தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Thursday, April 07, 2016

ஜே. ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி


ஜே. ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (ஆரம்பப் பகுதி மட்டும்) pdf : http://orathanadukarthik.blogspot.in/
automated google-ocr மெய்ப்பு பார்க்க இயலவில்லை

ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான். இன்று இருந்திருந் தாலுங்கூட அவனுக்கு 57 வயதுதான் ஆகியிருக்கும். மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் அப்படி என்ன தான் நமக்கு எட்டாதபடி ரகசிய உறவோ? அதிலும் இந்த நாற்பதையொட்டிய வயதுகள், விசேஷமாக வறுமை பிடுங்கும் இந்தியாவில், எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்திருக்கின்றன. தமிழிலும் பாரதி, புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, மு. தளையசிங்கம் என்று எத்தனை இழப்புகள். இந்த வரிசையில் ஜே. ஜேயை நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஜே. ஜே. தமிழ் எழுத்தாளனா, அவன் மறைவு எப்படி நமக்கு இழப்பாகும் என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படக் கூடும். ஜே. ஜேயின் உயிர், திராவிட உயிர் என்றாலுங்கூட, தமிழ் உயிர் அல்ல என்பது உண்மைதான். இருந்தாலும் அவன் எழுத்தாளன். தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான விஷயமல்லவா இது அபூர்வம் அல்லவா?

இவ்வாறு உலகமெங்கும் எவன் எவன் தன் உள்ளொ வியைக் காண எழுத்தையோ, கலைகளையோ அல்லது தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ (இக்காலத்தில் நான் எப்படி அரசியலைச் சேர்க்க முடியும் :) ஆண்டானோ அவன் எல்லாம்
_
நம்மைச் சார்ந்தவன். நம் மொழிக்கு உடனடியாக அவன் மாற்றப்பட்டு நம் உடம்பின் உறுப்பாகிவிட வேண்டும். |வ்விணைப்பையும் பரவசத்துடன் உணர்ந்து மேற்கொண்டு நாம் சிந்திக்க வேண்டும். நமக்குச் சிந்திக்கத் தெரியும் என்றால். முடியும் என்றால்.

இதற்கு நேர்மாறாக, மாயக் காம உறுப்புகளை மாட்டிக் கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக்கொண் டிருக்கும் அற்பங்கள் தமிழில் எழுதுகின்றன என்பதால் நமதாகிவிடுமா? சீதபேதியில் தமிழ்ச் சீதபேதி என்றும், வேசைத் தனத்தில் தமிழ் வேசைத்தனம் என்றும் உண்டா? இப்போது 1978இல் இது பற்றிய நம் சிந்தனைகள் தெளிவாக இல்லை. ஒப்புக்கொள்கிறே(ஆரம்ப பகுதி மட்டும்ன். குழம்பியும் மயக்கங்கள் நிறைந்தனவாக வும் இருக்கின்றன. வாஸ்தவம்தான். ஆனால் இந்த நூற்றாண் டின் இறுதியில் அல்லது அடுத்த நூற்றாண்டின் முதல் பத்துக்குள் நடக்கப் போவது வேறு. அன்று ஒரு தவளைகூடக் கிணற்றுக்குள் இருக்க முடியாது. இது எனக்கு வெகு நிச்சயமாகத் தெரிகிறது. அன்று பிடிவாதமாக வெளியே வராதவை உயிர் மூச்சற்று அழிந்துபோகும். இது இயற்கையின் நிர்த்தாட்சண்யமான விதி. மூப்பு, போதை, மயக்கங்கள், சரித்திரத்தை விருப்பம் போல் கற்பனை செய்து மகிழும் மனப் புணர்ச்சியின்பம்- இவற்றிற்கு நிரந்தரம் இல்லை.

1990க்குப் பின் வரும் வருடங்களில் இந்தியாவில் பெரும் கீழ்மேல் மாற்றம் நிகழும் என ஜே. ஜே. எழுதியுள்ளதை நம்பி நான் இதைக் கூறவில்லை. ஜே. ஜேயின் கொந்தளிப்புத் தத்துவத்தை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. இந்தியத் தத்துவத்தின் உள்ளொளிகளையும் மேற்கத்தியத் தத்துவத்தின் தருக்க நிலைகளையும் தனது அங்கங்களாக மாற்றிக்கொண்டு ஜே. ஜே. நடக்க முயன்றான் என்று கூறப்படு கிறது. ஒருவிதத்தில் அவன் தீர்க்கதரிசி, ஒருவிதத்தில் அவன் தருக்க ஞானி. தீர்க்கதரிசனம் எனக்குப் பரவசமூட்டக்கூடியது. உள்ளொளி தோய்ந்த வாக்குகள் என் நரம்பில் புது ரத்தத்தைப் பாய்ச்சுகின்றன. தருக்க ஞானம், நிரூபணங்கள், வியாக்கியானங் கள், மேற்கத்தியத் தத்துவக் கட்டுமானங்கள் இவற்றின் பெரும் குன்றான சரிவுகள் என் மூளையைச் சோர்வடையச் செய்துவிடு கின்றன. பின்தொடர முடியாது போய்விடுகிறது. ஒரு இடம் வந்ததும் ஜே. ஜேயும் என்னைத் தாண்டிச் சென்றுவிட்டான். நாய் போல் மூச்சிரைக்க, சில எட்டுகள் மேலும் ஒடி நின்று விட்டேன்.

இன்று ஜே. ஜே. அவன் மண்ணிலேயே மறுபரிசீலனைக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறான். அவனுடைய தருக்க நிலைகள் பெரும் கேள்விகளுக்கு உள்ளாகிவிட்டன. அவனைக் கடுமை யாக விமர்சித்து, தத்துவப் பீடத்திலிருந்து தீர்க்கதரிசியின் இருட்குகைக்கு ஒதுக்கிவிட்ட எம். கே. அய்யப்பன் கூட, அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள் போல் பரவசம் ஊட்டக்கூடியது' என்று எழுத நேர்ந்தது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டில் நம் மண்ணில் நிகழவிருக்கும் மாற்றத்தைப் பற்றி நான் கூறுவது ஜே. ஜேயை அனுசரித்து அல்ல. என் மூளையின் கைவிளக்கில் தெரிவதே. விவரங் களின்றி இப்படிச் சொல்வது சரியல்ல என்பதை உணர்கிறேன். ஆனால் இங்கு என் நோக்கம் ஜே. ஜேயைப் பற்றிச் சில குறிப்புகளை முன்வைப்பதுதான். என் தத்துவக் கீற்றுகளை வெளிப்படுத்துவது அல்ல.

சிந்திக்கும் மனிதனுக்கு ஒரு பாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது. ஜே. ஜே. அதைத் தேடியவன். தேடி அலைந்தவன். மரணப்படுக்கையில் சற்று மனத் தெளிவிழந்த நிலையில், 'என் வீட்டு வாசலை யாரோ வெளியே தாழிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். யார் அது? யார் அது? என்று ஜே. ஜே. அரற்றிக்கொண்டிருந்தானாம். அவனது தேடல் எந்த இடத்திற் கும் அவனைக் கொண்டு போய்ச் சேர்க்காததன் குறியீட்டு நிலையாக அவனுடைய எதிரிகள் இதற்கு விளக்கம் தந்தார்கள்.
_______________________________________________________________________________
*முளங்காடு கிருஷ்ண வைத்தியர் அய்யப்பன் : இன்றையத் தத்துவவாதிகளில் முதனமையானவராகக கருதப்படுகிறவர். தற்கால அரசியல் கட்சிகளின் நிலை ளையும் கந்தியச் சிந்தனைகளையும் மிகக் கடுமையாக விமர்சிக்கும் ாக்சியவாதி. இந்துமதச் சிந்தனையோட்டங்களின் பரம வைரி பாராளுமன்ற ஜனநாயகத்தில் முற்றது நம்பிக்கையற்றவர். அஹிம்சைப் புரட்சி என்பது அடக்கும் வர்க்கத்தின் விசித்திரக் கற்பனை என்றும் சாத்வீகப் புரட்சி சரித்திரம் அறியாத ஒன்று எனவும் வாதாடிவருகிறவர். பிரம்மச்சாரி, ஜே. ஜேக்கும் வருக்கும் நெருங்கிய நட்பும், ஜே.ஜேயின் முதல் கட்டத்தில் இருவருக்கும் மருத்து ஒற்றுமையும் இருந்தன.

தனது வைதீகக் கிருஸ்துவப் பின்னணி இவரால்தான் தகர்க்கப்பட்டது எனவும், உலக சிந்தனையாளர்களை  இவர்தான் தனக்கு அறிமுகம் செய்துதந்தார் எனவும்  ஜே.ஜே. நன்றியுணர்ச்சியுடன் தனது நாட்குறிப்பில் குறித்திருக்கிறான்.

| குறிப்பிலிருந்து, அய்யப்பனிடம் கொண்ட கருத்து வேற்றுமைக்குப் பின் எழுதப்பட்டது என நம்பப்படும் பகுதி: "நேற்றையப் புரட்சிவாதியை இன்றையப் புரட்சிவாதி தாண்டிப்போகிறான். இறுதிப் புரட்சிவாதியாகத் தன்னைக் கற்பனை செய்து கொள்கிறவன் மதவாதி. மனிதன் உயிர் ராசியைச் சார்ந்தவன் மல்ல, மனிதன் வித்தியாசமான உயிர் ராசி. அவன் அடங்கமாட்டான். திருபதிப் படமாட்டான். ஓய மாட்டான். 'வசந்தம் வராத வருடங்கள் (திருமதி சாரம்மா ஜே. ஜே. அனுமதித்துள்ள சிறிய பகுதி மட்டுமே அச்சேறியுள்ளது.
தலைப்பு பதிப்புக் குழு சூட்டியது.) -
_____________________________________________________________________________
அவர்களுக்கு உள்ளுர சந்தோஷம். இதற்குப் பதிலளித்த - சமீப காலங்களில் ஜே. ஜேயின் பார்வையிலிருந்து நகர்ந்து போயிருந்தாலும்கூட அவன்மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும்சுபத்திரம்மாத் தங்கச்சி, வெளி வாசலை யாரோ பூட்டிவிட்டார் கள் என்பதை ஜே. ஜே. கண்டுகொண்டான். அது வரையிலும் அவன் பயணம் தொடர்ந்திருந்தது. எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன், அவையே கழித்த சாணிமீது சரிந்து, உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன என்று எழுதி, நான் எருமைகள் என இங்கு குறிப்பிடுவது எருமைகளை அல்ல' என்றும் சேர்த்திருந்தாள். முதுபெரும் எழுத்தாளர் என். இக்கண்ட வாரியர், குமிழியிடும் பாராட்டுணர்வுடன், சுபத்திரம்மாத் தங்கச்சியை விமர்சித்து அவளுடைய கல்லூரி நாட்களில் எழுதிய பத்திரிகைக் கடிதத் தில், பார்க்கப் பார்க்கப் பெண் போலவே காட்சியளிக்கக் கூடியவள் அவள் என்று எழுதியிருந்தது என் நினைவுக்கு வருகிறது.)

ஜே. ஜே. மறைந்து பதினெட்டு வருடங்களுக்குப்பின், தமிழ் வாசகர்களுக்கு அவனை அறிமுகப்படுத்தி இக்குறிப்புகளை எழுதுகிறேன். இதற்கு அறிவுலக நியாயங்கள், மானசீக உறவுகள் இரண்டுமே உள்ளன. இரண்டையும் என் வாசகர்கள் முன் வைக்க நான் கடமைப்பட்டவன்.
நம் இந்திய அரசியலமைப்பில் பதினைந்து மொழிகள் குறிப் பிடப்பட்டுள்ளன. இம்மொழிகள் எல்லாவற்றின் வரிவடிவத் தையும் ஒருதடவையேனும் பார்த்திருக்கிறீர்களா எனச் சில எழுத்தாளர்களிடம் நான் கேட்டபோது, எல்லாருமே ஆயாசத் துடன் இல்லை என்றார்கள். நானும் பார்த்ததில்லை என்ற உண்மையைச் சொல்லியும்கூட அவர்களை உற்சாகப்படுத்த முடியவில்லை. உண்மையில் இது மிக வருந்தவேண்டிய நிலை தான். அதே போல் இன்றைய இத்தாலிய எழுத்தாளனைத் தெரிந்தவனுக்கு இன்றையக் கன்னட எழுத்தாளனைத் தெரியவில்லை. அமெரிக்க இலக்கியத்தின் புதிய போக்குகள் பற்றி ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் பெற்ற இந்தி எழுத்தாளன் தமிழில் புதுக்கவிதை உண்டா? என்று கேட்கிறான். காஃப்கா என்கிறோம். சிமோன் த பூவா என்கிறோம். போர்ஹே என்கிறோம். குட்டிக்கிருஷ்ண மாராரைத் தெரியாது என்கிறோம். கோபாலகிருஷ்ண அடிகாவைத் தெரியாது என்கிறோம். எப்படி இருக்கிறது கதை?
ஒவ்வொரு மொழி இலக்கியத்தையும், அம்மொழி பேசும் ಉಕ್ತಿಕವಾಗಿ கலாச்சாரத்தையும், அடுத்த மொழிகளில் அறிமுகப் படுத்தும் நோக்கத்திற்கு மட்டுமே தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் தனித்தனிப் பத்திரிகைகள் இந்திய மொழிகள் அனைத்திலும் துவக்கப்பட வேண்டும் என இரண்டு பத்தாண்டுகளாக நான் நண்பர்களிடம் சொல்லிவருகிறேன். இதற்கு ஆரம்பிக்க வேண்டிய பத்திரிகைகளின் எண்ணிக்கை, மொத்தம் 5x15=225. எனது இப்பேச்சைத் தீவிரமாக எடுத்துக் கொண்டுவிட்டவர்கள் அதன் பின் என்னைச் சந்திப்பதைக் கூடியமட்டும் குறைத்துக்கொண்டுவிட்டார்கள். வெறும் கனவு’ என்று எடுத்துக்கொண்டவர்கள் என்னைக் கண்டதும் முகத்தில் சிறிது கவலையைப் படரவிட்டு, எத்தனை பத்திரிகைகளுக்கு ஏறபாடுகள் முடிந்திருக்கின்றன? என்று கேட்பார்கள். இந்தி யாவை உணர்வு ரீதியாக ஒருங்கிணைக்கும் திட்டத்தை முன் வைத்தமைக்காகச் சிறிது கேலிக்கு ஆளானதை நான் பொருட்படுத்தவில்லை. இதைவிடவும் சிறிய திட்டங்களைக் சொல்லி, இதைவிடவும் அதிக கேலிக்கு இரையானவர்கள் உண்டு.

இந்தப் பெரிய திட்டத்தின் முதல்படியாக, பிறமொழி இலக்கியம் இன்றை அறிமுகப்படுத்தும் இரு தமிழ்ப் பத்திரிகையை ஆரம்பிப் போம் என்று சொன்னதற்கு, எனது எழுத்தாள நண்பரே, தமிழ் வாசகன் எவனும் பிறமொழி இலக்கியம் படிக்க முடியா விட்டால் உயிரை விட்டுவிடுவேன் என்று சொல்லவில்லையே' என்றார். எனக்கு முகத்தில் அறைந்தாற்போல் ஆயிற்று. நீங்கள் எழுதவில்லை என்று உண்ணாவிரதம் இருக்கும் வாசகன் எவன்? என்று நான் திருப்பிக் கேட்டிருக்கலாம். அந்த நிமிஷத் தில் எங்கள் உறவு முறிந்து போய்விடும். 'எவரும் அவர் விரும்பும் கருத்தை இ. ரியிடுவதுதான் இலக்கிய உலகின் திர்த்தாட்சண்யமான நியதி என்று சொல்லிக் கொண்டே கடைசி வரையிலும் என்னிடம் பேசாமல் இருந்துவிடுவார். இவரும் பேசாதாகிவிட்டால், அப்புறம் நான் தனியே பேசிக் கொள்ள வேண்டிய நிலை இன்று.

இந்நிலையில் நான் செய்யக்கூடியது என்ன என யோசித்ததன் விளைவு, ஜே. ஜே சில குறிப்புகள்:

மேல்வாரியாகப் பார்க்கும்போது இது சிறிய புத்தகம் போலவும் ஒரு எழுத்தாளனின் அரைகுறையான வரலாறு போலவும் தெரியும் சற்று நுட்பமாகக் கவனித்தால் வேறு பரிமானங்கள் தென்படும். அவற்றையும் நானே குறிப்புணர்த்திச் செல்கிறேன். ஜே. ஜேயைப் பற்றிய இந்நூலைப் படிக்கிறவனுக்கு அவனுடைய படைப்புகளையும், இலக்கிய, சமூக, விமர்சனக் கட்டுரைகளை யும், தத்துவார்த்தக் கட்டுரைகளையும் படிக்க வேண்டும் என்ற முனைப்பு ஏற்படக்கூடும். அப்போது அவனுடை-4 எழுத்துகளில் சிலவற்றையேனும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய சூழல் உருவாகும். இத்தனை படிகளைத் தாண்டி வருகிறவர்களை மேலும் சிரமப்படுத்தலாகாது என, தமிழில் அவசியம் மொழிபெயர்க்க வேண்டிய அவனுடைய புத்தகங்களை அனுபந்தம் 3இல் தந்திருக்கிறேன்) அவ்வாறு தமிழாக்கம் இதப்படும் நூல்கள், தமிழ்ப் புலவர்கள், பெண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட தமிழ் எழுத்தாளர்கள், கல்வி நிலையங்களைச் சார்ந்த பெரும் புலவர்கள், மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் (தமிழ் அறிஞர்களில் 99%க்குச் சற்று அதிகமானவர்கள்), தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள். சிறுபத்தி ரிகை ஆசிரியர்கள். வானொலி நிலையத் தமிழ்த் தொண்டர்கள் அனைவ்ரையும் பாதித்து, தமிழ் இலக்கியத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவையாக அமையுமல்லவா? அப்போது மேலும் பல இந்தியக் கலைஞர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் வாசகர்களுக்கு ஏற்படத்தானே செய்யும்? ஆக, எளிய முயற்சி போல் மேலோட்டமான பார்வைக்குத் தெரியும் இந்நூல், இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் நம் மக்கள் கற்றுத் தேறும் பொற்காலத்திற்கு இட்டுச்செல்லும் துழைவாயிலாகும். அந்தப் பொற்காலத்தைக் காண நான் இல்லாமல் போய்விடலாம். எனினும் அது உருவாகும் என உறுதியாக நம்புகிறேன்.

மற்றொரு விஷயம். இந்நூலில் வேற்றுமொழி இலக்கிய ஆசிரியர்களைப் பற்றியும், வேற்றுமொழி இலக்கியப் பின்னணி பற்றியுமே நான் கூறுவதாகச் சிலருக்குப்படும். அது சரிதான். ஆனால் முற்றிலும் சரியல்ல. பிறமொழி எழுத்தாளர்கள் மாதிரிதான் நம் மொழி எழுத்தாளர்களும் என்பதை நாம் மறந்து விடலாமா? தரத்தில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம். குணத்தில், நடத்தைகளில், பழக்க வழக்கங்களில், போட்டி பொறாமைகளில், குழு மனப்பான்மைகளில், குழிபறிப் பதில், காக்காய் பிடிப்பதில் ஏகதேசமாக ஒன்றுதான். வெவ்வேறு மொழி பேசினாலும் நாம் எல்லோரும் இந்தியர்கள்தானே : நமக்குள் ஒற்றுமை இல்லாமல் இருக்குமா? அதனால், நம் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் புத்தகமாகவும் இதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எழுத்தாளர்களும் மனிதர்கள் நானே ஆக, இது மனிதர்களைப் பற்றிச் சொல்வதும்தான்.

நான் பள்ளி இறுதியாண்டில் படித்துக்கொண்டிருந்தபோது ". மனத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியவன் ஜே. ஜே. o நாவல்களில், அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது மிமுந் தொடர்கதைகளில் என் மனத்தைப் பறிகொடுத்திருந்த """. அன்று வானவிற்கள் ஆகாயத்தை கங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உல்கத்துப் புழுதியை மறைத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள்.

ஆஹா, தொடர்கதைகள் ! ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசுச் யாருக்கு விழும்? கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால், ாறும் மாறி மாறி அவனுக்கு இவள், இவளுக்கு அவன் ாறெல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பேன். யூகங்களை நொறுக்கி எறிந்துவிடுவார்கள் மன்னன்கள்.

அந்த நாட்களில் நான் இந்த மண்ணில்தான் இருந்தேனா? அப்படிதான்தான் இருந்திருக்க வேண்டும். வேறு வழி? ஆனால் நான் மண்ணில் நடக்கவில்லை. நிச்சயமாகச் சொல்ல முடியும் மிதந்தேன். இலவம் பஞ்சாக மிதந்தேன். என்றாலும் ஒருவிதத்தில் நான் பெரிய துர திருஷ்டசாலி. வாழ்வின் ളുണ്ട്ഥ தோய்ந்த பொற்காலத்தில் நான் நோயாளியாகிவிட்டேன். மிக மோசமான நோயாளி உடலின் ஒவ்வொரு இணைப்பிலும் வலி. வீக்கம் டாக்டர்கள் என்னைக் குணப்படுத்த முடியாததை இயற்கையாகவும், நான் உயிரோடிருப்பதைச் செயற்கையாகவும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நோய் உடலுக்கு. மனம் அந்த நாட்களில் நான் என் தனி அறையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, அந்தி மயங்கும் நேரத்தில் வினையின் சோக மீட்டல்கள் கேட்க ஆரம்பிக்கும். என் வீட்டிலிருந்து தெரியும் மலையின் பின்னிருந்து எழுவது போல் மிக மெல்லியதாய் மீட்டல்கள் எழுந்து என் அறையின்) ஜன்னல் ஒரம் வரையிலும் வரும். 'லம்போதர என்ற கீதம். நீங்கள் அதைக் கேட்டிருக்கிறீர்களா? ஒரு 5-தடவையாவது என்ன அற்புதமான கீதம்! அது என் மனசைப பிழியும், இருள் சூழ்ந்த அறையில், குத்துவிளக்கின் ஒற்றைத் திரி நிமிர்ந் தெரிய, சுவர்களில் மாய நிழல்கள் அசைய, அநதப பெண், வீணையில் விரல்களை அசைக்கிறாள். வீணை ஒலியோடு ஒரு சூட்சுமமான கணத்தில் அவள் குரல் இணைவதும் மற்றொரு சூட்சுமமான கணத்தில் அவள் குரல் நழுவ, வீணை தனித்து ஒலிப்பதும் என்னை வாரிச் சுருட்டும். அவள் எனக்காக அங்கிருக்கிறாள். என் வருகையை எதிர்பார்த்து.என்னைப் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறு துக்கம் இல்லை. நானோ துடித்துக் கொண்டிருக்கிறேன்.என்னால் ஓடிப்போக முடியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நடந்து போய்விட முடியும். அவள் இருப்பிடம் எனக்குத் தெரிய வேண்டும். அந்த வீணை ஒலி மீதேறி நான் போக முடியுமா? தூரங்களை ஒலி மூலம் கடக்க முடியுமா?

 இந்நாட்களில்தான் ஜே. ஜேயின் எழுத்தை முதன்முதலாக நான் படிக்க நேர்ந்தது. அது ஒரு கட்டுரை. நீண்ட கட்டுரை யிலிருந்து மறுபிரசுரம் செய்யப்பட்டிருந்த பகுதி ஆண் - பெண் உறவைப் பற்றி ஜே. ஜே. அதில் ஆராய்ந்திருந்தான். திருமணமே போலியான ஏற்பாடு என்ற முடிவை நோக்கி அவன் நகர்ந்துகொண்டிருக்கிறானோ? புறங்கழுத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடிகள் விழுவது உணர்ந்தேன். என்ன  இது? இப்படியும் சிந்தனைகள் உண்டா? சிந்தித்தாலும் அச்சில் இப்படியா பட்டவர்த்தனமாகச் சொல்வார்கள் கூச்சம் சிறிதும் இருக்காதா? எண்ணங்களுக்கும் அச்சுருவ எழுத்துக்குமுள்ள இடைவெளி முற்றாக அழிந்துபோய்விடவேண்டும் என்றும், இன்றைய எழுத்து, ஒழுக்கவியல் காரணங் களால் தன்மீது அதிருப்தியுற்ற மனிதன் தன்னை வேறு விதமாகக் காட்ட விரும்பிப் பரப்பும் பொய்முகம் என்றும், இந்தப் பொய்முகம் அவனை மேலும் அதிருப்தியுறச் செய்கிறது என்றும் ஜே. ஜே. கருதுகிறான் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் ஆண் - பெண் உறவைப் பற்றிய அவன் கருத்துகளைத் தொடர்ந்து ஒடியபோது ஏற்பட்ட அனுபவங்களை வார்த்தை உருவத்தில் குறுக்கினால், ஒன்று : பயம். உள்ளிருந்து எழும் பீதி, பெருங்குடலில் குத்திவைத்த துருப்பிடித்த ஆணியின் விஷம் ரத்த நாளங்களில் பரவுவது மாதிரி. இரண்டு : லகரி சிறிதும் எதிர்பாராத இடத்தில் பள்ளத் தாக்கின் விளிம்பை வந்தடைந்தது போன்ற ஆச்சரியம் கலந்த லகரி சொல் முறையும் பாஷையும்தான் இந்த லகரியின் சட்டென உணரக்கூடிய வெளிமுகங்கள். அவன் பாஷை சவரக் கத்தி. சொல்முறை, நீண்ட படிக்கட்டில் ஒரு படி விட்டு ஒரு படி தாண்டிச் செல்வது. முதல் வாக்கியம் சொல்லி, இரண்டா வது வாக்கியம் தவிர்த்து, மூன்றாவது வாக்கியம் சொல்லிச் செல்கிறான். பாலமற்ற ஒரு கால்வாயைத் தாண்டல் வீரன் சாடிக் கடப்பதைப் போல், முதல் வாக்கியத்தின் கருத்து இரண்டாவது வாக்கியத்தைத் தேடிக் கிடைக்காமல் பரி தவித்து, குதித்து மூன்றாவது வாக்கியத்தைப் பற்றிக்கொண்டு விடுகிறது. இந்தத் தாண்டலைத்தான் மூளையின் ஏதோ ஒரு நரம்பில் லகரியாக உணர்கிறோம்.

தாண்டல் என்றும், சவரக்கத்தி என்றும், மூளை நரம்பின் பேரின்ப உணர்வு என்றும் ஏதேதோ சொல்கிறேன். இதெல்லாம் சொல்லத் தெரியாமல் சொல்வது தத்தளிப்பு அனுபவத்திற்கும் பாஷைக்கும் இருக்கும், எப்போதும் இருக்கப்போகும், இடை வெளி. பாஷை என்பது வேட்டை நாயின் கால்தடம் கால் தடத்தை நாம் உற்றுப் பார்க்கும்போது வேட்டை நாய் வெகு துரம் போயிருக்கும். வேட்டை நாய் என்று மிகப் பொருத்தமாக வந்துவிட்டது. ஜே. ஜேயின் மூளையை வேட்டை நாயுடன்தான் ஒப்பிட முடியும். என்ன பாய்ச்சல் பாய்கிறது. அது! எதற்கு? கடைசியில் கிடைக்கும் சதைக்கா? கறிக்கா? அல்ல. அல்லவே அல்ல. கொஞ்சம் சதை அதற்குக் கிடைக்கும். கிடைக்கும் என்பது அதற்கும் தெரியும். ஆனால் அந்தப் பாய்ச்சல் அதற்காக அல்ல. லாபத்திற்கும் அப்பால் ஏதோ ஒன்று அதைத் துரண்டு விறது. இன உணர்வுகள் காட்டு வாழ்க்கை அதன் உடம்பில் ாக்க வைத்திருக்கும் ஹிம்சை ரத்தம்? ஏதோ ஒன்று. அதே மாதிரி ஒரு சக்திதான் ஜே. ஜேயைத் துரத்திக்கொண்டிருக்கிறது.

***20
இதைத்தான் ஜே. ஜே. எனக்குப் புறப்படும் இடம் தெரியும்.போகுமிடம் தெரியாது என்று சொன்னான். சேருமிடம் தெரிகிறவர்களை நாய்வாய்க்கழியைப் பற்றிப் பின்தொடரும் குருடர்கள் என்று பரிகசித்தான். அவன் சொன்னது சரிதான். குருடனின் வளர்ப்பு நாய்க்கும் வேட்டை நாய்க்கும் வித்தியாசம் கொஞ்சநஞ்சமல்ல. குருடர்களுக்கு இது தெரியாது. அவர்களால் வேட்டை நாய்களைப் புரிந்துகொள்ள முடியாது. வளர்ப்பு நாய் அவர்களுக்கு உபயோகமானது.

ஜே.ஜேயைப் படித்தபோது பயம் ஏற்பட்டது என்றேன். என்ன பயம்; பயம் ஏற்பட என்ன இருக்கிறது? ஆனால் பயம்தான. நான் நம்பும் உலகத்தை இல்லாமல் ஆக்கிவிடுவானோ என்ற பயம். நான் நம்பும் உலகத்தை இல்லாமலாக்கி, அதன மூலம என்னை இல்லாமல் ஆக்கிவிடுவானோ என்ற என்ற பயம். கனவுகளுக்கு அவன் எதிரி. எனக்கோ அவை தின்பண்டம்.

மேகங்களைக் கலைப்பவன் அவன் சல்லாத் துணிகள் அவன் கைகளில் கிழிபடும். என் காதலியின் புன்முறுவலில்  மதிமயங்கி நிற்கும்போது, 'இது புன்முறுவல் அல்ல - பொய் என்று அவன் சொல்லக்கூடுமென்றால், அதற்குமேல் சென்று, ஆசை குழந்தை பெற்றுக்கொள்ள, உன் மீதல்ல. என்று  தொடருவான் என்றால், எப்படி என்னால் பொறுத்துக்கொள்ள முடியும் ? நம் நம்பிக்கைகளுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக் கொண்டே போனால் எதை நம்பி நான் உயிர் வாழ்வேன்? அவளைப் பற்றிய கனவு ஒன்றுதான் எனக்கு இப்போது மிஞ்சியிருக்கிறது. அதுவும் இல்லை என்றால்?

அவனுடைய ஈவிரக்கமற்ற தன்மையில் மாற்றமே இல்லைசமரசத்தின் இடைவெளிகள் அற்ற மரணப்பிடி – எதை பிடித்துப் பேசும் போதும் இல்லாததை இருப்பதாகக் கற்பனை செய்துகொள்வதில் நாம் பெறும் சிறு ஆசுவாசத்தை அவன் நமக்குத் தரவேமாட்டான். அவன் உண்மையை நிர்த்தாட்சண்யமாகப் பிடிக்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது. கொடுமை, கடின சித்தம் என்றெல்லாம் தோன்றிவிடுகிறது. நான் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேனோ அப்படியே இருக்கிறான் அவன். கனவுகளில் புரண்டு. நான் மயங்கிக் கிடப்பதற்கு மாறான எதிர்த்திசை ஒட்டம் அவனுடையது. இதனால்தான் எனக்கு அவன்மீது மோகம்; அவன்மீது கோபம்.

 நான் சிறு வயதில் பத்மநாபஸ்வாமி கோவில் பக்கம் போகும் போது, அங்கு குதிரைகள் வரும். 1939 – 40, அபூர்வமா அவற்றைப் பார்க்கக் கிடைக்கும். சரித்திர காலத்திலிருந்து இன்றையப் புழுதியில் வந்து விழுந்துவிட்டதால்தான எனறு நினைக்கும்படி மலங்க மலங்க விழிக்கும். அதன் சதை உருளும் அழகு என்ன கார்வார்! என்ன அழகான திமிர்! அற்புதமான அதன் கழுத்து வெட்டுகள் இடக்குப் பண்ணும்போது முன்பின் நகர்ந்து அவை காட்டும் சாகசங்கள்! இப்போதும் காட்சிப் புலன்களாக, இன்று காலையில் கண்டது போல், என் கண்முன் அவை நிற்கின்றன. தவறான காலத்தில் வந்துசேர்ந்துவிட்ட துக்கத்தை அவற்றால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நடுரோட்டில் புழுதி பறிக்கும் அவற்றின் பின்னங்கால் வேகத்திலும், சதை சுண்டும் சவுக்கை அவை அலட்சியப்படுத்தும் திமிரிலும் எனக்கு இந்தத் துக்கம்தான் தெரிகிறது. எப்படி அவற்றால் பொறுத்துக்கொள்ள முடியும்? சுற்றிவர சைக்கிள்கள். சர்க்கஸ் கோமாளிகளுக்கே உரித்தான ஒரு வித்தையை, வறுமை, தேசியமயமாக்கி நெடுகிலும் பரப்பி வைத்திருக்கிறது. அழுக்கு வேட்டிகளும் பரட்டைத் தலைகளும். புரவிகள் வீதியோரம் வரும்போது, பயந்து செத்துப் பின்நகர்ந்து சாய்கிறார்கள். ஒருவனுக்காவது ஒரு குதிரையின் அருகே போக வேண்டும் என்றோ, அதன் கடிவாளத்தைப் பற்றிப் பஞ்சென்ற அதன் ரோம மினுமினுப்பைத் தடவித்தர வேண்டுமென்றோ, அதன் மீது துள்ளி ஏறிக் காற்றைக் கிழித்துக்கொண்டு பாய வேண்டு மென்றோ தோன்றாமல் போய்விட்டதே! அவற்றின் தவிட்டு நிறம்; அவற்றின் பிருஷ்ட பாகங்கள்; கால் மடித்து முன்னகருவது போல் முன்னகராத நடனப் பாங்குகள்; லகானின் இழுப்புக்கு ஈடுகொடுக்கும் கழுத்தின் குறுக்கம்; அப்போதைய முகத்தின் கோணல்.

என் மனத்தில் புகை மூட்டம் படர ஆரம்பிக்கும். மிகுந்த சோர்வு ஏற்பட, துக்கம் மனத்தை வியாபிக்கும். காலத்தின் கதியில் மிக மோசமான கட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறேன். இயந்திரங்களால் பிழியப்பட்டு, கனவுகள் வெளியே வழிந்து போனதில் இறுகிப்போன சக்கை மனங்கள். என்னால் இவர் களுடன் உறவாட முடியாது. புழுதிப் பாய்ச்சல் மூளைகள். எனக்கு அளக்கத் தெரியவில்லை. பின்தொடரத் தெரியவில்லை. ஒத்துப்போக முடியவில்லை. கொஞ்சம் கனவுகள்; கொஞ்சம் அசட்டுத்தனம்; ஏதோ கொஞ்சம் புத்தி. இப்படி இருந்தால்தான் என்னால் சமாளித்துக்கொண்டு போக முடியும். உணவுதான் | ணவு என்றாகிவிட்டது. கனவுகள் உணவல்ல என்று வெகு நீர்மானமாக முடிவு செய்திருக்கிறார்கள். எனக்கு நேர்மாற்றித் தோன்றுகிறது. வயிற்றில் அடித்தால் மனிதன் பொறுத்துக் கொள்வான். ஆனால் அவன் கனவுகளைத் தட்டிப் பறிக்க ஒருநாளும் விடமாட்டான்.

என் சகோதரி ரமணியின் ஞாபகம் வருகிறது. அப்போது எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு. அவளுக்கு ஏழு அல்லது எட்டு. எங்களுக்கு ஒரு மரப்பாச்சி இருந்தது. இந்த வாக்கியம் எவ்வளவு பெரிய பொய். நாங்கள் ஒரு மரப்பாச்சியினால் உயிர் வாழ்ந்துகொண்டிருந்தோம் என்று சொல்ல வேண்டும். உலகத்தின் சகல துக்கங்களையும் அந்த மரப்பாச்சியினால் நாங்கள் தாங்கிக்கொண்டிருந்தோம். இதை மறுக்கும் தருக்க சாஸ்திரிமீது எனக்குத் துளிகூட மதிப்புக் கிடையாது. இதோ, இதை அடிக்கும் தட்டெழுத்துப்பொறியின்மீது எனக்குள்ள மதிப்புக்கூடக் கிடையாது. அந்த மரப்பாச்சியின் புறத் தோற்றத்தை நாங்கள் அப்போது பார்த்திருக்கவில்லை. அதன் வெட்டு, சிராய்ப்பு, தடங்கள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. அதைக் குழந்தையாகக் கண்ட எங்கள் கற்பனையைத்தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன காரணம் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை - அந்தக் குழந்தையை நோய் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது. (என் தாய் நோயுற்றுப் படுக்கையிலேயே இருந்ததாலோ என்னவோ, காலை நேரங் களில் பயங்கரமான காய்ச்சலும், பிற்பகல்களில் பயங்கரமான வயிற்றுப்போக்கும். நாசித் துவாரமும் கண்களும் மட்டும் வெளியே தெரியும்படி ரமணி அதைப் போர்த்திவைத்திருப் பாள். அரை மணிக்கு ஒரு தடவை தெர்மாமீட்டர் வைத்துப் பார்க்க வேண்டும். கால் மணிக்கு ஒரு தடவை மருந்து கசக்கா மல் இருக்கத் துண்டுச் சர்க்கரை. மாத்திரையை அதற்கு முழுங்கத் தெரியாததால் பொடிபண்ணிக் கொடுப்போம். நெற்றியில் ஈரத்துணியை மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டி ருப்பாள் ரமணி. பத்தரை மணிக்கு டாக்டர் பிஷாரடி வருவார். டாக்டர் வந்தாச்சு என்று ரமணி சொன்னதும் நாங்கள் இருவரும் கேட் வரையிலும் ஒடிச்சென்று அவ!ை வரவேற்று, அவருக்கு இருபக்கமுமாக வருவோம். அவர் கேட்டைத் திறந்து முதல் காலடி வைத்ததும், நான் தயார் நிலையில் நின்று, அவருடைய மருந்துப் பெட்டியை இா இக்கொண்டுவிட வேண்டும். இதில் ரமணி கண்டிப்பு. ரொம்பக் கண்டிப்பு. இதைச் செய்த் தவறியதற்கு அவள் என்னைப் பயங்கரமாகக் கிள்ளியிருக்கிறாள். அந்தக் கிள்ளல்கள் நிலம் பாரித்து, வலியால் துடிக்கும்போது, மரத்தடியில் உட்கார்ந்து துடையைப் பார்த்துக்கொண்டே அழுவேன். ஆனால் அவள் செய்தது தவறு என்று ஒருபோதும் நினைத்த தில்லை. டாக்டர் கையிலிருந்து மருந்துப் பெட்டியை வாங்கத் தவறிப்போனேன் என்றால், என்னைக் கொன்றுவிட வேண்டும். குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ரமணி தன்னை உருக் குலைத்துக்கொண்டிருக்கும் போது இதுகூட எனக்குச் செய்யத் தெரியவில்லை என்றால், என்னைக் கொன்றுவிடுவதுகூட நியாயம்தானே!

நான் மருந்துப்பெட்டியை வாங்கிக் கொண்டதும் ரமணி பேச ஆரம்பிப்பாள். விடியற்காலை ஐந்து மணிக்கு அவள் அசப்பில் எழுந்து பார்க்கும்போது ஜுகியின் (குழந்தையின் செல்லப் பெயர் பெயர் சுகன்யா) உடம்பு பொரிந்துகொண்டிருந்ததாம். ‘நேற்று இரவுகூடக் கொட்டக்கொட்ட முழித்துக் கொண்டு நன்றாக விளையாடிற்றே என்ன டாக்டர், ஒவ்வொரு தடவை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது இந்தக் குழந்தைக்கு மலையாய் வந்துவிடுகிறதே. எப்படி நான் இதை வளர்ப்பேன்? எப்படி நான் இதைக் காப்பாற்றி எடுப்பேன்? என்று கேட்பாள் ரமணி. அவள் தொண்டை இடறும்.

மத்தியானம் எங்கள் உடல்கள் அடுக்களையில் இருக்கும்போது எங்கள் முன் தட்டுகளில் கைவிரல்கள் அசையும். நிழல்கள். வீடு, அப்பா, அம்மா, மரங்கள், பசு அனைத்தும் நிழல்கள். மரத்தடிக் குழந்தை நிஜம் அதன் நோய் நிஜம். அதற்கு 1567 எங்கள் உயிரைக் கரைத்துச் செய்யும் சிகிச்சை நிஜம். அடுக்களையில், எப்போது குழந்தைக்குக் காய்ச்சல் குறையும்?' என்று நான் பாவனையால் கேட்கிறேன். ரமணி சிறிது யோசித்துவிட்டு, எச்சில் விரல்கள் இரண்டை நிமிர்த்தி பாம்பு விரலை ஒரு தடவை மடக்கி மீண்டும் நிமிர்த்துகிறாள். இதற்கு அர்த்தம் இரண்டரை மணி என்பது. நானும் ரமணியும் பாஷையால் பேசிக்கொள்வது கொஞ்சம். பாஷை தாண்டிய பாஷை ஒன்று எங்களுக்குள் உருவாகியிருந்தது. உண்மையில் அதுதான் எங்கள் பாஷை, இந்தச் செத்த பாஷை எங்களுக்கும் மற்றவர்களுக்குமாக,

அதே போல், இரண்டரை மணிக்குக் காய்ச்சல் குறையும். நன்றாகக் குறைந்துவிடும். குழந்தைக்கு வேர்த்துவிடும். போர்வையை அகற்றி விட்டு, பஞ்சு போன்ற துணியால் ரமணி லைத் துடைப்பாள். கட்கம், புறங்கழுத்து, துடையிடுக்கு ால்லாம் துடைப்பாள். குழந்தை முகம் பார்த்துச் சிரிக்கும். பணி குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பிப்பாள். இதற்கு ரமணி யிடம் தனியான ஒரு பாஷை உண்டு. எந்தக் கவிஞனும் இதற்கு இணையான பாஷையை உருவாக்கியது கிடையாது. பாதியில் இல்லாத, அற்புதமான அர்த்தபுஷ்டி நிறைந்த ாத்தைகள் கொட்டிக்கொண்டிருக்கும். கடவுளே, இந்தப் TW? எனக்கும் கற்றுக்கொடும் என்று அவள் பக்கத்தில் ". சார்ந்து ஏங்குவேன். இந்தப் பேரானந்த நிலை ஏதோ கொஞ்ச நேரத்துக்குத்தான்.

டீ குடித்துவிட்டு மூன்று மணிக்கு அப்பா வீட்டு வாசல்படி இறங்கி வருவார். வாக்கிங் ஸ்டிக்கோடு வந்து, வலது புட்டியில் அதை அண்டக் கொடுத்துக்கொண்டு நிற்பார். அதுதான் நாங்கள் மண்ணில் வந்துவிழும் நிமிஷம். ஒன்று அல்லது இரண்டு நிமிஷங்கள்தான். ஆனால் தாங்க முடியாது. உடற் சதையைப் பிய்ப்பது போல இருக்கும். கால் முட்டுக்குள் முகத்தைப் புதைத்து ஸ்தம்பித்து விடுவாள் ரமணி. அதே மாதிரி நானும், மனசுக்குள் அப்பாவை போ, போ' என்று கத்துவோம். 'சனியனே என்றுகூடத் திட்டியிருக்கிறேன். அவர் சிரித்துக் கொண்டே நிற்பார். சில சமயம் 'காய்ச்சல் எப்படி இருக்கு? என்று கேட்பார். அநேகமாக, அதிக நேரம் நிற்காமல் போய் விடுவார். பெரிய விக்ராந்தியாக இருக்கும். கற்பனையின் சீதளம் மீண்டும் மூளையில் பரவும்போது ஆசுவாசமாக இருக்கும்.

இதிலிருந்து நான் தெரிந்துகொண்டவை இவைதாம்:

1. மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ளலாம். நெருக்கடி யும் பேரின்ப நிலையே. ஆனால் தலைகீழானது. திருப்பிப் போட்டுக் கொள்ளப்பட்ட சட்டை ஜேபி உள்ளே இருக்கும். (குழந்தை நோயுண்ட போது நாங்கள் எதிர்கொண்ட விதத்தில் உள்ளுர அடையும் பரவசம்)

2. மிகத் தெளிவான சந்தோஷம். ஒய்வு நிலையில் பெறக்கூடியது. கடல், அருவி, பள்ளத்தாக்கு இவை தரும் சந்தோஷம். நாய்க் குட்டிகள் விளையாடும்போது, குழந்தைகள் அம்மணமாகக் குளிக்கும்போது, உடல் புணர்ச்சி முதலியன. குழந்தை நோய் நீங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது நாங்கள் அடைந்த சந்தோஷம் இவ்விதமானதுதான். ஆனால் இதைத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருக்க முடியாது. மீண்டும் நெருக்கடி வேண்டும். மீண்டும் சவால் வேண்டும். அதனால்தான் குழந் தைக்குப் பிற்பகலில் வயிற்றுப்போக்கு ஆரம்பமாகிவிடுகிறது)

3. மிக மோசமான அவஸ்தை. கனவுகள் பிடுங்கப்பட்டு மண்ணில் விழுந்துவிடுவது. கனவுகளைப் பகிர்ந்துகொள்ள அறியாதவர்கள், அல்லது முடியாதவர்களின் கண்காணிப்பு. (அப்பா வலது புட்டியில் வாக்கிங் ஸ்டிக்கைக் கொடுத்து நிற்கும் நிமிஷங்கள். அவர் முகத்தில் புன்னகை. அந்தப் புன்னகை நற்செயல் சர்வாதிகாரத்தின் குறியீடு)

வாழ்வில் கட்டாயம் ஒருநாள் நான் ஜே.ஜேயைச் சந்திப்பேன். சந்தேகமில்லை. அன்று இதையெல்லாம் அவனிடம் சொல்வேன். நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண் டிருந்து விட்டு, சுருட்டை இழுத்து, மேகத் துணுக்குகளை முகத்து வாரங்கள் வழியாக வெளியே செலுத்திவிட்டுச் சொல்வான்:

பாலு, நீ சொல்வது சரி. ஆனால் நீ ஏன் இந்த நூற்றாண்டில் இருக்க வேண்டும்? பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் போ.

தயவு செய்து மேலும் இந்த நூற்றாண்டைக் குழப்பாதே. போ போய் விடு என்ப்ான்.
இப்படிச் சொன்னால் நான் என்ன செய்ய முடியும்? காலத்தில் எப்படிப் பின்னகர முடியும்?
'உனக்கு ஆஸ்துமா. கடல் காற்று ஆகாது என்கிறேன். உள் நாட்டுப் பகுதிக்கு ஒடு என்கிறேன். கேட்பாயா?

கேட்பேன். அது மாதிரிதான் இதுவும்:

தருக்கப்படி சரிதான். நான் என்ன செய்ய காலத்தில் எப்படிப் பின்னகர? ஆனால் காலத்திற்கு முரண்பட்டு நின்றால், முரண்பட்டு நிற்கும் என்னை நான் அழித்துக்கொண்டுவிட முடியும். பலர் அப்படிச் செய்திருக்கிறார்கள்.

எம். கே. அய்யப்பனிடம் நான் பேசினால், 'நீ ஒரு மன வைத்தி யனைப் பார்ப்பது நல்லது என்பார். 'உன்னிடம் தத்துவப் பிரச்சினை ஏதும் இல்லை என்பார்.

என்ன தத்துவமோ ? என்ன வியாக்கியானங்களோ? யார் கண்டார்கள் !
ஜே. ஜேயை 1951இல், எனது இருபதாவது வயதில், கோட்டயம் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் நான் பார்த்தபோது, நான் யாராக வேண்டும் என்ற என் இடைவிடாத தவிப்புக்கு விடை கிடைத்ததில், பெரும் அதிர்ச்சிக்கு ஆளானேன். அப்போது ஏற்பட்ட மனக் கஷ்டத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நான் ஆக வேண்டியதை ஜே. ஜே. ஆகி, ரத்தமும் சதையுமாக என் முன் நிற்கிறான். நான் இனி என்ன செய்ய? எப்படி உருவாக முயன்று, வேதனைப்பட்டு, வேர்வை சிந்தி, வசைகளும், குத்தல்களும் வாங்கிக் கட்டிக்கொண்டு, மீண்டும், மற்றொரு மொழியில் எழுதும் ஜே. ஜே. ஆவதா? என்ன அசட்டுத்தனம்! மொழிபெயர்ப்பு பூர்த்தி செய்துவிடக்கூடிய காரியத்தையா நான் எழுதி நிரப்ப வேண்டும்? 

சரி, இது இப்படி ஜே. ஜேயுடன் என் முதல் சந்திப்பு இப்படியா திரிந்துபோகும்? எத்தனை வருடங்களாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் சந்திப்பு

எழுத்தாளர் மாநாடு முடியும் மூன்றாம் நாளுக்கு முன்தினம் இரவே கோட்டயத்திலிருந்து புறப்பட்டுவிட்டேன். பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் ஊரின் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போதுதான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன். சோட்டானிக்கரா என்ற இடத்திற்குப் போய், அங்கு பகவதி கோவிலின் முகப்பில் ஒருநாள் பூராவும் உட்கார்ந்து கொண்டிருந்தேன். உடல்நிலை மிக மோசமாகிக்கொண்டிருந்தது. இணைப்புகளில் வீக்கம், வலி, காலைத் தொங்கப்போட்டால், உள்ளங்காலில் ஊசிக்குத்தல். கோவில் முகப்பில் வயசுப் பெண்கள்கூடக் கூசாமல் என் உடலில் இடித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டது, ஆணாகக் கூட அவர்கள் கண்களுக்குத் தென்படாத என் உடல் சீரழிவை எனக்குக் காட்டிற்று.

அங்கிருந்து கிளம்பி ஆல்வாய் சென்றேன். ஆல்வாயில் நாராயண குருவின் சிஷ்யர் எனத் தன்னைக் குறிப்பிட்டுக்கொண்ட சந்நியாசி, என்னை அவருடைய ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். ஹரிஜனச் சிறுவர்களுக்குக் கீதையைக் கற்றுக் கொடுப்பது அவருடைய முக்கியமான திட்டம். அச்சிறுவர் களுக்கு பாரதியின் பாடல்களை நான் பாடிக்காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனக்கு மனப்பாட மாயிருந்த மூன்று பாடல்களைப் பாடிக்காட்டினேன். இளைய தலைமுறையின் பெரும் பகுதி கீதையின் உட்பொருளை உணர்ந்துகொள்ளும்போது இந்தியாவின் முகம் மாறிவிடும் என்றார் அவர். பயங்கரமான வெறியோடு அவர் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றித் தனித்தனியாகக் கேள்வி எழுப்பும் முனைப்பு என்னிடம் இருப்பதை அவர் உணர்ந்த போது, எல்லாப் பிரச்சினைகளுக்கும் இதில் விடை கிடைக்கும் என்று பொதுவாகப் பேசி முற்றுப்புள்ளி வைத்தார். எனக்கு இது, தெரிந்ததை மீண்டும் பார்த்தது போலவே இருந்தது. கடவுளின் நண்பர்கள் சிக்கலான எண்ணற்ற பிரச்சினை களுக்குச் சுலபமான ஏக விடை வைத்துக் கொள்வதும், விவரங் களில் நாம் துழையப் புறப்பட்டால் பின்னகர்த்தி விட்டுவிடு வதும் என்னுடைய முதல் அனுபவமாக இருக்கவில்லை. கன்னியாகுமரியில் இதே மனோபாவங்கள் காஷாயங்களி லிருந்து வெளிப்படுவதை நான் ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன்.

சத்தியானந்தாவின் ஆசிரம உணவுகள் எனக்கு ஒத்துக்கொள்ள வில்லை. கூச்சமில்லாமல் நான் அங்கு தங்க வேண்டுமென்றும், அவசியமென்றால் என் தந்தைக்கு இது பற்றி எழுதுகிறேன் என்றும் அவர் சொன்னதும், ஒரு உயிர் மற்றொரு உயிர்மீது கவியும் விந்தையைப்பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். ஆசிரமத்தில் பரவசமாக இருக்க முடியும் என்று தோன்றிற்று. என் நோயைக் குணப்படுத்திவிட முடியும் என்றும் சத்தியானந்தா சொன்னார். அவர் சிகிச்சை எதிலும் அடங்காமல் இருந்தது. அன்றாடம் அதிகாலை அவருடன் எழுந்து சென்று, நீரோடையில் (புழை "ಇಲ್ಲ! சொன்னார் அவர்) குளிக்க வேண்டும். அவர்தான் குளிப்பாட்டிவிடுவார். உணவு, கஞ்சியும் பயறும் இரவு மட்டும் வெந்நீரில் க்ஷீரபலா (சகஸ்ராவர்த்தனம்) மூன்று சொட்டுகள் சாப்பிட வேண்டும். இந்த சிகிச்சை, வைத்திய சாஸ்திர முறைப் படி ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக எனக்குப் பட்டது. க்ஷீரபலா தரும் வைத்தியன் குளிர்ந்த நீரில் குளிக்கவிடமாட்டான். குளிர்ந்த நீரில் குளிப்பதும் குளிக்காததும் சிகிச்சை சம்பந்தப்பட்டது அல்ல என்று கருதும் டாக்டர் தரும் மருந்துகள் வேறாக இருக்கும். இரண்டு இடங்களில் நடுவில் ஒய்வெடுத்துக்கொண்டு, ஒரு மைல் மாலை நடை போய்வர வேண்டும் என்று சத்தியானந்தா சொன்னதை வைத்தியசாஸ்திரத்தின் மற்றைய இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ள ாட்டார்கள். ஒய்வு மிக அவசியம் என்றும், மீறினால் இதயத் தமனிகள் பழுதடையும் என்றும் சொல்வார்கள்.

நான் சத்தியானந்தாவை நம்பி, அவரை ஏற்றுக்கொண்டேன். அவர் என்னைக் குளிப்பாட்டிவிடும்போது என் கண்கள் நிரம்பும். நீரோடையிலிருந்து குளிர்ந்த நீரை இரு கரங்களிலும் ஏதோ சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே வீக்கங்களின்மீது வார்ப்பார். தண்ணிர் அல்ல; ஒளஷதம்' என்பார். நான் வலியுள்ள பாகங்களை உதயசூர்யனின் ரச்மிகள் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.

கைகால் வீக்கங்கள் குறைந்துகொண்டுவந்தன.

உள்ளூர  என்னை அரித்துக்கொண்டிருந்த சங்கடத்தை நான் சத்தியானந்தாவிடம் சொல்லவில்லை. கலை உலகம் இலக்கியம் கருத்துலகங்கள். ஜே. ஜே - நான். நான் ஆக வேண்டியதை  ஜே. ஜே ஆகியிருப்பது. ஜே. ஜேயுடன் என் முதல் சந்திப்பு தோல்வியில் முடிந்துவிட்டது. எப்படி இதையெல்லாம் சொல்லி விள முடியும்: அப்படியே அவர் புரிந்துகொண்டாலும் அவர் தரக்கூடிய பதில்கள் நாம் முன்கூட்டி அனுமானிக்கக் கூடியவைதானே? ஒரு நாள் இரவில் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருக்கும் போது, இயற்கை என்னும் மகாசக்தியின் ஆனந்த தாண்டவத்தை வர்ணிக்கும், தான் கட்டிய மலையாள பாடல் ஒன்றைச் சொல்லிக்கொண்டுபோனார் சத்தியானந்தா கூழாங்கற்களை மலை உச்சியில் சரித்தது போல் வார்த்தைகளின் பிரவாகம். அவருடைய உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு என் மனம் வேறெங்கோ சஞ்சரித்துக்கொண்டி ருந்தது. அந்த இயற்கை என்னை மறுபதிப்பு ஆக்கும் உத்தேசத்திற்கு எதிரானது என்று நினைக்க ஆரம்பித்தேன். ஜே.ஜே. என்றால் ஜே.ஜே.தான். நான் என்றால் நான்தான். எனக்குப் பதில் அவனோ, அவனுக்குப் பதில் நானோ அல்ல. மற்றொன்றாக இருக்கும் விதை, மணல், துகள், அணு, திசுக்கள் எதுவுமில்லை.

சத்தியானந்தாவின் ஆவேசமும் வெறியும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்று எனக்குத் தோன்றியது. அவருடைய தயார் நிலை, சுறுசுறுப்பு, சுயநினைப்பின் கணங்களைக்கூடச் சந்திக்காமல் காலத்தில் கரைந்து நிற்கும் தன்மை. அவர் உடலிலிருந்து ஒரு நரம்பை அறுத்து எறிந்தாலும் செங்குத்தாக நிற்கும் அது. குருகேத்திர மகாயுத்தம் வெகு சமீபத்தில் நடந்து கொண்டிருப்பது போலவும், தொடர்ந்து சேனையை அனுப்பும் பொறுப்பு கிருஷ்ணனால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது போலவும் ஆவேச வெறி.

ஆனால் இந்த உழைப்பு: இந்த உன்னதம்; நெருப்பில் புடம் போட்டுக் கொள்வது போன்ற அர்ப்பணங்கள் இந்த மண்ணில் என்ன மாற்றங்களை விளைவித்துவிட்டன? உண்மையின் நெருப்பில் சரிந்த உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதேமாதிரி தியாகத்தில் வெந்த உயிர்கள். மண் அன்றும் கறுப்பு: இன்றும் கறுப்பு. என்ன வேடிக்கை! ஏதோ ஒரு பெரிய தவறு நடந்து கொண்டிருக்கிறது. காரணங்கள் சரியில்லை. அறிந்துகொள்ளத் தவறிக்கொண்டிருக்கிறோம். உண்மையைப் பற்றும் போதும்கூட அது மூளையில் உட்கார்ந்துகொண்டு பல்லைக் காட்டுகிறது. ரத்தத்தில் கரைய மறுக்கிறது. ஏதேதோ தடுப்புச் சுவர்கள். சுயநலங்கள். அகந்தை. ஏதேதோ.

விடைபெற்றுக் கொள்ளும்போது, சத்தியானந்தா, அங்குமிங்கும் பார்க்காதே’ என்றார் என்னிடம். எவ்வளவு அற்புதமான கண்டு பிடிப்பு என்னுடைய ஆதார சுருதியின் அபசுரம். இப்போது கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப்பின் நான் சொல்லிக்கொள்கிறேன்: 'சத்தியானந்தp, இப்போதும் அங்கு மிங்கும் பார்க்கிறேன், ஒன்றையே மட்டும் பார்க்க முடிய வில்லை. மனத்தின் இந்த அவஸ்தைக்கு நீங்கள் அன்று சொன்ன சமஸ்கிருதப் பெயர் எனக்கு மறந்துவிட்டது. ஆனால் அந்த அவஸ்தையின் நல்ல உதாரணமாக இருந்து கொண்டிருக் கிறேன். எதிலும் கொஞ்சம் நம்பிக்கை எதிலும் கொஞ்சம் அவநம்பிக்கை. இதுவல்ல அது என்று தேடிப்போவது. பின், அதுவும் அல்ல என்று உட்கார்ந்துவிடுவது. சோர்ந்து படுத்து விடுவது. செய்ய எதுவுமில்லை என்று சும்மா இருப்பது.
மீண்டும் ஏதோ ஒன்று துண்ட ஏதோ ஒன்று பிடித்திழுக்க, எழுந்து ஓடுவது சத்தியானந்தா, உங்கள் வார்த்தை எனக்குப் பயன்படவில்லை. மறுபக்கம் பார்க்காது ஒன்றைப் பார்ப்பதால் கிடைக்கும் தெளிவு எனக்கு வேண்டாம். இரண்டையும், இருபதையும், முடிந்தால் அவற்றுக்கு மேற்பட்ட் பக்கங்களை யும் பார்த்துக் குழம்பி, அவஸ்தைப்பட்டு, அழிந்துபோகப் பிறந்தவன் நான்.

ஜே. ஜேயை நான் சந்திக்கும்போது உடல் தாண்டி, மொழி தாண்டி, எங்களுக்குள் ஆத்மீகப் பிணைப்பு ஏற்படும் என்று நம்பினேன். கருத்து உலகங்களிலும் இலக்கிய உலகங்களிலும்  சகபயணிகளாக நாங்கள் யாத்திரை செய்வோம். நேர் சந்திப்பு கள் அடிக்கடி நிகழும். அவனிடமிருந்து நான் தெரிந்துகொள்ள வேண்டியவை எவ்வளவோ சர்ச்சைகள், தெளிவுகள். அறியாத உலகங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கருத்துகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தக்க தோழமை. மனம் எப்படி ஏங்குகிறது. இதற்கு!

தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதியை ஜே.ஜேயின் மூளைக்குள் தள்ளிவிட வேண்டும். அவன் எழுத்தில் நம்மைப் பற்றி, நம் இலக்கியம் பற்றிக் குறிப்பே இல்லை. ஏன்? எதுவும் அவனிடம் போய்ச்சேரவில்லையா? நடுவில் பாஷையின் சுவர்கள். மனிதனைப் பிளவுபடுத்தும் சுவர்கள். உண்மையைச் சார்ந்து நிற்க வேண்டிய மனிதனை, சத்தத்திற்கு அடிமைப் படுத்திவிட்ட முடக் கருவி. அதை நொறுக்கி விடலாம். அறியவும் அறிவிக்கவும் மனிதன் கொள்ளும் பேராசையின் முன் தூள்தூளாகப் பறந்துபோகும் அது. வள்ளுவனின், இளங்கோவின், கம்பனின் பாரதியின் அவகாசிகளை எப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருக்க முடியும் உலக அரங்கில் கவிதைச் சொத்தின் பெரும் செல்வந்தர்களை எப்படிப் புறக்கணிக்க முடியும்? எல்லோருக்கும் நம்மீது அலட்சியம் கவிந்துவிட்டதோ என்று சந்தேகப்பட ஆரம்பித்தேன். அவர்களிடம் போய்ச்சேரும் தமிழ்ப் படங்கள். அவர்களுக்குப் பார்க்கக் கிடைக்கும் நாடகங்கள். நம் அரசியல்வாதிகளின் வாள்வாள் கத்தல்கள். என்ன நினைப்பார்கள் நம்மைப் பற்றி?

இதிலிருந்தெல்லாம் ஜே. ஜே. சில முடிவுகளுக்கு வந்திருந்தான் என்றால் அவன் நான் நினைக்கும் ஜே.ஜே. அல்ல. தோற்றம் அல்ல, தோற்றத்திற்கு அப்பால் என்பதுதானே தத்துவத்தின் முதல் பாடம். எப்படி இருந்தாலும் எல்லாக் கோணல்களையும் சரிசெய்துவிட முடியும். அதற்கான வழிகள் எனக்குத் தெரியும். ஜே. ஜேயிடம் பற்றவைத்தால் அந்த நெருப்புப் பரவும். அயல் நாட்டு மூன்றாம் தரங்களைக்கூடக் கவனிப்பவர்களுக்கு பாரதியையும் புதுமைப்பித்தனையும் மதிக்க என்ன தடை! இதற்குப்பின் இன்று வரையிலும் வந்துள்ள எல்லாக் கலைஞர் களையும் இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இரு மொழிக்குமான உறவை ஒரு நூற்றாண் டாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயும் மகளுமா, அக்காளும் தங்கையுமா, அல்லது மாமியும் மருமகளுமா என்பது இன்னும் தீர்மானமாகாமலே இருக்கிறது. அவர்களு டைய ஆராய்ச்சிகள் தொடரட்டும். என் வாழ்த்துகள். இதோ நான் ஒடிப்போய் ஜே. ஜேயிடம் தமிழ் இலக்கிய நெருப்பைப் பற்றவைக்கப்போகிறேன்.

இப்படியெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்தேன். இந்த மனநிலையில்தான் மாநாட்டுக்குப் போனேன்.
தமிழ் மண்ணிலிருந்து நோயாளியான ஒரு மாணவன், தனது சரீர நிலையைச் சிறிதும் பொருட்படுத்தாமல் வேற்று மொழி மாநாட்டுக்குப் போகிறான். சம்பிரதாய அழைப்புக்கூட அவனுக்கு இல்லை. நான் உங்களைக் கேட்கிறேன்: மதிக்க, பொருட்படுத்த இதில் ஒன்றுமில்லையா? இதுகூடத் தெரியா விட்டால் என்ன பெரிய ஜே.ஜே. மனித உணர்வுகளுக்கு அப்பால் என்ன தத்துவம்? தலை மயிர் கிழிக்கும் தருக்கங்கள்? 

திருச்சூர் கோபாலன் நாயர்* தத்துவ ஆசிரியரல்லர். அறிவாளி போன்ற படிமம் அவருக்குக் கிடையாது. பின்தங்கிப்போனவர் என்ற இளப்பம்கூட இருக்கக்கூடும். ஆனால் சரியான மனிதர் அவர் குணங்களுடன் குறைகளுடன். பழமைகளுடன். என்னைப் பார்த்ததும் என்ன உற்சாகம் ஏற்பட்டது அவருக்கு! வயது அறுபது, அறுபத்தைந்திருக்கும். கால் முட்டுகளைத் தொடும் தொளதொள ஜிப்பா. காதோரங்களைத் தொடும் அடர்த்தி மீசை. ராணி மங்கம்மாவிடம் சேனாதிபதியாக வேலை பார்த்தவர், எழுத்தாளர் மாநாட்டுக்கு ஏன் வந்தார் என்று நினைக்கும்படி உடம்பு.

திருச்சூர் கோபாலன் நாயர் வரவேற்பு அலுவலகத்துக்கு என்னை அழைத்துச் சென்று, ஒரு தமிழ் எழுத்தாளர் பெயரை யும் ஒரு மலையாள எழுத்தாளர் பெயரையும் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தமிழில் மலையாளக் கொச்சையுடன் சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தார். அவர் தமிழ் எழுத்தாளர் போலவும் நான் மலையாள எழுத்தாளர் போலவும் இருக்கிறோமாம்! வரவேற்பறையிலிருந்து வெளியே வரும்போது தன் உடம்போடு என்னை அனைத்துக்கொண்டு
______________________________________________________________________
*திருச்சூர் கோபாலன் நாயர் : அலெக்சாண்டர் டுமாவின் மூன்று போர்வீரர்களை அடியொற்றி எழுதப்பட்ட முதல் சரித்திர நாவலின் ஆசிரியர். குதிரையில் கதாநாயகன் பம்பா நதிக் கரையோரம் மாலை மஞ்சள் வெயிலில் சிட்டாய்ப் பறந்து செல்லும் வர்ணனைக்குப் பெயர் போனது. பம்பா நதியில்
தலைகள் வாய் பிளந்து நிற்க, மேலே பல மரத்தின் உச்சங்கிளையில் தாங்கிக் கொண்டிருக்கும் இளவரசி உம்மிணிக்குட்டியை - அவளைக் காதலித்துத் துரத்திக்கொண்டு வரும் நூற்றுக் கணக்கான சிற்றரசர்களை, இதில் மூன்று பேர் பாண்டியர்கள், கொன்று குவித்து விட்டு - கதாநாயகன் மரத்தில் தாவியேறி அனைத்துக்கொள்ள, மலை வாயிலில் சூரியனும் விழ, தென்றலும் தவழ, நாவலும் முடிகிறது. முதல் முற்போக்குச் சரித்திர நாவல் என்று கருதப்படுவது சரித்திர நாவலில் முற்போக்கு இது ஏனெனில் தொல்லங்கோடு இளவரசி உம்மிணிக்குட்டி, தன் சேடிகள் பதின்மருக்கு நாஞ்சில் நாட்டில் புஞ்சை நிலங்களும், நாலுகட்டு இல்லங்களும் வழங்குவதால், பரந்துபட்ட பார்வையில் மனிதாபிமானமும் முற் போக்கே, அதிலும் விசேஷமாக நூல் சற்று முந்திய காலத்தில் வெளி வந்திருக்குமென்றால்._
_______________________________________________________________________
வந்தார். அவருடைய கைகளுக்கும் உடம்புக்கும் பற்றாமல் நான் கொஞ்சமாக இருந்தது கூச்சத்தை ஏற்படுத்தியது. என்னைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார். எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறாய்? தன்னந்தனியாக ஆச்சரியம்தான். என்னுடைய சின்ன வயதில் குமாரன் ஆசானைப் பார்க்க இருபது மைல் நடந்து போனதுதான் நினைவுக்கு வருகிறது என்றார். கம்பி மைதானத்திலிருந்து வெளியே வந்து, ஹசன் ராவுத்தர் ஆர்ச்சைச் சுற்றிக்கொண்டு, கே. கே. ரோடு வழியாக என்னை அழைத்துக்கொண்டு போனார். 'வா, போய்ச் சாப்பிடுவோம்’ என்றார். உனக்கு எது பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும் என்றார். எனக்குக் கால் வலியெடுக்க ஆரம்பித்துவிட்டது. பக்கத்தில் சிறு பூங்கா தென்பட்டால் பெஞ்சில் படுத்துக்கொள்ள லாம் என்று நினைத்தேன். ஆனால் பூங்கா வரும் இடமல்ல. மீன் சந்தையிலிருந்து கிளை பிரியும் பாதைகள். காலிக் கூடைகளுடன் மீன்காரிகள் பிருஷ்ட பாகங்களைக் குலுக்கிக்கொண்டு ஒடுகிறார்கள்.

ஜே. ஜேயைப் பார்க்க வேண்டுமே. அதற்கு என்ன வழி: முன்னேற்ற எழுத்தாளர்களுக்கும் அவனுக்கும் கருதது வேற்றுமை முற்றிவிட்டது என்றார்கள். சேர்ந்து குடிக்க, பழைய நண்பர்களைத் தேடிக்கொண்டு அவன் வருவான் என்றும் சொன்னார்கள். ஒரு சமயம் அவன் வராமல் இருந்துவிடலாம். ഖரவில்லை என்றால் இருக்குமிடம் தேடிப்போய்ப் பார்ப்பேன். முக்கியமான விஷயம் ஒன்றும் அவனிடம் சொல்ல இருக்கிறது. மொழிகளைத் தாண்டி, பார்வைகளில்ஒற்றுமை உணர்வுள்ளவர்களை இணைத்து, அகில இந்திய அமைப்பு ஒன்றை உருவாக்க அவன் முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆதர்சம் -சர்வ தேசத் தளத்திற்கு நிகராக இந்தியச் சிந்தனையை உர்த்துவ.து அக்கறை: பிரபஞ்சத்திற்கு உட்பட்ட அனைத்தும். இது சாத்தியம். எல்லோரும் சேர்ந்துகொண்டு திட்டமிட்டு உழைத்தால் சாத்தியம்தான். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் எட்டி பிடித்துவிடலாம். இது போல் எவ்வளவோ கனவுகள். பாதி சொத்தை என்றால் பாதி தேறாதா! ஆனால் நான் தனியன். தலைமைக் குணம் அற்ற தனியன். உடல் வலு இல்லை. மன வலு இல்லை. புத்தி மட்டு அரைகுறை இங்கிலிஷ், யாரும் புறக்கணிக்கும் தோற்றம். ஆனால் ஜே.ஜே நினைத்தால் செய்து விட முடியும். அவன் ஒரு சக்தி ஒரு படிமம் ஒரு குறியீடு.

அது ஒரு வீடு, வீட்டுப் பெண்கள் பரிமாறினார்கள். ‘நடுவில் குழி செய்துகொள்’ என்று சொல்லி, அப்பத்தை அழுத்திக் காட்டினார் திருச்சூர், குழியில் பால் ஊற்றினார்கள். சர்க்கரை போட்டார்கள். அருமையான உணவு. பயப்படாமல் சாப்பிடு' என்றார் அவர்,

ஆனால் உணவின் அருமை உடலின் ஆரோக்கியத்தைச் சார்ந்த தல்லவா? நல்ல உணவையும் ஆகாமல் அடிக்கும் உடலாயிற்றே எனக்கு எனக்கு இந்த உணவு எப்படியோ அப்படித்தான் என் பாஷை பேசும் ஜனங்களுக்குப் பல உணவுகள். உலக அரங்கு பற்றி பிரக்ஞையே சிறிதும் இல்லை அவர்களிடம். கனவுகளற்றவர்களாகி விட்டார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மந்திரத்தோடு சரி. உலகக் கலைஞன் ஒருவன் தன்னை வருத்திக்கொண்டு, நம் தாய் மொழி வந்து சேர்ந்தாலுங் கூட, அவனைக் கூசாமல் புறக்கணித்து விடுவார்கள். என்ன விருந்தோம்பல் மரபு? சோறும் கறியும் பரிமாறுவதுதானா? விந்தனை உலகில் விருந்தோம்பல் என்று ஒன்று கிடையாதா?

திருச்சூர் பேசிக்கொண்டிருந்தார். வெகு உற்சாகமாக அவருடைய இளமைக் கால இலக்கியக் கிறுக்குகள் பற்றியும், அவருடைய பிராபல்யங்கள் பற்றியும். அவருடைய மொழி பேசுபவன் இன்று உலகில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவரை அவனுக்குத் தெரிந்திருக்குமாம். உம்மிணிச் குட்டியை வாழ்வின் ஒரு கட்டத்தில் அவன் நேசித்திருப்பானாம்.

பேச்சின் பிரவாகம் சமதளத்திற்கு வந்தபோது, இடைவெளியில் நான் கேட்டேன்.

‘சார், எனக்கு ஜே. ஜேயைப் பார்க்க வேண்டுமே. பார்க்க வேண்டுமே ?’ திருச்சூர் வியப்புடன் என் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். அந்த வியப்புக்குப் பின்னால் அவருடைய உணர்வுகள் சுருங்குவதை நான் உணர்ந்தேன்.

‘பாலு, உனக்கு அவன் எழுத்தில் ஈடுபாடு உண்டா?’ என்று கேட்டார்.அவர்.

இந்த இடத்தில் நான் சொல்ல வேண்டிய பதில் என்ன ? 'மிகுந்த ஈடுபாடு உண்டு என்றுதானே?’

இதுதான் காந்திஜிக்கும் எனக்குமுள்ள வித்தியாசம். சாக்ரடீஸுக்கும் எனக்குமுள்ள வித்தியாசமும் இதுதான். ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? ஜே. ஜேயை எடுத்துக் கொள்வோம். இது போன்ற சந்தர்ப்பத்தில் உண்மையைச் சொல்வான் என்பது மட்டுமல்ல. உண்மை எதிர்மறையாகக் கருதப்படும் என்றால் அதிக அழுத்தம் கொடுத்தும் சொல்வான். காரத்தில் மிளகாய்ப் பொடியைத் துாவினாலும் துரவுவானே தவிர, இனிப்பை ஒருபோதும் கலக்கமாட்டான்.

கோபாலன் நாயர் மெளனமாகிவிட்டார். அவர் மனத்தில் நிழல் படர ஆரம்பித்து விட்டதா என்ன? இத்தனைக்கும் நான் ஜே. ஜேயை அவ்வப்போது படித்துப்பார்ப்பேன் என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். ஒரு குழந்தை தின்பண் டத்தைப் பார்க்கும்போது, வாய்ப் பேச்சா, கண்கள் சொல்வது (அல்லவா முக்கியம்? என் ஆசை என் அவசரம், என் மயக்கங்கள் எல்லாம் வெளியே கசிந்துவிட்டன.

சரி. நான் ஜே. ஜேயைப் பார்க்க விரும்புகிறேன். அதனால் என்ன? ஒரு வாசகன் அவன் விரும்பும் எழுத்தாளனைப் பார்ப்பதில் தவறு என்ன? குமாரன் ஆசானைப் பார்க்க மைல்கள் நடந்து சென்ற கதையைச் சொல்லி எவ்வளவு நேரமாகிவிட்டது?

பாலு, மனம் திறந்து சொல்கிறேன். ஜே. ஜே. எழுதுவது எனக்குப் புரிவதில்லை என்றார் திருச்சூர். 

ஒரு நிமிட இடைவெளிக்குப் பின் நான் சொன்னேன். 'சார், புரியாத எழுத்தில் இரண்டு விதம் ஒன்று அசிரத்தை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று ஆர்வம் ஏற்படுத்தக்கூடியது. ஜே.ஜே இரண்டாவது வகையைச் சார்ந்தவன் என்பது என் அபிப்பிராயம்.' - 

உதட்டோரம் புன்னகை நெளிய, பிரியத்துடன் அவர் என்னைக் கூர்ந்து பார்த்தார். இவனிடம் சரக்கு இருக்கிறது! 

ஜே. ஜேயின் எழுத்து முதல் வகையைச் சார்ந்தது என்பது என்னுடைய அனுபவம் என்றார் அவர். 

திருச்சூரின் குரலில் போலி அழுத்தத்தை நான் உணர்ந்தேன். எடுத்த முடிவை நிலைநிறுத்தவே அவர் விரும்புகிறார். என்னுடைய கருத்தால் அவருடைய முடிவு பாதிக்கப்பட வில்லையாம். 

என் சரித்திர நாவல்களைப்பற்றி ஜே. ஜே. சொல்லியிருப்பது உனக்குத் தெரியுமா? என்று கேட்டார் அவர். 

எனக்கு மங்கலாக நினைவுக்கு வந்தது. வார்த்தைகள் நினை வில்லை. ஆனால் அந்தக் குறிப்பில், கற்பனைக் காட்டில் வேட்டியைக் கிழித்துக்கொண்டு அங்குமிங்கும் பாயும் பைத்தியங் களின் முதுகில் ஐந்தாறு சாத்து சாத்தியிருந்தான் ஜே. ஜே. 

ஜே. ஜேயின் விமர்சனம், குறிப்பாக அதில் ஒரு வாக்கியம், திருச்சூரைப் புண்படுத்தியிருந்தது. எவ்வளவோ நாட்களாகி விட்டன. புண்வாயில் இன்னும் பொருக்காடவில்லை. நாகரிகம் பருதி கோபத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு, வலது கையை பகாத்தில் அசைத்து, மந்திர உச்சாடனம் போல் திருச்சூர் கூறினார். அந்த வாக்கியம் அவருக்கு மனப்பாடம்.

சொல்லங்கோட்டு இளவரசி உம்மிணிக்குட்டியை அவளைத் பத்திய அரசர்களிடமிருந்தும், முடிவில் அவளைக் காப்பாற்றிய இளவரசனிடமிருந்தும் விடுவித்து, திருச்சூர் கோபாலன் ாயருக்கே மணம் முடித்து வைக்க என்னால் முடியுமென்றால், சரித்திர நாவல் எழுதும் அவஸ்தையிலிருந்து அவருக்கு நிரந்தர விமோசனம் கிடைக்கும். ஆனால் கடவுளே, எனக்கு அந்த சக்தி இல்லையே!

ரத்தம் சுண்டும் முகத்துடன் என்னைக் கூர்ந்து பார்த்துக் ாண்டிருந்தார் திருச்சூர் நான் இப்போது என் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு வாயைக் கட்டிவிட்டது. ான்னதான் வெண்ணெய் போட்டுச் சொன்னாலும் அந்தரங்கம் வெளிப்பட்டு உறுத்திவிடும். எனக்கு அவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இறுக்கமான நிமிஷங்கள். திருச்சூருக்கே பிடிக்கவில்லை போலும், சூழ்நிலையைத் தளர்த்த, புன்னகை யுடன் ஆரம்பித்தார்.

இப்படி ஒரு மடையன் என் புத்தகத்தைப் பற்றி எழுதியிருக்கான் என்று என் மனைவியிடம் படித்துக்காட்டியபோது, அவளும் ஜே. ஜே யுடன் சேர்ந்துகொண்டு, வயது காலத்தில் பங்களுக்கு என்ன துர்ப்புத்தி என்று சண்டைக்கு வந்துவிட்டாள்.

திருச்சூர் கடகடவென்று சிரித்தார். அந்தச் சிரிப்பில் பளிச் சென்று எனக்கு ஒரு விஷயம் தெரிந்தது. ஜே. ஜேயிடம் நான் நினைத்தபடி அவருக்குக் கோபம் இல்லை. அவனிடம் அவருக்கு ள்ளுர மதிப்புதான். அவன் சொல்வதுதான் சரியாக இருக் கும் என்ற எண்ணம்தான். வருத்தம், தன் எழுத்து அவன் ற்றுக்கொள்ளும்படி இல்லையே என்பதில்தான்.

பாவம் திருச்சூர்! கற்பனைக் குதிரைகள் மண்டிக் கிடக்கும் பாயம் அவருடையது. ஏதோ சிலவற்றை அவிழ்த்துவிடுகிறார். அவை விண்ணென்று மேலே போய், மேகக் கூட்டங்களிடையே பாண்டு உடல் வலியைப் போக்கிக்கொண்டு, சூரியனைப் பின்னங்காலால் உதைத்துத் தள்ளி, கிரகங்களை முட்டிக் குப்புறச் சாய்த்து, சில நட்சத்திரங்களையும் விழுங்கிவிட்டு, சந்திரனின் ஒரு துண்டை வாயில் கவ்விக்கொண்டு திரும்பி வந்துசேருகின்றன. -

உடனே சிரிக்க ஆரம்பித்துவிடுகிறான், ஜே. ஜே.

'பாலு, உண்மை உண்மை என்று ஜே. ஜே. கத்துகிறானே, எது உண்மை? இலக்கியமே கற்பனை. அதில் உண்மையைத் தேடினால் எனக்கு ஒன்றும் புரியவில்லை' என்றார். நல்ல கேள்விதான். நண்பர்களும் என்னிடம் கேட்டுவிட்டு முகத்தைப் பெருமையாக வைத்துக்கொள்ளும் கேள்வி. ரயில் கால அட்டவணை இலக்கியமா? என்று கேட்பார்கள். இல்லை' என்றால், உண்மையின் கொண்டையில் சூட்ட வேண்டிய பூ எது? என்று கேட்பார்கள். 

திருச்சூர் பேச ஆரம்பித்தார். 

இலக்கியப் போக்கையே தலைகீழாக மாற்றிவிட்டார்களே இங்கு. மூன்று வேளை சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போது இலக்கியத்தில் நாம் ஒரு வார்த்தை பேசக்கூடாது. செம்மான், தோட்டி, வெட்டியான், நாவிதன், வேசி, பிச்சைக்காரன், கோடாலிக்காரன், கசாப்புக் கடைக்காரன், மீன்காரி, பூட்ஸ் துடைக்கும் சிறுவர்கள், கூட்டிக் கொடுக்கும் தரகர்கள் யார் வேண்டும் என்றாலும் வரலாம். இலை போட்டுச் சாப்பிடுகிறவன் வரக்கூடாது. என்னுடைய நாவல்களிலோ இடறி விழுந்தால் அரண்மனைகளும், அந்தப்புரங்களும், கோட்டை கொத்தளங் களும்தாம். சப்பரமஞ்சக் கட்டிலில் இளவரசிகள் படுத்துறங்க, சேடிகள் விலாமிச்சை விசிறிகளால் வீசுகிறார்கள். குதிரைகள் பறக்கின்றன. அரசவையில் ராஜரிஷி பேசுகிறார். எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள் ஆனால் எனக்கு இவர்களைப் பற்றிக் கவலையில்லை. சமஸ்கிருதக் கல்லூரி முதல்வர் ஈசுவரன் நம்பூதிரியே என்னைப் பாராட்டி எழுதியிருக்கிறார். அவரை விடவும் படித்தவனோ இந்த ஜே. ஜே? உம்மிணி என்று பெயர்
வைப்பதற்காகவே முதல் குழந்தை பெண்ணாய்ப் பிறக்க" வேண்டும் என்று பள்ளி ஆசிரியைகள் துடிக்கிறார்கள். எவ்வளவோ எழுதிவிட்டேன். புதிதாக இன்னும் ஒன்று எழுதித் தா என்று அரிக்கிறான் என் வெளியீட்டாளன். பாலு, நான் சரித்திரத்துக்கு எங்கே போவேன்? என் நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததும், பட்சி சாஸ்திரம்', 'பெண்களை வசீகரிப்பது எப்படி', 'படுக்கை அறை ரகசியங்கள்', 'வாகட விளக்கம், எண்பது வயதுக்குப் பின் இளமை என்று எழுதிக் கொண்டிருந்த பயல்கள் எல்லாம் சரித்திரத்தின் மேல் ஏறி விழுந்து பிச்சுப் பறக்கவிட ஆரம்பித்துவிட்டார்கள். பாலு, உனக்குத் தெரியும். எங்களுக்குக் கொஞ்சம் போல்தான் சரித்திரம் இருக்கிறது. உங்களுக்கு என்றால் முக்குளித்து விளையாடலாம். இடிந்துபோன கோட்டை கொத்தளங்கள், பழுதடைந்த அரண்மனைகள், மண் முடிவிட்ட சுரங்கப் பாதைகள், சாய்ந்த கோபுரங்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதி விட்டோம். பாலு, கோட்டாற்றில் ஒரு சண்டை நடந்ததாமே, எனக்கு அது பற்றி ஏதாவது விவரம் தெரியுமா? ஒரு பழைய பாடல், பழைய பாடலின் வாய்ப்பான ஒரு வரி, கிடைத்தால் பாதும். அதை ஒரு பிடி பிடித்தேன் என்றால் தொள்ளாயிரம் பக்கத்துக்கு எழுதிவிடுவேன். ஜே. ஜேயும் அவனுடைய வானர சேனைகளும் புலம்பிக்கொண்டு கிடக்கட்டும். எனக்கு என் வாசகர்கள்தான் முக்கியம். இலக்கிய தர்மத்தை ஒருநாளும் நான் கைவிட மாட்டேன். 

இந்த வயதிலும் என்ன ஆவேசம் திருச்சூருக்கு !

எந்த வகையில் திருச்சூருக்கு உதவ முடியும் என்று நான் யோசிக்க ஆரம்பித்தேன். கோட்டாறு என் வீட்டுக்கு ஒரு மைல் துரத்தில்தான் இருக்கிறது. எனக்கு நன்றாகத் தெரிந்த W ம் ஆனால் அங்கு சண்டை நடந்ததாமே ! எனக்குத் தெரியாது. சத்தியமாகத் தெரியாது. இப்போது அங்கு கமிஷன் மண்டிகள், மிளகாய் வத்தல் நெடி அடிக்கும். பாதசாரிகளைப் பறிச் சிறிதும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் லாரிகளும் அவிழ்த்துப்போட்ட வண்டிகளுமாக இருக்கும். மணிகண்டப் பணிக்கர் கடைக்கு அடுத்த சந்துதான் சிறுநீர் கழிக்க வசதி ானது. அது போல் ஏற்ற இடம் அந்தப் பிராந்தியத்தில் படையாது. விதவிதமான ஆண்குறிகளைப் பார்த்து அலுத்துப் போன குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடிக்கொண் ாருக்கும். வ. பகவதிப்பெருமாள் கடையில் புடைத்த, துரசி ாம்பு அகற்றிய மளிகை கிடைக்கும். நிறுவை சரியாக இருக்கும். தைாலைபேசி எண் 94. கு. பப்புத் தர்கனார் கடையில் சுத்த ான தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணெயும் கிடைக்கும். தொலைபேசி எண் 118,

சண்டை நடந்ததாமே கோட்டாற்றில் எனக்குத் தெரியாது.

புகழ் பெற்ற தமிழ்ச் சரித்திரத் தொடர்கதை ஆசிரியர் உக்கிரப் பருவழுதியிடம் கேட்டால், கோட்டாற்றில் என்ன, தமிழ் மண்ணில் நடந்த சண்டைகள் பூராவையும் பிட்டுப்பிட்டு வப்பார். ஆனால் அவர் திருச்சூரிடம் சொல்வாரா என்ன? முன்னுடைய நாற்றங்கால்களை அடுத்தவனுக்குப் பட்டா வய்து கொடுக்கப் பைத்தியமா பிடித்திருக்கிறது உக்கிரப் பருவழுதிக்கு ஆசையைப் பார் திருச்சூருக்கு !

மாட்டுப் பந்தலுக்கு வெளியே தற்காலிகமாகப் போட்டிருந்த லைக்கூரையும் பனந்தட்டித் தடுப்புகளும் கொண்ட புத்தகக்கடைக்குப் போய்ச் சேர்ந்தோம் உள்ளேயும் வெளியேயும் பல எழுத்தாளர்கள். ஒரு இளம் எழுத்தாளனிடம் திருச்சூர் விசாரித்த போது, ஜே. ஜே. உள்ளே இருப்பதாகச் சொன்னான். வாசலைப் பாதி அடைத்துக்கொண்டிருந்த நாற்காலியில், பிறவம் கோவிந்த குறுப் பீடி குடித்துக்கொண்டிருந்தார். ஒரு சிறுவன் மேஜையின்மீது புத்தகங்களைப் பரப்பிக்கொண்டி
ருந்தான்.

இடது கையில் ஒரு படத்தைத் துக்கிப் பிடித்தபடி வலது கையை அசைத்து ஜே. ஜே. பேசிக்கொண்டிருந்தான். திடகாத் திரமான சரீரம். ஒரு காலத்தில் அவன் புகழ் பெற்ற கால் பந்தாட்டக்காரன் அல்லவா? போட்டியில் கலந்துகொள்ள இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறான். வங்காளத்தை முதல் முதலாகத் திருவிதாங்கூர் தோற்கடித்துச் சரித்திரத்தை உருவாக் கிய போட்டியில், அவன் மத்தியில் முன்னேறுகிறவனாக விளையாடினான். அன்றைய அவனுடைய விளையாட்டை இன்றும் நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விளை யாட்டு வீரனின் உடல்வாகு தெரிந்தது. உடற்பயிற்சியை அவன் முற்றாக இப்போது விட்டுவிட்டதும் தெரிந்தது. அவனுடைய ஈடுபாடுகளும் பழக்கவழக்கங்களும் எவ்வளவோ மாறிப்போயி ருந்தன. உடம்பு ஸ்துலித்துக்கொண்டிருந்தது. எப்போதும் தூங்கியெழுந்தவன் போல் முகத்தில் உப்பல். வயதுக்கு மீறிய முன்வழுக்கை. மேலும் ஒரு பிடி இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி உயரத்தில் ஒரு அமுங்கல்.

இளைஞர்களுடைய கவனம் ஜே. ஜேயின் பேச்சில் கவிந்து கொண்டிருந்தது. மற்றொரு மூலையில் ஏறுக்கு மாறாகக் கிடந்த பெஞ்சில் அமர்ந்து சேர்த்தலை கிருஷ்ண அய்யரும்*, முன்ஷி
___________________________________________________________________
* சேர்த்தலை கிருஷ்ண அய்யர்: பாலாம்படம் முக்குக்கு ஜே.ஜே. குடிமாறி வந்தபோது அண்டை வீட்டுக்காரர். சமஸ்கிருதம், மலையாளம், தமிழ் முன்றிலும் பெரும் புலவர். மகாகவி உள்ளுர் பரமேஸ்வர அய்யரைப் பின்பற்றி, பண்டைக் காலத்தின் செழுமையையும் மலையாள ஸ்திரிகளின் ருப செளந்தரியத்தையும், கற்பொழுக்கத்தையும் போற்றிக் குறுங்காவியங்களைப் பாடியவர். (மலையாளத் தில் சேர்த்தலை பாடியுள்ள குறுங்காவியங்களை, மலையாளம் தெரியாதவன் படிக்கலாம். சமஸ்கிருதம் தெரியாதவன் படிக்க முடியாது -ஜே. ஜே. கூற்று.) தமிழிலிருந்து நெடுநெல்வாடையையும், சிலம்பிலிருந்து புகார்க் காண்டத்தை யும் காகிளி விருத்தத்தில் மலையாளத்தில் பாடியவர். தாசில் உத்தியோகம் பார்த்தவர். தனிப்பாடல்களில் விக்டோரியா மகாராணி, லின்லித்கோ பிரபு, மகாத்மா காந்தி, முலம் திருநாள் மகாராஜா, ராஜாஜி, சர். சி.பி. ராமஸ்வாமி அய்யர், தளவாய் கேசவன் தம்பி ஆகியோரைப் போற்றிப் பாடியுள்ளார். முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை பதவியேற்ற மூன்றாம் நாள், விளாடிமர் இலிச்உலியனோவ் லெனினைப் போற்றிப் பாடிவிட்டு, லெனினைப் போற்றிப் பாடிய மூன்றாம் நாள் அமைதியாக உயிர் துறந்தார்.
________________________________________________________

வேலுப் பிள்ளையும் பேசிக்கொண்டிருந்தார்கள். தங்களுடையபேச்சில் ல் ஆழ்ந்து உலகத்தையே மறந்துபோயிருந்தார்கள். சேர்த்தலை கிருஷ்ண அய்யரின் குடுமி முடியப்படாமல் காற்றில் பறந்துகொண்டிருந்தது. பேச்சு சுவாரசியத்தில் சுய ஞாபகமற்றுப் போய்விட்டார் என்று நினைத்தேன். பின்னர் தான் தெரிந்தது, குடுமியை எப்போதுமே காற்றின் விளையாட்டுக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பார் என்பது.

 தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள் இருவரும். விஷயம் இதுதான் முன்ஷி வேலுப் பிள்ளை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பத்மனாபபுரம் அரண்மனையில் ஒரு எண்ணெய் சாய ஓவியத்தைப் பார்த்தார். அதில் ஒரு ஸ்திரீ காதில் பாம்படம் அணிந்துகொண்டிருக்கிறாள். அந்த ஸ்திரீயின் முகத்தை முடிந்த மட்டும் கூர்ந்து கவனித்தார் முன்ஷி. நாயர் ஸ்திரீ போலவே பட்டது. அதோடு மகாராஜாவின் பின்னால், வெகு அருகில் நின்றுகொண்டிருக்கிறாள். அப்படியானால் நமது பெண்கள் பாம்படம் அணிந்துகொண்டிருந்தர்களா? இந்தக் கேள்வி அவர் மனத்தை அரிக்க ஆரம்பித்தது. இந்த அரிப்பில் மூன்று வருடங்களாக அவர் பட்டிருக்கும் அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல. மாநாட்டுப் பந்தலில் சேர்த்தலை கிருஷ்ண அய்யரைக் கண்டதும் அத்தி பூத்தது என்று கத்திக்கொண்டே முன்ஷி ஓடிவந்து அய்யரை அனைத்துக்கொண்டார். இருவரும் பால்ய கால சிநேகிதர்கள். குசலம் விசாரித்து முடிந்ததும், தனது ஐயத்தை முன்வைத்தார் முன்வி. பால்பாயாசம் அல்லவா சேர்த்தலைக்கு? அவர் உடனடியாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு ஒரு தாவு தாவி, அந்தக் காலத்திலிருந்து பெண்களின் காதணிகள் எப்படி உருமாறிவந்திருக்கின்றன என்பதைச் சொல்ல ஆரம்பித்தார். படத்தை தூக்கிக் காட்டியபடி ஜே. ஜே. பேசிக்கொண்டிருந்தான். மலையாள எழுத்துகள் மாதிரி திமிர் பிடித்த எழுத்துகளை எங்கும் பார்க்க முடியாது. இதோ, இந்த 'ழ' என்ற எழுத்தைச் சரிக்கட்டுவதற்குள் என் உயிரே போய்விட்டது. முதுகில் மாறி மாறி அடித்த பின்புதான் அதற்குக் கொஞ்சம் பவ்வியம் வந்திருக்கிறது என்று ஜே. ஜே. சொல்லவும் இளைஞர்கள் சிரித்தார்கள்.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரையிலும் படித்திருந்த பிறவம் கோவிந்த குறுப்தான் மலையாளத்தில் தலைசிறந்த சிறுகதை ஆசிரியர் என ஜே.ஜே கட்டுரை மூலமும் - அதிகம் நேர்ப்பேச்சு மூலமும் - சொல்லிக்கொண்டுவந்து, அவனுடைய அபிப்பிராயம் செல்வாக்கும் பெற்றுவந்தது. வெளிவரவிருந்த குறுப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் முகப்பு அட்டை ஜே. ஜே கையில் இருந்தது. ஜே. ஜேயின் வின்னியாசமான பேச்சை, தனது விஷமியான பேரனின் சவடாலை ரசிப்பது போன்ற முகபாவத்துடன், உதட்டோரங்களில் அமுக்கப் பட்ட புன்னகை வழிய, பிறவம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தச் சமயத்தில் தான் நான் அறிமுகம் செய்யப்பட்டேன்.

ஜே. ஜே. என்னைப் பார்த்தான். நான் அணிந்துகொண்டிருந்த கறுப்புக் கண்ணாடி வழியாக என் கண்களைப் பார்த்தான். நான் நின்று கொண்டிருந்த நிலையில் உடலில் ஒரு கோணல் இருப்பது மாதிரி பட்டது. அதைச் சரிசெய்ய முயன்றேன். முடியவில்லை. திடீரென்று அவன் சத்தம் போட்டுப் பரிகாச மாகச் சிரித்தபடியே, சிவகாமி அம்மாள் அவளுடைய சபதத்தை நிறைவேற்றிவிட்டாளா? என்று கேட்டான். இந்தக் கேள்வியின் உட்பொருள் விளங்க எனக்குச் சற்று நேரம் பிடித்தது. தமிழின் கட்டற்ற கற்பனைப் பண்புகளையும் காதல் கதைகளையும் எண்ணிய சிரிக்கிறான் இப்படி?

 நான் ஆண்மையற்ற மெல்லிய குரலில் ஜே. ஜேயைப் பார்த்துப் பேச ஆரம்பித்தேன்.

 புதுமைப்பித்தன் என்றொருவர் எங்கள் பாஷையில் எழுதி யிருக்கிறார். நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? 

ஜே. ஜே. தலையைக் குனித்து கவனிக்க ஆரம்பித்தான். ஆனால் அதற்குள் அவனுடைய ஆராதகர்கள் அவன் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள். மாநாட்டுப் பந்தலின் வாசலில் முல்லைக்கல் மாதவன் நாயர் வந்திருக்கிறானாம்! 

அந்த ராஸ்கலை இங்கே வரச்சொல்லு' என்று கத்தினான் ஜே. ஜே.

முல்லைக்கல்லும் ஜே. ஜேயும் உயிர் நண்பர்கள். முல்லைக்கல் மாதவன் நாயர், விசிறிகளின் பெரும் பட்டாளம் புடைசூழ உள்ளே வரவும், நாங்கள் சிலபேர் அவசியம் வெளியேற வேண்டும் 
என்றாகிவிட்டது. 

தவறான நிமிஷத்தில் நான் ஜே. ஜேயின் முன் போய்விட்டதாக என்னைத் தேற்றிக்கொண்டேன். ஜே. ஜேக்கும் எனக்கும் நிகழும் முதல் சந்திப்பு இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் தவறாமல் குறிப்பிடும் சம்பவமாக இருக்கும் என்று நான் நினைத்திருந்தேன்.

2.

1951இல் முன்னேற்ற எழுத்தாளர் மாநாட்டில் நான் ஜே.ஜேயைச் சந்தித்த பின் அவன் ஒன்பது வருடங்கள் உயிரோடிருந்தான். இந்நாட்களை அவனு டைய கிரியா சக்தியின் பொற்காலம் என்று விமர்சகர் கள் சொல்கிறார்கள். முடிவு நெருங்கிக் கொண்டிருக் கிறது என்ற உள்ளுணர்வு அவனுக்கு இருந்ததாகவும் அதிலிருந்து பெரும் ஆவேசமும் அவசரமும் பெற்றான் என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். 'மரணத்தின் குகைவாயில் மனக் கண்ணுக்குத் தெரியும்போது, எழுத்தில் ஒளி ஊடுருவுகிறது என்று ஜே.ஜே. நாட்குறிப்பில் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. 'மரணம்தான் தான் உன்னதங்களுக்கும் காரணம்' என்றும், சத்தியத்தின் வாளை விதி மரணத்தைக் கொல்ல முயல்கிறான் கலைஞன் என்றும் சொல்லியிருக்கிறான் அவன்.

சோதனையான காலங்கள் இவை ஜே. ஜேக்கு வாழ்வைச் சீர்குலைக்கும் சோதனைகள். இக்காலங்களில் பல நண்பர் களுடைய உறவுகள் அவனுக்கு முறிந்துபோயின. குடும் பத்தில் சிக்கல். குழந்தைகளின் கனவுகளை, எளிய தனவுகளைக்கூட, நிறைவேற்ற முடியாமற்போனபோது, பெரும் வருத்தங்களுக்கு அவன் ஆளானான். ஆரோக்கிய மும பழுதடைந்துகொண்டுவந்தது. தரித்திரம், அதன் கோர பல்லைக் காட்டியபடி முன்கட்டிலிருந்து பின் தட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. யாருட னும் பகிர்ந்து கொள்ள முடியாத சில இன்னல்களையும், வெளியே சொல்ல முடியாத சில அவமானங்களையும் அவன்......