தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . 334-383

நீலகண்டப் பறவையைத் தேடி. . . 334-383

குரங்குகள் ஆடுவதைப் பார்த்துவிட்டுச் சோனா சிரித்துவிட்டான். இப்போது அவனுடைய சங்கோசம் சற்றுக் குறைந்துவிட்டது.

அமலா வேறொரு படத்தை பயாஸ்கோப்பில் வைத்தாள். சோனா வுக்கு ஓர் அருவி தெரிந்தது. அருகில் ஒரு வண்ணத்துப் பூச்சி : புதருக்குப் பின்னால் ஒரு பெரிய புலி. ஆச்சரியத்தால் கண்கள்

விரிய சோனா கூவினான், "அமலா, இதோ பாரு, புலி !"

"அட, போக்கிரி! நீ என்னைக்கூடப் பேர் சொல்லிக் கூப்பிடறயே!" என்று சொல்லி உற்சாக மிகுதியில் அவனுடைய கன்னத்துடன் தன் கன்னத்தைப் பொருத்திக்கொண்டாள் அமலா.

அமலாவும் கமலாவும் சோனாவைக் கூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனார்கள். இருள் கொஞ்சங் கொஞ்சமாகச் சீதலக்ஷா ஆற்றின் மேல் படர்ந்து கொண் டிருந்தது. டைனமோவின் ஒலி மிதந்து வந்தது. நாற்புறமும் ஒளிவெள்ளம். இந்த இடத்தில் எல்லாருக்குமே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதுபோல் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வெளிச்சம். மண்ணும், மரங்களும், பூக்களும், பறவைகளும் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. அது உயரமான மாடி, அவர்கள் அதில் சுற்றித் திரிந்தார் கள். கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்துகொண்டு கீழே பார்த்தார் கள். கீழே குளத்து நீரில் வெளிச்சம் பிரதிபலித்தது. தூரத்தில் சீத லக்ஷா ஆறு, அதன் கரையில் மணல், அதற்கப்பால் யானைலாயம். அங்கே யானையைக் கட்டிவைத்திருப்பார்கள். மாடியிலிருந்தே இவற்றை யெல்லாம் பார்க்க முயற்சி செய்தார்கள் அவர்கள்,

அப்போது முதல் அவனுக்கு அமலா, கமலாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அவன் அவர்களுடன் அந்த வீடு முழுவதும் சுற்றித் திரியத் தொடங்கினான். அமலா, கமலா இவர் களுடைய உடலிலிருந்து ஓர் இதமான வாசனை வந்தது. அது அவனுடைய உள்ளத்தில் ஓர் இன்பக் கிளர்ச்சியை உண்டாக்கியது. அமலாவும் கமலாவும் அவனுக்கு இருபுறமும் நின்றுகொண்டு, எந்தப் பக்கம் போனால் வயல்கள், மைதானம் எல்லாம் வரும், மண்டபத்தின் மாடிப்படியில் வெள்ளைச் சலவைக் கல்லால் செய்த மாடு இருக்கும், அதன் கழுத்தில் பூ மாலை இருக்கும் என்றெல்லாம் அவனுக்கு விவரித்துக்கொண் டிருந்தார்கள்.

அந்த இரு பெண்களுக்கும் நடுவில் அவன் நின்றிருந்தபோது அவர்கள் அவனைப் பெரியவனாக ஆகச் சொல்வது போலத் தோன்றியது. அவன் தன் அம்மாவை விட்டுவிட்டு வெகுதூரம் வந்துவிட்டான். இப்போது அவனுக்குப் பயமாக இல்லை. அவன் பெரியவனாகிக்கொண்டு வருகிறான்,

334முன்பு திருவிழாவில் பொரி தின்பதிலும், குதிரைப் பந்தய மைதானத்தில் காலுஷேக்கின் குதிரை ஓடுவதைப் பார்ப்பதிலும் இன்பங் கண்ட அவன், அதேபோல் இப்போது நட்சத்திரங்களைப் பார்த்து வானத்தின் அழகை அநுபவித்தான். திடீரென்று அவனுக்குத் தன் தாயின் நினைவு வந்தது. அப்போது அந்தப் பெண்களின் பிரியம் அவனைச் சலனத்துக்குள்ளாக்கவில்லை. அவன் மொட்டை மாடியின் ஓர் ஓரத்தில் ஏதோ சோகத்தில் ஆழ்ந்தவனாக, மெளனமாக நின்றான், அமலாவும் கமலாவும் அவனைக் கொஞ்ச முயன்றபோது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அவனுடைய உயிர்ப் பறவை தாய்க்காக ஏங்கித் தவித்தது.

பயங்கர இருள். மரங்களில் இலைகள் அசையவில்லை. கிராமமே இருளில் மூழ்கிவிட்டது. உலகத்தில் யாருமே விழித்திருக்கவில்லை போலும்! ஆழ்ந்த இரவில், இருளில் அந்த மர்மப் படகு கரைக்கு வந்தது. சில ஆட்கள் யாரையோ கட்டிக்கொண்டு வந்து படகின் மேல் ஏற்றிக்கொண்டு இருளில் மறைந்து போய்விட்டார்கள்.

"சசீ! சசீ!'' என்று மகேந்திரநாத் கூப்பிட்டார். பதில் இல்லை. அவர் மறுபடி கூப்பிட்டார், "அலிமத்தி! ஏ அலிமத்தி!"

அவருடைய கூப்பாட்டுக்குப் பதில் இல்லை. “கிழக்குப் பக்கத்து வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. எல்லாரும் எழுந்திருங்க !"

தீனபந்துவின் மனைவி ஏதோ கூவிக்கொண்டே ஓடிவந்தாள், தீனபந்து வாசலுக்கு வந்து, ''எல்லாரும் எழுந்திருங்க! ஆபத்து

வந்திடுச்சு!'' என்று கத்தினார்.

சசீந்திரநாத் விழித்துக்கொண்டு ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார். "எசமான், நானும் பாக்கு மரத்தடி ஒண்ணு எடுத்துக் கிட்டிருக்கேன்" என்றான் அலிமத்து.

புஜங்கன், கவிராஜ், காலோபாஹாட், சந்தாவின் இரண்டு பையன் கள், கெளர் சர்க்கார் எல்லாரும் விரைவில் வந்து சேர்ந்தார்கள்.

"என்ன ஆச்சு?" "என்ன ஆறது! நம்ம மானம், கெளரவம் எல்லாம் போயிடுத்து.” எல்லாரும் இருட்டிலேயே வெளியே கிளம்பினார்கள். ஆகாயத் தில் மேகங்கள் கவிந்திருந்தன. நட்சத்திரங்களே கண்ணுக்குத்

335தெரியவில்லை, நயாபாடாவுக்குச் செய்தி போயிற்று. தோடார் பாகிலிருந்து மன்சூர், ஆபேத் அலி, ஹாஜி சாயபுவின் மூன்று பிள்ளைகள் எல்லாரும் ஓடிவந்தார்கள். ''எந்தப் பக்கம் போக லாம் ?" என்று அவர்கள் கேட்டார்கள்.

"ஆத்துப் பக்கம் போங்க. அந்தப் படகு எங்கேயாவது போய்க் கிட்டிருக்கான்னு பாருங்க" என்றார் சசீந்திரநாத்.

"ஜய், ஜய்மா தா! மங்கள சண்டிக்கு ஜய்! அம்மா நாங்கள் உன் குழந்தைகள் ! உன் பாதுகாப்பிலே இருக்கறவங்களை யார் என்ன செய்ய முடியும்? அம்மா, அபலைக்கு நீதான் கதி! மாலதி உன் பொறுப்பு."

சசீந்திரநாத் படகில் உட்கார்ந்ததும், ''ஜப்பர் எங்கே ? அவன் ஊரிலேதானே இருந்தான்?" என்று கேட்டார்.

இப்போது ஆபேத் அலி 'ஹோ ஹோ'வென்று அழத் தொடங் கினான். "என் மானம் போச்சு, எசமான் ! என் புள்ளையோட

குத்தத்துக்கு நான் என்ன பரிகாரம் பண்ணுவேன் ?"

ஆபேத் அலியின் ஓலத்தைக் கேட்டு எல்லாரும் திகைத்து விட்டார்கள்.

சிலர் போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்கள், சபிருத்தீன் சாய்புவுக்குத் தகவல் தெரிவிக்க.

"இது ஜப்பரோட வேலைதான் ! படகை வேகமாக ஓட்டுங்க" என்றார் சசீந்திரநாத்.

"படகைச் செலுத்துங்க! தண்ணீரிலே படகைச் செலுத்துங்க!'' மக்கள் இருளில் கூவினார்கள். "ஜய் ஜய்பாலா கந்தேஸ்வரி! அம்மா பாடேஸ்வரி! இந்த நாட்டிலே தண்ணியிலேயும் துக்கம்! நிலத்திலேயும் துக்கம்! கடைசியிலே எங்க முயற்சி பலிக்குமோ, பலிக்காதோ யாருக்கு தெரியும்?"

"நீங்க மூணு பாகமாப் பிரிஞ்சுக்கங்க. ஒரு கூட்டம் பாவுசா ஏரிக்குப் போகட்டும். இன்னொண்ணு ஸோனாலி பாலி ஆத்திலே போய்த் தேடட்டும். மேற்குப் பக்கம் போறவங்க படகோட பாயை விரிச்சுக்கிண்டு போங்க" என்று சசீந்திர நாத் கூறினார்.

"இப்போதே படகைக் கிளப்பாவிட்டால் கொள்ளைக்காரர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம் ஆத்துப் படுகையிலே அங்கே வெளிச்சம் தெரியறதே, அந்தப் பக்கம் நான் போறேன், நரேன் தாஸும் என் கூட வரட்டும்'' என்றார் சசீந்திர நாத்.

எல்லாரும் படகின் மேல் ஏறிக்கொண்டு துடுப்பைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூவினார்கள், '' நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நாடல்லவா உன் தேசம்! உனக்கு எங்களின் மேல் 33611 12

என்னம்மா கோபம்! உன்னை அண்டின நாங்க கஷ்டப்படலாமா. அம்மா ! நீதாம்மா எங்களைக் காப்பாத்தணும்!'' என்றார் மேலும்.

"இன்னும் யாரு தண்ணியிலே போகப் போறாங்க ?" சாலமரக் காட்டில் ஒரே இருட்டு ; வெளிச்சம் இல்லை. மின்மினி கூடப் பறக்கவில்லை. இருண்ட இரவில் பாம்பும் புலியும் யுத்தம் செய்யும். அந்தக் காட்டுக்குள்ளே சசீந்திரநாத் படகுடன் நுழைந் தார். கிராமத்துக்குள் ஒரே களேபரம். விட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர் செய்தி பரவி வெவ்வேறு இடங்களிலிருந்து படகுகள் விரைந்து வந்தன. டேபாவுடைய இரண்டு சகோதரர்களும் ஓடிவந்தார்கள். பெண்கள் பீதியடைந்து ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார் கள், "காலம் என்னமாக் கெட்டுப்போச்சு! ஊரே நாசமாப் போச்சு, இதை விட வேறே என்ன வேணும் ?"

ஒருவருக்கும் தூக்கம் வரவில்லை. கிலி பிடித்தவர்களாக விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.

படகின் கீழ்முனையில் சசீந்திரநாத், பெரிய மியான், மன்சூர், நரேன் தாஸ் எல்லாரும் உட்கார்ந்திருந்தார்கள். மேல்முனையில் அலிமத்தி, கெளர் சர்க்கார், பிரதாப் சந்தாவின் இரண்டு பிள்ளைகள். எல்லார் கையிலும் துடுப்பு. தலைக்கு மேலே ஆகாயம். மேகங்கள் சற்றுக் குறைந்துகொண்டு வந்தன. காற்று விட்டுவிட்டு வீசியது. எல்லாத் துடுப்புகளும் ஒன்றாக எழும்பின. இந்த வேகத்தில் அவர்கள் ஒரு மணிநேரத்தில் பத்துப் பதினைந்து கோச தூரம் பிரயாணம் செய்ய முடியும். சுக்கானுக்கு முன்னால் உடம்பை விறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் மன்சூர்,

இப்போது நேர்ந்துள்ள அவமானம் நரேன் தாஸ்க்கு மட்டும் ஏற்பட்டதல்ல. இந்த ஊர் முழுவதுக்கும், சமூகம் முழுவதுக்கும் நேர்ந்த அவமானம். கோபத்தால் முகமும் கண்களும் சிவக்க உரக்கக் கூவினான் மன்சூர் : "'ஜப்பர், நீ எல்லார் மூஞ்சியிலேயும் கரியைப் பூசிட்டே !''

அவர்கள் படுகைக்கு வந்து சேர்ந்தார்கள். 'படகு எங்கே ?' படகு இருந்த அடையாளமே இல்லை அங்கே. நாற்புறமும் தண்ணீர்ப் பரப்பு. அவர்கள் துடுப்புகளைத் தண்ணீரிலிருந்து தூக்கி விட்டு மெளனமாக அப்படியே உட்கார்ந்திருந்தார்கள். ஊஹும். படகைக் காணோம்! தணணிருக்கடியில் எங்கோ மீன்கள் நடமாடும்

அரவம். வயலில் வாத்து ஒன்றின் ஒலி.

"படகைத் தெற்குப் பக்கம் திருப்புங்க" என்றார் சசீந்திர நாத். எதிரில் சாலமரக் காடு. தலைக்கு மேலே சாலமரக் கிளைகளால் இருள் கவிந்திருந்தது. கீழே தண்ணீர் சில இடங்களில் மார்பு மட்ட ஆழம் ; சில இடங்களில் முழங்கால் மட்டம். புதரும்

337

22காடும் தண்ணீரில் பிரதிபலித்து அடியிலும் ஒரு காட்டைத் தோற்று வித்தன, மரங்களின் இடைவெளி வழியே படகு சென்றது. முதலில் அவர்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை. தண்ணீருக்குக் கீழே மின்மினியின் வெளிச்சம். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக் கான மின்மினிகள் உருவாக்கிய ஒளியும் இருளும் கலந்த உலகம். இந்த உலகத்தில் அவர் களுக்கு ஒன்றும் தெரியவில்லை. "நாம் இந்த இருட்டிலே யாரைத் தேடறோம்?'' என்று நரேன்தாஸ் கேட்டான்.

ஏதோ பறவை கூவியது, எல்லாரும் நிசப்தமாக இருந்து கொண்டு எதையோ உற்றுக் கேட்டார்கள், ஒட்டுக் கேட்பது போல். இந்தப் பக்கத்தில் ஓர் ஊரும் இல்லை, வெகு தூரம் போனால் சுந்தர்ப்பூர் கிராமம். அவர்கள் காட்டுக்குள்ளே போகப் போக நிசப்தமும் அதிகமாகிக்கொண்டே வந்தது. இலைகளின் சலசலப்புக் கூட இல்லை. கீழே தண்ணீர் இருப்பதால் இலை விழும்போது கூட அரவம் இல்லை. அடர்ந்த காட்டில் பிரம்புப் புதர்கள் பரவிக் கிடந்தன. தலைக்கு மேலே பல ரகக் கொடிகள் தொங்கின, இந்தப் பயங்கர இருட்டில் ஏதாவது வெளிச்சம் தெரிந்தால்...! ஏதாவது படகு செல் லும் சப்தம் கேட்டால்....!

வேகமாக ஓடித் தப்பக்கூடிய வழி அல்ல இது. இரவைக் கழிக்கத் தான் முடியும் இங்கே. காட்டைத் தாண்டிவிட்டால் மேக்னா நதி. அங்கே போய்ச் சேர்ந்ததும் படகின் பாயை விரித்துவிட்டால் சுகமான பயணந்தான். ஆற்றில் ஓடும் படகை யாரால் கண்டு பிடிக்க முடியும் ?

அவர்கள் சாலமரக் காடு முழுவதும் மாலதியைச் சல்லடை போட்டுச் சலித்துத் தேடினார்கள், தங்களுக்குள் மிக மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள்.

"இல்லை, படகும் இல்லை; அந்தப் படகிலிருந்து முன்பு கேட்டுக் கொண்டிருந்த குனாயி பீபியின் பாட்டும் இல்லை. மாலதி போன்ற தைரியம் நிறைந்த யுவதியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்ற போக்கிரிகள் யார் ?"

சசீந்திர நாத் சோர்ந்துபோய், "படகை நதிப்பக்கம் திருப்புங்க. கொள்ளைக்காரங்களோட படகு எங்கேயோ அந்தர்ததானமாயி டுத்து?'' என்று கூறினார்.

அப்பர், பொண்ணு என்ன சொல்றாரு ?" "ஒண்ணும் சொல்லல்லே, மியான்."

338""ஒண்ணும் சொல்லலேன்னா, வசப்படுத்தறது எப்படி?'' ''கொஞ்சம் பொறுத்துக்குங்க, மியான்.'' ''விடிய இன்னும் ரொம்ப நேரம் இல்லே, ஜப்பர்." ஜப்பர் படகின் மேல் தட்டில் ஏறினான். இதற்குள் அவர்கள் சாலமரக் காட்டைக் கடந்து ஆற்றில் இறங்கிவிட்டார்கள். மேக்னாவில் அலைகள் பொங்கிக்கொண டிருந்தன.

படகைச் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட பாதை ஒன்றும் இல்லை. இப்போது செய்ய வேண்டிய காரியம் தண்ணீரிலும் காட்டிலும் ஒளிந்துகொண் டிருப்பது, பெண்ணை வசப்படுத்துவது - இவைதான்.

இந்துப் பெண், மாலதியை வசப்படுத்திப் பட்டணத்துக்கு அழைத்துப் போகவேண்டும். காத்திருக்கத் தயாராயில்லை மியான் சாயபு. பொறுமை இழந்துவிட்டால் அவர் மாலதியைப் பலவந்தப் படுத்தவும் தயங்கமாட்டார். ஆனால் படகு அறைக்குள் போக யாரால், முடியும்? மாலதி இப்போது பாம்பு, புலிபோல் பயங்கரமாக இருக்கிறாள். யாராவது உள்ளே நுழைந்தால் கடிக்க ஓடிவருகிறாள். சில சமயம் விம்மினாள் ; சில சமயம் பைத்தியம் போலக் கூக்குர லிட்டாள். பயத்தால் அவளுடைய உதட்டோரங்களில் எச்சில் ஊறி வந்திருந்தது. அவளுடைய தொண்டை மரமாக இறுகிக் கிடந்தது. அவளுடைய கைகால்கள் அழுத்தமாகக் கட்டப்பட் டிருந்தன. அவள் சிலசமயம் உருண்டாள் ; சிலசமயம் அசையாமல் மெளனமாகப் படுத்துக் கிடந்தாள்.

படகில் நான்கு படகோட்டிகள், ஜப்பர், மியான் சாயபு, அவரு டைய இரண்டு சீடர் கள். ஜப்பர் நடுநடுவே உள்ளே போய் மாலதி யைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தான். கடைசியில் மியான் சாயபு அவளைத் தன் பீபியாக்கிக் கொண்டு விடுவார்! இன்னும் சில நாட்கள் படகில் சுற்றிக் காற்று வாங்குவது, பிறகு ஊருக்குத் திரும்ப வேண்டியது...

மழைக்காலம் வந்துவிட்டால் மனத்தை அடக்க முடிவதில்லை. மனம் அடங்காமல் குதித்தோடுகிறது. இப்படிப்பட்ட உடம்பைக் காயப் போட்டுச் சாம்பலாக்கலாமா ? ஜப்பர் காசுக்கு ஆசைப்பட்டு ஏதேதோ சொல்லி அவளை மயக்கப் பார்த்தான், "மாலதி அக்கா! எழுந்திருங்க, பேசுங்க, சாப்பிடுங்க! ஆகாயத்தைப் பாருங்க, எவ்வளவு பெரிய நதியிலே போயிக்கிட்டிருக்கோம் பாருங்க! உங்க உடம்பிலே எவ்வளவு ஆசை ஜ்வாலையா எரிஞ்சுக்கிட்டிருக்கு! அதைத் தணிச்சுக்குங்க இப்போ" என்று சொல்லி அவளுடைய கட்டுக்களை அவிழ்த்தான். கட்டவிழ்த்துவிட்டால் மாலதி சமாதான மாகி விடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு,

11

339படகின் ஒரு முனையில் மூன்று பேர், கட்டம் போட்ட லுங்கி, கறுப்புப் பனியனுடன் நின்றனர்.

காசுக்கு ஆசைப்பட்டு ஜப்பர் மாலதியைக் கரீம் ஷேக்கின் படகில் ஏற்றி விட்டுவிட்டான். இரண்டு தறிகள் வாங்கித் தொழில் செய்ய ஆசை அவனுக்கு. கரீம் ஷேக் திருவிழாவில் மாலதியைப் பார்த்து அவளுடைய அழகில் சொக்கிப் போய்விட்டான். அந்தச் சமயத்தில்தான் திருவிழாவில் கலகம் துவங்கிவிட்டது. கரீம் ஷேக் தன் ஆட்களுடன் மாலதியைத் தேடினான். ஆனால் அவளைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதுமுதல் மாலதி நினைவுதான் அவனுக்கு, நாராயண் கஞ்சிலிருந்த அவனுடைய கடைக்கு ஐப்பர் நூல் வாங்க வரும்போதெல்லாம் கரீம் ஷேக் ஜப்பரைக் கேட்டான், ''என்ன. உன் அக்கா என்ன சொல்றா?'' என்று.

எப்படியாவது அவனிடமிருந்து பணத்தைக் கறக்கும் நோக்கத் துடன் ஜப்பர், "எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசறா மாலதி

அக்கா” என்பான்.

"என்னைப் பத்தியா? அவளுக்கு என்னைத் தெரியுமா ?" “உங்களைத் தெரியாமேயா? மாலதி அக்கா என்னைக் கேட்டா, ஜப்பர், அன்னிக்குத் திருவிழாவிலே உன்கூட ஒரு அழகான ஆளு நின்னுக்கிட்டு இருந்தாரே, அவர் யாருடான்னு."

"நீ என்ன சொன்னே ?'' "நான் சொன்னேன், நீங்க ஒரு பெரிய மனுஷர், பணக்காரர், பேரு கரீம்; நாராயன்கஞ்சிலே உங்களைத் தெரியாதவங்களே கிடையாதுன்னு!''

"என்னைப் பத்தி இவ்வளவு உசத்தியாச் சொன்னியா?" "சொல்லமாட்டேனா ? நீங்க எவ்வளவு பெரிய மனுஷர் !” "இன்னும் என்ன சொன்னே என்னைப் பத்தி ?'' '' நீங்க தங்கமான மனுஷர்னு சொன்னேன்." "அவ என்ன சொன்னா?” "தங்கமான மனுஷரா இருந்தா அவருக்கு ஆசை கீசை கிடையா தான்னு கேட்டா."

"நீ என்ன சொன்னே ?" "ஆசை இல்லாமே என்ன? ஆசை, பாசம் எல்லாம் இருக்குன்னு சொன்னேன்.”

ஒரு தடவை கரீம் கடையில் உட்கார்ந்துகொண்டு ஜப்பரிடம் சொன்னான், "ராத்திரி எனக்குத் தூக்கம் வரல்லே, ஜப்பர்! ஓர் அழகான தேவதை எங்கிட்டே பறந்து வர்ற மாதிரி பிரமை உணடாறது எனக்கு."

340"தேவதையா? சும்மா தேவதைன்னு சொல்லிட்டாப் போதுமா? தேவதைகளை, அப்சரசுகளைக் கூட மயக்கி வசப்படுத்திடலாம். எங்க மாலதி அக்கா ஆகாசத்து நட்சத்திரமாக்கும்! அவளை மயக்கறது ஒண்ணும் லேசுப்பட்ட காரியம் இல்லே. ஆகாசத்து நட்சத்திரத்தை வசப்படுத்தணுமின்னா அதுக்குச் செலவு செய்யணு மாக்கும்!'' என்றான் ஜப்பர்.

கரீமிடமிருந்து ஒரு பெரிய தொகையைக் கறக்க விரும்பினான் ஜப்பர்.

“எவ்வளவு செலவாகும் ?" நான்கு தறிகள் வாங்கிப் போட எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் பார்த்துவிட்டு ஜப்பர் ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னான்.

''ஆயிரம் ரூபாயிலே தேவதை, அப்சரசு, ஆகாசத்து நட்சத்திரம் எல்லாத்தையுமே வாங்கிடலாமே!"

''ஒருத்தருக்குச் செலவு கொஞ்சந்தான் ஆகுங்கறீங்களா ?" மென்று விழுங்கினான் ஜப்பர். வரவிருந்த பணம் கை நழுவிவிடுமோ என்று பயம் அவனுக்கு.

"பின்னே ?'' "சரி, உங்க இஷ்டப்படி கொடுங்க." கடைசியில் பேரம் பேசி ஜப்பர் கரீமிடமிருந்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக்கொண்டான். பாக்கிச் செலவுகளையும் கரீமே ஏற்றுக் கொண்டான். படகு, படகோட்டிகள், சாப்பாட்டுச் செலவு எல்லாம் கரீமின் பொறுப்பு. முதலில் கரீம் படகில் வருவதாக இல்லை. ஆனால் பிற்பாடு அவனுக்கு ஜப்பரிடம் சந்தேகம் தோன்றிவிட்டது. ஜப்பர் மாலதியை இழுத்துக்கொண்டு வேறெந்தப் பக்கமாவது ஓடிப்போய் விட்டால்! ஆகாசத்து நட்சத்திரமும் சிக்காது, பணத்துக்குப் பணமும் நஷ்டம். ஆகையால் அவனும் படகில் ஏறிக்கொண்டு விட்டான். பண ஆசையில், இரண்டு தறிகளுக்குச் சொந்தக்காரனாகும் ஆசையில் ஜப்பர் அடிக்கடி ஊருக்கு வந்துவிட்டுப் போவான். தாராளமாகப் பணத்தைச் செலவு செய்வான். பேலுவுடன் கூடிக் கூடிச் சதியாலோசனை செய்வான். கரீமின் ஆட்களுக்கு ஊரைக் காட்டுவான். "எங்க ஊரைப் பாருங்க ! இங்கேதான் எங்க மாலதி அக்கா நாளுக்கு நாள் அழகா மலர்ந்துக்கிட்டு வரா! அவ கிடைச் சுட்டா, கரீம் சாயபு ரொம்ப அதிருஷ்டக்காரர்தான்!''

சரியான தருணத்துக்காகக் காத்திருந்தான் ஜப்பர். ரஞ்சித் ஊரில் இல்லை. நல்ல இருட்டான இரவு. படகு வருவது கண்ணுக்குத் தெரியாது. இம்மாதிரி தருணத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடலாம். சாம்சுத்தீனும் ஊரில் இல்லை : அவன் டாக்கா போயிருக்

341கிறான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காரியத்தை முடித்துவிடும்படி யோசனை சொன்னான் பேலு. இந்த யோசனைக்குக் கூலியாகப் பேலுவுக்கு இருபது ரூபாய் கிடைத்தது. பீபி ஆன்னுக்குக் கட்டம் போட்ட புடைவை கிடைத்தது. பேலுவின் பீபியும் அவர்களோடு போவதென்று ஏற்பாடாயிருந்தது. ஆனால் கடைசியில் பேலு இதற்கு இணங்கவில்லை. அவனுக்குப் பயமாக இருந்தது, அகப்பட்டுக்கொண்டு விடுவோமோ என்று.

இப்போது சூரியன் மேலே கிளம்பிக்கொண் டிருந்தான். காற்று படகின் பாயின்மேல் மெல்ல வீசியது. காலைச் சூரியன் நதியின் நடுவிலிருந்து மேலே கிளம்புவதுபோல் தோற்றம் அளித்தான். மேக்னா ஆற்றின் கடுஞ்சுழலில் படகு அகப்பட்டுக்கொள்ளக் கூடா தென்று படகோட்டிகள் படகை மிகவும் கவனமாகச் செலுத்தி னார்கள். படகின் மேலிருந்த குடிசைக்கு இருபுறமும் மரக் கதவுகள், உள்ளே இருந்த இடம் ஓர் அறைபோல் பெரிதாயிருந்தது.

உல்லாசப் படகைப் போன்ற பெரிய படகு அது. அறைக்குள்ளே பேசப்படும் பேச்சைப் படகு முனையிலிருந்து கேட்க முடியாது. அறைக்குள் மாலதி சீறினாள், விம்மினாள். ஜப்பர் அவளுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு முன் போல் ஆசை காட்டி மயக்கப் பார்த்தான். பேலுவின் பீபியும் இப்போது படகில் இருந்தால் எவ்வளவோ வசதி யாக இருக்கும். ஜப்பர் இன்னும் பத்து, இருபது ரூபாய் கொடுக்கத் தயாராய்த்தான் இருந்தான். ஆனால் பேலுதான் அவளை அனுப்ப இணங்கவில்லை.

மாலதி கடைசிவரை வழிக்கு வராவிட்டால், 'காட்டுப் புலி கூண்டுக்குள் வந்தும் சீறிக்கொண்டே இருந்தால் என்ன நேரும்?' ஜப்பரின் திட்டமெல்லாம் பாழாகிவிடும். அந்தப் பயத்தில் ஜப்பான் முகம் உலர்ந்துவிட்டது. அவன் மாலதிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, "மாலதி அக்கா, எழுந்திருங்க! பால் காய்ச்சிக் கொடுக் கறேன் ; குடிங்க! உடம்பிலே பலம் வரும்" என்று கெஞ்சினான்.

அவன் பேச்சை யார் கேட்பது? மாலதி தரையின் மேல் சுருண்டு கிடந்தாள், புயலில் அடிப்பட்டு விழுந்து கிடக்கும் காக்கையைப் போல். அவளுடைய முகத்தில் களங்கத்தின் நிழல் படிந்திருந்தது. ஒரே இரவுக்குள் அவளுடைய கண்களுக்குக் கீழே கறுத்துப் போயிருந்தது. அவளுடைய கைகால்களில் இப்போது கட்டுகள் இல்லை. மூடிய கதவின் இடைவெளி வழியே காலை வெயில் நுழைந்து வந்து அவளுடைய கால்மாட்டில் விழுந்தது.

"மாலதி அக்கா, எழுந்திருங்க ! மூஞ்சி அலம்பிக்கிட்டு நாஸ்தா பண்ணுங்க" என்று ஜப்பா கூப்பிட்டான்.

342மாலதி தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் இன்னும் அவளைத் தொந்தரவு செய்தால் அவன் மேல் விழுந்து கடித்துக் குதறிவிடுவாள் போலிருந்தது. ஜப்பர் பயந்துபோய் அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான், "உம், அவளுடைய கொழுப்பு இன்னும் அடங்கவில்லை."

மாலதியைப் பார்த்தால் பைத்தியம் மாதிரி இருந்தது. கரீம் ஷேக் வாசலில் ஹூக்கா பிடித்துக்கொண் டிருந்தவன், ''குட்டி என்ன சொல்றா?'' என்று ஜப்பரைக் கேட்டான்.

"கேக்கறா, கிழவனாச்சே, எனக்கு ஈடுகொடுக்க முடியுமான்னு." "அப்படி என்ன வயசாச்சு எனக்கு ? சுமார் நாற்பதுதானே இருக்கும்!"

"அப்படீன்னா ஒரு கவலையும் இல்லே; சமாளிச்சுடுவீங்க."

y)க்காவில் புகையிழுத்துக்கொண்டே கரீம், "அவ என்னமோ என்னைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கறதாச் சொன்னியோ அவளானாப் பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருக்காளே!" என்றான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லே, மியான்! காட்டுப் புலியைக் கூண்டிலே அடைச்சா, இப்படித்தான் முதல்லே சீறும். அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும்."

''அவளை வசப்படுத்த முடியாட்டா எவ்வளவு ராத்திரி இந்த மாதிரி அலையறது? நான் கடையைவிட்டு வந்து எவ்வளவு நாளாச்சு! நான் கிளம்பறபோதே பெரிய பீபி கேட்டா, 'எங்கே போறே, மியான் ?'ன்னு."

"என்ன சொன்னீங்க ?" “சொன்னேன், மீன் பிடிக்கப் போறேன்னு. மேக்னாவிலே பெரிய டாயின் மீன் கிடைக்குமான்னு பார்க்கப் போறேன்னேன்."

ஹக்காவின் நெருப்பைத் தண்ணீருக்குள் உதறிவிட்டுக் கரீம் தொடர்ந்தான். "மீன் தூண்டில்லே சிக்கிட்டது. ஆனா அதைக் கரைக்கு இழுத்துக்கிட்டு வர முடியல்லே. இதென்ன சங்கடம்?"

"கரைக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டா அப்புறம் என்ன மிஞ்சும், சொல்லுங்க! ரெண்டு மூணு தடவை குதிக்கும். அப்புறம் பிராணனை விடும், காட்டுப் புலி வசப்பட்டுட்டா இன்னொரு தடவை வேறொரு புலியைத் தேடிக்கிட்டு வேட்டையாடப் போகத் தோணும், கையிலே ஆம்பிட்டுக்கிட்ட சரக்கு அவ்வளவு ருசியாத் தோணாது. இல்லையா, மியான்?, சரி, புகையிலை தரவா?"

“தா. ஆனால் புகையிலை சாப்பிட்டும் உற்சாகமாயில்லே எனக்கு." கரீம் ஷேக் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டு உட்கார்ந் திருந்தான். படகு எந்த ஊரையும் நெருங்கவில்லை. படகில் எடுத்து வந்திருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. மாலதி

343அவனுடைய விருப்பத்துக்கு இணங்கும்வரை இப்படியே ஏரிகளிலும் ஆறுகளிலும் படகிலேயே சுற்ற வேண்டும். அவளிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும், பலாத்காரத்தை உபயோகிக்கக் கூடாது. நயமான நடத்தையால் மாலதியின் மனத்தைக் கவரவேண்டும். இவ்வாறெல்லாம் நினைத்த கரீம் ஜப்பரிடம் சொன்னான், “'மனசுக் குள்ளே ஒரு பறவை வாசம் பண்ணுது, ஜப்பர்."

"ஆமாங்க, மியான்.” "அந்தப் பறவை பறக்கத் துடிக்குது. அதுக்கு என்ன வேணும் ? புது பீபிக்காக ஏங்கித் தவிக்குது அது. மனசே, நீயும் ஒரு படகோட்டி தான்! பீபி ஹாலிமா - அவளை வழிக்குக் கொண்டுவர எவ்வளவு நாளாச்சு?” இதெல்லாம் ஜப்பருக்குத் தெரியக் காரணம் இல்லை. ஏதேதோ நினைவுகள் கரீமின் மனத்தில் தோன்றின.

இப்போது கரீம் வெளிப்பார்வைக்கு ஒரு கண்ணியமான மனிதன். ஆனால் உள்ளுற அவன் நேர்மையான பேர்வழி அல்ல. அவன் மனம் கோணலானது, வளைந்து செல்லும் ஆற்றைப்போல. இப்போது அவனுக்கு உள்ளும் புறமும் ஒரே ஞாபகந்தான். விருப்பப்படி படகுத் துறையிலே நின்னு இலிஷ் மீன் வாங்கணும். பத்மா நதியின் இலிஷ், மேக்னா நதியின் இலிஷ். அப்புறம் படகிலே போயிக் கிட்டே மீன் குழம்பும் சுடுசோறும் நல்லாச் சாப்பிடணும். இந்துப் பொண்ணு! அவளோட இளமை வீணாகிக்கிட்டு இருக்கு : அவளோட வாழ்க்கை நடத்த ஆசையா இருக்கு கரீமுக்கு. 'ஏ பொண்ணே , நீ ஏன் கஷ்டப்படறே? இளமையை ஏன் வீணாக்கிக்கிட்டு இருக்கே? நானும் நீயும் உல்லாசமாகக் கடல்லே பிரயாணம் செய்யலாம்' என்றெல்லாம் நினைத்துக்கொண்டே கரீம் ஹக்காப் புகையை இழுத்து வெளியே விட்டான். பிறகு ஹக்காவை ஜப்பரிடம் கொடுத்துவிட்டு, "நல்லா, ஆனந்தமா இழு!" என்று சொன்னான். பிறகு தவழ்ந்துகொண்டே போய் மாலதி இருந்த அறைக்குள் நுழைய முற்பட்டான், ஜப்பர் சட்டென்று அவனுடைய இரு கால் களையும் கட்டிக்கொண்டு கேட்டான், " நீங்க என்ன பண்றீங்க. மியான் ?"

"ஏன், என்ன பண்ணிட்டேன் ?" "பாம்போட விளையாடப் பாக்கறீங்களா?" ''பாம்போட விஷப் பல்லைப் பிடுங்கப் போறேன்.'' "அது அவ்வளவு சுலபமாத் தோணுதா ?" "ஆமா ," " நூல் வாங்கி விக்கற மாதிரி தோணுதாக்கும் ?" "ஆமா .'' ''அது அவ்வளவு சுலபமில்லே , மியான்."

344"சுலபமா, இல்லையான்னு பாக்கறேனே!'' இவ்வாறு சொல்லிக்கொண்டே கரீம்ஷேக் முழங்காலால் நகர்ந்த படி அந்த அறைக்குள் நுழைந்துவிட்டான். ஓநாய் தன் பொந் துக்குள் வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாய் உட்கார்ந் திருப்பது போல் அவன் மாலதிக்குச் சற்றுத் தூரத்தில் பேசாமல் உட்கார்ந்தான், இங்கிருந்து அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. முகத்தைத் தன் மடிக்குள் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். படகுக்குப் பலவந்தமாக இழுத்து வந்ததில் அவளுடைய உடலில் பல இடங்களில் காயம், ரத்தக்கறை-யாரோ அவள் உடல் முழுதையும் குத்திக் கிளறிவிட்டாற் போல் இருந்தது.

கரீம் அவளை அன்போடு தடவிக் கொடுக்கத் தன் கையைத் தூக்கியபோது படகின் முன்பக்கத்திலிருந்த படகோட்டி தன்னைக் கவனிப்பதைப் பார்த்தான். உடனே அவன் அறைக் கதவைச் சாத்தினான். ஆசை மிகுதியில் அவனுடைய நாக்கில் நீர் ஊறியது. தாமரைப் பூப்போல் புத்தம் புதிய, ரோஜாவைப் போல் மிருதுவான, மாலதியின் அழகிய உடலில் இளமைப் பொங்கிப் பூரித்திருந்தது,

ஆற்றின் பிரவாகம் போல.

பழுக்கக் காய்ந்த இரும்பின் மேல் கை வைப்பவன் சட்டென்று கையை எடுப்பது போல் கரீம் இரண்டு தடவை மாலதியைத் தொட்டுப் பார்த்து மறுகணமே கையை இழுத்துக்கொண்டான். இரண்டு தடவை அவளுடைய தலையை வருட முயற்சி செய்தான். இப்போது ரொம்பச் சமத்தாகி விட்டிருந்தாள் மாலதி. அவள் ஒன்றும் சொல்லவில்லை. இதனால் தைரியமடைந்த அவன் உற்சாகத்துடன் கூவினான். 'இலிஷ் மீன் குழம்பு பண்ணி, சுடச்சுடச் சோறு சமைச்சு ஆனந்தமாச் சாப்பிடுங்க எல்லாரும்! இன்னும் சற்று நேரத்தில் மாலதியுடன் காதல் விளையாட்டில் மெய்ம்மறந்து போகலாம்' என்று எண்ணிக்கொண்டே, அவன் அறைக்கு வெளியே வந்தபோது நாணல் காட்டுக்குள்ளே தண்ணீரில் ஒரு பெரிய முதலை மிதப்பதைக் கண்டான். அதன் பிரம்மாண்டமான வாய் திறந்து கிடப்பதைப்

பார்த்து அவனுக்குத் திகில் பிடித்துவிட்டது.

அருகில் ஊர் எதுவும் இல்லை. நதியின் தென்கரையில், நாணல் காட்டைத் தாண்டினால், ஆஸ்தானா சாயபுவின் சமாதி. எதிரில் நாணல் காடு. வெகு தூரத்துக்குத் திறந்த வெளி. தண்ணீர் சற்றுக் குறைந் திருந்தது. சூரியன் உச்சிக்கு வந்துகொண் டிருந்தான்.

எல்லாரும் படகின் மேல் தளத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிட் டார்கள். மாலதி ஒன்றும் சாப்பிடவில்லை. அவள் மெளனமாக ஆற்று நீரையே பார்த்துக்கொண் டிருந்தாள். இப்போது அவர் களுடைய கவனம் அவள் மேல் இல்லை. கரீம் தொழுகை செய்தான்.

345மாலதியால் இனி வீடு திரும்ப முடியாது. எங்கே திரும்புவாள் அவள்? மோசக்காரர்கள் அவளைத் திருட்டுத்தனமாகக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது ரஞ்சித்தின் முகமோ வேறு எவருடைய முகமோ அவளுடைய மனத்தில் தோன்றவில்லை. அவளு டைய மண்டைக்குள் தாங்க முடியாத வேதனை. அவளுக்குள்ளே ஒரு கையாலாகாத ஓலம். இப்போது என்ன செய்வாள் அவள்? அவள் யார், அவளுடைய விருப்பம் என்ன, அவள் இப்போது எங்கே போகிறாள்? அவள் ஏன் இப்படிச் சும்மா உட்கார்ந்திருக் கிறாள் ? அவள் செய்யக் கூடியது என்ன ?

கரீம் தொழுகையிலும் மற்றவர்கள் சாப்பாட்டிலும் கவனமாயிருந்த போது மாலதி சட்டென்று தண்ணீரில் குதித்துவிட்டாள். 'தாயே, உன்னிடம் எனக்கு அடைக்கலம் கிடைக்குமா ? என்று கேட்பவள் போல. ''கங்கை அன்னையே! நான் உன்னை அண்டிவிட்டேன்! நீதான் சரணம்!"

படகோட்டிகள் சாப்பாட்டை விட்டுவிட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டு எழுந்தார்கள். ஜப்பர் தண்ணீருக்குள் குதித்தான். துடுப் பைக் கழற்றப் போன படகோட்டிகள் கயிற்றில் சிடுக்கு விழுந் திருப்பதைக் கண்டார்கள். அவர்களால் விரைவாகத் துடுப்பைக் கழற்ற முடியவில்லை. இதற்குள் மாலதி வெகுதூரம் ஆற்றோடு போய் விட்டாள். அவளுடைய தலை இடையிடையே தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி மேலே வந்தது. கரீம் ஆற்று நீரின் திசையில் படகை வேகமாக ஓட்டினான். மாலதி கரையை அடைந்து கோரைக் காட்டுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டாள்.

படகு ஆமை முதுகைப் போல் தண்ணீரின்மேல் போய்க்கொண் டிருந்தது. எதிரில் நீர் சுழலாகச் சுழன்றது. வலதுப் பக்கம் படுகை, அதில் வயல்கள். மாலதி சுழலில் சிக்கிக்கொண்டு முழுகி விட்டதாக எல்லாரும் நினைத்தார்கள். ஆனால் மாலதி எவ்வளவோ தடவை மழைக் காலத்தில் ஆற்று மணலைத் தாண்டி வந்து சுழலில் முழுகித் தண்ணீருக்கடியிலிருந்து மண்ணை அள்ளிக்கொண்டு வந் திருக்கிறாள். அப்படிப்பட்ட மாலதி சுழலில் அகப்பட்டுக் கொண்டு முழுகிப் போயிருப்பாள் என்று ஜப்பரால் நம்பமுடியவில்லை. அவன் படகின் மேலேறி நாற்புறமும் திரும்பிப் பார்த்தான். அருகில் கோரைக் காடு. ஒரு மீன் ஆற்று நீரில் நீந்துவதுபோல் யாரோ கோரைப் புற்களை விலக்கிக்கொண்டு தண்ணீரில் நீந்துவது அவனுக்குத் தெரிந்தது.

''அதோ போறா, பாருங்க !" என்று அவன் கத்தினான். "அது ஆள் இல்லை, மீன்!'' என்றார்கள் படகோட்டிகள், கரீம், "ஆமா, ஆமா! அது மீன்தான்" என்றான்.

346அவன் ஆற்றின் நடுப்பகுதியைக் கவனமாகப் பார்த்துக்கொண் டிருந்தான். மாலதி தப்பிவிட்டால் அவனுக்கு ஜெயில் வாசந்தான், மாலதியை வசப்படுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போக முடியாவிட்டால் அவளைக் கொன்றுவிடுவது மேல். தண்ணீரில் ஆகட்டும், கோரைக் காட்டில் ஆகட்டும், அவள் தலைமேல் துடுப்பால் நாலு அடி வைத்துக் கொன்றுவிட வேண்டியதுதான். ஏரி நீரிலும் ஆற்று நீரிலும் யார் யார் பிணமாக மிதக்கிறார்களென்று யார் கண் டார்கள் ? மழைக்கால வெள்ளத்தில் ஒரு யுவதி செத்துப் போனால் அதைத் தற்கொலை என்றுதான் நினைப்பார்கள்.

"அந்தப் பொண்ணு எங்கே ?" என்று கரீம் கேட்டான். ஜப்பரின் பார்வை இன்னும் கோரைக் காட்டின்மேல் பதிந்திருந்தது. காடு மேடாகிப் போய்க்கொண் டிருந்தது. அந்த மேட்டில் இவ்வளவு பெரிய படகைச் செலுத்தினால் படகு மண்ணில் சிக்கிக்கொண்டு விடும். இங்கே எங்கும் சேறு நிறைந்த தண்ணீர். ஜப்பர் என்ன செய்வான் இப்போது ?

இந்தக் கஷ்டகாலத்தில் யாராவது அந்தப் பொண்ணைப் பிடித்துக் கொண்டுவந்து கொடுக்க மாட்டார்களா? ஏமாற்றமும் கோபமுங் கொண்ட ஜப்பர் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டான். எங்காவது கோரைக் காட்டில் அசைவு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே நின்றான் ஜப்பர்.

மாலதி கோரைக் காட்டைத் தாண்டி, குருடியைப் போல், சமாதி இருக்கும் திக்கில் தள்ளாடிக்கொண்டு போவது தெரிந்தது. கரீம் பைத்தியக்காரனைப் போல் சிரித்தான். "குட்டி வழி தவறிப் போயிட்டா! வாங்க, போய் பிடிக்கலாம் அவளை !''

அவன் தண்ணீரில் குதித்தான். அவனைப் பார்த்து ஜப்பரும் கரீ மின் சீடன் ஒருவனும் குதித்து நீந்தத் தொடங்கினார்கள். மனித நடமாட்ட மற்ற இந்தத் தண்ணீர்க் காட்டில் ஒரு முயலைத் துரத்தி வருகிற ஒநாய்க் கூட்டம் போல ஓடினார்கள். எதிரில் கரை, ஆஸ்தானா சாயபுவின் சமாதி. மற்றப் பக்கங்களில் ஆழமான தண்ணீர். மனிதர் களின் குடியிருப்பு அங்கிருந்து வெகுதூரம். இந்த அத்வானத்தில் அகப்பட்டுக்கொண்டால் மாலதி பைத்தியமாகிவிடுவாள். ஆனால் எப்படியோ புதரில் மறைந்துகொண் டிருந்துவிட்டு ஏழெட்டு மைல் தூரம் தண்ணீரைக் கடந்துபோய் ஏதாவது ஊரையடைந்துவிட்டால் ஜப்பருக்குச் சிறைதான். தறி வாங்கும் ஆசையெல்லாம் கனவாகிப் போய்விடும்!

மாலதி வேகமாக ஓட ஓட ஜப்பரும், கரீமும், அவனுடைய சகாவும் அவளைத் துரத்தினார்கள். அவர்கள் கோரைக் காட்டுக்குள் புகுந்து ஓடும்போது கோரை அவர்களுடைய உடம்புகளில் கீறி

347ரத்தம் வழிந்தது. இப்போது அவர்கள் மனிதப் பிறவிகளாகத் தோன்றவில்லை. சுடுகாட்டில் நடமாடித் திரியும் பிசாசுகளைப்போல் காட்சியளித்தார்கள் அவர்கள்,

இந்தப் பகுதியில் மனித சஞ்சாரம் இல்லை. சில கோச தூரங்களுக்கு மனிதர்களின் குடியிருப்பே இல்லை. வெறும் காடுதான். பண்டிகை சமயத்தில் மட்டும் மக்கள் அங்கு வந்து சமாதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டுப் போவார்கள். அப்புறம் மறுபடி சூனியந்தான்.

இந்தக் காட்டில் இறந்த மக்களின் உலகம் ஒன்று மெளனமாக இயற்கையின் விளையாட்டைப் பார்த்துக்கொண் டிருந்தது. பத்துக் கோசம், இருபது கோச தூரத்திலிருந்தும் பிணங்கள் இங்கு வருவது உண்டு. தர்காவுக்கருகில் பிணங்களைக் கொண்டுவந்து புதைப் பார்கள். புதைக்கும் சமயத்தில் உரக்கக் கூவுவார்கள். 'அல்லா ஒருவரே! முகம்மது அவருடைய ஒரே தூ தன்!'

இப்போது சூரியன் மேற்கே சாயத் தொடங்கிவிட்டான். மாலதியைத் துரத்தி வந்தவர்கள் கோரைக் காட்டில் புகுந்ததும் வழி தெரியாமல் தவித்தார்கள். காரணம், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு அரவமும் இல்லை. யாராவது சேற்றில் ஓடினால் சப், சப் என்ற அரவமாவது எழும். அதுகூட எழவில்லை இப்போது.

காற்றில் புற்கள் அசைந்தன. செடிகளில் எவ்வளவோ பூச்சிகள், புழுக்கள், மழைக் காலமான தால் பாம்புகளும் சஞ்சரிக்கும். இந்தப் பக்கத்திலுள்ள விஷப்பாம்புகள் கோடைக் காலத்தில் வயல்களிலும் ஆற்றங்கரையிலும் சுற்றித் திரியும். அவையெல்லாம் இப்போது தண்ணீருக்குப் பயந்து மேட்டுப் பகுதிக்கு வந்துவிடும், அல்லது புல்லின் மேல் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டு கிடக்கும். அட்டையும் ஒருவித விஷப்பூச்சியும் எங்கும் நெளியும். இங்கே அகப்பட்டுக்கொள்வது சாவை எதிர்கொள்வது போலத்தான்.

இங்கே ஓடிவந்த ஒரு யுவதி அவர்களைக் காட்டிலும் சேற்றிலும் அலைய வைத்தாள். அலைய அலைய அவர்களுக்கு வெறி அதிகமா கியது. கரீம் பைத்தியம் பிடித்தவன்போல ஆபாசமாகத் திட்டினான் அவளை, அவளுடைய கட்டுக்களை அவிழ்த்திருக்கக் கூடாது! அந்த அழகான குட்டி இப்போது எங்கே? தூக்குத் தண்டனை பெற்ற குற்றவாளியைப் போல் தோற்றம் அளித்தான் கரீம். அவன் அவளை நன்றாகத் தொடக்கூட இல்லை, இறுகக் கட்டிக் கொள்ளவில்லை. சேம்பு இலைபோன்ற அவளுடைய மிருதுவான தலை மயிரை ஆசை தீர வருடிவிடவில்லை. இன்னும் அவளை ஒன்றுமே செய்ய முடிய வில்லை அவனால்!

தன் திட்டமெல்லாம் வீணாகிவிட்டது என்ற நினைவு ஏற்பட்டதும் கரீம் தன் சுய உருவத்தை எடுத்துக்கொண்டான். அவனுடைய

348இயற்கையான மிருக உணர்வு வெளிப்பட்டது. "ராஸ்கல்! நீ என்னை மாடு, குதிரைன்னு நினைச்சியா?" என்று சொல்லிக்கொண்டே ஜப்பரின் முதுகில் ஓர் உதை கொடுத்தான் அவன். ஜப்பர் பயந்துகொண்டே , "வாங்க, மியான்! வடக்குப் பக்கத்துப் புதரிலே யாரோ நடந்து போற மாதிரி இருக்கு ; போய்ப் பார்க்கலாம்" என்றான்.

ஜப்பர் மனசுக்குள் கறுவிக்கொண்டான். 'இனிமேல் சும்மாவிடக் கூடாது. அவளைக் கண்டுபிடித்து விட்டால் உடனே கட்டிக் கொண்டு அவளுடைய மானத்தைப் பறிக்கவேண்டும்.'

கரீம் நினைத்துக்கொண்டான், ''சும்மா விடக்கூடாது இனிமேல்! இனிமேல் கெஞ்சப் போவதில்லை, கொஞ்சப் போவதில்லை. அவளைப் பிடித்துவிட்டால் மிருகத்தைப்போல் அவள் மேல் பாய வேண்டியது தான். இழுத்துக்கொண்டு போய், புதருக்குள்ளே கீழே தள்ளி... நினைத்தபோதே அவனுடைய கண களிலும் முகத்திலும் வெறி ஏறியது. எப்படியும் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

ஒரு தடவை மண்ணை உழுது பயிர் செய்துவிட்டால் பிறகு அந்த மண் அவனுடையதல்ல என்று யார் சொல்ல முடியும்?

மூவரும் வெறி பிடித்தவர்களாக ஓடினார்கள். மாலதி கரையில் ஏறி விட்டதாக அவர்களுக்குத் தோன்றவே, அவர்களும் கரையில் ஏறிப் புதர்களுக்குள் மறைந்து கொண்டு அரவம் ஏதும் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டார்கள். நிலா ஒளியில் மாலதி அசைவது தெரிந்தால் அவளைக் 'கப்'பென்று பிடித்துக்கொள்ளத் தயாராயிருந்தார்கள் அவர்கள்.

மாலதி பட்டினி. வெகுநேரம் காட்டுக்குள் அலைந்து அலைந்து களைத்துப் போய்விட்டாள் அவள். அவள் உடலில் பல இடங் களில் காயம்பட்டு, அந்தக் காயங்களிலிருந்து ரத்தம் வழிந்தது. மேலாடை இல்லை. அது எங்கோ கொடிகளில் சிக்கிக்கொண்டு விட்டது. ரவிக்கை பல இடங்களில் நார் நாராகக் கிழிந்துபோய் விட்டது. அவளுக்குத் தன் நினைவே இல்லை. அடிபட்ட மான் எவ்வாறு தள்ளாடிக்கொண்டே போய் ஒரு புதருக்குள் மறைந்து கொண்டு அசையாமல் கிடக்குமோ அதுபோல் அவளும் ஒரு புதருக்

குள் ஒளிந்துகொண்டாள்.

மேலே வெள்ளை நிலவு. இந்த நிலவு இன்னுங் கொஞ்ச நேரந் தான் இருக்கும். யாரோ அந்தப் பக்கம் வருவது போன்ற மெல்லிய அரவம் கேட்டது. ஆற்றுத தண்ணீரில், பிறகு கரையில் யாரோ நடக்கும் அரவம். புதர்களில் திடீரென்று ஏதாவது சப்தம் கேட் டால் அவள் பயந்து நடுங்கினாள். கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய திராணி குறைந்துகொண்டே வந்தது. தான் செத்துக்

349கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் தூரத்தில் ஒரு பெண் மான் ஓடுவது போவது போன்ற அரவத்தைக் கேட் டாள். தூரத்தில் ஆகாயத்தில் ரஞ்சித்தின் முகம் படகைப் போல் மிதப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவனுடைய கண்கள் வானவெளியில் மிதந்தன. தான் இவ்வாறு கொஞ்சங் கொஞ்சமாக நினைவிழந்து வருவதை அவள் உணர்ந்தாள். அதே நேரத்தில் அவளுக்கு அருகில் யமதூதர்கள் மாதிரி மூன்று பேர் நிற்பதைக் கண்டாள். அவர்கள் அவளை இழுத்துக்கொண்டு போகப் போகி றார்கள்! இப்போது அவள் பயத்தால் உண்மையிலேயே நினை விழந்து விட்டாள். ஏதோ கசமுசா ஒலி, ஆண்மானும் பெண்மானும் ஓடும் அரவம், நீரில் அலை எழும்பும் சப்தம்- இரவு முழுவதும் மயங்கிக் கிடந்த மாலதியின் உடலில் மூவரும் தங்கள் மிருகத்தனத்தைக் காட்டிவிட்டு, அவள் இறந்துவிட்டதாகக் கருதி. இருட்டிலேயே ஓடிப்போய் விட்டார்கள். காலையில் நாயும் ஓநாயும் அவளுடைய உடலைக் கடித்துக் குதறித் தின்றுவிடும்! காட்டுக்குள் ஒரு யுவதி செத்துக் கிடப்பதை யாரும் அறியமுடியாது.

மசானா இரவு முழுவதும் ஒரு கனவு கண்டான்.

ஒரு பெரிய சமுத்திரம், அதன் கரைக்கு யாரோ சிலர் ஒரு பெரிய மரக்குதிரையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். எவ்வளவு பெரிய குதிரை அது ! அவர்கள் போன பிறகு அவனுக்குத் தெரிந்தது. அது மரக்குதிரையல்ல, நிஜக் குதிரை என்று. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கிறது. அவன் தனியாக இல்லை. அமலாவும் கமலாவும் அவனு டன் கூட இருந்தார்கள். குதிரை அவன் முன்னால் வந்ததும் அவன் காலடியில் படுத்துக்கொண்டது. சலாம் போடச் சொன்னால் மூடாபாடா யானை மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுமே, அது போல் செய்தது. அவனும் அமலாவும் கமலாவும் அதன் மேல் ஏறி உட்கார்ந்ததும் குதிரை ஓடத் தொடங்கியது. மணற்பரப்பைத் தாண்டிச் சமுத்திரத்தில் இறங்கி முழங்கால் மட்டத் தண்ணீருக்கு

வந்ததும் குதிரை மறுபடி மரமாகிவிட்டது, அசையவில்லை.

அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. மரக்குதிரை கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து ஆகாயத்தைத் தொட்டு விடும்போல் வளர்ந்துவிட்டது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு

350மேலே போய்விட்டது அது. அவர்களால் கீழே ஒன்றையும் பார்க்க முடியவில்லை. அவன் மேகத்தைப் பிய்த்துப் பிய்த்துத் தின்று பார்த்தான். ருசியாகத் தித்திப்பாக இருந்தது அது, திருவிழாவில் பஞ்சுபோன்ற மயிர் மிட்டாயைப் பிய்த்துப் பிய்த்துத் தின்பது போல் அவன் மேகத்தைப் பிய்த்துச் சுருட்டி அமலாவுக்கும் கமலாவுக்கும் கொடுத்தான். அவன் கீழே குனிந்து பார்த்தான். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் சாரிசாரியாகக் குதிரை யின் கால்களின் மேல் ஏறிக்கொண்டு வந்தார்கள், தங்களுக்குச் சொர்க்கத்தில் ஏற ஓர் ஏணி கிடைத்து விட்டாற்போல். அவனுக்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் கைக் கெட்டும் உயரத்தில் ஆகாயம். இன்னுங் கொஞ்சம் உயர்ந்தால் அவனுடைய தலை ஆகாயத்தைப் பிளந்து கொண்டு சொர்க்கத்துக்குள் எட்டிப் பார்க்கும். அப்போது அவன் தேவர்களின் ராஜ்யத்தை, அங்கே கார்த்திகேயன், பிள்ளையார், சிவபிரான் எல்லாரும் நடமாடு வதைப் பார்க்க முடியும். என்ன ஆச்சரியம்!

அவன் இப்படி நினைத்தபோதே குதிரை சிறுத்துக்கொண்டே வந்து விளையாட்டுப் பொம்மை மாதிரி ஆகிவிட்டது. அவர்கள் இந்தப் பொம்மைக் குதிரையை நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு மணலில் நடந்து வரும்போது, பைத்தியக்காரப் பெரியப்பா நாயைக் கூட்டிக் கொண்டு ஆற்றங்கரைக்குப் போவதைப் பார்க்கிறார்கள். திடீரென்று பெரியப்பா கத்துகிறார், "கேத்சோரத்சாலா!'' இத்துடன் சோனாவின் இனிய கனவு கலைந்துவிட்டது.

அவன் தலைக்கருகில் ஜன்னலில் வெயில் - சரத்கால வெயில் - தங்கமாகப் பளபளத்தது. கால்மாட்டிலும் வெயில். அவன் திடுக் கிட்டு எழுந்தான்.

அவனுக்கு முதலில் தான் எங்கிருக்கிறோம் என்றே புரியவில்லை, தான் தன் வீட்டில் படுக்கையில் படுத்திருப்பதாகத்தான் முதலில் நினைத்தான். பிறகு நினைவு வந்தது- இது ஆபீஸ் கட்டிடம். இது இரண்டாவது பெரியப்பாவின் படுக்கை. இப்போது அவன் கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டான். அமலா, கமலாவின் ஞாபகம் வந்தது அவனுக்கு. இப்போது அவர்கள் எங்கே ?

வெயில் ஏறியதும் அவன் அந்த அறையைவிட்டு வெளியே வந்தான். பெரியப்பாவைக் காணோம். இவ்வளவு பெரிய ஆபீஸ் கட்டிடத்தில் யாருமே இல்லை. எல்லாரும் ஆற்றங்கரைக்குப் போய் இருப்பார்கள். வாசலைக் கடந்ததும் வராந்தா. அதற்கப்பால் புல்வெளி. அப்புறம் குளத்தின் தென் கரையில் பெரிய மண்டபம்.

முந்தைய நாள் அவன் மண்டபத்தைப் பார்க்கவில்லை.

3515

.

நேற்று இரவு வெகு நேரத்துக்குப் பிறகே அவன் இங்கே வந்தான். அமலாவும் கமலாவும் அவனைப் பெரியப்பாவிடம் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போனார்கள். வீட்டின் வடக்குப் பக்கம் நின்றால் குளத்தின் தென்கரையில் மண்டபம் ஒன்று இருப்பதே தெரியாது. அவன் மொட்டை மாடியில் நின்றிருந்தபோது அமலாவும் கமலாவும் மண்டபத்தைப் பற்றியும், அதன் படியில் உள்ள பளிங்குக்கல் எருதைப் பற்றியும், அதன் கழுத்தில் போட்டிருக்கும் பூ மாலையைப் பற்றியும் அவனுக்குச் சொல்லியிருந்தார்கள். அந்த மொட்டை மாடி இருட்டு மர்மம் நிறைந்ததாக இப்போது அவனுக்குத் தோன்றியது. அவன் தூக்கத்திலிருந்து விழித்ததுமே பூஜை வாத்தியங்களின் இசை அவனுக்குக் கேட்டது.

குமாஸ்தா அர்ஜுன் ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண் டிருந்தான். ராம்சுந்தர் தோளில் தடியை வைத்துக் கொண்டு எங்கோ போய்க்கொண் டிருந்தான். லால்ட்டுவும் பல்ட்டு வும் எங்கே ? இந்த வீட்டுக்கு வந்தபிறகு அவன் இந்த இரண்டு தமையன்களையும் பார்ப்பதே இல்லை. அவர்கள் இன்று எங்கோ வேட்டைக்குப் போவதாகப் பேச்சு, அதிகாலையிலேயே வேட்டைக் குப் புறப்பட்டுப் போய்விட்டார்களோ, என்னவோ!

குளத்தின் மறுகரையில் யாரோ ஓர் ஆள் நிற்பது அவனுக்குத் தெரிந்தது. அவனுக்கு அந்த ஆளை அடையாளம் தெரிந்தது, ஆனால் தன் கண்களை நம்பமுடியவில்லை அவனால். உருவம் தெளிவாகத் தெரியவில்லை, உயரமாக, அசையாமல், சமுத்திரக்கரையில் நிற்கும் டிராய் நகரக் குதிரைப் போல், ஊரைப் பார்த்துக்கொண்டு நின்றது அந்த உருவம். அவனுடைய சொப்பனம் அப்படியே பலித்து வந்தது. அவன் நிற்கவில்லை ; வெறிபிடித்தவன் போல் வேகமாக ஓடினான்.

"சோனா, எங்கே போறே? உன் பெரியப்பா ஆத்துக்கு ஸ்நானம் பண்ணப் போயிருக்கார்" என்று குமாஸ்தா அர்ஜுன் கூறினான்,

சோனா அவனுடைய பேச்சைக் கேட்க நின்றால்தானே ? அவன் மைதானத்தைக் கடந்து, மான்களும் மயில்களும் தங்கும் பகுதியைக் கடந்து, தோப்பைத் தாண்டி, சவுக்கு மரங்களின் நிழலில் வந்து நின்றுகொண்டு தலை நிமிர்ந்தான் - அவன் கண்ட கனவு அப்படியே பலிக்கிறதா என்று பார்க்க.

அவனால் நம்பவே முடியவில்லை. இந்தப் பக்கத்தில் பல அபூர்வ, உள் நாட்டு வெளிநாட்டுப் பூச்செடிகள், மரங்கள்.... அவன் மரக் கிளைகளின் இடைவெளி வழியே பார்த்தான். கனவு அப்படியே பலித்துவிட்டது.

352முன்பு தெளிவாக இல்லாதது இப்போது, இங்கு வந்த பிறகு தெளிவாகத் தெரிந்தது. அவன் உற்சாகத்துடன் கூவிக்கொண்டே ஓடினான். "பெரிய...யப்பா பெரியப்பா ! நான் தான் சோனா! பெரியப்பா பெரியப்பா !"

என்ன உற்சாகம்! என்ன ஆனந்தம்! அவன் தலைதெறிக்க ஒடினான். அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் கிடைத்து விட்டார். அவருடைய நாய்கூட அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் வாலை ஆட்டியது. பெரியப்பா தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவருடைய கைகால்களில் செடிகள் கீறின காயங்கள். தண்ணீரில் ஊறி ஊறிக் கால்கள் வெளுத்துப் போய்விட்டன. அவர் தம் நாயைக் கூட்டிக்கொண்டு தனியாகக் கிளம்பி எங்கெங்கோ சுற்றிக் கொண்டே நிலத்திலும் தண்ணீரிலும் நடந்து எப்படியோ அங்கு

வந்து சேர்ந்துவிட்டார்.

சோனா அருகில் வந்ததும் நாய் கொஞ்சலாக உறுமியது. எவ்வளவு நாட்களாகி விட்டன, அது அவர்களுடைய வீட்டுக்கு வந்துசேர்ந்து ! யாரும் சீராட்டி வளர்க்காமலேயே அது வளர்ந்து வந்தது. வீட்டில் இருப்பவர்கள் தின்று மீந்த சாப்பாட்டை அது சாப்பிடும். வீட்டில் அது இருப்பதையே யாரும் கவனிப்பதில்லை. யாரும் அதைக் கொஞ்சுவதில்லை. அப்படிப்பட்ட இந்த நாய் சோனாவுக்கு மிக விலை உயர்ந்ததாகத் தோன்றியது. அவனுடைய சொந்தப் பொருள்கள் அவனுடைய பெரியப்பா, அந்த நாய் எல்லாம் அவனிடம் வந்து சேர்ந்துவிட்டன. இனிமேல் அவனுக்கு யாரிடமும் பயம் இல்லை.

டிராய் நகரத்துச் சிறுவர்கள் மரக்குதிரையை இழுத்துக்கொண்டு உற்சாகமாக நகரத்துக்குள் இழுத்துச் சென்றது போல் அவன் தன் பெரியப்பாவை இழுத்துக்கொண்டு போனான். இவ்வளவு தூரம் வந்த பிறகு அவருக்குச் சங்கோசம் வந்துவிட்டது போலும். அவருக்கு உள்ளே போக இஷ்டமில்லை. இவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்ததும் அவருக்கு அந்தக் கோட்டையின் நினைவு வந்துவிட்டது. பாலின் சொல்லுவாள், 'மணி, நீ நீலவர்ண 'டை' கட்டிக்கொள் ; வெள்ளை அல்லது ஆரஞ்சு நிற 'டை' கட்டிக்கொள்! நீ கறுப்பு 'டை' கட்டிக்கொண்டால் உன் தோற்றத்தில் ஒரு கடுமை தோன்றி விடுகிறது!' என்று.

தம்முடைய உடையும் தோற்றமும் இந்த மாளிகைக்குப் பொருந்தாது என்று நினைத்திருக்கலாம் அவர். அவர் நாற்புறமும் பார்த்துக்கொண்டு நின்றார். நீரைக் கடந்து வந்ததில் பாசியும் நீர்ச் செடிகளும் அவருடைய உடம்பில் ஒட்டிக்கொண் டிருந்தன. அவர் ஒரு ஜலதேவதை போலக் காட்சியளித்தார். நீர்ச்செடிகள் அவருடைய உடலில் முளைத்திருப்பது போலத் தோன்றின. சோனா

353

29அவரை இழுத்துக்கொண்டு போய்க் குளத்தின் படிக்கட்டில் உட்கார வைத்தான். அவன், கையில் தண்ணீர் ஏந்திக்கொண்டு வந்து அவர் மேல் ஒட்டியிருந்த பாசியையும் இலைகளையும் உடம்பிலிருந்து கழுவிவிட்டான். அவர் கல்லால் சமைத்த பதுமை போல் அசையாமல் உட்கார்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்துக்கொண் டிருந்தார். அவர் பதுமையல்ல, உயிருள்ள மனிதர் என்பது அவரு டைய கண்களைப் பார்த்தால்தான் தெரியும்.

குளத்தின் மறுகரையில் கமலா பிருந்தாவனியோடு பூஜைக்காகப் பூப்பறித்துக் கொண்டிருந்தாள். சோனா குதித்துக் குதித்துத் தண்ணீரில் இறங்குவதையும் பிறகு மேலே ஏறி வருவதையும் கவனித்தாள் அவள். படிக்கல்லில் ஒரு மனிதர் உட்கார்ந்திருந்தார், சோனா தண்ணீரால் அவருடைய உடம்பைத் துடைத்துவிட்டான். அவர்களுக்குப் பக்கத்தில் ஒரு நாய். அதுவும் சோனாவுடன் தண்ணீரில் இறங்கியது, அவனுடன் மேலே வந்தது.

கமலா மான்களும் மயில்களும் இருக்கும் இடங்களைத் தாண்டிப் புல்வெளியில் ஓடி அங்கு வந்தாள். சோனா முழங்காலிட்டு உட்கார்ந்து அந்த ஆளின் உடம்பிலிருந்து எதையோ அகற்றினான், பாசி, நீர்ச் செடிகளின் இலைகள். இந்த மனிதர் யார் ? அவள் ஆச்சரியத்துடன் அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டு அந்த நாயையும், கல் போல் அசையாமல் அமர்ந்திருக்கும் மனிதரையும் பார்த்தாள். ஒன்றும் பேசாமல் தன் வேலையிலேயே கண்ணாயிருந் தான் சோனா.

"சோனா இது யாரு ?" என்று வேறு வழியின்றிக் கமலாவே கேட்டாள்.

"என்னோட பெரியப்பா." ""உன் பெரியப்பாவா ?" "ஆமா, என்னோட மூத்த பெரியப்பா.'' "பேசமாட்டாரா?" ''மாட்டார்." "ஊமையா?" * இல்லே ." "பின்னே ஏன் பேசமாட்டார் ?" ''பேசுவார். ஆனா, "கேத்சோரத்சாலா!'' அப்படீன்னு மட்டுந்தான் சொல்லுவார்."

''வேறே ஒண்ணும் பேசமாட்டாரா?" "ஹம்." "அதென்ன பேச்சு, கேத்சோரத்சாலா ?"

354அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை சோனா, அவன் பெரியப்பா வின் உடலைச் சுத்தம் செய்துவிட்டு, "எழுந்திருங்க, பெரியப்பா !" என்றான்.

" இவர் ஏன் தண்ணியிலே நனைஞ்சிருக்கார் ?' ''பெரியப்பா நீஞ்சிண்டு வந்திருக்கார். அவரை ஒருத்தரும் கூட்டிக்கிண்டு வரல்லே. அவர் தானாவே நாயைக் கூட்டிக்கிண்டு வந்திருக்கார்" என்றான் சோனா.

"உன்னோட பெரியப்பா பைத்தியமா ?" என்று கமலா கேட்டாள். சோனாவுக்குக் கோபம் வந்துவிட்டது "பைத்தியம்னு யாரு சொல்றது ?"

''பின்னே ஏன் பேசமாட்டேங்கறார் ?" சோனாவுக்கு மிகவும் கோபம். தன் பெரியப்பாவை யாராவது பைத்தியமென்று சொன்னால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். அவன் கமலா இருக்குமிடத்திலிருந்து அவரை அழைத்துக்கொண்டு போய்விட விரும்பினான்.

"வாங்க, பெரியப்பா ! நான் சோனாவுக்கு அத்தை முறை. இல்லையா, சோனா?" என்றாள் கமலா.

இதைக் கேட்டுச் சோனாவுக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. ''ஆமா. பெரியப்பா! இது கமலா அத்தை " என்றான் அவன்.

மணீந்திர நாத் கமலாவைப் பார்த்தார். இந்தப் பெண்ணின் கண் கள் ஏன் நீலமாக இருக்கின்றன? அவர் முழங்காலிட்டு உட்கார்ந்தார். ஒரு பிரும்மாண்டமான ராட்சசன் ஒரு சிறு பொம்மை போன்ற பெண்ணைக் கைகளில் ஏந்தித் தம் கண்களுக்கருகில் கொண்டு வருவது போல் அவளைத் தூக்கினார். "பெண்ணே , நீ யார் ? உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே !'' என்றார்.

அடங்காப்பிடாரிப் பெண்ணான கமலாகூடப் பயந்து போய் விட்டாள். சோனாவுக்கு வேடிக்கையாக இருந்தது. முதலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கமலா அழ ஆரம்பித்துவிடுவாள் போல் இருந்தது. "கமலா. பயப்படாதே!'' என்று அவன் அவளைச் சமாதானம் செய்தான். பிறகு அவன் தன் பெரியப்பாவின் பக்கம் திரும்பிப் பார்த்தான். கோபத்துடன் சோனா அவரைப் பார்த்ததும் அவர் சாதுவாகிவிட்டார்: கமலாவைக் கீழே விட்டுவிட்டார். கமலா இப்போது ஓடிப் போயிருக்கலாம், ஆனால் சோனாவின் தைரியத்தைப் பார்த்ததும் அவளுக்குத் தன் பயங்கொள்ளித்தனத்தைக் குறித்து வெட்கம் ஏற்பட்டது. சோனா சற்றும் பயமின்றி அவரை இழுத்துக் கொண்டு போனான். அவ்வளவு பெரிய மனிதர் சோனாவிடம் அடங்கி நடப்பதைப் பார்த்துக் கமலாவுக்கும் பயம் தெளிந்துவிட்டது. அவள்

355அவருடைய இடக்கையைப் பிடித்துக்கொண்டாள். சோனா வலக் கையைப் பிடித்துக்கொண்டான். நாய் அவர்களுக்கு முன்னால் நடந்தது.

அந்த டிராய் நகரத்துக் குதிரையை இழுத்துக்கொண்டு அவர்கள் பூஜை மண்டபத்துக்குள் நுழைந்ததும் அங்கே பெரிய அமளி ஏற் பட்டது. அந்த ஆள், அந்தப் பைத்தியக்கார மனிதர்- மறுபடி இங்கே வந்திருக்கிறார் ! மணீந்திரநாத் அப்பாவிபோல் முகத்தை வைத்துக் கொண்டு துர்க்கையின் பதுமையைப் பார்த்தவாறு நின்றார், மாளிகையிலிருந்த சிறுவர், சிறுமியர், அங்கு வேலை பார்ப்பவர்கள், மாளிகையின் சிறிய எசமானர் உட்பட எல்லாரும் அங்கு வந்து விட்டார்கள். சிறிய எசமான் பூபேந்திர நாத்தைக் கூப்பிட ஆள் அனுப்பினார். "காரியஸ்தரைக் கூப்பிடுங்க! அவரோட அண்ணா வந்திருக்கார்னு சொல்லுங்க !" என்றார்.

சாதுவான பையனைப் போல் இப்போது துர்க்கையைப் பார்த்துக் கொண்டு நின்றார் மணீந்திரநாத். மேலே லஸ்தர் விளக்குகள்

தொங்கின.

"துர்க்கையம்மனுக்கு நமஸ்காரம் செய்யுங்க" என்றான் சோனா. மணீந்திரநாத் உடனே கீழேவிழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். அவருடைய கைகள் இரண்டும் முன்னால் நீட்டிக் கொண்டிருந்தன. இப்போது யாராலும் அவரைத் தூக்கமுடியாது. சிறுவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்துச் சிரித்தார்கள். இது சோனாவுக்குப் பிடிக்கவில்லை. அவன் அங்கிருந்தே நகர்ந்து போய் விட விரும்பினான். இரண்டாவது எசமான் - அமலா கமலாவின் தந்தை சிறுவர்களை அதட்டினார். ஜமீன் உத்யோகஸ்தர்கள் சிலர் அங்கு நின்றுகொண் டிருந்தார்கள். பாபுவுக்கு அவர்கள் எல்லாரையும் தெரியாது. தூரத்திலிருந்தெல்லாம் ஜமீன் காரியஸ்தர்களும் குமாஸ் தாக்களும் பூஜை சமயத்தில் அங்கே வந்து கூடுவார்கள். வரும்போது கரும்பு, வாழைப்பழம், பால், மீன் இப்படி அந்த அந்தப் பகுதியில் விசேஷமாகக் கிடைக்கும் பொருள்களைத் தங்கள் காணிக்கையாகக் கொண்டு வருவார்கள். பாபு அவர்களில் ஒருவரைக் கூப்பிட்டு, ''காரியஸ்த மாமா இன்னும் ஏன் வரலேன்னு பார்த்துக்கிட்டு

வாங்க!'' என்று கூறினார்.

மேலும் சாஷ்டாங்கமாகப் படுத்துக் கிடந்தார் மணீந்திர நாத். அவருடைய உடம்பு விறைத்தாற் போல் இருந்தது. எழுந்திருக்கச் சொன்னாலொழிய அவர் எழுந்திருக்க மாட்டாரென்று சோனாவுக்குப் புரிந்தது. அவன் அவருடைய காதுக்கருகில் போய், "நமஸ்காரம் பண்ணினது போதும், எழுந்திருங்க !'' என்றான்.

355இவ்வாறு சொல்லி அவன் அவருடைய கையைப் பற்றியதும் அவர் எழுந்துவிட்டார். அவருடைய ஈர உடையில் மண்ணும் சேறும் ஒட்டிக்கொண் டிருந்தன.

பூபேந்திரநாத் அங்கு வந்ததும் திகைத்துப் போய்விட்டார். தம்பி தம்மைப் பார்ப்பதைக் கவனித்த மணீந்திர நாத் சோகத்துடன் சோனாவின் பக்கம் திரும்பிப் பார்த்தார். "பார்த்தியா, சோனா! இவன் என்னை எப்படிப் பார்க்கறான், பாரு !''

ஊரிலிருந்து கிளம்பும்போது, இங்கே தம்பி பூபேந்திர நாத் இருக்கும் நினைவே இல்லை அவருக்கு. இப்போது அவர் பூபேந்திரநாத்திடம் மாட்டிக்கொண்டுவிட்டார். அவர் அங்கிருந்து நழுவிவிடப் பார்த்தார். அதற்குள் பூபேந்திர நாத் அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு விட்டார். அவரை விட்டுவிட்டால் எங்கே போய்விடுவாரோ என்ற பயத்தில் மணீந்திர நாத்தை இறுகப் பிடித்துக்கொண்டார் பூபேந்திர நாத். பிறகு எல்லாரையும் கூட்டம் போடாமல் நகர்ந்துபோய் விடும்படி சொன்னார். மணீந்திரநாத் எப்படி இவ்வளவு தூரம் பிரயாணம் செய்தார் என்று கேட்கவில்லை, 'நீந்தியே வந்திருப்பார். இவரால் என்னதான் செய்யமுடியாது!' என்று நினைத்தபோது, பூபேந்திர நாத்தின் மனம் துக்கத்தில் ஆழ்ந்தது. "அம்மா, இதுதான் உன் விருப்பமா?" என்று கேட்பது போல் அவர் துர்க்கையம்மனைப் பார்த்தார்.

இரண்டு சகோதரர்களையும் பார்த்துக்கொண் டிருந்த துர்க்கையின் அகன்ற கண்களில் புன்சிரிப்பு தவழ்ந்தது. அங்கிருந்து சீக்கிரம் நகர்ந்து போக விரும்பினார் பூபேந்திர நாத். ஏனென்றால் பூஜை மண்டபத்தின் மேல்மாடியின் பால்கனியின் மறைவிலிருந்துகொண்டு நூற்றுக்கணக்கான கண்கள் அவர்களைப் பார்த்துக்கொண் டிருப்பது அவருக்குத் தெரியும். அப்படிப் பார்க்கும் பெண் கள் மணீந்திரநாத் தின் அழகான, வாட்டசாட்டமான, கம்பீரம் நிறைந்த தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபப்படுவார்கள். ஆகா, என்ன அழகு ! என்ன சிவப்பு! குழந்தை மாதிரி கள்ளங்கபடு இல்லாத முகம்! சமுத்திரத்தில் வழி தவறிவிட்ட மாலுமியைக் காப்பிக்கொள்ளும் சோகம்போல மந்திர நாத்தின் கண்களிலும் சோகம் நிறைந்திருந்தது. இதையெல்லாம் கவனித்த பூபேந்திரநாத்தின் கண்களில் நீர் சுரந்தது.

357மட்டன் காலையிலிருந்தே முகத்தைத் தூக்கிக்கொண்டு உட் கார்ந்திருந்தாள். நீல நிற ஆகாயத்தைப் பார்த்ததும், அதில் சந்திர னைப் பார்த்ததும் சரத்காலம் வந்துவிட்டது என்று தெரிந்துவிடும் அவளுக்கு. இது துர்க்கா பூஜை சமயம். இங்கே தர்காவில் உட்கார்ந் திருக்கும் போதுகூட இந்த விஷயம் அவளுக்குத் தெரிந்துவிடும். பார்க்கப் போனால் இதைத் தர்க்கா என்று சொல்லக் கூடாது. ஒரு பெருங்காட்டில் வனவாசியாக வாழ்ந்தாள் ஜோட்டன், அவள் தன் பிறந்த வீட்டுக்குப் போய் இரண்டு வருடங்கள் - ஏன், அதற்கு மேலேகூட ஆகிவிட்டன, பக்கிரி சாய்பு அவளை அழைத்துக் கொண்டு போகவில்லை.

சரத்காலம் வந்ததும் ஆகாயத்தில் சந்திரன் பெரிதாகக் காட்சி யளித்து, காடுபூராவும் நிலவைப் பரப்பினான். ஆகாயத்தைப் பார்த்தாலே மனம் என்னவோ செய்யும். பிரதாப் சந்தாவின் வீட்டுத் துர்க்கையம்மன், அம்மனின் மூக்கில் மூக்குத்தி எல்லாமே அவள் நினைவுக்கு வந்தன. நினைவுக்கு வந்ததுமே மனத்தில் ஏக்கம் பிறந்தது. எவ்வளவு தடவை பக்கிரிசாயபுவிடம் கேட்டிருக்கிறாள், "என்னை எங்க ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க" என்று. அந்த மனிதர் அதைக் காதிலேயே போட்டுக்கொள்வதில்லை.

நாளுக்கு நாள் அவளுடைய உடல் பலவீனமாகி வந்தது. அவளால் மறுபடி பிறந்த வீட்டுக்குத் திரும்பிப் போக முடியுமா என்பதே சந்தேகந்தான். அந்த மனிதருக்கு இந்தத் தர்கா மூலையிலிருந்த குடிசைதான் சொர்க்கம். அவர் குடிசைக்குள் எப்போதும் உட்கார்ந்து கொண்டு ஹக்கா பிடிப்பார், உருதுப் பாட்டுக்கள் பாடுவார். அந்தப் பாட்டுக்களின் பொருள் கொஞ்சமும் புரியாது ஜோட்டனுக்கு. அவர் அவற்றை வங்காளியில் மொழி பெயர்த்தால் ஜோட்டனுக்குச் சிரிப்பு வரும். 'ஏன் சிரிக்கறே, இப்படி ?" "எங்கே சிரிச்சேன் ?' "நீ சிரிக்கல்லே ?" "சரி, இனிமே சிரிக்கல்லே, சிரிப்பு வந்தாலும் சிரிக்கல்லே." அவள் முக ததை 'உம்' யென்று வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். "ஏன் ஒருமாதிரியா இருக்கே?'' என்று பக்கிரிசாயபு கேட்பார். ஜோட்டன் பதில் சொல்லமாட்டாள். "ஏன் பதில் சொல்லமாட்டேங்றே ?" ''என்ன பதில் சொல்லணும்?'' "என்ன மனசிலே இருக்கோ , அதைச் சொல்லறது.'' "என் ஊருக்குப் போகணுமின்னு தோணுது எனக்கு."

358''ஊருக்குப் போனா எங்கே தங்குவே? உன்னோட தம்பிதான் வேறே கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கானே ! புதுப் பெண்டாட்டி உன்னை லட்சியம் பண்ணுவாளா ?"

"பண்ணாமே என்ன ? நல்லாப் பண்ணுவா.” "ரொம்பத் தூரமாச்சே! அவ்வளவு தூரம் படகை ஓட்டிக்கிட்டுப் போக முடியுமா என்னாலே ?"

"நானும் துடுப்பு வலிச்சு உதவி செய்யறேனே.'' "யாராவது பார்த்தா என்ன சொல்வாங்க ?'' என்று கேட்டுவிட்டு ஏதோ நினைவிலாழ்வார் பக்கிரி சாயபு. அவருக்கு வயிற்றில் ஏதோ வேதனை.

சரத்காலமான தால் காட்டிலும் புதர்களிலும் புழுக்களும் பூச்சி களும் பெருகிவிட்டன. சரத்காலமானதால் தண்ணீரிலிருந்து செடி கொடிகள் அழுகிய நாற்றம் வெளிப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், காடுகள் இவற்றிலிருந்து தண்ணீர் இறங்க ஆரம்பித்ததும் அதில் இவ்வளவு காலம் மூழ்கிக் கிடந்த செடிகள், இலைகள் எல்லாம் அழுகத் தொடங்கும். தர்காவின் நாற்புறமும் செடிகொடிகளும் பாசி கோரைகளும் காடாக மண்டிக் கிடந்தன, வெளியே போக வழி கூட இல்லை.

தர்காவுக்கு வருவதானால் படகைத் தள்ளிக்கொண்டு வர வேணடும். தர்காவின் கிழக்குப் பக்கத்தில் மேக்னா ஆறு ஓடுகிறது, மேக்னாவின் கரையில் இந்தக் காடு நடுநிசியில் நிசப்தமாக இருக்கிறது, பூச்சிகள் எழுப்பும் ஒலிகூடப் பயத்தைத் தருவதாக இருக்கிறது நாற்புறமும் பெரிய பெரிய பூண்டுச் செடிகள் ; அரச மரம், அதற்குக் கீழே - ஆயிரக்கணக்கான வருடங்களாக அந்தப் பகுதியில் உபயோகத்திலிருக்கும் இடுகாடு. ஓர் இடத்தில் இடிந்த மசூதி, பாழடைந்த கிணறு. உடைந்த மேடை சிறுசிறு செங்கற் குவியல்கள்; சில மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டன. இரண்டடி எடுத்து வைத்தாலும் கால்களில் செடிகொடிகள் சுற்றிக்கொள்ளும். அவ்வளவு அடர்த்தியாகச் செடி கொடிகள் வளர்ந்திருந்தன அங்கே. வெயில் காலத்தில் ஓர் ஒற்றையடிப் பாதை தெரியும், மழைக்காலத் தில் யாரும் காட்டுக்குள் நுழைய விரும்புவதில்லை. தண்ணீர் ஓரத்தி லேயே பிணத்தைப் புதைத்துவிட்டுப் போய்விடுவார்கள். ஏதாவது பிணம் புதைக்கப்படும்போதுதான் அங்கே சில மனிதர்கள் கண்ணுக் குத் தெரிவார்கள். அங்கிருந்து இரண்டு கோச தூரத்தில் சில வீடுகள் உண்டு. முடிந்த வரையில் யாரும் இந்தப் பக்கம் வருவதில்லை. கஷ்டகாலத்தில் பக்கிரிசாபுவிடம் ஆசி பெற்றுப் போக யாராவது வருவார்கள். தூரத்திலிருந்து குரல் கொடுத்தால் பக்கிரிசாயபு புதர்களைத் தாண்டி வந்து, தேவைக்கேற்றவாறு மாலையோ,

359தாயத்தோ கொடுத்துவிட்டுப் போவார். மக்கள் ஒருவிதப் பயம் காரணமாகக் காட்டுக்குள் நுழைவதில்லை. பக்கத்தில் ஒரு நீண்ட கால்வாய், இறந்து போன மலைப்பாம்புபோல் இரவும் பகலும் அசையாமல் கிடந்தது அது. மழைக்காலம் வந்துவிட்டால் இந்தக் கால்வாய்க்கு உயிர்வந்துவிடும். ஆற்றின் போக்குக்கு எதிர்த் திசையில் செல்லும் சில படகுகள் கால்வாயைக் குறுக்கு வழியாகப் பயன்படுத்தும். அப்படிச் செல்லும் படகுகள் பயந்துகொண்டே அல்லாவின் பெயரையோ, பகவானின் பெயரையோ சொல்லிய வாறு எப்படியோ இந்த இடுகாட்டுப் பிரதேசத்தைக் கடக்கும். யாராவது இறந்துபோனால் அதுதான் பக்கிரிசாயபுவுக்குத் திருநாள். அப்போது அவருக்குக் காசு கிடைக்கும். சாப்பிட வெற்றிலை கிடைக்கும். அவர் மாலைகளையும் தாயத்துகளையும் கழுத்தில் அணிந்துகொண்டு, "அல்லா ஏக் ரகிமானே ரகீம்!" என்று சொல்லிய வாறே பிணத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்.

காட்டுக்குள் ஒளிந்து கொண்டு பலவிதச் சித்து விளையாட்டுக்கள் செய்து காட்டப் பிடிக்கும் அவருக்கு. இடுகாட்டுக்குப் பிணம் வந்து விட்டால் அவருக்கு உற்சாகம் பிறந்துவிடும். கால்வரையில் மறையும்படி நீண்ட கறுப்பு மேலங்கியை அணிந்துகொள்வார். கழுத்தில் சிவப்பு, நீலம், மஞ்சள் நிறப் பெரிய பெரிய மணிகள் கோத்த மாலைகளைப் போட்டுக்கொள்வார். அப்போது அவரைப் பார்த்தால் முஸ்லிம் சந்நியாசி போலவே இருக்கும். அவருடைய தலைமயிர் சுருண்டு நரைத்திருக்கும். கைகளை உயரத் தூக்குவார். அவருடைய குறுந்தாடியில் பூண்டு எண்ணெய் பளபளக்கும். முஸ்கிலாசான் விளக்கைக் கையிலேந்திக்கொண்டு யாரோ காட்டுக் குள் நடமாடுவதைப் பிணத்தைப் புதைக்க வருபவர்கள் பார்ப்பார் கள். அவர்கள் பயத்தால் மரமாகிவிடுவார்கள். அவருடைய திடீர்த் தோற்றம் அவர் தரையைப் பிளந்துகொண்டு கிளம்பினாரோ என்ற பிரமையை உண்டாக்கும், அவர்கள் தங்கள் இஷ்டப்படி அவருக்கு ஏதாவது காணிக்கை கொடுப்பார்கள். இறந்துபோன மனிதனுக்குச் சொந்தமாயிருந்த சில பொருள்களை அவரிடம் கொடுத்துவிட்டுப் போவார்கள். இதன் மூலந்தான் அவருடைய வாழ்க்கை நடந்து வந்தது.

ஜோட்டன் அப்போது குடிசைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதரின் சேஷ்டைகளைப் பார்த்துச் சிரிப்பாள், பகல்வேளை யில் அங்கியில் ஆயிரம் இடங்களில் ஒட்டுப் போட்டுத் தைத்துக் கொண்டே பக்கிரிசாயபு ஆடுவதையும் குதிப்பதையும் அவள் பார்த்து ரசிப்பாள். அப்போது அவரைப் பார்த்து யார் சொல்வார்கள். "அவர் ஒரு பரம சாது, உண்மையில் பயந்த சுபாவமுள்ளவர்' என்று?

360அப்படிப்பட்டவர் பிணத்தைப் புதைக்க யாராவது வந்தால் தன் ஜீவனோபாயத்துக்காக எப்படி மாறிவிடுகிறார்! தாம் ஒரு பெரிய துறவி என்று காட்டிக்கொள்வதற்காக அவர் பலவிதச் சித்து வேலை கள் செய்வார். இரவு நேரத்தில் மரஉச்சியில் நெருப்பை மூட்டி வைத்துக்கொண்டு மக்களைப் பயமுறுத்துவார்.

ஆகவே துர்க்காபூஜை சமயத்தில் ஜோட்டனின் மனத்தில் சோகம் தோன்றுவதை அவர் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. வருடம் முழுவதும் குடிசைக்குள்ளே படுத்துக்கிடப்பார் அவர். நினைத்தபோது வெளியே போய்ப் பூண்டு சேகரிப்பார். குடிசைப் பரணில் பூண்டு குவியலாகக் குவிந்து கிடக்கும். அவற்றைப் பெரிய பெரிய மண்பானைகளில் தண்ணீரில் போட்டு ஊறவைப்பார். நறுக்கின பூண்டு தண்ணீரில் ஊறினால் அதிலிருந்து ஒரு கொழ கொழ எண்ணெய் வரும். அந்த எண்ணெயில்தான் குடிசையில் விளக்கு எரியும், முஸ்கிலாசானின் விளக்கு எரியும். அவர் அந்த எண்ணெயைச் சிறு சிறு அகல்களில் ஊற்றி மரங்களின் உச்சியில் வைத்துவிடுவார். பிணத்தைப் புதைக்க மக்கள் வரும் போது அவர் அந்த விளக்குகளை ஏற்றிவிடுவார். இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்வார் அவர்.

ஜோட்டன் குலுங்க குலுங்கச் சிரிப்பாள். அவர் ஒரு பெரிய எலும்புத் துண்டு வைத்திருந்தார்; சில வேர்களைச் சேகரித்து வைத் திருந்தார். 'நான் கஷ்டப்படறவன், நான் நோயாளி !' என்று யாராவது தூரத்திலிருந்து குரல் கொடுத்தால் உடனே வேறு மனிதராகி விடுவார் பக்கிரிசாயபு. துறவிபோல் வேடம் போட்டுக் கொண்டு, அவர் மந்திரங்களை உச்சரித்தவாறு, வேர்கள், மூலிகைகள், மாலைகள், தாயத்துக்கள் எடுத்துக்கொண்டு வருவார். "அஞ் சேகால் அணா கொடு. தர்காவிலே படையல் செய்யறதுக்காக இந்தக் காசு!” என்பார்.

இப்படிப்பட்ட பக்கிரி சாயபுவுக்கு ஜோட்டனின் வேதனை எப்படித் தெரியும்? இந்துக் குடியிருப்புக்கு அருகில் பிறந்து வளர்ந்த ஜோட்டன், விசேஷ நாட்களில் இந்துக் குடும்பங்களுக்குப் பொரி பொரித்து, அவல் இடித்துத் தந்த ஜோட்டன், துர்க்காபூஜை சமயத்தில் 'உம்' மென்று முகத்தை வைத்துக்கொண்டு காட்டுக்குள் சுள்ளி பொறுக்கப் போவதன் காரணம் அவருக்கு எப்படித் தெரியும்?

சூரியன் உதிக்கலாமா என்று பார்த்துக்கொண்டிருந்தான். சூரியன் உதித்துவிட்டால் கூட அவனை வெகுநேரம் வரை பார்க்க முடியாதபடி அவ்வளவு அடர்த்தியாக மரங்கள் வளர்ந்திருந்தன. வெயில் கொஞ்சங் கொஞ்சமாக மரக்கிளைகளின்மேல் விழுந்தது. மரங்களும் செடிகொடிகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்

361டிருந்தன. ஜோட்டன் இருகைகளாலும் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு காட்டுக்குள் நுழைந்து போனாள். பல கல்லறைகளைக் கடந்து தண்ணீர்க் கரைக்கு வந்தாள். அப்பால் கோரைக்காடு. இப்போது ஆஸ்வின் - கார்த்திக் மாதமாக இருப்பதால் ஆமைகள் கரைக்கு வந்து முட்டையிடும். இங்கே ஊர் ஒன்றும் இல்லை, தானிய வயல்கள் இல்லை, இந்துக் குடியிருப்பு இல்லை. ஆகையால் கத்தியால் திருட்டுத்தனமாகக் கதிர்களை அறுக்க முடியாது. முட்டை களை எடுத்துக்கொண்டு டாகுர் வீட்டில் கொடுக்க முடியாது. முட்டைகளுக்குப் பதிலாக வெற்றிலைபாக்குக் கேட்டு வாங்கிக் கொள்ள முடியாது. இங்கு மக்களே கிடையாது. வெறும் மரங்களும் செடிகளுந்தான்.

பக்கிரிசாயபுவுக்குக் கேட்கும்படியாக உரக்க அழவேண்டும் போல் இருந்தது ஜோட்டனுக கு. பக்கிரிசாயபுவால் இப்போது பட கோட்ட முடியாது. அவர் நாளுக்கு நாள் வலுவிழந்து வந்தார். அவர் சக்கரவாகப் பறவையைப் பிடிப்பதற்காக ஒரு பொறி வைத்திருந்தார். அந்தப் பறவையின் நெஞ்சைச் சாப்பிட்டால் இழந்த பலத்தைத் திரும்பப் பெறலாம். அப்படித் திரும்பப் பெற்றுவிட்டால் அவர் ஜோட்டனை அவளுடைய பிறந்த வீட்டுக்கு அழைத்துப் போவார். இதை நினைக்கும்போதே ஜோட்டனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் இரண்டு கால்கள், வெள்ளை யாக! கோரைக்காட்டில் இரண்டு வெள்ளைக் கால்கள், துர்க்கை அம்மனின் கால்களைப் போல் அழகான கால்கள்! ஜோட்டனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. கால்களின் மேல் சூரியனின் ஒளி விழுந்தது. ஒரு வண்ணத்துப் பூச்சி மீண்டும் மீண்டும் அந்தக் கால்களின் மேல் உட்கார்ந்தது. கால்களின் கொலுசு ஒலித்தால் அந்த ஒலி காட்டுக்குள் மங்கி மறைந்துவிடு வதுபோல் ஏதோ ஒரு ஒலி ஜோட்டனின் நெஞ்சில் கிளம்பி அவளுள்ளே முழுகிவிட்டது. அந்தப் பாதங்கள் நிஜமாகவே துர்க்கையின் பாதங்கள் தாம் என்று நினைத்தாள் ஜோட்டன்.

சிவனுக்காக வனவாசம் செய்து கொண் டிருக்கும் கெளரி கோரைக் காட்டில் ஒளிந்திருக்கிறாளோ?

சைத்திரமாத விழாவில் கெளரி நடனமாடுவாளே, அந்த நடன முத்திரை அந்தப் பாதங்களில் தெரிந்தது. ஜோட்டன் மலர மலர அவற்றைப் பார்த்துக்கொண்டு நின்றாள். என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு. அவளுக்கு அந்தப் பாதங்களை அணுகத் துணிவு பிறக்கல்லை. அவை யுவதியின் பாதங்கள். பாக்கி உடலைக் கோரைப் புற்கள் மறைத்திருந்தன, கொலையாக இருக்கலாம். ஆனால்

362இந்த இடத்தில், பீரின் தர்காவில், யார் கொலை செய்யத் துணிந் திருப்பார்கள் ?

ஜோட்டன் நடுங்கும் கைகளுடன் கோரையை விலக்கிப் பார்த்த போது - பூஜைக்குப் பின் பிரதிமையைத் தண்ணீரில் விசர்ஜனம் செய்யும்போது பிரதிமை மல்லாந்து கிடக்குமே அதுபோல், மாலதி கைகால்களைப் பரப்பிக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. அசுரர் களை அழித்த அம்மன்! "அம்மா, நீயா? மாலதி! நீயா இப்படி விரித்த தலையுடன், ஆகாயத்தைப் பார்த்தவாறு, மல்லாந்து படுத்துக் கிடக்கிறாய்! உன்னை இங்கே கொண்டு வந்தது யார் ?"

ஜோட்டன் தாயைப் போல் மாலதியின் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அவளுடைய தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள். மாலதியின் நெஞ்சு, முகம் இவற்றைத் தடவிப் பார்த்தாள். உயிர் இருந்தது, நினைவுதான் இல்லை. தொப்பூழுக்குக் கீழே யாரோ இரவு முழுவதும் கடித்துக் குதறிவிட்டுப் போயிருக்கிறார் கள். செத்துவிட்டாள் என்று நினைத்து அவளை அங்கேயே எறிந்து விட்டுப் போயிருக்கிறார் கள். உடம்பில் பல இடங்களில் பல் பதிந் திருந்தது. இரத்தக் கரை.

ஜோட்டன் மேலும் தாமதிக்கவில்லை. பந்தயக் குதிரையைப் போல் வேகமாகக் காட்டினூடே ஓடிக்கொண்டே அவள் கூவினாள். "பக்கிரி சாயபு, இங்கே வாங்க. பீரோட தர் காவிலே என்ன அநியாயம் நடந்திருக்குன்னு வந்து பாருங்க! சீக்கிரம் வாங்க. கோரைக் காட்டிலே யாரோ துர்க்கையம்மனை விசர்ஜனம் பண்ணி யிருக்காங்க." ஜோட்டன் புயல் போல் குடிசைக்குள் நுழைந்து ஒரு புடைவையை எடுத்துக்கொண்டு பக்கிரிசாய புவிடம், " நீங்க என் பின்னாலேயே வாங்க'' என்று கூறி நடந்தாள்.

சற்றுத் தூரத்தில் அவரை நிறுத்தி வைத்துவிட்டு, "கண்ணுக்கு என்ன தெரியுது?'' என்று ஜோட்டன் கேட்டாள்.

“ரெண்டு பாதம்.'' "'யாரோட பாதம் மாதிரி ?'' “'துர்க்கையம்மனோட பாதம் மாதிரி.'' ''அப்ப நீங்க இங்கேயே நில்லுங்க!" என்று சொல்லிவிட்டு ஜோட்டன் முன்னால் போய் மாலதியின் உடலைப் புடைவையால் மூடினாள். பிறகு பக்கிரிசாயபுவை ஜாடையாய் அழைத்து, '' நீங்க தலைப்பக்கம் தூக்குங்க, நான் கால் பக்கம் தூக்கறேன்" என்றாள்,

இப்படித் தூக்கிச் செல்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. சற்றுத் தூரம் சென்று அவர்கள் மாலதியை ஒரு மர நிழலில் புல்லின் மேல் படுக்க வைத்தார்கள். சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு மறுபடியும் தூக்கிக்கொண்டு நடந்தார்கள்.

363பக்கிரிசாயபு சொன்னார்: "உன்னோட துர்க்கையம்மன் தர்காவுக்கே வந்துட்டா. இனிமே நீ ஊருக்குப் போவானேன் ?''

ஜோட்டனுக்கு மூச்சு வாங்கியதால் அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுடைய கைகள் ரத்தத்தாலோ அல்லது வேறொரு திரவத்தாலோ பிசுபிசுவென்று இருந்தன. அவள் புல்லாலும் இலை களாலும் தன் கைகளைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் மாலதி யைத் தூக்கிக்கொண்டாள். நடு நடுவே மாலதியின் புடைவை செடி கொடிகளில் சிக்கிக்கொண்டு விலகிக்கொண்டது, ஜோட்டன் பக்கிரிசாயபுவைப் பார்த்துவிட்டுச் சொன்னாள் " "இது நல்லா யில்லே. நீங்க இந்தப் பக்கம் பார்க்காதீங்க. அந்தப் பக்கம் பார்த் துக்கிட்டு வாங்க."

“நான் பக்கிரி, என் பார்வையிலே குத்தமில்லே." "என்ன இருந்தாலும் நீங்க ஆம்பிளை. மரஞ் செடிகளை, பட்சிகளைப் பார்த்துக்கிட்டு இருங்க."

''சரி' என்று சொல்லிவிட்டுப் பக்கிரிசாயபு கண்களை மூடிக் கொண்டார்.

''நான் என்ன சொன்னேன், நீங்க என்ன செய்யறீங்க ?'' என்று ஜோட்டன் கேட்டாள். "என்ன சொன்னே?" ''மரஞ்செடிகளை, பட்சிகளைப் பார்க்கச் சொன்னேன்." "அதுதானே பார்க்கறேன்.'' "கண்ணை மூடிக்கிட்டுப் பார்க்க முடியுமா ?" ''கண்ணைத் திறந்துகிட்டுப் பார்க்கறதைவிட மூடிக்கிட்டா இன்னும் நல்லாப் பார்க்க முடியும் என்னாலே,"

"அப்போ திறந்துக்கிட்டே இருங்க .'' ஜோட்டன் மாலதியைக் கூப்பிட்டாள், “'மாலதி, ஏ மாலதி ! கண் ணைத் திற. நீ எங்கே இருக்கேன்னு பாரு! பக்கிரிசாயபுகிட்டே இரூக்கே நீ. ஒரு தடவை கண்ணைத் திறந்து பாரு மாலதி, மாலதி !"

ஊஹம், மாலதிக்கு நினைவு இல்லை. ஜோட்டன் தண்ணீரை எடுத்து அவளுடைய முகத்தில் தெளித்தாள், நினைவு திரும்பவில்லை. இந்த இடத்தில் வெயில் இல்லை. பனி கூடக் கீழே புல்லின் மேல் விழாதபடி அவ்வளவு அடர்த்தியாக மரங்களும் செடிகளும் வளர்ந் திருந்தன. இன்னும் சற்றுத் தூரம் அவளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டால் அவர்களுடைய குடிசை வந்துவிடும். அங்கே போய் முதுகிலும் இடுப்பிலும் காலிலும் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தால் மாலதியின் வலி குறையும். காயங்களைத் துடைத்து ஒரு பூவின் சாற்றைப் பூண்டு எண்ணெயுடன் கலந்து காயங்களில் தடவினால் மாலதி கண்களைத் திறந்துவிடுவாள்.

364பக்கிரிசாயபு சற்றும் பதறவில்லை. இந்த அமைதியான இடு' காட்டுப் பிரதேசத்துக்குச் சாக்ஷாத் துர்க்கையம்மனே வந்திருக் கிறாள் என்ற நினைப்பு அவருக்கு. என்ன நேர்ந்தாலும் பதறக் கூடிய சுபாவம் அவருக்கு இல்லை. அவர் மாலதியைக் குடிசையில் கிடத்திவிட்டுத் தம் ஹக்காவைத் தேடினார்.

"இதுதான் உங்களுக்கு ஹக்கா பிடிக்கிற நேரமாக்கும்!" ''நீ வெந்நீர் போடு. அதுக்குள்ளே ஹூக்கா பிடிச்சுடறேன். ஹக்கா பிடிச்சாத்தான் முளை தெளிவா இருக்கும்."

ஹக்கா பிடித்தால்தான் மூளை தெளிவாக இருக்கும் என்பது வெறும் பேச்சுதான். என்ன ஆபத்து ஏற்பட்டாலும் மூளை கலங்காது பக்கிரி சாயபுவுக்கு,

நிதானமாக ஹக்கா பிடித்துக்கொண்டே, "என்ன, தண்ணி காஞ்சு போச்சா?" என்று கேட்டார்,

ஜோட்டனிடம் இருந்த சாமான்கள் நான்கு அடுக்குகள், ஒரு பித்தளைக் கெட்டில், ஓர் உடைந்த கண்ணாடி, இவைதான், பூண்டு ஊற வைப்பதற்காக நான்கு பெரிய பெரிய தொட்டிகள் இருந்தன. ஒரு தொட்டியும் காலி இல்லை. காலியாக இருந்தால் பக்கிரிசாயபு ஒரு தொட்டியில் தண்ணீர் கொண்டு வந்திருப்பார். ஜோட்டன் கெட்டிலில் தண்ணீர் எடுத்து வந்தாள். மழைக் காலமாதலால் தண்ணீர் வெகு அருகிலேயே இருந்தது.

அடுப்பில் தண்ணீர் காய்ந்ததும் ஜோட்டன், "நீங்க இந்தப் பக்கம் வராதீங்க!'' என்றாள்.

"ஏன் ?" ஹக்கா பிடித்துக்கொண்டே பக்கிரிசாயபு கேட்டார். ''மறுபடி கண்ணைத் திறந்துகிட்டு நீங்க பார்க்க வேணாமின்னுதான்." “ நீ மட்டுந்தான் துர்க்கையம்மனை நல்லாப் பார்க்கணுமாக்கும்!'' ஜோட்டன் அவருடைய பேச்சைப் பொருட்படுத்தவில்லை. பக்கிரிசாயபுவின் சுபாவம் அது. உண்மையிலேயே ஒழுக்கம் நிறைந்த, கள்ளங்கபடமற்ற மனிதர் அவர். இருந்தாலும் பேச்சுக்குச் சொன்னார், "நான் பக்கிரிசாயபுதானே! எனக்கு எல்லாம் ஒண்ணு தானே ! நான் பார்த்தால் என்ன?' என்று.

ஜோட்டன் மாலதியின் உடம்பை நன்றாக வெந்நீரால் கழுவி விட்டாள். எல்லாவற்றையும் துடைத்துவிட்டு அவளை மறுபடி விதவையாக வைத்திருக்க விரும்பினாள் ஜோட்டன். உலகத்தில் விரும்புவதெல்லாம் நடப்பதில்லை. எல்லாவற்றையும் விரும்பவும் கூடாது. மாலதிக்காக ஓர் அழகிய இளைஞனின் முகத்தை அடிக்கடி கற்பனை செய்துகொள்வாள் ஜோட்டன். எவ்வளவோ காலமாக மாலதியின் உடம்பு கடவுளுக்கு வரி கொடுப்பதில்லை, அந்த உடம்பு எவ்வளவு கஷ்டப்படும்!

365மாலதியின் உடலைக் கழுவி விடும்போது இவ்வாறெல்லாம் நினைத்தாள் ஜோட்டன். எவ்வளவு கட்டுமஸ்தான இளமை பூரிக் கும் உடம்பு! ஜோட்டன் கையால் மாலதியின் இடுப்பைப் பிடித்துவிட்டாள். அவளைக் குப்புற படுக்க வைத்து இடுப்பின் மேல் வெந்நீரை ஊற்றினாள். உடம்பெல்லாம் அமுக்கிவிட்டு இரவு முழுவதும் அதற்குச் செய்யப்பட்ட கொடுமையை அதிலிருந்து விரட்டிவிட முயன்றாள்.

அவளை ஒரு பெரிய குளத்தில் மிதக்க விட்டிருப்பது போலவும் உடம்பில் எதையோ தடவி விடுவதைப் போலவும் மாலதிக்குத் தோன்றியது. அன்பும் ஆதரவுமாக இரு கைகள்... ஆனால் கண்ணைத் திறந்து பார்க்கும் துணிவு ஏற்படவில்லை அவளுக்கு. கண்களைத் திறந்துவிட்டால் மறுபடி அந்த மனிதப் பிசாசுகளைப் பார்க்க நேருமோ என்ற பயம்! அவள் எழுந்து உட்கார்ந்தாள், ஓடிப் போகத் தயாராக.

''பக்கிரி சாயபு, இங்கே வாங்க! மாலதிக்கு நினைவு வந்திடுச்சு!" என்று ஜோட்டன் கூவினாள்.

மாலதி கண்களைத் திறந்து பார்த்தாள்; ஜூட்டி அவளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மாலதி ஏதோ சொல்ல வந்தாள், ஆனால் அவளிடமிருந்து வார்த்தைகள் வரவில்லை. எவ்வளவோ காலத்துக்குப் பிறகு - பாலைவனங்களைக் கடந்து - பாலைவனச் சோலை ஒன்றை அடைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது மாலதிக்கு. அவள் மறுபடி நினைவிழந்தாள்.

''பாவம், வயிறு ஒட்டிக் கிடக்கு!'' என்று ஜோட்டன் பக்கிரிசாயபு விடம் சொன்னாள்,

“சாப்பிட என்ன கொடுப்பே?" "கொஞ்சம் பால் கொண்டு வாங்க. காய்ச்சிக் கொடுத்துப் பார்ப் போம்.''

பக்கிரிசாயபு தாமதிக்கவில்லை. ஹூக்கா பிடித்த பிறகு எவ்வ ளவோ கேள்விகள் தோன்றின அவர் மனத்தில். இந்த யுவதியை இங்கே கொண்டுவந்து போட்டவர்கள் யார்? அவர்கள் எவ்வளவு பேர் ? எவ்வளவோ சந்தேகங்கள், பிரச்னைகள்... மாலதி வீட்டுக்குத் திரும்பிப் போவாளா? போலீசின் தொந்தரவும் வரலாம்.

பக்கிரிசாயபு எவ்வளவோ காலமாக இங்கே வசித்து வருகிறார். இத்தகைய சம்பவம் ஒன்று கூட இதுவரை நிகழ்ந்ததில்லை. ஆனால் ஒரு தடவை இங்கே ஒரு சந்நியாசி வந்தான். கூடவே ஒரு பைரவி - பெண் துறவி - இருந்தாள். சீடர்களின் விருந்தோம்பலில் பொழுது கொஞ்ச காலம் சந்தோஷமாகக் கழிந்தது.

366கடைசியில் பைரவி திலக்சாந்துடன் சேர்ந்துகொண்டு விட்டாள். பைரவியாக வந்தவள் பத்மதீகியின் சிறிய ஜமீந்தாரின் பட்டமகிஷி யாக ஆகிவிட்டாள். சந்நியாசி ஒரு பெரிய மரத்தின் உச்சாணிக் கிளையில் தூக்குப் போட்டுக்கொண்டு உயிரை விட்டான். நல்லவேளை, சிறிய ஜமீந்தார் பக்கபலமாக இருந்ததால் பக்கிரி சாயபு போலீசிட மிருந்து தப்பிக்கொண்டார். ஆனால் இப்போது ....? பயந்துபோய் விட்டார் பக்கிரி சாயபு. ஆனால் வாயைத் திறந்து எதுவும் சொல்ல வில்லை. அவருடைய இரண்டு ஆடுகளிடமிருந்து பால் கறக்கத் தண்ணீரில் இறங்கிப் போனார்.

ஜோட்டன் மாலதியை மடியின்மேல் வைத்துக்கொண்டு உட்கார்ந் திருந்தாள். காட்டுக்குள் சிட்டுக்குருவி கூவியது. கீழே ஒரே தண்ணீர், நாணல் காடு. கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை நாணல், காற்றில் அசைந்தது. சரத்கால வெயில் பறவைகளைப் போல் பறந்துவந்து இங்குமங்கும் குதித்து விளையாடியது. தண்ணீரின் மேலும் காற்று மெதுவாக வீசியது. விதவிதமான சிவப்புநிற , நீலநிறப் பூச்சிகள் பறந்தன. விதவிதமான பூச்சிகளின் ஒலிகள் அவளுடைய காதில் விழுந்தன. வெகு நாட்களுக்கு முன் அவளுடைய பெரிய பிள்ளை இறந்து போய்விட்டான். இந்த இடு காட்டிலேயே கல்லுக்கடியில் கிடக்கிறான் அவன். மண்ணைத் தோண்டினால் வெளியே வருவான் அவன். ஜோட்டன் தன் துக்கங் களை மறந்துவிட்டு மாலதியின் முகத்தைத் தாய்போல் அன்புடன் வருடினாள். தலைமயிரைத் தடவிக் கொடுத்தாள். பாசம் காரணமாக அவளுடைய கண்களில் நீர் வந்துவிட்டது.

மணீந்திரநாத் அந்த மாளிகைக்குள் நுழைந்ததுமே அநேக மாகத் தம் சுயநிலைக்கு வந்துவிட்டார். அவர் சோனாவுடன் ஆபீஸ் கட்டிடத்து வாசலில் உலவிக்கொண் டிருந்தார். பூபேந்திரநாத் அவருக்குத் தம் பெட்டியிலிருந்து ஆடைகள் எடுத்துக் கொடுத் திருந்தார். ஜிப்பாவைத் தாமே அவருக்குப் போட்டுவிட்டிருந்தார், மணீந்திரநாத் பூபேந்திரநாத்தைவிட உயரமாகவும் பருமனாகவும் இருந்ததால் பூபேந்திர நாத்தின் ஆடைகள் அவருக்குக் குட்டை யாகத்தான் இருந்தன. அவரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ராம்பிரசாத் ஏற்றுக்கொண் டிருந்தான். அவர் திடீரென்று தன்னந்

367தனியாக எங்காவது போய்விடாமலிருக்க இந்த ஏற்பாடு. இந்த ஏற்பாட்டுக்கு அவசியமே இல்லை. மணீந்திரநாத் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை என்பதைத் தவிர, வேறு எவ்விதக் கோளாறும், அவரிடம் காணப்படவில்லை. அவர் எங்கோ வெளியூருக்குப் போய் விட்டுத் தம் ஊருக்குத் திரும்பி வந்திருப்பது போல் இயற்கை யாக நடந்துகொண்டார். சோனாவின் கையைப் பிடித்துக்கொண்டு சுற்றுவதைத் தவிர வேறு எந்த விருப்பமும் அவருக்கு இல்லை என்று தோன்றியது.

திருவிழா நடைபெறும் வீடு. வீட்டுக்கு விருந்தாளிகளும் உறவினர்களும் வந்தவண்ணமாக இருந்தார்கள். படகுத் துறையில் நிறையப் படகுகள் நின்றன. தம்பட்டங்களின் ஒலி தண்ணீரில் மிதந்து சென்றது. சோனா தன் பெரியப்பாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நாட்டிய மண்டபத்தைத் தாண்டிப் போனான். கமலாவைத் தேடிக்கொண் டிருந்தான் அவன். கமலா எங்கே? இவ்வளவு பெரிய வீட்டில் அவளைக் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். அவன் பெரியப்பாவுக்கு மயிலைக் காட்டப் போனான். ஜமீந்தார் விட்டில் ஒரு சின்னஞ் சிறிய மிருகக்காட்சிசாலை வைத் திருந்தார். இரண்டு சிறிய புலிகள், மான்கள், மயில்கள், ஆமைகள் முதலானவை இருந்தன அதில், பெரியப்பாவுக்கு அவற்றை யெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்போது கமலாவும் இருந்தால் நன்றாக இருக்கும். கமலா அவனுடைய தோழி. அவளுடன் எப்போதும் கூடவே இருக்கவேண்டுமென்று சோனாவுக்குத் தோன்றியது.

அவன் நாற்புறமும் கமலாவைத் தேடினான். அவர்கள் வராந்தா வையும், பல விசாலமான அறைகளையும் தாண்டிச் சென்றார்கள். அவர்களுக்கு அறிமுகமில்லாத பல மனிதர்களைக் கடந்து போனார் கள். சோனா முன்னால் போக, பெரியப்பா அவனைத் தொடர்ந்தார்.

தலைக்கு மேல் லஸ்தர் விளக்கு. ஊமத்தம் பூப் போன்ற அதன் கண்ணாடிக்குள் ஒரு சிட்டுக்குருவி தன் சிறகுகளைப் பட படவென்று அடித்துக் கொண்டு பறந்தது. மணி பத்து அடித்தது. பெரிய அண்ணாவும் இரண்டாவது அண்ணாவும் பெரிய ஜமீந் தாரின் இரண்டாவது பிள்ளையோடு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வாத்து வேட்டையாட ஏரிகரைக்குப் போய்விட்டார்கள்.

சோனா எவ்வளவு தேடியும் கமலாவைக் காணோம். அவன் பெரியப் பாவை இழுத்துக்கொண்டு குளத்தங்கரைக்கு வந்தான். அவன் அவரிடம் சொல்ல விரும்பினான் : 'நாம் ஒரு புது இடத்துக்கு வந்திருக்கோம். சீதலக்ஷா நதி, மணல் படுகையிலே நாணல் காடு ; குளத்தங்கரையிலே சிறுத்தை, மயில், மான் எல்லாம் இருக்கு.

368தூரத்திலே யானை லாயம். ஆற்றங்கரையிலே பனைமரக் காடு. இன்னும் சிறிது தூரம் போனால் ஜமீந்தாரின் பங்காளிகளோட துர்க்கா பூஜை உற்சவம்.

"இதோ பாருங்க, இதுதான் மயில்!'' பெரியப்பாவுடன் மயில் கூண்டுக்கு அருகில் உட்காரலாமா என்று யோசித்துக்கொண் டிருந்தபோது குளத்தங்கரை வழியே சந்திர நாத் வேகமாக நடந்து வருவதைக் கவனித்தான். தந்தையின் பார்வையிலிருந்து தப்பு வதற்காக அவன் தன் பெரியப்பாவுக்குப் பின்னால் மறைந்து கொண்டான். சந்திர நாத் வரிவசூல் விஷயமாக வெளியூர் போய்

விட்டு இப்போதுதான் படகில் திரும்பியிருக்கிறார்.

சோனா தான் மிகவும் அநுபவமுள்ளவன்போல் பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் எல்லா இடங்களையும் காட்டி னான். "இது ஆனந்தமயி காளி கோவில், இதுதான் கடைத்தெரு, சந்தைப்பேட்டை... இங்கேதான் டைனமோ இருக்கிறது. ராத்திரி இதிலிருந்து ஒரு விசித்திர சப்தம் வரும்,''

டைனமோ இருக்கும் அறைக்குள் பெரியப்பாவைக் கூட்டிச் சென்று காட்ட அவனுக்கு ஆசைதான். ஆனால் தந்தையைக் கண்ட தும் அவனுக்குப் பயம் வந்துவிட்டது.

வெளியூரிலிருந்து திரும்பியதுமே சந்திர நாத் கேள்விப்பட்டார், சோனா பூஜை பார்க்க வந்திருக்கிறான் என்று. சோனாவைப் பார்க்கத் துடித்தார் அவர். குளத்தங்கரைக்கு வந்ததும் மயில் கூண்டுக்குப் பக்கத்தில் பெரியண்ணா மணீந்திர நாத்தைப் பார்த்தார். அவரைப் பார்த்ததும் முதலில் ஆச்சர்யமாக இருந்தது சந்திர நாத்துக்கு, 'இந்தப் பைத்தியக்கார மனிதர் தனியாக இங்கே எப்படி வந்தார் ? யாருடன் வந்தார் ? சோனா மட்டுந்தானே வந்திருப்பதாக இரண் டாவது அண்ணா செய்தி அனுப்பியிருந்தார்!' பெரியண்ணாவும் வந்திருப்பார் என்று எதிர்பார்க்கவேயில்லை சந்திர நாத். அவர் பெரியண்ணாவுக்கு அருகில் வந்தார். அருகில் வந்ததும் சோனா பெரியண்ணாவைக் கட்டிக்கொண் டிருப்பதைக் கண்டார்.

''சோனா, நீயா?" "ஆமா, பெரியப்பாவுக்கு மயிலைக் காட்டக் கூட்டிக்கிண்டு வந்தேன்."

''லால்ட்டு, பல்ட்டு எங்கே ?" ''அவங்க பறவை வேட்டைக்குப் போயிருக்காங்க." பாபுக்களின் பிள்ளைகள் பூஜை விடுமுறையில் பட்டணத்தி லிருந்து வருவார்கள் ; பறவை வேட்டையாடிக்' களிப்பார்கள். சோனாவைக் கண்டதும் தந்தையின் உள்ளத்தில் பரிவு சுரந்தது. இந்தப் பையனுக்குத் தன் தாயின் முகஜாடை அப்படியே வாய்த்

369

24திருக்கிறது. இப்போது அவள் தூரத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெரிய குடும்பத்துக்காக உழைத்துக்கொண் டிருக்கிறாள். அவளுடைய மென்மையான முகம் சந்திரநாத்தின் மனக்கண்ணில் தோன்றியது. அவர் சோனாவை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு கொஞ்ச விரும்பி “வா, இங்கே , எங்கிட்டே !'' என்றார்.

சோனா பெரியப்பாவை இன்னும் இறுகக் கட்டிக்கொண்டான். தந்தை தன்னைக் கொஞ்சுவதை அவன் விரும்பவில்லை. அவனுக்குப் பெரியப்பாதான் தந்தையைவிட மிகவும் நெருங்கியவர். அவன் தன் தந்தையுடன் அதிகம் பழகியது கிடையாது. அவர் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார். அதுவும் பெரும்பாலும் இரவு நேரத்தில் அவர் வருவது சோனாவுக்குத் தெரியாது.

விடியற் காலையில் அவன் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது பக்கத்தில் அம்மா இருக்கமாட்டாள். சந்திர நாத் அவனை மார்போடு அனைத்துக்கொண்டு படுத்திருப்பார். அவனுக்குத் தெரிந்துவிடும், அப்பா வந்திருக்கார் வெளியூரிலிருந்து என்று.

பருவத்துக்கேற்றபடி சாமான்கள் கொண்டுவந்திருப்பார்; கரும்பு, அன்னாசிப்பழம் என்று. சோனா சாதுவாகப் படுத்துக்கொண் டிருப் பான். அப்போது அவர் அவனிடம் எவ்வளவோ பேசுவார். "இப்போ எழுந்திருக்கணும். கைகால் முகத்தைக் கழுவிக்கிண்டு படிக்க உட்காரணும். எழுதப் படிக்கக் கத்துண்டா அவன் வண்டி யிலே சவாரி பண்ணலாம், குதிரை மேலே சவாரி பண்ணலாம்." சம்ஸ்கிருதச் சுலோகங்கள், தர்மத்தைப் பற்றிய பேச்சு, சூரிய ஸ்தோத்திரம் இதெல்லாம் அவர் சொல்லுவார். அவனிடம் இந்த உலகத்தைப் பற்றி, மரங்கள் செடிகளைப் பற்றி, ஸோனாலிபாலி ஆறு, அதன் கரையில் மணல்வெளி, இவையெல்லாம் சேர்ந்த தாய்நாடு இவற்றைப் பற்றி, தாய், பெரியவர்கள் இவர்களிடம் அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி... இப்படிப் பேசிக் கொண்டே போவார். அப்போது அவனுக்குத் தோன்றும், 'அப்பா கிட்டே அலாவுதீனின் விளக்கு இருக்கு, அவன் என்ன கேட்டாலும் அதைக் கொண்டுவந்து கொடுக்க அவரால் முடியும்' என்று தன் தந்தையை ஒரு மாயஜாலக்காரராகவே கருதினான் சோனா.

சந்திரநாத் சோனாவுடன் மட்டுமே பேசினார், மணீந்திர நாத்துடன் பேசவில்லை. இதனால் மணீந்திரநாத்துக்குக் கோபம் வந்தது. இதை உணர்ந்த சந்திர நாத் அண்ணனைக் கேட்டார். "உங்க உடம்பு

எப்படி இருக்கு ? அண்ணி சௌக்கியமா ?"

370இந்தக் கேள்விகள் கேட்பதில் அர்த்தமில்லைதான். ஆனால் இந்த மாதிரி இடத்தில் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளாவிட்டால்

அவ்வளவு பெரிய மனிதருக்கு அவமரியாதையாகிவிடும்.

பிறகு சந்திரநாத் சோனாவிடம், "பெரியப்பாவை உள்ளே கூட்டிக் கிண்டு போ! அவர் எங்கேயாவது ஓட ஆரம்பிச்சார்னா உன்னாலே பிடிக்க முடியாது" என்றார்.

சோனா பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஆபீஸ் கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். சந்திர நாத் போகும் வழியில் அவனைக் கேட்டார், "நீ அம்மாவை விட்டுட்டு வந்ததிலே அவளுக்குக் கஷ்டமா இல்லையா?'' என்று.

"இல்லையே, அம்மாதானே என்னைப் பூஜை பார்க்கப் போகச் சொன்னா!"

சந்திர நாத் பிள்ளையின் தலையை வருடியவாறே, "ராத்திரி வேளை யிலே அழக்கூடாது" என்றார்.

சோனா மெளன மாக இருந்தான். பெரியப்பா அவனுக்கருகில் அசையாமல் நின்றுகொண் டிருந்தார். அவருக்கு இப்போதே வீட்டுக்குள் போக விருப்பம் இல்லை. சோனா இன்னும் வெயிலில் நின்றுகொண் டிருக்காமல் வீட்டுக்குள் போகவேண்டுமென்று விரும்பினார் சந்திர நாத்.

வெயில் ஏறிக்கொண் டிருந்தது. இந்த வெயிலில் அலைந்தால் 'சோனாவுக்கு உடம்பு கெட்டுப் போகலாம். சோனாவைப் பார்த்ததும் அவருக்கு தம் மனைவியின் நினைவு வந்தது. அவர் ஊரை விட்டு வந்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் பூஜைக் காலத்தில் ஊருக் குப் போக முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும், சோனாவின் முகத்தைப் பார்த்த பிறகு ஊருக்குப் போகத் துடித்தது சந்திர நாத்தின் மனம். இப்போது மழைக் காலமானதால் போவது அவ் வளவு சுலபமல்ல ; போவதென்றால் படகில் தான் போகவேண்டும். கோடைக் காலமாயிருந்தால், வரிவசூலுக்காக வெளியூர் போவதாகச் சொல்லிவிட்டு மூன்று நாள் வேலையை ஒரே நாளில் முடித்துக் கொண்டு, பாக்கி இரண்டு நாட்களைத் திருட்டுத்தனமாகச் சொந்த ஊரில் கழித்துவிட்டு வரலாம். விடுமுறை எடுத்துக்கொள்ள வேண் டிய அவசியமே இல்லை. எசமானர் விரும்பினால் இஷ்டப்பட்டபடி விடுமுறையும் கிடைக்கும். ஆனால் சில சமயம் சேர்ந்தார்போல் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவைகூட விடுமுறை கிடைக்காமல் போவதும் உண்டு. பூபேந்திர நாத் தம் தம்பியின் ஆசையைப் புரிந்து கொண்டு எசமானரிடம் சிபாரிசு செய்து அவருக்கு விடுமுறை வாங்கித் தருவார்.

371சந்திரநாத் வரிவசூலுக்குப் போய்விட்டு நடுவில் ஊர் திரும்பும் போது இரவு வெகுநேரமாகிவிடும். அநேகமாக அர்த்தராத்திரி ஆகிவிடும். வரிவசூலை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடப்பார் சந்திரநாத். பத்துக் கோச தூரமும் நடந்தே வருவார். நடுராத்திரியில் தாழ்ப்பாள் சங்கிலியின் அரவம் கேட்டால் தனமாமிக்குப் புரிந்துவிடும், மனிதருக்கு இனியும் தனியாக இருக்க முடியவில்லை, வந்துவிட்டார் என்று. அவளும் எவ்வளவோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறாள். ஏனென்றால் சந்திர நாத் எப்போது வருவார் என்று அவளுக்குத் தெரியாது. கதவுத் தாழ்ப்பாள் அசைக்கப்படும் சப்தம் கேட்டதும் அவளுடைய நெஞ்சு மகிழ்ச்சியில் குதிக்கும். தனமாமி சப்தம் செய்யாமல் திருட்டுத்தனமாகக் கதவைத் திறப்பாள்.

சோனா எழுந்துவிட்டால் அப்பாவைப் பார்த்துவிட்டு அவரைக் கேள்விகளால் துளைப்பான். "எனக்கு என்ன வாங்கிக்கிண்டு வந்திருக்கீங்க ?" என்றெல்லாம் கேட்பான். பலகைக் கட்டிலில் படுத்திருக்கும் லால்ட்டு எழுந்து வந்து அப்பாவுக்குப் பக்கத்தில் படுத்துக்கொள்ள அடம் பிடிப்பான்.

குளத்தங்கரையில் நடந்துகொண் டிருந்த சந்திரநாத் நினைத்தார், 'இப்போது அவள் துறையில் பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டே தன்னை மறந்துபோய்விடுவாள்' என்று. தூரத்தில் படகுத் துடுப்பு வலிக்கப்படும் அரவம் கேட்டால் காதை ஊன்றிக் கேட்பாள் அவள். அவளுடையவர் படகில் வந்துகொண் டிருக்கிறார் என்று நினைப்பாள்.

அவளாலும் பிரிவைத் தாங்க முடியாதுதான். இரவில் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டு விழித்திருப்பாள் அவள். தாழ்ப்பாள் ஆட்டப்படும் ஒலி கேட்டால், அவள் கதவைத் திறப் பாள். அவளுடைய கணவர் வெளியே நின்றுகொண் டிருப்பார்!

நல்ல கட்டுமஸ்தான தேகம், முரட்டு மீசை, அகன்ற கண்கள். அவளுக்குரியவர் வேலையை விட்டுவிட்டு அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்துவிட்டார்! அவள் அவருக்குக் கைகால் கழுவத் தண்ணீரும், துடைத்துக் கொள்ளத் துண்டும் கொடுத்துவிட்டு, "என்ன சாப்பிடறீங்க?" என்று கேட்பாள்.

சந்திரநாத் தம் மனைவியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருப்பார். விளக்கு வெளிச்சம் அவளுடைய முகத்தில் படும்படி விளக்கை அவளுக்கருகில் கொண்டுபோய் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தவாறே ஏதோ பேச முற்படுவார். ஆனால் வார்த்தை ஒன்றும் வெளியே வராது. அவரது நிலையைப் புரிந்துகொண்டு புன்சிரிப்புச் சிரிப்பாள் தனமாமி.

372என்னவெல்லாம் நினைக்கிறார் அவர் ! சந்திர நாத் தம்மைச் சமாளித்துக்கொண்டு அண்ணனிடம் சொன்னார். "நேரத்துக்கு ஸ்நானம் பண்ணுங்க. நேரத்துக்குச் சாப்பிடுங்க. இங்கேயும் அங்கேயும் அலைஞ்சுண்டு இருந்தால் பாபுக்களுக்குக் கோபம் வரும்."

மணீந்திர நாத் சோனாவின் கையை விட்டுவிட்டு மேலே நடந்தார். சோனா, "நானும் போறேன், அப்பா!'' என்று சொல்லிவிட்டு அவருடைய அனுமதியை எதிர்பாராமல் ஓடிப் போய்ப் பெரியப்பா வின் கையைப் பிடித்துக்கொண்டான்.

போய்க் கொண்டே சோனா பெரியப்பாவிடம், "பெரியப்பா, நான் உங்களோட தான் ஸ்நானம் பண்ணுவேன், உங்களோடதான் சாப்பிடுவேன்” என்று கூறினான்,

சோனா அவருக்குப் புலிக்குட்டியைக் காட்ட விரும்பினான். அவன் அவரை இழுத்துக்கொண்டு போய்ச் சிறுத்தைப் புலியின் கூண்டுக்கு முன்னால் நிறுத்தினான். சிறுத்தைப் புலியின் இரண்டு குட்டிகளும் சப் சப்பென்று பால் குடித்துக்கொண் டிருந்தன. அவை காதுகளை விறைத்துக்கொண்டு சோனாவையும் மணீந்திர நாத்தையும் பார்த்தன. வலது பக்கம் நடந்து போனால் ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி. தொட்டியில் ஒரு முதலை, தொட்டியைச் சுற்றி இரும்புக் கிராதி.

ஒரு தடவை சீதலஷா நதியில் ஒரு முதலைக்குட்டி மிதந்து வந்தது. மீன் பிடிப்பதற்காக ஆற்றுத் தண்ணீரில் கிளைகளாலும் புல்லாலும் வட்டவடிவாக ஒரு கூண்டு தயார் செய்திருந்தார்கள். அதற்குள் இந்தக் குட்டி வந்து அகப்பட்டுக்கொண்டது.

பிறகு ஒரு தண்ணீர்த் தொட்டியைக் கட்டி அதில் அந்த முதலையை வளர்த்து வந்தார்கள், லால்ட்டுவும் பல்ட்டுவும் மான்களைப் பற்றியும் மயிலைப் பற்றியும் சோனாவிடம் சொல்லியிருந்தார்கள். முதலையைப் பற்றிச் சொல்லவில்லை. நேற்று இங்கு வந்த பிறகுதான் அவர்கள் முதலையைப் பார்த்தார்கள். அப்போது சோனா அமலா கமலாவுடன் மொட்டை மாடியில் நின்றுகொண்டு நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இரவு படுத்துக்கொண்ட பிறகு லால்ட்டுவும் பல்ட்டுவும் தாங்கள் பார்த்த முதலையைப் பற்றிச் சோனாவிடம் சொன்னார்கள். சிறிய பையன் சோனா இப்போது பெரிய மனிதனாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பெரியப்பாவுக்கு எல்லாவற்றையும் காட்டி விளக்கினான் : ''புலி என்ன சாப்பிடும், மயில் எப்போது தோகை விரித்தாடும், மான்களுக்கு என்ன என்ன சாப்பிடப் பிடிக்கும், இந்த மான்களை யெல்லாம் எங்கேயிருந்து கொண்டு வந்தார்கள்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தான் சோனா, எல்லாம் தெரிந்தவன் போல.

373புலிக்கூண்டுக்கு முன்னால் நின்றுவிட்டார் மணீந்திரநாத். இரும்புக் கிராதியைப் பிடித்து ஆட்டினார். சோனா அவரைப் பயமுறுத்தினான், "புலி' மனுஷனைக் கொன்னு தின்னுடும்! விஷமம் பண்ணினா, புலி உங்க மேலே பாய்ஞ்சுடும்!'' என்று.

அவனுடைய பேச்சைக் கேட்டு 'ஹோ, ஹோ'வென்று சிரித்தார் மணீந்திரநாத். பிறகு மொட்டை மாடிப் பக்கம் பார்த்துவிட்டு மெளனமாகிவிட்டார். தூரத்திலிருந்தாலும் சோனாவால் மொட்டை மாடியில் அமலா தன் தலைமயிரை உலர்த்திக்கொண்டு நிற்பதைக் காண முடிந்தது.

மணீந்திரநாத் சோனாவைத் தம் தோள் மேல் ஏற்றிக்கொள்ள விரும்பினார். அதற்கு இசையவில்லை அவன். "யார் வேகமாக ஓடறாங்க, பாக்கலாம்!'' என்று சொல்லிவிட்டு அவன் ஓடத் தொடங்கினான். சற்றுத் தூரம் ஓடியபின் அவன் திரும்பிப் பார்த். தான். பெரியப்பா ஓடி வராமல் மொட்டை மாடியைக் கண்கொட் டாமல் பார்த்துக்கொண்டு நின்றார். அமலாவின் தலை மயிர் தங்க நிறம் ; கண் கள் நீலம். அமலாவைப் பார்த்ததிலிருந்து மணீந்திர நாத் சாதுவாகிவிட்டார், திருந்திப் போய்விட்டார். அவர் சோனாவின் உடம்பில் எண்ணெய் தடவிவிட்டார். அவனுக்குக் குளிப்பாட்டி விட்டார். சோனாவுடன் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தார். நல்ல மீனாகப் பொறுக்கி அவனுக்குக் கொடுத்தார், மாலையில் அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு உலாவப் போனார்.

அப்போது அங்கே ஒரு கோச்சுவண்டி வந்தது. இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்டிருந்த வண்டி. அமலாவும் கமலாவும் காற்று வாங்கக் கிளம்பியிருந்தார்கள்.

"நீயும் வரியா ?" என்று அவர்கள் சோனாவைக் கேட்டார்கள். "பெரியப்பா வரதானால்தான் நானும் வருவேன்." வண்டியை அவர்கள் நிறுத்தினார்கள். சோனா பெரியப்பாவுக்கு அமலாவை அறிமுகம் செய்துவைத்தான், பிறகு அமலாவிடம், * 'என்னோட பெரிய பெரியப்பா இவர் ; கல்கத்தாவிலே வேலை பார்த்தவர்" என்று கூறினான்.

அமலாவும் கமலாவும் வெண்பட்டாலான ஃபிராக் அணிந்திருந் தார்கள். வெள்ளை ஸாக்சும் கான்வாஸ் ஷவும் அணிந்திருந்தார்கள். மணீந்திரநாத் சில்க் ஜிப்பாவும், மடிப்புக் கலையாத வேஷ்டியும், வெள்ளை நிறச் செருப்பும் அணிந்திருந்தார். சோனா பொன்னிறப் பட்டுச் சட்டை, வெள்ளைப் பாண்டு, ரப்பர்ச் செருப்பு இவற்றைப் போட்டுக்கொண் டிருந்தான். இரு வெண் குதிரைகளும் அவர்களை ஆற்றங்கரை வழியே காற்று வாங்க அழைத்துச் சென்றன. ஈசம். படகுத் துறையில் உட்கார்ந்துகொண்டு மீன் பிடித்துக்கொண்

374111

டிருப்பதைச் சோனா பார்த்துவிட்டு, ''ஈசம் அண்ணே , காத்து வாங்க லாம், வரீங்களா ?'' என்று அழைத்தான்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வித்தியாசமே சோனாவுக்கு இல்லை. யார் வேண்டுமானாலும் இந்த வண்டியில் உட்கார்ந்து கொண்டு காற்று வாங்கப் போகலாம் என்று நினைத்தான் அவன். அவன் பெரியப்பாவைக் கேட்டான், ''யானை லாயத்துக்கு வரீங் களா ? யானை காண்பிக்கறேன் ! கமல், நீயும் வரியா?"

''நானும் வரேன் கமல், நீ, நான்" என்று கேட்ட அமலா மணீந்திரநாத்தின் பக்கம் திரும்பிக் கேட்டாள், 'நீங்களும் வரீங் களா?" என்று. அவர் பதில் எதுவும் பேசாமல் இருப்பது கண்டு அவள் மறுபடி உரத்த குரலில், ''நீங்களும் வரீங்களா யானை பார்க்க ? நாம எல்லாரும் நாளைக்கு யானை பார்க்க போவோம். காளி கோவி லுக்குப் போவோம்! ஆத்து மணல்லே நடந்து போவோம்" என்றாள்.

அமலா அவருடன் இவ்வளவு பேசியும் அவரைப் பேசவைக்க முடியவில்லை. இன்று 'கேத்சோரத்சாலா!' கூடச் சொல்லவில்லை அவர். மைதானம், ஆறு, நாணற்பூக்கள் இவற்றைப் பார்த்துவிட்டு மறுபடி அமலாவைப் பார்த்தார். அமலாவுக்குத் தன் தாயின் முக ஜாடை, அமலாவைப் பார்க்கும்போது அம்மாவிடம் செல்லம் கொஞ்சும் குழந்தையைப் போல் நடந்துகொண்டார் மணீந்திரநாத்.

ஆஸ்வின் மாதத்துச் சூரியன் ஆற்றின் மறுகரையில் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். கோச்சு வண்டி போய்க்கொண் டிருந்தது. 'டக், டக்' என்று குதிரைகளின் குளம்பொலி கேட்டது. தாளம் பிசகாமல் கேட்டது அந்த ஒலி.

இந்த மாதிரி இரண்டு வெள்ளைக் குதிரைகள் ஒரு வண்டியை இழுப்பதை எங்கோ, எப்போதோ பார்த்த நினைவு சோனாவுக்கு. எங்கும் பனி விழுந்தது. மரங்களில் இருந்து இலைகள் உதிர்ந்து விட்டன. எங்கே பார்த்தாலும் பனிக் குவியல்கள், நடுவே தலைவகிடு போல் ஒரு குறுகிய பாதை - இவ்வாறு யாரோ அவனுக்கு ராஜாராணிக் கதை சொல்லியிருந்தார்கள்.

கோச்சு வண்டியில் மணீந்திர நாத்தும் சோனாவும் ஒரு பக்கமும், அமலா கமலா ஒரு பக்கமுமாக உட்கார்ந்திருந்தார்கள். பலவிதப் பறவைகள் ஆற்றின் குறுக்கே பறந்துகொண் டிருந்தன. ஆற்றின் மறுகரையிலிருக்கும் மனிதர்களை இங்கிருந்து பார்க்க முடியவில்லை. ஆற்றில் நீர் மட்டம் கொஞ்சங் கொஞ்சமாக இறங்கிக்கொண் டிருந்தது. ஆற்றின் மறுகரையிலிருந்த செங்கல் வீடுகள் சித்திரங் களாகக் காட்சியளித்தன சோனாவுக்கு. அவனுக்கு என்னென்னவோ பேச ஆசையாயிருந்தது.

375விளக்கு ஏற்றுவானே அந்த மனிதன், அவன் ஒரு நீண்ட அங்கி அணிந்திருப்பான். சூரியன் அஸ்தமித்ததும் விளக்கேற்றுவான் அவன். அவனுக்குச் சோனாவின் இரண்டாவது பெரியப்பாவிடம் ரொம்பப் பயம். அவரைக் கண்டதும் சலாம் போடுவான். அவருக்கு முன்னால் மரியாதையாகத் தலையைக் குனிந்து கொண்டு நிற்பான். அவனுடைய சட்டையின் முதுகுப் பக்கத்துக் கிழிசல் வழியாக அவனுடைய உடம்பு எவ்வளவு நோஞ்சான் என்று பார்க்கலாம். சாயங்காலமாகிவிட்டால் அவன் அந்த மெஷினை இயக்கிவிடுவான், உடனே படபடவென்று சப்தம் கேட்கும். மந்திரம்போல் அந்த வீட்டிலுள்ள சிவப்பு, நீல விளக்குகள் எல்லாம் எரியத் தொடங்கி விடும்.

அந்த மனிதன் விளக்கேற்றும் சமயத்தில் அந்த மாய இயந் திரத்தைச் சோனாவுக்குக் காட்டுவதாகச் சொல்லியிருந்தான். அவன் பெயர் இப்ராகிம். சோனா அன்று காலையில் எழுந்ததுமே இப்ராகிம் அவனுக்குச் சலாம் வைத்தான். கிட்டங்கிச் சேவகர்களும் சலாம் வைத்தார்கள். இது மிகவும் விசித்திரமான உலகம். பெரியப்பாவைப் பார்த்ததும் எல்லாரும் தூரத்திலிருந்தே அவருக்குச் சலாம் வைத் தார்கள். இப்ராகிம் ஏற்கனவே கூனிப் போயிருந்தான். ஆகையால் சலாம் செய்யும்போது அதற்காகக் குனியவேண்டிய அவசியமில்லை

அவனுக்கு.

ஒரு சமயம் ஜாத்ரா நாடகத்தில் சோனா ஒளரங்கசீபின் நாடகம் பார்த்திருந்தான். இப்ராகிமைப் பார்த்தால் ஒளரங்கசீபின் ஞாபகம் வந்தது அவனுக்கு. இப்ராகிமின் வெள்ளைத் தாடி அவனு டைய தொப்புழைத் தொட்டுக்கொண் டிருந்தது. இவ்வளவு பெரிய வீட்டின் இருட்டைப் போக்கும் வல்லமையுள்ள அவன் மகாபாரதத் தில் வர்ணிக்கப்பட்டுள்ள ஒரு வீரனாகத் தோன்றினான் சோனாவுக்கு, அவனிடம் அற்புத சக்தி இருந்தது. அவன் கையில் மந்திரக்கோல் இருந்தது. கமலா சொல்லியிருக்கிறாள், அவன் அடிக்கடி சொல் வானாம், ''இதோ போட்டுட்டேன் மந்திரம், பேசப் போறது யந்திரம்!" என்று.

பொழுது சாய்ந்துகொண் டிருப்பதை வண்டியிலிருந்தபோதே கவனித்தான் சோனா. அவன் திரும்பிப் போக நேரமாகிவிட்டால் இப்ராகிம் அவனுக்காகக் காத்திராமல் தன் மந்திர அறைக்குள் நுழைந்துவிடுவானே! வண்டியை வேகமாக ஓட்டிச் சொல்லும்படி கமலாவிடம் சொன்னான் சோனா.

''வண்டி வேகமாகத்தானே போயிக்கிண்டிருக்கு!" "நாம சீக்கிரம் திரும்பணும், கமல்!"

376சோனா முடிந்தவரையில் அமலா கமலாவைப் போல் பேச விரும் பினான். பேசுவது ஒன்றும் கஷ்டமில்லை, புத்தகங்களில் வருகிறதே அந்த மாதிரி பேசவேண்டும், அவ்வளவுதான்! அவனுக்கு உச்சரிப்பு மட்டும் சரியாக வருவதில்லை. அவன் பேசுவதைக் கேட்டு அமலாவும் கமலாவும் உதட்டை மடக்கிக்கொண்டு சிரிப்பார்கள்.

"நாம சீக்கிரம் திரும்பல்லேன்னா வீட்டிலே விளக்கு எரியாது. ஏன்னா, நான் வந்தப்புறம் விளக்கேத்தறதாச் சொல்லியிருக்கான்.

இப்ராகிம்" என்று சோனா சொல்லியிருக்கலாம்.

''நாங்க உன்னை மொட்டை மாடிக்குக் கூட்டிக்கிண்டு போறோம். அங்கேயிருந்து எல்லாம் நன்னாப் பார்க்கலாம்" என்று கமலா சொன்னாள்.

''சோனா, நாம மொட்டை மாடியிலே கண்ணாமூச்சி விளையாடலாம், வரியா ?" என்று அமலா கேட்டாள்.

அமலா சோனாவைப் பார்த்துக்கொண் டிருந்தாள். அவனுடைய அழகான முகத்தைப் பார்த்தபோது, அவனுடைய இனிமையான பேச்சைக் கேட்டபோது, அவளுக்குத் தன் தாய் சொல்லும் பைபிள் குழந்தையின் நினைவு வந்தது. வெள்ளையுடையில் அந்த மாதிரிதான் காட்சியளித்தான் சோனா. உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் தலைகால் புரியவில்லை சோனாவுக்கு, குதிரைக் குதித்துக்கொண்டு ஓடுவதையும், புல் தின்பதையும் பார்த்து மகிழ்ந்தான் அவன். அவர்கள் வண்டியை நிறுத்திவிட்டுச் சற்றுநேரம் ஆற்றங்கரையில் உட்கார்ந் திருந்தார்கள். இந்த இடத்தில் ஜன நடமாட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண் டிருந்தார்கள். அவர்கள் அமலா கமலாவைப் பார்த்து அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டுப் போனார்கள்.

பிறகு வண்டி மைதானத்தின் வழியே சென்றது. இதுவரை ஆற்றைப் பார்த்துக் கொண்டிருந்த மணீந்திர நாத் இப்போது மைதானத்தைப் பார்த்தார். அடிக்கடி திரும்பி அமலாவைப் பார்த் தார். அவருடைய பாலின் - சிறுமி பாலின்!

அமலாவைக் கொஞ்சுவதற்காக அவர் அவளுடைய தலைமேல் கைவைத்தார். அமலாவுக்குப் பயமாக இருந்தது. ''பயப்படாதே, அமலா! பெரியப்பா ஒருத்தரையும் ஒண்ணும் சொல்லமாட்டார். ஒருத்தருக்கும் கெடுதல் பண்ண மாட்டார்'' என்று சோனா அவளுக் குத் தைரியம் சொன்னான்,

என்ன ஆச்சரியம்! அவன் இப்படிச் சொன்னதும் மணீந்திர நாத் நன்றாக உட்கார்ந்துகொண்டார். எல்லாருமாகச் சேர்ந்து தீர்த்த யாத்திரைக்குப் போய்க்கொண் டிருப்பது போன்ற பாவம் மணீந்திர

377நாத்திடம் காணப்பட்டது. அமலா தன் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை விவரித்தாள்,

அவர்கள் கோச்சில் இந்த மைதானத்தில் வந்து கொண் டிருந்தபோது அடர்த்தியான பனிமூட்டம் ஏற்பட்டது. அப்போது இப்ராகிம்தான் வண்டியோட்டி. அவன் குதிரைகளைப் புல்மேய அவிழ்த்துவிட்டிருந்தான். அமலாவும் கமலாவும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பனிமூட்டம் ஏற்பட்டதும் இப்ராகிமால் குதிரைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர் காலம். இப்ராகிம் இரண்டு தோள்களிலும் இரண்டு பெண் களையும் தூக்கிக்கொண்டு வீடு திரும்பும் வழியில் ஒரு கிழவன் நின்றுகொண் டிருந்தான், கிழவனின் கையில் ஒரு தடி. அவன் இரண்டாவது எசமானின் புல்லாங்குழல் இசையைக் கேட்பதற்காக அவனுடைய ஊரிலிருந்து வந்திருந்தான். அமலாவின் அப்பா கிளாரினெட்டும், புல்லாங்குழலும் நன்றாக வாசிப்பார். ஊருக்கு வந்தால் இரவில் புல்லாங்குழல் வாசிப்பார். அந்த மனிதனும் ஒரு சிறந்த கலைஞன். பனிமூட்டத்தில் வழி தவறிய அவனை இப்ராகிம் கையைப் பிடித்து வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். அமலா வின் அப்பா அவனைத் தம் வீட்டிலேயே இருத்திவைத்து அவனிட மிருந்து ஸ்வரம், தாளம், லயம் எல்லாம் கற்றுக்கொண்டார். அந்த ஆள் புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்துவிட்டால் பருவமில்லாக் காலத்திலும் நாணற் காட்டில் பூக்கள் பூத்துக் குலுங்கும். தலைக்கு மேலே பறவைகள் பறக்கும். அந்த ஆள் தான் கற்றுக்கொண் டிருந்த வித்தை எல்லாவற்றையும் இரண்டாவது பாபுவுக்குக் கற்றுத் தந்துவிட்டான். தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை அவன். அவன் வந்தது பாபுவின் பாட்டைக் கேட்டுவிட்டுப் போகத்தான். ஆனால் வந்தபிறகு தெரிந்தது பாபுவுக்குத் தேர்ச்சி போதாதென்று. இவ்வளவு பெரிய இடத்து மனிதரிடம் இப்படி ஒரு குறை இருப்பது அவனுக்குப் பொறுக்கவில்லை.

பாபு நாள் முழுவதும் அவனுடைய அறையிலேயே கழிப்பார். குளிக்க, சாப்பிடக்கூட அவருக்கு நேரம் இருக்காது. இவ்வாறு தன் வித்தையை அவருக்குக் கற்றுக் கொடுத்துவிட்டு அவன் ஒரு நாள் புறப்பட்டுவிட்டான் அங்கிருந்து. அந்த மனிதன் தன்னந்தனியனாக இருந்தான். அவனுக்கு உறவுக்காரர்கள் யாரும் இல்லை. அவன் ஏழை. சந்தைகளிலும் கடைத் தெருக்களிலும் புல்லாங்குழல் ஊதி வயிறு வளர்த்துவந்தான். இப்போது அந்த வித்தையையும் அவன் அமலாவின் தந்தைக்குக் கொடுத்துவிட்டான். அங்கிருந்து புறப்பட்ட அவனை அமலாவின் அப்பா தடுத்து நிறுத்தினார். "காலேக் இந்தக் கிழ வயசிலே நீ எங்கே போகப் போறே? நீதான் சொல்லிட்டே,

378எனக்குச் சொல்லித் தந்த வித்தையை இனிமே சந்தையிலேயும் கடை வீதியிலேயும் காண்பிக்க மாட்டேன்னு! பின்னே எப்படித்தான் பணம் சம்பாதிப்பே? பேசாமே இங்கேயே இருந்துடு!"

காலேக் மியான் முதலில் பதில் சொல்லவில்லை. பிறகு சொன்னான், "சரி, ஹஜூதர் !"

இப்படித்தான் காலேக், ஜமீந்தார் வீட்டுக் கோச்சு வண்டியின் சாரதியாக ஆனான். அவனுக்குக் கண்பார்வை சரியாக இல்லை. இருந் தாலும் காலேக் வண்டியில் உட்கார்ந்துவிட்டால் அவன் நூறு வண்டியோட்டிகளுக்குச் சமம். அந்தக் காலேக் இப்போது வண்டியை வேகமாக ஓட்டினான்,

ஆற்றின் மறுகரையில் சூரியன் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். நாணற் பூக்களின் உச்சியில் சந்திரன் தோன்றினான். ஆற்றி லிருக்கும் படகுகளில் விளக்குகள் எரிந்தன. நதிக்கரைக்கு வந்ததும் வண்டி திரும்பியது. அஸ்தமிக்கும் சூரியனின் சிவப்பு நிறம் ஆற்றின் இரு கரைகளிலும், அவரின் மேலும், வயல்வெளிகளிலும் பரவியது. வண்டியில் உட்கார்ந்திருந்தவர்களின் முகங்களும் சிவந்து கிடந்தன. சூரியன் அஸ்தமித்ததும் இருள் சூழ்ந்துவிடும், ஆகாயம் மட்டும் நீலமாகத் தெரியும். சரத் காலத்து ஆகாயத்தில் நிலவு கிளம்பியதும் சவுக்கு மரத்துக்கடியில் வண்டி நிற்கும். மணீந்திர நாத் வண்டியிலிருந்து இறங்குவார்.

அவர்கள் சவுக்கு மரத்தடிக்கு வந்தபோது இருட்டிவிட்டது, இப்போது குதிரைகள் வேகமாக ஓடவில்லை. மெதுவாக நடந்தன அவை .

மணீந்திரநாத் இறங்கியதும் அமலா சோனாவைக் கேட்டாள், "உனக்கு ஞாபகம் இருக்குமா, சோனா ?" என்று.

சோனா இருக்கும் என்று தெரிவிக்கும் முறையில் தலையை ஆட்டி னான். மொட்டை மாடியில் நிலவு காயும்போது அவன் அமலா கமலாவுடன் கண்ணாமூச்சி விளையாடப் போகிறான். தம்பட்டமும் மேளமும் ஒலிக்கும். அவர்கள் மொட்டை மாடியிலும் சமைய லறைக்கு அடுத்தாற்போல், வேலைக்காரிகளின் அறைகளை ஒட்டி யிருந்த இடத்திலும் கண்ணாமூச்சி விளையாடுவார்கள்.

வயல்வெளி வந்ததும் சோனாவுக்கு ஞாபகம் வந்துவிட்டது. "நான் இங்கேயே இறங்கிக்கறேன், அமலா" என்றான்.

"ஏன் இங்கே இறங்கணும்?" மாஜிக் இயந்திரத்தைப் பார்க்கப் போகிறான் அவன். அந்த இயந்திரத்தை இயக்கிவிட்டால் கம்பிகளில் மின்சாரம் பாயும். அறை களில் நீல, சிவப்பு நிற விளக்குகள் எரியும். பூஜை சமயமாதலால் மரங்களின் மேலெல்லாம் துனு மலர்களைப் போன்ற சின்னஞ்சிறு

379மின்சார விளக்குகள் மாலை மாலையாக ஒளிவீசும். அந்த இயந்திரத் துக்கு அருகில் போய் நிற்கப்போகிறான் அவன். இப்ராகிம் சோனாவை அந்த இயந்திரத்துக்கு அருகில் கொண்டுபோய் நிறுத்தி வைப்பதாகக் கூறியிருக்கிறான். அப்போது இப்ராகிம் தன் ஜிப்பாப் பையிலிருந்து விதவிதமான மந்திரக்கோல்களை வெளியே எடுப்பான். அந்த இயந்திரத்தில் விசித்திரமான “கட், கட்' 'பட், பட்' போன்ற சப்தங் களை எழுப்புவான். அதைப் பார்க்கும் ஆசையில் அவசர அவசர மாக வண்டியிலிருந்து குதித்தான் சோனா.

இப்ராகிம் எங்கே? இப்ராகிமைத் தேடினான் சோனா. அவன் மந்திர இயந்திரம் இருக்கும் அறையை நோக்கி நடந்தான். இப்போது கோச்சு வண்டி மாளிகையின் வாசலுக்குள் நுழைந்துகொண் டிருந்தது. எங்கேயோ குதிரை கனைப்பதை அவன் கேட்டான், இன்னும் சில சிறுவர் சிறுமியரும் அங்கு வந்திருந்தார்கள், வேடிக்கை பார்க்க. அந்தக் கிராமத்தின் கிழவர்களுக்கும் சரி, சிறுவர்களுக்கும் சரி, பூஜை சமயத்தில் இந்த மாளிகை ஒரு மாயாலோகமாகத் தோன்றும். சில நாட்களுக்கு இந்த மாளிகையின் மண்டபம், வராந்தாக்கள், நீல நிற வயல்வெளி, ஏரி போன்ற விசாலமான குளம், விதவித நிறப் பூக்கள் எல்லாமாகச் சேர்ந்து ஒரு மந்திர உலகம் சிருஷ்டியாகிவிடும். வெகுதூரத்திலிருந்து கூட மக்கள் அங்கு வருவார்கள். அப்படி வந்திருந்த மக்கள் ஆற்றங்கரையில் உட்கார்ந்திருப்பதைச் சோனா பார்த்தான். வலது பக்கத்தில் இயந் திரம் வைத்திருந்த அறையைச் சுற்றிக் கம்பிவேலி போட்டிருந்தது. இப்ராகிமைக் காணோமே! அவன் விளக்கேற்றுவதைச் சோனாவுக்குக் காட்டுவதாகச் சொல்லியிருந்தானே! இயந்திரத்தால் விளக்குகள் எரிவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகத் தோன்றியது சோனாவுக்கு. அவன் மேலும் பொறுத்திருக்க முடியாமல் வேலிக்கருகில் ஓடி அதன் வழியே எட்டிப் பார்த்தான். இயந்திரத்தின் மேலே குனிந்த வாறு நின்று கொண்டு ஏதோ செய்துகொண் டிருந்தான் இப்ராகிம்.

"இப்ராகிம்!'' என்று கூப்பிட்டான் அவன். இப்ராகிம் பதில் எதுவும் சொல்லவில்லை. சூரியன் அஸ்தமித்து விட்டதால் அறைக்குள் கொஞ்சம் இருட்டாயிருந்தது. இப்ராகிமின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. முகத்தில் வியர்த்திருந்தது. அவனால் இயந்திரத்தை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இயந்திரம் சண்டித்தனம் செய்தது. அது சண்டித்தனம் செய்யச் செய்ய இப்ராகிம் அதன் பாகங்களைக் கழற்றிப் போட்டு அதைச் சுற்றிச் சுற்றி வந்து சோதித்துப் பார்த்தான். அவனுடைய முகத்தில் பரபரப்பு காணப்பட்டது. அவனைச் சுற்றிலும் நிறையச் சிறுவர்களும் சிறுமி களும் நின்றார்கள், அவர்கள் அவனுடைய திறமையைப் பார்க்க

380வந்திருந்தார்கள். இப்ராகிம் மேஸ்திரியின் பெயர் அந்தப் பிராந்தி யத்தில் ரொம்பப் பிரபலம். அப்பேர்ப்பட்டவன் இப்போது மிகவும் பயந்துபோய் விட்டான். அவனுடைய நிலைமையைப் பார்த்துச் சோனாகூட அவனைக் கூப்பிடத் தயங்கினான். ''இப்ராகிம், நீ என்னை வரச் சொன்னியே! ஒரு நிமிஷத்துலே உன் மந்திரத்தாலே இந்த ஊரையே ஜகஜ்ஜோதியாப் பண்றேன்னு சொன்னியே! இப்போ ஒண்ணும் பண்ண மாட்டேங்கறியே? கூப்பிட்டால் கூட ஏன்னு கேட்க மாட்டேங்கறியே?" என்று கூற நினைத்தான்.

சோனாவுக்குத் தனியே வீட்டுக்குப் போகப் பயமாக இருந்தது. இப்ராகிம் அவனிடம் சொல்லியிருந்தான், விளக்கேற்றிய பிறகு அவனை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவதாக. ஆனால் இப்போதோ அவன் முல்லா மாதிரி ஆகிவிட்டான். பக்கிரி யாருடனும் பேசாமல் கொரானைப் பாராயணம் செய்வது போல் அவன் ஏதோ முணுமுணுத்தான். 'இப்ராகிம், என்னை ஏன் வரச்சொன்னே? நான் இப்போ எப்படித் திரும்பிப் போவேன்?' என்று சோனாவால்

அவனைக் கேட்க முடியவில்லை.

அந்த யானை மட்டும் இப்போ திரும்பிவந்தால்! பெரியண்ணாவும் இரண்டாவது அண்ணாவும் பாபு வீட்டுப் பையன்களுடன் யானை மேலேறிக்கொண்டு போயிருந்தார்கள், காற்று வாங்க. யானையின் மணியொலி கேட்டால் யானை வருகிறதென்று தெரியும். அவனுக்குப் பரிச்சயம் இல்லாத சிறுவர்களும் பெரியவர்களுந்தான் இங்கே விளக்கு களைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்கள் பூஜைக்காகப் பிரதிமை கள் தயாராகும்போதே அவற்றைப் பார்க்க வந்துவிடுவார்கள்.

பாபுக்கள் ஆண்டு முழுவதும் பட்டணத்தில் வசிப்பவர்கள், அவர்கள் பூஜைக்குக் கிராமத்துக்கு வந்தால் இந்த இயந்திரம் இயங்கும். ஒளிவீசும் மாளிகையும் மற்ற வீடுகளும் மண் சிலை களுமாக அந்த ஊர் சீதலக்ஷா ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு ஒரு பட்டணமாக ஆகிவிடும். இந்தப் பட்டணத்துக்குத்தான் வந்திருந்தான் சோனா. அவன் பார்ப்பதெல்லாம் அவனை ஆச்சரியத் தில் ஆழ்த்தியது.

இருள் கொஞ்சங் கொஞ்சமாக அடர்த்தியாகிக் கொண்டே வந்தது. மரங்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்ததால் வானத்திலிருந்த சாதாரண நிலா, இலைகளையும் கிளைகளையும் துளைத்துக்கொண்டு வந்து இந்த அறைக்கு வெளியில் புல்லின்மேல் விழவில்லை. "என்ன இப்ராகிம், உன்னோட பைத்தியக்கார இயந்திரம் ஏன் பேசல்லே ?" என்று எல்லாரும் கேட்டார்கள். "பேசும், பேசும்! பேசாட்டா யார் விட்டா?"

381"இப்ராகிம், நீ என்னை வரச் சொன்னியே!" என்று இப்போது சோனா சொன்னான்.

சோனா அங்கு வந்திருப்பதை இப்ராகிம் இப்போதுதான் கவனித் தான், "இதுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுத்து, எசமான் !" என்று அவன் சொன்னான்.

"என்ன ஆயிடுத்து ?" "பேசமாட்டேங்கறதே !''

அப்போது சோனாவின் இரண்டாவது பெரியப்பா அங்கே வேகமாக வந்தார். கூடவே வேலைக்காரன் நகுல், அவருடைய முகத்தில் பரபரப்புக் காணப்பட்டது. சோனா தனியாக இந்தப் புது இடத்தில் நிற்பதைக்கூட அவர் கவனிக்கவில்லை. அவர் தாமே அறைக்குள் நுழைந்து டார்ச் விளக்கை ஏற்றி என்ன என்னவோ செய்தார். இப்ராகிமை நகர்ந்து கொள்ளச் சொன்னார். பிறகு எதையோ பார்த்துவிட்டு, "இது இங்கே எப்படி வந்தது?'' என்று கேட்டார்,

"நான் இங்கேதான் இருக்கேன், பெரியப்பா!" என்று சொல்ல நினைத்தான் சோனா. ஆனால் தன் பெரியப்பா எவ்வளவு பெரிய மனிதர் என்ற நினைப்பு அவனைப் பேசவிடாமல் தடுத்துவிட்டது. அவர் வந்தபடியே வேகமாகத் திரும்பிப் போய்விட்டார். சோனா மட்டும் அசடுபோல் அங்கு நின்றுகொண் டிருந்தான்.

இப்போது எங்கும் வெளிச்சம். மாளிகை இப்போது மாயாபுரியாக ஆகிவிட்டது. நாற்புறமும் விளக்குகள் மாலை மாலையாகத் தொங்கின. அவை ஆகாயத்தில் வில்லையாகத் தெரிந்த சந்திரனையும் ஆயிரக் கணக்கான நட்சத்திரங்களையும் கேலி செய்தன. நாற்புறமும் மக்னோலியா மரங்களின் மலர்களும், பல நிற இலைகளும் பூச்சி களின் ரீங்காரமும் சேர்ந்து கொண்டு சோனாவை மெய்ம்மறக்கச் செய்தன. அவன் நடந்தான். இப்போது அவனுக்கு ஒரு பயமும் இல்லை. எங்கே பார்த்தாலும் வெளிச்சம். மரங்களை ஊடுருவிக் கொண்டு வெளிச்சம் வந்தது.

சற்றுத் தூரத்தில் யாரோ வேகமாகப் போய்க்கொண் டிருந்தார்கள், பூஜை வாத்தியங்கள் ஒலித்தன. அவனுடைய மனத்தில் ஒரு கனவுல கம் தோன்றியது. அதில் அவன் கண்ட ஒரு பெண்ணின் முகத்தை

அமலாவின் முகத்துடன் தான் ஒப்பிடலாம்.

அவனுடைய அமலா, அவனை மொட்டை மாடிக்கு வரச்சொல்லி யிருந்தாள் ; "நிச்சயம் வரனும், சோனா ! நான் உனக்காகக் காத்துக் கிண்டிருப்பேன்!"

அமலாவின் உருவத்தைத் தன் மனக் கண்ணில் பார்த்து ரசித்தான் சோனா, கல்கத்தாக்காரி அமலா. கல்கத்தா பெரிய ஊர் ! அங்கே

382initii

டிராம் வண்டி இருக்கு, ஹெளரா பாலம் இருக்கு. அங்கே வளர்ந்தவ அமலா. அவளோட கண் எவ்வளவு நீலம். இப்போ வெளிச்சம் வர்ற மாதிரி அவளோட வாயிலிருந்து எப்போதும் வார்த்தை வந்து கொண்டே யிருக்கு!

வெளிச்சத்தில் நடந்துவந்த சோனா ஏதோ ஒரு மாயசக்தியால் கவரப்பட்டு வேகமாக ஓடத் தொடங்கினான். குளத்தங்கரை வழியே ஒடிப் போய் அவன் ஆபீஸ் கட்டிடத்துக்குள் நுழைந்தான். வெளியில் எவ்வளவோ பேர் இருந்தார்கள். ஜமீன் உத்தியோகஸ்தர்கள், வேலைக்காரர்கள் அவர்கள் யாரையும் லட்சியம் செய்யவில்லை அவன். அவன் இவ்வளவு வேகமாக ஓடினால் இரண்டாவது பெரியப்பா திட்டுவார்!

அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான், பெரியப்பா அங்கே இருக்கிறாரா என்று. நல்ல வேளை, அவர் இல்லை. பூஜை மண்டபத்தில் விதவிதமான விளக்குகளை ஏற்றிக்கொண் டிருந்தார்கள். தேவியின் சிலைக்கு ஜிகினாத் தகடுகளால் அலங்காரம் செய்தார்கள். பல வர்ண ஜிகினாத் தகடுகள் விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தன. தேவி அவனைப் பிடித்துக்கொண்டு விடுவாள்.

'சோனா, உன்னை ஒரு மாயசக்தி இழுத்துக்கிண்டு போறது ! எல்லாம் எனக்குத் தெரியும்! அதனால் சோனாவுக்கு அம்மனின் முகத்தைப் பார்க்கத் துணிவு ஏற்படவில்லை. அவன் படியேறி வலப் பக்கத்து வராந்தாவுக்கு வந்தபோது பெரிய பெரியப்பா ஒரு சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண் டிருப்பதைக் கண்டான். சில்க் ஜிப்பா, காலில் விலையுயர்ந்த செருப்பு - எல்லாம் இரண்டாவது பெரியப்பாவின் உடைமைகள். அவர் அவற்றைப் பெரிய பெரியப்பாவுக்குப் போட்டுக்கொள்ளக் கொடுத்திருக்கிறார்; அல்லது தம் கையாலே அணிவித்திருக்கிறார்.

பெரிய பெரியப்பாவின் காலடியில், சற்றுத் தூரத்தில், ராம்சுந்தர் உட்கார்ந்து புகையிலை நறுக்கிக்கொண் டிருந்தான். வெட்டப்பட்ட புகையிலைக் குவியல் குவியலாகக் குவிந்து கிடந்தது. அதனுடன் நிறையக் கரும்புப் பாகைக் கலந்து நல்ல மணமுள்ள புகையிலை தயாரித்தார்கள். பக்கத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா. சோனா ஒரு கணமும் அங்குத் தாமதிக்கவில்லை. அவனுக்கு நேரமும் இல்லை ; ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அமலா - அமலா அத்தை - அவனுக் காகக் காத்துக்கொண் டிருப்பாள், கல்கத்தாவில் வசிக்கிறாள் அமலா, எவ்வளவு பெரிய பட்டணம் கல்கத்தா! விக்டோரியா மெமோரியல் ஹால் - அதைச் சுற்றி வெள்ளை நிறக் காம்பவுண்டுச் சுவர். பாதையின் இருபுறமும் பெரிய பெரிய அழகான மாடி வீடுகள். வெகு தூரத்திலுள்ள கல்கத்தாப் பட்டணத்தைப் போல்

383