தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Sunday, April 24, 2016

புதுவகை எழுத்தின் உரையாடல் - கெளதம சித்தார்த்தன்

மெய்ப்பு பார்க்க இயலவில்லை
உன்னதம் - ஜனவரி 1996
www.padippakam.com
கட்டுரை -
புதுவகை எழுத்தின் உரையாடல்
கெளதம சித்தார்த்தன்



சித்தார்த்தன். கெளதம சித்தார்த்தன் என்றழைக்கப்படுகிற மற்றவனின் கையெழுத்தில் சுழலும் புதிரிலிருந்து புதுவகை எழுத்து (New writing) பற்றிய பிரக்ஞையுடன் விவாதத்தின் முடிச்சு இறுகுகிறது. அதன் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் இது. சுழலும் பல்வேறு தோற்றப்பாதைகளின்இணைவு முழுமையை நோக்கி அழைத்துப் போகக் கூடும் புது வகை எழுத்தில்.

கேள்வி: புதுவகை எழுத்து என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையே உள்ள இடைவெளியை புதிர் வெளியாக்குவது தான் புதுவகை எழுத்தின் சவால், மொழியின் சவால்களை எதிர்கொள்ளும் எழுத்தின் தீராத பக்கங்களில் திறந்து கொள்ளும் புதை குழிகள் வாசகனின் கண்களில் கட்டை விரலுயர்த்தும்போது சேற்றின் கழற்சியில் சிருஷ்டியின் தரிசனம் விரிகிறது அற்புதமாய். கதைக்குள் கதைக்குள் கதையாய் ஆயிரத்தொரு இரவுகளில் மாயக் கம்பளத்தில் விரியும் ஜால எதார்த்தம், வார்த்தைக்குள் வார்த்தைக்குள்வார்த்தையாய் சுழலும் புது வகை எழுத்தில் வினோத வடிவம் கொள்கிறது. பிரதியில் இடறிவிழுபவனை பிரதிக்கு அப்பாலும் சுழட்டி வீசியெறிவதுதான் புதுவகை எழுத்து. தென்னங்கீற்றுகளில் மின்னுகிற நிலா வெளிச்சம் 30 வெள்ளிக் காசுகளைப் போல மின்னியது என்கிற மாய கோவ்ஸ்கியின் வார்த்தைகளில் வெட்டப்பட்டிருக்கிறது ஒரு பெரிய புதைகுழி, துரோகம், பேராசை, பின் அழிவு 30 வெள்ளிக் காசுகளைப் பெற்றுக் கொண்டு ஏசுவைக்காட்டிக்கொடுத்த யூதாஸ் என்னும் தொன்மம் என்று வார்த்தைக்குள் வார்த்தைக்குள் வார்த்தையாய் பயணம் போக வேண்டும். மார்க்வெஸ்,"அன்றைக்கு 13ந்தேதி” என்றால் 13 என்ற எண்ணின் நியூமராலஜியிலிருந்து டேரட்கார்டுவரையோக வேண்டுமென்கிறான். இடையில் ஒரு குறுக்கு வெட்டு வார்த்தைக்குள் வார்த்தைக்குள் லேபிரிந்த் வலிந்து திணிக்கும் போது கதை முழுக்க புதைகுழிகள் கபந்த வாயாய் திறவுபட்டு கடைசியில் புதை சேறு தான் மிஞ்சக் கூடும். கதையுடனான ஒட்டத்தில் வார்த்தைகள் குறிப்பிட்ட விசைகளில் பட்டுத்தெறிக்கும்போது புதிர்க்கதவின்மொழி விலகி பிலத்துவாரத்துக்குள் விழ வேண்டும்.

கேள்வி: இது போன்ற புதிர் மொழி கவிதைக்குச் சரி, கதையில் உபயோகிக்கப்படும் போது கதைத் தன்மை மறைந்து போகுமே...

பதில்: கதைக்கு சம்பந்தமில்லாத புதிர் முடிச்சை இறுக்கும் போதும், வெட்டப்படும் புதை குழிகளின் சுழல்கை அதீதப்படும் போதும் நிகழலாம். சொல்லப்படும் கதைமையின் பரிமாணங்களுக்கேற்ற புதிர் மொழியமைவு நிகழ்த்தப்படும் போது கதைக்குள் பல தளங்கள் நகர்த்தப்படுகின்றன. “கார்டெனியாப்பூக்களின் வாசனை ஒரு பெரியவெள்ளமாக மாறி அவனை அடித்துச் சுழற்றுகையில் வெகு ஆழத்தில் புதைந்திருந்த வெட்டுப்பட்ட குதிரைக் காதுகளில் பளிட்டது இளஞ்சிவப்பு நகப்பிறை' என்கிற புதிர் வாக்கியத்தில் கார்டெனியாப் பூக்களின் வாசனை (அன்னிய மொழி சார்ந்ததாயிருப்பதால் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடியவில்லை) என்றால் என்ன, அது எதற்காக என்று தெரியாததால் அந்த இடத்திலேயே செத்து விழுகிறது  வாக்கியம், அதை சற்றே மாற்றி ஆவாரம் பூ வாசனை’ எனும்போது எளிதில் நுழைய முடியும் ஆவாரம்பூ ஆண் பெண் பரஸ்பரம் தங்கள் அன்பைத் தெரிவிக்க வீகம் ஒரு பூ அந்த வாசனை அண்ணுக்குள் கழற்றும் போது அவனது பால் பருவத்து அற்புதம், அய்யனார் கோவில் குதிரைச் சிலைகளில் ஆரோகணித்த வினோதப் பயணம், என்ற தருவேறிய சூரியனின் நிழல் அசையும், இளஞ்சிவப்பு நகப்பிறை என்றதும் நகப்பிறையை வைத்து சிற்பம் செதுக்கும் சிற்ப சாஸ்திரம் விரிபட அவனது இளம்பிராயத்துத் தோழியின்உடல்மொழியும் காலத்தின்லாவண்யமும் கழன்றோடும்.

கேள்வி:தொன்மங்களின்புதிர்மொழியே புதுவகைஎழுத்தை நிர்மாணிக்கிறதா?

 பதில்: உடனடியாக ஆம் என்று சொல்வதற்கில்லை. தொன்மங்களின் புதிர் முடிச்சில் புதுவகை எழுத்து இறுகித் தெறிக்கிறது. கதைக்கும் தொன்மங்களுக்குமான இணைவு -கதைவரிகளினூடேதொன்மங்களின்படிமம் வரும் போதும்,தொன்மத்தின் ஒரு பகுதி கதையாக மாறும் போதும் நிகழும் ஜாலத்தன்மையில் புதுவகை எழுத்தின் எல்லைகள் விரிகின்றன. எழுத்தில் அனுமானிக்க முடியாத சாத்தியங்களை நிரப்பும் மார்க்வெஸுக்குள் மூதாதைகளின்தொன்மங்கள் கழல்கின்றன. மேற்கில் உள்ள ஜால எதார்த்தத்தைப் பார்த்து நொட்டைவிட்டுக் கொண்டிருக்கிற நாம் நம்முடைய புராணிக தொன்மங்களைப் பார்க்கத் தவறுகிறோமா? புதுமைப்பித்தனின் ஜால எதார்த்தத்தில் விரியும் தொன்யம் நம் செழுமையான மரபில் சுறான்றி எழுவதைக் கவனிக்கலாம். இந்த மண்ணின்ரத்தமும் அதையுமான ஜால எதார்த்தத்தின் எல்லைகளற்ற தன்மையை நம் கையெழுத்தாது மாற்றும் போது உலகின் கவனிப்பு மிகுந்த கதை சொல்விகளாக மாறுவோம். சூரபத்மன் தனது நூற்றியொரு சிரங்களையும் ஒவ்வொன்றாக வெட்டி எரியும் யாக குண்டத்தில் ஆஹுதியாக்கினான் என்கிற தொன்மம், நெறிதவறிய பெண்கள் அந்தக் கிணற்றில் நீர் மொள்ள குடத்தைக் கீழே இறக்க இறக்க நீர் கீழே கீழே போய்க் கொண்டேயிருக்கும் என்கிற ஜால எதார்த்தம் என்று நமது வேர்களில் கிளைத்தெழும் அற்புத சிருஷ்டிகளை மறந்து, அந்நியமான, படிமத்தன்மை தெரியாத விஷயங்களை வினோதப் படுத்தும் போது புதிர்மொழியின் வீரியமிழுந்து போகிறது. அதே சமயம் உலகம் முழுவதும் முழுப்பரிமாணமும் புரிந்த) தெரிந்த ஒரு படிமத்தை உபயோகிப்பதில் தவறில்லை. உபயோகிக்கும் விதத்தில் தவறில்லாமல் இருக்க வேண்டும். "தோல்விக்கு அப்பாற்பட்டவன் நீ அக்கிலளின் குதிகால் உனக்கில்லை” என்று டி.எஸ்.எலியட்சொல்லும்போது அவனுடைய மண்ணின் வெதுவெதுப்பு அது. யாராலும் தோற்கடிக்கப்பட முடியாதவனாய் இருக்கும் பொருட்டு ஸ்டைக்ஸ் நதியில் அக்கிலனை அவனது அம்மா முக்கி எடுக்கிறாள். ஆனால் அவள் பற்றியிருந்த குதிகாலில் நீர் படாததால் அது பலவீனமடைகிறது. பின்னாளில் குதிகாலில் அம்பு பாய்ந்து செத்துப் போகிறான். இந்த முழு வரலாறும் தெரியாத நாம் அக்கிலவின் குதிகால் என்ற படிமத்தை எதிர் கொள்ளாமல் தாண்டிப் போகும் போது வாக்கியம் இறந்துபோய்விடுகிறது. கூடவே வார்த்தையும் வார்த்தைகளின் கூட்டமான கதையும். நம்முடைய தொன்மத்தின் வேர்கள் அக்கிலஸின் குதிகாலில் இல்லை; துரியோதனின் தொடையில் இருக்கிறது. -

 கேள்வி: சொற்கள் சிதைகின்றன, மொழி சிதைகிறது, துர்க்கணாங் குருவிகள் சொற்களைத் தூக்கிக் கொண்டு பனைமர வரிசைகளுக்குச் செல்லுகின்றன; கதையின் உருவம் உள்ளடக்கம் சிதைகிறது. கதையின் வடிவமும் (Narration) சிதைய வேண்டியதன் அவசியம் என்ன?

பதில்: கதையின் கோடுகளும் வண்ணங்களும் சிதைந்து எழுத்தின் வாக்கியங்களில் இணையும்போதுகோடுகள் மற்றும் வண்ணங்களாலான மொழி விரிகிறது. கதையின் பத்திகளைக்கலைத்துப்போடுவதும் நேர்கோட்டினை இல்லாமலாக்குவதும் புதுவகை எழுத்தின் ஒற்றைப் பரிமாணமே. கதைக்கேற்ற வடிவங்களைக் கட்டமைக்கலாம், ஆனால் எல்லாக் கதைகளுக்குமே வடிவ மாறுதல்களில் ஈடுபடும் போது இனம் புரியாத இழப்பு கதைகளைக் கவ்வும். சயன்ஸ் ஃபிக்ஸன் எழுத்தாளர் பல்லார்ட் (BALLARD) கதைப் பத்திகளைக் கலைத்துப் போடுவது சீட்டு ஆட்டம் பற்றிய கதையில் தான். கதையின் உலகமே கதையின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது.

என்னுடைய பலிபீடம் கதையை முதலில் முற்றுப்புள்ளி இடாமல், பத்தி பிரிக்காமல் தான் எழுதினேன். காரணம், ஒரு கல்லில் சிற்பம் வடிக்கின்ற கலையின் வடிவம் கதையின் வடிவமாக மாற வேண்டுமென நினைத்தேன் கல்

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தாம்() சதுரமாக நீளும் வார்த்தை வரிகள் 国

அதற்குள் ஒளிந்திருக்கும் கதை 臣

EE கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பத்தை சிற்பி செதுக்கியெடுப்பது போல்,வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் கதையை வாசகர் பகுத்துணர வேண்டும் என்கிற ரீதியில்-அபத்தமாகயோசித்துக் கிடந்தபோது திரைப்படத்தின் Dissolveஉத்தி ஒன்று மறைந்து மற்றொன்று தோன்றுவது இதற்குப் பொருந்திவருமெனத் தோன்றியதும் பரபரப்புடன்மாற்றியெழுத ஆரம்பித்தேன். முற்றிலும் சுயமான புதுவகை உத்தியாக புதுவகை எழுத்தின் மற்றொரு பரிமாணமாக கழன்றது பிரதி. சுழற்சியாலான முளைக்காம்பினை உறிஞ்சிக் கொண்டிருக்கும் செக்கு மாட்டு எழுத்துக்களின் பல்வேறு பரிமானங்களில் முற்றுப் புள்ளியை நோக்கி நீளும் துரதாரமான வாக்கியங்களில் புதிர்வகை எழுத்தின் குரல்வளை நெரிபடுகின்ற அவலம் தற்போது இடைவெட்டாய் செகாவ் கதையில் ஒரு வார்த்தையைச் சேர்ப்பதாலும், எடுப்பதாலும் கதையின் போக்கே அடியோடு உருக்குலைய வேண்டும்' ஒரு நீளமான வாக்கியத்தை எழுதுவது புது வகை பாணி என்றுதப்பர்த்தம் எடுத்துக் கொண்ட தமிழ்ப் படைப்பாளிகளின் அவலம். வார்த்தைகளைத் தேற வேண்டும். சீவிச்சீவிச் செய்யும் வார்த்தையணு வெடிக்கும் போது உருவாகும் பிரளயத்தில் புதுவகைநெடியின் அற்புதம் சமையும், லத்தீன் அமெரிக்கப்படைப்பாளிகள் நீளமான வாக்கியங்களைத் திட்டமிட்டு உருவாக்குவதில்லை - அல்லது உருவாக்குகிறார்கள். நீண்டுசெல்லும் அதில் ஒரு பெரும் புதிரோ அல்லது ஜாலத் தன்மையின் துணுக்கோ ஒட்டிக் கொண்டிருக்கிறது. 'எனவே நான் தோட்டத்தைக் கடக்க வேண்டும், மரங்களைப் பின் விட்டு, மூன்று மூன்று படிகளாகத்தாண்டி மலையை விட்டு இறங்கி குறுகிய செஸ்ட்நட் மரத் தோப்பு வழியேசென்று-இங்கேதான்,நிச்சயமாக, அந்தக்குழந்தைவெள்ளைநிற இதழ்களைச் சேகரித்து கிறீச்சிடும் பூங்காக் கதவைத் திறந்து, திடீரென நினைவு கூர்ந்து தெரியும் தன்னைத் தெருவில் கண்டு, ஒருவனுடைய இளம் பருவத்தின் எல்லா மத்தியானங்களையும் உணர்ந்து, ஒரு மாய மந்திரம் போல, வெள்ளப் பெருக்கான விசில்கள், மணிகள், குரல்கள், விசும்பல்கள், என்ஜின்கள், ரேடியோக்கள், சாபங்கள் ஆகியவற்றை இல்லாமல் ஆக்கி, சூழ்ந்துள்ள நகரத்தின் துடிப்பை அறுப்பதில் அவன் வெற்றி கண்டான். இது புயண்டஸின் MAGICINE.

|"அவன் மண்டையெங்கும் வண்டுகளின் ரீங்காரத்தில் ஊழி பல தோய்ந்த புழுதி தேகமாத்யந்தமும் சுழட்டியடிக்க, உளியின் பிந்துவரம்பெரிதாகிக்கசியும் ஒளியில் காலடி எட்டிப் போடும் மிதப்புகளில் இருட்பத்தாய் அசையும் நிழல்வெளி நீட்டநீட்ட நெளிநெளியாய்க் கருண்டு ருடைந்து நீளும் கற்பாதையின் சுழற்சி தலையைக் கால்களாகவும், கால்களைத் தலைகளாகவும் மாற்றிப்போடும் பாசம் படிந்த தொல் சுவர்

விரிப்பில் மோதிச் சிதைந்து பூஞ்சணம் பூந்த அவன் கால்களில் துறை

கழித்தோடும் நதிக்கரையின் நானற் புதர்களில் மண்டியிருந்த

இருள் மெல்ல விலகிக்கொண்டிருக்கிறது. இது ŝrŝir@JNol_Iu Dissolve Line. o

கதையின் ஒட்டத்திஇடான இணை விலேயே

வாக்கியங்களின்

நீளும் நெளிக்வல் முழுமை பெறுகிறது.

கேள்வி பத்திகளைக் கலைத்துப் போடுவது போல வாக்கியங்களைக்கலைத்துப்போடும்போது எழுவாய் பயனிலை செயப்படு பொருள் போன்ற இலக்கண விதிகளின் நிலை என்ன?

பதில் வாக்கியத்தினூடே இயங்கும் எழுவாய், பயனிலை, செயப்படுபெருளை மாற்றிப்போடும்போதுமொழியின்தன்மை சிதையாமல்முன்னிலும் ஆழ்ந்த வீச்சுடன் காட்சியளிப்பது தமிழ்மொழியின் முக்கிய அம்சம் எழுத்தின்தீவிரம் - நேர் மற்றும் வளைகோட்டுத்தன்மை கொண்ட-மொழியியல் சிக்கல்களைகயளிகரம் செய்யும் புது மலர்ச்சியான மொழி தமிழ் எழுவாய் பயனிலை செயப்படு பொருளை தார்மிகத் நன்மையுடன் மாற்றிப் போடப் போட பல்வேறு பரிமானங்களில் மிளிர்கின்றன வாக்கியத்தின் கண்ணிகள், காலில் அடிபட்ட ஒருவன் நடந்து வந்து கொண்டிருப்பதை 'அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்” என்னும் வாக்கியத்தில் சாதாரணமாக தொனிக்கும் செயல்பாடு "அவன் வந்து கொண்டிருந்தான் நடந்து” என்கிற கலைந்த பிரயோகத்தில் செயல்பாட்டின் தன்மை முக்கியத்துவம் அடைவதை உணரலாம். “கண்டேன் சீதையை' என்னும் பிரயோகத்தின் நித்யத்துவம் கவனிக்கத்தக்கது. மோஸ்தருக்காக கலைப்பதை விட்டு, உடைபடுவதற்கான வாக்கியங்களை மட்டுமே கலைக்கும் போது ஆழ்ந்த தீவிரமும் புதிர்த்தன்மையும் இணைந்து புதுவகை எழுத்தின் தளத்தை நகர்த்துகின்றன மேலும். இது குறித்த நாகார்ஜூனனின் இயங்குதளம் முதன்மையானது. அதேபோல, பழசாகி நைந்து போன (cliche) 2000 வருட வார்த்தைகளுக்கான படிமத்தை, வார்த்தைகளைப் பிரயோகிப் பதற்கான தொணியை உடைத்தெரிய நேரிடும்போது, செத்துப் போன படிமத்தின் புதிய பிறப்பு ஆரம்பமாகிறது. “ரோஜாக்கனியின் வெடிக்கும் விதைகளைப் போன்ற சிகப்பு" என்று ஜேனட் விண்டர்ஸன் சொல்லும் போது நம் படிமக்கிடங்கில் அழுகிக் கிடந்த ரோஜா சரேலென வினோதமாய் மலர்கிறது. விந்தையான வாசனை குமிழியிடுகிறதுநாசியில், சட்டென மனதில்தோன்றும் பிரமிப்பில் புதிய அடுக்குகள். ஆனால்,பொருந்துகின்ற இடங்களில் மட்டுமே இது மிக முக்கியம்) படிமப் பிரயோகம் நிறம் பிரியும்போது வாசகனின் நினைவிலியமனம் சுழன்றுதாவுகிறது கழன்று முற்றிலும் புதிய தளத்திற்கு.

கேள்வி: புதுவகை எழுத்து Vs வாசகன்?

பதில்: இருவேறு விதமான வாசக மனங்களால் கட்டம் இது இத்தப் புதிர் ஊழி. வாசகன் ஒரு படைப்பை எதிர் கொள்ளும் போது ஆத்தன் சேத்துப் பேகரே நிகழ்வினூடே சுழலும் எழுத்தோட்டம், எதிர்கொள்பவனின் துண்ணுணர்வுப் பொறியைத் தட்டிவிடுகிறது. சாதாரண-தட்டையான-வாசகன் அவனது நினைவிலி மனத்தில் அடைபட்டுக் கிடக்கும் அற்புதத்தில் சுழலும் போது, சீரியஸ் - நுண்ணுணர்வுள்ள - வாசகனோ முற்றிலும் வேறு விதமான தரிசனத்துடன் நினைவு மனத்துக்கும் நினைவிலி மனத்துக்குமிடையே ஊடகமாய் கிளைவெட்டிப் பிரிந்து பயணம் யோவான். வாசகமனத்திலுள்ள ஜால வினோதங்களை அதி தீவிர ஆற்றல்களை குறிப்புணர்த்துவது அற்புத அனுபவமாக மாற்றவல்லது. இரு வேறு தளங்களையும் ஒரே பாய்ச்சலாகத் தாண்டிச் செல்லும் பிரம்மாண்டம் அது. தஹறிப்பு மனோநிலை கொண்ட கலைஞனே புதுவகை எழுத்தைத் தோற்றுவிக்கிறான் என்கிற வாக்கியத்தின் முனையில் இந்த உரையாடலை நிறுத்திக் கொள்வோம் இப்போதைக்கு பூர்வ பீடிகைகளின்றி ஒரு கணத்தில் நடந்தேறிய இந்த உரையாடல் புதிர் எழுத்தின் மையத்தை நெருங்கும் ஒரு பரிமாணம் மட்டுமே. இந்த எழுத்தில் கவனம் கொள்பவர்களின் தொடர்ந்த விவாதம் புதிர்ச் சுழலைக் கடைந்து செல்ல இயலும்.

I_உன்னதம் ==- o ஜனவரி 1996