தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Saturday, September 17, 2016

நீலகண்டப் பறவையைத் தேடி. . .434 -483

 நீலகண்டப் பறவையைத் தேடி. . .434 -483

சென்ற இரவு கொடையாளி கர்ணனின் ஜாத்ரா நடந்தது. அதில் விருஷகேதுவாக நடித்தவனுக்கு அழகான முகம், நீண்ட கண்கள், சிறிய உருவம். எவ்வளவு அசாதாரணமான பித்ரு பக்தி 1 சோனா அவர்களுக்கு விருஷ கேதவை நினைவூட்டினான். சென்ற இரவு சோனா தன் பைத்தியக்காரப் பெரியப்பாவின் அருகில் உட்கார்ந்துகொண்டு ஜாத்ரா பார்த்ததைத் தட்டி மறைவிலிருந்து கவனித்திருந்தாள், அமலா ஜாத்ரா பார்த்தவாறே சோனா தன் பெரியப்பாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு தூங்கிவிட்டான்.

அந்தப் பைத்தியக்காரர் அசாதாரண மனிதர். அவர் அசையாமல் நேராக உட்கார்ந்திருந்தார். அவ்வளவு நேரமும் அவர் கையைக் காலைச் சற்று அசைத்தால் சோனாவின் தூக்கம் கெட்டுவிடும் என்று அப்படி அமர்ந்திருந்தார். அமலாவின் அத்தைமார்களும், சித்திமார் களும் ஜாத்ராவுக்கு நடுவே அடிக்கடி அவரைக் கவனித்துத் தங்களை மறந்ததை அமலா கவனித்தாள். அப்போது லஸ்தர் விளக்கில் நீலமும் சிவப்புமாகப் பலவகை விளக்குகள் ஒளிவீசிக் கொண் டிருந்தன.

வண்டி மரங்களின் நிழலில், கூழாங்கற்கள் பதித்த பாதையில் போய்க் கொண் டிருந்தது. டக் டக் என்று குதிரைகளின் குளம்பொலி கேட்டது. ஏரியின் சலனமற்ற நீரில் சில தாமரை மலர்கள் மலர்ந் திருந்தன. சரத்கால மாலை நேரம் கழிந்து வந்தது. நிர்மலமான ஆகாயம். மரங்களின் இடைவெளிகள் வழியே ஆற்றங்கரையில் நிறைய மக்கள் தென்பட்டார்கள். அவர்கள் எல்லாரும் துர்க்கை

யைப் பார்க்க வந்திருப்பவர்கள்,

"சோனா என்ன இப்படி இருக்கான் ?'' என்று அமலா எரிச்சலுடன் சொன்னாள்,

"ஏன், என்ன ஆச்சு ?" "அவனைக் காணவேல்லையே?"

இங்கிருந்து ஆபீஸ் கட்டிடம் வரையில் பார்த்தாள் அமலா, சோனா மண்டபத்துப் படியில் உட்கார்ந்திருக்கலாம். அல்லது மானையோ மயிலையோ பார்த்துக் கொண்டிருக்கலாம், முதலைப் பள்ளத்தை எட்டிப் பார்த்துக் கொண் டிருக்கலாம்.

ஊஹும். மரங்களின் இடைவெளியிலோ இலைகளாலான அலங் காரப் பந்தல்களுக்குக் கீழோ சோனாவைக் காணோம். "சோனா இனிமே நம்மோட வரமாட்டான்" என்று அப்போது கமலா சொன்னாள்.

அமலாவுக்கு நெஞ்சு திக்கென்றது. ''ஏன் வரமாட்டான் ?" "அவனுக்குக் கோபம்." "நாம அவனை ஒண்ணும் சொல்லலியே!'

434''கோபந்தான் அவனுக்கு. இல்லேன்னா நம்மளைக் கண்டதுமே ஏன் அப்படி ஓடறான்?"

அமலாவுக்கு உயிர் திரும்பி வந்தது. நல்லவேளை அவன் கமலா விடம் ஒன்றும் சொல்லவில்லை.

வண்டி ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தது. குதிரைகள் இரண்டும் வெள்ளை. சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். வண்டியைப் பார்த்ததும் அங்குள்ள ஜனங்கள், சிறுமியர் இருவருக்கும் நமஸ் காரம் செய்தார்கள். பாதை காலியாக இருந்தது. குதிரைகள் நிதான மாக நடை பயின்றன.

"சோனாவை எங்கேயாவது பார்த்தாப் பிடிச்சு இழுத்துக்கி ன்டு வந்துடுவோம். எங்கே போயிடுவான் பார்ப்போம் ?" என்று அமலா சொன்னாள்.

"நீ அவனோட ரெண்டு கையையும் பிடிச்சுக்கோ. நான் அவனோட கால் ரெண்டையும் பிடிச்சுக்கறேன். அவனைத் தூக்கிண்டு மொட்டை மாடிக்குக் கொண்டுபோய் மாடிப்படிக் கதவைச் சாத்திப்பிட்டா அவன் என்ன பண்றான், பார்ப்போம்" என்றாள். கமலா.

சோனாவை விரோதித்துக்கொள்ளக் கூடாது, அவனைத் தாஜா செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமலா நினைத்தாள். அவள் சோனாவை என்ன என்ன செய்துவிட்டாள்! கமலாவுடன் இப்படியெல்லாம் எவ்வளவோ தடவை செய்திருக்கிறாள். ஆனால் சோனா! அது ஓர் அலாதி அநுபவந்தான், அலாதி இனிமை தான், கமலா அவனைத் தன்னிடம் இழுத்துக் கொண்டு விடுவாளோ என்ற பயம் அமலாவுக்கு. "சோனாவை அப்படியெல்லாம் பலவந்தமா இழுத்துக்கிண்டு வரவேண்டாம். அவன் நல்ல பையன், நான் அவன் கிட்டே பிரியமா இருப்பேன்" என்றாள் கமலா.

''நானும், அவன்கிட்டே பிரியமா இருப்பேன்." கமலாவின் பேச்சால் அமலாவுக்கு வருத்தம் ஏற்பட்டது. ''உனக்கு எப்போதும் இந்தக் குணந்தான். எனக்கு ஏதாவது பிடிச்சிருந்தா உனக்கும் அதுவே வேணும்!" " நீயும் அந்தமாதிரிதான்."

அமலா பிறகு பேசவில்லை. பின்னால் மரப்பொம்மை போல் அசையாமல் ராம்சுந்தர் நின்றுகொண்டிருந்தான். எதிரில் சீ தலக்ஷா வின் படுகை நிலம். அதில் சோனாவின் பைத்தியக்காரப் பெரியப்பா தன்னந்தனியே நடந்து போனார்.

"அதோ பார், அக்கா! சோனாவோட பைத்தியக்காரப் பெரியப்பா'' என்று கமலா சொன்னாள்.

435 435அமலா திரும்பிப் பார்த்தாள். பைத்தியக்கார மனிதருடன் அவ ருடைய நாயும் இருந்தது. நதிப்படுகையைக் கடந்து எங்கேயோ போனார் அவர்.

"அவருக்குப் பின்னாலே சோனா போறான் போலே யிருக்கே!" என்று கமலா சொன்னாள்.

"ராம்சுந்தர், அது சோனாதானே?" என்று கமலா கேட்டாள். "ஆமாங்க." ''ஜசீம், வண்டியை வேகமா விடு !" என்று சொல்லிவிட்டு அமலா தன் ஃபிராக்கைச் சரி செய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

ஆற்றங்கரையில் பழைய மண்டபம். மண்டபத்தின் சிகரத்தில் பதித்திருந்த திரிசூலத்தின் மேல் ஒரு பறவை உட்கார்ந்திருந்தது. சோனாவும் பெரியப்பாவும் மண்டபத்துக்கு வருவதற்குள் கமலாவும் அமலாவும் அங்கே போய்ச் சேர்ந்துவிடுவார்கள். சோனாவையும் அவனுடைய பெரியப்பாவையும் பிடித்து விடுவார்கள். அவர்களையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு நாலு பேராக, நாலு பேர் ஏன், ராம்சுந்தர். ஜசீம், நாய், இவர்களை எல்லாம் சேர்த்து, மொத்தம் ஏழு பேர் -வீட்டுக்கு வீடு துர்க்கையைப் பார்த்து வணங்கிக்கொண்டு போவார்கள், கடைசியாகப் பழைய வீட்டுக்குப் போய் அங்கிருக் கும் துர்க்கையைப் பார்த்து வணங்கிவிட்டு மைதானத்துக்கு வந்து வண்டியிலிருந்து இறங்குவார்கள். ஆஸ்வின் மாதக்கடைசி யாதலால் அஸ்தமித்ததுமே பனி விழத் தொடங்கிவிடும். நல்ல நிலா இருக்கும். இரவில் வெகுநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டுப் பிறகு அவர்கள் வீடு திரும்புவார்கள். கூடவே ராம்சுந்தர் இருக் கிறானே, பயம் என்ன!

ஆற்றங்கரையில் இரண்டு குதிரைகள் கோச்சுவண்டியை இழுத்துக்கொண்டு வருவதையும் அந்த வண்டியின் பின்னால் ஜாத் ராலில் நடிக்கும் நடிகனைப் போல் ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்பதை யும் சோனா பார் ததான். ராஜா மாதிரி உடையணிந்திருப்பவன் ராம் சுந்தர் தான் என்று தூரத்திலிருந்து சோனாவுக்கு அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அமலாவும் கமலாவும் அவனைச் சைகை செய்து கூப்பிட்டார்கள்.

சோனா அவசர அவசரமாகப் பெரியப்பாவின் கையைப் பிடித்து இழுத்தான். சோனாவைப் பார்த்ததும் அவர்கள் மண்டபத்துக்கு அருகில் வண டியை நிறுத்திவிட்டார்கள். சோனாவை ஏற்றிக் கொள்ளக் காத்திருந்தார்கள். சோனா அந்தப் பக்கம் போகவில்லை; அவன் யானை லாயம் இருக்கும் பகுதியை நோக்கி, அதாவது, எதிர்த் திசையில், பெரியப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

436"ராம்சுந்தர், சோனாவைக் கூட்டிக்கொண்டு வா!" என்று அமலா சொன்னாள்.

"பார்த்தியா? சோனா நம்மளைப் பார்த்துட்டு ஓடறான்!'' என்று கமலா சொன்னாள்.

ராம்சுந்தர் வண்டியிலிருந்து குதித்து நேர்வழியில் மரங்களைத் தாண்டி வந்து படுகைக்கு வந்துவிட்டான். இந்த இடத்தில் ஒரு படித்துறை கட்டப்பட்டிருந்தது. அவன் படிகளில் இறங்கி நாணல் காட்டுப் பக்கம் ஓடிவந்தான்.

ராஜா உடையணிந்தவன் தங்களை நோக்கி ஓடிவருவதைச் சோனா கண்டான். நாணல் காடு, சற்று நேரம் அவனை அவர்கள் பார்வையி லிருந்து மறைத்தது. பெரியப்பாவுடன் நாணல் காட்டுக்குள் ஒளிந்துகொண்டுவிடப் பார்த்தான். அமலாவும், கமலாவும் அவனைக் கூட்டிக்கொண்டு வர அந்த ஆளை அனுப்பியிருந்தார்கள். ஆனால் சோனாவால் ஓடிவிட முடியவில்லை. நாய் வாலை ஆட்டிக்கொண்டும் உறுமிக்கொண்டும் ராம்சுந்தரிடம் ஓடியது.

சோனா ஆபீஸ் கட்டிடத்துக்கே திரும்பிப் போய்விடும் நோக்கத் துடன் படுகை வழியே ஓடத் தொடங்கினான். அங்கே இரண்டாவது பெரியப்பாவுடன் மெத்தைமேல் பேசாமல் உட்கார்ந்துவிட வேண்டும். அவன் அமலா கமலாவுடன் எங்கேயும் போகப் போவதில்லை, அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடப் போவதில்லை.

அப்போது நாய்க்கு ரொம்ப குஷி. பைத்தியக்காரப் பெரியப்பா ஆற்றங்கரையில் நின்றுகொண் டிருந்தார். நுங்கு, அன்னாசி ஏற்றிச் செல்லும் படகுகளும், சந்தைக்குச் சட்டிகளும், பாத்திரங்களும் ஏற்றிச் செல்லும் படகுகளும் ஆற்றின் போக்குக்கு எதிர்த்திசையில் சென்றன. சிலர் படகுகளைக் கயிற்றால் இழுத்துக் கொண்டு போனார் கள். அமலாவும் கமலாவும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். அவர் களும் ராம்சுந்தருமாகச் சேர்ந்துகொண்டு சோனாவைப் பிடித்து வண்டியில் வைத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்ற கவலை இல்லாதவர் போலக் காணப்பட்டார் மணீந்திரநாத். நதியில் சென்ற படகுகளை எண்ணிக்கொண் டிருந்தார் அவர்.

சோனா ஓடுவதையும் மற்றவர்கள் அவனைத் துரத்துவதையும் பார்க்க வேடிக்கையாக இருந்தது நாய்க்கு. அதுவும் உறுமிக் கொண்டு சோனாவோடு கூட. ஓடியது.

"நீங்க ஏன் இறங்கி வந்துட்டிங்க ?" என்று ராம்சுந்தர், அமலாவையும் கமலாவையும் கேட்டான்.

"சோனா நில்லு! ராமசுந்தர் என்ன சொல்றான், கேளு!'' என்று அமலா சொன்னாள்.

''நான் வரமாட்டேன்" என்று சோனா கத்தினான்.

437

(Gப்பு

437"நாங்க துர்க்கை பார்க்கப் போறோம்." "நீங்க போங்க. நான் வரல்லே!'' - இதற்குள் மூவரும் அவனைச் சூழ்ந்துகொண்டு விட்டார்கள். தப்பியோட வழியில்லை சோனாவுக்கு.

"நீங்க வரல்லேன்னா இவங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக் கும்" என்று ராம் சுந்தர் சொன்னான்.

"நான் வரல்லே." அடம் பிடிக்கும் குழந்தையைப் போல் திருப்பித் திருப்பிச் சொன்னான் சோனா.

இதற்குள் அமலா ஓடி வந்து அவனைக் 'கப்'பென்று பிடித்துக் கொண்டாள். "எங்கே போயிடுவே நீ ?"

என்ன ஆச்சரியம்! சோனாவால் அவளை உதறித் தள்ள முடிய வில்லை. மிருதுவான மணம் வீசும் உடலுடனும், அழகிய முகத்துடனும் கண் களுடனும் கூடிய அமலா அவனை இறுகப் பிடித்துக்கொண் டிருந்தாள். இப்படிப்பட்ட ஒரு பெண் இப்படிப் பிடித்துக்கொண்டு விட்டால் அந்தப் பிடியிலிருந்து விலகிவர யாருக்குத் தோன்றும்? "வா எங்களோட, வந்து துர்க்கை பாரு ! திரும்பி வரபோது மைதானத்திலே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாம். நிலா இருக் கும். அங்கே உனக்கு ஒரு விதப் பட்சி காண்பிக்கிறேன். வெள்ளை வெளேர்னு இருக்கும். எப்போப் பார்த்தாலும் பறந்துண்டு கூவிக் கிண்டு இருக்கும். நீ அதைப் பார்த்துட்டா அந்த இடத்தை விட்டு

வரவே மாட்டே ."

''ஆனா நீ என்னை"....... என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த சோனா, அமலாவின் முகத்தைப் பார்த்து அப்படியே மெளனமாகி விட்டான். அவளுடைய முகம் பரிதாபமாக இருந்தது. அதில் ஒரு மெளன வேண்டுகோள் இருந்தது. அந்த வேண்டுகோளை மீற முடியவில்லை

அவனால்,

பெரியப்பா திரும்பிப் பார்த்தார். சோனா அந்தப் பெண்களுடன் செல்வதைப் பார்த்துவிட்டு, படகுகளை எண்ணுவதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி நடந்தார்.

“உன்னோட பெரியப்பாவையும் கூட்டிக்கலாம்" என்று அமலா சொன்னாள்.

"நீங்களும் வரீங்களா ?" என்று சோனா கேட்டான். பெரியப்பா பதில் எதுவும் சொல்லாமல் வண்டியில் தாவி ஏறிக். கொண்டார்.

"நீ என்கிட்டே உட்காரு" என்று கமலா சோனாவிடம் சொன்னாள். "அதெப்படி ?" என்று அமலா ஆட்சேபித்தாள். ''நான் பெரியப்பா கிட்டே உட்காருவேன்'' என்றான் சோனா.

ஜசீம் குதிரைகளை வேகமாக ஓட்டினான். ''ஜசீம்! என்னையும்,

438பெரியப்பாவையும் உனக்கு அடையாளம் தெரியறதா?" என்று சோனா அவனைக் கேட்டான்.

"தெரியாமே என்ன! உங்க அம்மா சௌக்கியமா இருக்காங்களா?" தன் அம்மா எப்படி இருக்கிறாளென்று சோனாவுக்குத் தெரியாது. இங்கு வந்து சில நாட்களே ஆகியிருந்தாலும் அம்மாவைப் பார்த்து வெகு காலமாகி விட்டதாகத் தோன்றியது அவனுக்கு. ஊர் திரும்பி யதும் தன் தாயைப் பார்க்க முடியாது என்று ஏனோ அவனுக கு அடிக்கடி தோன்றியது. அவன் ஊர் போய்ச் சேர்ந்ததும் பட குத் துறையில் பெரியம்மாவை மட்டும் பார்ப்பான், வேறு யாரும் அங்கு

இருக்கமாட்டார்கள்.

அமலாவுடன் நேர்ந்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகே அவனுக்கு இப்படித் தோன்ற ஆரம்பித்தது. ஏன் என்று சொல்லத் தெரிய வில்லை அவனுக்கு. அவனால் தன் தாய் செளக்கியமாக இருக்கிறாள் என்று தைரியமாகச் சொல்ல முடியவில்லை. "நான் ஊருக்குப் போகிறேன்" என்று இரண்டாவது பெரியப்பாவிடம் சொல்லவும் தைரியமில்லை. அவனுடைய அண்ணாக்கள் அவனை மீண்டும் மீண் டும் எச்சரித்தார்கள், ''இங்கே வந்ததும் ஊருக்குப் போறேன்னு சொல்லி அழக் கூடாது" என்று. ஈசமின் படகில் போய் உட்கார்ந்துவிடத் தோன்றியது சோனாவுக்கு. அதில் உட்கார்ந்து விட்டால் தன் ஊருக்கு அருகில் வந்துவிட்டாற் போன்ற உணர்வு ஏற்படும் அவனுக்கு.

சோனா பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்ட ஜசீம் சொன்னான்: "அம்மாவை நினைச்சுக்கிட்டு ஏங்குறீங்க நீங்க."

ஜசீம் சொன்னது உண்மைதான். தாயின் நினைவு அவன் மனத்தில் பாரமாக அழுத்தியது.

"மறுபடி உங்க ஊருக்கு வரப் போறேன். குளிர் காலம் ஆரம்பிச்ச தும் உங்க அம்மா கையாலே பிட்டும் பாயசமும் சாப்பிடணும்" என்றான் ஜசீம்.

ஜசீம் சொல்வதைச் சோனா கவனிக்கவில்லை. அவன் குதிரை களைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். இரண்டு குதிரைகளும் நல்ல வெள்ளை. கிளப் கிளப் என்று குளம்பொலி கேட்டது. வண்டியின் பின்னால் ராஜா மாதிரி வேடமணிந்து கொண்டு ராம்சுந்தர் நின்றான். தலைக்கு மேல் பசுமையான மரங்கள் பறக்கும் பறவைகள், குதிரைகள். அவனை எங்கோ ஒரு தூர தேசத்துக்கு அழைத்துச் செல்வதாகத் தோன்றியது அவனுக்கு. அமலா தன்னைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பதைக் கவனித்தான், அவன் வெட்கமடைந்து, சென்ற இரவு நிகழ்ச்சியை நினைத்துச் சிரித்துவிட்டான்.

439''என்கிட்டே உட்கார்றியா?" என்று கேட்டு அமலாவும் சிரித்தாள். சோனா பெரியப்பாவின் முகத்தைப் பார்த்தான். அதில் அனுமதி யின் அறிகுறியைக் காணோம். "வேண்டாம்!" என்றான் அவன்.

''நாளைக்குத் தசமி. அப்பா சாயங்காலம் புல்லாங்குழல் வாசிப்பார். நானும் நீயும் பால்கனியிலே உட்கார்ந்து கிண்டு கேட்போம்" என்று

அமலா சொன்னாள்.

அவள் பேசுவதைக் கூடக் கவனிக்காமல் நிர்மலமான வானத்தைப் பார்த்துக்கொண் டிருந்தான் சோனா.

''அப்பா புல்லாங்குழல் வாசிப்பார். ரொம்பப் பேர் அதைக் கேட்க ஆத்தங்கரைக்கு வருவாங்க. பால்கனியிலே நீ, நான், கமலா மூணு பேருமா உட்கார்ந்துகிண்டு கேட்போம். வரியா ?" என்று அமலா மறுபடி சொன்னாள்.

"அத்தை , பழைய வீடு எவ்வளவு தூரம் ?" "அடே! சோனா உன்னை அத்தைன்னு கூப்பிடறானே, அக்கா ?" அமலா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு, ''ரொம்பத் தூரம்" என்று சுருக்கமாகப் பதில் சொன்னாள்.

அமலாவின் கோபத்துக்குக் காரணததைச் சோனா புரிந்து கொண்டான். ''பொழுது சாஞ்சதும் வரேன்!'' என்றான் சோனா. ''பொழுது சாஞ்சதும்னு ஏன் சொல்றே ? சாயங்காலம்னு சொல்லத் தெரியாது?'' என்று கமலா சொன்னாள்.

"தெரியும்.” ''பின் ஏன் சொல்ல மாட்டேங்கறே?" "மறந்து போறது.” "நீ எங்களோட கல்கத்தாவுக்கு வந்தால் எப்படிப் பேசுவே?” சோனா பதில் சொல்லவில்லை. "நீ இந்த மாதிரி பேசினா எல்லாரும் உன்னைப் பட்டிக்காட்டான்னு சொல்லுவாங்க" என்றாள் கமலா.

கல்கத்தா என்ற வார்த்தையைக் கேட்டதும் சோனாவுக்கு ஒரு ராஜாவின் ஊர் ஞாபகம் வந்தது. அங்கே எவ்வளவு பெரிய பெரிய வீடுகள், அரண்மனை மாதிரி ! வண்டிகள், குதிரைகள், கோட்டை , மியூசியம், ஹெளரா பாலம்! நினைக்க நினைக்க அதுவே ஒரு சாம் ராஜ்யமாகத் தோன்றியது அவனுக்கு. "பிரிதிவிராஜ், ஜயச்சந்திரன் சம்யுக்தையின் சுயம்வரம் - இவையெல்லாம் நினைவுக்கு வந்தன.

அவன் ஒரு பூங்காவில் தன் குதிரையுடன் ஒளிந்திருக்கிறான். ராஜகுமாரி சுயம்வரச் சபையின் வாயிலுக்கு வந்து அவனுடைய சிலைக்கு மாலை போட்டதும், அவன் அவளைத் தூக்கிக் குதிரையின் மேல் வைத்துக்கொண்டு வேகமாக ஓடி விடுவான் ! ஏனோ அவனுடைய மனக்கண்ணில் வெள்ளைக் குதிரை தோன்றியது. அதன்

440மேல் உட்கார்ந்திருக்கிறான் சோனா. அவனுக்கு முன்னால் அமலா அவன் அமலாவைக் கூட்டிக்கொண்டு ஆறு, வயல், காடுகளைக் கடந்து பெரியப்பாவின் நீலகண்ட பறவையைத் தேடிக்கொண்டு போவான்.

சோனா தன்னருகில் உட்கார்ந்திருந்த பெரியப்பாவைப் பார்த்தான். அமைதியாக மெளனமாக உட்கார்ந்திருந்தார் அவர்.

"அமலா, உனக்குக் குதிரைச் சவாரி பண்ணத் தெரியுமோ?'' என்று சோனா கேட்டான்.

"அடே! இப்ப நீ நன்னாப் பேசறியே!'' என்றாள் கமலா. ''எங்க பெரியம்மா கல்கத்தாப் பேச்சுப் பேசுவாளே!" என்று சோனா சொன்னான்,

''அப்போ நீ ஏன் இவ்வளவு நாள் அந்த மாதிரி பேசல்லே?" "எனக்கு வெட்கமாயிருக்கு." "அக்காவுக்குக் குதிரைச் சவாரி நன்னாத் தெரியும். தினம் காலம்பற அவ கிதிர்பூர் மைதானத்திலே குதிரைச் சவாரி பண்ணப் போவா" என்றாள் கமலா.

அவர்கள் வீடு வீடாகப் போய்த் துர்க்கையைப் பார்த்துவிட்டுப் பெரிய மைதானத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். எங்கும் நிலா. பக்கத்தில் ஆற்றுப் படுகை, எண்ணற்ற நாணற் பூக்கள். ஆற்று நீர் தெளிவில்லாமல் தெரிந்தது. அதில் வானத்து நட்சத்திரங்கள் பிரதிபலித்தன. குதிரைகள் வேகமாக ஓடின. அவற்றின் கழுத்து மணிகள் ஒலித்தன. நாய் அந்த ஒலிக்கேற்ப ஆடிக்கொண்டு ஓடிவந்தது. மூங்கில் காட்டிலிருந்து சில பறவைகள் பறந்து வந்தன. அவர்கள் வண்டியிலேயே உட்கார்ந்திருந்தார்கள். வெள்ளை நிறப் பட்சிகள் வெள்ளி நிலவில் பறந்து போய் மறைந்துவிட்டன. அவை கூவும் ஒலி பயத்தை உண்டாக்கியது. எண்ணற்ற பறவை கள் உலகமெங்கும் பறந்து போய் ஏதோ ஒரு சோகச் செய்தியைப் பரப்புவது போலத் தோன்றியது.

நதிப்படுகையில் ஒரு சுழற்காற்று பிறந்தது. எண்ணற்ற நாணற் பூக்கள் அதில் பறந்தன. பறவைகள் காட்டுக்குள் மறைந்து விட்டன. அவற்றின் ஒலியும் கேட்கவில்லை. நாணற்பூக்களின் மகரந்தம் அவர்கள்மேல் பனிபோல் உதிர்ந்தது.

"சோனா, கண்ணை மூடிக்கோ! நாணல் பூவோட மகரந்தம் பட்டால் கண் பொட்டையாயிடும்” என்றாள் கமலா.

எல்லாரும் கண்களை மூடிக் கொண்டார்கள். இந்த மகரந்த மழை நிற்கும் வரை அவர்கள் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அமலா உத்தரவு கொடுத்தால்தான் வண்டி வீட்டுப் பக்கம் திரும்பும். அமலா சோனாவுக்கு ஓர் அபூர்வக் காட்சியைக் காட்டு

441வதற்காகக் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள். அவள் நிலா வெளிச் சத்தில் தன் கடிகாரத்தைப் பார்த்தாள். ஸ்டீமர் வரும் நேரமாகி விட்டது. ஸ்டீமர் வந்தால் அதன் விளக்குகளின் வெளிச்சம் ஆற்றங் கரையில், ஆற்றுப்படுகையில், பறவைகளின் மேல் வந்து விழும். அப்போது ஓர் அற்புதமான, மர்மம் நிறைந்த காட்சி தோன்றும். ஸ்டீமரின் பிரகாசமான வெளிச்சத்தில் பறவைகளின் நீலக்கண்களும் வெள்ளை இறக்கைகளும், மஞ்சள் நிறக் கால்களும், ஆழமான நீல நிற நீரில் எண்ணற்ற வெள்ளி மீன்கள் நீந்தித் திரிவது போன்ற தோற்றத்தை உண்டாக்கும். சுழலில் அகப்பட்டுக் கொண்டு சுற்றிவிட்டு மறையும் மீன்கள் சற்று நேரத்துக்குப் பிறகு மறுபடியும் தோன்றும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது ஒரு போதை ஏற்படும். சினிமா பார்ப்பது போல் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். அதைக் காண்பிக்கத்தான் சோனாவை அழைத்து வந்திருந்தாள் அமலா. ஸ்டீமரின் வெளிச்சத் தைத் தூரத்தில் பார்த்ததுமே பறவைகள் உயரத்தில் வட்டமாகப் பறக்கத் தொடங்கின.

அமலா கண்களை மூடிக்கொண்டே, "சோனா, உன்னை நாங்க இன்னிக்கு எவ்வளவு தேடினோம் ?" என்று கூறினாள்.

சோனா ஒன்றும் சொல்லவில்லை. அவன் கண்களைத் திறந்து பார்த்தபோது எல்லாருமே வெள்ளையாகத் தெரிந்தார்கள். அவனால் யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. கதைகளில் வரும் கற்பனை மனிதர்களாகத் தோன்றினார்கள் அவர்கள். அவன்

ஆங்கிலத்தில் ஒரு பாடப் புத்தகம் பார்த்திருந்தான்,

அதில் ஒரு படம். வரிசை வரிசையாகப் பைன் மரங்கள், அவற்றின் மேல் பனி விழுந்துகொண் டிருக்கிறது : அவற்றுக்குக் கீழே ஒரு கிழவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஒரு பையன் நிற்கிறான். அவர்களுடைய தலைமேல், உடைகள் மேல் பனி விழுந்து குவிந்துவிடுகிறது. அது மாதிரிதான் இவர்கள் எல்லாரும் இப்போது ஆகிவிட்டார்கள், கண்களை மூடிக்கொண்டிருந்த பெரியப்பா சோனா அழைத்ததன் பேரில் கண்களைத் திறந்தார். அவர் படத்தி லிருந்த கிழவனைப் போலக் காணப்பட்டார். முன்பு குதிரைகள் மட்டுமே வெள்ளையாக இருந்தன. இப்போதோ எல்லாருமே வெள்ளையாகிவிட்டார்கள், நாய் உட்பட.

அப்போதுதான் அந்த அற்புத வெளிச்சம் தோன்றி, வானம், ஆறு, ஆற்றுப் படுகை, நாணற்காடு, மரங்கள் எல்லாவற்றையும் ஒளிமயமாக்கியது. "ஸ்டீமர் வெளிச்சம் !' சோனா கூவினான்.

எல்லாரும் கண்களைத் திறந்து அந்த வெளிச்சத்தைப் பார்த்தார் கள். அந்த வெளிச்சம் அவர்களுடைய வண்டியின் மேல் வந்து

442விழுந்தது. ஆயிரக்கணக்கான காஸ் விளக்குகளின் வெளிச்சம் போல் இருந்தது. அந்த வெளிச்சத்தில் காட்டிலிருந்து பறவைகள் பறந்து வந்தன. அவைகளும் வெள்ளையாகத் தெரிந்தன. வெள்ளைப் பறவைகளின் நீலக்கண்கள் - இவற்றை மெய்ம்மறந்து பார்த்தான் சோனா. பெரியப்பா தம்மையே பார்த்துக் கொள்கிறார். அவர் பாலினின் நாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாரா? பனி விழுவது போல் எங்கும் நாணற் பூக்கள் விழுந்தன. நீலக்கண் களைக் கொண்ட அந்தப் பறவைகளைப் பிடிப்பதற்காக வண்டியிலிருந்து குதிக்க முற்பட்டுவிட்டார் பெரியப்பா. அதைப் புரிந்து கொண்ட ஜசீம் அமலாவிடம் சொன்னான். "இப்போ வண்டியைத் திருப்பணும் எஜமானியம்மா !''

"ஆமா" என்றான் ராம்சுந்தர்.

ஆனால் அமலா ஒன்றும் பேசவில்லை. சுழற்காற்று இப்படி அவர்களை ஒரு கற்பனையுலக மனிதர்களாக மாற்றிவிடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

"சோனா என்ன பார்க்கறே?'' என்று அவள் சோனாவைக் கேட்டாள். ''பறவைகளைப் பார்க்கறேன்." "வெளிச்சத்தைப் பார்க்கல்லே ?"" ''அதையும் பார்க்கறேன்." "இன்னும் வேறே என்ன பார்க்கறே?" "கஸ்ட மர்,'' ஆனால் அமலா தன்னிடம் ஒன்றும் பேசவில்லை என்று மணீந்திர நாத்துக்குக் கோபம், அவர் பேச வாயெடுத்த அதே கணத்தில் ஒரு பெரிய பிராணி மணலில் நடந்து வருவதைக் கவனித்தார். முதலில் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பெரிய பிராந்து - யானையளவு பெரியது - வெள்ளை நிறம் மைதானத்தை நோக்கி வந்தது. எல்லாரும் திகைத்துப் போய் அதைப் பார்த்தார்கள்.

"இது என்ன, ஜசீம்?'' என்று கேட்டாள் அமலா. இதற்குள் வெளிச்சம் நகர்ந்துவிட்டது. எல்லாருக்கும் முன்னால் விஷயத்தைப் புரிந்துகொண்ட மணீந்திர நாத் வண்டியிலிருந்து குதித்தார். அது யானை தான்! ஆயிரக்கணக்கான நாணற்பூக்கள் அதன் மேல் விழுந்து அதை வெள்ளையாக்கிவிட்டன. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவந்தது. ஜசீம் அதனிடம் வரவில்லை என்பதற்காக

அவனைத் தேடிக்கொண்டு வந்தது போலும்.

சோனா அவசரமாக இறங்கிப் பெரியப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டான். அவன் இப்படிப் பிடித்துக்கொண்டால் அவர் எங்கும் போகமாட்டார். ஆனால் அவருடைய கண்களில் ஒரு மெளன

443வேண்டுகோள். " நீங்க என்னை விட்டுடுங்க! நான் யானை மேலே ஏறிக்கிண்டு எங்கேயாவது போறேன் மறுபடியும்!"

சோனா மணீந்திரநாத்தின் கையை விடவில்லை. ஜசீம் ராம்சுந்த ரிடம், "நம்ம யானை - ல க்ஷமி-க்கு மறுபடி மதம் பிடிச்சுடுத்து. அதைப் போய்ப் பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு வண்டியி லிருந்து குதித்துக் கத்திக்கொண்டே யானையை நோக்கி ஓடினான். ஐசீமின் குரலைக் கேட்டதும் யானை நின்றுவிட்டது. அசையாமல் நின்றுகொண்டு தும்பிக்கையை மட்டும் ஆட்டியது.

"பெரியப்பா, நான் பெரியவனானப்பறம் உங்களைக் கல்கத்தா வுக்குக் கூட்டிக்கிண்டு போறேன். நீங்க இப்போ வண்டியிலே ஏறுங்க" என்றான் சோனா.

இதைக் கேட்டு அமைதியா கிவிட்டார் மணீந்திர நாத். எப்போதும் அவர் சிந்தனையில் நிறைந்திருந்த சித்திரம் யானையைப் பார்க்கப் பார்க்க அவர் கண்முன்னால் தோன்றத் தொடங்கியது :

ஆற்றில் மயிற்படகு மிதக்கிறது ... கோட்டைச் சுவர் மேல் பறவைகள் பறக்கின்றன... ஹூக்ளியின் இருகரைகளிலும் சணல். தொழிற்சாலைகளின் சங்குகள் ஒலிக்கின்றன... ஈடான் பூங்காவில் நீலநிறப் பர்மியக் கோயில் தளத்தில் அவருடன் உட்கார்ந்திருக்கிறாள் பாலின்... அவருடைய கையில் தன் கையை வைத்துக்கொண்டு சொல்கிறாள் ; “நீ ரொம்பப் பெரிய ஆளாயிடுவே, மணி! அப்பா வுக்கு உன்னோட வேலைத் திறமையில் ரொம்பத் திருப்தி. நான் அவர்கிட்டே சொல்லி உன்னைச் சீமைக்கு அனுப்ப ஏற்பாடு பண்றேன். நீ அங்கே போயிட்டு வந்ததும் உனக்கு இன்னும் பெரிய வேலை கிடைக்கும். கார்டிஃப்பிலே எங்களுக்கு வீடு இருக்கும். கோட்டையை யொட்டி ஒரு சிறிய பாலம்); அதற்கப்புறம் 'ராவுத் இஞ்சினீரிங் டாக்', தூரத்திலே ஒரு மலை, மலைமேலே லைட்ஹவுஸ். கோடைக் காலத்திலே, சாயங்கால வேளையிலே நீயும் நானும் அந்த லைட் ஹவுசுக்குக் கீழே உட்கார்ந்திருப்போம். சமுத்திரத்தைப் பார்ப்போம். நாம் கப்பல்லே போயிட்டுக் கப்பல்லே திரும்பி வருவோம். நீ சம்மதிச்சா எல்லாம் நடந்துடும்!....

இச்சமயத்தில் அமலா வந்து சோனாவுக்கருகில் உட்கார்ந்தாள், அவனுடைய உடலிலிருந்து நாணற்பூவின் மகரந்தத்தை எடுத்து எறி யும் சாக்கில் அவனைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவனிடம் ஏதோ கிசுகிசுத்தாள். அவளைப் பார்த்தால் மணீந்திர நாத்துக்குப் பாலினின் நினைவு வந்துவிடுகிறது. அவள் தான் சிறுமி பாலின். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

ஓர் இரவில் பாலின் மிகுந்த உணர்ச்சியுடன் பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறத்தில் பளபளக்கும் கவுன் அணிந்திருந்தாள் அவள். சண்பகப்பூப் போன்ற மிருதுவான அவளுடைய விரல்கள் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டன! ஆசை அவளுக் குள்ளே கொந்தளித்து அவளைப் பைத்தியமாக்கியது. அன்றிரவு முழுவதும் அவளால் தூங்க முடியவில்லை. அன்றுதான் அவர் அவளிடம் சொல்லியிருந்தார் : "எனக்கு ஊர் திரும்ப வேண்டும், பாலின்! அப்பாவிடமிருந்து தந்தி வந்திருக்கிறது. அவருக்கு உடல் நிலை மிகவும் மோசமாயிருக்கிறதாம். இந்தத் தடவை உன்னுடன் இங்கிலாந்து போக என்னால் முடியாது போலிக்கிறது.'' அப்புறம், அப்புறம் என்ன? அப்புறம் என்ன நடந்ததென்று தெளிவாக நினைவுக்கு வரவில்லை. எல்லாம் ஒரே குழப்பம்.

அமலா இன்னும் நெருங்கிச் சோனாவின் காதுக்கருகே தன் வாயைக் கொணடுபோய், "யாரிடமும் சொல்லவில்லையே நீ ?" என்று கேட்டாள்.

சோனா அசடுபோல் பரக்கப் பரக்க விழித்தான். ஜசீம் யானையைக் கூட்டிக்கொண்டு திரும்பி வந்தான். ராப் சுந்தர் வீட்டை நோக்கிக் குதிரை களைத் திருப்பினான். அவர்கள் யானை, குதிரை சகிதம் ராஜா ஊர்வலம் வருவது போல் திரும்பி வந்தார்கள்.

"'உனக்கு ஒண்ணுமே தெரியல்லே, சோனா!"

அப்போது மணீந்திர நாத் ஒரு கவிதையைச் சொல்லிக்கொண் டிருந்தார்.

Still, Sill to hear her tender-taken breath, and to live everOr else swoon to death! Death, Death, Death

'டெத்', 'டெத்' என்று திருப்பித் திருப்பிச் சொன்னார் மணீந்திர நாத். அந்த ஒலிக்கேற்பக் குதிரைகளின் குளம்புகளும் ஒலித்தன, 'கிளப்', 'கிளப்' என்று. யானை எல்லாருக்கும் பின்னால் வந்தது. நாய் எல்லாருக் கும் முன் னால் நடந்தது. நடுவில் இர னடு வெள்ளைக் குதிரைகள், கோச சு வணடி. ராஜா ஊர்வலமாக அர ண மனைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். சோனாவுக்குத் தான் ஒரு கற்பனைக் கதையின் நாயகன் என்ற உணர்வு ஏற்பட்டது.

காலையிலிருந்தே * விசர்ஜனத்தைக் குறிக்க வாத்தியங்கள் ஒலித் தன. துர்க்கையின் முகத்தில் சோகம். அவள் மறுபடி இமாலயத்

* விசர்ஜன ம பூஜிக்கப்பட்ட தெய்வச் சிலைகளை ஆற்றில் கொண்டுபோய்

போடும் விழா -

44531:

துக்குத் திரும்பப் போகிறாள், வரவேற்புக் கீதங்கள் பாடிய நாட்கள் கழிந்துவிட்டன. இனிப் பாட ஒன்றுமில்லை.

இன்று எல்லாப் பொருள்களிலுமே ஒரு வேதனையின் சாயல் படிந்திருந்தது. வெயில் ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்தது. நிர்மலமான வானம். அதில் கறையோ அழுக்கோ இல்லை ; என்றாலும் எல்லாரும் எதையோ இழந்தது போல் உணர்ந்தார்கள். எல்லாரும் பூஜை மண்டபத்துக்கு முன்னால் வந்து அசையாமல் நின்றார்கள். பெரிய ஜமீன் தார் காலையிலிருந்தே மண்டபத்தில் ஒரு புலித்தோலின் மேல் உட்கார்ந்திருந்தார். சிவப்பு ஆடையும் நெற்றியில் சிவப்பு சந்தனத் திலகமும் அணிந்திருந்தார் அவர். ''அம்மா, தாயே, -புவனேஸ்வரி, புவனமோகினி எங்களைக் கண் திறந்து பாரு!" என்று

அவர் பிரார்த்தனை செய்தார்.

இரண்டாவது ஜமீந்தார் வழக்கம் போல் இந்தத் தடவையும் புல்லாங்குழல் இசைப்பார். தன்டோராப் போடும் நகேன் நேற்றே தெரிவித்ததோடு, பக்கத்து ஊர்களிலும் தண்டோராப் போட்டு இந்தச் செய்தியைத் தெரிவித்திருந்தான்.

கிராமங்களில இந்தச் செய்தி பரவியதும் குடியானப் பெண்களின் முகங்கள் மலர்ந்துவிட்டன. இன்று சீக்கிரம் சாப்பாட்டை முடித்துக் கொள்ள வேண்டும். சீதலஷா ஆற்றின் கரையில் ஊர்.

ஜமீன்தாரின் மாளிகையும் கரையிலேயேதான். குடியானப் பெண் கள் முந்தானையில் நாலணாக் காசை முடிந்துகொண்டு, வெற்றிலை போட்டு உதடுகளைச் சிவக்கச் செய்துகொண்டு, தலையில் முக்காடு அணிந்து தசரா பார்க்கப் போவார்கள். போகும் வழியில் ஆற்றங் கரையில் உட்கார்ந்து இரண்டாவது எஜமானனின் புல்லாங் குழலைக் கேட்பார்கள். சீக்கிரம் போகாவிட்டால் உட்கார இடம் கிடைக்காது.

ஆற்றங்கரையிலுள்ள மரங்களுக்கடியில் இரவு முதற்கொண்டே மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். இசைக் கச்சேரிக்காகப் பெரிய பந்தல் போட்டிருக்கும். ஆனால் குடியான மக்கள் பந்தலில் உட்கார முடியாது. இரண்டாவது எஜமானனை அருகில் சென்று பார்க்க ஆசைதான் குடியானப் பெண்களுக்கு. ஆனால் அவர்கள் பந்தலுக் கருகில் சென்றால் சிப்பாய்கள் தடிகளை வைத்துக்கொண்டு அவர்களை விரட்டிவிடுவார்கள்.

திருட்டுத்தனமாக எப்படியாவது பந்தலில் போய் உட்கார்ந்து விடப் பெண் களுக்கு ஆசை. ஆனால் அவர்களுடைய கணவன் மார்கள் பயங்கொள்ளிகள். மனைவிமார்களைப் பந்தலுக்குள் நுழைய விடமாட்டார்கள். சவுக்கு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் குழலிசையைக் கேட்பார்கள். எல்லாக் கிராமங்களின்

4461835

பிரதிமைகளும் ஆற்றில் விசர்ஜனமாகும் வரை இசை தொடர்ந்து நடக்கும். எவ்வளவோ ராகங்கள் இசைக்கப்படும். ஒவ்வொன்றிலும் வேதனை நிறைந்திருக்கும். அவை கேட்பவர்களின் உள்ளங்களைத் தொட்டு அவர்களையும் சோகத்தில் ஆழ்த்தும்.

காலையிலிருந்தே பல கிராமங்களிலிருந்து மக்கள் வரத் தொடங் கினர். ஜமீன் உத்தியோகஸ்தர்களுக்கு நிறைய வேலை, இசைக் குழு உட்காருவதற்காக மேடை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையிலும் ஒரு மேடை அமைக்கப்பட்டது, அங்கே கிளாரினெட் வாத்தியங்கள் இசைக்கப்படும். சீதலக்ஷாவின் மறுகரையில் சூரியன் சாய்ந்ததுமே குழலிசை தொடங்கிவிடும், இரண்டாவது எஐமானனின் இரண்டு சீடர்கள் கல்கத்தாவிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களும் கூடவே

இசைப்பார்கள்.

காலேக் எங்கே? அவனுக்கு உடல்நிலை சரியில்லை. ஆபீஸ் கட்டிடத்தைத் தாண்டினால் குதிரை லாயம். அதில் வெள்ளை நிறக் குதிரைகள், கறுப்புக் குதிரைகள். லாயத்தின் ஓர் ஓரத்தில் காலேக்கின் சிறிய குடிசை. அங்கு வெளிச்சமே நுழையாது. காற்று வராது. காலேக் பூமியானின் உடம்பு உலர்ந்து வற்றிக் கிடந்தது ; கட்டை மாதிரி கிடந்தான். இன்று சூரியாஸ்தமன சமயத்தில் அவன் இறந்துவிடுவானென்று தோன்றியது. அவனுக்குக் கண் தெரிய வில்லை ; மூச்சுவிடக் கஷ்டமாயிருந்தது ; கையும் காலும் கன ததன.

தசமியன று அவனும் இரண்டாவது எஜமானனுடன் சேர்ந்து உட்கார்ந்துகொண்டு குழல் இசைப்பது வழக்கம். இன்று அவன் தன் விரல்களை அசைத்துப் பார் ததான். ஊஹும், விரல்கள் அசைய மறுத்தன. கல்போல கனமாக விறைததிருந்தன அவை.

ஒரு தடவை இப்ராகிமும் இரண்டு தடவைகள் பூபேந்திர நாத்தும் வந்து அவனைப் பார்த்துவிட்டுப் போனார்கள். அவன் மருந்தும் சாப்பிடவில்லை, உணவும் உட்கொள்ளவில்லை, சூரியன் அஸ்த மிக்கும் சமயத்தில் புல்லாங்குழலிலிருந்து வ நம் ஒலியலைகளுடன் கலந்து அவன் இந்த உலகத்திலிருந்து விடை பெற்றுக்கொளளப் போகிறான் என்று அவனுக்குத் தெரியும். இந்தக் கஷ்ட காலத்தில், கஷ்டகாலம் ஏன், நல்ல காலந்தான் - அவன் தயாராகிக்கொண் டிருந்தான், யாருடைய காலடியில் உட்கார்ந்து இனி எப்போதும் குழலிசைக்கப் போகிறானோ, அவரிடம் செல்ல.

இப்படி ஒரு மனிதன் மரண ததுக்குத் தயாராகிக்கொண் டிருந்த போது வேறொருவர் ஒரு பழைய கால ஓலைச் சுவடியை வைத்துக்கொண்டு சண்டி மகா தமியம் பாராயணம் செய்து கொண்டிருந்தார். 'ஜயம் தே ஹீ! யசோதா தேஹீ !'

இந்த மனிதர் மகாளய அமாவாசையன்று சண டீ மகாத்மியம்

44711011

பாராயணம் செய்யாமல் விஜயதசமியன்று - விசர்ஜனத்தன்று செய்வார். அவர் புலித்தோலின் மேல் பத்மாசனம் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார், அவருக்கு முன்னால் துர்க்கையின் சிலை. விசர்ஜனத்தைக் கொண்டாட வாத்தியங்கள் ஒலித்தன.

அவர் உரத்த குரலில் தேவியை இறைஞ்சினார்: 'ஹே, ஜகதம்பா! ஹே ஈஸ்வரி ! என் பாவங்களை மன்னிச்சுடு. தாயே ! நீ இன்னிக்குப் போயிடுவியே, அம்மா !' என்று சொல்லிடக் கை கூப்பிக்கொண்டு சிறு குழந்தையைப் போல் அழுதார். அழுது கொண்டே சண்டீ மகாத்மியத்தில் சும்ப நிசும்ப வதம் முதலிய வற்றைப் பாராயணம் செய்தார். தேவியின் சரீரத்திலிருந்து தேஜஸ் வெளிப்படுவது போல் உணர்ந்தார். அவரது உடல் சிலிர்த்தது. பாராயணம் செய்து கொண்டே அவர் தம்மையே கேட்டுக்கொண் டார், 'என்னப்பா பயந்துட்டியா?' என்று. அவர் தேவியை நோக்கிச் சொன்னார்: ''அம்மா, நீ இப்போ மது அருந்து! சரி இப்போ உன் சரீரத்திலே சக்தி பிறந்துடுத்து, உன்னோட மூச்சுக் காததுலே ஆயிரக் கணக்கான தேவர்கள் பிறக்கிறாங்க! ஆனா மகிஷாசுரன் ....? அவங்களை யெல்லாம் ஒரு முகூர்த்தத்தில் அழிச்சுட்டியே! தாயே, உனக்கு இப்படியா கஷ்டம் வர ணும்? நீ அவனை உன்னோட மாயா பாசத்தாலே கட்டிவிடக் கூடாதா?"

இவ்வாறு உணர்ச்சியுடன் பேசிக்கொண்டே போனார் அவர். பல பக்தர்கள் அவருக்கு முன் உட்கார்ந்து கேட்டுக்கொண் டிருந்தார் கள், மண்டபத்தின் ஒரு மூலையில் தூண் மறைவில் நின்றுகொ னடு ஒரு சிறு பையன் ஆர்வத்துடன் கதை கேட்பதைக் கவனித்தார் அவர்.

அவர் அமலா கமலாவின் தாத்தா. இந்தப் பெரிய குடும்பத்தின் தலைவர் அவர், யாரும் அவருடைய வார்த்தையை மீறமுடியாது. அப்படிப்பட்டவர் தேவியின் முன்னிலையில் ஒரு சிறு குழந்தை யாக மாறிவிடுவார். சிறு குழந்தை போல அழுவார். தேவியின் அருளை வேண டி, மன்னிப்பை வேண்டிக் கெஞ்சுவார். சணடீ மகாத்மியத்தைச் சொல்லி வரும்போது தேவி கர்ஜிப்பதுபோல் அவரும் கர்ஜிப்பார். அந்தக் கர்ஜனையைக் கேட்டுச் சிரிப்பு வந்து விட்டது சோனாவுக்கு. "யாரது ?'' என்று கர்ஜித்தார் பெரியவர், சோனா ஓடிப் போய் விடலாமா என்று நினைத்தான். பெரியவருடைய சிவந்த க ன கள், கழுகின் அலகு போல் கூர்மையான நாசி, நெற்றியி லிருந்த சிவப்புச் சந்தனத் திலகம், காபாலிகனைப் போன்ற நடுங்க வைக்கும் முகம் - இவை அவனை ஸ்தம்பித்து நிற்கச் செய்து விட்டன. ஆனால், பெரியவரின் முகத்தில் கொஞ்சங் கொஞ்சமாக எப்படிப்பட்ட மாறுதல் ! தன் கடுமை மறைந்து அதில் பரிவு,

448தோன்றியது. ''அடே நீயா ! தேவி மகிமையைக் கேட்கப் பிடிக்கிறதா உனக்கு?"

சோனா தலையை ஆட்டினான். "அப்படியானா இரு." சோனா நின்றுகொண்டே கதையைத் தொடர்ந்து கேட்டான். சற்று நேரத்துக்குப் பிறகு தன்னைக் கமலா பின்னாலிருந்து கூப்பிடுவது தெரிந்தது. ''சோனா, நீ இங்கே என்ன செய்யறே?" என்று கேட்டாள். '

தான் சண்டீ மாகாத்மியம் கேட்பதாக அவன் சொல்லவில்லை. அந்தக் காலத்து ரிஷிகள் தாங்கள் அறிந்த விஷயங்களையும் சொந்தக் கற்பனைகளையும் ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அவையெல்லாம் இப்போது தேவி மகிமையாகி விட்டன. இதெல்லாம் அவனுக்கு ஈசம் சொல்லும் கதை போலத் தோன்றியது. 'தண்ணீருக்குள்ளே ஒரு வெள்ளி மீன் இருக்கு : அதோட வாய்க்குள்ளே சூரியன் இருப்பான், அந்த மீன் தான் ஜாலாலி யோ ? அந்த மீன் சூரியனை வாயிலே கவ்விக்கிண்டு ஏரியைத் தாண்டி, ஆத்தைத் தா ன டிச் சமுத்திரத்துக்குள்ளே முழுகிடும். காலம்பர அது சூரியனைக் கிழக்குத் திசையிலே தொங்க விட்டுட்டு மறுபடியும் தண்ணிக்குள்ளே முழுகிடும். சமுத்திரத்துக்குச் சமுத்திரம் திரியும் அந்த மீன.'

'ரிஷிகள் எழுதியிருக்கிற கட்டுக்கதைகளைக் கேட்டுக்கிட்டிருக் கேன். எங்க Fஈசம் இதை விட நல்ல நல்ல கதையெல்லாம் சொல்லு வானே!' என்று சொல்லத் தோனறியது அவனுக்கு. ஈசம் சொல்லும் கதைகளையெல்லாம் நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளலாமே என்று அவன் நினைத்தான். இப்போது தான் கேட்பது சண் டீ மகாத் மியமா, பழைய காலத்துக் கட்டுக் கதையா என்று தெளிவாகத் தெரியவில்லை அவனுக்கு. ஆகையால் அவன கமலாவுக்குப் பதில் சொலலவி லை.

அவன் பதில் சொல்லாமலிருப்பதைப் பார்த்துவிட்டு, "யானை அஞ்சு மணிக்கு வரும். நாம் அதில் ஏறிக்கிண்டு தசரா பார்க்கப் போ கலாம, நீயும் எங்களோடே வரணும்" என்றாள் கமலா.

சோனா அப்போது ஈசம் சொல்லிய கதைகளை நினைத்துக்கொண் டிருந்தான், ஜாலாலியின் உடல் ஏரியிலிருந்து எடுத்து வரப்பட்ட இரவே அவன் மனக்கண் பார்த்துக்கொண் டிருந்தது, பெளர்ணமி இரவு. குளிரில் பைத்தியக்காரப் பெரியப்பாவின் முகம் வெளுத்துப் போயிருந்தது நிலாவைப் போலவே இருந்தது அதன் நிறமும், இவ்வித நினைவுகளில் ஆழ்ந்திருந்ததால் கமலா சொல்லியது எதுவும் அவன் காதில் விழவில்லை.

449''என்ன, நான் சொல்றது காதிலே விழுந்ததா ?" ""என்ன சொன்னே ?'' "யானை மேலே ஏறிக்கிண்டு தசரா பார்க்கப் போறோம். நீயும் எங்களோட வரியா ?'

''வரேன்.'' "கொஞ்சம் முன்னாலேயே நீ எங்க ரூமுக்கு வந்துடு. உனக்குப் பவுடர் போட்டு அலங்காரம் பண்ணி விடறோம்."

சோனா பதில் பேசாமல் நடந்தான். "என்ன, மறக்கமாட்டியே?"

அவன் மறக்கமாட்டேன் என்று சொல்வதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். "வேற யார் யாரு வரப்போறாங்க ?" என்று பிறகு கேட்டான்,

"நான், அக்கா, ஸோனா அக்கா, ரமா, பாச்சு." "வேறே ஒருத்தரும் வரல்லியா ?" ''வேறே யார் வராங்களோ. தெரியாது. நீ முன்னாலே வந்துடு பவுடர் போட்டுக்க.''

சோனா இதுவரை முகத்துக்குப் பவுடர் போட்டுக் கொண்ட தில்லை. அவன் ஆண்பிள்ளை, ஆண் பிள்ளைகள் பவுடர் போட்டுக் கொள்ளும் வழக்கம் அந்த வீட்டில் இல்லை. சோனாவின் அம்மா வும் பெரியம்மாவும் எப்போதாவது தான் முகத்தில் பவுடர் தடவிக் கொள்வார்கள். ஆகையால் பவுடர் தடவிக் கொள்வதை அவன் பார்த்ததேயில்லை என்று சொல்லலாம். தூரத்தில் எங்காவது உறவினர் வீட்டுக்குப் போவதாயிருந்தால் குளிர்காலத்தில சோனா வின் முகத்தில் ஸ்நோ தடவி விட்டிருக்கிறாள், அவனுடைய அம்மா. ஆனால் இப்போது குளிர்காலம் வருவதற்கு முன்பே அவன் முகத்தில் பவுடர் தடவிக் கொள்ளப் போகிறான். அதனால் அவன் முகம் இன்னும் அழகாக ஆகப்போகிறது - இதை நினைக்கும்போதே அவனுக்கு வெட்கம் வந்துவிட்டது.

"பெரியப்பா வரக் கூடாதா?'' ''

ஊஹும் !" “அவர் வரல்லேன்னா, நானும் வரல்லே !' “நீ என்ன இப்படி இருக்கே, சோனா ? சின்னவங்கதான் யானை மேலே போவாங்க, பெரியவங்க நடந்து போவாங்க. பாட்டி உன்னை எங்களோடே கூட்டிக்கிண்டு போகச் சொல்லியிருக்கா."

இவ்வாறு சொல்லிவிட்டு அவள் வேகமாக மாடிப்படிகளில் ஏறிப் போய்விட்டாள். மேலே அமலா நின்றுகொண் டிருந்தாள். ""சோனாவைப் பார்த்தியா?" என்று அவள் கமலாவைக் கேட்டாள்.

"உம்."

450"என்ன சொன்னான்?'' ''வரேன்னு சொன்னான்." ''சீக்கிரமே வந்துடு. பவுடர் போட்டு விடறோம்னு சொன்னியா ?" "எல்லாம் சொல்லிட்டேன். இருந்தாலும் நீ ..'' என்று மேலும் ஏதோ சொல்ல வந்த கமலா தன் தந்தை அந்தப் பக்கம் வருவதைக் கண்டு அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.

கிராமத்தில் தங்கியிருக்கும் இந்தச் சில நாட்களுக்கு உடையிலும் நடத்தையிலும் அவர் முழுக்க முழுக்க வங்காளியாகவே இருப்பார். கல்கத்தாவுக்குத் திரும்பிப் போகிற அன்று மறுபடியும் துறையாக மாறிவிடுவார். வங்காளியில் பேசக்கூட மாட்டார். அப்போதான் அவர் தங்களுக்கு மிகவும் நெருங்கியவராகக் குழந்தைகளுக்குத் தோன்றும். அவர்கள் அவருடன் தாராளமாகப் பேசிப் பழகு வார்கள்.

தந்தையைப் பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிடப் பார்த் தார் கள். இந்த நேரத்தில் அவர்கள் பூஜை மண்டபத்துக்கு வந்தது சரியில்லை. அவர்களைப் பார்த்தால் அப்பா அதட்டுவார். ஆகையால் அவர்கள் சோனாவைத் தேடிக்கொண்டு ஆபீஸ் கட்டிடத்துக்கு வரும்போதெல்லாம் திருட்டுத்தனமாக, ரகசியமாக வந்துவிட்டுப் போனார்கள், அந்தப்புரத்தில் உள்ள வேலைக்காரி களுக்குக் கூடத் தெரியாமல். கண்ணாமூச்சி விளையாட்டுப் போலத் தான். சோனாவைக் காணாவிட்டால் ஏமாற்றத்துடன் திரும்பி வருவார் கள் அவர்கள்.

அவர்களுடைய தந்தை வராந்தாவைக் கடந்து போய்க்கொண் டிருந்தார். அவர் தம் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டு விடுவார். அவர் அறையில் இல்லாத சமயங்களில் அது பூட்டி யிருக்கும். அதில் பெரிய பெரிய அலமாரிகள், கண்ணாடி ஜன்னல் கள், அறைக் கதவுகளில் பல விசித்திர வேலைப்பாடுகள். கருங்காலி மரத்தால் செய்த பழங்காலக் கட்டில். எவ்வளவோ காலமாகக் காலியாகக் கிடந்தது, அந்தக் கட்டில். அவர் ஊருக்கு வந்தால் கட்டிலில் படுத்துக்கொள்ளாமல் வேறொரு பலகையில் படுத்துக் கொள்வார்.

வலப்பக்கத்து அறையில் பில்லியார்டு மேஜை. ஓய்வு நேரத்தில் அவர் தாம் மட்டும் சிவப்பு, நீலப் பந்துகளை வைத்துக்கொண்டு அதில் விளையாடுவார். சுவரில் கோர்ட் உடையில் அவருடைய போட்டோம். அவர் கவர்னருடன் விருந்து சாப்பிடும் போட்டோ. அவர் லண்டனில் லிங்கன் ஹாலில் படித்துக்கொண் டிருந்தபோது எடுத்த போட்டோ; வெல்ஸைச் சேர்ந்த எதோ ஒரு கிராமத்தில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ.

451அமலா கமலாவின் மாமா வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு கோட்டை இருக்கிறது. அந்தக் கோட்டையின் படமும் அந்த அறையில் இருந்தது. மாணவனாக இருந்தபோது எடுத்த போட்டோ வில் உள்ள அவருடைய களையான முகத்தைப் பார்க்கப் பெண்கள் இருவரும் திருட்டுத்தனமாக அந்த அறைக்குள் நுழை வார்கள். தந்தையைப் பார்த்துவிட்டால் ஓட்டம் பிடிப்பார்கள், சோனாவுக்கு அந்த அறையைக் காட்டுவதாகச் சொல்லியிருந்தாள் அமலா. ஆனால் எப்படிக் காட்டுவது ? சோனாவுக்குப் புத்தி கிடை யாது ; ரகசியமாகக் கூட்டிக்கொண்டு வந்து காட்டினால் பேசாமல் பார்த்துவிட்டுப் போகமாட்டான். அவர்கள் பேசுவதைக் கேட்டுச் சிரிப்பான். 'இது என்ன, அது என்ன ?' என்று கேட்டுத் தொண தொணப்பான். இந்த நீல, சிவப்புப் பந்துகள் எதற்கு ? எனக்கு ரெண்டு பந்து கொடு!' என்றெல்லாம் கேட்பான்.

இந்த மாதிரி பேசிக்கொண்டே தன்னை மறந்துவிடுவான். இப்படியிருந்தால் அகப்பட்டுக் கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை. சோனாவை வைத்துக்கொண்டு ஒரு காரியம் செய்ய முடி யாது. ஓடத் தெரியாது அவனுக்கு ; வெகு சுலபமாக அகப்பட்டுக் கொண்டுவிடுவான்.

பூபேந்திர நாத்திடம், "நான் அமலா கமலாவோடே யானை மேலே ஏறிக்கிண்டு தசரா பார்க்கப் போறேன்" என்று கூறினான் சோனா.

தசமியன்று மாலை யானை வரும். ஜசீம் ஜரிகை வைத்துத் தைத்த உடை அணிந்திருப்பான். தலையில் ஜரிகைத் தொப்பி. ஜமீந்தார் வீட்டுக் குழந்தைகள் எல்லாரும் தசரா பார்க்கப் போவார்கள். யானையின் தும்பிக் கையில் வெள்ளைச் சந்தனத்தால் பூக்கள் வரைந்திருக்கும். நெற்றியிலும் உடலிலும் வெற்றிலை, பலவிதக் கொடிகள், நெற்கதிர், லஷ்மியின் காலடிச் சின்னம் இவை தீட்டப் பட்டிருக்கும். அதன் கழுத்தில் கடப்ப மலர் மாலை.

அமலா கமலாவின் அப்பா புல்லாங்குழல் இசைக்க ஆரம்பித்த தும் யானை லாயத்திலிருந்து புறப்படும். நேரே அந்தப்புரத்து வாயிலுக்கு வரும். அப்போது வீட்டுப் பெண்கள் துர்க்கையின் சிலையிடம் பிரார்த்தனை செய்வார்கள். தேவியின் காலடியில் சிந்தூரத் தைக் கொட்டிவிட்டுப் பிறகு அதை எடுத்துச் சிமிழ்களில் போட்டு வைத்துக்கொள்வார்கள். இந்தச் சிந்தூரத்தை வருஷம் முழுதும் நெற்றியிலும் வகிட்டிலும் இட்டுக்கொள்வார்கள்,

அமலா கமலாவின் அப்பாவுக்காக அவர்களுடைய தந்தை ஒரு தங்கச் சிமிழில் சிந்தூரம் எடுத்துக் கொண்டு போவார், கல்கத்தா வுக்கு. அமலா கமலாவின் தாய் சிந்தூரம் அணிவதில்லை. அவள் கவுன் அணிந்துகொள்வாள். மாதாகோவிலுக்குப் போவாள்.

452இருந்தாலும் அவள் இந்தச் சிந்தூரத்தை இட்டுக்கொள்ள வேண்டும் மென்று வீட்டுப் பெண்களுக்கு - முக்கியமாக அமலா கமலாவின் பாட்டிக்கு -ஆசை. பாட்டி தேவியின் காலடியிலிருந்து மற்ற எல்லா நாட்டுப் பெண்களுக்காகவும் சிந்தூரம் எடுத்து வைப்பது போல் தன் இரண்டாவது நாட்டுப் பெண்ணுக்காகவும் எடுத்து வைப்பாள். தன் பிள்ளையிடம் அதைக் கொடுக்கும்போது ஒரு தடவையாவது அவருடைய மனைவி அதை இட்டுக்கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துவாள். அவர் மெல்லச் சிரிப்பார். அப்புறம் இந்த யானைக் காகவும் சிந்தூரம் எடுத்து வைப்பார்கள். யானை இந்த வீட்டின் லஷ்மி, சின்ன எஜமானியம்மாள், தசமியன்று தன்கையால் யானைக்குச் சிந்தூரம் இட்டுவிடுவாள். அதன் கழுத்தில் ஜரிகை மாலை போட்டுவிடுவாள். அப்புறம் வாத்தியங்கள் இசைக்கத் தொடங்கும். மத்தள இசை, விசர்ஜனத்தைக் குறிக்கும் வாத்திய ஒலி. குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் யாவரும் தங்களை

அலங்கரித்துக்கொண்டு யானையின் மேல் உட்காருவார்கள்.

நதிப் படுகையில் நாணற்காட்டுக்குப் பின் பொழுது சாயும் ஆகாயத்தில் தசமி சந்திரன், மத்தளமும், மிருதங்கமும் ஒலிக்கும் நதியில் தேவியின் சிலைகளைத் தாங்கிய படகுகள் வரிசை வரிசையாகப் போகும். வாத்தியங்களின் ஒலியும் வெளிச்சமும் இருளும் கண்ணாமூச்சி விளையாட்டுமாக எங்கும் ஒரே கோலா கலம். ஆகாய வானங்கள் வெடிக்கும், பல நிற ஒளிகள் ஆகாயத் துக் குச் சாயம் தீட்டும். விட்டுவிட்டுக் கேட்கும் குழலிசை அதன் சோகத் தொனி உலகமெங்கும் ஆட்சி செலுத்தும். இரண்டாவது இந்த இசை மூலம் தன் மனைவியின் காதலுக்காகத் தாம் ஏங்கு வதைக் குறிப்பிடுகிறாரோ ?

வழக்கம்போல் அன்றும் பூபேந்திர நாத் அதிகாலையிலேயே ஆற்றில் ஸ தானம் செய்துவிட்டு வந்தார். தினம்போல் மயில் கூண்டு, புலிக்கூண்டு, மான்கள் இருக்குமிடம் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தார். இந்த இடங்களெல்லாம் சுத்தமாக இருக்கின்றனவா என்று பார்ப்பது அவருடைய வேலையல்ல, இருந்தாலும் இந்த மாளிகையில் வளர்க்கப்படும் எல்லாப் பிராணி களின் சுகதுக்கங்களையும் கவனித்து அவற்றுக்குத் தேவையானதைச் செய்வார் அவர்.

இன்று தேவி இமாலயத்துக்குத் திரும்பிச் செல்லப் போகிறாள், ஒவ்வொரு தடவையும் ஏற்படுவது போல் இந்தத் தடவையும் காலை முதல் ஒரு வேதனை அவரை ஆட்கொண்டிருந்தது. அவர் வழக்கம் போல் மண்டபத்துக்குப் போய் மகாதேவனின் சிலை

453மேலும் எருதின் சங்கிலியை இழுத்து இழுத்து நூறுதடவை மணியடித்தார்.

காலேக்குக்கு உடல் நிலை சரியில்லை. குலீன்பாடாவிலிருந்து டாக்டர் வந்து பார்த்துவிட்டுப் போனார். பூஜையில் கலந்து கொண்ட புரோகிதர் முதலான பலர் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு போவதற்காக ஆபீஸ் கட்டிடத்தில் காத்துக்கொண் டிருந்தார்கள். முதல் நாள் மாலையில் வெட்டிய எருமையை எடுத்துச் சென்றவர்கள் இன்று புதுத் துணி வாங்கிக்கொள்வதற்காக வந்தார் கள், ஜமீந்தார் நிலத்தைக் குடியானவர்களிடையே வெள்ளாமைக் காகப் பிரித்துக் கொடுக்கும் சமயத்தில் சிலர் பூஜைக்கு ஆட்டுக் குட்டி, எருமை, பால், வாழை, தானியம் இவ்வாறு வெவ்வேறு பொருள்களைக் கொடுக்க வேண்டுமென்ற நிபந்தனை செய்யப் பட்டிருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் அதன்படி சாமான்களைக் கொடுத்துவிட்டார்களா என்று பார்ப்பதும், கொடுக்காதவனைக் கூப்பிட்டு விசாரிப்பதும் பூபேந்திரநாத்தின் பொறுப்பு.

இந்த வேலைகளைக் கவனித்து முடிப்பதற்குள் நண்பகல் கழிந்து விட்டது. அவருக்கு இன்று ஒன்றும் பிடிக்கவில்லை. அவர் வருத்தத் துடன் வெகு நேரம் மெளனமாகத் தேவியின் சிலையருகே நின்றார். தேவியின் காலடியிலிருந்து அண்ணிக்காகவும் தன் மாமிக்காகவும் சிந்தாரம் எடுத்து வைத்துக்கொண்டார். மறுபடியும் இந்த வீடு வெறிச்சிட்டுப் போய்விடும். இந்தச் சில நாட்கள் எவ்வளவு கோலாகலமாக இருந்தது இந்த மாளிகை ! இன்று யாருக்கும்

அவசரம் இல்லை. மக்கள் ஏரிகரையில் திரண்டிருந்தார்கள்.

மாலையானதுமே ஜசீம் யானையின் முதுகிலேறி உட்கார்ந்து கொண்டான். அப்போது இரண்டாவது பாபு பட்டு வேஷ்டியும் பட்டுச் சட்டையும் அணிந்துகொண்டார். விரலில் வைர மோதிரம். கறுப்பு நிறப் பூட்ஸ். அவர் தம் அறையிலிருந்து வெளியே வந்து மெதுவாக நடந்தார், அவருக்கு முன்னும் பின்னும் ஜமீன் உத்தியோ கஸ்தர்கள். எல்லாரிடமும் அத்தர் மணம் வீசியது. எல்லாருக்கும் முன்னால் பூபேந்திரநாத். அவருக்குப் பிறகு ரஷித் பாபு. எல்லாருக்கும் கடைசியில் பாபுவின் சொந்த வேலையாள் ஹரிபத்.

அவர்கள் ஊர்வலம் போலத் தெற்கு வாயிலை நோக்கிப் போனார்கள். பூஜை மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் இரண்டாவது பாபு தேவிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பிறகு தேவியின் காலடியிலிருந்த வில்வத்தைக் கை நிறைய எடுத்துக்கொண்டார். பெரிய பெரிய தூண்களுக்குப் பின்னால் அவர்களுடைய உருவங்கள் மறைந்துவிட்டன. இப்போது தேவி தன்னைப் பார்க்கவில்லை, அவர்களைத்தான் பார்த்துக்கொண் டிருக்

54கிறாள் என்று சோனாவுக்குத் தோன்றியது. தேவியின் முகத்தில் என்ன நடுக்கம்? முகத்தில் பளபளப்பது வேர்வைத் துளிகளா? அவன் தேவிக்கு அருகில் போனான், தேவி நிஜமாகவே அழுகிறாளா என்று

பார்க்க.

அவன் முதலில் தேவியின் சிம்ம வாகனத்தைத் தொட்டுப் பார்த் தான். எல்லாரும் அப்போது ஏரிகரையில் தங்களுக்கு இடம் பிடித்துக்கொண் டிருந்ததால் பூஜைமண்டபத்தில் யாரும் இல்லை. இந்தச் சமயத்தில் - நல்ல வேளையில் - தேவியையும், அசுரனையும், கணேசரின் காலடியில் ஒரு செடியின் மேல் உட்கார்ந்திருக்கும் சின்னப் பெருச்சாளியையும் தொட்டுப் பார்க்கலாம். அவன் சிங்கத்தின் வாய்க்குள் கையை விட்டான். அசுரனின் நெஞ்சி லிருந்து இவ்வளவு நாட்களாக வழிந்துகொண் டிருந்த ரத்தத்தைத் தொட்டுப் பார்த்தான். அது காய்ந்துபோயிருந்தது. சிங்கம் அசுரனுடைய உடலிலிருந்து தசையைக் குதறியெடுத்திருந்தது. ஏனோ அவனுக்கு அசுரனிடம் பரிவு ஏற்பட்டது. அவன் அசுரனின் சுருட்டை மயிரை ஆதரவுடன் கையால் தடவிக் கொடுத்தான். "இதோ பார் வேடிக்கையை!" என்று சொல்லிக்கொண்டே அவன் சிங்கத்தின் கண்ணைக் கிள்ளிவிட்டான். சிங்கத்தின் கண்ணில் பூசியிருந்த வர்ணம் நகத்தில் வந்துவிட்டது. தேவியின் மகிமை காரணமாகச் சிங்கத்துக்குச் சோனாலிடம் பயம் ஏற்படவில்லை. அவன் ஓரக்கண்ணால் தேவியைப் பார்த்தான். தேவியின் கண்களி லிருந்து நீர் சொட்டியது.

"உனக்கு இங்கேயிருந்து போக அவ்வளவு வருத்தமாயிருந்தால் ஏன் போகணும்? இங்கேயே இருந்துடலாமே!' என்று தேவியிடம் கூற விரும்பினான். ஆனால் கூடவே ஒரு பயம், அருகில் போனால் தேவிக்குக் கோபம் வந்துவிடுமோ என்று. ஆனால் தேவியின் கண் களில் பரிவு தெரிந்தது.

'உனக்கு ஏன் இந்த வாகனம் ? நான் இதோட மூக்கிலே குச்சியை நுழைச்சுக் குறுகுறுப்பு உண்டாக்கறேன், பாரு !' அவன் ஒரு குச்சியை எடுத்துச் சிங்கத்தின் மூக்குக்கருகில் கொண்டு போனதும்... ஒரு தும்மல்! பக்கத்தில் யாரும் இல்லை. தும்மியது யார் ? நிஜமாகவே சிங்கந்தான் தும்மியதா? அவன் பயந்து போய் அங்கிருந்து ஓட முயன்றபோது வாயிற்படியில் பைத்தியக்காரப் பெரியப்பா நிற் பதைப் பார்த்தான். அவர் தான் தும்மியிருப்பார் . பைத்தியக்காரர் களுக்கு ஜலதோஷம் ஏற்படுவதில்லை. இப்போது பெரியப்பா தும்மியதைப் பார்த்து அவர் குணமாகிக்கொண்டு வருகிறாரென்று நினைத்தான் சோனா. அவன் அவருடைய கையைப் பிடித்துக்

455கொண்டு, ''நான் யானை மேலே ஏறி ஆத்தங்கரைக்குப் போகப் போறேன்" என்றான்.

ஏரிக்கரையில் அப்போது குழல் இசைத்துக் கொண்டிருந்தார், இரண்டாவது பாபு. நேரமாகிவிட்டது என்று சோனாவுக்குத் தோன்றவே அவன் பெரியப்பாவை விட்டுவிட்டு ஆபீஸ் கட்டிடத் துக்கு வேகமாக ஓடினான். சீக்கிரம் உடை மாற்றிக்கொள்ள வேண்டும்!

சிலைகளை விசர்ஜனத்துக்காகத் தூக்கிக்கொண்டு போக வந்தவர் கள் பூஜை மண்டபத்தில் துண்டுகளை இடுப்பில் கட்டிக்கொண்டார் கள். பிறகு சிலைகளைத் தோளில் வைத்துத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். ராம்சுந்தர் குடததைத் தலைக்குமேல் வைத்துக் கொண்டு சென்றான். சிலைகளை ஆற்றுப்படுகையில் இறக்கித தூப தீபாராதனைகள் செய்வார்கள். சோனாவின் அண் ணாக்கள் அந்த ஊர்வலத்தில் நடனமாடிக கொண்டே செல்வார்கள். அவனால் அவர்களோடு போக முடியாது. அவன் யானை மேல் போகடம் போகிறான். அமலா கமலா அவனுக்காகக் காத்திருப்பார் கள.

பூபேந்திர நாத சோனாவுக்கு உடைகளை மாற்றிவிட்டார் ; தலை யையும் வாரிவிட்டார். அவனுக்கு ஒரே அவசரம். எல்லோரும் போய்க்கொண் டிருந்தார் கள். அவனுக்கு நேரமாகிவிட்டது.

இப்போது வெயில் போய்விட்டது. ஆயிரக் கணக்கான மக்கள் சவுக்கு மரங்களுக்கடியில் உட்கார்ந்துகொண்டு ஆர்வத்துடன் குழலிசையை அநுபவித்துக்கொண் டிருந்தார்கள். எவ்வளவு பேர் அங்கே கூடி யிருக்கிறார்கள் என்று எண்ணித் தொலையாது.

குதிரை லாயத்துக்குப் பக்கத்தில் இருக்கும் மன தனின் அந்தியக் காலம் நெருங்கிவிட்டது. அவன் தன்னிரு கைகளையும் ஒன்று சேர்த்துத் தன் நெஞ்சின்மேல் வைத்துக்கொண்டு மெய்ம்மறந்து குழலிசையில் லயித்திருந்தான். மல்லாந்து படுத்திருந்தான் அவன். முன்பு தெருக்களிலும் சந்தைகளிலும் குழல் வாசித்தபோது ஆடுவதுபோல் இப்போதும் உடம்பை அசைத்தான் கடைசித் தடவையாக, மானசீகமாக இரண்டாவது பாபுவுடன் குழல் இசைத்தான் அவன்.

ஆஸ்வின் மாதத்தின் இந்த மாலை நேரத்தில் அவன் குழலிசைக்கா விட்டால் வேறு யார் இசைப்பார்கள்? அவன் உண்மையிலேயே குழலிசைக்கும் நினைவில் கைகளை உயர்த்தினான். அதன்பின் அந்தக் கை கள் வலுவிழந்து அவனது நெஞ்சின் மேல் விழுந்தன. அவனது கண் கள் மூடியிருந்தன. அவனுக்கு உலகத்தில் சொந்தமானது எதுவும் இல்லை - இரண்டு குதிரைகள், ஒரு கோச்சு வண்டி, ஒரு புல்லாங்குழல். இவற்றைத் தவிர, இரண்டாவது பாபு இல்லாத

456சமயங்களில் அவன் நள்ளிரவில் யாருமறியாமல் ஆற்றுப்படுகை யில் தன்னந்தனியாக உட்கார்ந்துகொண்டு குழல் இசைப்பதுண்டு. அப்போது வெவ்வேறு ராகங்கள் இசைப்பான். அந்தக் கானத்தில் தன்னை மறந்துவிடுவான் அவன். அவ்வாறே இனறும் அவன் குழலிசையில் லயித்துப் போய் விட்டான். ஏரிகரை, சீதாலக்ஷாவின் படுகை, மைதானம் எல்லாமே அந்த இசையொலி யில் கதறின. அவன் கண்ணை மூடிக்கொண்டு, இரண்டாவது பாபுவின் குழலிசையைக் கேட்டவாறே, 'அல்லா ஒருவரே! அவருக்கு ஈடு இணை கிடையாது. இணை கிடையாது, கிடையாது!' என்று முனகினான். அவனால் மூச்சுவிட முடியவில்லை. பொறுக்கவியலாத ஒரு வேதனை அவனை உள்ளுற வாட்டியது. அவனுடைய கைகள் தொய்ந்து போய்க் கீழே விழுந்தன.

ஆஸ்வின் மாதத்தின் ஒரு மாலை நேரம் இவ்விதம் கழிந்து கொண்டிருந்தது, யாரும் கவனியாமலே.

சோனா வேகமாக ஓடினான். யானை அந்தப்புர வாசலுக்கு வந்தி ருக்கும். ஜசீம் யானையின் மேல் உட்கார்ந்துகொண்டு அவனுக்காகக் காத்திருப்பான். எல்லாரும் காத்திருப்பார்கள். யானை அவனைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும். குழலிசை கேட்டது. ஏரிகரையில் ஆயிரக்கணக்கான மனிதர்கள். பலவகை வண்ணங்கள் நிறைந்த திருவிழா, இப்ராகிம் யந்திர அறையில் உட்கார்ந்திருந்தான்; சரியான நேரத்தில் விளக்குகளை ஏற்றிவிட்டான் .

பைத்தியக்காரப் பெரியப்பாவைத் தேடப் போனதில் சோனா வுக்கு நேரமாகிவிட்டது. பெரியப்பா தனியாக வேடிக்கை பார்க்கப் போகவேண்டாம், தானும் அவருடன் போகலாம் என்று நினைத்திருந்தான் அவன். அவன் யானை மேல் சவாரி செய்யப் போவதில்லை. அவர்கள் இருவரும் தசரா வேடிக்கை பார்த்துவிட்டு லட்டு வாங்கித் தின்றுகொண்டே திரும்பலாம்.

ஆனால் பெரியப்பாவை அந்தக் கூட்டத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவேதான் அவன் திரும்பிவிட்டான். சூரியன் மறைந்துகொண் டிருந்தான். யானை அந்தப்புர வாயிலில் நின்று தும்பிக்கையையும் காதுகளையும் ஆட்டியது.

அமலாவுக்கும் கமலாவுக்கும் எரிச்சலாக இருந்தது. அவர்கள் ஜசீமைப் புறப்படாமல் நிற்க வைத்திருந்தார்கள், சோனா வேக மாக ஓடி ஆபீஸ் கட்டிடத்தைக் கடந்து, தர்வான்களின் இருப் பிடத்தைத் தாண்டி, பூஜை மண்டபத்தை அடைந்ததும் சற்று நின்று பெருமூச்சு விட்டான். பையிலிருந்த நாணயங்கள் பத்திர மாக இருக்கின்றனவா என்று பார்த்துக்கொண்டான். அவனிடம் பதினான்கு புத்தம் புதிய காலணாக் காசுகள் இருந்தன. அந்த

457வீட்டு நாட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு காலணா கொடுத்தார்கள். சோனா தன் பங்கோடு பெரியப்பாவின் பங்கையும் கேட்டு வாங்கிக்கொண்டு அவரு டைய பங்கை ஒரு பையில் தனியாகப் போட்டு வைத்திருந்தான், திருவிழாப் பார்த்த பிறகு அவன் பெரியப்பாவின் பங்கை அவருடைய பையில் போட்டுவிடுவான். ஆனால் அவனால் பெரியப்பாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரைத் தேடப் போய்த்தான் அவனுக்கு நேரமாகிவிட்டது. அவன் வராந்தா வழியாகச் சமையலறையைக் கடந்து போனான். இந்த வழியில் போனால் அவன் சீக்கிரம் வடக்கு வாசலுக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்.

அமலாவும் கமலாவும் அவனுக்குப் பவுடர் பூசிவிடுவதாகச் சொல்லியிருந்தார்கள். இந்தப் பெரியப்பா ரொம்ப மோசம் அவரால்தான் அவனுக்குப் பவுடர் பூசிக்கொள்ள முடியாமல் போய் விட்டது !

அழுகை அழுகையாக வந்தது அவனுக்கு. அவர்கள் எல்லாரும் இப்போது வடக்கு வாசலில் இருப்பார்கள், அமலாவும் கமலாவும் அவர்களுடைய அறையில் இருக்க மாட்டார்கள். அவன் வேகமாக ஓடினான். வடக்கு வாயிலை அவன் அடைந்தபோது அங்கு ஒரு வரையும் காணோம். யானையும் இல்லை, ஜசீமும் இல்லை, அமலா - கமலாவும் இல்லை. வீட்டில் எல்லா விளக்குகளும் எரிந்துகொண் டிருந்தன. எல்லாரும் அவனை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தன்னந்தனியாக இப்போது அவன் என்ன செய்வது ?

இருந்தாலும் ஒரு தடவை அமலா கமலாவின் அறைக்குப் போய்ப் பார்க்க வேண்டும். வீட்டு வேலைக்காரிகளைக் கூடக் காணோமே! அவர்கள் எங்கே போய்விட்டார்கள்? அவன் படிகளில் வேகமாக ஏறி மாடிக்குப் போனான். ஓரிரண்டு அந்நிய முகங்களைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை. யாரும் அவனுடன் பேசவில்லை. அவனுக்குப் பயமாக இருந்தது. எப்படியாவது அமலா கமலாவின் அறைக்குப் போய்விடவேண்டும். அவர்கள் அவனை விட்டுவிட்டுத் திருவிழாப் பார்க்க போயிருக்க மாட்டார்கள். இந்தச் சமயத்தில் திடீரென்று அந்த மாளிகையின் விளக்குகள் எல்லாம் அணைந்து விட்டன. இவ்வளவு லஸ்தர் விளக்குகளும் அலங்காரங்களும் இருட்டில் மறைந்துவிட்டன. ஏரிக்கரையில் குழலிசை ஒலிக்கவில்லை. கூண்டிலிருந்த மைனா மட்டும் இருட்டில் கூவியது ; "சோனா, நீ எங்கே போறே?... இருட்டு, ஒரே இருட்டு."

இப்படிப்பட்ட கும்மிருட்டை இதுவரை பார்த்ததே இல்லை அவன். ஒரு முழத் தூரத்திலுள்ள ஆளைக்கூடப் பார்க்க முடியாதபடி அவ்

458வளவு இருட்டு. மனிதர்கள் நிழல்கள் போல் இங்குமங்கும் ஓடுவது தெரிந்தது. யாரோ வேகமாக அவனைத் தாண்டிப் போனார்கள். அவன் பயந்துகொண்டே, "அமலா" என்று கூப்பிட்டான்.

இருட்டில் ஒரு முரட்டுக் கை வந்து அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டு, "யாரைக் கூப்பிடறே?" என்று கேட்டது.

“'அமலா!'' ''நீ யாரு ?" ''நான் சோனா.'' "எங்கே போகணும் உனக்கு ?" “அமலாகிட்டே அவங்க என்னைத் தசரா பார்க்கக் கூட்டிண்டு போறதாச் சொல்லியிருக்காங்க. கமலா என் மூஞ்சியிலே பவுடர் பூசிவிடறேன்னு சொல்லியிருக்கா."

"நீ அவங்க அறைக்குப் போகக்கூடாது. யாரும் போகக்கூடாது." "நான் போகத்தான் போவேன்." ''கூடாது."

அந்தக் கை யாருடையதென்று சோனாவுக்குத் தெரியவில்லை. ஆனால் அது ஒரு பெண்பிள்ளையுடையது என்று மட்டும் புரிந்தது. பிருந்தாவனியாக இருக்கலாம். பயத்தால் ஒன்றும் புரியாதவனாக அவன் கம்பிக் கிராதியைப் பிடித்துக்கொண்டு நின்றான். யாராவது அவனை ஆபீஸ் கட்டிடத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டால் நல்லது.

மாடிப்படியில் ஒரு விளக்குத் தெரிந்தது. இருட்டில் நின்றிருந்த அவனுக்கு இரண்டாவது பாபு படியிலேறி வருவது தெரிந்தது. அவருக்கு முன்னால் அவருடைய வேலைக்காரன் ஹரிபத். அங் கிருந்து ஓடிவிடத் தோன்றியது சோனாவுக்கு.

இரண்டாவது பாபுவைப் பிடித்துக்கொண்டு அழைத்து வந்தார்கள். அவர் முகத்தில் வேதனை, சோனாவுக்கு ஆச்சரியம். சற்று நேரம் முன்புதானே அவர் மேடையில் உட்கார்ந்து புல்லாங்குழல் வாசித்துக்கொண் டிருந்தார்! இப்போது அவரைப் பார்த்தால் அவருடைய உயிரே சோர்ந்து போய்விட்டது போல் தோன்றியது. சோனாவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. அமலா கமலாவுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லையே? அவர்களுடைய அறை உட்புறத்தில் தாழிடப்பட்டிருந்தது. அறைக்குள் அமலாவும் கமலாவும் விம்மி விம்மி அழுவதாகத் தோன்றியது.

யானை தனியே அந்த இருண்ட மாளிகையிலிருந்து திரும்பிச் சென்றது. யாரும் தசரா பார்க்கப் போகவில்லை. ஏதோ கெட்ட செய்தி கிடைத்திருந்தது போலும், இந்தக் குடும்பத்துக்கு. அது

459என்ன என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. மிகவும் நெருங்கிய சிலருக்கு விஷயம் தெரிந்திருக்கலாம். அவர்களில் பூபேந்திர நாத்தும் ஒருவர். அவர் வேகமாக நடந்து போய்க்கொண் டிருந்தார். மாளிகையிலிருந்த எல்லாமே விசர்ஜனமாகிவிட்டது போலும்! ஒரு நிர்ஜனமான பொட்டலில் நடப்பது போல் இருந்தது அவருக்கு.

சோனா அடம் பிடித்தான், "நான் அமலாகிட்டே போகப் போறேன்" என்று.

''

ஊஹம், கூடாது !" என்று பிருந்தாவனி சொன்னாள், சோனா வெளியே வந்து அமலாவின் அறையின் ஜன்னலுக்கு எதிரில் திறந்த வெளியில் உட்கார்ந்துகொண்டான். விளக்கு வந்ததும் அவர்கள் ஜன்னல் வழியே அவனைப் பார்க்கலாம், அவ்விரு பெண்களும் ஏனோ அவனைக் கவர்ந்திருந்தார்கள். அவர் களுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது ; அது என்னவென்று தெரியாமல்

அவன் அங்கிருந்து நகரப் போவதில்லை,

அப்போது யானை இருட்டில் மரங்களின் வழியே போய்க் கொண்டிருந்தது. யந்திர அறையில் ஒரு டார்ச்சைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தான் இப்ராகிம். ஆற்றங்கரையில் நடந்து போன யானையின் காதுகள் அடித்துக்கொள்ளும் அரவம் மிதந்து வந்தது.

எங்கிருந்தோ பிரதிமை விசர்ஜன அரவங்கள் கேட்டன. பைத்தியக்காரப் பெரியப்பா எங்கே போனாரோ, தெரியவில்லை, யாருக்காகவும் ஒன்றும் வாங்கித் தர முடியவில்லை சோனாவால். அவனுடைய இரண்டு பைகளிலும் பளபளக்கும் செம்புக் காசுகள் இருந்தன. மேலே அமலா அறையின் ஜன்னல் மூடிக் கிடந்தது.

ஆற்றில் கடைசிப் பிரதிமை விசர்ஜனமாகி விட்டது. ஆற்றங் கரையில் வெளிச்சம், தூபங்கள், மத்தள ஒலி எல்லாமே நின்று விட்டன. ஓர் இடத்திலும் வெளிச்சம் இல்லை. எங்கும் ஒரே இருட்டு. மேலே நிர்மலமான ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் ஒளி உலகத்தின் நலத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தது, ஜன்னலைத் திறந்துவிட்டால் சோனா, அமலா கமலா வுக்கு ஏதாவது உதவி செய்யலாம். அவன் அவர்களுடைய முகத்தைப் பார்ப்பதற்காக, முழங்கால்களுக்கு நடுவில் தலையை வைத்துக்கொண்டு புல்லின் மேல் உட்கார்ந்திருந்தான்.

விசர்ஜனத்துக்குப் பிறகு தான் பூபேந்திர நாத்துக்குச் சோனாவின் நினைவு வந்தது. அவன் எங்கே? எல்லாரும் அவனை இருட்டில் தேடினார்கள். கடைசியில் ராம்சுந்தர் தான் சோனா வீட்டு வராந்

460தாவை ஒட்டிய திறந்த வெளியில் தூங்கிக்கொண் டிருப்பதைக் கவனித்தான்.

காலையில் அந்தப்புரத்திலிருந்து சோனாவுக்கு ஒரு கடிதம் கிடைத் தது. ""நாங்க விடியற்காலை ஸ்டீமர்லே கல்கத்தாவுக்குத் திரும்பிப் போறோம். உன்னைச் சந்திக்க முடியாமே போயிடுத்து!''

அவன் ஆபீஸ் கட்டிடத்தின் வாயிற்படியில் தனிமையில் மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இன்று ஒன்றும் பிடிக்கவில்லை, நதிப்படுகையில் நாணற்காட்டில் யாரோ திருட்டுத் தன மாகப் புல்லாங்குழல் இசைப்பதாக அவனுக்குத் தோன்றியது.


4

இப்போது ஊர் திரும்பும் படலம், ஈசம் காலையில் சீக்கிரமே சமையல் செய்து சாப்பாட்டை முடித்துக்கொண்டு விட்டான். படகின மேல்தட்டில் தண்ணீரை ஊற்றி நன்றாகக் கழுவினான். படகின முன்பகுதியில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதை வடித்துப் படகின் பளுவைக் குறைத்தான். படகின் பாய் கிழிந்திருந்த இடங்களை முந்தின நாள் தான் ஊசி நூலால் தைத்துச் சரி செய்திருந்தான் படகைச் செலுத்துவதில் ஒரு சிரமம் இல்லாமல் இருப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்தான். அவன் கயிறு களைச் சரிபார்த்துக் கொ ண டிருந்தபோது இரண்டாவது எசமான் வருவதைக் கண்டான். அவருக்குப் பின்னால் சோனா, லால்ட்டு, பல்ட்டு, பைத்தியக்கார எஜமான், கடைசியில் நாய்,

ஸ்டீமர்த் துறையில் இப்போது நல்ல கூட்டம். பூஜை விடுமுறை யைக் கழித்தவர்கள் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். இந்தக் கிராமமே ஒரு பட்டணம் போலத்தான். உயர் நிலைப்பள்ளி, தபால் ஆபீஸ், கடை வீதி, சந்தை, ஆனந்தமயீக் காளிகோலி 1 , ஜமிந் தார்களின் மாளிகைகள் எல்லாம் இருந்தன. பூஜை நாட்கள் விமரிசையாகத்தான் கழிந்தன. அப்புறம் பூஜைக்கு வந்தவர்களில் சிலர் டாக்கா போவார்கள். சிலர் கல்கத்தா போவார்கள். மக்களில் பெரும் பகுதி போனதும் ஊர் வெறிச்சிட்டுவிடும்.

எல்லாம் வெறிச்சிட்டுப் போனது போல்தான் இருந்தது பூபேந் திர நாத்துக்கு. உறவினர்கள் ஊர் திரும்பினார்கள். அதிகாலையில் லேயே சாப்பிட்டு விட்டார்கள் அவர்கள். கரையில் நின்று கொண்டு அவர் களுக்கு விடை கொடுத்தார் அவர். சீதலக்ஷா

461ஆற்றில் படகுகள் கண் பார்வையிலிருந்து மறையும் வரையில் அவர் கரையிலேயே நின்றுகொண்டிருந்தார். ஏனோ அவருக்கு இந்த நேரத்தில் ஆபிஸ் கட்டிடத்துக்குத் திரும்பிச் செல்லப் பிடிக்க வில்லை. அவர் காளிகோவிலை நோக்கி நடந்தார். பேசாமல் கோவிலில் உட்கார்ந்து கொண்டு தேவி தரிசனம் செய்ய விரும்பினார். புரோகிதர் காலு சக்கரவர்த்தியைப் பார்த்துச் சுகம் விசாரித்த மாதிரியும் இருக்கும். வராந்தாவில் உட்கார்ந்து கொண்டு அந்த இடிந்துபோன, பாசி பிடித்த, கோட்டை போன்ற பழங்கட்டிடத்தில் கோவிலின் உருவ ஒற்றுமை ஏதாவது தெரி கிறதா என்றும் பார்க்கலாம்.

மௌல்வி சாயபுவுக்கு என்ன தைரியம் ? இங்கே மக்களைக் கூட்டிக்கொண்டு வந்து தொழுகை நடத்தப் போகிறாராம்! ஆட்டுப் பலி கொடுக்கப் போகிறாராம்! அப்படியெல்லாம் செய்தால் கல்கத்தான் வரும். பூபேந்திரநாத் தமக்குள் சொல்லிக் கொண்டார், “தேவி1 வெட்டப்பட்ட தலைகளை மாலையாக அணிந்தவளே! நீ எங்களுக்குச் சக்தியைக் கொடு, அம்மா ''

அவருடைய மனக்கண்ணால் ஒரு தர்மயுத்தக் காட்சி தோன்றியது. ஆனந்தமயீ காளி தன் சரீரத்திலிருந்து ஆயிரக் கணக்கான வீரர்களைத் தோற்றுவிப்பாள், இன்னொரு மகிஷாசுர வதத்துக்காக! பூபேந்திரநாத் தமக்குள் சிரித்துக்கொண்டார். ஏளனப் புன்னகை தோன்றியது அவருடைய முகத்தில். போலீஸ் ஸ்டேஷனிலுள்ள ஹெட் கான்ஸ்டபிள், பட்டணத்திலுள்ள போலீஸ் துரை மாஜிஸ்டிரேட் உள்பட எல்லாரும் பாபுக்களின் கையில். அவர் கள் ஒரு தந்தி கொடுத்துவிட்டால் ஒரு ஸ்டீமர் நிறையப் போலீஸ் வந்துவிடும். இந்தக் கலகக்காரர்கள் என்ன செய்ய முடியும் ? உள்ளுற அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி வேகத்தில் அவர் தமக்குத் தாமே பேசத் தொடங்கிவிட்டார். தாம் ஒரு போர்க்களத் தில் நடந்துகொண் டிருப்பதாக அவருக்கு நினைப்பு.

சுக்கானைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஈசம் சோனா வைக் கேட்டான். ''என்ன எசமான், மூஞ்சி ஏன் சுரத்தாயில்லே?" ஈசம் தன் முகத்தைப் பார்க்காதவாறு திரும்பிக்கொண்டான் சோனா,

"கவலைப்படாதீங்க, நேரே துறையிலே கொண்டுபோய் நிறுத் தறேன் படகை. அம்மா அங்கே வந்து காத்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க இறங்கினதும் உங்களைத் தூக்கி மடியிலே வச்சுக்குவாங்க."

பைத்தியக்கார மனிதர் படகின் முனையில் உட்கார்ந்திருந்தார். அவர் தலைக்கு மேல் வெயில். ஈசம் மீண்டும் மீண்டும் அவரை உள்ளே போய் உட்காரச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. பத்மா

462சனம் போட்டுக்கொண்டு அசையாமல் உட்கார்ந்திருந்தார் அவர். வெயிலில் அவர் முகம் சிவந்துவிட்டது. சோனாவுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. அவன் வீடு திரும்புகிறான். அமலாவும் கமலாவும் அவனை விட்டுவிட்டு எவ்வளவோ தொலைவுக்குப் போய்விட்டார் கள், எந்த முகத்தோடு அம்மாவைப் பார்ப்பான் அவன் ? ஒரு பாவத்தைச் செய்துவிட்ட உணர்வு அவனை உறுத்தியது. அமலா கமலாவின் அழுகையைக் கேட்டதிலிருந்து அந்த உணர்வு இன்னும் தீவிரமாகிவிட்டது. "நீ பண்ணினது பாவம் !" என்று யாரோ சொல்வதுபோல் இருந்தது அவனுக்கு. மெளனமாகப் படகில் உட்கார்ந்திருந்தான் அவன்,

துறைக்குப் படகு வரும் அரவம் கேட்டுத் தனமாமி ஒடிவந் தாள். பெரிய மாமியும் வந்தாள். அவர்களுக்கு முன்னாலேயே செய்தி கிடைத்திருந்தது, பைத்தியக்கார மனிதர் நீந்தியும் நடந்தும் மூடா பாடா போய்விட்டது பற்றி. சோனாவுடன் அவரும் திரும்பி வருவாரென்று அவர்களுக்குத் தெரியும்.

படகிலிருந்து இறங்கியதும் சோனா தாயைக் கட்டிக்கொண்டான். உடனே அவனது மனச் சுமை முற்றும் மறைந்துவிட்டது.

""சோனா, நீ அம்மாவுக்காக அழலியே?" என்று பெரிய மாமி கேட்டாள்.

இல்லை என்பதற்கடையாளமாகத் தலையை ஆட்டினான் சோனா. ''இல்லே. நீ அழுதிருக்கே. உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியறதே. லால்ட்டு, சோனா அழுதானா இல்லையா?"

"இல்லை, பெரியம்மா." ''சரிதான், இனிமேல் நீயும் உன் பெரியப்பா மாதிரி ஆயிடுவே. எங்கே வேணுமானாலும் சுத்துவே! யாரையும் நினைக்க மாட்டே.''

இவ்வாறு மறைமுகமாகத் தன் கணவனைக் குத்திக் காட்டினாள் பெரிய மாமி. அவளுடைய குத்தலைப் புரிந்துகொண்டு அவர் அவளைப் பார்த்தார்.

''வாங்க " ஆனால் அவள் சொல்ல விரும்பியது : ' நீங்க எங்கே யாவது போயிட்டா எனக்குப் பயமா இருக்கு, கஷ்டமா இருக்கு. உங்களை விட்டால் எனக்கு வேறே யாரு கதி ?'' என்பதுதான்.

உலகத்தையே ஜயித்துவிட்டு வந்த உணர்வு ஏற்பட்டது சோனாவுக்கு. எவ்வளவு புதிய அனுபவங்கள்! மான், மயில், பயாஸ்கோப் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் யாரிடமாவது சொல்லா விட்டால் அவனுக்கு நிம்மதி இருக்காது. முதலில் மாலதி அத்தை யிடம் பயாஸ்கோப்பைக் காண்பிக்க வேண்டும். பாதிமா வந்தால் அவளிடமும் காண்பிக்க வேண்டும்.

463நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் திரும்பியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது அவனுக்கு. எல்லாரையும் சந்திக்கத் துடித தான். வீட்டுக்குள் நுழைந்ததும் தாத்தா, பாட்டிக்கு நமஸ்காரம் செய்தான். அவன் தாழ்வாரத்துக்கு வந்ததும், “டிரஸ் மாத்திக் கிணடு சாப்பிட வா, சோனா" என்று அழைத்தாள் பெரிய மாமி.

எவ்வளவோ நேரத்துக்கு முன்னால் சாப்பிட்டது. ஆகையால் நியாயப்படி இப்போது நல்ல பசியிருக்க வேண்டும் அவனுக்கு, ஆனால் அவன் பெரிய மாமியின் வார்த்தையைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவர்கள் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்தால் பெரிய மாமி அவர்களுக்குச் சாப்பாடு போடுவாள், ஆனால் யாருமே சாப்பிட வரவில்லை.

சோனா குளக்கரைக்கு ஓடிப் போய் மருத மரத்தடியில் நின்றான. அங்கிருந்து பார்த்தால் சோபா ஆபுவின் வீடு தெரியும். அவன முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து அங்கே போய்ச் சேர்ந்தான், வீடு வெறிச்சென்று கிடந்தது. வீட்டில் நரேன் தாஸ் இல்லை, சோபா ஆபு இலலை. அவர்களுடைய அம்மாவும் இல்லை, மாலதி அததை யையும் காணவில்லை. யாரோ நெசவு அறையில் புகையிலை நறுக்கி கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த வீடே பேய் வாழும் இடமாகத் தோன்றியது சோனா வுக்கு. வீட்டில் யாருமே இல்லை. சூரியன் அஸ்தமித்து விட்டான. அறைகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. அவன் பயந்து போய அங்கிருந்து ஓட யத்தனித்தபோது மாலதி அத்தை ஒரு பிட்கில மரத்தடியில் நிற்பதைக் கண்டான். தனியாக நின்று அவள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவள் அருகில் சென்றான். வேறு நாட்களில் மாலதி அத்தை அவனை அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்வாள். ஆனால் இன்று அவளுடைய கண்கள் உணர்ச்சியற்று இருந்தன. தலை பின்னிக் கொள்ளவில்லை அவள். முகத்திலும் எவ்வித உணர்ச்சியும் மில்லை. தன்னுடைய உடம்பில் ஏதோ ஓர் அசுத்தம் புகுந்து விட்டாற் போலவும் அதை வெளியேற்றித் தன்னைச் சுத்தப்படுத்திக கொள்ள முயற்சி செய்பவள் போலவும் அவள் அடிக்கடி எச்சிலை உமிழ்ந்தாள். எதிரில் யாரோ இருப்பது போல் ஏதோ பேசிக் கொண்டே யிருந்தாள் அவள். சோனாவைப் பார்த்ததும் அவனோடு ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றுகொண் டிருந்தாள். அவள் சோனாவை அடையாளங் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சோனா மரத்தடியில் போய் நின்றான். அவன் அவளுக்குத் தன் பயாஸ்கோப்பைக் காண்பிக்க வந்திருந்தான். இப்போது அவளு டைய முகத்தைப் பார்த்தபிறகு அவனுக்குப் பேச வார்த்தை

464வரவில்லை. மாலதி அத்தைக்கு ஏதோ வியாதி வந்திருக்கிறது வியாதி வந்த ஆளுக்குத்தான் கண்ணும் முகமும் இந்த மாதிரி இருக்கும். அதற்கு மேலும் அங்கே நிற்க முடியவில்லை அவனால். அவன் தன் பெரியம்மாவிடம் ஓடி, "மாலதி அத்தை மரத்தடியிலே ...'' என்று பேச ஆரம்பித்து முடிக்கவில்லை. "மாலதி கிட்டே போய் அவளைத் தொந்தரவு பண்ணாதே" என்றாள் பெரியம்மா.

“சித்தப்பா எங்கே ? சோபா, ஆபு எங்கே ? நரேன் தாஸ், பால் வீட்டிலே சுபாஷோட அப்பா இவங்கள்ளாம் எங்கே?'' என்று அவன் பெரியம்மாவைக் கேட்டான்.

"பக்கிரி தர்காவிலே ஏதோ திருவிழா. ஊரிலே எல்லாரும் திருவிழாவுக்குப் போயிருக்காங்க'' என்றாள் பெரியம்மா.

பெரியம்மா சொன்ன பக்கிரி சாயபுவின் கதையைக் கேட்ட சோனாவுக்கு உலகத்தில் இன்னொரு கர்ண பரம்பரைக் கதை பிறந் திருப்பதாகத் தோன்றியது.

அதிசயமான, நம்ப முடியாத நிகழ்ச்சிதான் இது. ஒரே இரவில் இரண்டு சம்பவங்கள் எப்படி நடக்கும்? நடக்காது, நடக்க முடியாது. நள்ளிரவில் நரேன் தாஸ் விட்டுவாசலில் பக்கிரிசாயபு தோன்றினார் சாட்சாத் லக்ஷ்மி தேவியைப் போல், தாயைப் போல், மாலதியை இங்கு விட்டுவிட்டுப் போனார். ஆச்சரியம் என்ன வென்றால், அதே இரவில் தர்காவில் ஏதோ பிணத்தைப் புதைக்க வந்தவர்கள், ஜோட்டன் விளக்கை எரியவிட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதையும் அவள் அருகில் சவப்பெட்டியில் பக்கிரி சாயபுவின் சவத்தையும் கண்டார்கள்.

நரேன் தாஸின் வீட்டுக்கும் தர்காவுக்குமிடையே பத்துக் கோச தூரம் ஆறுகளும் கால்வாய்களும் நிறைந்த பிரதேசம். அவற்றில் தண்ணீர் எப்போது பொங்கி வரும், எப்போது வடியும் என்று

சொல்ல முடியாது.

படகில் கடக்க ஒரு நாள் பிடிக்கும் தூரத்தை ஒரு முகூர்த்த நேரத்தில் கடந்துவிட்டாள், பக்கிரி சாயபுவின் பீபி. நள்ளிரவில் பக்கிரிசாயபு தன் வீட்டுவாசலில் தோன்றி மாலதியைத் தன்னிடம் ஒப்புவித்த அதிசயத்தை நரேன்தாஸ் எல்லாரிடமும் பரப்பிவிட் டான். பக்கிரிசாய்பு விசுவரூபமெடுத்து, பல யோசனை தூரத்துக்கு வளர்ந்து, தம் அங்கியின் பையிலிருந்து மாலதியை ஒரு பொம்மையை எடுப்பது போல் வெளியே எடுத்து வைத்துவிட்டு ஒரு விநாடியில் காற்றில் மறைந்து போய்விட்டார் என்று அவர் இறந்த செய்தி கேட்டதும் அவனுக்குத் தோன்றியது.

465

30இரவோடிரவாக, இந்நிகழ்ச்சியின் மூலம், ஒரு பீராக, அவதார புருஷராக ஆகிவிட்டார் பக்கிரிசாயபு. இன்னொரு கர்ணபரம்பரைக் கதை - மதத்தைப் போல, அந்தப் பனையோலைச் சுவடிக் கதைகளைப் போல. எப்போதும் தங்களுக்குள் தகராறு செய்து கொள்ளும் இரண்டு மதங்கள். ஒருபக்கம் அவன் - சோனா : இன்னொரு பக்கம், மைதானத்துக்கு அப்பால், படுகைக்கு அப்பால் உள்ள பாதிமா!

பாதிமா வந்ததும் சோனா அவளிடம் பயாஸ்கோப் பெட்டியைத் தந்தான்.

"யாரு கொடுத்தாங்க, சோனா பாபு?" ''அமலா." "ஏன் கொடுத்தா ?" "அவளுக்கு என்கிட்டே பிரியம்.'' பாதிமா மருத மரத்தடியில் நின்றுகொண்டு, பேசாமல் சோனாவின் முகத்தைப் பார்த்தாள். "எனக்குப் பயாஸ்கோப் வேண்டாம் ?" என்றாள்.

''ஏன்?'' “வேண்டாம். நான் வாங்கிக்க மாட்டேன்." ''ஏன் வாங்கிக்க மாட்டே?" பாதிமா பதில் சொல்லவில்லை. சோனா மூடாபாடாவிலிருந்து திரும்பி விட்ட செய்தி கேட்டதும் தண்ணீரில் நடந்து அங்கு வந்து விட்டாள் அவள். வழியில் தண்ணீர் அதிகம் இல்லை, பாதம் மட்டும் முங்கும். பாதிமா வேறு பேச்சுப் பேசாமல் தன் புடைவையைச் சற்றுத் தூக்கிக்கொண்டு தண்ணீரில் இறங்கினாள், வீடு திரும்புவதற்காக.

"அமலா எனக்கு அத்தை முறை" என்றான் சோனா. இப்போது பாதிமா திரும்பிப் பார்த்தாள். தண்ணீரிலிருந்து ஏறி வந்து பயாஸ்கோப்புக்காகக் கையை நீட்டினாள்.

சோனா பயாஸ்கோப்பின் கண்ணாடியைக் கண்ணுக்கு நேரே வைத்துக் கொள்ளும்படி பாதிமாவிடம் சொல்லிப் படங்களை மாற்றி மாற்றி அவளுக்குக் காட்டினான். அராபிய இரவுகளின் அதிசய உலகத்தை அந்தப் படங்களில் பார்த்து ஆச்சரியத்தால் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் பாதிமா. 'நீங்க இவ்வளவு நாள் எங்கே போயிட் டீங்க?' என்று சோனாவைக் கேட்க விரும்பினாள் அவள். தினம் சாயங்காலமானதும் அவள் அவர்கள் வீட்டுக் கொய்யா மரத்தடி யில் வந்து நின்றுவிடுவாள். அங்கிருந்து இவர்கள் வீட்டு மருத மரம் தெரியும் ; மருதமரத்தடியில் யார் நின்றாலும் தெரியும்.

ஜேஷ்ட ஆஷாட மாதங்களில் மட்டும் சணல் பயிர் உயரமாக வளர்ந்துவிடுவதால் ஒரு மரத்தடியிலிருந்து இன்னொரு மரத்தடியைப் பார்க்க முடியாது. சணல் பயிர் அறுவடையான பிறகு, மறுபடியும்

466ஒரு மரத்தடியிலிருந்து இன்னொரு மரத்தடியில் இருப்பவர்களைப் பார்க்கலாம்,

அவள் அன்று மாலையிலும் அவனை இவ்வாறு பார்த்துவிட்டுத் தான் அவனைச் சந்திக்க வந்திருந்தாள். இருந்தாலும் அவன் மேல் அவளுக்குக் கோபமாக இருந்தது. அவனை ஏறிட்டுப் பார்க்க வில்லை, இவ்வளவு நேரம். ஆனால் இப்போது சோனா அவளுக்குப் பயாஸ்கோப்பைக் கொடுத்த பிறகு அவளுடைய கோபம் பறந்து போய்விட்டது.

"பாட்டி ஒரு தடவை உங்களை வந்துட்டுப் போகச் சொன்னாங்க" என்று அவள் சொன்னாள்,

அவளுடைய கொச்சைப் பேச்சைத் திருத்தினான், சோனா. "இது புஸ்தகத்துப் பேச்சுன்னா !" ''புஸ்தகப் பேச்சுப் பேசக் கத்துக்கறியா ?" "எனக்கு வெட்கமா இருக்கு." "எனக்குந்தான்" என்று சொல்லிச் சிரித்தான் சோனா, "அமலா அத்தை பெரியம்மா மாதிரி பேசறா. நான் பேசறதைத் திருத்திப் பேசச் சொல்றா."

" நீங்க என்ன சொன்னீங்க ?" "எனக்கு வெக்கமாயிருக்குன்னு சொன்னேன்." "எனக்குந்தான்" என்று சொல்லிவிட்டுப் பாதிமா தண்ணீரில் இறங்கினாள். மறுகரையில் ஏறிக் கொய்யா மரத்தடியை அடைந் ததும் அங்கிருந்து கையை ஆட்டினாள். சோனாவும் மருத மரத்தடி யிலிருந்து கையாட்டினான். இவ்வாறு சைகைகள் செய்துகொண்டு அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

சோனா தெற்குப் பக்கத்து அறைக்குள் போனான். அங்கே அலிமத்தி இல்லை. ஆபேத் அலி மட்டும் உட்கார்ந்திருந்தான். அலிமத்தியும் சித்தப்பாவும் திரும்ப நேரமாகும். அவர்கள் பக்கிரி யின் தர்காவுக்குப் போயிருந்தார்கள். இவ்வளவு பெரிய வீட்டில் ஆண் துணை யாரும் இல்லை. இரவில் திருட்டுப் பயம். ஆகையால் சசீந்திர நாத் வீட்டுக்குக் காவலாக ஆபேத் அலியை வைத்து விட்டுச் சென்றிருந்தார். ஆபேத் அலி அங்கேயே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள்வான். சோனா அரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்து வைத்தான். "நீங்க தர்காவுக்குப் போகவில்லையா ?'' என்று ஆபேத் அலியைக் கேட்டான்,

"நாளைக்குப் போகப்போறேன்.'' ஈசம் வந்துவிட்டதால் இனி ஆபேத் அலி அங்கே இருக்கத் தேவையில்லை. எல்லாரும் அவரவர்களுக்கு நேரம் கிடைக்கும் போது தர்காவுக்குப் போவார்கள்.

467யாராவது எங்காவது போகிறார்களா என்று கேட்டால் சோனா வுக்குத் தானும் அங்கே போக வேண்டுமென்று தோன்றும், திருவிழாப் பேச்சு காதில் விழுந்தால் சோனாவுக்குச் சர்க்கசும் அதிலி ருந்த இரண்டு புலிகளும் நினைவுக்கு வரும், அந்த நினைவுவந்ததும் அவன் இன்னும் அரிக்கேன் விளக்கை யொட்டியவாறு உட்கார்ந் தான். இன்றும் அவனுக்குப் படிப்பிலிருந்து விடுதலை. நாளை முதல் இல்லை. பெளர்ணமியில் லட்சுமி பூஜை முடிந்ததும்- இரவு பகலாகப் படிக்கத் தொடங்கவேண்டும். பள்ளி திறந்ததும் பரீட்சை.

சோனா, ஆபேத் அலியை உற்றுக் கவனித்தான். ஆபேத் அலியின் முகத்தில் களையே இல்லை. அவனுடைய உடம்பு தளர்ந்து விட்டது. ஜப்பர் போன இடம் தெரியவில்லை.

ஆபேத் அலியின் இரண்டாவது பீபி அவனுடைய வறுமையைப் பற்றிக் கவலைப்படவில்லை. நன்றாகச் சாப்பிடவேண்டும் அவளுக்கு. சமைப்பதையெல்லாம் அவள் தானே சாப்பிட்டு விடுவாள். அவனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போட மாட்டாள். இன்றிரவு அவனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு கிடைக்கும், பாதி நரைத்த தாடிக்குள் மறைந்திருந்த அவனுடைய முகத்தில் நிறையச் சாப்பிடப் போகும் மகிழ்ச்சி தெரிந்தது. ஆனால் இந்த ஜப்பர் அவனுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டான், ஜப்பான் செய்கை போலீஸ் விவகாரமாகியிருந்தது. பக்கிரி சாயபுவின் அற்புதச் செயலில் மக்கள் மற்ற எல்லா விஷயங்களையும் மறந்து விட்டுத் திருவிழாக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டார்கள்.

எல்லாவற்றையும் விடப் பெரிய ஆச்சரியம் இந்த மாலதி. மாலதி திரும்பி வந்த அன்று நரேன் தாஸ் சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தான். அவன் சொல்லியதிலிருந்து ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை, பக்கிரிசாயபு ஓர் அசாதாரண மனிதர் என பதைத் தவிர. அவருடைய மந்திர உச்சாரணத்தால் தண்ணீரிலிருந்து ஒரு ஜோதி தோன்றியதாம். அந்த ஜோதியில் ரிஷிகளுடைய முகங்கள் தெரிந்ததாம். பக்கிரி சாயபு சொன்னாராம்: "என் தாயை யாரும் கெடுக்கவில்லை, நரேன் தாஸ்! நீ அவளை ஏற்றுக்கொள் !'

நரேன் தாஸ் சொன்னதைப் பார்த்தால் சீதை வனவாச நிகழ்ச்சி மறுபடி நிகழ்ந்திருப்பதாகத் தோன்றியது.

இருளில் மெளனமாக நின்றுகொண் டிருந்தாள் மாலதி. அவளு டைய முகம் கற்சிலைபோல் இறுகிப் போயிருந்தது. அவளுடைய கண்கள் மட்டும் இருட்டில் ஜொலித்தன. கேட்ட கேள்விகளுக்கு அவளிடமிருந்து பதில் எதுவும் இல்லை. அவள் மெளனமாக உணர்ச்சியற்ற பார்வையுடன் கண காட்சிச் சாலையில் உள்ள பிராணியைப் போல் வராந்தாவில் உட்கார்ந்திருந்தாள். அண்டை

468அயலார் அவளை வந்து பார்த்துவிட்டு அவரவர்களுக்குத் தோன்றி யதைச் சொல்லிட்டுப் போவார்கள். பக்கிரி சாயபுவைப் போன்ற மனிதர் உண்டா ? அவர் அல்லாவின் அருளைப் பெற்றவராக்கும்.

இவ்வாறு நாட்கள் கழிந்தன. ஏனோ, நரேன்தாஸால் மாலதியை முன்போல் தன் குடும்பத்தில் வைத்துக்கொள்ள முடியவில்லை. பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் - அவர்களை மனிதர்களென்றே கருத முடியாது - அவளைக் களவாடிப் போனார்கள். புலி தொட்டால் பதினெட்டுக் காயம், மிலேச்சன் தொட்டால் முப்பத்திரண்டு காயம்.

அரிசி குத்தும் அறைக்குப் பக்கத்தில் வராந்தாவையொட்டி மாலதிக்கு ஒரு தனிக் குடிசை கட்டிக் கொடுத்து விட்டான், நரேன் தாஸ். மாலதி அந்தக் குடிசைக்குள் குடி போய்விட்டாள்,

ஆச்சரியம் என்னவென்றால், இந்தக் குடிசையில் தனியே வசிக்கும் தைரியம் வந்துவிட்டது, அந்த அழகிய விதவைக்கு மனிதன் அவளு டைய உடலிலிருந்து பிடுங்கிக் கொள்ளும்படியாக அதில் என்ன தான் மிஞ்சியிருந்தது? அவள் இவ்வளவு காலம் தன் உடம்பைப் பரிவு டனும் கவனத்துடனும் பாதுகாத்து வந்திருந்தாள். ஆகாயத்தில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது அவளுக்கு ரஞ்சித்தின் நினைவு வரும். அவளிடம் சொல்லிக் கொள்ளாமலே எங்கேயோ போய் விட்டான், அந்த இளைஞன். அவனுக்கு ஒன்றும் தர இயல வில்லை அவளால். இப்போது தன் எச்சிற்பட்ட உடம்பைப் பார்க்கும்போது அவளுக்கு அருவெறுப்பால் காறித் துப்பத் தோன்றி யது. அவள் எப்போதும் தண்ணீரில் அமிழ்ந்திருக்க விரும்பினாள். தண்ணீரில் அமிழ்ந்தால் உடல் தூய்மையாவது போன்ற உணர்வு. தண்ணீரில் அமிழ்ந்திருக்கும்போது. 'ஆகா, கங்கைத் தாயின் மடியில் எவ்வளவு அமைதி ! எவ்வளவு சுகம்!' என்று நினைக்கத் தோன்றியது. குளிர்கால இரவானாலும் சரி, கோடையில் எரிக்கும் வெயிலானாலும் சரி, தண்ணீரில் அமுங்கினால் இந்த நினைவுதான்

அவளுக்கு.

அந்தப் பக்கத்துச் சிறுவர்களுக்கு மாலதியின் செய்கை விளையாட் டாக அமைந்தது. மாலதி அத்தை நீர்ப்பூனையைப் போல் தண்ணீரில் முழுகுகிறாள், மிதக்கிறாள். அவர்கள் கரையில் நின்றுகொண்டு அவளைக் கேலி செய்வார்கள். அவளுடைய முன்றானை தண்ணீரில் மிதந்து போகிறதென்று கத்துவார்கள்.

"அத்தை , உன் தலைமயிர் தெரியறது. இல்லை, உன் கால்விரல் தண்ணிக்கு மேலே தெரியறது. உன் புடைவை காத்திலே உப்பிக் கிண்டு போறது, படகுப் பாய்போல. நீ பூரா முழுகல்லியே? உன் உடம்பு கொஞ்சம் கொஞ்சம் வெளியே தெரியறதே!" என்று

469எல்லாம் சொல்லி அவர்கள் சிரிப்பார்கள். அப்போது மாலதியின் முகம் பரிதாபமாக இருக்கும்.

“ஆமாம், என்னோட எல்லாம் முழுகிடாது. ஏதாவது கொஞ்ச மிதந்துண்டேதான் இருக்கும்" என்று அலுத்துக் கொள்வாள் அவள். “பாரு, சோனா! நான் பூரா முழுகிட்டேனா இல்லையா, பாரு."

"நீ பூரா முழுகிட்டே, அத்தை" என்பான் சோனா.

அதன் பிறகே மாலதி துறை முழுதும் தண்ணீரை எடுத்துத் தெளித் துக் கொண்டே கரையேறுவாள். எல்லா இடங்களும் அசுத்தமா யிருப்பதாக அவளுக்கு எண்ணம். அவள் வாளியிலிருந்து தண்ணீரை எடுத்து வழியெல்லாம் தெளித்துக்கொண்டே வீடு திரும்புவாள். இதுவே ஒரு நோயாகிவிட்டது அவளுக்கு. இம் மாதிரி எப்போதும் தண்ணீரில் முழுகி அவள் தன் மென்மையை யும் அழகையும் இழந்து பைத்தியம் போலாகி விட்டாள்.

இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் சிந்திக்கொண்டே இருப் பாள். சோனா பார்க்கும் போதெல்லாம் அவள் நீரில் நீந்திக் கொண்டே இருப்பாள். தண்ணீரை விட்டு வெளியே வரமாட்டாள். அவளுடைய முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கும். அவள் டைய உடலிலிருந்து ஜீவன் பிரிந்து போய்விட்டதோ என்று தோன் றும். நரேன் தாஸ் அவளைத் திட்டித் தண்ணீரிலிருந்து எழுப்பிக். கூட்டிக்கொண்டு போவான்.

இவ்வாறு சரத்காலம் கழிந்துவிட்டது. பூஜை விடுமுறை முடிந்ததும் சசிபூஷன் திரும்பி வந்துவிடுவார். பின்பனிக் காலத்தில் படிப்புச் சுமை அதிகம். சசிபூஷன் காலையிலும் இரவில் வெகு நேரம் வரையிலும் சோனாவைத் தம் அருகில் உட்காரவைத்துக் கொண்டு படிக்கச் செய்வார். சில நாட்களாகப் பைத்தியக்காரப் பெரியப்பா எங்கும் போவதில்லை. அவருடைய திருந்திய நிலைக்குத் தானே காரணம் என்பது சோனாவின் கருத்து. பூஜையின்போது. யானை பார்க்கப் போன நாளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாகக் குண மாகிக் கொண்டு வந்தார் பெரியப்பா. அவன் சிலசமயம் அவருக்கு ஹக்கா தயார் செய்து கொடுப்பான். அவர் ஹூக்கா பிடிப்பார்.

உட்கார்ந்துகொண்டு தமக்குத் தாமே அந்தக் கவிதையைச் சொல்லிக்கொண் டிருப்பார். குளிக்கவேண்டிய நேரத்தில் குளியல், சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பாடு. இரவில் சிறுவர்கள் எல்லாரும் படிக்கும்போது அவரும் தம்மை ஒரு மாணவனாக. நினைத்துக்கொண்டு, வங்காளி இலக்கணப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். மிகவும் கவனத்துடன் படிப்பதாகப் பாவனை செய்வார்.

470சில சமயம் சோனாவின் சிலேட்டை எடுத்து அதில் பலவித வண்ணத்துப் பூச்சிகள், பாலம், வயல்கள் இவற்றை வரைவார். யாரையும் தொந்தரவு செய்வதில்லை அவர்.

சோனா லக்ஷமி பூஜைக்குத் துனுப் பூ பறித்து வரப் போனான். பெரி யப்பாவே படகில் அவனைக் கூட்டிக்கொண்டு போய் அனுப் பூ கிடைக்கும் இடத்தில் சேர்த்தார். அவருடைய நடத்தையால் பெரியம்மாவுக்கு மிகவும் திருப்தி. பெரியம்மா நாள் முழுவதும் குடும்பத்துக்காக உழைத்தாள், பெரியப்பா வீட்டில் இருந்தால் கஷ்டமே தோன்றாது அவளுக்கு. நெற்றியில் வட்டவடிவமான குங்குமத் திலகம், வகிட்டில் நீண்ட கோடு போல் இடப்பட்ட குங்குமம், வெள்ளை வெளேரென்ற, சிவப்புக் கரை போட்ட புடைவை ; மா நிறம் - இவற்றோடு கூடிய பெரியம்மாவை ராமா யணத்தில் வர்ணிக்கப்பட்ட சிறந்த பெண் பாத்திரங்களுடன்

ஒப்பிடத் தோன்றும் சோனாவுக்கு.

இவ்வாறு கார்த்திக் பூஜையும் வந்துவிட்டது. பாதிமா மருதமரத் தடிக்கு வந்து சோனாவிடம் தனக்கு இரண்டு பூஜைக் குடங்கள் வைத்திருக்கும்படி கேட்டாள். சோனா தன் தாயிடமும் சொல்லி யிருந்தான். பெரியம்மாவிடமும் சொல்லி வைத்திருந்தான். அவன் அவர்கள் இருவரிடமிருந்தும் குடங்கள் வாங்கி வைத்திருந்து கார்த்திக் பூஜைக்கு மறு நாள் பாதிமாவுக்கு இரண்டுக்குப் பதிலாக நான்கு குடங்கள் கொடுக்கப் போகிறான். அமலாவும் கமலாவும், அவனுக்குப் பல பொருள்களைக் கொடுத்து அவனை மகிழ்விக்க முயன்றது போல அவனும் இந்தப் பெண்ணை, காலில் காப்பும் மூக்கில் மூக்குத்தியும், கட்டம் போட்ட புடைவையும் அணிந்த இந்தப் பெண்ணை மகிழ்விக்கக் காத்திருந்தான். அவளுக்கு ஏதாவது கொடுக்க முடிந்தால் அது ஒரு பெரிய சாதனை யாகத் தோன்றியது அவனுக்கு.

கார்த்திக் பூஜையன்றுதான் அந்தச் சம்பவம் நடந்தது. அவர்கள் மாலையில் வயலுக்குச் சென்றார்கள். நாற்புறமும் வயல்களில் சொக்கப்பனை கொளுத்தினார்கள். ஊர் மக்கள் தங்கள் பாவங்களைத் தொலைத்துப் புண்ணியம் சேர்த்துக்கொண்டு போக அங்கே வந்திருந்தார்கள். சோனா, லால்ட்டு, பல்ட்டு சொக்கப்பனையில் நெருப்பு வைத்துவிட்டு ஓடினார்கள். அவர்களுடைய வயல்களி லேயே மிகவும் நல்ல விளைச்சலுள்ள வயலில் அவர்கள் சொக்கப்பனை கட்டியிருந்தார்கள்.

இப்போது கார்த்திக் பூஜைக்கு ஒரு நல்ல அடர்த்தியான தானியக் கதிர் தேவை. அவர்கள் மூவரும் அப்படிப்பட்ட கதிரைத் தேடிக்கொண்டு ஒவ்வொரு வயலாகப் பார்த்துக்கொண்டு

471போனார்கள். மிகவும் அடர்த்தியான கதிரைத் தேடிக் கண்டு பிடிப் பவன் அந்தக் குடும்பத்துக்காக நிறைய புண்ணியம் சம்பாதித்துக் கொடுத்தவனாவான். யார் மிகவும் அடர்த்தியான கதிரைப் பறிக்கப் போகிறார்களென்று அவர்களுக்குள்ளே ஒரு போட்டி. சோனா ஒரு கதிரைப் பிடுங்கி அண்ணாக்களிடம் காட்டுவான்: ''பார்த்தியா அண்ணா ! எவ்வளவு பெரிசு!''

பல்ட்டு அதைப் பார்த்துவிட்டு, "உம், இதை விடப் பெரிசு இதோ பாரு !" என்று இன்னொரு கதிரைப் பிடுங்குவான்.

இவ்வாறு அவர் கள் கதிர்களைத் தேடிக்கொண்டு தூரத்து வயல் களுக்குப் போய்விட்டார்கள். இன்னும் கொஞ்ச தூரம் போனால்

பெரிய மியானின் நிலம். அந்தப் பிராந்தியத்திலேயே நல்ல விளைச் சல் உள்ள நிலம், ஏதோ ஒரு வயலில் லஷ்மிதேவி அவர்களுக் காக நல்ல அடர்த்தியான கதிர்களை வைத்துக் கொண்டு காத்திருந் தாள். லட்சுமி தேவியைத் தேடிக்கொண் டிருந்தார்கள் அவர்கள்.

அவர்கள் கதிரைத் தேடிக்கொண்டு வெகுதூரம் போய்விட்டார் கள். நல்ல நெற்கதிர் கொண்டு வந்தால் தான் அவர்களுக்கு மதிப்பு இருக்கும். பெரியம்மா சோனாவின் தாயிடம் சொல்வாள். "தன், பார்த்தியா, உன் பிள்ளை எவ்வளவு பெரிய கதிர் கொண்டு வந்திருக்கான்!'' என்று.

அவர்கள் வயலுக்கு வயல் சுற்றினார்கள். அந்தி மங்கும் நேரம், பின் பனிக்காலமாதலால் ஓரளவு பனி படர்ந்திருந்தது எங்கும். மங்கலான நிலாவொளி. அவர்கள் குனிந்து குனிந்து நெற்கதிர் களைக் கையிலெடுத்துப் பார்த்தார்கள். அளந்து பார்த்துவிட்டு விட்டுவிட்டார்கள். "ஊஹும், இது சின்னது! ஒரு முழ நீள!17வது இல்லாட்டா, கார்த்திக் சாமியோட கழுத்திலே, மாலையாப் போட முடியாது."

அப்போது யாரோ கையில் விளக்குடன் ஆற்றங்கரை வழியே நடந்து வந்தார்கள். விளக்கு வெளிச்சத்தைப் பார்த்தே அவர் களுக்குத் தாங்கள் வெகுதூரம் வந்திருப்பது தெரிந்தது. அவர்கள் தாங்கள் அறியாமலேயே ஹாய் ஜாதி மைதானத்துக்கு வந்துவிட் டிருந்தார்கள், நதிப்படுகையைத் தாண்டி வீடு திரும்பும் எண்ணம் அப்போதுதான் ஏற்பட்டது அவர்களுக்கு.

போய்க்கொண்டிருத்த பேலுவின் தலையில் ஒரு பெரிய டிரங்குப் பெட்டி இருந்தது. அதை ஒரு கையால் பிடித்துக்கொண் டிருந்தான் அவன். அவனுக்குப் பின்னால் சாம்சுத்தீன்; எல்லாருக்கும் பின்னால் பாதிமா. அவள் சல்வாரும் பூப்போட்ட தங்க நிற ஃபிராக்கும் அணிந்திருந்தாள். மறு நாள் அவள் மருத மரத்தடிக்கு

472வருவதாகப் பேச்சு. சோனா அவளுக்காக நான்கு குடங்கள் எடுத்து வைத்திருந்தான்.

'இப்போது எங்கே போகிறாள் பாதிமா, இவ்வளவு அலங்காரம் செய்துகொண்டு ?' அவளைப் பார்த்தும் அவளை ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு.

சாம்சுதீன் அவர்களைப் பார்த்து ஆச்சரியத்துடன் கேட்டான், “ நீங்களா?'' என்று.

"ஆமா, நாங்க நெல்லுக்கதிர் பறிக்க வந்தோம்.'' சாம்சுத்தீனுக்கு இப்போது தான் ஞாபகம் வந்தது. இன்று கார்த்திக் பூஜை என்று. அது தான் எல்லாரும் நெல்கதிர் பறிக்க வந்திருக்கிறார்கள். "கிடைத்ததா ?" என்று அவன் கேட்டான்.

அவர்கள் தாங்கள் பறித்த கதிர்களைக் காட்டினார்கள், சாம்சுத்தின் சிரித்தான்: ''லட்சுமி அம்மனுக்கு இத்தனூண்டு கதிர்தானா ? என் கூட வாங்க."

அவர்கள் எல்லாரும் நடக்கத் தொடங்கினார்கள், சோனா பாதிமாவுக்குப் பக்க ததில் நடந்தான். ஆனால் அவளுடன் பேச வில்லை. பாதிமாவும் ஒன்றும் பேசவில்லை. ஆனால் சோனாவால் வெகுநேரம் அப்படி இருக்க முடியவில்லை.

"உனக்குக் குடம் வேண்டாமா?'' என்று அவன் கேட்டான். ""வச்சிருங்க. டாக்காவிலேருந்து வந்தால் எடுத்துக்கறேன்." "நீ டாக்கா போகப் போறியா ?" “நாங்க எல்லாரும் போகப்போறோம். நான் ஸ்கூல்லே படிக்கப் போறேன். இங்கே வீட்டிலே பாட்டி மட்டும் தனியா இருப்பார்.''

''முன்னாலே சொல்லவே இல்லையே ?" ''எப்படிச் சொல்லுவேன் ? பாபாவே இன்னிக்குக் காலம் பரந் தானே சொனனார்.''

சாம்சுதீன் வீட்டிலிருந்தால் பாதிமா வீட்டைவிட்டு வெளியே போவதில்லை என்பது சோனாவுக்குத் தெரியும். அவன் மெளன மாகிவிட்டான். பாதிமாவும் சற்று மெளனமாயிருந்து விட்டுச் சொன்னாள். ''சோனா பாபு எனக்கு லெட்டர் போடுங்க."

“போ, போ ! நான் என்ன லெட்டர் எழுதறது ?" ''நீங்க எப்படி இருக்கீங்கன்னுதான்." ''சித்தப்பா திட்டுவார்." ''நான் சாயந்திரம் அழுதேன். பாபா கூடக் கேட்டார், ஏன் அழறேன்னு?"

"அழும்படியா என்ன நடந்தது உனக்கு ?" "ஒண்ணும் நடக்கலியா ?''

473சாம்சுதீன் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு தண்ணீரில் இறங்கி, மூன்று பெரிய பெரிய நெற்கதிர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து அவர் கள் முவரிடத்திலும் ஒவ்வொன்று கொடுத்துவிட்டுச் சொன்னான் :

"இந்தாங்க! இவ்வளவு பெரிய கதிரை எங்கேயும் பார்க்க முடியாது, தண்ணியிலே இறங்கல்லேன்னா நீஞ்சக் கத்துக்க முடியுமா ? என்ன, சொல்லுங்க ! லட்சுமியைக் கொண்டு வரணுமின்னாக் கஷ்டப் படணுமாக்கும்."

இவ்வாறு சொல்லிவிட்டுச் சாம்சுதீன் துண்டால் தன் உடம்பைத் துடைத்துக்கொண்டு பிறகு பேலுவிடம் சொன்னான். ''நீங்க போயிக்கிட்டிருங்க. நான் இவங்களைக் கொஞ்ச தூரம் விட்டுட்டு வரேன். இவங்களாலே தனியா வழியைக் கண்டு பிடிச்சு வீட்டுக்குப் போக முடியாது.”

சாம்சுதீன் மருதமரம் வரையில் அவர்களைக் கொண்டு வந்து விட்டான். கிழக்குப் பக்கம் மாலதியின் விடு. ஜப்பர் மாலதியைக் கவர்ந்துகொண்டு ஓடிவிட்டான். பக்கிரி சாயபு அவளைக் காப்பாற்றிக்கொண்டு வந்தார். ஜப்பர், சாம்சுதீன் கட்சியில் ஒரு முக்கிய ஆசாமி. ஆகையால் ஜப்பரின் குற்றத்தில் தனக்கும் பங்கு உண்டு என்ற உணர்வு ஏற்பட்டிருந்தது சாம்சுதீனுக்கு. மாலதிக்கு

நேர்ந்த தீமை அவனை வேதனைக்குள்ளாக்கியது,

இன்னொரு புறம் தன்னைப் பலவீனனாக, பரிதாபத்துக்குரியவனாகக் கருதிக் கொண்டான் அவன். அவன் முஸ்லீம் மக்களிடையே தன்னம்பிக்கையை உண்டாக்க முயற்சி செய்துவந்தான். அவர் கள் எதை தங்கள் விதி என்று நம்பி இவ்வளவு காலமாகப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அது விதியில்லை, அது அவர் களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர்களுக்குப் புரிய

வைத்துக்கொண்டு வந்தான் அவன்.

இவ்வாறு தன்னம்பிக்கை உண்டாக்கும் முயற்சியில் சில சமயங் களில் கடுமையான வார்த்தைகளையும் உபயோகிக்க நேரிட்டது. ஆனால் இந்த ஜப்பர் எவ்வளவு நீசத்தனமான காரியம் செய்து விட்டான்? ஜப்பரின் செய்கைக்காக அவன் உள்ளுற வருந்தி வருந்தி நீராகிக் கொண்டிருந்தான்.

அவன் திடீரென்று ஊரை விட்டு விட்டுப் போனால் ஊரில் பல விதமாகப் பேசுவார்கள். அவன் ஊரிலிருந்தால் எப்போதாவது மாலதியைச் சந்திக்க நேரிடும், அப்போது அவனால் அவளுடன் பேச முடியாது. அவளுக்கு இழைக்கப்பட்ட தீங்குக்காக அவன் தலை குனிந்து கொள்ள வேண்டியிருக்கும். மாலதியின் சந்திப்பைத் தவிர்ப் பதற்காகவே அவன் ஊரை விட்டு ஓடுகிறானோ என்று தோன்றியது. அவன் ஹாஜிசாயபுவின் சிறிய பிள்ளை அகாலுவைத் தனக்குப்

47411:5

பதிலாகக் கட்சித் தலைவனாக்கி விட்டான். அவனுக்குப் பட்டணத் தில் பொறுப்பு அதிகமாகிவிட்டது. அவன் இனிமேல் பட்டணத்திலே" தான் இருக்க வேண்டும்.

மருத மரத்தைத் தாண்டி வரத் துணிவு வரவில்லை, சாம்சுதீனுக்கு. நரேன்தாஸின் வீட்டில் ஒரு விளக்குக்கூட எரிய வில்லை, அவன் மரத்தடியில் தனியாக நின்றான். சிறுவர்கள் மூவரும் பத்திரமாக வீட்டை நெருங்கி, " நீங்க இனிமேல் போகலாம்" என்று அவனிடம் உரக்கக் கூறும் வரையில் அவன் அங்கேயே நின்றுகொண்டு, நரேன்தாஸின் வீட்டில் விளக்கு எரிகிறதா என்றும் பார்த்தான்.

பயங்கொள்ளி போல் மறைவில் நின்றுகொண் டிருந்தான் அவன். விளக்கு எரிந்தால் அதன் வெளிச்சத்தில் மாலதியின் முகத் தைப் பார்க்க அவனுக்கு ஆசை, ''மாலதி நீ என் குத்தத்தை மன்னிச்சுடு !'' என்று சொல்ல ஆசை.

மெதுவாகத் திரும்பிப் போனான் சாம்சுதீன். சோனா வீட்டுக்கு வந்தபோது தென் பக்கத்து அறையை அடுத்த வராந்தாவில் ஆசிரியர் சசிபூஷண் நின்றிருப்பதைப் பார்த்தான். அவர் ஊரி லிருந்து திரும்பி வந்துவிட்டார். அவர்களைக் கண்டதும் வேடிக்கை யாக, "என்ன, சீதேவியை விரட்டிப்பிட்டு மூதேவியைக் கொண்டு வந்துட்டீங்களா? எங்கே, லட்சுமியைக் காட்டுங்க பார்ப் போம்!'' என்று கேட்டார்.

அவர்கள் கதிர்களைக் காட்டினார்கள், "அடே எவ்வளவு பெரிய கதிர்! உங்களுக்கு எங்கே கிடைச்சது ?" சோனா தன் கதிரைக் காட்டினான். தன்னுடையது மற்றவர்களு டைய கதிர்களைவிடப் பெரியது என்று ஆசிரியரிடம் சர்ட்டிபிகேட் வாங்க அவனுக்கு ஆசை. இதை ஊகித்துக்கொண்ட சசிபூஷண், “சோனாவோட கதிர்தான் மத்ததைவிடப் பெரிசு'' என்றார்.

அதைக் கேட்டுக்கொண்டே உள்ளே ஓடினான் சோனா. அவ னுடைய அம்மா பூஜையறையில் கோலம் போட்டிருந்தாள். காஸ் விளக்கு எரிந்துகொண் டிருந்தது. பலகையில் கார்த்திகேயனின் சிலை, கீழே வரிசையாகக் குடங்கள், அவற்றில் பச்சரிசி வைக்கப் பட்டு மேலே ஜல்பாயிப் பழம். சோனா தன் கதிரைத் தாயிடம் கொடுத்தான். அவள் பயபக்தியுடன் அதை இரு கைகளாலும் பெற்றுக் கொண்டாள்.

ஆசியரைப் பார்த்ததுமே சோனாவுக்கு நடுக்கம் ஏற்பட்டுவிட் டது. அதன் பிறகு பூஜையில் அவனுக்கு உற்சாகமே இல்லை. சசிபூஷன் எப்போதும் கண்டிப்பாக இருப்பார். அவர் அதி காலையிலேயே எழுந்து விடுவார். பிறகு அறைக் கதவைத் தட்டிச்

475.18

சிறுவர்களை எழுப்புவார். அவர்களைக் கூட்டிக்கொண்டு வயல் புறத்துக்குச் செல்வார். காலைக் கடன்கள் முடிந்த பிறகு அவர் களுக்கு மட்கிலாக் குச்சியைக் கொடுத்துப் பல் துலக்கச் சொல்வார். அவர்கள் முகங்கழுவிக் கொண்டு வந்ததும் அவர்களுக்கு ஊர் வைத்த கொத்துக் கடலையை எண்ணி எண்ணிக் கொடுப்பார். அவர் பலவித வேர்களையும் மரப் பட்டைகளையும் சேர்த்து வைத் திருந்தார். வயிற்றுவலி, பல்வலி, வாயு, தலைவலி எல்லாவற்றுக்கும் அவரே மருந்து கொடுத்து விடுவார். சிறுவர்களைத் தேகப்பயிற்சி செய்யச் சொல்வார். பிறகு ஸ்நானம். அவர் சோனாவின் தலையில் எண்ணெய் தேய்த்து விடுவார். பிறகு எல்லோரையும் கூட்டிக் கொண்டு குளத்துக்குப் போய் நீச்சல் அடிப்பார். பிறகு, சுடச் சுடச் சாதம், கத்திரிக்காய் கறி சாப்பிட்டுவிட்டு எல்லாரும் பள்ளிக் கூடத்துக்குப் புறப்படுவார்கள்.

இவ்வாறு சசிபூஷண் வந்துவிட்டால் சிறுவர்களுடைய வாழ்க்கை முறையில் கட்டுப்பாடும் வந்துவிடும்.

சசிபூஷணுக்கு லால்ட்டு மேல்தான் மிகவும் எரிச்சல். லால்ட்டு நூற்றுப் பத்து பஸ்கி எடுக்க வேண்டும். சோனா ஐம்பது, பல்ட்டு நூற்றிருபது எடுக்க வேண்டும். சோனாவும் பல்ட்டுவும் சரியாகச் செய்துவிடுவார்கள், இந்தப் பயிற்சியை. ஆனால் லால்ட்டு சரியாகச் செய்யமாட்டான். அவன் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது அவனுடைய பேண்ட் அவிழ்ந்துவிடும். சசிபூஷண் அவனுடைய காதைப் பிடித்து அவனைத் தூக்குவார். "தன மாமி, தனமாமி!" என்று கூப்பிடுவார்.

அவருடைய குரலைக் கேட்டு ஓடிவரும் தன மாமி லால்ட்டு நிர்வாணமாக நிற்பதைப் பார்ப்பாள். உட்கார்ந்து எழுந்திருக்கும் போது அவனுடைய பேண்ட் அவிழ்ந்துவிடும். பேண்டில் நாடா இல்லை .

''இதென்ன ?'' ''நான் என்ன பண்றது சொல்லுங்க! அவன் பேண்டிலே கயிறு நிக்கிறதில்லை" என்று தனமாமி சொல்லுவாள்.

"அப்படியா? நான் கயிறு தயார் செஞ்சு தரேன்" என்று சொல்லி, சசிபூஷண் தாமே நூலை எடுத்து முறுக்கி லால்ட்டுவின் பேண்டில் நுழைத்துக் கொடுப்பார். லால்ட்டு பயத்தால் அதன் பிறகு கயிற்றை அவிழ்த்தெறிவதில்லை. சசிபூஷணிடம் பெட்டிப் பாம்பாக

அடங்கிவிடுவான் அவன்.

சசிபூஷணைப் பார்த்ததும் இதெல்லாம் ஞாபகம் வரும் சோனாவுக்கு. ஒரு பறக்கும் கப்பலும் நினைவுக்கு வருவதுண்டு. 476முதல் தடவையாக ஒரு பறக்கும் கப்பல் அவர்களுடைய ஊருக்குமேல் பறந்து சென்றது. டாக்காவை யடுத்த கர்மிடோலா வில் யுத்தத்துக்காகக் கப்பல் தளம் ஏற்பட்டிருந்தது. இரண்டாவது பெரியப்பா ஊருக்கு வரும்போதெல்லாம் யுத்தத்தைப் பற்றிய கதைகள் சொல்லுவார். அவன் பறக்கும் கப்பலைப் பார்த்துவிட்டு மைதானத்திலிருந்து வீடு திரும்பும்போது வழியில் ஒரு புதிய மனிதரைச் சந்தித்தான்.

“பையா, இங்கே வா !"

அவர் பேசிய பேச்சு அந்த ஊர்ப் பேச்சு அல்ல. அவன் திடுக் கிட்டு நின்றான்.

"டாகுர் வீடு எந்தப் பக்கம் ?"

அவன் விரலால் சுட்டிக் காட்டினான். அந்த மனிதரின் தலைமயிர் குட்டையாக வெட்டப்பட்டிருந்தது. அவர் நவத்வீபத்தைச் சேர்ந்தவர். அந்த ஊர் உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக வேலைப் பார்ப்பதற்காக வந் திருந்தார். பார்தியிலிருந்து நடந்தே வந்ததால் அவர் கால்களில் ஒரே புழுதி. சோனா வீட்டைக் காண்பித்துவிட்டு ஹாராண் பாலின் விட்டுக்குள் நுழைந்து, தன் வீட்டுக்கு அவருக்கு முன்னால் வந்து தன் சித்தப்பாவிடம் செய்தியைத் தெரிவித்தான். தெரிவித்து விட்டுத தான் வெளியே வந்து நின்றான்.

ச சிபூஷண் அங்கு வந்ததும், "இது உங்க வீடா ?" என்று கேட் டார்.

சோனா தலையசைத்தான். "சசீந்திரநாத் உனக்கு என்ன உறவு?'' "சித்தப்பா ." ''எங்கே, சித்தப்பாவைக் கூப்பிடு, பார்ப்போம்!''

அதற்குள் சசீந்திர நாத்தே அங்கே வந்துவிட்டார். அவரைப் பார்த்ததும் சசீபூஷண் அவருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, "'வந்துவிட்டேன்'' என்றார்,

"வா ங்க!'' என்று சொல்லி அவரை முன்னறைக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார் சசீந்திரநாத். ''இதுதான் உங்க அறை. இது உங்க கட்டில். இந்த மூன்று பேருந்தான் பசங்க.''

சோனா முன்னமே கேள்விப்பட்டிருந்தான். பரிசால் பக்கத்தில், ஓர் ஊரில் உதவித் தலைமையாசிரியராக இருந்த ஒருவர் இங்கே தலைமையாசிரியராக வரப் போகிறாரென்று. அவர்தான் இவர் என்று அவனுக்குப் புரிந்தது. இது விஷயமாக மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டவர் சசீந்திரநாததுதான்.

477

477அவர் அவர்களுடைய வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு தங்குவ தென்றும் அந்த மூன்று பையன்களையும் கவனித்துக்கொள்வ "தென்றும் முடிவாகியிருந்தது.

சசீந்திரநாத் சிறுவர்களிடம், "ஆசிரியருக்கு நமஸ்காரம் பண் ணுங்கள்" என்று சொன்னார்.

யார் முன்னால் நமஸ்காரம் செய்வது என்பதில் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் சசிபூஷணின் காலில் விழுந்தார்கள்.

முதலிலேயே சசிபூஷண். "எங்கே உங்க பல்லைக் காட்டுங்க" என்றார்.

சோனா பல்லைக் காட்டினான். "ஊஹம், நீங்க பல்லை நன்னாத் தேய்க்கல்லே" என்று சொல்லி விட்டு அவர் கைகால்களைக் கழுவிவிட்டு வரும்போது தாமே ஒரு மட்கிலாக் கிளையைப் பறித்து எடுத்துக்கொண்டு வந்தார். அதிலி ருந்து பல் குச்சிகள் ஒடித்து ஆளுக்கொன்றாகக் கொடுத்து, 'பற் களைக் கீழே இருந்து மேல்பக்கமாக எப்படித் தேய்க்க வேண்டும்? நாம் சரியாகப் பல் விளக்குவதில்லை, பல்லிலிருந்துதான் பல நோய் கள் உற்பத்தியாகின்றன' என்றெல்லாம் பேசிக்கொண்டே பல் தேய்க்கும் முறையைச் செய்து காட்டினார்.

சிறுவர் மூவரும் வெளியே வந்தபிறகு விழுந்து விழுந்து சிரித்தார்கள், அப்பேர்ப்பட்ட சசிபூஷண் திரும்பி வந்துவிட்டார். இனிமேல் சோனா நினைத்தபோது படிப்பை விட்டுவிட்டு மருத மரத்தடிக்கு ஓடமுடியாது. அவன் அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு கைகால் கழுவத் துறைக்குப் போனான். அவனுக்கு மனம் சரியில்லை. பாதிமா ஊரைவிட்டுப் போய்விட்டாள். அவனுக்கு ஏதேதோ நினைவு கள். அப்படியில்லாவிட்டால் அவன் ஒரு நாளும் அரிக்கேனை எடுத்துக்கொண்டு தன்னந்தனியாகத் துறைக்குப் போயிருக்க மாட்டான், அவனுக்குப் பயமாயிருக்கும்.

அவன் அரிக்கேன் விளக்கைப் புளியமரத்தடியில் வைத்து விட்டுத் தண்ணீரில் இறங்கினான். குனிந்து கைகளால் தண்ணீர் எடுத்தபோது எதிரில் எதையோ பார்த்துவிட்டுப் பயந்து போனான் அவன், தண்ணீரில் சிவப்பாக, சிவந்த அலகுள்ள மீன் கொத்திப் பறவை போல இரண்டு பாதங்கள் மிதந்தன. யாரோ லட்சுமி தேவியைத் தண்ணீரில் மிதக்க விட்டிருப்பது போலவும் அந்தப் பாதங்கள் தேவியின் குங்குமம் பூசிய பாதங்கள் போலவும் தோன்றின. யாரோ தண்ணீரில் முழுகியிருந்தார்கள்! அதைப் பார்த் துப் பயந்து போய்ச் சோனா அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தான், அரிக்கேன் அவனுடைய காலில் பட்டுக் கிழே விழுந்துவிட்டது.

478அவன் மூச்சிறைக்க ஓடி வந்து தென் பக்கத்து அறைக்குள் நுழைந்து பேச முடியாமல் குழறினான்.

சசிபூஷண், சசீந்திரநாத், நரேன்தாஸ் எல்லாரும் துறைக்கு ஓடி னார்கள். சசிபூஷண் தண்ணீரில் குதித்தார். அவருடைய தலைப்பக்கத் தில் கட்டையாக ஏதோ தட்டுப்பட்டது. அதைத் தூக்கிக்கொண்டு வந்தார். மாலதி! கழுத்தில் பானையைக் கட்டிக்கொண்டு தண்ணீ ரில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கிறாள் அவள். கால்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசிக்கொண் டிருந்தாள். நெற்றியில் குங்குமமும் உடம்பில் தன் எல்லா நகைகளையும் அணிந்துகொண்டு தண்ணீரில் முழுக்கத் துணிந்திருக்கிறாள்.

சசீந்திரநாத் நாடி பிடித்துப் பார்த்தார். உயிர் இருந்தது. மாலதியின் கண்கள் மூடியிருந்தன. நினைவு இல்லை. கடகடவென்று வாந்தி எடுத்தாள். முகம் வெளிறிப் போயிருந்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. வகிட்டிலும் குங்குமம். கால்களில் செம்பஞ்சுக் குழம்பு. நாற்புறமும் கூட்டம் கூடிவிட்டதைக் கூடக் கவனிக் காமல் சசீந்திர நாத் இமை கொட்டாமல் அந்த அதிருஷ்டம் கெட்ட பெண்ணைப் பார்த்துக்கொண்டு நின்றார். கூடியிருந்தவர்கள் உப்பைப் போட்டு அவளுடைய உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடினார்கள். மாலதி உப்புக் கடியில் தூங்கிவிட்டுக் காலையில் விழித்துக் கொள்ளுவாள் என்ற நம்பிக்கையில் அவர்கள் நாற் புறமும் உட்கார்ந்திருந்தார்கள். அன்றிரவு சோனாவுக்கும் தூக்கம் வரவில்லை. மாலதியின் தலைமாட்டில் அவனும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ரஞ்சித் மாமாவின் நினைவு வந்தது. ஏனோ அவனுக்கு ரஞ்சித் மாமாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.

மேலே பின்பனிக் காலத்து ஆகாயம். கீழே நெல்வயல்கள். ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் வெளிச்சம், நாற்புறமும் கூட்டம். உப்புக்கடியில் உறங்கிக்கொண் டிருந்தாள் மாலதி. நேரம் ஆக ஆகச் சோனாவுக்கு விழித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவன் தென்பக்கத்து அறையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் போய்ப் படுத்துக்கொண்டான். ஆனால், என்ன காரணமோ, தூக்கம் வரவில்லை அவனுக்கு. அவன் மறுபடி எழுந்து மாலதியைப் பார்க்கப் போன போது, என்ன ஆச்சரியம்! ரஞ்சித்

479மாமா கையில் தடியுடன் கூட்டத்தில் நின்றுகொண் டிருந்தார். சித்தப்பா அவரிடம் ஏதோ சொல்லிக்கொண் டிருந்தார்.

ரஞ்சித் மாலதியின் காலடிப்பக்கம் உட்கார்ந்தான். அவனுடைய சூட்கேசை எடுத்துக் கொண்டு போய்ப் பெரிய மாமியிடம் கொடுத்தான் சோனா. ரஞ்சித்தின் முகத்தில் முள்முள்ளாகத் தாடி வளர்ந்திருந்தது. பல இரவுகள் விழித்துக் கால்நடையாக வெகு தூரம் வந்திருந்தான் அவன். ஊர் வந்து சேர்ந்ததும் தூங்க நினைத் திருந்தான். தூரத்திலிருந்தே காஸ்விளக்கைப் பார்த்ததும் அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. விஷயத்தை அறிந்ததும் அவனுக்கு ஒரே அதிர்ச்சி .

மாலதிக்கு நேர்ந்த விபத்துக்கு நரேன் தாஸ்தான் காரணமென்று நினைத்தான் ரஞ்சித். நரேன் தாஸ் தானே மாலதியை ஒதுக்கி வைத் தான்! அந்த ஜப்பருந்தான் காரணம்! ஜப்பர் எங்கே ? இதை யெல்லாம் யோசிக்க நேரமில்லை அவனுக்கு. அவன் மாலதியின் வலக் கையை உப்புக்குள்ளிருந்து வெளியே எடுத்தான். நாடியைப் பார்த் தான். முன்னேற்றந்தான். அவன் மாலதியின் பாதத்தில் எவ்வளவு வெப்பம் இருக்கிறது என்று பார்ப்பதற்காக உப்பைச் சற்று நகர்த்தினான். பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு. ரஞ்சித்துக்கு ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. மாலதியின் முகத்தைப் பார்க்கவேண்டு மென்று தோன்றியது அவனுக்கு. அவன் அவளுடைய முகத்தை மூடியிருந்த உப்பை நகர்த்தினான்.

இரவின் கடைசி ஜாமம். இப்போது காவலாக இருந்தது அவன் ஒருவன் தான். உப்பை நகர்த்தியதும் அவள் பெருமூச்சு விடுவ தாக அவனுக்குத் தோன்றியது. அவளுடைய நெற்றியிலும் வகிட் டிலும் குங்குமம். அவள் விதவை என்று யார் சொல்வார்கள் ? அவளுடைய அழகிய முகத்தையும் இளமை பொங்கும் உடலையும் பார்த்துக்கொண்டு பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந் தான் ரஞ்சித். அவன் அவளுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த் தான். மோவாயைத் தொட்டுப் பார்த்தான். நல்லவேளையாக அவன் மற்றவர்களைத் தூங்கப் போகச் சொல்லிவிட்டான். எல்லாரும் தூக்கம் விழித்து என்ன பிரயோசனம்? யாரும் அறியாமல் அவன் இப்போது மாலதியிடம் அன்பு காட்டினான். அவன் வானத்தை அண்ணாந்து பார்த்தபோது விடியத் தொடங்கிவிட்டதென்று தெரிந் தது. அவன் மாலதியை உப்பிலிருந்து தூக்கிக்கொண்டு வந்து தென் பக்கத்து அறையில் ஒரு ஜமுக்காளத்தின் மேல் கிடத்தினான். அவளைக் கூப்பிட்டு, ''மாலதி, இதோ நான் வந்துட்டேன்" என்று கூறினான்.

நீர் வளம் நிறைந்த இந்தப் பிராந்தியத்து மக்கள் இறக்க விரும் பினால் நீரையே சரணடைவார்கள். மாலதிக்கு உயிரோடிருப்பதில்

480ஆசையில்லை. அவள் தண்ணீருக்குள் தன் பிரியத்துக்குரிய வாத்தைத் தேடிக்கொண்டு தானும் முழுக்கத் துணிந்துவிட்டாள். இனியும் மிதந்து கொண்டிருக்கப் பிடிக்கவில்லை அவளுக்கு.

காலையில் ரஞ்சித் சசீந்திரநாத்தைப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகச் சொன்னான். போலீஸிடம் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பாததால் அவன் தானே போகவில்லை. ஸ்டேஷன் அங்கிருந்து ஆறு கோச தூரம்.

சசீந்திரநாத் சென்ற பிறகு ரஞ்சித் நரேன்தாஸிடம் போய், ''அவளை ஏன் தனிக் குடிசையிலே வச்சீங்க ?" என்று கேட்டான். நரேன்தாஸ் நூல் சுற்றிக்கொண் டிருந்தான். வரவர மாலதியால் அதிகத் தொந்தர வு ஏற்படுவதாகத் தோன்றியது அவனுக்கு, அவன் பதில் சொல்லவில்லை.

மாலதி தங்களுடன் வசிப்பதில் நரேன் தாஸுக்கு விருப்பம் இல்லை என்பது ரஞ்சித்துக்குப் புரிந்தது. அவனுக்கு ஆசாரம் இருந்தது. வீட்டில் லட்சுமி படம் இருந்தது, ஆகவே ரஞ்சித்துக்கு இதுபற்றித் தொடர்ந்து பேசத் துணிவு வரவில்லை. அவன் மாலதிக்கு என்ன உறவு ? அவள் இனி தனிக்குடிசையில் இருக்க வேண்டியதுதான்.

அவள் இனி வீட்டுக்குள் இருக்க முடியாது.

ஸ்டீமரிலும் ஒரு மனிதன் - மேக்னா நதியில் பிரயாணம் செய்து கொண்டிருப்பவன் - கிராதியின் மேல் சாய்ந்துகொண்டு மாலதி யைப் பற்றி நினைத்துக்கொண டிருந்தான். ஆற்றின் இருகரை களிலும் எவ்வளவு மரங்கள், செடிகள் ! ஸ்டீமர் போகப் போக அவனுக்குத் தோன்றியது : ஒரு சிறுமி ஆற்றங்கரையில் மரங்களுக்குக் கீழே வேகமாக ஓடிககொண் டிருக்கிறாள், அவளுடைய தலைமயிர் பறக்கிறது. வெறும் உடம்பு. இடுப்பில் புடைவையைக் கச்ச மாகக் கட்டிக்கொண் டிருக்கிறாள்.

தாமோதர்தி மடத்தைக் கடந்துவிட்டான் சாம்சுதீன். இதோ உத்தவ்கஞ்சு வந்துவிடும். ஆனால் அவனுக்கு இதெல்லாம் தெரிய வில்லை. ஒரு பெண் வயல்களைக் கடந்து ஓடிக்கொண் டிருப்பது தான் தெரிந்தது. அவன் எதையோ அணுக விரும்பினான். ஆனால் முடியவில்லை. மாலதி காணாமற்போன முதல் சாம்சுதீன் ஒடுங்கிப் போய்விட்டான், ஜப்பர் அவனுடைய ஜாதிக்காரன், லீக் கட்சி யின் தூண். அந்த ஜப்பர் காசுக்கு ஆசைப்பட்டு இந்த இழிவான காரியத்தைச் செய்துவிட்டான். மலர் போன்ற வாழ்க்கையை நாசமாக்கி விட்டான். தன் சிறுமிப் பருவத்தில் ஆண்டு முழுவதும் மலராக மலர்ந்திருந்த அவள் இப்போது உயிர் வற்றிப்போய்ப் பைத்தியம் போலாகிவிட்டாள். ஏதோ ஒரு விபரீதம் நடக்கும் என்று சாம்சுதீனின் உள்ளுணர்வு கூறியது. அவன் தன் மனக்

481

81.கண்ணில் தெரிந்த காட்சியிலிருந்து பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

பேலு தன் கன்றுக்குட்டியைப் புல்வெளிக்குக் கொண்டு போய்க்கொண் டிருந்தான். நாற்புறமும் நெல், பருப்பு வயல்கள். அதனால் கயிற்றை இறுகப் பிடித்துக்கொண் டிருந்தான் பேலு. கயிற்றைச் சற்றுத் தளர்த்தினால் கன்று நெல்லிலோ பருப்பிலோ வாய் வைத்துவிடும், இந்த மாதத்தில் இரண்டு தடவை கெளர் சர்க்காரின் வேலைக்காரன் அப்துல் கன்றைப் பவுண்டில் கொண்டு போய் அடைத்துவிட்டான். வேலு நொண்டியாகி விட்டதால் இப்போது யாரும் அவனை லட்சியம் செய்வதில்லை, அவனுக்குப் பயப்படுவதில்லை. அவன் எவ்வளவோ பாவம் செய்திருக்கிறான். அதன் பலனை இப்போது அநுபவிக்கிறான் என்று எல்லாரும் நினைக்கிறார்கள்.

இப்போது உலகத்திலே இருக்கிற எல்லாப் பெரிய மனிதர்களை யும் கத்தியாலே குத்திக் குடைய அவனுக்கு ஆசை தான். ஆனால் முடியவில்லை. அவன் கையில் சக்தியில்லை. கறுப்புக் கயிற்றில் சோழி கட்டிய அவனுடைய கை வலுவின்றித் தொங்கியது. ஒவ்வொரு சமயம் அவனுக்கு அதை ஒரே வெட்டில் துண்டித்து விடலாமா என்று தோன்றும். கழுத்தை வெட்டுவது போலக் கையை வெட்டிவிட்டால் என்ன ? ஆனால் அதுவும் செய்ய முடியவில்லை. அவனுக்கு இந்த வலுவற்ற கையின் மேல் பாசம் போகவில்லை. வெயிலில் அந்தக் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது அதைத் தன் குழந்தையாக நினைத்துக் கொள்ளுவான் பேலு.

அவன் கயிற்றைப் பிடித்துக் கன்றை இழுத்துக்கொண்டு நடந் தான், கன்றுக்கோ அந்த இடத்தை விட்டு நகரவே மனம் இல்லை. எலும்பும் தோலுமாயிருந்த அந்தக் கன்றுக்கு வயிறு நிறையத் தீனி போட அவனால் முடியவில்லை. இந்தக் கையும் இந்தக் கன்றும் அவனை பைத்தியமாக்கின ; ஆன் னுவுந்தான். அவன் இப்போது பழைய பேலு, சடுகுடு விளையாட்டு வீரன் பேலு - இல்லையே! அவனுடைய பீபி பிறர் வீடுகளுக்குப் போகிறாள். அவன் யாரிடம் சொல்வான், இந்த வெட்கக்கேட்டை! இரவில் பீபி பக்கத்திலிருந்தால் அவனுக்குத் தூக்கம் வராது. அவள் இப்போது எங்கோ கேளிக்கை செய்துகொண் டிருப்பாள். ஹாஜிசாயபுவின் சிறிய பிள்ளை ஆகாலு, அவளுக்காக மூங்கில் காட்டில் ஒளிந்துக் கொண்டிருப்பான். அவன் கன்றுக்குட்டியை மேய்க்க வந்து விட்டால் அல்லது நெல் கதிரைத் திருடப் புறப்பட்டுவிட்டால் அவனுடைய பீபி ஊர் மேயக் கிளம்பிவிடுவாள்.

482இப்போது அவன் எப்படிக் காலம் தள்ளுகிறான் ; எப்படி அவனு டைய குடும்பம் நடக்கிறது ? இரண்டு பேர் அடங்கிய குடும்பம்? மனவருத்தத்துடன் ஆற்றங்கரையில் சுற்றுவான் பேலு. கன்று கூட இருந்தால் வேகமாகவும் நடக்க முடியாது. கன்றை இழுத்துக் கொண்டு நடப்பான், சமயம் பார்த்துத் திருட்டுத்தனமாக நெல் கதிரை நறுக்கி மடியில் வைத்துக்கொள்வான்; ஜோட்டன் முன்பு செய்வாளே, அது போல.

ராத்திரி வேளையில் உளுத்தம்பயிரைப் பறித்துக்கொண்டு வந்து விடுவான், பார்லி, கோதுமைப் பருவ காலத்தில் பார்லி, கோதுமை. இதெல்லாம் தனியாகச் செய்ய முடியாது அவனால். பீபி அவ னுக்கு உதவி செய்வாள். அவள் வயலுக்குள் நுழைந்து கதிரை அறுப்பாள். நிலா காயும் இரவுகளில். அவன் வரப்பில் நின்று கொண்டிருப்பான்.

நடுநடுவே குரல் கொடுப்பான், "யாரது?" என்று. சீட்டியடிப்பது போல் பதில் ஒலிக்கும். "நான் தான்." "கூட யாரு ?" "மியான் சாயபு.''

ஆன்னுவுக்குக் குஷி பிறந்துவிட்டால் அவனை மியான் சாயபு என்று கூப்பிடுவாள். அந்தச் சமயங்களில் அவள் அவனுடைய ஆன்னு. அவள் இன்னும் யாரையோ காதலிக்கிறாள் என்பதையே மறந்துவிடுவான் போலு. பீபியோடு கதிர் திருட வயலுக்கு வந்துவிட்டால் அவனுக்குக் கவலையில்லை. ஆனால் அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்தால் அவனுக்கு அவள்மேல் சந்தேகம் வளர்ந்து கொண்டே இருக்கும். அவள் திருட்டுத்தனமாக வேறு வீட்டுக்குப் போய்விடுகிறாள். அவள் மேல் வரும் கோபத்தை அவன் கன்றுக்குட்டியின்மேல் காட்டி அதைக் காலால் உதைப் பான். சனியன் பிடித்த காக்காய் கூட எனக்குப் பயப்பட வில்லையே! நாற்புறமும் மைதானம். பேலுவின் மனக்கண்ணில் பைத்தியக்கார டாகுர் நடந்து போய்க் கொண்டிருப்பது தெரியும். அவருடைய தலைக்குமேல் பலவிதப் பறவைகள் பறக்கும். அப்போது அவன் தன் முரட்டுக் குரலில் கத்துவான், "டாகுர் நீ என்னை நொண்டியாக்கிட்டியே!'' என்று.

அவன் தன் வலது கையால் கன்றுக்குட்டியை இழுத்துக் கொண்டு போனான். கன்று செங்கடம்பு மரத்தடிக்கு வந்ததும் அங்கேயே மரமாக நின்றுவிட்டது. அதை அங்கிருந்து கொஞ்சங், கூட அசைக்க முடியவில்லை அவனால். இத்தனை சிறிய பிராணியை அவனால் அசைக்க முடியவில்லையே!

483.