தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 02, 2016

என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம் - தஞ்சை ப்ரகாஷ்

________________

296 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
24 என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம்


மாலை ஆறு பதினைந்து.

என்னைச் சந்திக்க என்னுடைய கதாபாத்திரம் ஒன்று என் கதவருகே வந்து நிற்கிறது என்று கூட நானே அறிய முடியாத மாலை நேரம். கதவு தட்டப்படவில்லை. தாழிடாத கதவின் சிறிய இடைவெளியில் ஒரு நெடிய உருவின் சலனங்கள் தெரிகின்றன. துலம் சூக்குமத்தின் விரிசல்தானே!

ஒரு மூன்றாந்தர சினிமா படம் ஒன்றின் மாட்னி காட்சிக்கு சென்று மீண்ட அலுப்பும் அவசமும் என்னை அலட்டிக் கொண்டிருந்த வேளை. உஷ்ணம் உடலிலிருந்து மேல் எழுவதை நான் உணர முடிகிறது. தகரக் கொட்டகை ஒன்றில் மூன்றுமணி நேரம் அமர்ந்துகிடந்து வியர்வையிலும் மூச்சு முட்டல்களிலும் நைந்து அந்தத் தமிழ்ப்படத்தில் நான் பார்த்துத் தீர்த்தது என்ன? மூச்சு முட்ட நான் தெரிந்து கொண்டது என்ன?

வாசல் கதவின் விரிசல் அதிகமாக வாசலில் நின்ற உருவம் புலனாகும் போதும் என் வியர்வையின் கந்தம் என்னை அழுத்துகின்றது.

.....

'உள்ளே வாங்களேன் வெளியிலே ஏன் நிக்கிறீங்க, யாரைப் பார்க்கணும்?"

'உள்ளே வாங்க என்ன வேணும்? உங்களுக்கு?"

"நீங்கதான் ந்ந்த. ப்ரகாஷ்ங்கறதா?"

"ஆ.ஆமா என்ன வேணும்?"

'ஒஹ்? அதமொல்ல தெரிஞ்சுக்கிறேன். அப்றமேல மத்ததெல்லாம்..ம்ஹம்? சரி. என்னெத் தெரியிதா'

'இல்லியே..."

தெரியல்லெ?"

"இல்லியே"

'நெசம்மா தெரியல்லியா?"

"தெரியல்லியே"

'ஒஹ்ஹோ!'
________________

என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம் 297

தலையில் எங்கேயோ சூடு பறந்தது இவரை எங்கே நான். எப்போது. எப்படி. சந்தித்த சந்தித்த. சந்தித் ஒஹ்.. அதற்குள் அவராகவே 

- "நான்தான் சாள்ஸ்' என்கிறார்.

 நான் அதிர்ந்துபோய் விடவில்லை. அதிரவும் உதிரவும் என்ன இருக்கிறது? அவர் குரல் என்னைப் பயமுறுத்தப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. எனது கதாபாத்திரம் ஒன்றாக அவர் தன்னை உணர்ந்து வேகம் கொண்டு அந்த நமைச்சலில் பொறுக்கக் கூடாதவராகி என்னைக் கண்டு கொள்ளவும் தீர்த்துக் கொள்ளவுமாக அவர் வந்திருப்பது எனக்கு ரொம்ப ரஸ்மாய் இருந்தது. இருக்காதா பின்னே. பழிவாங்கப்படுகிற சுகம் தனி! 

ஒரு கதாபாத்திரம் ஒரு கதாலோகத்தை விட்டு உலகில் வந்து தன்னைப் படைத்தவனைப் பிளந்து பார்க்கும் அனுபவம் இத்தனை ரஸமான ஒன்று என்று இதற்குமுன் நானே எண்ணியதில்லை. சில ஸ்காண்டிநேவிய நாடகங்களிலும் யூஜின் ஒனிலின் நாடகங்களிலும் கதாபாத்திரங்கள் ஆசிரியனைத் தேடிச் சென்ற கற்பனைகளைப் படித்திருக்கிறேன். மராட்டி நாவல்களிலும் சில பெங்காலி ஆசிரியர்களிலும் 

ஒரு சிகரெட் சாம்பல் தட்டும் கிண்ணத்தை வைத்தும் ஒரு சுகமானதை சொல்ல முடியும் என்று கையில் கிண்ணத்தை வைத்துக் கொண்டு சவால் விட்ட செக்காவின் சில கதாபாத்திரங்களிலும் கதைகளிலும் இந்தச் துணிச்சலைக் கண்டிருக்கிறேன். 

நேரில் என்னைக் காண என் கதாபாத்திரம் ஒன்று என்னைத் தேடி வந்திருக்கிறதென்றால் ஓ எத்தனை ரஸமான அனுபவம் அந்தக் கதாநாயகனை என் படைப்பை நானே வரவேற்கத் தயாராகிவிட்டேன். இதோ!. 

ஒ வாருங்கள் என்று அழைக்கலாமா. முடியவில்லை.

 'உங்களெத் தெரியிது' என்று பின்னுகிறேன். தலை முழுவதும் வழுக்கையாக இருக்கிறது. ஒன்றிரண்டு முடிகள் வழுவழுப்பை மீறி அந்தப் பரப்பிலும் நரை வெண்மை பூத்து நிற்கின்றன. முகத்தில் தளர்ச்சி உடலில் அல்ல. உதடுகள் துடிக்கின்றன. லேசாக முகத்தில் அசிங்கத்தைத் தொட்டு விட்டால் ஏற்படும் அருவெறுப்பு. கன்றிய கன்னங்களிலும் நெற்றியிலும் சுருக்கங்கள் நெருங்குகின்றன. பனியன் போட்டு நெஞ்சுவரை ஏறியிருக்கிறது. தளராத உடலானாலும் மார்புச்சதைகள் தளர்ந்து தொங்கலாக பனியனில் தள்ளியபடி தெரிகிறது. கைகளில் எல்லாம் கூட நரைத்த மயிர்.

 என் கதாபாத்திரமா இவர்? அதற்காகவா வந்திருக்கிறார்?

 என் கதையிலே வந்தது இந்தச் சாயல் உள்ள இவரா?

 'நீங்க... ஏதோ கதையெழுதி என்னெப்பத்தி பத்திரிக்கேலல்லாம் போட்டுட்டிங்கன்னு மிஷண்தெருவுல எல்லாருஞ் சொல்றாங்க. இதுல ஒரு விஷயம் என்னண்ணா நான் இன்னும் ஒங்க கதையையே படிக்கல்ல. ஒரு மாசமா மிஷண் தெருவுல இதே பேச்சாப் போச்சு ரோட்ல நிக்கிறமொட்டப்
________________

298 தஞ்சைப்ரகாஷ் கதைகள்
பகங்கள்ளாம் நான் போறப்ப வர்றப்பல்லாம் கத்துறான்க. ஏய் அங்கிள் சாளி மொட்டச்சாள்ஸ் அங்கிள்சாள்ஸ்ன்னு கூச்ச போட்றான்க. இந்த ஒரு வாரமா ரொம்ப தொல்லையாப் போச்சு என்ன செய்றதுன்னே தெர்ல. நானு மில்ட்ரீல பெரிய்ய ஆஃபீஸராயிருந்தவன். நான் அந்த மாதிரில்லாம் போறவனுமில்ல. வர்றவனுமில்ல. ஆர்மிலந்து ரிட்டயரானதும் பெந்தகோஸ்மினிடீரினய் சர்வீஸ்ல. கோர்ட்ல மாஜிஸ்ரேட்டா ஜுரீஸ்ல ஒருத்தராயிருக்கேன் என்னப் பத்தி நீங்க.."

எனக்குப் பரிதாபமாக இருந்தது.

மனிதன் எத்தனை ரஸமான சுகமான விஷயம் எத்தனை ரசபேதங்கள் நல்லவன் என்று நிரூபிப்பதில் அவன் எவ்வளவு முதிர்ந்தவனானாலும் குழந்தைபோல வேகவெறி கொள்கிறான். சாத்திரங்களும் வேதங்களும் எத்துணை வலிவோடு தர்மாவேசம் பூண்டு நீதியைக் காக்கப் பேசுகிறதோ அதுபோலவே தன்னையும் தன் சமூகத்தையும் நல்லவனாக ஞானவானாக ஒழுக்க சீலனாக நேர்மை நிறையாக கற்பாக தீட்டித் தீட்டிக் கண்டுமகிழுவதில் மனிதன் எத்தனை உக்கிரமாக முயல்கிறான். இயல்பை மறைப்பதிலும் இயல்பிலிருந்து ஒளிவதாய் கனவு காண்பதிலும் இயல்பை ஒழித்துவிட்டதாக எழுதுவதிலும் மனிதனுக்கு என்றுமே ஆக்க குறையாது போலிருக்கிறது.

எண்பத்து மூன்று வயது நிரம்பிய இந்த மனிதனுக்கும் தன்னையே மூர்த்தியாய்த் தீட்டி கண்கவரும் வண்ணங்களில் காண வேண்டும் என்று எத்தனை ஆசை. ஆர்வம்.

"நான் க்ருஸ்தவன் நான் என் அந்தமாறி அசிங்கம்ல்லாம் செய்ணும்? ஏம் பின்னால் அங்கிள் அங்கிள்ன்னு கத்துறபயல்கள்ளாம் நான் முன்னால நின்னு என்னடான்னு கேட்டா எங்கியோ ஒடிப்போய்டறான்க. ஏன் ஒடனும்? ஓங்க அப்பா அம்மாவையெல்லாம் எனக்குத் தெரியும். நான் தஞ்சாவூர்லியே ரொம்ப நாளா இருந்ததில்லை. எனக்கு ஏன்ந்த வம்பெல்லாம். காலைலிருந்து சர்ச்சு வாசல்ல கேட்டுகிட்டு நின்னுட்டு போறவர்ற பொண்ணுங்களையெல்லாம் கலாட்டாப் பண்ணிட்டே நாள் பூரா நிக்கிற மொட்டப் பசங்க என்னப்பத்தி அங்கிள் சாளி திருந்து சீக்கிரம்ன்னு கத்றான்க என்னா நாந் திருந்தனுமாம்?"

"ஒரு விஷயம்'

"என்னது"?"

"நான் எழுதுன கதெ உங்களைப் பத்தியில்ல: ஒங்க பேரெ என்னோட கதாபாத்திரத்துக்கு வெச்சேன் அது ஒங்க பேரைன்னும் ஓங்களை இவ்வளவு பாதிக்கும்ன்னும் தெரிஞ்சிருந்தாலே போட்டிருப்பேன்."

'அதானே மிஷண் தெருவிலேயே நான் ஒத்தன்தான் சாள்ஸ்ா? என்னொடைய தெருவுலியே ரெண்டு மூணுபேர் சாள்ஸ் இருக்காங்க. பின்னெ ஏந்தப்பயல்கள்ளாம் என்னையே கேலி பண்றாங்க எனக்கு என்னா வயது? எண்பத்திமூணு எய்ட்டித்ரீ இவனுகளுக்கெல்லாம் என்னைப் போல அப்பன்
________________

என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம் 299
ஒண்ணும் கெடையாதா? அக்கா தங்கச்சி கெடையாதா. ஒரு மட்டு மரியாதையே இல்லியா? என்னா அர்த்தம் இதுக்கெல்லாம். அயோக்கியத்தனத்துக்கும் ஒரு எல்ல கெடையாது? காட்ஃபியரிங் யங்ஸ்ட்டர்ஸ் யெல்லாம் எங்க காலத்தோட போச்சா வாட்ஸ் ராங் விதால் தீஸ் யங் பீப்பிள். மொட்டப் பசங்கதான் இந்த மாதிரி பண்றான்கங்னா மிஷன் ஸ்கூல்ல இருக்க வாத்திப் பயல்கள்ளாம் கூடவா கூட சேந்து ஆடுவாங்க?" 

அவர் கண்களில் லேசாக நீர் கோர்த்தது போலிருந்தது. 

இந்த மனிதன் இத்தனை சோகத்தைப் பெருக்கிய இந்த உணர்வுகள் எல்லாம் தான் நல்லவன் என்று நிரூபிக்க எழுந்த போலியான பலிகள்தானா? நானும் வேதனையுற்றேன். அவர் கண்கள் பளபளத்தன. "மிஸ்டர் சாள்ஸ் நான் ஒங்ககிட்ட அபாலெஜைஸ் பண்ணிகிறேன். உங்களெ ஹர்ட் பண்ணணும்ன்னு நான் அதெ எழுதல. எனக்கு அப்டி எழுதுறதுனால் எந்த பெனிஃபிட்டும் கெடையாது. அஸ் ஒல்ட்மான் ஒங்கமேல எனக்கு மரியாதை உண்டு. இன்னைக்கி நீங்க என்னெச் சந்திக்கிறதுக்கு முன்னாடி ஒங்களெ எனக்கு நிச்சயமாத் தெரியாது. பட் ஐ ஃபீல் வெரி ஸ்ாரி ஃபார் திஸ்! இது அக்லிடன்டலா நடந்த ஒரு சம்பவம். இதுக்காக நீங்க பட்ட கஷ்டத்துக்காக ஒங்ககிட்ட நான் காரணமில்லாமல் நான் மன்னிப்பு கேட்டாக்கூட தப்பு கிடையாது. நீங்க என்ன மன்னிச்சுடுங்க!” 

நான் நடிக்கிறேனா? உண்மை உணர்ச்சிகள் உந்தாமல் இப்படிப் பேசுகிறேன் என்று சொல்லி விட முடியுமா. எதிலுமே இந்தக் கலப்பே மிஞ்சுகிறது. கலப்பற்ற உண்மை பொய்யான வாழ்வில் ஏது? நானும் அவரும் நடித்து பலப் பரீட்சை பார்க்கிறோம். 

அவரும் நானும் முரண்படாத மனிதர்களாய் வேஷமிட்டு படிப்பும், நாகரிகமும் தந்த வர்ணங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் நாங்கள் எங்கள் மூர்த்திகளை நாங்களே வழிபட்டுக் கொண்டிருந்தோம். 

இதை இவருக்குச் சொல்ல முடியுமா? யாருக்குத்தான்? 'ஆர்மீலந்து வந்த என்னோட ஃப்ரெண்ட்ஸ் கதையைப் படிச்சிட்டு ஏங்கிட்ட வந்து என்னா சார் இது இப்படின்னாங்க. நான் ஒன்னுமே சொல்லல. நீங்க 'ம்'ன்னு சொல்லுங்க சார் இத எழுதுன பயவெரலயெல்லாம் பரப்பி வெச்சு நறுக்கி எடுத்தர்றோம்ன்னாங்க ஊம அடியா அடிச்சாவுது உட்டாத்தான் ஒழுங்கு பட்டு வரும்ன்னாங்க. நான்தான் சேச்சே. அதல்லாம் என்னத்துக்குடா நாங் கிருஸ்தவன் அவங்களும் க்ருஸ்தவங்க இந்த மாதிரி யெல்லாம் நடந்துட்டா எனக்கும் அவங்களுக்கும் வித்யாசம் வேணாமா. உடுங்க தொலையட்டும்ன்னு சொன்னேன்" 

இமை முடிகள் கூட நரைத்த அந்தக் கண்களில் எத்தனை உக்கிரம்! இதுதான் உண்மையா? உண்மையின் சொரூபமா? உண்மையின் ஒரு பக்கமா? கைகளில் எத்தனை விஷம் பன்னெடுங்காலமா வேஷமிட்ட வேஷம் கலைந்த எத்தனையோ மனித விஷங்களில் இதுவும் ஒரு வகை. இந்த விஷத்தை நான் பருகும் போதுதான் எத்தனை சுகமாக இருக்கிறது. எத்தனை ரஸம் இதில்
________________

30s) தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
லேசாக அவர் உடல் நடுங்குவதும் கண்கள் கொட்டும் விஷத்துக்கும் பின்னால் பயம் அலை கூட்டுவதையும் உணர என்னால் முடிகிறது. அவர் பூண்ட முதுமையின் சாட்சி அது நான் இளைஞனாயிற்றே என்ற பயம் அவர் கிழவனாயிற்றே என்ற பயம் எனக்கும் பயமில்லையா என்ன? 

'எனக்கு இதப் பத்தில்லாம் கவலையே கெடையாது. யங் பாய்ஸ் இந்தமாதிரி கெட்டலையறாங்களே அதனா கவலையா இருக்கு இதுக்கு நீங்க ஒரு காரியம் பண்ணனும்!"

 "என்னது?" 

"நீங்க திரும்பி ஒரு கதெயெழுதணும்." 

"எ?''ன்ன

 "ஆமா அப்பத்தான் அந்த பொறுக்கிப் பசங்களுக்கும் புத்தி வரும். அக்கா தங்கச்சியோட பொறக்காத ராஸ்கல்ங்க என்னோட வயசு என்னா இவனுங்களோட வயசு என்னா ம்ஹ்! நீங்க அது நல்லா இவனுகளுக்குப் படும்படியா நீங்கதாண்டா பொம்பள பொறுக்கிபசங்க அவரிந்த மாதிரி ஆளு இல்ல. அவரு காட்ஃப்யரிங் மான் பொறுக்கித்தனம்ல்லாம் அவருட்ட கெடையாதுன்னு நல்லா பட்றாப்ல கதையா நீங்க எழுதணும். பத்திரிக்கேல வந்தா மாத்ரம் போதாது. லூஸ் காப்பீஸ் கொஞ்சம் வரவழச்சு எல்லாருக்கும் குடுக்கணும். சின்னதா போஸ்டர் அடிச்சு மிஷன்தெரு பக்கம் ஒட்டணும்." எனக்குப் புரிந்தது. என்னுடைய இடம் எது என்று எனக்குப் புரிந்தது. ஆனால் என்ன கதைதானே இப்படி எழுதியவன் அப்படி எழுதினால் என்ன? அதில்என்ன சிரமம் தொல்லை? 

"அதுக்கென்ன அப்டியே செஞ்சுடுவோம்! நீங்க நல்லவர்ன்னு ஒரு கதெயெழுதீட்டாப் போச்சு என்ன ப்ரமாதம்" 

பேசுவது நான்தானா? கதையெழுதிய நானல்ல. 

இன்னும் அந்த வயதானவர் உடலில் நடுக்கம் பரபரப்பு வேகம் எல்லாம் நீடித்திருந்தது. ஆமாம் என்பதை இல்லையென்று ஆக்கிக்கொண்ட ஆவேசம். மனிதனின் தர்மாவேசம்.

 எண்பத்துமூன்று வயதான இந்த உலகின் இந்தப் பாத்திரம் 

உண்மையா? என் கதையிலே வருகிறாரே சாளிப்பிள்ளை 

அவர் உண்மையா? எது நிழல் எதுபோலி 

இந்த மனிதரும் பொய் அந்தப் பாத்திரமும் பொய்! 

பொய் பொய்யைப் பற்றிப் பேச வந்திருக்கிறது இன்னொரு பொய்யிடம் நான் இதுவரை சந்தித்திராத இந்த மனிதனை மேலும் எனக்கு சந்திக்க ஆசையும் பிறக்கிறது. நான் பார்த்தேயிராத இந்தக் கதையின் கதாபாத்திரத்தை நான் படைத்ததை எல்லோரும் நிரூபணம் செய்ய வந்தபோது இந்த மனுஷனும் கதாபாத்திரமாகிவிட்டார்.
________________

என்னைச் சந்திக்க வந்த என் கதாபாத்திரம்

கடவுள் இறந்தும் மனிதனுக்கு தவறுகள் மீதுள்ள ஆதாயம் 
தர்மங்கள் மீதுள்ள பிடிப்பும் வளர்ந்திருக்கிறது பெருகி ஓங்கியிருக்கிறது. 

தர்மங்களும் வளர்ந்தன தவறுகளும் தொடர்ந்தன. தொடர்கின்றன. 

ஆ வாழ்க்கையும் அதன் கதாபாத்திரங்களும்தான் எத்தனை ரசமானவை! 

வாழ்வைதான் காதலிக்கிறேன். 

சாளிப்பிள்ளையையும் சாள்ஸ் பிள்ளையும் ஒன்றாகக் காண்பதில்தான் 

எத்தனை சுகம் எத்தனை இன்பம்! 

தவறுகள் வளர்க தர்மங்கள் ஓங்குக! 

என் கதாபாத்திரம் என்னைச் சந்திக்க வந்தபொழுதுகள் இனிமையானவை. 

"அப்ப. ப்ராகாஷ் கண்டிப்பா நீங்க இன்னொரு கதை எழுதணும் அதுல. இந்தப்பசங்கல்லாம் வெட்கப்பட்டுப் போறமாதிரி என்னெ நல்லவனா எழுதணும். இந்தப்பசங்க பண்ற அட்டகாசத்தெல்லாம் எழுதி இந்தப்பசங்களை கெட்ட பயங்களாக் காட்டி எழுதணும். நாம்ப எல்லாம் கிருஸ்தவங்கப்பா நம்பள்ளாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுப்பா. ம்ஹ நான் வரட்டுமா? காட் ப்ளஸ் யூ' - அவர் புறப்பட்டுவிட்டார். 

ஆம் என் கதாபாத்திரம் புறப்பட்டு விட்டது. எனக்கு ஒரு மெஸ்ஸேஜூம் கொடுத்துவிட்டல்லவா புறப்பட்டிருக்கிறது ஆம். 

'ஒண்ணுக்குள் ஒண்ணு' எத்தனை ரசமான செய்தி. எல்லாமே அப்படித்தான் இருக்கிறது.
 ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான். ஒன்றுக்குள் இரண்டல்ல. 

சான்ஸலக்குள் சாளிப்பிள்ளை பொய்க்குள் பொய். ஒண்ணுக்குள் ஒண்ணு! 

(சுந்தரசுகன் - ஆகஸ்டு, 93) v,