தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .19 -36

 (மெய்ப்பு பார்க்க இயலவில்லை)
 automated google-ocr in ubuntu with the help of Libre draw


நீலகண்டப் பறவையைத் தேடி. . . .19 -36

வங்காள மூலம் :
அதீன் பந்த்யோபாத்யாய
தமிழாக்கம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா புதுடில்லி

 (மெய்ப்பு பார்க்க இயலவில்லை)

ஆனால் கூட்டம் அருகில் வந்ததும் தெரிந்தது. அது பேலுவின் குழு அல்ல. வேறொரு குழு. அப்படியானால் இந்தத் தடவை பேலு தோற்றுப் போய்விட்டானா? அவனுடைய குழு ஏன் இன்னும் திரும்பவில்லை ? பேலுவின் இளமை கழிந்துவிட்டது போலும். அவன் இளைஞனாக இருந்தபோது சடுகுடு விளையாட்டில் பெரிய விளையாட்டுக்காரர்களாக இருந்தவர்கள் இரண்டு பேர்தாம்: பேலுவும் சாபுவும். அப்போது இந்தப் பிராந்தியத்தில் பிஸ்வாஸ் பாடா, நயாபாடா, ஏன், பத்து இருபது கோச தூரத்தில், அல்லது கோபால்தி மைதானத்தில், அல்லது ஆற்றைக் கடந்து மேக்ை நதியின் மணல் வெளியில் அவர்களுடைய விளையாட்டைப் பார்க்கச் சாரிசாரியாக மக்கள் கூடுவார்கள்.

 பேலு, "சடுகுடு ..சடுகுடு ' என்று சொல்லிக்கொண்டே நடுக் கோட்டைத் தாண்டிப் புலி போல் பாயும்போது. கடைசி ஆட்டத்தில் தம்பட்டங்களும், பாக்பைப்புகளும் ஒலிக்கும்போது பேலுவின் முகத்தைப் பார்த்தால் அவன் மிகப் பெரிய விளையாட்டு வீரனென்று தோன்றும். அப்போது அவன் கழுத்தில் எவ்வளவு மெடல்கள் தொங்கும்!

 அவன் தன் கட்சிக்காக எவ்வளவு கோப்பைகள் வாங்கித் தந்திருக்கிறான் இரவு பகல் பார்க்காமல் பேலு இருபது இருபத்தைந்து கோசதுரங்கூட நடந்து போய் விளையாடியிருக்கிறான். ஒரு தடவை பட்டணத்தில் விளையாடி ஜயித்து திரும்பி வரும் போது பல்லக்கில் வந்திருக்கிறான், எங்கும், பேலுவுக்கு ஜே, பேலுவுக்கு ஜே! கோஷத்தான். பல்லக்கின் இருபுறமும் இரண்டு பேர்களின் தலைமேல் இரண்டு பெரிய கோப்பைகள். பெட்ரோ மாக்ஸ் விளக்கும் தம்பட்டை ஒலியுமாக அவர்கள் பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு ஊர்வலமாக வந்தார்கள். ஊர்வலம் லாங்கல்பந்த் மைதானத்தையும் நதியையும் கடந்ததும் கிராமத்து ஆண்களும் பெண்களும் ஊர்வலத்தைப் பார்க்க வந்து நின்றார்கள். அதற்கு முடிவே இல்லை. அவர்கள் பேலுவைப் பார்த்தார்கள், இரண்டு பெரிய கோப்பைகளையும் பார்த்தார்கள். கறுப்பு ரிப்பன் அணிந்த சடுகுடு ஆட்டக்காரர்களைப் பார்த்தார்கள். டாக்காவில் ஜூலன் ஊர்வலத்தைப் பார்ப்பது போல.

அப்படிப்பட்ட பேலு இப்போது தோற்றுப் போய்விட்டான் போலும். மாற்றுக் கட்சி ஆட்கள் கோபால்தி பாபுகளுக்கு ஜே !' என்று கத்திக்கொண்டு போகிறார்கள். இந்தச் சமயத்தில் பேலுவின் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று தோன்றியது சசீந்திரநாத்துக்கு. தோற்றுப்போன பேலு முன்னதாகவே வீடு போய்ச் சேர்ந்திருக்
19
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கலாம். அவன் வேறென்றும் செய்ய முடியாமல் தன் பெண்டாட்டி ஆன்னுவை அடித்துக்கொண் டிருப்பான்.

 சந்திரநாத் இப்போது தம் பிள்ளையைப் பார்த்துக்கொண் டிருக்கிறார். பிரசவ அறையில் சசிபாலா சந்திரநாத்தைச் சற்றுக் குனிந்து பார்க்கச் சொன்னாள். வெற்றிலே போட்டுக்கொண் டிருந்ததால் அவருடைய மனைவியின் உதடுகள் சிவந்திருந்தன. நெற்றி சூனியமாக இருந்தது. இந்தச் சில நாட்கள் குங்குமம் அணிந்து கொள்ளக் கூடாது. அறைக்குள் ஈரவிறகு எரிகிறது. சில கிழிந்த கந்தைகள், ஒரு மூலையில் நெருப்பு கனகணவென்று எரிகிறது. அவள் குழந்தையை அவருக்கு முன்னால் தூக்கிக் காட்டினாள். சந்திரநாத் குழந்தையைப் பார்க்காமல் அவளுடைய முகத்தைப் பார்த்தார். அந்த முகம் எவ்வளவு வெளிறியிருக்கிறது! ஆம்பல் இலையின் நிறம் போல இருந்தது முகத்தின் நிறம். மறுபடி தாயாகி விட்ட பெருமை அவளுடைய கண்களில் ஒளிவிட்டது. அவளுடைய கைகளில் அளனிந்திருந்த இரும்பு வயேல், சிவப்புக் கரைப் புடைவை, இரண்டு கைகளாலும் குழந்தையைத் து க்கிக் காட்டும். பாளி, இவை எல்லாம் சேர்த்து கிசுகிசுவென்று கேட்கின்றன . 'குழந்தை எப்படி இருக்கு? யார் மாதிரி இருக்கு ? உங்க மாதிரியா, என் மாதிரியா?"

மணிந்திரநாத் ஒர் அரச மரத்தடியில் நின்றர். இந்த வழியாகத் தயன் சடுகுடு பிளேயாட்டுக் கோஷ்டி சென்றிருந்தது, கோப்பைகளை யும் மெடல்களையும் மக்களின் உற்சாகத்தையும் பார்ப்பதற்காக அவர் வெளியே வந்திருந்தார். இப்போது விளையாட்டுக் கோஷ்டி நயாபாடா மைதானத்துக்குள் இறங்கிப் போய்விட் -து. அவர் அவர்களுடன் அவ்வளவு தூரம் போகவில்லே. இந்த அரசமரத் தடிக்கு வந்ததுமே அவர் தாரத்தில் ஒரு கோட்டையைக் காண்கிருர்.

கோட்டையில் சில குதிரை வீரர்கள்-இளைஞர்கள்-அணிவகுப்புப் பழகுகிறர்கள். கோட்டை வாசல் திறந்ததும் ஆயிரக்கணக்கான வீரர்கள் வெளியே மைதானத்துக்கு வந்து, தங்கள் திறமையைக் காட்டுவதுபோல் மரத்தின் மேல் தலேக்கு நேரே ஆயிரக்க ைக்கான கங்கா மைளுப் பறவைகள் பறந்து பறந்து வேடிக்கை காட்டு கின்றன. இன்னும் ஆற்றிலிருந்து திரும்பி வராத பறவைகள், ஆற்று மணவிலும் ஏரி நீரிலும் புழு பூச்சிகளேத் தேடித் தேடித் தின்னும் பறவைகள் எல்லாம் இப்போது திரும்பி வந்துவிடும். அவை திரும்பி வந்ததும் அவர் இந்த மரத்தடியில் தம் மனத்துக்குப் பிடித்தமான ஒர் உலகத்தைச் சிருஷ்டி செய்துகொண்டு உட்கார்ந்திருப்பார்.

அரச மரத்தடியில் சில மட்கிலாச் செடிகள், சில பிரம்புப் புதர்கள், காட்டு நாணற் செடிகள் எல்லாம் இருந்தன. சில குருவிகள் இடை
20

________________


-விடாமல் புதர்களின் மேல் ஆடிப் பறந்து திரிகின்றன. மணிந்திரநாத் மரத்தைப் பிரதட்சிணம் செய்வது போல் சுற்றிச் சுற்றி வந்தார். எவ்வளவு பெரிய மரம்! க. வுளைப் போல அவருக்கு முன்னுல் நின்று கொண்டிருந்தது அது. கடவுளேயே பிரதட்சினம் செய்வது போன்ற பாவம் அவருடைய கண்களில். அவர் தலேயைத் துரக்கி மரத்தைப் :பார்க்கிரர், ஏதோ வாயால் முணுமுறுைக்கிறர். அப்போது அந்தப் பக்கம் போய்க்கொண் டிருந்த முஸ்லிம் கிராமத்து மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்கள். அவர்கள் சொல்லிக்கொண்டார்கள். "எப்பேர்ப்பட்ட மனிஷர் எப்படி ஆயிட்டார்!" என்று. அவரிடம் சொன்னுர்கள். 'வீட்டுக்கு பங்க. கொண்டுபோய் விட் டுட்டுப் போருேம்."

மனரீத்திரநாத் அவர்களுடைய பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். அவர்கள் போன பிறகு ஜாக்கிரதையாகப் புதருக்குள் நுழைந்து ட்கார்ந்து கொண்டார். சப்தம் செய்யாமல் அங்கே உட்கார்ந்துகொண்டு ஒரு மட்கிலாக் குச்சியை ஒடித்துப் பல் துவக்கத தொ ங்கினர். பல நாட்களாகப் பள் துவக்கவே மறந்து விட்டவர் போல் அபம் தம் வாய்நாற்றத்தைப் போக்கிக் கொள்வதற்காகப் பற்களே அழுத்தி அழுத்தித் தேய்த்துக் கொள்ள ஆரம்பித்தார். கிராமத்துக்கு வந்துகொண் டிருந்த ஆபேத் அலி அவர் புதருக்குள் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவன் சொன்னுன் : 'வீட்டுக்குப் போங்க, எசமான்! மானத்தோட நிலேமை நல்லாமபில்லே.'

மணிந்திரநாத் அவனுடைய பேச்சைக் கேட்டும் சும்மா சிரித்தார். முஸ்லிம் பெண்கள் அல்லிக் கிழங்கு சேகரித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தயம்கள். புதருக்குள் 'கச் கச்' என்ற ஒலியைக் கேட்டு அவர்கள் உள்ளே எட்டிப் பார்த்தார்கள். பைத்தியக் கார பாபு குழந்தையைப் போல் தவழ்ந்துகொண்டு எதையோ தேடிக் கொண்டிருக்கிறர். அவர்கள் சொன்ஞர்கள் : எசமான், வீட்டுக்குப் போங்க. அம்மா கவலைப் பட்டுக்கிட்டிருப்பாங்க. மானத்திலே ரொம்ப இறுக்கமாயிருக்கு."

அவரைப் பலவந்தமாக இழுத்துக்கொண்டு போகலாமா என்று தோன்றியது ஆபேத் அலிக்கு. ஆளுல் அவருடைய தாய் சசிபாலா அம்மாவின் நி&ளவு வந்து அவனைத் தடுத்தது. அவன் அப்படி அவரை அழைத்து வருவது அம்மாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். 'நீ ஏன் தொட்டு இழுத்துக்கொண்டு வந்தே ?' என்று அவள் கேட்கலாம். மறுபடியும் அவருக்கு ஸ்நானம் செப்துவைக்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்த அவன்
21

________________

அங்கே அப்புறம் நிற்கவில்லை. அவன் சந்தாக் குடும்பத்தினரின் படகில் வேலை செய்கிருன். ஆற்றில் படகை நிறுத்தி வைத்துவிட்டு. பல நாட்களுக்குப் பிறகு களேப்புடன் வீடு திரும்புகிருன். ஆயினும் வனத்தின் கிலேயைப் பார்த்து அவனுக்குப் பயம் தோன்றியது. புயலும் மழையும் ஆரம்பித்துவிட்டால் மனிதர் நனைந்து செத்துப் போய்விடுவார். அவன் ஆற்று மணலில் இறங்கி அங்கிருந்த ஈசமின் குடிசையை நோக்கி நடந்தான். ஈசமுக்குச் செப்தி சொல்லிவிட்டு வீடு திரும்ப நிக்னத்தான் அவன்.

சொர் சொர் என்று மழை பெய்யத் தொடங்கியது. குளிர்ந்த காற்றும் வீசியது. வானம் இருக்கும் நிலையைப் பார்த்துவிட்டு மக்கள் வயல்களிலிருந்து கிராமத்தை நோக்கி வர ஆரம்பித் தார்கள். சம்சாரிகள் பாடு கன்றுகளே இழத்துக்கொண்டு வீடு திரும்பினுர்கள். புயல் மழை ஏற்படலாம் ; ஆலங்கட்டி மழை பெய்யலாம், ஆகாயம் கொஞ்சங் கொஞ்சமாகக் கறுத்துவிட்டது. ஒரிரண்டு வெள்ளேக் கொக்குகள் இங்குமங்கும் பறந்து எங்கோ தனியத்தில் மறையத் தொடங்கின. எங்கும் ஒருவித இறுக்கம். இப்போது மரஞ்செடிகள் எதுவும் அசையவில்லை, முஸ்லிம் கிழ:பத் தில் கோழிகள் கூவுகின்றன. ஆகாயம் கறுக்கக் கறுக்க, பூமியின் தோற்றம் பயங்கரமாக ஆக ஆக மணி'ந்திரநாத்துக்கு ற்சாகம் அதிகரித்தது. என்ன உற்சாகம் ! என்ன உற்சாகம் ! அவர் கற்றிச் சுற்றி ஆடத் தொடங்கிவிட்டார். வெறிபிடித்த ஆகாயத்தைப் பார்த்துவிட்டு ஆனந்தம் மேலிட்டவராக அவர் கை கொட்டி ர்ை. நடனமாடிக்கொண்டே கை கொட்டினுர், உலகமே தம்முடன் சேர்ந்து கைகொட்டுகிருற் போன்ற உண புடன். சொட்டுச் சொட்டென்று மழைத்துளிகள் விழுகின்றன. செடிகளின் இலைகள் நனைகின்றன. வெயிலாயிருந்தால் அவருடைய மூளை விறைத்துப் போப்விடும். இப்போது இந்த மழையும், குளிர்ந்த ஆகாபமும் அவரை ஓரளவு தன்னிசீலக்குக் கொண்டுவந்தன. ஆளுள் எந்த நேரத்திலும் சசீந்திரநாத் அல்லது சந்திரநாத் வந்துவிடலாம். அவர்கள் அவரைப் பார்த்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு. போய்விடுவார்கள். கடவுளேப் போன்ற இந்த மரத்திலிருந்து அவர்கள் தம்மைப் பிரித்து இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்ற நினைப்பு வந்ததும் அவர் தம்மைத் துணியால் மரத்துடன் கட்டிக்கொண்டு அதில் விதவிதமாக முடிச்சுக்கள் போட்டுக் கொண்டார். இப்போது இந்தப் புயலில் யாரும் அவரை இழுத்துக் கொண்டு போக முடியாது. அவர் தம்மை மரத்துடன் துணியால் இறுகக் கட்டிக்கொண்டுவிட்டார்.

22


ஆபேத் அலி தோடார்பாகைக் கடந்து பாதை வழியே நடத் தான், வீட்டு வேலைகளையும் தொழுகையையும் மறந்து. அவன் ஈசமைப் பார்க்கப் போய்க்கொண் டிருக்கிருள். ஈசமின் குடிசையில் விளக்கு எரியக் காளுேம். அவன் மேட்டில் நின்றுகொண்டு கூப்பிட்டான் : "ஈசம் சித்தப்பா, இருக்கீங்களா?' மழையில் அவனுடைய உடம்பு நளைந்துவிட்டது. காற்று வீசுவதால் குளிரா யிருந்தது. ஆகையால் அவனுல் வெகுநேரம் காத்திருக்க இயல வில்லை. அவன் தள் ஊருக்குத் திரும்பி, வீட்டுக்கு முன்னுல் வந்து நின்றுகொண்டு, "ஜப்பரோட அம்மா! நான் வந்துட்டேன், கதவைத் திற !' என்ருள்.

 ஒரு பதிலும் வராமலிருக்கவே அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் உரக்கக் கத்தினுன் : "நீங்க செத்துப் போயிட்டங்களா, என்ன?”

மழை காரணமாகவோ அல்லது வேறெந்தக் காரணத்தாலோ ஜப்பர் கதவைத் திறக்கத் தாமதம் செய்தான். ஆபேத் அளி மறுபடியும் மறுபடியும் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தான். ஜப்பர் கதவைத் திறந்ததும் அவன் வெறி பிடித்தவன் போல் கத்திளுன் : "உன்ளுேட அம்மா எங்கே ?"

'அம்மா சாமுவோட வீட்டுக்குப் போயிருக்கா."

"ஏன் ?' என்று கேட்டுக்கொண்.ே ஆபேத் அலி தன் லுங்கியால் உடம்பையும் முகத்தையும் துடைத்துக்கொண்டான்.

 'சாமு பீட்டிலே ஏதோ லிசேஷமாம்.'

ஆபேத் அபி மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பி யிருக்கிருன் ஆகையல் கிராமத்தில் எங்கே என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியக் காரணமில்ஃ. அவன் சந்தாக் குடும்பத் தினரின் படகை ஒட்டிக்கொண்டு நாராயண்கஞ்ச் போயிருத்தான், சாமான்கள் வாங்கி வர. சந்தாக் குடும்பத்தினர் தந்தியில் ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார்கள்.

ஆபேத் அலியின் மனத்தில் அமைதி இல்லை. பெரிய பாபு இன்னும் புதருக்குள் உட்கார்ந்திருக்கிறரோ என்று கவலையாக இருந்தது அவனுக்கு. வீட்டில் அவருக்காக எல்லோரும் கலவரப் பட்டுக்கொண் டிருப்பார்கள். யாராவது அவரைத் தேடப்புறப்பட்டிருக்கலாம்.

அவன் தன் பிள்ளையிடம் சொன்னுன் : "ஒரு காரியம் செய்யறியா ?"

 ஜப்பர் எரிச்சலுடன் கேட்டான்: "என்ன செய்யனும் 'ஏனென்ருல் தகப்பன் அவனே வயலிலிருந்து வைக்கோல் எடுத்துக்
 23

கொண்டுவரச் சொல்லலாம், வைக்கோல் ஈரமாகிவிட்டால் மாடு தின்னுது என்று.

முதலில் தன் மனைவியைக் கூப்பிடச் சொல்லலாமென்று நினைத் தான் ஆபேத் அலி. அவன் வேலை செய்துவிட்டு வந்திருக்கிருன், அவளுேட பெண்டாட்டி அவனே உட்கார்த்தி வச்சு அவனுக்குச் சாப்பாடு போடல்லே. ஆதரவா நாலு வார்த்தை பேசல்லே. யார் விட்டிலேயோ ஆனந்தமாக் கூத்தடிச்சிக்கிட்டிருக்கா. அவன் எரிச்சலுடன் சொன்னுன்: ‘ உன்னுேட அம்மாவைக் கூப்பிடு '

 'அம்மா இப்போ வருவாளா ?"

"ஏன் வரமாட்டா ? முலு நாளாத் துடுப்பு வலிச்சுட்டு வந்திருக் கேன். என்னைப் பத்தி ஒங்களுக்கு கொஞ்சங்கூடக் கவலை இல்லியா?"

 'நீங்க இன்னும் ரொம்ப நாள் கஷ் ப்படவேண்டாம், பாபா ஜான்!"

பையனின் பேச்சில் எதையோ புரிந்துகொண்டவன் போல் ஆபேத் அலி சொன்னன். 'சரி, சரி. வாயை மூடு. '
ஜப்பர் பேசாமல் புல்லால் ஆக கிழிந்த ஆசனத்தின் ஒர் ஒரத்தில் உட் கார்ந்திருந்தான். பிறகு திடீரென்று கேட்டான் : "ஹல்க்கா பிடிக்கறிங்களா, பாபாஜான்'

பையனுக்கும் கொஞ்சம் ஹூக்கா பிடிக்க ஆசையாக இருக்கிற தென்று ஆபேத் அளிக்குப் புரிந்தது. தன் மனத்தை நிதானத்துக்குக் கொணடுவருவதற்காக அவன் சொன்னுன் : 'கொண்டு வா!'

ஜப்பர் ஹூக்காவைத் தயார் செய்து தகப்பனுக்குக் கொடுத் தான். பிறகு தானும் அதில் இரண்டு இழுப்பு இழுத்துவிட்டுச் சொன்னுன் : "நீங்க தொழுகை செய்யுங்க. நான் சாப்பாடு போடறேன்.'

'தொழுகை பண்ணப் போறதில்லே."

ஆபேத் அலி எழுந்தான். ஒரு பாத்திரத்தில் மழைநீரை ஏந்தி அதைக் கொண்டு கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டான். வெளியே பழை லமாகப் பெய்கிறது. நடுநடுவே மின்னல் ஆகாயத்தைக் கிழிக்கிறது. யாரோ வானத்தின் மேல் ஒரு பொற் கொடியைப் படரலிட்டிருப்பது போல. பாளம் பாவமாகப் பிளவு பட்டிருந்த வானத்தில் இடி முழங்கியது. ஆபேத் அலியின் வீடு கீழே விழுந்துவிடும் போல இருந்தது. வைக்கோல் கூரை நைந்து போய்விட்டது. அதன் வழியே தண்ணிர் ஓடுகிறது, சணல் தட்டையாலான வேலியும் பாழாகிவிட்டது. மூங்கில் டரனரில் கிழிந்த ஜமக்காளமும் தலையனையும். கீழே கிழிந்த பாய். ஆபேத் அலி பாயின் மேல் சாப்பிட உட்கார்ந்தான். வெளியே மழையுடன்
24
________________


புயல் அடிக்கிறது. கல்யான முருங்கை மரத்தின் கிளையொன்று புயலில் முறிந்து விழுந்தது.

ஆபேத் அலி நயமாக, செளஜன்யமான குரலில் பிள்ளையைக் கூப்பிட்டான் : ஜப்பர் ஜப்பர்!"

"என்ன சொல்றீங்க?"

 "ஒரு காரியம் செய்வியா ?"

'என்ன வேலை?'

 'ஒரு தடவை டாகுர் வீட்டுக்குப் போய், பெரிய பாபு இடுகாட்டு மைதானத்துலே ஆலமரத்தடியிலே உட்கார்ந்திருக்கார்னு சொல் லிட்டு வர்மீயா? பாவம், பெரிய பாபுவுக்கு ரொம்பக் கஷ்டம். போ, போய்ச் சொல்லிவிட்டு வா.'

 "என்னுலே முடியாது. பாபா ஜான்! வேறே ஏதாவது வேலை இருந்தாச் சொல்லுங்க."

ஆபேத் அலி சாப்பாட்டை விட்டு எழுந்துவிட்டான். அவன் ஜப்பரைக் கொன்றுவிட நினைப்பவன் போல் அவன் முன்னே வந்து காலேத் துாக்கிஞன். பிறகு ஏதோ நினத்துக் காலப் பின் லுககிழுத்துக் கொண்டு சொன்னன். "அயோக்கிய ராஸ்கல், நீயா என்ளுேட தகப்பன் நீ சொல்றபடியா நான் கேட்கணும்?"

ஜப்பர் தலே குனிந்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தான். 'எனக்கு வேறே வேலே இருந்தாச் சொல்லுங்க."

 அவன் தனக்குள்ளே ஏதோ நிச்சயம் செய்துகொண் டிருந்தான். நாட்கள் மிகவும் கஷ்டத்துடன்தான் கழிகின்றன. அவனுடைய தகப்பன் எவ்வளவு நாள் கழித்துத் திரும்பி வந்திருக்கிருள். வந்தவன் அன்பா நாலு வார்த்தை பேசாமல், புனுகுபூனை மாதிரி உறுமுகிருன்.

அவன் இதுவரை வெளியிட விரும்பாமல் இருந்த ஒரு விஷயத்தைஇப்போது தந்தையின் முரட்டுத்தனத்தையும் கோபத்தையும் பார்த்து-தெரிவித்துவிடலாமா என்று நினைத்தான். அப்பன் மறுபடி ஏதாவது பேசினுல் சொல்லியேவிடுவான் அவன்.

" என்ன போகமாட்டியா?"

'மாட்டேன். வேறே வேலே இருந்தாச் சொல்லுங்க."

 " அப்போ நான் சொல்றதைக் கேட்கமாட்டே '

 'மாட்டேன்.'

"ஏன் ? என்ன ஆயிடுத்து?"

 ஆபேத் அலியின் குரல் சற்றுத் தாழ்ந்தது.

 " நான் லீகிலே பேர் கொடுத்திருக்கேன்."

 "என்ன செஞ்சே? என்ன செஞ்சே ? லீகிலே பேர் கொடுத்து உங்க அப்பனுக்குச் சொர்க்கவாசல் திறந்து வச்சுட்டியோ?"
25


'இதுலே என்ன வந்தது? இந்து ஜனங்க நம்மைப் பாத்தாக் காறி உமிழருங்க. நாமும் அவங்க மேலே காறித் துப்புவோம்.'

'சாமு வீட்டிலே இதுக்காகத்தான் கூட்டமா?"

ஜப்பர் மெளனமாயிருந்தான்.

 தகப்பன் பிள்ளே இருவருமே பேசாமல் இருந்தார்கள்.
ஆபேத்அலி மறுபடி சாப்பிட உட்கார்ந்தான், தலேயைக் குனிந்துகொண்டு, கண்களில் நீர் ததும்பியது. சாப்பாடு உறைத்ததாலா, பிள்ளையின் பேச்சாலா என்று தெரியவில்லை. இந்தத் துன்பத்தைச் சமாளிப் பதற்காக அவன் தண்ணிர் குடித்துக்கொண்டே இருந்தான். பிறகு மிகவும் மெதுபாக - வெகுதூரத்திலிருந்து பேசுவது போலச் சொன்னுன் : 'பெரிய பாபு தண்ணியிலே ந&னஞ்சுக்கிட்டிருக்கார். நீ போகலேன்னு நா போறேன்.'

 ஆடேத் அலி தண்ணிர்ப் பாத்திரத்தின் மூக்கைத் தன் வாயில் வைத்துக்கொண்டு வார்த்தை போல் தண்ணீரைக் களுக் களுக்' என்று விழுங்கிறன், பிறகு மிச்ச நீரை வாயில் வைத்து வெகு நேரம் கொப்புளித்துத் துப்பினு:ன். பல்லிடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருந்த உணவுத் துணுக்குகளே நாக்கால் துழாவி எடுத்து அவற்றை ஆசித்தவாறே ஜப்பரைக் குரூரமாகப் பார்த்தான். பார்த்துக்கொண்டே சொன்னுன் : "நீ என் சாப்பாட்டைச் சாப் பிடக் கூடாது. நா8ாயிலேருந்து உனக்குச் சாப்பாடு இல்லே."

ஆத்திரம் ஆத்திரமாக இருந்தது ஆபேத் அக்ேகு. தன் பிள்ளை இவ்வாறு கெளரவம் பாராட்டுவது அவலுக்குப் பிடிக்கவில்லே. மூன்று நாளைய உழைப்பின் சிரமமும் விட்டில் மனைவி இல்லா திருப்பதும் அவனுக்கு வெறியை உண்டாக்கின. விட்டு மூலையி லிருந்த ஈட்டியை எடுத்துப் பிள்ளையின் வயிற்றைக் கிழிக்கத் தோன்றியது அவனுக்கு.

ஏதோ நினைத்து அவன் சொன்னுன் : "அல்லா, தேசத்திலே இதென்ன ஆரம்பிச்சிருக்கு ?" அவனுடைய பாதி நரைத்த தாடி வழியே நீர்த்துளிகள் வழிந்து கீழே விழுந்தன. சிம்ளி விளக்கின் ஒளியில் அவனுடைய முகத்தில் உணர்ச்சி கொந்தளித்தது. டாக்காவில் கலகம் ஏற்பட்டு விட்டது. இந்த விஷயம் ஏளுே அடிக்கடி நினைவுக்கு வந்தது அவனுக்கு. இந்துக்கள்-முஸ்லிம்கள் இரு ஜாதியினருமே செத்துக் கொண்டிருக்கிறர்கள். சேப்பங்கிழங்கு சீவப்படுவது போல், முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அவன் உணர்ச்சி வசப்பட்டு விடுகிறன். ஆணுல், பெரிய பாபு, தன பாபு, இன்னும் பக்கத்துக் கிராமத்திலுள்ள பல இந்துக்கள் ஆகியவர்களுடைய தாராள மனப்
26


பான்மை, அவர்களுடன் த&லமுறை தலைமுறையாக இருந்துவரும் இதய பூர்வமான உறவு ஆகியவை அவனுடைய வருத்தத்தையும் ஆத்திரத்தையும் போக்கிவிடுகின்றன.

ஆபேத் அலி வீட்டுக்குள்ளிருந்தே கையை வெளியே நீட்டிப் பார்த்தான். பிறகு ஒரு மூங்கில் தொப்பியைத் தலையில் போட்டுக் கொண்டு இருட்டுப் பாதையில் இறங்கின்ை.

சசீந்திர நாத் போய்க் கொண்டிருந்தார். முன்னுல் ஈசம் நடந்து கொண்டிருந்தான். பேசிக்கொண்டே போனுன் : 'சம்சாரத்தில் எத்தளை வகை துக்கங்கள் ? பெரிய பாபு சாயங்காலத்திலிருந்து காணுமல் போய்விட்டார். எங்கே போயிட்டாரோ? இந்த மழையி லேயும் புயல்லேயும் எங்கே ஆம்பிட்டுக்கிட்டாரோ ? நம்ம விரோதிக்குக் கூட இந்த மாதிரி கஷடம் வரவேண்டாம். செத்துப் போயிட்டாக்கூட 'ஏதோ போயிட்டார்’னு நினேச்சுக்கலாம். கால்வளவு நாள் தான் இந்தப் பரிதாபத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கனுமோ ?"

சசீ யழையிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்தார். சமுந் தான். அவர்கள் வேகமாக நடந்தார்கள். பல வயல்களைக் கடந்து முஸ்லிம் பாடாவுக்குள் நூழைந்தபோது இஸ்மதாலியின் பெரிய க: பயன் மன் தம் வராத்தாவில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். அவனுக்கு முன்னுல் குர்ஆன். மேலே கயிற்றில் லாந்தர் தொங்கு கிறது. புயலும் மழையும் குறைந்திருக்கின்றன. சாயங்காலமானதும் அவன் வழக்கம் போல் படிக்க உட்கார்ந்தபோது மழை வெள்ளத்தில் கிராமமே மிதந்துகொண் டிருப்பதைக் கண்டான். அவன் மாடுகளைக் கொட்டத்தில் அடைத்து, வாத்துக்களைக் கூண்டுக்குள் விரட்டிவிட்டு, ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு உட்கார்ந்திருந்தான். புயலும் மழையும் குறைந்ததும் ஜன்னல்கக்ாத் திறந்துவைத்தான். ஆகாயம் முன்போல் கர்ஜனே செய்யவில்லே. தொழுகை செய்யும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தபோது அவன் சுரைக்காய்ப் பந்தலில் வெளிச்சம் வந்து விழுவதைக் கவனித்தான். பிறகு வெளிச்சம் அவனுடைய வீட்டுப் பக்கம் வந்தது. டாகுர் பீட்டுச் சின்ன பாபு - சசி டாகுர் வந்துகொண்டிருக்கிருர் : கூட ஈசமும் வருகிறன். அவன் அவசர அவசரமாக இறங்கி வந்தான். இந்த மழையிலே எங்கே கிளம்பினிங்க ?"

"எங்க பெரிய அண்ணுவைப் பார்த்தியா'

"இல்லையே எசமான். அவுரு இன்னிக்கு இந்தப் பக்கம் வரல்லியே."

- - மன்துர் ஹரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு சொன்னுன் : "நீங்க உட்கார்ந்திருங்க. நாங்க பாடாவிலே தேடிட்டு வரோம்."
27.


சசி சொன்னுர்: "நீ என்னத்துக்கு மழையிலே போகனும்? எல்லாரும் எதுக்குக் கஷ்டப்புடனும் ?”

 சசி நடக்கத் தொடங்கினர். மன்சூர் ஒன்றும் பேசாமல் அவர் களுடன் தானும் சென்றன். கிராமத்தில் சில நாய்கள் குரைத்தன. பேலுவின் வீடு மூங்கில் காட்டுக்குக் கீழே இருளில் முழுகிக் கிடந்தது. சசீக்குக் கேட்கத் தோன்றியது ; 'பேலு தோத்துப் போயிட்டானு? அவன் வீட்டிலே ஏன் இவ்வளவு இருட்டு? அவைேட பீபி விளக்கு ஏத்திக்கிட்டு நூல் சுத்திக்கிட்டு இருப்பாளே? இன்னிக்கு ஏன் ஒரு சத்தத்தையும் காளுேம்?"

ஆளுல் சசி ஒன்றும் பேசவில்லை. இலவமரத்தில் பூக்களின் வாசனே. புயலாலும் மழையாலும் பூக்கள் தரையில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை மிதித்துக்கொண்டு நடந்துவந்த சசி, சாமுவின் வீட்டில் ஒரு பெரிய விளக்கு எரிந்துகொண் டிருப்பதைக் கண்டார். தகரத்தாலும் மரத்தாலும் ஆன பெரிய வீடு. அகப்மான வராந்தா. மூங்கில் வேலி. வாசலுக்கு நேர் எதிரே மூங்கிலில் விளக்கு தொங்குகிறது. வீட்டுக்கு முன்னுல் போட்டிருந்த கூடாரம் பிரிக்கப் பட்டுவிட்டது. மழையும் புயலும் ஒய்ந்த பிறகு மறுபடியும் கூடாரம் போடப்படும். இப்போது மக்கள் வீட்டுக்குள்ளே யும் வராந்தாவிலும் குழுமியிருக்கிறர்கள். கிராமத்தின் இருளில் இந்த வெளிச்சம் சசியை வியப்புக்குள்ளாக்கியது.

 மன்சூருக்குப் புரிந்துவிட்டது, பாபுவுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டதென்ா. பாபு ஏதேதோ நினைத்துக்கொண் டிருக்கிருர் என்று எண் வளினுன். அவன் வெளிப்படையாகவே சொன்னுள் : "கூட்டம் நடக்கிறது எசமான். சாம்சுத்தீன் இங்கே கிேன் கிளே ஒண்ணு திறக்கப் போரனும். டாக்காவிலேருந்து வந்தப்பறம் சாமு. விகிலே பெரிய ஆளாயிட்டான்."

சசி பதிலொன்றும் சொல்லவில்லை. சாமுவின் நடத்தை அவருக்குப் பிடிக்கவில்ஃப்.

மன்தர் கேட்டான்: 'சாமுலைக் கூப்பிடவா? நீங்க வந்திருக் கிறதாச் சொல்லட்டுமா?"

சசி சொள்ளுர் : "வேண்டாம். வேண்டாம், அவசியமில்லே. அவன் காரியமாயிருக்கான். எதுக்குக் கூப்பிடனும்?"

 அப்படியும் மன்சூர் சாமுவுக்குச் செய்தி தெரிவித்துவிட்டான் : 'சின்ன பாபு உன் வீட்டு வழியாப் போயிக்கிட்டிருக்கார். நீ உட்கார்ந்து கூட்டம் போட்டுக்கிட்டு இருக்கே. அவரைப் போய்ப் பார்த்துட்டு வா. அவருக்கு வெத்திலே புகையில கொடு."

 செய்தியைக் கேட்டுச் சாமு வேகமாக வெளியே வந்தான்.

 "சலாம், எசமான் '
28


"எப்படி இருக்கேப்பா. சாமு ?"

- 'சுகமில்லே, எசமான் ! தனபாபுவுக்குப் புள்ளே பொறந்திருக் காமே ?"

 "ஆமா."

"அப்போ எனக்கு இனிப்புக் கொடுக்கணும். ஒரு நாள் வரேன்."

 சசி இதுவரை அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டாமென் திருந்தார். வேறு எதையாவது பேசலாம் என்றிருந்தார். ஆறல் உள்ளுக்குள்ளே ஏதோ குழப்பம் ஏற்பட்டுவிட் து. ஏளனமாகச் சொன்னுர் : "சீடப்புள்ளைகளைச் சேர்க்கறியாக்கும்! திடீர்னு வீடரா ஆயிட்டே? முன்னேயெல்லாம் "சுதந்தரம், சுதந்தரம்'னு சொல்லிக் கிட்டிருந்தியே."

அவருடைய பேச்சு சாமுவுக்குப் பிடிக்கவில்லை. அவன் பேச்சை மாற்ற விரும்பிச் சொன்னன்: 'எசமான், கொஞ்சம் இருந்துட்டுப் டோங்களேன்.'

 மன்சூர் சொன்னன் : 'பெரிய பாபுவைத் தேடிக்கிட்டு வந்திருக் காங்க."

இப்போது சாம்சுத்தீனும் சசியுடன் நடக்கத் தொடங்கிஜன், இந்த விஷயத்தில் எல்லாருக்குமே ஒரு தார்மிகப் பொறுப்பு இருப்பது போல. எப்பேர்ப்பட்ட மனிதர் அவர் கேத்தில் இப்படிப்பட்ட மனிதர் பிறப்பதில்ஃப். அப்படிப்பட் டவர் பைத்தியமாகிவிட்டார். எல்லாவற்றையும், அன்புக்குரிய எல்லாவற்றையும், இன்பந் தருவது எல்லாவற்றையும் துறந்துவிட்டு இந்த மணிதம் எங்கேயோ கண்காணுத இடத்துக்கு ஒடிப் போய்வி ப் பார்க்கிரும்.

எல்லாஆம் மெளனமாக நடக்கிரு. கள். வீடுகள் ஒன்றை பொன்று ஒட்டினுற்போல் கட்டப்பட்டிருந்ததால் சசி குனிந்து கொண்டே வழியில் நடக்கவேண்டியிருந்தது. நிமிர்ந்து நின்றல் விட்டுக் கூரை தலையில் இடிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குறிப் பிட்ட எல்லே கிடையாது. எது யார் வீடு, எந்த வீட்டுக்கு யார் சொந்தக்காரன் என்று சசீயால் சொல்ல இயலவில்லை. கடைசியில் ஆபேத் அலியின் விடு. அதன் வாசலில் இன்னுெரு சிறு குடிசை எழம்பியிருந்தது. அதைப் பார்த்ததும் சசிக்குப் புரிந்துவிட்டது. அவர் சொன்னுர் : "ஆபேத் அலியோட அக்கா ஜோட்டன் திரும்பி வந்துட்டா போலிருக்கு." அவருக்குப் புரிந்தது. கொஞ்சநாட் களுக்கு முன் பீபியாக இருந்த ஜோட்டன் இப்போது விதவையாகி விட்டாளென்று. ஜோட்டனுக்கு மூன்று தடவை நிக்காய் ஆகி விட்டது. இல்லை இல்லை, சசிகணக்குப் போட்டுப் பார்த்தார். இதோடு நாலு தடவை. தலாக் ஆளுலோ விதவையாகிவிட்ட லோ அவள்

29,

தம்பியிடம் திரும்பி வந்துவிடுவாள். அப்போதெல்லாம். ஆபேத் அலி தன் வீட்டுக்கு முள்ளுல் வடக்குப் பக்கம் வாசல் வைத்து, குச்சி களாலும் கொடிகளாலும் ஒரு குடிசை கட்டிக் கொடுத்துவிடுவான். இதுவரை தான் அவள் விஷயத்தில் அவனுக்குப் பொறுப்பு. இதன் பிறகு சில நாட்கள் ஜோட்டனின் வாழ்க்கைப் போராட்டம் தொடரும். நெல் வறுத்துக் கொடுப்பது, அவல் இடித்துக் கொடுப்பது என்று. மழைக் காலம் முடிந்து இந்துக்களின் பண்டிகைகளும் முடிந்துவிட்டால் ஜோட்டன் சோற்றுப் பாத்திரத்தை நன்று கத் துலக்கி எடுத்துக்கொண்டு மற்ற ஏழைபாழைகளுடன் தண்ணிரில் இறங்கிவிடுவாள். சனல் வயல்களில் அக்பவாள். அல்லிக்கிழங்கு தோண்ட அல்விக்கிழங்கு தீர்ந்துபோய்விட்டால் ஆபேத் அலி யிடம் புகார் செய்யத் தொடங்கிவிடுவாள் : "ஊரிலே ஆம்ப2ளகளே இல்லையா. ஆபேத் அலி ?"

ஜோட்டன் வாசலில் வெளிச்சத்தைக் கண்டு தலையை நீட்டிப் பார்த்தாள். சசி வாசல் வழியே போவதைக் கண்டாள். ஒரு தடவை கூப்பிடலாயா என்று நினைத்தவள். அவ்வளவு பெரியவரை க் கூப்பிட லாமா என்ற தயக்கத்தில் பேசாமல் இருந்துவிட் டாள்.

அவர்கள் போய்க்கொண் டிருந்தபோது ஆபேத் அலியின் வீட்டு வாசல் திறந்துகொண்டது. ஜப்பர் கதவைத் திறந்ததும் சசி அங்கேயே நின்ருர், பெரியவர்களே ஒருங்கே பார்த்ததும் ஜப்பருக்குக் கூச்சம் ஏற்பட்டது. அவனுக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை முதலில், பிறகு சாமூவைப் பார்த்ததும் அவனுக்குக்
கொஞ்சம் தைரியம் வந்து சொன்னுன் : “பாபாஜான் உங்க வீட்டுக்குத்தான் போயிருக்கார்.”

“ஏன்?"

"பெரிய பாபுவைப் பத்தி சேதி சொல்றத்துக்கு. பெரிய பாபு இடுகாட்டுவே உக்காந்திருக்காராம்."

அவர்கள் மேலும் தாமதம் செய்யவில்லை. வேகமாக நடந்தார்கள். அவர்களைப் பார்த்த பிறகு ஜப்பரால் வீட்டுக்குள் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவனும் அவர்களுக்குப் பின்னல் நடந்தான். மழை நின்று புயலும் ஒய்ந்துவிட்டது. மரத்தின் உச்சியிலும் புதர் களிலும் மறுபடி மின்மினிகள் பளிச்சிடத் தொடங்கின.

 இரவின் இருளில் ஐவரும் வயலுக்குள் இறங்கி இடுகாட்டு ஆலமரத்துப் பக்கம் அண்ணுத்து பார்த்தார்கள்.

 எல்லாருக்கும் முன்னுல் அங்கே போய்ச் சேர்ந்துவிட விரும்பி ஞன் ஈசம். அவன் சொன்னுன் : "வேகமா நடங்க, எசமான்."

அக்ராண் மாதத்தின் முதல் குளிரானதால் மின்மினியின் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அதே காரணத்தால் இரவு இந்த நேரத்திலும்
30


கிரெளஞ்ச பட்சி கூவவில்லை. தரையும் புல்லும் மழைத் தண்ணீரை உறிஞ்சிக்கொண்டுவிட்டன. தரை கெட்டியாக இருந்தது. பாதை யில் எங்கும் வழுக்கல் இல்லை. எங்கும் அமைதி. வெகுநாட்களுக்குப் பிறகு பெய்திருக்கும் மழை பயிர்களுக்கு மிகவும் நல்லது. நல்ல வி&ளச்சல் இருக்கும். பஞ்சம் இருக்காது. ஈசம் வேகமாக ந க்கிருன். யாரும் எதுவும் பேசவில்லை. சசி அவர்களுடைய கெட்ட எண்ணத்தைக் கண்டுபிடித்து விட்டாற்போல, தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்துவந்துள்ள பரஸ்பர உறவில் இப்போது துக்கமும் வேதனையும் பரவிக்கொண் டிருப்பது போல ஒரு மெளனம். சாம்சுத்தீன் உள்ளுற ஒரு குற்ற உணர்வுால் பீடிக்கப்பட்டிருந்தான். ஆகவே மெளனமாக நடந்தான் அவன்.

லாந்தரைத் துரக்கி ஆலமரத்தடியில் தேடியபோது பெரிய பாபு துக்கில் தொங்குபவனைப் போல் தொங்கிக்கொன் டிருப்பதைப் பார்த்தார்கள். ஒரே ஒரு வித்தியாசம், கருக்கு கழுத்துக்குப் பதிலாக இடுப்பில் இருந்தது. அவர் வில்லைப் போல் வளைந்திருந்தார். சர்க்கஸ் ஆட்டக்காரனைப் போல் அவர் மயில் விளையாட்டுக் காண்பிக்க விரும்பிஞர் என்று தோன்றியது. புயலும் மழையும் அவருடைய உடலில் வெள்ளைக் கரைகளே விட்டுவிட்டுப் போயிருந்தன. அவருடைய உடலுக்குள் எங்கேயோ ஒரு வேதனே, காதல் வேத&ன. அவருடைய கனவு மாளிகையில் வாழ்ந்துவந்த பறவை இப்போது அவருடைய பிடியிலிருந்து நழுவிப் பறந்து போய்விட்டது போலும் ! இப்போது அவர் அதைத் தேடிக்கொண்டிருக்கிருர், பறவை பறந்து போய்விட்டது, தீவு தீலாந்தரங்களைக் கடந்து. வியாபாரிகளின் நாட்டைக் கடந்து ஜலதேவதைகளின் தேசத்துக்குப் போய்ச் சேர்ந்து அங்கே சோகித்திருக்கும் ராஜகுமாரனின் தலையில் உட்கார்ந்துகொண்டு அழகிறது. அப்போது பெரிய பாபுவின் மனசில் ஏதோ ஒரு பெரும் வேதனே ஏற்படுகிறது. அவர் தம் கையைத் தாமே கடித்துக்கொள்கிருர்.

 அவர் தம் கையைக் கடித்துப் பாளம் பானமாகக் கிழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். இவ்வாறு அவர் கிளையிலிருந்து தொங்கிக்கொண் டிருக்கிறர்.

ஈசம் மட்கிலாக் காட்டுக்குள் தவழ்ந்தவாறே நுழைந்தான். புதருக்குள்ளிருந்து பெரிய பாபுவை மெதுவாக விடுவித்தான். குளிரால் அவருடைய கண்கள் இடுங்கிப் போயிருந்தன. அவர் இரவு பகலாகத் தண்ணிருக்குள் முழுகிக் கிடந்தாற் போலவும், யாரோ அவரைத் தண்ணிரிலிருந்து தூக்கிக் கொண்டுவந்து இந்தப் புதருக்குள் எறிந்துவிட்டாற் போலவும் தோன்றியது, அவருடைய நிலையைப் பார்த்தால், கைகால்கள் வெளிறிக் கிடந்தன. ஈசம் புதரி
31


விருந்து வெளியே இழுத்துவத்து அவருக்கு நன்றக உடையணி வித்தான். அவருடைய கையிலும் வாயிலும் சத்தம். அவருடைய உடலும் முகமும் இப்போது பார்க்கப் பயங்கரமாக இருந்தன. அடை யடையாக எங்கும் ரத்தம். மரக்கிளைகளில் பறவைகளின் ஒலம். நிர்ஜனமான வயல்வெளி எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 சசி விளக்கைத் தூக்கிப் பெரியவரின் முகத்தையும் மணிக் கட்டையும் பார்த்தபோது அவர் சிரித்துவிட்டார். குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு. சசீயால் அவரைப் பார்க்க முடியவில்லே. அவரை உடனே வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும். சசி அருகம்புல்லேப் பிடுங்கி அதன் ரசத்தை அவருடைய காயங்களில் பிழிந்தார். காயத்தின் எரிச்சலாலும் வேதனையாலும் அவருடைய முகம் சுருங்கியது. அவர் ஒன்றும் பேசவும் இல்லை. கத்தவும் இல்லை. சாமியாடிபோல் ஆடிக்கொண்டே அவர்களுடன் நடந்து போனர். நடந்து பேகும்போது சாம்கத்தீன சொன்னுன் 'பாபுவைக் கூட்டிக்கிட்டுக் காசி, கயா, மதுரா எல்லா இடங்களுக்கும் போயிட்டு வந்தீங்களே ! ஒண்னும் பிரயோசனப் படல்லியே? இவரைக் குள ப்படுத்த முடியல்லியே!'

மன்சூர் கேட்டான் : 'கல்கத்தாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்ப் பெரிய டாக்டர் கிட்டேயெல்லாம் காண்பிச் சீங்காே அவங்க ளாலே ஒண்னும் செய்யமுடியல்லியா?"

அந்த இருட்டில் சசியின் குரலில் நம்பிக்கையின்மை தொனித் தது. சொன்னுர் : 'ஊஹ-ம்ை. யாராலும் எதுவும் செய்ய முடியல்லே. பத்துப் பன்னெண்டு வருஷமா உள்ளூர் வெளியூர் எல்லாம் எவ்வளவு முயற்சி பண்ணிளுேம்?"

 மன்ஆர் சொன்னுன் : "நான் கூட ஹாளான் பீரோட தர்காவிலே படையல் வச்சேன். ஒண்னும் நடக்கல்லே."

சசி வேறெதுவும் பேசவில்லை. எல்லாருமே இந்த வேதளையால் நொந்திருக்கிருர்கள். இந்தத் துக்கம் பக்கத்துக் கிராமங்களைக் கூடத் தாக்கியிருக்கிறது. ஒரு காலத்தில் அந்தப் பக்கத்து மக்களெல்லாரும் அவரிடம் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் ? பெரிய பாபுவின் வியக்கத் தக்க புத்தி தீட்சண்யம் குறித்து எவ்வளவு பெருமைப் பட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள் ! எங்கள் பிராந்தியத்திலும் ஒரு பெரிய மனிதர் இருக்கிருர். எல்லாருக்கும் முன்னுல் ராஜமரியாதை யுடன் அறிமுகப்படுத்தப்படத் தகுந்தவர் அவர். அதிருஷ்டப் பிறவியான இம்மனிதரை எல்லாருடைய அன்பும் பரிவும் ஆதரவுடன் தாலாட்டி வளர்த்து வந்தன.

அப்படிப்பட்ட மனிதர் நாளுக்கு நாள் எப்படி ஆகிக்கொண்டு வருகிருர் :
32
 மன்சூர் சசியைக் கேட்டான் : "எசமான், எங்கப்பா சொல்ருர், பெரிய எசமான்- அதாவது உங்கப்பா-அவரோட வாழ்க்கையிலே ஒரு த வைகூடப் பொய் சொன்னதில்லையாமே?”

"ஆமா, அப்படித்தான் சொல்ருங்க!” என்ருர் சசீ.

. "அப்படீன்னு அவருக்கு இந்த மாதிரி கண்டம் ஏன் வந்தது?"

சசீயால் பதில் சொல்ல முடியவில்லை. வானத்திலிருந்த மேகங்கள் காற்றில் கஃபந்துவிட்டன. அவர்கள் ஆற்றுப் படுகை வழியே குளத்தங்கரைக்கு வரவில்லை. நரேன்தாளின் கட்டாரி மரத்தடி வழியே செல்லும் குறுக்குப் பாதையில் நடந்தார்கள். நரேன்தாஸ் விட்டு வாசலில் விளக்கு வெளிச்சம் இல்லை. உள்ளேயும் தறியின் அரவம் இல்ஃப். எல்லாரும் இவ்வளவு சீக்கிரம் துரங்கி விட்டார்களா ?

 சாம்கத்தின் நி:னத்தான் : நரேன்தாஸின் தங்கை விதவையாகிப் பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள். அந்தத் துக்கம் வீட்டின் சுற்றுப்புறத்தில் எல்லாம் பரவிக் கிடக்கிறது.

' அவன் ஒரு நாள் மாலதியைத் து: த்திலிருந்து பார்த்தான். விதவையான திலிருந்து அவள் விக்கை அணியதில்பே. அவளுக்குக் குழந்தைகள் இல்லை. ஏரியில் முதலை அகப்பட்டுக்கொண்ட வருஷந்தான் அவஆக்குக் கல்யாணம் நடத்தது. நரேன்தாஸ் கல்யாணத்துக்கு நன்றுகச் செலவு செய்தான். நான்கு மாதங்களுக்கு முன்பு மாலதி இந்தக் கிராமத்தை விட்டுப் பட்டனத்துக்குப்  ோளுள். மாப்பிள்ளே ராஜகுமாரன் மாதிரி இருந்தான். சிறிய உடல் வாகு. சாமு நினைத்தால் இப்போது கூட அவனுடைய கண்களே நிஃசு புக்குக் கொண்டுவர முடியும். நரேன்தாஸ் நளிந்தியிலிருந்து நான்கு பெட்ரோ:ாக்ஸ் விளக்குக் கொண்டுவந்து வீட்டிலும் வெளியிலும் வெளிச்சம் போட்டான். கண் களில் நீர் வழிய அவன் மாப்பிள்ளையின் கைகளைப் பிடித்துக்கொண்டு சொன்னுன் : "மாலதிக்கு அம்மாவும் இல்லை. அப்பாவும் இல்லை. நீதான் எல்லாம்' என்று.

வெகுநேரம் பலகையின் மேல் படுத்துக்கொண்டு அழுதான். எல்லாரும் சென்ற பிறகு வீடு வெறிச்சென்று போய்விட்டது. நரேன்தாஸ் இரண்டு நாட்கள் பெஞ்சியிலிருந்து எழுந்திருக்கவே இல்? அவனுடைய தங்கை அந்த வீட்டில் வண்ணத்துப் பூச்சி போல் வ:ளய வந்துகொண் டிருந்தாள். நாள் பூராவும் திரிந்து கொண்டே இருப்பாள். மர நிழலில், குளத்தங்கரையில், மஞ்சத்தி மரத்தின் கிளைகளில் நீலகண்ட பறவையைத் தேடுவதைப் போல் அலைந்து திரிவாள் அவள். அப்போதெல்லாம் சாமுவும் ரஞ்சித்தும்
33

அவளுக்கு மிகவும் வேண்டியவர்கள். ஒரு சமயம் அவர்கள் பலிசப்பழம் பறிக்கப் போய் வழி தவறிவிட்டார்கள்.

மாலதி விதவையாகித் திரும்பி வந்த பிறகு சாமுவால் அவளுடன் பேச முடியவில்லை. காரணம். டாக்காக் கலகத்தில் அவளுடைய கணவனைக் குத்திக் கொன்றுவிட்டார்கள்.

 வீட்டுக்குள் நுழைந்ததும் சசி கூப்பிட்டார் : 'அம்மா, தண்ணி கொண்டா !'

சிற்றப்பாவின் குரல் கேட்டு லால்ட்கு கூடத்திலிருந்து வெளியே வந்தான். சந்திரநாத்தும் வந்தார். இவ்வளவு நேரம் தன் கணவனின் காலருகில் உட்கார்ந்திருந்த சசிபாலாவும் சசீயின் குரல் கேட்டு வெளியே வந்தாள். மகேந்திர நாத், தம் பிள்ளைக்காக மிகவும் கவலைப்பட்டுக்கொண் டிருந்தார். மணியின் வியாதியில் புதிய வக்கிரங்கள் ஏற்பட்டுக்கொண் டிருக்கின்றன. இப்போதெல் லாம் ஒன்றுமே சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியே போய் விடுவது அவருடைய வழக்கமாயிற்று. இதுவரையில் அவர் சும்மா கூடத்தில் உட்கார்ந்துகொண் டிருந்தார், அல்லது குளத்தங்கரை யில் உலவிக்கொண்டே மரஞ்செடிகளுடனும் பறவைகளுடனும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். பையன் திரும்பி வந்துவிட்ட செய்தி கேட்டதும் மகேந்திரநாத் கம்பளியைத் தவே க்குமேல் போர்த்துக்கொண்டு படுத்துக்கொண்டுவிட்டார். இதுவரை அவரை ஆட்கொண்டிருந்த தீவிாக் கவலை மயைத்துவிட்டது.

வெளியே வந்த சசிபாலா நிறையப் பேர் நிற்பதைக் கண்டு, 'நீங்களா ?' என்று கேட்டாள்.

 "நான்தான் சாமு. அம்மா!'

"நான் மன்தர், அம்மா!'

பெரிய மாமி ஜன்னல் வழியே எல்லாவற்றையும் பார்க்கிருள். களவனின் ஆஜானுபாகுவான தோற்றம், பலம் பொருந்திய முகம், அதற்குள்ளிருந்த தன்னம்பிக்கையின் ஒளி அந்த ஒளி இடை யிடையே காற்றில் அசைந்தது. அவள் கைகளைத் தாக்கிக் கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டாள் : "பகவானே, தோன் இந்த மனுஷரைக் காப்பாத்தனும் '

வாசலில் நிறைய ஜனங்கள் இருந்ததால் அவள் வெளியில் வரவில்லை.

 சசிபால எல்லோரையும் உட்காரச் சொல்லிவிட்டுப் பூஜை யறைக்குள் நுழைந்தாள். கொஞ்சம் பகவானின் அபிஷேக தீர்த்தமும் துளசி தளமும் எடுத்து மணியின்மேல் தெளித்தாள். ஒரு வாளி தண்ணிர் கொண்டுவரச் செய்தாள். சந்திரநாத்
34
________________

மடிலேஷ்டி எடுத்து வந்தார். காயம் பட்ட இடத்தில் துலுக்க ஜவந்தி இ&லயின் சாற்றைப் பிழிந்து கட்டிவிட்டார்.

"போயிட்டு வரேன், அம்மா " என்ருன் சாமு.

'போயிட்டு வாப்பா ! ராத்திரி ரொம்ப நேரமாயிடுத்து. ஜாக்கிரதையாப் போயிட்டு வா!'

பிறகு ஏதோ நினைத்துக்கொண்ட சசிபாலா முன்னுல் வந்து, "என்ன சாமு, நாலேந்து நாளா உன்னுேட அம்மாவைப் பார்க்கவே இல்லையே?" என்ருள்.

'அம்மாவுக்கு இடுப்பு வலி எழுந்திருக்கவே முடியல்லே. வாயுக்கோளாறு போலேயிருக்கு."

சசிபாலா அவனே இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் ஒரு பழைய சீசவை எடுததுக்கொண்டு வந்தாள். "இதை எடுத்துக் கிட்டுப் போ, சாமு. இந்த எண்ணெயை நல்லா இடுப்பிலே தேச்சு மாலிஷ் பன்னச் சொல்லு.'

அவர்கள் போய்விட்-சர்கள். ஈசம் கையில் விளக்குடன் தர்மூஜ் வயலுக்குப் பேய்விட் பன். அவன் இரவு முழுதும் அங்கே காவல் காத்துக்கொண் டிருப்பான், முயல்களும் எலிகளும் இளந் தர்மூஜ் கொடிகளைக் கடித்துவிடும். அவன் இரவில் தகரத்தைக் குச்சியால் அடித்துக்கொண்டே யிருப்பான். வெகுதுாரத்தில் தள்ளிரவில் விழித்துக்கொள்பவர்கள் அந்த ஒலியைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள், டாகுர் வீட்டு வேடேக்காரன் ஈசம் தர்மூஜ் வயலில் தகரத்தைத் தட்டிக்கொண் டிருக்கிருனென்று தகரத்தில் தட்டி எலிகயையும் வெளவாலேயும் விரட்டிக்கொன் டிருக்கிருைெ ன்று.

சசீந்திர நாத தம் அறையில் உட்கார்ந்துகொண்டு வீட்டுக் கணக்கு எழுதுகிறர். பெரிய பாபுவின் கைகளையும் முகத்தையும் கழுவிச் சமயலறைக்குக் கூட்டிக்கொண்டு பேஞர்கள். அவர் தமக்குப் பரிமாறப்பட்ட ஆப்னடத் தளியே சாப்பிட்டார், சாதத்தைத் தனியே சாப்பிட் -ார். மீஃப் யும் இறைச்சியையும் சாப்பிடும்போது எலும்புகளையும் விழுங்கிவிட்டார். கன்களை அகல விர்த்துச் சமையலறையைப் பார்த்துக்கொண்டே இருந்தார் அவர்.

சசிபாலா சொன்னுள் : "எனக்கு இன்னும் கடிடததைக் கொடுக் காதேயப்பா, மணி. சாதததோடே காய்கறி-ஃளத் தொட்டுக் கொடுை சாப்பிடு '

தாயின் பேச்சைக் கேட்ட மணிந்திர நாத் கிட்சின் காதல் கவிதை யொன்றைக் கம்பீரமான குரலில் பிசகில்லாமல் ஒப்பிக்க ஆரம் பித்தார். அம்மாவுக்கும் சந்திர நயத்துக்கும் அதன் ஒரு வார்த்தை கூடப் புரியவில்லை. கவிதையை ஒப்பிக்கும்போது அவர் இமை மூடாமல் தம் மனைவியைப் பார்த்துக்கொண் டிருந்தார். ஏதோ
35.

________________


ஒரு கொடிய வேதனையை அவர் இக்கவிதை மூலம் வெளிப்படுத்த முயன்ருர் போலும். இடையருமல் பொறுமையின்றித் தவிக்கும் உலகத்தின் சோகத்தை எதிரொலித்தார் போலும்.

அவர் தம் நெற்றியையும் தலையையும் கையால் தடவிக்கொண் டார். அம்மாமார்களே, என்க்னக் கொஞ்சுங்கள் ! என்ற பாவம் அவருடைய முகத்தில். அவருடைய இமையாத பார்வை சொல் கிறது எனக்கு மிகவும் கஷ்டம், மிகவும் வேதனை :ஜோட்டன் ஆபேத் அலியின் அண்ணி

 அவள் நாணல் தட்டை யாலான சிறு கதவைத் திறந்து தன் குடிசைக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். இன்னும் பொழுது புலர வில்லை. இரவு முழுதும் அவளுக்குத் தூக்கமில்பே. சாமு மதுதியி' லிருந்து தொழுகைக்கு அழைக்கிரன். ஜோட்டன் இருட்டில் கிழிந்த சாக்கையும் கிழிந்த போர்வையையும் மடித்து வைத்தாள். இன்னும் இருட்டாயிருப்பதால் அறைக்குள்ளிருந்த சாமான்கள் தெளிவாகத் தெரியவில்லை. உறியில் இரண்டு பாத்திரங்கள், இரண்டு பாஃன கள். இரண்டு நாட்களாக அவளுக்குச் சோறு ge:&) - இரண்டு நாட்களாக அவள் அல்லிக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டுக்கொண் டிருக்கிரள். அவள் முடியைத் தாக்கிப் பாத்திரத் துக்குள் கையை விட்டுப் பார்த்தாள். இன் லும் கொஞ்சம் வெந்த கிழங்கு இருக்கிறது. அவள் இருட்டிலேயே அதைச் சாப்பிடத். தொடங்கிளுள். உலர்ந்துவிட்டதால் அது தொண்டையில் அடைத்தது. அவள் கொஞ்சம் தன்னிர் குடித்தாள். மறுபடியும் கதவைச் சற்று திறந்து ஆகாயத்தைப் பார்த்தாள். ஆகாயம் நிர்மல மாக இருக்கிறது. கோழிகள் கூவத் தொ ங்கிவிட்டன. அவள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து தின் ருள்.

மசூதியின் மறுபக்கத்தில் சூரியன் உதித்துக்கொண் டிருக்கிருன். ஆபேத் அலி கையில் ஒரு பாத்திரத்துடன் வயலிலிருந்து வந்தான். அவனுடைய பீவி ஜாலாலி வாசலில் ஒரு மூலேயில் இங்களைப் பற்றவைத்துச் சமையல் செய்துகொண் டிருக்கிருள். ஆபேத் அலி திண்ணையில் உட்காருவதைப் பார்த்த ஜோட்டன், 'அந்த ஆள் நேத்திக்கு லால்வியே!' என்றுள்.

'வரலேன்ன நான் என்ன செய்வேன் ''

ஜோட்டனின் ஆசையைப் பார்த்து எரிச்சலாக இருந்தது ஆபேத். அலிக்கு. முனு கல்யாணம்

.ஆயிடுத்து, இவளுக்கு இன்னும் கல்யான ஆசை !
36


**********************************************************************

'பீர்சாகேப் உள்ளே இருக்காரா ? என்று கேட்க விருப்பம் அவருக்கு. அவர் மேடைக் கருகில் உட் கார்ந்துகொண்டு காதைத் தரையோடு சேர்த்து வைத்துக்கொண்டார். பீர்சாகேபின் முகம் அவருக்கு நீகனவில் தெரிகிறது. அவர் பார்த்த காலத்தில் பீர்சாகேப் கிழவராகித் திராணியற்று இருந்தார். மணிந்திரநாத் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டுத் திரும்பும் வழியில் தர்காவுக்கு வந்து பீர்சாகேபின் மீசையையும் தாடியில்லாத முகத்தையும் பார்த்துக்கொண்டே நிற்பார். ஒரு நாள் இரவு பீர்சாகேப் கழுத்தில் சுருக்கு மாட்டிக்கொண்டு சப்தபர்ணி மரத்திலிருந்து தொங்கினர். பாலம்! அவரைப் போன்ற மனிதர் உலகத்தில் இல்லை. அவருக்குச் சாப்பாடே தேவையில்லே கான்று சொல்வார்கள். அவர் எப்போதும் ; இக்காவையும் ஹல்க்காக் குடுவையும் தன் இடுப்பிலேயே கட்டி வைத்துகொண் டிருப்பார். தர்காவில் எங்கும் சுற்றிக்கொண் டிருப்டார். இயவில் து ரத்தில் கொய்ணுப் படகுகளின் வி. க்குகள் கண் சிமிட்டும். கிராமங்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும். அப்போது பீர்சாகேப் கீரையைத் தேடிப் பறிப்பார் அல்லது சப்தபர்ணி மரத்தின் மேல் ஏறிப் பருந்து முட்டைகளைத் தேடுவார். ஆமைகள் தர்காவிலும் பாய்க் கால் ஒரங்களிலும் பின் பணிக்கால முடிவிலும், குளிர்காலத்தின் ஆரம்பத்திலும் முட்டைகள் போடும். பீர்சாகேப் அந்த முட்டை களையும் தேடி எடுத்து வைப்பார். இப்போது அந்தக் கீழைச் செடிகளெல்லாம் தர்காவில் இi:2ல : எல்லாம் செத்துப் பேய்விட்டன. மழைக்காலம் அப்போதுதான் முடிந்திருந்ததால் தர்காவின் நாற்புறமும் களைகளும், சில இடங்களில் புல்லும் மண்டிக் கிடந்தன. சோனுவின் நினைவு வந்ததும் அவர் சுவருக்கருகே வந்து நின்றர். சோளு தூங்குவதையும், நாய் அவனுக்குக் காவலாயிருப்பதையும் பார்த்துவிட்டு அவர் அங்கிருந்து மகன்குர், சுவருக்கு உட்புறம் விசாலமாக இடம். பெரிய பெரிய பள்ளங்கள், புதை குழிகளைத் தோண்டி யாரோ சவங்களை எடுத்துக்கொண்டு போய்விட்டாம் போல. பெரிய பெரிய பாறைகள் கிடக்கின்றன. ஒவ்வொரு பாறையைப் போட்டு ஒரு மனிதனை முழுவதும் மறைத்துவிடலாம். பாறைக்கடியில் ஒரு மனிதர் நசுங்கிக் கிடக்கிருன் என்பதேதெரியாது. விசாலமான இடத்தைப் பார்த்து, இங்கேயே தர்காவில் விடு கட்டிக் கொண்டு வசிக்கலாமா என்று தோன்றியது மணிந்திரநாத்துக்கு. திருவிழாக் காலத்தில் மெழுகுவர்த்தி ஏற்றும் இடமும், படையல் படைக்கும் இடமும் மட்டுமே சுத்தமாயிருக்கின்றன. அந்த இடத்தில் அருகம் புல் வளர்ந்திருந்தது. பாழடைந்த ஒரு குடிசையும், உடைந்த
92

மண்சட்டிகளும் இருந்தன. பீர்சாகேபிடம் ஏதோ சக்தி இருந்தது. அதன் காரணமாகத்தான் திரு ணுக இருந்த ஹாலான் பக்கிரியாகி, பிறகு பீரும் ஆகிவிட்டார். மாலேகள், தாயத்துகள், பலதரப்பட்ட எலும்புகள் இவற்றையெல்லாம் சேகரித்து வைப்பார் பீர்சாகேப், அவரைப் புதைக்கும்போது இவற்றையெல்லாம் அவருடனேயே சேர்த்துப் புதைத்துவிட்டார்கள். நீண்ட மேடையின் மேல் பருந்துகள் எச்சமிட்டிருக்கின்றன. காகங்களும் மற்றப் பறவைகளும், முக்கியமாக மைனுக்களும், தர்காவில் கூட்டம் போடுகின்றன. இந்த வாசான் பீர்தான் அவரிடம் சொன்னுர், அந்தக் காலத்தில்; 'உன் கன்ளுேட பாப்பாவைப் பார்த்தா நீ பைத்தியமாயிடு வேன்னு தெரியுது." 'நீங்க என்ன சொன்றிங்க, பீர்சாகேப் ?" "நான் சரியாகத்தான் சொல்றேன். உன்னுேட படிப்பெல்லாம் வீண். பீர், சாமியார் ஆறதுக்கு உனக்கு இருக்கிற மாதிரி கண் இருக்கலும், முகம் இருக்கணும். ன் மாதிரி கண் இல்லேன்னுப் பைத்தியம் ஆகமுடியாது. பைத்தியமாப் பண்ணமுடியாது." பேர்ட் வில்லிய மீன் மதில்சுவரின் மேல் உலவும்போது பாயின் சொல்லுவாள். 'உன் கண்கள் எவ்வளவு ஆழமா, எள்வளவு சோகமா இருக்கு 'மபுவர் ஐஸ் ஆர் க்ளுமி!" பெட்டானிக்கல் பூங்காவில் பெரிய ஆலமரத்தடியில் ட்கார்ந்து கொண்டு ப. மின் தன் பாப் செய்த தலே மயிரைக் கைகளால் அவேந்தவாறே ஆங்கிலத்தில் கிசுகிசுப்பாள். 'வரியா, நாம் இரண்டு :ே ,: கீட்சோட கவிதையைக சொல்வோம்! - Tiere's lolic | grieve to leave behind, but only, only illee l’" அப்போது துரத்திலுள்ள தென்ன மரங்கள், கங்கையில் மிதக்கும் கப் பல்களின் சங்கெயி, சமுத்திய ததிலிருந்து பதும் பறவைகளின் இறக்கையின் படபடப்பு-இவை இருவரையும் எதேதோ நி&ள பு களில் ஆர்ததும். அப்போது அவர்கள் தங்களது சூழ்நிலையை :றந்து ஒருவரையொருலர் பார்த்துக்கொன் டு ட் கார்ந்திருப்பார்கள். கவிதை சொல்லி முடித்த பிறகு இருவரும் பறவையின் இறகு போன்ற மெல்ளிய ஒரு சோகததில் ஆழ்ந்துபோய்ச் சற்று நேரம் டெளன மாக இருப்பார்கள். பாலின் சொல்லுவாள். 'வா, நாம் இந்தக் கப்பல்லே ஏறிக்கிண்டு வேறெரு சமுத்திரத்துக்குப் போபிடலாம்!" இந்தினேவுகள் மணிந்திரநாத்தை உணர்ச்சி வசப்படச் செய்தன. அவருடைய ஆசைக்குரிய பகளின் ... 1925-26ஆம் ஆண்டு. பாலின்

93.


hopowww.chiepiscom CocastyттFFтоРрғustuvest» _
அப்போது யுவதி.முதல் உலக யுத்தத்தில் அவளுடைய அண்ணனின் மரணம், அவர்களுடைய வீட்டில் ஏதோ ஒர் இரவின் இருளில் ஏசு கிறிஸ்துவின் சித்திரத்துக்கு முன் எரியும் மெழுகுவர்த்தி, முழங் காலிட்டு உட்கார்ந்திருக்கும் பாவின் - இந்த நினைவுகள் மாறி மாறி அவருடைய மூளையில் மிதக்கின்றன, பிறகு மறைகின்றன. இப்போது அவரால் எதையும் தெளிவாக நினைவு கூற முடியவில்லை. தர்காவின் பீரைக் கேட்கத் தோன்றுகிறது. "நான் மறுபடி அந்த இடத்துக்கு அந்தக் காலத்துக்குப் போக முடியாதா ?" ஆளுல் பேச முயற்சி செய்தால் அந்த ஒரு வார்த்தைதான் வாயி விருந்து வருகிறது. பறவைகள் பறந்துகொண் டிருந்தன. பின்பனிக் காலத்து வெயில் இறங்கிவிட்டது. காழ் நிலத்தில் மழைநீர் முழங்கால் அளவுதான் நிற்கிறது. சின்னஞ்சிறு சாந்தா மீன்களும், பொய்ச்சா மீன்களும் பயிர்களுக்கிடையில் வாலேயாட்டிக்கொண்டு பாசியைத் தின்கின்றன. இலேசான குளிரின் வருகை பிராணிகளுக்கு ஒரு கெட்ட செய்தி யைக் கொண்டுவருகிறது. கோரைப் புற்களேத் தாண்டி, காடுகளைக் கடந்து, பல நதிகளையும் வாய்க்கால்களையும் கடந்து, ஃபோர்ட் வில்லியரில், அதன் மைதானத்தில், அதன் ஸ்தூபியின் உச்சியில் கொண்டைப் புருக்கள் பறக்கின்றன. தர்கா மேடையின் மேல் உட்கார்ந்திருக்கும் மணிந்திர நாத் மனக்கண்ணுல் போர்ட் வில்லியம் கோட்டையின் மேல் சூரியன் பிரகாசிப் தைப் பார்க்கிருர், குளிர்காலத்து மைதானத்தில் பாலினும் சூரியனின் ஒளியும் பரந்திருப்பதை உணர்கிறர். சோனு உட்கார்ந்திருக்கவில்லை. தவழ்ந்து நகரவுமில்,ை அவன் துங்கிப் போய்விட்டான். நாயும் நகராமல் உட்காய்ந்திருக்கிறது. அதற்கும் தூக்கம் வந்துவிட்டது போலும். அதன் கண்களும் முடியி ருக்கின்றன. பின்பனிக் காலத்து வெயில் அவற்றின் மேல் விழுகிறது, மெல்லிய கோடாக உருக்கிய தங்கம் போல் பளபளக்கிறது அது. மணிந்திரநாத் பூவரச மரத்துக் கிளைகளை விலக்கிக்கொண்டு ஒளி வரும் அந்த திசையை உற்றுப் பார்க்கிரர். அந்த ஒளி ஊற்றுப் பெருரும் இடத்தைத் தள் இரு கைகளாலும் பிடிக்க முயற்சி செய் கிரு.ர். உள்ளே இருட்டு சுடுவதுபோலிருக்கியது. அவர் சுவர்மேல் ஏறி வெளியே குதித்தார். பிறகு கைகளை நீட்டி ஒளியின் இருப்பிட மான சூரியனைப் பிடிக்க ஓடினர். அவர் ஒட ஒடச் சூரியனும் பின் வாங்குகிறன். கொஞ்சங் கொஞ்சமாக வயலுக்குள் இறங்கினர் அலர். அங்கு முழங்கால் வரை நீர். சூரியன் தேரிலேறி ஒடிப் போய்க்கொண் டிருக்கிருள். அவர் அந்த தேரில் ஏறிக்கொண்டு
94


hopowww.chiesodicom Created by TIFFTo PDF trial version to remove this mark, pleaseregister this software.
குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொள்வார். பிறகு பாலின் துங்கிக்கொண்டே கனவு காணும் இடத்துக்குச் சூரியனே இழுத்துக் கொண்டு போவார். அது முடியாவிட்டால் சூரியனே அரசமரத்துக் கிளையில் கட்டித் தொங்கவிட்டு விடுவார். பூமியின் கடிடத்தைக் களைவதற்கு, அதன் இருளைப் போக்குவதற்கு, அவர் சூரியனேப் பிடித்துக்கொண்டு வருவார். பூமியைக் களங்கத்திலிருந்து காப்பாற்று வதற்காக. தன் அன்பின் அடையாளத்தைப் பதிப்பதற்காக, அவர் வெறி பிடித்தவர்போல் தண்ணிரில் நீந்திக்கொண்டு போய் மேட்டு நிலத்திலுள்ள குளத்தங்கரைக்கு வந்து சேர்ந்தபோது தரியன் ஒடியொளிபவன் போல் மரங்களுக்கு மறுபக்கம் இறங்கிப் போயிருந் தான். சூரியன் ஏரித் தண்ணிருக்குள் அமுங்கி மறைவதைப் பார்த்து அவர் இடிந்துபோய்விட்டார். தோல்வியடைந்த ஒரு போர்வீரன் துப்பாக்கிக் குழாயைக் கையால் பிடித்துக்கொண்டு நிற்கும் பாவனை யில் அவர் ஒரு மரத்தின் மேல் சாய்ந்துகொண்டு கிள்ளுர். நாற் புறமும் இரவில் சஞ்சரிக்கும் பூச்சிகளின் ஒலி. தூரத்திலிருந்து வரும் குழந்தையின் அழுகை ஒளி. அவரு ை ஆளேக்குள் ஏதோ வலித்தது. எதையோ பின்னுல் விட்டு விட்டு வந்தாற்போன்ற உணர்வு. ஆறல் 'எதை' என்பது மட்டும் கிளைவுக்கு வடிவில்லை. துரத்திலிருந்து வந்த அழுகையொலி வயல்வெளி முழுதும் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உரத்த குரலில் கத்துகிரற் போன்ற பிரமையை உண்டாக்கியது. அவருக்கு ஒன்றும் நினைவுக்கு வர வில் சேறு நிறைந்த பாதை வழியே அவர் வீடு திரும்ப வேண்டும். அவருக்கு தன்கு தெரிந்த பாதைதான் அது. நாற் புறமும் இருள் சூழ்ந்து வந்தது. குழந்தையின் அழகையொலி அவரை வேதனை க்குள்ளாக்கியது.

அன்று சாயங்காலம் சோனு தனியே வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடிக்கொண் டிகுந்தான். :ளரீந்திரநாத் அவ&ளக் துரக்கி வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டே தெருவில் உலாவப் போஒர். அவர் அவனேப் படகில் தூக்கி வைத்துக்கொண்டு. "சோனு, பார்! இது பூமி, இது வயல், இந்த நிலத்திலேதான் நீ பெரிய வணுவே. இது உன்னுேட பிறந்த மண், இது தாயைவிட உசத்தி. இந்த மண்ணும் பூவும் புல்லும் சாமியைவிட உண்மை யானவை' என்றெல்லாம் சொல்லிக்கொண்டே ப. கை வெகுதூரம் கொண்டு போய்விட்டார்.

ஆனால் இப்போது, அவர் எப்போது வீட்டைவிட்டுக் கிளம்பினுர், அப்போது அவருடன் யார் இருந்தார்கள்-ஒன்றுமே அவருக்கு நினைவு வரவில்லை.
95


_ Created by TIFFToPDF trial version tonomow this mark.pleaser-goerthis onware
நாயும் சோளுவும் சிறிய படகும் தர்காவிலேயோ கிடந்தன. தர்கா வின் மண்ணில் ஹாஸான்பீரின் ஸ்பரிசம் அவர்களைத் தழுவிக் கொண்டிருந்தது. சப்தபர்ணி மரக்கி%ளயில் பருந்துகளின் ஒலி. மணிந்திரநாத் வீடு திரும்பியபோது எல்லாரும் பரபரப்புடன் இங்குமங்கும் அலேந்துகொண் டிருப்பதைக் கண்டார். சோளு எங்கே மாயமாக மறைந்து போய்விட்டான்? ஏன் தன மாமி கேவிக் கேவி அழுகிருள். பைத்தியக்கார டாகும் திரும்பி வந்துவிட் டார். ஆனல் சின்னப் படகைக் கொண்டு வரவில்லை. தனமாமி, பெரிய மாமி எல்லாருமே அழுதயர்கள். கிழவர் வாசலில் கட்டை போல் நின்று கொண்டிருந்தார். சோனுவைக் காளுேம் என்பதும் எல்லாரும் அவளைத் தேடுகிருக்கள் என்றும் மணிந்திரநாத்துக்குப் புரிந்தது. இப்போது கொஞ்சங் கொஞ்சமாக அவருக்கு நடந்த தெல்லாம் நினைவுக்கு வந்தது. ஒருவருக்கும் தெரியாமல் அவர் தண்ணிரில் இறங்கி நடக்கத் தொடங்கினர். அவர் போகப் போக, நாயின் ஒலம் அவர் காதில் தெளிவாக விழத் தொடங்கியது. அவர் சொல்லிக் கொண்டார். 'ஹாளப்பன் பீப் ! நீ இருக்கே, உன் தர்கா இருக்கு : என் சோனு உன் பொறுப்பிலே இருக்கான் !" அவர் இருட்டில் சேற்றுப் பாதையில் ஒடிஞர். உடம்பில் வியர்வை வழிகிறது. உடம்பெல்வா சேறு. நான் ஒளம் வரும் திசையை நோக்கி அவர் முன்னேறுகிரும். அவரது கையின் விளக்கு இல்லை. துரத்தில் ஒநாய்களின் ാ ?്r. ♔ நாய் இன்வளவு ஒநாய்களுக்கு ஈடு கொடுக்க முடியுமா ? மணிந்திரநாத் பைத்தியம் தெளிந்தவர் போல் உணர்ச்சி பெருகக் கத்தினு). "சோணு ' சோனு உன்ாேக் காட்டிலே விட்டுவிட்டு வந்துட்டேனே!" அதற்கு மேல் ஒன்றும் சொல்லமுடியவில்லே அவரால். வெளிச்சம் இல்லே. இருந்தாலும் நட்சத்திரங்களின் ஒளியில் அவரால் வழியை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவள் தர்காவை நெருங்கியதும் கத்தினர். கேத்சோ சத்சாலா ! திருப்பித் திருப்பி அதே வார்த்தையை உச்சரித்தார். ஆறல் நாய் அவருக்கருகில் வரவில்லை. அதன் குரல் ஏதோ ஒரு பள்ளத்தி விருந்து வருவது போல் கேட்கிறது. அவர் உள்ளே பேணு. சோனு தவழ்ந்து நகர்ந்துகொண்டே அழகிறன். பக்கத்திலேயே நாய இருக்கிறது. அழுது அழுது குழந்தையின் தொண்டை அடைத்துவிட்டது. நடுநடுவே விக்கல் ஏற்படுகிறது. மணிந்திரநாத் அவசர அவசர யகச் சோளுவைத் தாக்கிக் கொஞ்சிஞர். அவனுடைய உடம்பைத் தடவிப் பார்த்தார். நல்லவே. அவனுக்கு ஆபத்து ஒன்றும் எற்படவில்லே. அவருக்கு அபார மகிழ்ச்சி. நன்றி பொங்க அவர் நாயை மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.
96


~hicipdfcom created by TIFFToppfinal version womew this mark.pleaser-goerthis software.
சோணுவுடலும் நாயுடனும் அவர் சின்னப் படகில் உட்கார்ந்து கொண்டபோது சுவரின் மறுபுறத்திலிருந்து ஓநாய்கள் சேர்ந்து ஊளையிடுவது கேட்டது. அவர் ஆகாயத்தின், தர்காவின், கண்ணுடி களின் தெளிவைக் கலக்கிக்கொண்டு பெரிதாகச் சிரித்தார். நாயிடம், “ஆகாயத்தைப் பார் ' என் ருர். சோனுவிடம் சொன்னுர் : 'நட்சத்திரத்தைப் பார் புல், பூ, பூச்சி, பறவைகளைப் பார் உன் பிறந்த மண் 8ணப் பார் ' பிறகு தாமே வானத்தை நிமிர்ந்து பார்த்தார். அதில் வரையப்பட்டிருந்தன, சோனுவின் முகமும், பாலினின் கண்களும்.
நாய் படகின் மேல்தட்டில் நின்றுகொண்டு மெளனமாக வாலே ஆட்டியது.
சிறிது காலத்துக்குப் பிறகு... சோனு தர்மூஜ் வயலில் உட்கார்ந்துகொண்டு முழுமனசுடன் மண் கயத் தோண்டிக்கொண்டிருந்தான். மணற்பாங்கான இடமாத லால் நிறைய மண்ணைத் தோண்டிவிட்டான். லோனுவி பாலி ஆற்றின் படுகை அப்போது உலர்ந்திருந்தது. அதைக் கடந்து வந்தால் ஆற்று நீர் மெல்லிய போர்வை போல் காற்றில் சலசலத் தது. தெளிந்த நீரில் சின்னஞ்சிறு மாலினி மீள்கள் நீந்தித் திரிகின்றன. சோனு ஒரு சிறிய தேங்காய்ச் சிரட்டையில் ஆற்றுத் தண்ணிர் கொண்டுவந்து, தான் தோண்டியிருந்த பள்ளத்தில் ஊற்றி ன்ை. ஆற்றில் தண்ணிர் முழங்காலளவுதான். மாடுகளும் வண்டி களும் ஆற்றைக் கடக்கமுடியும். சோளு தண்ணிரில் இறங்கி ஒரு மாலினி மீனப் பிடித்தான். அதைக் கையில் எடுத்துக்கொண்டு வந்து பள்ளத்துத் தண்ணிரில் லிட்டான். பிறகு தர்மூஜ் இலைகளுக்குள் ளிருந்து தலையை மட்டும் முயலைப் போல் வெளியே நீட்டிப் பார்த் தான். படகின் கூரைக்குக் கீழே உட்கார்ந்துகொண்டு ஈசம் புகை பிடித்துக்கொண் டிருப்பதைக் கவனித்தான். சோனுவையும் தர்மூஜ் வயலையும் கவனித்துக்கொண் டிருந்தான் ஈசம். சோளு தன்னைத் தர்மூஜ் இலைகளுக்குப் பிள்ளுல் இன்னும் நன்ருக மறைத்துக்கொண்டான். அவனுக்கு மிகச் சிறிய உடம்பு. ஆற்றுமண லேப் போன்ற நிறம்: வெறுங்கால்கள் வசந்தகாலம். வசந்தகாலக் காற்று வீசுகிறது. காற்று பலமாக வீசுவதால் தர்மூஜ் இலைகள் விலகுகின்றன. விலகும்போது சோனுவின் உடம்பு
96