தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Monday, August 29, 2016

தனிமையெனும் இருட்டு - அம்பை

https://archive.org/download/orr-11895_Thanimaiyenum-Iruttu/orr-11895_Thanimaiyenum-Iruttu.pdf

தனிமையெனும் இருட்டு - அம்பைஅறையில் விளக்குப்போட அவளுக்கு மனம் வரவில்லை. அந்த வெளிச்சம் அவள் தனிமையைப் பிரகடனப்படுத்தும் என்று ஒரு மன உறுத்தல் அவளுக்கு எப்போதுமே அந்த இருட்டு பரவும் வேளையில் உண்டாகும். போடத்தான் வேண்டும் என்ற அவசியம் வரும்வரை அவள் சாதாரணமாக விளக்கைப் போடமாட்டாள்.

இந்த இருட்டு அவளுக்குப் புதிதல்ல. பெங்களூரில் அவள் வீட்டுப் பின்புறம் விசாலமாக நீளும் படிக்கட்டில் கன்னத் தைக் கையிலேந்தி அமர்ந்தவாறே நட்சத்திரத் துகள்களைப் பார்த்துக்கொண்டு, பல நட்சத்திரங்களை அவளே ஒன்று சேர்த்து, பூத்தேராகவும், முல்லைச் சரமாகவும், மலர் ஊஞ்சலாகவும் கற்பனை செய்துகொண்டு இருப்பாள். இரண்டு தென்னை மரங்கள் கோணாமாணாவென்று இலைகளை நீட்டிக் கொண்டு நிற்கும். ஒரு மரத்தின் இலைக் கொத்தின் கீழேதான் திடீரென்று கத்தி இவள் கவனத்தைத் திருப்பும் ஒர் ஆந்தை உட்காரும். அதன் ஒளிரும் கண்களைப் பார்த்துவிட்டு, தலையைத் துாக்கி நட்சத்திரங்களையெல்லாம் பார்ப்பாள். நட்சத்திரக் குவியலைப் பார்த்த கண்களுக்கு அந்த ஆந்தைகூட அழகுதான்.

முதுகில் வந்து இடிப்பாள் அம்மா "சாயங்கால வேளையிலே, விளக்கேத்தாமே, கொல்லைக் கதவைத் திறந்துண்டு இது என்னடி வேலை? மூதேவி வருவாடி வீட்டுக்கு!"

"அம்மா பாரேன். எனக்குச் சின்னப் பொண்ணா இருந்தப்போ கருப்பிலே வெள்ளிப் பூப்போட்ட பாவாடை வாங்கினியே, அதே மாதிரி அங்கே ஒரு பொண்ணு போட்டிண்டிருக்கா பாரு" என்று அவள் வானத்தைக் காட்டுவாள்.

"ஆமாம். தினம் பார்த்து ஒண்ணொன்னு சொல்லு. இருட்டுப் பிசாசு! எழுந்திருடி."

அலுத்துக்கொண்டே எழுந்து, கழுத்தை வளைத்து, ஆந்தையைப்

பார்ப்பாள்.

தனிமையெனும் இருட்டு * 39 o'

________________

"உனக்குதான் இருட்டை அனுபவிக்கக் கொடுத்து வைச்சிருக்கு. நான் போறேன்" என்பாள்.

"யாரோடேடி பேசறே?" "ஆந்தைகிட்டே." பெரிய கண்களை உருட்டி அம்மா விழிப்பாள்.

"நீயும் உன் அசட்டுக் கற்பனையும்! பாவாடையாம், ஆந்தை கிட்டே பேசறாளாம், போடி உள்ளே. இனிமே கொல்லைப் பக்கம் இருட்டிலே உட்கார்ந்தே, காலை உடைச்சுடுவேன்" என்று அம்மா திட்டுவாள்.

தினமும் அது நடக்கும்.

அந்தக் கொல்லைப்புற இருட்டில் அவளும் அவள் கற்பனைகளு மாய் அமிழ்ந்து கிடக்கும்போது அவள் மனத்தில் அம்மா, அப்பா, அண்ணா, அவர்கள் வீட்டு நாய் லில்லி எல்லோருமே வேறு மாதிரி தென்படுவார்கள். அம்மாவை அவள் பக்கத்து வீட்டு சுனந்தாவின் அம்மாவைப் போல் ரொம்பப் படித்தவளாகக் கண்ணாடி போட்டுக் கொண்டு இருப்பதைப் போல் நினைத்துக்கொள்வாள். கோடி வீட்டு அரை ஆள் உயர அல்சேஷன் போல் லில்லி மனத்தில் உருவாகும். அம்மா ரஸ்புஸ்ஸென்று இங்லீஷ் பேசுவாள். லில்லி வட்டாரத்தையே நடுங்க வைக்கும். அப்பா சினிமாவில் வரும் அப்பாக்களைப் போல் முதுகைத் தடவி "நீ இந்த வீட்டு விளக்கம்மா" என்பார். அண்ணா “பாசமலர்” சிவாஜி கணேசனாக மாறித் தங்கை என்றால் உயிரை விடுவான். அந்த இருளில் இவளைச் சுற்றி ஒர் அழகான, அவளுக்குப் பிடித்த உலகம் உருவாகும்.

மீண்டும் உள்ளே வந்து வழக்கமான அதிகம் பேசாத அப்பா, ஒன்பது கெஜப் புடவை அம்மா, "அருணா, நாளைக்குப் பரீட்சை எனக்கு. ராத்திரி ரேடியோ வைச்சே பல்லைத் தட்டிடுவேன்" என்று சொல்லும் அண்ணா இவர்களைப் பார்க்கும்போது, பளாரென்று முகத்தில் அறைவது போலிருக்கும்.

பல தடவைகள், அவள் மனத்தில் அவளே உண்டாக்கிக்கொள்ளும் தோற்றங்களுக்கும் நிஜமானவைக்கும் உள்ள இடைவெளியை எண்ணி பயந்தே அவள் தனியாக உட்கார பயப்படுவாள். அப்படியும், ஸ்வாமிக்குச் சந்தன அபிஷேகம் செய்யும்போது தலையிலிருந்து ஒழுகத் தொடங்கிப் பின் மளமளவென்று கீழே வரை வந்துவிடு வதைப் போல், வானத்துக்கு இருட்டாபிஷேகம் - அது அவளாக ஏற்படுத்திக்கொண்ட சொல் - நடக்கும்போது அந்தக் கொல்லை வாசற்படியும் காற்றில் அசையும் தென்னை இலைகளும், கண்களை உருட்டிக் கீரீச்சிடும் ஆந்தையும் அவளை வாவாவென்று கூப்பிடும். இருட்டில் பலபேர் அவளைச் சுற்றியுள்ளதுபோல் படும்.

令 40 夺 அம்பை

________________

அப்படி ஒருநாள் அவள் உட்கார்ந்துகொண்டிருந்தபோதுதான், அம்மா சொன்னாள் : "இனிமே இப்படி எல்லாம் தனியா உட்கார வேண்டாமடி அருணா. உட்காருன்னாலும் இனிமே உட்கார மாட்டே துணைக்கு ஆள் வரப்போறது."

"என்னம்மா சொல்றே?"

"பேரு ரங்கநாதன். அவ்வளவுதான் சொல்வேன்" என்றாள் அம்மா. அந்தச் செய்தி அமுத தாரையாய் நெஞ்சில் இறங்கியது. அவள் கற்பனைகளை எல்லாம் பகிர்ந்துகொள்ள ஒருவன் வரப்போகிறான். இருட்டில் உட்கார்ந்து கோத்த கனவு மாலை கழுத்திலேயே வந்து விழப்போகிறது. ஏதோ ஒரு வகையில் எதிலிருந்தோ விடுபட்டது போலிருந்தது. அவள் தனிமை ஆசையும், நானாவிதத் தோற்றங்க ளோடு இருட்டு அவளை அழைப்பதும், அவள் விருப்பப்பட்ட ஒன்றாக இல்லாமல் மெல்ல மெல்ல அவளை அச்சுறுத்திய விலங் கிட்ட ஒரு பழக்கமாய் அவளுக்குத் தோன்றத் தொடங்கியிருந்த சமயம் அது. ஜேப்படித் திருடனுக்கு வாய் பிளந்த பணப் பை ஒன்று துருத்திக்கொண்டு வெளியே தெரியும்போது, கை அரிப்பெடுப்பது போல், நடைமுறையைப் புறக்கணித்துக் கனவில் மூழ்கிவிடும் உணர்வு அவளை ஆக்கிரமித்துவிட்டதாக அவள் உணர்ந்தாள்.

ரங்கநாதன் ! "ஏன் பள்ளிகொண்டீர் ஐயா?” என்று நான் பாடினால் "என் பேரே ரங்கநாதன், வேறு என்ன செய்ய முடியும்?" என்று குறும்புத்தன மான புன்னகையுடன் கேட்பவராக இருப்பாரோ?

'அருணா ரங்கநாதன் ... அருணா ரங்கநாதன். ஆந்தை கத்தியது. அருணா மெல்ல எழுந்து அம்மாவிடம் மற்ற விவரங்களைக் கேட்கப்போனாள் . . . . . . .

புது தில்லியில் பெங்காலி மார்க்கெட் அருகில் இரண்டே இரண்டு அறைகளும், ஒரு சமையலறையும் உள்ள வீட்டுக்கு அவள் வந்து விட்டாள். தோட்டம் என்று சொல்லிக்கொள்ள முடியாத பத்தடி நிலம் வீட்டின் முன் இருந்தது.

பெங்களூரின் அந்த விசாலமான தோட்டமும், அச்சூழ்நிலையில் நெஞ்சில் ஊறிய கனவுகளும் மனத்திலிருந்து மறைந்துவிட்டனபோல் பட்டது.

வார்த்தைகளில் வெளியிட்டால் சோபையற்ற வெறும் செயல் களாக மாறிவிடும், உள்ளத்துக்குள்ளேயே சுவைத்துக்கொள்ளக்கூடிய பல அனுபவங்கள் அவளுக்கும் ஏற்பட்டன.

அவள் சமைத்துக்கொண்டிருக்கும்போது மெல்ல பின்னால் வந்து முகத்தைத் திருப்பி"வேர்வையைத்துடைக்க வந்தேன்." என்று சொல்லும்

தனிமையெனும் இருட்டு -X 41 -->

________________

சாக்கு திரைப்படத்தில் ஒடும் படம் கூடத் தெரியாமல் கரங்களின் இணைப்பில் மயங்கியது; இரவின் மங்கிய நிலவொளியில் இந்தியா கேட் வரை நடந்துவிட்டு வந்து படுக்கையில் சாய்ந்தது - எல்லாமே மறக்க முடியாத அனுபவங்கள்தாம்.

மூன்று மாதங்களுக்குப் பின் ரங்கநாதன் மெல்லச் சொன்னான்.

"இனிமேல் மாதம் இருபது நாள் "டூர்' போயிடுவேன். தனியா இருப்பியோ இல்லையோ?"

"ஆங்" என்று அயர்ந்து போனாள் அவள்.

"என்ன முழிக்கிறே? படிச்ச பெண்தானே நீ? லைப்ரரியிலே சேரு. நிறைய சிநேகிதிகள் ஏற்படுத்திக்கோ. அப்புறம் என்ன கவலை?”

"நானும் உங்களோட 'டூர்' வரமுடியாதா?”

"நான் என்ன ஹனிமூனா போறேன்? மண்டு ! கணவன்-மனை வின்னா சினிமா சேர்ந்து போனாலும், பார்க்கிலே ரெண்டு மணி நாழிகை உட்கார்ந்து பேசிண்டும் இருந்தால்தான் வாழ முடியுமா என்ன? நான் டுர் போனாலும் எப்போவாவது ஒரு நிமிஷம் உன்னை நினைச்சுப்பேன் பாரு, அதுதான் ஒரு மகத்தான நிமிஷம்" என்றான் அவன.

அவளால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு.

வீட்டுக்கு வேண்டியதை வாங்குவது, பணக்கணக்குவழக்கு எல்லாமே அவளால் திறமையாகச் செய்ய முடிந்தது.

தோழிகள் ஏற்பத்திக்கொள்வதுதான் அவளால் முடியவில்லை. பக்கத்து வீட்டில் ஒரு பஞ்சாபி தம்பதியர் இருந்தனர். தந்துாரி ரொட்டி எப்படிச் செய்வது, பூவேலை எப்படிச் செய்வது என்பதைத் தவிர வேறு விஷயம் அந்த பஞ்சாபிப் பெண்ணிடம் பேச முடியவில்லை. "இந்தப்படம் பார்க்கவில்லையா நீங்கள்? அருமையான கதை ரெண்டு பேர் முதலில் காஷ்மீர்லே காதல் பண்ணுகிறார்கள். அப்புறம் கதாநாயகன் சிப்பாயாகப் போய்விடுகிறான். கதாநாயகி பாவம் தாயாகிவிடுகிறாள். (அதைத் தவிர வேறு வேலை என்ன கதா நாயகிகளுக்கு?) குழந்தை ரகஸியமாகப் பிறக்கிறது. குழந்தையைப் போட்டுவிட்டுக் கதாநாயகி சோக கீதம் பாடிக்கொண்டு போய்விடு வாள். அது எப்படித்தான் மனம் வந்ததோ?" (அவளுக்கென்ன மனம் வருவது? டைரக்டர் சொன்னார். செய்கிறாள்) என்று அந்தக் கண்றா விக் கதையைச் சொல்லி, "அந்த காஷ்மீர்லே ஒரு பாட்டு பஹன்ஜி" என்று இரண்டு வரிகள் தன் குரலில் பாடிக் காட்ட ஆரம்பித்து விடுவாள் அவள்.

தன் மனத்தில் உள்ளதை எல்லாம் கூறி, வெறும் துணையாக மட்டும் அல்லாமல் ஓர் ஆத்ம பலமாகவும் இருக்கக்கூடிய நட்பு

-- 42 -- அம்பை

________________

ஏனோ அவளுக்கு ஏற்படவே இல்லை. சினிமா செல்லும் நட்பு, மார்க் கெட் செல்லும் நட்பு எல்லாம் அவள் மனத்துக்கு உகந்ததாக இருக்க வில்லை.

முன் அறையைப் புது மாதிரி அலங்காரம் செய்துவிட்டுத் திரும்பும் போது அதை ரஸிக்க யாரும் இல்லை என்ற உணர்வு ஏற்படும். மணக்கமணக்க மோர்க் குழம்பு செய்து, அப்பளம் பொரிக்கும்போது, தான் மட்டுமே அதைத் தனியாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, "மோர்க் குழம்பு பிரமாதம்” என்று சில சமயம் வாய்விட்டுச் சொல்லிக்கொள் ளப் போகிறோம் என்ற அலுப்பு ஏற்பட்டது. பல முறைகள் இப்படி மனம் சலித்துப்போனபோது, "அவர் இருந்தால் இப்போது என்ன செய்வார்?" என்று அவளே கேட்டுக்கொண்டு, அதை எண்ணி ரஸிக்கத் தொடங்கினாள்.

இன்றும் அதையேதான் செய்தாள். விளக்கைப் போடாமல் ஜன்னலருகே அமர்ந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். எதிர் வீட்டில் குழந்தையுடன் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார்கள். முதலில் அவன் ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பும் வரை ஒதுங்கி நின்ற அவள் பிறகு லாவகமாகப் பின்னால் அமர்ந்து, குழந்தையையும் நாசூக்காகப் பிடித்துக்கொண்டு போனாள்.

தானும் ரங்கநாதனுமாய் ஸ்கூட்டரில் போவதாய் அவள் எண்ணிக் கொண்டாள். நேரே லிட்டன் தெரு வழியாகப் போய்."இந்தியா கேட்" பக்கத்தில் உட்கார வேண்டும். அதன்பின் ராஷ்டிரபதிபவன்வரை போய்விட்டு வந்து ஒபராய் ஹோட்டலில் போய் அங்கே கீழே இருந்த சிறிய சிற்றுண்டிசாலையில் இடம் கிடைக்கும்வரை, செயற்கை மலர் கள் மிதக்கும் தண்ணிர்த்தொட்டி அருகே அமர்ந்து பிரம்மாண்ட மான அறையை நோட்டமிடலாம்.

ரங்கநாதன் கேட்பான், "நாம் இங்கே வந்து ஒரு நாள் முழுவதும் இருக்கலாமா அருண்?"

"பணம் கொட்டிக் கிடக்கிறதோ ?”

"வாழ்க்கை அனுபவிக்கத்தான், தெரியுமா உனக்கு ?"

"இருந்தாலும் ..."

"நான் பேசவே இல்லை உன்னோடு” என்று அவன் கோபமாய் எழுவான்.

"இல்லை, இல்லை, வரலாம் ஒரு நாள்."

"அப்படிச் சொல்லு."

அவள் மறுத்தும் அவ்வளவு ஆடம்பரமான இடத்திற்கு அவளை வற்புறுத்தி அவன் அழைத்துப் போவான்.

"ரங்கு என் முகத்தில் பெளடர் அதிகமா ?”

தனிமையெனும் இருட்டு -- 43 --

________________

"இல்லையே?"

"என் தலை கலைஞ்சிருக்கா ?”

"கலைஞ்சா பரவாயில்லை. அதுதான் ஸ்டைல்!”

"ஐயே, விஷயம் புரியாமல் அந்த மூலையில் இருப்பவர் ஏன் என்னையே முறைக்கிறார்?"

"எவன் அவன் முறைப்பவன்? அழகாக இருந்தால், முறைக்கிறதா?” என்று அவன் திரும்பப் போவான்.

"ரங்கு . ரங்கு ப்ளிஸ். திரும்ப வேண்டாம். நிஜமாகச் சொல்ல வேண்டும். நான் ஏதாவது தப்பாச் செய்யறேனா?”

அவன் ஏறிட்டுப் பார்ப்பான்.

பிறகு மிருதுவான குரலில் கூறுவான்.

"ஒரே தப்பு."

"என்ன ?"

"தப்பு உன்னோடது இல்லே, . உன் கவர்ச்சி." "ஐயோ ..." என்று அவள் பெருமிதமாய்ச் சிரிப்பாள். அவள்

அதிக அழகு இல்லை. ஆனால் அவன் சொல்வான் அடிக்கடி, "நீ அழகி இல்லை அருண்.பெரிய கண்களும், கச்சிதமான அங்க அமைப்பும் உள்ள ஸ்டீரியோ-டைப் அழகிகளைப் பார்த்து அலுத்த கண்களுக்கு நீ ஒரு பெரும் வசீகரமானவள்."

இரவு அவன் துரங்கியபின் மெல்ல எழுந்து அவள் கண்ணாடி அருகில் நின்று கொண்டு தன்னைப் பார்த்துக்கொள்வாள்.

"மாஜீ. மாஜி” என்று வாசலிலிருந்து வேலைக்காரியின் குரல் கேட்டது.

திடுக்கிட்டு விழித்தவள், அவள் நிஜமாகவே கண்ணாடி அருகில் நிற்பதைக் கண்டாள். 'பளிச் பளிச் சென்று எல்லா விளக்குகளையும் போட்டாள். இருட்டில் அவள் மேல் வந்து கவிந்த மன மயக்கம் மறைந்தது போல் தோன்றியது.

கதவைத் திறந்தாள்.

உள்ளே வந்த வேலைக்காரி, "தூங்கிவிட்டீர்களா மாஜி?" என்றாள் ஹிந்தியில்.

"வேலையைக் கவனி போ" என்றாள் அவளிடம்.

புத்தக அலமாரி அருகே சென்று ஏதோ புத்தகத்தை எடுத்தாள். கை புத்தகத்தை எடுத்துப் பிரித்தாலும், மனத்தில் பேசாத நிழற்படம் போல் பல கோணங்களில் ரங்கநாதன் உருவம் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. ஷேவிங் ஸோப்பை முகத்தில் அப்பிக்கொண்ட

-- 44 -- அம்பை

________________

ரங்கநாதன், சாப்பிட்டு முடித்தபின் தலையை நன்றாகச் சாய்த்துத் தண்ணிரைக் குடிக்கும் ரங்கநாதன், சமையலறைக் குழாயைத் திறந்து கை அலம்பிக்கொள்ளும் ரங்கநாதன் ஒருக்களித்துப் படுத்தவாறே புத்தகம் படிக்கும் ரங்கநாதன், இரண்டு கைகளையும் தலைக்குப் பின் கட்டிக்கொண்டு படுத்தவாறே, அண்ணாந்து பார்க்கும் ரங்கநாதன்; பேப்பர் படிக்கும் ரங்கநாதன்; அதில் ஏதாவது ஹாஸ்யம் இருந்தால் வாய்விட்டுச் சிரிக்கும் ரங்கநாதன், ஸோபாவில் நன்றாகச் சாய்ந்து கொண்டு சிகரெட் புகைக்கும் ரங்கநாதன்; வேஷ்டியில் ரங்கநாதன், சில சமயம் இரவுதுக்கத்தில் சிறுபிள்ளைச் சிரிப்பு முகத்தில் அரும்பும் ரங்கநாதன்; காரியாலயம் கிளம்பும் ரங்கநாதன் . வேண்டாம், வேண்டாம் என்றாலும் முடுக்கிவிடப்பட்ட படச் சுருளைப் போல் மனத்தில் அவன் தோற்றங்கள் மோதிக் கொண்டே இருந்தன. அவை வரிசைக்கிரமமாகச் சீராக வராமல், எல்லா தோற்றங்களும் திடீ ரென்று ஒரே சமயத்திலும் இல்லாவிட்டால் ஒரே தோற்றம் பல நிமிஷங்களும் தோன்றியவாறே இருந்தன.

தலை வலிப்பது போல் தோன்றியது. வேலைக்காரியிடம் போய் "ஆகிவிட்டதா வேலை ? எத்தனை நாழி?" என்று பரபரத்தாள்.

"மாஜிக்குத் துாக்கம் வந்துவிட்டது” என்று முன் தள்ளி இருந்த காவியேறிய பற்களைக் காட்டிச் சிரித்தாள் வேலைக்காரி.

அவளை வெளியே தள்ளாத குறையாக அனுப்பிக் கதவைச் சாத்தினாள்.

காலியாகக் கிடந்த ஸோபா, சாம்பல் தூள் நிரம்பாத சாம்பல் தாங்கி எல்லாம் கண்ணில் பட்டு, ஒரு புது கன பரிமாணத்தோடு காட்சியளித்து, நிசப்தமே பெரும் ஒலியாய் அவளைத் தாக்கியது. தான் இரவு சாப்பிடவில்லை என்ற நினைவு வந்தது. வீணை இசை ஒன்றை ரிக்கார்டரில் போட்டுவிட்டு, ஒலியைப் பெரிதாக்கி விட்டு வந்தாள்.

கத்தரிக்காய் எண்ணெய் வதக்கலைத்தட்டில் போட்டுக்கொண்ட போது, அது ரங்கநாதனுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எண்ணிக் கொண்டாள். அவனும் உடன் இருந்தால் இந்தச் சாப்பாடு எவ்வளவு இனித்திருக்கும்!

"இந்தக் கத்தரிக்காயை எவ்வளவு கற்பனை அழகோடு நறுக்கி யிருக்கிறாய் தெரியுமா?"

"இதில் என்ன கற்பனை அழகு வந்தது?" "ஏதோ, என்னை மாதிரி ஒரு சாதாரண ஆசாமிக்கு இதெல்லாமே ஒரு அற்புதம்தான்"

தனிமையெனும் இருட்டு - や 45 ●

________________

"சாதாரண ஆசாமியா ? ரியலி?”

அவள் சிரித்துக்கொண்டிருக்கும்போதே அவள் தட்டிலிருந்து அப்பளாம் மறைந்துவிடும்.

"என் அப்பளாம் எங்கே?"

அவன் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்து "இல்லையே?" என்பான்.

"திருட்டு . . . திருட்டு புத்தி."

"போலீஸ்லே புகார் செய்."

"அந்த ஹிட்ச்காக் கதை தெரியுமா, ரங்கு? கொலை செய்துட்டு, கோழிகளுக்கு அதை இரையாப் போட்டுடுவான். அப்புறம் போலீஸ்காரர்களுக்கே அந்தக் கோழிகளைச் சமைத்துப் போட்டு விடுவானே?"

தட்டில் எல்லாம் ஆறிப்போய்விடும். இவர்கள் சம்பாஷணை மாத்திரம் சூடாக நடக்கும்.

"ஐயோ, எல்லாம் ஆறிடுத்தே ?"

அவள் கேள்வி எதிரொலித்தது.

"எல்லாம் . . . ஆறி.?"

அவளுக்கு விழிப்பு வந்தது. அவள் கேள்விக்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் அவள் மனத்தில் ஒடிய கற்பனை சம்பாஷணையே ஏதோ

இனம் புரியாதவிதத்தில் அவளுக்கு இதமாக இருந்தது. அவள் தனியாகச் சாப்பிடவில்லை என்று தோன்றியது.

தட்டை எடுத்து வைத்துவிட்டு விளக்கை அணைத்தாள்.

படுக்கை அறைக்குச் சென்று, இசைத் தட்டின் ஒலியைச் சிறிதாக்கி விட்டுப்படுத்தாள். அவள் படுக்கை எதிரேஜன்னல் வழியாகவானத்தில் பளிச்சிடும் நட்சத்திரங்கள் தெரிந்தன.

அவள் லேசாக மாறி, பறந்து சென்று ஐந்தாறு நட்சத்திரங்களை ஒன்று சேர்த்து ஊஞ்சலாக்கி வீசி வீசி ஆட வேண்டும்போல் தோன்றியது. அங்கிருந்து கீழே பார்க்கும்போது தீப்பெட்டியால் செய்த பொம்மை வீடு போல் அவள் வீடு இருக்கும். இந்த வீணை இசையின் ஒசை மாத்திரம் மிதந்து வந்து அவள் காதில் ஒலிக்க வேண்டும்.

ஒருக்களித்துத் திரும்பிகையை நீட்டிப் பக்கத்தில் இருந்த மேஜையின் இழுப்பறையைத் திறந்தாள். சற்று எம்பி, அதன் உள்ளே இருந்த நாட்குறிப்புப் புத்தகத்தை எடுத்தாள்.

-> 46 -- அம்பை

________________

இசைத்தட்டு இயங்க ஏற்றப்பட்ட ரேடியோவின் மங்கிய விளக் கொளியில் பக்கங்களைப் புரட்டினாள். ஒரு பக்கத்தில் இருந்த அந்த மல்லிகைச் சரம் அப்படியே இருந்தது. முதன் முதலாக ரங்கநாதன் வாங்கித் தந்த சரம் அது. இன்னொரு பக்கத்தில் அவனை நிற்க வைத்து அவள் எடுத்த புகைப்படம். அதில் அவன் முகமெல்லாம் புன்னகை.

"இந்தக் கணத்தின் இனிமையைப் பங்குபோட்டுக்க முடியாமல் எங்கேயோ இருக்கேளே? இது திரும்ப வருமா? உம்?" என்று கேட் டாள் அந்தப் புகைப்படத்திடம்.

அதைக் கேட்ட மறுவினாடியே, குளிர்காலத்தில் கம்பளிப் போர்வையுள் புகுந்துகொண்டு அந்த வெப்பத்தை அனுபவிப்பது போல், அவளும் அவள் எண்ண ஓட்டங்களுமாய் அந்த இருட்டில் மெதுவாக ஒலிக்கும் வீணை இசையின் நடுவே அந்த சிந்தனை வடித்த பிம்பங்களை மேலே போர்த்திக்கொண்டு இருக்கும்போது, அங்கே ரத்தமும், தசையும், உருவமும் உள்ள ரங்கநாதனுக்கே இடமில்லை போல் அவளுக்குப் பட்டது.

வீணை ஒசை நின்றதும், ரிகார்டை அணைத்துவிட்டுப் பக்கத்தில் இருந்த தலையணையை அணைத்தவாறே உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை கண் விழித்தபோது, தாங்க முடியாத உற்சாகம் அவள் நெஞ்சில் ஊறிக்கொண்டிருந்தது.

அப்படித் தனியாக இருந்துகொண்டு, சம்பாஷணைகளையும், செயல்களையும், அர்த்தமுள்ள மெளனங்களையும் அவளாகவே பிறப் பித்துக்கொண்டு இருப்பதே ஒரு சுவையாகப் பட்டது.

எட்டு மணிக்குள் வேலையை முடித்துவிட்டாள். கனத்த திரைகள் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டவாறிருந்த ஜன்னல்கள் கண்களில் பட்டன. தன்னுடைய சொந்த உலகம் ஒன்றை மற்றவர் கண்களி லிருந்து மறைப்பது போல், எல்லா திரைகளையும் இழுத்துவிட்டாள். மெல்லிருட்டு அறைகளில் பரவியது.

சாய்வு நாற்காலியில் சென்று அமர்ந்தாள். எதிரே இருந்த டீப்பாயை அருகில் இழுத்துப்போட்டுக்கொண்டு, அதன் மேலிருந்த சீட்டுக்கட்டைப் பிரித்து'ஸாலிடேர் ஆட ஆரம்பித்தாள். இரண்டாட் டம் ... மூன்றாட்டம் ... நான்காட்டம் . ஒருதடவையும் ஒழுங்காக வரவில்லை.

ரங்கநாதன் சிகரெட் புகைத்தவாறே, சோபாவில் சாய்ந்து கொண்டு இவள் ஆடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தால் ...?

"உனக்கும் பொறுமைக்கும் ரொம்ப தூரம் அருண். ஆடுவதை நிறுத்து"

தனிமையெனும் இருட்டு -- 47 -->

________________

"பொறுமையே கூடாது ரங்கு வாழ்க்கை ரொம்ப குறுகியது. எல்லாத்தையும் வேகத்தோட, சூட்டோட, ஆசை அடங்கிப் போற துக்கு முன்னே அனுபவிக்கணும். ஆசைகளுக்குக் கட்டுப்பாடே இருக்கக்கூடாது. ஒட்டம் . . . ஒட்டம் ... ஒட்டம் . . . ஒடி களைச்ச அப்புறம்தான் நிதானம் வேணும். ஒடறப்போ தடுக்கி விழனும் எழுந் திருக்கணும். திருப்பி ஓடனும், அதை விட்டுட்டு விழக்கூடாதேன்னு ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிற வாழ்க்கை என்ன வாழ்க்கை?"

"இவ்வளுண்டு உருவத்துக்குள்ளே இப்படி ஒரு புயல் வேகம் எப்படிப் புகுந்துண்டது ?"

அவள் சிரிப்பாள்.

பிறகு துள்ளி எழுந்தாள்.

"என்ன சமாச்சாரம்?"

"ஒரு புது ஸ்வீட் பண்ணப்போறேன்".

"இப்போ என்ன அவசரம்?"

"இப்போ நினைச்சேன். இப்பவே பண்ணியுடனும். எதிர்காலத் துலே எனக்கு நம்பிக்கை இல்லேரங்கு இப்போவே...இந்தக் கணமே... நான் நினைச்சது நடக்கணும்."

"அம்மம்மா! சரி, இந்த சாம்பலைக் கொட்டிடு சூறாவளியே!”

சாம்பல் தாங்கியைக் கையில் எடுத்தாள். அப்போதுதான் அது வெறுமையாகக் கிடப்பது தெரிந்தது. அன்று ஏனோ அது மனத்தில் உறுத்தவில்லை. அது நிரம்பியிருப்பது போலவே எண்ணிக்கொண்டு, எடுத்துப் போய்க் கழுவி சிறு மேஜை மேல் வைத்தாள்.

பெண்களுக்கான ஆங்கில இதழின் சமையற் குறிப்புப் பக்கத்தைப் பிரித்து, புது இனிப்புப் பண்டம் ஒன்றைச் செய்ய ஏற்பாடுகளையும் செய்தாள். செய்து முடித்துவிட்டு அதற்கு அழகூட்ட, பாதாம் பிஸ்தாப் பருப்பை அதன்மேல் அலங்காரமாய் வைத்தபின் "அம்மாடி" என்று மூச்சு விட்டாள்.

தட்டில் சிறிது போட்டுக்கொண்டு சுவைத்து, "அருண், பிரமாத மடி" என்று கொண்டாள்.

நான் என்னமாய்ச் சமைக்கிறேன் தெரியுமா? அனுபவித்தவனுக் குத் தானே தெரியும் என்றேளா? ஏன் இத்தனை நாள் நான் சமைத்த தில் என்ன குறை? அந்த முந்திரிப் பருப்பு பர்பி நினைவில்லை: ராத் திரி ஒரு மணிக்கு எழுந்து, கேட்டு வாங்கிச் சாப்பிட்டவராயிற்றே! போறும், போறும் உங்கள் ஜம்பமெல்லாம்."

தட்டில் இருந்ததைச் சாப்பிட்டவாறே அவள் சிரித்துக்கொண் டாள். "வெறும் வாயரட்டை" என்று செல்லமாய்க் கடிந்துகொண் டாள்.

<- 48 -> அம்பை

பன்னிரெண்டு மணிக்கு வேலைக்காரி வந்ததும் "இனிமேல் நீ வர வேண்டாம்" என்றாள் ஹிந்தியில். யாரையுமே வீட்டிற்குள் விடக்கூடாது என்ற ஓர் எண்ணம் அவளை ஆக்கிரமித்துவிட்டது காலையிலிருந்து.

"என் வேலை சரியில்லையா? பாபுஜியைக் கேளுங்கள் மாஜி. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு இங்கே வரதுக்கு முன்னா லிருந்து நான்தான் அவருக்கு வேலை செய்கிறேன். ரொட்டி கூடப் பண்ணித் தருவேன் மாஜி."

"அதெல்லாம் இல்லை. நீ வேண்டாம். அவ்வளவுதான்."

"இருக்கட்டும் பாபுஜி வந்ததும் நான் பேசிக்கறேன்" என்று நொடித்துவிட்டுப் போனாள் வேலைக்காரி.

அந்த நொடிப்புகூட இவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது. செய்தித்தாளைப் பிரித்து என்னென்ன படம் ஒடுகிறது என்று பார்த்தாள். "ரிவோலியில் லாரல்-ஹார்டி படம் ஒடிக்கொண்டிருப்ப தாகப் போட்டிருந்தது.

முகம் கழுவிக்கொண்டு, உடை மாற்றிக்கொண்டு கிளம்பினாள். ரங்கநாதன் இருக்கும்போதுகூட அவர்கள் இருவரும் சேர்ந்து சென்றதில்லை. அவன் காரியாலயத்திலிருந்து வந்து இவளைக் கூட்டிச்செல்ல நேரமாகிவிடும் என்று, அவன் காலையில் கிளம்பிய உடனே போய் இவள் டிக்கட் வாங்கி வந்துவிடுவாள் மாலை ஆட்டத் துக்கு. அவளுக்கு விளக்கை அனைத்த பின் காட்டும் விளம்பரங் களைக் கூட விட மனது வராது. அதனால் மத்தியானச் சாப்பாடு அனுப்பும்போது அவன் டிக்கெட்டை வைத்து அனுப்பிவிடுவாள். முன்னாலேயே போய் சரியாகக் கொட்டகையில் விளக்கணையும் நேரம் சென்று உள்ளே உட்கார்ந்துவிடுவாள். பாதி லக்ஸ் ஸோப் விளம்பரம் காட்டும்போதோ, அல்லது படம் ஆரம்பித்து நடிகர்கள் பெயர்கள் காண்பிக்கப்படும்போதோ,

"அருண், நீதானே?" என்ற கிசுகிசுப்புடன் அப்போதுதான் புகைத்து முடித்த சிகரெட் மணத்துடன் அவன் வந்து அமருவான்.

பதில் கூறாமல் அவன் கரத்தை எடுத்துத் தனதுள் வைத்துக்கொள் வாள் அவள்.

"அருண்தானே?" "வேறுயார் உங்கள் கையை இப்படிப் பிடிச்சுண்டு படம் பார்ப்பா?"

"இப்படிக் கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்கலாமா? அப்படி நிறைய பேர் பார்ப்பாளே ?" என்பான் அவன் தமாஷ"க்காக,

"பரவாயில்லை. தற்சமயம் உங்க பக்கத்திலே இருப்பது அகில உலகம் போற்றும் அருணாதான்."

தனிமையெனும் இருட்டு 令 49 令

________________

"தன்யனானேன். தன்யனானேன்." "பக்தா படத்தைப் பார். பின்பு உன் குறைகளைக் கேட்போம்."

வாய் ... வாய்" என்று அவன் இவள் கையில் கிள்ளிவிடுவான். ஞாயிற்றுக்கிழமை அன்று கூட அவள் அவனுடன் போகமாட் டாள். "மெதுவா கிளம்பினா டிக்கெட் கிடைக்காது. நான் முன்னாலே போறேன்" என்று பறப்பாள். அவனுக்கே உரிய நிதானத்துடன் கிளம்பி, கொட்டகை வாசலில் ஆயிரம் சாபம் கொடுத்துக்கொண்டு நிற்கும் அவளுடன் அவன் சேர்ந்துகொள்வான்.

ஆகவே அன்று கிளம்பியபோது தனியாகப் படம் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வே இருக்கவில்லை அவளுக்கு.

டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று உட்கார்ந்து படம் காண்பிக்க ஆரம்பித்தபோதுகூட அங்கு கண்ட ஒவ்வொரு ஹாஸ்யக் காட்சிக்கும் ரங்கநாதன் என்ன சொல்லலாம் என்று அவளே நினைத் துக்கொண்டாள். உண்மை ரங்கநாதன் படத்தை ரஸித்திருப்பானோ மாட்டானோ, இவள் மனத்தில் அவன் வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டிருந்தான்.

ரங்கநாதன் கரத்தைப் பற்றிக்கொண்டு படம் பார்த்த உணர்வு டனேயே அவள் வெளியே வந்தாள்.

குளிர்கால ஆரம்பமாதலால் ஆறரை மணிக்கே இருட்டிவிட்டி ருந்தது. வண்டியில் ஏற மனமில்லாமல் மெல்ல நடக்கலானாள். சரிகை வேலை செய்த நைலான் புடவை அணிந்து இடுப்புச் சதை குலுங்கும் பருத்த பஞ்சாபிப் பெண்களும்,"எங்கு போனாலும் நாங்கள் மாற மாட்டோம்” என்று பறை சாற்றிக்கொண்டு அகலச் சரிகை போட்ட பட்டுப்புடவைகளோடு "எங்காத்துக்காரருக்கு ..." என்று இழுத்துக் கொண்டு செல்லும் மதறாஸிப் பெண்களும், வெளியில் நின்றுகொண்டு ஸாஃப்டி ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னும் கூட்டமும், வெளிச்சமும், வண்ணக் கோலமுமாய் கனாட்ப்ளேஸ் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பெரிய கூட்டத்திலும் தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்துகொண்டு, எதிலும் ஒட்டாமல் அவள் நடந்தாள்.

வீட்டை அடையும்போது ஏழு மணியாகிவிட்டது. கதவைத் திறந்து உள்ளே நுழையப் போனபோது கதவடியாகச் செருகியிருந்த கடிதம் காலில் தடைபட்டது. விளக்கைப் போட்டுக் குனிந்து எடுத்தவள், கையெழுத்தைப் பார்த்தே ரங்கநாதனுடையது என்று தெரிந்துகொண்டாள்.

அவன் அதிகம் எழுத மாட்டான். அருணாவுக்கோ எழுதாமலே இருக்க முடியாது. அவன் காலை யில் போய்விட்டால் மத்தியானம் சாப்பாடு அனுப்பும்போதுகூட தினம் அதில் ஏதாவது ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் அவளுக்கு.

令 50 令 அம்பை

________________

"'ஆனந்த விகடனில் ஒரு கதை படித்தேன். அற்புதமாக இருந்தது. நீங்கள் வரும்வரை இதைச் சொல்லாமல் இருக்கப் பொறுமை இல்லை" என்றோ,

"இன்று கூட்டு பிடித்திருந்தால் எனக்கு வரும்போது ஸ்வீட்ஸ் வாங்கி வரவும்" என்றோ,

"ஒரே போர் ரங்கு கையைச் சுட்டுக்கொண்டு விட்டேன். ஒரே எரிச்சல்" என்றோ எதையாவது எழுதாவிட்டால் அவளுக்குத் தலை வெடித்துவிடும்.

அவன் எழுதினாலும் எண்ணி பத்தே வரிகள்தாம்.

"அன்புள்ள அருண்,

இந்த முறை நீ ஏன் ஒரு கடிதம்கூடப் போடவில்லை? உடம்பு சரியில்லையா? எனக்கு இங்கு ஒரே வேலை. நேரத்தையெல்லாம் பணமாக்கிக்கொண்டிருக்கிறேன். நான் ஞாயிற்றுக்கிழமை காலை வருகிறேன்.

உன்

ரங்கு" கடிதத்தைப் படித்துவிட்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டாள்.

ரங்கநாதன் மறுநாள் வரப்போகிறான். உற்சாகம் ஏன் பீறிட்டுக் கொண்டு வரவில்லை ?

எல்லா விளக்குகளையும் பரபரவென்று அணைத்துவிட்டுப் படுக்கையில் சென்று சாய்ந்தாள். தலையணை அருகேயே இருந்த நாட்குறிப்புப் புத்தகம், ஜன்னலுக்கு வெளியே தெரிந்த தாரைகள் எல்லாம் திடீரென்று அவளைச் சுற்றி உரிமையுடன் சேர்ந்துகொண் டனபோல் பட்டது. மனத்தினுள் ஒரு ரங்கு இவற்றை எல்லாம் அவளுடன் ரஸித்துக்கொண்டிருந்தான்.

அந்தக் கடிதத்தில் இருந்த ரங்கநாதன் யாரோ போல் தோன்றியது.

அவளாகவே ஜோடித்த ஒர் அழகிய உலகினுள் புகும் வெளியா ளாய் அந்தக் கடித ரங்கநாதன் தோன்றினான். அவள் மனத்தில் தோன்றிய சம்பாஷணைகள், ஊடல்கள் எல்லாம் அவள் சொத்து போலவும், அவன் அதைப் பறிக்க வருபவன் போலும் அவளுக்குப் பட்டது.

அந்த இதமான இருட்டில் தலையணையை அணைத்துக் கொண்டு, தனியாக, தன் மனத்தின் கற்பனைகளோடு நிதம் உறங்கி வாழும் வாழ்வை மாற்றிக்கொள்ள முடியாத ஒரு பலவீனம் அவளி டம் பிறந்தது.

தனிமையெனும் இருட்டு -- 51 ->

________________

கூடாது. இவை அவள் கற்பனைகள். அவளுக்கே உரியவை. நிஜம் அவளுக்கு வேண்டவே வேண்டாம், இந்த ரகஸிய பூரிப்பே, இந்த சுகானுபவமே போதும்.

மற்ற சிறு விஷயங்களை உடனே தீர்மானம் செய்து அந்த நிமிடமே நிறைவேற்றத்துடிக்கும் அந்த வேகத்துடனேயே, அந்தக் கவனமின்மை யுடனேயே அவள் ஒரு பெரிய விஷயத்தையும் மனத்தினுள் தீர்மானித் தாள். எந்த வகையில், எப்படி அது அவளுக்கு உதவும் என்று எண்ணி யும் பார்க்காமல், அந்த முடிவு ஒன்றுதான் அவள் எடுக்க முடியும் என்ற உறுதியுடன் அவள் இயங்கலானாள்.

கைநீட்டி மங்கிய விளக்கைப் போட்டாள். மெல்ல எழுந்து அலமாரியைத் திறந்து நோட்டம் விட்டாள்.

மாமனார் ஒரு முறை வந்தபோது, அவருக்காக வாங்கிய தூக்க மருந்து மாத்திரைகள் கொண்ட புட்டியை எடுத்தாள்.

அதைப் படுக்கையில் தலையணை அருகே வைத்தாள்.

"ரங்கு, நானும் நீயுமாகச் ஜோராகச் சேர்ந்தே இருக்கலாம்” என்று சொல்லிக்கொண்டாள்.

பீரோவைத் திறந்து ஒரு முறை டெல்லியைச் சுற்றியுள்ள இடங் களுக்குச் சென்றபோது சந்திகரில் எடுத்த இளம் பச்சைப் புடவையை அணிந்துகொண்டாள். கண்ணாடி அருகில் சென்று தலையைச் சீர் செய்துகொண்டாள். ஒரு பெரிய பிரயாணத்துக்கு முஸ்தீபுகள் செய்வதுபோல் எல்லா அறைகளுக்கும் சென்றுவிட்டு வந்தாள்.

பிறகு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்துக்கொண் டாள்.

அவள் கற்பனைகள் தோன்றவே காரணமாக இருந்த ரங்கநாதன் எங்கோ விலகிப்போக, அவள் கற்பனையில் பேசி விளையாடி மகிழ் வித்த ரங்கநாதன் மனத்தில் நிறைந்துகொண்டான்.

தன் அருமையான உலகம் ஒன்றைக் காப்பாற்றிக்கொள்ளும் அசுர வெறியுடன் புட்டியைத் திறந்து ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கி னாள்.

அவளும், ரங்குவும் இறக்கை முளைத்துப் போய் நட்சத்திரங்களைப் பறித்துக் கூடையில் போட்டுக்கொள்வதைப் போல் தோன்றியது.

திடீரென பெங்களூரின் விசாலமான கொல்லைப்புறம் மனத்தில் விரிந்தது. தென்னை இலைகளின் அசைவுக்கு நடுவே கண்களை உருட்டி விழிக்கும் ஆந்தையின் கூவல் காதில் ஒலித்தது. தாரகைகள் சரம் சரமாய்க் கண்முன் தொங்கின.

や 52 <> அம்பை

________________

நட்சத்திரங்கள் திடீரென அருகே வந்தது போல் தோன்றியபோது தலையணையைக் கை அனைத்துக்கொள்ள, அவள் உறங்கியே போனாள்.'கணையாழி தீபாவளி இதழ் 1970
தனிமையெனும் இருட்டு -> 53 ->

Thursday, August 25, 2016

ஆக்காண்டி - சண்முகம் சிவலிங்கம்

HALF AN HOUR GOOGLE-OCR WASTE
--- Alreay available  in http://sivalingam.blogdrive.com/

ஆக்காண்டி ,
ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கே முட்டை வைத்தாய் -
கல்லைக் குடைந்து

கடலோரம் முட்டை வைத்தேன்
வைத்ததுவோ ஐஞ்சு முட்டை

பொரித்ததுவோ நாலுகுஞ்சு
நாலுகுஞ்சுக் கிரைதேடி
நாலுமலை சுற்றி வந்தேன்
மூன்று குஞ்சுக் கிரைதேடி
மூவுலகம் சுற்றி வந்தேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

குஞ்சு பசியோடு
கூட்டில் கிடந்ததென்று
இன்னும் இரைதேடி
ஏழுலகும் சுற்றி வந்தேன்

கடலை இறைத்துக்
கடல் மடியை முத்தமிட்டேன்
வயலை உழுது
வயல் மடியை முத்தமிட்டேன்

கடலிலே கண்டதெல்லாம்
கைக்கு வரவில்லை
வயலிலே கண்டதெல்லாம்
மடிக்கு வரவில்லை

கண்ணிர் உகுத்தேன்
கடல் உப்பாய் மாறியதே
விம்மி அழுதேன்
மலைகள் வெடித்தனவே

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குடைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

வண்டில்கள் ஒட்டி
மனிதர்க் குழைத்து வந்தேன்.

கையால் பிடித்துக்
கரைவலையை நானிழுத்தேன்

கொல்லன் உலையைக்
கொளுத்தி இரும்படித்தேன்

நெய்யும் தறியில்
நின்று சமர்செய்தேன்

சீலே கழுவி
சிகையும் அலங்கரித்தேன்

வீதி சமைத்தேன்

விண்வெளியில் செல்லுதற்குப்
பாதை சமைக்கும்
பணியும் பல புரிந்தேன்

ஆனாலும் குஞ்சுக்கு
அரை வயிறு போதவில்லை
காதல் உருகக்
கதறி அழுது நின்றேன்
கதறி அழுகையிலே
கடல் இரத்தம் ஆயினதே

விம்மி அழுகையிலே
வீடெல்லாம் பற்றியதே

கடல் இரத்தம் ஆகுமென்று
கதறி அழவில்லை
வீடுகள் பற்றுமென்றும்
விம்மியழவில்லை

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

குஞ்சு வளர்ந்தும்
குடல் சுருங்கி நின்றார்கள்

பசியைத் தணிக்கப்
பலகதைகள் சொல்லி வந்தேன்

கடலை இறைத்துக்
களைத்த கதை சொல்லி வந்தேன்

வயலை உழுது
மடிந்த கதை சொல்லி வந்தேன்

கொல்லன் உலையிலும்
கொடுந் தொழிற் சாலையிலும்
எல்லா இடமும்
இளைத்த கதை சொல்லி வந்தேன்

சொல்லி முடிவதற்குள்
துடித்தே எழுந்து விட்டார்
பொல்லாத கோபங்கள்
பொங்கிவரப் பேசுகின்றார்


"கடலும் நமதே அன்னை
கழனியும் நமதே அன்னை
கொல்லன் உலையும்
கொடுந்தொழிற் சாலையதும்
எல்லாம் நமதே" என்றார்
எழுந்து தடி எடுத்தார்
கத்தி எடுத்தார்
கடப்பாரையும் எடுத்தார்
யுத்தம் எனச் சென்றார்
யுகம் மாறும் என்றுரைத்தார்
எங்கும் புயலும்
எரிமலையும் பொங்கிவரச்
சென்றவரைக் காணேன்
செத்து மடிந்தாரோ?

வைத்ததுவோ ஐஞ்சு முட்டை
பொரித்ததுவோ நாலு குஞ்சு
நாலு குஞ்சும் போர் புரிய
நடந்து விட்டார் என்ன செய்வேன்
ஆனவரைக்கும்
அந்த மலைக் கப்பாலே
போனவரைக் கா ணேன்
போனவரைக் காண்கிலேன்

ஆக்காண்டி ஆக்காண்டி
எங்கெங்கோ முட்டை வைத்தாய்
கல்லைக் குலைந்து
கடலோரம் முட்டை வைத்தேன்

1968

********************

 http://sivalingam.blogdrive.com/
அழைப்பு

தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்
பாதி இரவினிலும் பட்டப்பகலின் அனலினிலும்
மோதித் தெறித்து
மெல்ல முனகி அழுவதுபோல்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

பக்கத்தில் ஒரு கோயில்
அதன்பக்கத்தில் ஒரு அரவு-
சொர்க்கத்தின் வழிபோல
இலை சோவெனக் கலகலக்கும்.
சற்று அப்பால் ஆலைகளில்
சருகுதிரும்.
இடைவெளியில் திக்கற்ற கன்றொன்று
தாயைத் தேடிவரும் - அப்போதும்,
தூரத்தில் நான் கேட்டேன்.

உலகருகே நிற்பேன்,
ஊரைக்காவலிடும் தென்னைகளில்
படரும் இருள் தூரத்தில்
அஞ்சிப்பறக்கும் சிலபறவை
தொடரவரும் பிறப்பெல்லாம்
எங்கோ தூரத்தில் கேட்டதுபோல்
குரலும் அதுகேட்கும்
என் குழந்தை நினைவெல்லாம்
தூரத்தில் நான் கேட்டேன்
குரல் ஒன்று
தூரத்தில் நான் கேட்டேன்

- சண்முகம் சிவலிங்கம்.
(நன்றி: 'நீர் வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)

நண்டும் முள்முருக்கும்

சிவப்புப் பூக்கள்
முள் முருக்கம்.
மைனாக்கள் வரும், போகும்.

இலைகள் உதி - ர் - ந் - து
வெறும் கிளைகள்
முட்களுடன்.

நுனிகளில்
வளைந்த பூந்தண்டுகள்.

அடியில் உள்ள பெரியபூக்களை
மைனா கோதும்.
அவை பின்னரும் கோத,
நுனியில்
வரவர, சிறிய
நலிந்து நீண்ட
மொட்டுகள்,
நண்டின் பூப்போல,
ஆமாம்
நண்டின் பூப்போல.
அம்மா சொன்னாள்!
நண்டு சினைக்க
பூக்கும் முள்முருக்கு.
முள்முருக்குப் பூக்க
சினைக்கும் நண்டுகள்.


நாளைக் காலை
சந்தைக்குப் போகலாம்.


- சண்முகம் சிவலிங்கம்.

(நன்றி: 'நீர்வளையங்கள்' கவிதைத்தொகுப்பு)

ச.சி. @ 12/10/2003   Make a comment                                                        முகப்பு 

Wednesday, August 24, 2016

வத்ஸலி - தஞ்சை ப்ரகாஷ்

354 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
29 வத்ஸலி
 https://ia600708.us.archive.org/11/items/orr-11444_Vathsali/orr-11444_Vathsali.pdf 
Automated Google-OCR
வத்ஸ்லி உள்ளே வராமல் நின்றாள். லேசாகச் சிரித்தான், சாரங்கன். உள்ளே வராமல் நிற்பதற்கு என்ன இருக்கிறது? வத்ஸலியின் கண்கள் கலங்கி சிவந்து கசக்கித் துடைக்கப்பட்டு ஈரம் காயாமல் இருந்தது. வத்ஸ்லி தயங்கியது ஏன் என்று புரிந்தது போல் சிரித்தான் சாரு
'வாயேன்! மாசமாசம் வர்றதுதானே? என்றான். வயிற்று வலியும், இடுப்புவலியும் சகஜம் அறைக்குள் எட்டிப் பார்த்து, கண்களைத் துடைத்துக் கொண்ட வத்ஸலியின் மாறுதல், லேசாகப் புரிய ஆரம்பித்திருந்தது சாருவுக்கு. கூர்ந்து அவளைப் பார்த்த இம்முறை ஒவியத்தின் சிதிலம் தெரிய வந்தது. முகத்தில் ஐந்து விரல்களின் அறை விழுந்த சிவப்பு தலை முடிபற்றி இழுத்து அடித்திருப்பானோ. தலைமுடியும் அதிகமான சுருள் நீண்டிருந்தது. வத்ஸ்சலாவை என்ன செயதான்? சாருவுக்கு கைத்தது.
அடிக்கடி அடிக்கிறவன்தான் வத்ஸ்லியின் கணவன். அடிப்பதில் ஒரு ஸ்வாரச்யமே உண்டு. புராதன காலத்து புருஷன் அவள் கணவன் தேவராஜ் அடி வாங்க அஞ்சியவளும் இல்லை. வத்ஸ்லா.
'உள்ற வா வத்ஸ்லி உக்கார்' என்றபோது அவள் கழுத்தில் சிவப்பு கரையும் கீறல் ரத்தம் மஞ்சள் தாலியின் கயிற்றில் ரத்தச் சொட்டு உறைந்திருந்தது. என்ன ஆச்சு
மெல்ல உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள் வத்ஸ்லி. சற்றே சதைப்பிடிப்பான அவள் எடுப்பும் தொடுப்பும் யாரையும் உடனே அயர வைக்கும். ஏதோ கொடியில் தொங்கும் குலைப் பழங்களின் கனம் போல எப்போதும் மாயாத வடிவம் வத்ஸ்லாவின் அழகு.
"என்ன ஆச்சு!" "ஒண்ணுமில்லெங்கிறெ?" மெளனமாய் கண்ணிர் முத்துகள் வீணாக உதிர்ந்தன. கனவு போலிருக்கிறது இவள் கல்யாணம். ஆறு வருடங்களுக்குப் பின்னரும் அடி உதை துரத்தல் தெருவில் சிரிக்க கூச்சலும் அவமானமும்,தேவராஜ் ஏன் இப்படி இருக்கிறான்? வத்ஸ்லி மாதிரி ஒரு பெண் என்ன அருமையாக சமைப்பாள். சுத்தமாக வீட்டை நறுவிசாக நாகரிகமாக வைத்துக் கொள்வாள். பொறாமைப் படுகிற மாதிரி அலங்காரம் செய்ய மாட்டாள். அடக்கமே அலங்காரமாய் எடுப்பே அவளது அழகாய் மெளனமே யாரையும் அசத்துகிற அபூர்வமான இந்தப்பெண்ணை அடித்து துவைத்து புரட்டி எடுக்கிறான் தேவராஜன் கேட்க யாரும் இல்லையா...? இல்லை இல்லைதான். இல்லையே காலை நேரம்


________________
வத்ஸ்லி 355
இரவு முழுவதும் உதைத்திருப்பான். உடம்பெல்லாம் கன்றிப் போயிருக்கும். வத்ஸ்லிக்கு அம்மா அப்பா ரண்டு பேரும் பம்பாய்க்கு அந்த பக்கம் கண்ட்லாவில் ஆயிரம் மைல்களுக்குப்பால் தங்கள் ஆண் குழந்தைகளுடன் இருக்கத்தான் இருக்கிறார்கள். வத்ஸ்லி கொங்கணிபெண் அவள் அப்பா லான்ண்ட் சர்வே டிபாட்மென்டில் தமிழ்நாடு வந்து பத்து வருடம் தங்கியபோது பிறந்த பெண் ஏறத்தாழ இந்த நாட்டு பிறவி தமிழச்சியின் கோணல்கள் அப்படியே வார்ப்பாக வந்த பெண். அவர்கள் வீட்டு கொல்லையில் காவிரியின் வாய்க்கால் ஜம்புகாவிரி கால்வாயின் கரையில் இருந்த சின்னஞ்சிறு ஒட்டுக் குச்சிலில் வாடகைக்கு இருந்தவன் சாரங்கன்
ஜம்புகாவிரி வாய்க்கால் ரொம்ப அழகு. இருபுறமும் மூங்கில் காடுகள் மனுஷ்ய வாடையே இராத அமைதி. தமிழ்நாட்டுக்கு வந்ததும் இந்த வீட்டையும் ஒட்டுக் குச்சிலையும் சல்லிசான விலைக்கு வாங்கி மூங்கில் குத்துகளுக்கு நடுவில் கால்வாய் ஓரத்தில் தஞ்சாவூரில் வாழ்ந்த காலம் ஆச்சர்யமான கனவாகவே போய்விட்டது. ஜம்புகாவிரி குறுக்களவு ஆறடிதான் இருக்கும் கரையில் சாரங்கன் வீடு சற்றே உள்தள்ளி மூங்கில் பசுமைக்கிடையில் பெரிய வீடு. அங்கே வத்சலி கொங்கணி பேசும் அவர்களுக்கு இருந்த ஒரே உறவு சாரங்கனின் சிரிப்பும் பேச்சும். ஜம்புகாவிரி கரையில் மூங்கில் காட்டில் ஒரு சிறிய செங்கல் லிங்கம் கோவில் கொண்டு நின்றது. அங்குதான் எட்டு வயதில் வத்சலியைச் சந்தித்தது.
பதினெட்டு வயதாகும் வரை அங்குதான் இருப்போம் என்று தெரியாது. வாழ்க்கை துரத்தியபோது - ஏழெட்டு ஆண் குழந்தைகள் நாலைந்து பெண் குழந்தைகளுமாய் வத்சலியின் அப்பா கோட்வால்கர் திடீரென்று கொங்கணத்துக்குப் புறப்பட்டபோதுதான் வத்சலிக்குப் புரிந்ததுதான் இந்த இடத்து நாற்று அல்ல என்று. அவசர கோலமாய் ஒரு கல்யாணம் யாரையும் எதிர்பாராமலேயே நிகழ - தஞ்சாவூர் மராட்டியனாகிய தேவராஜன் மாப்பிள்ளையாய் வந்தபோதுதான் சாரங்கனுக்குப் புரிந்தது. இதுதான் - இப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று -
ஓயாத சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும் வத்ஸ்லியின் குரல் உள்ளாழ்ந்து போயிற்று. சாரங்கன் தேவராஜனைப் பார்த்தபோது சந்தோஷமாய் இருந்தது. நல்ல சிவப்பாக கருகருவென்ற சுருள் முடியுடன் அலை அலையாக வெண்மை வேட்டி பளிட வத்சலிக்கு ஏற்ற அழகும் அற்புதமும் கொண்ட கணவன்தான். மனசு நிறைந்து போயிற்று அந்த கொங்கணிக் குடும்பம் சென்னைக்குப் போய் அப்படியே கொங்கணத்துக்குப் போகிறார்கள் வத்ஸ்லி போகப் போவதில்லை. தேவராஜனுடன் தஞ்சையிலேயே வாழப் போகிறாள் சந்தோஷமாய் இருந்தது.
எட்டு வயதிலிருந்து அவன் விரல்களைப் பிடித்துக் கொண்டு விகல்பமில்லாமல் பதினெட்டு வயதிலும் அந்த தமிழ் கூச்சத்தை கேலிசெய்த கொங்கணத்து தைர்யம். இப்போதும் அப்படியேதானே இருக்கிறது?? எங்கே கோளாறு?


________________
356 தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
சாரங்கன் அம்மா சொல்வாள் 'ஏய் சாரங்கா அவகிட்ட ரொம்ப தேயாதடா' இது சிறு பெண்ணா இருந்தபோது பதினைந்து வயதில் பெரிசாகி முட்டி வளர்ந்த மூங்கில் கொத்தாக வளர்ந்தபோதும், "டேய் பாத்துடா அவ சின்ன புள்ள இல்ல, அவள் இழுத்துகிட்டு ஊர் காடு சுத்தாதெ நாலு பேரு பாக்க தேஞ்சு ஒளிகிகிட்டு நிக்காதடா அவளுக்கு தெரியாது மிராட்டிய நாமதாம் பொத்தாம் பொதுவா ஒதுங்கணும்' இப்போது அம்மாவும் இல்லை. போயாச்சு அப்பாவும் இல்லை. மிச்சம் இந்த ஓட்டுக் குச்சுவீடும் பின்னால் உள்ள மூங்கில தோப்பும்தான். பெரிய குடும்பம் - வத்ஸலா மட்டும் தனிப்பிறவி எப்போதும் மூங்கில் குத்துகள் இடையே ஜம்புகேச்வரர் சந்நிதியில் உட்கார்ந்து அல்லது மூங்கில் மரத்தடியில் படுத்தும் புரண்டு கிடப்பதும் உண்டுதான்!
ரொம்ப நேரம் கழிந்ததும் தேடிக் கொண்டு போய் அழைத்து வரவேண்டும் அவள் தங்கைகள் என்ன பேசுகிறார்கள் ஒன்றும் புரியாது. சாரங்கனுடன் எல்லாம் ஒட்டி உறவாடும் கூச்சம் நாணம் எதுவும் இல்லாத பெண்கள். தேவையில்லாமல் கூச்சம் என்னத்துக்கு? கைகளைக் கோர்த்துக் கொண்டு சாரங்கனுடன் ஜம்புகாவிரியோடு கரை வழியே நடந்து வெகுதுரம் போவார்கள் ரெண்டு பேருமாய் இந்த பூமியில் இருப்பதாகவே தெரியாது. நீரில் உலாவி வரும் சில்லென்ற பச்சிலை மணம் வீசும் அபார காற்றோசை ஆங்காங்கே வளர்ந்து நிற்கும் செந்நிற பாம்புப் புற்றுகள் - பாம்புகள் இப்போது இருக்குமோ இல்லையோ அவற்றின் மீது மாலை வீசிக்கிடக்கும் பிரண்டைக் கொடிகள் கொத்துக் கொத்தாக படர்ந்து கிடக்கும் அழகு குத்து மூங்கில்களோடு போட்டியிட்டு வளரும் கள்ளிச் செடிகள்.
வத்சலியின் உதடுகள் அற்புதமானவை. தடித்து உருண்டு செதுக்கியது போன்ற மிக அழகான உதடுகள். கொங்கணிப்பெண்களின் ரோஜாக் கருஞ்சிவப்பு கொஞ்சம் அந்நியமான நிறம். நீண்ட உடல் அதிக வளர்ச்சி என்று யாருக்குமே தோன்றும். வளரவளர எல்லாமே அதிகம் என்று புரிந்தபோது சாரங்கனுக்கு பயமும் வந்தது. அதிக நேரம் மூங்கில் காட்டில் இருக்க விடாமல் இழுத்து வருவான் வேறு வழியில்லை. வத்ஸலியின் உடல் சூடு சாரங்கனுக்கு தெரியும் - தொடாமல் பேசுவதேயில்லை அவள். அதில் விகல்பம் இல்லை. வத்சலியின் அம்மாவும் கூட தொட்டு கட்டிப் பிடித்துத்தான் பேசுவது அது அவர்கள் பழக்கம் - தப்பு ஒன்றுமில்லை.
சாரங்கன் புழக்கம் வேறு. ஒரே பள்ளியில் படித்து வீட்டில் தினமும் வீட்டுப் பாடம் எழுதி மனக்கணக்குப் போட்டு சேர்ந்து விளையாடி சேர்ந்து கைகோர்த்து பள்ளிக்கூடம் போய் பின்னர் எல்லாம் சேர்ந்தும் பிரிந்தும் முறிந்தும் போக எல்லாமே சகஜமாய் இருந்தது. சாரங்கன் மட்டும் அதை கூச்சமாகவே வெட்கத்துடன்தான் செய்து கொண்டும் மறைத்துக் கொண்டும் இருந்தான்.
ஜம்புகாவிரியில் குளிக்கும்போது அவளைப் பூரணமாக பார்க்காமல் இருக்க முடியாது. அவர்கள் வீட்டு படித்துறை - யாரும் அங்கே வரமுடியாத


________________
வத்ஸலி 357
தனிமையிலும் நாலு சன்யாசி பிச்சைக்காரர்கள் அவளை உற்றுப் பார்த்தபடி முழுக்கு போடும் போதுதான் சாரங்கனும் வத்ஸலியின் வடிவத்தை உலகம் எத்தனை தாகத்துடன் பார்த்தும் தன்னால் அதைப்போல் கிட்டேயிருந்தும் பார்க்க முடிவதில்லையே என்று பார்த்து அசந்து போவதுண்டு.
வத்ஸலா பாவம் ஒன்றும் தெரியாத பெண் என்று அம்மாவிடம் சொல்வான் சாரு ஆனால் அது பொய் என்று அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் மெளனமாய் புரியும் அவ குளிச்சிட்டு வரட்டும் அப்பறம் நீ போய் குளிக்கலாம் என்பாள் அந்த அம்மாள். ஆனால் வெகுநேரம் தூங்குகிற வத்ஸலி எப்ப குளிக்க வரா என்று யாருக்கும் தெரியாது
ஜம்புகேச்வரர் முன்னால் ஒரு நாள் யாரும் இல்லாதபோது எப்போதுமே யாரும் இல்லாத காடுதான் அந்த மூங்கில் கரை. சாரங்கனிடம் கேட்டாள் வத்ஸலா.
"இஞ்ச எனக்கு ஒரு மச்சம் இருக்கான்னு பாரு சாரு எம்மார்ல இருந்த மச்சம் எனக்கு கண்ணாடில கூட தெரியமாட்டேங்கிது"
பயமாய் இருந்தது. பெரிய பெண்ணாகிவிட்ட அவளுக்குள் அடங்காத செளந்தர்யம். பெரிய விழிகளில் குழந்தை போன்ற மிரட்சி வியர்வை நனைந்த வெண்ணிற அக்குள்கள். கழுத்து மடிப்பின் பிரிவில் பெரிய மிக அழகிய வண்டு போன்ற மச்சம் - ஒரு கோடுபோல் மார்பின் செம்மைப் பிளவில் இன்னொரு மச்சம் - இல்லை மறு - உற்றுபார்த்த சாரங்கன்.
"நாம்போறென் நீ வா! அப்புறமா' என்று தோற்றோடினான். குப்புறப் படுத்துக் கொண்ட மகனைப் பார்த்து படபடத்தாள் அம்மா.
'வயசுப் பயக குப்புறப் படுத்துக் கெடக்கப்புடாது.டா! எங்க அவளெக் காணும்?"
"எனக்கென்ன தெரியும் அந்தண்டை போம்மா' - கத்தினாள் சாரங்கன். "இனுமே கண்டமானிக்கி மூங்கி குத்துக்குள்ற அவளெ இழுத்துகிட்டுப் போயி சுத்திகிட்டு நிக்யாதடா அவளுக்கு கண்ணாலம் நிச்சயமாகியிருக்கு இனிமே தனிய வெளிய தெருல அவகூட போப்டாது தெரியுதா? - என்ற போதுதான் உலகம் எத்தனை வேகமாய் சுழல்கிறது என்று சாரங்கனுக்கும் தெரியவந்தது. நாலேநாளில் கல்யாணம் தேவராஜனைப் பார்த்தபோது அடேயப்பா ஏற்ற ஜோடிதான் என்றும் சுகமாய் இருந்தது. குறையும் எட்டியது போலிருந்தது.
ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த ஜம்புகேச்வரர் சந்நிதியில் சாரங்கனுடன் ஒட்டி உட்கார்ந்திருப்பாள் வத்ஸ்லி. இந்த ஞாயிறில் அவள் இல்லை. தனியே மூங்கில் மரத்தடியில் துண்டை விரித்துக் கிடந்தபோது வளைந்த மூங்கில் கீற்றுகள் வானத்தைக் கீறி ரெத்தம் வடித்து மாலையாக்கின.
பத்து நாட்களில் வத்ஸலியின் குடும்பம் வீட்டை காலி செய்துவிட்டுப் புறப்பட்டபோது ஆச்சர்யம் மீண்டும் யாரையுமே காண முடியாது என்றொரு தோணல். வத்ஸ்லி மட்டும் வந்திருந்தாள். பெட்டி சட்டி தட்டு முட்டுச்


________________
358 - தஞ்சை ப்ரகாஷ் கதைகள்
சாமான்கள். மூட்டைகள் வண்டி ஏற தேவராஜ் வரவில்லை. வழியனுப்பக்கூட வராத விசித்திர குடும்பம். அதனால் என்ன என்று வத்ஸலியின் அப்பா போய் வலிய பார்த்து தேவராஜன் வீட்டுக்குப் போய் சொல்லி விட்டு வந்தார். குடும்பம் கொங்கணத்துக்கு வத்சலி தஞ்சையில். மூங்கில் தோப்பு கிர்கிர்ரென்ற பேச்சுடன் மெளனம் கண்டது. வத்சலி அன்றைக்குப் போனவள்தான்! -

(செளந்தரசுகன், ஜூலை 2004)