தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Sunday, April 10, 2016

ஜே ஜே சில குறிப்புகள் சுந்தர ராமசாமி ( இடையிலுள்ள சில பகுதிகள்)

ஜே ஜே சில குறிப்புகள் 
 சுந்தர ராமசாமி

.....
முடியாது' என்றான். கடுமையான வெயிலில் குடையைப் பிரிக்காமல் நடந்து போகிறவர்களை அவன் அடிக்கடி காட்டித்தருவான். நான் அவனுக்கு ஆசிரியராக இருந்தபோது, ஒரு மாணவி வந்து அவன் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகப் புகார் கூறினாள். என்ன என்று விசாரித்தபோது, வெளியே தெரிந்துகொண்டிருந்த அவளுடைய உள்ளாடையின் நாடாவை அவன் சரி செய்துகொள்ளச் சொன்னானாம். இது பெரிய உதவியல்லவா! அவன் சொல்லவில்லையென்றால் தெரு வழியாக அப்படியே நீ போயிருக்கமாட்டாயா ?” எனறு நான் கேட்டதற்கு, ஜோசஃப் என்ன செய்தாலும் ಟ@ಳಿ சரிதான் என்று சொல்லிவிட்டு, முகத்தை வலித்துக் கொண்டு போய்விட்டாள். இவை எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன.'

7

நான் எனது ஏழாவது அல்லது எட்டாவது வயதில் சம்பத் மாமாவைப் பார்த்திருந்ததுதான். அதன் பின் எனக்கு அவரைப் பார்க்கக் கிடைக்கவே இல்லை. இப்போது அவர் வடக்கே சென்றுவிட்டதையும் கடிதத் தொடர்பு விட்டுப்போய்விட்டதையும் அரவிந்தாட்ச மேனன் என்னிடம் சொன்னார். சம்பத் ஆங்கிலத்தில் எழுதியுள்ள முழுமையடையாத சுயசரிதைக் குறிப்புகளின் கையெழுத்துப் பிரதி தன்னிடம் இருப்பதாகவும், அதி லிருந்து ஒரு பகுதியை மொழிபெயர்த்து எனது நூலில் சேர்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் யோசனை சொன்னார். மேனன் அடையாளப்படுத்திய பகுதியை நான் ஹோட்டலில் தங்கி மொழிபெயர்த்து என் ஆத்ம திருப்திக்காக அவரிடம் படித்துக் காட்டினேன். இப் பகுதியைச் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டு, மேனன் தந்த விலாசத்திற்கு எழுதியதற்கும், நினைவுறுத்தி எழுதிய கடிதங்களுக்கும், எவ்வித பதிலும் சம்பத்திடமிருந்து கிடைக்காததில், மேனனின் யோசனையைப் பலமாகக் கொண்டு இப்பகுதியை இங்கு சேர்த்திருக்கிறேன். 

நான் மொழிபெயர்த்த பகுதிகள் :

இதற்கு முன்னும் கனவுகள் கண்டிருக்கிறேன் என் றாலும் இப்படி இல்லை. இப்படி பாதிக்கப்பட்டது இல்லை. கனவுகளுக்கான விளக்கங்கள் கூறும் புத்தகங் களைப் படித்துப் பார்த்தேன். ஒன்றும் தெளிவாக இல்லை. நனவுகள் பற்றிய விளக்கங்களே குழம்பிக் கொண்டிருக்கும்போது கனவுகள் பற்றிச் சொல்வானேன். எனக்கு நானே யோசித்துப்பார்த்துக்கொள் கிறேன்.
ஏதோ கொஞ்சம் புரிவது போல் இருக்கிறது. புரிந்தது பற்றிக்கூடச் சந்தேகமாக இருக்கிறது. கண்ட கனவைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று எண்ணினேன். அது ஒன்றுதான் மீண்டும் மீண்டும் தீர்மானமாகத் தெரிந்தது.
வீதி வழியாக பயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறேன். மை இருட்டு, மண்ணெண்ணெய் விளக்குகளும் அவிந்து விட்டன. இரு பக்கங்களிலும் பூதாகரமாகத் தெரிவன கடைகள்தாம். சாத்திக்கிடக்கும் கடைகள். முன்னிரவில் லேசாகத் தூறல் போட்டிருக்க வேண்டும். செம்மண்ணில் பாதங்கள் சதக் சதக் என்று அழுந்துவது மிகுந்த அருவருப்பைத் தந்தது. அவிழ்ந்துகொண்டிருந்த வேட்டியைப் பிடித்துக்கொண்டே தலைதெறிக்க ஒடினேன். இதனால் ஒட்டம் தடைப்படுகிறது. அவிழும் வேட்டியைக் கட்டிக் கொள்ள நின்றால் அகப்பட்டுக்கொண்டு விடுவேன். ரொம்பவும் நெருங்கி வந்துவிட்டார்கள், பயங்கரமான அந்த ஆயுததாரிகள். இவ்வளவு கொடுமை நிறைந்த முகங் களை நான் பார்த்ததே இல்லை. பத்மனாபபுரம் அரண் மனையில் நான் பார்க்க நேர்ந்த புகழ் பெற்ற ஒவியத்தில் சதி ஆலோசனை செய்யும் கொடுமைக் காரர்கள்தாம் இவர்கள். அவிழ்ந்து கிடக்கும் குடுமிகள்; காதுகளில் கடுக்கன்; கண்களில் குரூரம்; வாயோரம் மிகுந்த அருவருப்பைத் தரும் அசட்டுச் சிரிப்பு. அதே கோஷ்டிதான் என்னைப் பிடிக்கத் துரத்திக்கொண்டு வருகிறது. மார்த் தாண்ட வர்மா மகாராஜாவை இவர்கள் என்ன பாடு படுத்தினார்கள் கடைசிவரையிலும் கையில் சிக்காமல் தப்பித்துக்கொண்டார் அவர். இப்போது அவரை விட்டு விட்டு என்னைத் துரத்துகிறார்கள். என்னை ராஜாவாக நினைத்துத் துரத்துகிறார்களோ என்னவோ. அப்படி என்றால் நான் ராஜா இல்லை. என். கே. சம்பத் என்று கெஞ்சிச் சொல்ல வேண்டும். நம்பமாட்டார்கள் பாவிகள். மார்த் தாண்ட வர்மா பூசாரி வேஷம் போட்டுக்கொண்டு இவர் களை ஏமாற்றித் தப்பித்துக்கொண்டார். இந்தச் சரித்திர உண்மை எனக்குப் பெரும் தடையாக வந்து சேர்ந்துவிட்டது. இப்போது ராஜா, என்னுடைய வேஷம் போட்டுக்கொண் டிருப்பதாகத் தவறாக நினைத்து என்னைக் கொன்றுவிடு வார்கள். நான் ஆங்கிலம் பேசிக்காட்டினால், ராஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பது இவர்களுக்குத் தெரியும் என்றாலும், ஆங்கிலம் இவர்களுக்குத் தெரியாததினால், நான் பேசுவது ஆங்கிலம் என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்? பெரிய பிரச்சினையாக வந்துசேர்ந்துவிட்டது.
அவர்களுடைய ஆயுதங்களும் பயங்கரமானவை. விசித்திர மாகவும், இந்த மண்ணுக்கே சம்பந்தமில்லாமலும் இருக்கின்றன. இதனைச் செய்து கொடுத்தது டிலனாய்’ ஆக இருக்குமோ? இருக்காது. அந்நியன் என்றாலும் டிலனாய் ராஜ விசுவாசம் கொண்டவன். ஆனால் இந்தப் பாவிகள் வேவு பார்த்துத் தெரிந்துகொண்டிருப்பார்கள். சப்பாத்திக்கள்ளி மாதிரி ஒரு தகடு ஆள்காட்டி விரல் நீளம் ஆணிகள் அதில் அறையப் பட்டிருக்கின்றன. சதையை நார் நாராகக் கிழித்துவிடும். இந்த ஆயுதத்தை நான் ஒரு ஆங்கில சினிமாவில் பார்த்திருக் கிறேன். அதே சினிமாவை இந்தப் பாவிகளும் பார்த்திருப் பார்கள் போலிருக்கிறது. ஆங்கிலம் தெரியாது என்றாலும் திரியாவரத்துக்கு நவீன யுக்திகள் ஏதேனும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர்களும் பார்த்திருப்பார்கள். அல்லது அந்தப் படத்தைப் பார்த்து டிலனாய் அந்த ஆயுதத்தைக் காப்பி அடித்துக் கொண்டானோ என்னவோ. அவன் காப்பி அடித்த ஆயுதத்தை இவர்கள் வேவு பார்த்துக் காப்பி அடித்துக்கொண்டிருக்கக்கூடும். 
காலடியோசை மிகவும் நெருங்கிவிட்டது. அகப்படத்தான் வேண்டும். எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் சிறிதும் சோர்வடைந்ததாகத் தெரியவில்லை. ஹா!ஹா!' என்று ஆர்ப் பரித்துக்கொண்டே ஓடி வருகிறார் கள். வெகு உற்சாகமாக, அழுகிய கால்நடைகளின் மீது உட்கார இறங்கும் கழுகைப் போல் எக்களிப்புடன் வரு கிறார்கள். பந்தங்களின் ஒளியில் என் முன் நீளும் நிழலைத் தாண்டிவிட்டேன் என்றால் பிழைத்தேன். அப்படித் தாண்டி விட்டேன் என்றால் பாதுகாப்பு ரேகைக்குப் போய்விட்டேன் என்று அர்த்தம். அதன் பின் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. எனக்கு வெகு அருகே வந்து நிற்பார்கள். ஆயுதங் களைக் கோடு தாண்டி நீட்ட முடியாது. ஆனால் என் முன்னால் நீளும் நிழலைத் தாண்ட வெகு விரைவாக ஒடியும், அடிவயிற்றிலிருந்து மிஞ்சியிருந்த முழு சக்தியையும் எக்கி எடுத்து என் கால்களுக்கு அனுப்பி வைத்தவாறு ஒடியுங்கூடத் தாண்ட முடியவில்லை. தீப்பந்தங்களின் உஷ்ணத்தை என் முதுகில் உணர ஆரம்பித்துவிட்டேன்.
-----------------------------------------------------------------
'டிலனாய் யுஸ்ஸ்ஸியுஸ் பெனடிக்துஸ் டிலனாய் திருவிதாங்கூர் ராஜா விர மார்த்தாண்ட வர்மா குளச்சலில் டச்சுப் படையை முறியடிக்க, அப்படையின் தலைவனான டிலனாய் உதயகிரிக் கோட்டையில் சிறை வைக்கப்படுகிறான். பின் அரசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகித் திருவிதாங்கூர் சேனையில் சேர்ந்து அதற்குத் தலைவனாகி மேல் நாட்டுப் போர்ப் பயிற்சிகளை அளிக்கிறான்.
---------------------------------------------------------------------------
அந்த வினாடியில், அதுவரையிலும் என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்த, ஒட்டி இறுகிப்போயிருந்த வெட்கம் தெறித்தது. அகந்தை உள்ளே வைத்துச் சுருட்டிக்கொண்டிருந்த போலித்தனம் வெளியே தெறித்தது. அன்றுவரையிலும் இல்லாத பிரார்த்தனை என்னுள் எழுந்தது. என் கற்பனை யில் அந்த மேலான சக்தியை முடிந்த மட்டும் கூவிய ழைத்துக்கொண்டு ஓடினேன். அந்த சக்தி மனம் வைத்தால் மட்டுமே நான் பிழைக்க முடியும். அந்த சக்தி மனம் வைத்தால் நான் என் நிழல் தாண்டிப் பாதுகாப்பு ரேகைக்குப் போய்விடக்கூடும். அப்போது எதிரிகள் என்னை ஒன்றுமே செய்ய முடியாது.
இருட்டு நரைக்க ஆரம்பித்துவிட்டது. கோட்டை வாசல் புலப்படுகிறது. நெடிதுயர்ந்த கோட்டை. அந்தக் கோட்டைக் குள் புகுந்துவிட்டேன் என்றால் நான் தப்பித்துக் கொண்டு விட முடியும். ஆச்சரியப்படும்படி ஏதேனும் ஒரு காரியம் அந்தக் கோட்டைக்குள் நிகழும். அந்த அற்புதம் என்னைக் காப்பாற்றிவிடும். அந்தக் கோட்டை எனக்குப் பரிச்சயமான இடம்தான். அதன் சந்து பொந்துகள் எல்லாம்கூட எனக்குத் தெரியும். கிழக்கு வாயிலில் மணி அடிக்கும் கூண்டு. அதற்குள் நான் ஒளிந்துகொள்வேன். மணி அடிப்பவன் எனக்கு முகப் பரிச்சயம் உள்ளவன். நிச்சயம் இடம் தருவான். அவன் இல்லை என்றாலும் நான் ஏறிவிட்டு, ஏணியை மேலே தூக்கிக்கொண்டு விடுவேன். அப்போது இந்தப் பாவிகள் ஒன்றும் செய்ய முடியாது. அதிக பட்சம், எரியும் பந்தத்தைத் துக்கி வீசி எறிவார்கள். அவ்வளவு துரம் அவர்களால் வீச முடியுமா என்ன !
மணிக்கூண்டுக்குள் ஏற, மர ஏணியில் காலை வைத்தேன். கால் வைத்ததும் படி இற்று விழுந்தது. சரேரென்று இரண்டாவது படியில் கால் வைக்க அதுவும் முறிந்தது. மேல்படிகளில் ஒன்றைப் பற்றினேன். சிலந்தி வலைபோல் அதுவும் கையோடு வந்துவிட்டது. மண்ணில் முகம் குத்தி விழுந்தேன். இந்த வீழ்ச்சியை நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த நிமிஷத்தில் ஆயுதத் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டது. ஏதோ ஒரு புனிதமான மதச்சடங்கைச் செய்வதுபோல் மந்திர உச்சாடனம் செய்துகொண்டே ஆயுதங்களால் தாக்கினார்கள். என் உடலிலுள்ள சதை எல்லாம் கிழிந்து விட்டது. ரத்தம் பீறிட்டுக்கொண்டு அவர்கள் முகங்களின் மேல் வீசி அடிக்கிறது. மிகுந்த ஆனந்தத்தோடு ஆளுக்கொரு பகுதியாக என்னைக் கூறுபோட்டுத் தாக்குகிறார்கள். என் உடலிலிருந்து என் சதையெல்லாம் பிய்த்து நாலாபுறமும் வீசியாகிவிட்டது. நொறுக்க எலும்புகள் ஒன்றுகட்ட இனி பாக்கி இல்லை. எரி பந்தத்தால் என் கண்களை அவித்தார்கள் பாவிகள். என் உயிர் மட்டும் மின்மினிப் பூச்சி போல் பளிச் பளிச் என்று ஒரு புல் நுனியில் போய் ஒட்டிக் கொண்டது. பாதங்களால் அதையும் அரைத்துத் தேய்த்தார் கள். நான் இறந்துவிட்டேன். அவர்களுடைய காரியம் கைகூடிவிட்டது. எந்த சக்தியும் என் துணைக்கு வந்து சேரவில்லை. நான் நம்பிய சக்திகளெல்லாம் என்னைக் கைவிட்டுவிட்டன. கைகழுவிவிட்டுவிட்டன. அவற்றை நான் இன்னும் ஆழமாக நம்பியிருக்க வேண்டும். நெருக்கடி யின்போது, அவசரமாக நான் நம்ப ஆரம்பித்தது அந்த சக்திகளுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ! அது சரிதான். நிரந்தரமாக நம்பிக்கொண்டிருப்பவர்களையே காப்பாற்ற அந்த சக்திகள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. பாதி காப்பாற்றியும் பாதி காப்பாற்றாமலும் தத்தளித்துக்கொண் டிருக்கின்றன. அப்படியிருக்க, கடைசியில் வந்து ஒட்டிக் கொண்ட என்னை அவை தட்டிவிட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது.
நான் அழிந்துவிட்டேன். இனிமேல் ஒன்றுமே இல்லை. ஒன்றுமே நான் செய்ய முடியாது. எவ்வளவோ ஆசைப்பட் டேன். எவ்வளவோ கனவுகள் கண்டேன். அந்தக் கனவுகள் நிறைவேற அனுசரணையாக என் வாழ்க்கையைச் சிறுகச் சிறுகக் கட்டி வளர்த்திக்கொண்டு வந்தேன். விலகி வித்தியாச மாக வந்ததினாலேயே பிறரிடம் எவ்வளவு வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டேன்! முப்பது வயதில் உலகப்புகழ் பெறக் குறிவைத்தேன். அதற்காக நான் செய்த தியாகங்கள், எனக்கு நானே விதித்துக் கொண்ட தடைகள் கொஞ்சமா! நான் பெண்களை ஸ்பரிசித்ததே இல்லை. அவர்கள் கண் களைச் சந்திக்காமலே வெகு விரைவாகப் போய்க்கொண் டிருக்கிறேன். சதா தொடர்ந்து இதைச் செய்து கொண்டிருப் பது எவ்வளவு சிரமமானது என்பது கற்பனை செய்துபார்த் தால் தெரியும். அவர்கள் மூலம் என் அழகுணர்ச்சி அழிந்து விடும் என்று நம்பினேன். அந்த ஆழமான நம்பிக்கையை வெளியே சொன்னால், தருக்க பலத்தால் ஏதும் சொல்லி யாரேனும் என்னைக் குலைத்துவிடுவார்களோ என்ற பயத்தில் வெளியே சொல்லவே இல்லை. அழகுணர்ச்சியின் என் அரிய சேமிப்பைப் பெண்கள் சூறையாடிக்கொண்டு போக நான் ஒருநாளும் விட மாட்டேன். இப்போது எல்லாம் நாசமாகிவிட்டது. பாழ்பட்டுப் போய்விட்டது. ஆனால் ஒன்று நிச்சயம். இப்போதும் நான்தான் அழிந்து இருக்கிறேனே தவிர, என் கனவுகள் அழியவில்லை. அவை ஒருநாளும் அழியா. மற்றொரு ஜீவன், இதே கனவுகளைச் சூலுற்று, பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்து அவற்றைச் செம்மைப்படுத்தித் தன்னையும் விகசித்துக் கொள்ளும் என்னிலிருந்து மற்றொருவனிடம் தொற்றும் கனவை எந்த ஆயுததாரிகளாலும் அழிக்க முடியாது. நான்தான் ராஜா என்ற எண்ணத்தில் இவர்கள் என்னை அழித்தால் நான் அழிந்து போவேன். ஆனால் நான்தான் என் கனவு என்று நினைத்து என்னை அழிக்க முற்பட்டால் ஏமாந்துபோவார்கள். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஒரு மாட்டைக் கொல்வதற்கும் ஒரு மனிதனைக் கொல்வ தற்கும் வித்தியாசம் இதுதான். இருந்தாலும் துக்கம் தொண் டையை அடைத்தது. என்னால் என் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதே என்று வருந்த ஆரம்பித்தேன்.
எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஏங்கி அழ ஆரம்பித்தேன்.
தொலை துரத்தில் ஏதோ ஓசை கேட்கிறது. ஜால்ரா தட்டும் ஒசை. சுருதிப்பெட்டியின் கார்வை. விடியற்காலை பஜனை வருகிறது போல் இருக்கிறது. என்ன அற்புதமான குரல் யார் இப்படிப் பாடுகிறார்கள்? பின்பற்றிப் பாடும் குரல்கள், கார்வை குறைந்தும் கரடுமுரடாகவும் இருக்கின்றன. கட்டுப்பாட்டுக்கு அடங்காத அவர்களுடைய குரல்கள் இழுத்துக்கொண்டுபோகின்றன. ஆனால் அந்தக் குரல்கள் ஆத்மார்த்தம் கொண்டவை. எல்லா இசைக்கும் எது முக்கி யமோ, புலமையையும் குரல் வளத்தையும்விட எது முக்கியமோ, அது அவர்களிடம் இருக்கிறது. இந்தக் கரடுமுரடான தன்மையிலுங்கூட ஆத்மார்த்தம் அதனை வெளிப்படுத்திக் கொள்கிறது. எவ்வளவு மோசமான நிலையிலும், ஆத்மார்த் தத்தின் அழகை மறைக்க முடியாது என்பது எனக்கு முன்ன தாகவே தெரிந்ததுதான். இப்போது மேலும் அது உறுதிப்பட் டது. இசை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. ஜால்ரா கணிர் கணிர் என்று நாதத்தை எழுப்புகிறது. தன்னை மறந்து, முற்றாக மறந்து, பாடுகிறான் அவன். அவனது இசையிலிருந்து பரவும் பரவசம் அவனுடைய ஆத்மாவைக் குளிர்வித்து, அந்தப் பரவசமே பாட ஆரம்பிக்கும் அற்புத மான நிமிஷத்தை அவன் நெருங்கிக் கொண்டிருக்கிறான்.
நான் கண்களைத் திறந்து பார்த்தேன். லாந்தரின் மஞ்சள் ஒளி தெரிந்தது. என்ன இது! என்ன ஆச்சரியம்! முன்வரிசை யில் மையத்தில் விரைந்து வந்துகொண்டிருப்பவர் யார்? காந்தியா? என்னால் நம்பவே முடியவில்லை. சுற்றி வந்து கொண்டிருப்பவர்கள் யார்? காந்தி இங்கு எங்கே வந்தார்? ஓ, எனக்கு எல்லா விஷயமும் தெரிந்துவிட்டது. நான் லண்டன் மெயிலுக்கு எழுதி அனுப்பிய செய்திக்குறிப்பை நானே பார்க்க இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். ஆச்சரியத் திலும் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு இந்த யோசனை தோன்றவே இல்லையே. எவ்வளவு அரிய சந்தர்ப்பத்தை வீணாக்க இருந்தேன். அதுவும் இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு. எவ்வளவு அறிவுகெட்டவன் நான். எனது மதியினம் எட்டுவீட்டுப் பிள்ளைமார்க்குத் தெரிந்தபோது தான் அவர்கள் ஆயுதம் தாங்கி என்னை விரட்ட ஆரம்பித் திருக்கிறார்கள். எட்டுவிட்டுப்பிள்ளைமார்களே, உங்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். உங்களை நான் ரொம்பவும்
----------------------------------------------------------------------
* எட்டுவீட்டுப் பிள்ளைமார் : ராஜா மார்த்தாண்ட வர்மாவின் எதிரிகள். ராஜா விடமிருந்து பதவியைப் பறிக்கப் பல துழ்ச்சிகள் செய்தவர்கள். மதி நுட்பத் தாலும் சமயோஜித புத்தியாலும் அரசர் தப்பினார். இவர்கள் அனைவரையும் அரசர் ஒழித்துக்கட்டித் தனது பதவியை உறுதிசெய்து கொண்டார்.
-----------------------------------------------------------------------
தவறாக நினைத்து விட்டேன். பாவிகள் என்று உங்களை நான் திட்டிவிட்டேன். உண்மையில் நீங்கள்தான் தெய்வ தூதர்கள். நான் உயிரோடு இருந்தால் இதையெல்லாம் சரிவரப் பார்க்க முடியாது என்று தெரிந்து என்னைக் கொன்றிருக்கிறீர்கள். உங்கள் பாதங்களைப் பிடித்து நன்றி சொல்கிறேன். இப்போது நான் கனவாக மட்டும் இருப்பதி னால் எனக்கு எல்லாவற்றையும் சரிவரப் பார்க்க முடிகிறது.உடலோடு இருந்தவரையிலும் நான் சரிவர ஒன்றையும் பார்க்கவில்லை என்பதும், சரிவரப் பார்ப்பதாகக் கற்பனை செய்துகொண்டிருந்தது தவறு என்பதும் இப்போது துல்லிய மாக எனக்குத் தெரிகிறது. நான் உயிரோடு இருந்தபோது உடல் திமிரை அழித்துக்கொண்டுவிட்டதாகப் போலி சந்தோஷத்தில் மாய்ந்துகொண்டு இருந்தது எவ்வளவு தவறு. நீங்கள் செய்திருப்பது எனக்குப் பெரிய உபகாரமாக இருக்கிறது. இப்போது மனம்விட்டுப் பேச முடிகிறது.
பஜனை கோஷ்டி, கோயில் முகம் நெருங்கிக்கொண்டிருக் கிறது. எனக்குக் கண்கள் கூசின. அந்தப் பொன்மேனியிலிருந்து பிரகாசம் என் கண்களில் பட்டுக் கூசியது. என்ன அற்புத மான முகம். சாந்தி அலையடித்துக் களிநடனம் புரிகிறது. தவத்தில் ஒடுங்கிய மார்பு. எல்லோரும் கோவில் முன்படிக் கட்டில் உட்காருகிறார்கள். மேல்படியில் லாந்தர் விளக்கு. சுற்றிவர ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் இருந்த இடத்திலிருந்து பார்ப் பதற்கு ஒரு மகோன்னதமான ஒவியம் போல் இருக்கிறது. நான் அந்த ஒவியத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் செய்யவேண்டியது. கோவில் மணி அடிக்க ஆரம்பித்துவிட்டது. மணியின் நாதத்தை ஒவியத்தில் காட்ட முடியாதே என்று நினைத்தபோது மீண்டும் வருத்தம் ஏற்பட்டது. அப்படியானால், நான் பாதுகாக்க நினைக்கும் ஒவியம் உண்மையை முழுமையாகச் சொன்னது ஆகுமா? ஆகாது. ஒரு நாளும் ஆகாது. மீண்டும் ஏங்கி அழ ஆரம்பித்தேன்.

இந்த இடத்தில் விழித்துக்கொண்டேன். கனவு கலைந்துவிட்டது. என் இருப்பிடத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தேன். நாற்புறமும் இருட்டு, சுவர்கள் லேசாகத் தெரிந்தன. ஜன்னல் வழியாகக் குளிர்காற்று வந்துகொண்டிருக்கிறது. நெற்றிப் பொட்டிலும் கழுத்தோரங்களிலும் பட்டுக் குளிர்விக்கிறது. நன்றாக வியர்த்திருக்கிறது. ரொம்பவும் பயந்துவிட்டேன் போலிருக்கிறது. போர்வையை உதறி எறிந்துவிட்டு அவசர மாகக் கீழே இறங்கினேன். விளக்கைப் போட முயன்றேன். மின்சாரம் இல்லை. எப்போது தடைப்பட்டதோ, நடுநிசியில் அநேக நாள் இப்படி ஆகிவிடுகிறது. புகார் மனுக்கள் எவ்வளவோ எழுதிவிட்டேன். ஆசிரியர்களுக்குக் கடிதங்கள் எழுதிவிட்டேன். ஒன்றும் பிரயோசனம் இல்லை. தலை ുത്തേജു அடியிலிருந்து டார்ச் விளக்கை எடுத்துக் கொண்டு நாலு கட்டுத் தாண்டி, சாப்பாட்டு அறை தாண்டி, பின்கட்டுக்குச் சென்றேன். டார்ச்சை அடித்தேன். அந்த மங்கிய இருளில் பின்பக்கம் அற்புதமாக இருந்தது. இரவில் மரங்கள் வேறுவிதமான சாயல்களும் அழகுகளும் கொள்கின்றன. ரகசியங்களின் உறைவிடங்கள் ஆகிவிடுகின் றன. ೩೯Tು துளசி மாறவில்லை. அதன் மீது கவிழ்ந்திருக்கும் இருட்டிலிருந்து எவ்வித ரகசியத்தையும் எடுத்துக்கொள்ளா மல், அந்த இருட்டையும் சேர்த்துக் கொள்ளாமல், அதை விலக்கவும் பிரயாசைப்படாமல் அது பாட்டுக்குக் குலுங்கு கிறது. சிமிண்டுத் தொட்டியின் பக்கத்தில் திறந்த வெளி யில் வேலுக்குட்டி போர்த்தி மூடிக்கொண்டு தூங்குகிறான். சூத்தை மூடிக்கொண்டு. எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது இந்தப் பழக்கம். ஆனால் அது அவனுடைய பழக்கம். வேலுக்குட்டி என்று கூப்பிட்டேன். அவனுடைய உறக்கம் சத்தங்களைப் பொருட்படுத்தக்கூடியது என்பது முன் அனுபவம் மூலம் எனக்குத் தெரியும். மனிதக் குரலை அவவளவாகப் பொருட்படுத்தாது என்பதும் தெரியும். கதவில் லேசாகத் தட்டினேன். விழித்துக் கொண்டுவிட் – ‘ வேலுக்குட்டி, கார் ஷெட்டின் கதவைத் திற' என்றேன். ஒரு சில வினாடிகளில் கிளம்ப ஆயத்தமானேன்.மனம் படபடத்துக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நான் புறப்பட்டது வேலைக்காரர்களுக்கும் வேலைக்காரிகளுக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பால் வரவில்லை. சிறிது தேநீர் சாப்பிட்டுவிட்டுப் போகலாமே என்றான் வேலுக்குட்டி வெறும் வயிற்றோடு. என்று இழுத்தாள் பங்கஜாகூவி. நான் சரிவர அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. நான் கிளம்பி வந்த காரணத்தைச் சூட்சுமமாகவேனும் அவர்களுக்குச் சொல்லியிருக்கலாம். அவர்களுக்குப் புரியாவிட்டாலுங்கூடச் சொல்லிவிட்டு வருவதற்கும் சொல்லாமல் வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் மனித உயிர்கள் என்பதால், அன்பு நிறைந்த ஆத்மாக்கள் என்பதால் புரிந்துகொள்ள முடியாதவர்கள் என்றாலுங்கூட அவர்களுக்கு அளிக்க வேண்டிய மதிப்பை விடாது அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். மனக் குழப்பம் சூழ ஆரம்பித்துவிட்டது.

நாட்டகம் குன்றில் கார் விரைந்துகொண்டிருந்தது. 6)+ι ο புழுதிப் புகை மண்டலம், துக்கிய கண்ணாடிகளின் இடுக்குவழியாக உள்ளே வருவதை வாசனையால் தெரிந்துகொண்டேன். அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்ததுಿ நகத்தைப் பிய்த்துக் கொண்ட விரலிலிருந்து ரத்தம் கசி வதைப் போல் சூரியன் வருகிறது. ரத்த வெள்ளம் ஆனால அது உருக்குலைந்த உருவம் அல்ல. எட்டு வீட்டு பிள்ளைமார் தாமிரச் சப்பாத்தி முள்ளாணி ஆயுதத்தால் சூரியனை  தாக்கியிருக்க முடியாது. நீளம் பற்றாது அவாகள கைகளுககு ரத்தத்தை வழியவிட்டுக்கொண்டுவருவது சூரியனின் திடகாத்திர நிலைதான். கோயில் படிக்கட்டில் காந்தி மகான் காத்துக்கொண்டு நிற்கிறார். இந்த சூரியோதத்துக்கு தான். கோயில் மணி அடித்த பின்பும், சூரியோதம் ஆகட்டும் என்று காத்துக்கொண்டிருந்தாா அந்த மகான் அவருடன் அவர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். இதற் காக அவர் காத்துக் கொண்டிருப்பது அவருடைய இயல்புக்கு ஏற்றதுதான். அவர் இப்போது எழுந்திருந்து ೭.37 போகுக் கூடும். அவர்களும் அவரது உடலை ஒடடி உள்ளே விரைவார்கள்.

காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி பாதை விளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தைப் பார்த்தேன். உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன். முன்னால் அதல பாதாளம் அற்புதத்திலும் அற்புதமான அநதக காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக் கிடைத்திருக்கும் இது அதிகாலையிலும், ஒவ்வொரு நாளும்,ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறு விதமாகவும், கணங்கள தோறும் மாற்றிக்கொண்டும், முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக்கொண்டும் கடவுள் மனிதன் முன்  வருகிறார். தனது விசுவரூபத்தை மனிதனுக்குக் கா கடவுள வருகிறார். இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லை. பழககததில் அறிவையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் முற்றாக இழந்து, தரித்திரத்திலும் பரம தரித்திரனாக நிற்கிறான். ஒவ்வொரு நாளும் இந்த விசுவருப தரிசனத்தி லிருந்து நாம் பெறக்கூடியவற்றில் மேலா ஞான லகுவாக வும் பக்குவமாகவும் நமக்குக் கிடைக்கும். வேறு ஏதிலிருந்தும் பெற முடியாத ஞானம் இதிலிருந்து பெற முடியும். இவ்வளவுநாட்களும் இதற்கு ஆட்பட மறுத்து ஏழ்மைப்பட்டு, போனதை நினைத்து மிகுந்த வருத்தமடைந்தேன். இனி யேனும் எனக்கு இந்த நித்தியப் பரவசம் கிடைக்கட்டும் மனித ராசிக்குரிய விசேஷ சொத்துக்களை நான சேர்த்துக் கொள்ளாவிட்டால் என் பிறப்பு அர்த்தமறறது.

கணத்துக்குக் கணம் அசைவின்றி மேலெழுந்து வருகிறது அது. புன்னை மரங்களிடையே ரச்மிகள் ஊடுருவி, சிதறிய கண்ணாடித் துண்டுகள் உருகி வழிகின்றன. அந்த உருகி வழியும் கண்ணாடிதான் என் கனவுகள் என்று நான் சொல்லிக்கொள்கிறேன். கனவுகளில் ஆத்மா கொள்ளும் ஆனந்தத்தில் பலம் பெற்று நடமாடிக்கொண்டிருக்கிறான் மனிதன். அந்த ஆனந்தங்களைக் கல்லிலோ வர்ணங்களிலோ மரத்திலோ பாட்டிலோ தேக்கிவைக்க முற்படுகிறான். ஒரு கனவைச் சொல்ல முற்படும்போது எப்போதும் அவன் தெரிந்துகொள்வது கனவைச் சொல்ல முடியவில்லை என்பதுதான். இதனால் அவனுக்கு ஏற்படும் விசனம் சொல்லுந்தரமன்று. உடல் கூடித் திளைப்பவர்களிடங்கூடச் சொல்ல முடியாத இந்தச் சங்கடத்தை அவன் உலகுக்கு எப்படி எடுத்துச் சொல்ல முடியும் இருந்தாலும் அவன் சொல்ல முற்படுகிறான். மீண்டும் கனவைச் சொல்ல வந்தவன் கனவைச் சொல்ல முடியவில்லை என்பதை மீண்டும் சொல்லிவிட்டுப் போகிறான். மீண்டும் சொல்ல முற்படுகிறான். சொல்லாமல் அவற்றைப் புரியவைக்க ஏன் அவனுக்குத் தெரியவில்லை ? புரியவைக்கச் சொல்லப் பட வேண்டுமா? இந்தத் தவறான எண்ணம் எப்போது அவனுக்கு ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது? இன்னும் கனவுகளின் விளிம்புகள்கூடச் சொல்லில் வகைப்பட்டு வரவில்லை. இந்தக் கனவுகள் அவற்றின் அர்த்தத்தை நம்மிடம் சொல்ல நாம் அவற்றை நிம்மதியாக இருக்கவிடுவ தில்லை. நனவுகளையும் நாம் நிம்மதியாக இருக்கவிடுவ தில்லை. நிம்மதியாக அவற்றை விட்டுவிட நம்மால் முடிவ தில்லை. துடுப்புப் பிடிக்கும் நீரில் முகம் பார்க்கத் துடிக் கிறோம். நீச்சலடித்துக்கொண்டே முக்குளிக்க முயல்கிறோம். எப்படிக் கூடும் இது? என்ன இது? என்ன இந்த உலகம் ? இது எப்படி ஏற்பட்டிருக்கிறது ? இப்படிக் கேட்டால் ? என்று கேட்கிறார்கள் என் நண்பர்கள். எப்படிக் கேட்க வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லையே. விடை தெரியவில்லை என்பதில்கூட எனக்கு வருத்தம் இல்லை. கேள்விகள்கூட என்னிடம் உருக்கொள்ளவில்லை. இப்போது நான் இங்கு இருந்து கொண்டிருப்பது, என் முன் விரிந்து கிடக்கும் இந்த உலகம், மனித ஜீவன்கள், அவற்றின் அசைவு கள், இயற்கை, இயற்கையின் கோலங்கள் எல்லாவற்றின் மீதும் எனக்குத் திகைப்பு ஏற்படுகிறது. இந்த வித்தை எப்படி சாத்தியம்: அடிப்படையாக இதை ஒப்புக் கொண்டுவிட்ட தாக எடுத்துக்கொள்ள என்னால் முடிவதில்லை. எனக்குப் பெரும் திகைப்பாக இருக்கிறது. ஒரு கணம்கூட இடைவெளி

இன்றித் திகைத்துக்கொண்டு இருக்கிறேன். இந்தத் இகைப் பினால் எனக்குப் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர வேறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

மற்றொரு பகுதி. சம்பத்தின் நினைவுக் குறிப்புகளில் பல வருடங்களைத் தாண்டி, மீண்டும் ஒரு சூரியோதயத்தில் பரவசமடைந்து பழைய நினைவுகளுக்கு ஆட்பட்டு, தொடர்ந்து நிகழ்ந்தவற்றை எழுதியுள்ளது போல் படுகிறது. 

ஜே. ஜே. போல் ஒரு விவேகம் உள்ள ஜீவனின் சினேகம் கிடைத்தது என் அதிருஷ்டம். ஜே. ஜே. உன்னை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். உனக்கும் இது தெரியும். ஆனால் எந்த அளவுக்கு என்று உனக்குத் தெரியாது. இந்த அளவுக்கு சாத்தியம் என்று உன்னால் கனவுகூடக் காண முடியாது. இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. என் மீது நான் கொண்டிருக்கும் பாசம். என்னைப் போல் நீயும் திகைத்துக் கொண்டிருக்கிறாய். இந்தத் திகைப்பு சகஜப்பட்டுப் பொறி களில் குளிர்ந்து, மந்தம் சுரணைகளில் படிந்து, மனிதராசி பழக்கத்தின் இயந்திரமாகிச் சரிந்துவிட்டது. படைக்கும் தலைவன் நம் இருவரை மட்டும், முதன்முதலாக இந்த நிமிஷம், இங்கு அனுப்பி வைத்துள்ளது போல் நாம் இருவரும் திகைத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே உனக்கும் எனக்கும் ஏற்பட்டுள்ளது சினேகமல்ல. முதுகும் நெஞ்சும் ஒரே உடலில் ஒட்டிக்கொண்டிருப்பது சினேகத்தால் அல்ல. திகைப்பின் ஒன்று பட்ட வார்ப்பு அது.
ஜே.ஜே. உனக்கு எதுவும் பிடிக்காமல்போய்க்கொண்டிருக்கிற மாதிரி எனக்குத் தோன்றுகிறது. எனக்கு சகலமும் ஒன்று விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றின் மீதும் எனக்கு அபரிமிதமான ஆசையும் ஆர்வமும் பிரியமும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலைகளில் பொதுவாக இது இப்படித்தான். இப்போது எனக்கு எல்லாம் துல்லிய மாகிவிட்டது போல் ஒரு எண்ணம். உடனடியாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறது. உன்னைத் தேடி வந்துகொண்டிருக்கிறேன். உன் வீட்டைத் தேடிக் கண்டு பிடித்துவிடுவேன். புனித மேரி கோவிலுக்குப் பின்பக்கம் என்று நீ சொன்னாய். வலது பக்கம் சந்தில் இறங்க வேண்டும். அகலம் குறைந்த படிக்கட்டுகள். இடைவெளி விட்டு, மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கும், ஆழமாக இறங்கிச் செல்லும் படிக்கட்டுகள். அந்தத் தெருக்களில் வெண்கல உருளிகளை வார்க்கும் ஆசாரிமார் இருக்கிறார் கள் என்று நீ சொன்னாய். வெண்கலத்தை உருக்கி வார்ப்பது கண்கொள்ளாக் காட்சி என்று நீ சொன்னாய். எனக்குப்பார்க்கக் கிடைக்கவில்லை.
புனித மேரி கோவிலின் வலது பக்கம் மைதானத்தில காரை ஒதுக்கி விட்டுவிட்டுச் சந்தில் நுழைந்து படிகளில் இறங்க ஆரம்பித்தேன். பட்டறைகள் எதுவும் திறக்கவில்லை. பிற்பகலில் வேலையைத் தொடங்கி நடுநிசிக்குப் பின் முடிப்பார்கள் என்று ஜே. ஜே. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. எதிரே ஒரு வயோதிக ஸ்திரீ வந்துகொண்டிருந்தாள். அவளிடம் விசாரிக்கலாம் என்று தோன்றியபோது ஊர்க் காரர்கள் தன்னை டிராயிங் மாஸ்டர் என்று குறிப்பிடுவ தாக சாராம்மா சொல்லியிருந்ததை ஜே. ஜே. சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் வீட்டைக் காட்டித்தந்தாள்.
மிகச் சிறிய வீடு, முன்பக்கம் ஒட்டுத் திண்ணை. சிறு மேசையின் மேற்பரப்பு அளவு கொண்டது. ஒரு ஒரத்தில், கால் அடி அகலத்தில், ஒரடி எழுப்பிக் கட்டியிருந்தார்கள். அதன் நோக்கம் எனக்குத் தெரியவில்லை. முன்வாசல் சாத்தியிருந்தது. வீட்டின் பின்பக்கம் சாராம்மா கோழிகளுக்கு உணவு கொடுத்துக்கொண்டிருந்தது வேலி வழியாகத் தெரிந்தது. தாழ்ந்து கிளை பிரிந்து தரையை ஒட்டிக் கிடந்த மாமரத்தின் கிளை வெடிப்பில் செம்புப் பாத்திரத்தை வைத்து அதிலிருந்து உணவை எடுத்து விசிறிக் கொண்டிருந் தாள் சாராம்மா. கோழிகளை அழைப்பதற்கு அவள் எழுப்பிய சத்தம் விசித்திரமாக இருந்தது. உதடுகளை இறுக்கிக் கொண்டே அந்த விசித்திரச் சத்தத்தை அவள் எழுப்பினாள். அப்போது அவளுக்குச் சுய ஞாபகம் இருக்க வில்லை. அவள் சம்பந்தப்பட்ட எல்லாமே அழகாக இருந்தது. ஒவ்வொரு சத்தத்திற்கும் அவள் முகம் வேடிக்கை யாக இழுத்துக்கொண்டு போயிற்று. அந்த முகத்தில் ஜே. ஜே. அளித்திருக்கக்கூடிய முத்தங்கள் உன்னதமானவையாகவும் பொருத்தமானவையாகவும் பட்டன. அவளுக்குத் தரப்பட வேண்டியவை அவைதாம்.
ஜே. ஜே. என்று நான் கூப்பிட்டேன். திரும்பிப் பார்த்த சாராம்மா என்னைக் கண்டதும் மிகுந்த ஆச்சரியமும் பதற்றமும் கொண்டாள். துக்கிச் செருகியிருந்த வேட்டி துனியைக் கீழே இழுத்துவிட்டு, பின்கொசுவத்தைச் சரிசெய்த வாறே வீட்டின் பின்வாசலை நோக்கி வேகமாக ஓடினாள். முன்வாசல் கதவைத் திறந்தபோது அவள் மார்பில் மேல் முண்டு கிடந்தது. கதவைத் திறந்ததும், வேகமாகப் பின்னால் ஒடி முக்காலியைக் கொண்டுவந்து மேல் முண்டால் துடைத் தாள். கதவின் பின்னால் நின்று கொண்டு, பேபி இன்னும் எழுந்திருக்கவில்லை, எழுப்புகிறேன்' என்றாள். இரவு வெகு நேரம் கழித்துத்தான் அவன் வந்தான் என்றாள். இதில் சூசகமான ஒரு குறிப்பு இருப்பது போல் எனக்குப் பட்டது. எழுப்பும் சத்தங்கள் எனக்குக் கேட்காமல் அவனை எழுப்பி விட வேண்டும் என்று அவள் எண்ணியது போல்பட்டது. ரகசியமாகவும் அழுத்தமாகவும் அவள் குரல் வெளிப்பட்டது.
நான் உள்ளே சென்றேன். கால்களற்ற நார்க்கட்டிலில் ஜே. ஜே. படுத்துக்கொண்டிருந்தான். சிறிய காரியங்களுக்காக சாராம்மாவின் உசுப்பலில் எழுந்துவிடக் கூடாது என்பது அவன் எண்ணம் போலும், நான் அவன் முதுகைத் தட்டிக் கொண்டே, ஜே. ஜே. ஒரு முக்கியமான விஷயம். இல்லை யென்றால் நான் உன்னைத் தொந்தரவு செய்வேனா'
என்று கேட்டேன். மின்சார அதிர்ச்சிக்கு ஆளானது போல் ஜே. ஜே. எழுந்து உட்கார்ந்துகொண்டு, நீங்களா? என்று கேட்டான். முக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்து போட் டாள் சாராம்மா. நான் அதில் உட்கார்ந்துகொண்டேன்.
ஜே. Gఖ. மறுபடியும் நான் ஒரு அற்புதமான சூரியோத யத்தைக் கண்டேன்' என்றேன்.
-
________________

----
பாகம் இரண்டு________________

ஜே. ஜே. 1921ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை நாலரை மணிக்குப் பிறந்தான். இவனுடைய குடும்பத்தினர் மாதா கோவிலில் தொன்று தொட்டுத் தச்சுவேலை பார்ப்பவர்கள். முக்கியமாக அலங்கார வேலைகள். ஒன்பது குடும்பத்தினருக்கே இதற்கான உரிமையைச் சபை அளித்திருந்தது. இவர்கள் நோவக்காரர்கள்' ' என அழைக்கப்பட்டார்கள். நோவக் காரர்களில் பெரிய மூப்பன் என்று அழைக்கப்பட்டவர் ஜே. ஜேயின் பாட்டனாரின் ஒன்றுவிட்ட தம்பி) கிறிஸ்தவ சபையுடன் மனஸ்தாபங் கொண்டார் என்றும், இதன் காரணமாகச் சபையின் உத்தரவினால் இவர் வேலையி லிருந்து விலக்கப்பட்டார் என்றும், இவரது குடும்பத்தினர் கோவில் வேலையை விட்டு அரண்மனை வேலைக்குத் திரும்பினர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் குடும்பத் தில் தோன்றியவனே ஜே. ஜே. ஜே. ஜே. ஒன்பதாவது வகுப்பு வரையிலும் மாவேலிக் கரையில் அவனுடைய தாய்மாமன் வீட்டில் நின்று படித்தான். ஜே. ஜேயின் சிறு வயதிலேயே, வேலைக்குப் போக அல்ல, படிக்கப் பிறந்தவன் இவன் என்ற எண்ணம் அவனைப் பற்றி அவன் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருந்த தாம். மாவேலிக்கரை, இந்துக்களின் பின்னணி கொண்ட இடம். அங்கு அரசாங்கப் பள்ளியில் ஜே.ஜே. படித்தான். வகுப்பில் அமைதியான மாணவன் என்றும், தெரிந்த விடைகளுக்கும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக்கொண்டிருப்பான் என்றும் அவனுடைய ஆசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அரசாங்கப் பள்ளியில் அப்போது தலைமை ஆசிரியராக இருந்தவர், பின்னால் பெரும் புகழ்பெற்ற கவிஞரான ஆனந்த வல்லி அம்மா. அவர் நடத்திய மரத்தடி பஜனைகளில் ஜே. ஜே. உற்சாகமாகக் கலந்துகொண்டிருக்கிறான்.

'நோவக்காரர்கள் : நவ குடும்பத்தினர் என்பதன் மரு.உ.

ஜே. ஜே. பத்தாம் வகுப்புத் தேறியதும், மதத் தொண்டு செய்யும் பொருட்டு அவனைக் கிறிஸ்தவ சபைக்குத் தத்தம் செய்துவிட வேண்டும் என்ற யோசனை அவன் குடும்பத்தினருக்கு ஏற்பட்டது. இதை ஜே. ஜே. ஏற்க வில்லை. அப்பாவுடன் ஏசுவின் தொழிலை வேண்டு மென்றாலும் மேற்கொள்கிறேன். பிதாவின் மகிமையைப்
பரப்ப எனக்குத் தெம்பில்லை என்றானாம். நடுவில் ஒரு வருடம் படிப்பை நிறுத்திவிட்டு, தகப்பனாருடன் அவன் வேலைக்குச் சென்றான். (ஏற்றுமானுரர் வலிய ராணியின் அரண்மனையில் கொச்சு ராணியின் கட்டில் என்னால் செய்யப்பட்டது. தலைமாட்டில் அம்பு பட்டுத் துடிக்கும் மானின் செதுக்கலைக் கூர்ந்து கவனியுங்கள். குட்டி ராணிக்கு யாருக்கும் தெரியாமல் நான் அளித்த பரிசு இது. சரித்திரம் இதைத் தெரிந்துகொள்ளட்டும் - ஜே. ஜே. கூற்று)

புனித ஜோசப் கல்லூரியில் ஜே. ஜேயை இலவசப் படிப்பில் சேர்க்க முடியும் என்று ஃபாதர் முரிக்கன், சந்தைக்குப் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஜே. ஜேயின் தாயார் திரேசம்மாளிடம் கூறினார். திரேசம்மா தன் கணவனான அவுசேப்பிடம் இதைக் கூற, என்ன வேண்டு மென்றாலும் செய். என்னிடம் ஒரு காசு கேட்கக் கூடாது என்றாராம் அவுசேப்பு என் மகன் வக்கீலாகிச் சிறகுகள் கொண்ட கறுப்புக் கோட்டு அணிந்து கோர்ட்டுக்குப் போவதைக் கண்ணால் காண நான் உயிரை வேண்டு மென்றாலும் விடுவேன்' என்றாளாம் திரேசம்மா.

சம்பத்தின் தச்சுப் பட்டறைக்கு ஜே. ஜேயின் தகப்பனார் வேலைக்குப் போனதன் மூலம் ஜே. ஜேக்கும் சம்பத்துக் கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

1940இல் ஜே. ஜேயின் முதல் கட்டுரை, கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் பூர்ண சந்திரோதயத்தில் (தினசரியின் ஞாயிறு இதழ்) வெளிவந்திருக்கிறது. திரேசம்மாளின் ஒன்றுவிட்ட மாமன் பூர்ண சந்திரோதயத்தில் பிழை திருத்துபவராக இருந்தார். அவர்தான் பத்திரிகையின் ஆசிரியர் என்ற திரேசம்மாளின் எண்ணத்தை மாமன் கலைக்காமல் காப்பாற்றியும் வந்தார். தெருவில் ஒரு முறை திரேசம்மா தனது மாமனைச் சந்திக்க நேர்ந்தது. திரேசம்மா, பேபியின் சாகித்தியத்தை உம்முடைய பத்திரிகையில் போடக் கூடாதா? ராத்துக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு எழுதுகிறானே' என்றாளாம். கட்டுரை
பத்திரிகையில் வெளிவந்தது. மறுமுறை மாமனைச் சந்தித்தபோது மிகுந்த சந்தோஷத்துடன் நன்றி தெரிவித்து விட்டு, சாகித்தியம் எப்படி? என்று கேட்க, அதற்கு மாமன், சுமாராக எழுதுகிறான். ஆனால் பயலுக்கு இலக்கணம் காணாது. நான்தான் திருத்திக் கொடுக்க வேண்டி இருந்தது. ஒய்வு கிடைக்கும்போதெல்லாம் இலக்கணத்தை நெட்டுருப் போடச் சொல்லு என்றாராம். இந்தச் சம்பவத்தை டயரியில் குறித்துள்ள ஜே. ஜே. 'மாமாவின் உபதேசம் கிடைத்து 13 வருடங்கள் ஓடிவிட் டன. இன்னும் எனக்கு ஒய்வு கிடைக்காமலே இருக்கிறது. என்று எழுதியிருக்கிறான்)

கலாவேதி என்ற பத்திரிகையில் 1947 ஆகஸ்டு 15 சுதந்திர மலரிலிருந்து ஜே. ஜே. வாரந்தோறும் குறிப்புகள் எழுதி யிருக்கிறான். கவிதைகள் பற்றி உள்ளுணர்வின் அடிச் சுவட்டில் என்ற தலைப்பிலும், மதத்தைப் பற்றி கடவுளிடம் விடைபெற்றுக் கொண்ட பின்னர் என்ற தலைப்பிலும் இக்குறிப்புகள் அச்சாகியுள்ளன. இதே பத்திரிகையில் ஜே. ஜே. மொழிபெயர்த்துள்ள கீர்கேகாடின் இரண்டில் ஒன்று, அல்லது என்ற வியாசமும் தொடராக வெளி வந்திருக்கிறது. (இன்னும் புத்தக உருவம் பெறவில்லை)
155
1951இல் ஜே. ஜேயின் சந்நியாசிகள் என்ற நகைச்சுவை நாடகம் பிரதிபா ஆர்ட்ஸ் கிளப்பினரால் அரங்கேற்றப் பட்டது. முதல் காட்சியைப் பார்த்த 43 பேர்களின் பெயர்களும் விலாசங்களும் பிரதிபா ஆர்ட்ஸ் கிளப்பின ரின் பழைய ஃபைலில் இன்றும் பார்க்கக் கிடைக்கக் கூடியன.

1951இல் ஜே. ஜே. சாராம்மாவைத் திருமணம் செய்து கொண்டான். சாராம்மா திரேசம்மாவின் துரத்து உறவினள். அந்நாட்களில் ஈ. எஸ். எல். சி. தோற்றுவிட்டு, வீட்டில் வைத்து உள்ளுர் அச்சகமொன்றுக்கு அச்சுக் கோர்த்துக்கொண்டிருந்தாள். 1940லிருந்து 1952 வரையிலும் எழுதிய ஜே. ஜேயின் எழுத்துகளிலிருந்து அவனே தேர்ந்தெடுத்த கட்டுரைகள் புத்தக உருவம் பெற்றுள்ளன. நூலையும் ஆசிரியரையும் அறிமுகப்படுத்தி முன்னுரை எழுதியிருப்பவர் அரவிந்தாட்ச மேனன். இப்புத்தகம் வெளிவந்த பின் மிக முக்கியமான அறிவாளியின் படிமம் ஜே. ஜேக்கு ஏற்பட்டது.

1988லிருந்து 1943 வரையிலுள்ள ஐந்து வருடங்கள் ஜே.ஜே. கால் பந்தாட்ட வீரனாக, பெரும் புகழ் பெற்றவனாக விளங்கினான். கால் பந்தாட்டத்தில் அவனுடைய பாணி தனியானது. கால் பந்தாட்டக்காரனின் நினைவுகள் என்ற தலைப்பில் அவன் எழுதியுள்ள நூலில், தோல்வி களுக்குப் பின் நாம் எப்போதும் காணும் பலவீனம், குழு அல்ல, நான்தான் முக்கியம் என்ற விளையாட்டுக் காரனின் மனோபாவமே காலடியில் வந்துசேரும் பந்து என்னுடையதல்ல, என் குழுவினுடையது என்று எப்போ தும் நினை. உனக்குக் கொண்டு போவதற்குச் சாத்திய மானதற்கு மேல் ஒரு அங்குலம்கூடப் பந்தைக் கொண்டு போக முடியும் என்று நினைக்காதே. நீதான் 'கோல்' போட வேண்டும் என்று ஒருபோதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்துவரும்போது, பந்தை மேலெடுத்துச் செல்ல, வசதியுடன் உன் சக ஆட்டக்காரன் காத்துக்கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே’ என்றெல்லாம் ஜே. ஜே. எழுதியிருக்கிறான். கால் பந்தாட் டத்தை அடிப்படையாக வைத்து விரிவாக ஜே. ஜே. எழுதியுள்ள குறிப்புகள், கால் பந்தாட்டத்தைப் பற்றியது மட்டும் அல்ல என்று விமர்கர்கள் மதிப்பீடு செய்திருக் கிறார்கள். எங்கும் பலவீனத்தின் ஊற்றுக்கண் ஒன்று தான் என்றும், இந்த ஊற்றுக் கண்ணுக்கான காரணம் மனிதன், அவனுக்கும் அவன் ஆற்றும் பங்குக்கும் உள்ள உறவில் கோணல் ஏற்படுத்திக்கொண்டுவிட்டதே என்றும், இந்தக்கோணல் சுய அபிமானத்திலிருந்து தோன்றுகிறது என்றும் ஜே. ஜே. கூறுவதாக விமர்சகர்கள் குறித்திருக் கிறார்கள். 

பூர்ண சந்திரோதயம் பத்திரிகையில் ஜே. ஜே. 1955க்குப் பின் ஒராண்டு காலம் வேலை பார்த்ததாக அவனுடைய நண்பர்கள் கூறினார்கள் என்றாலும் பத்திரிகை அலு வலகப் பதிவேட்டில் அவன் பெயர் இல்லை. உட்கார்ந்து எழுத அந்த அலுவலகத்தில் அவனுக்கு இடம் அளித் திருந்ததாகவே கருத வேண்டியிருக்கிறது. 

1956இல் மே மாதம் 2ஆம் தேதி அச்சகத் தொழிலாளர் கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்த்தில் ஜே. ஜே. கைது செய்யப்பட்டு ஏழு வாரங்கள் சிறையில் இருந்தான். 

1958இல் ஜே. ஜேயின் விருந்தும் விஷமும் என்ற புத்தகம் வெளிவந்தது. (ஹங்கேரியப் புரட்சியின் விளைவாக எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது) 

அதே ஆண்டில் மூன்றாவது பாதை வெளிவந்திருக்கிறது. 

1958இன் பின்மாதங்களில் ஜே. ஜே. மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றிருக்கிறான். மருத்துவக் குறிப்புகளிலிருந்து ப்ளூரசி என்ற நோய்க்கு அவன் ஆளாகியிருந்தது தெரிய வருகிறது. ஜே. ஜே. 1960இல் ஜனவரி மாதம் 5ஆம் தேதி எர்ணாகுளம்அரசாங்க மருத்துவமனையில் காலமானான். Cirrhosis of the liver.”

2.

இங்கு ஜே. ஜேயின் நாட்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். ஒரு சில, 'வசந்தம் வராத வருடங்கள் என்ற நூலிலிருந்தும், மற்றும் சில, சாராம்மா, அரவிந்தாட்ச மேனன், கே.பி. கங்காதரன் ஆகியோர் கையிலிருந்த கையெழுத்துப் பிரதிகளிலிருந் தும் எடுக்கப்பட்டவை. சாராம்மா, அவரைப் பற்றியோ, வேறு தனிநபர்களைப் பற்றியோ குறிப்பிட்டுள்ள பகுதி களை மொழிபெயர்க்க உரிமை தர மறுத்துவிட்டார். பிறரைவிடவும் அவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளவை வெளியாவதை அவர் விரும்பவில்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தனிநபர்களைக் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ள குறிப்புகளை மொழிபெயர்க்க முடியாமற் போனதில், என்னுடைய வருத்தம், சமூகச் சீரழிவுகளுக்கு ஜே. ஜே. தந்துள்ள பிரத்தியட்ச உதாரணங்களைத் தவிர்க் கும்படி ஆகிவிட்டதே என்பதுதான். நாட்குறிப்பின் மற்றொரு பகுதி - தேர்வுசெய்து, அடிக்குறிப்புகளோடு அச்சேறத் தயார் நிலையில் அரவிந்தாட்ச மேனனால் உருவாக்கப்பட்டது - அச்சகத்தில் பல வருடங்களாகத் துங்குகிறது என்றும், தடங்கலுக்குக் காரணம் மிஸஸ் ஜே. ஜே தான் என்றும் ஜே. ஜேயின் நண்பர்கள் சொன் னார்கள். வெளியீட்டாளரை நான் அணுகியபோது கையெ ழுத்துப் பிரதியைப் பார்வையிட அவர் ஒப்புதல் தரவில்லை.

1938இலிருந்து ஜே. ஜே. நாட்குறிப்புகள் எழுதிவந்திருக் கிறான். முதல் நான்கைந்து ஆண்டுகள் ஆங்கிலத்திலும், அதன் பின் மலையாளத்திலும் எழுதியிருக்கிறான். தன்ன ளவில் நமக்கு விளங்கக்கூடியவற்றை மட்டுமே நான் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். பல பகுதிகள், அக் குறிப்புகள் சார்ந்திருக்கும் பின்னணியைப் புரிந்துகொண் டால் மட்டுமே நமக்குப் புரியக் கூடியவை. தவறான எண்ணங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத் தில் கூடியவரையிலும் இது போன்ற விஷயங்களைத்
தவிர்த்திருக்கிறேன்.

2. 9, 1940
- தன்னம்பிக்க்ை அற்றவனாகிவிட்டேன். உள்ளுரப் பயந்து கொண்டிருக்கிறேன். பெரிய ஏணிப்படிகளின் முன்னால் போகும் போது மனம் பதறுகிறது. பிறருக்கு இது தெரியாது. என்னைப் போலத்தான் மற்றவர்களும் இருக்கிறார்களோ என்னவோ. முடிவுகளுக்கு வருவது மகா கஷ்டமாக இருக்கிறது. எளிய முடிவுகளுக்கு வரு வதுகூட நல்ல பென்சில் எப்படி வாங்குவது? வியாபார விளம்பரம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் பின் அரசியல் விளம்பரம், அரசின் விளம்பரங்கள். இலக்கிய விளம்பரங்கள். படிமத்திற்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு அதிகமாகிக்கொண்டே போகிறது. செம்பை உண்மையில் கலக்காமல் படிமம் ஏற்படுமா? 

உண்மையை நோக்கி என்னை நகர்த்தப் புறச் சத்த மொன்றை எதிர்பார்த்து நிற்கிறேன். மனக்காதுகளை முடிந்தமட்டும் தீட்டிக் கொள்கிறேன். குகையின் முன் னால் நிற்பது போலிருக்கிறது. குகை வாயிலில் காற்றின் அட்டகாசம். ஒலி கம்பீரமாக இருந்தாலும், மேலான மனநிலைக்குக் கொண்டுபோனாலும், பரவசத்தை ஏற் படுத்துகிறது என்றாலும், அர்த்தம் என்ன? அதனால் குகையிலிருந்து மனசாட்சிக்குச் செல்கிறேன். மனசாட்சி யின் குரலை அதன் அடி நுனியில் தெளிவுறக் கேட்கும் பயிற்சியை இடைவிடாது மேற்கொள்கிறேன். இதை மூளை, பாஷை வடிவத்தில் மாற்றிப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளத் துடிக்கிறது. பொறிகள் சரிவர இயங்குவதில்லை. சதா சலனம், சஞ்சலம்.

அப்பா வேலைக்குப் போகும்போது கப்பிட்டார். நான் 'உடம்பு சரியில்லை என்றேன். சோர்வு முகத்தில் படர, பெட்டியைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு
போனார். பெட்டியை வைத்துக்கொண்ட முறையில் ஏமாற்றமும் சிறு கோபமும் தெரிந்தன. எனக்கு உடம்பு சரியில்லை என்பது உண்மைதான். ஆனால் ஓரளவு வேலை செய்ய முடியும். நோய் சற்றுக் கடுமையாக இருந் திருந்தால் பிரச்சினையே இல்லை. முடிவுக்கு வரக் காரணம் நோயா? அல்லது மற்றொரு காரியத்துக்கு மனம் நோயைப் பயன்படுத்திக்கொண்டுவிட்டதா? அம்மா நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். 'எக்காரணம் கொண்டும் வேலைக்குப் போக வேண்டாம் என்றாள். அவர் கோபித்தால் கோபித்துக் கொள்ளட்டும் என்றாள். அவள் நிரந்தரம் என் கட்சி. இந்த நிரந்தரத் தன்மைதான்

அருவருப்பை ஊட்டுகிறது. அதாவது, அப்பாவுக்கு எதிர்க் கட்சி. மாறிவரும் காலத்திற்கேற்பத் தன் குடும்பத்தை மாற்றத் தெரியாதவராக அப்பா இருக்கிறார் என்பது அம்மாவின் குறை. இந்த இடைவெளி என் மீது தாயாரின் அன்பை அதிகமாக்குகிறது.

காலையில் சிறிது எழுதினேன். சிறிது படித்தேன். வேலைக்குப் போயிருந்தால் சிறிய அளவிலேனும் அப்பா வுக்கு உதவியிருக்க முடியும் என்ற குற்ற உணர்ச்சியுடன் தான். சஞ்சலமின்றி முடிவெடுப்பது சரியோ தவறோ, அதன் பின் அதில் ஆழ்ந்து விடுவது; அதன் பின் எதிர் நிலைகளைப் பற்றி உணர்வில்லாமல் இருப்பது; உயர்வோ, தாழ்வோ இவை நிம்மதியானவை. மன நிம்மதி எப்போதும் மந்தத்தைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறது போலிருக்கிறது.