தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்கமுடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (TShrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .273-350 வங்காள மூலம் : அதீன் பந்த்யோபாத்யாய

நீலகண்டப் பறவையைத் தேடி. . . .273-350
நிற்பதும், இரண்டு அண்ணுக்களும் அவரைச் சோதனை செய்து கோட்டாச் செய்வதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தன. தாம் குளத்தின் தென்கரையில் இருப்பதைச் சரியாக ஊகித்துவிட்ட சந்தோஷத்தில் கிழவர் சிறு பையனைப் போல் உற்சாகமடைந்தார். அதைக் கண்டு சோணுவுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டு அவனும் துள்ளிக் குதித்தான், தானே சரியாக ஊகித்துவிட்டாற்போல.

சிறுவர்கள் கிழவரை இன்னும் மேலே கூட்டிக்கொண்டு போக விரும்பினுர்கள். ஆனூல் அவர், "நான் இனிமேல் வரமாட்டேன். நீங்க என்னை எங்கேயெல்லாமோ கூட்டிண்டு போகப் பார்க்க நீங்க. எனனைக் குரங்குமாதிரி ஆட்டிவைக்கறிங்க, நான் இனிமேல் உங்க இஷ்டத்துக்கு ஆடமாட்டேன்!" என்று கூறிவிட்டார்.

அவர் மருதமரத்தடியில் உட்கார்ந்துவிட்டார். அங்கே கொஞ்சம் அருகம் புல் வளர்ந்திருந்தது. வெயில் வந்துவிட்டது. புல்லில் ஒரு பணித்துளியும் இல்லை. உட்கார்ந்தவாறே அவர் தரையைக் கையால் தடவித் தடவி எதையோ தேடினுர்.

"என்ன தேடறிங்க?" என்று சோனு கேட்டான். "என்னத்தான் !" அவர் சொல்வது புரியவில்லை சோளுவுக்கு. "ஆமா, என்னைத்தான் தேடறேன். நீங்க என்னை இங்கே விட்டு டுங்க!" என்று சொல்லிவிட்டு மெளனமானுர் கிழவர். இந்த இடம் அவருக்கு எவ்வளவு பிடித்தமானது என்பது அந்தச் சிறுவர்களுக்கு எப்படித் தெரியும்? அவர் அன்புடன் தரையைத் தடவிக் கொடுத் தார். அங்கேயே தம்மைத் தகனம் செய்யவேண்டுமென்று எல்லாப் பிள்ளைகளிடமும் சொல்லி வைத்திருந்தார். அவர் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தபோது அதன் அடையாளமாக இந்த மருதமரத்தை நட்டுவைத்திருந்தார்.

வெயில் மரத்தின்மேல் விழுந்ததால் நாற்புறமும் நல்ல வெப்பமாக இருந்தது. சந்தைக்குப் போகும் மாடுகள் மைதானத்தில் போய்க் கொண்டிருந்தன. குளக் கரையில் இங்குமங்கும் மரநிழல். கிழவர் மகேந்திரநாத் கால்களைப் பரப்பியபடி தம் பேரப் பிள்ளைகளுடன் மருதமர நிழலில் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்தால் கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றும். தம் பைத்தியக்காரப் பிள்ளையைப் பற்றிய சோகம் அவருடைய நினைவில் உறுத்தியது போலும். அவர் பல்ட்டுவின் தலையில் கையை வைத்து, "நன்னப் படி, அப்பாவுக்குக் கஷ்டம் கொடுக் காதே!” என்று கூறினுர்,

அங்கிருந்து ஆபேத் அலியின் பீபியின் சமாதி தெரிந்தது. அதற் கருகில் மூன்று பட்டிச் செடிகள் நட்டிருந்தன. ஒரு கோழி

273

அந்தச் சமாதியின் மேலே ஒற்றைக் காலால் நின்று துரியனைப் பார்த்தது. நேற்றிரவுதான் கிழவருடைய பைத்தியக்காரப் பிள்ளை ஜாலாலியைத் தண்ணிரிலிருந்து வெளியே கொண்டு வந்தான். அந்தப் பைத்தியக்காரப் பிள்ளை இப்போது எங்கிருக்கிருணுே, யார் கண்டார்கள்?

பல்ட்டு பதில் சொல்லவில்லை. அவனுக்குத் தன் தந்தையிடம் ஒரு மாதிரியான பயம். அவன் அவருடன் எங்கும் போவதில்லை. ஆணுல் சோனுவிடம் அலாதிப் பாசம் அவனுக்கு அவன் பேச்சை மாற்றிச் சொன்னுன் : "தாத்தா, வாங்க படுகைக்குப் போகலாம் !" பல்ட்டு சொல்லியது கிழவரின் காதில் விழுந்தாலும் அவருடைய மனத்தில் பதியவில்லை. அவர் வேறு ஏதோ நினைத்துக்கொண் டிருந்தார். "ஜாலாலி தண்ணிரில் முழுகி இறந்துவிட்டாள். அவளு டைய சமாதியின்மேல் ஒரு கோழி வடக்கும் தெற்குமாக உலவுகிறது. வெயில் எங்கும் விழுகிறது. நேற்று விசேஷ நாள். வாத்திய ஒலி இன்னும் ஓயவில்லை. அந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் வயதான வரான மகேந்திரநாத் தமக்குப் பிரியமான அந்த மண்ணின்மேல் உட்கார்ந்திருக்கிருர், இங்கேதான் அவர் மீளாத தூக்கத்தில் ஆழப் போகிறர். எல்லாரும் இந்த இடத்துக்குத்தான் அவருடைய சடலத் தைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். இந்தக் காட்சி அவருடைய மனக் கண்ணுக்கு முன்னே தெரிந்தது. அவருடைய பிள்ளைகள் அவருடைய தேகத்தைச் சுற்றி நிற்பார்கள் பல கிராமங்களிலிருந்து மக்கள் அங்குவந்து கூடுவார்கள் ; ஹரி சங்கீர்த்தனம் நடக்கும்; சந்தனக் கட்டை எரியும் அதில் நெய்யும், பாலும், தயிரும் ஊற்றப் படும்; யாக அக்கினியில் போடப்பட்ட ஹவிசைப் போல் அவரு டைய உடல் அந்த நெருப்பில் எரியும். அவருடைய பைத்தியக் காரப்பிள்ளை மருதமரத்தின்மேல் சாய்ந்துகொண்டு, அவருடைய உடல் எரிவதைப் பார்த்துத் தன் இரு கைகளையும் தூக்கியவாறு கத்துவான்.

அவருடைய நினைவில் தோன்றிய அந்தப் பிள்ளையின் முகம் அவரைச் சோகத்தில் ஆழ்த்தியது. அந்தப் பிள்ளை அவருடைய உடல் எரிவதைப் பார்த்துக்கொண் டிருக்கிறன். அவன் புகார் செய்வது போல் தோன்றுகிறது, "அப்பா, நீங்க என்னைக் கெடுத்தீட்டீங்க ! என் காதலை நாசம் பண்ணிட்டீங்க. உங்க மத உணர்வு என் வாழ்க் கையைப் பாழாக்கிட்டது. நான் பைத்தியம், என் புத்தி கெட்டுப் போச்சு. என்னுேட நினைவுகளை, எண்ணங்களைப் பகிர்ந்துக்க-ஒரு வரும் தயாராயில்லே. என் மூளைக்குள்ளே ஏதோ கனவு அநாதையா அலையறது: யாரோ என்னை அந்தக் கனவுக்குள்ளே முழுகிப் போகச் சொல்ருங்க. என்னுேட இருதயத்துக்கு மிகவும் நெருங்கி

274

யிருந்த அந்தப் பொண்ணை - அவ பேரு பாலின் ; அவ உசரமா இருப்பா அவ கண்ணு நீலமா இருக்கும்-நீங்க விரட்டிப்பிட்டீங்க, அப்பா. நான் சமுத்திரம் பார்த்ததில்லே ஆணுல் வசந்த காலத்து ஆகாசத்தைப் பார்த்திருக்கேன். அந்த ஆகாசத்துக்குக் கீழே ஸோனுலி பாலி ஆத்தோட தண்ணீர். அதிலே அவளோட முகம் நிழலாடறது. ஆகாசத்திலே இருக்கிற ஒரு பெரிய நட்சத்திரத்தோட பிரதிபிம்பத்தைத் தண்ணிரிலே பார்த்தால், அவ என்னைத் தூர தேசத்திலிருந்து கூப்பிடறமாதிரி இருக்கு ‘மணி, போகாதே! வில்லோ மரத்துக்குக் கீழே நாம உக்காந்துணடு சாந்தா கிளாசைப்பத்திப் பேசுவோம். நீ போகாதே! அப்புறம் குளிர்காலத்துலே புல் மேலே நிறையப் பணித்துளிகளைப் பார்த்திருக்கேன். பனித்துளிபோல் பவித்திரமான அந்த முகததை நீங்க என்கிட்டேயிருந்து பிடுங்கிக் கிண்டு யோயிட்டீங்களே, அப்பா !”

இப்படிப் புகார் செய்துகொண்டே அவருடைய கெட்டிக்காரப் பிள்ளை - பைத்தியக்காரப் பிள்ளை - எரியும் சிதையைப் பார்த்து விம்மி விம்மி அழுகிருரன்.

மகேந்திரநாத் தம் கைத்தடியை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார். எவ்வளவோ காலமாக அவரைப் பச்சாதாபம் உறுத்து கிறது. அவர் சாவை நெருங்க நெருங்க இந்தப் பச் சாதாப உணர்வும் அதிகரிக்கிறது. அப்போதெல்லாம் அவர் தம்மை ஆதரவற்றவராக உணர்கிருர், இப்போது ஏனுே அவருக்குத் தோன்றியது, சீக்கிரமே சந்திராயனத்தை நடத்தி முடிப்பது தேவலே என்று. இனி தாமதிப் பதில் அர்த்தம் இல்லே. பன்னிரண்டு பிராமணர்களுக்குப் போஜனம் செய்து வைக்கவேண்டும். அதன் பிறகு பிராயசித்தம் செய்து கொண்டுவிட வேண்டும். இவை இரண்டும் முடிந்துவிட்டால் வாழ்க் கையை விட்டு வெளியேற அனுமதி கிடைத்த மாதிரிதான். அவருடைய உயிர் சம்சார பந்தத்திலிருந்து, சம்சார துக்கத்திலிருந்து விடுதலை பெற்றுக் கடவுளே அடைந்துவிட்டால் நல்லது,

"என்னே விட்டுக்குக் கூட்டிக்கிண்டு போ" என்று சொல்வி அவர் பல்ட்டுவின் தோளின்மேல் தம் கையை வைத்தார்.

அவர் தம் உலகத்துக்கு, தம் குடும்பத்துக்குத் திரும்ப விரும் பினுர், அவருடைய குடும்பத்தினர் அவரை அவருடைய சொந்த அறைக்கு கூட்டிப் போவார்கள், இருண்ட, காற்று வராத அறை. ஜன சந்தடியற்ற, பல்லியின் ஒலியைத் தவிர வேறு ஒலியில்லாத அறை, எல்லாமே சூனியமாக இருக்கிறது அந்த அறையில், சூனிய மான அவர் அந்தச் சூனியமான அறைக்குத் திரும்பிச் செல்கிருர், அவருடைய மனக் கண்ணில் காற்றேட்டமில்லாத ஓர் இருட்டு அறை தெரிகிறது.

275

ஆளுல் பையன்களின் குறும்புத்தனத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா? அவர்கள் கிழவரை வைத்துக்கொண்டு விளையாடினுர்கள். படுகையைக் கடந்து அரசமரத்தடியில் அவரைக் கூட்டிக்கொண்டு வந்து நின்று, அவரை அங்கே விட்டுவிட்டு, "இப்போ சொல்லுங்க, நீங்க எங்கே இருக்கீங்க?" என்று கேட்டார்கள்.

பையன்களின் கையில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடிஞர் கிழவர். அவர்கள் அவரை வைத்துக்கொண்டு விளையாடினர்கள், புதரில் அவரை நிறுத்திவைத்துப் பயமுறுத்தினூர்கள். கிழவர் கை கூப்பிக் கும்பிடாத குறையாக அவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு, “பசங்களா, நீங்க ரொம்ப நல்ல பையங்க, என்ன விட்டுக்குக் கூட்டிக்கிண்டு போங்க" என்றர்.

"பயப்படாதீங்க, தாத்தா ! நாம தோடார்பாகிலே இருக்கற ஆலமரத்தடியிலே இருக்கோம்" என்ருன் சோனு,

"நாங்க உங்களோட "பலாந்தி' விளையாடப் போருேம்" என்று சொன்னுன் லால்ட்டு, அவர்கள் கிழவரை மெதுவாகக் கீழே உட்கார வைத்தார்கள். கிழவரைத் தங்கள் சம வயதுக்காரராகப் பாவித்து இங்குமங்கும் ஓடினுர்கள் : "ராஜா அதோ மரத்தடியிலே உட்கார்ந் திருக்கார் ! அவரைத் தொட்டுட்டா ஜயம் !"

இந்த விளையாட்டு மும்முரத்தில் மகேந்திரநாத்துக்கு வீட்டு நினைவு மறந்துவிடடது. மரக்கிளைகளில் பறவைகள் சப்தித்தன. தூரத்தி லிருந்து மாடு கன்றுகளின் மூக்காரம் கேட்டது. வெகுதூரத்தில் யாரோ மரம் வெட்டினர்கள். தொலைவில் யாரோ நடந்து போனுர் கள். ஒரு வேளை அது அவருடைய பைத்தியக்காரப் பிள்ளேயாக இருக்கலாம். இயற்கைச் சூழல் அவரை மறுபடி குழந்தைப் பருவத் துக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டதாக அவருக்குத் தோன் றியது. அவர் தம் தடியை மடியில் வைத்துக்கொண்டு, அசையாமல் புத்தரைப் போல் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். தூரத்தில் ஸோனுலி ஆற்று நீரில் படகுகள் மிதந்தன. அவற்றின் பாய்களின் மேல் சிவப்பு, நீலநிறப் பறவைகள் உட்கார்ந்திருந் தன. அவர் உட்கார்ந்தவாறே தம் குழந்தைப் பருவத்தை நினைவு கூர்ந்தார். குழந்தைப் பருவம் திரும்பி வருகிறது. நதியில் ஒரு படகு போகிறது, அருகில் ஒரு சிவப்பு, நீலப் பறவை பறந்து வருகிறது. அவருக்கு நாற்புறமும் குழந்தைப் பருவம் விளையாடிக் கொண்டு திரிகிறது. அவர் பழைய குழந்தைப் பருவத்தின் அடை யாளம். பையன்கள் இப்போது திறந்தவெளியில் பாட்டுப் பாடிக் கொண்டு கண்ணுமூச்சி விளையாடினுர்கள். ஊரிலுள்ள மற்றப் பையன்களும் அந்த விளையாட்டில் சேர்ந்துகொண்டார்கள்.

சுபாஷ், கிரணி, காலாபா காட், தோடார்பாகிலிருந்து சின்னப் பாதிமா, எல்லாரும்.

இப்போது மகேந்திரநாத்தின் மனக் கண் முன்னே அவருடைய பைத்தியக்காரப் பிள்ளையின் முகம் தெரியவில்லை. ஏனெனில் வாழ்க் கையில் சுகம் எப்போதும் நிரந்தரமாக இருப்பதில்லை; துக்கமும் அப்படித்தான். வெகுகாலத்துக்கு முந்தைய குழந்தைப் பருவம் மட்டும் இந்த இயற்கைச் சூழலில் மறுபடியும் மறுபடியும் திரும்பி வந்தது. அவர் தாம் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை மறுபடியும் அடையும் ஆசையில் தாமும் கண்ணுமூச்சிப் பாட்டை மெல்லப் பாடத் தொடங்கினூர்,

அவர் சிறுவனுக இருந்தபோது ஆலமரம் இவ்வளவு உயரமாக இல்லை, அவர் கண்முன்னே அவருடைய இளமைப் பிராயத்துச் சகாக்கள் தோன்றினுர்கள். அவர்கள் அதே பாட்டைப் பாடிக் கொண்டு கண்ணுமூச்சி விளையாடினுர்கள். ஆளுல் காலந்தான் எவ்வளவு விரைவில் கழிந்துவிடுகிறது! நீண்ட காலம் கழிந்ததாகத் தெரியவில்லை - ஆல்ை அதற்குள் அவர்கள் யாவரும் போய் விட்டார்கள். ஒருவர் கூட உயிருடன் இல்லை. அவர்கள் ஆலமரத் தடிக்கு மறு படி எப்படி வரமுடியும்? அவருக்கு வருத்தமாய் இருந்தது. அவருக்குள்ளே யாரோ ஒருவர் இருந்துகொண்டு சொல்கிருர் : "உன் சகாக்களில் யாரும் உயிரோடு இல்லை ; நீ ஒருவன்தான் இங்கே காவல் காத்துக்கொண் டிருக்கிருய் !" என்று.

இந்த இயற்கைக்குச் செடி கொடிகளுக்கு, பறவைகளுக்குத் தாம் அந்நியமாகிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அவர் த6ரியாக விடப்பட்டிருக்கிறர், பசுமையான செடிகளும் மரங்களும் அடர்ந்த காட்டில் அவர் ஓர் உலர்ந்த மரமாக, சும்மா இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறர். அவர் ஒரு துறவியின் பாழடைந்த ஆசிரமத் துக்கு ஒப்பானவர். அதில் வாழ்ந்து வந்த துறவி எப்போதோ தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பிப் போய்விட்டார்.

அவரால் இனியும் சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை, அவர் எழுந்து தனியாக, யாரும் அவரைக் கவனிக்காதபோது, ஆற்றுப் பக்கமாக நடக்கத் தொடங்கினர்.

தாத்தா மரத்தடியில் இல்லை என்பதை முதல் முதலில் கவனித்தது சோணுதான். அவன், "தாத்தாவைக் கானுேம்” என்று கத்தினுன்,

விளையாட்டு மும்முரத்தில் அவர்கள் கிழவர் எழுந்து ஆற்றுப் பக்கம் போனதைக் கவனிக்கவில்லை. இப்போது அவர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே ஊரை நோக்கி ஒடிஞர்கள் : "தாத்தாவைக் காணுேம்! மரத்தடியிலே காணுேம், ஒரு இடத்திலேயும் காணுேம்."

277

ஈசம் படுகையில் நின்றுகொண் டிருந்தான். அவனுக்கு நாற் புறமும் தர்மூஜ் வயல்கள். மஞ்சள் நிறப் பூக்கள். பெரிய பெரிய கொடிகளின் இடுக்கில் நெருப்புக் கோழியின் முட்டைபோல் தர்மூஜ் பழங்கள் தெரிந்தன. கறுப்பு நிறத்தில் பளபளத்தன அவை. இந்தத் தடவை குளிர்காலம் கழிவதற்குள்ளேயே வயல் நிறையத் தர்மூஜ் பழுத்துவிட்டது. இந்தத் தடவை சந்தைக்கு நிறையத் தர்மூஜ் எடுத்துக்கொண்டு போகலாம்.

சிறிய டாகுர் வயல் வரப்பு விஷயமாகப் புகார் செய்ய வீட்டை விட்டுக் கிளம்பினுர், வழியில் மொத்த வியாபாரியைச் சந்தித்தார். அவனுடன் தர்மூஜ் கொள்முதல் சம்பந்தமாகப் பேசிவிட்டு வயலுக்கு வந்தவர் தர்மூஜ் பயிரைப் பார்த்துவிட்டுத் திகைத்துப் போனுர், இந்தத் தடவை விளைச்சல் ரொம்பப் பிரமாதம் என்று ஈசம் அவரிடம் சொல்லவேயில்லை. சில நாட்களுக்குள் வயலின் தோற்றம் எவ்வளவு மாறிப் போய்விட்டது! தர்மூஜ் சந்தைக்குப் போகும். நாளே அல்லது நாளை மறுநாள் முதல் இந்த வழியாக, அல்லது ஆற்றுமனலில், பெரிய பெரிய குதிரைகள் போகும். சந்தையின் போது குதிரைப் பந்தயம் நடக்கும்,

ஸோனுலி பாலி ஆற்றில் படகுகள் பாய்களை விரித்துக்கொண்டு போகத் தொடங்கிவிட்டன. இந்த ஒரு மாதந்தான் படகுகள் போகமுடியும். அதன் பிறகு நதியில் தண்ணிர் குறைந்துபோய் முழங்கால் மட்டுமே இருக்கும்.

ஈசம் வயலுக்குள் இங்குமங்கும் போஞரன். இலைகளின் இடுக்கு வழியே தர்மூஜ் பழங்களைப் பார்த்து அவற்றை விரலால் தட்டினுன், பாதி பழுத்த பழங்கள் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். விரலால் தட்டிப் பார்த்தால் எந்தப் பழத்தைப் பறிக்கலாம் என்று அவனுக்குத் தெரியும். ஒரு பழம் இருபது சேர் எடை இருக்கும். அவனுல் சேர்ந்தாற்போல் இரண்டு பழங்களைத் தூக்கிக்கொண்டு போக முடியாது. ஒவ்வொரு பழம் இரண்டு கைகளாலும் சேர்த்துப் பிடிக்க முடியாதபடி அவ்வளவு பெரியதாக இருந்தது. அதை மார்புடன் அஃனத்து எடுத்துப் போக வேண்டியிருந்தது.

ஈசம் ஒவ்வொன்ருகப் பழங்களைப் படகுக்குள் கொண்டுபோய் வைத்தபோது யாரோ அந்தப் பக்கம் தள்ளாடிக்கொண்டு வருவதைக் கவனித்தான். அவனுடைய முழுக் கவனமும் பழங்களைப் பறிப்பதில் இருந்ததால் அந்த மனிதரை நன்ருகப் பார்க்கவில்லை. காற்று அடித்தபோது தூரத்தில் ஒரு தர்மூஜ் இலை விலகி அதன் இடுக்கில் ஒரு பெரிய பழம் தெரிந்தது. அவன் அதனருகில் ஓடினுன், அதற்குள் காற்று நின்றுவிட்டது. இலைகள் பழத்தை மறைத்துவிட் டன. அவன் அங்குமிங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். சரியான

278

பக்குவத்தில் பழத்தைப் பறிக்காவிட்டால் அது வெடித்து வீணுகப் போய்விடும். மறுபடி காற்று வந்தால் இலை விலகி, பழம் இருக்குமிடம் தெரியும், மீண்டும் காற்று அடிப்பதற்காகக் காத்திருந்தான். அவன் தலைநிமிர்ந்து பார்த்தபோது, அந்த ஆள் இரண்டு தடவை தடுக்கி விழுந்து மறுபடி எழுந்து நின்றதைக் கவனித்தான் தள்ளாடிக் கொண்டு வருகிற இந்த மனிதர் யார்? குளிர்காலத்து வெயிலில் பைத்தியம் போல் தள்ளாடிக்கொண்டு ஆற்றுப் பக்கமாக வருகிருரே! கவனித்துப் பார்த்துவிட்டு அவரிடம் ஓடிவந்தான் ஈசம், "அடேடே! இவரா! கண் தெரியாதவருக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? தன்னந்தனியாக நடந்து வருகிருரே!”

அவர் தம் இளமையைத் திரும்பப் பெற்றவர் போலக் கைத்தடியைச் சுழற்றுகிருர். காற்றுடன் சிலம்பம் விளையாடுகிருரர்.

"நான் மகேந்திரநாத் இப்போதும் என்னுல் எவ்வளவு தூரம் நடக்க முடியும், பார்! நான் எவ்வளவு காலமாக இந்த மண்ணில் வசித்து வருகிறேன், தெரியுமா? எனக்குச் சந்திராயனம் பண்ணப் போகிறர் களாம், என் பிள்ளைகள் ! அவர்களுக்கு எவ்வளவு அதிகப்பிரசங்கித் தனம்' என்று சொல்வதுபோல் இருக்கிறது அவர் முகம்.

இன்னும் கொஞ்சம் நடந்தால் தண்ணிரில் விழுந்துவிடுவார் அவர். ஈசம் ஓடிப் போய், விழவிருந்த அவரைத் தாங்கிக்கொண்டான், அவரைத் தன் மார்புடன் சேர்த்துப் பிடித்துக்கொண்ட போதுதான் அவன் கவனித்தான், அவருடைய கை கால்களில் அடிபட்டிருப் பதை, அடிபட்ட இடங்களிலிருந்து ரத்தம் வந்தது. ஏன் இப்படிச் செய்தார் இவர் ? இப்போது அவருடைய முகம் பொம்மையின் முகம் போல் சாதுவாக இருந்தது. சிறு குழந்தையைப் போல ஆகிவிட்டார் அவர் சிறு குழந்தையைப் போல அழுகிருரர்.

"உங்களுக்கு என்ன ஆச்சு, எசமான் ? நீங்க எங்கே போரீங்க?" *நீ என்னை எங்கே கூட்டிண்டு போறே?" 'வீட்டுக்கு வாங்க ," வீடு ! கிழவர் இப்போது கண்களே மூடிக்கொண்டார். என்ன செய்துவிட்டார் அவர் ! அவர் ஏன் தம் பைத்தியக்காரப் பிள்ளையை போல் அலைய ஆரம்பித்துவிட்டார்? அவருக்கு ஏன் இவ்வித மனக் கிளர்ச்சி? தம் சிறுபிள்ளைத்தனமான நடத்தைக் குறித்து அவருக்கே வெட்கமாகிவிட்டது. "சரி, என்னேக் கீழே விடு." "உங்க உடம்புக்கு என்ன ஆச்சு தெரியுங்களா?" *என்ன ஆச்சு?"

279

ஈசம் பதில் ஒன்றும் சொல்லவில்லை. கிழவரின் உடம்பில் அதிக ரத்தமேயில்லே என்று நன்ருகத் தெரிந்தது. அவருக்குப் பல இடங் களில் காயம் பட்டும் அதிக ரத்தம் வெளியே வரவில்லை.

ஈசம் அவரைத் தாங்கிக்கொண்டு குளத்தங்கரைக்கு வந்ததும் அவர்களைப் பார்த்துவிட்டு எல்லாரும் அங்கு ஓடிவந்தார்கள்.

இந்தப் பிராந்தியத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த அவர் அங்கே வழி தவறிவிட்டார். இப்படித்தான் அவர் எல்லாருக்கும் சமாதானம் சொன்னர்.

இவ்விதம் திருவிழா நாள் நெருங்கிவிட்டது. பெரிய பெரிய பந்தயக் குதிரைகள் ஒவ்வொன்முக ஆற்றங்கரை வழியே போகத் தொடங்கின. ஒரு மாத காலத்துக்கும் மேலே திருவிழா நடக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் குதிரைப் பந்தயம். குதிரையின் கழுத்து மணியொலி கேட்டால் மக்கள் வெளியே ஓடிவருவார்கள், யாரு டைய குதிரை வருகிறது என்று பார்க்க. தூரத்தில் குதிரையின் முகம் தெரிந்ததுமே அவர்கள் ஆரவாரம் செய்வார்கள், ‘நயா பாடாக் குதிரை !.பிஸ்வாஸ் பாடாக் குதிரை !' என்று.

எல்லாரும் போவார்கள் திருவிழாவுக்கு. ரஞ்சித் போலான், மாலதி போவாள், ஆபுவும், சோபாவும் போவார்கள். சின்ன டாகுர் போவார். படகில் தர்மூஜ் பழங்கள் போகும். படகில் தர்மூஜை ஏற்றிக்கொண் டிருந்தார்கள். லால்ட்டுவும் பல்ட்டுவும் பாண்டும் சட்டையும் அணிந்துகொண்டு தயாராகிவிட்டனர், திருவிழாவுக்குப் போக. தரியன் உதித்ததும் அவர்கள் நடக்கத் தொடங்குவார்கள், சோணு மட்டும் திருவிழாவுக்குப் போகப் போவதில்லை; அவனுல் அவ்வளவு தூரம் நடக்க முடியாது.

மற்றவர்கள் திருவிழாவுக்குப் போவதற்குச் செய்துகொண் டிருந்த ஆயத்தங்களைப் பார்த்துக்கொண்டே வராந்தாவில் உட்கார்ந்திருந் தான் சோஞ. அவனுக்கு ஒரே ஆத்திரம். யாருடனும் பேசவில்லை அவன். சிற்றப்பா அநுமதி அளித்தால்தான் அவன் திருவிழாவுக்குப் போகலாம். ஆணுல் வீட்டில் யாருக்கும் சிற்றப்பாவிடம் சொல்லத் தைரியமில்லே.

சோனு அதிகாலையிலிருந்து அம்மாவிடம் நச்சரித்தான், "நானும் போவேன் நானும் போகணும் ! நீ சித்தப்பாகிட்டே சொல்லு!"

28O

ஆளுல் சிற்றப்பாவிடம் இந்தப் பேச்சை எடுக்க அம்மாவுக்கும் துணிவு வரவில்லை. நேற்று ஒரு தடவை அவள் மெதுவாகச் சொன் னுள், சோனுவும் திருவிழாவுக்குப் போகலாமே என்று. அதற்குச் சிற்றப்பா, "சின்னப் பையனுலே அவ்வளவு தூரம் நடக்க முடியாது, மேலும் திருவிழாவிலே ரொம்பக் கூட்டமாக இருக்கும், வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். அதற்கு மேல் வற்புறுத்தத் தயக்கமாக இருந்தது தன மாமிக்கு.

சோணு தூணின்மேல் சாய்ந்துகொண்டு நின்றன். லால்ட்டுவும் பல்ட்டுவும் இஸ்திரி போட்ட பாண்ட், சட்டையணிந்துகொண்டு இங்குமங்கும் வளைய வந்ததைக் கண்டு அவன் "கோ"வென்று கதறி அழத் தொடங்கிவிட்டான். எல்லாரும் புறப்படும் நேரம் நெருங்க நெருங்க அவனுடைய அழுகையும் அதிகமாகியது. அவன் அழுவதைப் டார்த்தாவது சிற்றப்பா அவனைத் திருவிழாவுக்குப் போக அனுமதிக்கமாட்டாரா என்ற நைப்பாசை அவனுக்கு.

ஈசம் ஒரு பெரிய தர்மூஜ் பழத்தைத் தலையில் தூக்கிக்கொண்டு வந்தான். அவ்வளவு பெரிய பழத்தைப் பார்த்து அவனுக்கே ஆச்சரியம் தாங்கவில்லே. அதன் எடை ஒரு மனங்குக்கு மேல் இருக்கும். அவன் அதை விற்பனைக்கு அனுப்பவில்லை ; வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டான், எசமான் விட்டில் எல்லாரும் சாப் பிடட்டும், அதை நறுக்கினுல் உள்ளே சிவப்பாக இருக்கும். கறுப்பு விதைகள் இருக்கும். வசந்த காலத்தில் தர்மூஜ் பழத்தின் ரசம் கற்கண்டு போட்ட சர்பத் மாதிரி ருசியாக இருக்கும்.

அவன் விட்டு வாசலுக்கு வந்ததும், "சோனு பாபு, எங்கே இருக் கீங்க ? அரிவாள் கொண்டாங்க" என்று அழைத்தான்.

ரஞ்சித் வாசலில் நின்றுகொண் டிருந்தான். கூடவே ஆபுவும் சோபாவும் நின்றுகொண் டிருந்தார்கள். மாலதியும் வந்திருந்தாள். திருவிழாவுக்குப் போகவிருந்தவர்கள் எல்லாருமே அங்கே கூடி யிருந்தார்கள். இப்போதே ஊரிலிருந்த ஜனங்கள் திருவிழாவுக்குப் போகத் தொடங்கிவிட்டார்கள். சோனுவைத் தவிர எல்லாரும் திருவிழாவுக்குப் போகப் போகிருர்கள். அவன் ஈசம் கூப்பிட்டதைக் கேட்டும் வாசலுக்கு வரவில்லை. தூண்மேல் சாய்ந்தவாறே கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தான் அவன்.

"இதை நறுக்கி எல்லாருக்கும் கொடுங்க!" என்று ஈசம் ரஞ்சித்திடம் சொன்னுன்,

அவன் ஒரு பெரிய வாழையிலையை நறுக்கிக்கொண்டு வந்தான். பழத்தில் ஒரு பகுதியை வெட்டிச் சுவாமிக்காக வைத்துவிட்டுப் பாக்கியை ரஞ்சித் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தான். அப்போது

281

ஈசம் கேட்டான், “சோனு பாபுவைக் காணுேமே! அவர் எங்கே?" என்று.

"சோணு அழுதுக்கிட்டு இருக்கான்" என்றுன் லால்ட்டு. "ஏன் ၇•• "திருவிழாவுக்குப் போகணும்னு." "நீங்க போகப் போறிங்க, சோனுபாபு போகக் கூடாதா?" "சித்தப்பாதான் போகக் கூடாதுங்கருரர்." "போகக் கூடாதுன்னு சொல்லிட்டா ஆச்சா ?" என்று சொல்லிக் கொண்டே ஈசம் உள்ளே போய்ச் சோனுவைக் கூப்பிட்டான் : "சோனு பாபு எங்கே? உங்களை யாரு திருவிழாவுக்குப் போகக்கூடா துன்னது? நான் கூட்டிக்கிட்டுப் போறேன் உங்களே. யாரு தடுக்கிருங்க, பார்ப்போம்!”

“அவனுலே அவ்வளவு தூரம் நடக்க முடியாதே! யாரு அவனைத் தூக்கிண்டு போவாங்க ? என்ருர் சிற்றப்பா.

"நான் தூக்கிக்கிட்டுப் போறேன். சோனுபாபு, நீங்க வாங்க." இருண்டு கிடந்த ஆகாயம் சட்டென்று மேகங்கள் விலகிப் பளிச் சென்று ஆகிவிட்டதாக தோன்றியது சோனுவுக்கு. கெட்டுப்போனது ஏதோ மறுபடி கிடைத்துவிட்டதுபோல் இருந்தது. அவன் அம்மா விடம் ஓடிப் போய்ச் சொன்னுன: "அம்மா, என்னை சித்தப்பா போகச் சொல்லிவிட்டார். ஈசம் என்னைக் கூட்டிக்கிண்டு போகப் போருரன்." சோனு இந்த நற்செய்தியை எல்லாரிடமும் போய்ச் சொன்னுன், தாத்தா, பாட்டியிடம் போய்ச் சொன்னுன். திருவிழா போகும் மகிழ்ச்சியில் தன்னை மறந்துவிட்டான் அவன். புதுமையான ஒரு வாழ்க்கை. திருவிழா, கூட்டம், ஆறு, கால்வாய்கள் எல்லாம் சேர்ந்து மனிதனுக்குள் ஓர் உயிர்ப் பெருக்கைக் கொண்டுவந்து விடுகின்றன. இதுவரை திருவிழா என்பது ரகசியமாகவே இருந்தது சோணுவுக்கு. இப்போது அந்த ரகசியம் புரிந்துவிடும் அவனுக்கு. திருவிழாவின் ரகசியம் என்ன? எப்படிப்பட்ட ஜனங்கள் திருவிழா வில் இருப்பார்கள் ? குதிரைப் பந்தயத்தில் ஜயிக்க ஏன் எல்லாரும் இப்படித தவிக்கிறர்கள்? இம்மாதிரி எவ்வளவோ கேள்விகள் தோன்றின சோணுவின் மனத்தில்,

அவன் ஈசமின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாருக்கும் முன் னுல் நடக்கத் தொடங்கினுன் கொஞ்சதூரம் Fb Gol- கொஞ்சதூரம் ஈசமின் தோளில் சவாரி. அவனுக்குக் கால் வலித்தால் அவனைத் தன் தோளில் தூக்கிக்கொள்வான் ஈசம். கொஞ்சதூரம் போனதும் பாலியாபாடாவைக் கடந்ததும் ஆற்றங்கரையில் ஒரு தண்ணிர்ப் பந்தலைப் பார்த்தார்கள் அவர்கள். அதன் பிறகு வரிசையாக வளர்ந்திருந்த செங்கடம்பு மரங்களுக்குக் கீழே வெல்லப்பொரியும்

282

சிவப்புநிறச் சர்க்கரையுருண்டையும் விற்கப்படுவதைக் கண்டார் கள். ஈசம் அவனுக்கு அரை அணுப் பொரியும், காலணுவுக்குச் சர்க்கரையுருண்டையும் வாங்கிக் கொடுத்தான். சோனு தன் இரு பைகளிலும் பொரியை நிரப்பிக்கொண்டு, சர்க்கரை உருண்டை இருந்த தொன்னையைக் கையில் வைத்துக்கொண்டான். அவனு டைய கோஷ்டியில் சிலர் முன்னுல் போய்விட்டார்கள். சிற்றப்பா இருந்திருந்தால் இதையெல்லாம் அவனைச் சாப்பிட விடமாட்டார். பொரியைத் தின்றுகொண்டே நடந்தான் சோனு, தூரத்து மைதானத் தில் கூடாரங்கள் போட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் உச்சியில் கொடிகள் பறந்தன. யக்ஞேஸ்வர் கோவில் தெரிந்தது. அரச மரத்தைப் பிளந்துகொண்டு வானத்தை நோக்கி நீட்டியபடி நின்றது, கோவில் சிகரத்திலிருந்த திரிசூலம். தர்கா நிலத்தில் வரிசை வரிசை யாகக் குதிரைகள் போயின. யாரோ பனையோலை ஊதல் ஊதினுர்கள். ஆற்றில் எவ்வளவு படகுகள் அவர்களுடைய படகு ஒன்றும் திருவிழாவுக்கு வரும், தர்மூஜ் பழங்களை ஏற்றிக்கொண்டு. அது கால்வாய்கள் வழியே சுற்றுவழியில் வருவதால் வந்துசேரத் தாமத மாகும்.

ரஞ்சித்தின் கோஷ்டி ஒன்று நாராயண் கஞ்சிலிருந்து திருவிழா வுக்கு வரும். அந்தக் கோஷ்டியினர் திருவிழாவில் கத்திச் சண்டை, சிலம்பம் எல்லாம் போட்டுக் காண்பிப்பார்கள். புஜங்கன், கோபால் எல்லாரும் கூடாரம் அடிப்பதற்காக இரண்டு நாள் முன்னதாகவே திருவிழா மைதானத்துக்கு வந்துவிட்டார்கள். வெள்ளே ஃபிராக், கறுப்புக் காற்சட்டை, காலில் பூட்ஸ் அணிந்த சின்னச் சின்னப் பெண்கள் - பதின் மூன்று, பதின் நான்கு வயதுப் பெண்கள் - வருவார்கள். அவர்களை ஆபீஸ் கட்டிடத்தில் தங்கலைப்பார்கள். இந்த ஏற்பாடுகளையெல்லாம் ரஞ்சித்தின் சங்கம் செய்திருந்தது. ஆணுல் முன்னுல் நின்று ஏற்பாடுகளைச் செய்தவன் புஜங்கன்தான். ரஞ்சித், தான் அவறறில் சம்பந்தப்பட்டிருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை.

மாலதி யக்ஞேஸ்வர் கோவிலுக்குப் போனபோது, ஜப்பர் திருவிழாக் கூட்டத்தில் நோட்டிஸ் வினியோகிப்பதைக் கவனித்தாள். அவன் மாலதியைப் பார்த்துச் சிரித்தான்; 'திருவிழாவுக்கு வந்திருக் கீங்களா, அக்கா?" என்று கேட்டான். அவனுக்குப் பக்கத்தில் அவளுக்குப் பழக்கம் இல்லாத சில முஸ்லீம்கள் நின்றிருந்தார்கள். பயம் காரணமாக மாலதிக்குச் சிரிப்பு வரவில்லை. அவளுக்கு அவனைக் கேட்க ஆசைதான், "சாமு திருவிழாவுக்கு வந்திருக்கிருனு ?" என்று ஆணுல் அவனுக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் அவளை உறுத்துப் பார்த்தவிதம் அவளை அங்கே நிற்கவிடவில்லை. அவளுக்கு

283

ஆற்றில் குளிக்கவேண்டும்; கொஞ்சம் வில்வமும் துளசியும் வாங்கிக் கொள்ள வேண்டும். அவள் நேரே கோயிலை நோக்கி நடந்தாள்.

ஒரு சின்னக் குழந்தை - அதன் கையில் ஒரு சின்ன ஆட்டுக் குட்டி-திருவிழாக் கூட்டத்தில் வழி தவறிவிட்டது. குழந்தையின் அக்கா அதை மரத்தடியில் நிறுத்தி வைத்துவிட்டு ஆற்றில் ஸ்நானம் செய்யப் போயிருக்கிருள். ஸ்நானம் செய்துவிட்டு வந்ததும் குழந்தையைக் கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லி இருந்திருக்கிருள்.

மனிதனுக்குள்ளே ஒரு மனம் இருக்கிறது. அந்தப் பைத்தியக் கார மனம் நதியைக் கண்டால் கும்மாளம் போடத் தொடங்கிவிடும். திருவிழாவில் நிறைய அழகான இந்துப் பெண்களின் கூட்டம். அவர்கள் குளித்துவிட்டு நனந்த உடையுடன் வெளியே வரும் போது, அந்த உடம்பைக் கருநாகம் போல் கொத்தவேண்டும் என்ற வெறி ஏற்படும் அந்த அழகைப் பார்த்துவிட்டுச் சும்மா இருக்காது மனசு.

கோபால்தியைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பையன்கள் திருவிழாவில் வாலண்டியர்களாகப் பணி செய்தார்கள்.

'ஜனங்களே, கள்ளங்கபடமில்லாமல் பழகுங்கள், சந்தோஷமாக. இருங்கள். ஆனல் விஷமம் செய்தால் கட்டி இழுத்துக்கொண்டு போய்விடுவோம்!"

வாலண்டியர்கள் தண்ணிர்ப் பந்தல் நடத்துகிருரர்கள், கூட்டத்தில் தவறிப் போனவர்களத் தேடிக் கண்டுபிடிக்கிருரர்கள். பாட்ஜ் அணிந்துகொண்டு குதிரைமேல் இங்குமங்கும் சுற்றுகிறர்கள்.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணின் ஸ்தனத்தைக் கையால் அமுக்கினுணும். அவர்கள் அந்தப் போக்கிரியைப் பிடித்துவிட்டார் கள். அவன் லுங்கி அணிந்திருந்தான் கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றிக்கொண் டிருந்தான் ; கட்கத்தில் ஒரு தடியை வைத்திருந்தான். ஆற்றங்கரைப் படித்துறையில் நல்ல கூட்டம், "பழக்கமான பெண் தானே, அவளுடைய ஸ்தனத்தைத் தொட்டால் அவள் வெளியே சொல்லிவிட மாட்டாள்" என்று நினைத்திருக்கிறன் அவன். ஆனல் இந்துப் பெண்; அவளுடைய மானத்தைப் பொறுத்த விஷயம் இது. அவள் அசடுபோல் அழத் தொடங்கிவிட்டாள். இதை வாலண் டியர் ஒருவன் பார்த்துவிட்டான். அவன் அந்தப் போக்கிரியின் முடியைக் கையால் பிடித்துக்கொண்டு அவனுடைய பின்பக்கம் ஓர் உதை கொடுத்தான். -

இந்தச் செய்தி நெருப்புப் போல் திருவிழாக் கூட்டத்தில் பரவி விட்டது. யாருக்கும் எதுவும் சொல்லத் தைரியம் இல்லை. குதிரைகள் தர்கா நிலத்தில் புல் மேய்ந்துகொண் டிருந்தன. சாயங்கால

284

மானதும் அவை மைதானத்துக்கு வரும். பரந்த மைதானம், தூரத் தில் சிவப்பு, நீலக்கொடிகள் பறந்தன. ஒரு குதிரை - மூடா பாடாவைச் சேர்ந்த சுரேஷ் பாபுவின் குதிரையாக இருக்கலாம்வெள்ளைநிறக் குதிரை அது - அம்புபோல் பாய்ந்து வந்துகொண் டிருந்தது.

ஜப்பரும் அம்புபோல் பாய்ந்து வந்தான். அவனுடைய ஜாதிக் காரன் ஒருவன எல்லாரும் பிடித்துக்கொண்டு ஆபீஸ் கட்டிடத் துக்கு அழைத்துப் போனுர்கள். அவனுடைய ஜாதிக்காரர்கள் தலையைக் குனிந்துகொண்டு அவர்களுடன் போனர்கள், யாருக்கும் வாய் திறந்து பேசத் துணிவில்லை. ஜப்பர் தாவிக்கொண்டு ஓடிக் கூட்டத்துக்குள் புகுந்து, "எங்கே கூட்டிக்கிட்டுப் போநீங்க இவனை ?" என்று அதட்டிக் கேட்டான்.

"ஆபீசுக்கு” என்ருன் ஒருவன். "ஏன், என்ன பண்ணினுன் இவன் ?” "ஒரு பெண்னுேட ஸ்தனத்தை அமுக்கினன்." *அமுக்கினு என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவன் முன்னேறி வந்தான். அவனுடைய கோஷ்டியும் அவனைத் தொடர்ந்து வந்தது. ஆனல் ஆவர்களால் அந்த இளைஞனே அணுகமுடியவில்லை. அதற்குள் வாலண்டியர்கள் அவனை - அவன் பெயர் அன்வர் - ஆபீசுக்குள் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அவன் மேல் அடிகள், உதைகள், குத்துக்கள் விழுந்தன. "பாவம், அன்வர்! உனக்கு என்னப்பா ஆசை 1 மலர்ந்த தாமரையைப் போன்ற அந்த அழகான ஸ்தனத்தைய பார்த்து நீரில் நீந்தும் வெள்ளிமீனைப் பார்ப்ப தாகக் கனவு கண்டாயா ? அந்த மீனைப் பிடிப்பதாக நினைத்து ஸ்தனத்தைப் பிடித்துவிட்டாயா?"

சூரியன் அஸ்தமித்துக்கொண் டிருந்தான். பெரிய கூடாரத்தில் உயர்குடும்பப் பெண்கள் உட்காருவதற்காக ரத்தினக் கம்பளம் விரித்திருந்தது. அழகழகான ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள் அவர்கள். அவர்களுடைய முகங்கள் அம்மனின் முகம் போல் அழகாய் இருந்தன. வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் மின்ன அவர்கள் குதிரைப் பந்தயம் பார்ப்பார்கள். ஆற்றில் வந்துகொண் டிருக்கும் ஆயிரக்கணக்கான படகுகளிலிருந்து வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் வந்து இறங்கிவிட்டால் திருவிழாவில் மகிழ்ச்சி புரண்டோடும்.

குதிரைகள் தர்காவிலிருந்து ஒவ்வொன்ருக வெளியேவர ஆரம்பித்து விட்டன. அவை முதலில் கனவான்களுக்குச் சலாம் செய்துவிட்டுப் பந்தய மைதானத்தில் இறங்கும். "நாங்க வெகு தூரத்திலேருந்து வந்திருக்கோம், பந்தயம் ஓடி ஜயிக் க. பந்தயத்தை ஜயிச்சுட்டு நாங்க

285

திரும்பிப் போயிடுவோம். நீங்க நல்ல மனசு உள்ளவங்க. உங்க மைதானத்திலே நாங்க பந்தயம் ஓடப்போருேம் !" என்று சொல்வது போல் குதிரைக்காரர்கள் தங்கள் தங்கள் குதிரைகளின் திறமையைக் காட்டத் தொடங்கிஞர்கள். சில குதிரைகள் தங்கள் காலைத் தூக்கி அங்கே கூடியிருந்த சிறு பெண்களுக்கு நடனம் ஆடிக் காண்பித்தன. இப்போது திருவிழாவில் இரண்டு கட்சிகள் ஏற்பட்டுவிட்டன. ஆபீஸ் கட்டிடத்துக்குள் இந்து இளைஞர்கள் கூடியிருந்தார்கள். வெளியே முஸ்லீம் இளைஞர்கள். போலீஸ் வந்துவிட்டது. போலீஸ் இந்துக்களின் கட்சியை ஆதரித்தது. சட்டம் இருக்கிறது : தீர்ப்பு இருக்கிறது; குற்றம் சாட்டப்பட்ட இளைஞனைப் போலீஸ் ஸ்டேஷ னுக்கு அழைத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

ஆணுல் யார் சொல்லி யார் கேட்பது? முஸ்லீம்கள் ஆபீஸ் கட்டிடத்துக்குள் நுழைந்து அன்வரை மீட்க முயற்சி செய்தார்கள். இந்துக்களுடைய துப்பாக்கிகள் வெடித்தன. சற்றுத் தூரத்தில் நடன மாடிக் கொண்டிருந்த குதிரைகள் மிரண்டுபோய் மனம்போன போக்கில் ஓடத் தொடங்கின. அவரவர் எந்த எந்தப் பக்கம் ஒட முடியுமோ அந்த அந்தப் பக்கம் ஓடினர்கள். ஈசம் தர்மூஜ் விற்றுக் கொண்டிருந்தான். சோனு, லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் சர்க்கஸில் சிங்கம் புலி விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள், பாண்டு வாத்தியம் ஒலித்துக்கொண் டிருந்தது. புலி தன் பாதத்தை நக்கிக் கொண்டிருந்தது. உயரே இருந்து தொங்கும் கம்பிகளில் சர்க்கஸ் செய்துகொண் டிருந்தாள் ஓர் அழகான பெண்.

அப்போது திடீரென்று அந்தத் துப்பாக்கிச் சத்தம் திருவிழா முழுவதும் இருளைப் பரப்பிவிட்டது.

கலகத்தில் இரண்டு பினங்கள் விழுந்துவிட்டன. இருளில் தீவர்த்திகளின் வெளிச்சம் தெரிந்தது. பெண்கள் ஆபீஸ் கட்டிடத் துக்குள் வந்து சேர்ந்துவிட்டார்கள். தர்காவிலிருந்து குதிரைகள் ஒவ்வொன்ருக வெளியே வந்தன. காஸ்தாரிகளின், கைகளில் தீவர்த்திகள். திருவிழா மைதானம் எங்கும் தீவர்த்திகள் எரிந்தன. இடையிடையே அல்லா ஹோ அக்பர்!" என்ற ஒலி எழுந்தது. ஆபீஸ் கட்டிடத்திலிருக்கும் இந்துக்கள் உரக்கக் கத்தினுர்கள், 'வந்தே மாதரம் !" என்று.

யார் எங்கே சிதறிப் போனுர்கள் என்று புரியவில்லை. ஈசம், சோனு, லால்ட்டு, பல்ட்டு எல்லாரையும் சர்க்கஸ் கூடாரத்தில் உட்கார வைத்துவிட்டுத் தர்மூஜ் விற்கப் போயிருந்தான். சர்க்கஸ் முடிந்ததும் அவர்கள் ஈசம் இருக்கும் இடத்துக்கு வரவேண்டுமென்று ஏற்பாடு. கலகம் ஆரம்பித்ததுமே ஈசம் சர்க்கஸ் கூடாரத்துக்கு ஓடினுன். நல்ல இருட்டு, மக்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்

286

தார்கள். வழி தவறிப் போயிருந்த அந்தப் பையனையும் அவன் வைத்திருந்த ஆட்டுக் குட்டியையும் யாரோ கூட்டத்தில் மிதித்து விட்டுப் போய்விட்டார்கள். பாவம், அக்காவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் பையன். அக்கா வந்ததும் அவளுடன் கோவி லுக்குப் போகப் போவதாக நினைத்துக்கொண் டிருந்தான்.

ஓர் இளைஞன் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் நண்பகலில் நடந்தது. அது முதற்கொண்டே பல புரளிகள் பரவிக்கொண் டிருந்தன. ஜப்பர் தலையிட்டதிலிருந்து களேபரம் அதிகரித்தது. எல்லாரும் நினைத்தார்கள், 'திருவிழா, சந்தை என்ருல் இதுமாதிரி ஏதாவது அசம்பாவிதம் நேரத்தான் செய்யும், பெரிய வர்கள் தலையிட்டு நிலைமையைச் சமாளித்துவிடுவார்கள்' என்று. ஆனுல் இந்த ஜப்பர்! அவன் தன் ஜாதிக்காரர்களைப் பார்த்துக் கத்தினுன் : "உங்களுக்கு மானம், மரியாதை கிடையாதா? நீங்க இன்னும் எவ்வளவு நாள்தான் இந்தமாதிரி மாடா, குதிரையா வாயில்லாப் பூச்சியா இருக்கப் போறிங்க?"

சாமு சொற்பொழிவு நிகழ்த்தும் பாணியில் பேசினுன் ஜப்பர். நிறையக் கூட்டத்தைப் பார்த்ததும் அவனுக்குக் குவழி பிறந்து விட்டது. அவன் தன் பெரிய மனிதத்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக, தான் நினைத்தால் என்னென்ன செய்யமுடியும் என்று காட்டுவதற்காக அன்வரை மீட்கும் முயற்சியில் இறங்கினுன், அவன் தன் சகாக்களுடன் ஆபிஸ் கட்டிடத்துக்குள் நுழைய முற்பட்டபோது துப்பாக்கிகள் வெடித்தன. அவன் இதை எதிர் பார்க்கவில்லை. அவன் கண்முன்னே இரண்டு பேர் பிணமாகக் குப்புற விழுந்தனர். நெருப்புப் பற்றிக்கொள்ள எவ்வளவு நேரமாகும்? கலகக்காரர்கள் ஆளுக்கொரு தீவர்த்தியை எடுத்துக்கொண்டு வருவார்கள் அவர்கள் இஷ்டம்போல் நெருப்பு வைப்பார்கள். அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு ஒடிவிடுவார்கள்.

ஈசம் சர்க்கஸ் கூடாரத்தை நோக்கி ஓடினுன் : "ஐயோ, போச்சு ! எல்லாம் போச்சு!" கூடாரம் சிதைந்து கிடந்தது. அதன் ஒரு பகுதி எரிந்துகொண் டிருந்தது. புலி, சிங்கங்கள் நெருப்பில் சிக்கித் தவித்துக்கொண் டிருந்தன. பக்கத்தில் யாருமே இல்லை. யாரோ எல்லாவற்றையும் சூறையாடிவிட்டுப் போனதுபோல் இருந்தது.

என்ன செய்வது என்று புரியவில்லை ஈசமுக்கு. "அதிக டம்பமாக சோனுவைக் கூட்டிக்கொண்டு வந்தேனே! இப்போது என்ன செய்வது?" என்று அவன் தவித்தான். ஆபிஸ் கட்டிடத்துக்குப் போகலாமா என்று நினைத்தான். ஆணுல் ஆபீஸ் கட்டிடத்தை நெருங்கியபோது அவனுக்குத் தோன்றியது, இப்போது இருக்கும் நிலைமையில் அவன்லுங்கியை அணிந்துகொண்டு அங்கே போவது

287

உசிதமல்ல என்று. அப்புறம் நினைவு வந்தது, மூன்று சிறுவர்களும் அந்தப் பக்கம் ஓடிவந்திருக்க மாட்டார்கள் அவர்கள் அவன் தர்மூஜ் விற்கும் இடத்துக்குத்தான் போயிருப்பார்கள் என்று. இந்த நினைவு வந்ததும் அவன் நிற்காமல் ஓடினுன்

திருவிழாக் கூட்டத்துக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. நாற் புறமும் நெருப்புப் பற்றி எரிந்தது. இந்த நெருப்பு எவ்வளவோ கால மாக மண்ணுக்குள் ஒளிந்துகொண்டிருந்தது. தங்களுக்கு இழைக்கப் பட்ட அநீதியை, அவமானத்தை வெகுகாலமாகப் பொறுத்துக் கொண்டு வந்த மக்கள் இப்போது பொங்கி எழுந்து அந்த அவமா னத்துக்குப் பழிவாங்குகிருரர்கள். ஈசமுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவன் நெருப்புக் குவியல்களுக்கு நடுவில் நின்று கொண்டு கத்தினுள், "சோனு பாபு லால்ட்டு பாபு ! நீங்க எங்கே இருக்கீங்க? நான் எப்படி ஊருக்குத் திரும்புவேன்? ஊரிலே எப்படி என் முகத்தைக் காட்டுவேன்?"

அவன் பைத்தியம்போல் கத்திக்கொண்டே இருந்தான். கத்திக் கொண்டே இங்குமங்கும் ஓடினன் அவன். எங்கே பார்த்தாலும், உடைந்த கண்ணுடித் துண்டுகள். உடைந்த பல நிறக் கண்ணுடி வளையல் துண்டுகள் வழியில் சிதறிக் கிடந்தன. அந்த வழியில் ஒடும்போது அவை அவன் கால்களில் குத்தின. அதைப் பொருட் படுத்தவில்லை அவன். அவர்கள் மரத்தடியில் அவனுடைய கடைக் குப் பக்கத்தில் காத்துக்கொண் டிருக்கிறர்களோ, என்னவோ? ஆணுல் அங்கு அவன் வந்து சேர்ந்தபோது ஒருவரையும் கானுேம், பெரிய பெரிய தர்மூஜ் பழங்கள் மட்டும் நாலா பக்கங்களிலும் சிதறிக் கிடந்தன. யாரோ அவற்றை வாரி இறைத்துவிட்டு ஓடிப்போயி ருக்கிருரர்கள். அவற்றின்மேல் ரத்தக்கரை, அவனுடைய உடல் நடுங்கியது. அவன் வெறிபிடித்தவன் போல் கத்தினுன், "என்னுேட ஆளுகளை இழுத்துக்கிட்டுப் போனது யாரு?"

திருவிழாக் கூட்டத்தில் யாரையோ கொல்ல முற்பட்டவன் போல் அவனும் ஓடத் தொடங்கினுன் மைதானத்தின் நடுவில் நின்றுகொண்டு, ‘சோனுபாபு, சோனுபாபு எங்கே போயிட்டீங்க? கொஞ்சம் குரல் கொடுங்க. எங்கே ஒளிஞ்சுக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க. நான்தான் ஈசம். நான் உங்களை வீட்டுக்குக் கூட்டிக் கிட்டுப் போறேன். உங்களை வீட்டிலே கொண்டுபோய்ச் சேர்க் காட்டா என்னுேட ஜாதி, மானம், கெளரவம் எல்லாம் போயிடும்!" என்று கத்தினுன்,

தர்காவிலிருந்த குதிரைகளில் பெரும்பாலானவை ஜப்பரின் கட்சி யில் சேர்ந்துகொண்டு போராடின, எப்படி ஆரம்பித்த திருவிழா எப்படி ஆகிவிட்டது! கடை கண்ணிகள் சூறையாடப்பட்டன :

288

அலங்காரப் பொருள்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டங்கள் விற்கும் கடைகள், இரும்புச் சாமான் கடைகள் எல்லாம் நிர்மூலமாகிவிட்டன. இரண்டு மூன்று சர்க்கஸ் பெண் களைக் காணுேம். பயத்தால் ஓடி வந்த மனிதர்கள் ஆற்றங்கரையில் குப்புற விழுந்தார்கள்.

தர்மூஜ் ஏற்றி வந்த படகுகளும், வீட்டுப் பாத்திரங்கள் ஏற்றி வந்த படகுகளும் ஆற்றில் நின்றிருந்தன. தண்ணிரிலிருந்து, "ஐயோ! ஐயோ!" என்ற ஒலம் கேட்டது. எல்லாரும் உயிருக்குப் பயந்து கொண்டு தஃUதெறிக்க ஓடினுர்கள். குதிரைகளின் கால்களால் மிதிபட்டும் நெருப்பில் அகப்பட்டுக்கொண்டும் எவ்வளவு பேர் உயிர்விட்டார்கள் என்று சொல்வது கஷ்டம். இரு கட்சியினருக்கும் சண்டை போட எங்கிருந்துதான் இவ்வளவு ஈட்டிகள், பாக்குமரக் குச்சிகள் எல்லாம் கிடைத்தனவோ?

திருவிழா மைதானம் யுத்தகளமாகிவிட்டது, குளத்தின் இருகரை யிலும் இருட்டில் இரண்டு கட்சியினரும் தயாராக நின்றிருந்தார்கள், நள்ளிரவில் சண்டையைத் தீவிரமாக நடத்தும் எண்ணத்துடன், நடக்கப் போவதை மாலையிலேயே ஒரளவு ஊகித்துவிட்டான் ரஞ்சித். அவன் தன் சகாக்களுடன் ஆபீஸ் கட்டிடத்துக்குப் போய்ச் சேர்ந்தான். இப்போது சோஞ, லால்ட்டு, பல்ட்டு, மாலதி எல்லா ரையும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். திருவிழாவுக்கு வந்தால் மாலதி பெரும்பாலான நேரத்தைக் கோவிலில்தான் கழிப்பாள். கொஞ்சம் இடிந்த ஒரு மடத்தின் வாசலில் ஒரே கூட்டம், பூஜை செய்வதற்காகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தாள் மாலதி, ரஞ்சித் அவளுடைய புடைவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு கேட்டான், "சோபாவும் ஆபுவும் எங்கே?" என்று.

*அவங்க கோவில்லே இருக்காங்க." "அவங்களைக் கூட்டிக்கிண்டு சீக்கிரம் வா.” மாலதி ஒன்றும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தாள். "தாமசம் பண்ணுமே சீக்கிரம் போ! நான் சர்க்கஸ் கூடாரத்துக்குப் போயிட்டு வரேன். ஈசமுக்குத் தகவல் சொல்லணும். எனக்கு நிறைய வேலை இருக்கு. இங்கே கலகம் வரும்போல் இருக்கு." ரஞ்சித் வேகமாக நடந்தான். குளத்தின் இந்தப் பக்கத்தில் ஏராள மான வளையல் கடைகள் பூக்கடைகள் பழக்கடைகள் அவற்றுக் கப்பால் பொரிக் கடைகள் : தின்பண்டங்கள் விற்கும் கடைகள், அவற்றைக் கடந்தால் திறந்தவெளி. கோபால்தியைச் சேர்ந்த பெரிய மனிதர்கள் அங்கே கூடாரம் அடித்துக்கொண்டு தங்கி யிருந்தார்கள். இந்த வெளியையும் கடந்தால் சிறியதும் பெரிதுமாக நிறைய சர்க்கஸ் கூடாரங்கள். ரஞ்சித்தான் சிறுவர்களுக்குச் சர்க்கஸ்

289

டிக்கெட் வாங்கிக் கொடுத்திருந்தான். ஈசம் அவர்களைச் சர்க்க ஸ்"க்குள் உட்கார வைத்துவிட்டு வந்தான். சர்க்கஸ் முடிந்ததும் அவர்கள் ஈசமின் கடைக்கு வந்து சேர்ந்துவிட வேண்டும் என்று ஏற்பாடு.

ரஞ்சித்தால் அங்கு வெகுநேரம் தாமதிக்க முடியவில்லை. அங்கு அவன் தன்னக் காட்டிக்கொள்ளக் கூடாது. எதிர்த்தரப்பினர் அவனத் தேடிக்கொண் டிருந்தார்கள். அவன் சீக்கிரம் சர்க்கஸ் கூடாரத்தை அடைந்துவிட முயற்சி செய்தான்.

ஜிலேபிக் கடையிலிருந்து இனிய நறுமணம் வந்துகொண் டிருந்தது. அந்த மனத்தை நுகர்ந்தவர்கள் திருவிழா இன்னும் சற்று நேரத்தில் அலங்கோலத்தில் முடியும் என்று நினத்திருக்கவே மாட்டார்கள். ரஞ்சித்தாலும் இன்னும் ஒரு சிலராலுந்தான் வரப் போகும் ஆபத்தை ஊகிக்க முடிந்தது. உடனே விடு திரும்புவது தான் நல்லது என்று அவர்கள் எண்ணினுர்கள்.

திருவிழாவுக்குச் சசிந்திரநாத்தும் வருவதாக இருந்தது. அவர் வந்திருந்தால் ஜப்பரை அடக்கியிருப்பார். ஜப்பருக்கு அவரிடம் ரொம்பப் பயம். காரணம் அவர் ஆபேத் அலியின் இன்பத்திலும் துன்பத்திலும் அவனுக்கு உறுதுணையாக இருந்தார். நடந்து கொண்டே இவ்வாறெல்லாம் நினைத்தான் ரஞ்சித்.

அவன் சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்தபோது அங்கே சர்க்கஸ் நின்றுபோய் விட்டிருந்தது. வரப்போகும் ரகளைபற்றிச் சர்க்கஸ்காரர் களுக்கும் தெரிந்துவிட்டது போலும் அவர்கள் எல்லா விளை யாட்டுக்களையும் காண்பிக்காமல் சிங்கம், புலி முதலிய மிருகங்களை கூண்டுகளில் அடைத்துவிட்டார்கள். -

ரஞ்சித் சர்க்கஸ் வாசலில் மூன்று சிறுவர்களையும் பார்த்து, "நீங்க ஈசமோட கடைப்பக்கம் போகவேண்டாம். நான் உங்களை ஆபீஸ் கட்டிடத்துலே கொண்டுபோய் விட்டுடறேன், வாங்க!" என்ருரன். ரஞ்சித் அவர்களை அங்கே கொண்டுபோய் விட்டுவிட்டு ஈசமிடம் போய்த் தர்மூஜ் பழங்களைப் படகில் ஏற்றச் சொல்ல நினைத்தான். ஆனல் அவனுல் ஆபீஸ் கட்டிடத்துக்குப் போய்ச் சேரமுடியவில்லை. தரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்தான். துப்பாக்கிச் சத்தம், ஒரே களேபரம் 1 மனிதர்கள் கலகத்தில் அகப்பட்டுக்கொண்டு கொண்டிருந்தார்கள்.

ரஞ்சித் சற்றுப் பின்வாங்கினுன். தான் சர்க்கஸ் வாசலில் இருப் பதாக மாலதியிடம் சொல்லிவிட்டு வந்தது அவனுக்கு நினைவு வந்தது. அவன் சர்க்கஸ் வாசலுக்குத் திரும்பி ஓடிவந்தான். அதற் குள் யாரோ கூடாரத்துக்குத் தீ வைத்துவிட்டார்கள். அவன் இந்தச் சிறுவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வான்? மாலதியை

290

இன்னும் காணுேம். அவர்களைக் காணுமல் மறுபடி கோவிலுக்குத் திரும்பிப் போய்விட்டாளோ? இப்போதோ உயிருக்கு ஆபத்தான நிலைமை. எப்போது உயிர்போகும் என்று சொல்லமுடியாது. மாலதியைப் போன்ற ஓர் அழகான யுவதியை நினைத்து அவன் கவலையுடன் கோவிலை நோக்கி ஓடினுன், சோணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. இதெல்லாம் ஏன் இப்படி ஆகிவிட்டது? ஜனங்கள் வெட்டுக்கிளிக் கூட்டம்போல் ஆற்றுப்பக்கம் ஓடினுர்கள். ஆபு ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு அழுவதைப் பார்த்துவிட்டுச் சோனு ரஞ்சித்துக்கு அவனக் காண்பித்தான்.

"உன்னுேட அத்தை எங்கே?" என்று ரஞ்சித் ஆபுவைக் கேட்டான்.

பதில் சொல்லாமல் அழுதான் ஆபு. அவன் திருவிழாச் சந்தடியில் வழிதவறிவிட்டான் என்று ரஞ்சித்துக்குப் புரிந்தது. இனி மாலதியைத் தேடுவதில் பயனில்லை. அவனுடைய நெஞ்சு நடுங்கியது. இவர்களே ஒரு பத்திரமான இடத்தில் கொண்டுபோய்ச் சேர்த்தாலொழிய அவனுக்கு அமைதியில்லை. ஆனுல் ஆபீஸ் கட்டிடத்தை அடைவது எப்படி?

அவன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தபோது அங்கே நெருப்பு எரிவதைக் கண்டான். ஆற்றுப் பக்கம் போனுல்தான் தப்ப முடியும். அங்கே அவர்களுடைய படகு - தர்மூஜ் ஏற்றிவந்த படகு இருந்தது. அவன் அவர்களைக் கூட்டிக்கொண்டு அந்தப் பக்கமாக ஓடினன். நல்ல இருட்டாகிவிட்டது. எதிரில் வந்த மக்களை அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. இடையிடையே நெருப்பு ஜ்வாலைவிட்டு எரிந்ததால் ஒரு சில முகங்கள் கண்ணுக்குத் தெரிந்தன. கூட்டத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்திருந் தார்கள். எல்லாரும் பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினர்கள்.

யாரோ படகை அவிழ்த்துவிட்டிருந்தார்கள். அது கரையைவிட்டு விலகிக் கொஞ்சதூரத்தில் மிதந்துகொண் டிருந்தது. ரஞ்சித் தண் ணிரில் குதித்துப் படகை நோக்கி நீந்தினுன். அப்போது தண்ணtரில் ஏதேதோ மிதப்பதைக் கண்டான். நெருப்பிலிருந்தும் போக்கிரி களிடமிருந்தும் தப்ப முனைந்த மனிதர்கள்தான் நீந்திக்கொண் டிருந்தார்கள். சில படகுகள் அம்புபோல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. அவன் தாமதம் செய்யாமல் படகுக்குள் ஏறினுன் அதில் யாரோ உட்கார்ந்திருப்பது நிழல் உருவமாகத் தெரிந்தது.

"யாரது?" என்று அவன் கேட்டான். பதில் இல்லை.

*யாரு நீங்க r

291

இப்போது குரலே அடையாளம் கண்டுகொண்டு மாலதி பதில் சொன்னுள் : "நான்தான் மாலதி."

"நீயா 1 பக்கத்திலே யாரு?"

"சோபா. ஆபுவைக் காணுேம்."

இப்போது பேச நேரமில்லை. ரஞ்சித் வேகமாகப் படகைக் கரைப் பக்கம் கொண்டு சென்றன். போகும்போது சொன்னுன், "ஆபு கிடைச்சுட்டான் ஆபு, லால்ட்டு, பல்ட்டு, சோனு எல்லாரும் கரையிலே நின்னுக்கிண்டு இருக்காங்க."

பிறகு இங்குமங்கும் பார்த்துவிட்டு, “சின்னத் துடுப்பையும் காணுேம், பெரிய துடுப்பையும் காணுேம்! எல்லாம் எங்கே போச்சு?” என்று கேட்டான் ரஞ்சித்.

மாலதி ஒன்றும் சொல்லவில்லை. இப்போது அவளுடைய பயம் பறந்துவிட்டது. அவள் படகோட்டுவதில் ரஞ்சித்துக்கு உதவி செய்தாள். கரைக்கு வந்துசேர்ந்த ரஞ்சித் தீவர்த்திகள் தங்கள் பக்கமாக வருவதைக் கண்டான். ஆபத்துத்தான் 1 மக்கள் ஆற்றில் இறங்கித் தப்புகிறர்களென்று கலகக்காரர்களுக்குத் தெரிந்து விட்டது. அவனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மரணம் நிச்சயம். கேள்வி முறையில்லாத மரணம், அவன் சோனுவின் கண்களைப் பார்த்தான். அவற்றில் திகைப்பு பிரதிபலித்தது. எவ்வளவு சந்தோஷமான திருவிழா அதில் எவ்வளவு பறவைகள், பலவர்னக் குதிரைகள், எள்ளுருண்டை, கத்மா, பொரி முதலிய திண் பண்டங்கள், பனையோலை ஊதல், பல நிறக் கொடிகள் ! இப்போது அவை ஒன்றுமே இல்லை. எல்லாம் எப்படிப் பாழாகி விட்டன! எங்கும் நெருப்பு எரிந்தது. கலகக்காரர்கள் குதிரைகளின் மேல் ஏறிக்கொண்டு சுற்றுகிருரர்கள். அவர்களுடைய கைகளில் தீவர்த்திகள், சாகப் போகிற மக்களின் முகங்களைப் பார்க்க அவர் களுக்கு ஆசையோ?

எல்லாரும் படகில் ஏறிக்கொண்ட பிறகு ரஞ்சித் படகைக் கரையிலிருந்து பலமாகத் தள்ளிவிட்டான், பிறகு எல்லாரும் தங்கள் உயிரைப் பணயமாக வைத்துத் தங்கள் கைகளையே துடுப்புகள் போல் உபயோகித்துத் தண்ணிரைத் தள்ளினுர்கள். ரஞ்சித படகி லிருந்த தர்மூஜ் பழங்களை ஒவ்வொன்ருகத் தண்ணிரில் தள்ளி விட்டான். தண்ணிரில் மிதந்த தர்மூஜ் பழங்கள் மனிதர்களின் தலைகள் போலத் தோற்றம் அளித்தன. நூற்றுக்கணக்கான மனிதர்கள் தண்ணிரில் மூழ்கிவிட்டார்கள் என்ற பிரமையை உண்டாக்கின.

தீவர்த்திகள் ஏந்திய கூட்டம் நதிக்கரையை அடைந்தபோது ரஞ்சித்தின் படகு ஆற்றின் நடுவே வந்து சேர்ந்துவிட்டது. அப் போதும் அவர்கள் படகைப் பார்த்துவிட்டால் படகில் இருப்பவர்கள்

292

மேல் ஈட்டியை வீசலாம் அல்லது நீந்தி வந்து படகைச் சூழ்ந்து கொள்ளலாம்.

ரஞ்சித் எல்லாரையும் படகிலிருந்து தண்ணிரில் இறங்கச் சொன் ஞன், படகைச் சற்றுச் சாய்வாக நிறுத்தி அதைக் கொண்டு அவர்களை மறைத்தான். கரையிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு காலிப் படகு ஆற்றில் மிதப்பதாகத் தோன்றும். அவர்கள் தண்ணி ரில் மிதக்கும் தர்மூஜ் பழங்களை மனிதத் தலைகளாக எண்ணி அவற்றின்மேல் தங்கள் ஈட்டிகளை எறிந்துவிட்டு, ஈட்டிகள் தீர்ந்து போனபின் திரும்பிப் போய்விடலாம். அதுவரை ரஞ்சித்தின் கோஷ்டி யினர் கலகக்காரர்களின் கண்ணுக்குப் படாமல் தப்பிவிட்டால் படகைத் தள்ளிக்கொண்டு மறுகரைக்குப் போய்விடலாம்.

ஓர் ஓரத்தில் மாலதி அவளுக்குப் பக்கத்தில் சோனு, லால்ட்டு, பல்ட்டு, ஆபு, சோபா. இன்னுேர் ஓரத்தில் ரஞ்சித். அவர்களுடைய கைகள் மட்டும் படகைப் பிடித்துக்கொண் டிருந்தன. அவர்களு டைய உடல்கள் அதன் நிழலில் மறைந்திருந்தன. கரையிலிருந்து படகைப் பார்ப்பவர்களுக்கு அதிலிருந்த மக்கள் தண்ணிரில் முழுகி இறந்துவிட்டார்களென்று தோன்றும். இதுதான் ரஞ்சித்தின் ஏற்பாடு.

திடீரென்று மனிதனுக்கு என்ன வந்துவிடுகிறது? இப்போது குதிரை களின் மேல் ஏறிக்கொண்டு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டிருப் பவர்களும் சாதாரன மனிதர்கள்தாம் என்று ரஞ்சித்துக்குத் தெரியும். அவர்களுடைய வீட்டில் அவர்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளைகள் இருக்கிருச்கள். அவர்கள் குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெற்று விட்டால் தங்கள் ஊருக்குப் போய் அந்த வெற்றியை விமரிசையாகக் கொண்டாடுவார்கள். தாங்கள் ஜயித்த மெடல்களை அணிந்து கொண்டு கிராமம் கிராமமாகப் போய் அங்குள்ள மக்களிடம் பரிசு கேட்பார்கள். அப்படிப்பட்ட மக்கள்தாம் இப்போது கொலை வெறிபிடித்து அலை கிறர்களென்று யாரால் நம்பமுடியும் ?

அவர்கள் தங்கள் கைகளில் பாக்குமரக் குச்சிகளே வைத்துக்கொண் டிருப்பதை ரஞ்சித் இருட்டிலும் பார்த்தான். ஏதோ விளையாட்டை விளையாடுவது போன்ற உற்சாகம் அவர்களிடம் கானப்பட்டது. அவர்கள் அந்தக் கூர்மையான குச்சிகளை ஆற்றில் மிதந்த தர்மூஜ் பழங்களின்மேல் பாய்ச்சிவிட்டுக் காப்பிரிகளைக் கொன்றுவிட்டதாக நினைத்து ஆரவாரம் செய்தார்கள்.

அவர்கள் ஆற்றங்கரையிலிருந்து போனபிறகு ஓர் ஆள் அந்தப் பக்கம் வந்தான். அவன் இருட்டில் கூப்பிட்டான் : "சோனு பாபு, சோனு பாபு, நீங்க எங்கே போயிட்டீங்க?"

இருட்டிலிருந்து பதில் எதுவும் வரவில்லை.

293

அப்போது மறுகரையை நோக்கிப் படகைத் தள்ளிக்கொண்டு போய்க்கொண் டிருந்தான் ரஞ்சித்.

"நான் யாரைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போவேன்?" என்று ஈசம் இந்தக் கரையில் புலம்பிக்கொண் டிருந்தான்.

மறுகரையை அடைந்து மண்ணில் ஓடிய சோனு தடுக்கிவிழுந்தான். தூரத்திலிருந்து-வெகுதூரத்திலிருந்து-தன்னை யாரோ கூப்பிடுவது அவன் காதில் விழுந்தது. "மாமா, என்னே யாரோ கூப்பிடருங்க" என்று அவன் ரஞ்சித்திடம் சொன்னன்.

கீழே விழுந்த சோனுவைத் தூக்கி நிறுத்தினுன் ரஞ்சித். அவன் சோணுவின் காதில், "பேசாதே வேகமா ஒடு பக்கத்திலே இந்துக்கள் குடியிருப்பு இருக்கு. ராத்திரி அங்கே தங்கியிருப்போம்" என்று கூறினுன்.

மாலதியையும் கூட்டிக்கொண்டு இருட்டில் நடந்துபோகப் பயமாக இருந்தது அவனுக்கு. ஆகையால் இந்துக் குடியிருப்பில் இரவைக் கழிக்கத் தீர்மானித்தான் அவன்,

ஈசமின் கூப்பாட்டு ஒலி கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து காற்றில் கலந்து மறைந்துவிட்டது. “சோனு பாபு, நீங்க எங்கே இருக்கீங்க? நான்தான் ஈசம். நான் யாரைக் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போவேன், சொல்லுங்க!" என்று கத்தினன்.

ஆற்றின் மறுகரையில் யாரோ தன்னைப் பெயர் சொல்லித் திரும்பத் திரும்பக் கூப்பிடுவதுபோல் இருந்தது சோணுவுக்கு, யாரோ அவனைத் தேடுகிறர்கள்! கூப்பிடும் குரலை அவ்வளவு தொலைவிலிருந்து இனம் கண்டுகொள்ள முடியவில்லே அவனுல். அவன் பயந்துபோய் ஒடினுன். அவனக் கூப்பிடுவது இராப் பிசாசோ என்னவோ? ஆமாம், இராப் பிசாசுதான் அவனேக் கூப்பிடுகிறது!

திருவிழாக் கலகம் திருவிழாவிலேயே முடிந்துவிட்டது. கடைசியாக ஊருக்குத் திரும்பியவன் ஈசந்தான். அவனுடைய முகம் வறண்டு, ஜீவன் இல்லாமல் இருந்தது. உயிர் அவனுடைய உடலிலிருந்து விடை பெற்றுக்கொண்டு விட்டதோ என்று தோன்றியது. அவனு டைய புலம்பலும் கூப்பாடும் ஓயவில்லை. ஏதோ ஒரு பச்சிளங் குழந்தையைக் கொன்றுவிட்டவன் போல அவனுடைய கண்கள் இருண்டு கிடந்தன. ஈசம் ஏரிகரையில் உட்கார்ந்து புலம்பிக்கொண்

294

டிருப்பதாக யாரோ வந்து செய்தி தெரிவித்தார்கள். இதைக் கேட்டு ஏரிப்பக்கம் ஓடினர் சசீந்திரநாத்.

திருவிழாக் கலகம் இந்தப் பக்கம் பரவி வரவில்லை. அது இரவிலேயே அடங்கிவிட்டது. ரூப்கஞ்சிலிருந்தும் நாராயண் கஞ்சி லிருந்தும் போலீஸ் படை வந்து அடக்கிவிட்டது. பெரிய மனிதர்கள் ஒன்றுகூடி எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண் டார்கள். ஒரு வழியாக இந்தத் தடவை கலகம் ஓய்ந்தது என்று நிம்மதியடைந்தார்கள் அவர்கள், செய்தி கேட்டு டாக்காவிலிருந்து ஓடிவந்தான் சாமு. அவன் ஏரிக்கு அருகில் வந்த சசீந்திரநாத்தைப் பார்த்து, "எங்கே போறிங்க?" என்று கேட்டான்.

"ஈசம் ஏரிகரையிலே உட்கார்ந்திருக்காணும்." "அதுக்குள்ளேயா? இன்னும் பொழுது விடியலையே!” “ஈசம் இன்னும் திருவிழாவிலேருந்தே திரும்பல்லியே! அவன் கலகததிலே செததுப் போயிட்டானுேன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். இரண்டு நாளா ஏரிகரையிலேயே உட்கார்ந்துக்கிட்டிருக்கான்னு இப்போ கேள்விப்படறேன்." a .

சசீந்திரநாத் ஈசமைப் பலவந்தமாக ஏரிகரையிலிருந்து இழுத்துக் கொண்டு வந்தார், இப்போது அவனைப் பார்த்தால் அவன்தான் பழைய ஈசம் என்று சொல்லவே முடியாது. சிறுவர்கள் மூவரும் அவனுக்கு முன்னுல்போய் நின்ருரர்கள். அவர்களைப் பார்த்து அவனு டைய உடல் நடுங்கியது. அவனுக்கு ஆறுதல் ஏற்படவில்லை. அவர்கள் உயிருடன் திரும்பியிருப்பார்கள் என்று நம்பவே முடிய வில்லை அவனுல். அவன் அவர்களுடைய தலையை, முகத்தைத் தொட்டுப் பார்த்தான். "பாபு, பாபு, நீங்க பொழச்சி வந்துட்டீங் களா !” என்று உணர்ச்சி பொங்கக் கத்திவிட்டான் அவன்.

சசீந்திரநாத் அவனை அதட்டினுர், “சரி, சரி 1 எழுந்திரு! போய் ஸ்நானம் பண்ணிச் சாப்பிட்டுத் தூங்கு! நீ இன்னிக்கு வயலுக்குப் போகவேண்டாம். நீங்க போங்க! அவன் கொஞ்சம் சிரமபரிகாரம் பண்ணிக்கட்டும்" என்று சொல்லிச் சிறுவர்களே அங்கிருந்து அனுப்பினுர், அவர்கள் நகராவிட்டால் ஈசம் நாள்முழுதும் அவர் களுக்கு முன்னுல் உட்கார்ந்துகொண்டு ஏதேதோ புலம்பிக் கொண்டே இருப்பான், பைத்தியம் பிடித்தவனைப் போல,

திருவிழாவிலிருந்து வந்த பிறகு மாலதியும் ஏதோ பயத்தால் பீடிக் கப்பட்டவளாகக் காலங் கடத்தினுள், இருட்டிவிட்டால் அவள் தன் அறையைவிட்டு வெளியே வருவதில்லை. அறைக்குள் ஒரு சிம்னி விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். இரவில் சோபா, ஆபுவைத் தன்னுடன் அனைத்துக்கொண்டு ஏதேதோ கெட்ட கனவுகள் கண்டுகொண் டிருப்பாள். சில சமயம்

295

அவளுக்குச் சொல்லத் தோன்றும், "சாமி, கடவுளே! இனிமேல் என்னுலே தாங்க முடியாது!"

அவளுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை; அறைக்கு வெளியில் யாரோ கிசுகிசுப்பதுபோல் தோன்றும். “சாமி! என் நெஞ்சுக்குள்ளே எவ்வளவு வேதனைன்னு உங்கிட்டே சொல்லத் தெரியலே எனக்கு!" ஆமாம், ஜாலாலியைப் போல் அவளாலும் அந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அது ஜ்வாலையாகப் பற்றிக்கொண்டு எரிந்தது. அவளுடைய கை ஜில்லிட்டுப் போயிற்று. கதகதப் பான ஸ்பரிசத்துக்காக ஏங்கினுள் அவள். அவளுக்கு ரஞ்சித்திடம், "டாகுர், என்னை எங்கேயாவது அழைத்துக்கொண்டு போய்விடு" என்று சொல்ல ஆசை. ஆனல் பொழுது புலர்ந்துவிட்டால், தோடார் பாக் மைதானத்தில் கோழிகள் கூவும்போது, தரியன் கட்டாரி மரத்தின் இடுக்கு வழியே எட்டிப் பார்க்கும்போது இவை எல்லாம் அவளுக்கு மறந்துபோய் விடுகின்றன. அப்போது அவளுடைய மனம் அவனைப் பார்ப்பதற்காக, அவனைப் பார்க்க ஒரு சாக்கைக் கற்பனை செய்யத் துடிக்கும்.

ஒரு நாள் அவள் ரஞ்சித்திடம், "எனக்கு ஒரு கத்தி தரியா, டாகுர்?" என்று கேட்டாள்.

"கத்தி எதற்கு?" "தாயேன்! மரக்கத்தியை வச்சுக்கிட்டு விளையாடப் பிடிக்கல்லே!" "ஒனக்கு இன்னும் கை சரியாப் பழகல்லே. பழகினப்புறம் கத்தி வாங்கித் தரேன்.”

அவளுக்குச் சொல்லத் தோன்றும், "எனக்கு இன்னும் கை பழக லேன்னு சொல்றியா? நீ எனக்குக் கத்தி வாங்கிக் கொடு ! நான் எப்படி விளையாடிக் காண்பிக்கறேன் பாரு! அவளுக்குச் சாவுடன் விளையாடும் ஆசை ஏற்பட்டுவிட்டது.

இப்போது அமூல்யனின் போக்கிரித்தனமும் அதிகமாகியிருந்தது. ரஞ்சித் வந்தது முதற்கொண்டே அமூல்யனுக்கு வெறி அதிகமாகி விட்டது. அவன் ஒரு சரியான வாய்ப்புக்காகக் காத்துக்கொன் டிருந்தான். மாலதி வயல்வெளியிலோ அல்லது புதருக்கருகிலோ தனியாக அகப்பட்டுக் கொண்டால், அல்லது ஊரில் தெருக்கூத்தோ, கதாகாலட்சேபமோ நடக்கும் சமயத்தில் மாலதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தால், அவளைக் கட்டிப்பிடித்துக் கடித்து விடுவான் போல் இருந்தது.

மாலதி வீட்டுக்குக் காவலாகப் படுத்துக்கொண்டிருப்பாள். கதவுப் பக்கத்தில் ஏதோ சப்தம் கேட்கும். "யாரது? ஏன் பதில் பேசமாட் டேங்கறே? கதவைத் திறந்துகிட்டு உள்ளே வா சந்திரன் மாதிரி அழகு கொஞ்சற உன் முகத்தைக் காண்பி" என்று நினைத்துக்

296

கொண்டே அவள் சாவுடன் விளையாடத் தயாராயிருப்பாள். அப் போது தோன்றும், ஜப்பர் மரத்தடியில் நின்றுகொண்டு நோட்டீஸ் வினியோகம் செய்கிருன் ; "மாலதி அக்கா, வந்தீங்களா?" என் கிருன். அவனுக்குப் பக்கத்தில் நிற்கும் ஆட்கள் பற்களைக் காட்டிக் கொண்டு அவளை வெறித்துப் பார்க்கிருர்கள்.

இந்தக் காட்சிகளை அவள் தன் மனக் கண்ணுல் பார்க்கும்போது எல்லாம் ரஞ்சித்திடம் போய் நச்சரிப்பாள் : “எனக்கு ஒரு நல்ல, பெரிய கத்தியாக் கொடு, டாகுர்! துரியன் அஸ்தமிச்சப்புறம் என் நெஞ்சு பயத்தாலே உலர்ந்துபோறது."

கலகத்துக்குப் பிறகு இரவின் இருளில் கத்திப் பயிற்சி தொடர்ந் தது. மைதானத்துக்கு அப்பால் ஆள் இல்லாத இடத்தில் ஊர் மக்கள் ஒன்று கூடிஞர்கள். இப்போதெல்லாம் ரஞ்சித் இந்தப் பயிற்சியை மேற்பார்வை செய்வதில்லை. அவன் எங்கெங்கோ தூரஇடங்களுக்குப் போய்விடுகிருன். எங்கே போகிருன், ஏன் போகிருன் என்று யாருக்கும் தெரியாது. வைத்தியரும் கோபாலுந்தான் இப்போது பயிற்சியைக் கவனித்துக் கொள்கிருரர்கள்.

பால்குன் - சைத்ர மாதங்கள் கழிந்துவிட்டன. பைசாக மாதம் ரொம்ப உஷ்ணமாக இருக்கும். அப்போது நிலவு இருந்தால் காஸ் விளக்கு ஏற்றப்படுவதில்லை. மங்கிய நிலவொளியில் கத்திப் பயிற்சி நடக்கும், மாலதி சோபாவையும் ஆபுவையும் கூட்டிக்கொண்டு டாகுர் வீட்டுக்கு வருவாள். தனமாமியும் பெரிய மாமியும் அங்கே இருப்பார்கள். பால் வீட்டிலிருந்து சுபாஷின் அம்மா வருவாள். ஹாரான் பாலின் மனைவி வருவாள். சந்தா வீட்டுப் பெரிய பெண்கள் மதியும் கனியும் வருவார்கள். விளையாட்டில் சூடுபிடித்த பிறகு சோனு - லால்ட்டு - பல்ட்டுவின் ஆசிரியர் சசிபூஷண் எல்லார் கையிலும் ஊறவைத்த கொத்துக் கடலையும் வெல்லமும் கொண்டு வந்து கொடுப்பார். இந்தத் தேசத்தில் எந்த நேரத்திலும் உள்நாட்டுக் கலகம் ஆரம்பித்துவிடலாம். அவர் சரித்திர மாணவர். சுதந்தரம் வரும்போது இத்தகைய உள்நாட்டுக் கலகங்கள் நிகழ்வது வழக்கந் தான். அப்படி ஏதாவது நேர்ந்தால் தற்காப்புக்கு இந்தக் கத்திப் பயிற்சியும், சிலம்பப் பயிற்சியும் உதவும்.

எங்கேயோ யுத்தம் நடக்கிறது, பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. ஆணுல் இந்தப் பிராந்தியத்திலே வசிப்பவர்களுக்கு இவற்றைப் பற்றித் தெரி யாது. நீர்வளம் நிலவளம் நிறைந்த பிரதேசம் இது. பஞ்சத்தில் அடிபட்ட மக்கள் வேறு இடங்களிலிருந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர்தாம் சசிபூஷண். அவர் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியராக வேலைபெற்று அங்கு வந்தார். சோனு அவரிடம் சரித்திரக் கதைகள் கேட்பான் : டிராய் யுத்தம், அதில் வரும் மரக்

297

குதிரை. கிரேக்கர்கள் டிராய் நகர வாயிலுக்கு வெளியே ஒரு பெரிய குதிரையை விட்டுவிட்டுப் போனுர்கள். எவ்வளவு பெரிய குதிரை நகரத்துச் சிறுவர்கள் அந்தக் குதிரையைச் சுற்றிச் சுற்றி வந்து, பாட்டுப் பாடிக் கும்மாளம் போட்டார்கள். சமுத்திர மணலில் நின்றது மரக்குதிரை. அதற்குள்ளே ஆயிரக்கணக்கான போர் வீரர்கள்!

மூடாபாடா ஜமீன்தாரின் மாளிகை நதிக்கரையில், அரண்மனை மாதிரி இருக்கும். நதிக் கரையில் நானல் மலர்கள் மலர்ந்திருக்கும். நடுப்படுகையைக் கடந்தால் யானை லாயம். அங்கே எப்போதும் யான கட்டப்பட்டிருக்கும், அமலாவும் கமலாவும் ஜமீந்தார் வீட்டுப் பெண்கள். கமலாவுக்குச் சோனுவின் வயது. அவர்கள் கல்கத்தா வில் வசித்தார்கள். பூஜா சமயத்தில் அவர்கள் மூடாபாடா வருவார்கள். டிராய் நகரத்து மரக்குதிரை நினைவுக்கு வரும்போதெல் லாம் சோணுவுக்கு ஏனுே மூடாபாடா யானையின் ஞாபகம் வரும்; அமலா, கமலாவின் நினைவு வரும் அரண்மனை போன்ற ஜமீன்தார் மாளிகை ஞாபகம் வரும்.

இந்தக் கதையைக் கேட்கும்போதெல்லாம் சோணுவுக்கு இன்னுெரு ராஜாவின் ஞாபகம் வரும், அது அவனுடைய அப்பா சொன்ன

கதை.

ஒவ்வொரு வருஷமும் பூஜைக்கு அவனுடைய தமையன்மார் இருவரும் மூடாபாடா போவார்கள். அவனப் போகவிடமாட் டார்கள். ஆணுல் இந்தத் தடவை, திருவிழாவிலிருந்து வந்த பிறகு அவனுக்குத் தோன்றியது, அவனையும் மூடாபாடா போக அநுமதிப் பார்களென்று.

ஜமீன்தார் வீட்டு யானை, சீதாலக்ஷா ஆறு, யான லாயமிருக்கும் மைதானம் - அவன் ஆற்றங்கரையில் நின்றுகொண்டு நீராவிப் படகுகள் ஆற்றில் செல்வதைப் பார்ப்பான். அவற்றில்தான் எவ்வளவு விளக்குகள் ! அந்த வெளிச்சம் ஆற்றுத் தண்ணிரின் மேலெல்லாம் பரவி, ஆற்றின் இருகரைகளிலுமுள்ள புல்லையும், நாணல் காட்யுைம், ஆற்று மணலையும் சிறிது நேரத்துக்கு ஒளிவெள்ளமாகத் திகழச் செய்கிறது. திருவிழாவிலிருந்து திரும்பியது முதல் சோனுவுக் குப் பெரியவனுகி விட்டதாக நினைப்பு. இந்தத் தடவை துர்க்காபூஜை பார்க்க மூடாபாடா போவதற்கு அவனுக்கு அனுமதி கிடைத்துவிடும். சசிபூஷண் அதிகாலையில் எழுந்து பலகைக் கட்டிலில் உட்கார்ந்து கொள்வார். உடம்பை ஆட்டிக்கொண்டே ஏதேதோ புத்தகங்க ளெல்லாம் படிப்பார். சோனு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு கால்களை ஆட்டியவாறே பாடப் புத்தகம் படிப்பான். கவனமாகப் படித்தால் கற்றுக்கொள்ள அவனுக்கு அதிக நேரம் பிடிப்பதில்லை.

298

மழைக்காலத்தில் பள்ளிக்கூடத்துக்குப் படகில் போகவேண்டும். சசிபூஷண் படகின் நடுவில் உட்கார்ந்திருப்பார். ஈசம் துடுப்பு வலிப்பான். அந்த வீட்டுச் சிறுவர்கள் மூவரும் கிராமத்தைச் சேர்ந்த இன்னும் நாலேந்து பையன்களுடன் படகில் ஆசிரியரையும் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் போவார்கள்.

மழைக்காலம் வந்துவிட்டால் எங்கே பார்த்தாலும் அல்லி மலர்ந் திருக்கும். அப்போது இந்தப் பிராந்தியத்துக்குக் குதிரையோ யானையோ வராது. நெல் வயல்கள், சணல் வயல்கள், எங்கும் தண்ணிர். நாடே தண்ணிரில் முழுகிக் கிடக்கும். ஸ்படிகம் போன்ற தண்ணிரில் சிறிதும் பெரிதுமாக வெள்ளி மீன்கள் விளையாடும். நீலம் பச்சை வர்ணங்களில் சிறிதும் பெரிதுமாகப் பூச்சிகள் ; சில பூச்சிகள் மஞ்சளாகக் கூட இருக்கும். சூரியன் உதித்துவிட்டால் இந்தப் பூச்சிகள் இலைகளுக்கடியில் மறைந்திருக்கும்.

சோனு படகில் போகும்போது தங்கநிற வண்டுகளைப் பிடித்து ஒரு டப்பியில் போட்டு வைப்பான். ஒரு தடவை அவனுக்கு ஒரு விசித்திரமான பூச்சி கிடைத்தது. தங்க நிறம் பார்த்தால் நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் திலகத்தைப் போல் இருந்தது; பூச்சி என்றே அதை அடையாளங் கண்டுகொள்ள முடியாது. அதன் நடுப்புறம் முத்தைப் போல் பளபளத்தது. முழுவதும் தங்க நிறம், ஒரம் மட்டும் கறுப்பு. காலே இருப்பதாகத் தெரியவில்லை. அவன் பாதிமாவுக்காக அந்தப் பூச்சியை டப்பிக்குள் எடுத்துவைத்தான். பாதிமா எப்போது வருவாள்? இப்போதெல்லாம் அவளை அதிகமாகப் பார்க்க முடிவதில்லை. மழைக்காலம் வந்துவிட்டால் நினைத்தபோது இந்தக் கிராமத்துக்கு வந்துவிட முடியாது பாதிமாவால்.

சோனு பள்ளியிலிருந்து திரும்பியதும் பூச்சியை எடுத்துப் பெட்டி யில் வைத்தான். மழைக்காலம் முடிந்ததும் அவன் அதை அவளு டைய நெற்றியில் திலகமிட்டு விடுவான்.

சோனுவின் இரண்டாவது பெரியப்பா மூடாபாடாவிலிருந்து La-5 அனுப்பியிருந்தார். சிற்றப்பா அவனிடம் சொன்னுர்: "நீயும் துர்க்கா பூஜை பார்க்கப் போ! ஆனல் அங்கே போய் அழக்கூடாது.” இந்தத் தடவை துர்க்கா பூஜை பார்க்க வெகுதூரம் போகப் போகிறன் சோனு துர்க்கா பூஜைக்கான ஏற்பாடுகள் எங்கும் தொடங்கிவிட்டன.

மூடாபாடாவிலிருந்து வந்த படகிலிருந்து அலிமத்தி ஒரு பெரிய மீனத் தூக்கிக்கொண்டு வந்தான். சோனு, லால்ட்டு, பல்ட்டு மூவரு மாகச் சேர்ந்து சிரம்ப்பட்டு அதைத் தூக்கிப் போய்ச் சமையல் அறையில் சேர்த்தார்கள், எவ்வளவு பெரிய மீன் டாயின் மீன். அதைப் பார்த்த தனமாமிக்கும் பெரியமாமிக்கும் ஒரே ஆச்சரியம்.

299

அவ்வளவு பெரிய மீனைப் பார்த்துப் பைத்தியக்கார டாகுர் வீட்டு முற்றத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டார்.

*நானும் மூடாபாடா வரப்போறேனே!" என்று சோனு லால்டுவிடம் சொன்னுன்.

"நீ வரப்போறேன்னு யாரு சொன்னு ?" "சித்தப்பா." அம்மா சொல்லியிருப்பாள் என்று லால்ட்டு நினைத்தான். இந்தக் குடும்பத்தில் அம்மா சொல்வது எதுவும் நடப்பதில்லை. அம்மாவுக்கு ஓர் அதிகாரமும் இல்லை. ஆனுல் பெரியப்பா சொல்லிவிட்டதால் சோனுவும் உண்மையாகவே மூடாபாடா வரப்போகிறன் ; யாரும் அவனைத் தடுக்கமுடியாது. இது பற்றி லால்ட்டுவுக்குச் சற்று ஏமாற்றந்தான். அவன் அங்கே போனப்பறம், "நான் விட்டுக்குப் போகணும்னு சொல்லி அழக் கூடாது தெரியுமா?" என்று சொல்லிச் சோணுவுக்கு அழகு காட்டினுன், லால்டுவும் பல்ட்டுவும் இவ்வாறு சோனுவை இளக்காரம் செய்வது வழக்கந்தான். வீட்டிலேயே மிகவும் சிறியவன் என்ற காரணத்தால் சோனுவுக்குச் செல்லம் அதிகம். அதனுல் அவன் மேல் அவர்களுக்கு எரிச்சல். சோன மூடாபாடா வரமாட்டான் என்ற ஆறுதலாவது அவர்களுக்கு இதுவரை இருந்தது. இனி அந்த ஆறுதலுக்கும் வழியில்லை. இந்தத் தடவை சோனுவும் அவர்களுடன் வரப்போ கிருரன்,

வேறு நாளாக இருந்தால் சோனுவும் பதிலுக்கு லால்ட்டுவுக்கு அழகு காட்டியிருப்பான். ஆணுல் இன்று அவனுக்கிருந்த மகிழ்ச்சி யில் அப்படிச் செய்யத் தோன்றவில்லை. அவன் துர்க்கையம்மனைப் பார்க்கப் போகிறன்! வெகுதூரம் பிரயாணம் செய்யப்போகிருன் ! போய்ச் சேரவே ஒரு நாளாகிவிடும், எவ்வளவு ஆறுகளே, எவ்வளவு காடுகளே, வயல்களைத் தாண்டிக்கொண்டு போகப் போகிருன் ! அவன் மகிழ்ச்சிப் பொங்கத் தன் தமையன்களை, "அண்ணு ! பெரியண்ணு!" என்று கூப்பிட்டுக்கொண்டு திரிந்தான்,

இப்போது அவன் ஒரு கெட்டிக்கார மாணவன். இப்போது அவனுல் தனியாக எவ்வளவு தூரம் வேண்டுமானுலும் போகமுடியும், சோள வயலில் ஒளிந்துகொண்டு கண்ணுமூச்சி விளையாடப் பயப் படுவதில்லை அவன்.

தனமாமி சோணுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவனுடைய கண்களில் மைதீட்டி மையை நீளமாக இழுத்து விட்டாள். அழகான முகம் சோனுவுக்கு. அவனுடைய கண்தான் எவ்வளவு அழகு! அவனுடைய வயதுக்கு உயரம் சற்று அதிகந் தான். உடம்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் சதைப்பற்று இருந்தால் அவனுடைய அழகு பசுமையான தீவைப் போல் கவர்ச்சிகரமாக

300

பூபேந்திரநாத் மூடாபாடாவிலிருந்து படகு அனுப்பிவிடுவார் அவர்

களே அழைத்துவர,

சோனு, லால்ட்டு, பல்ட்டு மூடாபாடா போகிருரர்கள். அவர்களே அழைத்துப் போகிறன் ஈசம். இந்தச் சில நாட்கள் அலிமத்தி வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொள்வான். சில நாட்கள் ஈசமுக்கு விடுமுறை. அவன் இந்தக் கோஷ்டியுடன் போய்க் குஷியாகச் சுற்றித் திரிந்துவிட்டுத் திரும்பிவருவான். அவன் எல்லாருக்கும் முன்னல் படகில்போய் உட்கார்ந்தான். தான் உபயோகிப்பதற்காக முன்னதாகவே நல்ல நீளத் துடுப்பு, குட்டைத் துடுப்பு எல்லாம் பொறுக்கி வைத்துக்கொண்டான். பிறருடைய துடுப்புகளை உபயோ கிக்க அவனுக்குப் பிடிப்பதில்லை. பாயின் கயிறுகள் சரியாக இருக் கின்றனவா என்று பார்த்துக்கொண்டான். இது எவ்வளவோ சில்லறை வேலைகள். தூரதேசப் பிரயாணம், போய்ச் சேரவே ஒரு நாளாகிவிடும். ஹ"க்காக் குழாய், ஹ விக்காச் சட்டி இவற்றைக்கூடச் சரிபார்த்து எடுத்து வைத்துக்கொண்டான். பத்துக் கோச தூரம் போகவேண்டும். காலையில் புறப்பட்டால் போய்ச் சேர இரவாகி விடும். சுற்றுவழியே போகவேண்டும், ஆற்றிலும் ஏரியிலும் போகும் போது காற்று அடித்தால் பாயை விரித்துக்கொண்டு வேகமாகப் போகலாம். சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்,

சோனு தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்தான். “தாத்தா, நாங்க பூஜை பார்க்க மூடாபாடாவுக்குப் போயிட்டு வரோம்” என்று

தாத்தா சோனுவின் மோவாயைத் தேடிப் பிடித்துக் கையால் தடவிஞர். "அப்படியா !”

"தாத்தா, உங்களுக்கு என்ன வாங்கிக்கிண்டு வரணும்?" என்று லால்ட்டு கேட்டான்.

அவர் பதில் சொல்வதற்கு முன்பே பல்ட்டு வேடிக்கையாக, "கிலுகிலுப்பையும் ஊதலும் வாங்கிக்கிண்டு வரலாம்” என்ருரன்,

"பாத்தியா, பாத்தியா அம்மா, உன் புள்ளேயை ! எனக்குக் கிலு கிலுப்பையும் ஊதலும் வாங்கிக்கிண்டு வரானும்!"

*அவன் சொல்றது சரிதானே! நீங்க சின்ன குழந்தை மாதிரி அழறீங்க! உங்களுக்கு ஒருத்தரும் சாப்பாடு போடலேங்கறிங்க."

"நான் அப்படிச் சொல்றேனு?" *சொல்றதில்லே.?" "எனக்கு அப்படிச் சொன்னதா ஞாபகமே இல்லை." படகுக்குள் ஏறிக்கொண்ட பல்ட்டு அதன் முனையில் பைத்தியக் கார மனிதர் மெளனமாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான். அவன் ஒருபோதும் அவரை அப்பா என்று அழைத்ததில்லை. அவனுக்கு

302

எப்போதும் ஓர் அந்நியராகவே தோன்றினர் அவர். அவருடைய பைத்தியக்காரத்தனம் அவனுக்குச் சங்கடத்தை விளைவித்தது. அவன் பெரியவனக ஆக அவர்தான் தன் தந்தை என்று நினைக்கிவே கஷ்டமாக இருந்தது அவனுக்கு எதிலும் பட்டும் படாமலும் இருக்கும் வழக்கம் அவனிடம் தோன்றியது. அவரைச் சற்றுக் கட்டுப் படுத்தி வைத்திருக்க விரும்பினுன் அவன். அவரை யாராவது இளப்பம் செய்தால் அவனுக்கு வேதனை ஏற்படும். இத்தகைய அவமானங்களிலிருந்து அவரைக் காப்பாற்ற அவன் ஆசைப் பட்டான். ஆணுல் அவரைக் கட்டுப்படுத்தி வைக்க அந்தச் சிறுவனுல் முடியுமா?

மெளனமாக, படகின் மேற்பலகையில் பத்மாசனம் போட்டுக் கொண்டு அவர் உட்கார்ந்திருந்தார்.

"நீங்க இறங்குங்க! நீங்க எங்கே போகப் போறிங்க?" என்று பல்ட்டு சொன்ஞன்.

பைத்தியக்கார டாகுர் பதில் சொல்லவில்லை. மெல்லச் சிரித்தார். பல்ட்டுவுக்குக் கோபம் வந்துவிட்டது. "நீங்க இறங்குங்க! இறங் குங்கறேன்!"

அவர் சற்றும் அசையவில்லை, பேசவும் இல்லை. அவன் சொல்வதை பொருட்படுத்தாமல் தன் உடைகளைச் சரி செய்துகொண்டார். மேலே அணிந்துகொண் டிருந்த அரைக்கைச் சட்டையை இழுத்து விட்டுக்கொண்டார். கையாலேயே தலைமயிரைத் தடவிச் சரி செய்துகொண்டார். "இதோ பார், நான் எவ்வளவு நன்ருகத் தலையை வாரிக்கொண் டிருக்கிறேன், எவ்வளவு நன்றக உடுத்துக்கொண் டிருக்கிறேன்! இப்போது நான் உங்களோடு வரலாமே!" என்று சொல்வதுபோல இருந்தது, அவருடைய செய்கை, பிறகு அவர் மறுபடியும் யோகியைப் போலப் பத்மாசனத்தில் அமர்ந்தார். பல்ட்டு அவருடைய கையைப் பிடித்து இழுத்தான். "இறங்குங்க! அம்மா! அம்மா!,..ஆஆ!"

தன் அம்மா வந்தால் இந்தச் சச்சரவைத் தீர்த்துவைப்பாள் என்று நினைத்தவன் போல் அவன் தன் தாயைக் கூப்பிட்டான். ஆணுல் அவளைக் காணுேம்.

ஈசம் ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. இவர்களுடைய சச்சரவைக் கவனிக்காதவன்போல, பிரம்புப் புதரில் இருக்கும் குளவிக்கூட்டைப் பார்ப்பது போல அவன் வேறுபக்கம் பார்த்துக்கொண் டிருந்தான்.

"இறங்குங்க! படகு கிளம்பப் போறது!" என் முன் பல்ட்டு, யார் யார் பேச்சைக் கேட்பது ?

303

சரத் காலத்துக் காலை நேரம் ; குளிர்ந்த காற்று பயிர் வயல்களி லிருந்து மிதந்து வந்தது. ஆற்றில் படகுகளின் பாய்கள் தெரிந்தன. பாயை விரித்துக்கொண்டு கிராமபோன முடுக்கி விட்டுக்கொண்டு பாரோ படகில் போனுர்கள். ஸோனுலி பாலி ஆற்றின் மீன்கள் பயிர் வயல்களில் பாசியைத் தின்ன வந்திருந்தன. வயல்களுக்கு இருபுறமும் படிகம்போல் தெளிந்த நீர். சணல் அறுவடை முடிந்துவிட்டால் கிராமமும் வயல்களும் தண்ணிருக்கு நடுவில் தீவுபோல் தோற்றம் அளித்தது. நாற்புறமும் தண்ணிர் குளத்து நீர்போல் சலசலத்தது. வீடுகளும் வயல்களும் தண்ணிரில் மிதந்தன.

வெகுநாட்களாக மணிந்திரநாத்துக்கு எங்காவது பிரயாணம் செய்ய ஆசை. மழைக்காலம் வந்துவிட்டால் அவர் கட்டுண்ட ராஜகுமாரனைப் போல் மருதமரத்தடியில் உட்கார்ந்து கிடப்பார். மூடாபாடாவிலிருந்து படகு வந்திருக்கிறது என்று கேட்டதுமே அவருக்கு ஒரு நீண்ட பிரயாணம் செய்ய ஆசை ஏற்பட்டுவிட்டது. அவர் உடனே தாம் உடுத்தியிருந்த ஆடைகளுடனேயே புறப் பட்டு வந்து படகில் ஏறி உட்கார்ந்துகொண்டு விட்டார். அழகாகத் தலைமயிரை வாரிக்கொண்டிருந்தார் அவர். கண்ணியமான மனிதர் போல மெளனமாகக் கள்ளங்கபடற்ற குழந்தை போல, அவர் உட்கார்ந்திருந்தார். அவர் இவ்வாறு அசையாமல் உட்கார்ந்திருப் பதைப் பார்க்கப் பார்க்கப் பல்டுவுக்குக் கோபம் அதிகரித்தது. அவன் அவரைப் பயமுறுத்துவதற்காக, "சித்தப்பாவை கூப்பிடட் டுமா? " என்று கேட்டான்.

மணிந்திரநாத் கெஞ்சும் பாவனையில் பிள்ளையைத் திரும்பிப் பார்த் தார். "கூப்பிடாதே, குழந்தே நான் சமத்தா உங்ககிட்டே உட்கார்ந்திருக்கேன்’ என்று சொல்வது போல இருந்தது அவர் பார்வை. அவருடைய பார்வை ஓர் அபலேப் பிராணியின் பார்வையை ஒத்திருந்தது. அதில் ஓர் அலாதியான சோகம் கப்பியிருந்தது. நான் ஒரு பைத்தியம். எவ்வளவோ காலமாக நடந்துகொண் டிருக்கிறேன். அப்படியும் கோட்டைபோல் பிரம்மாண்டமான அந்த மாளிகையை அடைய முடியவில்லை! இப்படியெல்லாம் அவர் பேச முயன்ருர் போலும்.

லால்ட்டுவும் சோனுவும் படகுக்குள் நுழைந்தார்கள். பல்ட்டுவின் சின்னச் சிற்றப்பா படகுத் துறைக்கு வந்ததும், "இன்னும் யாரு படகுக்குள்ளே ? என்று கேட்டார்.

மணிந்திரநாத் படகுக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிப் பார்த்தார். சாதுவான பையனைப் போல் வெளியேவந்து நின்றர். பிறகு படகி லிருந்து கீழே இறங்கி வந்தார், பெரிய மாமியும் தன மாமியும் கரை யில் நின்றிருந்தார்கள். படகு கிளம்பியதும் அவர்கள் வீடு

304
திரும்பினுர்கள். மணிந்திரநாத்தின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. ஈசம் படகின் முனையில் நீரைத் தெளித்துவிட்டு, படகைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்ததும் மணிந்திரநாத் ஓடிவந்து படகில் ஏறப் பார்த்தார். பெரிய மாமி வழக்கம்போல் தன் இருகை களையும் விரித்து அவரைத் தடுத்தாள். "வாங்க, வீட்டுக்குப் போகலாம், வாங்க!" என்று அழைத்தாள். அவளுடைய முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. அப்படி என்ன வயதாகிவிட்டது அவளுக்கு 1 முப்பது அல்லது முப்பத்துமூன்றுதான் இருக்கும். அவளுடைய முகத்தைப் பார்த்து வயதை மதிப்பிட முடியாது. அவளைப் பார்த்த மணிந்திரநாத் அதன் பிறகு அசையவில்லை. படகிலிருந்து கொண்டு சோனு பார்த்தபோது பெரிய மாமி அவரைப் பிடித்துக்கொண்டு விட்டுக்குப் போய்க்கொண் டிருந்தாள். அவ னுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவன் உரக்கக் கூப்பிட் டான், "பெரியப்பா !” என்று.

மணிந்திரநாத் அவனுக்கு ஆசீர்வாதம் செய்வது போல் இரு கைகளையும் உயர்த்தினுர். சோனு பலமாகக் கூவினுன் : "தசராவிலே இருந்து உங்களுக்கு என்ன வாங்கி வரணும்?"

அவருக்குச் சொல்லத் தோன்றியது. "முடிஞ்சா எனக்குப் பழுப்பு நிறப் பசுவோட பால் கொண்டுவா, சீதலசுஷா ஆற்றங்கரையிலே நாணல் பூப் பூத்திருக்குமே அதைப் பறிச்சு என் பேரைச் சொல்லிக் காத்துலே பறக்கவிடு. "பாலின்’னு ஒரு பொண்ணு, அவ பேரைச் சொல்லிப் பூவைத் தண்ணீரிலே மிதக்கவிடு!"

ஆணுல் அவர் ஒன்றும் பேசவில்லை. பெரிய மாமியும் மெளனமாக இருந்தாள். படகு சென்றுகொண்டிருந்தது. நெல்வயல்களைக் கடந்த தும் ஸோனுலி பாலி ஆறு வந்துவிட்டது. படகு ஆற்றுக்கு வந்த பிறகு ஊர் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. படகின் கூரைக் கடியில் உட்கார்ந்திருந்த சோனுவை, "என்ன பார்க்கறிங்க, சோணு பாபு ?" என்று ஈசம் கேட்டான்.

சோனு மெளனமாக இருப்பதைப் பார்த்து அவனுல் சும்மா இருக்க முடியவில்லை.

சோணு கண்கொட்டாமல் ஏரி நீரைப் பார்த்துக் கொண்டிருந் தான். எவ்வளவு தண்ணிர்! கரையே கண்ணுக்குத் தெரியவில்லை. எங்கும் தண்ணிர் 1 இந்தப் படகு தண்ணிரை ஒரு நாளும் கடக்க முடியாது என்று தோன்றியது. ஒரே ஆச்சரியம் அவனுக்கு. இந்த ஏரியில்தான் ஆபேத் அலியின் பீபி முழுகி இறந்துவிட்டாள். இந்த ஏரியில் ஒரு மயில் படகு இருந்தது. தங்கப் படகு, காற்றே அதன் துடுப்பு. "இந்தத் தண்ணிக்குக் கீழே தங்கப் படகு, மயில் படகு இருக்கே, அதை மேலே எடுத்துக் கிண்டு வருவீங்களா ?

305

Ohttp://www.l.ie/pdf. In LLLLLLlLLLLLLL LL LLL LLL LLLL LL LLgLLLLS 0 LGLLmLaL LLLL LtTLLS aL aS sLLLLLLL LLLL LLLLLS

அதிலே நானும் பைத்தியக்காரப் பெரியப்பாவும் உட்கார்ந்துண்டு இந்த ஏரியைக் கடப்போம். அந்த மாதிரி படகு கிடைச்சா அந்தக் கோட்டைக்கே போய்ச் சேர்ந்துடலாம். அந்தப் பொண்னுேட கண் நீலமா இருக்கும், தலைமயிர் தங்கநிறழா இருக்கும்" என்று சோனு, சொல்ல விரும்பினுன் ஈசமிடம், தண்ணிரில் முழுகி அந்த மயில் படகை மேலே கொண்டுவர விரும்பினுன் சோனு,

மாலதி அதிகாலையில் எழுந்து தன் வாத்துக்களையும் புருக்களையும் கூண்டிலிருந்து வெளியே விடுவாள். பிறகு தன் மற்றக் காரியங் களையும் முடித்துவிட்டுச் சற்று நேரம் மெளனமாக வாசலில் நின்று கொண்டிருப்பாள். அதுபோலவே இன்றும் நின்றுகொண்டிருந்தாள். தூரத்தில் வாத்துக்கள் தண்ணிரில் மிதந்துகொண் டிருந்தன.

இரவு முழுதும் அவள் சரியாகத் தூங்கவில்லை. இரவில் யாரோ அவள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு இருட்டில் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தாற் போன்ற உணர்வு அவளுக்கு. கலகத்துக்குப் பிறகு அவளை எப்போதும் ஒரு காரணமற்ற பயம் ஆட்கொண் டிருந்தது. "உனக்கு எல்லாம் வீண்பிராந்திதான். உன்னே யாரு தூக்கிக்கிட்டுப் போகப் போருங்க?" என்று சொல்வாள், நரேன் தாஸின் மனைவி.

ஆகையால்தான் இரவில் கேட்ட கிசுகிசு ஒலியைப் பற்றிக் காலை யில் யாரிடமும் சொல்ல முடியவில்லை அவளால், பயம் காரணமாக அவள் உண்மையிலேயே தன் அறையைவிட்டு வெளியே வரவில்லை. இரவில் ஓரிரண்டு தடவை தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்திருப்பது அவள் வழக்கம். இப்போதெல்லாம் அவள் இரவு முழுதையும் விழித்துக்கொண்டே அறையை விட்டு நகராமல் கழித்தாள். அவள் இரண்டு மூன்று தடவைகள், "யாரு? யாரு?" என்று கத்தினுள்.

மரத்தடியில் யாருடைய குரல் கேட்கிறது? அவள் ஒரு தடவை படலைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்தாள். கலகத்தில் பற்றிக் கொண்ட தீ தன் கண்முன்னே எரிவதாகத் தோன்றியது அவளுக்கு. அப்போது அவளுடைய உடம்பெல்லாம் நடுங்கும். பிறகு தோன்றும், இது ஒரு கெட்ட கனவுதான். உண்மையல்ல என்று.

வடக்குப் பக்கத் துறையில் ஜப்பர் நிற்பதை மாலதி இரண்டு மூன்று நாட்கள் கவனித்தாள். நரேன்தாஸ் அவனை விரட்டிவிட்டான், *மியான், உனக்கு இங்கே என்ன வேலே ?" என்று. "உன்னுேட அப்பன் வந்தால் சொல்றேன்" என்று மிரட்டினுன்,

ஜப்பர் அவனுடைய மிரட்டலைப் பொருட்படுத்தாமல் சிரித்தான். சிரித்துக்கொண்டே தன் தாடியைக் கையால் தடவிக்கொண்டான். அவனுடைய நீண்ட தாடியும் அவனும் இப்போது அவனைப்

306http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

பார்த்தால் அடையாளமே தெரியாது. இப்போது ஒரு பெரிய மனித ணுகிவிட்டான் அவன். அவன் தன் தாயின் சாவுக்குப் பிறகு வெகு நாட்கள் இந்த ஊரில் தங்கவில்லை. வேருெரு ஊரில் தறி வாங்கித் தொழில் செய்ய முயற்சி செய்தான். அவனுக்கும் அவன் தந்தைக்கும் இப்போது ஒரு சம்பந்தமும் இல்லை. ஆபேத்அலி மறுபடி நிக்காஹ் செய்துகொண்டு தன்னுடைய இடிந்த வீட்டைச் செப்பனிட்டு அதற்குப் புதுக்கூரை போட்டுக்கொண்டு விட்டான். தன் பீபியின் பாதுகாப்புக்காக வீட்டைச் சுற்றி வேலி போட்டுவிட்டான். அவனு டைய புதிய பீபி கொலுசு ஒலிக்க, வீட்டுக்குள்ளே உட்கார்ந்திருப் பாள் அல்லது படுத்திருப்பாள். ஜப்பர் தன் தகப்டனைப் பொருட் படுத்துவதில்லை. அவர்களிடையே ஒரு நாள் தகராறு முற்றி, தடியடி கூட நேர்ந்துவிட்டது. ஜப்பர் பெண்களிடம் தவருக நடந்து கொள்வது ஆபேத் அலிக்குப் பிடிக்கவில்லை,

ஜப்பர் இப்போதெல்லாம் ஊருக்கு வந்தால் ஆபேத் அலியுடன் தங்குவதில்லை; பேலு ஷேக்கின் வீட்டுக்குப் போய்விடுகிறன். அங்கேயே சில நாட்கள் தங்குகிறன். பேலுவின் பீபிக்கு அத்தர் வாங்கிக் கொடுக்கிருன். சந்தையிலிருந்து வாசனைத் தைலமும், பெரிய பெரிய இலிஷ் மீனும் வாங்கிக் கொண்டுவந்து நவாப் மாதிரி சில நாட்கள் பணத்தை வாரி இறைக்கிறன், ஜப்பர் வந்துவிட்டால் பேலுவின் பீபிக்கு ரொம்பக் கொண்டாட்டம், பேலுவுக்கு எல்லாம் புரிந்தது. அவன் மூதேவி!" என்று அவளைத் திட்டிவிட்டுத் தன் முடமான மணிக்கட்டைப் பார்த்துக்கொள்வான். அவனுடைய வலக்கைப் புண் சற்று ஆறி இருந்தது. ஆணுல் இடக்கை மணிக்கட்டு இன்னும் வீங்கியே இருந்தது. கறுப்பாக, முதலையின் தோலைப்போல் சொரசொரப்பாகத் தோல் காய்ந்து கிடந்தது. கையில் ஒரு கறுப்புக் கயிற்றில் வெள்ளைச் சோழி கட்டியிருந்தான், தாரைப் போல் ஒரு கொழகொழா எண்ணெயைத் தடவித் தடவி அந்தக் கை கையாகவே இல்லை.

ஜப்பர் வந்துவிட்டால் பேலுவின் பீபி மகிழ்ச்சி பொங்க ஆடுவாள், பாடுவாள், உற்சாகமாக வளையவருவாள். அவனுடன் ஏதேதோ குசுகுசுப் பேச்சுப் பேசுவாள். அப்போது பேலு நாவல் மரத்தடியில் ஒரு கிழிந்த ஜமுக்காளத்தைப் போட்டுக்கொண்டு படுத்திருப்பான். அவர்கள் இருவரும் குலாவுவதைப் பார்க்கப் பொறுக்காவிட்டால் தன் கறுப்பு-வெளுப்புக் கன்றுக் குட்டியை இழுத்துக்கொண்டு அதை மேய்க்க வயலுக்குப் போய்விடுவான். அங்கே வெயிலில் நின்றுகொண்டு ஆத்திரம் தீரக் கத்துவான், "ராட்சசி! என்கிட்டே உனக்குப் பயமே இல்லே!" என்று.

307http://www.chie/pdf. çOIm - LL LLL LLL LLLL L LLLLL LLLL tLgLLLLS LL LLL LLL LtttLTLLS aLLtLLL aSsL LL LLL LLLLGLLS

ஆனல் சில நாட்களாக அந்தப் பீபிசுட ஜப்பருடன் பேசுவது இல்லை. ஏன் இப்படி அவர்கள் இருவரும் திடீரென்று ஊமையாகி விட்டார்கள் என்று தெரிந்துகொள்ளப் பேலுவுக்கு ஆசைதான். ஜப்பர் வந்துகொண்டிரா விட்டால் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடக் கஷ்டமாகிவிடும் பேலுவுக்கு.

ஒவ்வொரு நாள் ஜப்பர் நேரே மாலதியின் வீட்டு வாசலுக்கு வந்து கூப்பிடுவான், "அக்கா, இருக்கீங்களா?" என்று.

மாலதி வெளியே வந்தால் அவன் அவளிடம், 'உங்களுக்கு மாமனுர் வீட்டுக்குப் போகணுமின்னு இல்லே? மாமனுர் வீட்டுக்குப் போக மாட்டிங்களா, நீங்க?" என்று கேட்பான்,

"அங்கே ஏன் போகனும்? அங்கே யார் இருக்காங்க எனக்கு?" "என்ன சொல்றீங்க நீங்க? உங்களுக்கு ஒருத்தருமே இல்லையா அங்கே?"

மாலதியின் கண்களில் நீர் நிறைந்துவிடும். ஜப்பர் அவளைவிடச் சிறியவன். எவ்வளவு வயது சிறியவனுக இருப்பான் என்று யோசித்துப் பார்த்தாள் மாலதி, அவனுடைய முகம் அருவருக்கத்தக்கதாக இருந்தது. அவன் அந்தப் பக்கம் அதிகமாகச் சுற்றத் தொடங்கி இருந்தான். காலம், நேரம் பார்க்காமல் அவள் வீட்டு வாசல் வழியே போக ஆரம்பித்திருந்தான். இதனுல்தான் இரவில் பயமாக இருந்தது மாலதிக்கு, அவனைக் கண்டதும் அவளுக்குச் சொல்லத் தோன்றியது, “உன்னுேட முழங்காலை முறிச்சுடுவேன்", அல்லது அந்த ஆளிடம் போய்க் கேட்கத் தோன்றியது, "டாகுர்! எனக்கு ஒரு பெரிய கத்தி வாங்கித் தரியா?” என்று.

ஜப்பரின் நினைவு வந்தாலே மாலதியின் உடல் ஒரு மாதிரி இறுகி விடும். அவள் அங்கே நிற்காமல் தீன பந்துவின் வீட்டு மரத்தடிக்குப் போய் அங்கே ஒரு மறைவான இடத்தில் நின்றுகொண்டு அந்த ஆளைத் தேடுவாள். ஊஹ 2ம், அந்த ஆளைக் காணுேம் ! தான் அங்கு எலுமிச்சை இலைகளைப் பறிக்க வந்தவள்போல் சில இலைகளைப் பறிப்பாள் மாலதி, -

அவள் டாகுர் வீட்டு முன்னறையில் பார்த்தது அந்த ஆள் அல்ல; அவனுக்குப் பதிலாக அங்கே உட்கார்ந்திருந்தது சசிபூஷண்தான். அவர் ஏதோ சாமான்களை மூட்டைகட்டி வைத்துக்கொண்டிருந்தார். பள்ளிக்கூட விடுமுறை. ஆகையால் அவர் ஊருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த ஆள் - அவள் தேடிக்கொண்டிருந்த ஆள் - எங்கே போய்விட்டான் ? சாதாரணமாக இந்த நேரத்தில் இங்கேதானே இருப்பான்.

மேஜைமேலே ஒரே புத்தகக் குவியல். புத்தகங்களில் மூழ்கி இருப்பது அவன் வழக்கம். எங்கே போய்விட்டான் அவன்? மாலதி

308http://www.l.ie/pdf, on LLLLLLlLLLLLL LLL LLLL LL LLL LtLLL LLLLLLLLS aL LLLLLaL LLLL LtLLLTSLLLLa LLLLLL LL LLL LLLGGLS

மேலும் தாமதிக்கவில்லை. இடுப்பில் தண்ணிர்க் குடம் இருந்தால் தயங்கத் தேவையில்லை. அங்கு வர ஒரு சாக்குக் கிடைத்துவிடும். ஆஞல் எதையோ நினைத்துக்கொண்டே டாகுர் வீட்டு வாசலுக்கு வந்துவிட்ட பிறகு இனித் திரும்ப வழியில்லை. அவள் விட்டுக்குள் நுழைந்தாள், பெரிய மாமியும் தனமாமியும் துறையிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். வீட்டில் எல்லாரும் இருந்தார்கள், ரஞ்சித்தைத் தவிர, ரஞ்சித்திடம் ஒன்று சொல்லவேண்டும், அவள் இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் ரஞ்சித் ஒருவனிடந்தான் தெரிவிக்க முடியும், அவள் சோனுவைத் தேடினுள். சோனு இருந்தால் அவனைக் கேட்கலாம், "அவனுடைய மாமா எங்கே?' என்று. சோனு, லால்ட்டு, பல்ட்டு ஒருவரையும் காணுேமே!

பெரிய மாமி மாலதியைக் கண்டதுமே அவள் உள்ளுறப் பயந்து கொணடிருப்பதை ஊகித்துக்கொண்டு விட்டாள். "உன் முகம் ஏன் இப்படி இருக்கு, மாலதி ? உனக்கு என்ன வந்தது? உன்னே யாராவது என்னவாவது சொன்னுங்களா?" என்று அவள் மாலதியைக் கேட்டாள்.

"என்ன நடக்கும்?" "உன்னைப் பார்த்தாலே தெரியறது, நீ ராத்திரி முழுதும் தூங்கல் லேன்னு!"

மாலதிக்கு வெட்கமாக இருந்தது. அவள் எவ்வளவோ சொல்லி இருக்கலாம், அவள் தூங்காமல் இருப்பானேன்? அவள் ஒரு விதவை யாருக்காகத் தூங்காமல் விழிக்கவேண்டும் அவள்? ஆனுல் பெரிய மாமியின் பேச்சுக்குப் பிறகு, "ரஞ்சித் எங்கே, அண்ணி? என்று கேட்க முடியவில்லை அவளால்,

அவள் வெளியே வந்தாள். டாகுர் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த பவழமல்லிகைச் செடிக்கருகே வந்து நின்றள். செடி முழுதும் வெள்ளை மலர்களால் மூடியிருந்தது. பூப்பறித்துக்கொண்டு செல்ப வர்கள் அதிகாலையிலேயே பூப்பறித்துக்கொண்டு போய்விட்டார் கள். அதன் பிறகும் ஏராளமான பூக்கள் பூத்துக் கீழேயும் சிதறிக் கிடந்தன.

மாலதி ஏதோ நினைத்துக்கொண்டு பூப்பறித்துத் தன் மடியில் நிரப்பிக்கொள்ள ஆரம்பித்தாள். அவளுக்கு அந்த நேரத்தில் வேறு வேலை இல்லாதிருக்கலாம்; அல்லது அந்த இடத்தில் இன்னுங் கொஞ்ச நேரம் இருக்க அவளுக்கு ஒரு சாக்குத் தேவைப்பட்டிருக்கலாம். ரஞ்சித் இந்தப் பக்கத்தில் எங்கேயாவது இருந்தால் அவள் பூப்பறித்து முடிவதற்குள் அங்கே வந்துவிடுவான் என்று நினைத்து அவள் பூப்பறிப்பதாகப் போக்குக் காட்டினுள். அவளுடைய கொண்டை அவிழ்ந்திருந்தது. ஆபரணங்கள் அற்ற வெள்ளைப் புடைவை

309http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

அணிந்திருந்த அவள் ஒரு பெண் துறவியைப் போல் தோற்றம் அளிததாள். அவளுடைய தோள்கள்தாம் எவ்வளவு வாளிப்பாக இருக்கின்றன! இவ்வளவு வாளிப்பான தோள்களையும் உடம்பையும் வைத்துக்கொண்டு அவள் என்ன செய்யப் போகிறள்? இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் அவள் ரஞ்சித்தைத் தேடிவந்தாளோ?

*நான் என்ன செய்யவேண்டும்?” வீட்டு வாசலில் ஏதோ காலடிச் சத்தம் கேட்டது. ரஞ்சித் வந்துவிட்டான் என்ற நினைப்பில் அவள் திரும்பிப் பார்த்தாள். சின்ன பாபு. அவருக்குப் பின்னுல் அலிமத்தி. எங்கோ புரோகிதத் துக்குப் போகிருரர் சின்ன பாபு. பூஜைகள், விரதங்களுக்கான பருவம் இது, துர்க்கா பூஜை-சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி பூஜைகள். தசமி பூஜைக்கப்புறம் சில நாட்கள் ஒரு வெறுமை, பூர்ணிமை வந்ததும் அது தீர்ந்துவிடும். அஸ்வின் மாதத்துப் பூர்ணிமை. இரவில் பூர்ணிமை நிலவு வெள்ளை வெளேரென்று பரவியிருக்கும். மாலதிக்கு அந்த நிலவில் என்னவெல்லாம் செய்ய ஆசை 1 நிலவில் தர்மூஜ் வயலில் அவனுக்கருகில் மெளனமாக உட்கார்ந்து, இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு அவனிடம் "நான் பரிதாபத்துக்கு உரியவள், என்னை ஆற்றங்கரைக்கு அழைத்துப் போ! தண்ணிரில் படகைச் செலுத்து!" என்று சொல்ல ஆசை. தனிமையில் அவனுடன் ஸோனுலி பாலி ஆற்று நீரில் நீந்திக் களிக்க ஆசை !

அவள் ரஞ்சித்துக்காகக் காத்திருந்தாள். அவன் வரவில்லே, இரண்டு தடவை பெரிய மாமி அந்தப் பக்கம் வந்தாள். ரஞ்சித் எங்கே?" என்று அவளைக் கேட்க ஒவ்வொரு தடவையும் நினைத்தாள் மாலதி, ஆணுல் கேட்க சங்கோசமாயிருந்தது. அவள் வாயைத் திறவாமல் மனசுக்குள்ளேயே கெஞ்சினுள், "அண்ணி, அண்ணி ! நான் நிஜமாப் பூப்பறிக்க வரல்லே, அண்ணி, நான் !"

"உனக்கு ஏதாவது சொல்லணுமா?" என்று பெரிய மாமியே கேட்டுவிட்டாள்.

"ரஞ்சித்தை எங்கே கானுேம், அண்ணி?" "அவன் டாக்கா போயிருக்கான்." "டாக்காவுக்கா?" வியப்புடன் கேட்டாள் மாலதி. *ஆமா. நேத்துச் சாயங்காலம் ஒருத்தன் வந்தான். நாடோடிப் பாடகன். இந்த வீட்டுக்குத்தான் நாடோடி, பைராகி மாதிரி யாராவது வந்துகொண்டே இருக்காங்க. வருவாங்க, சாப்பிடு வாங்க. இங்கே படுத்துக்கிண்டு இராப் பொழுதைக் கழிப்பாங்க விடிஞ்சதும் தோணின திக்கிலே புறப்பட்டுப் போயிடுவாங்க, நேத்து வந்தவனும் அந்த மாதிரி ஒரு ஆளாக்கும்னு நினைச்சேன். அடே யப்பா ! ராத்திரிப் பூரா அவனும் ரஞ்சித்தும் ஏதோ குசுகுசுன்னு

EOhttp://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

பேசிக்கிண்டே இருந்தாங்க. என்னதான் பேசினுங்களோ? ரஞ்சித் என்கிட்டே சொன்னுன், "நான் டாக்கா போறேன். எப்போ திரும்பி வருவேன்னு நிச்சயமில்லே திரும்பி வருவேனுன்னும் நிச்சயமில்லே என்ருன்." மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டு போனுள் பெரிய மாமி.

அதற்கு மேலும் பெரிய மாமிக்கு முன்னுல் நிற்க முடியவில்லை, அவளால், நின்றுகொண் டிருந்தால் அவளுடைய ரகசியம் வெளியாகிவிடும். அவள் அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள். "ரஞ்சித், நீ இப்படிப்பட்டவணு ?" அவளால் பொறுக்க முடியவில்லை. எங்கேயாவது போய் விழுந்துவிடத் தோன்றியது அவளுக்கு.

அவள் புளியமரத்தைத் தாண்டி, குளத்தங்கரையில் நிழல் பரப்பிக்கொண் டிருந்த நாவல் மரத்தடிக்கு வந்தாள். இங்கு அவள் தயக்கமின்றி, ஆசைதீர அழலாம். யாரும் அவளைப் பார்க்க மாட்டார்கள். அவள் பூக்களைத் தண்ணிரில் எறிந்துவிட்டு அவை நீரில் மிதப்பதைப் பார்த்தவாறு நின்ருள். இரவின் இருளில் கிசு திசுப்பது யார்? 'டாகுர்! நான் எங்கே போவேன்?" மாலதி உரக்கக் கூவ விரும்பினுள், ஆணுல் முடியவில்லை. ஏமாற்றத்தில் அவளது கண்கள் நீரைப் பொழிந்தன.

ஏரியிலிருந்து படகைத் தள்ளிச் சிதலசுஷா ஆற்றுத் தண்ணிரில் இறக்கும்போது ஈசம் கூவினுன், "எசமான்களா ! ஜாக்கிரதையா உட்காருங்க. தண்ணியிலே விழுந்தா அடிச்சிக்கிட்டுப் போயிடும். பெரிய நதி, சீதலசுஷா வந்துடுத்து."

பெரிய நதியபின் பெயரைக் கேட்டதும் சோனு படகுக் குடிசைக்குள் போய் உட்கார்ந்துகொண்டான். இவ்வளவு நேரம் கூரைமேல் உட்கார்ந்திருந்த லால்ட்டுவும் பல்ட்டுவும் படகின் மேல்தட்டுக்கு இறங்கி வந்தார்கள், ஆற்றின் வேகத்தில் படகும் வேகமாகச் செல்லத் தொடங்கியது. படகு குறைந்த நேரத்தில் வெகுதூரம் வந்துவிட்டது. படகின் பாயைக் காற்று அழுத்தியதால் துடுப்பை உபயோகிக்க அவசியம் ஏற்படவில்லை.

ஆச்சரியம், படகு நதியில் இறங்கியதுமே மத்தளங்களின் ஒலியும் கேட்கத் தொடங்கியது. பூஜைக்கு ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. நதியின் இருகரைகளிலும் மரஞ்செடிகொடிகள், பறவை கள் இவற்றினிடையே வரிசை வரிசையாக மாளிகைகளைக் கற்பனை

311http://www.chiepdf. On LL LLLL LL LLL LLLLLL LLL LgLLLLS L LLLLGL LL LLTLS atLLL sLLL LLLL LL LLLLGLLS

செய்துகொண்டு உணர்ச்சிவசப்பட்டான் சோனு, ஏரி பூராவையும், சோனுலி பாலி நதியின் மணல்வெளி முழுதையும், கிராமங்களையும் வயல்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு பெரிய மாளிகை அரண்மனை போல் எவ்வளவு பெரிய மாளிகை அவனுல் படகின் குடிசைக்குள் முடங்கியிருக்க இயலவில்லை. மண்டியிட்டவாறே வெளியே வந்த அவன் செல்வச் செழிப்பு வாய்ந்த அம்மாளிகையின் பிரதிபிம் பம் நீரில் மிதப்பதைக் கண்டான். தண்ணிருக்குள் வேருெரு பட்டனமே உருவாகியிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. சோணு தன் கிராமத்தைவிட்டு வெளியே வெகுதூரம் சென்றதில்லை இதுவரை. அவன் அதிகத் தூரம் சென்றது திருவிழா பார்க்கப் போனதுதான். இத்தகைய மாளிகையை எங்கும் பார்த்ததில்லை அவன், அவன் எழுந்து நின்றன். படகு கரைப் பக்கம் திரும்பியது. எதிரில் ஸ்டீமர் நிற்கும் துறை தெரிந்தது. அதற்குப் பக்கத்திலேயே படகும் நிற்கும் போலும்,

ஆற்றங்கரையில் பனை மரங்கள். பாதையின் இருபுறமும் வெகு தொலைவுவரை பனைமர வரிசை தெரிந்தது. பாதையின் வலப் பக்கம் ஆற்றங்கரை அதில் நாணற் பூக்கள் பூத்திருந்தன. வடக்குப் பக்கம் யானை லாயம் அதைக் கடந்தால் கடைவீதி, ஆனந்தமயி காளி கோவில், அவர்களை அழைத்துச் செல்லப் படகுத் துறைக்கு வந்திருந்த ராம்சுந்தர்தான் இவற்றையெல்லாம் அவர்களுக்கு விளக் கிஞன். -

ஆற்றில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது அந்த மாளிகைகள் வெகு அருகில் இருப்பதாக, ஆற்றங்கரையிலேயே இருப்பதாகத் தோன்றின. ஆனுல் இப்போது படகிலிருந்து இறங்கிவந்த பிறகு அவை அவ்வளவு அருகில் இல்லை என்று தெரிந்தது. பாதையை ஒட்டினுற்போல் முழங்கால் உயரத்துக்கு ஒரு நீண்ட சுவர். அதன் மேல் இரும்புக் கம்பிகள் பதிக்கப்பட்டிருந்தன.

தூரத்தில் சிறிதும் பெரிதுமாகச் சில கோபுரங்கள் தெரிந்தன. கோபு ரங்களின்மேல் சிவப்பு, நீலநிறச் சலவைக் கல் தேவதைகள் பறந்து கொண்டிருந்தார்கள். இரண்டு பக்கமும் சவுக்குமர வரிசை. வரிசை களின் இடுக்கு வழியே குளம் கண்ணுக்குத் தெரிந்தது. குரோட் டன்ஸ் செடிகள், பலவித மலர்ச் செடிகள், மரங்கள். விதவிதமான மலர்கள் மலர்ந்திருந்தன, பிருந்தாவனத்தைப் போல, குளத்தில் தாமரை பூத்திருந்தது. அதன் கரைகளுக்குக் கல்தளம் போட்டிருந் தார்கள். அருவி நீர் கொட்டுவது போன்ற ஒலி கேட்டு நிமிர்ந்து பார்த்தான் சோனு, அருகில் இரும்பு வேலியால் சூழ்ந்த ஒரு புல் வெளி இருந்தது. பசுமையான இளம்புல் செழிப்பாக வளர்ந்து

312http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

இருந்தது அங்கே, மான்கள் அந்தப் புல்லில் விளையாடிக்கொண் டிருந்தன. -

லால்ட்டுவும் பல்ட்டுவும் இந்த மான்களைப் பற்றியும் சிறுத்தை களைப் பற்றியும் சோனுவுக்குப் பல கதைகள் சொல்லியிருந்தார்கள். அவற்றைக் கேட்டு அவன் தன் மனசுக்குள் ஓர் அற்புத உலகத் தைச் சிருஷ்டித்து வைத்துக்கொண் டிருந்தான். ஆனல் இவ்வளவு அருகில் மான்குட்டிகள் உண்மையிலேயே விளையாடிக்கொண் டிருப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ராம் சுந்தர் அவனுக்குப் பக்கத்தில் இருந்தான். லால்ட்டுவும் பல்ட்டுவும் பின்னுல் வந்தார்கள். அவன் ஓட்டம் ஒட்டமாக முன்னதாக வந்துகொண்டிருந்தான். இனிமேல் சிறுத்தை வரும், மயில்கள் வரும். அவன் ஊருக்குத் திரும்பும்போது மயிலிறகு கொண்டு போக வேண்டும். வெண்மையான கூழாங்கற்கள் பதித்த மிருதுவான, வழுவழுப்பான பாதை அது. கூழாங்கற்களின்மேல் குதிரைக் குளம்புகள் படும் ஒலி கேட்டது.

அவன் இரண்டு மூன்று கூழாங்கற்களை எடுத்துத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டான். ஓர் அழகிய இளைஞர் இந்த மாலை வேளையில் குதிரைமேல் மெதுவாகச் சவாரி செய்துகொண் டிருந்தார். அவருக்குப் பின்னுல் ஒரு துடிதுடிப்பான பெண். அவள் ஜரிகை வேலைப்பாடு செய்த வெள்ளே ஃபிராக் அணிந்திருந்தாள். கழுத்துவரை நறுக்கிய வழுவழுப்பான கேசம் அவளுக்கு. ஏறக் குறைய சோணுவின் வயதே இருக்கும். இரும்புக் கிராதியில் செதுக்கி யிருந்த குட்டித் தேவதை ஒன்று பறந்து வந்து குதிரையின்மேல் உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றம், ஒரு விநாடி சோனுவுக்குக் காட்சியளித்துவிட்டு மறைந்துவிட்டது அந்த உருவம். மாளிகையின் முன் கதவு திறந்தது. அந்த இளைஞர் குட்டித் தேவதையுடன் குளத்தங்கரை வழியே சென்று மறைந்துவிட்டார். பிரமித்துப் போய் நின்றன் சோனு,

அவன் குதிரை சென்ற திசையில் ஓடினன். ஒடிக்கொண்டே மாளிகையின் பிரதான வாயிலுக்கு வந்து சேர்ந்தான், பெரிய இரும்புக் கதவுகள், அதன் பின்னுல் விசித்திர உடையணிந்த ஒரு மனிதன். அவனுடைய கையில் துப்பாக்கி, இடையில் கத்தி, தலையில் நீலநிறத் தலைப்பாகை. இதற்குள் வாயில் மூடப்பட்டுவிட்டதால் சோனுவால் உள்ளே போகமுடியவில்லை. குதிரை எப்படிக் காணுமல் போய்விட்டது? சோனுவுக்குப் பயமாக இருந்தது. அவன் திரும்பிப் பார்த்தான். பின்னூல் ராம்சுந்தர், லால்ட்டு, பல்ட்டு எல்லாரும் வந்துகொண் டிருந்தார்கள்.

313http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

சோனு அவ்வளவு பெரிய மாளிகைக்கு அருகில் ஒரு சின்னஞ் சிறு சிட்டுக்குருவியைப் போல் நின்றுகொண்டிருந்தான். அவன் ஒரு ராஜாவின் அரண்மனைக்கு வந்தான். பிரதான வாயில் வழியாக மக்கள் அதிகமாக உள்ளே போகவில்லை. குளத்தின் தெற்கு பக்கமாகத்தான் அவர்கள் போய்வந்தார்கள். சோனு பேசாமல் நிற்பதைப் பார்த்து ராம்சுந்தர் அவனிடம் வேகமாக வந்தான். அந்தக் குடும்பத்துக்கு மிகவும் நெருங்கியவர்கள்தான் அந்த வாயில் வழியே உள்ளே போகலாம். அந்த ஜமீந்தாரியில் நீண்ட காலமாக அலுவல் செய்யும் சிலருக்கும் இந்த உரிமை உண்டு. அம்மாதிரி உரிமை பெற்றவர்களில் பூபேந்திரநாத்தும் ஒருவர். அந்தக் குடும்பத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், அதன் சுகதுக்கங்களில் பங்கு கொள்பவர்.

மாளிகையின் வாயில் வழியே நுழைய முடியாத சோனு இரும்புக் கம்பிகளின் இடுக்கில் தலையைவிட்டு உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே வெகு தூரத்திலிருந்து யாரோ பாடும் ஒலி கேட்டது. அவன் கண்ணுக்கு நேரே வரிசை வரிசையாகத் தூண்களும், வேலைப்பாடுகள் செய்த மரச்சுவர்களும் தெரிந்தன. உயரே லஸ்தர் விளக்குத் தொங்கியது. சோனுவுக்கு வண்ணத்துப் பூச்சி போல் பறந்து உள்ளே நுழைந்துவிட ஆசை.

எங்கோ ஒரு பெண் நடனமாடினுள். அவளுடைய கால் சதங் கையின் ஒலி கேட்டது. எங்கோ மத்தளம் ஒலித்தது. மாளிகையின் மாடியில் வரிசை வரிசையாகப் பளிங்கு த தேவதைகள் பறந்து கொண்டிருந்தன. காற்றில் அவர்களுடைய ஆடைகள் நெகிழ்ந்து அசைவது போலிருந்தன, அந்தக் காட்சிகள். அவர்கள் நடனமாடு கிருரர்களோ, என்னவோ !

நாற்புறமும் மிருதுவான புல்வெளிகள். அவற்றில் அங்கு வளர்க்கப்படும் புல்புல் பறவைகள் உட்கார்ந்திருந்தன. அழகாகக் கத்தரித்து விடப்பட்ட சின்னச் சின்னச் செடிகள் அவற்றில் பூக்கள் பூத்திருந்தன. தெற்குப் பக்கத்திலிருந்து சில பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்து வந்தன. சிவப்பு, மஞ்சள் உடைகள் அணிந்த சின்னஞ்சிறு பெண்கள் கண்ணுமூச்சி விளையாடினுர்கள். *கதவைத் திறங்க, காரியக்கார எசமான் வீட்டு ஜனங்க வந்திருக் காங்க" என்ருன் ராம்சுந்தர்.

உடனே இரும்புக் கதவுகள் கடகட சப்தத்துடன் திறந்து கொண்டன. காவலிருந்த இரண்டு வீரர்களும் சோனுவுக்குச் சலாம் போட்டார்கள். லால்ட்டுவும் பல்ட்டுவும் தங்கள் முகத்தை 'உம்' மென்று வைத்துக்கொண்டார்கள். அவர்களுடைய முகபாவத்தில் எவ்விதச் சலனமும் இல்லை.

314http://www.chief pdf, on Created by TIFF. To PDF trial version, to remove this mark, pleast. gintcr this si filw2rc.

அவர்கள் ஒரு நீர் ஊற்றைப் பார்த்தார்கள். பார்க்கப் பார்க்கச் சோளுவுக்கு வியப்பு அதிகரித்தது. காவல் வீரர்கள் தங்கள் துப்பாக்கி களைப் போட்டுவிட்டு அவனைக் கட்டிக்கொண்டு கொஞ்ச முயன்ற போது அவன் ராம்சுந்தருக்குப் பின்னுல் ஓடிவிட்டான். அவர்களால் அவனைத் தோள்மேல் தூக்கிக்கொள்ள இயலவில்லை. இந்தச் சோனு, சின்னஞ்சிறு சோனு, காரியக்காரர் வீட்டுப் பையன். அவனுடைய முகத்திலும் கண்களிலும் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்தது. காவலர்கள் சோனுவைத் தோள்மேல் தூக்கி வைத்துக்கொண்டு பூபேந்திரநாத் திடம் கூட்டிச் செல்ல விரும்பிஞர்கள். அழைத்துச் சென்ருரல் அவர் களுக்கு ஏதாவது இனும் கிடைக்கும். சோனு அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்தான். அவனுக்கு ஏதோ பயம். பலவந்தம் செய்தால் அவனுக்கு அழுகை வந்துவிடும்.

சோனுவுக்கு இந்த வீட்டில் நடந்து மாளாது என்று தோன்றியது. தான் எங்கிருக்கிறுேம் என்று அவனுக்குப் புரியவில்லை. தலைக்கு மேலே உயரமான விதானம், அதிலிருந்து லஸ்தர் விளக்குகள் தொங்கின. நீண்ட வராந்தா, சுவரின் மேல்விளிம்பில் புருக்கள், சதுர இடைவெளியுள்ள கம்பிவலைத் திரை, வேலைக்காரர்கள், வேலைக் காரிகளின் குரல்கள்.இவை முடிவற்றதாக த தோன்றின சோனுவுக்கு. ராம்சுந்தர் அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு மாளிகையின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக்கொண்டு வந்தான். இந்த நேரத்தில் பைத்தியக்காரப் பெரியப்பா அவன் அருகில் இருந்தால் சோனுவுக்கு எவ்விதப் பயமும் இருக்காது. ஜமீன்தாரின் முன்னேர்களின் உருவங்கள் தீட்டிய ஓவியங்கள் மாளிகையின் சுவர்களில் தீட்டப் பட்டிருந்தன. பிறகு அவர்கள் நடன சாஃபக்கு வந்து சேர்ந்தார்கள். இங்கேதான் சோனுவால் ஆகாயத்தைப் பார்க்க முடிந்தது. இப்போது தான் அவனுக்குச் சற்றுப் பயம் தெளிந்து தெம்பு வந்தது.

பூபேந்திரநாத் ஆபீஸ் அறையில் உட்கார்ந்து பூஜைக்கான சாமான்கள் வாங்கிய கணக்கைப் பார்த்துக்கொண் டிருந்தார். ஒரு தடிமனுன, பெரிய மெத்தையின்மேல் உட்கார்ந்திருந்தார் அவர். அதன்மேல் வெள்ளைவெனேரென்று ஒரு விரிப்பு விரித்திருந்தது. பெரிய பெரிய திண்டுகள் போட்டிருந்தன. கீழே குடிமக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

சோனு வந்துவிட்டான் என்று கேட்டதும் பூபேந்திரநாத் வேலையை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார். இந்தத் தடவை பூஜை பார்க்க சோளு வருவதாக இருந்தது. ஆணுல் கடைசிவரை சசி அவனை அனுப்பச் சம்மதிப்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. ஆகை யால் காலையிலிருந்தே அவருக்கு வேலையில் மனம் செல்லவில்லை. நடுப்பகலிலிருந்தே ராம்சுந்தரைப் படகுத் துறையில் உட்கார்த்தி

35http://www.l.ie/pdf. On LL LLLlL LL LLLLL L LLLLL LLL LLLgLLLLSS a LLLLLLaL LLLL LtLLLLS aLLL a sLLL LLLL LL LLLLGLLS

வைத்திருந்தார் அவர். சிறுவர்கள் எப்போது வருவார்கள். எப்போது வருவார்கள் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் ஓடிவந்தபோது நடனசாலையில் சோளு அம்மனுக்கு நமஸ் காரம் செய்துகொண் டிருப்பதைக் கண்டார். அவன் நீல நிறப் பாண்ட், அரைக்கை சில்க் சட்டை, ரப்பர்ச் செருப்பு இவற்றை அணிந்திருந்தான். அவனுடைய முகம் வற்றிக் கிடந்தது. காலையில் புறப்படுவதற்குமுன் சாப்பிட்டிருப்பான். பூபேந்திரநாத் வேகமாக வந்து சோனுவைத் தூக்கி மார்புடன் அனைத்துக் கொண்டார். அம்மனுக்கு முன் நின்றுகொண்டு இந்தச் சிறுவனுக்காக என்ன என்னவோ வேண்டிக்கொள்ளத் தோன்றியது அவருக்கு. ஆனுல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அகன்ற கண்களுடன் அபய மளிக்கும் கையுடன் தேவி அவர்கள் முன்னே நின்றுகொண் டிருந்தாள். திடீரென்று, "அம்மா! அம்மா!" என்று கூவினுர் பூபேந்திரநாத், இந்தத் திடீர்க் கூவலில் சோனு பயந்துவிட்டான். பூபேந்திரநாத்தின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

பூபேந்திரநாத்துக்குத் தேவியிடம் உறுதியான பக்தி. அவர் செய்வது வெறும் பூஜையல்ல; அவருடைய உள்ளத்துக்குள் ஆழ்ந்த நம்பிக்கை பறவைபோல் எப்போதும் விளையாடிக்கொண் டிருந்தது. சோனுவை மார்புடன் அனைத்தவாறே பூபேந்திரநாத் தேவியின் முன் நின்று அவளுடைய எல்லையற்ற பெருமையை எண்ணிஞர், அவளுடைய கருணை இல்லாவிட்டால் மனிதன் எப்படிப் பிழைப் பான், எப்படிச் சாப்பிடுவான்? இவ்வளவு செழிப்பு எங்கிருந்து வரும் ? இந்தச் சோனுவும் தேவியின் பெருமையின் அடையாளந் தான். துர்க்கை அன்ன பூஜையை ஏற்றுக்கொள்ள நாட்டுக்கு வந்திருக்கிருள். சோனுவும் வந்திருக்கிருன்,

சரத் காலம் நானல் மலர்கள் எங்கும் மலர்ந்திருக்கின்றன. லஸ்தர் விளக்குகள் எரியும், மணல்வெளியில் யானை உலவும். அதன் கழுத்திலுள்ள மணி ஒலிக்கும். அதற்கு வெள்ளைச் சந்தனமும் சிவப்புச் சந்தனமும் இட்டு அலங்கரிப்பார்கள். தேவியின் வருகைக் காக இவ்வளவு ஏற்பாடுகளும் நடக்கும்.

பூபேந்திரநாத் தேவியின் முன்னுல் நின்று சிறுவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். தேவியின் கண்கள் பெரிதாக இருந்தன. மூக்கில் ஒரு பெரிய வளையம் கைகளில் இருந்த சங்கு பத்மம், கதை எல்லாமாகச் சேர்ந்து பக்தர்களுக்கு அபயம் அளித்துக்கொண் டிருந்தன.

ஆனந்தமயி கோவிலுக்கு அருகிலுள்ள நிலத்தில் முஸ்லிம் குடியானவர்கள் தொழுகை செய்வார்கள். அது மசூதி இல்லை. அங்கு ஒரு பழைய இடிந்த கோட்டை இருந்தது. அது ஈசாகானுடைய

316http://www.l.ie/pdf. In LLLLLLLLlLLLLLLL LLLL LLLL LL LLcc LLLLLL LLLLLLLLS L0L LLLLLLaL LLLL LlmLLLTSSSLLLLaaSLlL LLL LLL LLLGLGS

தாக இருந்திருக்கலாம், அல்ல்து சாந்த்ராய், கேதார்ராய் கட்டிய தாகவும் இருக்கலாம். அந்த இடிந்த கோட்டையில் தொழுகை நடத்தும் உரிமை பற்றி ஒரு கிளர்ச்சி ஆரம்பித்திருக்கிறது.

இன்று காலையில் ஆபீசுக்குச் செய்தி வந்தது - முஸ்லிம்கள் குறிப்பாக பஜாரில் வசிக்கும் மெளல்வி சாயபு, இந்துக்களுக்கு இடைஞ்சல் செய்ய முனைந்திருப்பதாக, மெளல்வி சாயபு இரண்டு பெரிய நூல் கடை வைத்திருந்தார். அவருக்கு ஆற்றுப் படுகையில் சொந்தமாக ஆயிரம் பீகா நிலம் இருந்தது.

தேவியின் மகிமையால் இந்தக் கிளர்ச்சி யெல்லாம் அடங்கிவிடும். தேவியின் விருப்பத்துக்கு மாறக யாரால் நடக்கமுடியும்? மகிஷா சுரனைக் கொல்லத் தயாராக இருக்கிறது, தேவியின் கையிலுள்ள சூலம். மகிஷாசுரவதக் கற்பனை பூபேந்திரநாத்தின் மனத்தில் தோன்றியது. "அம்மா! அம்மா! உன் பெருமைதான் என்னே!” என்று கூவத் தோன்றியது, ஆனுல் அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. பெரியப்பாவின் கண்களில் நீர் தளும்புவதைக் கண்ட சோளு, அவர் தங்களைக் கண்ட மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக நினத்துக்கொண்டான்.

சோனு மாளிகைக்குள் இவ்வளவு தூரம் வந்தும் அந்தச் சிறிய பெண்ணே - அவள் பெயர் கமலா - பார்க்க முடியவில்லை. அவள் எங்கே போய்விட்டாள்? உள்ளே வந்ததும் அவளைப் பார்க்கலாம் என்று நினைத்திருந்தான் அவன். ஆனுல் அவளைக் காணுேம். சாப்பிட உட்கார்ந்தபோதுகூட அவள் பக்கத்தில் எங்காவது உட்கார்ந்திருக்கிருளா என்று நாற்புறமும் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். எவ்வளவோ சிறுவர்களும் சிறுமியரும் இங்குமங்கும் ஓடிக்கொண் டிருந்தார்கள். குதிரைச் சவாரி கற்றுக்கொள்ளும் அந்தப் பெண்னை மட்டும் எங்கும் காணவில்லை. இவ்வளவு சிறிய பெண் குதிரை மேல் ஏறிச் சவாரி செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவளைக் கண்டுபிடிக்கும் ஆசையில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக்கொண்டே யிருந்தான் சோனு. சசீந்திரநாத் காலையிலிருந்தே வேலையில் மும்முரமாக இருந்தார். குழந்தைகள் எல்லாரும் பூஜைக்குப் போய்விட்டார்கள். பிற்பகலில் மன்தர் அவரிடம் ஒரு புகாரைக் கொண்டு வந்தான். அவனுக்கும் ஹாஜி சாயபுவுக்கு மிடையே விரோதம் அதிகமாகிக் கொண்டு வந்தது. ஹாஜிசாயபுவின் பெரிய பையன் மன்தரின் சொற்ப நிலத்தில் வாய்க்கால் வெட்டிவிட்டான். சென்ற கோடையில். மழைக் காலத்தில் சனல் அறுவடையாகும்போது மன்தரின் சணல் பயிரைத் தானே பலவந்தமாக அறுவடை செய்து கொண்டு போய்விட்டான்.

317http://www.chiepdf, on LL LLLLLlLLLLLLL LL LLL LLL LLLL LL LLLLLLLLS L0L LLLLLLaL LLLL LLtttLLLLSaLLLLLLLaa LLLL LL LLL LLLGLaS

ஹாஜிசாயபுவுக்குப் பெரிய குடும்பம், மூன்று பிள்ளைகள். கரும்பு, சனல் விவசாயம், இருந்தும் சொற்ப நிலத்துக்காகக் கொலேகூட நடந்துவிடும். ஆகையால் சசீந்திரநாத் அன்று மாலை முழுதும் இந்தச் சச்சரவுக்கு முடிவு காண்பதற்காக ஹாஜி சாயபுவின் வீட்டில் உட்கார்ந்திருந்தார். சுமுகமான முடிவு ஏற்பட்டுவிட்டால் வீடு திரும்பிவிடுவார்.

ஹாஜிசாயபுவின் வீட்டுத் திண்ணையில் பலகைமேல் உட்கார்ந் திருந்தார் சசீந்திரநாத், வெற்றிலை புகையிலை அவருக்காக வந்தன. ஆணுல் அவர் அவற்றைச் சாப்பிடவில்லை. இப்போது இஸ்மத் அலியும், பிரதாப் சந்தாவும் வந்தார்கள் பெரிய மியானும் வரலாம். ஆணுல் சசீந்திரநாத்தான் எல்லாம். சசீந்திரநாத் ஹாஜிசாயபுவின் இரண்டாம் பிள்ளையைத் தேடினர். அமீர் எங்கே போயிருக்கிருன்? அவன் பெரிய மியான அழைத்துவரப் படகு எடுத்துக்கொண்டு போயிருந்தான்.

அப்போது துறையிலிருந்து வந்த பெரிய மியான் சசீந்திரநாத்துக்கு சலாம் செய்தார். "எசமான், செனக்கியமா இருக்கீங்களா ?"

'ஏதோ இருக்கேன். ஏன் உனக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு?"

"அதை ஏன் கேட்கறிங்க ? ஆத்துமனல்லே யாரோ ஒரு பெரிய படகைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்காங்க."

"யாரோட படகு?”

தெரிஞ்சுக்க முடியல்லே. ரெண்டு படகோட்டி இருக்காங்க, நீளத் துடுப்பு ஒண்னு இருக்கு. பாய் இருக்கு. அதைப் பார்க்கத் தான் போயிருந்தேன்."

"படகோட்டிகள் என்ன சொல்ருங்க?"

"ஒண்ணும் சொல்லமாட்டேங்கருங்க. எங்கேயிருந்து படகு வந்திருக்கு, எங்கே போயிக்கிட்டிருக்கு - ஒண்ணும் சொல்லமாட் டேங்களுங்க."

"ஒண்னும் சொல்லல்லியா?"

பஊஹ-oம்! ராத்திரி வேளையிலே அவங்களோட பாட்டு மட்டும் கேக்குது."

"என்ன பாட்டு?”

பகுனுயி பீபியோட பாட்டு மாதிரி இருக்கு, ராப்பூரா ஜில் ஜில்" சத்தம் கேக்குது."

மராத்திரி வேளையிலே போய்ப் பார்த்தியா?"

பயமாயிருக்கு, எசமான் ராத்திரிவேளை பாட்டுக் கேட்கப் போனேன். கிட்டப் போய்ப் பார்த்தா, படகு ஆத்து நடுவிலே நிக்குது. பகல் வேளையிலே போய்ப் பார்த்தா, ரெண்டு படகோட்டி

3.18http://www.chief pdf-oln his sitt w Created by TIFF. To PDF trial version, to remove this mark, pleast register this stillware.

களும் உட்கார்ந்திருக்காங்க, ரெண்டு பேரும் ஊமை, ஜாடை யாலேதான் பேசருங்க”

"யாரோட படகு, ஏன் வந்திருக்கு? ஒண்னுமே தெரியல்லியா?” "இல்லை." "ஆச்சரியமா யிருக்கே." *ஆமாங்க, ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்கு." மன்சூர் வந்ததும் சசீந்திரநாத் பேச்சை மாற்றினர். ஹாஜிசாயபு தொழுகை செய்யும் பாணியில் ஜமுக்காளத்தில் வந்து உட்கார்ந்தார். அவர் கையில் வெள்ளிப் பூண் போட்ட தடி அவர் புகாரை ஏற்றுக் கொண்டார் பலவந்தமாக அறுவடை செய்த சணலைத் தந்துவிட ஒப்புக்கொண்டார். நிலத்திலிருந்து தண்ணிர் வடிந்தபிறகு எல்லாரு மாகச் சேர்ந்துகொண்டு வாய்க் காலைச் சரி செய்வதென்று முடிவாகியது.

சசீந்திரநாத், "என்ன மன்தர், ஆத்திலே ஒரு பெரிய படகு நிக்குதாமே?" என்று மன்துரைக் கேட்டார். "ஆமாங்க, நானும் கேள்விப்பட்டேன்." "ஆத்திலே எந்தப் பக்கம்?" "ரொம்பத் தூரத்திலேங்க." ஆமாம், உண்மையிலே அதிக தூரந்தான். ஆறுகளும் கால்வாய் களும் நிறைந்த நாடு அது. மழைக் காலத்தில் ஒவ்வொரு கிராமமும் ஒரு தீவுபோல் காட்சியளிக்கும். அவற்றைச் சுறறி ஒரே தண்ணிர், ஆறுகளின் கரைகளே கண்ணுக்குப் புலப்படா, பெரிய பெரிய அன்னுசித் தோப்புகள் காடுகள் தண்ணிருக்குள்ளிருந்து மூக்கை நீட்டிக்கொண் டிருக்கும். தெற்குப் பக்கம் சாலமரக் காடு. அதில் புலி இருக்கும். விரும்பினுல் அந்தப் படகு சாலமரக் காட்டுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டு விடலாம், மறைந்துபோய் விடலாம். அதைக் கண்டுபிடிக்க முடியாது. கண்ணுமூச்சி விளையாட்டு மாதிரி தான். ஏரிகள், கால்வாய்கள், பத்து இருபது கோச தூரத்துக்குச் சாலமரக் காடு, காட்டில் இந்தப் பருவத்தில் விபத்துக்கள் ஏற்படுவது இயற்கை தான்.

பட்குத துறைக்குப் போகுமுன் சசீந்திரநாத், "அலிமத்தி வா ஒரு தடவை பார்த்துட்டுப் போகலாம்" என்ருரர்.

“எங்கே போகனும்?" "ஆத்துப் படுகைக்கு. அங்கே ஒரு பெரிய படகு வந்திருக்காம்." அலிமத்தி துடுப்பு வலித்துக்கொண்டு வயல் பகுதிக்கு வந்தான், இங்கே தண்ணிர் குறைவாக இருந்ததால் படகை நடுப்பகுதியி லேயே ஒட்டிக்கொண்டு போகவேண்டி யிருந்தது. ஆற்றை யடைந்ததும் அவன் துடுப்பை எடுத்துவிட்டுப் படகின் பாயை

319http://www.ch ie/pdf, on

Created by TLIFFT o PDF trial versi DI, t I IIIc Titovic liiN minxur, Pleisurgister this suftware

விரித்தான். பிறகு நாற்புறமும் உற்றுப் பார்த்தபடி, "படகு ஒண்ணேயும் காணுேமே, எசமான் !" என்ருன்.

"படகு இல்லே?"

"இல்லியே! இருந்தாக் கண்ணுக்குத் தெரியாதா?"

சசீந்திரநாத் படகின் மேற்பலகையில் எழுந்து நின்று பார்த்தார். ஆமாம், உண்மையில் அங்கே படகு ஒன்றும் இல்லை. பெரிய படகு கிடக்கட்டும், சந்தைக்குப் போகிற சிறிய கோஷாப் படகைக்கூட அங்கே காணுேம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இட்போது வீட்டுக்கு வீடு விளக்கு எரிந்தது. ஆஸ்வின் மாத மாதலால் இரவு நேரம் குளிராக இருக்கவேண்டும். ஆணுல் இன்னும் வெப்பம் தணியவில்லை. பாத்ர மாதத்தில் இருப்பதைப் போன்ற இறுக்கமான வெப்பத்தால் சசீந்திரநாத்துக்கு உடம்பெல்லாம் வேர்வை, அலிமத்தி மாட்டுக் கொட்டகையில் புகை போட்டான். அங்கே ஒரு பெரிய கொசுவலே கட்டியிருந்தது. புகை போட்ட பிறகு கொசு வலையைத் தொங்க விட்டுவிட்டு வந்துவிடுவான் அலிமத்தி,

சசீந்திரநாத் பெரிய அறையில் நுழைந்தபடி, "அப்பா, ஆத்துலே ஒரு பெரிய படகு வந்திருக்காம்" என்றர்.

'யாரோட படகு ?"

"தெரியல்லே."

"விசாரி, விசாரித்துப் பாரு! நல்ல ஆளாவும் இருக்கலாம், போக்கிரியாவும் இருக்கலாம். நன்னு விசாரித்துப் பாரு."

"காலம்பற பெரிய மியானுேட படகு, ஹாஜி வீட்டுப் படகு, சந்தா வீட்டுப் படகு இதையெல்லாம் எடுத்துக்கிண்டு போய்த் தேடிப் பார்க்கறேன், அந்தப் படகு எங்கே ஒளிஞ்சுக்கிட்டிருக்

குனனு.

மழைக் காலம் வந்துவிட்டால் கொள்ளக்காரர்களிடமிருந்து ஆபத்து அதிகரிக்கும். ஒரு படகு வந்திருக்கிறது, அது பகல் வேளையில் எங்கோ மறைந்திருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எல்லாரும் இரவானதும் பயத்துடனேயே பொழுதைக் கழித்தார்கள். கிராமத்தில் வீடுகள் ஒன்றுக்கொன்று வெகுதூரத்தில் இருந்தன. இரவாகிவிட்டால் ஒவ்வொன்றும் தண்ணீராலும் மரஞ்செடிகளாலும் தழப்பட்டுத் தனித் தனியாகத் துண்டுபட்டிருக்கும். ஊரே ஒரு சொப்பன உலகம்போல் நிசப்தமாக இருக்கும். நரேன்தாஸின் விடு, தீனபந்துவிள் வீடு, டாகுர் வீடு இவை மூன்றுந்தான் ஒன்றை யொன்று ஒட்டினுற்போல் இருக்கும். அவற்றுக்கப்புறம் பால் குடும்பத்தினரின் வீடு, ஹாரான் பாலின் இரண்டு பிள்ளைகளும்

320http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

வெவ்வேறு பக்கங்களில் வாசல் வைத்து இரண்டு இரண்டு அறைகள் தங்களுக்காகக் கட்டிக்கொண் டிருந்தார்கள்.

இரவாகிவிட்டால் எங்கும் நிசப்தம். அப்போது மாலதிக்குத் தூக்கம் வருவதில்லை. இவ்வளவு நாட்கள் ரஞ்சித் ஊரில் இருந்ததால் பயம் குறைந்திருந்தது. அவன் போய்விட்ட பிறகு இப்போது என்ன செய்வது? "நடப்பது நடக்கட்டும், தூக்கம் வந்தாலும் வரா விட்டாலும் சீக்கிரமாகவே படுக்கப் போக வேண்டியதுதான் !" என்று தீர்மானித்தான் மாலதி,

ஆஸ்வின் மாத இரவு வெப்பமாக இருந்தது. கதவைச் சாத்தி வைத்திருந்ததால் ஒரே இருக்கமாக இருந்தது. நரேன்தாஸ் இன்னும் விழித்துக்கொண் டிருந்தான். நெசவு அறையில் ஏதோ வேலை செய்தான். ஆபாராணி பாத்திரம் தேய்க்கத் துறைக்குப் போயிருந் தாள். ஆபு விளக்கை எடுத்துக்கொண்டு அவளுடன் துனைக் குப் போயிருந்தான். மாலதி காற்றுக்காக அறையின் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு ஜமுக்காளத்தை விரித்துப் படுத்தாள். இறுக்கத்திலும் வேர்வையிலும் உடம்பு நனேந்துவிட்டது. இந்த இறுக்கமும் இருளும் சேர்ந்து அவளைச் சோர்வில் ஆழ்த்தின. வாழ்க்கையில் ஒன்றுமே மிஞ்சவில்லே அவளுக்கு. எல்லாம் ஒவ்வொன்றுக அவளுடைய வாழ்க்கையை விட்டுப் போய்க்கொண் டிருந்தன. தான் இறுகக் கட்டியிருந்த உள்பாவாடையையும் ரவிக்கையையும் காற்றுக்காகச் சற்று நெகிழவிட்டவாறே இவ்வாறு நினைத்தாள் மாலதி, அந்த ஆள் எங்கே இருக்கிருன், என்ன காரியம் செய்துகொண்டு திரிகிருன், என்ன காரியத்துக்காக விதவிதமான வேஷங்கள் போட்டுக்கொண்டு நடமாடவேண்டி யிருக்கிறது அவனுக்கு?

ஊருக்கு வெளியே பல பேருக்கு அவனுடைய உண்மைப் பெயர் தெரியாது. அவள் ரஞ்சித்தின் படம் ஒன்றைப் பார்த்திருக்கிருள். அது ரஞ்சித்தே என்று யாராலும் சொல்ல முடியாது! நீண்ட தாடி, தலையில் பெரிய முண்டாசு, கழுத்தில் ருத்ராக்ஷ மாலை - ஒரு துறவியின் படம் அது. இந்த வேடம் ரஞ்சித்துடையதுதான் என்று மாலதியாலேயே நம்ப முடியவில்லை.

ஒரு நாள் சிலம்பப் பயிற்சியும் கத்திப் பயிற்சியும் முடிந்த பிறகு எல்லாரும் அவரவர் வீட்டுக்குப் போய்விட்டார்கள். நிலவில் நடந்து போய்க்கொண்டிருந்த மாலதியின் முன்ருனயைப் பிடித்து யாரோ இழுத்தான். திரும்பிப் பார்த்தால் ஒரு துறவி! பயத்தில் அவள் மயங்கிவிழ இருந்தாள். "நான்தான் மாலதி, என்னைத் தெரியவில்லையா?" என்ருன் துறவி.

321http://www.chiepdf. In LL LlLLLLLLL LLL LLLL LL LLL LLL LLLgLLLLSS LLLL LL LtTTLS aLLtLLL aS LLL LLLL LL LLLLLLLLS

தன் புடைவைத் தலைப்பை எடுத்து நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டபோது அவளுக்கு இந்த நினைவு வந்து அதன் காரணமாக ஓர் உற்சாகம் ஏற்பட்டது. மயங்கி விழப்போன அவளை ரஞ்சித், அந்த ஒரு தடவை மாத்திரம், இரண்டு கைகளாலும் பிடித்துத் தாங்கிக்கொண்டு சொன்னுன், "என்னத் தெரியல்லியா, மாலதி? நான்தான் ரஞ்சித்!"

தான் அப்போது முட்டாளாக இருந்துவிட்டதாக இப்போது தோன்றியது மாலதிக்கு. அவள் உண்மையிலேயே மயக்கமாகி இருந்தால் அவன் அவளை அப்படியே வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்திருப்பான். அவள் மயக்கம் தெளிந்து கலகலவென்று சிரித்துக் கொண்டு அவனை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு அவனைத் திகைக்க வைத்திருப்பாள். அந்த நிலையில் அவனுல் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டிருக்க முடியாது.

இவ்வாறு நினைக்கும்போதே உணர்ச்சி மிகுதியில் அவளுடைய உடல் நடுங்கியது. அவள் இப்போது தன் உள்ளாடையை நன்றகத் தளர்த்தி விட்டுக்கொண்டு துறைப் பக்கம் பார்த்தாள், இருள் காரணமாக அங்கு ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. கட்டாரி மரத்தடி வரையில் தண்ணிர் வந்திருந்தது. தண்ணிரில் மீன் குதிக்கும் போது ஏற்படுவது போன்ற அரவம் அந்தப் பக்கம் கேட்டது. இப்போது அமூல்யன் இருந்தால் தூண்டிலில் மீன் சிக்கிவிட்டது என்று நினைத்து ஓடிப் போய்ப் பார்ப்பான். ஆனூல் நரேன்தாஸ் தூண்டில் போட்டு வைத்திருக்கவில்லை என்று மாலதிக்குத் தெரியும். நாள் பூராவும் தன்னந்தனியாக ஏதோ வேலை செய்துகொண்டே யிருக்கிருன் நரேன்தாஸ். இப்போதும் இரவில் கண் விழித்துக் கொண்டு நூலைக் கஞ்சியில் நனைத்துக்கொண் டிருக்கிறன். நாளை அமூல்யன் திரும்பி வந்துவிடுவான். நரேன்தாஸின் வேலைப் பளுவும் சற்றுக் குறையும், -

சோபா முன்னிரவிலேயே படுத்துக்கொண்டு விட்டாள். அவளுக்கு ஜூரம், ஆபு வந்ததும் கதவைத் தாழிட்டுவிடலாம் என்று நினைத் தாள் மாலதி, துறையில் அரிக்கேன் விளக்கு இன்னும் எரிந்தது. ஆபு கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று விளக்கு அணைந்து விட்டாற் போலத் தோன்றியது. பாத்திரங்கள் கீழே விழும் ஓசை கேட்டது. துறையில் தரை வழுக்கி அண்ணி கீழே விழுந்து விட்டாளோ என்று நினைத்தாள் மாலதி. அதே சமயத்தில் யாரோ நெசவறையில் நுழைந்து. மாலதி எழுந்து உட்கார்ந்தாள். இந்தக் காலத்தில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் உபத்திரவம் உண்டு, "அண்ணு, உன் அறையிலே என்ன சண்டை?" என்று கேட்டாள்.

322http://www.l.ie/pdf. In LLLLLLlLLLLLLL LL LLLLL LL LLLLL tLLL LLLLLLLLS aL LLLLLaL LLLL LtLLLTSLLLtLa LLL LLLL LL LLLLGLLS

என்ன ஆச்சரியம் இப்போது அங்கேயிருந்து ஒரு சப்தமும் வரவில்லை. ஒரே நிசப்தம். அவள் தன் ஆடைகளைச் சரி செய்து கொண்டாள். விளக்கேற்றுவதற்காக அரிக்கேன் விளக்கை எடுக்க அவள் முனைந்தபோது அவளுக்கு இருபுறமும் இரண்டு நிழல் உருவங்கள் தோன்றின. அவள் கூக்குரலிட வாயைத் திறப்பதற்குள் அந்த உருவங்கள் அவளைப் பிடித்து அவளுடைய வாயில் துணியை அடைத்துவிட்டன. அவள் தன்னை விடுவித்துக்கொள்ள திமிறினுள். அவர்களிடையே நிகழ்ந்த போராட்டத்தின் ஒலிகள் இருட்டில் கேட்டன. சோபா விழித்துக்கொண்டு பயந்துபோய், 'அத்தை, அத்தை " என்று கூவினுள், அதன் பிறகு நிசப்தம். அந்த யுவதியை யாரோ வீட்டிலிருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்,

சோளு சாப்பிட்டபின் நடனசாலையின் மாடிப்படிகள் வழியே இறங்கி வந்தான், லால்ட்டுவும் பல்ட்டுவும் அந்த ஊர்ச் சிறுவர் களோடு சேர்ந்து விளையாடிக்கொண் டிருந்தார்கள். சோனுவுக்கு இந்த இடத்தில் யாரையும் தெரியாது. இப்போது அவனுடைய தலைக்குமேல் ஆகாயம் தெரிந்தது. இந்த இடத்துக் காட்சிகள் புதியவை, முகங்களும் புதியவை. அவன் எப்போதும் பெரியப்பா வுடனேயே சுற்றினுன். அவன் வெள்ளை அரைக்கைச் சட்டையும் நீலநிறப் பாண்டும் அணிந்திருந்தான். குட்டையாக வெட்டப்பட்ட தலே மயிர்.

அவனுடைய பெரிய பெரிய கண்களைப் பார்த்து அவற்ருல் கவரப் பட்டு அங்குள்ளவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள் அவனு டைய பெயரைக் கேட்டார்கள். பெரியப்பா சிரித்தார். அவனப் பெயர் சொல்லச் சொன்னுர், அவன் சந்திரநாத் பெளமிக்கின் சிறிய பிள்ளே என்ற செய்தி பரவியது. நடன சாலையிலிருந்த புரோகிதர் அவனுக்கு இரண்டு சந்தேஷ் சாப்பிடக் கொடுத்தார். அவன் அவற் றைச் சாப்பிடாமல் பெரியப்பாவிடம் கொடுத்து வைத்தான். அவரை விட்டுவிட்டு எங்கும் போகத் துணிவு ஏற்படவில்லை அவனுக்கு.

லால்ட்டுவும் பல்ட்டுவும் அவனை தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பினுர்கள். குளத்தங்கரையில் பாட்மின்டன் விளையாட்டு நடக்கப் போகிறதாம். சோனு போகவில்லை. அவனுக்குப் போகத் துணிவு வரவில்ஃப், ஈசம் வந்தால் போகத் துணிந்திருப்பான் அவன்.

323http://www.l.ie/pdf, on LLLLLLlLLLLLL LLL LLLL LL LLL LtLLL LLLLLLLLS aL LLLLLaL LLLL LtLLLTSLLLLa LLLLLL LL LLL LLLGGLS

ஈசம் இப்போது ஆற்றிலேயே படகில் தங்கியிருந்தான், இந்தச் சில நாட்களுக்கு ஈசம் படகிலேயே வசிப்பான். அவன் ஆற்றில் தூண்டில் போட்டுப் பேலே மீன், பூன்ட்டி மீன் இவற்றைப் பிடித்துக்கொண்டு பொழுதைக் கழிப்பான். படகில் தானே சமையல் செய்து சாப்பிடுவான்.

தன் தந்தையுடன் குதிரையில் சவாரி செய்துகொண்டு சென்ற அந்தப் பெண்ணின் நினைவு சோனுவுக்கு அடிக்கடி வந்தது. அவ ளூடைய உலகத்தில் நுழைய ஆசையாக இருந்தது அவனுக்கு, ஜரிகைத் தொப்பியணிந்த சிறுவர்களும் சில்க் ஃபிராக் அணிந்த பெண்களும் பெரிய முற்றத்தில் கண்ணுமூச்சி விளையாடிக்கொண் டிருந்தார்கள். பூக்கள் மலர்ந்திருப்பதுபோல் மகிழ்ந்து விளையாடும் அந்தக் குழந்தைகள் இருக்குமிடத்துக்குப் போக ஆசையாக இருந்தது அவனுக்கு. அவன் பெரியவனுயிருப்பதால் அவர்கள் அவனைத் தங்கள் விளையாட்டில் சேர்ததுக்கொள்ள மாட்டார் களென்று அவனுக்குத் தெரியும். அவன் விளையாடப் போவதில்லை : ஒரு பக்கமாக நின்றுகொண்டு அவர்களுடைய விளையாட்டைப் பார்க்கப் போகிருரன்.

அப்போது அவன் முகத்தில் கதையில் வரும் ராஜகுமாரனுக்கேற் பட்டதுபோல் சோகம் படரும். அப்போது ஒரு சிறு பெண் வந்து அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவனை விளையாட அழைப்பாள் ! கண்ணுமூச்சி விளையாட்டு! அந்த உலகத்துக்குள் நுழைய ரொம்ப ஆசையாக இருந்தது சோனுவுக்கு, தேவதை மாதிரி ஒரு பெண் குதிரைமேல் சவாரி செய்துகொண்டு அவன் முன்னூல் போனுள் என்ற விஷயத்தைத் தவிர, வேறெதுவும் அவனுடைய மனத்தில் நிலைக்கவில்லை. அந்தப் பெண்ணின் முகமே அவனுக்கு அடிக்கடி நினைவுக்கு வந்துகொண் டிருந்தது, அவன் ஆபீஸ் அறையில் உட்கார்ந்திருந்தபோது.

"சோனு, வா போகலாம் !" என்று அப்போது அவனைப் பெரியப்பா கூப்பிட்டார்.

"எங்கே போகப் போகிறர் பெரியப்பா" என்று சோணுவுக்குப் புரியவில்லை. அவர் தம் வேஷ்டியை நன்ருக மடிப்பு வைத்துக் கட்டிக் கொண்டார். ஒரு சட்டையை அணிந்துகொண்டார். பிறகு அவனைக் கூட்டிக்கொண்டு, அவர்கள் சாப்பிடப் போனுர்களே அந்தப் பக்கம் போகாமல் இடப் பக்கத்தில் வராந்தாவை ஒட்டினுற்போல் இருந்த பூந்தோட்டத்துக்குள் நுழைந்தார்.

மாளிகையின் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்குத் தோட்டம் வழி யாகத்தான் போகவேண்டும். அங்கே பலவிதச் செடிகளும் மரங். களும் பூத்தும் பழுத்தும் இருந்தன. எவ்வளவு நீளமான பாதை

324http://www.l.ie/pdf, on LLLLLLlLLLLLLL LL LLL LLL LLL LLL LLLLLLLLS LaL LLLLLaL LLLL LlLSLLLLaaSLLLL LLL LLL LLLLGLLS

வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய பாதையா என்று ஆச்சரிய மாக இருந்தது சோனுவுக்கு. சோனு வாழ்ந்தது ஒரு பட்டிக்காட்டில். அங்கே காரை பூசிய செங்கல் வீடு பிரதாப் சந்தாவின் வீடு ஒன்று தான். மற்ற வீடுகளெல்லாம் தகரத்தாலும் மரத்தாலும் ஆனவை. சந்தா வீட்டுச் சுவர்கள், தரை எல்லாம் சிமெண்ட் பூசப்பட்டவை. அவர்கள் வீட்டில் ஒவ்வோர் அறைக்கும் ஒரு பெயர் - தெற்கத்தி அறை, கிழக்கத்தி அறை என்பதுபோல் - உண்டு. இங்கு அறை களுக்குத் தனித் தனிப் பெயர் இல்லே. ஒவ்வோர் அறையும் ஹால் மாதிரி விசாலமாக இருந்தன. பெரியப்பா அவனுக்கு ஒவ்வோர் அறையையும் காண்பித்து விளக்கிக்கொண்டு வந்தார். சுவர்களில் பெரிய பெரிய ஓவியங்கள். அவற்றில் தீட்டியிருப்பவர்கள் யார் யார், அவர்கள் எப்போது பிறந்தார்கள், எப்போது இறந்தார்கள், யானே எப்போது வாங்கப்பட்டது என்பதையெல்லாம் பெரியப்பா அவனுக்குக் கதை கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தார்.

பிறகு மாடிப் படி வந்தது. படிகளில் ரத்தினக் கம்பளம் விரித் திருந்தது. அது மிருதுவாக, காலுக்கு இதமாக இருந்தது. சோை வெறுங்காலுடன் இருந்தான், அவன் மிக மெதுவாக - வேகமாக நடந்தால் கம்பளம் தேய்ந்துவிடுமோ என்று பயப்படுபவன் போலபடிகளின் மேல் ஏறினுன். இரு பக்கமும் கம்பியாலான கைப்பிடிச் சுவர். இங்கே எங்கே பார்த்தாலும் பெண்கள். பூபேந்திரநாத்துக்கு அந்த வீட்டில் அந்தப்புரத்தில்கூடத் தடை இல்லை. அவர் ஒரு திரைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, "அம்மா, நான் வந்திருக் கிறேன்" என்று சொன்னூர்.

சோனு அவருக்கு அருகில் மெளனமாக, பயந்துகொண்டு நின்ற வாறே இந்தப் பகுதியின் அலங்காரங்களையும் செல்வச் செழிப் பையும் பார்த்து வியந்தான். இங்கே வசிப்பவர்கள் மனிதர்கள் அல்ல, தேவதைகள் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தன்னுல் முடிந்த வரையில் பெரியப்பாவின் உடைக்குள் தன்னை மறைத்துக்கொள்ள முயன்ருன்,

அவன் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றன். பெரியப்பா கூப்பிட்டதற்கு "யார் குரல் கொடுக் கிருரர்கள், எந்தப் பக்கத்துக் கதவு திறக்கிறது. அந்தப் பெண் எங்கே இருக்கிருள்? என்றெல்லாம் பார்க்கத் தயாராக இருந்தான் அவன். திரை அசைந்ததாகத் தோன்றியது அவனுக்கு, திரைக்கு மறுபுறத்தில் யாரோ நடந்துவரும் அரவம் கேட்டது. பூபேந்திரநாத்துக்கு இன்னும் காத்திருக்கப் பொறுமை இல்லை. "அம்மா, சோனு வந்திருக்கான்!” என்று அவர் சொன்னூர்.

325http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

எசமானியம்மாளுக்குப் பக்கத்தில் சிவப்புத் துணியணிந்த ஒரு சிறு பெண் நின்றிருந்தாள். அவள் அவனை உற்றுப் பார்த்தாள், அவளுக்கு ஒரு சின்னக் குருவிக் குஞ்சு வேண்டுமாம். அவள் தன் பொம்மை வீட்டை அலங்கரிக்கப் போகிருளாம், பூஜை சமயமென்று சிவப்புத் துணி உடுத்தியிருந்தாள் அவள். காலில் செம்பஞ்சுக் குழம்பும், நெற்றியில் சிவப்புத் திலகமும் இட்டுக்கொண்டிருந்தாள். குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிர். கண்களில் மைதீட்டி இருந்தது. கைகளில் வேலைப்பாடுகள் செய்த தந்த வளையல்கள், பூஜையை முன்னிட்டு விதவிதமான நகைகள் அணிந்திருந்தாள் அவள்-அவள்தான் கமலா.

"சோணு வந்திருக்கிருன், அம்மா!" என்ருர் பூபேந்திரநாத் மீண்டும். எசமானியம்மாள் இங்குமங்கும் திரும்பிப் பார்த்தாள். எங்கே அந்தப் பையன்? சோணு பெரியப்பாவின் பின்னல் ஒளிந்துகொண் டிருந்ததால் அவளால் அவனச் சட்டென்று கண்டுபிடிக்க முடிய வில்லை. "பெரியப்பா, சோணு எங்கே?" என்று கமலா கேட்டாள். பூபேந்திரநாத் சோனுவைப் பலவந்தமாக வெளியே கொண்டு வந்து நிறுத்தி, "இவன்தான் சோணு ' என்றர்.

"சோணு ' எங்கே உன் முகத்தைக் காட்டு பார்ப்போம்!" என்ருள்

ALE) ël)T.

"எவ்வளவு அழுத்தந் திருத்தமாப் பேசரு இந்தப் பொண்ணு!" சோனு சங்கோசத்தால் இன்னும் குறுகிப் போனுன்,

எசமானியம்மாள் வைத்த கண் வாங்காமல் சோனுவைப் பார்த்துக் கொண்டு நின்றுள். பூபேந்திரநாத் சோனுவைப் பற்றிப் பெருமை யாகப் பேசியதில் மிகையில்லை. அவருக்கு அவன்மேல் ரொம்பப் பிரியம் என்று பார்த்தாலே தெரிந்தது. சந்திரநாத்தின் சிறிய பையன் சோனு, சந்திரநாத் தினம் அங்கே வருவார். அநேகமாகக் காலை வேளையில் ஒரு தடவை வந்து எசமானியம்மாளைப் பார்த்துவிட்டுப் போவார். இப்போது பூஜை சமயத்தில் வேலை அதிகமாதலால் இன்று காலையில் வரவில்லை.

இந்தத் தடவை சசீந்திரநாத் சோனுவைப் பூஜை பார்க்க வர அனுமதித்ததில் பூபேந்திரநாத்துக்கு மிக்க மகிழ்ச்சி. பூஜை சமயத்தில் அவருக்கும் வேலைப் பளு அதிகந்தான். இருந்தாலும் தம்முடன் ரத்த உறவுகொண்ட இந்தச் சிறுவர்களின் வருகையில் அவருக்குச் சந்தோஷம் தாளவில்லை. அவருடைய முகத்தைப் பார்த்தாலே அவருடைய மனநிலையை ஊகிக்க முடிந்தது.

முன்பெல்லாம் அவர் தம் சொந்த ஊருக்குப் போய்விட்டு வந்ததும் தன் எசமானியம்மாளிடம், “சோனு எவ்வளவு அழகாய்

326http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

தெரியுமா? அவன் கண்ணு ரொம்பப் பெரிசு ! உங்களுக்கு எப்படி விளக்குவேன், போங்க! அவன் பெரியவனுனதும் இங்கே கூட்டிக் கிண்டு வரேன்" என்று கூறுவார்.

அவர் இப்போது எசமானியம்மாளிடம், "சோனுவைக் கூட்டிக் கிண்டு வந்திருக்கேன், பாருங்க!" என்ருரர்.

எசமானியம்மாள் சோனுவைப் பார்த்துவிட்டு நினைத்துக்கொண் டாள், ‘பூபேன் பையனைப் பற்றிக் கூறியதில் மிகையில்லை, பையன் ராஜா மாதிரி இருக்கிறன் 1’ என்று,

"பையனுக்கு ஜாதகம் கணிச்சாச்சா?" என்று அவள் கேட்டாள். "தரியகாந்த்கிட்டே ஜாதகம் கணிக்கக் கொடுத்திருக்கேன்" என்று சொன்ன பூபேந்திரநாத், "இவங்க உனக்குப் பெரியம்மா முறை. இவங்களுக்கு நமஸ்காரம் பண்ணு' என்று சோனுவிடம் கூறினர். சோனு குனிந்து நமஸ்காரம் செய்ததும் எசமானி அம்மாள் அவன் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு அவனுடைய மோவாயைத் தொட்டுக் கொஞ்சிவிட்டு அவனுடைய கையில் ஒரு பளபளப்பான ரூபாயைக் கொடுத்தாள். அதை வாங்கிக்கொள்வதா சுடாதா என்று சோணுவுக்குத் தெரியவில்லை, அவன் தன் பெரியப்பாவைப் பார்த்தான், ரூபாயை எடுத்துக்கொள்ளும்படி அவனுக்கு ஜாடை காட்டினுர் பெரியப்பா,

எசமானி அம்மாள் இப்போதுதான் முதல் தடவையாகச் சோனுவைப் பார்த்தாள். அதற்காகத்தான் அவனுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாள். அவளுடைய கையில் ஒரு ரூபாய். அவளுடைய புடைவைத் தலைப்பில் எவ்வளவோ ரூபாய்கள் முடிந்து வைத் திருந்தாள். கமலாவுக்காக ஒரு மைனுக் குஞ்சோ அல்லது குருவிக் குஞ்சோ வாங்கிக் கொடுக்க ரூபாயை எடுத்துக்கொண்டு வெளியே வந்த அவள் தற்செயலாகச் சோனுவைப் பார்த்துவிட்டாள். சுப தசகந்தான். அப்படியே அந்த ரூபாயை அவன் கையில் கொடுத்து விட்டாள் எசமானி அம்மாள்.

கமலாவுக்கு உள்ளூற ஒரே எரிச்சல், அவள் பூபேந்திரநாத்தைப் பெரியப்பா உறவு வைத்து அழைப்பாள். பெரியப்பா அவளைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்லவில்லை சோனுவுக்கு?

அவள் இந்த வீட்டின் இரண்டாவது பிள்ளையின் பெண். அவளும் அவளுடைய அக்கா அமலாவும் தங்கள் தந்தையோடு பூஜை சமயத்தில் கல்கத்தாவிலிருந்து வருவதுண்டு என்பதையெல்லாம் அவர் ஏன் சொல்லவில்ஃப்" அவளுடைய அப்பா பெரிய சர்க்கார் வேலை பார்க்கிறர்: வெளிநாடுகளில் பல வருடங்கள் இருந்திருக்கிறர். அவளுடைய அம்மா சில சமயம் தன் ஊரைப் பற்றியெல்லாம் சொல்லுவாள். அங்கே தேம்ஸ் என்று ஒரு நதி இருக்கிறதாம்,

327http://www.l.ie/pdf. In L L CLlLLLLLLL LL LLL LLLL LL LLLLLLLLS LL LLLCLaaL LLLLL LlLLLS aLLLLLLLaaS CL MLLLLLL LLL LLLLLLaS

லுஜான் என்ற பெயருள்ள ஒரு கிராமம் இருக்கிறதாம். அங்கே செயிண்ட் பால் மாதாகோவில் இருக்கிறதாம். அதன் இரண்டு பக்கமும் வில்லோ மரங்கள். அதற்கு அருகிலுள்ள தோட்டத்தில் மாலை நேரத்தில் லிலாக் மலர்கள் மலருமாம். அம்மா சொல்லும் கதைகளை அமலாவும் கமலாவும் மெய்ம்மறந்து கேட்பார்கள்.

எதிரில் இருக்கிருனே, சோனு என்ற பையன், அவனுக்கு இந்தக் கதையெல்லாம் சொல்லவிட்டால், அவனுடன் ஓடி விளையாடா விட்டால் அவள் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்தது, இவ்வளவு பெரிய நதியைக் கடந்து வந்தது, இவ்வளவு பெரிய மாளிகையில் வசிப்பது எல்லாமே வீனுாை மாதிரிதான்.

அவள் அவனுக்குத் தன்னைப் பற்றிச் சொல்லவேண்டும், தன் அம்மா வேறு தேசத்துப் பெண் என்பதைச் சொல்லவேண்டும். தாத்தாவுக்கு, அப்பாவையும் அம்மாவையும் பிடிக்கவில்லை. அவர் அப்பாவுக்காகக் கல்கத்தாவில் ஒரு தனி விடு கட்டிக் கொடுத்து விட்டார். அப்பா அவளுடைய அம்மாவைக் கூட்டிக்கொண்டு இந்த வீட்டுக்குள் நுழைய முடியாது. ஊஹூம், இதையெல்லாம் அவள் சோனுவிடம் சொல்லக் கூடாது! அவளுடைய அக்கா சொல்லியிருக்கிருள், எல்லாரிடமும் எல்லா விஷயங்களையும் சொல்லக் கூடாது என்று. 'நான் உனக்கு எல்லாம் சொல்லமாட் டேன்! எனக்குப் பாட்டி மைனுக் குஞ்சு, குருவிக் குஞ்சு வாங்கித் தருவாள். நான் பொம்மை விளையாட்டு விளையாடுவேன். உன் முகத்தைப் பார்த்தால் எனக்குப் பொம்மை விளையாட்டு விளையாடத் தோன்றுகிறது."

சோனு ரூபாயைத் தன் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண் டான். கமலாவால் பொறுக்க முடியவில்லை. இப்போது சோனுவும் பூயியான் பெரியப்பாவும் போய்விடுவார்கள். சோனு தன் முழுப் பெயரைப் பாட்டியிடம் சொல்லியிருக்கிறன் : "அதீஷ் தீபங்கர் பெளமிக் 1 அப்பா, எவ்வளவு பெரிய பெயர் !

அவளுடைய அம்மாவின் தேசத்தில் ஜான், மாத்யூ என்றெல்லாம் பெயர் உண்டு, அவளுடைய மாமாக்களின் பெயர்களெல்லாம் அவளுக்கு நினைவில் இல்லை. சோனுவின் பெயரும் அந்த மாதிரி தான். அவள் பொறுமையிழந்து கேட்டாள், "பாட்டி, சோணு என்னை எப்படிக் கூப்பிடுவான்?"

கமலாவின் கேள்வியை அவளுடைய பாட்டி கவனிக்கவில்லை. அவளும் பூபேந்திரநாத்தும் ஏதோ குடும்ப விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளுடைய தூரத்து உறவினர் ஒருவர் நீண்ட காலத்துக்குப் பிறகு பூஜை பார்க்க வந்திருக்கிறராம். தனியாக ஆள் போட்டு அவரை நன்ருகக் கவனித்துக் கொள்ளும்படி

328http://www.l.ie/pdf. In LLLLLLlLLLLLLL LL LLL LLL LLLL LL LLgLLLLS 0 LGLLmLaL LLLL LtTLLS aL aS sLLLLLLL LLLL LLLLLS

சொன்னுள் எசமானி அம்மாள். சோணு கமலாவின் பக்கம் திரும்பி உதட்டை மடித்துக்கொண்டு புன்சிரிப்புச் சிரித்தான். "நீ இத்த னுாண்டுப் பொண்ணு, உன்னை வேறே என்ன சொல்லிக் கூப்பிட ணும்? கமலான்னு கூப்பிடறேன்" என்று சொல்வது போல இருந்தது அவன் சிரிப்பு.

"பெரியப்பா ! என்னைச் சோனு, கமலா அத்தைன்னு கூப்பிட வேண்டாம்" என்று கூறிவிட்டுக் கர்வத்தோடு அவன் பக்கம் திரும்பிப் பார்த்தாள் கமலா,

இப்போதுதான் சோனு கவனித்தான், கமலாவின் கண்கள் கறுப் பும் இல்லை, நல்ல நீலமும் இலலை , கறுப்பு அல்லது நீலத்துடன் மஞ்சள் கலந்த ஒரு நிறம் - அது என்ன நிறம் என்று புரிந்து கொள்வது கஷ்டம், அது பிரப் பம்பழ நிறமோ என்று அவனுக்குத் தோன்றியது. பழுத்த பிரப் பம்பழத்தின் தோலை உரித்துவிட்டால் சுளை இந்த நிறமாகத்தான் இருக்கும், கமலா தன்னை உற்றுப் பார்ப் பதைக் கவனித்தான் சோனு, அவள் தன் கன்னங்களை உப்ப வைத்துக்கொண்டிருந்தாள். சோனு அவளைக் கேலி செய்து பாட்டுப் பாட விரும்பினுன்

கால் பூலா கோபிந்தேர் மா, சால்தா தலா ஜாயிஓ நா ! ஆணுல் இந்தப் பிரம்மாண்டமான மாளிகையும் அதன் ஆடம்பர மும் அவனைப் பயப்படச் செய்தன. அவன் ஒன்றும் சொல்லவில்லை. "ஆமா, சோனு உன்னைக் கமலா அத்தைன்னு கூப்பிடட்டும். கமலா சோனுவைவிடப் பெரியவளாத்தானே இருப்பா, என்ன சொல்றீங்க அம்மா ?” என்றர் பூபேந்திரநாத்,

"ஆமா, ஏழெட்டு மாசம் பெரியவளா இருப்பா." சோணுவின் உற்சாகம் சற்றுக் குறைந்துவிட்டது. "அம்மா இல்லாமே தனியா இருப்பியா?" என்று எசமானி அம்மாள் அவனைக் கேட்டாள்.

"இருப்பேன்." "பையனுலே இருக்க முடியல்லேன்னு அவனை இங்கே அனுப் பிடு" என்ருள் அவள் பூபேந்திரநாத்திடம்,

**es fl.'' பூபேந்திரநாத் அந்தக் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர் போல் வேண்டியவர். ஆகவே அவர் வீட்டுப் பையன்கள் அக் குடும்பத்துக்கு வேண்டியவர்கள்தாம், லால்ட்டுவுக்கும் பல்ட்டு வுக்கும் சமவயதில் அந்த அம்மாளுக்கு இரண்டு பேரப் பிள்ளைகள் இருக்கிறர்கள். ஒருவன் பெரிய பிள்ளையின் பிள்ளை, மற்றவன் சிறிய பிள்ளேயின் மைத்துனன். லால்ட்டுவும் பல்ட்டுவும் வந்துவிட்டால்

329

எல்லாச் சிறுவர்களும் சேர்ந்துகொண்டு வீட்டுக்கு முன்னுள்ள புல்வெளியில் அல்லது குளத்தங்கரையில் பாட்மிண்டன் விளையாட ஆரம்பித்துவிடுவார்கள்.

அந்த மாளிகையில் பணி புரியும் மற்றவர்களுடைய பிள்ளைகள் அவர்களுக்குச் சமவயதுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் இந்தப் பூஜைத் திருநாளில் எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு கொட்ட மடிப்பார்கள். அவர்களுடைய உற்சாகம் கரை புரண்டோடும். நாள் முழுதும் வாத்தியங்கள் ஒலிக்கும். மத்தளமும், தம்பட்டமும், சேகண்டியும் ஒலித்துக்கொண்டே யிருக்கும். மத்தியதரக் குடும் பங்களில் அஷ்டமியன்று ஆட்டுப் பலி நடக்கும். சீதலசுஷ்ா நதியின் இருகரைகளிலும் ஒரே கோலாகலம். நவமியன்று எருமைப் பலி. விடியற்காலை முதலே கமலா பிருந்தாவனியுடன் தோட்டத்தில் பூப்பறிக்கப் போய்விடுவாள். தேனி போல் பூவுக்குப் பூ தாவுவாள். கல்கத்தாவாசியான கமலா இந்தச் சில தினங்களுக்குத் தன்னிச்சை யாகப் பறந்து திரியும் பறவையாகிவிடுவாள்.

அவள் சோனுவின் கையைப் பிடித்துக்கொண்டு போய் அவனுக்கு அந்த வீட்டின் எல்லாப் பகுதிகளையும் சுற்றிக் காண்பித்தாள் ; ஹோஹோவென்று சிரித்தாள், சிரிக்கும்போது அந்தச் சிரிப்பொலி ஹாலில் எப்படி எதிரொலிக்கிறது என்று காது கொடுத்துக் கேட்டாள். அவன் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினுள். பல அங்கனங் கள் கொண்ட நீளமான வராந்தா. ஒடும்போது சட்டைப் பையைக் கையால் அழுத்திக்கொண்டான் சோனு, அதில் ரூபாய் இருக்கிறதே! ஓடிக்கொண்டே அவர்கள் பின்பக்கம் போய்விட்டார்கள். அங்கே பெரிய பெரிய மரங்கள். எங்கும் நிசப்தம். வரிசை வரிசையாகப் பாக்கு மரங்கள். அவர்கள் அங்கெல்லாம் சுற்றிவிட்டுத் திரும்பி வந்தபோது, “அதோ பாரு, எங்க அக்கா நிக்கரு 1 அங்கே வரியா?" என்று கேட்டாள் கமலா.

சோணு மெளனமாகத் தலையசைத்தான். பிறகு அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். இதுவரை அவன் அவளைக் கமலா என்ருே, கமலா அத்தை என்ருே கூப்பிடவில்லை.

கமலாவின் அக்கா வராந்தாவின் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்துகொண்டு அவர்களைப் பார்த்தாள். அவளுடைய பெயர் சோணுவுக்குத் தெரியும். அமலா, முழங்கால்வரை வரும்படி நீள ஃபிராக் அணிந்திருக்கிருள். கழுத்து வரைக்கும் வெட்டப்பட்டிருந் தது தலைமயிர், தலைமயிர் பொன்னிறம். அவளுடைய கண்களும் நல்ல நீலம் என்பதை அவள் அருகில் வந்த பிறகு சோனு கவனித் தான,

"இவன்தான் சோணு" என்ருள் கமலா,

330

அப்போதுதான் தூங்கியெழுந்தவள் போல் கண்களே மெதுவாக உயர்த்தி அவனப் பார்த்தாள் அமலா.

"எவ்வளவு அழகான பெயர் !" என்று கமலா சொன்னுள், கமலா சொன்னது தன் காதில் விழாதது போல் அமலா, “உன் பேரு என்ன?" என்று அவனைக் கேட்டாள்.

அவள் பேசும் முறை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனும் அவளைப் போலவே பேச முயற்சி செய்தான் : "என் பெயர் பூரீ அதீஷ் தீபங்கர் பெளமிக்" -

"நீ என்ன எப்படிக் கூப்பிடுவே?" "சோனு, இவ உனக்கு அத்தை முறை. அமலா அத்தைன்னு கூப்பிடு!" என்ருள் கமலா,

சோனு நிதானமாக, வார்த்தைகளை அவர்களைப் போல் சரியாக உச்சரித்துச் சொன்னுன். "நீ கமலா அத்தை, இது அமலா அத்தை." கமலாவுக்கு ரொம்பச் சந்தோஷம், அமலா கைப்பிடிச்சுவரின் மேல் சாய்ந்துகொண்டு எதையோ பார்த்தாள்.

*கமலா, உனக்குக் குதிரை சவாரி பண்னத் தெரியுமா?" என்று சோணு கேட்டான். -

"நீ என்னேப் பேர் சொல்லிக் கூப்பிடறியா நான் பெரியப்பா கிட்டே சொல்லிடுவேன், ஆமா !”

சோனுவுக்குக் கோபம் வந்துவிட்டது. 'நான் பெரியப்பாகிட்டே போறேன்" என்ருன் அவன்.

கமலா அவனைச் சமாதானப்படுத்தினுள். "எனக்குக் குதிரை மேலே ஏறத் தெரியுமே!" பிறகு அவனைத் தன்னருகில் இழுததுக்கொண்டு சொன்னுள், "பட்டிக்காட்டான் மாதிரி வார்த்தைகளை உச்சரிக் காதே!"

அவனுக்குத் தன் பைத்தியக்காரப் பெரியப்பாவைப் பற்றி அவளிடம் சொல்லத் தோன்றியது; இருந்தாலும் சொல்லவில்லை. "மேல் மாடியிலே பெரிய பெரிய பொம்மையெல்லாம் இருக்கு" என்ருள் அவள்,

"ஆத்தங்கரையிலே நானல் காட்டிலே பூப் பூத்தா இந்தப் பொம்மையெல்லாம் பறக்கப் பார்க்கும். அதுகளோட துணிகளெல் லாம் நழுவிப் போயிடும். அதுகள் ஆத்தங்கரைக்குப் பறந்து போகத் துடிக்கும். அந்தப் பொம்மையெல்லாம் தேவதையாக்கும்" என்ருள் கமலா.

தேவதைகளைப் பற்றிய பேச்சைக் கேட்டதும் அமலா அப்போது தான் தூங்கி விழித்தவளைப் போல் சோனுவைப் பார்த்தாள், இப்போதுதான் அவனே முதல் தடவையாகப் பார்ப்பது போல. அவனுடைய தலைமயிருக்குள் தன் கையை விட்டு அளைந்தாள்,

331

தான் முன்பு கேட்டதை மறந்துவிட்டவள் போல, "நீ யார் வீட்டுப் பையன்?" என்று கேட்டாள்.

*உனக்குத் தெரியாதா, அமலா ? இப்பத்தானே சொன்னேன்! இவன்தான் சோணு ' சந்திரநாத் பெரியப்பாவோட பையன்."

"அப்படியா! அப்படீன்னு நம்ம ஆள்தான்" என்று சொல்லிக் கொண்டே அவள் அவனைத் தன் மார்புடன் சேர்த்துக் கட்டிக் கொள்ள வந்தாள். சோனு சற்று நகர்ந்துகொண்டான். தோட் டத்தில் மல்லிகைப் பூ மலர்ந்தால் ஒரு நல்ல மனம் வருமே அது போன்ற ஒர் இனிய வாசனை அமலாவின் உடம்பிலிருந்து வந்தது. ஆகாயத்தையே தோற்கடிக்கும்படி அவ்வளவு நீலம் அவளுடைய கண்கள். அத்தக் கண்களே ஒரு தடவை தொட்டுப் பார்க்கத் தோன்றியது சோனுவுக்கு. ரோஜாவின் இதழ்கள் உதிர்ந்து விழுந்தபின் அதன் காம்பு பரிதாபமாகக் காட்சியளிக்குமே, அது போலத்தான் தோன்றினுள் அமலா, அவள் கொட்டாவி விட்டாள். "நீ கிட்டே வா, சோனு' என்று சொல்லிக்கொண்டே அவனைக் கட்டிக்கொள்ள முற்பட்டாள்.

*நான் பெரியப்பாகிட்டே போகப் போறேன்" என்ருன் சோனு. "நீ ஏன் அக்காகிட்டே பயப்படறே?" அமலாவின் முகம் உற்சாகத்தால் மலர்ந்தது. சோனுவின் அழகான, ஆகாயம் போல் பிரகாசமான, முகம் அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. "கிட்டே வாயேன். ஏன் பயப்படறே? கமலா மாதிரிதான் நானும், நீ என்னை அமலா அத்தைன்னு கூப்பிடு, வா!" என்ருள் அவள்,

*வா! பயம் என்ன ?" என்றுள் கமலா, அவர்கள் மாடிப்படிகளின் வழியே இறங்கும்போது, “யாரோட புள்ளே இது?" என்று அவர்களுடைய பெரியம்மா கேட்டாள்.

"இது சோனு, சந்திரநாத் பெரியப்பாவோட பையன்." 'அட ! இது யாரு?" என்று வேலைக்காரிகள் கேட்டார்கள். கமலா கர்வத்துடன் பதில் சொன்னுள், "உனக்குத் தெரியாது? இவன்தான் சந்திரநாத் பெரியப்பாவோட பையன்."

"இந்தப் பையன் பேசலேமாட்டேங்கருனே! இவன் என்ன பையன்டி!” என்று சிரித்தாள் அமலா

'நான் பெரியப்பாகிட்டே போறேன்." கமலா தான் சோனுவை விட வயதில் மிகப் பெரியவள் போல் பாவனை செய்துகொண்டு, ‘சோனு! நீ சமத்து இல்லையா? வா, என் கிட்டே, அக்கா, ஏண்டி நீ அவனைப் பயமுறுத்தறே ?" என்று அவனேக் கொஞ்சினுள்.

"நான் எங்கே பயமுறுத்தினேன்? சோனு, இங்கே வாப்பா!”

332

கூட்டத்தில் நுழைந்து அவர்கள் பாட்டியின் அறைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அதுவும் ஹால் மாதிரி விசாலமாக இருந்தது. பெரிய பெரிய மரக்கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அங்கே வராந்தாவில் ஒரு கூண்டில் ஒரு மைனு இருந்தது. போகும்போது அமலா கூண்டை ஆட்டிவிட்டுப் போனுள், கமலா அதனிடம் போய், "இவன் பெயர் சோணு" என்ருள். மைனு கூண்டின் நடுக் கம்பியிலிருந்து கீழே இறங்கி, ' கமல், கமல், சோனு, சோனு!" என்று கூவியது. பறவை தன் பெயரைச் சொல்லிக் சுடப்பிடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டான் சோஞ. அவனைப் பார்த்துவிட்டுக் கூண்டிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது மைனு.

அந்தப் பெரிய அறைக்குள் நுழைந்ததும் அமலா கட்டிலின் மேல தாவி ஏறினுள், அலமாரியிலிருந்து ஒரு தோல் பெட்டியை இறக்கினுள். alraut அதைத் திறந்தாள். சோனுவுக்கு எதையோ காண்பிப்பதற்காக அவர்கள் அந்தப் பெட்டியிலிருந்த சாமான்களை வெளியே எடுததார்கள். அமலாவுக்குப் பதினுென்று பன்னிரண்டு வயது இருக்கும். கமலாவுக்கு வயது ஒன்பது பத்திருக்கும். இதற்குள் இவர்கள் இருவரிடையே சோனுவுக்கு மகிழ்ச்சியளிப்பதில் எவ்வளவு போட்டி "இதோ பாரு சோனு கண்ணுடிக்கல் மாலை, கிளிஞ்சல், சின்னச் சின்னக் கூழாங்கல்!”

"உனக்கு என்ன வேணும்?" என்று கமலா கேட்டாள். “எனக்கு ஒண்ணும் வேண்டாம்.” "இதோ பாரு எவ்வளவு அழகான படம்! நீ இதை எடுத்துக் கறியா ?" என்ருள் அமலா.

"ஊஹம்ெ, எனக்கு வேண்டாம்." அமலா ஆசை காட்டினுள் "இதோ பாரு மயிலிறகு! இதனுலே பேணு பண்ணி எழுதலாம்."

*கமல் ! நான் பெரியப்பாகிட்டே போறேன்.” "ஐயையே.ா! என்ன இவன் கமல்னு பேர் சொல்லிக் கூப்பிட ருனே 1 கமலா அத்தைன்னு கூப்பிடல்லியே!”

அமலாவுக்குச் சிரிப்பு வந்தது. "இத்துனூண்டுப் பொண்ணுக்கு இப்பவே எவ்வளவு பெரிய மனுஷத்தனம்! அவள் இப்போது தன்னிடமிருந்த கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தாள் : "சோணு நீ இந்த பயாஸ்கோப்பை எடுத்துக்கோ. உள்ளே பாரு, எவ்வளவு ஜோரான படமெல்லாம் தெரியறது! இதோ பாரு, மாதுள மரத் துக்குக் கீழே ஒரு பொண்ணு கொண்டையிலே பூவச்சுண்டு நிக்கரு இதோ பாரு, ரெண்டு சிப்பாய்கள் தொப்பி வச்சுண்டு நிக்கருங்க ! ரெணடு குரங்கு ஒண்ணேயொண்ணு கட்டிக்கிண்டு ஆடறது!"

333.

%%%%%%%%%%%
.


குரங்குகள் ஆடுவதைப் பார்த்துவிட்டுச் சோனு சிரித்துவிட்டான். இப்போது அவனுடைய சங்கோசம் சற்றுக் குறைந்துவிட்டது,

அமலா வேருெரு படத்தை பயாஸ்கோப்பில் வைத்தாள். சோணு வுக்கு ஓர் அருவி தெரிந்தது. அருகில் ஒரு வண்ணத்துப் பூச்சி; புதருக்குப் பின்னுல் ஒரு பெரிய புவி. ஆச்சரியத்தால் கண்கள் விரிய சோணு கூவினுன், "அமலா, இதோ பாரு, புலி!"

"அட, போக்கிரி! நீ என்னைக்கூடப் பேர் சொல்லிக் கூப்பிடறயே என்று சொல்லி உற்சாக மிகுதியில் அவனுடைய கன்னத்துடன் தன் கன்னத்தைப் பொருத்திக்கொண்டாள் அமலா.

அமலாவும் கமலாவும் சோஞரவைக் கூட்டிக்கொண்டு மொட்டை மாடிக்குப் போனர்கள். இருள் கொஞ்சங் கொஞ்சமாகச் சீதலக்ஷா ஆற்றின் மேல் படர்ந்துகொண் டிருந்தது. டைனமோவின் ஒலி மிதந்து வந்தது. நாற்புறமும் ஒளிவெள்ளம். இந்த இடத்தில் எல்லாருக்குமே உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதுபோல் இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே வெளிச்சம், மண்ணும், மரங்களும், பூக்களும், பறவைகளும் ஒளிவெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தன. அது உயரமான மாடி. அவர்கள் அதில் சுற்றித் திரிந்தார் கள். கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்துகொண்டு கீழே பார்த்தார் கள். கீழே குளத்து நீரில் வெளிச்சம் பிரதிபலித்தது. தூரத்தில் சீத லக்ஷா ஆறு, அதன் கரையில் மனல், அதற்கப்பால் யானைலாயம். அங்கே யானையைக் கட்டிவைத்திருப்பார்கள். மாடியிலிருந்தே இவற்றை யெல்லாம் பார்க்க முயற்சி செய்தார்கள் அவர்கள்.

அப்போது முதல் அவனுக்கு அமலா, கமலாவுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அவன் அவர்களுடன் அந்த வீடு முழுவதும் சுற்றித் திரியத் தொடங்கினுன், அமலா, கமலா இவர் களுடைய உடலிலிருந்து ஓர் இதமான வாசனை வந்தது. அது அவனுடைய உள்ளத்தில் ஓர் இன்பக் கிளர்ச்சியை உண்டாக்கியது. அமலாவும் கமலாவும் அவனுக்கு இருபுறமும் நின்றுகொண்டு, எந்தப் பக்கம் போனுல் வயல்கள், மைதானம் எல்லாம் வரும், மண்டபத்தின் மாடிப்படியில் வெள்ளைச் சலவைக் கல்லால் செய்த மாடு இருக்கும், அதன் கழுத்தில் பூ மாலை இருக்கும் என்றெல்லாம் அவனுக்கு விவரித்துக்கொண் டிருந்தார்கள்.

அந்த இரு பெண்களுக்கும் நடுவில் அவன் நின்றிருந்தபோது அவர்கள் அவனைப் பெரியவனுக ஆகச் சொல்வது போலத் தோன்றியது. அவன் தன் அம்மாவை விட்டுவிட்டு வெகுதூரம் வந்துவிட்டான். இப்போது அவனுக்குப் பயமாக இல்லை. அவன் பெரியவனுகிக்கொண்டு வருகிரன்,

334

முன்பு திருவிழாவில் பொரி தின்பதிலும், குதிரைப் பந்தய மைதானத்தில் காலுஷேக்கின் குதிரை ஓடுவதைப் பார்ப்பதிலும் இன்பங் கண்ட அவன், அதேபோல் இப்போது நட்சத்திரங்களைப் பார்த்து வானத்தின் அழகை அநுபவித்தான், திடீரென்று அவனுக்குத் தன் தாயின் நினைவு வந்தது. அப்போது அந்தப் பெண்களின் பிரியம் அவனைச் சலனத்துக்குள்ளாக்கவில்லை. அவன் மொட்டை மாடியின் ஓர் ஒரத்தில் ஏதோ சோகத்தில் ஆழ்ந்தவனுக, மெளனமாக நின்றன் , அமலாவும் கமலாவும் அவனைக் கொஞ்ச முயன்றபோது அவனுக்கு அழுகையே வந்துவிட்டது. அவனுடைய உயிர்ப் பறவை தாய்க்காக ஏங்கித் தவித்தது.

பயங்கர இருள். மரங்களில் இலைகள் அசையவில்லை. கிராமமே இருளில் மூழ்கிவிட்டது. உலகத்தில் யாருமே விழித்திருக்கவில்லை போலும் ! ஆழ்ந்த இரவில், இருளில் அந்த மர்மப் படகு கரைக்கு வந்தது. சில ஆட்கள் யாரையோ கட்டிக்கொண்டு வந்து படகின் மேல் ஏற்றிக்கொண்டு இருளில் மறைந்து போய்விட்டார்கள்.

"சசீ! சசீ!" என்று மகேந்திரநாத் கூப்பிட்டார். பதில் இல்லை. அவர் மறுபடி கூப்பிட்டார், "அலிமத்தி ஏ அலிமத்தி!”

அவருடைய கூப்பாட்டுக்குப் பதில் இல்லை, "கிழக்குப் பக்கத்து வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்கிறது. எல்லாரும் எழுந்திருங்க!" தீனபந்துவின் மனைவி ஏதோ கூவிக்கொண்டே ஓடிவந்தாள். தீனபந்து வாசலுக்கு வந்து, "எல்லாரும் எழுந்திருங்க ஆபத்து வந்திடுச்சு!" என்று கத்தினுர்,

சசீந்திரநாத் விழித்துக்கொண்டு ஓர் ஈட்டியைக் கையில் எடுத்துக் கொண்டார். "எசமான், நானும் பாக்கு மரத்தடி ஒண்னு எடுத்துக் கிட்டிருக்கேன்" என்ருன் அலிமத்து.

புஜங்கன், கவிராஜ், காலோ பாஹாட், சந்தாவின் இரண்டு பையன் கள், கெளர் சர்க்கார் எல்லாரும் விரைவில் வந்து சேர்ந்தார்கள்.

“என்ன ஆச்சு ?" - "என்ன ஆறது ! நம்ம மானம், கெளரவம் எல்லாம் போயிடுத்து." எல்லாரும் இருட்டிலேயே வெளியே கிளம்பினர்கள். ஆகாயத் தில் மேகங்கள் கவிந்திருந்தன. நட்சத்திரங்களே கண்ணுக்குத்

335

தெரியவில்லை, நயாபாடாவுக்குச் செய்தி போயிற்று. தோடார் பாகிலிருந்து மன்தர், ஆபேத் அலி, ஹாஜி சாயபுவின் மூன்று பிள்ளைகள் எல்லாரும் ஓடிவந்தார்கள். "எந்தப் பக்கம் போக லாம்?" என்று அவர்கள் கேட்டார்கள்.

"ஆத்துப் பக்கம் போங்க. அந்தப் படகு எங்கேயாவது போய்க் கிட்டிருக்கான்னு பாருங்க” என்றர் சசீந்திரநாத்.

"ஜய், ஐய்மாதா மங்கள சண்டிக்கு ஜய் ! அம்மா நாங்கள் உன் குழந்தைகள் ! உன் பாதுகாப்பிலே இருக்கறவங்களை யார் என்ன செய்ய முடியும்? அம்மா, அபலேக்கு நீதான் கதி 1 மாலதி உன் பொறுப்பு."

சசீந்திரநாத் படகில் உட்கார்ந்ததும், “ஜப்பர் எங்கே? அவன் ஊரிலேதானே இருந்தான்?" என்று கேட்டார்.

இப்போது ஆபேத் அலி "ஹோ ஹோ"வென்று அழத் தொடங் கினுன், "என் மானம் போச்சு, எசமான் ! என் புள்ளையோட குத்தத்துக்கு நான் என்ன பரிகாரம் பண்ணுவேன்?"

ஆபேத் அலியின் ஒலத்தைக் கேட்டு எல்லாரும் திகைத்து விட்டார்கள்.

சிலர் போலிஸ் ஸ்டேஷனுக்குச் சென்ருர்கள், சபிருத்தீன் சாயபுவுக்குத் தகவல் தெரிவிக்க,

"இது ஜப்பரோட வேலை தான் ! படகை வேகமாக ஒட்டுங்க” என்ருர் சசீந்திரநாத்,

"படகைச் செலுத்துங்க! தண்ணிரிலே படகைச் செலுத்துங்க!” மக்கள் இருளில் கூவிஞர்கள். “ஜய் ஜய்பாலா கந்தேஸ்வரி1 அம்மா பாடேஸ்வரி ! இந்த நாட்டிலே தண்ணியிலேயும் துக்கம் ! நிலத்திலேயும் துக்கம்! கடைசியிலே எங்க முயற்சி பலிக்குமோ, பலிக்காதோ யாருக்கு தெரியும்?"

"நீங்க மூணு பாகமாப் பிரிஞ்சுக்கங்க. ஒரு கூட்டம் பாவுசா ஏரிக்குப் போகட்டும். இன்னுெண்ணு ஸோனுலி பாலி ஆத்திலே போய்த் தேடட்டும். மேற்குப் பக்கம் போறவங்க படகோட பாயை விரிச்சுக்கிண்டு போங்க" என்று சசீந்திரநாத் கூறினூர், "இப்போதே படகைக் கிளப்பாவிட்டால் கொள்ளைக்காரர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஆத்துப் படுகையிலே அங்கே வெளிச்சம் தெரியறதே, அந்தப் பக்கம் நான் போறேன், நரேன்தாளப் 0ம் என் கூட வரட்டும்” என்ருர் சசிந்திரநாத்.

எல்லாரும் படகின் மேல் ஏறிக்கொண்டு துடுப்பைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொண்டு கூவினர்கள், "நீர்வளமும் நிலவளமும் நிறைந்த நாடல்லவா உன் தேசம் உனக்கு எங்களின் மேல்

336

என்னம்மா கோபம் ! உன்னை அண்டின நாங்க கஷ்டப்படலாமா. அம்மா நீதாம்மா எங்களைக் காப்பாத்தனும் !" என்ருர் மேலும்,

*இன்னும் யாரு தண்ணியிலே போகப் போருங்க?" சாலமரக் காட்டில் ஒரே இருட்டு; வெளிச்சம் இல்லை. மின்மினி கூடப் பறக்கவில்லை. இருண்ட இரவில் பாம்பும் புலியும் யுத்தம் செய்யும். அந்தக் காட்டுக்குள்ளே சசீந்திரநாத் படகுடன் நுழைந் தார். கிராமத்துக்குள் ஒரே களேபரம், விட்டுக்கு வீடு, ஊருக்கு ஊர் செய்தி பரவி வெவ்வேறு இடங்களிலிருந்து படகுகள் விரைந்து வந்தன. டேபாவுடைய இரண்டு சகோதரர்களும் ஓடிவந்தார்கள். பெண்கள் பீதியடைந்து ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார் கள், "காலம் என்னமாக் கெட்டுப்போச்சு! ஊரே நாசமாப் போச்சு. இதை விட வேறே என்ன வேணும்?"

ஒருவருக்கும் தூக்கம் வரவில்லை. கிலி பிடித்தவர்களாக விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள்.

படகின் கீழ்முனையில் சசீந்திரநாத், பெரிய மியான், மன்தர், நரேன் தாஸ் எல்லாரும் உட்கார்ந்திருந்தார்கள். மேல்முனையில் அலிமத்தி, கெளர் சர்க்கார், பிரதாப் சந்தா வின் இரண்டு பிள்ளைகள். எல்லார் கையிலும் துடுப்பு. தலைக்கு மேலே ஆகாயம், மேகங்கள் சற்றுக் குறைந்துகொண்டு வந்தன. காற்று விட்டுவிட்டு வீசியது. எல்லாத் துடுப்புகளும் ஒன்றுக எழும்பின. இந்த வேகத்தில் அவர்கள் ஒரு மணிநேரத்தில் பத்துப் பதினேந்து கோச தூரம் பிரயாணம் செய்ய முடியும், சுக்கானுக்கு முன்னுல் உடம்பை விறைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் மன்தர்.

இப்போது நேர்ந்துள்ள அவமானம் நரேன்தாஸ் 0க்கு மட்டும் ஏற்பட்டதல்ல. இந்த ஊர் முழுவதுக்கும், சமூகம் முழுவதுக்கும் நேர்ந்த அவமானம். கோபத்தால் முகமும் கண்களும் சிவக்க உரக்கக் கூவினுன் மன்சூர் : “ஜப்பர், நீ எல்லார் மூஞ்சியிலேயும் கரியைப் பூசிட்டே!”

அவர்கள் படுகைக்கு வந்து சேர்ந்தார்கள். படகு எங்கே? படகு இருந்த அடையாளமே இல்லை அங்கே. நாற்புறமும் தண்ணிர்ப் பரப்பு. அவர்கள் துடுப்புகளைத் தண்ணிரிலிருந்து தூக்கி விட்டு மெளனமாக அப்படியே உட்கார்ந்திருந்தார்கள், ஊஹ70ம். படகைக் காணுேம் ! தனணிருக்கடியில் எங்கோ மீன்கள் நடமாடும்

"படகைத் தெற்குப் பக்கம் திருப்புங்க" என்றர் சசீந்திரநாத். எதிரில் சாலமரக் காடு. தலைக்கு மேலே சாலம்ரக் கிளைகளால் இருள் கவிந்திருந்தது. கீழே தண்ணிர் சில இடங்களில் மார்பு மட்ட ஆழம்; சில இடங்களில் முழங்கால் மட்டம். புதரும்

337 纪岛

காடும் தண்ணிரில் பிரதிபலித்து அடியிலும் ஒரு காட்டைத் தோற்று வித்தன. மரங்களின் இடைவெளி வழியே படகு சென்றது. முதலில் அவர்கள் கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை, தண்ணிருக்குக் கீழே மின்மிணியின் வெளிச்சம். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக் கான மின்மினிகள் உருவாக்கிய ஒளியும் இருளும் கலந்த உலகம். இந்த உலகத்தில் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. "நாம் இந்த இருட்டிலே யாரைத் தேடருேம்?" என்று நரேன்தாஸ் கேட்டான். ஏதோ பறவை கூவியது, எல்லாரும் நிசப்தமாக இருந்து கொண்டு எதையோ உற்றுக் கேட்டார்கள், ஒட்டுக் கேட்பது போல், இந்தப் பக்கத்தில் ஓர் ஊரும் இல்லை, வெகு தூரம் போனுல் சுந்தர்ப்பூர் கிராமம். அவர்கள் காட்டுக்குள்ளே போகப் போக நிசப்தமும் அதிகமாகிக்கொண்டே வந்தது. இலைகளின் சலசலப்புக் கூட இல்லை. கீழே தண்ணிர் இருப்பதால் இலை விழும்போது கூட அரவம் இல்லை. அடர்ந்த காட்டில் பிரம்புப் புதர்கள் பரவிக் கிடந்தன. தலைக்கு மேலே பல ரகக் கொடிகள் தொங்கின. இந்தப் பயங்கர இருட்டில் ஏதாவது வெளிச்சம் தெரிந்தால்...! ஏதாவது படகு செல் லும் சப்தம் கேட்டால்...!

வேகமாக ஒடித் தப்பக்கூடிய வழி அல்ல இது. இரவைக் கழிக்கத் தான் முடியும் இங்கே, காட்டைத் தாண்டிவிட்டால் மேக்னு நதி. அங்கே போய்ச் சேர்ந்ததும் படகின் பாயை விரித்துவிட்டால் சுகமான பயணந்தான். ஆற்றில் ஓடும் படகை யாரால் கண்டு பிடிக்க முடியும்?

அவர்கள் சாலமரக் காடு முழுவதும் மாலதியைச் சல்லடை போட்டுச் சலித்துத் தேடினுர்கள். தங்களுக்குள் மிக மெல்விய குரலில் பேசிக்கொண்டார்கள்

“இல்லை, படகும் இல்லை; அந்தப் படகிலிருந்து முன்பு கேட்டுக் கொண்டிருந்த குணுயி பீபியின் பாட்டும் இல்லை. மாலதி போன்ற தைரியம் நிறைந்த யுவதியைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்ற போக்கிரிகள் யார் ?"

சசீந்திரநாத் சோர்ந்துபோய், "படகை நதிப்பக்கம் திருப்புங்க, கொள்ளைக்காரங்களோட படகு எங்கேயோ அந்தர்ததானமாயி டுத்து?" என்று கூறினுர்,

R

ப்ேபர், பொண்ணு என்ன சொல்ருரு?" "ஒண்னும் சொல்லல்லே, மியான்."

338

"ஒண்ணும் சொல்லலேன்னு, வசப்படுத்தறது எப்படி?" *கொஞ்சம் பொறுத்துக்குங்க, மியான்." "விடிய இன்னும் ரொம்ப நேரம் இல்லே, ஜப்பர்." ஜப்பர் படகின் மேல்தட்டில் ஏறினுன். இதற்குள் அவர்கள் சாலமரக் காட்டைக் கடந்து ஆற்றில் இறங்கிவிட்டார்கள். மேக்னு வில் அலைகள் பொங்கிக்கொன டிருந்தன.

படகைச் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட பாதை ஒன்றும் இல்லை. இப்போது செய்ய வேண்டிய காரியம் தண்ணிரிலும் காட்டிலும் ஒளிந்துகொண்டிருப்பது, பெண்ணை வசப்படுத்துவது - இவைதான். இந்துப் பென், மாலதியை வசப்படுத்திப் பட்டனத்துக்கு அழைத்துப் போகவேண்டும். காத்திருக்கத் தயாராயில்லை மியான் சாயபு. பொறுமை இழந்துவிட்டால் அவர் மாலதியைப் பலவந்தப் படுத்தவும் தயங்கமாட்டார். ஆணுல் படகு அறைக்குள் போக யாரால், முடியும்? மாலதி இப்போது பாம்பு, புலிபோல் பயங்கரமாக இருக்கிரள். யாராவது உள்ளே நுழைந்தால் கடிக்க ஓடிவருகிருள். சில சமயம் விம்மினுள் ; சில சமயம் பைத்தியம் போலக் கூக்குர விட்டாள். பயத்தால் அவளுடைய உதட்டோரங்களில் எச்சில் ஊறி வந்திருந்தது. அவளுடைய தொண்டை மரமாக இறுகிக் கிடந்தது. அவளுடைய கைகால்கள் அழுத்தமாகக் கட்டப்பட் டிருந்தன. அவள் சிலசமயம் உருண்டாள் சிலசமயம் அசையாமல் மெளனமாகப் படுத்துக் கிடந்தாள்.

படகில் நான்கு படகோட்டிகள், ஜப்பர், மியான் சாயபு, அவரு டைய இரண்டு சீடர்கள், ஜப்பர் நடுநடுவே உள்ளே போய் மாலதி யைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தான். கடைசியில் மியான் சாயபு அவளைத் தன் பீபியாக்கிக் கொண்டு விடுவார்! இன்னும் சில நாட்கள் படகில் சுற்றிக் காற்று வாங்குவது, பிறகு உவருக்குத் திரும்ப வேண்டியது. -

மழைக் காலம் வந்துவிட்டால் மனத்தை அடக்க முடிவதில்லை. மனம் அடங்காமல் குதித்தோடுகிறது. இப்படிப்பட்ட உடம்பைக் காயப் போட்டுச் சாம்பலாக்கலாமா ? ஜப்பர் காசுக்கு ஆசைப்பட்டு ஏதேதோ சொல்வி அவளை மயக்கப் பார்த்தான். "மாலதி அக்கா ! எழுந்திருங்க, பேசுங்க, சாப்பிடுங்க 1 ஆகாயத்தைப் பாருங்க, எவ்வளவு பெரிய நதியிலே போயிக்கிட்டிருக்கோம் பாருங்க! உங்க உடம்பிலே எவ்வளவு ஆசை ஜவாலையா எரிஞ்சுக்கிட்டிருக்கு! அதைத் தணிச்சுக்குங்க இப்போ" என்று சொல்லி அவளுடைய கட்டுக்களை அவிழ்த்தான். கட்டவிழ்த்துவிட்டால் மாலதி சமாதான மாகி விடுவாள் என்ற நம்பிக்கை அவனுக்கு,

339

படகின் ஒரு முனையில் மூன்று பேர், கட்டம் போட்ட லுங்கி, கறுப்புப் பணியனுடன் நின்றனர்.

காசுக்கு ஆசைப்பட்டு ஜப்பர் மாலதியைக் கரீம் ஷேக்கின் படகில் ஏற்றி விட்டுவிட்டான். இரண்டு தறிகள் வாங்கித் தொழில் செய்ய ஆசை அவனுக்கு, கரீம் ஷேக் திருவிழாவில் மாலதியைப் பார்த்து அவளுடைய அழகில் சொக்கிப் போய்விட்டான். அந்தச் சமயத்தில்தான் திருவிழாவில் கலகம் துவங்கிவிட்டது. கரீம் ஷேக் தன் ஆட்களுடன் மாலதியைத் தேடினுன், ஆனுல் அவளேக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதுமுதல் மாலதி நினைவுதான் அவனுக்கு, நாராயண்கஞ்சிலிருந்த அவனுடைய கடைக்கு ஜப்பர் நூல் வாங்க வரும்போதெல்லாம் கரீம் ஷேக் ஜப்பரைக் கேட்டான், "என்ன. உன் அக்கா என்ன சொல்ரு ?” என்று.

எப்படியாவது அவனிடமிருந்து பணத்தைக் கறக்கும் நோக்கத் துடன் ஜப்பர், "எப்பவும் உங்களைப் பத்தித்தான் பேசரு மாலதி அக்கா" என்பான்.

“என்னைப் பத்தியா? அவளுக்கு என்னைத் தெரியுமா?" “உங்களைத் தெரியாமேயா ? மாலதி அக்கா என்னைக் கேட்டா, ஜப்பர், அன்னிக்குத் திருவிழாவிலே உன்கூட ஒரு அழகான ஆளு நின்னுக்கிட்டு இருந்தாரே, அவர் யாருடான்னு."

*நீ என்ன சொன்னே?" "நான் சொன்னேன், நீங்க ஒரு பெரிய மனுஷர், பணக்காரர், பேரு கரீம் நாராயன்கஞ்சிலே உங்களைத் தெரியாதவங்களே கிடையாதுன்னு!”

"என்னைப் பத்தி இவ்வளவு உசத்தியாச் சொன்னியா?" "சொல்லமாட்டேனு? நீங்க எவ்வளவு பெரிய மனுஷர் !" "இன்னும் என்ன சொன்னே என்னைப் பத்தி?" "நீங்க தங்கமான மனுஷர்னு சொன்னேன்." "அவ என்ன சொன்னு ?" "தங்கமான மனுஷரா இருந்தா அவருக்கு ஆசை கீசை கிடையா தான்னு கேட்டா."

"நீ என்ன சொன்னே?" "ஆசை இல்லாமே என்ன? ஆசை, பாசம் எல்லாம் இருக்குன்னு சொன்னேன்."

ஒரு தடவை கரீம் கடையில் உட்கார்ந்துகொண்டு ஜப்பரிடம் சொன்னுன், "ராத்திரி எனக்குத் தூக்கம் வரல்லே, ஜப்பர் 1 ஓர் அழகான தேவதை எங்கிட்டே பறந்து வர்றமாதிரி பிரமை உண்டாறது எனக்கு."

340

"தேவதையா? சும்மா தேவதைன்னு சொல்லிட்டாப் போதுமா ? தேவதைகளை, அப்சரசுகளைக் கூட மயக்கி வசப்படுத்திடலாம். எங்க மாலதி அக்கா ஆகாசத்து நட்சத்திரமாக்கும் அவளே மயக்கறது ஒண்ணும் லேசுப்பட்ட காரியம் இல்லே, ஆகாசத்து நட்சத்திரத்தை வசப்படுத்தணுமின்னு அதுக்குச் செலவு செய்யனு மாக்கும் 1’ என்ருன் ஜப்பர்.

கரீமிடமிருந்து ஒரு பெரிய தொகையைக் கறக்க விரும்பினுன் ஜப்பர்.

“எவ்வளவு செலவாகும்?"

நான்கு தறிகள் வாங்கிப் போட எவ்வளவு செலவாகும் என்று கணக்குப் பார்த்துவிட்டு ஜப்பர் ஆயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னுன்.

"ஆயிரம் ரூபாயிலே தேவதை, அப்சரசு, ஆகாசத்து நட்சத்திரம் எல்லாத்தையுமே வாங்கிடலாமே!" -

"ஒருத்தருக்குச் செலவு கொஞ்சந்தான் ஆகுங்கறிங்களா?" மென்று விழுங்கினுன் ஜப்பர். வரவிருந்த பணம் கை நழுவிவிடுமோ என்று பயம் அவனுக்கு

1' sät CEST 2'

"சரி, உங்க இஷ்டப்படி கொடுங்க."

கடைசியில் பேரம் பேசி ஜப்பர் கரீமிடமிருந்து ஐந்நூறு ரூபாய் வாங்கிக்கொண்டான். பாக்கிச் செலவுகளையும் கரீமே ஏற்றுக் கொண்டான். படகு, படகோட்டிகள், சாப்பாட்டுச் செலவு எல்லாம் கரீமின் பொறுப்பு. முதலில் கரீம் படகில் வருவதாக இல்லை. ஆனல் பிற்பாடு அவனுக்கு ஜப்பரிடம் சந்தேகம் தோ ன்றிவிட்டது. ஜப்பர் மாலதியை இழுத்துக்கொண்டு வேறெந்தப் பக்கமாவது ஓடிப்போய் விட்டால் ஆகாசதது நட்சத்திரமும் சிக்காது, பனத்துக்குப் பனமும் நஷ்டம். ஆகையால் அவனும் படகில் ஏறிக்கொண்டு விட்டான்.

பண ஆசையில், இரண்டு தறிகளுக்குச் சொந்தக் காரணுகும் ஆசையில் ஜப்பர் அடிக்கடி ஊருக்கு வந்துவிட்டுப் போவான். தாராளமாகப் பணத்தைச் செலவு செய்வான். பேலுவுடன் கூடிக் கூடிச் சதியாலோசனை செய்வான். கரீமின் ஆட்களுக்கு ஊரைக் காட்டுவான். "எங்க ஊரைப் பாருங்க! இங்கேதான் எங்க மாலதி அக்கா நாளுக்கு நாள் அழகா மலர்ந்துக்கிட்டு வரா! அவ கிடைச் சுட்டா, கரீம் சாயபு ரொம்ப அதிருஷ்டக்காரர்தான்!”

சரியான தருணத்துக்காகக் காத்திருந்தான் ஜப்பர். ரஞ்சித் ஊரில் இல்லை. நல்ல இருட்டான இரவு படகு வருவது கண்ணுக்குத் தெரியாது. இம்மாதிரி தருணத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டு விடலாம், சாம்கத்தீனும் ஊரில் இல்லை; அவன் டாக்கா போயிருக்

34

கிருன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காரியத்தை முடித்துவிடும்படி யோசனை சொன்னுன் பேலு. இந்த யோசனைக்குக் கூலியாகப் பேலுவுக்கு இருபது ரூபாய் கிடைத்தது, பீபி ஆன்னுக்குக் கட்டம் போட்ட புடைவை கிடைத்தது. பேலுவின் பீபியும் அவர்களோடு போவதென்று ஏற்பாடாயிருந்தது. ஆனல் கடைசியில் பேலு இதற்கு இணங்கவில்லை. அவனுக்குப் பயமாக இருந்தது, அகப்பட்டுக்கொண்டு விடுவோமோ என்று.

இப்போது துரியன் மேலே கிளம்பிக்கொண் டிருந்தான். காற்று படகின் பாயின்மேல் மெல்ல வீசியது. காலைச் சூரியன் நதியின் நடுவிலிருந்து மேலே கிளம்புவதுபோல் தோற்றம் அளித்தான். மேக்னு ஆற்றின் கடுஞ்சுழலில் படகு அகப்படடுக்கொள்ளக் கூடா தென்று படகோட்டிகள் படகை மிகவும் கவனமாகச் செலுத்தி ஞர்கள். படகின் மேலிருந்த குடிசைக்கு இருபுறமும் மரக் கதவுகள். உள்ளே இருந்த இடம் ஓர் அறைபோல் பெரிதாயிருந்தது.

உல்லாசப் படகைப் போன்ற பெரிய படகு அது, அறைக்குள்ளே பேசப்படும் பேச்சைப் படகு முனையிலிருந்து கேட்க முடியாது. அறைக்குள் மாலதி சீறிஞள், விம்மினுள், ஜப்பர் அவளுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு முன்போல் ஆசை காட்டி மயக்கப் பார்த்தான். பேலுவின் பீபியும் இப்போது படகில் இருந்தால் எவவளவோ வசதி யாக இருக்கும். ஜப்பர் இன்னும் பத்து, இருபது ரூபாய் கொடுக்கத் தயாராய்த்தான் இருந்தான். ஆணுல் பேலுதான் அவளே அனுப்ப இனங்கவில்லை.

மாலதி கடைசிவரை வழிக்கு வராவிட்டால், "காட்டுப் புலி கூண்டுக்குள் வந்தும் சீறிக்கொண்டே இருந்தால் என்ன நேரும்?" ஜப்பரின் திட்டமெல்லாம் பாழாகிவிடும். அந்தப் பயத்தில் ஜப்பரின் முகம் உலர்ந்துவிட்டது. அவன் மாலதிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, "மாலதி அக்கா, எழுந்திருங்க! பால் காய்ச்சிக் கொடுக் கறேன் ; குடிங்க ! உடம்பிலே பலம் வரும்” என்று கெஞ்சினன். அவன் பேச்சை யார் கேட்பது? மாலதி தரையின் மேல் சுருண்டு கிடந்தாள், புயலில் அடிப்பட்டு விழுந்து கிடக்கும் காக்கையைப் போல். அவளுடைய முகத்தில் களங்கத்தின் நிழல் படிந்திருந்தது. ஒரே இரவுக்குள் அவளுடைய கண்களுக்குக் கீழே கறுத்துப் போயிருந்தது. அவளுடைய கைகால்களில் இப்போது கட்டுகள் இல்லை. மூடிய கதவின் இடைவெளி வழியே காலை வெயில் நுழைந்து வந்து அவளுடைய கால்மாட்டில் விழுந்தது.

"மாலதி அக்கா, எழுந்திருங்க மூஞ்சி அலம்பிக்கிட்டு நாஸ்தா பண்ணுங்க" என்று ஜப்பா கூப்பிட்டான்.

342

மாலதி தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் இன்னும் அவளைத் தொந்தரவு செய்தால் அவன் மேல் விழுந்து கடித்துக் குதறிவிடுவாள் போலிருந்தது. ஜப்பர் பயந்துபோய் அறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். “உம், அவளுடைய கொழுப்பு இன்னும் அடங்கவில்லை."

மாலதியைப் பார்த்தால் பைத்தியம் மாதிரி இருந்தது. கரீம் ஷேக் வாசலில் ஹூக்கா பிடித்துக்கொண் டிருந்தவன், "குட்டி என்ன சொல்ரூ ?” என்று ஜப்பரைக் கேட்டான்.

"கேக்கரு, கிழவனுச்சே, எனக்கு ஈடுகொடுக்க முடியுமான்னு." "அப்படி என்ன வயசாச்சு எனக்கு ? சுமார் நாற்பதுதானே இருக்கும்!”

"அப்படீன்னு ஒரு கவலேயும் இல்லே சமாளிச்சுடுவிங்க." ஹல்க்காவில் புகையிழுத்துக்கொண்டே கரீம், "அவ என்னமோ என்னைப் பத்தியே பேசிக்கிட்டு இருக்கறதாச் சொன்னியே! அவளாணுப் பைத்தியம் மாதிரி உட்கார்ந்திருக்காளே!" என்ருன்.

"அதெல்லாம் ஒண்னுமில்லே, மியான் ! காட்டுப் புலியைக் கூண்டிலே அடைச்சா, இப்படித்தான் முதல்லே சீறும். அப்புறம் எல்லாம் சரியாப் போயிடும்."

'அவளை வசப்படுத்த முடியாட்டா எவ்வளவு ராத்திரி இந்த மாதிரி அலையறது? நான் கடையைவிட்டு வந்து எவ்வளவு நாளாச்சு! நான் கிளம்பற போதே பெரிய பீபி கேட்டா, “எங்கே போறே, மியான் ?"ன்னு."

"என்ன சொன்னீங்க?" *சொன்னேன், மீன் பிடிக்கப் போறேன்னு. மேக்னுவிலே பெரிய டாயின் மீன் கிடைக்குமான்னு பார்க்கப் போறேன்னேன்."

ஹல்க்காவின் நெருப்பைத் தண்ணிருக்குள் உதறிவிட்டுக் கரீம் தொடர்ந்தான். "மீன் தூண்டில்லே சிக்கிட்டது. ஆணு அதைக் கரைக்கு இழுத்துக்கிட்டு வர முடியல்லே. இதென்ன சங்கடம்?" "கரைக்கு இழுத்துக்கிட்டு வந்துட்டா அப்புறம் என்ன மிஞ்சும், சொல்லுங்க! ரெண்டு மூணு தடவை குதிக்கும். அப்புறம் பிரானனை விடும், காட்டுப் புலி வசப்பட்டுட்டா இன்னுெரு தடவை வேருெரு புலியைத் தேடிக்கிட்டு வேட்டையாடப் போகத் தோனும், கையிலே ஆம்பிட்டுக்கிட்ட சரக்கு அவ்வளவு ருசியாத் தோணுது. இல்லையா, மியான்?. சரி, புகையிலை தரவா ?"

"தா. ஆணுல் புகையிலே சாப்பிட்டும் உற்சாகமாயில்லே எனக்கு." கரீம் ஷேக் முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டு உட்கார்ந் திருந்தான். படகு எந்த ஊரையும் நெருங்கவில்லை. படகில் எடுத்து வந்திருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன. மாலதி

343

அவனுடைய விருப்பத்துக்கு இணங்கும்வரை இப்படியே ஏரிகளிலும் ஆறுகளிலும் படகிலேயே சுற்ற வேண்டும். அவளிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும், பலாத்காரத்தை உபயோகிக்கக் கூடாது. நயமான நடத்தையால் மாலதியின் மனத்தைக் கவரவேண்டும். இவ்வாறெல்லாம் நினைத்த கரீம் ஜப்பரிடம் சொன்னுன், “மனசுக் குள்ளே ஒரு பறவை வாசம் பண்ணுது, ஜப்பர்."

"ஆமாங்க, மியான்"

“அந்தப் பறவை பறக்கத் துடிக்குது. அதுக்கு என்ன வேணும்? புது பீபிக்காக ஏங்கித் தவிக்குது அது, மனசே நீயும் ஒரு படகோட்டி தான்! பீபி ஹாலிமா - அவளை வழிக்குக் கொண்டுவர எவ்வளவு நாளாச்சு? இதெல்லாம் ஜப்பருக்குத் தெரியக் காரணம் இல்லை. ஏதேதோ நினைவுகள் கரீமின் மனத்தில் தோன்றின.

இப்போது கரீம் வெளிப்பார்வைக்கு ஒரு கண்ணியமான மனிதன், ஆனால் உள்ளுற அவன் நேர்மையான பேர்வழி அல்ல. அவன் மனம் கோணலானது, வளைந்து செல்லும் ஆற்றைப்போல. இப்போது அவனுக்கு உள்ளும் புறமும் ஒரே ஞாபகந்தான். விருப்பப்படி படகுத் துறையிலே நின்னு இலிஷ் மீன் வாங்கணும். பத்மா நதியின் இலிஷ், மேக்னு நதியின் இலிஷ், அப்புறம் படகிலே போயிக் கிட்டே மீன் குழம்பும் சுடுசோறும் நல்லாச் சாப்பிடணும். இந்துப் பொண்ணு! அவளோட இளமை விணுகிக்கிட்டு இருக்கு: அவளோட வாழ்க்கை நடத்த ஆசையா இருக்கு கரீமுக்கு. "ஏ பொண்னே, நீ ஏன் கஷ்டப்படறே? இளமையை ஏன் விணுக்கிக்கிட்டு இருக்கே? நானும் நீயும் உல்லாசமாகக் கடல்லே பிரயாணம் செய்யலாம்" என்றெல்லாம் நினைத்துக்கொண்டே கரீம் ஹ")க்காப் புகையை இழுத்து வெளியே விட்டான். பிறகு ஹல்க்காவை ஜப்பரிடம் கொடுத்துவிட்டு, "நல்லா, ஆனந்தமா இழு!” என்று சொன்னுன். பிறகு தவழ்ந்துகொண்டே போய் மாலதி இருந்த அறைக்குள் நுழைய முற்பட்டான், ஜப்பர் சட்டென்று அவனுடைய இரு கால் களையும் கட்டிக்கொண்டு கேட்டான், "நீங்க என்ன பண்றிங்க.

நியான் ?"

"ஏன், என்ன பண்ணிட்டேன்?

"பாம்போட விளையாடப் பாக்கரீங்களா ?”

"பாம்போட விஷப் பல்லேப் பிடுங்கப் போறேன்."

"அது அவ்வளவு சுலபமாத் தோணுதா?"

"ஆமா."

"நூல் வாங்கி விக்கற மாதிரி தோணுதாக்கும்?"

eRy; LDfT"அது அவ்வளவு சுலபமில்லே, மியான்."

344

"சுலபமா, இல்லையான்னு பாக்கறேனே!" இவ்வாறு சொல்லிக்கொண்டே கரீம்ஷேக் முழங்காலால் நகர்நத படி அந்த அறைக்குள் நுழைந்துவிட்டான். ஓநாய் தன் பொந் துக்குள் வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாய் உட்கார்ந் திருப்பது போல் அவன் மாலதிக்குச் சற்றுத் தூரத்தில் பேசாமல் உட்கார்ந்தான். இங்கிருந்து அவளைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. முகத்தைத் தன் மடிக்குள் புதைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். படகுக்குப் பலவந்தமாக இழுத்து வந்ததில் அவளுடைய உடலில் பல இடங்களில் காயம், ரத்தக்கறை-யாரோ அவள் உடல் முழுதையும் குத்திக் கிளறிவிட்டாற் போல் இருந்தது.

கரீம் அவளை அன்போடு தடவிக் கொடுக்கத் தன் கையைத் தூக்கியபோது படகின் முன்பக்கத்திலிருந்த படகோட்டி தன்னைக் கவனிப்பதைப் பார்த்தான். உ1 னே அவன் அறைக் கதவைச் சாத்தினுன். ஆசை மிகுதியில் அவனுடைய நாக்கில் நீர் ஊறியது. தாமரைப் பூப்போல் புத்தம் புதிய, ரோஜாவைப் போல் மிருதுவான, மாலதியின் அழகிய உடலில் இளமைப் பொங்கிப் பூரித்திருந்தது, ஆற்றின் பிரவாகம் போல,

பழுக்கக் காய்ந்த இரும்பின்மேல் கை வைப்பவன் சட்டென்று கையை எடுப்பதுபோல் கரீம் இரண்டு தடவை மாலதியைத் தொட்டுப் பார்த்து மறுகணமே கையை இழுத்துக்கொண்டான். இரண்டு தடவை அவளுடைய தலையை வருட முயற்சி செய்தான். இப்போது ரொம்பச் சமத்தாகி விட்டிருந்தாள் மாலதி. அவள் ஒன்றும் சொல்லவில்லை, இதனுல் தைரியமடைந்த அவன் உற்சாகத்துடன் கூவினுன். 'இலிஷ் மீன் குழம்பு பண்ணி, சுடச்சுடச் சோறு சமைச்சு ஆனந்தமாச் சாப்பிடுங்க எல்லாரும் 1 இன்னும் சற்றுநேரத்தில் மாலதியுடன் காதல் விளையாட்டில் மெய்ம்மறந்து போகலாம்" என்று எனணிக்கொண்டே, அவன் அறைக்கு வெளியே வந்தபோது நாணல் காட்டுக்குள்ளே தண்ணிரில் ஒரு பெரிய முதலே மிதப்பதைக் கண்டான். அதன் பிரம்மாண்டமான வாய் திறந்து கிடப்பதைப் பார்த்து அவனுக்குத் திகில் பிடித்துவிட்டது.

அருகில் ஊர் எதுவும் இல்லை. நதியின் தென்கரையில், நாணல் காட்டைத் தாண்டினுல், ஆஸ்தானு சாயபுவின் சமாதி. எதிரில் நானல் காடு, வெகு தூரத்துக்குத் திறந்த வெளி. தண்ணிர் சற்றுக் குறைந் திருந்தது, சூரியன் உச்சிக்கு வந்துகொண்டிருந்தான்.

எல்லாரும் படகின் மேல்தளத்தில் உட்கார்ந்துகொண்டு சாப்பிட் டார்கள். மாலதி ஒன்றும் சாப்பிடவில்லை. அவள் மெளனமாக ஆற்று நீரையே பார்த்துக்கொண் டிருந்தாள். இப்போது அவர் களுடைய கவனம் அவள்மேல் இல்லை. கரீம் தொழுகை செய்தான்.

345

மாலதியால் இனி வீடு திரும்ப முடியாது. எங்கே திரும்புவாள் அவள் ? மோசக்காரர்கள் அவளைத் திருட்டுத்தனமாகக் கடத்திக் கொண்டு வந்துவிட்டார்கள். இப்போது ரஞ்சித்தின் முகமோ வேறு எவருடைய முகமோ அவளுடைய மனத்தில் தோன்றவில்லை. அவளு டைய மண்டைக்குள் தாங்க முடியாத வேதனை. அவளுக்குள்ளே ஒரு கையாலாகாத ஒலம். இப்போது என்ன செய்வாள் அவள்? அவள் யார், அவளுடைய விருப்பம் என்ன, அவள் இப்போது எங்கே போகிருள்? அவள் ஏன் இப்படிச் சும்மா உட்கார்ந்திருக் கிருள்? அவள் செய்யக் கூடியது என்ன?

கரீம் தொழுகையிலும் மற்றவர்கள் சாப்பாட்டிலும் கவனமாயிருந்த போது மாலதி சட்டென்று தண்ணிரில் குதித்துவிட்டாள். "தாயே, உன்னிடம் எனக்கு அடைக்கலம் கிடைக்குமா?" என்று கேட்பவள் போல, "கங்கை அன்னையே! நான் உன்னை அண்டிவிட்டேன்! நீதான் சரணம்!"

படகோட்டிகள் சாப்பாட்டை விட்டுவிட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டு எழுந்தார்கள். ஜப்பர் தண்ணிருக்குள் குதித்தான். துடுப் பைக் கழற்றப் போன படகோட்டிகள் கயிற்றில் சிடுக்கு விழுந் திருப்பதைக் கண்டார்கள். அவர்களால் விரைவாகத் துடுப்பைக் கழற்ற முடியவில்லை. இதற்குள் மாலதி வெகுதூரம் ஆற்றேடு போய் விட்டாள். அவளுடைய தலை இடையிடையே தண்ணிருக்குள் மூழ்கி மூழ்கி GunGఐు வந்தது. கரீம் ஆற்று நீரின் திசையில் படகை வேகமாக ஒட்டினுன். மாலதி கரையை அடைந்து கோரைக் காட்டுக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டாள்.

படகு ஆமை முதுகைப் போல் தண்ணிரின்மேல் போய்க்கொண் டிருந்தது. எதிரில் நீர் சுழலாகச் சுழன்றது. வலதுப் பக்கம் படுகை, அதில் வயல்கள். மாலதி சுழலில் சிக்கிக்கொண்டு முழுகி விட்டதாக எல்லாரும் நினைத்தார்கள். ஆணுல் மாலதி எவ்வளவோ தடவை மழைக் காலத்தில் ஆற்று மணலைத் தாண்டி வந்து சுழலில் முழுகித் தண்ணிருக்கடியிலிருந்து மண்ண அள்ளிக்கொண்டு வந் திருக்கிருள். அப்படிப்பட்ட மாலதி சுழலில் அகப்பட்டுக் கொண்டு முழுகிப் போயிருப்பாள் என்று ஜப்பரால் நம்பமுடியவில்லை. அவன் படகின் மேலேறி நாற்புறமும் திரும்பிப் பார்த்தான், அருகில் கோரைக் காடு. ஒரு மீன் ஆற்று நீரில் நீந்துவதுபோல் யாரோ கோரைப் புற்களை விலக்கிக்கொண்டு தண்ணிரில் நீந்துவது அவனுக்குத் தெரிந்தது.

"அதோ போரு, பாருங்க!" என்று அவன் கத்தினுன். "அது ஆள் இல்லை, மீன் !" என்ருர்கள் படகோட்டிகள். கரீம், "ஆமா, ஆமா அது மீன்தான்" என்றன்.

346

அவன் ஆற்றின் நடுப்பகுதியைக் கவனமாகப் பார்த்துக்கொண்” டிருந்தான். மாலதி தப்பிவிட்டால் அவனுக்கு ஜெயில் வாசந்தான். மாலதியை வசப்படுத்தித் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போக முடியாவிட்டால் அவளைக் கொன்றுவிடுவது மேல், தண்ணிரில் ஆகட்டும், கோரைக் காட்டில் ஆகட்டும், அவள் தலைமேல் துடுப்பால் நாலு அடி வைத்துக் கொன்றுவிட வேண்டியதுதான். ஏரி நீரிலும் ஆற்று நீரிலும் யார் யார் பினமாக மிதக்கிருரர்களென்று யார் கண் டார்கள்? மழைக்கால வெள்ளத்தில் ஒரு யுவதி செத்துப் போனல் அதைத் தற்கொலை என்றுதான் நினைப்பார்கள்.

"அந்தப் பொண்ணு எங்கே?" என்று கரீம் கேட்டான். ஜப்பரின் பார்வை இன்னும் கோரைக் காட்டின்மேல் பதிந்திருந்தது. காடு மேடாகிப் போய்க்கொண்டிருந்தது. அந்த மேட்டில் இவ்வளவு பெரிய படகைச் செலுத்தினுல் படகு மண்ணில் சிக்கிக்கொண்டு விடும். இங்கே எங்கும் சேறு நிறைந்த தண்ணfர். ஜப்பர் என்ன செய்வான் இப்போது ?

இந்தக் கஷ்டகாலத்தில் யாராவது அந்தப் பொண்ணைப் பிடித்துக் கொண்டுவந்து கொடுக்க மாட்டார்களா? ஏமாற்றமும் கோபமுங் கொண்ட ஜப்பர் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டான். எங்காவது கோரைக் காட்டில் அசைவு தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே நின்ருன் ஜப்பர்.

மாலதி கோரைக் காட்டைத் தாண்டி, குருடியைப் போல், சமாதி இருக்கும் திக்கில் தள்ளாடிக்கொண்டு போவது தெரிந்தது. கரீம் பைத்தியக்காரனப் போல் சிரித்தான். "குட்டி வழி தவறிப் போயிட்டா! வாங்க, போய் பிடிக்கலாம் அவளே!"

அவன் தண்ணிரில் குதித்தான், அவனைப் பார்த்து ஜப்பரும் கரீமின் சீடன் ஒருவனும் குதித்து நீந்தத் தொடங்கினர்கள். மனித நடமாட்ட மற்ற இந்தத் தண்ணிர்க் காட்டில் ஒரு முயலைத் துரத்தி வருகிற ஒநாய்க் கூட்டம் போல ஓடினுர்கள். எதிரில் கரை, ஆஸ்தானு: சாயபுவின் சமாதி. மற்றப் பக்கங்களில் ஆழமான தண்ணிர். மனிதர் களின் குடியிருப்பு அங்கிருந்து வெகுதூரம். இந்த அத்வானத்தில் அகப்பட்டுக்கொண்டால் மாலதி பைத்தியமாகிவிடுவாள். ஆணுல் எப்படியோ புதரில் மறைந்துகொண் டிருந்துவிட்டு ஏழெட்டு மைல் தூரம் தண்ணிரைக் கடந்துபோய் ஏதாவது ஊரையடைந்துவிட்டால் ஜப்பருக்குச் சிறைதான், தறி வாங்கும் ஆசையெல்லாம் கனவாகிப் போய்விடும்!

மாலதி வேகமாக ஓட ஓட ஜப்பரும், கரீமும், அவனுடைய சகாவும் அவளைத் துரத்தினுர்கள். அவர்கள் கோரைக் காட்டுக்குள் புகுந்து ஓடும்போது கோரை அவர்களுடைய உடம்புகளில் கீறி

347

ரத்தம் வழிந்தது. இப்போது அவர்கள் மனிதப் பிறவிகளாகத் தோன்றவில்லை. சுடுகாட்டில் நடமாடித் திரியும் பிசாசுகளைப்போல் காட்சியளித்தார்கள் அவர்கள்.

இந்தப் பகுதியில் மனித சஞ்சாரம் இல்லை. சில கோச தூரங்களுக்கு மனிதர்களின் குடியிருப்பே இல்லை. வெறும் காடுதான். பண்டிகை சமயத்தில் மட்டும் மக்கள் அங்குவந்து சமாதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டுப் போவார்கள். அப்புறம் மறுபடி சூனியந்தான். இந்தக் காட்டில் இறந்த மக்களின் உலகம் ஒன்று மெளனமாக இயற்கையின் விளையாட்டைப் பார்த்துக்கொண் டிருந்தது. பத்துக் கோசம், இருபது கோச தூரத்திலிருந்தும் பினங்கள் இங்கு வருவது உண்டு. தர்காவுக்கருகில் பினங்களைக் கொண்டுவந்து புதைப் பார்கள். புதைக்கும் சமயத்தில் உரக்கக் கூவுவார்கள், அல்லா ஒருவரே! முகம்மது அவருடைய ஒரே தூதன் !"

இப்போது சூரியன் மேற்கே சாயத் தொடங்கிவிட்டான். மாலதியைத் துரத்தி வந்தவர்கள் கோரைக் காட்டில் புகுந்ததும் வழி தெரியாமல் தவித்தார்கள். காரணம், அவர்களுக்கு வழிகாட்ட ஒரு அரவமும் இல்லை. யாராவது சேற்றில் ஓடினுல் சப், சப் என்ற அரவமாவது எழும். அதுகூட எழவில்லை இப்போது,

காற்றில் புற்கள் அசைந்தன. செடிகளில் எவ்வளவோ பூச்சிகள், புழுக்கள். மழைக் காலமானதால் பாம்புகளும் சஞ்சரிக்கும். இந்தப் பக்கத்திலுள்ள விஷப்பாம்புகள் கோடைக் காலத்தில் வயல்களிலும் ஆற்றங்கரையிலும் சுற்றித் திரியும். அவையெல்லாம் இப்போது தண்ணிருக்குப் பயந்து மேட்டுப் பகுதிக்கு வந்துவிடும், அல்லது புல்லின் மேல் ஒன்றுடன் ஒன்று பிணைந்துகொண்டு கிடக்கும். அட்டையும் ஒருவித விஷப்பூச்சியும் எங்கும் நெளியும். இங்கே அகப்பட்டுக்கொள்வது சாவை எதிர்கொள்வது போலத்தான்.

இங்கே ஓடிவந்த ஒரு யுவதி அவர்களைக் காட்டிலும் சேற்றிலும் அலைய வைத்தாள், அலைய அலைய அவர்களுக்கு வெறி அதிகமா கியது. கரீம் பைத்தியம் பிடித்தவன் போல ஆபாசமாகத் திட்டினுன் அவளை, அவளுடைய கட்டுக்களை அவிழ்த்திருக்கக் கூடாது! அந்த அழகான குட்டி இப்போது எங்கே? தூக்குத் தண்டனே பெற்ற குற்றவாளியைப் போல் தோற்றம் அளித்தான் கரீம். அவன் அவளே நன்றகத் தொடக்கூட இல்லை, இறுகக் கட்டிக் கொள்ளவில்லை. சேம்பு இலைபோன்ற அவளுடைய மிருதுவான தலைமயிரை ஆசை தீர வருடிவிடவில்லை. இன்னும் அவளை ஒன்றுமே செய்ய முடிய வில்லை அவனுல் 1

தன் திட்டமெல்லாம் வீணுகிவிட்டது என்ற நினைவு ஏற்பட்டதும் கரீம் தன் சுய உருவத்தை எடுத்துக்கொண்டான். அவனுடைய

348

இயற்கையான மிருக உணர்வு வெளிப்பட்டது. "ராஸ்கல்! நீ என்னை மாடு, குதிரைன்னு நினைச்சியா?" என்று சொல்லிக்கொண்டே ஜப்பரின் முதுகில் ஓர் உதை கொடுத்தான் அவன். ஜப்பர் பயந்துகொண்டே, "வாங்க, மியான் 1 வடக்குப் பக்கத்துப் புதரிலே யாரோ நடந்துபோற மாதிரி இருக்கு போய்ப் பார்க்கலாம்" எனருன,

ஜப்பர் மனசுக்குள் கறுவிக்கொண்டான். "இனிமேல் சும்மாவிடக் கூடாது. அவளைக் கண்டுபிடித்து விட்டால் உடனே கட்டிக் கொண்டு அவளுடைய மானத்தைப் பறிக்கவேண்டும்."

கரீம் நினைத்துக்கொண்டான், "சும்மா விடக்கூடாது இனிமேல்! இனிமேல் கெஞ்சப் போவதில்லை, கொஞ்சப் போவதில்லை. அவளைப் பிடித்துவிட்டால் மிருகத்தைப்போல் அவள்மேல் பாய வேண்டியது தான். இழுத்துக்கொண்டு போய், புதருக்குள்ளே கீழே தள்ளி. நினைத்தபோதே அவனுடைய கணகளிலும் முகத்திலும் வெறி ஏறியது. எப்படியும் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

ஒரு தடவை மண்ணே உழுது பயிர் செய்துவிட்டால் பிறகு அந்த மண் அவனுடையதல்ல என்று யார் சொல்ல முடியும்?

மூவரும் வெறி பிடித்தவர்களாக ஒடிஞர்கள். மாலதி கரையில் ஏறி விட்டதாக அவர்களுக்குத் தோன்றவே, அவர்களும் கரையில் ஏறிப் புதர்களுக்குள் மறைந்துகொண்டு அரவம் ஏதும் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டார்கள், நிலா ஒளியில் மாலதி அசைவது தெரிந்தால் அவளைக் “கப்பென்று பிடித்துக்கொள்ளத் தயாராயிருந்தார்கள் அவர்கள்.

மாலதி பட்டினி, வெகுநேரம் காட்டுக்குள் அலைந்து அலைந்து களைத்துப் போய்விட்டாள் அவள். அவள் உடலில் பல இடங் களில் காயம்பட்டு, அந்தக் காயங்களிலிருந்து ரத்தம் வழிந்தது. மேலாடை இல்லை. அது எங்கோ கொடிகளில் சிக்கிக்கொண்டு விட்டது. ரவிக்கை பல இடங்களில் நார் நாராகக் கிழிந்துபோய் விட்டது. அவளுக்குத் தன் நினைவே இல்லை. அடிபட்ட மான் எவ்வாறு தள்ளாடிக்கொண்டே போய் ஒரு புதருக்குள் மறைந்து கொண்டு அசையாமல் கிடக்குமோ அதுபோல் அவளும் ஒரு புதருக் குள் ஒளிந்துகொண்டாள்.

மேலே வெள்ளை நிலவு. இந்த நிலவு இன்னுங் கொஞ்ச நேரந் தான் இருக்கும். யாரோ அந்தப் பக்கம் வருவதுபோன்ற மெல்லிய அரவம் கேட்டது. ஆற்றுத தண்ணிரில், பிறகு கரையில் யாரோ நடக்கும் அரவம், புதர்களில் திடீரென்று ஏதாவது சப்தம் கேட் டால் அவள் பயந்து நடுங்கினுள். கொஞ்சங் கொஞ்சமாக அவளுடைய திராணி குறைநதுகொண்டே வந்தது. தான் செத்துக்

349.

கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவள் தூரத்தில் ஒரு பெண் மான் ஓடுவது போவது போன்ற அரவத்தைக் கேட் டாள். தூரத்தில் ஆகாயத்தில் ரஞ்சித்தின் முகம் படகைப் போல் மிதப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவனுடைய கண்கள் வானவெளியில் மிதந்தன. தான் இவ்வாறு கொஞ்சங் கொஞ்சமாக நினைவிழந்து வருவதை அவள் உணர்ந்தாள். அதே நேரத்தில் அவளுக்கு அருகில் யமதூதர்கள் மாதிரி மூன்று பேர் நிற்பதைக் கண்டாள். அவர்கள் அவளே இழுத்துக்கொண்டு போகப் போகி ருர்கள் இப்போது அவள் பயத்தால் உண்மையிலேயே நினை விழந்து விட்டாள். ஏதோ கசமுசா ஒலி, ஆண்மானும் பெண்மானும் ஒடும் அரவம், நீரில் அலை எழும்பும் சப்தம்-இரவு முழுவதும் மயங்கிக் கிடந்த மாலதியின் உடலில் மூவரும் தங்கள் மிருகத்தனத்தைக் காட்டிவிட்டு, அவள் இறந்துவிட்டதாகக் கருதி, இருட்டிலேயே ஓடிப்போய் விட்டார்கள். காலையில் நாயும் ஓநாயும் அவளுடைய உடலைக் கடித்துக் குதறித் தின்றுவிடும்! காட்டுக்குள் ஒரு யுவதி செத்துக் கிடப்பதை யாரும் அறியமுடியாது.

சோனு இரவு முழுவதும் ஒரு கனவு கண்டான்.

ஒரு பெரிய சமுத்திரம், அதன் கரைக்கு யாரோ சிலர் ஒரு பெரிய மரக்குதிரையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். எவ்வளவு பெரிய குதிரை அது! அவர்கள் போன பிறகு அவனுக்குத் தெரிந்தது. அது மரக்குதிரையல்ல, நிஜக் குதிரை என்று. அவன் பக்கம் திரும்பிப் பார்க்கிறது. அவன் தனியாக இல்லை, அமலாவும் கமலாவும் அவனு டன் கூட இருந்தார்கள். குதிரை அவன் முன்னுல் வந்ததும் அவன் காலடியில் படுத்துக்கொண்டது. சலாம் போடச் சொன்னுல் மூடாபாடா யானே மண்டியிட்டு உட்கார்ந்து கொள்ளுமே, அது போல் செய்தது. அவனும் அமலாவும் கமலாவும் அதன்மேல் ஏறி உட்கார்ந்ததும் குதிரை ஓடத் தொடங்கியது. மணற்பரப்பைத் தாண்டிச் சமுத்திரத்தில் இறங்கி முழங்கால் மட்டத் தண்ணிருக்கு வந்ததும் குதிரை மறுபடி மரமாகிவிட்டது, அசையவில்லை.

அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. மரக்குதிரை கொஞ்சங் கொஞ்சமாக உயர்ந்துகொண்டே வந்து ஆகாயத்தைத் தொட்டு விடும்போல் வளர்ந்துவிட்டது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு

350