தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

இணையத்தில் கிடைக்கும் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் - என் மனம் போன போக்கில் - தேர்ந்தெடுத்து Chrome browser-ஆல் தமிழில் மொழிபெயர்த்து, பதிவிடுகிறேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்

Wednesday, September 14, 2016

ஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா ------------------- மறு பதிப்பு


ஊர்க்கொளுத்திகள் - ஆதவன் தீட்சண்யா

அவர்கள்தான் எவ்வளவு பெரிய கருணைவான்கள்
உலகம்
அவர்களது காருண்யத்திற்கு நன்றி சொல்கிறது
இம்முறை அவர்கள்
நம்மில் ஒருவரையும் கொல்லாமல் விட்டதற்காக
ஆனால்
இந்த வெற்றுடம்பிற்குள்ளா இருக்கிறது நமதுயிர்?


Ravi Kumar

10 hrs ·
(01-01-2016 -8.15am)
Rajan Kurai Krishnan commented on this.


ரவிக்குமார் கவிதை

ஆசையாகத்தான் இருக்கிறது

இன்னொரு வீடு எரிக்கப்படாது
இன்னொரு கழுத்து அறுக்கப்படாது
இன்னொரு மானம் பறிக்கப்படாது
இன்னொரு பாதை மறுக்கப்படாது
இன்னொரு கதவு மூடப்படாது
இன்னொரு வாய்ப்பு பறிக்கப்படாது
எனச் சொல்ல


ஆசையாகத்தான் இருக்கிறது

எல்லோரது குரலும் கேட்கப்படும்
எல்லோரது குறையும் தீர்க்கப்படும்
எல்லோரது காயமும் ஆற்றப்படும்
எல்லோரது கண்ணீரும் துடைக்கப்படும்
எல்லோரது பேச்சும் மதிக்கப்படும்
எனச் சொல்ல

ஆசையாகத்தான் இருக்கிறது

நிரபராதிகள் இனம் காணப்படுவார்கள்
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
அயோக்கியர்கள் அகற்றப்படுவார்கள்
நல்லவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்
எனச் சொல்ல

எனக்கும்
ஆசையாகத்தான் இருக்கிறது
இந்த வருடத்தைப்போல இருக்காது
அடுத்த ஆண்டு
எனச் சொல்ல




விமலாதித்த மாமல்லன்
Tuesday, February 15, 2011

பிரமிளின் சுண்டக் காய்ச்சிய சண்டைக் கவிதை

ஒரு வானம்பாடிக் 
கும்பலுக்கு

எதிர்காலச் சொப்பனத்தின்
புழுதி படிந்து
குரல் வரண்டு
சிறகு சுருண்டு
கங்கையைக் கழிநீராய்க்
குரல் கமறிப் பாடுகிறீர்.

ஏழைக்கும் அடிமனத்தில்
ஆன்ம உணர்வுண்டு.
சடலத்துப் பசிதான்
சாசுவத மென்றால்
நடைபாதை தோறும்
சிசுக்கள் கறியாகும்.
இதற்கும் கீழே
இன்றைய வாழ்வின்
கோணல்களைக்
காணத் தெளிவற்றுப்
பாட்டாளிக் கவிதையென்று
அரசியலுக்குத் தலையும்
கலைக்கு வாலும்
காட்டுகிறீர்!
உயிரைக் கணந்தோறும்
கையில் பிடித்தபடி
வாழத் தவிக்கும்
ஏழைக்கு உங்கள்
ரொமாண்டிக் புஷ்பங்களும்
அக்கினிப் போலிகளும்
என்ன எழவென்றே
புரியாது.
யாருக்காய் எழுதுகிறீர்?
வயிற்றுக்கு உங்கள்
பாட்டாளிக் கவிதை
உணவல்ல.
சோறு முளைக்கப் 
பயிரிடு போ!
இன்றேல் ரசனைக்கு,
மனசின் பசிக்கு
உண்மைக் கவிதைப்
பயிர் காட்டு!

கவிச்சிறகு முளைக்க
மனக்கிணற்றில் ஆழ்ந்து
வாழ்ந்து திரண்டெழுந்த
தோளிருக்க வேண்டும்.
தொழிலாளி தோளோடு
சேர்ந்துழைக்கக் கூட
தோளில் தியாகத் 
தினவற்று அவனை
எதிர்காலச் சொப்பனத்தால்
சொல்லால் கொள்கையால்
கண்கட்டிக்
‘கொல்’ என்று போதித்து
அணிவகுத்து நிற்கின்றீர்
யூனிஃபார்ம கவிதைகளில்
அக்கினியின் புத்திரன்கள்.
பெயரும் பொருந்தியது;
’அக்கினியின் புத்திரன்கள்’
அத்தனையும் சாம்பல்.

தனித்து ஒருவனாய்த்
தன்னை அகழ்ந்துத்
தற்பரிவைத்
தன்மீது தானே
சுமத்தும் குற்றைத்தைத்
தகர்த்தெறிந்து,
வாழ்வின் உக்கிரத்தை
வெளிக்கொணரும்
எழுத்துத் தவம்
கூடி விசிலடிக்கும்
கும்பலுக்கு வாராது.

கேட்கிறது உங்கள்
செத்த சிறகுகள்
மாரடித்துக் கொள்ளும்
சுயதம் பட்டம்.
‘பாட்டாளி’ என்றும்
‘உழைப்பு’ என்றும்
அலறிச் சலித்த
தம்பட்டத் தோல்
தொய்ந்து
இடையிடையே குதித்தெழுந்து
’நாங்கள் புஷ்பங்கள்
ரசனைக்குப் புறம்பான
மறைவிடத்திலே முளைத்த
மயிர்க்கால்கள்’
என்றுளரத் துவங்குவது
இலக்கிய நபும்சகத்தின்
இயல்பு - இது அறிவோம்.
கும்பலில் சேர்ந்து
கோஷிக்கும் கூத்து
மனசின் துயிலில்தான்.
தூக்கத்தில் எழும்புவது
விழித்ததும் தொங்கிவிடும்.
ஏழைக்குழைக்குமுன்
மனசாய் விழித்தெழு
வாழ்வு முழுவதும்
விழிப்பே மயமாக்கும்
எழுத்தை உருவாக்கு.
அந்தவொரு பெருவிழிப்பில்
செல்லாது உந்தன்
’சுவரொட்டிக் கவிதைகள்’

எழுத்தும் உழைப்பே!
அநுபவத்தின் முழுவிரிவை
ஆழத்தை உணர்ந்து 
உழைத்து எழுதுவது
அரசியல் சுவரொட்டி
எழுத்துப்பல் காட்டி
இளித்திகழும் உமக்கு
உம்முடைய தோளுணரா
பாட்டாளி உழைப்பைப்
பாடுதற்கு மட்டும்
ஏதுரிமை?

வாழ்க்கைப் பெருநிலத்தை
காலாதீதப் நீள்வெளியை
உணரத் துணிந்தகவி
சடலத்தின் பசிக்கு
முடிசூட்ட மாட்டான்.
அதைத் தணிக்க அதற்குத்
துறைகணித்து இருக்கிறது.

வாழ்வோ காலமோ
உங்கள் பிரத்தியேக
சோளக் கொல்லையல்ல;
உங்களது காவலில்தான்
அது வாழ்கிறதாய்
எண்ணாதீர்.
அரசியல் குச்சிகளின்
எலும்புக் கூட்டில்
எழுந்து நிமிர்ந்து
பழைய கிழிசல்சொற்
கோவைச் சட்டைகளுள்
மார்க்ஸீய வைக்கோலாய்த்
திணித்து நின்று
மிரட்டாதீர்
பொம்மைகளே.
கட்சித் தலைவர்கள்
‘பிரிஸ்கிரிப்ஷன்’ செய்த
கனவுகளை மட்டும்
கண்டு
கண்கள் கரியான
கபோதியே வணக்கம்!
சொற்களைக் கற்களாய்
வீசும் வெறும் கும்பல்
சுயமாய் இயங்காது.
நெரூடா போல்யாரும்
வருடித்தான் எழும்பும்.

கரித்துண்டு ஒன்றுக்கு
சிவப்புக் கலர் தோய்த்து
நெருப்பின் பெயரை
இட்டுவிட்டால் என்ன அது
சுட்டுப் பொசுக்கிடுமா?
இல்லை வெறும் 
சிவப்பாய்க் கிறுக்குமோ
சொல்லும்!


(ஆறாவது ‘வானம்பாடி’யின் ‘நீங்கள் வல்லினங்கள் அல்ல’ என்ற தயாரிப்பு - சில அரசியல் நிறுவனங்கள் எழுத்தாளனை அவமானப் படுத்த செய்யும் முயற்சிகள் - ஆகியவற்றைக் கண்டவற்றின் கோப விளைவே இப்பாட்டு. எழுத்தாளனின் கெளரவத்தை, அது எங்கே வேறூன்றி நிற்கிறது என்பதைக் காட்டும் முயற்சி இது. அத்தோடு ’அரசியல் இலக்கிய’ ஆசிரியர்களுக்கு, அவர்கள் இலக்கியத்தைப் பொறுத்தவரை எந்தக் கோணத்தில் நிற்கிறார்கள் என்பதையும் காட்ட முயன்றிருக்கிறேன்)

-பிரமிள்
அஃ ஆகஸ்ட் 1972 முதன்முதலில் எழுதிய விமர்சனக் கவிதை.

நன்றி: பிரமிள் கவிதைகள், தொகுப்பு கால சுப்ரமணியம். 


உண்மையான கலைஞன் கும்பலுக்கு எதிரி. 

பிரமிள் ’அறம்’ பாடி, கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. அந்த மொண்ணைத்தனம் போய் புதிய மொக்கைத்தனம் வந்திருக்கிறது. புதிய கும்பல் கபோதத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் தீவிர இலக்கிய வாசகனுக்கு எது இலக்கியம், என பிரமிளின் இந்த எழுத்து இன்றும் அடையாளப்படுத்துகிறது.

ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் இரண்டு கும்பலுக்கும் தலைமையகம் ‘கோவை’ ஒன்று ரொமாண்டிக் முற்போக்கு மற்றது ரொமாண்டிக் பரப்பிலக்கியம்.

உள்ளீடற்ற முற்போக்கு மொண்ணைக் கவிதைகளை அம்பலப்படுத்தி பிரமிள் எழுதியது, பீம்சிங்கின் ’ப’ வரிசைப் படங்களையும் நாணச்செய்யும் அதீத நாடகீய ஒப்பனைக் கதைகளை, உயர்ந்த இலக்கியம் என்று முன்னிலைப் படுத்தித் தகர டப்பாக்களை உடுக்காய்த் தட்டியபடி நாட்டியமாடும் கோமாளிகளுக்கும் பதில் சொல்கிறது. 

திறந்த மனத்துடன் பார்க்கத் திராணி இருப்பவர்களுக்காக இங்கே இது மீள் பதிவாகிறது.

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள் 

பொய்யின் கூன்முதுகில்
விட்டெறிந்த மண்ணுருண்டை
மோதிச் சிதறிற்று பட்டாபிஷேகம்.
மண் வளர்ந்து
கானகப் பாதையாயிற்று...
நகர் நீங்கி நெடுந்தொலைவில்
எதிரே,
முலைமொக்கு குத்தி நிற்க
கூனிக் கிடந்தது ஒரு கிழவிப் பாறை.
அகலிகையும் கூனியும்
ஆத்மா கலந்துறைந்து
கல்லாயினரோ?

என்றோ ஒரு நாள்
தனது விளையாட்டுச் சிறுபாதம்
அறியாது மிதிக்க –
அற்புதம்! –
ஒருகல்
துயில் கலைந்தெழுந்த்து!

பழைய கருணையை
பரிசோதித்துப்
பார்ப்போமென்று
இன்றிக்கல்லை
வேண்டுமென்றே இட்றி
நின்று
கவனித்தான்.

கல்லில் கலந்து நின்ற
கூனியின் பாபமோ
கந்தல் வரலாறு
கருணையின் பாதியை
நழுவவிட்ட காரணமோ
அற்புதம் நிகழவில்லை.
மிஞ்சியது
இடறிய கால் விரலில்
ஒரு துளி ரத்தம்.
கால் விரல் வலித்த்து
கருணை கலைந்தது.
த்ச்’ என்றான்
மனிதன் ராமன்.

வழி நடந்தது
அவதாரம்.

*
(1976)


பிராபல்ய ஏணியில் ஏற முற்படுவோர்தான் அக்கம்பக்கம் பார்த்து ஏற வேண்டும் கல்லோடும் மண்ணோடும் மண்கிளப்பும் புழுதியில் பிரமிள் சொல்லிய மனப்புரவி ஓட்டுபவனுக்கு எவன் புட்டத்தையும் தலையில் 
ஏந்தவேண்டிய அவசியம் ஏது.

http://www.maamallan.com