தளத்தைப் பற்றி

ஏராளமான இணைய தளங்கள் தமிழில் உள்ளது. அவற்றிலிருந்தோ, புத்தகங்களிலிருந்துதட்டச்சு செய்தோ சிலவற்றை இங்கே தொகுக்கின்றேன். மேலும் சிறுபத்திரிகை சம்பந்தபட்டவற்றை (இணையத்தில் கிடைக்கும் பட வடிவ கோப்புகளை) - என் மனம் போன போக்கில் - Automated Google-Ocr (T. Shrinivasan's Python script) மூலம் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தாலும், பதிப்புரிமை உள்ளவர்கள் பதிவிட வேண்டாமென்று விருப்பப்பட்டாலும் அவை நீக்கப்படும். மெய்ப்புபார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். யாராவது மெய்ப்பு பார்க்க இயலுமாயின், சரிபார்த்து இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்
rrn.rrk.rrn@gmail.com

Wednesday, February 13, 2019

மௌனி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ் :: ஜூலை 1985:: மறு வெளியீடு

இசைவால் இயலும் உலகு!
Photo shared on
‎February ‎14, ‎2018


மௌனி - சுந்தர ராமசாமி :: கொல்லிப்பாவை சிற்றிதழ் :: ஜூலை 1985
மௌனி

சுந்தர ராமசாமி

" திரை அருகில் இருந்தாலும், அப்புறம் என்ன என்று அறியக் கூடவில்லை; நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை.”

மெளனியின், 'எங்கிருந்தோ வந்தான்' சிறு கதையில் பத்மாவின் கூற்று.

மெளனி மறைந்து விட்டார், மரணம் அவர் மீதும் கவிந்து விட்டது.

மரணம் அதன் பாரபட்சமற்ற தன்மையும் நிச்சயத் தாக்குதலையும் ஒவ்வொருமுறை நிரூபிக்கும்போதும் நாம் மீண்டும் அதிர்ச்சி கொள்கிறோம். மரணத்தை சகஜமாகக் கண்டு, அதன் வருகை வரையிலும், முன் கூட்டிக் கணிக்க இயலாத வாழ்வின் இதழ் விரிப்புக்களைப் புதுமையாகக் காணவேண்டிய நாம், அனைத்தையும் பழமையாகக் கண்டு, ஆகப் பழமையான மரணத்தை மட்டுமே புது மையாகக் காண்கிறோம்,

இவ்வாறெல்லாம் யோசித்த பின்னரும் மனதை வெறுமை கவ்வுகிறது. மாற்றாக மெளனியின் படைப்புலகத்தை மீண்டும் இப்போது நினைவு கூர்ந்து பார்க்கலாம். அவர் படைப்புக்கும் நமக்குமான உறவை துல்லியப்படுத்திக்கொள்ள மீண்டும் ஒரு பிரயாசை நாம் எடுத்துக்கொள்வோம் என்றால் அதுவே நாம் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

மெளனி மறைந்து விட்டார். ஆனால் அவருடைய படைப்புலகமோ இதோ இப்போதும் நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் இப்போதும் நாம் அதன் உள்ளே நுழைய முடியும், முன் எண்ணங்களை உதறி விட்டு, மன வாசல்களையும் சற்றே திறந்து வைத்துக்கொண்டோம் என்றால், மெளனியின் எழுத்துருவம் ஒரு புதிய பரிமாணத்தை இப்போதும் நமக்குத் தரக்கூடும்.

வாழ்வை உள்ளடக்கிக் கொண்டு, ஆனால் முற்றாக அதை விளங்கிக் கொள்ள முடியாத பிரமிப்பை எப்போதும் நமக்குத் தந்தபடி சுழன்று கொண்டிருக்கும் இந்த ஆகர்ஷண மண்டலத்துக்கு மேலே, மற்றொரு சிறு ஆகர்ஷண கோளமாக அந்தரத்தில் தொங்குகிறது மெளனியின் படைப்புலகம். தெளிவும் தெளிவின்மையும், சிறிது வெளிப் படையும் அதிக ரகசியங்களும், காரிருளும் மின்னற் கீற்றுகளும் கொண்டகோளம் இது. ஆனால் விடாது நம்மை ஆகர்ஷித்து, களைப்பின்றிப் பின் தொடர்ந்து விரைய, சுகமான வற்புறுத்தலை தந்து கொண்டும் இருக்கிறது. இந்த மண்ணின் வெளிப்பாடுகளுக்கும் அந்தரத்தில் தொங்கும் இந்த ஆகர்ஷண கோளத்திற்குமான வேற்றுமைகள் வெளிப்படையானவை, மண்ணின் கோலங்களையோ, ஸ்தூலப் பிரதிபலிப்புக்களையோ, இயந்திர வியாபகங்களையோ லெளகீக நியதிகளையோ பிரதிபலிக்க மறுத்த கோளம் இது. வீச்சின்றிச் சுருங்கி தன் மண்ணையும் உதறி விட்ட இந்தச் சிறிய கோளம் நம்மை ஏன் ஆகர்ஷிக்க வேண்டும்? நம் தளத்தை அது நிராகரித்தது போல் அதையும் நமக்கு ஏன் நிராகரிக்க முடியாமற் போயிற்று?படைப்பாளியின் மறைவு, அவன் படைப்பின் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் என்றால், படைப்பை விடப் படைப்பாளி முக்கியம் என்றாகி விடும், காலத்தை முறியடிக்க முன்னும் கலையை ஒருவன் உருவாக்கிய பின்னரும், காலத்தால் வீழ்ந்து விடும் உடலை, பற்றிக் கொண்டிருக்க முடியுமா? தன் அழிவுக்கு எதிராக காலத்தின் மீது நகர்த்த, தனக்கென்று எதுவும் இல்லாத உடலாகக் கலைஞனை எப்படிக் காண முடியும்? மெளனி என்ற ஜீவிதத்தின் அர்த்தம் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கே உரித்தான வியாகூலங்கள், சஞ்சலங்கள், அழகின் மின்னல்கள், திக்பிரமைகள், பரிதவிப்புக்கள் எல்லாம், தனி மனிதனின் வாழ்வுபோல் அலங்கோலமாக இல்லாமல், கட்டுமானத்துடன், பொருள்சார்ந்த வடிவத்தில் நம்முன் இருக்கிறது அது.

புற வீச்சின் வியாபகத்தை, படைப்புத் தேவை சுருக்கிக்கொண்டு விட்டமெளனியின் எழுத்துக்களில் எப்போதும் ஒரு வாலிபன் வருகிறான், அவன் காதல் ஏக்கம் கொண்டிருக்கிறான். காதலில் தன்னைக் கரைத்துக் கொள்வதில் உவகை பொங்க நிற்கிறாள்

அவன் காதலிக்கும் யுவதியும். இந்த இரு ஜீவன்களில் இடையே நிகழும் ஆகர்ஷணம் மனத்தளத்தில் விரிந்து, புறத்தளத்தில் சிறிது நிகழ்கிறது. ஆகர்ஷணம் அல்ல; ஆகர்ஷணத்தின் விளைவான வியாகூலம்தான் தொடர்ந்து இங்கு மீட்டப்படுகிறது. இந்தச் சோக மீட்டலுக்கு அழுத்தம் தரும் ஸ்வர ஸ்தானங்களும், நாதங்களும், பின்னணிகளுமே இந்த மண்ணிலிருந்து இவர் படைப்பில் இட்ம் பெறுகின்றன. சோகம் கவிந்து நிற்கும் மனதிற்குச் சுருதிகூட்டவே புறஉலக வர்ணனைகளும் பயன்படுகின்றன. பரஸ்பர ஆகர்ஷணத்திலும் பிரிவிலும் வியாகூலமுறும் இந்த ஜீவன்களின் ஜோடிகள் ஒருவரையொருவர் அதிகம் அறிந்தவர்களும் அல்லர். ஒரு ஜீவன் மற்ருெரு ஜீவனை செய்தி வசமாகவே அறிந்திருக்கிறது. அல்லது தூரப்பார்வையில் சிறிது தெரிந்து கொண்டிருக்கிறது. அல்லது கிட்டப் பார்வையில் சற்றே அதிகமாக உணர்ந்துகொண்டிருக்கிறது. அறியநேர்ந்த இந்தக் கீற்று அனுபவங்களைச்சார்ந்து அல்ல; இக் கீற்றுக்கள் உருவாக்கும் கற்பனையைச் சார்ந்தே காதலின் ஆகர்ஷணம் உள் பெருக்காக மனங்களில் மண்டுகிறது. ஒரு போதும் இந்த ஜீவன்கள் இணைவதும் இல்லை. இணைவதற்கான பிரயாசைகள் மேற்கொள்வதும் இல்லை. வாழ்வின் தளத்தில் கூடி முயங்கும் உன்னிப்பும் இவர்களுக்கு இல்லை. கூடிமுயங்குவதில் பெறும் இன்பத்திற்காக அல்ல; பிரிவின் துக்க லகரியை உண்டு, கவித்துவப் புலம்பலுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்ளவே ஆகர்ஷணம் கொள்ள முன்னுவது போல் நம்மை எண்ண வைத்து விடுகின்றன இந்த ஜீவன்கள். இவ்வாறு இணைய முடியாமற் போனதற்கு, இளமையில்பாய்ந்து குறுக்கிட்டு ஒருவரை விழுங்கி விடும் மரணம், எப் போதும் ஒரு காரணமாக இருக்கிறது. மரணத்தின் சொரூப உக்கிரம் கூட அற்ற அற்ப அபத்தங்களுங்கூட காரணங்களாகி விடுகின்றன. எப்படியும் அடைய முடியாமற் போகிறது. இதுதான் முக்கியம். அடைவதற்காக ஜீவனைப் பிடுங்கும் வேட்கையும், அடைய முடியாமற் போகும் அவலமும். இதுதான் மெளனியின் மையமான தந்தி இதையே வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு பின்னணிகளில் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு கோலங்களில் அவர்மீட்டுகிறார், மௌனியின் கலையில் காதலைச் சார்ந்து நிகழ்த்தப்படும் இந்த அவலங்கள் நம் அனுபவத்தில் முழு வாழ்வையும் தொட்டு விரிவு கொள்கின்றன.

மெளனியின் கலைக்கும் நம் வாழ்வுக்குமான தொடர்பு மந்திரவாதிக்கும் கண் கட்டு வித்தைக்குமான தொடர்பைப் போன்றது. வாழ்வின் தளம் போல்மந்திரவாதியும் நிஜம். பொருள் வேண்டி நிற்கும் வாழ்வின் நிலையை மெளனியின் கலை ஏற்றுக்கொண்டிருப்பதால் தான் அவலப் பூச்சான அவரது கலைக் கண்கட்டு வித்தைகள் நம் மீது ஆழ்ந்த அர்த்தத்தைப் பாய்ச்சுகின்றன. வாழ்வின் நிலையில், கனவு, ஸ்திதியின் குரூரம், அவலம் மூன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாமற் பின்னிக் கிடக்கின்றன. இவ்வனுபவங்களின் மையம் மெளனியின் கலை உலகத்தின் மையத்தால் அதிர்வு கொள்கிறது. அங்கு காதலுக்கு எதிராக முறிவுகள், கனவைப் பறிக்கும் மரணங்கள், இசைக்கு எதிராக அபஸ்வரங்கள், தோற்றத்துக்கும் நிஜத்திற்குமான முரண் நிலைகள், என்ன ஏது என்று தெரியாத புதிர் திக்பிரமை.

நமது போதாமையை எப்போதும் நாம் உள்ளூர உணரும் வகையில் வாழ்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதாமை நம்மை வருத்தம் கொள்ளச் செய்கிறது. அள்ளி அள்ளிப் பிடிக்கும்போதும் பிடிப்பை வழுக்கிக் கொண்டு தூர தூரப் போகிறது வாழ்க்கை. நாம் நம்மை காட்டிக்கொள்ள விரும்பும் முக மூடிகளுக்கு அப்பால், நமது சித்தாந்தங்களுக்கும் தத்துவங்கழுக்கும் அப்பால் நமது மரபு சார்ந்த வலுக்களுக்கு அப்பால் உள்ளூர போதாமையின் துக்கம் நம்மை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறது. எதையும் முற்றாக அறியவோ, அணைக்கவோ, சொந்தமாக்கிக் கொள்ளவோ, நம் விருப்பம் போல் இயக்கவோ முடியாமற்போகும் போதாமை இது. இந்த அபூர்ணத்தின் துக்க நிலையை மொனியின் கலை ஸ்பரிசித்து மீட்டுகிறது. காதல் எனும் முகாந்திரத்தை முன் நிறுத்தி எழுப்பப்படும் மீட்டல்களின் அதிர்வுகள் முழு வாழ்வுக்குமாக விரிகின்றன. அந்தரத்தில் தொங்குவது போன்ற இவரது ஆகர்ஷண கோளம் வாழ்வின அபூர்ணத்தின் குறியீடே. இவரது மொத்தப் படைப்பும் ஒரு குறியீடாகத் தோற்றம் தரும் வலுமையும் இறுக்கமும் கொண்டது.
ப பிரதிபலிப் கோலங் வெளிப்படைத

Sunday, February 10, 2019

கவி - தாராசங்கர் பந்த்யோபாத்யா :: முன்னுரை - ஸுநீல் கங்கோபாத்யாய்.

கவி 

முன்னுரை 
தாராசங்கர் பந்த்யோபாத்யாயரின் 'கவி' என்ற நவீனம் முதன் முதல் வெளிவந்தபோது எனக்கு வயது ஏழு - 1941 ஆம் ஆண்டு. அவர் அச்சமயம் தம் நாற்பதாவது வயதைக் கடந்துவிட்டார். என் போன்ற இளைஞர் சிறுகதை, நவீனங்கள் படிக்கத் தொடங்கிய சமயம் தாராசங்கர் புகழ்வான் உச்சியில் நின்றார். 'கவி' என்ற இந்த நவீனம், அக்காலத்திலேயே ஆர்வலர் விழைந்து போற்றிய நூலாகத் திகழ்ந்தது. தாராசங்கருக்கும் என் போன்ற இளைஞருக்குமிடையே ஒரு தலைமுறைக் காலம் வித்தியாசப்பட்டாலும் நாங்கள் அவருடைய இலக்கியப் படைப்பின் சுவையில் ஆழ்ந்து திளைத்தவரானோம். அவருக்கே உரித்தான விரிவுடைய படைப்புத் திறன், மனித உள்ளங்களை நுணுகி ஆராயும் ஆற்றல் இவை, எச்சமயத்திலும் எங்களுக்கு அவர்பால் ஈடுபாட்டையும், வியப்பையும் தூண்டின் எனலாம். 

வங்க இலக்கியத்தில் 'கவி' இன்னும் மழுங்காப் புகழுடன் நிலைத்து வருகிறது. ஐரிஷ் புலவர் ஒருவரைப் பற்றிக் கூறுவதுண்டு - முப்பது ஆண்டுகள் தொடர்ந்தாற்போல் அவர் காலத்துடன் சமமாகச் சென்ற எழுத்தாளரென்று. இந்தக் கூற்று தாரா சங்கருக்கும் பொருந்தும். 

ரவீந்திரர் காலமான ஆண்டில் வெளிவந்த இந்த நவீனம் ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது எனலாம். இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பம் சில ஆண்டுகளாகத் தொடங்கி வருகிறது. ரவீந்திரர் மறைவுக்குப் பிறகு அது மேலும் உருவான வளர்ச்சிப் பெற்றுவிட்டது. இது குறித்து ஆய்வதன் முன் இப்போக்கு தோன்றக் காரணமாக இருந்த நிலைக்களனைப் பற்றிச் சுருங்கக் கூற வேண்டிய சில உள். 

இந்நூற்றாண்டுத் தொடக்கத்திலிருந்து இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் வரை விரிந்துள்ள காலம், ரவீந்திரர் வங்க இலக்கியத்தில் தனிப்பெரும் ஆட்சி செலுத்திய பகுதியாகும். அவருடைய நூல்கள் பாரதத்தின் வெவ்வேறு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பெயர்க்கப்பட்டமையால் அவருக்கு இந்த ஆதிக்கியம் ஏற்பட்ட தாகும். இது இங்கு நம்முடைய சருச்சைக்குரிய விஷயமன்று. அவர் வங்க இலக்கியத்தின் முழுப் பிராணனாக இருந்தார். இதில் கருத்து வேறுபாட்டிற்கே இடமில்லை. அவரைப் போன்ற மேதா விலாசமுடைய எழுத்தாளரை உண்மையில் காண்பதரிதே. நம்மிடைப் பலர் எப்பொழுதுமே வெறுப்புற்றுப் பல காரணங்களுக்காக அவருடைய இலக்கியங்களை எதிர்த்துள்ளோம். ஆனால் உளம் விண்டுரைப்பின் ரவீந்திரரின் பரந்த அறிவாற்றலை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இதனை ஏற்காதவர் பொய்யர், கயவர் என்றே கூறுவேன். அவர்கள் எழுத்தாளரே அல்லர். 

கவிதை, நவீனம், சிறுகதை, பாட்டு, கட்டுரை இத்துறைகள் அனைத்திலும் ரவீந்திரர் வியன்பெரு சாதனைகள் புரிந்தவர். வாழ்வு இறுதிவரை அவர் பல கவிதைகளைப் புனைந்தவர்; நவீனங்கள், சிறுகதைகள், பாடல்கள் கணக்கற்று யாத்தவர். ஆனால் அவையாவும் இன்று மக்கள் மறந்து போனவை. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடநூல்களாகவே தலைக் காட்டுகின்றன. ஆனால் காவியத் துறையில் காஜி நஜ்ருல் இஸ்லாமையும், நவீனத்தில் சரத்சந்திர சட்டோபாத்யாயரையும் இன்னும் வாசகர்கள் மறக்கவில்லை. 

நவீனத்தையே எடுத்துக்கொள்வோம். நவீனம் என்ற பெயருக்கு ஏற்ப ரவீந்திரனின் ஆக்கங்கள், அவற்றிற்குரிய லட்சணங்களைக் கொண்டனவா என்ற வாதம் இருந்து வருகிறது. நவீனமோ இல்லையோ, அவற்றின் இலக்கியத் தரம் அசாதாரணமானது. 

குணசித்திரங்களை நூணுகி ஆராய்வது, உயிர் பெய்து பாத்திரங்களைப் படைப்பது, மொழியைச் சிறப்பாகக் கையாளும் விதம் - இவற்றில் அவருடைய நவீனங்கள் நிகரற்றன. இது தவிர, நவீனம் என்பது மலையைப் போல் அசையாது நிற்கும் ஒரு விஷயமன்று. சொல்லப்போனால் ரவீந்திரரின் நவீனங்களும் நாடகங்களும் கற்றறிந்த வங்காளி ரஸனைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. ஆனால் ரவீந்திரர் வாழ்ந்த காலத்திலேயே நவீனத்தில் ஒரு புதுமையைப் புகுத்தியவரென்று சரத்சந்திரரை மக்கள் வெகுவாய்ப் போற்றத் தொடங்கினர். திறனாய்வோர், சரத்சந்திரர் சிறந்த நாவலாசிரியர் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் வாசக பெருமக்கள் அவரைப் புகழ்ந்து பாராட்டினர். ரவீந்திரரிடம் காண்பனபோல் ஆழ்ந்த உணர்வும், வளமார் மொழிச் செறிவும் சரத்சந்திரரிடம் இல்லை. ஆனால் சரளமான நடையில் மக்கள் எவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கதைகளைப் புனைந்து அவர் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்து விட்டார். 

கதைகள் புனையும் விஷயத்தில் சரத்சந்திரர் அப்படித் திறமையில் குறைந்தவர் அல்லர். ஆனால் வங்க இலக்கியத்தில் ஒரு தனிப்பட்ட 
பாணியை உருவாக்க அவரால் இயலவில்லை. சரத்சந்திரரை அடி யொற்றிச் சென்ற எழுத்தாளர் எண்ணிக்கையில் சிலரே. வங்க இலக்கியத்தின் போக்கு ரவீந்திரரைக் குறிக்கோளாக் கொண்டே சென்றதெனலாம். 

1924-25 ஆண்டுகளில் ரவீந்திரரை எதிர்க்கும் இயக்கம் தோன்றியது. அந்நாளைய இளம் எழுத்துவல்லார் வெளிப்படையாக ரவீந்திரரை ஏற்க மறுத்துப் புது இலக்கியத்தின் கோஷத்தைக் கிளப்பினர். கவிதை, சிறுகதை, நவீனம்- இத்துறைகளில் இந்த இளம் எழுத்துச் சிற்பிகள் யாவரும் மேலை நாட்டு இலக்கியத்தில் துளைந்தவர். இவர்களில் பலர் ஆங்கில இலக்கியத்தில் எம். ஏ. பட்டம் பெற்றவர்கள். ரவீந்திரனின் இலக்கியத்தில் காண்பதற்கரிதான சேரிமாக்கள், கரிச் சுரங்கத்து வாழ்க்கை , காட்டகத்தில் திரியும் பழங்குடிகள் இவர்களை வைத்து அருவருக்கத்தக்கதும், ஆண் பெண்பாலாரின் காமவிழைச்சைக் கூறுவதுமான ஆபாசங்கள் இப்புது இலக்கியத்தில் மணத்தன். ரவீந்திரரை வெறுப்போர் இது போன்ற விரசங்களைத் தாராளமாகத் தம் படைப்பில் புகுத்தினர். அச்சமயம் வங்க இலக்கியத்தில் இந்த உத்வேகமும், பரபரப்புமே மண்டிக் கிடந்தன எனலாம். 

ரவீந்திரரைப் பின்பற்றும் அல்லது அவரது நிழலையொத்த எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரவீந்திரரை வெறுப்போரான இலக்கியச் செம்மல்கள் கவிர்ச்சி மிகுந்தவர். வருந்ததற்குரிய விஷயம் என்னவென்றால் ரவீந்திரரை வெறுப்போர் இலக்கியத்தில் தரமானது எதையுமே படைக்காமல் போனதேயாம். அனுபவத்தில் பெறாத விஷயங்களைக் கொண்டு புதுமை இலக்கியம் படைக்கும் குருட்டார்வத்தில் சாரமற்ற ஒன்றையே உருவாக்கினர். கவிதை வரைக்கும் ஓரளவு புதியன புகுத்த முயன்றனர். ஆனால் நவீனத்தில் அவர்களுடைய முயற்சி வெற்றி பெறவில்லை. 

ரவீந்திரருக்குப் பிறகு முக்கியமாக மூன்று நாவலாசிரியர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். இவர்கள் எவரும் ரவீந்திரரை வெறுக்கும் குழாத்தில் சிக்காதவர்கள். இவர்கள் தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் தமக்கே உரித்தான பாணியில் நாவல்களை வரைந்தனர். அதிலிருந்து இலக்கியமே தனியான பாதையைக் கோலிக் கொண்டது. ரவீந்திரரின் எதிரிகள் நடத்தும் கிளர்ச்சி பற்றி இவர்கள் தம் மூளையைக் குழப்பிக் கொள்ளவில்லை. இம் மூவரும் வங்க இலக்கியத்தில் முப்பெரும் பானர்ஜிகள் ' என அழைக்கப் பட்டனர், விபூதி பூஷண் (பதேர் பாஞ்சாலியின் ஆசிரியர்) மாணிக் (புத்துல் நாச்சேர் இதிகதாவை எழுதியவர்) தாராசங்கர் (கணதேவதாவின் சிற்பி). 

இந்தப்படி, ரவீந்திரர் மறைந்த ஆண்டில் 'கவி' என்ற நவீனம் இன்றைய வங்க இலக்கியத்தின் ஒரு திசைக் காட்டியெனத் தெற்றெனக் கூறலாம். இந்த நூலை நான் முதன்முதல் படித்து நுகர்ந்த இன்பம் இன்றும் என் மனத்துள் பதிந்து இருக்கிறது. இன்னும் தொடராதா, எங்கேயாவது நின்றுவிடுமோ என்றெல்லாம் என் மனம் அலைபாயும். அதைப் படித்து முடித்ததும் நான் மெய் மறந்து ஒரே இடத்தில் அமர்ந்து விட்டேன். கண்களில் நீராக வடிந்தது. இளம் வயதில் இப்படி ஒரு புனிதமான கண்ணீ ர் உள்ளூரப் பொங்கி எழுவது உண்டா? அந்தோ, அன்று நான் பெற்ற அனுபவம் மீண்டும் திரும்பி வருமா ? புத்தகத்தைப் படிக்கும் போதெல்லாம் ஒரு வகை வேதனை என்னை அழுத்திக்கொண்டே இருக்கும். இனமறியாத ஒரு தனிமையையே குறிப்பது இந்த வேதனை. கூரிய அறிவு படைத்த வாசகர்கள் இது என்னவென்று புரிந்து கொள்வர். பெரியதோர் இலக்கியத்தைப் படித்து இத்தகைய துயரின் துடிப்பைப் பெற அடிக்கடி நம் உள்ளம் அவாவுகிறது. 

தாராசங்கரின் முதல் ஆக்கங்களான நவீனங்கள், ஆரோக்கியம் நிரம்பிய நல்லகாற்றென வங்க இலக்கியத்தில் புகத் தலைப்பட்டன. ரவீந்திரரை வெறுப்போரின் பக்குவப் படாத பிஞ்சு மொழியும், இக் காலத்தை நகல் செய்யும் இலக்கிய அட்டூழியங்களும் படிப்பவருக்குச் சலிப்பையே தந்தன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தாராசங்கர், நாம் வாழ்க்கையில் காணும் ரத்தமாமிசமான மனிதர்களையும், அவர்களுடைய இன்பதுன்பங்களையும் படம் பிடிக்கும் நவீனங்களையே படைத்தார். இந்த நாட்டின் மண், நீர், காற்று இவற்றின் மணம் நிரம்பிய, நம் கண்முன் உலவுவோரின் அப்பு அழுக்கற்ற சித்திரங் களே இவற்றில் உள்ளன. எளிய மக்கள், வறுமையில் உழல்வோர் இவர்களைச் சித்திரிப்பது ஒருபுறம் இருக்க, தாராசங்கர் இதற்கும் மேலானதோர் நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறார். அவருடைய நவீனங்களில் கதையம்சத்தின் கவர்ச்சி அசாதாரணமானது. ரவீந்திரரே தாராசங்கரிடம் கூறியுள்ளார் -: நீ எழுதும் கதை ஏதோ எழுதுவதற்கென்று எழுதியதன்று. இப்படி அமைவது தான் எனக்குப் பிடித்திருக்கிறது. 

வங்க நாட்டின் குறிப்பிட்டதொரு பகுதியில் வாழும் மனிதர்களைப் பற்றியே தாராசங்கரின் இலக்கியம் அதிகமாக அமைந்துள்ளது. வாலிபம் இளமை இப்பருவங்களில் ஏற்படும் அனுபவங்களிலிருந்து 

ஓர் எழுத்தாளன் தன் படைப்பிற்கான கருப்பொருளைப் பெறுகின்றான் என அறிஞர் பலர் கூறுவர். தாராசங்கரும் ஒரு வங்க ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்த பிள்ளை. வாழ்வின் பெரும் பகுதியைத் தம் கிராமச் சூழலிலேயே கழித்தவர். ஒடுங்கி வரும் ஜமீன்தார் குடும்பங்களைப் பற்றி அவர் நேரில் கண்ட அனுபவங்கள் உண்டு. 

இத்துடன், அவர் சுதந்திரப் போராட்டத்திலும், சமூகத் தொண்டிலும் நிறையப் பங்கு கொண்டு சிறந்த பணியாற்றிய பொழுது கீழ்த்தரப்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. இலக்கியத்தை நம்பி, பிழைப்பு நிமித்தம் அவர் கல்கத்தாவுக்கு வந்தார். அச்சமயம் வறுமையில் ஆழ்ந்து, கடுமை யாக உழைக்க வேண்டியிருந்தது. அவர் இப்படிப் பெற்ற பல வகையான அனுபவங்களைத் தம் காரியத்துக்கு நன்கு பயன்படுத்திக் கொண்டார். வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்து பார்க்கும் கிடைத்தற்கரிய ஆற்றல் அவருக்கு மேலும் வளர்ந்தது. இடம், காலம் இவற்றைக் கடந்து அவருடைய நோக்கு உண்மை அடிப்படையில் எழுந்து உலகு பரந்ததாகியது. சமூகத் தொண்டு புரிந்த சமயம், வெஞ்சிறையில் உழன்றபோதும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களால்தான் அவருடைய எழுத்தில் ஆங்காங்கே உயர்ந்த லட்சியத்தின் உரத்த சங்கநாதம் கேட்கிறதோ என்னவோ! 

'கவி'ப் புதினத்தின் தலைவன் இந்தப் பிற்போக்கான சமுதாயத்தின் அடிப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இனத்தவன். 'டோம்' என்று நாம் எவரைக் குறிக்கின்றோமோ அவர்கள், மயானத்தில் சவங்களை எரிப்பவர்களென்பதையே சுட்டும். டோம்கள் என்றால் ஒரு வகைக் கொடிய மக்கள் இனத்தவர், ஜமீன்தார்களின் பாதுகாவலர்களான சிலம்பம் பயின்ற முரடர்கள் என்றே பொருள்படும். இவர்கள் பின்பு, கொள்ளை, கொலை போன்ற கொடுமைகளைப் புரிவோராயினர். இக் காலத்தில் இவர்கள் உடல்வருந்தி வேலை செய்யும் பாட்டாளி மக்களாவர். இத்தகைய மறக்குடியில் தோன்றிய நிதாயி, ஒரு கவிஞன். நிதாயின் மாமன் ஒரு பயங்கர வழிப்பறிக்காரன். நிதாயி இத் தொழிலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சிறு பிராயத்திலேயே அவன் மனம் நேரிய பாதையிலேயே திரும்பியது. கற்பனையில் விருப்புடையவன். கள்ளனாகப் போக வேண்டிய அவன் கவிஞனாக மாறி, இனிய பாடல்களைப் புனையலானான். இந்த நவீனத்தின் தொடக்கத்திலிருந்து இத்தகைய எழுத்திலே வல்லவனை, ஒவ்வொரு படியாக உயர்ந்த லட்சியத்திற்கு ஆசிரியர் இட்டுச் செல்வதை ஓர்கவும். தாராசங்கர் இந்த லட்சியத்தைக் கருத்தில் கொண்டவர். இதுவே வாழ்க்கையின் தருமமாகும்; சமூகத்தின் ஆதர்சமாகும். 

இந்த நாவலின் தலைவனின் வரலாற்றை உண்மை சம்பவத்திலிருந்து ஆசிரியர் எடுத்துக் கொண்டார். பிற்காலத்தில் தாராசங்கர் தமது “ ஸ்ம்ருதி கதா' (நினைவுகள்) என்ற நூலில் இது பற்றி விரிவாக வருணித்துள்ளார். அவருடைய கிராமத்து ரெயில் ஸ்டேஷனில், இதுபோன்ற ஒரு டோம் யுவகன் கூலி வேலை செய்பவன். 'கன்னங் கரேலென்று நிகுதிகுவென்று இருப்பான். ஏதோ சுமாராக எழுதப் படிக்கத் தெரியும். ஸ்டேஷனில் மூட்டைத் தூக்கி அதில் கிடைக்கும் ஊதியந்தான் பிழைப்பிற்கு. தனக்குத்தானே பாடிக் கொண்டே திரிவான் எங்கும். ஒரு நாள் பார்த்தேன், ஆள் நடமாட்டமிராத மாந்தோப்பில் மரங்கள் அவனுக்குச் செவி சாய்க்க, அவன் கையை கன்னத்தில் ஒரு புறமாக அழுத்தியவாறு, மற்றொரு கையை ஆட்டியபடி , சற்றுக் கூனிக்கொண்டு 'கவி' பாட்டுக்களைப் பாடிக் கொண்டே போனான். இதை வைத்துக் கொண்டு என் கதையைத் தொடங்கினேன்' என்கிறார். 

உண்மையில் நடப்பதற்கும், இலக்கியத்தில் வரும் நிகழ்ச்சிக்கும் இடையே எத்தனையோ வேற்றுமை. உண்மையில் நிகழ்ந்ததை வைத்து இந்த உணர்வும் ஊக்கமும் பிறந்தாலும் கதையில் வரும் தலைவன் மெல்ல மெல்லத் தனக்கு இயல்பான உன்னத நிலைக்கு வருவதை ஆசிரியர் தம் திறமையால் அமைக்கிறார். வாழ்வில் உள்ளதுபோல் கதையில் வருகிறதா இல்லையா என்று ஆராய வேண்டிய தேவையே இல்லை. இது முற்றிலும் ஒரு நம்பிக்கையின் பேரில் எழுதுவதாகும். இந்த உண்மையைத் தவிர்த்து இக் கதைக்கு ஏற்புடைமை இன்னும் ஒன்று உள்ளது. அந்த நோக்கிலிருந்து பார்த்தால் இந்த குணச்சித்திரம் பயனுள்ள படைப்பாக அமைகிறது. உண்மை அனுபவம், படைக்கும் திறமையில் தீவிரம் இவை இன்றேல் இந்த ஏற்புடைமை கைகூடாது. 

'கவி' முதலில் ஒரு சிறுகதை உருவில் வந்தது. அப்போது அதில் ஜூமுர் பாடக் கோஷ்டியே வரவில்லை. பின்னர் நவீனமாக அக் கதை உருவெடுத்தபோது இந்த இரண்டாவது அம்சம் அதில் இடம் பெற்றது. இவ்விரு பகுதிகளிலும் ஓர் இடைவெளி தென்பட்டாலும் வஸனைப்போல் ஓர் அபூர்வமான பெண்ணின் குணச்சித்திரம் நம் இலக்கியத்திற்குக் கிடைத்த வெற்றியே எனலாம். இந்த வஸனின் பாத்திரமும், தாராசங்கர் உண்மை வாழ்விலிருந்தே எடுத்துக் கொண்டதாகும். அவருடைய கிராமத்தில் ஸ்டேஷன் பக்கமாக உள்ள தோப்பில் ஜுமுர் கோஷ்டி வந்து இறங்கும். அதில் வஸன் என்ற பெயருடைய ஒரு பெண்ணுக்கு காலரா நோய் கண்டது. சமூகம் வெறுக்கும் பல தீய பழக்க வழக்கங்கள் மலிந்த இந்த எளிய மக்கள் தம்மில் யாருக்காவது காலரா நோய் கண்டால் அவரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போய் விடுவார்கள். சமூகத் தொண்டில் ஈடுபட்ட தாராசங்கர் அப்போது காலரா நோய் தணிவதற்கு ஊசி போட முன் வருவது வழக்கம். இப்படிச் சிகிச்சை செய்கையில் அவர் இந்த வஸனைக் கண்டார். இந்த ஜூமுர் கோஷ்டியாருடன் அணித்தாகப் பழகி, பல விஷயங்களை நேரில் கண்டறிந்து விசித்திர அனுபவங்களைப் பெற்றார். 

'கவி' நவீனத்தில் மற்ற எல்லாவற்றையும்விட அதில் வரும் பாட்டுக்களே உயர்ந்த பொக்கிஷமாகும். இந்தப் பாட்டுக்கள் தாராசங்கர் திரட்டியவை அல்ல. அவரே சொந்தமாக யாத்தவை. அவர் ஒரு கவிஞரென்று யாருமே அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் இதுபோன்ற பாணியில் பாடல்கள் இயற்றுவதில் அவருக்கு இணை எவருமில்லை. 'கவி 'யில் வரும் பாடல்கள், கதையுடன் அதில் வரும் பாத்திரங்களுக்கு ஏற்றபடி இழைந்து செல்கின்றன. உள்ளத்தில் உணர்ச்சிப்பெருக்கு குமிழ்க்காது போனால் இவை போன்ற பாட்டுக்களை எழுதவே முடியாது. அவருடைய நினைவுகள்? என்ற நூலிலிருந்து இப்பாடல்கள் எழுந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். வீட்டில் அறையொன்றில் தாராசங்கரின் மனைவி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார். அதே அறையில் ஒரு பக்கம் தம் மடிமீது ஒரு சிறு ஸட் கேஸ்ஸை வைத்தபடி ஒரு காகிதத்தில் அவர் பாடல்களைப் புனைகிறார். நடுநடுவே பிணியுற்ற இல்லாளைக் கவனிக்கிறார். மீண்டும் பாட்டெழுதுவதில் ஆழ்ந்து விடுகிறார். இப்படிச் சில அடிகளை இயற்றியதும் எழுந்து, தம் அண்டை வீட்டுக்காரரான பிரபல ஓவியர், யாமிநீ ராயைக் காணப் போகிறார். திரும்பி வந்து குறையாக நின்ற பாட்டைப் பூர்த்தி செய்கிறார். மற்றொன்றை எழுத அழகிய சொற்களைத் தேடுகிறார். இது அல்லவோ உணர்ச்சிப் பெருக்கு! இப்பாடல்களை வேறு மொழியில் பெயர்த்தால் அவற்றின் சுவை மாறாமல் இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. இதில் மிளிரும் சொற்கள் ஒரு சாரார் பேசும் கொச்சை மொழிகள் அல்லவா. இதுவே இப் பாடல்களுக்குரிய சிறப்பு ! 

வாசக நண்பர்களே, 'கவி' என்ற நவீனத்தைப்போல் அப்பட்டமான உணர்ச்சி பொங்கித் ததும்பும் ஓர் இலக்கியத்தைப் பிடிக்க முனைவீர். காதல், கலுழ்ச்சி இவற்றின் கதையை எத்தனை ஆழ்மை
யுடனும், உருக்கத்துடனும் ஆசிரியர் வருணிக்கின்றார்! அதன் எதிரே என்னுடைய இந்தப் பீடிகை வெற்றுச் சொற்களாகவே தோன்றும். 

- ஸுநீல் கங்கோபாத்யாய்.

???????????????????????????????????????????????????????????????????????

1
இது வியத்தற்குரிய நிகழ்ச்சியே அன்று; ஆனால் உலகில் இப்படியும் நிகழ்வதைப் பார்க்கிறோம். கொள்ளை, வழிப்பறி இவற்றைத் தொழிலாகக் கொண்ட ஒரு வம்சத்துப் பிள்ளை, திடுமென ஒரு கவிஞனாக மாறிவிட்டான்.

இப்படியும் நடக்குமென்பதற்கு நமக்கு வேண் அத்தாட்சிகள் உள்ளன - அசுரர் குலத்தில் பக்தன் பிரஹ்லாதன் தோன்ற வில்லையா? ஆனால், அது கடவுளின் திருவிளையாடல் என்று சொல்லிவிடலாம். ஊமையை நாம் படைத்த புலவனாக மாற்றவும், முடவனை மலை முகட்டைக் கடக்கச் செய்யவும் வல்ல அப்பரம் பொருளின் விருப்பத்தால் அசுரர் குலத்தில் பிரஹ்லாதன் பிறக்க நேர்ந்தது. ராமாயணக் கவியான வால்மீகி ஓர் ஆறலைக் கள்வனே ; ஆனால் பார்ப்பன குலத்தவன். இங்கேயும் கடவுளின் லீலையை பார்க்கிறோம். கொடுமை மிகுந்து குற்றமே புரியும் 'டோம்' இனத்தவன், திடுமென ஒரு கவிஞனாக வெளிப்படுவதை, கடவுள் விரும்பிய செயலா என்ற விஷயத்தை ஆராயப் புகுவதற்கு வேண்டிய சாஸ்திர சம்மதங்கள் இல்லை. சொல்லப் போனால், இதைக் கூறும் பொழுதே நமக்கு உடல் சிலிர்க்கிறது. ஆனால் இப்படி நிகழ்வதை உலகத்தவர் ஒரு பேராச்சரியம் என்று கருதினர்; வியப்பையும் அடைந்தனர்.

கிராமத்துப் பிரமுகர்களும், 'இது ஒரு அதிசயமே; இதுவரை பார்க்காததொன்று' என்றனர். கல்வியறிவில்லாத ஹரிஜனங்களும் 'அடேயப்பா, இந்த நிதாயிசரண் இப்படி ஆவான் என்று நாங்கள் நினைக்கவே இல்லே; அதிசயம்தான்' என்றனர்.

நிதாயிசரண் பிறந்த அக்குடியினர் ஹிந்து சமூகத்தில் மிகக் கீழ்த்தரமான டோம் ஜாதியைச் சேர்ந்தவர்கள். நகரங்களில் டோம்கள் எந்த நிலையைச் சேர்ந்தவர்களென்று எண்ணுகிறோமோ, அந்நிலையில் உள்ளவர்களல்லர் இவர்கள். இந்த டோம் இனத்தவர் வங்காளத்திலேயே புகழ்பெற்ற சிலம்பக்காரர்கள் (கோல் விளையாட்டில் வல்லவர்கள்). பழமை முதற்கொண்டே தோள் வலிமைக்கு இவர்கள் பெயர் போனவர்கள். இவர்களை வீர்வம்சி என்று மக்கள் அழைப்பர். நவாபின் படையில் இவர்களே அதிகமாகச் சேர்ந்து, தம் வீரப் பிரதாபங்களைக் காட்டியுள்ளனர். கம்பெனி ஆட்சியில் இவர்கள் சேவையிலிருந்து விலகி, கட்டுக்கடங்காத கொடுமைமிக்க கொள்ளைக் கூட்டத்தவராக மாறினர். போலீஸ் வரலாறும் இந்த டோம் குலத்தவர் புரிந்த அட்டூழியங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இந்த டோம்களின் உடலில் இன்னும் அந்த இரத்தவெறி ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இதைக் கட்டுக்கு மீறிச் செல்லவிடாமல் போலீஸ், இரும்பால் அணை போட்டிருக்கிறது. கை விலங்கு, காலில் இரும்புச்சங்கிலி, உடலை வருத்தும் கடினப்பணி இவற்றால் இவர்களது கொற்றத்தை ஏறக் குறைய ஒடுக்கிவிட்டது. இவை போதாவென்று ராணுவ ரீதியான தண்டனைகளையும் விதித்திருந்தனர். இருப்பினும், எங்கேயோ ஒரு புரைசல் வழியாக இவர்கள் உள்ளத்தில் கரந்துள்ள அந்தக் கொடூர குணம் எப்போதாவது தலைக் காட்டாமல் போய்விடுவதில்லை. இன்னும் அது இருக்கத்தான் செய்கிறது. நிதாயியின் மாமா கெளர் வீரவம்சி ; அதாவது கெளர் டோம், அந்தப் பிராந்தியத்திலேயே பயங்கரமான கொள்ளைக்காரன். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவன் அந்தமானில் கைதியாக ஐந்தாண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான்.

நிதாயியின் தாய்வழிப்பாட்டன் - கெளரின் தந்தை, சம்பு வீர் வம்சி இதே போல் அந்தமானுக்குச் சென்று அங்கேயே உயிரையும் துறந்தான்.

நிதாயியின் தகப்பன் ஒரு கன்னக்கோல் திருடன். அவன் பாட்டன் ஒரு தடி சுழற்றி . தன் சொந்த மருமகனையே ஒரு காரிருளில் ஏதோ வழிப்போக்கன் என்று நினைத்து மடக்கி, தடியால் கொன்று போட்டுவிட்டான். மாப்பிள்ளை - கொலை செய்தான் மைதானம், அவ்வூரிலிருந்து சில மைல் தொலைவில் தான் இருக்கிறது.
இப்படி இவர்களுடைய முன்னோர்கள் புரிந்த அருஞ் செயல்கள் பற்றிய முழு வரலாறு போலீஸ் ரிகார்டுகளில் உள்ளன. அவை நம் இரத்தத்தை உறையச் செய்யும் பயங்கரமான செயல்கள்.

இந்த நிதாயிசரண் இத்தகைய குலத்தில் உதித்த மகன். ஒரு கொலைகாரனின் பெண் வயிற்றுப் பேரன் ; ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனின் மருமான் ; ஒரு கோல்காரனின் சொந்தப் பெயரன் ; கன்னக் கோல் திருடனின் மகன் அவன். நிதாயியின் தோற்றமும் இத்தகைய வம்சத்தின் அச்சில் வார்த்தது போல் அமைந்திருந்தது. நரம்பு வார்ந்த இரும்புக் கட்டான தேகம் ; நல்ல உயரம்; இருள் கருமை நிறம் ; பெரிய பெரிய கண்கள் அவனுக்கு. அடக்கமும், இரக்கமும் மலிந்த நோக்கு. இந்த நிதாயி, திடுமெனக் கவிஞனாக மாறி விட்டான். எல்லோரும் அவனையே வியப்புடன் நோக்கினர். அவன் வெட்கத்தால் தலை தாழ்ந்து, இரு கை குவித்து, இளகிய பார்வையுடன் தரையையே நோக்கினான். அவன் உதடுகளில் சற்றே நெளியும் ஒரு வெட்கச் சிரிப்பு.

இப்படி நிகழ்ந்தது - இந்தக் கிராமத்தின் பழைய பெயர் அட்டஹாஸம். ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள் ஒன்று அங்கிருந்தது. அங்கே கோயில் கொண்டுள்ள அதிதேவதையின் பெயர் சாமுண்டா. மாசி பூர்ணிமையில் இவளுக்கு ஆற்றப்படும் பூஜை மிகவும் விசேஷமானது. இதன் நிமித்தம் இங்கு மாபெரும் மேளா ஒன்று கூடும். இந்த மேளாவில் புலவர்களின் போட்டி ஒரு முக்கிய அம்சமாகும். நோட்டன் தாஸ், மஹாதேவ பால் இவர்களிருவரும் அந்தப் பக்கத்திலேயே பிரபலமான கவிவாணர்கள். இவர்களது பாட்டுச் சவால்கள் இங்கேதான் நடைபெறும். இந்தத் தடவை, இதைப் பார்க்கப் பிற்பகலிலிருந்தே ஜனங்கள் கூடிவிட்டனர். சாயங்காலம் ஆவதற்குள் இம் மக்களின் நெரிசல் மேலும் அதிகமாகிவிட்டது. இரண்டாயிரத்துக்குமேல் இருந்தனர். ஆடம்பரமாகத் தொடங்கியது கவியரங்கு. மாலை நேரம் ஆக ஆக வெளிச்சத்திற்காக 'பெட்ரோமாக்ஸ்' விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிர்ந்தன. இந்தப் பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மஹாதேவ பாலின் கட்சியினர் மேடையில் அமர்ந்தனர். ஆனால் நோட்டன் தாஸ், ஆளே தென்பட வில்லை. அவனை அழைத்துவரச் சென்றிருந்தவனும் வெற்று ஆளாகத் திரும்பி வந்து, 'வீட்டில் ஆளையே காணோம்; அங்கே ஒரு சாமானும் இல்லை ; வீடு வெறிச்சோடியிருந்தது. ஒரே ஒரு ஜமுக்காளம் மட்டும் கிடந்தது ; அதுவும் நாம் கொடுத்ததுதான்' என்றான்.

இதைக் கேட்டதும், மேளாவுக்கு ஏற்பாடு செய்தவர்கள் திடுக்கிட்டு என்ன செய்வதென்று புரியாமல் விழித்தனர். இதற்குள் குழுமியிருந்த மக்களிடமிருந்து ஆரவாரமும், சீழ்க்கையொலியும் வந்தன.

இப்படி அந்த நோட்டன் செய்தது மிகவும் அநியாயம் என்பதில் சந்தேகமே இல்லை. சொல்லப்போனால் இது நோட்டன் தாஸின் தவறே இல்லை. போன தடவையே அவனுக்குக் கொடுக்கவேண்டிய பணம் பாக்கி யிருந்தது. அந்தத் தடவை மேளாவுக்கெனத் திரட்டப் பட்ட சந்தாத் தொகை விஷயமாக ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது. அதனாலேயே சாமுண்டாவின் மஹந்து (கோயில் நிர்வாகி) குழுவினர் தலையில் வில்வ இலையை வைத்து ஆசி கூறும்போது, 'அடுத்த தடவை அப்பன் மாரே........ அடுத்த தடவை இந்தக் கவியரங்கைக் கூட்டுவதற்கு முன்பே எனக்குச் சேரவேண்டிய இரண்டு வருஷ பாக்கியைத் தீர்த்துவிடுங்களப்பா' என்றார்.

நோட்டனும், மஹாதேவனும் பல வருடங்களாக இந்த மேளாவில் கவிப்போட்டியில் ஈடுபட்டவர்கள். பொங்கும் காலங்களில் இந்த மேளாவில் நல்ல சம்மானங்களையும் பெற்றிருக்கின்றனர். நன்றியறிதலுக்காகவோ அல்லது உலகத்தவர் எதிரே விழிக்கவேண்டுமே என்பதற்காகவோ இவர்கள் போன தடவை கொடுத்ததைப் பெற்றுத் திருப்தி அடைந்தனர். இந்தத் தடவை நோட்டன் மஹந்தை வணங்கி, கையை ஏந்தியபொழுது அவர் பணத்துக்குப் பதிலாக, செக்கச் செவேலென்ற செம்பருத்திப் பூவை வைத்தார். 'எல்லா மங்களமும் உண்டாகட்டுமப்பா' என்று ஆசீர்வாதம் செய்தார். அங்கே குழுமியிருந்தவர்களில் பலர் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கெளரவ மனிதர்கள் . அவர்களுடன் இதைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தது. இது முடிவதற்கு நோட்டன் காத்துக்கொண்டிருந்தான். மேளாவுக்குத் தண்டப்பட்ட தொகை, தேவி சாமுண்டாவின் பீடத்துக்காகும் வரவு செலவு கணக்கு இவை பற்றி விசாரணை நிகழ்ந்தது. மஹந்து கோயில் வருவாய், நித்திய நைமித்திக் மற்ற வகையறாவுக்காகும் செலவுப் பட்டியல் யாவற்றையும் விளக்கமாகக் கூறி, 'அன்னை சாமுண்டா பேரில் 'பாண்டு எழுதித் தந்தால்தான் சமாளிக்க முடியும். உங்களில் யாராவது கடன் தர முன் வாருங்களேன். இப்படி ஒரு நல்ல காலம் மீண்டும் வராது. சாக்ஷாத் அம்பாளின் கை முத்திரையிட்ட நோட் ஐயா! இதைப் பெற்றுக் கடன் தாராளமாக வழங்குவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதனால் உங்கள் செல்வம் நூறு மடங்கு பெருகுமே. குபேரனே இந்தப் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்துப் போடுகிறான். இந்த அறக்கட்டளைக்கு நீங்கள் வழங்கும் திரவியம் இம்மையில் அமோக ஐசுவரியத்தையும், மறுமையில் முழு மோக்ஷத்தையும் அசலும் வட்டியுமாகத் தருமே...' என்றதும், 'ஹ... ஹ' என்று சிரித்தார். மற்றவர்களும் கூடவே சிரித்தனர். நோட்டனும் சிரித்தான். அவன் புத்திசாலி. கூட்டத்திலிருந்து தலை மறைந்துவிட்டான்.
நோட்டனுடைய வீட்டில் அச்சமயம் புதிதாக வேற்றூர் கோஷ்டியொன்று அவனை எதிர்நோக்கியிருந்தது. அவ்வூரிலிருந்து இருபது கல் தொலைவில் ஒரு மேளா நடக்கிறது. அதில் ஆர்ப்பாட்டமான ஏற்பாடுகள்.... அங்கு நடக்கும் பாட்டுப் போட்டிக்கு நோட்டன் தாஸைப் பயன்படுத்திக்கொள்ள ஆட்கள் வந்திருந்தனர். இங்கே நடக்கப்போகும் கவியரங்கு முடிந்த பின்னர் போக வேண்டும். கடைசி தினத்தன்று தலை காட்டிவிட்டு நழுவிவிட்டால் எவரும் கேட்கப் போவதில்லை. இவ்வூராரிடமிருந்து எதிர்பார்த்த சம்மானம் என்னவோ கிடைக்கப் போவதில்லை. அங்குச் சென்றால் தட்சிணையாகப் பெருந்தொகை கிடைக்கலாம்.

நோட்டன் கை கூப்பித் , தலையைத் தொட்டு, 'அம்மா சாமுண்டேசுவரி, ஜயம் உனக்கு!' என்றான். அப்புறம், அவன் தன் பின் பாடகனைப் பார்த்து, 'அந்தப் புட்டியை இப்படித் தா . கொஞ்சம் போடாது போனால் இந்த நோட்டனால் முடியாது' என்றான். இரண்டு விழுங்கு அதைப் பருகியதும், நோட்டன் உடம்பைக் குலுக்கிக் கொண்டு உட்கார்ந்தான். வந்த ஆள் நோட்டனையே நோக்கி, 'பாடகரே, நாழியாகிறது. நாங்கள் அடுத்த வண்டிக்கே திரும்ப வேண்டும், முடிவாகச் சொல்லுங்கள்' என்றான். நோட்டன் சிரித்து, நாளையே பிடித்து நான் பாடினால் உங்களுக்குச் செளகர்யப்படுமா?' என்றான்.

வேற்றூரான் யோசித்து, 'அப்பொழுது இங்கே நடக்கவேண்டியது?....' என்று கேட்டான். நோட்டன், 'உன் கதையைக் கவனித்துக்கொள்ளய்யா முன்னால். எனக்கு மேல் கொண்டு ஏதாவது போட்டுக் கொடுத்தால் தான் .......' என்றான்.

வந்தவன் உற்சாகத்துடன், 'அதற்கென்ன தாராளமாக... அப்ப ... எப்போ கிளம்புகிறீர்?' என்றான்.

இன்றைக்கே... இப்பொழுதே ...... உன்னுடன் தான், இதே வண்டிக்கு...' 
வந்தவன் மேலும் எக்களிப்புக் கொண்டான். சம்மானம் தெரியுமா? ஒரு ராத்திரிக்கு வில்லையாக பன்னிரண்டு ரூபாய்

'அதற்கென்ன பாடகரே...' என்றான் உற்சாகம் துளும்ப, வந்தவன். 
முன் பணம்?' அக்கணமே ஒரு பத்து ரூபாய் நோட்டு வெளியே வந்தது. 'இதோ வைத்துக்கொள்ளுங்கள்; நம்ம ஊரில் காலை வைத்ததும் மிகுதியை அணா பைசாவுடன் தீர்த்துவிடுகிறோம்.'

நோட்டை 'ட்ரங்க்'கிலே பத்திரப்படுத்திக்கொண்டு நோட்டன் எழுந்தான். மத்தளக்காரன், பின் பாடகர்கள் இவர்களைப் பார்த்து, கிளம்புங்கள்' என்றான். அழைத்துச் செல்லும் வேற்றூரானைப் பார்த்து, 'தெரிகிறதா? போனதும் மீதி பணத்தைக் கொடுத்து விட்டு மறு காரியம் செய்ய வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்தான். 

இருள் மெல்லச் சூழ்ந்துகொண்டது. சால்வையில் முகத்தை மறைத்தபடியே ஸ்டேஷனுக்கு வந்து, வண்டி வந்ததும் ஏறிக் கொண்டான். ட்ரெயினும் போய்விட்டது.

இதுவே அந்நிகழ்ச்சியின் முடிவு. நோட்டன் விட்டடித்த சமாசாரத்தைக் கேட்டதும், போட்டியில் கலந்துகொள்ளும் மற்ற பாடகனான மஹாதேவ் பால், அரங்கில் அமர்ந்து தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தான். இது காறும் நோட்டனுடன் சேர்ந்து அவன் போட்டியில் தோல்வியுற்றதே இல்லை. ஆனால் இன்றோ உள்ளூரத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். நோட்டனை, பேமானி, கையாலாகாதவன் என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான். ஒரு வார்த்தை எட்ட விட்டிருந்தால் அவனுடனேயே சென்றிருக்கலாமல்லவா?

இதற்குள் அரங்கில் ஜனங்கள் பொறுமையிழந்து கூச்சலிட்டனர். தாமதத்திற்குக் இன்னும் காரணம் முழுவதும் விளங்கவில்லை. அவர்களுக்கு, கூச்சல் காது செவிடாகும்படி இருந்தது. வேற்றொரு பக்கம் மேளாவை நடத்துவோரும், கிராமத்து மேட்டிக் குடிகளும் நோட்டன் செய்த மோசத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கோயில் மஹந்து சிந்தனையில் ஆழ்ந்து, தம் தாடியை உருவி விட்டுக் கொண்டேயிருந்தார். இடையிடையே அவர், 'மா... தாரா... மா... தாரா' என்று முனகிக்கொண்டே யிருந்தார். 
நோட்டன் ஓடி விட்டான்...... பாட்டுப் போட்டி நடக்காது - இதுவே எவர் வாயிலும் பேச்சாக இருந்தது. பார்க்க வந்தவர்கள் கூட்டம், கரை உடைந்து ஏரிநீர் புரண்டோடுவதுபோல் நாலா திசையும் சிதறிவிடும்; நீரெல்லாம் வழிந்துபோய் மிகும் வண்டல் போல் அந்த மேளாவில் புழுதியும், காலடி அடையாளங்களுமே எஞ்சி நிற்கும்.

அந்தப் பக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சிலர் வைக்கோலில் பற்றிய தீயெனக் கோபமும், ஆத்திரமும் கொண்டனர். இப்பொழுதே ஒரு ஜவானைத் தடியுடன் ஏவி, அந்த நோட்டனை, கழுத்தைப் பிடித்துச் சவுக்கத்தில் கட்டி இழுத்து வந்து செருப்புப் பிய்ந்துபோகும் அளவு அவன் முதுகைப் பொத்தி, இந்த நஷ்டத்திற்கு அவனை ஈடுகட்டும்படிச் செய்ய வேண்டும் - இப்படிப் பல யோசனைகள் அவர்கள் மூளையில் பற்றியெரிந்தன. ஊர் நாட்டாண்மைக்காரர்களில் ஒருவரான, கஞ்சா அடிக்கும் பூதநாத்- பெயருக்கேற்றபடி, தக்ஷயாகத்தில் சிவபெருமான் நின்றது போல் உக்கிரம் மிக்கவர் - சட்டெனத் தம் வேஷ்டிக் கச்சத்தை இழுத்துக் கட்டி ஒரு துள்ளு துள்ளினார். 'ரெண்டே ஆள்' என்று தம் இரு விரல்களை அசைத்தார். சற்றுப் பொறுத்து அவர், 'ரெண்டு ஆள்.... ரெண்டே ஆட்களை என்னுடன் அனுப்புங்கள்... இதோ, நான் போய் என்ன பண்ணுகிறேன் பார் ! அவன் இருநூறு மைல்தான் போயிருக்கட்டுமே, சிண்டைப் பிடித்துக்கொண்டு வருகிறேன்' என்றதும், ஒரு மிடுக்கு நடை வைத்தார்.
அதே சமயம் இவர் பேசுவதைக் கேட்ட ஒருவன் அந்த அரங்கின் ஒரு முனையிலிருந்து உரக்கவே 'அடே ராக்ஹரி, எழுந்து வாடா இங்கே' என்று அழைத்தான்.

'எதற்கடா? எழுந்தா இங்கே இடத்தை எவனாவது பிடிச்சுக் கொள்வான் ?

'மகாபட்ட இடம்டா.... எழுந்துவாடா என்னா? வீட்டுக்குப் போவோம்; சாப்பிட வேண்டாமா? நோட்டான் தாஸ்தான் போய் விட்டானேடா .... இங்கே ஒண்ணும் நடக்காது... போட்டியாவது மண்ணாங்கட்டியாவது ?

'சே, பொய் சொல்றே நீ!' 'அடப்பாவி , நிச்சயமாடா'

இந்த ராக்ஹரி ஒரு ரஸிகப் பேர்வழி. அவன் அங்கிருந்தவர்களைப் பார்த்து, சொல்லுங்கள், போலோ ஹரி ஹரி போல் என்றதும், அங்கிருந்த அப்பெருங்கூட்டம் நீர்த் திரள் தளும்புவது போல் பெருத்த கோஷம் செய்தனர் - ஹரி போல்!' (கோவிந்தா). அதாவது அந்த மேளா இப்படி முடிந்ததையறிவிக்கப் பிணத்தைத் தூக்கிச் செல்லும்போது போடும் கோஷத்தைக் கிளப்பினர். வைக்கோல் பற்றி எரிவதுபோல் ஆத்திரத்தால் எரிந்து கொண்டிருக்கும் அந்தக் கிராமப் பிரமுகர்கள், அம் மக்கள் மீது சீறத் தொடங்கினர். 
'யாரடா அவன்? எவனடா அப்படிக் கத்துறவன் ?' 'பிடி அந்தப்

 பயலை .... உதை அவனை பூதநாத் புலியைப்போல் ஒரு வட்டமிட்டு ராக்ஹரிக்கு மாறாக அந்தக் கூட்டத்தில் அகப்பட்ட ஓர் ஆளைப் பிடித்து முன்னால் இழுத்து வந்து, " சோம்பேறிப் பயலே, சும்மாக் கிடடா' என்று அடித்தான்
மற்றவர்கள் அவனைத் தணிவிக்க, 'பாவம்... போறான்... பாவம்... பூதநாத், அவனை விட்டுவிடு; கோஷம் போட்ட ராஹக்ரி இவனல்ல.... அப்பாவிப் பையன் ' என்றனர். 

பூதநாத் அவனை விட்டு விட்டான்; ஆனால் எச்சரிக்கை செய்யாமல் விடவில்லை - 'அடேய், கபர்தார்! இன்னொரு தரம் இப்படிச் செய்தால்....'

கூட்டத்திலிருந்த ஓர் ஆள், மேளா என்றால் இப்படித்தான் இருக்கும்... எல்லாம் ஒரு தமாஷ்தானே' என்றான்.

மிட்டாய்க்கார போலா - அவனும் ஒரு குட்டிக் கவிவாணன் ; ஜமீன்தார் முன்பாகவே அவன் சற்றுத் துணிச்சலாக -- 
1 கி கரே துயி பல்லி ஜகா

ஜாடா கோலோக் ப்ருந்தாவன் ஜேகானே பாமுன் ராஜா, சாஷி ப்ரஜா சாரி திகே வாம்சேர் வன்! கோதாய் வாதோர் சாம்குண்ட , கோதாய் வா தோர் ராதாகுண்ட ஸாம்னே ஆசே மூலோகுண்ட கொர்கே மூலோ தர்சன்.

அவன் இப்படி நையாண்டி செய்ததை நாட்டாண்மைக்காரர்கள் பொருட்படுத்தவில்லை; தமாஷ் என்று சிரித்தார்கள்.

பூதநாதுக்கு இந்த நகைச்சுவை புரியவில்லை. இப்படிச் சொன்ன வனைப் பார்த்து, “ போடா போடா போ ... எதுக்கும் எதுக்கும் ஒப்பிடறே? அரிசி உமி ஆகுமாடா?' என்றான்.

'அடேய் , உமியில்லாத அரிசி ஏதுடா? உனக்கு ஏனய்யா ரோசம் பொத்துக்குது? அம்மாந் தொலைவிலிருந்து பொவலை எல்லாம் பார்த்தி பண்ணிக்கினு பாட்டு கேக்கலாம்னு வந்தாக்கா, இங்கேயென்னா பாட்டுக்காரன் ஓடிட்டான்னு சொல்றாங்க... என்னமோ தமாசா நாங்க கோவிந்தா போட்டாக்கா, என்னமோ துள்றியே?'

மஹந்து இப்பொழுது மஹந்து பதவியில் இருப்பவர் தான். ஆனால் அதே சமயம் அவர் தேர்ந்த 'பட்டவார்' - அதாவது ஜமீன்தாருக்கு அவ்வப்போது சூழ்ச்சிகள் சொல்லிக் கொடுக்கும் காரியஸ்தராகவும் இருந்தார். அவர் எப்போதுமே கஞ்சா அடிப்பவர் தாம். இத்தனை நாழிகை மெளனமாக பாட்டுப் போட்டி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து

இது ஒரு பழைய பள்ளுப் பாட்டு - எப்படி சொன்னாயடா ஜகா இந்தப் பட்டிக்காட்டை கோலோக பிருந்தாவனமென்று? இங்கே பார்ப்பான் அரசன்; உழவன் அவன் கீழ்க் குடி ; சுற்றிலும் ஒரே மூங்கில் புதர். நீ சொல்லும் அந்த சாமானின் குளம் எங்கே ? அந்த ராதையின் குளம் எங்கே ? இங்கே உள்ளது முள்ளங்கித் தோட்டந்தானே? முள்ளங்கியைத்தான் பார்க்கலாம். 

கவி 
திருந்தார். சட்டென அவர் சிந்தனை கலைந்து, 'சரி...சரி எதற்கு இத்தனை தகறார் ? பாட்டுப் போட்டி நடக்கும். சிந்தாமணியில் *1 வளைய வருகிறாளே, அந்தப் பைத்தியக்காரியின் ஸதஸ் சும்மா போகாது ! அவள் இருக்கிறாள் நடத்திவைக்க ! உங்களுக்கு ஏன் கவலை?' - என்றதும் தொந்தி குலுங்க ஒரு சிரிப்பு சிரித்தார்.
• கிடைத்து விட்டான் நமக்கு ஆள் ! எல்லோரும் இதன் மர்மம் புரியாமல் மஹந்தையே நோக்கினர். மஹந்து, 'மஹாதேவனைக் கூப்பிடு; அவனுடைய பிரதான பின் பாடகனையும் கூப்பிடு...' என்றதும், கழுத்தை அசைத்து, 'அதுதான் சரி, குரு சிஷ்யர்களைப் போட்டிக்கு விட்டால் போகிறது. ராமராவண யுத்தத்தை விடவோ, துரோண அர்ஜுனருடைய போரை விடவோ இது எவ்விதத்தில் குறைந்ததாகும்! ராமாயணம் ஏழு காண்டம்... மஹாபாரதம் பதினெட்டு பர்வங்கள்!' என்றார் சமத்காரமாக.

கூச்சல் எழும்பியது–'மஹாதேவ்... மஹாதேவ் ஓய் பாடகரே, உம்மைத்தான்... ஓய்... இங்கே வாரும் 
2

வேறு வழியில்லை. மஹாதேவ பால் இதற்கு இணங்காமல் எப்படி இருக்க முடியும்?

மஹந்து துர்லப் ஆசி கூறி அவனைக் கல்ப விருக்ஷத்தின் *2 கீழ் அமரச் செய்தார். ஜனங்கள் இதற்குள் நாற்புறமும் சூழலாயினர். இவ்வளவு ஆனபிறகு எப்படி அவன் இணங்காமலிருப்பது! ஆனால் அவனுக்கு ஒரு மத்தளக்காரனும், பின் பாடகனும் தேவைப்பட்டது. ஏறக்குறைய அதே சமயம் நிதாயிசரண் அங்குத் தோன்றினான். கைகூப்பிய வண்ணம் மிகவும் வணக்கமாக, திருந்திய மொழியில் அவையோர் முன்பு தன் விண்ணப்பத்தை அறிவித்தான் - "ஐயாமார்களே, அடிமையின் விண்ணப்பம் ஒன்றுள்ளது. உங்கள் திருவடிகளில் வணங்கிக் கேட்கிறேன்.' 1 மகாசக்தி வீற்றிருக்கும் பிந்துஸ்தானம் 2 நாடக அரங்கின் மேல் விதானம்.