தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Friday, April 22, 2016

சலிப்பு - கலாமோகன்

சலிப்பு - க.கலாமோகன்
மெய்ப்பு பார்க்க இயலவில்லை 

எக்ஸில் -1
www.padippkam.com

எனது கால்கள் நடக்கச் சிரமப்படுகின்றன. உடலோ மிகவும் பாரமாக இடங்கள் யாவும் மங்கல்களாகி என்னை மிரட்டுகின்றன. திறந்த புத்தகத் தின் மீது தூசிப்படலம். எழுத்துகளைத் துடைக்கவும் சிரமம். பேனா காய்ந்து பல வருடங்கள், அதனைக் கழுவி புது மை விடுவதற்கோ எத்தனங்கள் எதுவுமே எனக்குள் இல்லை. கான மயில் தூரத்தில், மிகவும் தூரத்தில் எனது பார்வைக்கு எட்டாத் தூரத் தில். வான்கோழிகளோ அருகில் இவைகளும், இவைகளது நடனங்களும், நானும் எனது நடையும். எனது தனியைப் பயணம் மெளனமானது, மெதுவானது. 

நிரந்தரமாக என்னைத் துரத்தும், அத்தோடு நானாகவே மாறி விட்ட சலிப்பிலிருந்து சற்றே வெளியேறிப் போனைத் துாக்கி இலக்கங்களைச் சுழட்டுகின்றேன். முதலாவது இலக்கமே பூச்சியம். அதன்பின் வேறு இலக்கங்கள். 

"வணக்கம், தொழிலுக்கான தேசிய இலாகாவில் நீங்கள் பதிவு செய்த விளம்பரத்துக்காக உங் களைத் தொடர்பு கொள்கிறேன். கடந்த பத்துவருடங்களாகக் கோப்பைகள் கழுவுவதிலே எனக்கு அனுபவம் உண்டு." 

"மன்னிக்கவும்! இந்தப் போஸ்ட்டுக்காக நாங்கள் வேறு ஒரு வரை எடுத்துவிட்டோம்..."

 முதலாவது தடவையாகவா இந்தப் பதிலைக் கேட்கின்றேன். கேட்டுக் கேட்டு மனது உண்மை யிலேயே சலித்து விட்டது. 

ஒரு காலத்திலே நாளை என்னை அச்சுறுத்தும் ஒன்றாக இருந்தது. அவநம்பிக்கைகள் தந்த ஒத்தடங்களால் இந்த நாளைகள் தரும் அச்சுறுத்தல்கள் எனக்கு மரத்துப் போய் விட் டன. நான் ஓடமாட்டேன். அதுவும் மெதுவாக, புதிய காலங்களின் சட்டங்களோடு ஒத்துதல் எனது மதம் அல்ல.

புதிதும்,புதியகாலங்களும். "மனிதம் அழிகின்றது, உனக்கேன் கவிதை? " என்று கேட்ட எனது நண்பன் தூங்கிச் செத்தபோதுநான் அழவில்லை. எமது விழிகளின் கண்ணீர்களும், எமது உயிரின் கவிதைகளும் திருடப் பட்டுவிட்டன. 

"எனது காதலியே!
 நீ -அழ வேண்டாம்,
இது இயந்திர உலகு... 
கனவுகள் காணாதே, 
இவைகளைத் தாக்கவும் 
உனக்கு மயானம் இல்லை." 

நண்பன் எழுதிய கடைசிக் கவிதை வரிகள். இவனது காதலியை நான் ஒருபோதுமே கண்ட தில்லை. காதலியா?அல்லது கனவுக் காதலியா? அவனை நான் கடைசித் தடைவையாக பாரிஸ் லக்ஸ்ஸம்பேர்க் பூங்காவிற்குள் கண்டேன். உடைகள் கசங்கியி ருந்தன. விழிகளோ எதனையும் பார்ப்பதற்கு விருப்பமில்லாதது போல. என்னைக் கண்டது போலவும் காட்டிக் கொள்ளாமல். "8.6 'பியரைக் குடித்துக் கொண்டிருந் தான். நான் அழைத்ததைக் கேட் டபின்தான் அவனது முகம் என்னை நோக்கித் திரும்பியது. எந்த அர்த்தங்களையும், விருப்பையும் காட்டிக் கொள்ளாத முகம். 

"10 பிராங் இருந்தாத் தா"

நான் கொடுக்கின்றேன்.

"இந்த வாங்கிலை இரு நான் உடனை வந்துவிடுவன்."

அவனுடைய நடை அவனுடைய உள,உடல்த் தளர்ச்சியை எனக்குக் காட்டுகின்றன. அவன் மாறிவிட்டான் என்றும் அல்லது மாறவில்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். வருடங்களின் முன்னர்தான், ஓர் நூலகத்தில் அவனை நான் முதல் தடவையாகக் கண்டேன். அவனது மனம் இலக்கியத்துல் கபளீகரம் செய்யப்பட்டது .என்பதை ஊகிக்க எனக்குப் பல நிமிட ங்கள் எடுக்க வில்லை. சம்பாஷனையின்போது 'வேலை பற்றிக் கேட்டபோது "இரண்டு மணித்தியாலம் பீரோக் கிளினிங் செய்யிறன்." என்று சொல்லிக் கொன்டான்.

அன்றிலிருந்து இரண்டு, மூன்று நான்கு மணித்தியாலங்களுக்குள் வாழும் மனிதனாகவே அவன். இவன் தனது தொழில் அனுபவங்களை எனக்குச் சொன்னதுண்டு. "எனது இயக்கம் என்னரை கனவுகளுக்கைதான் இருக்கு." எனப் பல தடவைகள் என் கனிடம் அவன் செல்வியுள்ளான். ஆனால் தனது காதலி பற்றிச் சிலதட வைகள் மட்டுமே.

"உன்னரை காதலியும் உன்னை ப்போல கனவுகளுக் கைதான் தன்ரை இயக்கத்தை வைச்சிருங்கிறாளா?" என ஒருதடவை நான் கேட்டேன், -

"அவளின்ரை கனவுகளும் என்ரை கனவுகளைப் போல கருகிக் கொண்டிருக்கும் கண்டு நான் நம்புறன்."

'10  பிராங்குடன் போனவன் ஓர் "8-6" உ டன் திரும்பி வருகிறான். பியர்ரின் மிகவும் மெதுவாக உடைக்கப்படுகிறது.

"|நீ கொஞ்சம் குடிக்கப் போறியா?"

"எனக்குப் பெரிசாத்தாக மெண்டில்லைத் தான். ஆனால் கொஞ்சம் எடுக்கிறன்" என்றபடி ஒரு மிடறை உறிஞ்சுகிறேன். கசப்பாக இருந்தது.

"உனக்கு ஒரு நல்ல சேதி சொல்லப்போறன்." என்ற சொல்கின்றான்.

"சொல்'

"என்னரை காதலியும் நானும் சேர்ந்து வாழப்போறம்."

"வாழ்த்துக்கள்"

"நன்றி"

"தனிமை வாழ்க்கை உண்மையிலேயே மோசமானது." உலர்: ?

"சேர்ந்து வாழுதலும் ஒரு பார்வையிலே மோசமானதுதான். . ."

"அப்ப நீ ஏன் சேர்த்து வாழ முடிவெடுத்தனி?”

" எனக்கு இதைவிட வேற சொய்ஸ் எதுவும் கிடைக்கேல்லை. . "

"உன்ரை காதல் போலியானதா'

"இல்லை. சுத்தமானது" "அப்படியென் ஏன் இந்தச் சஞ்சலம்?

"இந்தக் கேள்வியின்ரை விடையை நீ ஒருநாள் தெரிஞ்சு கொள்வாய்..."

பியரைக் குடித்தபடி கவிதைகள் பற்றிப் பேசுகின்றான். அவனது கடைசித் கவிதைகள் சில எனது பார்வைக்குள் கிடைக்கின்றன. எந்தக் குறிப்புகளையும் சொல்லாமல் பசித்தபின்னர் கவிதைகளை அவனிடம் கொடுக் தின்றேன்.

"நான் தனிய இருக்க விரும்பு கின்றேன்."

அவன் தூங்கிச் செத்த விஷயம் எனக்குப் பிந்தியே கிடைத் தது. நான் இதற்காக வருந்தவும் இல்லை,காரணங்களைத் தேடவும் இல்லை. இது பற்றி வேறு எவராவது வருந்தினரா, காரணங்களைத் தேடினரா என்பதுவும்  எனக்குத் தெரியாது. வாழ்வின் பல பக்கங்கள் மர்மமானவை. இந்தப் பக்கங்களை வாசிக்க வேண்டும், விளங்க வேண்டும் என்கின்ற எந்த முனைப்புகளுமே எனக்குள் இல்லை. என்னை அணைப்பது சலிப்பு மட்டுமே. எனது பிரார்த்தனை - இது ஒரு  வேளை வெளிச்சமில்லாத உலகா

எனது ஹான்ட் போன் அலறுகின்றது.

"ஒரு வேலையொன் டு இருக்கு. உடனடியா. இந்த நம்பரை எழுதும். உடனடியா இதுக்கு அடியும் ”

இன்னொரு நண்பர். நான் நன்றி சொல்லு முன்னரேயே தொடர்புகட் ஆகின்றது. குரலின் அவதியையும், அவர் அந்தக் கணத்தில் எங்கேயிருந்து அடித் ர் என்பதையும் சில சத்தங்க ஒருக்கூட ஊகித்துள் கொன் டேன். அவர் ஓட விருப்பாதவர். ஆனால் ஓடும் உலகத்துக்குள்.

தொடர்பு கட் பண்ணப் பட்ட பின்னர்தான் என்ன வேலையைக் கேட்டு அவர் தந்த இலக்கத்திற்கு நான் போன் பண்ணவேண்டும் என்பதைக் கேட்காது விட்டது நினைவுக்கு வந்தது. இது தொடர்பாக நான் அலட் டிக் கொள்ளவில்லை. முன்பும் பல தடவைகள் அவர் எனக்கு இலக்கங்கள் தந்துள்ளார். றெஸ்ரோரன்ட் வேலை இலக்கங்களே. நான் அவைகளுக்கு அடித்த தில்லை. அவர் மீளவும் அடித்துக் கேட்டால் "அடித்தேன். ஒருவரை ஏற்கனவே எடுத்திட்டினம் எண்டு பதில் கிடைச்சது." என்ற சொல்லிக் கொள்வேன். எனது மொழிகளை அவர் நம்பினாரா என்பது எனக்குத் தெரியாது.

ஆனால் இந்தத் தடவையோ நான் அடித்தேன். காரணம்: இர ண்டு மாத வீட்டு வாடகை, இரண்டு மாத மின்சார பில், ஹான்ட் போன் பில் இவைகளைக் கட்டாது விட்டால் நிச்சயமாக நான் வெளியே,

மணி அடித்தது. தொடர்பு கிடைத்தது. நான் "ஹலோ"  சொல்ல முன்பே ஒரு பெண்ணின் குரல்.

"ம்! ம்! எனது உடல் மிகவும் குடாகவுள்ளது. நான் மிகவும் செக்ஸியானவள். எனது உதடுகளைக் கண்டால் உங்களுக்குத் தாகம் வந்துவிடும். உங்களது காமத் தேவைகள் அனைத்தை பும் நீங்கள் என்னுடன் தீர்த்துக் கொள்ளலாம். எனது வயது 22.கூந்தலின் நிறம் பிறவுண். எனது நிறை 47 கிலோ என்னுடன் தொ டர்பு கொள்ள இரவு 8 மணிக்குப் பின்னர் அடிக்கவும்."

போனில் என்னுடன் பேசியது பதிவு நாடாவே. இலக்கத்தை தவறுதலாக கொம்போஸ் பண் ணிைவிட்டேன் போலும் என நினை த்து மீண்டும் அடிக்கின்றேன். திருப்பவும் பதிவு நாடாவே பேசு பகின்றது. மனது சலித்து உடல் முழுதும் ஒருவித களைப்பு. வேலைதேடும் இலாகாவுக்குப் போவதில் உள்ள சிறிய முனைப்பும் உடைந்து நொறுங்குவது போல ஒர் பிரமை, போர்வையால் உடல் முழுவதையும் மூடித்தூங்க வெளிக்கிடுகின்றேன். தூக்கம் எது மறுக்கின்றது. ஏன் அசைதல் வேண்டும் என்ற ஒரேயொரு கேள்விமட்டுமே எனக்குள்.

கதவு தட்டப் படுகின்றது. பொல்லாந்தடி கொண்டு யாரோ தலையில் ஓங்கி அடிப்பது எழுந்து கதவுவரை போகவோ, யார் திட்டுவது என்பதை அறியவோ மறுக்கின்றது மனம். கதவு மீன் டும் தட்டப்படுகின்றது. மிகவும் சிரமப்பட்டு கதவைத் திறக்கின்றேன்.

இலக்கம் தந்த ந்ண்பர் கதவின் முன்னே, "அடிச்சனியோ?" கேட்கின்றான்.

"ஓம்"

"வேலை கிடைச்சிட்டுதோ "

 "வேலை இல்லையாம். . ."

"அடுத்தகிழமை ஒரு வக்கன்ஸ் வேலை கிடைத்தும். செய்விரோ?"

"இல்லை" என்றால் கோபித்து விடுவரோஎனப் பயந்து"ஓம்"என் கின்றேன். பின்னர் அவர் வேறு சமாச்சாரங்களை என்னுடன் கதைக்க வெளிக்கடுகின்றார்

"பியர் ரின்னோடை திரியிற உன்ரை பிறன்ட் ஏன் தற்கொலை செய்தவனெண்டு உனக்குத் தெரி யுமா? எனத் தொடங்குகின்றான்.

"அவன்ரை தற்கொலைக்கான காரணங்களை நான் தேட வெளிக்கிடேல்லை ஏனெண்டா என்ரை தேடல்கள் ஊகிப்பாக மட்டுமே இருக்கும். ஊகிப்புகள் உண்மைகளாக இருக்கலாம் எண்டு அடிச்சுச் சொல்லிற துணிச்சல் என்னிட்டை இல்லை."

"காதல் பிறேக் எண்டும். வேலை கிடைக்கேல்லை எண்டதும் காரணமாக இருக்கலாம் எண்டு கதைக்கிறாங்கள்."

"இவைகள் ஊகிப்புகளே." எனச் சலிப்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

"அவன்னர கவிதையள் புத்தகமா வரப்போகுதாம் எண்டு கேள்விப்பட்டனான். உன்னட்டை அவன்ரை கவிதையள் ஏதும் இருக்கோ?

"கவிதைகளை அவன் காட்டேக்கை வாசிச்சிருக்கிறன். ஆனா ஒரு பிரதியுமே என்னிட்டை இல்லை. . ."

வக்கன்ஸ் வேலை செய்யும் ரெஸ்ற்ரோறன்டினது முகவரி யைத் தந்துவிட் டு கட்டாயம் போய்க் கதைக்கவேண்டும் என்ற எச்சரிக்கையையும் தந்தபின்னர் அவர் போகின்றார். நான் மீண்டுய் போர்வைக்குள் தஞ்சமடைந்து கொள்கின்றேன்.

"எனது காலங்களே

உனது காலங்கள்

எனது காலங்களே

எமது காலங்களோ எமது

கைகளில் இல்லை

கனவுகள் புள்ளிகளாகி

மறைகின்றன. . .

 நீரும் நிலவும் எங்களை

ஏங்குகின்றன."

முதலாவது தொடர்புகளின் போது அவன் காட்டிய கவிதைகளில் ஒன்று என் முன் பளிச்சிடுகின்றது. அவன் அவநம்பிக்கைகளை சுவாசித்தவன். அவனது முடிவின் காரணங்கள் மர்மமானவை. இந்த மர்மத்தின் மூலங்களைத் தேட நினைத் தாலும் அவனது சுத்தத்தில் கரியைப் பூசிவிடும் என்ற கருதியபடி தூங்க முயற்சிக்கின்றேன்.

எந்த எத்தனங்களும் இல்லாத ஒர் முயற்சி மட்டுமே. இன்று போல நாளையும் என் முன் மறைகின்றது. அவாக்கள் யாவும் நீறாகின்றன.