தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, April 28, 2016

ம்ருத்யு - அம்பை________________

https://ia600504.us.archive.org/9/items/orr-11926_Mruthyu/orr-11926_Mruthyu.pdf

ம்ருத்யு - அம்பை

அந்தக் கடிதத்தைப் படிக்க இப்போது அவசரம் ஒன்றுமில்லை. அப்பாவுடையதுதான்.

எழுபது வருடங்கள் வாழ்ந்த பாரம் முன்னால் உள்ள இருளை நோக்கித் தள்ள, சின்ன ஜலதோஷம், கால்வலி, கண் பார்வை மங்கல், தும்மல், மலச்சிக்கல் எல்லாமே அந்த இருளை நோக்கிப் பிரியும் பாதைகளாக, பிரம்மாண்ட சூசகங்களாக அவருக்குத் தோன்றி ஒவ்வொரு கடிதத்திலும் அந்த பயத்தின் நிழல்களையே அவர் காட்டுவார். அப்பாவின் சாவு பயம் நீண்ட விரல்களாய் விரிந்து, வளைந்து கூரிய நகங்களோடு, வெட்ட வெட்ட வளரும் சதைத் தோற்றங்களாய் அவளையும் வளைத்ததுண்டு.

ஒவ்வொரு உறக்கத்திலும் . . . ...

துாரத்தில் முணுமுணுப்பாய்ப் பிறந்து, பின் ஓங்காரமாய் எழும் கோவில் மணியின் பின்னணியில் தட்டுத் தடுமாறி நடக்கையில், இருளைக் கரங்களால் துளைத்துக்கொண்டு முன்னேறுகையில் ... "அது வரும். ஒநாய்க் கண்களோடு, கண்களின் ரத்தம் அவள்மேல் பாய்வது போல், முகத்தில் நாகப் பழம் நாகப்பழமாய் கட்டிகளோடு, கரங்களை விரித்துப் பார்வையை அவள் மேல் ஒழுகவிட்டு வரும். உடலெல்லாம் ஜில்லிக்கும்.மூச்சு அடிவயிற்றில் இறங்கி உறைந்துபோகும். மரத்தன்மை மேலே கவிந்து, கால்கள் நடக்க மறுத்து, "அது இன்னும் ஒரடி மேலே வரும்போது ...

--

ஆ. . " என்ற வீறல். அவள் விழித்துக்கொள்வாள். சுற்றி யுள்ள இருளில் "அது நெருங்கி வந்தவாறே இருக்கும். எல்லாவித பயங்கர ரூபங்களோடும். ஐந்து வயதில் ஏத்மானுரரில் பார்த்த எலி கடித்த முகமாய், அம்மை வடுக்களின் பாளங்களோடு வெறியுடன் துரத்திய காமுகனின் தடித்த உதடுகளாய் "எனக்கும் மென்மை உணர்ச்சிகள் உண்டு" என்று ஆத்திரமாய்க் கத்தியவாறே அவளை அறைய வந்த

- 54 - அம்டை ________________அப்பாவின் மயிர் அடர்ந்த பாம்புக் கரமாய்... வேர்வை கொட்ட, போர்வையை உதறி எழுந்து விளக்கைப் போடுவாள்.

அப்பாவின் கடிதத்தைப் பிரித்தாள்.

கண் வலி...... பெரியப்பா பிள்ளை பி.ஏ. படித்த பெண் கேட்டு ஸ்கூல் ஃபைனலை மணந்த காதை ... ... எவர்ஸில்வர் பாத்திரம், சீர் கணக்கு. . . . . . ராம நவமிக் கச்சேரி. . . . . . என்னது?

ம்ருத்யஞ்ச ஹோமமா?

அவள் வர வேண்டுமாம். பிரம்மாண்ட ஹோமமாம். சாவை எதிர் கொள்ளும் நாளை ஒத்திப்போட, நக்கித் தின்னும் நாயாய் மிச்ச வாழ்வை பயமில்லாமல், கல்லடி விழும் என்ற தியானம் இல்லாமல் நக்க.

அப்பாவின் ஜனனம் எப்போது உண்டாயிற்று?

ரத்தக் குழம்பில் முழுகி, நாபிக் கொடி அறுக்கப்பட்டு, ஒரு விதவை யின் கடைசி நெருக்கத்தின் சின்னமாய் உதித்த ஜனனம் அல்ல. அவரைச் சுற்றியும் உள்ள வாழ்வுக்கு அவர் எடுத்த ஜனனம். நீலப் பச்சையாய், பழுப்பாய், பனி மலையாய்ச் சுற்றியுள்ள மலைத்தொடர் களுக்கு, ரஸ் குண்டாய்ப் பூக்கும் ரோஜாக்களுக்கு, காலை வேளை யின் கடமையாய் அவர் பார்க்கும் நெருப்புச் சுடரின் மென் சிவப் புக்கு, காப்பித் தோட்ட கணக்கு வழக்கைப் பார்க்கப் போகும்போது வெண்துகிலாய்ப் பூத்துக் கிடக்கும் காப்பிப் பூக்களுக்கு...... இதற் கெல்லாம் அப்பா ஜனனம் எடுத்தாரா?

"அப்பா, மலையைப் பாத்தியா அப்பா? ஒரே பச்சை. மனசை என்னமோ பண்றதுப்பா. பிரம்மாண்டமா, ஒரே வீச்சுலே வளர்ந்த மாதிரி, மானத்தை முட்டிண்டு, நான் என்னமோ சின்னதாயிண்டே போய் இல்லாமலே போயிடற மாதிரி தோணறதுப்பா. மலைமேல நடக்கலாமாப்பா ?”

"அதெல்லாம் வேண்டாம்மா. விழுந்தா எலும்பே கெடைக்காது. உள்ளே போயிடு. மலையைப் பாத்தாச்சு இல்லியா? உள்ளே போய் ஹோம் வர்க் பண்ணு."

ராத்திரி வேளை.

ஐந்து முனைகளை நீட்டிக்கொண்டு, வெள்ளிச் சதங்கை மணி களாய்ப் பூத்த தாரகைகள் படர்ந்த வானம். மெல்ல, மிக மெல்ல, அந்த வெண் பஞ்சு இடையில் ஊர்கிறது. அந்தக் கருநீலமும், வெள்ளி யும், வெண்மையும் உள்ளெல்லாம் ஊடுருவிப் பாய்கிறது. கண்களில் நீர் பொங்குகிறது.

"குழந்தை ராத்திரியைப் பாத்து பயந்துட்டா. அழறா பாரு. இருட்டோல்லியோ? என்ன இருட்டு பாரு சுடுகாடு மாதிரி.”

ம்ருத்யு * 55 や ________________மலையடிவாரத்தில் ஒரு பஸ் ஸ்டாப்பில் இரவு பஸ்ஸுக்காக அப்பா, அம்மா, அவள் மூவரும் நின்றுகொண்டிருந்தபோது இது நடந்தது.

"எனக்கே பயமா இருக்குடி. எங்கேயோ, இந்த ஜெயில் மாதிரி

இருக்கற மலை நடுவிலே, இருட்டுலே இந்தப் பனியிலே செத்து வெச்சா என்ன ஆகும்?"

"சும்மா இருங்கோ நீங்க."

எல்லாவற்றையும் தத்தம் செய்துவிட்ட துறவிகள்போல, அகல

விரிந்து நீண்டு மஹா சுதந்திரத்தோடு படுத்துக் கிடந்த மலை ஒன்றின் உச்சியில், அதன் கபாலப் பிளவில் அவள் ஒரு முறை ஜனித்தாள்.

அந்தச் சிறு பள்ளியில் அவள் ஆசிரியையான புதிது. இதுவரை தடை செய்யப்பட்ட மலையின் மேல் அவள் ஏறினாள். "விழுந்தால் எலும்புகூட கிடைக்காது ..." அப்பாவின் குரலும் மலை ஏறியது அவளுடன்.

அந்தத் தனிமையில்துக்கங்களும், அவமானங்களும் ஏக்கங்களும் துணை வந்தன. அவள் எவ்வளவு சோகித்துப் போயிருக்கிறாள்!

"ரங்கா... மலை மேல் என்னைத் துரத்துகிறாயா. . . . . .?" என்று கேட்டுக் கொண்டாள். கையில் ஒரு மோதிரம் ஏற்றின ரங்கா.

"இந்த அனுபவத்தை வெறும் வார்த்தையா ஆக்காதே லீலு." "எனக்கு மலை ஏறப் பிடிக்கும். உனக்கு ரங்கா?" "எனக்கு உன் கண்ணைப் பார்க்கப் பிடிக்கும். மலை, கடல் எல்லாம் அதிலியே இருக்கு" பிறகு மெளனம். நீண்ட, மெத்தென்ற மெளனம்.

"ரங்கா, உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சே? வெளியூர் போயி ருந்தியா என்ன ?"

"ம்: ஆமாம். ராத்திரி வரயா?” ஒ

"ரங்கா"

--_ wo

"உஷ் மெள்ளப் பேசு. பக்கத்து ரூமிலே இருக்கற பையன் கேப்பான்." "ரங்கா, எவ்வளவு பேசணம் தெரியுமா?" மோதிரத்தால் அவன் கன்னத்தை வருடினாள்.

மிக நெருக்கம். "ம் ஹாம் ரங்கா. இன்னிக்கு முடியாது. உடம்பு சரியில்லே." ஒர் உதறல்.

* 56 - அம்பை ________________"அப்படீன்னா போ. எனக்குப் பேச ஒன்னுமில்லே." மெல்ல குறட்டை கேட்டது.

வெறும் உடம்போடு, முதல் முதல் நெருக்கம் ஏற்பட்ட மலை களுக்கு நடுவேயே அநாதையாய்த் தள்ளி எறியப்பட்டவள் போல நின்றாள். உடம்பு நடுங்கியது. மலைகள் பொடிந்து, கல்லும் மண்ணும் புழுதியுமாய் அவள் மேல் சரிய, குருதியும், கண்ணிரும், சீழும் வடிய வெகு நேரம் நின்றாள். பிறகு சென்றாள்.

மீண்டும் வரவில்லை. "ரங்கா... என் மனத்திலிருந்து போய்விடு..." மலைமேல் ஏறுவது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒரு பேய் அறை. அப்பா ஒரு முறை அறைந்தார். அவள் அவரைக் கேட்டே விட்டாள்.

"பூரணமா, எல்லா ஆவேசத்தோடயும் ப்ரளயம் மாறி வர அன் போடயும் எதையாவது நீ செஞ்சிருக்கியா அப்பா : அம்மா பக்கத் துலே படுத்துண்டபோது கூட நீ என்னத்தை எல்லாம் நெனச்சே? ஜாஸ்தியா சாப்பிட்டுட்ட அப்பளத்தையும், அதனாலே வயத்துலே கோளாறு வந்தா என்ன ஆகுமோன்னும், பீரோவிலே இருக்கற பணத்தையும். கொல்லைக் கதவு மூடியிருக்கான்னும், லைட் எல்லாம் அனைச்சாச்சான்னும், பால் பொறை குத்தியாச்சான்னும் ஒண் னொன்னா நினைச்சிண்டேதானே நீ படுத்துண்டே ரெண்டு உடம்புகள் கூடிண்டதுலே நான் பொறந்தேம்பா, உற்பத்திக் கருவி எல்லாம் பொருத்தின ரெண்டு மெஷின்களாலே தான் பொறந்தேன். ஒனக்கு மென்மை உணர்ச்சி உண்டாப்பா?"

ஓங்கி ஓர் அறை.

அந்த அறை, வலி, கண்ணிர், வீட்டை விட்டு வெளியேற்றம் எல்லாம் கூடவே வந்தன.

மலை உச்சி. விடிகாலை வேளை, பனியும், குளிருமாய் இருந்தது. திடீரென தீத்தட்டு ஒன்று, பூவைப் போன்ற மென்மையான ஜ்வாலை யோடு எதிரே பிறந்தது. அமானுஷ்யமான ப்ரதேசத்தில், வெகு உயரே, வலியோ ரத்தமோ இல்லாமல் அடி வயிற்றிலிருந்து நாபியில் ஏறிப் பின் தலைவரை ஓடிய ஒரு பேரமைதியில் அவள் ஜனித்தாள். ஜனிப்பிலேயே மரித்தாள். சிறு குழந்தையில் நடந்த அடக்குமுறையில் பிறந்த ஏக்கங்களுக்கு, மலைகளைச் சிறையாகக் கண்ட அப்பாவுக்கு, அவர் அடித்த வலிக்கு, ரங்காவின் சொற்களுக்கு, மோதிரத்துக்கு, ஒரு இரவின் தனிமையில் நேர்ந்த அவமானத்திற்கு அந்த இரவுக்கு முன் பலமுறை பிறந்த குழைவுகளுக்கு, உறக்கத்தில் துரத்திய பயங்களுக்கு, எல்லாவற்றுக்கும் மரித்துப் பின் ஜனித்து அவள் தங்கக் கிரணங்களில் நீராட்டப்பட்டு கீழே இறங்கி வந்தாள்.

ம்ருத்யு * 57 -- ________________அப்பா ஜனித்திருக்கிறாரா?

பாலக்காட்டில் சிறு கிராமம். ஒரு விதவையின் ஐந்தாவது பிள்ளை யாக அப்பா பிறந்தார். அவர் அம்மாவுக்குத் தன் கணவனின் சாவை நித்யம் நெஞ்சில் ரணமாய்க் கிளறும் ரூபத்தோடு பிறந்தார். யாரும் தோளில்துக்கிக் கூத்தாடும் அளவு சாமர்த்தியசாலியாக இல்லாமல், சாதாரண ஒரு குடுமிப் பையனாய்ப் படித்தார். பின்பு ஒரு குமாஸ்தா. அவர் ஃபைல்களை நன்றாகவே படித்திருப்பார். ஓர் அரசாங்க உண்மை ஊழியனாகவே இருந்திருப்பார்.ஆங்கிலேய ஆபீஸரின் வாயில் பிறக்கும் சொல்லுக்குக் கும்பிடு போட்ட ஒரு நல்ல பிராமண அடிமையாக இருந்திருப்பார். அவர் நாணயஸ்தனாகவும் இருந்திருப் பார்; பிடிபடுவோமோ என்ற பயத்தில்.

ஒரு நல்ல சுப வேளையில், ஒரு பெண்ணை மணந்துகொண்டார். குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார். அவை எல்லாம் செய்ய வேண்டியவை. செய்துவிட்டார். பதவி உயர்வு. சே, அப்பா வாழ்ந்தி ருக்கிறாரா?

ஜீவ ரஸத்தைக் குருதியில் கலக்கவிட்டு, பொங்கும் கடலாய், கீழ் கடல் அமைதியாய், வர்ஷிக்கும் மழையாய், பரவும் தீயாய், தெள்ளிய ஒடையாய், உலகத்தையே தன்னுள் ஈர்த்துக்கொண்ட ஒரு மனிதனாக அவர் வாழ்ந்திருக்கிறாரா?

வாழவே தெரியாதவருக்கு சாக எப்படி முடியும்?

எத்தனை பயங்கள், பயமுறுத்தல்கள் ?

"லீலு, பொய் சொன்னயா? அப்பறமா நரகத்துலே கொதிக்கக், கொதிக்க எண்ணெய்க் கொப்பரையிலே போடுவான்."

"ஏம்பா ?”

"எதிர்த்துப் பேசினா அடிப்பேன்."

"செத்துப் போறதுனா என்னப்பா?"

நீட்டிப்படுத்துக்கொள்வார். கண்கள் வெறிக்கும். வாய் பிளக்கும் கோணலாய். தலை தொய்ந்து விழும்.

"எழுந்திருப்பா, வேண்டாம்பா. பயமா இருக்குப்பா."

அப்பாவுக்கு ஜூரம்.

அம்மாவின் தோளில் சாய்ந்திருந்தார். இரவு வேளை, பச்சைப் புடவை உடுத்திக் கொண்டு பளிச்சென்று இருந்தாள் அம்மா. கதவி டுக்கு வழியாகத் தெரிந்தது.

"காமு, போயிடுவேனாடி? பயமா இருக்குடி, தெருவைக் கடக்கற போதும் வண்டிலே போறபோதும் மலைலே ஏறற போதும் ஜாக்கிர

* 58 -- அம்பை ________________தையாப் பாத்துண்ட உசிருடீ. இந்த ஜூரம் எடுத்துண்டு போயி டுமோ?" சாவை நினைத்து ஒவ்வொரு கணத்தையும் பறி கொடுத்த அப்பாவுக்கு, அந்தக் கடைசித் துயிலுக்கு அர்ப்பணிக்க என்ன இருக்கிறது?

மெல்லக்கையைப் பிடித்து, மலையடிவாரத்தில் அப்பாவை நடத்திப் போனாள் ஒரு முறை. துரத்தில் பாட்டின் ஒசையும், திடீர் திடீரென வண்ணக் குவியல்களும் பிறந்தன. வண்ணான்கள் துணி களை உலர்த்திக்கொண்டிருந்தார்கள். அங்கும் இங்கும் பச்சைக் கனவுகளாய்க் கிளிகள் பறந்துகொண்டிருந்தன. அந்த அமைதி அடி வயிற்றில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

"இதையெல்லாம் பாருப்பா" "சோன்னு யாருமே இல்லாத பிரதேசமா இருக்கே குழந்தை பயமா இல்லியா?" வண்ணான்கள் விரிக்கும் வர்ணத் துணிகளாய், பறக்கும் கிளி களாய், சூரிய கிரணங்களாய், வெய்யிலில் ஊதா நிறமாய் மாறும் மலைகளாய் அவள் உருவெடுக்கும்போது, "அவள்” என்ற ஒன்றே மறையும்போது, என்ன தனிமை, என்ன பயம் ? சொன்னால் அப்பாவுக்குப் புரியாது. "பயம் என்னப்பா? எவ்வளவு அழகா இருக்கு பாரேன்." "ஆமாம் குழந்தே இவ்வளவு அழகையும் விட்டுட்டுப்பாவி மனுஷன் ஒரு நாள் சாகப் போறான் இல்லியா?" - அவள் மெளனமாய் அப்பாவின் நரம்பு புடைத்த கரத்தை நீவி னாள். அந்த அருமையான கணத்தை அப்பா இழந்துவிட்டார். ஊருக்குப் போனாள்.

ம்ருத்யஞ்சஹோமம் நடந்தது, பிரம்மாண்டமாய், கோஷங்களோடு, அதீத மரியாதையோடு, கம்பீரமாய் நடந்தது. பட்டு வேஷ்டி உடுத்து, சுருங்கிய உடலோடு அப்பா நன்றாகவே இருந்தார். அவளுக்குத்தான் கண்கள் சரியாகத் தெரியவில்லை.

ஹோமத்தி படமெடுத்து, அப்பாவின் கரம் நீண்டு அதில் நெய்யை வார்த்தபோது, திடீரென்று, அத்தீயின் முன் சதையெல்லாம் அறு

பட்ட ஒரு எலும்புக் கூடு அமர்ந்திருப்பது போல் தோன்றியது. தீயின் நடுவே, நீண்ட ஒரு எலும்புக் கை சமர்ப்பித்த நெய்யில் பிணவாடை

அடித்தது.

'கணையாழி ஜூலை 1974

ம்ருத்யு <> 59 <>