தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Saturday, April 23, 2016

பிறவிப் பெரும் பயனின் பரிகாசம் - சேனன்

பிறவிப் பெரும் பயனின் பரிகாசம் - சேனன்

http://www.noolaham.org/

எக்ஸில் 0 நவம்பர், டிசம்பர் 1998 41

அவள் முலை இடுப்புவரைதொங்கியது. உதடுகள் நாடிவரை தொங்கியது அவளுக்கு வேறு எங்குமே அவர்கள் முத்தமிடுவதில்லை. கண்டுகளுக்குப் பாத்தி வெட்டும் போதோ அல்லது வயல்களில் களை எடுக்கும்போதோகூட அவள் ஆண்பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஒவ்வோர் ஆண் குறிகளையும் தட்டி எழுப்பி வேலைசெய்விக்க அவளுக்கு நேரம் கிடைத்துக் கொண்டிருந்தது. அரைகுறைக் கனவுகளும் ஆனந்தலகரியும் போக மீதி நேரங்களில் அவர்கள் இளைப்பாறினார்கள்.

எல்லாம் சமத்துவமாயும் சுத்தமாயும் இருந்த ஒரு நாள் திடீரென அவளுக்கு கடுங்கோப முண்டான செயலொன்று நடந்தது. மாடுகளுக்கு கஞ்சி காட் டிக்கொண்டிருந்த பொழுதென்று ஞாபகம் - அவளுக்கொரு குழந்தை பிறந்தது. ஒரு வலது குறைந்த குழந்தையை அவள் இதுவரை பெற்றிருக்கவில்லை. ஆண்குறி இருக்குமிடம் அசிங்கமாக மூளியாக இருந்தது. அவளுக்கு அருவருப்பில் உடல் புல்ல ரித்தது. மற்றவர்கள் பார்க்கு முன் அந்த அரைகுறையைக் காணாமற் போகச் செய்யத் திட்டமிட்டாள். தன் மார்புக்கச்சைக்குள் செருகிவிடமுடியாதபடிக்கு அது பெரிதாக இருந்தது. ஆக

அதன் இருத்தலின் வெளிச்சத்தில் அவர்களுக்குக் கண் கூசி யது. கண்களைப் பிசைந்து நடுங்கினர். அவளுக்குப் புரியாத விசயங்கள் அவர்களுக்குப் புரிந்தது. அவளைப்போல் தாங்களோ தங்களைப் போல் அவளோ எண்ணிக் கொண்டிருக்கவில்லை என்ற ஒரு கருத்துப் பிறந்தது. அது உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை அவர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. இருப்பினும் இந்த அழிவின் அறிவிப்பை இறந்த காலத்துக்குக் கடத்த அவர்களுக்கும் தெரியவில்லை. எப்படியும் அவர்கள் புதுமையாக இயங்கவேண்டியிருந்தது. தம் இயக்கத்தின் வடிவத்தை நிர்ண யித்தல் தவிர அவர்களுக்கு எவ்வித அசெளகரியங்களும் இருக்கவில்லை. சிதைந்து பிறந்த ஒன்று வளர நியாயமில்லாததால் இவர்கள் பரிசோதனைகளில் அழிந்தொழிந்து போயிற்று. அவர்கள் இழுத்த இழுப்புகளுக்கெல்லாம் அது ஈடுகொடுத்தது. இரண்டு நாட்க ளுக்குள் இறுக்கி இழுக்காமலே கை கால்கள் பிய்ந்து போயிற்று.

அவர்கள் என்றைக்கும் நிதான புத்தியின் தோற்றுவாய்கள். 'புற-அகவயக் காரணிகளை ஆய்ந்து இச் சாத்தியத்தின் இரகசியத்தை அவர்கள் கேள்வி கேட்டனர். இதற்கான மாற்றுக்கள்பற்றிச் சிந்தித்தனர். அவளின் கண்களுக்குள்ளால் ஊடுருவி மனதைச் சல்லடை போட்டனர். "இதுவரை காலமும் அவளை எப்படிக் காதலித் தோம்! அவள் அனுபவிக்காத சுதந்திரம் என்று ஏதாவது உண்டா? என்று முணுமுணுத் தனர். அவளும்தான் எப்படிப்பட்டவள்! "உலகத்தில் எல்லாவற் றையும் விட அதிகமாக உன்னைத்தான் காதலிக்கிறேன் என்பாள் அவள். எங்கே அவளைக் கொஞ்சம் குண்டுசியால் குத்திப்பார். அவள் உன் நெஞ்சை வகிர்ந்துவிடத் தயா ராக இருக்கிறாள்" என்று கவிதைச் சிலேடைகளால் எல்லோரும் தங்கள் கண்டுபிடிப்புகளைக் கத்திப் பிரகடனப்படுத்தினர். அவர்கள் அனைவரும் விளங்கிக்கொண்டனர். ஆச்சரியமான விதத்தில் அருவருப்புக்குப்பதில் பயந்துகொண்டனர். அவள் மேலும் பின்னக்கூடிய சதிவலையைப் பிய்த்தெறியப் பலவாறு முயன்று முடிவில் அவளை நித்தம்கூடியிருத்தலில் வந்து முடித்தார்கள். புருசன்கள் அவதானிப்புகளுக்கு நியமிக்கப்பட்டுக் கொண்டிருந் தார்கள். இந்தப் புரிசன் அவளை இரண்டறக் கலத்தல் தவிர்த்து வேறெதுவும் தெரியாதவன். அவள் இயல்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டாள்.

ஒளி விளக்குகளும் பந்த பாவனைகளும் தன்னை வடிக்க வென்று எப்படி அவளுக்கு விளங்கும்? அனைத்து வேட்கைகளையும் அவர்கள்தான் மிக்க பாதுகாப்பாக பேணச் சொன்னனர். என்ன இருந்தாலும் எதுதான் நடந்திருந்தாலும் தங்களுக்காக ஆயிரமாயிரம் விளக்குகள் எரிவது அவளால்தான் என்ற நம் பிக்கையை அவர்கள் அசைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் கண்டிராத உலகத்தில் இருந்து வந்தவள் போல் நம்பமுடியாத படி அவள் அவர்தம் மகுடிக்கிசைந்தாள். புதுமையின்பம் அவர்களைப் புரட்டிப் புரட்டிப் போட்டது. அதன் தொடர்ச்சியையும் மரபையும். அவர்கள் பேணிக் கொண்டனர். கொஞ்சம் கொஞ்சமாக அவள் உச்சந்தலையைப் பிளந்துகொண்டு அவளுக்கும் மாற்றுக்கள் வெடித்தது.

என் மலத்துடனும் மூத்திரத்துடனும் பிறந்த அரைகுறைகள் இவர்கள் என்பது அவளுக்கு உறைத்தது. முந்தியதனைத் தும் சோகமானதாக இருக்க வேண்டும் என்பதை அவள் ஊகித்தறிந்தாள். அவர்கள் முகங்கள் எல்லாவற்றிலும்

அவள் தெரிந்தாள். ஒரு நாள் குளிரும் அதிகாலைப் பொழு தில் "என் மலத்துடனும் மூத்தி ரத்துடனும் பிறந்தவர்களே!" என அவர்களை விழித்தாள். இரண்டு தொடைக்கும் இடையில் வைத்து அவர்கள் ஆண்குறியை அவள் நெரித்த நெரிப்பில் அவர்கள் ஆவென்று கத்திக்கொண்டு ஓடினர். எல்லோரும் தம் ஆண் குறிகளைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுத் திரிந்தனர்.

தங்கள் பற்களுக்கிடையிலான சூத்தைகளை நக்கியெ டுக்கும்படிகூட அவர்களால் இனிக் கேட்கமுடியாது. அவளால் இனி எந்த உபயோகமும் இல்லை. அவள் தன் வரலாற்றுக் கடமையை முடித்துக்கொள்ளும் தருணம் வந்துவிட்டதை அவர் கள் உய்த்துணர்ந்தனர். அடுத்த கட்டத்தில் அவள் மீண்டும் தம் மகுடிக்கிசைவாள் என்ற நம்பிக்கையில் உடனடி வைத்தியத் துக்காக அவர்கள் ஒன்று கூடி னர். உடலின் அனைத்துப் பிரிவு களும் பாகப்பிரிவினைசெய்து அதற்கான பொறுப்புகள் உரிய வர்களிடம் ஒப்புவிக்கப்பட்டது. மிகவும் நிதானமாகவும் நனவுபூர்வமாகவும் அவர்கள் தம் கட மையை இயக்கினர்.

அடுத்த கட்டம் அல்லது எதிர்காலம் அவர்களுக்கு தெட்டத் தெளிவாக வெளிச்சமான ஒன்றாக கண்ணுக்கு முன்னால் நேரே இருந்தது. காரியம் முடிந்த கையோடு வெறுங்கா லால் நடந்தே போய்விடக் கூடிய துரத்தில் அது இவர்களுக்காகக் காத்துக் கிடந்தது. அவள் சிரிப்பின் ஒலி அலைகளை முதல் தடவையாக அவர்கள் வான்வெளியில் கேட்டு ரசித்தனர். அவர்கள் தம் ஆண்குறிக்குப் பதிலாக தடிகளையும் தண்டுகளையும் பாவித்தனர். ஒவ்வொரு நாளும் அவளை விரட்டிப் பிடித்து வந்து எதுவும் அநாகரிகமோ அசிங்கமோ நடக்கப் போவதில்லை என்பதைத் தெளி வாக்கியபின் இயற்கையாலும் அவள் உடல் அசைவுகளாலும்

தூண்டப்பட்டு மட்டும் புரட்சி யைக் கட்டம் கட்டமாகச் செய்தனர். இதில் சோகத்துக்கு ஒரு சொட்டு இடமும் இல்லை. பரந்த அறிவுத் தளத்தில் பாராமல் கண்ணிர் விடுவது, உணர்ச்சிவசப்படுவது எல்லாவற்றுக்கும் இடமே இல்லை. ஏனெனில் அனைத்தும் ஏலவே திட்டமிட்ட படி கட்டம் கட்டமாக நிகழ்வது தவிர்த்து புதுமையில்லை. அவள் சிரித்தாள். சிரித்துவிட் டுப் போகிறாள். அது பக்க விளைவுகளில் ஒன்று மட்டுமே. இதைப் பற்றி நான் சொல்வதானால் - படிப்படியாகச் சித்திரவதை செய்து அவளைக் கொன்றனர் - அவளது குறியில் நெருப்புவைத்துச் சோறு பொங்கினர். குருதியில் சொதி வைத்துக் குடித்தனர். ஆயிரம் கைகளும் ஆயிரம் தலைகளும் அழியாத பிறப்பும் அவளுக்கு யாரும் வரம் கொடுத்திருக்கவில்லை. ஒருநாள் முழுக்க அவள் படுக்கையை விட்டு எழும்பவும் இல்லை. அசை யவும் இல்லை. இரவுவந்து புருசன்மார் உறவுகளும் கொண்டு விடிந்தபிறகுதான் அவர்களுக்கு அவள் செத்துப்போயிருக்கலாம் என்ற சந்தேகம் வந்தது.

செத்துப்போவதுபற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்காக அவள் உடலைச்சுற்றி அவர்கள் காத்திருந்தார்கள். இப்போது அவர்களுக்குக் கிடைத்த மாபெரும் சுதந்திரத்தை ரசித்து அனு பவிக்க மறந்துபோய் அவர்கள் இருந்தார்கள்.

இயற்கை தன் இஸ்டப்படி நடந்துகொண்டு இருந்த ஒரு வெட்டவெளியில் அவள் கிடந்தாள். எதையும் ஸ்தம்பிக்கவிட மனமற்று ஆளில் ஆள் மோதிக் கொண்டனர். எல்லாம் இத்தோடு முடிந்தது என்பதை உணர அவர் களுக்கு நீண்ட நாட்கள் பிடித் தது. அவர்கள் அவளை ஏற்க மறுத்தனர். தங்களின் அனுமதி யில்லாத அவளின் எந்த முடிவையும் அவர்கள் வெறுத்தனர். அது சாத்தியமில்லை என்பதை நிச்சயமாக நம்பினர். ஆதலின் இந்த நாடகத்தைக் கட்டுடைக்க அவர்கள் முக்கினர்.

தன்வீட்டு நீண்ட ஒழுங்கையின் முனையில் அவள் நிற்பதாக சிவநாதன் கத்தினான். பாலகிருஸ்ணன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கலைத்துக் கொண்டு போனான். கடைசியாக 'இராசையா வீதியால் திரும்பியதாகவும் அதற்குப் பிறகு காண வில்லை என்றும் இளங்கோ சொல்ல எல்லா வீதிகளிலும் எல் லாரும் தேடினர். ஊரே அல்லோலகல்லோலப்பட்டது. அவள் காணப்பட்டதாக கருதிய இடங்கள் வீதிகளில் எல்லாம் இரவிரவாக கத்தியுடன் அவர்கள் காவலிருந்தனர். அவள் எங்கு போயிருக்கமுடியும். இவர்கள் இல்லாமல் அவள் எப்படி வாழ முடியும்?

அவள் பட்டினி கிடப்பதை விரும்பாத தேவன் அவளுக்கு உணவூட்ட விரும்பினான். அவர்கள் மாறி மாறிப்புணர்ந்தும் எப்பிரயோசனமும் இல்லாதபோது எப்படி அவளை அணுகுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவள் கேட்ட அனைத்தையும் நினைத்து நினைத்துப் பார்த்து அவளுக்காக ஒவ்வொருத்தரும் கொண்டு வந்தனர். அவளுக்கு ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளைத் தந்தனர். இனிமேல் ஒருபோதும் எழாவண்ணம் தங்கள் மாற்று எண்ணங்களை முடக்கிவிடுவதாகச் சொன்னனர். எல்லாம் எங்கோ துரத்தில் மீண்டும் எதிரொலித் தது. அவள் சிரித்த வாய் திறக் கவேயில்லை.

அவள் எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் மூலைமுடுக்கெல்லாம் தேடியபின் கூரைகளிலும் பனைமர உச்சிகளிலும் ஏறி வானைப் பார்த்துக்கூவி அழைத்தனர். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் மத்தியில் எவ்வித நன்றியும் இல்லாத அவள் அசைவற்றுக் கிடந்தாள். அவளால் எப்படி இது முடிகிறது? வானத்தை

நோக்கிக் கற்களை வீசினர். அவளில் பட்டோ படாமலோ அவை திரும்பி வந்தன. கோபத்தில் பற்களைக் நறுநறுவெனக் கடித்தபடி உடல் நடுங்க சிவந்த

கண்களுடன் அங்கும் இங்குமாக நடந்து திரிந்தனர். அவளது உயிருள்ள சதையில் 'சதக்' என்று கத்தியை இறக்கும் சாத்தியத்தை இல்லாமற் செய்த இச் சதிவலையை அவர்கள் கற்பனை செய்யாமல் இருந்தது அதிசயங்களில் ஒரு அதிசயம் தான். கத்தி காற்றில் 'விசுக்' என்றுமட்டும் சத்தமிட்டது.

அவளை முத்தமிட்டு ஆவியோடு தழுவ அவர்கள் துடியாய் துடித்தனர். அவளினால் இயக்கப்படுவதையும் அவளினால் மிதிக்கப்படுவதையும்கூட இன்பமாக ஏற்க அவர்கள் தயாராக இருந்தனர். அந்தப் பழகிய இனிய நாட்களுக்காக அவர்கள் எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் முடிவில் ஒரு உண்மை புரிந்தது. மணந்து கொண்டிருந்த அவள் அடுத்த கட்டமாக தங்கள் ஆடுமாடுக ளைப்போல் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்க அழுகப் போகிறாள். பிய்ந்து புழு மொய்த்து சிதையப் போகிறாள் என்று எல் லோருக்கும் தெரிந்தது. அதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு ஒரு வழிதான் இருந்தது. எல்லோரும் கூடிப்பேசி அவளை வெட்டித் திண்டனர்.

தேவீர் வணக்கம். நான் எத்தனை தேசங்களில் ஒரு பெண்ணைத் தேடினேன். அவளுக்காக ஆயிரம் கவிதைகளை நான் வைத்திருக்கிறேன். எல்லாம் மறந்த அவள் சேலத்தில் எங்கோ செத்தபடி - என் விடலைப் பருவத்து வரிகளில் மட்டும் உயிர்ப்பாய்.

"உனக்கு யாராவது சந்தோச ஊசி போட்டால் மட்டும்தான் உன் தேகத்தில் தேவதை குடிவ ருவாள்." "எனக்குக் காதலா? என்பாய் ஏளனமாய். "என் தம்பி இன்னும் பத்தாவது பாஸ் பண்ண வில்லையே. அண்ணனுக்கு இன் னும் வேலை கிடைக்கவில் லையே. எனக்கெப்படிக் காதல் வரும்" என்பாய். அதற்குப் பிறகு நீ வாழவேண்டுமென்ற அவசியமிருக்குமோ? உனக்குத் தெரியாது. உன்னால் நேசிக்கப்படுவ தையும் எனக்காக நீதுன்பப்படு வதையும் மற்றவர்களைப் போலவே நானும் விரும்பினேன்." - உன்னில் இருந்து ஊற்றெடுத்த அன்பு சுகத்தை அனுபவிக்கும் மட்டும் அனுபவித்துவிட்டு கடைசியில் துரப்பார்த்து துப்பிவிட் டார்கள். உன்னில் இன்னும் இனிப்பிருக்கிறது. உனக்குள் இன்னும் உயிர் இருக்கிறது என்பது எனக்குமட்டும் தெரியும்.

சின்னஞ்சிறு வட்டுகள்கூட இன்று உன் வாழ்வை விமர்சிக்கின்றன. நீயோ சிரித்தபடி அவர் தம் சுகத்தை விசாரிக்கிறாய். அதுதான் நீ பாலூட்டி வளர்த்த உன் தம்பி உன்னைப் பைத்தியம் என்கிறான். நீ அவனை வைத்தியம் படிக்க வைத்தாய். உன்னில் இல்லாத வியாதியை அவன் கண்டுபிடிக்கிறான்

சமூகத்தின் பசியை நிறைவு செய்யுங்கள் என்றுசொன்ன உன்னை உண்டு ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கிறது இச்சமூகம். "யாரு அந்த விசர்ப் பொண்ணோ?" என்று உன்னை இறந்த கால வாக்கியத்தில் விசாரிக்கிறது சமூகம்.

பரிதாபகரமான நான் என்ன செய்யமுடியும்? இன்றோடு உன் நினைவுகளை இருட்டுக்கு அனுப்புகிறேன். உன்னைப்பற்றி ஒன்றுமேயில்லை. நான் வாழவேண்டுமடி. யார் நினைவிலும் இல்லாத நீ என் நினைவிலும் இருக்கவேண்டாம். உனக்காகக் கண்ணிர் விடுவது இன்று, கடைசியாக இருக்கட்டும். உன்னை உறிஞ்சிவிட்ட சமூகத்திடம் இருந்து அதை நான் திரும்ப உறிஞ்சவேண்டும். 1



೧ಹ೧ರೇನು ದ 5೧ರui, Qಆbui 1998 43