தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, April 06, 2016

கண்ணாடி - சாரு நிவேதிதா

Automated Google-ocr

கண்ணாடி -  சாரு நிவேதிதா


ஆந்திரப் பிரதேசத்தில் இருந்த சித்தூரைச் சுற்றியிருந்த வனங்களில் வேட்டையாடிப் பிழைத்துக்கொண்டிருந்தது எங்கள் காட்டு நாய்க்கர் சமூகம். 

ஒருமுறை கடும் பஞ்சத்தினால் வனங்கள் பாலைகளாய் மாறி, மிருகங்கள் அருகிப் போனபோது அந்த ஊரை விட்டுக் கிளம்பியது அந்தச் சமூகம். பஞ்சம் பிழைப்பதற் காக எங்கெங்கோ பிரிந்து, எப்படி எப்படியோ அலைந்து பிரிந்து போயிற்று. 

அதில் ஒரு கூட்டம் தஞ்சை மாவட்டத்தில் நரிமனம் என்ற ஊருக்குச் சென்றது. ஆந்திராவில் இருந்தவரை நரிதான் எங்கள் பசியாற்றிய தெய்வம். அதன் கொம்பு, நகம், தோல், பல் எல்லாமே நல்ல விலைக்குப் போகக் கூடிய பொருட்கள். 

அதன் கறி எங்களுக்குப் பிடித்த உணவு. உப்புக்கண்டம் போட்டு வைத்துக்கொண்டால் ஆறு மாதத்திற்கு சாப் பாட்டுப் பிரச்சினை இல்லை. 

ஆனால் நரிமனத்துக்குச் சென்றால், அந்த ஊரின் பெயரில்தான் நரி இருந்ததே தவிர வாஸ்தவத்தில் அந்த ஊருக்கும் நரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 

காட்டு நாய்க்கர்கள் வர்மக்கலையில் வல்லவராக இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒரு மாந்த்ரீக சக்தி இருந்தது என்றே தோன்றியது. பட்டாலே உடல் வலி பறந்தது. வம்பு செய்பவர்களை பூடடு போட்டு விடுவார் கள். குறிப்பிட்ட நரம்பில் ஒரு தட்டு தட்டினால் அந்தப் பகுதியை அசைக்க முடியாமல் செய்துவிடுவதுதான்

'பூட்டு பூட்டு போட்டவர் வந்து கை வைத்தால்தான் மீண்டும் அந்தப் பகுதி பழைய நிலைமைக்குத் திரும்பும். நரிமணத்தில் இதற் கெல்லாம் வேலையில்லை. அங்கிருந்து பக்கத் திலிருந்த நாகூருக்குப் புறப்பட்டு வந்த எங்கள் குடும்பத்திற்கு வேறு வழி தெரியவில்லை.

வேட்டைக்கு வனங்களற்ற வயல்காட்டுப் பூமி. எங்களுக்கோ வயல் வேலை தெரியாது.

அப்போது அந்த ஊரில் தெலுங்கு பேசிய மற்றொரு கூட்டம் இருந்தது. தொம்பர்' என்று சொன்னார்கள்.

அவர்களோடு சேர்ந்து நாங்களும் எடுப்பு கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலையை ஏற்றுக்கொண்டோம்.

காலையில் அவ்வாவுடன் துணையாகச் சென்றுவிட்டு பள்ளிக்கூடம் போய்விடுவேன். எல்லாம் பழைய கதை. இப்போது கனவாக மட்டுமே வந்து பயமுறுத்தும் கதை. அடிக்கடி வருகிறது அந்தக் கனவு. நான் ஒரு நரகல்குழியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் குமட்டல் தாங்க முடியவில்லை. தொண்டையே அறுந்து விழுந்து விடும்போல் அடிவயிற்றிலிருந்து ஓங்காரத்துடன் கிளம்பும் வாந்தி.

பக்கத்தில் படுத்திருக்கும் அவந்திகா பயந்து போய் எழுந்துவிடுவாள். . 

அவந்திகாவிடம் என் சுயசரிதையைச் சொன்னதில்லை. பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள். மிகவும் மென்மையானவள். 

'அவளை ஏன் பயமுறுத்த வேண்டும்? என்றுதான் சொல்லவில்லை. பழைய வாழ்க்கையின் நிழலாகத் தொடரும் மற்றொரு விஷயம் - என் மூக்கு முகரும் தன்மையை இழந்துவிட்டது.

 சமயங்களில் சமையல் கியாஸ் கசிந்தால்கூட தெரிவதில்லை. அதே போல் அவந்திகாவின் உடல் மணமும், அவள் வைத்துக்கொள்ளும் மல்லிகை மணமும். 

நல்லவேளையாக பெரிய நைனாவுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்று தோன்றியது. 

பெரிய நைனாவைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும் என்று கணக்கிட்டது மனம். 

கல்லூரி இறுதியாண்டில் படிக்கும்போது அவ்வாவின் சாவுக்காக பெரிய நைனா நாகூருக்கு 

வந்தபோது பார்த்ததுதான் கடைசி. வந்து ஒரே ஒரு இரவுதான். அவ்வாவின் தகனம் முடிந்ததும் சென்னைக்குக் கிளம்பிவிட்டார் பெரிய நைனா. 

நைனாவின் அண்ணன்தான் என்றாலும் அண்ணன் தம்பிகளுக்குள் அவ்வளவு நெருக்கம் இல்லை. பெரிய நைனா நல்ல ஆஜானுபாகுவாக இருப்பார். ஆறரை அடி உயரம். முரட்டு உடம்பு. முறுக்கி விடப்பட்ட மீசை,

அவருக்கு எங்கள் குலத்தொழிலைச் செய்வதில் இஷ்டமில்லை. "வேட்டையாவது பாட்டையாவது? நாம என்ன காட்டுமிராண்டிப் பசங்களா ?" என்பார்.

தேர்ந்து கொண்ட தொழிலை மகா மோசமான வார்த்தைகளால் திட்டுவார்.

அப்போதெல்லாம்- அதாவது கற்காலத்தைச் சொல்லவில்லைஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்புதான்- நாகரீக வளர்ச்சி மிகவும் குன்றியிருந்தது அல்லவா? அதனால் வீடுகளில் இப்போது மாதிரி ஃப்ளஷ் அவுட் வசதி கிடையாது. எடுப்பு கக்கூஸ்தான். 

கொல்லைப்புற வழியாகச் சென்று கழிவுகளை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு, கழிவறையைத் துப்புரவு செய்துவிட்டுப் போக வேண்டும் 

இதில் என்ன பிரச்சினை? எந்த உயிர்ப்பயமும் இல்லாத வேலை. வீடுகளிலும் நம்மை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். கேட்டபோது சாப்பாடு கிடைக்கும். காசுக்கும் பஞ்சமில்லை. 

இதை விட்டு உயிருக்குப் பிரச்சினையான ஒரு வேலையைத் தேர்ந் தெடுத்தார் பெரிய நைனா. யாரிடமும் சொல்லாமல் ராணுவத்தில் சேர்ந்து விட்டார். பிறகு அதிலிருந்து ஓய்வு பெற்று வந்து அசோக் லேலண்ட் கம்பெனியில் ஃபோர்மேனாகச் சேர்ந்தார். 

அப்போது ஃபோர்மேன் வேலை என்றால் எங்களுக்கு ஏதோ கலெக்டர் உத்தியோகம் மாதிரி. 

பெரிய நைனாவும் அப்படித்தான் வாழ்ந்தார். எப்போதாவது நாங்கள் அவர் வீட்டுக்குப் போனால்-இரண்டு மூன்று முறைதான் போயிருப் பதாக ஞாபகம்- சாப்பாட்டுக்குப் பிறகு பழமெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். 

நான் முதன்முதலில் வாழைப்பழம் சாப்பிட்டது பெரிய நைனா வீட்டில்தான். அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். 

பின்னி ரொம்பவும் நல்லவர்கள். பின்னி என்றால் சித்தி. பெரிய நைனாவின் மனைவியை பெரியம்மா என்றுதான் கூப்பிடவேண்டும். ஆனால் பெரியம்மா வேறு ஊரில் இருந்தார்கள். பெரியம்மாவை பெரிய நைனா விலக்கி வைத்து விட்டு இந்தப் பின்னியைத் திருமணம் செய்துகொண்டுவிட்டார். 

பின்னி பார்ப்பதற்கு பெரிய நைனாவின் மகளைப் போல் இருந்தார்கள். அவவளவு வயது வித்தியாசம். 

பின்னி சமைத்தால் ஏதோ ராஜா வீட்டுச் சமையல் மாதிரி இருக்கும். ஆடு, மீன், இன்னும் என்னன்னவோ... உடும்புக்கறியும், பன்றிக்கறியும் தவிர வேறு எதையும் சாப்பிட்டிருக்காத எனக்கு பின்னியின் சமையல் ஆச்சரியமாக இருக்கும். 

சமைக்கும்போது அவர்கள் பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்ப்பேன்.

"இங்கயே இருந்திர்ரியா புள்ள ?" என்பார்கள். 

நானும் ஆர்வத்துடன் சம்மதம் சொல்வேன். ஆனால் அம்மா விட மாட்டார்கள். நாகூருக்கு இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். 

அம்மாவுக்கு பின்னியைப் பிடிக்காது. தமிழ்ப் பெண்ணாம். பெரிய நைனாவை மயக்கி, ஏமாற்றி, கல்யாணம் செய்துகொண்டு விட்டார் களாம். 

'அம்மா கூட சமயங்களில் தவறாகப் பேசுவார்கள் போல' என்று நினைத்துக்கொள்வேன். 

பின்னிக்கும் பெரிய நைனாவுக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தன. பெரிய நைனா வேலையிலிருந்து ஒய்வு பெற்றார். குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். பின்னி பெயரில் ஒரு வீடு கட்டிக் கொடுத்தார். 

அதுவரை எல்லோருடைய வீடுகளிலும் நடப்பது மாதிரிதான் நடந்தது. ஆனால் பிறகுதான் ஒருமாற்றம். என்ன காரணம் என்று தெரியவில்லை. பெரிய நைனாவை பின்னி விலக்கி வைத்துவிட்டார்கள். 

"முன்னால் இவர் செய்தது இப்போது இவருக்கு" என்றார்கள் நைனா. 

அம்மாவுக்கு அதில் ஒப்புதல் இல்லை. பெரிய நைனாவின் இரண் டாவது மனைவி இப்படித்தான் செய்யும் என்று அம்மாவுக்கு ஏற்கனவே தெரியுமாம். 

அம்மாவுக்கும் நைனாவுக்கும் இது குறித்து பலத்த சர்ச்சை ஏற்படும். வழக்கம் போல் முடிவு ஏதும் ஏற்படாமலேயே நின்று போகும். 

ஒரே நாளில் வீதிக்கு வந்துவிட்டார் பெரிய நைனா. வீடு, மனைவி, குழந்தைகள், பேரப்பிள்ளைகள்- எதுவுமே இல்லாத அனாதையாய் 65 வயதில், தான் வேலை பார்த்த கமபெனியிலேயே வாட்ச்மேனாகச் சேர்ந்தார். இப்போது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய நைனாவைப் பார்க்கிறேன். நீண்ட நாட்கள் நோய்ப்படுக்கையில் இருந்துவிட்டுக் காலமானார்கள் என் அம்மா. அதற்காக வந்திருக் கிறார் பெரிய நைனா. 

77 வயது. பழைய கம்பீரம் இருந்த இடம் தெரியவில்லை. 

"பெரியம்மாவும் சேர்த்துக்கலையா பெரிய நைனா?” என்று கேட்டேன்.

"போகலாம் தம்புடு, நம்மகிட்ட தப்பை வச்சுக்கிட்டு அங்கெல்லாம்


போகலாமா ?”

"அப்போ எங்க தங்கியிருக்கீங்க?" 

"கம்பெனிலதான். அங்க வாசல்லியே வாட்ச்மேன் நிக்கிற இடம் இருக்கும்ல? அங்கயே படுத்துக்குவேன்."

"சாப்பாடு ?"

"இப்போல்லாம் முன்மாதிரி இல்ல. நானே ஒரு வேளை கஞ்சி வச்சி குடிச்சுக்கிறது. கறிக்குழம்பு சாப்பிட்டு பல வருஷம் இருக்கும். கடைசியா எப்போ சாப்பிட்டேன்கிறதே மறந்து போச்சு.” 

பெரிய நைனாவின் மகன்தளும் மகள்களும் எங்கெங்கோ வெளியூர் களில் நல்ல வசதியாக இருக்கிறார்கள். ஒரே ஒரு மகள் புனிதா மட்டும் சென்னையில் இருக்கிறாள். 

"நான் எங்கயும் போறதில்லை தம்புடு, எல்லாரும் அவங்க அம்மா பக்கம். கறிக்கொழம்புக்கு ஆசைப்பட்டு ரெண்டு தடவை புனிதா வீட்டுக்குப் போனேன். 'அடிக்கடி வராதீங்கப்பா. உங்க மருமகன் ஏதாவது சொல்லிடுவார். அப்புறம் நமக்குத்தானே அசிங்கம்னு சொல்லிச்சு. அதோட சரி, அங்கயும் போறதில்லை. நம்மளாலே ஏன் மத்தவங்களுக்கு கஷ்டம்?" 

"நம்ப வீட்டுக்கு வாங்க பெரிய நைனா. உங்க இடத்திலேர்ந்து சின்மயா நகர் ரொம்ப தூரம்தான். ஆனா வந்தா ரெண்டு நாள் இருந்திட்டுப் போகலாம். அவந்திகா நல்லா சமைப்பா " 

"உங்கம்மாவும் நல்லா சமைக்குமே. அது உடும்புக்கறி சமைச்சு சாப்பிடணும். ம்... உங்கம்மா ரொம்ப நல்லமாதிரி.” 

சொல்லிக்கொண்டே எழுந்து உள்ளே செல்ல முயன்றவர் தடுமாறி விழப் பார்த்தார். 

"பார்த்து பெரிய நைனா..." என்றபடி அவர் கையைப் பிடித்தேன். "பார்வை முக்கால்வாசி போயிடுச்சி தம்புடு, அதனாலதான் தடுமாற வேண்டியிருக்கு." - 

"கண்ணாடி போட்டுக்கலாமே? என் நண்பர் ஒருத்தர் கண்ணாடிக் கடை வச்சிருக்கார். போய் போட்டுக்கலாமா?" 

"ஐயோ.. வேணாம் தம்புடு, என் வேலை போயிடும். கண்ணாடி போட்டவங்களை வாட்ச்மேனா வச்சுக்கிறதில்லை.” 

அப்போது உள்ளேயிருந்து பெண்கள் அழும் ஒலம் திடீரென்று சற்று உரத்துக் கேட்டது.