தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

imag135-184

(மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
automated google-ocr in ubuntu with the help of Libre draw

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .135 - 183

வங்காள மூலம் :
அதீன் பந்த்யோபாத்யாய
தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி


இருவரும் வண்ணத்துப் பூச்சியை இலையில் வைத்து மூடினார்கள். சோனா அதைப் பாதிமாவின் முன்றானையில் கட்டித் தந்துவிட்டுப் பெரியப்பாவைத் தொடர்ந்து ஓடினான். மணீந்திரநாத் அவர்களைக் கூட்டிக்கொண்டு மருதமரம் வரையில் நடந்து போனார். இப்போது மழைக் காலம். ஆகையால் படகும் ஆறுமே கண்ணுக்குத் தெரிந் தன. ஏராளமான படகுகள், நுங்கு ஏற்றிச் செல்லும் படகுகள், அன்னாசிப் படகுகள், பாகற்காய் ஏற்றிச் செல்லும் படகுகள் எல்லாம் ஆற்றில் சென்றன. இந்த ஆற்றையும் படகுகளையும் பார்த்தாலே எங்கோ பாலின் படுத்திருக்கிறாள் என்று தோன்றியது. பாலினின் முகமும் நினைவும், அவரைக் கயிற்றால் இழுக்கப்படும் படகுபோல் இழுக்கின்றன.

தெற்குப் பக்க அறையில் லால்ட்டுவும், பல்ட்டுவும் இன்னும் படிக் கிறார்கள். அவர்களுக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லை. சோனா குளத்தங்கரையில் சுற்றுவதைப் பார்த்து அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது. குளத்தங்கரையில் சோனா, பெரியப்பா, தோடர்பாகைச் சேர்ந்த அந்தச் சிறிய பெண், மான்குட்டி போல் குதிப்பாள், ஆடுவாள். சோனாவைப் பார்த்துவிட்டால் கேட்கவே வேண்டாம்! மழைக் காலமாக இல்லாதிருந்தால் அவளும் சோனாவும் சோளம், கோதுமை வயல்களில் சுற்றப் போய்விடுவார்கள். இன்னும் லால்ட்டுவுக்கும் பல்ட்டுவுக்கும் விடுதலை கிடைக்கவில்லை. சோனாவுக்குக் கிடைத்து விட்டது. அவர்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. சோனா அந்தப் பெண்ணின் புடைவைத் தலைப்பில் எதையோ வைத்துக் கட்டினான்.

பல்ட்டு சொன்னான். ''பார்த்தியா, சோனா பாதிமாவைத் தொட்டுட்டான்!''

மருத மரத்தின் மேல் முதுகைச் சாய்த்துக்கொண்டு நின்றார் மணீந் திரநாத். எதிரில் தாழ்நிலம். அதில் தண்ணீ ர் தழும்பி நின்றது. தூரத்தில் வயலுக்குள்ளிருந்து ஒரு சக்கரவாகப் பறவை கூவியது. நதியில் படகு. 'ஆறே, என்னைக் கூட்டிக்கொண்டு போ!' என்று கிராமபோன் பாடியது. மழையின் தோற்றத்திலும் இதே பிரார்த்தனை தான். இந்தச் சிறுமியுடன் நீரில் மிதந்து கொண்டே போகத் தோன்றுகிறது மணீந்திரநாத்துக்கு.

பாதிமா கூப்பிட்டாள் : "சோனா பாபு !!'' ''என்ன ?'' ''எனக்கு ஒரு சேப்பு அல்லிப்பூ தருவீங்களா?'' ''தரேன்." இதற்குள் சாமு திரும்பிவந்துவிட்டான். அவன் கையில் பெட்ரோ மாக்ஸ். அவன் நரேந்திரதாஸின் வீட்டுப் பக்கமே போகவில்லை.

134நேரே குளத்தங்கரைக்கு வந்துவிட்டான். அவன் மரங்களின் இடுக்கு வழியே நரேன் தாஸின் வீட்டைப் பார்த்தபோது அது களையிழந்திருப்பதாகப் பட்டது அவனுக்கு. ''மாலதி இல்லையா? மாமனார் வீட்டுக்குப் போயிருக்கிறாளோ?'' அவனுக்கு வெட்கத் தைத் துறந்து மாலதியின் வீட்டு வாசலில் போய் நிற்கத் தோன் றியது. ஆனால் முடியவில்லை. ஏதோ ஒரு தயக்கம் அவனைத் தடுத்தது. அவன் இந்த நினைவைத் தவிர்ப்பதற்காகப் பாதிமாவைக் கூப்பிட்டான், "பாதிமா ! எங்கே போயிட்டே?''

பாதிமா சோனாவிடம் விடைபெற்றுக்கொண்டு சாமுவிடம் ஓடி வந்தாள். சாம்சுத்தீன் படகில் உட்கார்ந்துகொண்டு அதை ஓட்ட ஆரம்பித்தான். "பாபா, சோனா பாபு எனக்கு ஒரு சேப்பு அல்லிப்பூ தரேன்னிருக்கார்" என்று பாதிமா சொன்னான். சாமு பதில் சொல் லாமல் அவளுடைய முகத்தைப் பார்த்தான். அவனுடைய பெண் ரொம்பத் துறுதுறுப்பு. அவளுடைய கண்களில் எப்போதும் விஷமச் சிரிப்பு. அவள் இன்னும் மருத மரத்தடியில் எதையோ தேடினாள். ஆனால் அங்கே யாரும் இல்லை. அவளுடைய முகம் வருத்தமா யிருந்தது.

சோனா பசி மேலிட்டவனாக ஒரே குதியில் சமையலறைக்குள் போய்த் தன் தாயைக் கட்டிக்கொண்டான். ''அம்மா, ரொம்பப் பசிக்கிறது, சாதம் போடு!''

அவள் பித்தளைச் சட்டியிலிருந்து பச்சரிசிச் சாதத்தை எடுத்துச் சோனாவுக்காகத் தட்டில் போட்டாள். ''வா, பலகையைப் போட்டுக் கிண்டு உட்காரு!''

லால்ட்டு சாப்பிட்டபடி பார்த்துக்கொண்டே இருந்தான். சோனாவிடம் அம்மா காட்டும் பரிவு அவனுக்குப் பிடிக்கவில்லை. அதைத் தவிர அம்மா சோனாவுக்குப் பெரிய கொய்மீன் வதக்கிக் கொடுத்திருக்கிறாள். லால்ட்டுவால் தன் பொறாமையை அடக்கிக் கொள்ள முடியவில்லை. ''சோனா பாதிமாவோட புடைவையிலே எதையோ கட்டிக் கொடுத்தான்!'' என்று அவன் சொன்னான்.

சோனா பயந்துபோய்க் கத்தினான். ''இல்லேம்மா!'' லால்ட்டுவும் கத்தினான். "பொய் சொல்லாதே! பல்ட்டு சாட்சி !'' பல்ட்டு சொன்னான். ''ஆமா, நீ பாதிமாவுக்கு வண்ணத்துப்பூச்சி பிடிச்சுக் குடுத்தியே !''

சசிபாலா சமையலறைக்கு வெளியில் பெரிய சிங்மீனின் தலையை நறுக்கிக்கொண் டிருந்தவள், குழந்தைகளின் பேச்சைக் கேட்டுச் சப்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்தாள். தனமாமி பயந்துபோய் விட்டாள். ஏனென்றால் மாமியார் இந்த விஷயத்தைப் பெரிது செய்து களேபரம் பண்ணுவாள். 'ஆசாரம் போச்சு, சுத்தம் போச்சு'

135என்று ஒப்பாரி வைப்பாள். அநாசாரத்தால் கெடுதல் வரும் என் றெல்லாம் சொல்வாள். ஆகையால் தனமாமி சோனாவின் தட்டை எடுத்துக்கொண்டு அவனிடம், "சோனா, வெளியிலே போ! ஸ்நானம் பண்ணிட்டு வா" என்று கூறினாள்.

''நான் ஸ்நானம் பண்ண மாட்டேன்! எனக்குப் பசிக்கறது. எனக்குச் சாதம் போடு.''

தனமாமிக்குக் கோபம் வந்தது. ''சோனா, நீ போ வெளியிலே, சொல்றேன்.''

''எனக்குப் பசிக்கறதே. எனக்குச் சாதம் போடு.'' லால்ட்டு சொன்னான். " ஊஹும், உனக்குச் சாப்பாடு கிடை யாது. ஸ்நானம் செய்யலேன்னா சாப்பாடு கிடையாது.''

தனமாமி லால்ட்டுவை அதட்டிவிட்டுப் பித்தளைப் பாத்திரத்தில் மிஞ்சியிருந்த சாதத்தையும், சோனாவின் தட்டிலிருந்த சாதம், மீன் எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள்.

சோனாவுக்குத் துக்கம் துக்கமாக வந்தது. அம்மா அவனை ஸ்நானம் செய்யச் சொல்கிறாள். அவனுடைய சாதத்தை எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டாள். அவனுக்குப் பிடிவாதம் அதிகரித்தது. அவன் பலகையின் மேல் உட்கார்ந்து கை கால்களை உதறிக்கொண்டு அழத் தொடங்கினான்.

தனமாமி சொன்னாள். "சோனா, நீ செய்யறது நன்னாயில்லே. எழுந்திரு! இல்லாட்டா முதுகிலே விழும்."

வெளியே மாமியாரின் தொணதொணப்பு அதிகரித்தது. சோனாவோ பலகையைவிட்டு எழுந்திருக்கவேயில்லை. இவ்வளவு களேபரத்துக்கும் சோனாதானே காரணமென்று ஆத்திரம் கொண்ட தனமாமி பிசாசுத்தனமாக அவனை அடிக்க ஆரம்பித்தாள். சோனா வுக்கு மூச்சுத் திணறியது. அப்படியும் அவன் எழுந்திருக்கவில்லை. கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் வெவ்வேறு தொந்தரவுகள் இப்போது தனமாமியின் ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டன. அவள் சோனாவின் தலைமயிரைப் பிடித்து அவனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாள். தானும் ஸ்நானம் செய்துவிட்டு அவன் தலையிலும் ஒரு குடம் தண்ணீரைக் கொட்டினாள். 'சீ, வாயை மூடு!'' என்று அதட்டினாள்.

அப்போது காபிலா மரத்துக்குக் கீழே நாயுடன் நின்றார் மணீந்திரநாத். சோனாவின் கஷ்டத்தைப் பார்க்க அவருக்குப் பொறுக்கவில்லை. துக்கம் பொறுக்க முடியாமல் அவர் தம் கையையே கடித்துக்கொண்டார். கையிலிருந்து ரத்தம் வழிந்தது.

துறையில் படகிலிருந்து இறங்கியபோது பாதிமா தன் தந்தை யிடம் சொன்னாள்: "பாபா, சோனா பாபு எனக்கு ஒரு வண்ணத்துப் பூச்சி பிடிச்சுக் கொடுத்திருக்கிறார்.''

136ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த சாமு, "ஒரு ஜீவனை இம்சை பண்ணாதே! விட்டுடு!'' என்று கூறினான்.

பூச்சியை விட்டுவிடுவதற்காக முடிச்சை அவிழ்த்த பாதிமா அது அசையாமல் கிடப்பதைக் கண்டாள். அது இறந்து போயிருந்தது.

வெளியில் இங்குமங்கும் கோழிகள் மேய்ந்துகொண் டிருந்தன. ஜாலாலி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். சாம்சுத்தீன், அவனுடைய கோஷ்டி, உள்ளே அலிஜான் சமைத்துக்கொண் டிருந்த மாமிசம் எல்லாமே அவளுக்குப் பிடிக்கவில்லை, ஜாலாலி

சேப்பங்கிழங்குச் செடிகளுக்கு அப்பால் பார்வையைச் செலுத்தினாள். வயலில் சில வாத்துக்கள் 'க்வாக் க்வாக்' என்று கத்திக்கொண் டிருந்தன. அவளுடைய வயிற்றைப் பசி குடைந்தது.

மக்பூல் வீட்டுச் சீதாமர வேலியில் சணல் தட்டைகள் காய்ந்தன. நாலைந்து நாட்களாக மழை இல்லாததால் மண்ணும், புல்லும் காய்ந்திருந்தன. பண்ணை வீட்டில் ஜாம்ருல் மரத்தில் பழங்கள் தொங்கின. வெயிலில் அவை பறவைகள் போலத் தோற்றின.

கிராமம் முழுதும் வெங்காயம், பூண்டு இவற்றின் வாசனை பரவி யிருந்தது. வயல்களில் வாத்துக்களின் கூப்பாடு. ஜாலாலியால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவை மாலதியின் வாத்துக்கள். மியான்களும் பெரிய மனிதர்களும் கூட்டம் முடிந்து போய்க்கொண் டிருந்தார்கள். வற்றின் முகமும் கெஞ்சும் குரலுமாக அலிஜான் விட்டுக் கொல்லையில் ஜாலாலி உட்கார்ந்திருந்தாள். சமையலின் சம்பிரமம் அவளுடைய பார்வையில் விழுந்தது. விருந்தாளிகள் குளித்துவிட்டு வந்தார்கள். பிறகு தொழுகை செய்துவிட்டு ஆசனங்களில் வட்டமாகச் சாப்பிட உட்கார்ந்தார்கள். நல்ல சாப்பாடு. மீன் குழம்பு, கோழி மாமிசம், பூண்டு தாளித்த பாசிப் பருப்பு. அவர்கள் சாப்பிட்டுவிட்டுத் தட்டிலேயே வாயைக் கொப்புளித்தார்கள், ஒரே குவலையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள். கொஞ்சங்கூடச் சாப்பாடு மிச்சம் வைக்கவில்லை. உட்கார்ந்து உட்கார்ந்து ஜாலாலிக்குக் கால் மரத்துவிட்டது. அவள் எச்சிலை விழுங்கிக்கொண்டு தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள். எல்லாரையும் அல்லாவையும் சேர்த்துத் திட்டுவதன் மூலம் அவள் தன் ஆத்திரத்தைத் தணித்துக்கொண்டாள்.

137வயலிலிருந்து மாலதியின் வாத்துக்களின் குரல் கேட்டது. ஜாலாலி ஒரு துண்டை உடுத்திக்கொண்டு தண்ணீரில் இறங்கினாள், அல்லிக்கிழங்கு பறிக்க.

விருந்தாளிகள் போய்விட்டார்கள். படகுத் துறையில் சாம்சுத்தீன் அவர்களுக்கு விடையளித்தான். சணல் வயல்களைக் கடந்தபின், படகுகள் கண்ணுக்கு மறைந்துவிட்டன. நீண்ட துடுப்புகளின் நுனிகள் மட்டும் மேலே வருவதும் கீழே போவதுமாகத் தெரிந்தன. படகுகள் கிழக்குப் பக்கத்து வீட்டைத் தாண்டிப் போயின. சாம்சுத்தீனுக்குக் கிழக்கு வீட்டு மாலதியின் நினைவு வந்தது. செங்கடம்பு மரத்தில் நோட்டீஸ் ஒட்டுவது பற்றி அவர்கள் தகராறு செய்துகொண்டு ஒருவரையொருவர் அவமானப்படுத்திக் கொண் டது அர்த்தம் இல்லாததாகத் தோன்றியது சாமுவுக்கு.

அந்த நோட்டீஸ் இப்போதும் தொங்கிக்கொண் டிருந்தது. அதில் எழுதியிருந்த விஷயம், 'இந்தத் தேசம் சாமுவின் ஜாதிக்குச் சொந்தம்' என்பதே.

அவன் எவ்வளவோ தடவை கட்டாரி மரத்துக்குக் கீழே மாலதி யைச் சந்தித்திருக்கிறான். ஆனால் அவள் அவனுடன் பேசுவதில்லை. இளமை நினைவுகள் தோன்றிச் சாமுவை வேதனைக்குள்ளாக்கின,

''பாபா!'' என்று பாதிமா கூப்பிட்டாள். சாமு திடுக்கிட்டுத் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டான். ''என்ன சொன்னே ?''

''அம்மா கூப்பிடறாங்க." சாமு பாதிமாவின் முகத்தைப் பார்த்து, தண்ணீரின் நீல நிறத் தைப் பார்த்து இஸ்லாம் பக்தியாகிய ஆழ்ந்த உணர்வில் அமுங்கிப் போனான். அப்போது அவனுக்குத் தோன்றியது. ஒரு பக்கிரி சாயபு இஸ்லாம் கொடியைத் தூக்கியபடி, முஸ்கிலாசானின் ஒளியில் வழிப் பார்த்துக்கொண்டு முன்னால் போகிறார். ஒளி வட்டத்தில் கிழவரின் முகம் தெரிகிறது. தெளிவற்ற ஏதோ ஒரு ஆசையால் பீடிக்கப்பட்டுக் களைத்திருக்கிறார் அவர். எவ்வளவு கூப்பிட்டும் சாமுவால் அவரைத் திருப்ப முடியவில்லை. அவர் நடந்துகொண்டே போகிறார். தன்னைப் பின்பற்றும்படி சாமுவிடம் சொல்கிறார்.

பாதிமா சாமுவுக்கு முன்னால் வந்து நின்று, "பாபா, அம்மா உங்களைக் கூப்பிடறாங்க!'' என்றாள்.

அவன் வீட்டுக்குள் நுழைந்தான். அவனுடைய பீபியின் கண்கள் சிறியதாக, மை தீட்டப்பட்டிருந்தன. மூக்கில் மூக்குத்தி, கைகளில் நீலக்கண்ணாடி வளையல்கள். கட்டம் போட்ட புடைவை அணிந்திருந் தாள். உள்பாவாடையோ, மேலே ரவிக்கையோ இல்லை. உடம்பை ஒரு சுற்றுச் சுற்றத்தான் புடைவை போதுமானதாக இருந்தது.

138ஆகையால் அவயவங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன அலிஜானின் உடல் கர்ப்பிணிப் பசுவைப் போல் இருந்தது படுத்துக் கொண்டே இருக்க விரும்பினாள் அவள். மைதீட்டப்பட்ட கண்களில் ஆசையைவிட உணர்ச்சியே அதிகமாகத் தெரிந்தது. அவள் கேட்டாள் : "நேரமாகலியா? நீ சாப்பிடப் போறதில்லையா?"

சாமு பலகையில் சாப்பிட உட்கார்ந்தான். அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அவ னுடைய முகத்தில் கவலை தேங்கியிருப்பதைப் பார்த்து, ''என்ன கவலைப்பட்டுக் கொண்டிருக்கே?” என்று கேட்டாள்.

சாமு பதில் பேசாமல் சாப்பிட்டுக்கொண் டிருந்தான். "ஏன் பேசமாட்டேங்கறே?'' சாமுவுக்கு எரிச்சல் வந்தது. அதைப் பத்தியெல்லாம் உனக் கென்ன? நீ ரெண்டு சோறு போட்டுட்டுப் போ! அநாவசியமா வார்த்தையை வளக்காதே!''

''நான் என்ன வார்த்தையை வளத்துட்டேன்?'' சாமு பார்வையை உயர்த்தி அலிஜானின் முகத்தைப் பார்த்தான், கண்களைப் பார்த்தான். கோபம், ஆத்திரம் எல்லாவற்யுைம் தணிக்கக்கூடிய ஏதோ ஒன்று அலிஜானின் கண்களில் தெரிந்தது. ''நான் லீக் கட்சி சார்பிலே வோட்டுக்கு நிக்கலாம்னு பார்க் கிறேன்; சின்ன டாகுருக்கு எதிரா" என்று அவன் சொன்னான். ''உன் மூளையிலே என்ன தான் நுழைஞ்சிருக்கோ எனக்குப் புரியல்லே ! இந்தக் காரியமெல்லாம் உனக்கெதுக்கு? சின்ன டாகுர் உன்னை என்ன பண்ணினார்? அவர் ரொம்ப நல்லவர்னா!'' ''நான் என்ன அவர் கெட்ட மனுஷர்னா சொல்றேன்?'' என்று சொல்லிக்கொண்டே சாமு எழுந்தான். கையையும் வாயையும் கழுவிக்கொண்டான். பொழுது சாய இன்னும் வெகு நேரம் இல்லை. தனுஷேக் சணல் தட்டைகளை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்து விட்டான். சாமு, தனுஷேக்கையும் கூட்டிக்கொண்டு படகில் புறப்பட்டான். படகு செடிகளையும் புதர்களையும் குளத்தையும் கடந்து வயல்வெளியை அடைந்தது. மசூதியின் கூரையில் கோழிகள் உலவின. மாடுகளும், ஆட்டுக்குட்டிகளும் வீட்டு முற்றங் களில் நின்றன. ஊரிலுள்ள ஆண்பிள்ளைகள் வயல் வேலைக்குப் போய்விட்டார்கள். மன்சூர் ஒருவன் தான் தன் சொந்த வயலை உழுதான். ஹாஜி சாய்புவுக்கும் கொஞ்சம் நிலம் இருந்தது. நயாபாடாவிலிருக்கும் இஸ்மதாலி நல்ல வசதியுள்ளவன். தான் அலிஜானை மணந்து கொண்ட பிறகு இஸ்மதாலி தன்னுடன் பேசிப் பழகுவான் என்று நினைத்திருந்தான் சாமு. ஆனால் இஸ்மதாலி எப்போதும் இந்துக்களுடனேயே பழகினான். இதை நினைத்ததுமே

139.சாமுவின் முகம் இறுகியது. இந்தச் சமயத்தில் புதருக்குள் ளிருந்து ஒரு வாத்தின் குரல் கேட்கவே அவன் தலை நிமிர்ந்து பார்த்தான். புதருக்குள் மனித உருவம் ஒன்று தெரிந்தது. ''புதருக் குள்ளே யாரு?'' என்று அவன் கேட்டான்.

புதருக்குள்ளிருந்து யாரும் எட்டிப் பார்க்கவில்லை. பக்கத் தில் பிரம்புப் புதர்களும் கள்ளிச் செடிகளும், கொடிகள் கள்ளி களின் மேல் படர்ந்திருந்தன. ஒரு வாத்துக் கூட்டம் பயத்தில் க்வாக், க்வாக்' என்று கத்திக்கொண்டு கிழக்கு வீட்டுப் பக்கம் ஓடியது. தண்ணீருக்குள்ளிருந்து சேறு மேலே வருவதைக் கவனித் தான் சாமு. உடும்பு ஒரு பெரிய பாம்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீருக்கடியில் அதைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண் டிருக்கலாம். சரித்திர காலத்துக்கு முந்தைய ஒரு பிராணி தண்ணீ ருக்குள் நடமாடிக்கொண் டிருக்கலாம்.

சாமு படகின் மேல்தட்டின் மேல் நின்றான். தனுஷேக் படகைத் திருப்பிப் புதர் இருந்த பக்கம் செலுத்தினான். அல்லி இலைகளுக்கு நடுவில் முகத்தைத் தூக்கிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த

ஜாலாலியைக் கவனித்தான் சாமு.

''நீங்க இங்கே என்ன செய்யறீங்க ?'' என்று சாமு கேட்டான், ஜாலாலி கழுத்தைச் சற்று உயர்த்திக்கொண்டு, "அல்லிக்கிழங்கு பிடுங்கறேன்" என்றாள்.

''இங்கே நிறைய இருக்கா ?" ''கொஞ்சங் கொஞ்சம் இருக்கு" என்று சொல்லி ஒரு கிழங்கைக் காண்பித்தாள் ஜாலாலி. ''இன்னும் பதமாகல்லே. கல் மாதிரி இருக்கு. உன்னோட சித்தப்பா பலசாவுக்குப் போற கொய்னாப் படகிலே வேலை பாக்கப் போனாலும் போனார். அவர் கிட்டேருந்து கடுதாசும் இல்லே, காசும் இல்லே நான் என்னத்தைச் சாப்பிடறது, சொல்லு! அதுதான் அல்லிக்கிழங்கைப் பறிச்சுத் திங்கறேன்'' என்றாள் மேலும்.

ஜாலாலியின் கழுத்து தண்ணீரில் அழுங்கியிருந்தது. கண்களில் பயம் அவளுடைய வற்றிப்போன முகத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது சாமுவுக்கு. அல்லிச் செடிகளைக் கடந்தால் வயல்கள். வயலிலிருந்த வாத்துகள் மிரண்டுபோய்க் கத்தின. மேலே பருந்து எதையும் காணவில்லை. புதர்களில் ஓநாய் எதுவும் நடமாடுவ தாயும் தெரியவில்லை. ஜாலாலியின் முகம் மட்டும் பேராசையால், கெட்ட எண்ணத்தால் அவலட்சணமாக, பயங்கரமாகக் காட்சி யளித்தது. உண்மையில் ஓநாயைப் போலவே இருந்தது அவ

ளுடைய முகம்.

140ஜாலாலி அவளுடைய இடத்திலிருந்து சற்றும் நகரவில்லை. அவள், இரண்டு கைகளாலும் ஆண்வாத்தின் கழுத்தைத் தண்ணீருக்கடியில் இறுக்கி அமுக்கிக்கொண டிருந்தாள். இத்தனை நேரம் போராடியதால் அவள் களைத்துப் போய்விட்டாள். சாமுவின் வேலைக்காரன் படகை ஓட்டிக்கொண்டு போனான். அவள் கொண்டு வந்திருந்த மண்சட்டி தண்ணீரில் மிதந்து வெகுதூரம் போய்விட்டது. சாமு அரசமரத்துக்கு மறுபுறம் போய் மறைந்த பிறகு, ஜாலாலி அவனைத் திட்டினாள். "நாசமாப் போறவன் ! 'நீங்க என்ன செய்யறீங்க இங்கே ?' ஆமா, நான் உன் மண்டையை மெல்லறேன் !" என்று சொல்லிக்கொண்டே அவள் ஓர் ஓணானைப் போல் தண்ணீரில் நீந்தினாள். அவளுடைய வலக்கையில் வாத்து. வாத்தை எப்போதும் தண்ணீருக்கடியில் வைத்துக்கொள்வதற்காக அவள் ஒரு கையாலேயே நீந்தி ஒரு வழியாகத் தன் மனசாட்டியைப் பிடித்தாள். அதற்குள் சாமு வெகுதூரத்துக்குப் போய்விட்டான். மாலை நேர வெயில் போய்க்கொண் டிருந்தது. ஆகாயத்தில் பல நிற மேகங்கள் குவிந்து வடகிழக்கு மூலையைக் கறுப்பாக்கின.

அவள் இப்போது வாத்தைச் சட்டிக்குள் போட்டாள். நல்ல கொழுத்த வாத்து. அதன் வயிறு இன்னும் மிருதுவாகவும் கதகதப் பாகவும் இருந்தது. அவள் அதன் வயிற்றின் மேல் கையை வைத்து அந்தக் கதகதப்பைக் கவனித்தபோது கிழக்கு வீட்டுக் கட்டாரு மரத்தடியில் மாலதி நினறிருப்பதைப் பார்த்தாள். அவள் தன் உடலைத் தண்ணீருக்கு மேலே தூக்கி எட்டிப் பார்த்தாள். தூரத்தி லிருந்து மனித அரவமும் கேட்டது அவளுக்கு. அவள் பயந்து போய்த் தான் உடுத்தியிருந்த துண்டை அவிழ்த்து அதைக் கொண்டு சட்டியின் வாயை மூடினாள். தூரத்திலிருந்து மாலதியின் குரலும் கேட்டது.

பொழுது சாய்ந்துவிட்டது. சணல் வயலின் மறுபக்கம் கண்ணுக்கே தெரியவில்லை. அரசமரததைக் கடந்தால் மன்சூரின் வீடு. தனாவின் அம்மா பூடி சப்தபர்ணி மரத்துக்கடியில் உட்கார்ந்துகொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண் டிருந்தாள்.

தன் வீட்டை நோக்கித் தண்ணீரில் நீந்திக்கொண்டே அவள் எங்கிருந்தாவது யாராவது தன்னைக் கவனிக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். இருட்டு அதிகரித்தது. அவள் மறுபடி வாத்தின் வயிற்றில் கையை வைத்துப் பார்த்தாள். துண்டைச் சற்றுத் தூக்கி வாத்தை எட்டிப் பார்த்தாள். கும்மிருட்டில் அந்தச் செத்த வாத்தின் வயிற்றில் கையை வைத்துப் பார்த்துவிட்டு,

வாத்து மாமிசம் சாப்பிடும் ஆசையில் எச்சிலை விழுங்கினாள்.

141தண்ணீருக்கு வெளியிலிருந்து மாலதியின் குரல் வந்தது, ''வா வா ! தொய், தொய்!'' என்று.

வயலில் வாத்துக்கள் முன் போல் மிரண்டு போய்க் கத்தின. அவை பயிர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண் டிருந்தன. மாலதி முழங்கால் வரையில் புடைவையைத் தூக்கிக்கொண்டு நீரில் இறங்கிக் கூப்பிட்டாள், ''வா, வா!... தொய், தொய்!''

நாற்புறமும் இருட்டு சந்தைக்குப் போனவர்கள் திரும்பி வந்தார்கள். ஏரி ஓரத்தில் நீளத் துடுப்பின் ஒலி ; படகின் அரவம். இருட்டில் மாலதிக்குத் தெரிந்த முகம் ஒன்றும் தெரியவில்லை. அமுல்யன் நூல் வாங்கி வரச் சந்தைக்குப் போயிருந்தான். சோபாவும் ஆபுவும் வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு வாசலில் தண்ணீர் தெளித்தார்கள். நரேன் தாஸின் மனைவி மழைவரும் என்று பயந்து, காய்ந்த சணல் தட்டைகளை உள்ளே கொண்டுவந்து வைத்தாள். புயலும் மழையும் வந்துவிட்டால் வாத்துக்களுக்கு வீடு திரும்ப முடியாது. அவை வழி தவறிப் போகும். அவற்றுக்கு ஏதாவது ஆபத்து வரலாம். மாலதி உயிரைப் பிடித்துக்கொண்டு உரக்கக் கூப்பிட்டாள். ''வா, வா! தொய்,... தொய்!'

சோபாவும் ஆபுவும் கட்டாரி மரத்துக்குக் கீழே அத்தையின் குரலைக் கேட்டார்கள். அத்தை வெகுநேரமாக வாத்துக்களைக் கூப்பிட்டுக்கொண் டிருந்தாள். அவர்கள் காபிலா மரத்தைத் தாண்டிச் சென்று தாங்களும் அத்தையுடன் சேர்ந்து வாத்துக்களைக் கூப்பிடத் தொடங்கினார்கள். தூரத்தில் சாமுவின் படகு போய்க் கொண்டிருந்தது. மழை வரப் போகிறது என்று தெரிந்தும் சாமு வீடு திரும்பவில்லை.

ஜாலாலி மழை வரப்போகும் அறிகுறிகளை ஆகாயத்தில் கவனித் தாள். தண்ணீருக்கு அருகில் முட்செடிப் புதரைக் கடந்தால் கல்யாண முருங்கை மரத்துக்குக் கீழே சணல் தட்டை வேலி போட்ட அவளுடைய குடிசை வரும். ஈரமண்ணின் வாசனை வந்தது.

ஜோட்டன், பக்கிரி சாயபுவுடன் தர்காவுக்குப் போய்விட்டாள். வீடு முற்றிலும் காலி. ஹாஜி சாயபுவின் பண்ணை வீட்டைத் தாண்டிய பின்பே மற்ற வீடுகள். இருட்டும் தனிமையும் இருந் தாலும் ஜாலாலி பத்திரமாக வாத்தைச் சட்டியில் துணியால் மூடி வைத்திருந்தாள். மழை வந்துவிட்டது. மழைக் காலமாதலால் எங்கும் பலவிதச் செடிகள் காடாக மண்டிக் கிடந்தன. எங்கும் ஒரு பசுமை மணம். சட்டியை மூடத் துண்டை எடுத்துக்கொண்டு விட்டதால் அவள் அம்மணமாக இருந்தாள். இங்குமங்கும்

142பார்த்துவிட்டு அவள் வீட்டுக்குள் ஓடினாள். இருட்டும் மழையுமாக இருந்ததால் கட்டாரி மரத்துக்குக் கீழே மாலதியின் குரல் கேட்க வில்லை. பக்கத்தில் பூச்சிகளின் அரவம் மட்டுமே கேட்டது.

மாலதியின் மூன்று பெண் வாத்துக்கள் திரும்பி வந்துவிட்டன. ஆண் வாத்தைக் காணோம். மாலதிக்கு நெஞ்சு படபடத்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு அதை வனர்த்துக்கொண் டிருக்கிறாள், அவள்! தனக்கு மிகவும் பிரியமான ஆண் வாத்தைக் காணாமல் அவள் தன் அண்ணியைக் கூப்பிட்டு, "அண்ணி, என்னோட ஆண் வாத்தைக் காணோம். மூணு பெண் வாத்துத்தான் வந்திருக்கு!'' என்றாள்.

மாலதியின் அண்ணி உலர்ந்த சணல் தட்டைகளை உள்ளே கொண்டு போய்க் கொண்டிருந்தாள். அவற்றின் சப்தத்தின் காரண மாக அவளுக்கு மாலதியின் குரல் மட்டுமே கேட்டது. அவள் சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை. அவள் தட்டைகளை உள்ளே போட்டுவிட்டு மரத்தடிக்குப் போய், 'என்ன வந்துடுத்து உனக்கு?" என்று கேட்டாள்.

மாலதிக்கு அழுகை வந்துவிட்டது. ''நீயே பாரு, என்ன ஆச்சுன்னு! மூணு பெண் வாத்தும் இருக்கு, ஆண் வாத்தைக் காணோம்!''

''இங்கேதான் எங்கேயாவது ஓடிப்போயிருக்கும். நன்னாப் பாரு !" ''நீ என்ன சொல்றே, அண்ணி? அது எங்கே ஓடும் இந்த இருட்டிலே? அதுக்குப் பயம், கியம் கிடையாதா?"

''இருக்கு, இருக்கு. அமூல்யன் வரட்டும்! படகிலே ஏறிப் போய்த் தேடிப் பார்க்கலாம். நீ தண்ணியிலேருந்து எழுந்திருந்து வா!''

மாலதி நீரிலிருந்து வெளியே வந்தாள். அவளுடைய மனசில் வருத்தம் நிரம்பியிருந்தது. அழவேண்டுமென்ற ஆசை தீவிரமாகியது. ஆண்வாத்தின் மேல் அவளுக்கு உயிர். எவ்வளவோ கஷ்டப் பட்டு அதை வளர்த்தாள். அந்த இளம் விதவையின் ஒரே ஆதாரம் இதுதான். மழையிலும் புயலிலும் ஒரு நாள் நரேன்தாஸ் நான்கு வாத்துகளையும் ஒரு கூண்டில் வைத்துக்கொண்டு எடுத்து வந்ததிலிருந்து அவள் அவற்றை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். மிகவும் சிறியதாக இருந்ததால் முதலில் அவற்றால் இளம்புல்லைத் தின்னமுடியாது, சாதம் சாப்பிட முடியாது, சின்னஞ்சிறு டார்க்கினா மீன் கூடப் பிடிக்கமுடியாது. மாலதி அப்போது அவற்றின் வாயைத் திறந்து அவற்றுக்கு உணவூட்டி வளர்த்தாள். அவள் நீரிலிருந்து வெளியே வரும்போதும் கூப்பிட் டாள், 'வா..வா! தொய்... தொய்.''

இருட்டாக இருந்ததாலும் மழைவரும்போல் இருந்ததாலும் அவளால் கட்டாரி மரத்தடியில் வெகுநேரம் நிற்க முடியவில்லை.

143ஜாலாலி வீட்டில் விளக்கேற்றினாள். வீட்டில் ஒரு கிழிந்த பாய். நாங்கல்பந்துச் சந்தையிலிருந்து வாங்கி வந்த சட்டியும் தட்டும் உறியில் வைத்திருந்தன. விளக்கு எரிந்து கொண் டிருந்தது. அவள் ஈரத்துண்டைக் கீழே விரித்து அதன்மேல் செத்த வாத்தை வைத்தாள். தன் வீட்டுக் கதவைச் சாத்தினாள். சிம்னியின் வெளிச்சத்தில் அவளுடைய அடிவயிறு பளபளத்தது. வாயிலிருந்து பசியேப்பம் வந்தது. அவள் வாத்தின் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தபோது அதில் கதகதப்பு இல்லை. அவள் உடனே வாத்துக்கு மேலே குனிந்து உட்கார்ந்துகொண்டு அதன் இறக்கைகளைப் பிடுங்கினாள். அவளுடைய உடலிலிருந்து இன்னும் தண்ணீர் சொட் டியது. சொட்டிய தண்ணீரால் தரை ஈரமாகிவிட்டது. அவள் ஜாக்கிரதையாக வாத்தைத் துண்டுடன் உலர்ந்த தரைக்கு இழுத்து வந்து, மண்டியிட்டவாறே அதை நெருப்பில் வாட்டத் தொடங் கினாள். வெளியே மழை பெய்து கொண டிருந்தது.

பல நாட்களாக அவளுடைய வயிற்றில் சோறு விழவில்லை. பல நாட்களாக அவள் நாவல்பழமும் ஜாம்ருல் பழமும் அல்லிக் கிழங்கும் தின்று பசியைத் தீர்த்துக்கொண் டிருந்தாள். அவள் நாள் முழுவதும் நல்ல சாப்பாட்டுக்காகக் கனவு கண்டுகொண் டிருந்தாள். இந்த வாத்து அவளுடைய கனவை நனவாக்கிவிட்டது. அல்லா தனக்கு இவ்வளவு தூரம் கருணை காட்டியது பற்றி அவளுக்கு ரொம்பச் சந்தோஷம். ஆனந்த மிகுதியின் காரணம் மாகவோ, பசிவெறி காரணமாகவோ அல்லது பேராசை காரண மாகவோ அவள் துணி அணிந்துகொள்ள மறந்துவிட்டாள். தேசத் தின் வரைபடத்தில் ஆறுகள் கோடுகளாகத் தெரிவது போல் அவளுடைய அடிவயிற்றின் வெள்ளை மடிப்புகளில் நீர் கோடு கோடாக மின்னியது. ஜாலாலி தன் அடிவயிற்றைத் தடவிக்கொண்டு நினைத்தாள் : ''இதில மறுபடி கொழுப்பு வளரும். ஆபேத் அலி கொய்னாப் படகில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புவான்."

அவள் வாத்தின் வயிற்றுக்கடியில் நகங்களால் பிராண்டிப் பிராண்டி அங்கிருந்த அசுத்தங்களைக் களைந்தாள். அப்போது அவள் ஆபேத் அலியின் துக்கத்தைப் பற்றி நினைத்துக்கொண்டாள். ஆபேத் அலி சொல்வான், ''ஜப்பர் பொறந்தப்பறம் உன் வயிறு இடுங்கிப் போயிடுச்சு, பெருக்கவே இல்லை. அதிலே கொழுப்பு வைக்கவேயில்லை!''

அவள் இப்போது மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். 'நீ மட்டும் எனக்கு வாரவாரம் வாத்து மாமிசம் சாப்பிடக் கொடு. கொஞ்ச நாளிலே என் தேகத்தில் எவ்வளவு கொழுப்பு வைக்கறது பாரு!' அவளுக்கு இப்போது மாலதியின் நினைவும் வந்தது. மாலதி

144இளம் விதவை. அவளுடைய அழகு நாளுக்கு நாள் அதிகமாகியது. 'அல்லா, எனக்கு நீ ஏன் அவளோட அழகைக் கொடுக்கல்லே?'

வெளியில் மழை கனத்தது. இப்போது அவள் வாத்தின் தோலை உரித்துவிட்டாள். மூங்கில் குப்பியில் கடுகெண்ணெய் இல்லை. மழை காரணமாக அவளால் எண்ணெய் வாங்கிவர வெளியே போக முடியவில்லை. அவள் வெகுநேரம் வாத்தை நெருப்பில் வாட்டியதால் கருகிய நாற்றம் ஏற்பட்டது. அவள் வெந்த மாமிசத்துடன் உப்பையும் மிளகாயை யும் போட்டு வதக்கி இரண்டு தட்டுகளில் வைத்தாள். அவள் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். பிறகு சட்டென்று எலும்பை வாயிலிருந்து எடுத்துச் சப்பிச் சப்பிச் சாப்பிடத் தொடங்கினாள்.

அறை முழுதும் வாத்துச் சிறகுகள் காற்றில் பறந்து கொண் டிருந்தன. சிம்னி விளக்கு தபதபவென்று எரிந்து கொண்டிருந்தது. வெளிச்சத்தையும், அறை முழுதும் வாத்துச் சிறகுகள் பறப்பதையும் பார்த்து, வாத்தைத் திருடித் தின்பது பற்றிய ஒரு குற்ற உணர்வு அவளைப் பீடித்தது. ஆபேத் அலிக்குத் தெரிந்தால் அவளை உதைப் பான். அவள் சாப்பாட்டை நிறுத்திக்கொண்டு, வாத்துச் சிறகுகளைப் பொறுக்கி யெடுத்துக்கொண்டு, மழையைப் பொருட்படுத்தாமல் தண்ணீரில் இறங்கி நடந்தாள்.

அரசமரத்தடியிலிருந்த புதர்களுக்கருகில் அவள் வாத்துச் சிறகுகளை எறிந்துவிட்டுச் சொன்னாள்: "அல்லா, எனக்குப் பசிக்குது. நான் போறேன்!''

மழையில் நனைந்ததில் அவளுடைய துக்கங்கள் கரைந்து விட்டன. வருத்தம் நீங்கியவளாக அவள் வீடு திரும்பினாள். தண்ணீரில் சணல் பயிர் சாய்ந்து கிடப்பது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. அவள் சணல் வயல்களைக் கடந்தபோது தண்ணீரின் மேல் ஒரு விளக்கின் வெளிச்சம் அசைவது தெரிந்தது. கவன மாகக் கேட்டதில் மாலதி தன் வாததைக் கூப்பிடுவது காதில் விழுந்தது. ''வா..வா! தொய்.. தொய்!' அவள் மேலும் தாமதிக் காமல் சட்டென்று வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டாள். ஒரு மரக்கட்டையின் மேல் உட்கார்ந்துகொண்டு வாத்து மாமிசத்தைக் கடித்துச் சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். மாலதி கூப்பிடுவதைப் பார்த்தால் தட்டிலிருக்கும் வாத்து அந்தக் கூப்பாட்டுக்குப் பதில் ஒலி எழுப்பும் போல் இருந்தது. அவள் இப்போது அவசர அவசரமாக மாமிசத்தைச் சாப்பிட

145ஆரம்பித்தாள். தட்டிலிருந்த வாத்துக்குக் கத்தும் வாய்ப்பைத் தர அவள் விரும்பவில்லை.

மழை நின்றதும் சாமு வீடு திரும்பிக்கொண் டிருந்தான். தனுஷேக் படகை ஓட்டிக்கொண் டிருந்தான். தூரத்தில் தெரிந்த விளக்கொளியும், மாலதியின் குரலும் இன்னும் வாத்து கிடைக்க வில்லை என்பதை அவளுக்கு உணர்த்தின. மாலதியும் அமூல் பயனும் கத்துகிறார்கள் : ''வா! தொய்... தொய்!" துக்கம் நிரம்பிய இந்தக் கூப்பாடு வயல்வெளியையும் கிராமத்தையும் தாண்டி வெகு தூரம் சென்றது. மாலதி எதையோ தேடுவதை வெகு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் பார்த்தான் சாமு. அமூல்யன் படகோட்டினான். நெல் வயல்களிலோ, சணல் வயல்களிலோ, புதர்களிலோ வாத்து பயந்து கொண்டு மறைந்திருக்கிறதா என்று பார்த்தாள் மாலதி.

இப்போது மாலதி சாமுவின் படகைப் பார்த்தாள். சாம்சுத்தீன் அவளிடம் ஏதோ சொல்ல விரும்பினான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. மாலதி, அவன் வேறு ஜாதிக்காரன் என்ற அருவருப்பில் அவனுடன் முதலில் பேசவில்லை. அவளுக்கு வாத்தை நினைத்து அழுகை வந்தது. அவள் சாமுவைப் பார்த்தும் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய நடத்தை யால் அவமான உணர்வு ஏற்படவில்லை சாமுவுக்கு. ஏனெனில் மாலதி பரிதாபத்துக்குரிய அபலையாகக் காட்சியளித்தாள் இப்போது. ''உன் வாத்தெல்லாம் வீடு வந்து சேரல்லியா?'' என்று அவன்

கேட்டான்.

''பெண்வாத்தெல்லாம் வந்துடுத்து. ஆண் வாத்தைக் காணோம்!'' குனிந்து கொண்டே சுருக்கமாகப் பதில் சொன்னாள் மாலதி.

நாற்புறமும் ஈரக்காற்றின் மணம். இருட்டு மேலும் அதிகரித்து வந்தது. சாமு, அமூல்யன் இருவருமே இப்போது வாத்தைக் கூப்பிடத் தொடங்கினார்கள். ஓர் இடத்திலிருந்தும் வாத்தின் பதில் ஒலி கேட்கவில்லை. அரசமரத்தில் பல மின்மினிகள் ஒளிர்ந்தன. அதன் அடியில் வாத்துச் சிறகுகள் பறந்தன. படகுபோல் சில நீரில் மிதந்தன.

சாமு, அமூல்யன், மாலதி மூவரும் சேர்ந்து வாத்தை அழைத் தார்கள். அவர்கள் விளக்கைத் தூக்கி வயல்களுக்குள் பார்த்த போது வாத்துச் சிறகுகள் தண்ணீரில் மிதப்பதைக் கண்டார்கள். அரசமரத்தடிக்கு வந்ததும் அங்கே சிதறிக் கிடந்த சாம்பல் நிறச் சிறகுகளைப் பார்த்து, மாலதி வாத்து இறந்துபோய்விட்டதென்று ஊகித்துக் கேவிக் கேவி அழத் தொடங்கினாள்.

146இந்த அழுகையும் வாத்துச் சிறகுகளும் சாமுவுக்கு அன்று மாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நினைவுறுத்தின. புதர்களின் இடுக்கில் அவன் கண்ட ஜாலாலியின் முகம் அவன் மனசில் தோன்றியது. அவன் அப்புறம் வாத்தைத் தேடவில்லை. மாலதி விதவை. அந்த இளம் விதவையின் ஒரே ஆதாரம் அந்த வாத்து. அதைத் தன் பிள்ளையைப் போல் செல்லமாக வளர்த்து வந்தாள் மாலதி. கோபத்தாலும் வருத்தத்தாலும் அவனால் பேசக்கூட முடியவில்லை. போக்கிரி ஓநாயின் முகத்தையொத்த ஜாலாலியின் முகம் அவன் நினைவில் தோன்றியது. மாலதியின் வேதனை சாமுவுக்கு ஜாலாலியிடம் ஆத்திரத்தைக் கிளப்பியது.

''வீட்டுக்குப் போ, மாலதி !'' என்று அவன் சொன்னான்.

அமூல்யனும் சொன்னான், ''ஆமா அக்கா ! வீட்டுக்குப் போவோம்" என்று.

"அழாதே, மாலதி!'' என்று சாமு சொன்னான். மாலதி கண்களை உயர்த்திச் சாமுவைப் பார்த்துவிட்டு நினைத்தாள். இவன் அதே பழைய சாமுதான். அவன் கண்கள் சின்னதாக இருக்கும், கன்னங்கள் உருண்டையாக இருக்கும், மிகவும் அமைதி யாக இருப்பான். இளம் வயதில் மாலதி துக்கப்படுவதைப் பார்த்தால் துடித்துப் போவான். இன்று சாமு மீசை, தாடி இல்லாமல், ஓர் இந்து இளைஞனைப் போலத் தன் உதவிக்கு வந்து நிற்பதாக அவளுக்குத் தோன்றியது. நெடுங்காலமாக அவளுக்கு அவனிடம் மிருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவள் ஓர் அப்பாவிப் பெண்ணைப் போல் பதில் பேசாமல் அவனைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தாள்.

இரண்டு படகுகளும் அருகருகே நின்றிருந்தன. அரிக்கேன் விளக்கொளியில் அவர்களுடைய முகங்கள் தெளி வாகத் தெரிந்தன. கிராமத்துக்குள்ளிருந்து நாய்களின் குரைப்பொலி காற்றில் மிதந்து வந்தது. பிஸ்வாஸ் பாடாவில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி. ஆகாயத்தில் மேகங்களின் நிழல். நட்சத்திரங்கள் மாலதியின் வேதனையை மிகுதியாக்கின. இவ்வேதனை யுணர்வு சாமுவையும் பீடித்தது.

சிறுவன் சாம்சுத்தீன் தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு வயல்வெளிகளைக் கடந்து போனான். நாற்புறமும் தாரை தப்பட்டைகள் ஒலித்தன. நாற்புறமும் டவாலி போட்ட சேவகர்கள். அவனுடைய அப்பா துர்க்கைச் சிலைக்கு முன்னால் சிலம்பம் விளையாடினார். சாமுவுக்குத் தோன்றியது, அந்தக் காலத்துப் புகழ்வாய்ந்த மனிதர்கள் இப்போது வலுவிழந்து போய்

147விட்டார்கள். புதிய சிந்தனையும், புதிய மதவெறியும் அவர்களைக் குறுகிய நோக்குள்ளவர்களாக ஆக்கிவிட்டன. அவனுக்கு ஜாலாலி யின் மேல் ஆத்திரம் வந்தது. அந்த ராட்சசியின் வயிற்றைக் கிழித்து மாமிசத்தை வெளியே கொண்டு வந்துடறேன்!' என்று சொல்லிக்கொண்டான் சாமு.

அவனுடைய படகு கொஞ்சங் கொஞ்சமாக நகர்ந்து கடைசியில் மறைந்துவிட்டது. அமுல்யனும் மாலதியும் அரிக்கேன் விளக் குடன் பின் தங்கிவிட்டார்கள். சற்றுத் தூரம் வரை அரிக்கேனின் ஒளி இருட்டை ஓரளவு ஒதுக்கிவைத்திருந்தது. தூரத்தில் செல்லச் செல்ல மாலதியின் முகம் மங்கிக்கொண்டே வந்தது. மர்மம் நிறைந்த பெண் மாலதி! மழை நீர் பயிர்களிலிருந்து தண்ணீரிலும் படகின் மேல்தட்டிலும் சொட்டுச் சொட்டாக விழுந்தன, மாலதியின் கண்களிலிருந்து விழும் கண்ணீரைப் போல.

சாமு தூரத்திலிருந்து, 'மாலதி. நீ வீட்டுக்குப் போ! அமுல்யா படகைத் துரைக்குக் கொண்டு போ! ராத்திரி வேளையிலே இப்படிச் சுத்தக்கூடாது!'' என்று கூறினான்.

மாலதியின் வேதனை சாமுவை மிகவும் துன்புறுத்தியது.

ஆபேத் அலியின் வீட்டுப் படகுத் துறைக்குப் படகைச் சப்த மில்லாமல் கொண்டுபோகும்படி தனுஷேக்கிடம் சொன்னான், சாமு. படகுத் துறையை அடைந்ததும் அவன் அதிலிருந்து இறங்கிக் கரையேறினான். முழங்கால் வரையில் சேறு. மழைத் தண்ணீர் இன்னும் புதர்களிலிருந்து இறங்கிக்கொண் டிருந்தது. கொஞ்சம் காற்று அடித்தாலும் மரங்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன.

ஆபேத் அலியின் வீட்டுக்குள் மங்கலான ஒளி. அரவம் ஒன்றும் இல்லை. ஆபேத் அலி இல்லை, ஜப்பர் பாபூர் ஹாட் போயிருந் தான். ஜோட்டனும் இல்லை. பூதம் வாழும் வீடு போல் தோன்றியது, அந்த வீடு. சாமு பிரம்புச் செடி வேலியைச் சற்று விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே ஒரு சிம்னி விளக்கு எரிந்தது. ஜாலாலி முக்கால் நிர்வாணமாக ஒரு பலகை யின் மேல் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு முன் இரண்டு தட்டு களில் எலும்புத் துண்டுகள். அவற்றில் மாமிசம் ஒட்டிக்கொண் டிருக்கவில்லை. ஜாலாலி அவற்றை எடுத்து எடுத்துச் சப்பினாள், பற்களுக்கிடையில் எலும்புகளை வைத்து மடமடவென்று கடித்தாள். தண்ணீர் குடித்தாள்.

அன்று மாலையில் அவன் தண்ணீருக்கு மேல் கண்ட முகம் - போக்கிரி ஓநாயைப் போல் அருவருப்பாக இருந்த ஜலாலியின் முகம் - மாமிசத்தைச் சாப்பிட்ட பிறகு இப்போது இயற்கையாக,

148அழகாகக்கூட இருப்பதாகச் சாமுவுக்குத் தோன்றியது. அல்லாவின் கருணைக்காக நன்றியுணர்வு அம் முகத்தில் தோன்றியது. தண்ணீர் குடித்தபோது அவள் இருமுறை அல்லாவை நினைத்துக்கொண்டாள். இந்த ஏழை மக்களுக்காகக் காட்டுக்குப் போகவும் தயாராயிருக் கிறான் சாமு. ஆகையால் மாலதியின் வாத்து கெட்டுப் போனதும் அவன் ஜலாலியின் வயிற்றைக் கிழிக்க விரும்பியதும் இப்போது அவனுக்கு மறந்துவிட்டன. ஜாலாலி இப்போது ஒரு கிழிந்த பாயின் மேல் உட்கார்ந்து தொழுகை செய்தாள். அவளுடைய முகம் ரசூலின் முகத்தைப் போல் தூய்மையாக இருந்தது. அவள் தன்னுடைய இரு கைகளையும் முன்னே நீட்டிக்கொண் டிருந்தாள். சாம்சுத்தீனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. விணாக இலங்கை யைப் பங்கிட முற்பட்ட காலநேமியைப் போல் அவனும் வாழ்க்கையாகிய தெருக் கூத்தில் ஒரு வீண் முயற்சியில் ஈடுபட்டிருந் தான். அவன் நகராமல் நின்றுகொண் டிருந்தான். அவனுடைய கால்கள் பூமியில் புதைந்துவிட்டாற் போன்ற உணர்வு.

குளிர்காலம் வந்துவிட்டால் இந்த மனிதர் சில நாட்கள் நன்றாக இருக்கிறார். குளிர் காரணமாக இப்போது மணீந்திரநாத் மேலே ஒரு சால்வையைப் போர்த்துக்கொண் டிருந்தார். முன்பு போல் வெறும் மேலுடம்புடன் நிற்கவில்லை. இப்படிக் கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறி ஒரு நாள் உண்மையிலேயே சொஸ்த மாகிவிடுவார். அப்போது இருவரும் ஒன்றாகப் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு புண்ணிய தலத்துக்கோ அல்லது ஏதாவதொரு பெரிய பட்டணத்துக்கோ போய்விடுவார்கள். பெரியமாமி கதை களில் கேட்டிருக்கிறாள். ஒரு பெரிய மைதானம் இருக்கிறது; அதன் அருகில் ஒரு குளம் இருக்கிறது; அதில் ஒரு பெரிய தாமரை மலர்ந் திருக்கிறது. பெரிய மாமி கிரேக்கப் புராணக் கதா நாயகனான இவரைக் கூட்டிக்கொண்டு அங்கே போய்விடுவாள். அவர் சொஸ்தமாகிவிட் டால் ஒரு தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் வழங்கிக்கொண்டு நிற்பார். அப்போது தூரத்தில் மாதா கோவில் மணி அடிக்கும். புரோகிதர் கள் மந்திரம் சொல்வார்கள். மணீந்திரநாத் நெல்லி மரத்தடியில் நின்றுகொண்டு பொன்மானைப் பற்றிக் கனவு காண்பார்.

அவர் இயற்கையாக இருப்பதைப் பார்த்துவிட்டுப் பெரிய மாமி அவருக்கு ஒரு டம்ளர் சூடான பால் கொண்டுவந்தாள். கூடவே புது வெல்லம், மர்த்தமான் வாழைப்பழம், சூடான முட்டைப் பொரி எல்லாம் எடுத்து வந்தாள். அவள் ஒரு பெரிய ஆசனத்தைப் போட்டு அவருக்காகக் காத்திருந்தாள்.

நாய் மணீந்திரநாத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. சோனா தென்பக் கத்து வராந்தாவில் படித்தான். நாய் இடையிடையே 'உர்' 'உர்'

149என்று உறுமியது. செம்பரத்தைச் செடிக்கடியில் குளிர்காலத் தவளை 'கிளப், கிளப்' என்று ஒலித்தது. மணீந்திரநாத் பாலைக் குடித்து விட்டு வெல்லத்தைத் தடவி வாழைப்பழத்தைத் தின்றார். கொஞ்சம் நாய்க்கும் கொடுத்தார். அவர் அங்கிருந்து புறப்படும் நேரத்தில் சோனா சப்தம் செய்யாமல் படிப்பை விட்டுவிட்டு அங்கே வந்தான். மணீந்திரநாத்துக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் நாயையும் சோனாவையும் கூட்டிக்கொண்டு வயல்களுக்குள் இறங்கினார்.

அவர்கள் ஸோனாலி பாலி ஆற்றுக்குள் இறங்கினார்கள். இப்போது தண்ணீரில் வேகம் இல்லை. தண்ணீரும் அதிகம் இல்லை. விரும்பினால் நடந்தே ஆற்றைக் கடந்துவிடலாம். ஆற்றங்கரையில் இருந்தவர்கள் மணீந்திரநாத்துக்கும் சோனாவுக்கும் சலாம் செய் தார்கள்.

பக்கத்தில் எல்லாம் முகமதியர் வசிக்கும் கிராமங்கள். அவர் களைக் கண்டதும் படகோட்டி படகை மறுகரையிலிருந்து இக் கரைக்குக் கொண்டுவந்தான். நாய் எல்லாருக்கும் முன்னால் படகில் ஏறிக்கொண்டது. என்றாவது ஒரு நாள் அதிகாலை வேளையில் பைத்தியக்காரப் பெரியப்பாவுடன் வயல்களையும் கிராமங்களையும் பார்க்கப் புறப்பட வேண்டுமென்று சோனாவுக்கு வெகு நாளைய ஆசை . பெரியப்பா தினந்தோறும் பல கோசதூரம் நடந்து போய் விட்டு நடுப்பகலிலோ மாலையிலோ களைப்புற்ற போர்வீரனைப் போல வீடு வந்து சேருகிறார். அவருடைய கால்களில், அவர் கடந்த ஆறு, வாய்க்கால்களின் அடையாளங்கள் தெரிந்தன. அவர் கோடையில் தர்மூழ் பழமும் குளிர்காலத்தில் கரும்புக் கட்டும் கொண்டுவருவார். அவரைக் காட்டில் வாழும் இளவரசனாகக் கருதினான் சோனா. அவரிடம் விதவிதமான கதைகள் கேட்க சோனாவுக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு விசித்திரமான கதைகள் சொல்லுவார் அவர்! ஆளரவம் அற்ற வயல்வெளிக்கோ மைதானத் துக்கோ வந்துவிட்டால் அவர் கதை சொல்லத் தொடங்கிவிடுவார். பைத்தியக்காரரான தால் அவருடைய கதைகளுக்கு ஆரம்பமும் இருக்காது, முடிவும் இருக்காது.

"தாமரைக் குளத்துக்குப் போவோமா?'' என்று அவர் சோனாவைக் கேட்பார்.

சிலசமயம், ''இலிஷ்மீனோட வீடு பார்க்கலாமா?'' என்பார். சோனா பதில் சொல்லாவிட்டால், ''ரூப்சாந்த் பட்சி பார்க்கிறியா?' என்பார்.

சோனா பதில் சொல்வதில்லை. பதில் சொன்னால், ''கேத்சோரத் சாலா !" என்பார் அவர்.

ஒரு தடவை அவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

150''நான் பட்சிராஜாக் குதிரை பார்க்கணும். காட்டுவீங்களா?'' என்று கேட்டான்.

மணீந்திரநாத்துக்குச் சொல்லத் தோன்றும்; 'நீ தாமரைக்குளம் பார்க்க ஆசைப்படல்லே. இலிஷ்மீனோட வீட்டைப் பார்க்க விரும்பலே. ரூப்சாந்த் பட்சியைப் பார்க்கறதில்லே. உனக்கு எப்போதும் பட்சிராஜக் குதிரைதான் பார்க்கணும். எனக்கும் ஒரு பட்சிராஜாக் குதிரை வேணும். ஆனா எங்கே கிடைக்கிறது அது?. கேள்வி கேட்கும் பாவனையில் அவர் சோனாவைப் பார்ப்பார்.

இன்று சோனாவுக்குப் பட்சிராஜாக் குதிரை பார்க்கத் தோன்ற வில்லை. அவன் படிப்பை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான் அம்மாவும் சின்னப் பெரியப்பாவும் அவனைத் தேடிக்கொண் டிருப்பார்கள். 'சோனா எங்கே போயிட்டான்? எங்கே போயிட் டான்?' என்று எல்லாரும் தேடுவார்கள்.

இதெல்லாம் ரொம்ப வேடிக்கையாக இருந்தது சோனாவுக்கு . பாதிமாவைத் தொட்டதற்காக அம்மா அவனை அடித்தாள். 'ஜாதி போயிடுத்து, ஆசாரம் போயிடுத்து' என்று பாட்டி கத்தினாள். எல்லாரும் அவனை ரொம்ப நாள் இளப்பம் செய்தார்கள். அவன் ஏதாவது தவறு செய்துவிட்டால் லால்ட்டுவும் பல்ட்டுவும் அவனைத் தோப்புக்கரணம் போடச் செய்வார்கள். இப்போது எல்லாரும் கவலைப்படட்டும்.

இந்த எண்ணத்துடன் தான் அவன் திருட்டுத்தனமாக வீட்டை விட்டு வந்து பெரியப்பாவுடன் சேர்ந்து கொண்டான்.

பைத்தியக்காரரானதால் அவர் அவனுக்கு உற்சாகம் அளித்தார். ''பட்சிராஜாக் குதிரை எங்கேயாவது ஆகாயத்தில் பறந்துகொண் டிருக்கும். எங்கேயாவது சங்ககுமாரன் சங்குக்குள் ஒளிந்துகொண் டிருப்பான். எங்கோ ஓர் இடத்தில் சம்பக நகரத்து இளவரசி ஒரு கிளிஞ்சலுக்குள் பாம்பின் விஷத்தால் மயங்கிக் கிடப்பாள். சோனா, நீயும் நானும் அங்கே போகலாம். வயலிலிருந்து எல்லாருக்கும் பொன்னிறத் தானியக் கதிர்கள் எடுத்துக்கொண்டு வருவோம் !"

அவர்கள் எவ்வளவோ கிராமங்களையும் வயல்களையும் கடந்து வந்துவிட்டார்கள். அவர்கள் போகப் போக ஆகாயமும் நகர்ந்து கொண்டே போயிற்று. நிறைய நடந்ததால் பசியால் களைத்துப் போய்விட்டான் சோனா. அவன் எவ்வளவு முயன்றும் அவனால் ஆகாயத்தைத் தொடமுடியவில்லை. பெரியப்பாவுடன் வெளியே போகவேண்டும் : நதியின் மறுகரையில் இறங்கி வந்திருக்கும் ஆகாயத்தைத் தொட்டுவிட வேண்டும் என்பது அவனுடைய வெகு நாளைய ஆசை. ஆனால் ஏதோ மந்திர பலத்தால் ஆகாயம் விலகிக்கொண்டே போகிறதே!

151அவர்களுக்குத் தெரிந்த சிலர் சோனா பெரியப்பாவுடன் நடந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கேட்டார்கள். ''சோனா பாபு , நீங்க பெரியப்பாவோடே எங்கே போறீங்க? நடக்கக் கஷ்டமா இல்லியா?"

சோனா பெரிய மனிதனைப்போல் தலையாட்டிக்கொண்டு, "இல்லை!'' என்றான்.

ஆனால் மணீந்திரநாத்துக்குப் புரிந்தது , சோனாவால் நிஜமாகவே நடக்க முடியவில்லையென்று. அவர் அவனைத் தன் தோளில் தூக்கி வைத்துக்கொண்டார். இப்போது வெயில் அதிகமாக இருந்தது. புல்லின் மேலிருந்த நீர்த்துளிகள் உலர்ந்துவிட்டன. சூரியன் தலைக்கு மேலே இருந்தான். இந்தச் சமயத்தில் எங்கோ ஒரு மணி யடிப்பது அவர்களுடைய காதில் விழுந்தது.

பட்சிராஜாக் குதிரை தான் வருகிறது என்று நினைத்தான் சோனா. அவன் கைகளைக் கொட்டிக்கொண்டு, 'பெரியப்பா, பட்சிராஜாக் குதிரை!'' என்று கூவினான்.

மணீந்திரநாத்துக்கு வீடு திரும்பும் நினைவு வந்தது. மணியோசை அவருக்கு வீட்டை நினைவு படுத்தியிருக்கலாம். வலப்பக்கம் வெகு தூரத்துக் காடு. அதற்குள் புகுந்து நடந்தால் ஸோனாலி பாலி நதியையும் அதன் கரையிலுள்ள தர்மூஜ் வயலையும் அடைந்து விடலாம். இப்போது ஈசம் தர்மூஜ் வயலில் இரண்டொரு கொடிகளை பிரித்துப் போட்டுக்கொண்டிருப்பான். காட்டில் பலவித மரங்கள். மணியோசை நெருங்கி வந்தது. பலவிதப் பழமரங்கள். எல்லாம் தெரிந்தவை அல்ல. ஆனால் நாவல் பழத்தின் மணமும் மஞ்சித்தியின் வாசனையுமே மிஞ்சி நின்றன. இப்போது பழங்களின் பருவம் முடிந்துவிட்டது. சோனா மரத்துக்கு மரம் எங்கெங்கே பழம் பழுத்திருக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தான்.

அவர்கள் மைதானத்துக்கு வந்து சேர்ந்த போது எதிரில் ஓர் அதிசயப் பிராணியைப் பார்த்தார்கள். மலை போன்ற உடல். அதன் கழுத்தில் மணி ஒலித்தது. ''இதோ பாருங்க, பெரியப்பா!'' சோனா கூவினான்.

நாய் ஓடிப் போக விரும்பி 'உர், உர்' என்றது. மணீந்திரநாத் அதைப் பிடித்து வைத்துக்கொண்டார். சோனாவை இறக்கிவிட்டார். மூவரும் அந்தப் பிராணிக்காகக் காத்திருந்தார்கள். அது அருகில் வந்தால் இவர்கள் ஓடிவிடலாம். அது வேறு பக்கம் போய்விட் டால் இவர்களுக்குப் பயம் இல்லை.

ஆச்சரியத்தில் சோனாவுக்குப் பேச வரவில்லை. அவன் இரண்டா வது பெரியப்பாவிடம் இந்த யானையைப் பற்றி நிறையக் கேள்விப்

? 2

152பட்டிருக்கிறான். இது ஜமீந்தார் வீட்டு யானை. அது ஆடியசைந்து இவர்களுக்கு அருகில் வந்தது. சோனாவின் வயதை யொத்த ஒரு சிறுவன் அதன் மேல் உட்கார்ந்து கொண்டு அதை ஓட்டி வந்தான். இதைப் பார்த்துச் சோனாவின் பயம் பறந்து போய்விட்டது. அவன் உற்சாகத்துடன் பெரியப்பாவைக் கூப்பிட்டான்.

அவர் இப்போதுதான் வாயைத் திறந்தார். "இது யானை ..... யானை."

'ஆமா. மூடாபாடாவிலேருந்து வந்திருக்கு." இது என்ன ? யானை அவர்கள் இருக்கும் பக்கம் ஓடி வருகிறதே! தன் பெரிய பெரிய கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு வந்தது அது. இவ்வளவு பெரிய பிராணி தங்களை நோக்கி வருவதைக் கண்டு சோனா பயத்தால் சுருண்டு போய்விட்டான். அது அவர் களுக்கு எதிரில் வந்துவிட்டது. பெரியப்பா நகராமல் நின்றார். நாய் மட்டும் இங்குமங்கும் ஓடியது. ஓடுவதா, வேண்டாமா என்று யோசித்துக்கொண் டிருந்தான் சோனா. பின்னால் திறந்த மைதானம், முன்னால் புதர்கள். அவன் எந்தப் பக்கம் ஓடுவதென்று தீர்மானிக்க முடியாமல் தவித்தான். அவன் பெரியப்பாவை இறுகக் கட்டிக் கொண்டு, ''பெரியப்பா, நான் வீட்டுக்குப் போறேன்" என்றான்.

அவர் பதில் பேசாமல், இமை மூடாமல் யானையைப் பார்த்துக் கொண்டே நின்றார். அது அருகில் வர வர அவருடைய மனசில் ஏதோ குழப்பம் ஏற்பட்டது.

'இவர் என்ன தன் பேச்சையே காதில் வாங்காமல் இருக்கிறாரே, இவர் கையைக் கடித்துவிடலாமா?' என்று சோனாவுக்குத் தோன்றியது. அவன் அழுதுகொண்டே, ''நான் அம்மா கிட்டே போகணும்" என்றான்.

என்ன ஆச்சரியம்! யானை அவர்கள் அருகில் வந்ததும் அவர் களுக்குக் கீழ்ப்படிந்தது போல அப்படியே உட்கார்ந்துவிட்டது. மாவுத்தன் பெரியப்பாவுக்குச் சலாம் செய்துவிட்டு யானையையும் சலாம் செய்யச் சொன்னான். யானையும் தும்பிக்கையை உயர்த்திச் சலாம் செய்தது.

மாவுத்தன் ஜசீம் பின்னால் உட்கார்ந்திருந்தான். முன்னால் அவ னுடைய பிள்ளை உஸ்மான்.

''யானை முதுகிலே ஏறி உட்காருங்க ! உங்களை வீட்டிலே கொண்டுபோய் விடறேன்" என்று ஜசீம் சொன்னான்.

அவர்கள் வீட்டைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டிருந்தார்கள். ஜசீமுக்குக் கூடப் புரிந்தது, அவர்கள் வேளாவேளைக்கு வீடு போய்ச் சேரமுடியாதென்று. அவன் அவர்களை யானையின் முதுகின் மேல்

153ஏற்றிவிட்டான். இரண்டாவது பெரியப்பா இந்த யானையை பற்றி எவ்வளவோ கதைகள் சொல்லியிருப்பது இப்போது சோனாவுக்கு ஞாபகம் வந்தது. மூடாபாடாவிலிருந்து வீட்டுக்கு வரும்போதெல் லாம் அவர் யானையைப் பற்றிச் சொல்லுவார். ஒரு தடவை அவர் யானை மேல் ஏறிக்கொண்டு சீதாலக்ஷா நதியைக் கடந்து காளிகஞ் சுக்குப் போனாராம். வழியில் புயல் வந்துவிட்டதாம். புயல் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கிவிட்டது. அவர் மேலே விழவிருந்த மரத்தைத் தடுத்து நிறுத்தி யானை அவரைக் காப்பாற்றியதாம்.

இம்மாதிரி கதைகளைக் கேட்டுச் சோனாவுக்கு யானைகளின் மேல் பிரியம் ஏற்பட்டது. தான் இந்த யானையின் மேல் ஏறிச் சென்றால் எதிரில் இறங்கிவரும் ஆகாயத்தையே கடந்துவிடலாம் என்று தோன்றியது சோனாவுக்கு. யானை நடந்தது, மணி அடித்துக் கொண்டு, பின்னால் நாய் ஓடி ஓடி வந்தது. அவர்கள் பல கிராமங்களை, வயல்களை, காடுகளைக் கடந்து போனார்கள். வியாபாரம் செய்யத் தொலைதூரம் செல்லும் வியாபாரி போல், ஏழு படகுகளில், எழுநூறு படகோட்டிகள் புடைசூழ, யுத்தத்தில் வெற்றிப் பெற்றுத் திரும்பும் வீரனைப் போல் வீடு திரும்பினான் சோனா,

''நீங்க எப்போ வீட்டிலேருந்து புறப்பட்டீங்க?" என்று ஜசீம் சோனாவைக் கேட்டான். ''விடியற்காலையிலே.'' ''உங்க முகம் வதங்கிக் கிடக்கு." ''பசிக்கறது. இன்னும் ஏதும் சாப்பிடல்லே .'' ''சாப்பிடறீங்களா?'' என்று கேட்டுக்கொண்டே ஜசீம் தன் மடியிலிருந்து பால் போல் வெண்மையான வெள்ளை நாவற்பழங்களை எடுத்துக் கொடுத்தான்.

நாவற்பழங்கள் இனிமையாக, ருசியாக இருந்தன. சோனா அவற்றைச் சாப்பிட்டானா, அப்படியே விழுங்கினானா என்று சொல்வது கஷ்டம்.

யானையைப் பார்த்துக் கிராமத்துத் தெரு நாய்கள் குரைக்கத் தொடங்கின. கிராம மக்கள் யானையைப் பார்க்கக் கூடினார்கள். ஒவ்வொரு வருடமும் ஜசீ முத்தின் அந்த யானையைக் கூட்டிக் கொண்டு பனிக்கால இறுதியில் அல்லது குளிர்கால ஆரம்பத்தில் அந்தப் பிராந்தியத்துக்கு வந்து யானையைக் கொண்டு வீட்டுக்கு வீடு விளையாட்டுக் காட்டுவது வழக்கம்.

''என்ன பாபு, பைத்தியக்காரப் பெரியப்பாவோட வெளியே கிளம்பிட்டீங்களே! அவர் உங்களை எங்கேயாவது விட்டுட்டுப் போய்ட்டார்னா?'' என்று ஜசீம் சோனாவிடம் சொன்னான்.

154''போகமாட்டார். அவருக்கு என் மேலே ரொம்பப் பிரியமாக் கும்!"

''பைத்தியக்கார மனுஷரோடு கிளம்ப உங்களுக்குப் பயமா இல்லையா?"

''இல்லே . பெரியப்பா என்னை எவ்வளவு இடத்துக்குக் கூட்டிக் கிட்டுப் போயிருக்கார், தெரியுமா? ஒரு தடவை அவர் என்னை ஹாஸான் பீரோட தர்காவிலே விட்டுட்டு வந்துட்டார், இல்லையா பெரியப்பா ?"

மணீந்திரநாத் தலையைத் திருப்பிச் சோனாவைப் பார்த்தார். இப்போது அவன் தமக்குச் சற்றும் அறிமுகம் இல்லாதவனாகத் தோன்றியது. அவனுடன் தாம் பேசுவதே கெளரவக் குறைவாகத் தோன்றியது அவருக்கு.

அவர் எதிரிலிருந்த ஆகாயத்தைப் பார்த்தார், ஆகாயத்தைக் கடந்து போக முடியுமா? கடந்து போக முடிந்தால் எதிரில் ஒரு பெரிய கோட்டை இருக்கும். அதற்குள் பாலின் இருப்பாள். இப்படி யெல்லாம் நினைத்த அவர் அங்குசம் வைத்துக்கொண் டிருந்த சிறுவன் உஸ்மானிடமிருந்து அங்குசத்தைப் பிடுங்கிக்கொண்டு அவனை இறக்கி விட்டுவிட்டு, தம் இஷ்டப்படி யானையைச் செலுத்திக் கொண்டு போக விரும்பினார். ''யானையே, என்னைப் பாலினின் தேசத்துக்கு அழைத்துக் கொண்டுபோ! அந்தக் கோமளமான முகத்தை நான் வேறெங்கும் காணவில்லை!" என்று கத்தினார்.

ஜசீம் கூவினான் : ''நீங்க என்ன பண்றீங்க எசமான்?'' உஸ்மான் அவரைப் பார்த்துப் பயந்துவிட்டான். அவர் அங்குசத்தைப் பிடுங்கிக்கொள்ள வருகிறாரே!

சோனா பின்னாலிருந்து அவருடைய காலைப் பிடித்துக்கொண்டான், அவர் கீழே விழுந்துவிடாதிருக்க. மணீந்திரநாத்தால் நகர முடிய வில்லை. அவர் பரிதாபமாகச் சோனாவைப் பார்த்தார். சோனாவின் கண்ணில் ஏதோ ஒரு மாயம் இருந்தது. அவரால் அவனை மீறிக் கொண்டு போக முடியவில்லை.

அவர்கள் வயல்களைக் கடந்து சென்றார்கள். கிழக்கு வீட்டு நரேன்தாஸ் தலையில் துணி மூட்டையை வைத்துக்கொண்டு பாபுர் ஹாட்டுக்குப் போனான். யானையின் மணியோசை கேட்டுக் கிராமத்துச் சிறுவர் சிறுமியர் அதைப் பார்க்க ஓடிவந்தார்கள்.

கள்ளிச் செடிகளுக்குப் பக்கத்தில் பெரிய பந்தல் ஒன்று போட் டிருப்பதைப் பார்த்தாள் மாலதி. பந்தலுக்குள் ஜமுக்காளம் விரித்திருந்தது. மியான்களும் மெளல்விகளும் அங்கே வந்து கூடினார்கள். சாம்சுத்தீனும் அவனுடைய வலக் கையாகிய பேலு

155ஷேக்கும் கிராமங்களில் எல்லா இடங்களிலும், மரங்களின் மேலும் விளம்பரங்கள் ஒட்டிவைத்திருந்தார்கள். அவற்றில், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்! சண்டை போட்டுப் பாகிஸ்தான் பெறுவோம்! நாராயே தக்தீர்!'' என்று எழுதியிருந்தது.

'நாராயே தக்தீர்!' என்ற வாக்கியத்துக்கு அர்த்தம் தெரியவில்லை, மாலதிக்கு. சாம்சுத்தீனிடம் இதற்குப் பொருள் கேட்க வேண்டும் என்று நினைத்தாள் மாலதி.

மாலதி தன்னைப் பார்த்துக்கொண்டாள். அவளுடைய அழகு வளர்ந்துகொண்டே வந்தது. அவளுடைய கணவனின் மரணத் துக்குப் பின் இன்னொரு தடவை டாக்காவில் கலகம் ஏற்பட்டு விட்டது. கிராமத்துக்கு வந்திருந்த அவளுடைய மாமனார் டாக்காவில் சங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் மாற்று ஜாதியினரைப் பழிவாங்கியதாகச் சொல்லிவிட்டுப் போனார். மாலதிக்கு அதில் சந்தோஷம். அவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் : "ஏ சாமு! நீ மரத்துக்கு மரம் நோட்டீஸ் ஒட்டி என்ன பண்ண முடியும்?''

பந்தலுக்கடியில் முசல்மான் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்து கூடினார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய அடுப்புகள் எரிந்தன. பெரிய பெரிய தாமிர அண்டாக்களில்

அரிசி மாவும் பாலும் கொதித்தன.

அப்போதுதான் பைத்தியக்கார மனிதர் ராஜாவைப் போல் யானை மேலேறி வீடு திரும்பிக்கொன்டிருந்தார். யானையின் மணியோசை ஒரு நல்ல செய்திபோல் எல்லார் காதுகளிலும் ஒலித்தது. ராசியான அந்த யானை லஷ்மி மாதிரி ஏதோ நல்ல செய்தி கொண்டு வருவதாகக் கிராமவாசிகள் நினைத்தார்கள். இதுவரை தன்னந் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்திராத குடும்பப் பெண்கள் கூடச் சிறுவர்களைத் தொடர்ந்து டாகுர் வீட்டை நோக்கி நடந்து வந்தார்கள், யானையைப் பார்ப்பதற்காக,

மறுநாள் இந்த யானை அவர்கள் வீட்டு வாசலுக்கு வந்து, 'அம்மா, அம்மா!' என்று கத்தும். அப்போது குடும்பப் பெண்கள், 'இந்த யானை நமது செல்வம். இந்த யானை லஷ்மிதேவி! இந்த யானை நம் வீட்டுக்கு வந்தால் நம் நிலத்தில் பொன் விளையும்' என்று நினைப்பார்கள்.

அவர்கள் யானையின் நெற்றியில் சிந்தூரம் இடுவார்கள். அதற்கு நெல்லும் அருகம்புல்லும் கொடுப்பார்கள்.

யானையின் மீது உட்கார்ந்தவாறே கை தட்டினார் மணீந்திரநாத். பாதிமா யானைக்குப் பின்னாலேயே ஓடினாள். அவள் கீழேயிருந்து, ''என்னையும் ஏத்திக்குங்க சோனாபாபு!'' என்று கூறினாள்.

156அந்த நேரத்தில் பாதிமாவின் தகப்பன் சாம்சுத்தீன் பந்தலுக்குள் பெரிய பெரிய எழுத்துக்களில் விளம்பரம் எழுதிக்கொண் டிருந் தான். 'இஸ்லாமுக்கு ஆபத்து ! பாகிஸ்தான் ஜிந்தாபாத்!'

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சப்தபரணி மரத்தடியில் உட்கார்ந்திருந்த மாலதி உணர்ச்சி மேலிட்டு அழுதுவிட்டாள். அவள் உரக்கக் கூவ விரும்பினாள், ''சாமு! நம்ம தேசத்துக்கு அனர்த்தத் தைக் கொண்டுவராதே!'' என்று .

குளத்தங்கரை வழியே சென்றபோது யானை, மாமரம், மருதமரம், நாவல் மரம், இன்னும் எந்தெந்த மரங்களின் கிளைகள் அதற்கு எட்டியனவோ அவற்றையெல்லாம் முறித்து வாயில் போட்டுக்கொண்டது. செம்பரத்தை மரத்தின் அடியில் உட்கார்ந்து நிர்மலமான ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்க, ரொம்பப் பிடிக்கும் பைத்தியக்கார டாகுருக்கு. அதையும் மட மடவென்று முறித்து வாயில் போட்டுக்கொண்டது யானை. அது மரத்தின் கிளையை வாயில் வைத்துக் கடித்தபோது ஒரு மனிதன், தேங்காய்த் துண்டைக் கடிக்கும் ஒலி எழுந்தது. ஜசீம் அடிக்கடி அங்குசத்தை உபயோகித்தும் யானையை அடக்க முடியவில்லை. யானை மரத்தைத் தின்று முடித்துவிட்டது. சோகமாகக் கையைப் பிசைந்துகொண்டார் மணீந்திரநாத். அவருடைய பிரியத்துக்குரிய, மெளன நண்பனான அந்த மரத்தின் மறைவு எழுப்பிய சோகத்தில் அவர், ''கேத்சோரத்சாலா!' என்று கத்தினார்.

வயல்களுக்கு நடுவில் பந்தல். முல்லாக்களும் மெளல்விகளும் வர ஆரம்பித்துவிட்டார்கள். அறுவடை ஆகிவிட்டதால் வயல்கள் காலியாகக் கிடந்தன. சில பருப்புப் பயிர்கள் மட்டும் வயல்களில் இருந்தன. பேலுஷேக் கூட்டாளிகளுடன் சேர்ந்து அடுப்புகளுக் காகப் பெரிய குழிகள் வெட்டியிருந்தான். ஹாஜி சாயபுவின் வேலைக்காரன் பாலைக் காய்ச்சினான். பெரிய பெரிய தாமிர அண் டாக்களில் பால், தண்ணீர், தண்ணீரில் கரைந்த அரிசிமா, ஜீனி. லவங்க இலை, லவங்கப்பட்டை, அக்ரோட்டுக் காய், ஏலம் கிராம்பு, குங்குமப்பூ எல்லாம் இருந்தன. பழைய பெஞ்சியின் மேல் ஒரு கிழிசல் போர்வை விரித்திருந்தது. ஹாஜி சாயபுவின் மூன்று பிள்ளைகளும் அறுவடைக்காகப் போய்விட்டு வரும்போது ஒரு நல்ல ஜமுக்காளம் வாங்கி வந்திருந்தார்கள். அதை விரித்து மெளல்வி சாயபுவுக்கு ஆசனம் போட்டிருந்தது. முகமதிய உழவர் கள் பந்தலுக்கடியில் வந்து சேர்ந்தார்கள்.

இந்த மாதிரி நடக்கும் என்று சசீந்திரநாத்துக்குத் தெரியும். இந்தத் தடவையும் சாம்சுத்தீன் தேர்தலில் தோற்றுவிட்டான்.

157அவனால் லீக்கின் பெயரைச் சொல்லி எல்லா முஸ்லீம் வோட்டர் களின் வோட்டையும் பெறமுடியவில்லை. காங்கிரசின் சார்பில் நின்ற சசீந்திரநாத் இந்தத் தடவையும் யூனியனுக்குப் பிரசி டெண்ட் ஆகிவிட்டார். சாம்சுத்தீன் டாக்கா போயிருந்தான். அங்கிருந்து ஷாஹாபுத்தீன் சாகேப் வருவதாகப் பேச்சு அடிபட்டது. அவ்வளவு பெரிய மனிதர் ஒருவர் தம் ஊருக்கு வருகிறார், அவரைப் பார்க்கப் பந்தலுக்குப் போகவேண்டும் என்று நினைத்தார் சசீந்திரநாத். ஆனால் எல்லாமே மத விவகாரமாகிவிட்டதே! அழைப்பு வந்தால் கூட அவரால் போக முடியாது, அந்தக் கூட்டத்துக்கு.

ஜசீம் இப்போது யானையை வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான். யானை அருகில் வந்ததும் சசீந்திரநாத், ''ஜசீம், சௌக்கியமா?" என்று ஜசீமைக் கேட்டார்.

'' இருக்கேன் எசமான்." ஜசீம் யானையை அவருக்குச் சலாம் செய்ய வைத்தான். ''ரெண்டாவது அண்ணா நல்லா இருக்காரா?" "நல்லா இருக்கிறாங்க.'' ''ரொம்ப நாள் கழிச்சு இந்தப் பக்கம் வந்திருக்கே." 'வந்தேன். உங்களையெல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு புறப்பட்டு வந்தேன்."

''ஜமீன்தார் வீட்டிலே பாபுவெல்லாரும் இல்லையா?'' ''எல்லாரும் டாக்கா போயிருக்கிறாங்க.'' ''ஏ, சோனா! உனக்குப் பசிக்கல்லையா? ஜசீம், அவனை இறக்கி விடு! அவனோட அம்மா அவனைக் காணாமே கன்னத்திலே கையை வச்சுக்கிண்டு உட்கார்ந்திருக்கா.''

யானை கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தது. சோனா கீழே இறங்கினான்.

கிராமமே யானையின் வருகையால் ஒரு திருவிழாவைப் போல் காட்சியளித்தது. ஜசீமின் பையன் உஸ்மான் யானைமேலிருந்து இறங்கினான். எல்லாரும் யானையைச் சுற்றிக் கூட்டமாகக் கூடினார்கள்.

ஜசீம் மணீந்திரநாத்திடம் சொன்னான்: ''நீங்க இறங்குங்க எசமான்!''

பைத்தியக்கார மனிதர் சும்மா சிரித்தார். கீழே இறங்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இந்த யானை அவருடைய செம்பரத்தை மரத்தைத் தின்றுவிட்டது! எவ்வளவோ காலமாக அந்த மரம் அவருடைய பாலினின் நினைவைத் தாங்கிக்கொண் டிருந்தது.

158அதன் அடியில் உட்கார்ந்து அவரால் கப்பலின் அதிசய ஒளியைக் கேட்க முடிந்தது. கப்பல் தலைவன் பாய்மரத்தில் கொடியைப் பறக்கவிடுகிறான். கப்பல் பாலினை ஏற்றிக்கொண்டு நீரில் மிதந்து செல்கிறது.

அவருடைய நினைவுகள் எல்லாவற்றையும் மரத்தோடு சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு இப்போது கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந் திருக்கிறது யானை.

சசீந்திரநாத்தும் யானையிலிருந்து இறங்கும்படி அண்ணனைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரோ யானையின்மேல் துறவி யைப் போலப் பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டே இருந்தார். யாராவது அவரைப் பலவந்தமாக இறக்க முயற்சி செய்தால் அவனுடைய கையைக் கடித்துவிடுவார்; அல்லது அவனைக் கொன்றேவிடுவார் என்பது போல இருந்தது, அவர் இருந்த நிலை . மொட்டையாக நின்ற செம்பரத்தை மரத்தின் மிஞ்சிய பாகத்தைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார் அவர். அவருடைய வாய் எதையோ முணுமுணுத்துக் கொண் டிருந்தது. சசீந்திரநாத்தும், இன்னும் அங்கு வந்து கூடியிருந்த சில பெரிய மனிதர்களும் திருப்பித் திருப்பி அவரைக் கீழே இறங்கும்படி கேட்டுக் கொண்டார்கள். அவரோ அவர்களுடைய வார்த்தையைப் பொருட் படுத்தாமல் யானையின் காதுக்குக் கீழே காலை வைத்து அழுத்தினார்.

ஜாடையைப் புரிந்து கொண்டு யானை எழுந்து அவரைத் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கியது. ''எசமான், எசமான்! என்ன செய்யறீங்க, எசமான்!'' என்று ஜசீம் கூவினான்.

எல்லாரும் பயந்துபோய் யானைக்குப் பின்னே ஓடினார்கள். இதற்குள் யானை குளத்தங்கரை வழியே கீழே இறங்க ஆரம்பித்து விட்டது. பைத்தியக்கார டாகுரைத் தூக்கிக்கொண்டு மூடாபாடா வுக்கு யானை போவதை மாலதி பார்த்தாள்.

நரேன்தாஸின் நிலத்தைத் தாண்டினால் அந்தக் கள்ளிமரம். அதன் மேலும் மற்ற மரங்களின் மேலும் விளம்பரங்கள் தொங்கின. ''பாகிஸ்தான் ஜிந்தாபாத்! போரிட்டுப் பெறுவோம் பாகிஸ்தானை !

நாராயே தக்தீர்!''

இவ்வாறு விஷம் போன்ற பல விஷயங்கள் அவற்றில் எழுதி யிருந்ததை மாலதி பார்த்தாள். மாலதிக்குக் கத்தவேண்டும் போல் இருந்தது, ''சாமு, உனக்கு ஏன் காலரா வரல்லே?'' என்று.

யானை நரேன் தாஸின் நிலத்தைத் தாண்டிக்கொண்டு மைதானத் துள் ஓடியது. அதற்குப் பின்னால் சின்ன டாகுரும், ஜசீமும், ஜசீமின் பிள்ளை உஸ்மானும் ஓடினார்கள். கிராமத்துப் பெரியவர்

159களும் சிறுவர்களும் ஓடினார்கள். ஒரு பைத்தியக்காரர் யானையின் மேல் உட்கார்ந்துகொண்டு குதிரைப் பந்தயத்தில் குதிரையை விரட்டிக்கொண்டு போவது போல் போவதைப் பார்த்து அவர்கள் கூச்சல் போட்டார்கள்.

சற்றுத் தூரத்தில் சாம்சுத்தீன் ஏற்பாடு செய்திருந்த பந்தல். பந்தலுக்கு வெளியே வெட்டவெளியில் பெரிய பெரிய அண்டாக் களில் சமையல் செய்துகொண் டிருந்தான் போலு. மெளல்வி சாயபு இப்போதுதான் தொழுகைக்கான அழைப்பை முடித்து விட்டு மேடையிலேறித் தொழுகையை நடத்தினார். வெகுதூரக் கிராமங்களிலிருந்து 'இஸ்லாமுக்கு ஆபத்து' என்று நினைத்துச் சமையலை ருசி பார்க்க நிறையப் பேர் வந்தார்கள். அவர்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு மெளல்வி சாயபு, பெரிய மியான், பராபர்த்தியைச் சேர்ந்த பெரிய பிஸ்வாஸ் ஆகியோருடைய ஆவேச மட்டும் பேச்சுக்களைக் கேட்டார்கள். ''இஸ்லாமியர்களே, ஒன்று சேருங்கள்! நாம் இந்துக்களின் காலடியில் கிடக்கிறோம்! நம்மிடம் என்ன இருக்கிறது? பூமி அவர்களுடையது , ஜமீந்தாரி அவர் களுடையது. அவர்கள்தான் வக்கீல்கள், டாக்டர்கள் எல்லாம்!" இம்மாதிரி கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள் எழுந்தன, தொழுகைக்குப் பிறகு.

பேச்சைக் கேட்டுக்கொண் டிருந்தவர்கள் பின்னால் பேலு ஷேக்கின் கூக்குரலைக் கேட்டுப் பயந்துபோய் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தடித்துக்கொண்டு ஓடினார்கள். ''பைத்தியக்கார டாகுர் ஒரு யானையின் மேல் உட்கார்ந்துகொண்டு இந்தப் பக்கம் வருகிறார்!'' அவரோ பைத்தியக்கார மனிதர். நாள் முழுதும் அலைந்ததில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது போலும். அது பைத்தியம் பிடித்தது போல் தும்பிக்கையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்து வந்து பந்தலுக்குள் நுழைந்து எல்லாவற்றையும் நாசம் செய்தது.

பேலு ஷேக் அண்டாக்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டான். அண்டாக்களில் பாலும் தண்ணீரும் அரிசி மாவுடன் கொதித்துக் கொண்டிருந்தன. யானை பந்தலுக்குள் நுழைந்ததும் அங்கிருந்த வர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வயல்களுக்கு ஓடினார்கள். சாம்சுத்தீன் ஒரு பெஞ்சிக்கடியில் ஒளிந்துகொண்டான். ஓட முயன்ற பேலு துரதிருஷ்டவசமாக யானைக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்டான். யானை அவனைத் தன் தும்பிக்கையால் இறுகப் பிடித்துக்கொண்டது. அந்தப் பிடியின் அழுத்தத்தில் அவனுடைய ஒரு கை முறிந்துவிட்டது. எல்லாரும் தூரத்திலிருந்தே கூக்குர லிட்டார்கள். யாருக்கும் யானையை அணுகத் தைரியம் வரவில்லை.

160'

யானையின் முதுகில் உட்கார்ந்திருந்த மணீந்திரநாத், யானையால் என்ன செய்ய முடியும் என்று பார்க்க விரும்பியவர் போல, கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவர் யானைமேலிருந்து வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது. பேலுவுக்கு ஏற்பட்ட விபத்து அவனுக்கு வேண்டியதுதான் என்று நினைப்பது போல் இருந்தது. அவர் இப்போது யானையின் காதுக்குக் கீழே காலை வைத்துக் குத்தினார். அது அவருக்கு மிகவும் அடங்கியது போல் பேலுவைப் பொம்மை போல் தரையில் நிற்க வைத்து விட்டது. அவர் உடனே இடம், நேரம், பாத்திரம் எல்லாவற்றையும் மறந்து ஓடும்படி யானைக்கு உத்தரவிட்டார். அதுவும் அவ்வாறே ஓடத் தொடங்கியது.

சூரியன் மறையத் தொடங்கினான். ஈசம் தர்மூழ் வயலில் களையெடுத்து அதைச் சுத்தம் செய்துகொண் டிருந்தான். பின் பனிக்காலம் முடிவடையும் பருவம். சூரியன் மேற்கே மறையும் போதே புற்களின் மேல் பனி விழத் தொடங்கியது. ஜசீம் கூச்சல் போட்டுக்கொண்டே யானைக்குப் பின்னால் ஓடினான்.

'ஜமீந்தார் வீட்டு யானையை இந்தப் பிராந்தியத்துக்குக் கொண்டு வந்தது எவ்வளவு ஆபத்தாகிவிட்டது! பைத்தியக்கார மனிதரை யானை மேலே ஏற்றியிருக்கக் கூடாது! ஏறி உட்கார்ந்தவர் கீழே இறங்க மறுத்துவிட்டாரே ! இப்போது என்ன ஆகும்?' யானை வயலைத் தாண்டிக் கிராமத்துக்குள் நுழைந்தது. அதைக் கடந்து மீண்டும் வயல், கிராமம், வயல் என்று போயிற்று.

மணீந்திரநாத் அதைப் பார்த்து ஆனந்தமாகக் கைகொட்டினார். கிராமத்து மக்கள் யானையைத் தொடர முடியாமல் நின்றுவிட்டார் கள். யானை ஆற்று மணல்வெளியைத் தாண்டி இருட்டில் கண்ணுக்கு மறைந்துவிட்டது. இனிமேல் பயமில்லை என்று நினைத்த மணீந்திரநாத், ''நீ பாவம், இனி ஓடவேண்டாம். மெது வாக நட. இனி யாரும் நம்மைப் பிடிக்க முடியாது" என்று யானையிடம் கூறினார்.

இரவாகிவிட்டது. இது தாமோதர் தீ மைதானம் மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் போனால் மேக்னா நதி. நதிக் கரையில் ஒரு பெரிய மடம். இருட்டில் மடம் கண்ணுக்குத் தெரியவில்லை. மடத்தின் சிகரத்திலிருந்த திரிசூலத்தின் உச்சியில் விளக்கு எரிவது மாத்திரம் தெரிந்தது.

சசீந்திரநாத் வீட்டிலிருந்தார். ஊர்மக்கள் பலர் வந்திருந்தார்கள். ஜசீம் வாசலில் நின்றுகொண்டு அழுதான். இவ்வளவு பெரிய யானையுடன் பைத்தியக்கார டாகுர் எங்கே போய் மறைந்து விட்டார் ! ஜமீந்தார் வீட்டு யானை ; ராசியான யானை ! இப்போது

161

11என்ன செய்வதென்று புரியவில்லை அவனுக்கு. என்ன செய்வ தென்று கிராம மக்கள் விவாதித்தார்கள். கிராமத்துக்குக் கிராமம் செய்தி பரவியது. ஈசமும் மற்றவர்களும் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். ஸோனாலி பாலி ஆற்று மணலில் இறங்கி அவர்கள் உரக்கக் கூவினார்கள். ஜசீம் உஸ்மானை அங்கேயே விட்டுவிட்டு, துண்டைத் தோள் மேலே போட்டுக் கொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டான்.

சாம்சுத்தீன் கையில் லாந்தருடன் மைதானத்தில் நின்றான். பேலு இந்தத் தடவை பிழைத்துவிட்டான். அவனைத் தூக்கிக் கொண்டுபோய் வீட்டில் போட்டிருந்தார்கள். பைத்தியக்கார டாகுர் வேண்டுமென்றே இப்படியெல்லாம் செய்ததாகச் சாமுவுக்குத் தோன்றியது. அவன் இப்படி விளம்பரம் ஒட்டுவது, இந்தச் சமூகத்திலிருந்து பிரிந்து போக அவன் விரும்புவது, இதெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய விழாவை நாசம் பண்ணிவிட்டார் அவர்! சாம்சுத்தீன் எவ்வளவோ சிரமப்பட்டு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தான். இவ்வளவு பெரிய கூட்டத்துக்குப் பட்டணத்திலிருந்து முல்லா, மெளல்விகள் எல்லாரும் வந்திருந்தார்கள். இப்போது அவர்கள் ஹாஜிசாயபுவின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, 'இதென்ன அச்சானியமாக நடந்துவிட்டது?' என்று வருந்தினார்கள். சாம்சுத்தீனுக்குத் தன் கையையே கடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. நடந்ததெல்லாம் ஒரு பெரிய சதி என்று அவனுக்குத் தோன்றியது.

'சின்ன டாகுர் மறுபடி யூனியன் பிரசிடெண்டு ஆகப் பார்க்கிறார். அவர் மறுபடி காங்கிரஸ் சார்பில் தேர்தலுக்கு நிற்பார். கபீர் சாயபு வைக் கூட்டி வந்து காங்கிரஸ் சார்பில் சொற்பொழிவு செய்யச் சொல்வார். அப்போது இவனுக்கும் இந்த மாதிரி ஒரு யானை கிடைக்காதா ? இன்று போல் யானையின் மேல் பேலுவை உட்கார்த்தி வைக்கவேண்டும். அல்லது பேலுவை விட்டுப் பந்தலுக்கு நெருப்பு வைக்கச் சொல்லிப் பழி வாங்க வேண்டும்.' சீர்குலைந்து கிடந்த பந்தல் மேடையிலிருந்து உடைந்த பெஞ்சி, மேஜைகள் ஜமுக்காளங்கள் இன்னும் மற்றச் சாமான்களை ஜப்பர் மூலம் வீட்டுக்குக் கொடுத்தனுப்பும்போது இவ்வாறெல்லாம் நினைத்தான் சாம்சுத்தீன்.

டாகுர் வீட்டுப் பெரியவர் தம் அறையில் விளக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு சற்று இருமுக்கொண் டிருந்தார். இப்போ தெல்லாம் அவர் அதிகமாக அறைக்கு வெளியே வருவதில்லை. அறைக்குள்ளேயே படுக்கையில் ஒரு பெரிய தலையணையின் மேல் சாய்ந்து கொண்டு படுத்திருப்பார். வாசலிலிருந்து வந்த சப்தத்

162தைக் கேட்டு அவர் பெரிய மாமியைக் கேட்டார். ''வாசல்லே என்ன சத்தம்?''

பெரிய மாமி விளக்கைச் சற்றுத் தூண்டிவிட்டாள். மரத்தாலும் தகரத்தாலும் ஆன அறை. ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று வீசியது. தன் கிழ மாமனாருக்குப் பணிவிடை செய்யும்போதெல் லாம் ஜன்னல் வழியே வயல் வெளியெல்லாம் பெரிய மாமியின் கண்ணில் படும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பைத்தியக்கார மனிதர் அந்த வயல்கள் வழியே எங்கோ போய்விட விரும்புகிறார். வாசலிலிருந்து வந்த சப்தம், மனிதர் இந்த மாதிரி யானையின் மேல் ஏறிக்கொண்டு கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுவது இவையெல்லாம் அவளை வேதனைக்குள்ளாக்கின.

இன்று அதிகாலையில் அவள் அவருக்கு ஆகாரம் கொடுத்தாள். நல்ல மனிதர் போல் அதைச் சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் எங்கேயோ மறைந்துவிட்டார். கூடவே சின்னப் பையன் சோனா வையும் கூட்டிக்கொண்டு வயல்களிலும் கிராமங்களிலும் சுற்றி யிருக்கிறார். பிறகு அவர் சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீடு திரும்பும்போது யானையுடன் வந்த ஜசீம் அவர்களைப் பார்த் திருக்கிறான்.

இந்தப் பிராந்தியத்திலேயே எல்லாருக்கும் அவரிடம் ஒரு பரிவு ; அவர் தர்காவிலுள்ள பீரைப்போல் ஒரு மகான் என்ற எண்ணம். ஜசீம் அவர்களை யானையின் மேல் ஏற்றிக்கொண்டு வந்திருக் கிறான். வீடு வந்ததும் இந்த விபத்து. பெரிய மாமி வருத்தத்துடன் எல்லாக் கதையையும் கிழவரிடம் சொன்னாள். வேதனை மேலிட்டது கிழவருக்கு. தம் வருத்தத்தைப் பெரிய மாமியிடமிருந்து மறைப் பதற்காக அவர் திரும்பிப் படுத்துக்கொண்டு ஜன்னல் வழியே இருட்டைப் பார்த்தார். இந்த இருளில் அவருடைய பைத்தியக்காரப் பிள்ளை எங்கோ அலைந்துகொண் டிருக்கிறான்! இதற்குக் காரணம் அவர்தாம், அவருடைய பிடிவாதந்தான். இவ்வாறு நினைத்தபோது அவருக்கு ஏற்பட்ட வருத்தத்துக்கு அளவில்லை. எனக்கு ரொம்பக் குளிராயிருக்கு, அம்மா! ஜன்னலை மூடு!'' என்றார்.

''ஒரு கம்பளி எடுத்துப் போர்த்திக்குங்களேன்.'' ''வேண்டாம். ஜன்னலை மூடினாப் போதும்." ஜன்னலை மூடப் போன சமயத்தில் சகடமரத்துக்கு மறுபக்கத்தில் புதர்களின் இடுக்கு வழியே பல லாந்தர்கள் அசைவதைக் கண் டாள் பெரிய மாமி. பைத்தியக்கார மனிதரையும் யானையையும் எல்லாரும் தேடுகிறார்களென்று அவளுக்குப் புரிந்தது.

ஜசீம் இருட்டில், ''லஷ்மி! ஏ லஷ்மி !' என்று கூப்பிட்டுக் கொண்டு எல்லாருக்கும் முன்னால் ஓடினான். தன் பீபியைப்

163போல் தனக்கு மிகவும் பிரியமான வளர்ப்பு யானை காணாமற் போய்விட்டது. பைத்தியக்கார டாகூர் - சிறந்த மனிதர்களில் ஒருவர், பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பவர், பீரைப் போன்ற மகான் - அவரும் காணாமற் போய்விட்டார். அவன் கத்தினான் : ''லஷ்மி! ஏ லஷ்மி! நான் உனக்காக அவலும் பொரியும் வச்சிருக் கேன். நீ எங்கே இருக்கியோ அங்கேயிருந்து ஒரு குரல் கொடு. நான் உன்னைப் பிடிச்சு கட்டிக் கூட்டிக்கிட்டு வரேன்!''

ஈசம் சொன்னான் : "ஏன் மியான் இப்படி அலட்டிக்கரே ? பெரிய எசமான் பெரிய மனுஷர். யானை ஒரு வாயில்லாப் பிராணி, வளர்ப்புப் பிராணி. அவர் அதுமேலே ஏறிக்கிட்டுப் பாலினைத் தேடப் போயிருக்கார்.''

''பாலினா? அது யாரு பாலின்?'' என்று ஜசீம் கேட்டான். ''ஆமா, பாலின் தான்! அது ஒரு பொண்ணு." ''அம்மா, நடக்கக் கஷ்டமா இருக்கு. கதையைச் சொல்லு, கேட்டுக்கிட்டே நடக்கறேன்" என்று ஜசீம் சொன்னான்.

''பெரியவரோட கதையை என்னாலே சரியாச் சொல்ல முடியுமா?" என்றான் ஈசம்.

அவன் சொல்ல விரும்பினான் : ''மியான், யாருக்குத்தான் தெரியாது அவரோட கதை! எசமான் சமயம் கிடைத்தபோதெல்லாம் படகிலோ, நடந்தோ எங்கேயோ போய்விடுவார்.''

அப்புறம் ஈசம் ஒரு மழைக்காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றி ஜசீமுக்குச் சொன்னான். அப்போது பைத்தியக்கார டாகுர் மூன்று நாட்கள் காணாமற் போயிருந்தாராம். அப்போது ஸோனாலி பாலி ஆற்றில் நல்ல வெள்ளம். அவர் வெள்ளத்தில் படகில் உட்கார்ந்து கொண்டு படகை அதன் வழிக்கு விட்டுவிட்டார். அந்தப் படகு அவரை ஃபோர்ட் வில்லியமுக்கோ, கங்கையில் நிற்கும் ஏதாவதொரு கப்பலுக்கோ கொண்டுபோய் விடுமென்று நினைத்தார் போலும். பைத்தியக்காரராதலால் அவர் அங்கேயே ஒரு கல்கத்தாவை மானசீகமாகக் கற்பனை செய்துகொண்டு நாள் முழுதும் அங்கே பாலினைத் தேடினார்.

தண்ணீரில் ஒரு கனவு மிதக்கிறது. கனவில் பெரிய கல்கத்தா நகரம் - வண்டிகள், குதிரைகள், ஃபோர்ட் வில்லியம், கோட்டைக் கருகில் விக்டோரியா மெமோரியல், கர்ஸன் பார்க், கோட்டைப் பக்கத்து மைதானத்தில் வெள்ளைக்காரச் சிப்பாய்கள் அணிவகுப்புச் செய்கிறார்கள். பைத்தியக்கார டாகுர் 'ஹா, ஹா' என்று சிரித்துக் கொண்டே 'கேத்சோரத்சாலா!' என்கிறார். காரணம், தண்ணீரில் அவருடைய நிழல் மட்டும் தெரிகிறது, வேறொன்றும் காணோம்.

184நகரம் கணநேரத்தில் மறைந்து போய்விட்டது. நிழல் அவரைப் பார்த்துச் சிரிக்கிறது. பேஹலொ தேவி தண்ணீரில் மிதந்து போகிறாள். எல்லாமே தண்ணீரில் மிதந்து போவது போல் இருக் கிறது. பெரிய ஏறி, நாற்புறமும் இருள், மின்மினிகள் பளபளத்தன. அவை மணீந்திரநாத்தையும் யானையையும் சூழ்ந்துகொண்டன. ஏரி கரையில் யானையின் மேல் போய்க்கொண்டிருந்தார் மணீந்திரநாத். பின்பனிக் காலமாதலால் குளிர்ந்த காற்று வீசியது. வயல்களில் முதிர்ந்த நெல்லின் மணம். ஆகாயத்தில் ஆயிரம் ஆயிரம் நட்சத்திரங்கள். யானையின் மேல் உட்கார்ந்தவாறே அவர் நட்சத்திரங்களைப் பார்த்தார். அவற்றில் ஒன்று பாலினில் முகம் என்று அவருக்குத் தோன்றியது. யானை மேல் ஏறிப் போனாலும் படகில் ஏறிப் போனாலும் அவரால் பாலினை அடைய முடியவில்லை. அவர் யானையைக் கேட்டார்: ''லக்ஷமி! என்னை உன்னாலே பாலின் கிட்டே கூட்டிக்கிண்டு போக முடியாதா? அந்த நீரூற்றுக் கிட்டே, அந்த அழகிய முகத்துக்கிட்டே என்னைக் கூட்டிக்கொண்டு போக முடியாதா உன்னாலே!''

பழைய நினைவுகள் அவரை அலைக்கழித்தபோது அமைதியாக இருக்க முடியவில்லை அவரால். அவருக்குத் தோன்றும், கொஞ்சத் தூரம் சென்றால் அவருக்குப் பிரியமான அந்த நெல்லிமரம் கண்ணுக்குத் தெரியும், அதனடியில் பொன்மான் கட்டப்பட்ட டிருக்கும் என்று, இப்படி நினைத்து நினைத்து இந்தப் பிராந்தியத்தில் அவர் சுற்றாத வயல்கள் இல்லை, கிராமங்கள் இல்லை. இதுமாதிரி எவ்வளவோ நாட்கள். தாம் ஒருபோதும் அந்த இடத்துக்குப் போய்ச் சேர முடியாது என்றும் சில சமயம் அவருக்குத் தோன்றும். தம் மனைவியின் முகமும் சோகமயமான உருவமும் அவர் மனத் தில் தோன்றி அவரைச் சஞ்சலப்படுத்தும். அவர் மெதுவாக வீடு திரும்புவார். ஆம், படகிலோ யானை மேலோ ஏறி அவரால் அங்கே போய்ச் சேர்ந்துவிட முடியாது. பொன் மான்கள் மிக வேகமாக ஓடிவிடுகின்றன.

ஜசீம், ஈசம், நரேன்தாஸ் இவர்களுடைய கோஷடி இரவு முழுதும் விளக்கு வைத்துக்கொண்டு தேடியும் யானையையோ மணீந்திரநாத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அதிகாலையில் வீடு திரும்பி விட்டார்கள். சசீந்திரநாத் இன்னும் இரண்டு குழுக்களைக் கிழக்கிலும் மேற்கிலும் தேட அனுப்பியிருந் தார். சிலர் யானையை வடக்கே பார்த்ததாகச் சொன்னார்கள், சிலர் தெற்கே பார்த்ததாகச் சொன்னார்கள், பலர் பலவிதச் செய்தி களைக் கொண்டு வந்தார்கள். சிலர் சொன்னார்கள், அவர்களை அரச

165மரத்தடியில் பார்த்ததாக. சிலர் பார்தி மைதானத்துக்கு வடக்கே பார்த்ததாகச் சொன்னார்கள். வடக்கேயிருந்து செய்தி வந்தது. மணிந்திரநாத் யானையை விட்டு வயல்களிலிருந்த கரும்பையெல் லாம் சாப்பிடச் செய்கிறாரென்று, ஆனால் ஒரு வாரமாகியும் யானை கண்டுபிடிக்கப் படவில்லை.

வீட்டில் சோகம் பரவியிருந்தது. யாரும் உரக்கப் பேசுவதில்லை. லால்ட்டு, பல்ட்டு, சோனா எல்லாரும் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் குளத்தங்கரையிலிருந்த மருத மரத்தடியில் நின்று கொண்டு மணீந்திரநாத் யானையின் மீது ஏறிக்கொண்டு திரும்பி வருகிறாரா என்று பார்த்தார்கள். அந்த நாயும் அவர்கள் கூடவே இருந்தது. தங்களுக்குப் பிரியமான அந்த மனிதருக்காக அவர்கள் மாலை நேரம் முழுதும் - மைதானத்திலிருந்த பெரிய அரசமரத்தை இருள் வந்து சூழும்வரை - காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒரு நாள் நாய் குரைக்கத் தொடங்கியது. அப்போது சூரியன் இன்னும் மறையவில்லை. நாய் குரைத்துக்கொண்டே ஓடியது, பிறகு மறுபடியும் சோனாவுக்கருகில் திரும்பி வந்தது. அவர்கள் கிழக்குப் பக்கத்தில் அடிவானத்தில் ஒரு சிறு கறுப்புப் புள்ளி அசைவதைக் கவனித்தார்கள். புள்ளி கொஞ்ச கொஞ்சமாகப் பெரியதாகிக்கொண்டு வந்தது. அது யானை தான்! சோனா உரக்க , ''பெரியப்பா வந்துட்டார்'' என்று கத்திக்கொண்டே வீட்டுக்கு ஓடினான்.

மணீந்திரநாத் களைத்துப் போயிருந்தார். முகம் சோர்ந்திருந்தது. முகத்திலும் கண்களிலும் பட்டினியின் அடையாளம். அவர் யானை யின் முதுகோடு ஒட்டிக்கொண்டுவிட்டாரோ என்று தோன்றியது. யானை வாசலில் கால்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்தது, இனிமேல் எங்கும் போகமாட்டேன், இங்கேயே உட்கார்ந்திருப் பேன்' என்னும் பாவனையில்.

''இறங்குங்க, எசமான்! லஷ்மியை இன்னும் ஏன் கஷ்டப் படுத்தறீங்க?'' என்று ஜசீம் சொன்னான்.

கிராமத்தார் எல்லாரும் கேட்டுக்கொண்டும் அவர் கீழே இறங்க வில்லை .

சசீந்திரநாத் அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டுத் தாமே அவரிடம் சென்று மெல்லக் கூறினார், "அண்ணி இவ்வளவு நாளாச் சாப்பிடல்லே . அண்ணிக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் கொடுப்பீங்க?''

அப்படியும் அவர் நகராமல் போகவே, சசீந்திரநாத் அண்ணி யைக் கூட்டிவரச் சொன்னார்.

166முகத்திரையை இழுத்து விட்டுக்கொண்டு செம்பரத்தை மரத்துக் கருகில் வந்து நின்ற அண்ணியிடம் சசீந்திரநாத் சொன்னார். ''நீங்க ஒரு தடவை முயற்சி பண்ணிப் பாருங்க, அண்ணி !"

பெரிய மாமி ஒன்றும் பேசாமல், நீர் நிறைந்த, உணர்ச்சி மிகுந்த, கண்களுடன் யானைக்கு முன்னே போய் நின்றாள். உடனே மணீந்திரநாத் ஒரு சாதுப் பையன் போல் யானையிலிருந்து இறங்கி அவளைப் பின்தொடர்ந்து வீட்டுக்குள் சென்றார். இப்போது அவருக்கு, அவளுடைய இரண்டு பெரிய கண்களைத் தவிர வேறெது வும் நினைவில் இல்லை.

வீட்டில் நுழைந்த அவர் தமக்குப் பிரியமான ஜன்னல் திறந் திருப்பதைக் கவனித்தார். அங்கு நின்றால் அவருடைய அன்புக் குரிய வயல்வெளியைப் பார்க்க முடியும். அப்போது அவருக்குத் தோன்றும். தூரத்தில் ஒரு நெல்லி மரம் இருக்கிறது, அதனடியில் பாலின் நிற்கிறாள் என்று. இவ்வளவு நாட்களாக ஆற்றிலும், காட்டிலும், வயல்களிலும் அவர் பாலினைத் தேடித் திரிந்திருக்க வேண்டியதில்லை.

பெரிய மாமி பூஜைக்காகப் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். குளிர் காலம். தோட்டத்தில் குளிர்காலப் பூக்களெல்லாம் பூத்திருந் தன . மிகவும் அதிகாலையில் மாலதி ஸ்நானம் செய்யத் துறைக்கு வந்திருந்தாள். துறையில் சிறிது பனி இருந்தது, படிகளில் வெயில் இல்லை. கிரணியும் ஆபுவும் கரையில் உட்கார்ந்துகொண்டு விரத கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள் 'உட்டோ, உட்டோ, சூர்ஜ்ஜி டாகுர் ஜிகிமிகி தியா!' மாலதி தண்ணீரில் இறங்கினாள். பெரிய மாமி துறைக்கு வந்தபோது மாலதி தண்ணீரில் மூழ்கிக் குளிப்பதைக் கண்டாள். இந்தக் குளிரில் மாலதி நீந்தி நீந்திக் குளித்தாள்.

மாலதி சற்று நேரங்கழித்துத் தண்ணீரிலிருந்து வெளியே வந்தாள், ஈரத்துணியில் அவளது உடல் குளிரால் நடுங்கியது. அவள் பெரிய மாமிக்குப் பூப்பறித்துக் கொடுக்கும் சாக்கில் ஈரத்துணியுடனேயே ஆளிச் செடிக்குக் கீழே சற்று நேரம் நின்றாள்.

''ஏன் இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் ஸ்நானம் ?" என்று பெரிய மாமி கேட்டாள்.

மாலதி பதில் சொல்லவில்லை. அவள் பூச்செடிக்குள்ளும் புதர்களிலும் எதையோ தேடிப் பார்ப்பது போல் எட்டிப் பார்த்தாள்.

167அவள் எதையோ தொலைத்துவிட்டாற் போல் அவள் முகம் வருத்தமாக இருந்தது கட்டம் போட்ட மெல்லிய புடைவையை அணிந்திருந்தாள் அவள். அந்தப் புடைவையைப் பார்த்தால் அவளுக்கு அந்தக் கனவு நினைவு வந்தது.

கனவில் அவள் கட்டம் போட்ட புடைவை அணிந்துகொண்டு மதுமாலா வேடத்தில் உட்கார்ந்திருந்தாள். அவளுடைய மதன குமாரன் வருவான், அவனுக்கு அவள் மேல் கொள்ளை ஆசை. அவன் கடைக்கோ, சந்தைக்கோ போனால் அவளுக்காகக் கட்டம் போட்ட புடைவை வாங்கி வருவான். எவ்வளவோ நாட்களுக்குப் பின் அந்த மனிதன் இரவில் வந்து அவள் அருகில் உட்கார்ந்திருந்தான். கலகத்தைப் பற்றிச் சொன்னபோது அவனுடைய முகத்தில் வருத்தம் தோய்ந்திருந்தது. பிறகு அவன் பேசிக்கொண்டே எல்லாம் மறந்து அவளுடைய மோவாயைத் தடவினான். கடைசியில் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போய் மெத்தையின் மேல் 'தொபுக்' என்று போட்டுவிட்டான், அப்புறம் என்ன? என்னென்ன செய்தான் கனவில் ? அவனுடன் சகவாசம்! அதன்பின் அவள் நேரே துறைக்கு வந்துவிட்டாள் குளிக்க. மாலதி தன் தேகத்தின் வெப்பத்தை யெல்லாம் தண்ணீரில் கொட்டிவிட்டுத் தண்ணீரிலிருந்து எழுந்தபோது அவளுடைய காதில் விழுந்தது, தென் பக்கத்து அறையில் யாரோ தலையை ஆட்டிக்கொண்டே படிப்பது. 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்!'

குளிர்காலக் காலை நேரம். குளத்தின் மறுகரையில் மாக்மண்ட லின் விரத கதையைக் கேட்டுவிட்டுப் பால் வீட்டுப் பெண்கள் இருவரும் குதித்துக் குதித்துக்கொண்டு நடந்து சென்றார்கள். அவர்கள் பாடிக்கொண்டு போனார்கள் : 'உட்டோ உட்டோ சூர்ஜ்ஜி டாகுர் ஜிகிமிகிதியா, நா உட்டிதே பாரி ஆமி இயலேர் லாகியா!

சோனா படித்துக்கொண் டிருந்தான், ''பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்,'' லால்ட்டு படித்துக்கொண் டிருந்தான். "அட்லாஸ் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம். 'பல்ட்டு படித்தான். ''ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர்...''

அங்கே படிப்புப் போட்டி நடந்தது. மூவரும் உரக்கப் படித்தார் கள். அந்த இளைஞன் தொலைவிலிருந்து அந்த வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கலாம். தாங்கள் எவ்வளவு நன்றாகப் படிக்கிறோம், எவ்வளவு நிறையப் படிக்கிறோம் என்பதைப் புதிதாக வந்திருப் பவனுக்குத் தெரிவிக்கவே பையன்கள் இப்படிப் போட்டி

115 கி.

168போட்டுக்கொண்டு உரக்கப் படித்தார்கள். மாலதிக்கு முதல் நாள் மாலையே செய்தி கிடைத்துவிட்டது. ஆயினும் தயக்கம் காரணமாக அங்கே போகவில்லை. அவனைப் பார்க்க அவளுக்கு ரொம்ப ஆசை. அநேகமாக இரவு பூராவும் அவனுக்காக விழித் திருந்தாள்.

லால்ட்டு ஒரே வரியைத் திருப்பித் திருப்பிப் படித்தான். ''அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம் .....''

செல்ஃபிஷ் ஜயண்ட்! வார்த்தைகளை மனத்துக்குள் சொல்லிக் கொண்டாள் மாலதி. அவள் பயந்து ஓடிப்போய்விட்டாள் அன்று. எவ்வளவு நாட்களுக்கு முன்பு நடந்தது அது!

அப்போது ஏரிக்குள் முதலை மிதந்து வரவில்லை. மாலதி ஃபிராக் அணிந்துகொண் டிருந்தாள். ஒரு நாள் கண்ணாமூச்சி விளையாடும் போது அந்த 'செல்ஃபிஷ் ஜயண்ட்! அவளைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டுவிட்டான். மாலதிக்குக் கோபம், வருத்தம். இல்லை, கோபம், வருத்தம் என்று சொல்ல முடியாது. தன்னிடம் ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் ரஞ்சித் இப்படித் தன்னை முத்தமிட்டது ஒரு தப்பான காரியம் என்று நினைத்தாள் அவள். அவனைக் கண்டிப்பது, பயமுறுத்துவது அவள் கடமை. அப்படிச் செய்யா விட்டால் அவருடைய கெளரவம் போய்விடும். பெரிய மாமியிடம் சொல்லிவிடப் போவதாக ரஞ்சித்தைப் பயமுறுத்தினாள் மாலதி.

தாய் தந்தையற்ற அந்த அநாதை - செல்ஃபிஷ் ஜயண்ட் - மறு நாள் காலையில் ஒருவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிப் போய்விட்டான்.

பெரிய மாமிக்கே ஓடிப் போன தன் தம்பியைப் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை.

அதன் பிறகு ஸோனாலி பாலி நதியில் எவ்வளவு தண்ணீர் ஓடி விட்டது, எவ்வளவு குளிர் காலங்கள், வசந்தங்கள் கழிந்துவிட்டன! ஏரியில் முதலை அகப்பட்டுக்கொண்ட வருடந்தான் மாலதிக்குக் கல்யாணமாயிற்று. அவள் ஒரு நாள் பெரிய மாமியைக் கேட்டாள்,

?'' என்று . ''ரஞ்சித் உங்களுக்குக் கடிதாசு எழுதினானா அண்ணி

''எழுதறான்.'' "என்ன எழுதறான்?" "ஒண்ணுமில்லே விசேஷமா. சௌக்கியமா இருக்கேன்னு எழுதறான்.''

''விலாசம் எழுதியிருக்கானா?" ''எழுதக் கூடாது.'' ''ஏன்?'' ''தேசசேவை பண்றான். அதனாலே விலாசம் தெரியக்கூடாது.''

169குளிர்காலச் சூரியனுக்கு உதிக்கவே மனம் இல்லை; வெயில் கொடுக் கவே மனம் இல்லை. மரங்களின் நிழல் வீடுகளை மறைத்திருந்தது. கிழவர்கள் வெயிலுக்காகத் தவித்தார்கள். விடியற்காலைக்குச் சற்று முன்னால், இருட்டும் இல்லை, வெளிச்சமும் இல்லை. மாலதி, சப்தம் செய்யாமல் துறைக்கு வந்த போது நெசவு அறைக்கு வெளியே அமூல்யன் நெருப்புக்கருகில் குளிர் காய்வதைப் பார்த்தாள். குளிர் காலமாதலால் அமூல்யன் சருகுகள், குப்பை செத்தைகளைச் சேர்த்து வைத்திருந்தான். அவன் நெருப்பில் சருகுகளைப் போட்டுக் கொண்டிருந்தான். சோபா, ஆபு, நரேன்தாஸின் மனைவி எல்லாரும் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். மாலதி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தபோது அமூல்யன் தன்னைக் கவனிப்பதைப் பார்த்தாள். அவள் அங்கே வராமல் நிலைக்கட்டையில் சாய்ந்துகொண்டு நின்றாள். நெருப்புக் கருகில் அமூல்யனின் முகம் பயங்கரமாகத் தெரிந்தது. இப்போது அவள் கனவில் கண்ட மனிதனின் முகம் அவள் மனக் கண்ணில் தோன்றவில்லை. அமூல்யனின் முகந்தான் எதிரில் தெரிந்தது. தன் உடல் முழுவதும் அசுத்தமாகிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது மாலதிக்கு. அவள் அமூல்யனுக்கு அருகில் உட்கார்ந்து நெருப்படியில் குளிர்காய விரும்பாமல் ஸ்நானம் செய்யக் குளத்துக்கு ஓடி வந்துவிட்டாள். இறந்த கணவனின் முகத்தை நினைத்துக்கொண்டே வெகு நேரம் தண்ணீருக்குள் அமுங்கிக் கிடந்தாள். அமூல்யனின் முகத்தை மறப்பதற்காக, கெட்ட நினைவு களை மறப்பதற்காக, அவள் பனிக்கட்டி போல் குளிர்ந்திருந்த நீரில் முழுகி முழுகி எழுந்தாள்.

குளித்தபின் செம்பரத்தைச் செடிக்கருகில் வந்து நின்றபோது தான் ஏன் தண்ணீரில் வந்து விழுந்தோம் என்பது அவளுக்கு மறந்து போய்விட்டது. அவள் பூஜையறைக்குப் போய் மந்திரங் களை முணுமுணுத்துக் கொண்டு சாமிக்கு நமஸ்காரம் செய்தாள். தன்னையே வைத்து கொண்டாள். பூஜையறைக் கதவில் தலையை முட்டிக்கொண்டாள். விதவைக்கு இளமை கூடாது, சுகம் கூடாது, காதல் கூடாது என்பதுதான் கடவுளின் விருப்பம். இளமையிருந்தால் பாவம், காதல் இருந்தால் பாவம், சுகத்தை விரும்பினால் பாவம். மாலதி தலையால் முட்டிக்கொண்டு சொல்ல விரும்பினாள் : ''சாமி, என் இளமையை எடுத்துக்கொண்டுவிடு. நான் அதிருஷ்டக்கட்டை! எனக்கு அதிருஷ்டமிருந்தால் என் புருஷன் உயிரோடிருந்திருப்பான். கலகத்தில் செத்துப் போயிருக்க மாட்டான்!' அவள் கண்ட கனவு மீண்டும் அவள் ஞாபகத்துக்கு

170வந்தது. எவ்வளவோ காலங்கழித்து அந்த மனிதன் அவளிடம் தண்ணீர் கேட்டு வந்திருந்தான். ஆனால் அவள் தண்ணீர் எடுத்து அவன் கையில் கொடுத்தபோது அவனது முகம் மாறிப் போய் விட்டது. அமூல்யனுடைய முகம் போல ஆகிவிட்டது. நெசவு அறையில் அமூல்யன் சிரித்துச் சிரித்துப் பேசுவான். ஒன்றுந் தெரியாத அப்பாவி போல் பேசுவான். "அக்கா! மாலதி அக்கா" என் அறைக்குக் கொஞ்சம் தண்ணி கொடுத்தனுப்புங்க? அக்கா உங்களுக்காகப் பிரப்பம்பழம் பறிச்சுக்கிட்டு வந்திருக்கேன், அல்லிக்கிழங்கு கொண்டு வந்திருக்கேன். அல்லித் தாமரைக் கொட்டை கொண்டு வந்திருக்கேன். உங்களுக்காக நான் என்னென்ன செய்யறேன் பாருங்க !'' கனவில் தன் கணவனுக்குத் தண்ணீர் கொடுக்கவந்த அவள் படுக்கையில் அமூல்யன் உட் கார்ந்திருப்பதைக் கண்டாள்.

வீடு திரும்பிய அவள் ஈரத்துணியைக் களைந்துவிட்டு ஒரு வெள்ளைப் புடைவையைக் கட்டிக்கொண்டாள். கைத்தறிச் சால்வை ஒன்றை மேலே போர்த்துக்கொண்டாள். கொய்யா மரத்தடியில் அடுப்பைக் கொண்டுபோய் அதைப் பற்றவைத்தாள். இன்று அவள் வேண்டுமென்றுதான் குளிர்காய அமூல்யனுக்கு அருகில் போகவில்லை. அமூல்யனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால் அவளு டைய தேகத்தில் எரிச்சல் அதிகமாகும். அவள் ஆபுவைக் கூப்பிட்டாள். சோபாவைக் கூப்பிட்டுக் கொஞ்சம் பலாச்சுள்ளி கொண்டுவரச் சொன்னாள். குளிரால் அவளுடைய கை கால்கள் மிகவும் வெளுத்துப் போயிருந்தன. ஆபுவைக் கொஞ்சிக்கொண்டே அவள் கன்னத்தில் தன் கையை வைத்துத் தேய்த்தாள். வெப்பத்துக் காகச் சோபாவின் கன்னத்தில் தன் கையை வைத்தாள். இந்தக் குளிரிலும் இந்தப் பெண்கள் எவ்வளவு சூடாக இருக்கிறார்கள்!

குளிர்கால வெயில் நீளமாக விழுந்தது. எதிரிலிருந்த வயலில் உயரமாக வளர்ந்திருந்தது புகையிலைப் பயிர். பின்னால் தோட் டத்தில் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, முட்டைக்கோசுச் செடிகள். நரேன் தாஸ், நிலத்திலும் தறியிலும் மாதம் பூராவும் உழைத்து இந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். குடும்பத்தில் தனக்கு இருக்கும் பாசம் காரணமாக அவன் எப்போதும் நிலத்திலோ தறியிலோ ஏதோ வேலை செய்துகொண்டே இருப்பான். இப்போது அவன் வெங்காய வயலில் செடிகளின் வேர்க்கணுவில் மண்ணைப் போட்டுக்கொண்டிருந்தான். அவன் மண்ணைக் கையிலெடுத்து அதைத் தங்கத்தைப் பார்ப்பதுபோல் இமை மூடாமல் பார்ப்பதை மாலதி கவனித்தாள். மண்ணுக்குள் என்ன சத்து இருக்கிறது, அது

171எப்படிச் செடியில் காயாக, பயிரில் தானியமாக வருகிறது, யாருடைய புண்ணியத்தால் வயல் பொன்னாக விளைந்து அந்த விளைச்சல் வீட்டுக்கு வருகிறது என்றெல்லாம் மண்ணின் ரகசியத் தைக் கண்டுபிடிக்க முயல்கிறான் நரேன் தாஸ். அவன் தன்னைச் சுற்றி வளர்ந்திருந்த புகையிலைப் பயிருடனோ, கடலைச் செடிக ளுடனோ, மண்ணுடனோ ஏதோ பேசிக்கொண்டிருந்தான். எவ்வளவு கஷ்டப்பட்டுத் தண்ணீர் இறைத்து இந்தப் பயிர்களை வளர்த்திருக் கிறான் அவன்! அவனுக்குப் பயிர்களின் மேல், செடிகளின் மேல் ரொம்பப் பிரியம். ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் நரேன்தாஸ் வயலுக்கு வந்துவிடுவான். செடிகளின் வேர்களுக்கு மேல் மண்ணைப் போட்டுக்கொண்டு அவற்றுடன் பேசத் தொடங்கி விடுவான். பேச்சுச் சுவாரசியத்தில் சாப்பிடக்கூட மறந்துவிடுவான். வாழ்க்கையின் சுக துக்கங்களை மறந்துவிடுவான்.

மாலதி ஒரு பானையில் தண்ணீர் எடுத்துக்கொண்டாள். கொஞ்சம் எண்ணெய் தடவிய பொரி, இரண்டு பெரிய வெங்காயத் துண்டுகள், கொஞ்சம் உப்பு, பச்சை மிளகாய் எடுத்துக்கொண்டு நரேன் தாஸ க்குக் கொடுக்கப் போனாள். அவள் திரும்பி வரும்போது, கிராமத்து மக்கள் அவர்களுடைய அன்புக்குரிய வயலில் வேலை செய்யப் போவதைப் பார்த்தாள்.

சிறிய டாகுர், ஈசம் பின்தொடர ஆற்றுப்படுகையை நோக்கிப் போய்க்கொண் டிருந்தார். நிலத்திலிருந்து தண்ணீர் இறங்காதது கவலையாயிருந்தது ஈசமுக்கு. இந்தத் தண்ணீரை வடிப்பது எப்படி என்பதைப் பற்றிச் சிறிய டாகுருடைய யோசனையைக் கேட்கவே அவன் அவரை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு போனான். மன்சூர், ஜப்பர், நயாபாடாவின் பிஸ்வாஸ், ஹாசிமின் தந்தை ஜய்னால், ஆபேத் அலி இன்னும் பலர் கடைத்தெருப் பக்கம் போய்க்கொண் டிருந்தார்கள். பலர் எருது, பசுக்கள் கன்றுகளைக் கூட்டிக்கொண்டு போனார்கள். பேலுஷேக், ஹாஜி சாய்புவின் கோவில் மாட்டை விரட்டிக்கொண்டு திரிந்தான். எல்லாரும் விவசாய வேலையில் மூழ்கியிருந்தார்கள். அவர்களுடைய கனவுகள், ஆசாபாசங்கள், அன்பு எல்லாமே விவசாயத்தில் அடங்கியிருந்தன. அதற்குப் பிறகு மனிதனுக்கு வேறென்ன வேண்டும்? அவன் கொஞ்சம் கடவுளைப் பற்றி நினைக்க விரும்பு கிறான். இந்துக் குடியிருப்புகளில் ஜாத்ரா நடக்கும், கூத்து நடக்கும், ராமாயண நாடகக் கூத்து, ராவணவதம். லோக்நாத் பால் ராமன் வேஷம் போடுவான். மாஜி வீட்டுப் பந்தலில் மிருதங்கம் முழங்கும். ஊரிலுள்ள கிழவர்களும் கிழவிகளும் அங்கே போய்விடு வார்கள். ஒருவர்கூட வீட்டில் தங்கமாட்டார்கள்.

172குளிர்காலத்தில் சந்தா வீட்டில் பாட்டுப் போட்டிகள் நடக்கும். பெரிய பெரிய பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எரியும். கிராமம் முழுதுமே உற்சவம் மாதிரி இருக்கும். பராபர்திச் சந்தையிலுள்ள தன் கடையை மூடிவிட்டுக் கிராமத்துக்குத் திரும்பிவருவான் ஸ்ரீசந்திரன். குளிர்காலம் வந்துவிட்டால் திருவிழாக்கள் நடக்கும். மக்கள் தொலை தூரங்களுக்குப் பிரயாணம் செய்வார்கள். குதிரைப் பந்தயம் நடக்கும். பந்தயத்தில் ஜயிப்பதற்காகப் பிஸ்வாஸ் பாடாவில் தினமும் ஒத்திகை நடக்கும்.

அமுல்யனும் நெசவு அறையில் ஒத்திகை பார்க்கிறானென்று மாலதிக்குத் தோன்றியது. முன்பு எவ்வளவு அப்பாவியாக இருந்தான் இவன்! நாள் பூராவும் நெய்துகொண் டிருப்பான், வெளியே வந்தால் தலை நிமிர்ந்து பார்க்க மாட்டான். மாலதி இட்ட வேலையைச் செய்வான். அந்த அமூல்யன் போன வருஷத்து மழைக் காலத்தில் ...

சென்ற வருஷம் அவர்கள் எல்லாரும் நாங்கல் பந்துத் திருவிழாவின் அஷ்டமி ஸ்நானத்துக்குச் சென்றிருந்தார்கள். பெரிய படகில், மூன்று தட்டுப் படகு, பெரிய அத்தை, தனமாமி, மாஜிவீட்டுக் காலாபாகாடின் தாய் இன்னும் எவ்வளவோ பேர் படகில் ஏறிப் போனார்கள். ஒரு நாளைப் பயணம். அஷ்டமி ஸ்நானத்துக்கு எவ் வளவு கூட்டம்! ஆற்றின் இருகரையிலும் எவ்வளவு மூர்த்திகள்! பைரவரின் மண் சிலையில் நீல நிறமாக இருந்த வயிற்றைப் பார்த்து வேடிக்கையாகப் பேசினான் அமூல்யன்.

அகலமான நதி. இருகரைகளும் கண்ணுக்குத் தெரியவில்லை. எவ்வளவோ படகுகள், எவ்வளவோ ஸ்டீமர்கள் வந்திருந்தன. பாவத்தைக் களைந்துவிட்டுப் புண்ணியம் சம்பாதிக்க நிறைய மக்கள் வந்து குழுமியிருந்தார்கள். ஆற்றில் எள்போட இடமில்லை. மாலதியும் ஸ்நானம் செய்ய இறங்கினாள். கரையில் அமூல்யன். அவன் சட்டைப் பையில் காசு. அவன் மாலதியின் சார்பில் புரோகிதருக்குத் தட்சிணை, எள், துளசி எல்லாம் எடுத்துக் கொடுத் தான். அவன் மாலதியை அழைத்துக்கொண்டு போய்க் கடை களைக் காட்டினான். அவளுக்காக ஒரு லட்சுமி படம் வாங்கிக் கொடுத்தான். அவளுக்காகப் பணம் செலவு செய்ய முடிந்த சந்தோஷத்தில் அவன் வாயிலிருந்து பாட்டு வந்தது. பணம் செலவு செய்ததால் தானே மாலதிக்குப் பொறுப்பாளி என்று நினைத்துவிட்டான் அமூல்யன். அவன் அவளிடம் சொன்னான். ''நாம் நீந்தி அக்கரைக்குப் போகலாம், வரீங்களா , அக்கா?"

'அக்கரைக்குப் போக ஆசையா இருக்கா?" ''ஆமா, ரொம்ப ஆசை!''

173"தண்ணீரிலே முதலை இருக்குங்கிறது ஞாபகம் இருக்கா?" ''இருக்கு .'' ''எனக்கு முதலைகிட்டே ரொம்பப் பயம்.'' ''பயப்படாதீங்க, மாலதி அக்கா !" அமூல்யனுக்குப் பயமில்லை. பயம் இல்லாததால் தான் அவன் நாள் முழுதும் திருவிழாவில் மாலதியுடன் சுற்றினான். அஷ்டமி ஸ்நானத்தில் வேறு யாரும் இவ்வளவு அக்கரையுடன் மாலதிக்குத் திருவிழாவைச் சுற்றிக் காட்டியதில்லை. சோபா, ஆபு யாரும் கூட இல்லை. நரேன் தாஸ் திருவிழாவில் ஒரு துணிக்கடை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அப்போதிலிருந்து அமூல்யன் முன்போல் சாது வாக இல்லை. அவனுடைய ஆசை வளர்ந்துகொண்டே போயிற்று.

இப்போது சூரியன் சற்று மேலே எழும்பியிருந்தான். கைகால்கள் இப்போது அவ்வளவு ஜில்லிப்பாக இல்லை. பள்ளத்துக்குள் வாத்துக்கள் சப்தம் செய்து கொண் டிருந்தன. மாலதி தகரமூடி யைத் திறந்துவிட்டாள். வாத்துக்கள் முதலில் பள்ளத்திலிருந்து தலையை வெளியே நீட்டிப் பார்த்தன. பெரிய ஆண் வாத்து மற்ற வாத்துக்களைத் தள்ளிக்கொண்டு முதலில் வெளியே வந்தது. அமூல்யன் அதைப் பார்திச் சந்தையில் மாலதிக்கு வாங்கிக் கொடுத் திருந்தான். போன மழைக்காலத்தில் அவளுடைய ஆண்வாத்து காணாமல் போய்விட்டது. இரவின் இருளில் அவளும் அமூல்யனும் ஏரிக்கரையில் புதர்களிலெல்லாம் தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இரவு அவர்கள் வாத்தைத் தேடிக்கொண்டு இருட்டில் வயல்களில் எல்லாம் சுற்றினார்கள். படகில் திரும்பி வந்து கொண்டிருந்த சாமு அவர்களைப் பார்த்து அமூல்யனிடம் சொன் னான். ''அமூல்யா, வீட்டுக்குப் போ! இருட்டு வேளையிலே இப்படியெல்லாம் கத்தக்கூடாது, மாலதி. வீட்டுக்குப் போ! வாத்து எங்கேயிருக்குன்னு நான் பார்க்கிறேன்!'' என்றான் மாலதியிடம்.

ஆனால் கடைசி வரையில் சாமுவாலும் வாத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வாத்து காணாமற் போனதிலிருந்து மாலதி சோர் வுற்றுக் காணப்பட்டாள். அமூல்யன் வாங்கிக் கொடுத்திருந்த வாத்து கறுப்பும் பழுப்பும் கலந்த நிறம். அவன் மிகவும் சிரமப் பட்டுச் சந்தை முழுவதும் தேடிக் கடைசியில் இந்த வாத்தை வாங்கி வந்திருந்தான். 'தான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வாத்தைப் பொறுக்கி வாங்கினான், ஒரு நல்ல ஆண்வாத்துக்காக அவன் எவ்வளவு பேரிடம் சொல்லிவைத்திருந்தான்!' என்பதை யெல்லாம் அவன் அடிக்கடி அவளிடம் சொல்ல முயற்சி செய்தான். வாத்து வாங்கிக் கொடுத்த பிறகு அவள் மேல் அதிக உரிமை

174எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான் அமூல்யன். மாலதி சொல்ல விரும்பினாள். ''அமுல்யா! நீ தறி நெய்து பிழைப்பவன். உனக்கு விதவையின் கடமையைப் பற்றி என்ன தெரியும்? விதவையின் கெளரவம் அவளுடைய விதவைத் தன்மையில் இருக்கிறது. அவள் சாப்பிடும் வெறும் அரிசிச் சோற்றிலும் கீரையிலும் இருக்கிறது, அமூல்யா! நாள் பூராவும் தறியில் உட்கார்ந்துகொண்டு அதன் கடகட சப்தத்தை கேட்டு உன் காதுகள் மந்தமாகிவிட்டன. உன் மூக்கில் முகரும் சக்தி இல்லை. கண்களால் கனவு மட்டும் காண்கிறாய். விதவையான நான் நாள் முழுவதும் வீட்டு வாசலை மெழுகிக் கழுவி, வீட்டுவேலை செய்து, கதிரில் நூல் சுற்றி, சாதத் தையும் கீரையையுமே விருந்தாகக் கருதிச் சாப்பிடுகிறேன். என் பக்கத்தில் மீன் நாற்றம் வந்தால் என் மானம் போய்விடும். நீ ஆண்வாத்தைப் போல் காட்டில், தண்ணீர்த் துறையில், இரவின் இருட்டில் என் கழுத்தைக் கடித்துச் சுகம் பெற விரும்புகிறாய். அதனால் என் மானம் போய்விடும். என்னிடம் நீ அன்பாயிருக் கலாம். ஆனால் மாமிசத்துக்கு ஆசைப்பட்டு என்னைச் சுற்றினால் கடித்துவிடுவேன், ஜாக்கிரதை! என் பிரியம் மாமிச வெறியை அணுகவிடாது !"

கனவு கண்ட பிறகு ஏனோ மாலதிக்கு அமூல்யன் மேல் வெறுப்பு அதிகரித்தது. அமூல்யனும் ஜப்பரும் அவளை அடிக்கடி உறுத்துப் பார்த்தார்கள். அண்ணனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றி யது மாலதிக்கு. ஜப்பரும் லேசுப்பட்டவன் இல்லை. ஜப்பரின் நினைவு வந்ததும் மாலதியின் முகம் வெறுப்பில் சுருங்கியது.

மாலதி வாத்துக்களைக் கூட்டிக்கொண்டு துறைக்குச் சென்றாள். அமூல்யன் தறி நெய்துகொண் டிருந்தான். கட்டை இந்தப் பக்கம் ஒரு முறை, அந்தப் பக்கம் ஒருமுறை போய்க்கொண் டிருந்தது. ஆண் வாத்து மற்ற வாத்துக்களைத் தண்ணீரில் இறங்க விடவில்லை. அது அவற்றின் மூக்கைக் கடித்து அவற்றுடன் சச்சரவு செய்தது. அதன் கொம்மாளத்தைப் பார்த்து மாலதி வழக்கம்போல் தன் முகத்தைச் சேலைத் தலைப்பால் மூடிக்கொண்டாள். வழக்கம் போல் அந்த விஷமச் சிரிப்பு அவளுடைய முகத்தில் விளையாடி யது. 'உனக்குப் பொருக்கல்லியாக்கும்!

இந்த மாதிரி காட்சிகளைக் காணும்போது அவளுடைய மனமும் தறிக்கட்டை போல இங்குமங்கும் அலை பாயும். அவளுக்கு உள்ளுற ஓர் ஆசை தோன்றும், 'அவளை யாராவது இறுக்கக் கட்டிக்கொண்டு சாப்பிடட்டும்!' என்று. உடனே தோன்றும், 'விதவைக்கு இப்படி ஆசை ஏற்படுவது பாவம்!'

அவளுக்கு உடனே போய் ஸ்நானம் செய்து தன் பாவங்களைக்

11,

175கழுவிவிடும் வெறி தோன்றும். ஸ்நானம் செய்யாவிட்டால் ஜாதி போய்விடும். அப்புறம் தோன்றும் விதவைக்கு ஜாதி வேறா?

யுவதி மாலதியின் அங்கங்களில் அழகு சொட்டியது. அவளுடைய உதடு வெங்காயத் தோல் போல் மிருதுவாக இருந்தது. அவளுடைய ஆசையாகிய வீட்டில் அமூல்யன் ஒரு குரங்குதான். அவன் எப்போதும் வாலை உயர்த்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். அந்த அமுல்யனைக் கனவில் கண்டது அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது.

வாத்துக்கள் தண்ணீரில் இறங்கிய பிறகு மாலதி நாற்புறமும் திரும்பிப் பார்த்தாள் வாத்துக்கள் முழுகி முழுகிக் குளித்தன. பக்கத்தில் யாரும் இல்லை. புகையிலை வயலைத் தாண்டினால் மேட்டு நிலம். அங்கே ஜப்பர் வேலை செய்கிறான். நரேன்தாஸ் பூமியி லிருந்து சத்தை எடுத்து வெங்காயத்தையும் பூண்டையும் வேர்க் கடலையையும் கொழுக்கவைக்க முயற்சி செய்கிறான். வேறு ஒரு காட்சியும் தெரியவில்லை. டாகுர் வீட்டில் சோனா படிக்கிறான், 'பாதாய் பொட நிசிர் சிசர் ..' லால்ட்டு படிக்கிறான். 'அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்.'...., ஜப்பர் உழுதுகொண டிருக்கிறான். மாலதியைப் பார்த்துவிட்டால் அவன் மாட்டையும் கலப்பையும் விட்டுவிட்டு அவளிடம் ஓடி வருவான். ''மாலதி அக்கா , கொஞ்சம் தண்ணீ கொடுங்க ! தொண்டை உலர்ந்து போச்சு" என்பான்.

ஜப்பர் வந்தால் சாம்சுத்தீனைப் பற்றி அவனை விசாரிக்கலாம் என்று மாலதி நினைத்தாள். சாமு இப்போது இங்கே இல்லை. அவன் டாக்கா போயிருந்தான். பைத்தியக்கார டாகுர் யானையை வைத் துக் கொண்டு அவன் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தைக் கலைத்து விட்டார். பேலுவின் கையை ஒடித்துவிட்டார். அதன் பிறகு சாமு இந்துக் குடியிருப்புக்கு வருவதையே விட்டுவிட்டான் போல் இருந்தது. சின்ன டாகுருக்கும் சாமுவுக்குமிடையே எதைப் பற்றியோ தகராறு ஏற்பட்டுவிட்டது. ஆற்றுப் படுகையில் நின்று கொண்டு அவர்கள் சச்சரவு செய்தார்கள். அதிலிருந்து சாமு இந்தப் பக்கம் வருவதில்லை. சாமுவின் பெண் எப்போதாவது ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு அந்தப் பக்கம் வருவாள்.

பாதிமா அன்று டாகுர் வீட்டு மருத மரத்தடியில் யாருக்காகவோ காத்துக் கொண் டிருந்தாள். அவள் பெரிய மூக்குத்தி அணிந்திருந் தாள். மாலதி அவளிடம் சப்தம் செய்யாமல் நடந்து போய்க் கேட் டாள், ''பாதிமா, நீயா?" என்று.

பாதிமாவுக்குச் சிறிய கண்கள், மூக்கில் பெரிய மூக்குத்தி. சிறுமி யின் முகத்தில் அழகு விளையாடியது. பின்னிய அழகிய கூந்தல்.

176''அத்தை, இதைச் சோனா பாபுவுக்குக் கொடுங்க!'' என்று சொல்ல அவள் தன் மடியிலிருந்து இரண்டு கொத்து மஞ்சித்திப் பழங்களை எடுத்து மாலதியிடம் கொடுத்தாள்.

''இந்தப் பருவத்தில் மஞ்சத்திப் பழமா!" மாலதிக்கு வியப்பா யிருந்தது.

பாதிமா தானாகவே விளக்கினாள். "ஆபேத் அலி சித்தப்பா வெளி யூரிலிருந்து கொண்டுவந்தார்."

ஏனோ மாலதிக்கு அந்தப் பெண்ணை அப்படியே இறுகத் தழுவிக் கொள்ளவேண்டும் போல் இருந்தது. ஆனால் பாதிமா இஸ்லாமியப் பெண் ; அவளைத் தொட்டால் மாலதிக்கு ஜாதி போய்விடும். அவள் பாதிமாவைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பழங்களை வாங்கிக் கொண்டாள். "சோனா பாபுவுக்காக எவ்வளவு சிரமப்படறே நீ? நீ பெரியவளானதும் உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடறேன்" என்று கூறிச் சிரித்தாள்,

சின்னப் பெண் தான். இருந்தாலும் இந்தக் கேலிப் பேச்சு பாதிமாவை நாணமுறச் செய்தது. அவள் அப்புறம் அங்கு நிற்க வில்லை. அவள் ஆற்றுப்படுகை வழியே ஓடத் தொடங்கினாள். கிராமத் திலும் வயலிலும் வளர்ந்திருந்த செடிகள், மரங்களின் நிழல் நளின உணர்வை எங்கும் பரப்பிக்கொண்டிருந்தது. இந்த நளினம், அன்பின் மென்மையான உணர்வு. அந்தப் பெண்ணின் அங்கங் களைத் தழுவியது. அன்று பின்பனிக் காலத்தின் கடைசி நாள் சிறுமி கொஞ்சங் கொஞ்சமாக அந்த நளினத்துக்குள் ஒன்றி மறைந்து விட்டாள்.

இந்த நளின உணர்வு நெடுநேரம் மாலதியையும் ஆட்கொண்டது. சோனா இன்னும் படித்துக்கொண் டிருந்தான். 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்.' வாத்துக்கள் நீரில் முழுகி எழுந்துகொண் டிருந்தன. கரையில் நின்றிருந்த மாலதியின் நீண்ட நிழல் தண்ணீரில் விழுந்தது. அவளால் தண்ணீரில் தன் முகத்தைப் பார்க்க முடிந்தது. எவ்வளவோ நினைவுகள் வந்தன அவளுக்கு. சாமுவின் நினைவு, ரஸோ, பூடி ஆகியோரின் நினைவு, 'அந்த' மனி தனின் நினைவு. இளம் வயதில் பாம்பைப் பிடித்து அதை முத்தமிடத் துணிந்த மனிதன் பயந்துபோய் ஊரைவிட்டே ஓடிவிட்டானே! அவன் நேற்று இரவு திரும்பி வந்துவிட்டான். அவன் இப்போது சின்னப் பையன் அல்ல. வார்த்தைக்கு வார்த்தை சண்டைக்கு வர மாட்டான். இப்போது அவன் ஒரு பெரிய மனிதன், மகான். தேச சேவை செய்கிறான். கொஞ்ச காலம் ஜெயிலில் இருந்தான். அவனைப் பற்றிய செய்தி கற்பனைக் கதைபோல் இருக்கும் கேட்க. இப்போது

177

12மாலதி நீரில் வாத்துக்கள் நீந்துவதைப் பார்க்கவில்லை. அவள் கண் களுக்கு நீருக்கு மேலே தெரிந்தது அந்த மனிதனின் முகந்தான். அந்த மனிதனைப் பார்ப்பதற்காகவே அவள் பைத்தியக்காரியைப் போல் காலை நேரம் பூராவும் டாகுர்வீட்டுத் துறையில் குளித்துக் கொண்டிருந்தாள். பெரிய மாமிக்குப் பூப்பறித்துக் கொடுத்தாள். டாகுர் வீட்டுக்குப் பக்கத்தில் அவன் எங்காவது கண்ணில் படுவா னென்ற நினைப்பில் அங்கு வெகுநேரம் நின்றாள். ஆனால் ஆளைக் காணோம்! அமூல்யனின் முகம் நினைவுக்கு வந்தது. அமூல்யனும் ஜப்பரும் ஒன்று சேர்ந்து கொண்டு அவளை விழுங்க வருகிறார்கள்.

யாராவது தன்னைப் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில் அவள் வெகு நேரம் டாகுர் வீட்டு வாசலில் தாமதிக்கவில்லை. அவள் பெரிய மாமியைக் கூடக் கேட்கத் துணியவில்லை,'' அண்ணி. ரஞ்சித் நேத்து ராத்திரி வந்தானாமே?" என்று. அன்பின் நளினம் அவளது கண்களில் குடியிருந்தது. அவள் ரஞ்சித்தைப் பார்ப்பதற் காக ஸ்நான கட்டத்துக்கருகில் செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள நினைத்து உட்கார்ந்து கொண்டாள். அப்போது ஒரு குரல் கேட்டது, ''மாலதி, நீயா இங்கே தனியா?' என்று.

மாலதியின் இருதயம் பட படவென்று அடித்துக்கொண்டது. அவள் திரும்பிப் பார்த்தபோது அங்கே ரஞ்சித் நின்றிருந்தான். அவனுடைய கையைப் பிடித்துக்கொண் டிருந்தான் சோனா. அவளுடைய திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிட்டது. நாணத்தால் அவளால் தலையை நிமிர்த்த முடியவில்லை. இப்போது ஒருவரும் படிக்கவில்லை, 'பாதாய் பாதாய் பொடே நிசிர் சிசிர்' என்று. எங்கும் ஒரே அமைதி. புழு பூச்சிகளின் அரவங்கூடக் கேட்க வில்லை. மாலதி பயந்து கொண்டே, ''வாத்துக்களைத் தண்ணீயிலே விடவந்தேன்'' என்று சொல்லிவிட்டு, தலைநிமிர்ந்து ரஞ்சித்தைப் பார்த்தாள். இப்போது எதுவும் எங்கும் மெளனமாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாமே கூச்சலிடுகின்றன. வாத்து, கோழி, மாடு, கன்று, பறவை எல்லாமே ஒலியெழுப்பு கின்றன. நெசவறையிலிருந்து அமூல்யனின் 'டக், டக்' ஒலியும்

அவள் காதில் விழுந்தது.

ரஞ்சித்தைப் பார்த்ததும் மாலதியின் வெகு நாளையப் பயம் மறைந்துவிட்டது. ஜப்பரோ அமுல்யனோ யாரும் இனிமேல் அவளை விழுங்கிவிட முடியாது.

எங்கோ இன்னும் யாரோ படித்துக்கொண் டிருந்த ஒலி கேட்டது. "அட்லாஸ்ட் தி செல்ஃபிஷ் ஜயண்ட் கேம்!'' அந்த ஒலி காதில் விழுந்ததும் மாலதி ரஞ்சித்தைப் பார்த்து மெல்லச் சிரித்தாள். ரஞ்சித்தாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

178மாலதிக்கு நாட்கள் நன்றாகவே கழிந்தன. ரஞ்சித் வருவதற்கு முன்னால் மாலதிக்கு வாழ்க்கையில் ஒரு வெறுமையுணர்வு, எதையோ இழந்துவிட்ட உணர்வு இருந்தது. ரஞ்சித் வந்த பிறகு இழந்துவிட்ட அதைத் திரும்பப் பெற்ற மாதிரி உற்சாகமும் மகிழ்ச்சியும் அவளை ஆட்கொண்டன.

குளிர்காலமாதலால் பொழுது சீக்கிரம் கழிந்துவிட்டது. குளிர்கால மாதலால் தண்ணீரில் மூங்கில் அழுகும் நாற்றம் அவ்வளவு தீவிர மாகத் தெரியவில்லை குளிர்காலமாதலால் கிராமத்தார் சீக்கிர மாகவே கிணற்றங்கரைக்குத் தண்ணீர் எடுக்க வந்தார்கள்.

கிணற்றின் சுற்றுச் சுவர் நல்ல உயரம். நின்று கொண்டு கழுத்தை நீட்டிப் பார்த்தால்தான் மறுபக்கம் தெரியும். கிணற்றைத் தாண்டி னால் மூங்கில் தோப்பு. ஈசம் நல்ல கெட்டியான மூங்கிலாகத் தேடிப் பொறுக்கினான். ரஞ்சித் அதை ஒரே அடியில் வெட்டி வீழ்த்தினான். ஈசம் அதை வெளியே கொண்டுவந்து அதன் கணுக்களையும் இலைகளையும் செதுக்கி எறிந்தான். கிணற்றில் தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் அங்கு வெகு நேரம் தாமதிக்கவில்லை. பெரிய மாமியின் தம்பி, எங்கோ ஓடிப் போயிருந்தவன், திரும்பி வந்து விட்டான். மெல்லிய மீசை, நீண்ட கண்கள். வெளியூரில் வெகு காலம் தங்கியதால் தேகத்தில் ஓர் அழகு. கச்சம் வைத்து வேட்டி கட்டிக்கொண் டிருந்தான், சுருள் கேசம், நெற்றியில் நட்டநடுவில் ஒரு திலகம், ஆஜானுபாகுவான உடல்வாகு. இப்போது ரஞ்சித் தைப் பார்ப்பவர்களுக்கு அடையாளமே தெரியாது. தாய்தந்தை யற்ற அந்த அநாதைப் பையன் எவ்வளவு பெரியவனா வளர்ந்து விட்டான்!

கிணற்றில் நீர் எடுக்க வந்த எல்லாரும் வாளியைக் கிணற்றுக்குள் போட்டு அதை வெளியே இழுக்கும்போது ரஞ்சித்தைப் பார்த்தார் கள். பழைய நினைவுகள் வந்து அவர்கள் ரஞ்சித்தைக் கூப்பிட்டு அவனுடன் பேசினார்கள். அவன் அவர்களை 'அண்ணி' என்று அழைப்பான். அந்தக் காலத்தில் அக்கம்பக்கத்தார் அவனிடம் பிரியமாக இருந்தார்கள். தாய் தந்தையற்றவன் என்று அவனிடம் பரிவுகாட்டித் தங்கள் வீட்டில் செய்த தின்பண்டங்களைச் சாப்பிடக் கொடுத்தார்கள். அவர்கள் இப்போது அவனிடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போனார்கள்.

மாலதி கடைசியில் வந்தாள். அவள் ஒரு கைத்தறிப் புடைவை அணிந்திருந்தாள். அவளுடைய கையில் குடம். அவள் இந்தப் புடைவை அணிந்துகொண்டால் அவள் விதவை என்றே நினைக்கத் தோன்றாது; அவள் ஒரு குமரி என்றே நினைக்கத் தோன்றும். ரஞ்சித்துக்கு முன்னால் கரையில்லாத வெள்ளைப் புடைவையைக்

179கட்டிக்கொள்ள அவளுக்குத் தயக்கம். அவள் வந்ததும் கிணற்றங் கரையில் குடத்தை வைத்துவிட்டு ரஞ்சித் மூங்கில் வெட்டும் இடத் தில் போய் நின்றாள். ''எதுக்கு இவ்வளவு மூங்கில்?''

'இதையெல்லாம் தண்ணீலே ஊறப்போடணும். இதிலேருந்து முரட்டுத் தடி தயார் பண்ணப் போறோம்" என்றான் ரஞ்சித்.

சோனா இங்குமங்கும் அலைந்தான். இந்தப் புதிய மனிதனை அவன் ஒரு கணமும் விட்டு விலகுவதில்லை. புதிய மனிதன் அவனுக்கு எவ்வளவு விசித்திரக் கதைகள், நம் நாட்டுக் கதைகள், வேறு நாட்டுக் கதைகள் சொன்னான் !

''அத்தை , ரஞ்சித் மாமா ராத்திரியிலே மாஜிக் காண்பிக்கிறார்!'' சோனா சொன்னான்.

மாலதி இன்னும் சற்று நெருங்கி வந்தாள். அங்கே தான் ஈசம் வெட்டிய மூங்கில்களை வெளியே கொண்டுவந்து கொண்டிருந்தான். "உன் மாமா பேச்சே பேசாதே!'' என்றாள் மாலதி.

மூங்கில்களை இப்போது செதுக்கிக்கொண் டிருந்தான் ரஞ்சித். அவன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமலேயே சிரித்தான். காரணம், மாலதி ஏதாவது மர்மமாகப் பேசினால் அவனுக்கு அந்தக் காட்சிதான் ஞாபகம் வருகிறது.

அன்று மாலதி கோபத்தாலோ வருத்தத்தாலோ உடல் நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்களும் முகமும் சிவந்து கிடந்தன, கண்கள் ஈரமாய் இருந்தன, ரஞ்சித் அவளுடைய கற்பையே கெடுத்து விட்டது போல அழும் நிலைக்கு வந்துவிட்டாள் அவள். இதெல்லாம் நினைவுக்கு வந்தது ரஞ்சித்துக்கு. ''உனக்கு ஞாபகமிருக்கிறதா, மாலதி? நீ அக்காகிட்ட ஒண்ணும் சொல்லிடல்லியே?'' என்று கேட்டான் ரஞ்சித்.

அவன் மாலதியின் பக்கம் திரும்பி, ''ஏன் மாமா பேச்சுப் பேசினா என்ன?'' என்றான்.

மாலதிக்கும் அந்த நிகழ்ச்சியை நினைவூட்ட விரும்புபவன் போல அவன் அவளைப் பார்த்தான். ஆகையால் அவள் அங்கே தாமதிக் காமல் தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்விட்டாள். போய்விடுவ தால் எல்லாம் முடிந்துவிடுவதில்லையே! போகும் வழியில் பெரிய மாமியுடன் சற்று வம்பளந்தாள். பெரிய மாமியுடன் தன மாமியும் சுவாமி நைவேத்தியத்துக்காக நெல் பொரித்துக்கொண் டிருந்தார் கள். பொரியைச் சசிபாலா புடைத்துச் சலித்தாள். பைத்தியக்கார டாகுர் இன்று வெளியில் போகவில்லை. வாசலில் தம் இஷ்டப்படி உலவிக்கொண் டிருந்தார். மூங்கில்களை வெட்டும் சப்தம் அங்கும் கேட்டது. மூங்கில் எதற்கு?

180தடி தயார் செய்ய, அந்த மனிதனின் தேகம், கை, கால், முகம் எல்லாம் எப்போதும் அவளுக்குள்ளே வளைய வந்தன. அவனைப் பார்க்கத்தான் அவள் இங்கு வந்தாள். அவளுக்கு வேறு வேலை இல்லை. நரேன்தாஸ் வீட்டில் இல்லை. அவனும் அமூல்யனும் ஒரு கட்டுப் புடைவைகளை எடுத்துக்கொண்டு பாபுர்ஹாட் போயிருந் தார்கள். இப்போது வீட்டில் சோபா, ஆபு, மாலதி மூவர் தான். ஆபாராணியுந்தான் இருக்கிறாள். ஆனால் அவள் வீட்டில் இருப்பதே தெரியாது; அவ்வளவு சாது அவள்.

ரஞ்சித் ஆபாராணியை அண்ணி என்று அழைப்பான்.

இரவில் குளிர்காலமாதலால் எல்லாரும் சீக்கிரமே படுத்துவிடு வார்கள். சசீந்திரநாத் லால்ட்டு, பல்ட்டுவுக்குப் பாடங் கற்பிக்க உட்காருவார். அப்போது ரஞ்சித் தன் அறையில் உட்கார்ந்து கொண்டு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் பெரிய பெரிய புத்த கங்கள் படிப்பான். எவ்வளவு படிக்கிறான் அவன்! இப்போது அவன் அதிகம் பேசுவதில்லை. அவள் அதிகம் பேசினால் அவளைப் பார்த்துச் சிரிப்பான், அவளுடைய அசட்டுப் பேச்சுக்காகச் சிரிப்பது போல. அப்போது மாலதியின் முகம் கோபத்தால் சிவக்கும். உடனே குற்றவாளியைப் போல் அவன் அவளைப் பார்ப்பான். அப்போது அவளுக்கு ஞாபகம் வரும், இவன் ஒரு காலத்தில் பயந்து போய் ஓடிவிட்டான் என்று.

மாலதி ஒரு நாள் சொன்னாள். ''இவ்வளவு பயம் ஆண்பிள்ளைக்கு நன்னாயில்லே !''

''எனக்கு என்ன பயம்?'' ''பயமில்லையோ? வாயாலே சொன்னால் நிசமாகவே சொல்லிடு வேன்னு அர்த்தமா? எல்லா விஷயத்தையும் சொல்ல முடியுமா?'' ''எனக்கென்னவோ, நீ நிசமாகவே அக்காகிட்டே சொல்லிடு வேன்னு தோணித்து.''

"வேறே ஒண்ணும் தோணல்லியே?" ''வேறே என்ன தோணும்?'' "ஏன்? மாலதின்னு பேரைக் கேட்டா எவ்வளவோ விஷயம் ஞாபகத்துக்கு வரலாமே!''

''எனக்கு ஒண்ணும் நினைவுக்கு வரல்லே , மாலதி. நான் ரொம்பத் தொலைவிலே போயிட்டேன். அஸ்ஸாமுக்குப் போனேன். அங்கேயிருந்து இரண்டு வருஷத்துக்கப்பறம் திரும்பி வந்தேன். கல்கத்தாவிலே லாகிரி பாபுவைப் பார்த்தேன். அவர்தான் என்னை இந்த வழியிலே கொண்டுவந்தார்.''

1)

181பேசும் போதே மௌனமாகிவிடுவான் ரஞ்சித். ''கனவு காணக் கத்துக்கிட்டேன். இப்போது எல்லாம் ரொம்பச் சின்னதா , அலபமா தோணரது" என்பான்.

அதிகம் பேசிவிட்டோமென்று அவனுக்குத் தோன்றும். தன் ரகசிய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லிவிட்டதாகத் தோன்றும். அவன் திடீரென்று மெளனமாகிவிடுவான். தன் விஷயத்தை மறந்து விட்டு அவளைக் கேட்பான். ''நீ எப்படி இருக்கே. சொல்லு! உன்னைப் பத்தி எல்லா விஷயமும் அப்பப்போ விசாரிச்சுக்கிண்டு தான் இருந்தேன். நீ திரும்பி வந்ததும் தெரியும். அப்புறம்?"

"அப்புறம் என்ன?'' பதில் கேள்வி கேட்டாள் மாலதி. அவள் சொல்ல விரும்பினாள், 'அப்புறம் என்னன்னு தான் பார்த்தாலே தெரியறதே! இப்படித்தான் இருக்கேன்!'

''சாமுவை எங்கே காணோம்?'' ''அவன் டாக்கா போயிருக்கான். இப்போ 'லீக், லீக்'னு நாட்டைப் பாழாக்கிட்டு இருக்கான்.''

''சாமு அரசியல்லே இறங்கிட்டானா?'' ''ஆமா, பெரிய அரசியல்!'' எரிச்சலுடன் சொன்னாள் மாலதி. நிறையத் தடி தயார் பண்றியே எவ்வளவு மண்டையை உடைக்க முடியும் உன்னாலே?" என்று அவனைக் கேட்டாள்.

"தடி மண்டையை உடைக்க இல்லே. மண்டையைக் காப்பாத் திக்க. சிலம்பப் பயிற்சிக்கூடம் ஒண்ணு இங்கேயே தயார் பண்ண லாம்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். அப்புறம் இதோட கிளைகள் மூணு ஆரம்பிக்கப் போறேன். ஒண்ணு பாம்மந்தியிலே, இன்னொண்ணு சம்மாந்தியிலே, மூணாவது பார் தியிலே. அங்கே பயிற்சி பெற்றவங்க ஆளுக்கு மூணு மூணு புதுக் கிளை ஆரம்பிக்கணும். கிராமத்துக்குக் கிராமம் பயிற்சிக்கூடம் ஆரம்பிச்சு, எல்லாருக்கும் கத்தி வீச்சு, சிலம்பம் எல்லாம் கத்துக் கொடுக்கணும். இதெல்லாம் நாம் நம்பளைக் காப்பாத்திக்கறதுக்காக; இன்னொருத்தர் மண்டையை உடைக்கறதுக்காக இல்லே.''

மாலதிக்கு இதைக் கேட்க வெட்கமாகிவிட்டது. ''எனக்கும் இதெல்லாம் கொஞ்சம் கத்துக்கொடேன்! எனக்குக் கத்துக் கொடுத்தா உனக்குப் பாவம் வந்துடாதே? ஜாதி போயிடாதே ? என்று கேட்டான் அவன். "ஜாதி போவானேன்?'' ''நான் பொண்ணு ! அபலை! அதனால்தான்.'' ''அபலைகள் தான் முக்கியமாக் கத்துக்கணும்.'' ''முதல்லே எல்லாம் ஏற்பாடாகட்டும்" ''இதெல்லாம் யாரு சொல்லித் தருவாங்க?"

182''நான் தான்.'' ''நீ இதெல்லாம் எப்போ கத்துக்கிண்டே?'' ''ஏதோ சமயம் கிடைச்சபோது கத்துக்கிண்டேன்.'' ''உனக்கு என்ன தான் தெரியாது! என்னதான் செய்ய முடியாது?'' ''நான் இதுவரையிலே ஒண்ணும் செய்யலே, மாலதி. இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியது இருக்கு. உனக்கு எல்லாம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவே!''

''என்னையும் உன் கூட்டத்திலே சேர்த்துக்கோயேன்." "கூட்டமா? அது எங்கே இருக்கு?” ''சிலம்பம் பயிற்சிக்குத் தயார் பண்ணறியே, அந்தக் கூட்டத்தைத் தான் சொல்றேன்.''

'கூட்டம்' என்ற வார்த்தையைக் கேட்டுச் சற்று அதிர்ந்துபோய் விட்டான். "இல்லேயில்லே, கூட்டம்'னு ஒண்ணுமில்லே, நான் ஒன்னும் கூட்டம் சேர்க்கல்லே. கூட்டம் சேர்த்து என்ன ஆகணும் எனக்கு?'' என்றான் அவன்.

சற்று மறைவாகக் காலம் கழிக்க விரும்பி அங்கு வந்திருந்தான் ரஞ்சித்.

'ஏன்? அண்ணி கூடச் சொன்னாங்களே நீ தேச சேவை செய்யற தாக!''

''அப்போ , அக்கா உங்கிட்டே எல்லாம் சொல்லியிருக்காங்களா?'' சற்று நேரம் சும்மா இருந்தான் ரஞ்சித். காலை வெயில் அவர் களுடைய முதுகில் விழுந்தது. அவர்கள் தீனபந்துவின் வீட்டுக்குப் பக்கத்தில் நின்று பேசிக்கொண் டிருந்தார்கள். லால்ட்டு, பல்ட்டு, சோனா எல்லாரும் அவர்களைச் சூழ்ந்து நின்றார்கள். ரஞ்சித் மாமா மாலதி அத்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு பேசினார். மாலதி அத்தை தரையைப் பார்த்துக் குனிந்துகொண்டே பேசினாள். மாலதி இன்னும் என்னவோ சொல்ல நினைத்தவள், சிறுவர்களுக்கு முன்னால் பேசுவது சரியில்லை என்று நினைத்து அங்கிருந்து போய் விட்டாள்.

மிகவும் ரகசியமாகச் செயற்பட்டான் ரஞ்சித். இரவு வேளையில் வீட்டு முற்றத்தில், நிலா வெளிச்சத்தில் அல்லது அரிக்கேன் விளக் கின் மங்கிய ஒளியில் குச்சி விளையாட்டைக் கற்பித்தான், வேறு யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக. பெரியமாமி, தன மாமி, பைத் தியக்கார டாகுர், இவர்கள் மூவர்தான் விளையாட்டைப் பார்ப்பார்கள். சோனா, லால்ட்டு, பட்டு எல்லாரும் தூங்கிய பிறகுதான் விளையாட்டு தொடங்கும். ஆனால் ஒரு நாள் இரவில் தூக்கத்திலிருந்து விழித்த சோனா தன் பக்கத்தில் தாயைக் காணாமல் திகைத்தான்.

183