங்களுடைய மாவட்டத்தில் மாணாக்கர்களை அடிக்கிறாராமே ஒருவர், யார் அவர்?'’

நாற்காலியிலிருந்து ஆசிரியர் துள்ளி எழுந்து ஆவேச மாகக் கைகளை வீசினார்.

‘‘என்ன? நானா? இல்லவே இல்லை! அடிப்பதாவது?'' பொறுக்க மாட்டாதவராய்ப் பொருமினார்.

66

'நீங்கள் கிளர்ச்சியடையக் கூடாது” என்று அவர் அமைதியடையும் வண்ணம் புன்னகை புரிந்தவாறு, தொடர்ந்து கூறினார் அந்தோன் பாவ்லவிச். “நீங்கள் செய்ததாகவா சொன்னேன்? செய்தியேட்டில் படித்ததாய் எனக்கு ஞாபகம், யாரோ ஒருவர் அடித்தாராம், உங்கள் மாவட்டத்தில்..."

ஆசிரியர் தமது இருக்கையில் அமர்ந்து, வியர்த்து விட்ட முகத்தைத் துடைத்தவாறு நிம்மதியுடன் பெரு மூச்சு விட்டு அடித் தொண்டைக் குரலில் கூறினார்:

"மெய்தான்! அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது. அவர் பெயர் மக்காரவ். என்னைக் கேட்டால் இதில் ஆச் சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை! அக்கிரமம்தான், ஆனால் புரிந்து கொள்ளக் கூடியது. அவர் மணமானவர், நான்கு குழந்தைகள், மனைவியோ நோயாளி, அவருங்கூட உடல் நலம் இல்லாதவர்தான்—காசத்தால் துன்புறுகிறார். அவ ருக்குக் கிடைக்கும் சம்பளம் இருபது ரூபிள்... பள்ளிக் கூடம் கிடங்கு போன்றது, ஆசிரியர்களுக்கு இருப்பது ஒரேயொரு அறை. இம்மாதிரியான நிலைமைகளில், குற் றங் குறையற்ற தேவதூதனையுங்கூட அடிக்கவே தோன் றும். ஆனால் மாணாக்கர்கள் தேவதூதர்களைப் போன்றவர் கள் அல்லர்,-உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்!"

கணப் பொழுதுக்கு முன்பு சிறிதும் இரக்கம் இல்லாத வராய், தாம் அறிந்த பிரமாதமான சொற்களை எல்லாம் சேகவ் திகைப்புறும்படி எடுத்தாள முயற்சி செய்த இம் மனிதர், திடுமென இப்போது காண்போர் கலங்கும்படித் தமது நீளமான கிளி மூக்கை ஆட்டியசைத்துக் கொண்டு, எளிமையிலும் எளிமையான, கல்லாய்க் கனக்கும் சொற் களில் பேசினார்—அவரது இந்தச் சொற்கள் ருஷ்யக்

2-699

17

கிராமத்தில் நடைபெறும் வாழ்க்கையின் கேடுகெட்ட, பயங்கர உண்மையைத் தெட்டத் தெளிவாகத் தெரியச் செய்தன...

விடை பெற்றுக் கொள்ளுகையில் அந்த ஆசிரியர் மெல் லிய விரல்களுடன் சிறிதாய் இருந்த சேகவின் உலர்ந்த கையைத் தமது இரு கைகளாலும் பிடித்து அழுத்தியவாறு கூறினார்:

"மேலிடத்தவரைப் பார்க்க வருவது போல் கூச்சப் பட்டுக் கொண்டும் நடுங்கிக் கொண்டும் உங்களிடம் வந் தேன், நானும் கொஞ்சம் மதிக்கத் தக்கவன்தான் என்று காட்டிக் கொள்ள விரும்பி வான்கோழிச் சேவலைப் போல் பகட்டாய் ஆடினேன்... அருமையான ஒருவரிடமிருந்து, யாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடிய நெருங்கிய ஒரு வரிடமிருந்து செல்வது போல இப்பொழுது விடை பெற்றுக் கொண்டு புறப்படுகிறேன். யாவற்றையும் புரிந்து கொள்வது என்பது

மகத்தானது! நன்றி உங்களுக்கு! போய் வருகிறேன். பெரியோராய் இருப்போர் எளிமை யாய் இருக்கின்றார்கள், புரிந்து கொள்கிறார்கள், நாங்கள் யார் மத்தியிலே வாழ்கிறோமோ அந்தச் சின்னப் பிறவி களைக் காட்டிலும் உள்ளத்தால் எங்களுக்கு நெருங்கிய வர்கள் என்ற அரும் பெரும் எண்ணத்துடன் புறப்படு கிறேன். வணக்கம், எந்நாளும் உங்களை மறக்க மாட் டேன்...'

99

அவரது மூக்கு அதிர்ந்து சிலிர்த்தது, உதடுகள் அன்பு நிறைந்த புன்னகையால் மலர்ச்சியுற்றன. எதிர்பாராத விதமாய் அவர் மேலும் சொன்னார்:

"சரிவரச் சொன்னால் இந்தச் சின்னப் பிறவிகள் பாக் கியமில்லாத ஆட்களும் ஆவர்—நாசமாய்ப் போக!''

புறப்பட்டுச் சென்ற அவரைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறு அந்தோன் பாவ்லவிச் புன்னகை புரிந்து கொண்டார். பிறகு அவர் கூறினார்:

66

அருமையானவர், ஆனால் அதிக காலத்துக்கு ஆசிரி யராய் நீடிக்க மாட்டார்...”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’

“விரட்டியடித்து விடுவார்கள்... தொலைத்துக் கட்டி விடுவார்கள்.”

18

சற்று நேரம் மௌனமாய் இருந்துவிட்டு, மிருதுவான மெல்லிய குரலில் மேலும் கூறினார்:

'ருஷ்யாவில் நேர்மையானவர் எவரும் சிறு குழந்தை களுக்குப் பூச்சாண்டி காட்டுவதற்காகத் தாதிகளுக்குப் பயன்படும் ஆளைப் போன்றவர் ஆவர்....”

பல

அந்தோன் பாவ்லவிச்சுக்கு முன்னால் இருக்கையில் அதிக எளிமை வாய்ந்தோராய், மெய்யானவர்களாய், எந்த வேடமும் இன்றித் தமது சுய சொரூபத்தில் இருக்க வேண்டுமென்ற விருப்பம் எல்லாருக்கும் அவர்களை அறி யாமலே ஏற்பட்டதாகத் தோன்றுகிறது எனக்கு. ரும் அவர் முன்னால் தமது ஜோடனைகளைக் களைந்தெறிந் ததை நான் பல சந்தர்ப்பங்களில் கவனித்து வந்தேன். காட்டில் வாழும் குடிகள் கிளிஞ்சிகளையும் மீன் பற்களை யும் அணிந்து அழகுபடுத்திக் கொள்வது போல ருஷ்யர் கள் தம்மை ஐரோப்பியர்களாகக் காட்டிக் கொள்வதற் காக உபயோகித்த ஜோடனைகளாகிய ஆடம்பரமான புத்தகச் சொற்களையும் புதுப் பாணியிலான தொடர்களை யும் மலிவான ஏனைய பல அற்பங்களையும் உதறி எறிந்த தைக் கண்டு வந்தேன். மீன் பற்களிலும் பறவை இறகு களிலும் விருப்பம் கொண்டவரல்ல அந்தோன் பாவ்ல விச். மினுமினுக்குகிறவை, கிணுகிணுக்குகிறவை, அன் னியமானவை யாவும், “மேன்மைச் சிறப்புக்காக” மனி தர்கள் தரித்துக் கொள்கிறவை எல்லாம், அவருக்கு அரு வருப்பையே உண்டாக்கின. பகட்டான ஆடம்பரக் கோலம் பூண்டவரை அவர் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், உதவாத வெற்றுச் சுமையாய் வருத் திய இந்த அணிமணிகளிடமிருந்து, பேசுகிறவரது உண் மை உருவையும் உயிருள்ள ஆன்மாவையும் குலைத்திட்ட இவற்றிலிருந்து, அம்மனிதரை விடுவிக்க வேண்டுமென்ற அடங்காத ஆவல் அவருள் எழக் கண்டேன். வாழ்நாள் முழுதும் அந்தோன் பாவ்லவிச் தமது ஆன்மாவின் வழிப் படி வாழ்ந்தவர்; எப்போதுமே அவர் அவராகவே, அகச் சுதந்திரமுடையவராய் இருந்தவர் அந்தோன் சேகவ், அவரிடமிருந்து சிலர் எதிர்பார்த்ததையும், நயங் குறைந்த ஏனைய சிலர் ஆணவமாகக் கோரியதையும் கவனியாது

2*

19

புறக்கணித்தவர்.

.99

“உன்னதமான' உரையாடல்களை, அவர் விரும்பியதில்லை-தற்போது அணிந்து கொள்ள உருப்படியான ஆடை ஒன்றேனும் இல்லாத நிலையில், வருங்காலத்துக்கு உரிய பட்டு ஆடை குறித்துப் பேசுவது அபத்தமே அன்றி வேடிக்கை அல்ல என்பதை மறந்து, அப்பாவிகளான ருஷ்யர்கள் அவ்வளவு உற்சாகமாய் ஈடுபட்டுக் களிப்புறும் இந்த உரையாடல்கள் அவருக்குப் பிடிக்காதவை.

இன்னரும் எளிமை வாய்ந்தவரான அவர் எளிமை யானவை, உண்மையானவை, நேர்மையானவை யாவற் றையும் நேசித்தார். ஏனையோரையும் எளிமை வாய்ந்த வர்களாய் ஆக்குவதற்கு அவர் தமக்குரிய சொந்த வழியைக் கடைபிடித்து வந்தார்.

கண்ணைப் பறிக்கும்படியான ஆடைகள் அணிந்த மூன்று சீமாட்டியர் ஒரு நாள் அவரிடம் வந்திருந்தார்கள். அவரது அறையினுள் பட்டு ஆடைகளின் சலசலப்பும் தலை கிறுகிறுக்கும்படியான செண்டுகளின் மணமும் நிரம்பும் படி மூவரும்அவருக்கு முன்னால் ஆர்ப்பாட்டமாய் அமர்ந்து, அரசியலில் அபார அக்கறை கொண்டவர்களாகப் பாவனை செய்து கொண்டு ‘கேள்வி மேல் கேள்வி கேட்க'' ஆரம்பித்தார்கள்.

"அந்தோன் பாவ்லவிச்! போர் எப்படி முடிவுறு மென்று நினைக்கிறீர்கள்?”

அந்தோன் பாவ்லவிச் இருமியவாறு சிறிது நேரம் ஆலோசித்துவிட்டு மென்மையும் உருக்கமும் அன்பும் நிறைந்த குரலில் பதிலளித்தார்:

“நிச்சயம் சமாதானத்தில்தான் முடிவுறும்....''

“ஓ, அதில் என்ன சந்தேகம்? ஆனால் வெற்றி பெறப் போவது யார்? கிரேக்கர்களா, துருக்கியர்களா?’”

“நான் என்ன நினைக்கிறேன் என்றால், யார் அதிக பலமுடையவர்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்

கள்...."

"உங்கள் அபிப்பிராயத்தில் யார் அதிக பலமுடைய வர்கள்?'' என்று போட்டி போட்டுக் கொண்டு கேட்டனர் சீமாட்டியர்.

20

20

"யார் நன்கு உண்டு, நன்கு கற்றுள்ளனரோ....”

'ஆ, எவ்வளவு சாதுர்யமான பதில்!'' என்று வியந்து கூவினாள் ஒரு சீமாட்டி.

“நீங்கள் அதிகம் விரும்புவது யாரை? கிரேக்கர் களையா, துருக்கியர்களையா?”” என்று வினவினாள் இன் னொரு சீமாட்டி.

று

அந்தோன் சேகவ் அவளைக் கனிவுடன் நோக்கினார், பணிவன்புடன் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டு பதிலளித் தார்:

66

நான் விரும்புவது மர்மலேடு*... உங்களுக்குப் பிடிக் காதா அது?''

“எனக்கு உயிர்தான்!” என்று துள்ளிக் கொண்டு கூவினாள் அந்தச் சீமாட்டி.

"மணமும் சுவையும் மிக்கது ஆயிற்றே!'” என்று இன் னொரு சீமாட்டி வலியுறுத்தினாள்.

உடனே மூவரும் மர்மலேடின் நுட்பங்களைப் பற்றி ஊக்கமாய் உரையாட முற்பட்டார்கள். இங்கு அவர்கள் வியக்கத்தக்க புலமையும் நுண்ணறிவும் பெற்றிருந்தது வெளியாயிற்று. இதுகாறும் அவர்கள் சிந்தித்திராத அந்தத் துருக்கியர்களையும் கிரேக்கர்களையும் பற்றிய பிரச் சினையில் மிகுந்த நாட்டம் கொண்டிருப்பதாகப் பாவனை செய்து மூளையை வருத்திக் கொள்வது தேவையற்றதாகி யதும் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தெளிவாகவே காண முடிந்தது.

புறப்பட்டுச் செல்லுகையில் அவர்கள் குதூகலம் மிக்க வர்களாய் அந்தோன் பாவ்லவிச்சிடம் வாக்களித்தார்கள்: "நாங்கள் உங்களுக்கு மர்மலேடு அனுப்பப் போகி றோம்.''

அவர்கள் போய்ச் சேர்ந்ததும், "உரையாடல் சிறப் பாய் இருந்தது!” என்று நான் குறிப்பிட்டேன்.

அந்தோன் பாவ்லவிச் மெல்லச் சிரித்துக் கொண்டு கூறினார்:

66

'ஒவ்வொருவரும் அவரது சொந்த மொழியில் பேச

வேண்டும்....'

பாகுப் பணியாரம்.-(மொழி

* மர்மலேடு-பழப் பாகுப் பெயர்ப்பாளர்).

21

இன்னொரு சமயம் கண்ணுக்கு இனிய இளம் பிராசிக் யூட்டர் ஒருவர் அவரது அறையில் இருக்கக் கண்டேன். சேகவுக்கு முன்னால் நின்று சுருட்டை முடித் தலையைப் பின்பக்கம் சாய்த்து உலுக்கிக் கொண்டு, தன்னம்பிக்கை வாய்ந்த குரலில் அவர் சொன்னார்:

‘அந்தோன் பாவ்லவிச், உங்களுடைய போக்கிரி* கதையில், நீங்கள் மிகவும் சிக்கலான பிரச்சினையை என் முன்னால் வைக்கிறீர்கள். தெனிஸ் கிரிகோரியெவிடம் வேண்டுமென்றே கேடு புரியும் சித்தம் இருப்பதாய் அங்கீ கரிப்பேனாயின், சிறிதும் தயங்காமல் தெனிசைச் சிறைக்கு அனுப்புதல் என் கடமையாகும், ஏனெனில் சமுதாயத்தின் நலன்கள் இதனைக் கோருகின்றன. ஆனால் அவன் நாகரிக மடையாத பழங் குடியினன் என்பதால் தனது செயல் குற்றச் செயலாகும் என்பதை உணராதவனாய் இருக்கி றான். அவனது நிலைக்காக நான் வருந்துகிறேன்! ஆய்வறிவு இல்லாதவனாய் நடந்து கொள்கிறான் என்று கருதி இரக்க உணர்ச்சிகளுக்கு நான் பணிந்து விட்டால், மறுபடியும் அவன் திருகாணிகளைக் கழற்றி ரயில் வண்டியைத் தடம் புரளச் செய்ய மாட்டானென எப்படி என்னால் சமுதாயத் துக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்? இதுதான் இங்கு எழும் கேள்வி! என்ன செய்யலாம்?”

பேச்சைச் சற்றே நிறுத்தி பின்னால் சாய்ந்தபடித் தமது ஊடுருவும் பார்வையை அந்தோன் பாவ்லவிச்சினது முகத்தின் மீது பதித்தார். அவர் உடுத்தியிருந்த பணித் துறை உடுப்பு புத்தம் புதியது. அதில் மார்பில் வரிசை யாய் இருந்த பொத்தான்கள் அந்த வெறித்தனமான நீதிப் பற்றாளராகிய இளைஞரது சுத்தமான முகத்தில் பளபளத்த கண்களைப் போல் தன்னம்பிக்கை வாய்ந்த அசட்டுத்தனத்துடன் பளிச்சிட்டு மின்னின.

*

இந்தக் கதையில் சேகவ், விவரம் அறியாத அப் பாவிக் குடியானவனைப் பற்றிக் கூறுகிறார். ரயில் பாதை யின் தண்டவாளத்திலிருந்து திருகாணியைக் கழற்றி எடுத் தால் ரயில் வண்டி விபத்துக்கு உள்ளாக நேரலாம் என்பது அறியாமலே, மீன் பிடிக்கும் வலையுடன் பளுவாய் இணைப் பதற்காக அவன் தண்டவாளத்துத் திருகாணியைக் கழற்று கிறான்.—(பதிப்பாசிரியர்).

22

“நான் நீதிபதியாய் இருந்திருந்தால் தெனிசுக்குக் குற்றவிடுதலைத் தீர்ப்பு அளித்திருப்பேன்'' என்று அந் தோன் சேகவ் கருத்தார்ந்த முறையில் சொன்னார்.

66

"எந்த அடிப்படையில்?”

‘அவனிடம் சொல்லியிருப்பேன்: 'தெனிஸ், உணர்ந்து குற்றம் புரிகிற ரகத்தவனாய் நீ இன்னும் வளர்ந்தாக வில்லை, போய் உடனே இந்தக் காரியத்தைச் செய்!'”

வழக்கறிஞர் சிரித்தார், ஆனால் மறு கணமே தமது ஆடம்பரமான காரியார்த்த தோரணை திரும்பவும் வரப் பெற்றுத் தொடர்ந்து கூறினார்:

"இல்லை, மதிப்புக்குரிய அந்தோன் பாவ்லவிச், நீங் கள் எழுப்பியிருக்கும் பிரச்சினைக்குச் சமுதாய நலன்களது நோக்கு நிலையிலிருந்து மட்டுமே தீர்வு காண இயலும். சமுதாயத்தின் வாழ்வையும் சொத்துக்களையும் பாதுகாப் பது எனக்குரிய கடமை. தெனிஸ் நாகரிக வளர்ச்சி இல் லாதவன் என்பது மெய்தான், ஆயினும் அவன் குற்ற வாளியே, இதுதான் இங்குள்ள உண்மை!”

“உங்களுக்கு இசைப்பெட்டி பிடிக்குமா?” என்று வெடுக்கெனக் கேட்டார் அந்தோன் பாவ்லவிச்.

"ஓ, பிடிக்குமே! சந்தேகம் என்ன? அற்புதமான கண்டு பிடிப்பு!'' என்று ஊக்கமாகப் பதிலளித்தார் இளைஞர்.

ஆனால் எனக்கு இந்த இசைப்பெட்டி சகிக்கவே முடியாத ஒன்று!'' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் அந்தோன் பாவ்லவிச்.

66

‘ஏன் அப்படி?''

“ஆமாம், அது பேசுகிறது, பாடுகிறது—ஆனால் இம் மியளவுகூட உணர்ச்சி இல்லை. அதிலிருந்து வெளிவருவது எல்லாம் வெறுமையாய், உயிரற்றதாய் இருக்கிறது... புகைப்படம் பிடிப்பதில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?”

புகைப்படக் கலையில் அந்த வழக்கறிஞர் அபார அபி மானம் கொண்டவர் என்பது உடனே தெரிய வந்தது— அளவிலா ஆர்வத்துடன் அவர் அதைப் பற்றிப் பேச ஆரம் பித்தார். இசைப்பெட்டியில் அறவே கருத்து இழந்து விட்டார், மிகவும் கூர்மையாகச் சரியானபடி சேகவ் கண்ணுற்றது போல், அந்த “அற்புதமான கண்டுபிடிப் புக்கும்'' அவருக்கும் அத்தனை ஒற்றுமை இருந்துங்கூட



23

அதில் நாட்டமின்றி வேறொன்றைப் பற்றிப் பேசிக் கொண் டிருந்தார். துடிப்பானவர், ஓரளவு சுவையானவர், வேட்டையில் கலந்து கொள்ளும் குட்டி நாயைப் போல் வாழ்க்கையில் இன்னும் இளநிலையில் இருக்கும் ஒருவர் அந்தப் பணித் துறை உடுப்பிலிருந்து வெளியே தலை காட்டி யதைத் திரும்பவும் நான் கண்டேன்.

இளைஞரை அனுப்பி வைத்ததும் அந்தோன் பாவ்லவிச் வேதனையுடன் குறிப்பிட்டார்:

“இந்த மாதிரியானவை... நீதித்துறையின் பின்புறத் தில் இருக்கும் இந்தப் பருக்கள்,

அல்லவா தீர்மானிக்கின்றன.’

மாந்தரது கதியை

சற்று நேரத்துக்குப் பிறகு, மேலும் கூறினார்: “பிராசிக்யூட்டர்கள் தூண்டிலிட்டு மீன் பிடிக்க விரும்புகிறவர்கள். முக்கியமாய், பெரிய பெர்ச் மீன் கிடைக்குமா என்று தேடுகிறவர்கள்.”

கொச்சைத்தனம் எங்கிருப்பினும் அதை அம்பலப் படுத்திக் காட்டுவது அவருக்குக் கைவந்த கலையாகும். வாழ்க்கையில் மிக உயர்ந்த கோரிக்கைகளை முன்வைத்துப் பாடுபடுகிறவரால் மட்டுமே இந்தக் கலையில் பாண்டித் தியம் பெற முடியும். மனிதனிடத்தே எளிமையும் எழிலும் இசைவும் கோலோச்சக் காண வேண்டுமென்ற அடங்காத ஆசையிலிருந்து உதித்தெழும் கலை

கலை இது. கொச்சைத்

தனத்தை வெளிப்படுத்திக் காட்டிக் கண்டிப்பதில் எப் போதுமே அவர் கடுமை வாய்ந்தவராகவும் இரக்கமற்ற வராகவும் இருந்தவர்.

யாரோ ஒருவர் அவர் முன்னால் பிரபல இதழ் ஒன்றின் ஆசிரியரைப் பற்றிச் சொன்னார்: ஏனையோருக்கு அன்பும் பரிவும் காட்டுவதன் அவசியம் குறித்து எந்நேரமும் வற் புறுத்தி வருபவரான இந்த ஆசிரியர், ரயில் வண்டியில் கண்டக்டர் ஒருவரை எக்காரணமும் இல்லாமல் அவமதித் தார் என்றும், தமக்குக் கீழுள்ள பணியாளர்களிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்வது அவரது வழக்கம் என்றும் கூறினார்.

66

ஆமாம், வேறு என்னவாம்?” என்று வெறுமையுடன் நகைத்துக் கொண்டார் அந்தோன் பாவ்லவிச். "மேற்

24

குலத்துக்கு உயர்ந்துவிட்ட மனிதர் இவர், கல்வியறிவு உடையவர்... கல்லூரி மாணவராய் இருந்தவர்! மரப் பட்டை மிதியடிகளில் போய்க் கொண்டிருந்தார் இவர் தந்தை, ஆனால் இவர் பளபளக்கும் பூட்சுகள் அணிந்த வர் ஆயிற்றே....'

இதைச் சொன்ன அவரது குரலின் தொனி, இந்த "மேற்குலத்தவர்” எள்ளி நகையாடத் தக்கதோர் அற் பன் என்பதை எல்லார்க்கும் அறிவித்தது.

“பேராற்றல் படைத்தவர்!” என்று ஒரு பத்திரிகை யாளரைப் பற்றி அவர் சொன்னார். “அவரது எழுத்துக் கள் உன்னதமானவை, மனிதநேயம் வாய்ந்தவை... இனிப் பானவை. எல்லார் முன்னிலையிலும் தமது மனைவியை முட்டாளெனத் திட்டுகிறார். அவரது வீட்டு வேலைக்காரர் கள் ஈரமும் குளிருமான அறையில் இருக்க வேண்டியிருப் பதால் எப்போதும் அவர்களுக்குக் கீல்வாதம்...."

"GT GOT. என். இருக்கிறாரே, அவரை உங்களுக்குப் பிடிக்குமா, அந்தோன் பாவ்லவிச்?’”

66

"ஆமாம்... அவர்

அவர் அருமையான ஆள் ஆயிற்றே'' என்று இருமிக் கொண்டு பதிலளிக்கிறார் அந்தோன் பாவ் லவிச். "எல்லாம் அறிந்தவர். நிறைய படிக்கிறார். என் னிடம் மூன்று புத்தகங்கள் வாங்கிச் சென்றார், திருப்பித் தரவில்லை. மறந்து விடுவார், நீங்கள் அற்புதமானவர் என்று இன்று உங்களிடம் சொல்வார், நாளைக்கு வேறு ஒருவரிடம் போய் உங்களது ஆசை நாயகியின் கணவரது நீலப் பட்டைகளையுடைய கறுப்புப் பட்டுக் காலுறைகளைக் கிழித்து விட்டீர்கள் என்று கூறுவார்....”

66

66

கனத்த’ சஞ்சிகைகளது ‘ஆழமான’” பகுதிகள் படிக்க முடியாதபடிச் சப்பென்றும் கடினமாகவும் இருப்ப தாக யாரோ ஒருவர் முறையிட்டது அவர் காதில் விழுந் தது.

66

அந்தக் கட்டுரைகளைப் படிக்காதீர்கள்” என்று உறுதி வாய்ந்தவராகப் பதிலளித்தார் அந்தோன் பாவ் லவிச். "அவை கூட்டுறவுப் படைப்புகள்... அதாவது நண்பர்கள் கூட்டாகத் தயாரிப்பவை. திருவாளர்கள் கிராஸ்னோவ், செர்னோவ், பெலோவ்* எழுதுகின்றவை.

* திருவாளர்கள் சிவப்பர், கறுப்பர், வெள்ளையர்.- (மொழிபெயர்ப்பாளர்).

25

25

ஒருவர் கட்டுரை எழுதுகிறார், இன்னொருவர் மறுப்புரை தருகின்றார், மூன்றாமவர் முதல் இரண்டுக்கும் உள்ள முரண்பாடுகளுக்குச் சமரசம் காண்கிறார். கற்பனையான ஆட்டக்காரருடன் சீட்டாட்டம் ஆடுவது போன்றதாகும் இது. ஆனால் வாசகருக்கு இதெல்லாம் எதற்காக என்று அவர்களில் யாரும் தம்மைக் கேட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை.'

பருத்த சீமாட்டி ஒருவர் முன்பு ஒரு தரம் அவரிடம் வந்தார். ஆரோக்கியமாகவும் கண்ணுக்கு இனியராகவும் இருந்தார், சிறப்பான ஆடைகள் அணிந்திருந்தார், வந் ததும் "சேகவ் பாணியில்” பேச ஆரம்பித்தார்:

“வாழ்க்கை அலுப்பூட்டுவதாய் இருக்கிறது, அந் தோன் பாவ்லவிச்! எல்லாமே சோபையற்றதாகி விட் டது-மக்கள், வானம், கடல், ஏன் மலர்களுங்கூட எனக்குச் சோபையற்றதாய் இருக்கிறது. விரும்புவதற்கு ஏதும் இல்லை... உள்ளம் பதறுகிறது. இது ஒருவகைப் பிணி யாகும்...

99

“பிணியே தான்!” என்று அழுத்தமாகக் கூறினார் அந் தோன் சேகவ். "மெய்யாகவே பிணிதான். லத்தீனத்தில் இதற்குப் பெயர் மார்பஸ் பாசாங்குட்டிஸ்.''

நல்ல வேளை அந்தச் சீமாட்டிக்கு லத்தீனம் தெரிய வில்லை, அல்லது தெரியாதது போல் அவர் பாசாங்கு செய் தாரோ, என்னவோ?

“விமர்சகர்கள் நிலத்தை உழும் குதிரைகளைத் தொல்லை செய்யும் குதிரை-ஈக்கள் போன்றவர்கள்” என்று, அறி வார்ந்ததான அவரது அந்தப் புன்னகை பளிச்சிடக்கூறி னார் சேகவ். 'குதிரை வேலை செய்கிறது, அதன் தசை நார்கள் வீணைத் தந்திகளைப் போல் விரைப்பாய் இருக்கின் றன. திடுமெனக் குதிரை-ஈ குதிரையின் பிட்டத்தில் வந் தமர்ந்து ரீங்காரமிட்டு நருக்கெனக் கடிக்கிறது. குதிரை சிலிர்த்துக் கொள்கிறது, வெடுக்கென வாலை உதறுகிறது. எதற்காக இந்த ஈ இப்படி ரீங்காரமிட்டுச் சுற்றி வரு கிறது? எதற்காக என்று அதற்கே தெரியுமோ, என்னமோ -சந்தேகம் தான். அதன் சுபாவம் அப்படி—அமைதியில் லாமல் துறுதுறுத்துக் கொண்டிருக்கிறது. தான் இருப்ப தைத் தெரியப்படுத்திக் கொள்ள விரும்புகிறது—‘நானும்

26

இந்த உலகில் வாழ்கிறவன்தான், தெரியுமோ? இதோ பார், எனக்கு ரீங்காரம் செய்யத் தெரியும், எதைப் பற்றி வேண்டுமானாலும் ரீங்காரம் செய்வேன்!' என்கிறது அது. இருபத்தைந்து ஆண்டுகளாய் நான் என் கதைகளைப் பற்றிய விமர்சனங்களைப் படித்து வருகிறேன், பயனுள்ள எந்தவொரு விவரத்தையும் எதிலும் படித்ததாய் நினைவு இல்லை, எந்தவொரு நல்ல ஆலோசனையையும் சொல்லக் கேட்டது இல்லை. ஸ்காபிச்செவ்ஸ்கி என்பவர் மட்டும் தான் என் மனதில் பதிந்திருப்பவர், குடித்துவிட்டு நான் எங்காவது குழியிலே செத்துக் கிடப்பேன் என்று, வருவது அறிந்து எழுதியவர் அவர்....’

துயரம் படிந்த அவரது சாம்பல் நிறக் கண்களில் அனேகமாய் எப்போதுமே மென்மையான நுட்ப ஏளனம் மிருதுவாகப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. ஆனால் எப் போதாவது இந்தக் கண்கள் கடுப்பும் கண்டிப்பும் கடுமையும் வாய்ந்தவையாக மாறிவிடும், அவரது மிருது வான அன்பார்ந்த குரலில் அந்நேரங்களில் கடுப்பான தொனி புகுந்து கொண்டுவிடும். அடக்கமும் அன்பும் மிக் கவரான இவர் அவசியமெனக் கருதுவாராயின் எந்தப் பகை சக்தியையும் உறுதியாய் எதிர்த்து நிற்கக் கூடிய வர் என்பதை அப்போது நான் உணர்வேன்.

ஏனையோரிடம் அவர் கொண்டிருந்த போக்கில் நம் பிக்கைக்கு இடமில்லாத நிலைக்குரிய சாயல் ஒன்று, கடுமையும் அமைதியும் வாய்ந்த வெறுமைக்கு ஒப்பான ஒன்று இருப்பதாகச் சில சமயம் எனக்குத் தோன்றும்.

"ருஷ்யரானவர் ஒரு விபரீதப் பிறவி!” என்று அவர் கூறினார் ஒரு நாள். "சல்லடை போன்றவர் அவர், எதை யும் அதிக காலத்துக்கு மனத்தில் தேக்கி வைத்துக் கொள்ள முடியாதவர். இளைமைப் பருவத்தில், கைக்குக் கிடைப் பதை எல்லாம் ஆவலுடன் படிக்கிறார்; முப்பது வயதான பின், காய்ந்து கருகிய சருகுகளைத் தவிர இதில் ஏதும் அவரிடம் எஞ்சியிருப்பதில்லை. வாழ்வாங்கு வாழ வேண்டு மாயின், மனிதனாய் வாழ வேண்டுமாயின், உழைப்பது அவசியம்! அன்பு கொண்டு, நம்பிக்கை கொண்டு உழைத் தாக வேண்டும். நம் நாட்டில் நமக்கு இப்படி உழைக்கத் தெரியவில்லை. கட்டடக் கலைஞர் நல்ல கட்டடங்களாய்

27

இரண்டு அல்லது மூன்று கட்டியபின் எஞ்சிய வாழ்வெல் லாம் சீட்டாட உட்கார்ந்து விடுகிறார், அல்லது நாடக மேடைத் திரைக்குப் பின்னால் மறைந்து விடுகிறார். டாக் டருக்கு வாடிக்கைக்காரர்கள் ஓரளவு சேர்ந்ததும் விஞ் ஞான முன்னேற்றத்துடன் இணைந்து முன்செல்வதை நிறுத்திக் கொண்டு விடுகிறார்; நோவஸ்தி தெராப்பி (நோய் நீக்கச் செய்தி') ஏட்டைத் தவிர வேறு எதையும் படிப் பதில்லை; எல்லா நோய்களும் நீர்க்கோவையிலிருந்து எழு கிறவையே என்கிற நம்பிக்கை நாற்பது வயதுக்கெல்லாம் அவரிடம் வேரூன்றி விடுகிறது. துளியளவாவது தமது வேலையின் உட்பொருளைப் புரிந்து கொள்கிற அதிகாரி ஒருவரையேனும் இதுகாறும் நான் கண்டதில்லை. வழக்க மாய் இவர் தலைநகரிலோ, மாநில நகரிலோ அமர்ந்து கொண்டு குறிப்புகளையும் கோப்புகளையும் கற்பனை செய்து, நிறைவேற்றப்படுவதற்காக அவற்றை ஸ்மியேவுக்கும் ஸ்மோர்கனுக்கும் அனுப்பி வைக்கிறார். இந்த ஆவணங் களால் ஸ்மியேவிலும் ஸ்மோர்கனிலும் நடமாட்டச் சுதந்திரமின்றி முடக்கப்படுவோர் யாராய் இருந்தால் அவருக்கு என்ன?-நாத்திகர் எப்படி நரக வேதனைகள் குறித்துக் கவலைப்படுகிறவர் அல்லவோ, அது போல அந்த அதிகாரியும் இதெல்லாம் குறித்துக் கவலைப்படுகிறவர் அல்ல. வழக்கறிஞர் எதிர்வாதியின் தரப்பில் வெற்றிகர மாய் வாதாடிப் பெயர் பெற்றுக் கொண்டபின், உண்மை யின் தரப்பில் வாதாடுவது குறித்துக் கவலைப்படுவதை நிறுத்திக் கொள்கிறார், சொத்து உரிமைகளின் தரப்பில் மட்டும் வாதாட முற்படுகிறார், குதிரைப் பந்தயங்களில் பணம் கட்டுகிறார், சிப்பி உணா உண்கிறார், எல்லாக் கலை களிலும் தேர்ந்த ஞானமுடைய இரசிகராகத் தம்மைப் பாவித்துக் கொள்கிறார். நடிகரானவர் இரண்டு மூன்று பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற தும் நடிப்புப் பயிற்சியை அதோடு நிறுத்திக் கொண்டு நெடுந் தொப்பி அணிந்து, மாமேதையாகத் தம்மைக் கருதிக் கொள்கிறார். ருஷ்ய நாடு பேராசைக்காரர்களும் சோம்பேறிகளும் ஆனவர்களது நாடு. இவர்கள் அளவின்றி அநியாயமாய் உண்டும் குடித்தும் வருகிறார்கள், பகற் பொழுதில் தூங்க விரும்புகிறார்கள், தூங்கும் போது

28

குறட்டை விடுகிறார்கள். வீட்டில் ஒழுங்கு முறைக்காக வேண்டி இவர்கள் மணம் புரிந்து கொள்கிறார்கள், சமு தாயத்தில் அந்தஸ்துக்காக வேண்டி ஆசைநாயகி தேடிக் கொள்கிறார்கள். இவர்களது மனப்பாங்கு நாய்களுக்கு உரிய மனப்பாங்கு: உதையுங்கள், அடக்க ஒடுக்கமாகக் கீச்சிட்டவாறு வாலை இடுக்கிக் கொண்டு தமக்குரிய இடங் களைப் பார்க்க ஓடும்; தட்டிக் கொடுங்கள், மல்லாந்து படுத்துக் கொண்டு பாதங்களை உயர்த்தி

பாதங்களை உயர்த்தி வாலை ஆட் BLD...'

*

துன்பமும் கடுமையும் வாய்ந்த இகழ்ச்சி இச்சொற் களில் தொனிக்கிறது. ஆயினும், இகழ்ந்த அதே நேரத் தில் அவர் இரங்கவும் செய்தார். அவருக்கு முன்னால் யாரேனும் நிந்திக்கப்படுவாராயின், உடனே அவருக்காக அந்தோன் சேகவ் பரிந்து பேச முற்படுவார்:

"என்னாங்க நீங்கள்? தொண்டு கிழவர் அவர், எழுபது வயதாகிறது....'

இல்லையேல்:

'இன்னும் அவர் வயது வராதவர் ஆயிற்றே, இளம் பருவத்துக்குரிய அசட்டுத்தனமே அன்றி ஒன்றுமில்லை....

அவர் இப்படிப் பேசிய போது, அவர் முகத்தில் அரு வருப்புக்கான குறி எதையும் நான் கண்டதில்லை....

இளம் பிராயத்தில் கொச்சைத்தனமானது வேடிக்கை யாகவும் பொருட்படுத்தத் தகாததாகவுமே தோன்று கிறது. ஆனால் சிறிது சிறிதாக அது ஆளைச் சுற்றி வளைத்துக் கொண்டு விடுகிறது, நச்சு அல்லது கரிப் புகை போல் அதன் இருண்ட பனி மூட்டம் மூளையினுள்ளும் இரத் தத்தினுள்ளும் ஊடுருவிச் சென்று விடுகிறது. பிறகு அந்த ஆள் விடுதியின் முன்னுள்ள துரு பிடித்து மக்கிப் போன பெயர்த் தகடு போல் ஆகி விடுகிறார்—தகட்டில் வரிவடிவங்கள் இருப்பதாகவே தெரிகிறது, ஆனால் என்ன குறிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் புலப்படவில்லை.

* சேகவின் இயோனிச் கதையை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம்.—(பதிப்பாசிரியர்).

29

20

6

கொச்சைத்தனத்தின் இருண்ட கடலில் துன்பம் வாய்ந்த அதன் மங்கலான விகடங்களை அந்தோன் சேக வால் அவரது ஆரம்பக் காலக் கதைகளிலேயே புலப் படுத்திக் காட்ட முடிந்தது. அவரது “நகைச்சுவைக்’’ கதைகளைக் கவனமாகப் படித்துப் பார்த்தால் போதும்: வெறுப்புக்கும் வேதனைக்கும் உரிய கொடிய துன்பங்களைக் கதாசிரியர் நிறையவே கண்ணுற்றார் என்பதையும், வெட்கப்பட்டுக் கொண்டு அவற்றை நகைப்பூட்டும் வாச கங்களுக்கும் சம்பவங்களுக்கும் பின்னால் ஒளித்து வைத் தார் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

கன்னிகை போல் அப்படி நாணம் கொண்டவராய் இருந்தார் அவர். "கண்ணியம் என்பது இல்லையே உங்க ளிடம்... கொஞ்சம் முயற்சி செய்துதான் பாருங்களேன்!’ என்று யாரையும் பார்த்துப் பலத்த குரலில் பகிரங்கமாய் வற்புறுத்துவதற்கு அவருக்கு மனம் ஒப்பவில்லை. கண்ணி யம் தமக்கு அவசர அவசியத் தேவை என்பதை அவர்கள் தாமாகவே உணர்ந்து கொள்வார்கள் என்று வீணாய் அவர் நம்பி வந்தார். கொச்சையானவை, அழுக்கானவை யாவற்றையும் வெறுத்தவரான அவர், வாழ்க்கையின் ஆபாசங்களைக் கவிஞருக்கு உரிய உயர்ந்த மொழியில், நகைச் சுவையாளரது மென்மையான புன்னகையுடன் விவரித்தார். அவரது கதைகளின் மெருகிடப்பட்ட அழ கான மேற்பரப்புக்கு அடியில் இக்கதைகளது உட்கருத் தில் அடங்கியுள்ள முற்றிலும் கசப்பான கண்டனம் சொற்ப அளவுக்கே கண்ணுக்குத் தெரிகிறது.

படிக்கும்

அல்பியோனது மகள் என்னும் கதையைப் மதிப்புக்குரிய வாசக அன்பர்கள் சிரிக்கிறார்கள். யாவற் றுக்கும் யாவருக்கும் அன்னியராகத் தனித்திருக்கும் ஒரு வரை நன்கு உண்டு வாழ்கிறவரான கோமான் இழிந்த முறையில் நையாண்டி புரிவதை அவர்கள் கவனிக்கத் தவறினாலும் தவறலாம். அந்தோன் சேகவின் நகைச் சுவைக் கதை ஒவ்வொன்றிலும் தூய்மையும் மெய்மையும் வாய்ந்த மனித இதயத்தின் மென்மையான ஆழ்ந்த பெரு மூச்சு என் காதில் விழுகிறது. தமது தன்மானத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களாய், போராட்டம் இல்லாமலே மிருக பலத்துக்குப் பணிந்து அடிமைகளாய்

30

வாழ்கிறார்களே, அன்றாடம் அருந்தும் முட்டைக்கோசு சூப்பு கூடுமான அளவுக்குச் சத்து நிறைந்ததாய் இருப் பது அவசியம் என்பதன்றி வேறு நம்பிக்கை இல்லாதவர் களாகவும், வலிமையும் அகம்பாவமும் கொண்டோரிடம் உதைபட நேருமோ என்ற அச்சத்தைத் தவிர வேறு உணர்ச்சி இல்லாதவர்களாகவும் இருக்கிறார்களே என்று இரக்கம் தெரிவித்து, நம்பிக்கைக்கு வழியில்லாத நிலையில் விடும் பெருமூச்சு அது.

வாழ்க்கையின் சிறுதிற விவகாரங்களது அவலத்தை சேகவைப் போல் யாரும் என்றும் அவ்வளவு தெளிவாக வும் நுட்பமாகவும் புரிந்து கொண்டதில்லை. மத்தியதர வகுப்பாரது வாழ்க்கையின் இருண்ட குழப்படியில் 'மானக் கேடாகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் இருந்தவை யாவற்றையும் இதன்முன் யாராலும் இரக்கமின்றி இப்படி உண்மைச் சித்திரமாய் வரைந்து மக்களுக்குக் காட்ட முடிந்ததில்லை.

கொச்சைத்தனத்தை அவர் தமது பகையாகக் கொண் டிருந்தார். வாழ்வெல்லாம் அதை எதிர்த்துப் போராடி னார், அதை எள்ளி நகையாடினார், கூர்மை வாய்ந்த உறு தியான பேனாவினால் அதை வரைந்து காட்டினார். முதல் பார்வைக்குப் பாங்காகவும் வசதியாகவும் ஒளி மிக்க தாகவுங்கூட அமைந்ததாகத் தோன்றும் இடங்களிலும் கொச்சைத்தனத்தின் பூசணத்தைக் கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டினார்.... அவரது சடலம்—கவிஞர் ஒரு வரது சடலம்—சிப்பிகளைக் கொண்டு வருவதற்கான சரக்கு ரயில் பெட்டியில் மாஸ்கோவுக்கு வந்து சேரும் படிச் செய்து, கொச்சத்தனமானது அவர் மீது வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

கொச்சைத்தனமானது களைத்து ஓய்ந்து போன அதன் பகையைப் பார்த்து வெற்றிக் களிப்புடன் கொக்கரித்து இளிக்கும் இளிப்பு போன்றதாய் இருக்கிறது எனக்கு, கறை படிந்து அழுக்கேறிய அந்தப் பச்சை நிறச் சரக்குப் பெட்டி. சாக்கடைப் பத்திரிகைகளது எண்ணற்ற “நினைவு அஞ்சலிகள்” வஞ்சக இரங்கல்களே அன்றி வேறல்ல- தனது பகைவன் மாண்டான் என்று இரகசியமாய் ஆனந்தப்

31

பட்டுக் கொண்ட அந்தக் கொச்சைத் தனத்தினுடைய கெட்ட மூச்சின் துர்நாற்றம்தான் அவற்றில் வீசுகிறது.

அந்தோன் சேகவின் கதைகளைப் படிக்கையில், கூதிர்ப் பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன—காற்று தெளிந் திருக்கிறது, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங் களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது, வீடுகள் ஒடுங்கிக் கொண்டு கும்பலாகக் கூடியுள்ளன, மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள். தனிமையால் வாட்டமடைந்து, சலனமற்று, சக்தியிழந்து போய் யாவும் விசித்திரமாய் இருக்கின்றன. ஆழமான நீலத் தொலைவு கள் வெறுமையாய் இருக்கின்றன, வெளிறிய வானத்துடன் கலந்து குளிரில் கெட்டியான சேறு மூடிய நிலத்தின் மீது அவை சோர்வு தரும் குளிர் மூச்சு விடுகின்றன. ஆனால் கூதிர் காலத்து வெயிலைப் போல் கதாசிரியரது சிந்தை யானது தடங்கள் பதிந்த பாதைகள் மீதும், கோணலான தெருக்கள் மீதும், சேறு படிந்த நெரிசலான வீடுகள் மீதும் திகழொளி வீசிக் காட்டுகிறது. பரிதாபத்துக்குரிய “சிறு’” மனிதர்கள் இந்த வீடுகளில் அலுப்பிலும் சோம் பலிலும் முக்கித் திணறுகிறார்கள், தூக்கக் கலக்கங் கொண்ட அர்த்தமற்ற பரபரப்பு தமது இல்லங்களில் நிரம்பும்படிச் செய்கிறார்கள். அதோ போகிறாள் கண் ணாட்டி—சாம்பல் நிறச் சுண்டெலியைப் போல் மிரளு கிறவள், இனியவள், பரம சாது. அடிமைப்பட்டவளாய் அளவின்றி அன்பு செலுத்தக் கூடியவள் அவள். கன்னத் தில் அடியுங்கள், வாய் விட்டு அழக்கூடத் துணிய மாட் டாள்-அடக்கவொடுக்கமான அடிமை அவள். மூன்று சகோதரிகள் நாடகத்தில் வரும் துயரார்ந்த ஓல்கா அவளுக்குப் பக்கத்தில் நிற்கிறாள். ஓல்காவும் அன்பு செலுத்தக் கூடியவள்தான். அவளது சோம்பேறிச் சகோ தரனது சீர்குலைந்து போன, கேவலம் வாய்ந்த மனைவியின் கண நேர விருப்பங்களுக்கு எல்லாம் அடிபணிகிறாள். அவளைச் சுற்றிலும் அவளது சகோதரிகளது வாழ்வு தகர்ந்து விழுகிறது. அவள் அழுகிறாளே தவிர, ஏதும் செய்ய இயலாதவளாய் இருக்கிறாள். கொச்சைத்

22

32

தனத்தை எதிர்த்து அவள் உள்ளத்திலிருந்து உயிருள்ள, வலுவான சொல் ஒன்றுகூட எழவில்லை.

இதோ போகிறார்கள்- கண்ணீரும்

போல்

கம்பலையுமான

ரனெவ்ஸ்கயாவும் முன்பு செர்ரித் தோட்டத்தின் உடை மையாளர்களாய் இருந்த ஏனையோரும். குழந்தைகள் தன்னலம் வாய்ந்தவர்கள், கிழடு தட்டியோர் போல் தள்ளாடுகிறவர்கள், நெடுநாளுக்கு முன்பே மடிந் தொழிந்திருக்க வேண்டியவர்கள்—சிணுங்கிக் கொண்டும் புலம்பிக் கொண்டும் இருக்கிறார்கள். தம்மைச் சுற்றிலும் நடைபெறுவது எதையும் காணாதவர்களாய், எதையும் புரிந்து கொள்ளாதவர்களாய் இருப்பவர்கள், வாழ்வை உறிஞ்சச் சக்தியிழந்துவிட்ட புல்லுருவிகள் இவர்கள். உதவாக்கரை மாணவரான தெரேஃபிமவ்

தெரேஃபிமவ் உழைப்பின் அவசியம் குறித்து அழகாய்ப் பேசிவிட்டு வீண் பொழுது போக்குகிறார், சோம்பேறிகளாகக் காலம் ஓட்டுவோரது நலத்துக்காக அலுக்காமல் வேலை செய்யும் வார்யாவை அசட்டுத்தனமாய்க் கேலி செய்து மகிழ்கிறார்.*

வெர்ஷினின் முன்னூறு ஆண்டுகளுக்குப்

பிறகு கனவு

வாழ்க்கை எவ்வளவு சிறப்பாய் இருக்குமென்று காண்கிறார், ஆனால் தம்மைச் சுற்றிலும் யாவும் தகர்ந்து வருவதையோ, தம் கண்ணெதிரே சொலேனி அலுப்பாலும் அசட்டுத்தனத்தாலும் தூண்டப்பட்டுப் பரிதாபத்துக்கு உரிய கோமான் துசென்பாகைக் கொலை புரியத் தயாராய் இருப்பதையோ அவர் கவனிக்கவில்லை.**

காதலுக்கும், தமது மடமைக்கும் சோம்பலுக்கும், இகலோக சம்பத்துக்களிலான மோகத்துக்கும் அடிமைப் பட்டவர்களது முடிவின்றிச் செல்லும் அணிவரிசை வாச கரது கண் முன்னால் நடை போடுகிறது. வாழ்க்கையின் பால் நிலவும் இருண்ட அச்சத்துக்கு அடிமைப்பட்டவர் கள், இனம் புரியாத கலவரத்துடன் செல்கிறார்கள், நிகழ்

* ரனெவ்ஸ்கயா, தெரேஃபிமவ், வார்யா-சேகவின் செர்ரித் தோட்டம் நாடகத்தில் வரும் பாத்திரங்கள்.- (பதிப்பாசிரியர்).

** வெர்ஷினின், சொலேனி, துசென்பாக்—சேகவின் மூன்று சகோதரிகள் நாடகத்தில் வரும் பாத்திரங்கள்.- (பதிப்பாசிரியர்).

8-699

33

காலத்தில் தமக்கு இடமில்லை என்பதை உணர்ந்து எதிர் காலங் குறித்து தொடர்பின்றி வாழ்வெல்லாம் பினாத்து கிறார்கள்....

சில சமயம் துப்பாக்கிச் சுடும் சப்தம் இந்த அவலத் திரளிலிருந்து கேட்கிறது—இவானவ்* அல்லது தெரப் லேவ்** தாம் செய்ய வேண்டிய காரியத்தைத் திடுமெனக் கண்டறிந்து கொண்டு, உயிரை விட்டுவிட்டார்.

இருநூறு ஆண்டுகளில் வாழ்க்கை எவ்வளவு சிறப் பாய் இருக்கும் என்பது பற்றி இவர்களில் பலரும் இன் னருங் கனவுகள் காண்கிறார்கள். ஆனால் நாம் ஒன்றும் செய் யாமல் கனவு மட்டும் காண்போமாயின், வாழ்க்கையைச் சிறப்பானது ஆக்கப் போகிறவர் யார்?-இந்த எளிய கேள்வி இவர்களில் யாருக்கும் உதிப்பதாய் இல்லை.

கையாலாகாத. பிறவிகளான அவலமான இந்த அசட்டுக் கும்பலிடம் விவேகம் மிக்கவரான மகத்தான ஒரு மனிதர் செல்கிறார், தமது தாயகத்தைச் சேர்ந்த அவல ஆட்களாகிய இவர்கள் எல்லோரையும் கவனமாகப் பார்வையிடுகிறார். துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, நம்பிக்கைக்கு இடமில்லாத சோகம் முகத்திலும் உள்ளத் திலும் கொண்டவராய், மென்மை வாய்ந்ததாய் இருப் பினும் ஆழ்ந்த கண்டனம் தொனிக்கும் நேர்த்தியான நேர்மை மிகுந்த குரலில் கூறுகிறார்:

‘‘கனவான்களே, இழிவிலும் இழிவானது நீங்கள் வாழுகின்ற இந்த வாழ்க்கை!”

ஐந்து நாட்களாகக் காய்ச்சல், ஆனால் படுத்திருக்க விருப்பம் இல்லை. சோர்வு தரும் பின்லாந்து மழைத் தூறல் ஈரப் புழுதியை நில உலகின் மீது தூவுகிறது. இன்னோக் கோட்டையிலிருந்து பீரங்கிகள். இடிமுழக்கமிட்டுக் “குறி பார்க்கின்றன”. இரவில் கூம்பொளி விளக்குகளின் நீள மான ஒளி நாக்குகள் மேகங்களை நக்குகின்றன—பேய்த்

*

இவானவ்-சேகவின் இவானவ் நாடகத்தின் தலை மைப் பாத்திரம்.—(பதிப்பாசிரியர்).

** தெரப்லேவ்—சேகவின் கடற் பருந்து நாடகத் தின் முக்கிய பாத்திரங்களில் ஒருவர்.-(பதிப்பாசிரியர்).

34

தனமான வெறியாட்டமான யுத்தத்தை ஓயாமல் நினைவு படுத்திய சகிக்கவொண்ணாத அகோரக் காட்சி.

நான் சேகவ் நூல்களைப் படித்தேன். பத்து ஆண்டு களுக்கு முன்பு அவர் இறந்திராவிடில், இந்த யுத்தம் அனேகமாய் அவரை மடிய வைத்திருக்கும், மனிதர்கள் மீதான வெறுப்பால் முதலில் நச்சுப்படுத்தி மடிய வைத் திருக்கும்.* அவர் அடக்கம் செய்யப்பட்டது பற்றி எனக்கு நினைவு வருகிறது.

மாஸ்கோ அப்படி "உளமார நேசித்த” எழுத்தாள ராம், இவரைக் கொண்ட சவப்பெட்டி, “சிப்பிகள் நண்டு கள்'' என்று கதவில் பெரிய எழுத்துக்களில் குறிக்கப் பட்டிருந்த ஒரு வகைப் பச்சையிலான சரக்குப் பெட்டி யில் கொண்டுவரப்பட்டது. எழுத்தாளரைத் தரிசிப்பதற் காக ரயில் நிலையத்தில் கூடியிருந்த சிறிய கூட்டத்தில் ஒரு பகுதி அப்போது மஞ்சூரியாவிலிருந்து வந்து இறங் கிய ஜெனரல் கெல்லரின் சவப்பெட்டியைப் பின்தொ டர்ந்து சென்று, சேகவை ஏன் இராணுவ வாத்தியக் குழு இசையுடன் எடுத்துச் செல்கிறார்கள் என்று வியந்தது. தவறுதல் கண்டுபிடிக்கப்பட்டதும் தமாஷான ஆட்கள் சிலர் கிளுகிளுத்துச் சிரித்துக் கொண்டார்கள். சேகவின் சவப்பெட்டியைப் பின்தொடர்ந்தவர்கள் சுமார் நூறு

பேர்தான், அதிகம் இல்லை. வழக்கறிஞர்களான இருவர் என் நினைவை விட்டு மறையவில்லை. இருவரும் புதிய பூட் சுகளும் பல நிறங்களில் பளிச்சிட்ட டைகளும் அணிந்து மாப்பிள்ளைகளைப் போல் காட்சியளித்தனர். இவர் களுக்குப் பின்னால் நடந்த எனக்கு, இவர்களில் ஒருவரான மக்லக்கோவ் நாய்களுடைய மதிநுட்பத்தைப் பற்றிப் பேசியது காதில் விழுந்தது. இன்னொருவர் நான் அறியாத வர், தமது கோடைக் குடிலின் வசதிகளைப் பற்றியும் அதன் சுற்றுப்புறத்தின் எழிலைப் பற்றியும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஊதா நிற ஆடை அணிந்து லேஸ் அலங்காரங்களைக் கொண்ட கைக்குடை பிடித்

* கோர்க்கி இங்கு குறிப்பிடுவது, முதல் உலகப் போர் (1914-18). சேகவ் 1904ல் மரணமடைந்தார்.—(பதிப் பாசிரியர்).

8*

35

திருந்த ஒரு சீமாட்டி, கொம்பு விளிம்புடைய மூக்குக் கண்ணாடி அணிந்த வயதான ஒரு சீமானிடம் வற்புறுத்திச் சொன்னாள்:

"ஓ, அவர் அருமையானவர் ஆயிற்றே, தமாஷான ஆள்.

முதியவர் நம்பிக்கை இல்லாதவராய் இருமிக் கொண் டார். அன்று வெப்பமும் புழுதியுமாய் இருந்தது. பருத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பருத்த வெள்ளைக் குதிரையில் அணிவரிசையின் முன்னால் கம்பீரமாகப் போய்க் கொண் டிருந்தார். இவையும் மற்றும் மிகப் பலவும், மென்மை யும் நயமும் மிக்கவரான மாபெரும் கலைமேதையின் நினை வுக்குச் சிறிதும் ஒவ்வாதனவாய், வேதனைக்குரிய இழிவு களாய் அமைந்தன.

மூதாளர் சுவோரினுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் சேகவ் குறிப்பிட்டார்:

“உயிர் வாழ்வதற்காக நடத்த வேண்டியிருக்கும் அவலமான போராட்டத்தைக் காட்டிலும் புன்மையானது, கவிதைப் பாங்குக்கு ஒவ்வாதது ஏதும் இல்லை; வாழ்வின் இன்பத்தை அழித்திடுகிறது, அக்கறையில்லாத மந்த நிலையை உண்டாக்குகிறது.''

இந்தச் சொற்கள் முழுக்க முழுக்க ருஷ்ய மனப்பாங் காய் அமைந்த ஒன்றை வெளியிடுகின்றவை, என் கருத்துப் படி இந்த மனப்பாங்கு இம்மியளவுங்கூட அந்தோன் பால்லவிச்சுக்குப் பொருந்தாத ஒன்று. ருஷ்யாவில் யாவும் நிறைய இருக்கின்றன, ஆனால் மக்களுக்கு உழைப்பில் அபிமானம் இல்லை-இங்கே பெரும்பாலானோர் இத் தகைய எண்ணமுடையோராய் இருக்கிறார்கள். ருஷ்யர்கள் செயலாற்றலைப் போற்றுகிறார்கள், ஆனால் உண்மையில் இதில்

அவர்களுக்கு நம்பிக்கை இருக்கவில்லை. செயல் முனைப்புள்ள மனப்பாங்கு கொண்ட எழுத்தாளர்-- உதாரணமாய், ஜாக் லண்டன் போன்றவர்-ருஷ்யாவில் உருவாக வழியில்லை. ஜாக் லண்டனது நூல்களை நமது வாச கர்கள் ஆர்வமாகப் படிக்கிறார்கள், ஆனால் இந்நூல்கள் ருஷ்யர்களிடையே செயலுக்கான சித்தத்தைத் தூண்டக் காணோம், கற்பனையை மட்டுமே ஊக்கம் பெறச் செய்

36

6

கின்றன. ஆனால் சேகவ் இந்த அர்த்தத்தில் அதிகமாய் ருஷ்யராய் இருக்கவில்லை.* அவர் தமது பிள்ளைப் பிராயத் திலிருந்தே 'உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை’” மகிழ்ச்சிக்கு இடமில்லாத சோபையற்ற வடிவில், ரொட் டித் துண்டுக்கான அன்றாட அற்ப கவலைகளின் வடிவில் நடத்த வேண்டியிருந்தது—தமக்காக மட்டுமின்றி ஏனை யோருக்கும் பெற வேண்டியிருந்ததால் அவருக்குப் பெரிய ரொட்டித் துண்டு தேவைப்பட்டது. மகிழ்ச்சிக்கு இடமில் லாத இந்தக் கவலைகளில் அவர் தமது இளைமைப் பரு வத்து சக்திகள் யாவற்றையும் ஈடுபடுத்த வேண்டியிருந் தது. நகைத்திறத்தை அவர் இழக்காது பாதுகாத்துக் கொள்ள முடிந்தது ஆச்சரியம்தான். மக்கள் சோர்வடை யும்படி உணவுக்காகவும் உறக்கத்துக்காகவும் பட வேண்டி யிருந்த அவதியையே அவர் வாழ்க்கையாகக் கண்ணுற்று வந்தார். அதன் பெருங் காவியங்களும் சோக நாடகங் களும் சர்வசாதாரண அற்பங்களின் கனத்த திரையால் அவர் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டிருந்தன. ஏனை யோரது பசி தீர்வதற்காகக் கவலைப்பட வேண்டிய

*

6

66

பிற்பாடு 1931ல் கோர்க்கி எழுதியதாவது: அக் டோபர் புரட்சிக்கு முன்பு முதலாளித்துவச் சிந்தனை யாளர்கள்'—அரசியல்வாதிகளும் சமூகவியலாளர்களும் பத்திரிகையாளரும்-ருஷ்யத் தொழிலாளியும் விவசாயி யும் பண்பாடு இல்லாதவர்கள், நிறையக் குடிப்பவர்கள், எழுத்தறிவு இல்லாதவர்கள் என்றும், கீழ்ப்படிந்து வாழ் வதற்கும் பொறுமையாய் இருப்பதற்கும் அவர்களுக்கு உள்ள சக்தி அளவு கடந்தது என்றும் எழுதினார்கள்.... இந்த வரிகளை எழுதும் இவ்வாசிரியர் ஒடுக்கப்பட்ட விவசாயிகள் காட்டிய பொறுமையைக் கண்டு அருவருப்பு

அடைந்து, சில சமயம் வரலாற்றின் உட்பொருளைக்

கவனிக்கத் தவறி விட்டார். தமது தாய்நாட்டு மக்கள் பால் அவருக்கு இருந்த கருத்தோட்டம் அதிக அன்பு வாய்ந்ததாய் இருக்கவில்லை.

ஆனால் உரிய தருணம் வந்தது', 'முழு மூச்சுடன் முன்செல்' என்று வரலாறு ஆணையிட்டது. முன்பு இகழ்ச்சிக்குரியவாறு வாழ்க்கையின் பால் செயலற்ற போக்கு கொண்டு உங்களைக் கொதிப்படைந்து சீறும்படிச் செய்த மக்கள், உழைப்பாளி உலகின் மிக மிக செயல் முனைப்பு வாய்ந்த சக்தியாகத் தம்மை மாற்றிக் கொண்டு விட்டனர்.”-(பதிப்பாசிரியர்).



நிலைமையிலிருந்து அவர் ஓரளவு விடுவிக்கப்பட்ட பிறகுதான் அவர் இந்த நாடகங்களின் சாராம்சத்தைக் கூர்மையுடன் உற்று நோக்க முடிந்தது.

செய்பொருள்கள்

பண்பாட்டின் அடிப்படையாய் உழைப்புக்குள்ள முக் கியத்துவத்தை அந்தோன் பாவ்லவிச்சைப் போல் அவ்வளவு ஆழமாகவும் முழுமையாகவும் உணர்ந்தவர் யாரையும் நான் கண்டதில்லை. அவரது இந்த உணர்வு அவருடைய வீட்டிலிருந்த சில்லறைப் பொருள்களிலும், வீட்டுக்கு அவர் சாமான்களைத் தேர்வு செய்து கொண்டதிலும், என்பதற்காகவே அவற்றினிடம் அவ ருக்கு இருந்த அபிமானத்திலும் வெளிப்பட்டு வந்தது. இவற்றை வாங்கிச் சேர்க்கும் ஆசையால் அவர் சிறிதும் பீடிக்கப்படாமல் இருந்தார் என்றாலும், மனிதனது ஆக்கத் திறனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் என்ற முறையில் இவற்றை அவர் அலுக்காமல் போற்றிப் பாராட்டினார். கட்டவும் தோட்டங்கள் அமைக்கவும் நிலத்தை அழகுபடுத்தவும் விரும்பினார். அவர் உழைப்பின் கவிதைப் பண்பை உணர்ந்தவர். தாம் நட்ட கனிமரங் களும் அலங்காரச் செடிகளும் வளர்ந்து பெரிதானதை அவர் எவ்வளவு கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந் தார்! அவுத்காவில் வீடு கட்டிய போது அது சம்பந்த மான பல சிரமங்களுக்கு இடையே அவர் கூறினார்:

கட்டடங்கள்

"ஒவ்வொருவரும் அவருக்குச் சொந்தமான நிலத்தில் அவரால் முடிந்தது அனைத்தும் செய்வாராயின், நமது பூமி எவ்வளவு அழகானதாய் இருக்கும்!'

அப்போது நான் வசீலி புஸ்லயேவ் நாடகத்தை எழு தும் வேலையில் ஈடுபட்டிருந்தேன். பெருமையுடன் வசீலி தனக்குத் தானே நிகழ்த்திக் கொள்ளும் ஒற்றையாள் உரையை அவருக்குப் படித்துக் காட்டினேன்:

வலிமை வேண்டும்,

நான் வலிமை பெறுதல் வேண்டும்!

வெப்பமூச்சு விட்டுப்

ப னிக் கவசம் கரைப்பேன்,

உலகெங்கும் செல்வேன்,

நிலமெல்லாம் உழுது பயிரிடுவேன்,

38

உன்னத நகரங்கள் உதித்தெழ

வழி செய்வேன்,

கோயில்கள் கட்டுவேன்,

கனிச் சோலைகள் வளர்ப்பேன்,

கோலவுரு பெற்று

எழில் நங்கை போலாகும் இப்புவி!

கட்டியணைத்தே மணப்பெண்ணெனக்

கரத்திலே ஏந்துவேன்,

கெட்டியாய் அதை என் நெஞ்சுடன்

வைத்தழுத்தி,

இறைவனிடம் எடுத்துச் சென்று காட்டி

மகிழ்வேன்:

‘புவியின் எழிலைப் பாரேன்,

என் இறைவா!

இன்னரும் உலகு ஆக்கியுள்ளேன்’

என்பேன்.

கல்லென விண்ணிலே

நீ உருட்டி விட்டாய்,

மதிப்பரும் மரகதமாய்

அதை மாற்றியுள்ளேன்!

காணக் கண்கோடி வேண்டும்

என் இறைவா,

கதிரோன் உலகின்

பைஞ்சுடர் மணி விந்தை!

அன்புக்குக் காணிக்கையாய்

உனக்கு அளிப்பேன் என்றாலும்,

என் உயிருக்கு உயிரானதை

நான் தருவது எப்படி?”

சேகவுக்கு இந்த ஒற்றையாள் உரை பிடித்திருந்தது. என்னையும் டாக்டர் அலேக்சினையும் பார்த்து உணர்ச்சி மேலிட்டவராய் இருமிக் கொண்டு கூறினார்:

6

"நன்றாய் இருக்கிறது... முழுக்க முழுக்க உண்மை யானது, மனிதத் தன்மை வாய்ந்தது. 'எல்லாத் தத்து

39

வஞானத்தின் உட்பொருளும்' இதில்தான் அடங்கியிருக் கிறது. மனிதன் உலகெங்கும் வாழ்கிறான், இதை அவன் தனக்கு உகந்த நல்ல இடமாக்கிக் கொள்வான்.” தீர்மான மாகத் தலையை ஆட்டிக் கொண்டு அவர் திரும்பவும் கூறினார்: "நிச்சயம் இதைச் செய்யவே போகிறான்!”

வசீலியின் ஒற்றையாள் உரையை மறுபடியும் படித்துக் காட்டும்படி என்னிடம் சொல்லி விட்டு, சன்னலுக்கு வெளியே பார்த்தவாறு கவனமாய்க் கேட்டார்; முடிவில் கூறினார்:

“கடைசி நாலு வரிகளும் வேண்டாம், இவை வலிந்து கூறியதாய் இருப்பவை, தேவையில்லாதவை.

அவர் தமது இலக்கியப் படைப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை, விருப்பமில்லாதவராய் எப்போதாவதுதான் குறிப்பிடுவார். லேவ் தல்ஸ்தோய் பற்றிக் குறிப்பிடுகை யில் எப்படியோ, அனேகமாய் அதே போல் கன்னிப் பருவத்துக்குரிய நாணத்தோடும் எச்சரிக்கையோடும்தான் குறிப்பிடுவார் என்று கூடச் சொல்லலாம். எப்போதா வது குதூகலமான மன நிலையில் இருக்கையில் மெல்லச் சிரித்துக் கொண்டு கதையின் மையப் பொருளைச் சொல்வார்—எப்போதுமே நகைச்சுவைக் கதையாகவே

இருக்கும்.

“இதைக் கேளுங்கள் -பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி எழுதப் போகிறேன். அவள் நாத்திகம் பேசுகிறவள், டார்வினைப் போற்றுகிற வள், மக்களிடையே நிலவும் தப்பெண்ணங்களையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராடுவதுஅவசியமெனத் திடமாய் நம்புகிறவள். ஆனால் விருப்பத்தைக் கைகூடச் செய்யும் மாய எலும்பு வேண்டுமென்று கறுப்புப் பூனை யைக் கொதிநீரில் மூழ்க்கடிக்க இரவு பன்னிரண்டு மணிக்குக் குளிப்பு அறைக்குப் போகிறாள், அவள் விரும் பும் ஆளின் உள்ளத்தைக் கவர்ந்து அவனிடம் காதலை அரும்பச் செய்வதற்கு இந்த மாய எலும்பு அவளுக்குத் தேவைப்படுகிறது—ஆமாம், அந்த மாதிரியான எலும்பு

இருக்கிறது தெரியுமோ....'

40

எப்போதுமே அவர் தமது நாடகங்களைத் 'தமாஷ்'' நாடகங்களாகக் குறிப்பிட்டு வந்தார். "தமாஷ் நாடகங் களே’” தாம் எழுதியதாய் அவர் மனப்பூர்வமாய் நம்பினார் என்றே நினைக்கத் தோன்றியது. "சேகவின் நாடகங்களை உணர்ச்சி வயப்பட்ட நகைச்சுவைக் நாடகங்களாய் நடித்துக் காட்ட வேண்டும்” என்று சவ்வா மரோஸவ் விடாப்பிடியாக வலியுறுத்திய போது அவர் அப்படியே சேகவின் சொற்களைத்தான் திருப்பிக் கூறினார் என்பதில் சந்தேகமில்லை.



ஆனால் பொதுவாய் இலக்கியத்தில் எப்போதுமே சேகவ் மிகவும் உன்னிப்பான கவனம் செலுத்தி வந்தார், முக்கியமாய் "ஆரம்ப நிலை எழுத்தாளர்களுக்கு” அவர் காட்டிய பரிவு உள்ளத்தை நெகிழச் செய்யக் கூடியதா கும். லஸரேவ்ஸ்கி, அலிகேர், மற்றும் மிகப் பலரது கனத்த கத்தையாய் அமைந்த கையெழுத்துப் பிரதிகளைப் போற்றத்தக்க பொறுமையுடன் படித்தார்.

6

"நம் நாட்டில் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதி கரித்தாக வேண்டும்” என்பார் அவர். "நமது அன்றாட வாழ்க்கையில் இலக்கியம் இன்னமும் புதுமையான ஒன் றாகவே இருக்கிறது, 'பொறுக்கியெடுத்த சிலருக்கு' மட் டும் உரித்தானதாய் இருக்கிறது. நார்வேயில் இருநூற்று இருபத்தாறு பேருக்கு ஒரு எழுத்தாளர் வீதம் இருக் கிறார், ஆனால் நம் நாட்டில் பத்து லட்சத்துக்கு ஒருவர் வீதமே இருக்கிறார்."

அவரது நோய் சில சமயம் அவரை மிதமிஞ்சி மனச் சோர்வு அடையச் செய்யும், மனித இனத்திடம் நம்பிக்கை இழக்கும்படியுங்கூடச் செய்யும். அந்த மாதிரியான நேரங்களில் அவரது அபிப்பிராயங்கள் மனம் போனபடி மாறிச் செல்லும், அவருடன் பழகுவது இத்தருணங்களில் கடினமாகிவிடும்.

ஒரு நாள் சோபாவில் படுத்து வறட்டு இருமல் இருமி வெப்பமானியை வைத்துக் கொண்டு விளையாடியவாறு

அவர் கூறினார்:

"சாவதற்காக உயிர் வாழ்வது எவ்விதத்திலும் சுவை யானது அல்ல, ஆனால் காலத்துக்கு முன்னதாகவே சாகப்

41

போகிறோம் என்பது அறிந்து வாழ்வது இருக்கிறதே- மெய்யாகவே அது மடமையாகும்....'

இன்னொரு சந்தர்ப்பத்தில், திறந்த சன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்து தொலைவில் கடலை உற்று நோக்கிய வாறு திடுமென ஆத்திரமாகச் சொன்னார்:

'நம்பிக்கையுடன் வாழப் பழகியவர்கள் நாம்—பரு வநிலை நன்றாயிருக்கும், அமோக அறுவடை கிடைக்கும், இனிய காதல் கைவரப் பெறும், பெருஞ் செல்வம் கிடைக் கும், அல்லது தலைமைப் போலீஸ் அதிகாரியாகப் பதவி பெறலாம் என்றெல்லாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க் கிறோம். ஆனால் விவேகம் வாய்ந்தவராவோம் என்று நம் பியவர் எவரையும் நான் கண்டதில்லை. புதிய ஜாரின் ஆட்சி யில் நிலைமை மேம்படும், இருநூறு ஆண்டுகளில் மேலும் பன்மடங்கு நன்றாய் இருக்கும் என்று நமக்கு நாமே கூறிக் கொள்கிறோம்—இந்த நல்ல காலத்தை நாளைக்கே வரும் படிச் செய்ய யாரும் முயலவில்லை. மொத்தத்தில் வாழ்க் கையானது நாளுக்கு நாள் மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது; தனது சொந்த விருப்பப்படிப் போய்க் கொண் டிருக்கிறது; மக்கள் மேலும் மேலும் முட்டாள்கள் ஆகி வருகிறார்கள்; மேலும் மேலும் அதிக எண்ணிக்கை யில் வாழ்க்கையிடமிருந்து தனிமைப்பட்டுச் செல்கிறார்

கள்.'

பிறகு ஏதோ சிந்தனை செய்தவாறு நெற்றியைச் சுளித்துக் கொண்டு மேலும் சொல்கிறார்:

சிலுவை ஊர்வலத்தின் போது முடவர்களாய் ஒதுங்கிவிடும் பிச்சைக்காரர்களைப் போல.”

அவர் ஒரு டாக்டர். டாக்டரின் நோய் நோயாளியின் நோயைக் காட்டிலும் எப்போதுமே மோசமானது. நோயாளி கள் உணர மட்டுமே செய்கிறார்கள், ஆனால் டாக்டரோ உணருவது மட்டுமல்லாமல் நோயால் தமது உடலுக்கு உண்டாகி வரும் அழிவை நன்கு அறிந்தவராகவும் இருக் கிறார். அறிவானது சாவை மேலும் நெருங்கி வரச் செய் வதற்கு எடுத்துக்காட்டு இது.

அவர் சிரித்த போது அவரது கண்கள் இனிய நயம் பெற்றன—பெண்ணுக்குரிய மென்மையும் மிருதுவான

42

இரக்கமும் அவற்றில் மிளிர்ந்தன. அவரது சிரிப்பு அனேக் மாய் ஓசையற்றது, அது அலாதியான கவர்ச்சி வாய்ந்தது. சிரித்த போது அவர் மெய்யாகவே மனம் மகிழ்ந்து கொண்டார். அவரைப் போல் அப்படி "ஆன்மிகமாகச்'' சிரிக்க கூடியவர் வேறு யாரையும் எனக்குத் தெரியாது. அசிங்கமான கதைகள் அவரைச் சிரிக்க வைத்ததில்லை. அவரது அந்த அருமையான, முழு மனதான சிரிப் பைச் சிரித்தவாறு ஒரு சமயம் அவர் என்னிடம் சொன் னார்:

"தல்ஸ்தோய் உங்களுடன் பழகுவதில் ஏன் அப்படி நிலையற்றவராய் இருக்கிறார் தெரியுமா? அவருக்குப் பொறா

மை,

உங்

சுலேர்ழித்ஸ்கியிற்கு அவரைக் காட்டிலும் களிடம்தான் அதிக பற்றுதல் இருப்பதாக நினைக்கிறார். ஆமாம், உண்மை இது! நேற்று என்னிடம் அவர் கூறினார்: ‘அது ஏனோ தெரியவில்லை, கோர்க்கியுடன் என்னால் இயல் பான முறையில் நடந்து கொள்ள முடிவதே இல்லை. சுலேர் ழித்ஸ்கி அவருடன் கூட இருந்து வருவது எனக்குப் பிடிக்க வில்லை. சுலேர்ழித்ஸ்கியிற்கு அவனால் தீமை ஏற்படும். கோர்க்கி கெட்டவர். துறவியாகி விடுவதாய் வாக்குறுதி ஏற்கும்படிக் கட்டாயம் செய்யப்பட்ட சமயப் பாட சாலை மாணவனைப் போன்றவர், அனைத்து உலகின் மீதும் அவர் குரோதம் கொண்டிருக்கிறார். அவரது ஆன்மா உளவாளியின் ஆன்மா, எங்கிருந்தோ வந்திருக்கிறார் அவ ருக்கு அந்நியமான கனான் நாட்டுக்கு, யாவற்றையும் நன் றாகப் பார்த்து யாவற்றையும் குறித்துக் கொள்கிறார்— அவர் வழிபடுகின்ற எதோ ஒரு தெய்வத்திடம் போய் யாவற்றையும் சொல்வதற்காகக் குறித்துக் கொள்கிறார். அவரது தெய்வம் குடியானவப் பெண்கள் அஞ்சுகிற வனாந் தர அல்லது நீர்நிலைச் சாத்தன் போன்றது.””

ம்

இதைச் சொல்லுகையில் கண்களில் கண்ணீர் வரும் படிச் சிரித்தார் சேகவ். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவர் மேலும் சொன்னார்:

'கோர்க்கி நல்லவர் ஆயிற்றே' என்றேன் நான். இல்லை, இல்லை-எனக்குத் தெரியும்' என்றார் அவர். 'வாத்து மூக்கு போன்றதாய் இருக்கிறது அவர் மூக்கு. துரதிருஷ்டம் வாய்ந்தோருக்கும் தீயவர்களுக்கும்தான்

43

அந்த மாதிரி மூக்கு இருக்கும். பெண்களுக்கு அவரைப் பிடிப்பதில்லை. நாய்களைப் போல் நல்ல ஆட்களைக் கண்ட தும் அறிந்து கொள்ளும் திறனுடையவர்கள் பெண்கள். சுலேர்ழித்ஸ்கி இருக்கிறாரே, அவர் தன்னலமில்லா அன்பு செலுத்தும் மதிப்பிடற்கரிய பேறு பெற்றவர். இதில் அவருக்குள்ள ஆற்றல் ஒப்பற்றது. அன்பு செலுத்த வல்ல வர் எல்லாம் வல்லவர்....

9

கணப் பொழுதுக்குப் பிறகு திரும்பவும் சொன்னார் சேகவ்:

ஆமாம், கிழவர் பொறாமைப்படுகிறார்... வியந்து போற்றத் தக்கவர்....”

தல்ஸ்தோயைப் பற்றிப் பேசிய போதெல்லாம் எளி தில் புலப்படாதபடி நுட்பமான புன்னகை—மென்மை யானது, நாணம் வாய்ந்தது—அவர் கண்களில் பளிச்சிட் டது; ஏதோ மாயமான மர்மம் வாய்ந்த ஒன்றைப் பற்றிப்

பேசுவது போல், மிருதுவாகவும் எச்சரிக்கையுடனும்

குறிப்பிட வேண்டியது போல், தணிவான மெல்லிய குர லில் பேசினார்.

தல்ஸ்தோயின் பக்கத்தில் எஸ்கெர்மன் போன்றவர் ஒருவர் இருந்து, மூதறிஞரின் வாயிலிருந்து வெளிப்பட்ட கூர்மை வாய்ந்த, எதிர்பாராத, அடிக்கடி முரண்பாடான பொன் மொழிகளைக் குறித்துக் கொள்ளாமற் போனது பற்றி அவர் திரும்பத் திரும்பச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.

“நீங்கள் இதைச் செய்ய வேண்டும்” என்று சுலேர் ழித்ஸ்கியிடம் அவர் வற்புறுத்தினார். “உங்களிடம் தல்ஸ் தோய் அவ்வளவு பிரியமாய் இருக்கிறார், உங்களுடன் அவ்வளவு அதிகமாகவும் சிறப்பாகவும் பேசுகிறார்.”

சுலேர்ழித்ஸ்கியைப் பற்றிச் சேகவ் என்னிடம் கூறினார்:

ஞானக் குழந்தை அவர்...

மிக நன்றாய்க் கூறினார்.

சேகவின் கதை ஒன்றைத் தல்ஸ்தோய் ஒரு தரம் புகழ்ந்து பேசக் கேட்டேன், கண்ணாட்டி என்று நினைக் கிறேன்.

44

"அது தூய்மை வாய்ந்த நங்கையால் பின்னப்பட்ட லேஸ் போன்றது" என்றார் அவர். "பழங்காலத்தில் அம் மாதிரியான லேஸ் பின்னும் நங்கையர் இருந்தார்கள்— தமது இன்பக் கனவுகளை எல்லாம் வாழ்நாள் முழுதும் அவர்கள் பின்னல்களாகப் பின்னிக் கொண்டிருப்பது வழக் கம். தமது இதயக் கனவுகளை அவர்கள் லேஸ்களாகப் பின்னி விடுவார்கள், அந்த லேஸ்கள் யாவும் தெளி வற்றவையான தூய காதலில் தோய்ந்தவையாய் இருக் கண்களில் கண்ணீர் ததும்ப மெய்யாகவே உணர்ச்சி மேலிட்டவராகப் பேசினார் தல்ஸ்தோய்.

கும்.

அன்று சேகவுக்குக் காய்ச்சல், கன்னங்கள் திட்டுத் திட்டாகச் சிவந்து போய், தலையைக் கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்த அவர், கவனமாய்த் தமது வில் மூக்குச் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டார். சிறிது நேரம் வரை அவர் ஒன்றும் சொல்லவில்லை. முடிவில் பெருமூச்சு விட்டுக் கொண்டு, சங்கடப்பட்டவாறு மெல்லிய குரலில் கூறினார்:

"அதில் அச்சுப் பிழைகள் ஏராளம்....''

சேகவைப் பற்றி நிறைய

நிறைய எழுத முடியும்.



ஆனால் இதற்கு விவரமாகவும் கறாராகவும் எழுதுவது அவசிய மாகும்-எனக்கு இது முடியாத காரியம். ஸ்டெப்பி கதையை அவர் எழுதிய அதே விதத்தில் அவரைப் பற்றி எழுத வேண்டும்- மணம் கமழும் எளிமையுடன் முழுக்க முழுக்க ருஷ்யக் கதையாய், நினைவுகளில் ஆழ்ந்து வருத் தம் தோய்ந்ததாய் அதை எழுத வேண்டும். ஒருவர் தமக் கென எழுதிக் கொள்ளும் கதையாய் இருத்தல் வேண்டும்.

அத்தகைய மனிதர் ஒருவரை நினைவுபடுத்திக் கொள்வது மனத்துக்கு இனிமையானது. திடுமென உள்ளத்துள் மகிழ்ச்சி பொங்குவதற்கு ஒப்பானது அது. வாழ்க்கையை மீண்டும் அது தெளிவான அர்த்தம் பெறச் செய்கிறது.

மனிதன்தான் உலகின் அச்சு.

அவனது தீய பண்புகள், குற்றங்குறைகள் என்னாவது என்றா கேட்கிறீர்கள்.

மனிதர்களது அன்புக்காக நாம் எல்லாரும் ஏங்குகிறோம், வயிறு பசிக்கையில் அரைவேக்காட்டு ரொட்டி யுங்கூட இனிக்கவே செய்கிறது.

Monday, September 15, 2025

நாய்க்காரச் சீமாட்டி - ஆன்டன் செகாவ் (மொ. பெ. பூ.சோமசுந்தரம்)

 நாய்க்காரச் சீமாட்டி - ஆன்டன் செகாவ் (மொ. பெ. பூ.சோமசுந்தரம்)

கடற்கரையில் புது முகம் ஒன்று—நாய்க்காரச் சீமாட்டி ஒருத்தி-காணப்பட்டதாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு யால்தாவுக்கு வந்து அதன் வழிமுறைகளுக்குப் பழக்கப்பட்டிருந்த திமீத்ரி திமீத்ரிச் கூரொவும் புதிதாக வந்தோரிடம் அக்கறை செலுத்தத் தொடங்கியிருந்தார். நடுத்தர உயரமும் வெண்பொன் கேசமும் கொண்ட இளநங்கை ஒருத்தி பெரெட் தொப் பியணிந்து கடற்கரை நடைபாதை வழியே செல்வதை வெர்னே கபேயின் முகப்புப் பந்தலின் கீழ் அமர்ந்திருந்த அவர் கவனித்தார். வெள்ளை நாய் ஒன்று அவள் பின்னால் ஓடிற்று. 
அப்புறம் அவர், நகரப் பூங்காவிலும் சதுக்கத்திலும் தினந்தோறும் பலமுறை அவளைச் சந்தித்தார். எப்போ தும் அவள் அதே பெரெட் தொப்பி அணிந்து, வெள்ளை நாய் பின்தொடர, தனியாகவே உலாவினாள். அவள் யார் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லோரும் அவளை 'நாய்க்காரச் சீமாட்டி” என்றே அழைத்தார்கள். 

இவள் இங்கே கணவனுடனோ தெரிந்தவர்களுடனோ இல்லை என்றால் இவளை அறிமுகப்படுத்திக் கொள்வது வீண் போகாது” என்று எண்ணமிட்டார் கூரொவ். 
அவருக்கு இன்னும் நாற்பது வயதாகவில்லை, அதற் குள் பன்னிரண்டு வயதில் ஒரு மகளும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களான இரு மகன்களும் இருந்தார்கள். கல்லூரி யில் இரண்டாவது ஆண்டு படித்துக் கொண்டிருந்த பொழுதே பெரியவர்கள் அவருக்கு மணம் முடித்து விட் டார்கள்; இப்போதோ அவர் மனைவி அவரைக் காட்டி லும் ஒன்றரை மடங்கு முதியவளாகத் தோற்றமளித்தாள். நல்ல உயரமும், கரும் புருவங்களும், விறைப்பும், பெரு மிதமும், கம்பீரமும் வாய்ந்த இந்த மாது, அவளே தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டது போல, “சிந்தனை யாளி''. ஏராளமாகப் புத்தகங்கள் படிப்பாள், கணவரை மற்றெல்லோரும் அழைப்பது போன்று திமீத்ரி எனஅழைக் காமல் திமீத்திரி என அழைப்பாள். அவரோ அவளை நுனிப்புல் மேய்பவள், குறுகிய நோக்கினள், நயப் பாங்கு அற்றவள் என உள்ளூறக் கருதிவந்தார்; ஆயினும், அவளிடம் அவருக்கு ஒரே அச்சம். வீட்டில் அவருக்கு இருப்பே கொள்ளாது. அவளுக்குத் துரோகம் செய்ய அவர் வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டார், அடிக்கடி துரோகம் செய்து வந்தார்; அந்தக் காரணத் தினால்தான் போலும், பெண்களைப் பற்றி எப்போதுமே இகழ்ச்சியாகப் பேசினார்; தமக்கு முன்னிலையில் மாதரைப் பற்றிய பேச்சு எழுந்ததும், “கீழ் இனத்தவர்!” என்று அவர்களைக் குறிப்பிட்டார். 
கசப்பான அனுபவத்திலிருந்து தாம் போதிய பாடம் கற்றுக் கொண்டு விட்டதாகவும், எனவே பெண்களை எப்படி வேண்டுமாயினும் அழைக்கத் தமக்கு உரிமை யுண்டென்றும் எண்ணி வந்தார் என்றாலும் இந்தக் “கீழ் இனத்தவர்' இல்லாமல் இரண்டு நாட்கள்கூட அவரால் வாழ முடிவதில்லை. ஆண்கள் கூட்டத்தில் அவருக்குச் சலிப்பாக, கட்டிப் போட்டது போலிருக்கும்; அவர்களிடம் கலகலப்பாகப் பேசாமல் உர்ரென்றிருப்பார். பெண் களிடையிலோ, விட்டேற்றியாயிருப்பார்; அவர்களுடன் என்ன பேசுவது; எப்படிப் பழகுவது என்று அவருக்குத் தெரியும்; அவர்கள் நடுவே வாய் திறவாமலிருப்பது கூட அவருக்கு எளிதாயிருந்தது. அவரது தோற்றத்திலும் சுபாவத்திலும், அவர் இயல்பு முழுவதிலுமே இருந்த இனந் தெரியாத கவர்ச்சி பெண்களை அவரிடம் இணக்கங் கொள்ளச் செய்தது, வசீகரித்தது; இதை அவர் அறிந் திருந்தார். அவரையும் ஏதோ ஒரு சக்தி பெண்கள்பால் வலிய ஈர்த்தது. 

அந்தரங்கத் தொடர்பு ஒவ்வொன்றும் தொடக்கத்தில் வாழ்க்கையை இன்பப் புதுமையுள்ளதாக்கி, இனிய சுளுவான நிகழ்ச்சியாக விளங்கினாலும், குல மகளிர் விஷயத் தில், அதிலும் அடியெடுத்து வைக்கத் தயங்குபவர்களும், 

உறுதியற்றவர்களுமான மாஸ்கோ மாதர் விஷயத்தில், அசாதாரணச் சிக்கல் நிறைந்த பெரும் பிரச்சினை ஆகி விடுவதையும், முடிவில் நிலைமை சகிக்க முடியாத அளவு துன்பகரமாகி விடுவதையும் கூரொவ் மீண்டும் மீண்டும் நேர்ந்த உண்மையிலேயே கசப்பான அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்டிருந்தார். ஆனால் கவர்ச்சியான பெண் யாரையேனும் புதிதாகச் சந்திக்கும் போதெல்லாம் இந்த அனுபவம் நினைவிலிருந்து எப்படியோ நழுவிவிடும், வாழ்வு வேட்கை மேலெழும், எல்லாமே சகஜமாகவும் வேடிக் கையாகவும் தென்படும். 
இவ்வாறாக, ஒரு நாள் பூங்கா ரெஸ்டாரெண்டில் அவர் உணவருந்திக் கொண்டிருக்கையில், பெரெட் தொப்பிய ணிந்த நங்கை நிதானமாக நடந்து வந்து பக்கத்து மேஜை யெதிரே அமர்ந்தாள். அவளது முகபாவம், நடை, உடை, முடி ஒப்பனை எல்லாமே அவள் நாகரிக சமூகத்தைச் சேர்ந் தவள், மணமானவள், யால்தாவுக்கு முதல் தடவையாக வந்திருக்கிறாள், இங்கே அவளுக்குச் சலிப்பு தட்டி விட் டது என்பவற்றைக் காட்டின. யால்தா வருபவர்களது ஒழுக்கக்கேடு பற்றிய கதைகளில் பெரும்பாலானவை வெறும் புரளி, தம்மால் முடிந்தால் சந்தோஷமாக வரம் பைக் கடந்திருக்கக் கூடியவர்கள் இட்டுக்கட்டிய கற்பனை என்பது கூரொவுக்குத் தெரியும், அவர் இவற்றைக் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. ஆயினும் தம்மிடமிருந்து மூன்று தப்படி தள்ளிப் பக்கத்து மேஜை முன்னால் அந்தச் சீமாட்டி வந்தமர்ந்ததும் சுலபமான வெற்றிகளையும், மலைக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதையும் பற்றிய இந்தக் கதைகள் அவர் நினைவுக்கு வந்தன; சொற்பகாலத் தொடர்பு கொள்வது, அறிமுகமற்ற, பெயர் கூடத் தெரி யாத பெண்ணுடன் காதல் லீலை புரிவது என்ற மனோகர மான எண்ணம் அவரைத் திடீரென ஆட்கொண்டது. 
சீமாட்டியின் நாயைச் செல்லமாகச் சுடக்குப் போட்டுக் கூப்பிட்டு, அது பக்கத்தில் வந்ததும் விரலை ஆட்டி அதைப் பயமுறுத்தினார். நாய் உறுமியது. கூரொவ் மீண்டும் விரலை ஆட்டினார். 
சீமாட்டி அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு மறு கணமே கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். 
‘கடிக்காது’” என்று சொன்னாள்; அவள் முகம் கன்றிச் சிவந்தது. 
இதற்கு எலும்புத் துண்டு கொடுக்கலாமா?” என்று கேட்ட கூரொவ், அவள் தலையசைப்பால் சம்மதம் தெரிவித்தமே, "நீங்கள் யால்தா வந்து அதிக நாள் ஆகிறதோ?” என்று நேசம் தொனிக்க வினவினார். 

'ஐந்து நாளாகிறது. 
'நான் இங்கே இரண்டாவது வாரத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். 
இருவரும் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள். “நாட்கள் என்னவோ விரைவாகத்தான் ஓடுகின்றன, ஆனபோதிலும் ஏனோ இங்கே ஒரே சலிப்பாயிருக்கிறது!” என்று அவரை நோக்காமலே கூறினாள் அவள். 

'சலிப்பாயிருக்கிறது என்று சொல்வது வெறும் சம்பிரதாயம்தான். 
பேல்யேவ், ஷிஸ்த்ரா போன்ற மூலை முடுக்குகளில் வசிக்கும் போது யாருக்கும் சலிப்பு உண்டாவதில்லை. ஆனால் இங்கே வந்ததும், 'ஐயோ, ஒரே சலிப்பு! ஐயோ, ஒரே புழுதி!' என்று முறையிட ஆரம்பித்து விடுகிறார்கள், ஏதோ இப்போதுதான் ஸ்பா னிய நகர் கிரநாடாவிலிருந்து நேரே வந்து இறங்கியவர் கள் போல.” 
அவள் சிரித்தாள். பின்பு இருவரும் அறிமுகமற்றவர் கள் போலப் பேசாமல் உணவருந்தினார்கள். ஆயினும் சாப்பாட்டுக்குப் பின் இருவரும் சேர்ந்து வெளியேறி, எங்கு போனாலும், எதைப் பற்றிப் பேசினாலும் ஒன்று தான் என்ற மனோபாவங் கொண்ட, கட்டற்ற, குதூகல மான மனிதர்கள் போன்று, வேடிக்கையும் விளையாட்டு மாக உரையாடலானார்கள். உலாவியவாறே, கடல் மீது தென்பட்ட விந்தையான ஒளியைப் பற்றிப் பேசினார்கள்; கடல் நீர் மனோரம்மியமான இளம் ஊதா நிறத்துடன் திகழ்ந்தது; அதன் மீது நிலவொளி தங்க ரேகைகளிட் டது. பகல் வெக்கைக்குப் பின் ஒரே புழுக்கமாயிருப்பதைப் பற்றி வார்த்தையாடினார்கள். தாம் மாஸ்கோவாசி என் றும், கல்லூரியில் மொழி இயல் கற்றதாகவும், ஆனால் வங்கியில் வேலை செய்வதாகவும், தனியார் இசைநாடகக் குழுவில் பாடுவதற்கு ஒரு காலத்தில் பயின்றதாகவும் பின்பு அந்த எண்ணத்தை விட்டதாகவும், மாஸ் கோவில் தனக்கு இரண்டு சொந்த வீடுகள் இருப்பதாக வும் கூரொவ் அவளிடம் சொன்னார். அவள் பீட்டர்ஸ்பர் கில் வளர்ந்ததாகவும் எஸ். என்ற நகரில் வாழ்க்கைப் பட்டதாகவும், இரண்டு ஆண்டுகளாக அவ்வூரில் இருந்து வருவதாகவும், யால்தாவில் இன்னும் ஒரு மாதம் தங்கப் போவதாகவும்,அவளது கணவரும் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவதாகவும், எனவே அவரும் யால்தாவுக்கு வரக் கூடுமென்றும் கூரொவ் அவளிடமிருந்து தெரிந்து கொண் டார். கணவர் வேலை செய்வது குபேர்னியா நிர்வாகக் கவுன்சிலிலா அல்லது சேம்ஸ்த்வோ போர்டிலா என அவ 
ளால் தெளிவாகக் கூற முடியவில்லை. அவளுக்கே இது வேடிக்கையாயிருந்தது. அவளது பெயர் ஆன்னா செர்கேயிவ்னா என்பதையும் கூரொவ் தெரிந்து கொண்டார். 

ஓட்டல் அறைக்குத் திரும்பிய பின்னர் கூரொவ் அவளைப் பற்றி எண்ணமிட்டார். மறுநாள் தாம் அவளைச் சந்திப்பது நிச்சயம், கட்டாயம் சந்தித்தாக வேண்டும் என நினைத்தார். உறங்குவதற்காகப் படுத்தவர், மிகச் சமீ பத்தில்தான் அவள் உயர்நிலைப் பள்ளி மாணவியாயிருந் தாள் என்பதையும் இப்போது தமது மகள் படிப்பது போலவே பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தாள் என் பதையும் நினைவு கூர்ந்தார்; அவளது சிரிப்பிலும், பழக்க மில்லாதவனுடன் பேசும் விதத்திலும் எவ்வளவு கூச்சமும் தயக்கமும் காணப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதல் தடவையாக அவள் தனியாயிருக்கிறாள் போலும், ஆண்கள் அவளை ஒரேயொரு மறைமுக நோக்கத்துடன் (இந்த நோக்கத்தை அவள் ஊகிக்காமலிருக்க முடியாது) பின் தொடர்வதற்கும், உற்றுப் பார்ப்பதற்கும் அவளுடன் உரையாடுவதற்கும் வாய்ப்பான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது போலும் என்று எண்ணினார். அவளது நேர்த்தியான மெல்லிய கழுத்தையும் அழகிய சாம்பல் நிறக் கண்களையும் நினைத்துப் பார்த்தார். 

அவளிடம் ஏதோ ஏக்கம் இருக்கிறது'’ எனச் சிந்தித்தவாறே உறங்கிப் போனார். 


அவர்கள் பரிச்சயமாகி ஒரு வாரம் கடந்து விட்டது. அன்று விழா நாள். அறைக்குள் ஒரே புழுக்கம், வெளி யிலோ சூறைக் காற்று படலம் படலமாகப் புழுதியைக் கிளப்பியது, தொப்பிகளைத் தலைகளிலிருந்து பறக்கடித் தது. நாள் முழுதும் தாகம் எடுத்த வண்ணமாயிருந் தது. கூரொவ் அடிக்கடி கபேக்குப் போய் ஷர்பத்தும் ஐஸ் கிரீமும் வாங்கி வருவதும் ஆன்னா செர்கேயிவ்னாவுக்கு உபசாரம் செய்வதுமாயிருந்தார். வெக்கை பொறுக்க முடியவில்லை. 
மாலையில் காற்று அடங்கியதும் அவர்கள் கப்பல் வரு வதைப் பார்க்கும் பொருட்டுத் துறைமுகம் சென்றார்கள். கப்பல் துறையில் ஏராளமானோர் குறுக்கும் நெடுக்கும் உலாவியவாறு, யாரையோ வரவேற்பதற்காகப் பூச் செண்டுகளுடன் காத்திருந்தார்கள். நாகரிக யால்தாக் கூட்டத்தின் இரண்டு சிறப்பியல்புகள் அங்கே சட்டெனக் கண்ணில் பட்டன: முதலாவது, வயது முதிர்ந்த சீமாட்டி கள் யுவதிகள் போன்று உடையணிந்து கொண்டிருந் தார்கள்; இரண்டாவது, ஜனரல்களின் தொகை அதிகமாயிருந்தது. 

கடலில் கொந்தளிப்பு மிகுந்திருந்த படியால் கப்பல் தாமதித்து, சூரியன் மறைந்த பின்பே வந்து சேர்ந்தது; துறையோரமாக நிறுத்தப்படுவதற்கு முன்னர் நெடு நேரம் இப்புறமும் அப்புறமும் திரும்பிச் சாரி பாய்ந்தது. ஆன்னா செர்கேயிவ்னா தெரிந்தவர் யாரையோ தேடுபவள் போலக் கப்பலையும் பிரயாணிகளையும் காட்சிக் கண்ணாடி வழியே துருவிப் பார்த்தாள். பின்னர் கூரொவ் பக்கம் திரும்பிய போது அவள் விழிகள் பளிச்சிட்டன. மிக அதிகமாகப் பேசினாள், சரமாரியாகக் கேள்விகளைப் பொழிந்தாள், எதைப் பற்றிக் கேட்டோம் என்பதை அக் கணமே மறந்து விட்டாள். பிறகு காட்சிக் கண்ணாடியைக் கூட்டத்தில் தவறவிட்டு விட்டாள். 
நாகரிகக் கும்பல் கலைந்து சென்றது, முகங்கள் கண் ணுக்குத் தெரியவில்லை, காற்று அடங்கி விட்டது, ஆயி னும் கூரொவும் ஆன்னா செர்கேயிவ்னாவும், கப்பலிலிருந்து இன்னும் யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்ப் பவர்கள் போல நின்று கொண்டிருந்தார்கள். ஆன்னா செர் கேயிவ்னா பேசுவதை நிறுத்திவிட்டு கூரொவை நோக் காமல் மலர்களை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். 
“பருவநிலை நல்லதாகி இனிமையான மாலையாக மாறி விட்டது. இப்போது நாம் எங்கே போகலாம்? எங்காவது வண்டியில் செல்வோமா?” என்றார் கூரொவ். 
அவள் பதில் பேசவில்லை. 
அவர் அவளையே நிலையாக நோக்கிக் கொண்டிருந்து விட்டுத் திடீரென அவளைக் கட்டித் தழுவி உதடுகளில் முத்தமிட்டார். மலர்களின் நறு மணமும் ஈரிப்பும் அவரைச் சூழ்ந்தன. மறு கணமே யாரேனும் பார்த்து விட்டார்களோ என்று அச்சத்துடன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தார். 
'உங்கள் அறைக்குப் போவோம்... என்று தணி வான குரலில் சொன்னார். 
ருவரும் விரைந்து நடந்தார்கள். 
அறையில் இறுக்கமாயிருந்தது. ஜப்பானியக் கடையில் அவள் வாங்கியிருந்த ஏதோ ஒருவகை அத்தரின் மணம் வீசியது. இப்போது அவள் மீது கண்ணோட்டிய கூரொவ், வாழ்க்கையில்தான் எத்தகைய விந்தைச் சந்திப்புகள் நிகழ்கின்றன!” என எண்ணமிட்டார்.அவருடன் உடலுறவு கொண்ட பலவகையான மாதரையும் பற்றிய நினைவு கள் அவர் மனத்துள் எழுந்தன. அவர்களில் சிலர் கவலை யற்ற, இனிய சுபாவமுள்ள பெண்கள்; உடலுறவில் இன் பமுற்றவர்கள்; மிக மிகக் குறுகிய நேரத்திற்கேயாயினும் தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததற்காக அவரிடம் நன்றி பாராட்டியவர்கள். அவர் மனைவியைப் போன்ற வேறு சிலரோ, உண்மை ஆர்வம் இன்றி, வெட்டிப் பேச்சும், பசப்பும், நடிப்புமாக, இதெல்லாம் வெறும் களியாட் டமோ வேட்கையோ அல்ல, அதனிலும் ஆழ்ந்த மகத்து வம் வாய்ந்தது என்பது போன்ற பாவனையுடன் காதல் புரிந்தவர்கள். மற்றும் நல்ல அழகிகளான இரண்டு மூன்று பெண்கள் இருந்தனர், விறுவிறுப்பு இழந்து போனவர் கள், வாழ்க்கை வழங்கக் கூடியதைக் காட்டிலும் அதிக இன்பத்தை அதனிடமிருந்து வலிந்து பெற வேண்டுமென்ற வைராக்கியத்தின் மூர்க்க வெறி இவர்களது முகபாவத் தில் பளிச்சிட்டு மறையும். இவர்கள் புத்திளமையைக் கடந்தவர்கள், சபல சித்தமுள்ளவர்கள், கோணப் புத்தி யும் கொடுமனமும் கொண்டவர்கள், மதியீனர். இவர் களிடம் கூரொவுக்கு இருந்த மோகம் அடங்கியதும், அவ ருக்கு இவர்களது அழகு வெறுப்பையே ஊட்டியது; இவர் உள்ளாடைகளின் ஓர ஒப்பனைப் பின்னல்கள் மீன் செதிள்களைத்தான் நினைவுபடுத்தின. 

இங்கேயோ, அனுபவமில்லாத இளமையின் பேதமை யும் தடுமாற்றமும் கூச்சமும் வெளிப்படையாகப் புலப் பட்டன. இதற்றோடு, யாரோ திடீரெனக் கதவைத் தட்டி விட்டது போல, ஒருவகையான பதைபதைப்பும் தென் பட்டது. “நாய்க்காரச் சீமாட்டி” ஆன்னா செர்கேயிவ்னா, நடந்த விவகாரத்தை விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த தாக, ஆழ்ந்த தன்மை கொண்டதாக, தனது வீழ்ச்சியாகக் கருதுவது போன்று தோன்றியது. இது கூரொவுக்கு விந் தையாகவும் பொருத்தமற்றதாகவும் பட்டது. ஏக்கமும் சோர்வும் குடி கொண்ட அவளது முகத்தின் இரு மருங் கிலும் நீண்ட கூந்தல் சோகமாகத் தொங்கியது. பழம் பெரும் ஓவியங்களில் காணக் கூடிய பாவிப் பெண் போன்று வருத்தத்துடன் சிந்தனையிலாழ்ந்திருந்தாள். 
இது சரியல்ல. இனி நீங்களே என்னை மதிக்கமாட் டீர்கள்” என்றாள். 
மேஜை மேல் முலாம் பழம் இருந்தது. கூரொவ் அதில் ஒரு சிறு துண்டு நறுக்கி, நிதானமாகத் தின்ன ஆரம்பித் தார். யாரும் பேசவில்லை, குறைந்தது அரைமணி நேரம் இப்படிக் கழிந்திருக்கும். 
ஆன்னா செர்கேயிவ்னாவைப் பார்க்கப் பரிதாபமாயிருந் தது. வாழ்க்கையை அதிகம் அறியாத, பேதைமை வாய்ந்த ஒரு நல்ல பெண்ணுக்குரிய தூய்மை அவளிடமிருந்து வெளிப்பட்டது. மேஜை மேல் எரிந்து கொண்டிருந்த ஒற்றை மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் அவளது முகம் சரிவர தெரியவில்லை, ஆயினும், நெஞ்சு பொறுக்க மாட்டாதவளாய் அவள் வேதனைப்பட்டாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. 
"எதற்காக நான் உன்னை மதிக்க மாட்டேன் என்கிறாய்? அர்த்தமில்லாத பேச்சாய் என்ன சொல்வது என்று தொரியாமல் இருக்கிறதே” என்றார் கூரொவ். 
“கடவுள் என்னை மன்னிப்பாராக!” என்று கண்களில் கண்ணீர் ததும்பக் கூவினாள் அவள். "பயங்கரம், பயங் கரம்” என்றார். 

சமாதானம் தேடிக் கொள்ளத் தேவையில்லையே.” “என் செயலுக்குச் சமாதானம் ஏது? நான் கெட்ட வள், இழிந்தவள். என்னை இகழ்ந்து கொள்கிறேனே தவிர சமாதானம் தேடிக் கொள்ள நினைக்கவில்லை. கணவரை அல்ல, என்னையே நான் ஏமாற்றிக் கொண்டு விட்டேன். இப்பொழுது மட்டும் அல்ல, எவ்வளவோ காலமாக என்னையே ஏமாற்றிக் கொண்டு வருகிறேன். என் கணவர் நேர்மையானவராக, தகுதி வாய்ந்தவராக இருக்கலாம், ஆனால், நிச்சயமாக அவர் சரியான அடிவருடி! அலுவலகத் தில் அவர் என்ன செய்கிறாரோ, என்ன வேலை பார்க் கிறாரோ அறியேன், ஆனால் அண்டிப் பிழைக்கும் அடிவருடி என்பது மட்டும் எனக்குத் தெரியும். அவருக்கு வாழ்க்கைப் பட்ட போது எனக்கு இருபது வயது; அடங்கா ஆவல் என்னை அலக்கழித்தது; நான் நாடியது மேன்மை வாய்ந் தது. வேறு விதமான வாழ்க்கை இருக்கத்தான் வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். வாழ விரும்பி னேன்! நன்கு வாழ, முழுமையாக வாழ... அடங்கா ஆவல் என்னை அரித்துத் தின்றது... உங்களுக்கு அது புரியாது, ஆனால் ஆண்டவன் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்னால் என்னை அடக்கியாள முடியவில்லை, எனக்கு ஏதோ நேர்ந்து விட்டது, கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலாது போயிற்று. உடம்பு சரியாயில்லை என்று கணவரிடம் சொல்லிவிட்டு இங்கே வந்தேன்... மதிமயங்கிய நிலையில், பைத்தியக்காரி போல இங்கே நான் சுற்றித் திரிந்து கொண்டிருந்தேன்... ஆனால் இதோ நான் கேவலமான பிறவியாய், உருப்படாதவளாய், எல்லாருடைய இகழ்ச் சிக்கும் உரியவளாய் விட்டேன்.” 
கூரொவுக்கு இந்தப் பேச்சைக் கேட்கச் சலிப்பாயிருந் தது. அவளது வெகுளித்தனமும் சிறிதும் எதிர்பாராத, கொஞ்சமும் பொருத்தமில்லாத அவளது அங்கலாய்ப்பும் அவருக்கு எரிச்சலையே உண்டாக்கியது. விழிகளில் கண்ணீர் இல்லாதிருந்தால் அவள் வேடிக்கை செய்கிறாள், அல்லது நடிக்கிறாள் என்று எண்ணியிருப்பார். 
எனக்குப் புரியவில்லை. உனக்கு என்ன வேண்டும் என்கிறாய்?’” என்று சாந்தமான குரலில் 
அவர். 
கேட்டார் 
அவரது மார்பிலே முகத்தைப் புதைத்து அவரோடு ஒண்டிக் கொண்டாள் அவள். 
“நம்புங்கள், கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், என்னை நம்புங்கள்... நேர்மையான, தூய்மை வாய்ந்த வாழ்க் கையே எனக்கு வேண்டும். கெட்டதை என்னால் சகிக்க முடியாது. என் செயல் எனக்கே விளங்குவதாய் இல்லை. சாதாரண மக்கள் சொல்வார்கள்: 'பிசாசு பிடித்து விட் டது' என்று. எனக்குப் பிசாசு பிடித்திருப்பதாகத்தான் இப்போது நானும் சொல்லிக் கொள்ள வேண்டும்’’ என்றாள். 
வேண்டாம், வேண்டாம்...” என முணுமுணுத்தார் 
கூரொவ். 
அவளது நிலைக்குத்திட்ட, கிலி கொண்ட விழிகளுள் உற்று நோக்கி, அவளை முத்தமிட்டு, தணிந்த குரலில் கொஞ்சலாகத் தேறுதல் கூறினார். சிறிது சிறிதாக அவள் நிம்மதியடைந்தாள். அவளுக்கு உற்சாகம் பிறந்தது. 
இருவரும் சிரிக்கலானார்கள். 
சற்று நேரத்துக்குப் பின் அவர்கள் வெளியே சென்ற போது 
கரையோர நடைபாதையில் எந்த ஆத்மாவும் இல்லை. சைப்ரஸ் மரங்களுடன் நகரம் உயிரற்றதாகத் தோன்றியது. கடல் மட்டும் பேரிரைச்சலுடன் கரையில் மோதிக் கொண்டிருந்தது. தன்னந்தனியான மீன்படகு 
ஒன்று அலைகள் மேல் அசைந்தாடியது, அதிலிருந்த விளக்கு தூங்கி வழிவது போல மினுமினுத்தது. 
குதிரைவண்டி ஒன்றைத் தேடிப் பிடித்து ஏறிக் கொண் இருவரும் ஓரியாந்தாவுக்குச் சென்றார்கள். 
“நடையில் மாட்டியிருந்த முகவரிப் பலகையைப் பார்த்து உனது குடும்பப் பெயரை இப்போதுதான் தெரிந்து கொண்டேன். வான் திதெரித்ஸ் என்று எழுதி யிருந்தது. உன்னுடைய கணவர் ஜெர்மானியரா?”” என்று கேட்டார் கூரொவ். 

'இல்லை. 
அவருடைய பாட்டனார் ஜெர்மானியர் போலிருக்கிறது. அவர்  ருஷ்யச் சத்திய சமயத்தவர் 
தான். 
ஓரியாந்தா சேர்ந்ததும், மாதாகோயிலின் அருகே பெஞ்சியில் அமர்ந்து, கீழே கடலை நோக்கியவாறு மாயிருந்தார்கள். காலை மூடுபனிக்கிடையே யால்தா நகர் தெளிவின்றி மங்கலாகத் தெரிந்தது. மலைச்சிகரங்களுக்கு மேல் அசையாது நின்றன வெண் முகில்கள். மரங்களில் இலைகள் சிலுசிலுக்கவில்லை. வெட்டுக் கிளிகள் சிலம்பின. கடலின் ஒரே மாதிரியான, ஆழ்ந்த முழக்கம் கீழிருந்து வந்து, அமைதி பற்றி, நம் எல்லோருக்கும் நேரவிருக்கும் மீளா உறக்கம் பற்றி உரையாடியது. யால் தாவோ ஓரியாந் தாவோ இல்லாத காலத்திலும் கடல் இவ்வாறே முழங் கியது, இப்போதும் முழுங்குகிறது, நாம் மறைந்த பிறகும் இதே போல எதையும் பொருட்படுத்தாமல் ஆழ்ந்து முழுங்கிக் கொண்டிருக்கப் போகிறது. இந்த இடையறாத தன்மையில், வாழ்வையும் சாவையும் பற்றிய இந்த முழுமையான அலட்சியபாவத்தில்தான் நமது நிலையான கடைத்தேற்றம், உலகில் உயிர்க்குலத்தின் நிரந்தர இயக் கம், ஓயாத மேம்பாடு ஆகியவற்றின் மர்மம் அடங்கி யிருக்கிறது போலும். ள நங்கையின் அருகே—கடல், மலைகள், மேகங்கள், விரிந்த வானவெளி ஆகியவற்றின் மோகனச் சூழ்நிலையின் சௌந்தரியத்தில் சொக்கிப் போய், அமைதியடைந்து வைகறையின் மெல்லொளியில் எழிலின் உருவாகத் திகழ்ந்த யுவதியின் அருகே- அமர்ந்தவாறு, கூரொவ் சிந்தித்தார்: பார்க்கப் போனால் இவ்வுலகத்தில் எல்லாமே உண்மையில் வனப்பு வாய்ந் தவையே-எல்லாமே, அதாவது, வாழ்வின் மேலான இலட்சியங்களையும் மனித மாண்பினையும் மறந்துவிடும் போது நாம் எண்ணும் எண்ணங்களையும் செய்யும் செயல் களையும் தவிர, எல்லாமே வனப்பு வாய்ந்தவையே என்று தம்முள் கூறிக் கொண்டார். 
யாரோ ஒருவன்- காவலாளாயிருக்கும்—பக்கத்தில் வந்து அவர்களை உற்றுப் பார்த்துவிட்டு அப்பால் சென்றான். இதிலுங்கூட ஏதோ மர்மமும் அழகும் மிளிர் வதாகத் தோன்றியது. பியதோஸியாவிலிருந்து வரும் 

கப்பல், விளக்குகள் இன்றி, துறையை 
துறையை நெருங்குவது காலைப் புலரொளியில் பளிச்செனத் தெரிந்தது. 
“புல்லில் பனி படிந்திருக்கிறது'' என நீண்ட மௌனத்துக்குப் பிறகு கூறினாள் ஆன்னா செர்கேயிவ்னா. ஆமாம். திரும்பிச் செல்வோம், நேரமாகி விட்டது.’’ 
நகருக்குத் திரும்பினார்கள். 
இதன் பின்னர் தினந்தோறும் நடுப்பகலில் அவர்கள் கரையோர நடைபாதையில் சந்தித்தார்கள், பகலுணவும் மாலையுணவும் சேர்ந்து அருந்தினார்கள், உலாவினார்கள், கடலைக் கண்டு வியந்தார்கள். அவள் தனக்குத் தூக்கம் வருவதில்லையென்றும், நெஞ்சு படபடக்கிறதென்றும் குறை பட்டுக் கொண்டாள். ஒரே மாதிரியான கேள்வி களை திரும்பத் திரும்பக் கேட்டாள். ஒரு சமயம் பொறாமையாலும், இன்னொரு சமயம் அவர் தன்னைப் போதிய அளவு மதிக்கவில்லையோ என்ற அச்சத்தாலும் துன்புற்றாள். அடிக்கடி அவர், சதுக்கத்திலோ பூங்கா விலோ சுற்றுமுற்றும் யாரும் இல்லாத நேரம் பார்த்து, அவளை அருகே இழுத்துத் தழுவி ஆவேசமாக முத்த மிடுவார். ஒருவித வேலையுமற்ற சுகவாழ்வு; யாரேனும் பார்த்துவிடப் போகிறார்களே என்ற அச்சத்துடன் 
சுற்றுமுற்றும் கண்ணோட்டியவாறு பட்டப் பகலில் முத்த மிட்டுக் காஞ்சுதல்; வெக்கை; கடல் வாடை; நன்கு உண்டு நன்கு உடுத்தி வேலை ஏதுமின்றி மிடுக்காய் நடை போடுவோர் ஓயாமல் கண்ணெதிரே தோன்றி மறைந்த காட்சி. -இவை எல்லாம் கூரொவுக்குப் புத்துயிரும் ஊக்கமும் அளிப்பனவாய் இருந்தன. அவர் ஆன்னா செர் கேயிவ்னாவை அழகி என்றும், மோகினி என்றும், மெச் சினார், அடங்காத துடிப்புடன் அவளோடு காதல் புரிந் தார், ஓரடி விலகாமல் அவளையே சுற்றிவந்தார். அவளோ அடிக்கடி சிந்தனையில் ஆழ்ந்தாள், தன்னை அவர் மதிக்க வில்லையென்றும், துளிக்கூடக் காதலிக்கவில்லையென்றும், உதவாக்கரைப் பெண்ணாகவே கருதுவதாகவும் ஒப்புக் கொள்ளுமாறு செய்ய எப்போதும் முயன்று வந்தாள். அநேகமாக ஒவ்வோர் இரவும் அவர்கள் வண்டியிலேறி நகருக்கு வெளியே ஓரியாந்தாவுக்கோ, அருவிக்கரைக்கோ போவார்கள். இந்த உல்லாசப் பயணங்கள் இன்பமாகவே இருந்தன. இவை ஒவ்வொன்றும் எழிலும் சிறப்பும் மிக்க புதுப் புது மனப்பதிவுகளை அளித்தன. 
அவளுடைய கணவர் வந்து விடுவாரென எதிர்பார்த் தார்கள். ஆனால் அவரிடமிருந்து கடிதம் மட்டுமே வந்தது. கண்நோய் காரணமாகத் தாம் வெளிச்செல்ல முடியாதபடி ஆகி விட்டதால் அவளை உடனே ஊர் திரும்புமாறு அதில் அவர் வேண்டிக் கொண்டிருந்தார். ஆன்னா செர்கேயிவ்னா அவசரமாகப் புறப்பட ஆயத்தம் செய்தாள். 
'நான் போவது நல்லதுதான். இதுவே விதி” என்று கூரொவிடம் கூறினாள். 
யால்தாவிலிருந்து அவள் குதிரைவண்டியில் புறப்பட் டாள். அவரும் ரயில் நிலையம் வரை உடன் சென்றார். பகல் முழுவதும் பயணம் செய்தபின்பே ரயில் நிலையம் சேர்ந்தார்கள். ஆன்னா செர்கேயிவ்னா விரைவு வண்டியில் ஏறி, இடத்தில் அமர்ந்தபின், இரண்டாவது மணி அடித் ததும் அவள் கூரொவிடம், "எங்கே, இப்படித் திரும்புங் கள், இன்னொரு தடவை உங்களைப் பார்க்கிறேன். இன் னும் ஒரே தடவை. அப்படித்தான்” எனக் கூறினாள். 
அழவில்லையாயினும் அவள் ஏக்கமே வடிவாய், நோயுற்றவள் போல அருந்தாள். அவளது உதடுகள் துடித்தன. 
“உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன்... உங்கள் நினைவாகவே இருப்பேன். ஆண்டவன் உங்களுக்கு அருள்வாராக. என்னைப் பற்றிக் கெடுதலாக நினைக்காதீர் கள். நாம் ஒரேயடியாகப் பிரிகிறோம், மீண்டும் சந்திக் கவே மாட்டோம். அதுதான் சரி, ஏனெனில் நாம் சந்தித் திருக்கவே கூடாது. நல்லது, விடை கொடுங்கள். கடவுள் உங்களுக்கு அருள் பாலிப்பாராக” என்றாள். 
ரயில் விரைவாகச் சென்று விட்டது, அதன் விளக்கு கள் சீக்கிரமே மறைந்து விட்டன; ஒரு நிமிடத்திற்கெல் லாம் அதன் தடதடப்புக் கூடக் காதில் விழவில்லை— இந்த இன்ப மயக்கத்துக்கு, இந்தப் பித்துக்குச் சட்டென முடிவு கட்டிவிட வேண்டுமென்று எல்லாம் சேர்ந்து திட்டமிட்டுச் சதி புரிந்தாற் போல் யாவும் அமைந்தன. 

கூரொவ்  தாலைவில் பார்வையைச் செலுத்தியவாறு, வெட்டுக் கிளிகளின் கிறீச்சொலியையும், தந்திக் கம்பிகளின் ரீங்காரத்தையும் அப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டவர் போன்ற உணர்ச்சியுடன் கேட் டார். தமது 
வாழ்க்கையில் இது இன்னுமொரு எதிர் பாராத சம்பவம் அல்லது தற்செயல் நிகழ்ச்சி என்றும், இதுவும் முடிந்துவிட்டதென்றும், எஞ்சியிருப்பதெல்லாம் நினைவு மட்டுமே என்றும் எண்ணினார்... அவர் உள்ளம் கரைந்து உருகியது, துயருற்றது. அவருக்கு ஓரளவு பரிதா பமாகவுங்கூட இருந்தது. இனி எந்நாளும் அவளை அவர் பார்க்கப் போவதில்லை, அவருடன் இருக்கையில் இந்த யுவதி உண்மையில் இன்பமடையவில்லை. அவர் அவளிடம் நட்பும் பாசமுமாக இருந்தது மெய்தான்; ஆயினும் அவளுடன் அவர் நடந்து கொண்ட முறையில், அவரு டைய குரலில், கொஞ்சல்களில் கூட, ஏளனத்தின் சாயல் அல்லவா, பாக்கியசாலியான ஆணின், அதிலும் அவளைப் 
பிளாட்பாரத்தில் தனியே நின்று, இருண்ட போல் இரு மடங்கு வயதான ஆணின் மெத்தனமான அகம்பாவச் சாயல் அல்லவா படிந்திருந்தது? அவள் ஓயாமல் அவரை நல்லவரென்றும் அசாதாரண மனித ரென்றும் பெருந்தன்மை வாய்ந்தவரென்றும் கூறி வந் தாள். அவர் உண்மையில் இருப்பது போலன்றி வேறு விதமாய் அவள் கண்ணுக்குத் தோன்றியிருக்க வேண்டும். அப்படியானால் அவர் தம்மையும் அறியாமலே அவளை ஏமாற்றி விட்டார் என்றுதானே அர்த்தம்.... 
ரயில் நிலையத்தில் அதற்குள் இலையுதிர்கால வாடை வீசியது, மாலை குளிராயிருந்தது. 
பிளாட்பாரத்திலிருந்து வெளியே வந்து கொண் டிருந்த கூரொவ், “நானும் வடக்கே போக வேண் டி வேளை வந்து விட்டது. ஆமாம், புறப்பட்டாக வேண் டும்!” என்று தம்முள் கூறிக் கொண்டார். 

அவர் மாஸ்கோவுக்குத் திரும்பி வந்ததும் குளிர்கால நடைமுறைகள் தொடங்கி விட்டன: வீட்டில் கணப்புகள் 
மூட்டப்பட்டன; காலையில் குழந்தைகள் பள்ளி செல்ல ஆயத்தம் செய்து கொண்டு தேநீர் அருந்துகையில் இருட் டாகவே இருந்ததால் ஆயா கொஞ்ச நேரத்துக்கு விளக் கேற்ற வேண்டியிருந்தது. கடுங் குளிர் ஆரம்பித்தது. முதன்முதல் வெண்பனி பெய்து, சறுக்கு வண்டியில் முதல் தரம் சவாரி செய்யும் போது வெண்ணிறத் தரையையும், வெண்ணிறக் கூரைகளையும் காண இனிமையாயிருக்கிறது; தாராளமாக, சிரமமின்றி மூச்சுவிட முடிகிறது; புத் திளமைப் பருவம் நினைவுக்கு வருகிறது. உறை பனி படிந்து வண்மையாக ஒளிரும் முதுபெரும் லிண்டன் மரங்களும் பிர்ச் மரங்களும் பெருந்தன்மை வாய்ந்த தோற்றம் பெறுகின்றன. சைப்ரஸ், கூந்தற்பனை மரங்களைக் காட் டிலும் இவை நமக்கு நெருங்கியவை; இவற்றின் அரு காமையிலிருக்கும் போது மலைகளையும் கடலையும் பற்றிய நினைவுகள் தலை காட்டுவதில்லை. 
கூரொவ் மாஸ்கோவிலேயே பிறந்து வளர்ந்தவர். அவர் மாஸ்கோ திரும்பிய அன்று வானம் தெளிவா யிருந்தது, கடுங்குளிராய் இருந்தது. மென்முடி உள்வரி யிட்ட மேல் கோட்டும் கதகதப்பான கையுறைகளும் அணிந்து பெட்ரோவ்கா வீதிக்கு உலாவச் சென்றார். சனிக்கிழமை மாலை மாதாகோயில் மணியோசையைக் கேட்டதும், அண்மையில் முடிவுற்ற அவரது பயணமும் அவர் சென்றிருந்த இடங்களும் அவற்றின் கவர்ச்சியை அறவே இழந்து விட்டன. கொஞ்சங்கொஞ்சமாக அவர் மாஸ்கோ வாழ்க்கையில் மூழ்கலானார். தினந்தோறும் மூன்று செய்தியேடுகள் படித்தார், ஆனால் மாஸ்கோச் செய்தியேடுகளைப் படிப்பதில்லை என்பது தமது கோட்பா டென்று சொல்லிக் கொண்டார். ரெஸ்டாரெண்டுகள், கிளப்புகள், விருந்துகள், கொண்டாட்டங்கள் ஆகிய இந்த சுழல் திரும்பவும் அவரைத் தன்னுள் இழுத்துச் சென்றது. பெயர் பெற்ற வழக்கறிஞர்களும் நடிகர்களும் தமது வீட்டுக்கு வந்து செல்வது பற்றியும், மருத்துவர் கிளப்பில் தாம் ஒரு பேராசிரியருடன் சீட்டாடுவது பற்றியும் முன்பு போலவே பெருமைப்பட்டுக் கொண் டார்... இப்போது அவர் பாடு ஒரே வேட்டை தான்.... ஒரு மாதம் கழிந்ததும் ஆன்னா செர்கேயிவ்னாவின் 
நினைவு மங்கிவிடும், பரிதாபத்துக்குரிய அவளது புன்னகை யுடன், ஏனைய பல பெண்களைப் போல் கனவிலே மட்டும் எப்போதாவது காட்சி தருவாள் என்றுதான் கூரொவ் நினைத்தார். ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் கழிந்து; குளிர் காலம் அதன் உச்சத்தை அடைந்து விட்டது, அப் போதும் ஏதோ முந்திய நாள்தான் ஆன்னா செர்கேயிவ் னாவை விட்டுப் பிரிந்தது போல அவர் நினைவில் யாவும் பசுமையாயிருந்தன. அது மட்டுமல்ல, நாளாக ஆக இந்த நினைவுகள் அதிக வலிவடைந்து வந்தன. சந்தடி யற்ற மாலை நேரத்தில், பாடங் கற்கும் குழந்தைகளின் குரல்கள் அவரது படிப்பு அறைக்கு எட்டும் பொழுதும், ரெஸ்டாரெண்டில் அவர் பாட்டோ, ஆர்கன் வாத்திய இசையோ கேட்கும் பொழுதும், கணப்புப் புகைபோக் கியில் பனிப்புயல் இரையும் பொழுதும், கப்பல் துறையில் நடந்தவை, மலைகள் மீது மூடுபனி அடர்ந்த அதிகாலை, பியதோஸியாவிலிருந்து வரும் கப்பல், ஆசை முத்தங்கள் எல்லாம் சட்டென அவர் நினைவுக்கு வந்துவிடும். நிகழ்ந்த வற்றை எண்ணிப் பார்த்தவாறே அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்; சிரிப்பார். அப்புறம் நினைவுகள் கனவுகளாக மாறும், நடந்தவை நடக்கப் போகிறவற் றுடன் கற்பனையில் கலந்துவிடும். ஆன்னா செர்கேயிவ்னா அவர் கனவில் தோன்றவில்லை, நிழல் போல எங்கும் அவர் பின் சென்றாள், எப்போதும் அவரைத் தொடர்ந் தாள். கண்களை அவர் மூட வேண்டியதுதான், உடனே உயிரோவியமாக எதிரே அவள் காட்சியளித்தாள், 
உண்மையிலிருந்ததை விட அதிக வனப்புடனும், அதிக இளமையுடனும், அதிக ஒயிலுடனும் தோன்றினாள். தம் மையும் அவர் யால்தாவில் இருந்ததைவிட நல்லவராக இருக்கக் கண்டார். மாலை வேளைகளில் புத்தக அலமாரி களிலிருந்தும், கணப்பிலிருந்தும், மூலையிலிருந்தும் அவள் எட்டிப்பார்த்தாள்; அவள் மூச்சு விடுவதும், அவளது ஆடை இனிமையாகச் சரசரப்பதும் அவர் காதில் விழுந் தன வீதியில் செல்லுங்கால் எல்லாப் பெண்களையும் விழிகளால் தொடர்ந்து, அவளைப் போன்றவள் யாராவது இருக்கிறாளா என்று தேடினார். 

தமது அனுபவங்களை யாரிடமாவது சொல்ல வேண்டு மென்ற அடங்கா ஆசை அவரை ஆட்கொண்டது. ஆனால் வீட்டில் காதலைப் பற்றிப் பேச முடியாது, வெளியே மனம் விட்டுப் பேச யாருமில்லை. குடியிருப்பவர் களிடமோ, வங்கியில் சக ஊழியர்களிடமோ சொல்வதற் கில்லை. தவிர, என்னத்தைச் சொல்வது? அப்போது அவர் காதலித்தாரா என்ன? ஆன்னா செர்கேயிவ்னாவுடன் அவருக்கு இருந்த உறவினில் எழிலார்ந்ததோ, கவிதை நயமுடையதோ, அறிவுறுத்துவதோ, அல்லது சுவை யானதோ கூட ஏதேனும் இருந்ததா? ஆகவே காதலைப் பற்றியும் பெண்களைப் பற்றியும் பொதுப்பட பேசுவ துடன் திருப்தியடைய வேண்டியிருந்தது. அவர் என்ன சொல்ல விரும்பினார் என்று யாருக்கும் விளங்கவில்லை. அவருடைய மனைவி மட்டும் கரும் புருவங்கள் துடிக்க, "இந்தா, திமீத்திரி, கோமாளி வேஷம் உனக்குக் கொஞ் சங்கூடப் பொருத்தமாய் இல்லை'' என்று சீறினாள். 
ஒரு நாள் இரவு மருத்துவர் கிளப்பில் சீட்டாடி விட்டு சக ஆட்டக்காரர்களில் ஒருவரான அரசாங்க அலுவல ருடன் சேர்ந்து புறப்படுகையில் அடக்க மாட்டாமல் கூரொவ் அவரிடம் கூறினார்: 
'யால்தாவிலே எவ்வளவு அற்புதமான பெண்ணுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது தெரியுமா உங்களுக்கு?” அந்த அலுவலர் பேசாமல் சறுக்கு வண்டியில் ஏறி உட்கார்ந்த பின் சட்டெனத் திரும்பிக் கூப்பிட்டார்: 
"beத்ரி திமீத்ரிச்!” 
"" GT GOT GOT?", 

‘நீங்கள் சொன்னது சரிதான்: மீன் கறியில் கவிச்சு தான் அடித்தது!” 
சர்வசாதாரணமான விவரம்தான், ஏனோ கூரொவை இது கொதிப்புறச் செய்தது. அவமானப் படுத்துவதாய், அசிங்கமானதாய் அவருக்குப் பட்டது. எல்லாம் காட்டு மிராண்டி முறைகள்! மோசமான மனிதர்கள்! ஒன்றுக்கும் உதவாத மாலைப் பொழுதுகள்! உப்பு சப்பற்ற, வெறுமை யான பகல்கள்! வெறித்தனமான சீட்டாட்டம், வயிறு புடைக்க சாப்பாடு, மிதமிஞ்சிய குடி, ஒரே விஷயத்தைப் பற்றிய ஓயாத பேச்சு. பெரும் பகுதி நேரமும் சக்தியும் யாருக்கும் பயனில்லாத வீண் வேலைகளிலும் திரும்பத் திரும்ப ஒன்றையே விவாதிப்பதிலும் விரையமாகின்றன. றுதி விளைவு என்னவெனில் குறுகிச் சிறுத்து மண்ணிலே உளையும்படியான: கேவலமான வாழ்வுதான், புன்மை வாய்ந்த அற்பங்களில் சூழலுவதுதான். இதிலிருந்து தப்பியோடவும் வழியில்லை. பைத்தியக்கார மருத்துவ மனையிலோ, கைதிகளது குடியிருப்பிலோ அடைபட்டிருப் பது போன்ற நிலைமை! 
கூரொவ் இராத் தூக்கமின்றி ஆத்திரத்தால் கொதித்துக் கொண்டிருந்தார், மறு நாள் முழுதும் தலை வலி 
அவரை வருத்திற்று. அடுத்த இரவுகளிலும் சரி வரத் தூங்க முடியாமல் படுக்கையில் உட்கார்ந்து சிந்தித் தார்,இல்லையேல் அறையில் மேலுங் கீழுமாக நடைபோட் டார். குழந்தைகளைக் கண்டாலே கரித்தது, வங்கியை நினைத்ததுமே கசந்தது. எங்குமே போகப் பிடிக்கவில்லை, எதைப் பற்றியும் பேச விருப்பமில்லை. 
டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது அவர் பயணத்துக்கு ஆயத்தம் செய்தார். ஓர் இளைஞனின் காரியமாகப் பீட்டர்ஸ்பர்க் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு, எஸ். நகருக்குச் சென்றார். எதற்காக? அவருக்கே தெளிவாகத் தெரியவில்லை. ஆன்னா செர்கே யிவ்னாவைப் பார்த்துப் பேச வேண்டும், முடிந்தால் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் தெரிந்தது. 
எஸ். நகருக்குக் காலையில் போய்ச் சேர்ந்து, ஹோட் டலில் யாவற்றிலும் சிறந்த அறையாகப் பார்த்து அமர்த்திக் கொண்டார். அறையில் தரை முழுவதும் இராணுவக் கம்பள விரிப்பிடப் பட்டிருந்தது; 
மேஜை மேல் தூசிபடிந்த மசிக்கூடு இருந்தது. உயர்த்திய கரத்தில் தொப்பியைப் பிடித்தவாறு குதிரைச் சவாரி செய்யும் தலையில்லா வீரனின் உருவம் இந்த மசிக்கூட்டை அலங்கரித்தது. ஹோட்டல் காவலாள் அவருக்கு வேண்டிய தகவல்களைத் தெரிவித்தான்: அதா வது, வான் திதெரித்ஸ் ஸ்தாரோ-கன்சார்நயா வீதியில் சொந்த வீட்டில் வசிப்பதாகவும், ஹோட்டலிலிருந்து வீடு தூரமில்லை என்றும், அவர் செல்வச் செழிப்புடன் வாழ் வதாகவும், சொந்தக் குதிரைகளும் வண்டியும் வைத்திருப்பதாகவும், ஊர் முழுவதும் அவரை அறியுமென்றும் சொன்னான். அவரது பெயரை த்ரீதீரித்ஸ் என உச்சரித் தான் காவலாள். 

கூரொவ் அவசரமின்றி நடந்து, ஸ்தாரோ-கன்சார் வீதிக்குச் சென்று வீட்டைத் தேடிப் பிடித்தார். அந்த வீட்டின் முன்பக்கத்தில் உச்சியில் கூராணிகளுடன் கூடிய நீளமான பழுப்பு நிற வேலியடைப்பு எழுப்பப்பட் டிருந்தது. 
சன்னலையும் வேலியடைப்பையும் மாறி மாறிப் பார்த்த கூரொவ், “இந்த மாதிரி வேலியடைப்பு எழுப் பினால் எவரும் தப்பி ஓடத்தான் விரும்புவர்” என்று நினைத்துக் கொண்டார். 
இன்று விடுமுறையாதலால் கணவர் அனேகமாய் வீட்டில்தான் இருப்பாரென கூரொவ் 
கூரொவ் சிந்திக்கலானார். இல்லாவிட்டாலும் இப்படித் திடுமென அவள் வீட்டிலே போய் நின்று அவளைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவது மதிகெட்ட செயல். குறிப்பு எழுதி அனுப்பலாம், ஆனால் அது கணவர் கைக்குப் போய்ச் சேருமாயின் பெருங் கேடுதான் விளையும். தக்க தருணம் வாய்க்கலாம், அவளைப் பார்க்கும்படி நேரலாம் என்று காத்திருப்பதுதான் நல்ல தென நினைத்தார். ஆகவே, தெருவில் மேலும் கீழுமாய் நடந்து வேலியடைப்பை நெருங்கியதும் நடையைத் தளர்த்திக் கொண்டு வாய்ப்பு கிட்டுமா என்று பார்த்த படிக் காத்திருந்தார். பிச்சைக்காரன் ஒருவன் வாயிலுக் குள் புகுந்ததையும் நாய்கள் அவனை விரட்டியடித்ததை யும் கண்டார். பிறகு ஒரு மணி நேரம் கழித்து, பியானோ இசையின் தெளிவற்ற மெல்லிய நாதங்கள் அவர் காதுக்கு எட்டின. வாசிப்பது ஆன்னா செர்கேயிவ்னாவாகத்தான் இருக்குமென நினைத்தார். முன்வாயிற் கதவு திடீரெனத் திறந்தது. யாரோ கிழவி வெளியே வந்தாள். அவள் பின்னால் ஓடி வந்தது அவர் நன்கு அறிந்திருந்த அந்த வெள்ளை நாய். கூரொவ் அதைக் கூப்பிடப் போனார், ஆனால் அவருக்கு நெஞ்சு படபடத்தது, மனக் கிளர்ச்சி அடைந்துவிட்ட அந்த நிலையில் நாயின் பெயர் அவர் நினைவுக்கு வரவில்லை. 

அவர் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார், அந்தப் பழுப்பு நிற வேலியடைப்பின் மீது அவருக்கு வெறுப்பு மேலும் மேலும் கடுமையாகியது. தம்மைப் பற்றி ஆன்னா செர்கேயிவ்னா மறந்து விட்டாள், பொழுது போக்குக்காக இதற்குள் வேறு ஆள் யாரையேனும் பிடித்துக் கொண்டிருப்பாள் என்று இப்பொழுது எரிச்ச லாய் நினைத்துக் கொண்டார். பொழுது விடிந்து பொழுது போனால் இந்தப் பாழாய்ப் போன வேலியடைப்பைப் பார்க்க வேண்டியுள்ள இளம் பெண் வேறு என்ன செய் வாள்? அவர் ஓட்டல் அறைக்குத் திரும்பினார், என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் சோபாவில் உட்கார்ந்திருந்தார், பிறகு சாப்பாட்டை முடித்துக் கொண்டு, நெடுநேரம் உறங்கினார். 
அவர் கண்விழித்த போது மாலையாகி விட்டது. இரு ண்ட சன்னல்களை நோக்கியவாறு, 
‘அசட்டு வேலை, தொல்லை பிடித்தது!'' என்று தம்முள் கூறிக் கொண்டார். "எப்படியோ தூங்கித் தொலைத்து விட்டேன். இனி இராப் பொழுதை எப்படிக் கழிப்பது?'' 
மருத்துவமனைப் போர்வை போன்ற, மலிவான, 
சாம்பல் நிறக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு கட் டிலில் எழுந்து உட்கார்ந்து, சிடு சிடுப்புடன் தம்மைத் தாமே கடிந்து கொண்டார்: 
“நீயும் உன் நாய்க்காரச் சீமாட்டியும்!.. பிரமாதச் சாதனை தான்!.. பெரிதாய் ஓடி வந்தாயே, என்ன ஆயிற்று 
பார்!” 
காலையில் அவர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய போது, உள்ளூர் நாடக மன்றத்தில் “கெய்ஷா’” நாடகம் அன்று முதல் முறையாக நடிக்கப்படப் போவதாகக் கொட்டை எழுத்துக்களில் அறிவித்த விளம்பரத்தைக் கவனித்திருந்தார். இப்போது அது நினைவுக்கு வரவே, உடை மாற்றிக் கொண்டு நாடக மன்றத்துக்குப் புறப் பட்டார். 
“நாடகங்களின் 
முதல் இரவுக் காட்சிக்கு அவள் தவறாமல் வருகிறவளாய் இருக்கலாமே” என்று தம்முள் கூறிக் கொண்டார். 
நாடகமன்றம் நிறைந்திருந்தது. எல்லாச் சிற்றூர் மேல் புகை நாடகமன்றங்களைப் போலவே இங்கும் சரவிளக்குகளுக்கு மண்டியிருந்தது, சுற்று மாடியடுக்குகளில் இருந்தோர் அமைதியின்றி இரைந்து கொண்டிருந் தார்கள். முன்வரிசையில், ஆடம்பரமான உள்ளூர்ப் பெரிய மனிதர்கள் திரை எப்போது உயர்த்தப்படுமென்று 
திர்பார்த்தவாறு 
பின்பக்கம் கையை இணைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். ஆளுநரது மாடத்தில் ஆளு நரின் மகள், மென்முடிக் கழுத்துச் சுற்றாடை அணிந்து முன்னிருக்கையில் வீற்றிருந்தாள்; ஆளுநர் அடக்கத்துடன் திரைச்சீலையின் மறைவில் அமர்ந்திருந்தார். அவருடைய கைகள் மட்டும்தான் வெளியே தெரிந்தன. மேடைத் திரை அசைந்தது, வாத்தியக் குழு நெடுநேரம் சுருதி சேர்த்துக் கொண்டிருந்தது. வரிசையாக எல்லாரும் உள்ளே வந்து இருக்கைகளில் அமர்ந்த போது கூரொவின் கண்கள் பரபரப்புடன் அவர்களைத் தூழாவிக் கொண் டிருந்தன. 

ஆன்னா செர்கேயிவ்னாவும் வந்தாள், மூன்றாவது வரிசையில் அமர்ந்து கொண்டாள். கூரொவின் கண்கள் அவளை வந்தடைந்ததும் அவருக்கு இதயம் வெடுக்கென நின்று விட்டது போலிருந்தது. உலகில் தமக்கு இவளைக் காட்டிலும் அன்புக்குரிய நெருங்கிய ஆத்மா யாரும் இல்லை, இவள் இல்லையேல் வாழ்வில் தமக்கு ஏதும் இல்லை என்பது அக்கணமே அவருக்குத் தெளிவா கியது. சிறு உருவாய் நகரத் திரளில் கண்ணுக்குத் தெரியாதபடி மறைந்து விடும்படியானவள், தனிச் சிறப்பு ஏதும் இல்லாதவளாய் அசட்டுக் காட்சிக் கண்ணாடியைக் கையில் 
பிடித்திருந்தவள்—இப்பொழுது இவள் அவ ருடைய வாழ்வு அனைத்துக்கும் மையமாகி விட்டாள். அவரது துன்பமும் இன்பமுமாகி, அவரது வாழ்வில் இனி அவளே எல்லாம் என்றல்லவா ஆகி விட்டாள். பக்குவ மடையாத கற்றுக்குட்டிப் பிடில்காரர்களையுடைய சோபையற்ற வாத்தியக் குழுவிடமிருந்து எழுந்த ஒலிகளைக் கேட்டு 
கேட்டு அயர்ந்தவாறு, இவ்வளவு அழகாய் ருக்கிறாளே என்று எண்ணினார்... எண்ணங்களிலும் கனவுகளிலும் மிதந்தார்... 
296 
ஆன்னா செர்கேயிவ்னாவுடன் கூட வந்தவர் பின்புறம் கவிந்த தோள்களையுடைய நெட்டையான இளைஞர்— சிறிய கிருதா வைத்திருந்தார், அடிக்கொரு தரம் தலையை ஆட்டியவாறு நடந்து வந்து அவளுக்குப் பக்கத்து இருக் கையில் அமர்ந்து கொண்டார், எந்நேரமும் யாருக்கோ சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறாரென நினைக்கத் தோன்றியது. அவளது கணவராகவே இருக்க வேண்டும். முன்பு யால்தாவில் அவள் மனம் கசந்து, அடிவருடி என்று குறிப்பிட்டாளே அந்த ஆளாகவே இருக்க வேண் டும். மெய்தான், அவரது ஒல்லியான நெட்டை உருவிலும் கிருதாவிலும் உச்சந் தலையிலிருந்த சிறு வழுக்கையிலும் பணியாளுக்குரிய அடிவருடித்தனம் தென்படத்தான் செய் தது. அவர் முகத்தில் இனிப்பான புன்னகை பூத்திருந்தது, பணியாளது முறை உடுப்பிலுள்ள பணிச்சின்ன வில்லை 
யைப் போல் அவரது கோட்டின் மார்பில் ஏதோ ஒரு விஞ்ஞானக் கழகத்தின் பதக்கச் சின்னம். பளிச்சிட்டது. முதலாவது இடைவேளையின் போது கணவர் புகை பிடிப்பதற்காக வெளியே சென்றார். அவள் மட்டும் தனியே இருக்கையில் அமர்ந்திருந்தாள். சற்று பின்னால் உட்கார்ந்திருந்த கூரொவ் அவளிடம் சென்று, புன் னகையை வலிய வருவித்துக் கொண்டு நடுங்கும் குர லில், வணக்கம்” என்றார். 
அவள் நிமிர்ந்து அவரைப் பார்த்தாள், உடனே அவளுக்கு முகம் வெளிறி விட்டது. கலவரத்துடன் மறு படியும் அவரை உற்றுப் பார்த்தாள், அவளால் தன் கண்களை நம்ப முடியவில்லை. கையிலிருந்த காட்சிக் கண் ணாடியையும் விசிறியையும் இறுகப் பிடித்து நெரித்தாள், மூர்ச்சித்து விடாமல் இருக்கும் பொருட்டு அரும்பாடு பட்டாள் என்பது தெரிந்தது. இருவரும் மௌனமாயிருந் தார்கள். அவள் வீற்றிருந்தாள், அவளது குழப்பத்தைக் கண்டு மிரண்டு போன கூரொவ் அவளுக்குப் பக்கத்தில் உட்காரத் துணியாமல் நின்று கொண்டிருந்தார். சுருதி கூட்டப் பெற்ற பிடில்கள் புல்லாங் குழல்களுடன் சேர்ந்து இசைத்தன. ஒன்று புரியாமல் இருவரும் கலங்கினர், நாற் புறமிருந்தும் எல்லோரும் தங்களையே நோக்குவதாய் நினைத்தனர். முடிவில் அவள் எழுந்து வெளிச் செல்லும் வாயில் பக்கம் நடந்தாள், அவர் பின் தொடர்ந்தார். இருவரும் எங்கே போவது என்று தெரியாமல் நடைகளில் நடந்தார்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். நீதித் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்குரிய உடுப்புகள் அணிந்த வர்கள், பதக்கங்கள் பூண்டவர்கள், அவர்கள் முன் தோன்றி மறைந்தார்கள்; சீமாட்டிகள் பளிச்சிட்டுச் சென் றனர், மாட்டல்களில் தொங்கிய மென்முடிக் கோட் டுக்கள் கண் முன்னால் வந்து நின்ற பின் மறைந்து போயின, காற்று குப்பெனக் குளுமையாய் வீசியது, சிக ரெட்டுத் துண்டுகளின் வீச்சம் அதில் மிதந்து வந்தது. கூரொவுக்கு நெஞ்சின் படபடப்பு காதில் இரைந்தது. 
“அட கடவுளே! எதற்காக இங்கே இவர்கள் எல் லாரும்... எதற்காக இந்த வாத்தியக் குழு...." என்று வேதனையுடன் நினைத்தார். 
திடீரென அவருக்கு நினைவு வந்தது: அன்று யால்தா விலிருந்து ஆன்னா செர்கேயிவ்னாவை வழியனுப்பியதும் எல்லாம் முடிந்து விட்டது, இருவரும் இனி ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை என்று தமக்குள் சொல்லிக் கொண்டது நினைவு வந்தது. ஆனால் முடிவு இப்போது நெடுந் தொலைவுக்கு அப்பால் அல்லவா சென்று விட்டது! “மேல் வகுப்புக்குப் போகும் வழி” என்று குறிக்கப் பட்டிருந்த இருளடைந்த குறுகலான படிக்கட்டின் பக்கம் வந்ததும் அவள் நடையை நிறுத்தினாள். 

துணுக்குற்று மிரளச் செய்து விட்டீர்கள்!” என்று அவள் மூச்சு விட முடியாமல் திணறியவாறு சொன்னாள்; இன்னமும் கதிகலக்கம் அவளை விட்டு நீங்கவில்லை, முகம் வெளிறிட்டுதான் இருந்தது. 'ஐயோ, என்னைத் துணுக் குற்று மிரளச் செய்து விட்டீர்கள்! உயிரே போய் விட் டது! ஏன் இங்கே வந்தீர்கள்? ஐயோ, எதற்காக வந்தீர் கள்?'' என்றாள். 
'ஆன்னா, இதைக் கேள்” என்று தணிவான குரலில் பதற்றத்துடன் அவசரமாய் அவர் கூறினார். 
அவர் கூறினார். “ஆன்னா, தைக் கேள்... இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்... மன்றாடிக் கேட்கிறேன், புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்....' 

அவள் அச்சமும் மன்றாடலும் காதலும் கலந்த பார் வையை அவர் மீது பதித்தாள், பிறகு அவரது முகச் சாயலைத் தன் நினைவில் நிலையாக பதிய வைக்க முயலுவது போல் அப்படி அவரை அசங்காமல் உற்றுப் பார்த்தாள். 
“நான் பட்ட துன்பத்துக்கு அளவே இருக்காது”. அவரது பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அவள் தொடர்ந்து கூறினாள். “வேறு எதைப் பற்றியும் நினைக்க முடியாதவளாய் இத்தனை காலமும் 
காலமும் உங்களையே நினைத் திருந்தேன். உங்களைப் பற்றிய நினைவுகளில்தான் உயிர் வாழ்ந்து வந்திருக்கிறேன். யாவற்றையும் மறக்க வேண் டும் என்றுதான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த் தேன்—ஐயோ, நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்?'’ 
மேலே நடைவழியில் நின்று புகை பிடித்துக் கொண் டிருந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் கீழே பார்த்தார்கள். ஆனால் கூரொவ் எதையும் 
எதையும் லட்சியம் செய்யாமல் ஆன்னா செர்கேயிவ்னாவை அருகே இழுத்து அணைத்து மாறி மாறி முகத்திலும், கன்னங்களிலும், கரங் களிலும் முத்தமிட்டார். 

என்ன செய்கிறீர்கள், ஐயோ, என்ன செய்கிறீர் கள்?’’ என்று அவள் மெல்ல அவர் பிடியிலிருந்து விலகிக் கலவரத்துடன் கூறினாள். 'இருவரும் சித்தம் கலங்கியவர்கள் ஆகி விட்டோம். இன்றைக்கே திரும்பிப் போய் விடுங்கள், இந்தக் கணமே போய் விடுங்கள்... எல்லாத் தெய்வங்களின் பெயராலும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்... யாரோ வருகிறார்கள்!'' என்றாள். 
கீழிருந்து யாரோ மாடிப்படியேறி வந்து கொண் டிருந்தார். 

“நீங்கள் போய் விடத்தான் வேண்டும்” என்று ஆன்னா செர்கேயிவ்னா இரகசியக் குரலில் தொடர்ந்து கூறினாள். 'காதில் விழுகிறதா, திமீத்ரி திமீத்ரிச்? நான் மாஸ்கோ வந்து உங்களைச் சந்திக்கிறேன். எந்நாளும் எனக்கு மகிழ்ச்சி இல்லை- இதுகாறும் இருந்ததில்லை, இப்போது இல்லவே இல்லை, இனிமேலும் இருக்கப் 
ருக்கப் போவதில்லை! ஆகவே என்னை மேலும் துன்புறுத்த வேண்டாம்! நிச்சயம் மாஸ்கோ வருவேன், உங்களைச் சந்திப்பேன்—ஆணையிட்டுச் சொல்கிறேன்! இப்போது நாம் பிரிந்தாக வேண்டும்! என் அன்பே, ஆருயிரே! நாம் விடை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும்!” என மொழிந்தாள். 
அவர் கையைப் பிடித்துக் குலுக்கிவிட்டுப் படிக் கட்டில் அவள் வேகமாகக் கீழே இறங்கினாள், மீண்டும் மீண்டும் அவரைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். மெய்யாகவே அவள் துன்புற்றாள் என்பதை அவளது விழிகள் காட்டின. கூரொவ் சற்று நேரம் நின்று உற்றுக் கேட்டு விட்டு, சந்தடியெல்லாம் அடங்கிப் போனதும் அங்கிருந்து விலகி, மேல் கோட்டை வாங்கிப் போட்டுக் கொண்டு நாடகமன்றத்தை விட்டு வெளியே சென்றார். 

ஆன்னா செர்கேயிவ்னா மாஸ்கோவுக்கு வந்து அவரைச் சந்திக்கத் தொடங்கினாள். மாதர்நோய் நிபுணர் ஒரு வரைக் கலந்தாலோசிக்க வேண்டுமென்று கணவரிடம் கூறிவிட்டு, இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எஸ். நகரிலிருந்து புறப்பட்டு வந்தாள். அவள் கணவர் அதை நம்பவும் செய்தார், நம்பாமலும் இருந்தார். மாஸ்கோவில் எப்போதும் அவள் "ஸ்லாவ்யான்ஸ்கிய் பஜார்” ஓட்டலில் தங்கினாள். வந்திறங்கியதும் சிவப்புக் குல்லாய் அணிந்த ஓர் ஏவலாள் மூலம் கூரொவுக்குச் செய்தி சொல்லி அனுப்பினாள். கூரொவ் அந்த ஓட்ட லுக்குச் சென்று அவளைச் சந்திப்பது வழக்கம். மாஸ் கோவில் யாருக்கும் இது தெரியாது. 
குளிர்காலத்தில் ஒரு நாள் காலை கூரொவ் அவளைக் காணச் சென்றார் (முந்திய நாள் மாலை ஏவலாள் வந்த போது அவர் வீட்டிலில்லை). மகளுடைய உயர்நிலைப் பள்ளி யும் அந்த வழியில் இருந்ததால் அவளை அங்கே கொண்டு போய் விடலாமென்று தம்முடன் அழைத்துச் சென்றார். ஈரம் தோய்ந்த பெரும் திவலைகளாகப் வெண்பனி பெய்து கொண்டிருந்தது. 
"வெப்பநிலை மூன்று டிகிரியாக இருந்த போதிலும் பனி பெய்கிறது பார்' என்று மகளிடம் சொன்னார் கூரொவ். “இந்த வெப்பநிலை தரையருகே மட்டுந்தான், வாயு மண்டலத்தின் மேலடுக்குகளில் வெப்பநிலை வேறா யிருக்கும்.'' 

“அதிருக்கட்டும், அப்பா, குளிர்காலத்தில் இடி இடிப் பதில்லையே, ஏன்?'' என்று கேட்டாள் பெண். 
அவர் இதைப் பற்றியும் அவளுக்கு விளக்கினார். இவ் வாறு மகளுடன் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவர் வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்தார். தமது காதலுக்கு உரியவளைச் சந்திப்பதற்காகச் செல் வதையும், தமது இந்தக் காதல் வெளியே யாருக்கும் தெரியாததாய் இருப்பதையும், இனியும் அவ்வாறே இருக்கப் போவதையும் அவர் நினைத்துப் பார்த்தார். அவர் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தார்— 
ஒன்று எல்லார் கண்ணுக்கும் தெரியும்படியான பகிரங்க வாழ்க்கை, வழக்க வழியிலான உண்மையும் வழக்க வழி யிலான ஏமாற்றும் மிகுந்தது, அவரது நண்பர்களும் அவ ருக்குத் தெரிந்த ஏனைய எல்லாரும் வாழ்ந்து வந்ததற்கு முற்றிலும் ஒத்தது; இன்னொன்று மறைவில் நடைபெற்ற இரகசிய வாழ்க்கை. நிலைமைகளின் விபரீத இணைவின்— சந்தர்ப்பவசமான இணைவாகவும் இருக்கலாம்-காரண மாய், எவை எல்லாம் அவருக்கு முக்கியமாகவும் கருத் துக்கு, உரியனவாகவும் இன்றியமையாதனவாகவும் இருந் தனவோ, எவற்றில் அவர் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளாமல் உள்ளப் பூர்வமாய் ஈடுபட்டு வந்தாரோ, எவை அவரது வாழ்வின் உட்கருவாய் இருந்தனவோ அவை யாவும் வெளியே தெரியாதபடி இரகசியமாய் நடந்தேறின; அதே போது அவரிடமிருந்த பொய்மை யெல்லாம், தம்மையும் தம்மிடமிருந்த உண்மையையும் மூடி மறைத்துக் கொள்ள அவர் பயன்படுத்திக் கொண்ட வெளி வேடங்கள் எல்லாம்—உதாரணமாக வங்கியில் அவரது வேலை, கிளப்பில் அவரது விவாதங்கள், அவரது 'கீழ் இனத்தவர், ஆண்டு விழாக் கொண்டாட்டங் களுக்கு மனைவியுடன் கூட போய் வந்தது ஆகியவை எல் லாம்—மறைவின்றிப் பகிரங்கமாய் நடந்தேறின. தம் மையே அளவுகோலாகக் கொண்டு அவர் ஏனையோரையும் மதிப்பிட்டார்; கண்ணுக்குத் தெரிந்தவற்றை அவர் நம்பவில்லை, ஒவ்வொருவர் வாழ்விலும் மெய்யானவையும் சுவையானவையும் இருப்பவை, யாவும் வெளியே தெரி யாதபடி இரவின் இருட்டில் இரகசியமாக நடந்தேறுவ தாய் அனுமானித்துக் கொண்டார். ஒவ்வொரு ஆளின் வாழ்வும் மர்மத்தையே மையமாகக் கொண்டு சூழலு கிறது, அதனால் தான் தனிப்பட்ட சொந்த இரகசியங் களுக்குத் தக்க மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பண்பட்டவர்கள் எல்லாரும் அப்படி வலுவாய் வற்புறுத்து கிறார்களோ, என்னமோ என்று அவர் நினைத்தார். 
மகளை உயர்நிலைப் பள்ளி வரை கொண்டுபோய் விட்டபின் கூரொவ் “ஸ்லாவ்யான்ஸ்கிய் பஜார்” ஓட்ட லுக்குச் சென்றார். முன் கூடத்தில் மேல் கோட்டைக் கழற்றிவைத்துவிட்டு, மாடிக்குச் சென்று, அறைக் கதவை மெல்லத் தட்டினார். ஆன்னா செர்கேயிவ்னா, அவருக்கு மிகவும் பிடித்தமான பழுப்பு நிற உடையணிந்திருந்தாள். பயணத்தாலும் பரபரப்பினாலும் களைத்து ஓய்ந்து போய், முந்திய நாள் மாலையிலிருந்தே அவரது வருகையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வெளிறியிருந்தது, புன்னகை புரியாமலே அவரை உற்று நோக்கினாள். ஆயினும் அறைக்குள் அவர் வந்து சேர்வதற் குக்கூட அவகாசம் அளிக்காமல் பாய்ந்தோடி வந்து அவர் மார்போடு ஒட்டிக் கொண்டாள். பல ஆண்டுகளாகச் சந்திக்காதது போல் அப்படி நெடுநேரம் இதழ் பதித்து முத்தமிட்டுக் கொண்டார்கள். 
‘‘என்ன சேதி? எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார் அவர். “புதிதாய் ஏதேனும் நடந்ததா?'' 
இதோ சொல்கிறேன்... ஒரு நிமிடம்... பேச முடிய வில்லை....'' 
அழுகை பீறிட்டுக் கொண்டுவந்ததால் அவளால் பேச முடியவில்லை. எதிர்ப் பக்கம் திரும்பி, கைக் குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். 
‘துயரம் தீர அழுது நிம்மதியடையட்டும், காத்திருக் கலாம்” என்று நினைத்து, அவசரமின்றி அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். 
மணியடித்து அவர் தேநீர் கொண்டுவரச் சொன்னார். பிறகு அவர் தேநீர் அருந்திய போதும் சன்னலைப் பார்த்த படித்தான் அவள் நின்று கொண்டிருந்தாள்.... உணர்ச்சி மேலிட்டவளாய்க் கண்ணீர் வடித்தாள், இருவரது வாழ்க் கையும் சோகம் வாய்ந்ததாய் இருப்பதை நினைத்து உள்ளம் வெதும்பினாள். திருடர்களைப் போல் அல்லவா யார் கண்ணிலும் படாமல் இருவரும் இரகசியமாகச் சந்திக்க வேண்டியிருக்கிறது! இருவரது வாழ்க்கையும் பாழாகி விட்டதே! 
"வேண்டாம், அழாதே!'' என்றார் அவர். 
அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது- தம் இருவரது காதலும் விரைவில் முடிவடையப் போவதில்லை, இது எப்போது முடிவுறும் என்று யாராலும் சொல்வதற்கில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. ஆன்னா செர்கேயிவ்னா வுக்கு அவர் மீது இருந்த காதல் நாளுக்கு நாள் மேலும் மேலும் ஆழமாகியே வந்தது, அவரை அவள் தனக்குரிய தெய்வமாகக் கொண்டிருந்தாள். அவளிடம் போய் இதெல்லாம் ஒரு நாள் முடிவடைந்தாக வேண்டுமென்று சொல்லிப் பயன் இல்லை. ஒருபோதும் அவள் நம்ப மாட்டாள். 
அருமையாய் அன்பு மொழிகள் சொல்லி அவளைத் தேற்றும் நோக்கத்துடன் கூரொவ் அவளிடம் சென்று அவளது தோள்களை அணைத்துப் பிடித்துக் கொண்ட போது திடுமென நிலைக் கண்ணாடியில் தமது உருவம் 
தெரியக் கண்டார். 
ஏற்கெனவே அவருக்குத் தலை நரைக்கத் தொடங்கி யிருந்தது, கடந்த சில ஆண்டுகளில் இப்படித் 
இப்படித் தாம் மூப்படைந்து விட்டதைக் கண்ட போது அவருக்கு வியப் பாய் இருந்தது. அவரது கைகளால் அணைக்கப்பட்டிருந்த அந்தத் தோள்களோ, கதகதப்புடன் துடித்தன. இன்னும் இளமைப் பூரிப்பும் எழிலும் வாய்ந்திருந்த இந்த ஜீவனுக் காக, விரைவில் தம்மைப் போலவே வாடி வதங்கவிருந்த இந்த ஜீவனுக்காக அவர் உள்ளம் கரைந்து உருகியது. அவள் எதற்காக இப்படி அவரைக் காதலிக்கிறாள்? பெண்கள் எப்போதுமே அவரை அவரது உண்மை வில் அல்லாமல் வேறொரு உருவில் கண்ணுற்று வந்தார் கள். அவர்கள் காதல் கொண்டது அவர் மீதல்ல; அவர் களது கற்பனையின் படைப்பான வேறொரு ஆளின் மீது, வாழ்நாள் முழுதும் அவர்கள் ஆர்வத்துடன் தேடிக் 
உரு கொண்டிருந்த அந்த ஆளின் மீது அவர்கள் காதல் கொண்டார்கள். அவர்கள் தங்களது தவறைக் கண்டு கொண்ட பின்னரும் அவர்கள் முன்பு போலவே தொடர்ந்து அவரைக் காதலித்தார்கள். அவர்களில் ஒருத் யாவது அவரால் இன்பமடைந்ததில்லை. காலம் கழிந்து சன்றது, அவர் வெவ்வேறு பெண்களையும் சந்தித்து நெருங்கிய உறவு கொண்டார், பிறகு பிரிந்து சென்றார். ஆனால் யார் மீதும் அவர் காதல் கொண்டதில்லை. அவர் களிடையே என்னென்னமோ இருந்தது, காதல் மட்டும் இருந்ததில்லை. 
இப்போதுதான், தலை நரைத்த பிறகு, வாழ்வின் முதன் முதல் மெய்யாகவும் முழுமையாகவும் காதல் 
கொண்டார். 
ஆன்னா செர்கேயிவ்னாவும் அவரும் ஒருவரை ஒருவர், நெருங்கிய, அத்யந்த முறையில், கணவரும் மனைவியும் போலக் காதலித்தனர், உயிருக்கு உயிரான நண்பர்கள் போல ஒருவரை ஒருவர் நேசித்தனர். இருவரும் ஒருவருக் காக ஒருவர் விதியால் திட்டமிடப்பட்டதாக அவர் களுக்குத் தோன்றியது. அவளுக்கு வேறொரு ஆள் கணவ ராகவும், அவருக்கு வேறொருத்தி மனைவியாகவும் இருந் தது ஏனென்று அவர்களுக்கு விளங்கவில்லை. பருவம் மாறியதும் மண்டலம் விட்டு மண்டலம் செல்லும் ஆணும் பெண்ணுமான இரு பறவைகளை யாரோ பிடித்துத் தனித் தனிக் கூண்டுகளில் அடைத்து விட்டது போன்றிருந்தது அவர்களது நிலைமை. கடந்த காலத்திலும் நிகழ் காலத் திலும் இருவரும் புரிந்த வெட்கத்துக்குரிய எல்லாத் தவறுகளையும் ஒருவருக்கு ஒருவர் மன்னித்துக் கொண்டு விட்டார்கள். இந்தக் காதல் இருவரையும் மாற்றி விட் டதை இருவரும் உணர்ந்தனர். 
முன்பெல்லாம் மனச் சோர்வு ஏற்பட்டதும் மனத் துக்குத் தோன்றிய எந்த நியாயத்தையும் கொண்டு அவர் தம்மைத் தேற்றிக் கொள்வது வழக்கம்; இப்பொழுது அவருக்கு இந்த நியாயங்கள் பொருளற்றவையாகி விட் டன; ஆழ்ந்த இரக்கம் அவரை உள்ளம் குழையச் செய்தது நேர்மை வாய்ந்தவராய், அன்பு மிக்கவராக இருக்க விரும்பினார்.... 

'அழாதே, என் கண்ணே. வேண்டிய மட்டும் அழுது விட்டாய், போதும்... வா, பேசுவோம், என்ன செய்வது என்று ஆலோசிப்போம்” என்றார். 
பிறகு அவர்கள் நெடுநேரம் கலந்தாலோசித்தார்கள். யார் கண்ணிலும் படாமல் மறைப்பதும் ஏமாற்றுவதும் வெவ்வேறு நகர்களில் வசிப்பதும் நெடுநாள் சந்திக்கா மலிருப்பதும் எல்லாம் தேவைப்படாதபடிச் செய்வது எப்படி, சகிக்க முடியாத இந்த விலங்குகளைத் தகர்ப்பது எப்படி என்று ஆலோசனை செய்தார்கள். 
தலையை இறுகப் பற்றியவாறு, “எப்படி? எப்படி? எப்படி?'' என்று திரும்பத் திரும்ப கேட்டார் கூரொவ். 
தீர்வு நெருங்கி வந்து விட்டது, இன்னும் இரண்டு விரற்கடையே பாக்கி, பிறகு வனப்பு மிக்க புது வாழ்வு ஆரம்பமாகி விடும் என்பதாகத் தோன்றியது. ஆனால் மறு கணமே, முடிவுக்கு இன்னும் நெடுந் தொலைவு இருக் கிறது, யாவற்றிலும் கடினமான, மிகச் சிக்கலான பகுதி இப்போதுதான் ஆரம்பமாகிறது என்பதை இருவரும் உணர்ந்தார்கள். 
1899

தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்